Page 214 of 216 FirstFirst ... 114164204212213214215216 LastLast
Results 2,131 to 2,140 of 2160

Thread: Latest News on Tamil Cinema

  1. #2131
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ஆண் - பெண் உறவில் உலகமயமாக்கல் தரும் தாக்கத்தை 'தரமணி' சொல்லும்: ராம்


    ’கற்றது தமிழ்’, ’தங்க மீன்கள்’ வரிசையில் உலகமயமாக்கலின் தாக்கத்தை எடுத்துச் சொல்லும் கடைசிப் படம் ’தரமணி’ என்று இயக்குநர் ராம் தெரிவித்திருக்கிறார்.

    வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்க ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'தரமணி'. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    இந்நிலையில் 'தரமணி' படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ராம் 'தி இந்து' ஆங்கிலத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "’கற்றது தமிழ்’, ’தங்க மீன்கள்’ வரிசையில் உலகமயமாக்கலின் தாக்கத்தை எடுத்துச் சொல்லும் கடைசிப் படம் ’தரமணி’. இந்தப் படம் உலகமயமாக்கல் ஆண் - பெண் உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே கதை.

    இவ்வாறு நான் சொல்வதால் நான் முழுக்க முழுக்க உலகமயமாக்கலுக்கு எதிரானவன் என நினைக்காதீர். உண்மையில் உலகமயமாக்கல் கொள்கை பெண்களுக்கு அதிக நம்பிக்கையை விதைத்துள்ளது.

    பெண்களின் சுய மரியாதையும், சுய மதிப்பீடும் அதிகரித்திருக்கிறது. கடல் கடந்து சென்று தங்களுக்கான தொழில் வாய்ப்புகளை விஸ்தரித்துக் கொள்ள வழிவகை செய்துள்ளது. ஏன் பெண்ணைப் பெற்ற தந்தைகள்கூட தங்கள் குறுகிய பார்வையை மாற்றிக் கொண்டுள்ளனர். இருந்தாலும், ஒரு பெண்ணுடன் வேலை செய்யும் சக ஆண் ஊழியர் அவரை எப்படி பார்க்கிறார். இது எப்படி ஆண் - பெண் உறவில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதைத் தான் ’தரமணி’ படம் அலசுகிறது.

    ’கற்றது தமிழ்’ படம் மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்களுக்கு எதிரானது எனக் கூறப்படுகிறது. ஆனால், அப்படமானது சேவைத் துறைக்காக கலை, மனிதவளம் சார்ந்த படிப்புகள் புறக்கணிக்கப்பட்டால், சமூகத்தில் எப்படி பொருளாதார சமன் சீர்குலையும் என்ற யதார்தத்தை உணர்த்துவதே. இதன் விளைவு சைக்கோபாத் போல சோசியோபாத் என்ற ஒரு பிரிவினர் உருவாக்கப்படிருக்கின்றனர்.

    ’தங்க மீன்கள்’ படமும் தனியார்மயமாக்கலால் நமது கல்வித் துறையை எப்படி சீர்குலைத்திருக்கிறதை என்பதை விரிவாக பேசப்பட்டிருக்கும். மேலும், அதனால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு சமூகம் எப்படியெல்லாம் முத்திரை குத்துகிறது என்பதையும் விவரித்திருக்கும். ஒரு தந்தை - மகள் உறவுப் பின்னணியில் சொல்லப்படாமல் இருந்திருந்தால் அந்தக் கதை ஒரு ஆவணப்படமாக ஆகியிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

    ’தரமணி’ ஒரு சர்வதேச தரத்திலான கதை. உலகமயமாக்கல் ஆண் - பெண் உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது விரிவாக அலசும் கதை" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ராம்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2132
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ஃபிலிம்ஃபேர், மாநில விருதுகளில் விட்டதை, சீமாவில் அள்ளிய பிரேமம்!

    2012-ம் ஆண்டு முதல் சைமா விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தென்னிந்திய மொழிப்படங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன.
    தமிழகத்தில் மெகா ஹிட்டாக ஓடிய மலையாளத் திரைப்படம் பிரேமம். பிரேமம் படத்திற்கு கேரள அரசு முக்கியமான விருதுகள் எதையும் தராமல் ஒதுக்கியது பிரேமம் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. கடந்த மாதம் நடந்த ஃபிலிம்ஃபேர் விருதுகளிலும் பிரேமம் அதிக விருதுகளைப் பெறவில்லை. கடந்த வாரம் நடந்த சைமா விருதுகள் தான் பிரேமம் ரசிகர்களை முதல் முறையாக மகிழ்ச்சியில் திளைத்தனர் .
    பிரேமம் அள்ளிய விருதுகள்

    சிறந்த படம் : பிரேமம்

    சிறந்த நடிகர் (சிறப்பு விருது ) : நிவின் பாலி

    சிறந்த இயக்குனர் : அல்ஃபோன்ஸ் புத்திரன்

    சிறந்த புதுமுக நடிகை : சாய் பல்லவி

    சிறந்த இசையமைப்பாளர் : ராஜேஷ் முருகேசன்

    சிறந்த பாடல் ஆசிரியர் : ஷபரீஷ் வர்மா

    சிறந்த ஆண் பாடகர் : விஜய் யேசுதாஸ்

    விருதுகளை அள்ளிய நானும் ரவுடி தான்
    நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தே , பெரிதும் கிசுகிசுக்கப்படும் ஜோடி நயந்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் தான். இடையில் இருவரும் பிரிந்துவிட்டனர் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சைமா விருதுகளுக்கு, நயனும், விக்னேஷ் சிவனும் இணைந்து சென்றது கடந்த வார கோலிவுட் வைரலானது.

    அதற்கு ஏற்றாற்போல சைமாவிலும் விருதுகளை அள்ளியது நானும் ரவுடி தான் திரைப்படம்.

    சிறந்த இசை : அனிருத்

    சிறந்த ஆண் பாடகர் : அனிரூத்

    சிறந்த காமெடி நடிகர் : RJ பாலாஜி

    சிறந்த நடிகை : நயன்தாரா....
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  4. #2133
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பதவி விலக நடிகர் கருணாஸ் திடீர் முடிவு

    தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பதவியில் இருந்து நடிகர் கருணாஸ் விரைவில் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.

    இந்த நிலையில், தனக்கு அரசியலில் பல்வேறு பணிகள் இருப்பதாலும், தொடர்ந்து சினிமாவிலும் பயணம் மேற்கொள்ள வேண்டி இருப்பதாலும், தான் தற்போது வகித்து வரும், தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  5. #2134
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சரத்குமார் இளைஞர் படைக்கு நான் ரெடி! ’ஒருவன்’ க்ரிஷ் பேட்டி - VIKATAN



    சீரியல் நடிகர், சினிமாவில் சிறப்புக் கதாபாத்திரங்கள் என க்ரிஷ் கொஞ்சம் பிஸி.. ஹாய் என்றால் ‘ஒருவன்’ படத்துல சரத்குமார் சாருக்கு பையனா நடிச்சது நான் தான் என முன்னாள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் கொடுக்கிறார் க்ரிஷ் என்கிற கிருஷ்ணா...
    அந்தச் சின்ன ரோஜா, சின்ன ரோஜா பாடலில் உருக்கம் காட்டியது நீங்களா?

    “ அந்தப் படத்துல நடிச்சு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான மாநில விருது கூட வாங்கியிருக்கேன். படிச்சது எம்.பி.ஏ. குழந்தை நட்சத்திரமா ‘ஒருவன்’ , ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ படங்கள்ல நடிச்சிருக்கேன். டிவி தொடர்கள்ல ’பைரவி’, ’தென்றல்’, ’அழகி’, ‘சலனம்’..( நீள்கிறது)

    இறைவி’ படத்துல எப்படி வாய்ப்புக் கிடைச்சது?

    “ ‘555’, ’ஆநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’, ’ஜில்.ஜங்.ஜக்’ ’நட்பதிகாரம்’ படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆமா ஜில்.ஜங்.ஜக் படத்துல காரத் தூக்கிட்டுப் போய் வெடிக்க வைக்கிறதே நான் தான். அப்போ தான் நண்பர் ஒருத்தர் மூலமா கார்த்திக் சார் படத்துல ஒப்பந்தம் ஆனேன். என்னப் பார்த்த உடனே ஜில்.ஜங்.ஜக் பட காட்சி அவருக்கு ஞாபகம் வந்துடுச்சு. என்ன ஒரு ஞாபகம் பாருங்க அவருக்கு!”

    குழந்தை நட்சத்திரமா கனமான பாத்திரத்துல நடிச்சிட்டு நடுவுல ஏன் ஆளையே காணோம்?

    “ எல்லாம் குடும்ப சூழல் தான். அப்பா இறந்துட்டாரு. அம்மாவுக்கு நான் உதவி பண்ண வேண்டியிருந்துச்சு. அதனால சினிமாவுக்கெல்லாம் மூட்டைக் கட்டி வெச்சுட்டு படிப்புல ஈடுபாடு செலுத்தினேன். படிச்சேன். அவங்க இஷ்டப்பட்ட படி வேலைக்குப் போய் நல்ல சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். அப்புறம் என்னோட ஆசைப்படியே சினிமாவுக்கு திரும்ப வந்துட்டேன்!”


    குழந்தையா இருக்கும் போதே உங்களை நடிக்க விடல. இப்போ என்ன சொல்றாங்க?

    “ என்ன சொல்லுவாங்க தினம் தினம் திட்டுதான். எல்லாத்துக்கும் மேல எனக்குக் கல்யாணம் வேற ஆகிடுச்சு. சும்மா விடுவாங்களா!”

    உங்க மனைவி பற்றி..

    “ ஒரு தனியார் கம்பெனியில வேலை செய்யறாங்க. எனக்கு ஒரு பையன் இருக்கான். அவங்க தான் உலகம். இருந்தாலும் கொஞ்சம் சினிமா ஆசையும் இருக்கு. நல்ல வாய்ப்புகளும் வருது. சின்னச் சின்ன திட்டுகளை வாங்கிக்கிட்டே என்னோட லட்சியத்த பூர்த்தி செய்துகிட்டு இருக்கேன்!”

    அடுத்தடுத்து என்ன படங்கள்.. எதிர்கால திட்டம் என்ன?

    ” கௌதம் மேனன் சார் இயக்கத்துல தனுஷ் சார் கூட ‘ எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்துல ஒரு சின்ன கேரக்டர் நடிக்கிறேன். திரைப்படங்கள், டிவி இதுதான் எதிர்கால திட்டம். வில்லனா நடிக்கணும்ங்கறது தான் ஆசை!”

    வில்லனா...? ஏன் இந்த கதாநாயகன் கனவெல்லாம் இல்லையா?

    “ அந்த பெட்ரமாஸ் லைட்டே வேண்டாம். எனக்கு வில்லன் பாத்திரம்னா அவ்வளவு இஷ்டம். ஒரு படத்துலயாவது பயங்கர வில்லனா நடிக்கணும்!”

    சின்னத்திரையில நடிச்சா, வெள்ளித்திரை வாய்ப்புக் குறையும்னு ஒரு கருத்து இருக்கே?

    “ இத நான் நம்பலை. உண்மைய சொன்னா ஒரு இயக்குநருக்கு தன்னோட படத்துல இந்த பாத்திரத்துக்கு ஒரு நடிகர் வேணும்னா கண்டிப்பா சின்னத்திரை நடிகரா இருந்தாலும் சரி வெள்ளித்திரை நடிகரா இருந்தாலும் சரி அந்த வாய்ப்பு நமக்கு நிச்சயமா கிடைக்கும். சின்னத்திரை நடிகர் , வெள்ளித்திரை நடிகர்னு எந்த வித்யாசமும் இல்லை. எல்லாருமே நடிகர் தான். அவங்களோட திறமைய பொறுத்து தான் வாய்ப்புகள் அமையறதும், இல்லாமப் போறதும்!”


    சரத்குமார் 100 இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருக்காரே!
    கொலைகளைத் தடுக்க 100 இளைஞர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் சரத்குமார் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    “ நான் ’ஒருவன்’ படம் நடிச்சு சில வருடங்களுக்கு அப்புறம் அவர ஒரு தடவ சந்திச்சேன். அப்போவே உன்னைய எங்கையோ பார்த்துருக்கேன்னு சொன்னாரு. அப்போதான் நான் உங்க பையனா நடிச்சேன்னு சொன்னேன். கேட்ட உடனே ரொம்ப சந்தோஷப்பட்டாரு. இப்ப சமீபத்துல என்னை ஒரு நடிகரா பார்த்தப்போ அடடே நல்ல மாற்றம்’னு பாராட்டினாரு. கூடவே ராதிகா மேடம் கிட்ட பேசு ,நடிக்க வாய்ப்புகள் இருந்தா கூப்பிடுவாங்கனு சொல்லி ஊக்கம் கொடுத்தார். அவரு நடிக்க கூப்பிட்டாலே போவேன். நல்ல விஷயத்துக்கு அழைப்புக் குடுத்துருக்காரு, நிச்சயம் நான் ரெடி!”
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  6. #2135
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Superstar Creates Sensation with S3

    Among Tamil cinema superstars, Suriya has the biggest market in Telugu states after Rajinikanth. Most of his films have done well in Telugu. Telugu audience loves him so much that his last film 24 was a hit in Telugu but failed in Tamil.
    Suriya’s reliability and the popularity of Singham franchise have fetched superb deal for Telugu rights of Singham 3 aka S3 in Telugu.

    S3’s Telugu dubbing rights were bought for 18 crore, which is the biggest ever deal for a Suriya starrer. Only Rajinikanth or Shankar’s films have got bigger deals than this.

    Suriya films have been underperforming in Tamilnadu lately. Even acclaimed films like 24 failed to click at the ticket window. Singham franchise only brought guaranteed returns for Suriya. Therefore he is very confident of bouncing back with S3.
    Singham (Yamudu), Singham 2 (Singam) both have performed well in Telugu too. Hence buyers are betting big on S3 to strike a chord with the masses.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  7. #2136
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தயார்: ராகுலை சந்தித்த பிறகு குஷ்பு பேட்டி

    தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி அளிக்கப்பட்டால் ஏற்கத் தயார் என அக்கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங் களில் மட்டுமே வென்றது. தோல் விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்தார். இதையடுத்து தலைவர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
    இதற்கிடையே ப.சிதம்பரம், தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். கட்சியின் தேசிய செய லாளர் சு.திருநாவுக்கரசரை மாநிலத் தலைவராக்க ராகுல் காந்தி விரும்புவதாகவும், மூத்த தலைவர்களின் எதிர்ப்பால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
    இந்நிலையில், கடந்த 9-ம் தேதி டெல்லி சென்ற இளங்கோவன், ராகுல் காந்தியை சந்தித்து பீட்டர் அல்போன்ஸ் அல்லது குஷ்புவை தலைவராக்க வேண்டும். அப் போதுதான் வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று கணிசமான இடங் களில் வெல்ல முடியும். உள்ளாட் சித் தேர்தலில் தனித்துப் போட்டி யிட்டு தோல்வி அடைந்தால் 2019 மக்களவைத் தேர்தலில் காங் கிரஸை யாரும் கூட்டணியில் சேர்க்க மாட்டார்கள். அப்படியே சேர்த்தாலும் ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் கிடைக்கும் என தெரிவித்ததாக அவரது ஆதர வாளர் ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.
    இந்நிலையில், டெல்லியில் ராகுல் காந்தியை குஷ்பு நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். அப்போது இளங்கோவன் மீது எதிர்தரப்பினர் வேண்டுமென்ற புகார் தெரிவித்துள்ளதாகவும், தமி ழகத்தின் தற்போதைய சூழலில் தலைவர் பதவிக்கு இளங் கோவனே பொருத்த மானவர் என்றும் கூறியதாகத் தெரிகிறது.
    ராகுல் காந்தியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ‘‘தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். மாநிலத் தலைவர் பதவி அளிக்கப்பட்டால் ஏற்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், அதற்கு சாத்தியம் இல்லை. தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில்கூட டெபாசிட் பெறவில்லை. ஆனால், அதற்கு பொறுப்பேற்ற தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தமிழிசை ராஜினாமா செய்யவில்லை. ஆனால், 8 தொகுதியில் வெற்றி பெற்றும் அனைத்து தொகுதிகளில் டெபாசிட் பெற்றும் தோல்விக்கு பொறுப்பேற்று இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார்’’ என்றார்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  8. #2137
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ‘தில்லுக்கு துட்டு’ வசூல்: சந்தானம் மகிழ்ச்சி

    சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் தில்லுக்கு துட்டு நான்கு நாட்களில் 12 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் சந்தானம் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.




    சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் காமடி கலந்த திகில் கதை கொண்ட தில்லுக்கு துட்டு திரைப்படம் வெளியான் நான்கு நாட்களில் 12 கோடி வசூல் செய்துள்ளது.

    காமடியனாக நடித்து வந்த சந்தானத்துக்கு இத்திரைப்படத்தின் வசூல் தன் நம்பிக்கையை அளித்துள்ளது. இனி தைரியமாக கதாநாயகன் கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது இத்திரைப்படத்தின் வசூல்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  9. #2138
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சவ ஊர்வலக்காட்சி...துணைநடிகருக்காக நெக்குருகிய இயக்குநர் பாலா!



    கலைஞர்கள் எப்போதும் உணர்ச்சிப்புர்வமானவர்கள்...அந்த உணர்ச்சிவயப்படுதல்தான் ஒருவகையில் அவர்களை கலைஞர்களாக நீடிக்கவைக்கிறது. சமீபத்தில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம், தாரை தப்பட்டை. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் பாலாவை நெகிழ வைத்த சம்பவம் ஒன்றை, ஒளிப்பதிவாளரும் பிரபல இயக்குநருமான மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் தனது முகநுாலில் வெளியிட்டுள்ளார்.
    பாலா என்ற கலைஞனின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்துவதாக உள்ள அந்த நிகழ்வை ஜான் மகேந்திரனே விவரிக்கிறார் இங்கே....

    "மனிதன் ஆரம்பமாவது பாடல் படப்பிடிப்பு...தஞ்சாவூரில், சுமார் இருபது நாட்கள் இந்த பாடலின் படப்பிடிப்பு நடந்தது...வயதான பெரியவர் இறந்த ஊர்வலத்தில் சசிகுமார் தன் குழுவினருடன் பறை அடித்தபடி பாடும் பாடல்.
    இறந்த பெரியவராக நடித்தவர், தினமும் காலையில் சாப்பிட்டவுடன் பாடையில் ஏறி படுத்ததும், மதிய உணவிற்கு மட்டும் இறங்குவார், மீண்டும் படுத்து மாலை படப்பிடிப்பு முடியும் வரை பாடையில் படுத்திருப்பார். தொடர்ந்து இருபது நாட்கள்,மாலை அணிவிக்கபட்டும், தலை வெள்ளை கயிறால் கட்டப்பட்டும், மூக்கில் பஞ்சு அடைக்கபட்டும், பூக்கள் தூவபட்டும், பட்டாசு வெடிக்கபட்டும், சுற்றி நடந்தவர்கள் அழுதபடி வருவதும், சாவை பற்றிய பாடல் ஒலிக்கபட்டும், கடைசி நாள் நிஜ சுடுகாடு வரை அழைத்து செல்லபட்டார்.

    படப்பிடிப்பு நேரத்தில் பாலா சாருக்கு, அந்த நாலு ப்ரேமுக்குள் இருக்கும் பிம்பம் தான் உலகம்.... அதில் இம்மி பிசக கூடாது.... படப்பிடிப்பு முடிந்த ஒரு மாலை வேலையில், அவர் அறையில் பேசிகொண்டிருக்கும் பொழுது... பாலா சார், “ ஏன் ஜான்...சும்மா அந்த பாடை வண்டில ஏறி நிக்கறதுக்கே என்னமோ மாதிரி இருக்கு...பாவம் அந்த வயசான மனுஷன் தினமும் மாலையோடு படுத்து கிடக்குறாரே அவர் மனநிலை எப்படி இருக்கும்...சாவு வரும்போது யாருக்கும் தெரியாது...நம்ம பிணத்த வெச்சு என்ன பண்ணுவாங்கன்னு கூட தெரியாது, ஆனா இவருக்கு இத்தனை நாள், அவரோட சாவு ஊர்வலத்த காட்டுறோம்...அவர் மைண்ட்ல என்னலாம் ஓடிட்டு இருக்கும்? திரும்பி போகும் போது அவர் என்ன நினச்சிட்டு போவார்... அவர் ஷூட்டிங் முடிஞ்சு போகும் போது மனசு நிறைவா எதாவது செய்யணும் ஜான் “ என்றார்...

    படப்பிடிப்பு முடிந்து அந்த பெரியவர் கிளம்பும் பொழுது, பாலா சார் அந்த பெரியவரை தனியாக அழைத்து ஒரு தடினமான கவரை கொடுத்து அனுப்பினார்...நிச்சயமாக அவர் ,எந்த வயதிலும் அவ்வுளவு பெரிய தொகை பார்த்திருக்க மாட்டார்.“ வீட்டுக்கு போகும் போது சந்தோஷமா போகட்டுமே “ என்றார் பாலா சார். இதுதான் பாலா சார்..."

    ஜான் மகேந்திரனை மட்டுமல்ல; நம்மையும் நெகிழ வைக்கிறது பாலாவின் இந்த மனிதநேயம்...
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  10. #2139
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சாய் பல்லவி ஆசைப்பட்டதால செல்ஃபி: ட்விட்டரில் சதீஷ் ஜாலி!

    விருது நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் சென்றிருந்த நடிகர் சதீஷ், பிரேமம் படப்புகழ் நடிகை சாய் பல்லவியுடன் இணைந்து எடுத்த செல்ஃபி படங்களை ட்விட்டர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
    அதைப் பற்றி எழுதிய சதீஷ், சாய் பல்லவி ஆசைப்படதால செல்ஃபி என்று வேடிக்கையாக கூறியுள்ளார். இதற்குச் சிரிப்புடன், நன்றி எனப் பதிலளித்துள்ளார் சாய் பல்லவி.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  11. #2140
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பியூர் சினிமா புத்தகக் கடை

    சென்னை வடபழனி மேற்கு சிவன் கோவில் தெருவில், புதிதாக பியூர் சினிமா புத்தகக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையை இயக்குனர் மிஷ்கின் திறந்து வைத்தார்.
    இந்தக் கடைக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா? இந்தியாவில் முதல்முறையாக சினிமாவிற்கென்றே, சினிமா புத்தகங்களுக்கென்றே, திறக்கப்பட்ட முதல் கடை இது. இங்கே தமிழில் வெளிவந்த சினிமா சார்ந்த புத்தகங்கள், ஆங்கிலத்தில் வெளியான மிக முக்கியமான சினிமா புத்தகங்கள், குறும்பட, ஆவணப்படம் டி.வி.டி.க்கள் என எல்லாமும் ஓரிடத்தில் கிடைக்கிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக நல்ல சினிமாவிற்கான இயக்கமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் ஸ்டுடியோவின் இன்னொரு மிக முக்கியமான முன்னெடுப்புதான் இந்த பியூர் சினிமா புத்தகக் கடை. முன்னமே இவர்களின் பதிப்பகமான பேசாமொழி பதிப்பகத்தின் மூலம் பல்வேறு நல்ல சினிமா புத்தகங்களை பதிப்பித்து சினிமா சார்ந்த கல்விக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் மிஷ்கினின் ஐந்து திரைக்கதை புத்தகங்கள் இவர்கள் பதிப்பித்த முக்கியமான புத்தகங்கள். ஜூன் மாத நடைபெற்ற சென்னை புத்தகக் காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றன இந்த புத்தகங்கள்.
    இந்த புத்தகக் கடையின் நிறுவனர் அருண் அவர்களிடம் பேசியபோது, ’இந்த புத்தகக் கடையில் புத்தக விற்பனை மட்டுமின்றி, உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறுகிறது, அதாவது வருடத்திற்கு 1500 ரூபாய் கட்டி உறுப்பினர் ஆகிவிட்டால், இங்கே இருக்கும் புத்தகங்களை இங்கிருக்கும் ஓய்வறையில் உடற்கார்ந்து படித்துக் கொள்ளலாம். உலகப் படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்களை இங்கிருக்கும் பெரிய திரையில், நல்ல ஒலியமைப்புடன் கூடிய அரங்கில் பார்த்து மகிழலாம். தவிர புத்தகங்களை பத்து சதவீதக் கழிவில் ஆண்டு முழுவதும் வாங்கி கொள்ளலாம். இது இல்லாமல் தமிழ் ஸ்டுடியோ சார்பாக நடத்தப்படும் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள சிறப்பு கழிவும் உண்டு’ என்கிறார்.
    மேலும், தமிழில் நல்ல சினிமா, அல்லது சினிமா தொழில்நுட்பம் சார்ந்து நிறைய புத்தகங்கள் வெளிவரவில்லை. நூற்றாண்டுகளை கடந்த தமிழ் சினிமாவில் இதுவரை ஆயிரம் புத்தகங்கள் கூட சினிமாவிற்காக அச்சிடப்படவில்லை என்பது பெரும் சோகம். இந்தச் சூழலில்தான் சினிமா புத்தகங்களை அதிகமாக கொண்டு வரவும், அவற்றுக்கான விற்பனையை அதிகப்படுத்தவும், நல்ல சினிமாவை எல்லா தரப்பு மக்களிடமும் எடுத்துச் செல்லவும், சினிமா குறித்த கல்வியை உருவாக்கவும் இந்த புத்தகக் கடை திறக்கப்பட்டுள்ளது என்கிறார் அருண்.
    ப்யூர் சினிமா கடையில் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றிக் கேட்டபோது அருண் கூறியது. ‘பியூர் சினிமா கடை தொடங்கியது முதல் இரண்டு புத்தகங்களை அதிகமான வாசகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஒன்று சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி? இன்னொன்று கே. பாக்யராஜின் வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம். சுஜாதா புத்தகம் இன்னமும் கிடைக்கவில்லை. ஆனால் கே.பாக்யராஜின் புத்தகத்தை அவரிடமே பேசி, அவரிடம் இருந்த நாற்பது பிரதிகளை பியூர் சினிமா புத்தகக் கடையில் விற்பனைக்கு வைத்துள்ளோம். இந்த நாற்பது பிரதிகளும் வெகுவிரைவில் விற்றுத் தீர்ந்தால் அடுத்த பதிப்பிற்கு இந்த புத்தகம் செல்லும். ஒரு கதையை எப்படி சொல்லவேண்டும் என்கிற உத்தியை நீங்கள் நிச்சயம் இதில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் புத்தகத்தை தொடர்ச்சியாக வாசகர்கள் கேட்கிறார்கள் என்றதும் உடனே புத்தகத்தை விற்பனைக்கு கிடைக்க ஏற்பாடு செய்தார் கே. பாக்யராஜ். அவருக்கு பியூர் சினிமாவின் நன்றி. இப்போது விற்பனையாகிக் கொண்டிருப்பது ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிதான். இந்த நாற்பது பிரதிகள் விட்டதும், மறுபதிப்பு இன்னும் நிறைய கட்டுரைகளோடு வெளிவரவிருக்கிறது’ என்றார்.
    முகவரி:
    பியூர் சினிமா புத்தகக் கடை
    எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு,
    வடபழனி, சென்னை 600026
    தொடர்புக்கு: 9840698236
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

Similar Threads

  1. Karthik Raja (KR) Albums and Latest news
    By Hulkster in forum Current Topics
    Replies: 161
    Last Post: 13th January 2011, 06:58 PM
  2. Latest News & Other Tidbits on AR Rahman (II)
    By NOV in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1486
    Last Post: 2nd September 2009, 08:30 AM
  3. Listen to Latest n Old Tamil Albums Over 2k Here
    By logon2future in forum World Music & Movies
    Replies: 0
    Last Post: 19th February 2007, 10:45 PM
  4. Latest Tamil songs & Videos
    By mottufx in forum Classifieds
    Replies: 0
    Last Post: 3rd August 2005, 02:01 PM
  5. TAMIL LATEST RINGTONES
    By ferrari9845 in forum Classifieds
    Replies: 1
    Last Post: 20th June 2005, 08:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •