Page 2 of 2 FirstFirst 12
Results 11 to 15 of 15

Thread: Naan Rasiththavai

  1. #11
    Senior Member Devoted Hubber devapriya's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    350
    Post Thanks / Like
    palபல வலைதளங்களில் blogspots உள்ள தமிழ் பக்கங்களை இங்கு நான் இணைக்க உள்ளேன்.
    தேவப்ரியா

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Devoted Hubber devapriya's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    350
    Post Thanks / Like

    Dipavali

    தீபாவளி - நரக சதுர்த்தி

    --------------------------------------------------------------------------------

    நரகாசுரனை கண்ணன் அழித்த நாளையே தீபாவளியாக முழுவதும் இந்துக்கள் அனைவரும் போற்றி கொண்டாடுகிறோம். நரகாசுரனுடன் நடந்த போர் அதிகாலை நேரம் என்பதால் தீபாவளி நாளன்று அதிகாலையிலேயே எழுந்து, எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து, புத்தாடைகளை அணிந்து கண்ணனை வழிபடும் சடங்கினை இந்துக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    நரகாசுரனின் மந்திரியான முரன் மற்றும் அவனது குழந்தைகளை முதலில் அழித்த கண்ணன், நரகாசுரனுடன் போர் புரிந்தார். படைகளுடன் வந்த நரகாசுரனை அழிக்க கண்ணன் தன் சக்ராயுதத்தை ஏவினார்.

    அப்போது அங்கு வந்த பூமாதேவி "நரகாசுரன் வராக அவதாரத்தின் போது நம் இருவருக்கும் பிறந்தவன். எனவே இவனுக்கு தாங்கள் ஞான உபதேசம் செய்து முக்தி அளிக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள்.

    கண்ணனும் நரகாசுரனுக்கு அருள் புரியத் தீர்மானித்தார். இதையறிந்த நரகாசுரன் கண்ணனிடம், "கண்ணா, தீயவனான எனக்கும் அருள் புரிய வந்த கருணைக் கடலே! நான் மறையும் இந்த நாளை எல்லோரும் நல்ல நாளாகக் கொண்டாட வேண்டும்.

    இப்பூவுலக மக்கள் அனைவரும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடி புதிய ஆடைகளை உடுத்தி மகிழ வேண்டும். விளக்குகளையும் ஏற்றிவைத்து வீடுகளை அலங்கரிக்க வேண்டுமாறு அருள் புரிய வேண்டும்" என்று வேண்டிக் கொண்டான். "அப்படியே ஆகட்டும்" என்று கூறி கண்ணன், நரகாசுரனை ஆட்கொண்டார்.

    சதுர்த்தி என்றால் "முக்தி" என்பது பொருள்."நரக சதுர்த்தி" என்றால் நரகாசுரனுக்கு முக்தி வழங்கிய நாள் என்று அர்த்தம். இதனையே நரக சதுர்த்தி என்றும் கொண்டாடுகிறோம்.

    அநீதி மறைந்து தர்மம் தலை தூக்கியதாகக் கருதப்படும் தீபாவளியை பட்டாசுகளையும் வெடித்து கொண்டாடுகிறோம்.
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  4. #13
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    have heard this story when i was kid, but not the mukthi/ chadurthi part

    Iniya Deepavali vaazhthukkal :P
    Anbe Sivam

  5. #14
    Senior Member Devoted Hubber devapriya's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    350
    Post Thanks / Like

    Dipavali

    அடை மழைக்குப் பேர் போன ஐப்பசியின் முக்கியப் பண்டிகை தீபாவளி. ஒரு பக்கம் அடித்து வெளுக்கும் மழை, மறுபக்கம் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளி.

    தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

    நரகாசுரன் வதம் ...

    இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னனாக இருந்தவன்தான் நரகாசுரன். மக்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்களுக்கும் பெரும் மிரட்டலாக, பயங்கர அச்சுறுத்தலாக இருந்தவன் நரகாசுரன்.

    நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். அதாவது, எனது தாயாரின் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் என்னை அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம்.

    நரகாசுரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மனும், வேறு வழியின்றி அந்த வரம் கொடுக்கிறார். அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது.

    கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையே திருடியவன் நரகாசுரன். அது மட்டுமா, பல்வேறு கடவுளர்களின் 16 ஆயிரம் மகள்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன்.

    நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துப் போனதையடுத்து அனைத்து கடவுளர்களும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை சந்தித்தனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.

    கடவுளர்களே வந்த முறையிட்டதால் நேரடியாக கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்.

    நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான்.

    பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.

    நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். இதுதான் இன்றளவும் தீபாவளியன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடருகிறது.

    தீபாவளியின் இன்னொரு கதை ...

    இதேபோல இன்னொரு கதையும் தீபாவளிக்கு உள்ளது. அது ஏன் தீபத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது என்பதற்கான கதையும் கூட.

    ராவணனை வென்று சீதையை மீட்கிறார் ராமன். பின்னர் சீதையுடன் அயோத்திக்குத் திரும்புகிறார். மன்னனாக முடி சூடுகிறார். இதைத்தான் தீபாவளியாக மக்கள் கொண்டாடினராம்.

    ராமரும், சீதையும் அயோத்திக்கு வந்தபோது அன்று அமாவாசை இரவு. இதனால் இருளில் தாங்கள் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் தடுமாறியுள்ளனர். இதையடுத்து அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகளை ஏற்றி ஒளி கூட்டினர். இதனால் ஏற்பட்ட வெளிச்சத்தில், தீப ஒளியில், சரியான பாதையில் நடை போடத் தொடங்கினாராம் ராமரும், சீதையும். இதனால்தான் தீபாவளிக்கு தீப ஒளித் திருநாள் என்ற பெயரும் வந்தது.

    பிற கதைகள் ..

    விஷ்ணு, லட்சுமி தேவியின் திருமணம்தான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்ற ஒரு புராணக் கருத்தும் உண்டு.

    வங்கத்தில் காளி தேவியை வணங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

    இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி ஒரு விதமாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் தீபாவளித் திருநாள் மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நான்கு நாளும் ஒரு வகையான கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபடுகிறார்கள். பூஜைகள் செய்கிறார்கள்.

    முதல் நாளை நரக சதுர்தசியாக கொண்டாடுகிறார்கள். தீய சக்திகள் அழிந்து (அதாவது நரகாசுகரன் அழிந்த நாள்) வாழ்வில் வளம் பிறக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

    தீபாவளி தினமான 2வது நாள் அமாவாசை தினம். இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்குகிறார்கள்.

    3வது நாளில் கார்த்திகை சுத்த பதயாமி தினமாக கொண்டாடப்படுகிறது.

    4 நாள் யம திவிதியை தினமாக கொண்டாடுகிறார்கள். அதாவது அன்றைய தினம் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு புத்தாடைகள் கொடுத்து வணங்கி, ஆசிர்வாதம் பெறும் தினம் இது.

    பட்டாசு வெடிப்பது ஏன்:

    தீபாவளி என்றால் பட்டாசுகளும், பிரகாசமிடும் அகல் விளக்குகளும் இணைந்தே நினைவுக்கு வரும். ஏன் விளக்கு ஏற்றிக் கொண்டாடுகிறோம், பட்டாசுகள் வெடிப்பது ஏன் என்பதற்கும் ஒரு காரணம் உண்டு.

    வீடுகளில் அன்றைய தினம் விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம். அயோத்திக்கு ராமரும், சீதையும் வந்தபோது அந்த நகர மக்கள் விளக்கேற்றி வைத்தனர் என்ற புராண வழக்கமும் இதற்கு இன்னொரு காரணம்.

    அதேபோல, தீய சக்திகளை விரட்டியடித்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாட பட்டாசு என்பது பட்டாசுகளுக்கான ஐதீகம்.

    தென்னிந்தியாவில் நரகாசுரன் வதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் ராமரும், சீதையும் அயோத்தி திரும்பியதையும், ராமர் பட்டம் சூட்டிக் கொண்டதையுமே, தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.

    இப்படி ஒவ்வொரு விதமாக இந்தியாவின் ஒவ்வொரு பகுதி மக்களும் கொண்டாடினாலும் கூட தீபாவளியின் மையக் கருத்து, நலமும், வளமும் வந்து சேரும் தீபத் திருநாள் என்பதாகவே உள்ளது என்பதால் தீபாவளித் திருநாள், இந்துக்களின் மிக முக்கிய திருநாளாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    தட்ஸ்தமிழ்.கொம்

  6. #15
    Senior Member Devoted Hubber devapriya's Avatar
    Join Date
    Oct 2005
    Posts
    350
    Post Thanks / Like

    TAMIL COMEDY

    Dear Friends,

    we always are in Tension.

    to releave and re live fun is important.

    here is a funny blog for enjoying.

    http://www.tamil-comedy.blogspot.com/

Page 2 of 2 FirstFirst 12

Similar Threads

  1. NAAN MARAI
    By F.S.Gandhi vandayar in forum Indian History & Culture
    Replies: 144
    Last Post: 10th December 2014, 02:58 PM
  2. Hariyudan Naan
    By venkkiram in forum TV,TV Serials and Radio
    Replies: 92
    Last Post: 11th April 2011, 11:34 PM
  3. naan oru 'psycho'vaam
    By pavalamani pragasam in forum Stories / kathaigaL
    Replies: 12
    Last Post: 17th January 2009, 12:32 PM
  4. naan
    By Carol in forum Indian Food
    Replies: 2
    Last Post: 21st December 2004, 09:09 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •