Page 7 of 51 FirstFirst ... 5678917 ... LastLast
Results 61 to 70 of 503

Thread: KAVICH CHAARAL [ SIVAMAALAA]

  1. #61
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    crude

    தெளிவாய்த் தெரியாத கண்கள்
    அரைக் குருடு!
    ஒளியே இல்லாத கண்கள்
    முழுக் குருடு!
    மலிவாய்க் கிடடாத எண்ணெய்
    அதுவும் "குருடு!"
    எளியோர்க்கு உதவ இயலா
    நிதிவல்லோர் தாமும் குருடே!

    அரிசி விலை மும்மடங்கு ஏறிவிட்டதே!

    வழியறியோம் என்றரசு கூறிவிட்டதே!

    குருட்டு உலகில் குருடு காரணம்
    கலகங்கள் இல்லையென ந்ிலைமை மாறணும்.

    நிலைமை மாறுமோ?
    துன்பம் தீருமோ?
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #62
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2008
    Posts
    247
    Post Thanks / Like

    Re: crude

    Quote Originally Posted by bis_mala
    தெளிவாய்த் தெரியாத கண்கள்
    அரைக் குருடு!
    ஒளியே இல்லாத கண்கள்
    முழுக் குருடு!
    மலிவாய்க் கிடடாத எண்ணெய்
    அதுவும் "குருடு!"

    எளியோர்க்கு உதவ இயலா
    நிதிவல்லோர் தாமும் குருடே!

    அரிசி விலை மும்மடங்கு ஏறிவிட்டதே!

    வழியறியோம் என்றரசு கூறிவிட்டதே!

    குருட்டு உலகில் குருடு காரணம்
    கலகங்கள் இல்லையென ந்ிலைமை மாறணும்.

    நிலைமை மாறுமோ?
    துன்பம் தீருமோ?
    nandraga irikkirathu. bold aakkaptta varigaLai mattum nagaichuvaikaaga serkapattatheninum rasikka mudiyavillai.

  4. #63
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    avalach chuvai

    //nandraga irikkirathu. bold aakkaptta varigaLai mattum nagaichuvaikaaga serkapattatheninum rasikka mudiyavillai.//



    " ' குரூடு ' எண்ணெய் மலிவாய்க் கிட்டவில்லை" என்பதில் நகைச்சுவைக்கு இடமில்லை என்று கோடி காட்டிய நண்பருக்கு நன்றி. நகைச்சுவைபோல் தோன்றினாலும் அவல நிலையைக் காட்டுவதே இக் கவிதை.

    கவிதையை வாசித்ததற்கும் என் நன்றியும் வணக்கமும்.
    B.I. Sivamaalaa (Ms)

  5. #64
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    மொழிநூல் அறிஞர் அகத்தியலிங்கம்


    தமிழ்த்தொண்டால் விரிந்தபுகழ் அடைந்த செம்மல்
    தஞ்சையிலே பல்கலையில் தலைமை ஏற்றார்
    அமிழ்தமொழிப் பெருமைதனை உலகம் காண
    அயர்வின்றி உழைத்திட்ட அறிவின் மேலோர்்;
    கமழ்தருமோர் மொழியறிவுக் கலையை, வெல்லும்
    கணிப்புடைய கருத்துகளை எடுத்துச் சொன்னார்
    இமிழ்கடல்சூழ் உலகிலகத் தியலிங்கம் போல்
    இனியொருவர் இல்லைஇது துயரம் தானே.
    B.I. Sivamaalaa (Ms)

  6. #65
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    ஓபாமா


    கறுப்பினத்தார் மிசையிருந்த காய்தல் மாறிக்
    கணித்ததொரு பொருத்தம்போல் ஏற்றுக் கொண்டு,
    பொறுப்பினிலே குடியரசின் மேலோன் ஆகப்
    புகுத்திவிடப் பொதுத்தேர்தல் மேவச் செல்லும்
    மறுப்பரிய ஓபாமாவின் ஏற்றம் போற்றி
    மதிப்புரைகள் மலிந்துவரும் மாண்பில் ஞாலம்
    விருப்பினுடன் ஈடுபடும் ; வேறு பாடு
    வேருடனே களைவுற்று வீழ்ச்சி காணும்.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #66
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    ஒரு தோட்டத்துப் பூ.


    தோட்டத்தில் மலர்ந்திருந்தேன்
    தொட்டிட வந்தாய் தோழி
    காற்றென அசைத்தாள் என்னைக்
    காத்தனள் கொஞ்சநேரம்;
    ஆட்டமோ என்னைக்கண்டே
    அசையாதே என்றவாறு
    பூட்டினாய் விரல்கள் என்மேல்;
    பூவெனைப் பறித்தேவிட்டாய்!

    வருடினாய் விருப்பம்போலே
    வகைகெட மாட்டிக்கொண்டேன்
    நெருடினாய் நிமிர்த்திமோந்து
    நேர்ஒரே முத்தம்தந்தாய்!
    குருடனே என்றேவையக்
    கொதித்திட வலிமையில்லை.
    மருள்தரக் கசக்கிப்பின்னே
    மாய்ந்திடக் களைந்திடாதே!
    B.I. Sivamaalaa (Ms)

  8. #67
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    The bliss of solitude


    உலவத் துணை



    இனிய தென்றல் வீசி எனைத்
    தாலாட்டுதே...
    என் தனிமை இன்பத்திற்கு அது
    ஒரு மெருகூட்டுதே.

    காணும் அழகு அனைத்தையும்
    நான் ஒருத்தியே சுவைத்து நின்றேன்

    சூடும் குளிரும் மலையும் கடலும் எதனிலும்
    மனமே நிலைத்து நின்றேன்.

    அன்னை இயற்கையின் அழகினில் களித்திட
    இன்னொரு துணையும் வேண்டுவதோ?
    என் தனிமைக் கோட்டினைத் தாண்டுவதோ!

    துணையும் வேண்டுமெனில்
    துணை நீ மெல்லிய பூங்காற்றே....
    உலவிடுவேன் உன்னுடனே.
    நிலவிடும் தனிமை மாறாமலே.
    B.I. Sivamaalaa (Ms)

  9. #68
    Member Junior Hubber
    Join Date
    Apr 2005
    Location
    Chennai
    Posts
    74
    Post Thanks / Like

    மலரும&

    தென்றலுக்கோர் சிறப்பான
    மென்மையுண்டு. இளமையோடு அன்று
    அலர்ந்த நல்ல
    மலர்போலே.

  10. #69
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    உலவத் துணையாக மெல்லிய பூங்காற்று வரின் இனிமையாகத்தான் இருக்கும்.

    கரியமிலக் காற்றுடன் கைகோர்த்த உவர் உலாத் தனிமையும் ஏதோ ஒரு இன்பத்தையே அளிக்கிறது.

    குறிஞ்சி நிலத்துக்குக் குடிபெயர்ந்து குளிர் பூங்காற்றுடன் உலா வந்த இன்பம் கிட்டியது தங்கள் கவிதையில்.

    நன்றி.
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  11. #70
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Poem featured in Bannari Mariamman Engg.College magazine (published in Ananda Vikatan)

    " தாய் " - சிறு குறிப்பு வரைக

    மழையில் நனைந்துகொண்டே
    வீட்டுக்கு வந்தேன்
    ' குடை எடுத்துட்டுப்
    போக வேண்டியதுதானே '
    என்றார் அண்ணன்
    ' எங்கேயாச்சும்
    ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
    என்றாள் அக்கா
    'சளி பிடிச்சுகிட்டு
    செலவு வைக்கப்போற பாரு'
    என்றார் அப்பா
    தன் முந்தானையால்
    என் தலையை
    துவட்டிக்கொண்டே
    திட்டினாள் அம்மா
    என்னையல்ல;
    மழையை !
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

Page 7 of 51 FirstFirst ... 5678917 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •