Page 209 of 216 FirstFirst ... 109159199207208209210211 ... LastLast
Results 2,081 to 2,090 of 2160

Thread: Latest News on Tamil Cinema

  1. #2081
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    நடிகர், அனிமேட்டர், இயக்குநர்!- ’நிழல்கள்’ ரவி சிறப்பு பேட்டி

    தென்னிந்திய மொழிகளைக் கடந்து இந்திப் படவுலகம் வரை முன்னேறி சுமார் ஐநூறு படங்களில் நடித்துமுடிந்துவிட்டார் ‘நிழல்கள்’ ரவி. தீராத தாகத்துடன் நடிப்பைத் தொடரும் அதேநேரம் சினிமா இயக்கத்தில் முதல்முறையாகக் களமிறங்குகிறார். ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கான தொலைக்காட்சி விளம்பரத்தில் ‘உலகம் உயிர்பெறும் உங்கள் மொழியில்’ என கணீரென்று குரல்கொடுத்திருந்த அவர், “இயக்குநர் ஆகும் செய்தியை உங்களிடம்தான் முதலில் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது” என வாஞ்சையுடன் பேச ஆரம்பித்தார். அவரிடம் உரையாடியதிலிருந்து…
    கடந்து வந்த பாதையில் உங்கள் மனதுக்கு நெருக்கமான சில படங்கள் இருந்திருக்கும் அல்லவா?
    ஒரேயொரு காட்சியில் வந்துபோகிற கதாபாத்திரம் என்றாலும் அது எனக்கு நெருக்கமானதுதான். எனக்குத் தகுதியான கதாபாத்திரங்களைத்தான் தொடர்ந்து கொடுத்திருக்கிறார்கள். என்றாலும் ஐநூறு படங்களில் ‘நிழல்கள்’, ‘நாயகன்’, ‘மறுபடியும்’, ‘நான் பிடிச்ச மாப்பிள்ளை’ என்று 50 படங்களைத் தனியே எடுத்துவிடலாம் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எனக்கு விதவிதமான கதாபாத்திரங்களைக் கொடுத்து என்னைச் செதுக்கியவர் நடிகர் பாலாஜி.

    வில்லன் நடிகர் என்ற இமேஜ் உங்கள் மீது படியாமல் போனதற்கு என்ன காரணம்?
    எனது முகத்தை எப்படி வேண்டுமானும் மோல்ட் செய்துகொள்ளலாம் என்பதுதான் முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன். படம் முடியும்வரை இவன் நல்லவனா கெட்டவனா என்ற குழப்பத்திலேயே என் மீது கண்களைக் குவித்திருப்பார்கள் ரசிகர்கள். ஆனால் படத்தின் முடிவில் நான் கெட்டவனாக இருப்பேன். இதுபோன்ற கதாபாத்திரங்களை திரும்பத் திரும்ப நான் எத்தனைமுறை ஏற்று நடித்தாலும் ரசிகர்களுக்கு என் மீது அதே குழப்பம் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கும். இந்த அம்சம் எல்லா நடிகர்களுக்கும் அமைந்துவிடாது. என் பலம் இதுதா்ன். குணச்சித்திரம், ஹீரோ, வில்லன், திரும்பவும் ஹீரோ, திரும்பவும் வில்லன், மறுபடி குணச்சித்திரம் என்று நிழல் தன் ரூபத்திலும் மாறிக்கொள்வதுபோல எனக்கான பிம்பம் அமைந்துவிட்டது.

    ‘நிழல்கள்’ ரவி என்றாலே உங்கள் குரலே பாதி நடிப்பைத் தந்துவிடும். உங்கள் குரலால் உங்களுக்கு நடந்த நன்மைகள் என்ன?
    எனது குரல்தான் எனக்கு முதல் வாய்ப்பையே வாங்கிக்கொடுத்தது. கோவையில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு நடிகனாவது என்ற முடிவுடன் சென்னை வந்துவிட்டேன். தி. நகரில் இன்று ரெட் ரோஸ் பில்டிங்காக இருக்கும் வீட்டில் அன்று ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தின் படப்பிடிப்பு. ‘நினைவோ ஒரு பறவை’ பாடல் காட்சியை பாரதிராஜா ஷூட் செய்துகொண்டிருந்தார். மனோபாலா, மணிவண்ணன், ரங்கராஜ் என்று ஏகப்பட்ட உதவியாளர்கள். உதவியாளர் ஒருவரை அருகே அழைத்து “ ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தில் விஜயனுக்குப் பொருத்தமாக இருக்கிறமாதிரி ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் வேணும், தேடிப்பிடிங்க”ன்னு சொன்னார். இதைக் கேட்டுகொண்டிருந்த நான் உடனே இடையில் மூக்கை நுழைத்தேன். “சார் நான் நல்லா டப்பிங் பேசுவேன் சார்” என்றேன். அவரது உதவியாளர்களோ என்னடா இவன், நடிக்க வாய்ப்புத் தேடி வந்துட்டு டப்பிங் பேசறேன் என்று சொல்லி உள்ளே நுழையுறான் என்று ஆச்சரியப்பட்டார்கள். எனது ஆர்வத்தைக் கண்ட பாரதிராஜா “நாளை பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்துடுங்க” என்றார். நான் டப்பிங் தியேட்டரை முன்னே பின்னே பார்த்தது கூட கிடையாது.
    மறுநாள் பிரசாத் ஸ்டூடியோ சென்றதும் சவுண்ட் என்ஜினியரிடம் அழைத்துச் சென்று எனக்கு வாய்ஸ் டெஸ்ட் எடுத்தார்கள். கொஞ்ச நேரத்தில் பாரதிராஜா வந்தார். அவரிடம் சவுண்ட் என்ஜினியர் “ எங்க சார் பிடிச்சீங்க இந்தப் பையனை?! நல்ல மெட்டாலிக் வாய்ஸ். கணீர்ன்னு இருக்கு.” என்றார். எனக்கு சந்தோஷத்துல கை கால் நடுங்க ஆரம்பித்துவிட்டது. மறுநாள் பல காட்சிகளுக்கு டப்பிங் பேசிவிட்டேன். அதற்கும் அடுத்த நாள் சென்றபோது எனக்குப் பதிலாக இயக்குநரே டப்பிங் பேசிக்கொண்டிருந்தார். என்னடா இது! முந்தா நாள்தானே நமது குரலை மெட்டாலிக் வாய்ஸ் என்று பாராட்டிக்கொண்டிருந்தார்கள் என்று குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தேன். பிறகு மதிய உணவு இடைவேளையில் டப்பிங் அறையை விட்டு வெளியே வந்தார் பாரதிராஜா. என்னைக் கண்டதும் தோளில் தட்டிக்கொடுத்தபடி “விஜயன் மலையாள ஸ்லாங்கில பேசியிருக்கார். அதை மேனேஜ் பண்ணிப் பேசணும். அதனால நானே பேசிட்டேன். எனிவே.. நீங்க நம்ம படத்துல நடிக்கிறீங்க. படிச்சுட்டு வேலை தேடுற ஒரு பட்டதாரியோட கதை அடுத்த படத்துல நடிக்கத் தயாரா இருங்க” என்றார். இப்படித்தான் என் குரல் எதற்காக நான் சென்னைக்கு வந்தேனோ அதை நிறைவேற்றிக்கொடுத்தது. எனது குரலை மீண்டும் அங்கீகரிக்கும் விதமாக ‘பொம்மலாட்டம்’ படத்தில் நானா படேகருக்குக் குரல்கொடுக்க வைத்தார் பாரதிராஜா.

    சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என மூன்று தலைமுறை கதாநாயகர்களுடன் நடித்திருக்கிறீர்கள். ஒரே அச்சில் வார்த்ததுபோல் வரும் கதாநாயக சினிமாக்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?
    பாகவதர் காலத்திலேயே கதாநாயக சினிமா ஆரம்பித்துவிட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். ஃபார்முலாவுக்குக் கிடைத்த வெற்றியால்தான் அதை விட மறுக்கிறோம். கிட்டத்தட்ட குதிரைப் பந்தயம் மாதிரிதான் இது. தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் கதாநாயக சினிமாவை நீங்கள் என்றைக்கும் ஒழித்துவிட முடியாது. இங்கே கதாநாயன் வில்லனை மன்னிப்பதைவிட அடித்துக் கொன்றால்தான் ரசிகர்களுக்கு முழுப் படம் பார்த்த திருப்தி கிடைக்கும். ஆனால் இந்தித் திரையுலகம் அப்படியில்லை. அது மிகப் பெரிய சந்தையைக் கொண்ட திரையுலகம். அங்கே அமிதாப் பச்சன் ஒரு ‘சீனி கம்’ ‘பா’, ‘பிக்கு’ மாதிரி படங்களில் நடிக்கிறார். ஆமிர் கான், ஷாருக் கான், சல்மானும்கூட வித்தியாசமாக முயற்சித்து வெற்றிபெறுகிறார்கள். ஆனால் தென்னிந்தியாவில் அப்படிப்பட்ட கலைஞனாக கமல் மட்டுமே இருக்கிறார். அஜித்துக்கு ஆரம்ப காலத்தில் அந்த ஆர்வம் இருந்தது. வரும் தலைமுறை நடிகர்கள் இதிலிருந்து விலகி வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். காரணம் கதாநாயகர்கள் செய்யும் அத்தனை சாகசங்களையும் தூக்கிச் சாப்பிடும்விதமாக தற்போது 3டி அனிமேஷன் கதாபாத்திரங்கள் வந்துவிட்டன. அவற்றுக்கு ஹீரோக்களைவிட அதிக அளவில் ரசிகர்கள் பெருகிவிட்டார்கள்.

    அனிமேஷன் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. நீங்கள் ஒரு அனிமேஷன் பள்ளியை நடத்தி வருகிறீர்கள் இல்லையா?
    ஆமாம்! ஒரு கட்டத்தில் குழந்தைகளோடு அனிமேஷன் படங்களைப் பார்க்க ஆரம்பித்து அவற்றின் மீது தனிக் காதலே வந்துவிட்டது. வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் அனிமேஷன் படங்கள் இத்தனை ஈர்ப்பதற்கு என்ன காரணம் என்று யோசித்தபோதுதான் அவற்றில் இருக்கும் கலை நேர்த்தியே காரணம் என்று புரிந்தது. அனிமேஷன் படங்கள் எப்படி உருவாகின்றன என்று தேடித்தேடித் தெரிந்துகொண்டேன். அனிமேஷனையும் கற்றுக்கொண்டு நானே அனிமேட்டராகவும் ஆகிவிட்டேன். உலகம் முழுவதும் ‘லைவ் ஆக்*ஷன்’ படங்களுக்கு இருக்கும் சந்தையை விட இவற்றுக்கு அதிகம். வேலைவாய்ப்புகள் அனிமேஷனின் மட்டுமில்லை, கேமிங், பிராண்டிங், ஹெல்த், என்ஜினியரிங் என பல துறைகளில் தேவை இருக்கிறது என்று தெரிந்ததும் மிகக் குறைந்த கட்டணத்தில் அனிமேஷன் சொல்லித்தர வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் தொடங்கியதுதான் அனிபிக்ஸ் அனிமேஷன் அகாடெமி. என்னை வளர்த்த திரையுலகத்துக்கு உருப்படியாக இதைச் செய்திருக்கிறேன் என்று நிறைவாக இருக்கிறது. ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் அனிமேஷன் சொல்லித்தந்து திறமைக்கேற்ப வேலை வாங்கிக்கொடுப்பதையும் நாங்களே செய்துவிடுகிறோம். இதுவரை 20 பேருக்கு வேலை வாங்கிக்கொடுத்திருக்கிறோம். அனிமேஷன், வி.எஃப்.எக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து சாஃப்ட்வேர்களையும் இங்கே சொல்லிக்கொடுக்கிறோம்.

    படம் இயக்க வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?
    மிகச் சிறந்த இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். அவர்களது விதவிதமான பாணிகளை உள்வாங்கியிருக்கிறேன். நடிகன் என்ற ஒருநிலையோடு திருப்தி அடைந்துபோய்விடுவதில் எனக்கு விருப்பமில்லை. எனவேதான் திரைப்படத்தை இயக்குவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். ஒரு நல்ல நடிகனால் சக நடிகர்களிடமிருந்து தரமான நடிப்பை வாங்கிவிட முடியும் என்று நம்புகிறேன். திரைக்கதை வேலைகள் முடியும் நிலைக்கு வந்துவிட்டன. மிக விரைவில் அதிகார பூர்வமாக அறிவிக்க இருக்கிறேன்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2082
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    தேனாண்டாள் பிலிம்ஸ் 100-வது படத்தை இயக்குகிறார் சுந்தர்.சி

    முன்னணி தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தை இயக்க சுந்தர்.சி ஒப்பந்தமாகியுள்ளார். 'ஆடி வெள்ளி', 'காஞ்சனா', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' உள்ளிட்ட பல்வேறு வரவேற்பைப் பெற்ற படங்களை தயாரித்த நிறுவனம் தேனாண்டாள் பிலிம்ஸ். படத்தயாரிப்பு மட்டுமன்றி பல்வேறு பேய் படங்களை தமிழகமெங்கும் விநியோகம் செய்து வருகிறது.

    தற்போது சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சித்தார்த் நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்திற்கு இன்னும் இயக்குநர் முடிவாகவில்லை.

    இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 100வது படத்தை இயக்க சுந்தர்.சி ஒப்பந்தமாகி இருக்கிறார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    வரலாற்று பின்னணியோடு உருவாக இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் சுந்தர்.சி. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் ஒரே தலைப்பாக வருவது போன்று தலைப்பு பரிசீலனை நடைபெற்று வருகிறது. மேலும், மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர், நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.

    இப்படத்துக்காக அந்த காலத்து கப்பல்கள், அரண்மனைகள் என பல்வேறு பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  4. #2083
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    good one

    ’வெயிலில் நின்றால் கறுத்துவிடுவீர்களா?’ நடிகர்களை வறுக்கும் திருப்பூர் சுப்ரமணியம்

    விஷால் நடிப்பில் மே 20ல் வெளியாகவிருக்கும் திரைப்படம் மருது. முத்தையா இயக்கத்தில் ராதாரவி, ஸ்ரீதிவ்யா, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் மே 20ல் வெளியாகவிருக்கிறது. அதற்கான செய்தியாளர் சந்திப்பில், விஷால். "பைரஸியை கொன்றே தீருவேன், மேலும் 24 படத்திற்கான திருட்டு விசிடி எங்கு தயாரானது என்பது வரைக்கும் தெரியும், ஆனால் நடவடிக்கை எடுக்க யாருமில்லை" என்றெல்லாம் கொதித்தெழுந்தார்.

    தொடர்ந்து, “மருது படத்திற்கான திருட்டி விசிடி வெளியிடுபவர்களை நானே கண்டுபிடிப்பேன், நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன், எல்லா ப்ரிண்டும் தியேட்டர்களிலிருந்துதான் வெளியில் போகிறது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்களும் பொறுப்பு. தயாரிப்பாளர்கள் தான் திருட்டைத் தடுக்க உதவ முன்வர வேண்டும்” என்றும் கூறினார். விஷாலின் இந்தக் குற்றச்சாட்டுக்கு, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து வாட்ஸ் அப் மூலமாக திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டிருக்கும் ஆடியோவில்,

    "திருட்டு விசிடி பற்றி விஷால் பேசியதைக் கேட்டேன். திருட்டு விசிடி என்னமோ தமிழ்நாடு திரையரங்குகளில் எடுப்பது போல மட்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படிக் கிடையாது. தொடர்ச்சியாக 200 படங்கள் வெளியாகிறது என்றால், 5 முதல் 10 படங்கள் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மூலையில் திரையரங்கில் இருந்து எடுக்கப்படலாம். அது கூட அந்தத் திரையரங்க முதலாளியால் கிடையாது.

    சின்ன திரையரங்குகளில் ஒரு நாளுக்கு ரூ.2000 வருமானம் கூடக் கிடையாது. ஆகையால் அந்த திரையரங்கில் 3 அல்லது 4 ஆட்கள் தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் 2 மணிக்கு வேலை முடிந்து சென்றவுடன் வாட்ச் மேன் அல்லது ஆப்ரேட்டர் படுத்து தூங்குவார். அவர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு தான் இந்த வேலை நடக்கிறது. அது கூட ஏதோ ஒரு சின்ன திரையரங்கில் தான் நடக்கிறது. அதைக் கூட தடுப்பதற்கு அதிகாலை 2 மணி முதல் 9 மணி வரை க்யூப் லாக் பண்ணி வைப்பதற்கு க்யூப்பில் கேட்டிருக்கிறோம். அதற்கான வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு திரையரங்குகள் அனைத்துமே இதற்கு தயாராக இருக்கிறோம். சின்ன திரையரங்கில் நடப்பதை நீங்கள் தமிழ்நாடு திரையரங்குகள் அனைத்திலும் நடப்பது போல பேசுகிறீர்கள். எல்லாத் துறைகளிலும் இருப்பது போல, இரண்டு மூன்று சதவிகித ஆட்கள் தப்பானவர்களாக இங்கும் இருக்கலாம். அவர்களை தண்டிப்பதற்கு நாங்களே தயாராக இருக்கிறோம்.

    ஒரு படத்தின் திருட்டு டிவிடி எங்கு எடுக்கப்பட்டது என்று கண்டறிய 54000 மட்டும்தான் செலவாகும் என்கிறீர்கள். வருடத்திற்கு 200 படங்கள் வெளியாகிறது என்றால் மொத்தம் ஒரு கோடி ஆகிறது. அனைத்து சங்கங்களும் ஆளுக்கு 20 லட்சம் போடலாம். திரையரங்கு உரிமையாளர் சங்கமும் 20 லட்சம் கொடுக்கத் தயார். எந்த படத்தின் டிவிடி வந்தாலும் நாம் போய் சோதனை செய்யலாம். நான் அடித்துச் சொல்கிறேன்.. அந்த 200 படங்களில் 190 படங்கள் வரை வெளிநாட்டில் இருந்து தான் வந்திருக்கும். ஆனால் நீங்கள் தமிழ்நாடு திரையரங்குகள் என்று மட்டும் தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் வெளிநாட்டில் இருந்து தான் அதிக திருட்டு டிவிடிக்கள் வருகிறது. நீங்கள் வெளிநாட்டு உரிமை விற்கும் போது மொத்த சொத்தையும் எழுதிக் கொடுத்துவிடுகிறீர்கள். எல்லா உரிமையையும் கொடுத்துவிடுகிறீர்கள்.

    ஒவ்வொரு நாயகனும் வெளிநாட்டு உரிமையை வாங்கி இரண்டு வாரம் கழித்து வெளியிடலாமே. தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கும் போது வெளிநாட்டு உரிமைக்கு ஓர் ஒப்பந்தம் போட்டு வாங்கிக் கொள்ளுங்கள். தற்போது முழுக்க டிஜிட்டல் மயம் என்பதால் எங்கு எடுத்தாலும் கண்டுபிடிக்க முடியும். அப்படி கண்டுபிடிக்கப்பட்ட திரையரங்கிற்கு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் இணைந்து ஆறு மாதத்திற்கு படம் கொடுக்க வேண்டாம் என சொல்வோம். இரண்டாவது முறையும் அந்த திரையரங்கம், திருட்டு டிவிடி குற்றத்தில் பிடிபட்டால் அந்த திரையரங்கிற்கு படம் கொடுப்பதையே நிறுத்துவோம். திரையரங்கை மூட வலியுறுத்துவோம். நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் அப்படியெல்லாம் தொழில் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை.

    உங்கள் படம் வரும் போது மட்டுமே பேசுகிறீர்கள். முக்கியமான வீடியோ வெளிநாட்டில் இருந்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து வருகிறது என்பதற்கு என்னால் ஆதாரம் காட்ட முடியும். சின்ன திரையரங்குகளுக்கு என்ன வருமானம் பண்ணிக் கொடுக்கிறீர்கள். பெரிய நாயகர்கள் படம் வந்தால் அதிகமான விலை கேட்கிறீர்கள். நீலகிரி மாவட்டத்தில் 38 திரையரங்குகள் இருந்தது, தற்போது மொத்த மாவட்டத்திற்கும் சேர்த்து, ஊட்டியில் மட்டும் வெறும் 2 திரையரங்குகள் தான் இருக்கிறது தெரியுமா? ஒரு மாவட்டத்தில் இருக்கிற 36 திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கிறது. என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பெரிய நடிகர்களின் படம் போடும் போது ரூ.300க்கு டிக்கெட் விற்பனை செய்யுங்கள் என நீங்களே சொல்கிறீர்கள்.

    சென்னை திரையரங்குகளில் எத்தனை திரையரங்குகளில் நீங்கள் முன்பணம் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதே போல கோயம்புத்தூர், கடலூர் உள்ளிட்டவற்றில் யாராவது சொன்னால் எங்களது வருமானமே போச்சு என்று சொல்கிறீர்கள். மல்டிபிளக்ஸ் திரையரங்குகிற்கு மட்டும் 50%, 40%, 30% என்பார்கள். எங்கே போனீர்கள் நடிகர்கள் எல்லாம்? சிறுதிரையங்கம் என்றால் 80% கொடு, 5 லட்சம் அட்வான்ஸ் கொடு என்று கேட்டு அவனைப் போட்டு சாகடிப்பீர்கள். தியேட்டரை மூடினால் ஊருக்குள் பேசுவார்கள்.. மரியாதை வேண்டும் என்பதற்காக பலர் திரையரங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் நடிகர் சங்கத்தில் ஒரு நடவடிக்கை கூட எடுத்து விடாதீர்கள். டிக்கெட் ரூ.100க்கு மேல் விற்கக் கூடாது, விற்றால் ரசிகர்கள் எங்களிடம் சொல்லுங்கள் என நடிகர் சங்கம் சொல்ல வேண்டியது தானே.

    கடந்த வாரம் டெல்லி கணேஷ் ஒரு ஆடியோ பேசியிருந்தார். தியேட்டர்கள்மீது குற்றம் சாட்டியிருந்தார். முதலில் ஏன் உங்கள் பையனை நேரடி நாயகனாக்கினீர்கள். ரஜினி சார், கமல் சார் போல சிறு சிறு வேடங்களில் நடித்து நாயகனாக்கி இருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக முன்னிறுத்தி பண்ணலாம். எடுத்தவுடனே விஜய் மாதிரி நேரடி நாயகன் என்று வந்துவிடுகிறீர்கள். விஜய்யை நாயகனாக்க அவங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா? கிட்டதட்ட 8 முதல் 10 படங்கள் சொந்த காசு போட்டு பண்ணினார். இயக்குநர்கள், நடிகர்கள் அவர்களின் மகன்கள் அனைவருமே நேராக நாயகன் தான் என்கிறீர்கள். படம் நன்றாக இருந்தால் ஓட்டுவதற்கு அனைவருமே தயாராக இருக்கிறார்கள். இறுதிச்சுற்று எங்கள் மல்ட்டிப்ளக்ஸில் இரண்டு ஷோ மட்டுமே போட்டோம். நன்றாக போனதால் 12 ஷோவாக எல்லா ஸ்கிரீனுக்கும் மாற்றினோம். நன்றாக இருந்து, ஜனங்கள் பார்த்தால் யார் என்ன என்பதெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை.

    எந்த திரையரங்க உரிமையாளர் ஒடுகிற படத்துக்கு திரையரங்கம் தரமாட்டேன் என்று சொல்லுவார். மக்கள் சிறிய படங்களைப் பார்க்க வருவதில்லை. அனைத்து நடிகர்களும் தான் வரவிடாமல் பண்ணிவிட்டீர்கள். ஏனென்றால் ஒரு பெரிய படத்திலேயே அவன் பையில் இருக்கும் மொத்த காசையும் பிடுங்கிவிடுகிறீர்கள். பின்பு எப்படி சிறிய படத்திற்கு வருவான்.

    அரசாங்கத்திடம் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்யுங்கள். அனைத்து ஏரியாக்களுக்கும் சதவீத அடிப்படையில் படங்கள் தருகிறோம் என்று சொல்லுங்களேன். கார்ப்பரெட் கம்பெனிகளுக்கு 50% கொடுப்பவர்கள் சிறு திரையரங்குகளுக்கும் கொடுங்கள். அந்த சிறு திரையரங்கில் கண்விழித்துப் படம் ஓடியதால் இன்று சொகுசாக வாழ்கிறீர்கள். யாரோ இரண்டு திரையரங்க உரிமையாளர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த திரையரங்க உரிமையாளர்களும் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லாதீர்கள்.

    நடிகர்களுக்கு ரூ. 5 கோடி, 10 கோடி, 30 கோடி, 40 கோடி என்று சம்பளம் வேண்டாம். லாபம் பொறுத்து சம்பளம் வாங்கலாம் என்று நடிகர் சங்கத்தில் இருந்து அறிவிக்க வேண்டியதானே. அதை விடுத்து ரூ.20 கோடி, 30 கோடி கொடு என்று தயாரிப்பாளரை நச்சரிக்க வேண்டியது ஏன்? மொத்தமாகக் கொடு, படப்பிடிப்பில் கேரவன் கொடு என்று கேட்கிறீர்கள். ஹீரோ, ஹீரோயின், காமெடியன் ஆளுக்கொரு கேரவன். ஏன் வெயிலில் நின்றால் கறுத்துப் போய்விடுவீர்களா?

    நாங்களும் வெயிலில் நின்று தான் தொழில் பண்ணுகிறோம். ஒரு படத்துக்கு சக்சஸ் மீட் என்று தயாரிப்பாளர் பணத்தில் ரூ.10 லட்சம், 20 லட்சம் என செலவு பண்ணுகிறீர்கள். 'பிச்சைக்காரன்' படத்துக்குத் தான் சக்சஸ் மீட் வைக்க வேண்டும். ஏனென்றால் வாங்கியதை விட 3 மடங்கு லாபம் கொடுத்தது அந்தப்படம்தான்.

    எதற்கு எடுத்தாலும் விநியோகஸ்தர் மீதும் திரையரங்க உரிமையாளர் மீதும் குறை சொல்லாதீர்கள். வெளிநாட்டில் பட வெளியீட்டை நிறுத்துங்கள். தமிழ்நாட்டில் எந்த திரையரங்கில் இருந்து திருட்டு டிவிடி வருகிறது என்று நாங்களும் பார்க்கிறோம். எங்களுக்கு திருட்டு டிவிடிக்கு துணை போய் தொழில் பண்ண வேண்டும் என்ற அவசியமில்லை. எதற்கெடுத்தாலும் திருட்டு டிவிடிக்கு தமிழ்நாடு திரையரங்குகள் துணை போகிறது என்று சொல்வது வருத்தமாக இருக்கிறது.

    இப்போது டிவி உரிமை விற்பதில்லை. அதே போல வெளிநாட்டு உரிமையை விற்காமல் ஒரு 2 வாரங்கள் கழித்து விற்கலாமே. விற்றுப் பாருங்கள் அப்புறம் எப்படி திருட்டு டிவிடி வருகிறது என்று பார்க்கலாம்" என்று கடுமையாகப் பேசியுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  5. #2084
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Now a days this guy full time job is to target actors....he talks so much about actors salary but never opens about the canteen and parking charges and profit(infact its more than a ticket sales)
    The reason y now a days families rarely turns up in the theatres are
    1.canteen..they spending more for snacks than a ticket
    2.lack of good content(family oriented movies)
    3.Even in small towns minimum popcorn price is 40

    Now a days People who r taking more risk in this business are producer and distributor.. Now a days only few theatres releasing movies in MG basis tat too they are very calculative(mostly they releasing in percentage basis or rent basis)
    Theatre owners happily and silently enjoying canteen and parking profits for years..
    Is subramaniam running a 5 screen multiplex without getting profits..?
    He similarly bashed theatres for openly revealed collections during vedalam time...so he dont want theatres to be transparent in revealing the collections...His allegations doesnt make sense
    Last edited by praboo; 12th May 2016 at 09:36 AM.

  6. Thanks balaajee thanked for this post
  7. #2085
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'யு/ஏ' சான்றிதழுடன் மே 20-ல் வெளியாகிறது 'மருது'

    முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் 'மருது' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
    விஷால், ஸ்ரீதிவ்யா, ஆர்.கே.சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மருது'. முத்தையா இயக்கி இருக்கும் இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பை முழுக்க முழுக்க ராஜபாளையத்தில் நடத்தியிருக்கிறார்கள்.

    அனைத்து பணிகளும் முடிவுற்றதைத் தொடர்ந்து சென்சார் அதிகாரிகளுக்கு 'மருது' திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு சில வசனங்களை மட்டும் மியூட் (mute) செய்ய சொல்லிவிட்டு 'யு/ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

    சென்சார் பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து , மே 20-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.
    'மருது' படத்தின் பணிகள் அனைத்தும் முடிவுற்றதைத் தொடர்ந்து, சுராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கத்தி சண்டை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  8. #2086
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    உருவாகிறது 'சந்திரமுகி 2' - ரஜினிக்கு பதிலாக லாரன்ஸ் - tamil hindu

    பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ், வடிவேலு நடிப்பில் 'சந்திரமுகி 2' உருவாகவுள்ளது.
    கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான படம் 'சிவலிங்கா'. வேதிகா, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ் ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கியது.

    'சந்திரமுகி' போலவே இப்படத்தையும் ரஜினியை வைத்து பி.வாசு இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது லாரன்ஸ் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். லாரன்ஸ் உடன் முக்கிய பாத்திரத்தில் வடிவேலு நடிக்க, பி.வாசு இயக்க இருக்கிறார்.

    நாயகி மற்றும் லாரன்ஸ் உடன் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைத்தும் முடிந்தவுடன் முறையாக தகவல்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  9. #2087
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ஒலிம்பிக் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்

    ஏ.ஆர்.ரஹ்மான். | கோப்புப் படம்.
    ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற் கும் இந்திய அணியின் நல்லெண் ணத் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நியமிக்கப் பட்டுள்ளார்.

    31-வது ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடை பெறுகிறது.ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலில் நியமிக்கப்பட்டார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்த சர்ச்சையில் இருந்து தப்பிக்க மேலும் பலரை நல்லெண்ணத் தூதர்களாக நியமிப்பதில் ஐஓஏ தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர்.ரஹ்மான், அபிநவ் பிந்த்ரா ஆகியோரைத் தூதராக்கும் முயற்சியில் இறங்கியது. ஐஓஏவின் வேண்டு கோளை ஏற்ற நிலையில் அபிநவ் பிந்த்ரா, சச்சின் ஆகியோர் தூதர்களாக நியமிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், ஐஓஏ-வின் கோரிக்கையை ஏ.ஆர்.ரஹ்மா னும் ஏற்றுக் கொண்டுள்ளார்.இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் நேற்று வெளியானது. ஒலிம்பிக் போட்டிக்கு தூதராக இருப்பது தனக்குப் பெருமை அளிப்பதாக ரஹ்மான் தெரிவித் துள்ளார்.



    "Adakkam amararul uiykkum adangaamai aarirul uiythu vidum"
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  10. #2088
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    15 lakhs not enough for a debutante director !

    ''படம் நல்லா வந்திருக்கு. ஆனாலும், சங்கடம்தான்..!’’ - இது ‘பென்சில்’ பஞ்சாயத்து!

    ழக்கமாக பணம் படைத்த பலரின் மகன்கள் 'அப்பா நான் ஹீரோவாக நடிக்கணும் " என்று அடம்பிடித்து நடித்து வெளிவந்த படங்கள் பல. அவற்றில் ரிலீஸான உடனே பல படங்கள் சுவற்றில் எறிந்த பந்தாக திரும்பி வந்தது. கோடம்பாக்கத்தில் கோடீஸ்வரன்களாக திவான் மாதிரி வந்தவர்கள் திவால் ஆகிப்போன கதைகள் ஏராளம். 'பென்சில்" தயாரிப்பாளரின் பங்களா போயஸ்கார்டனில் இருக்கிறது. டாக்டரான சண்முகம் மகனுக்கு சினிமா தயாரிப்பாளராக வேண்டும் என்பது கனா. பெற்ற மகன் ஆசைக்காக 'பென்சில்" எடுத்து இப்போது பிளேடால், தன் கையை தானே கீறிக்கொண்டதுபோல நிற்கிறார், சண்முகம்.

    ஜி.வி.பிரகாஷ், திவ்யா நடிப்பில் உருவானது 'பென்சில்" திரைப்படம். கெளதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக வேலைப் பார்த்த மணிகண்டன் இயக்கிய இந்தப்படம் வருகிற 13-ம்தேதி திரைக்கு வருகிறது. முதல் சினிமா இயக்கும் வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் சண்முகத்தின் கண்களில் 'ஏண்டா சினிமாவுக்கு வந்தோம்" என்று ரத்தக் கண்ணீரை வரவழைத்து விட்டார், மணிகண்டன் .

    முதல்பட வாய்ப்பு வழங்கும்போது அறிமுக இயக்குனருக்கு ஆயிரங்களில் சம்பளம் தருவது ஆர்.பி.செளத்ரி போன்ற தயாரிப்பாளருக்கு வழக்கம். 'பென்சில்" படத்துக்கு மணிகண்டனுக்கு ஏழு லட்சம் சம்பளம் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அண்மையில் 'பென்சில்" வெளிவர இருக்கும் சூழ்நிலையில் இயக்குனர்கள் சங்கத்தில் 'எனக்கு 10 லட்சம் சம்பளம் தரவேண்டும்"" என்று தயாரிப்பாளர் மீது புகார் பட்டியல் வாசித்தார், மணிகண்டன்.

    தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் இரண்டும் இணைந்து இருவரையும் அழைத்து அருகருகில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. 'டைரக்டருக்கு சம்பளமாக 7-லட்சம் பேசப்பட்டது. நான் 15-லட்சம் கொடுத்து விட்டேன். பேசிய சம்பளத்தைவிட எட்டு லட்சம் அதிகமாக கொடுத்து விட்டேன்" என்று சொன்னார், சண்முகம். 'ஆமாம் 15-லட்சம் வாங்கி விட்டேன்" என்று கூலாக ஒப்புக்கொண்ட மணிகண்டன். 'எனக்கு சம்பளம் போதாது இன்னும் 10-லட்சம் தரவேண்டும்" என்றும் அடம்பிடித்தார்.

    'படம்தான் நல்லா வந்திருக்கு இல்லே. பேசாம டைரக்டர் கேட்குறதை கொடுங்க" என்று மணிகண்டனுக்கு ஆதரவாக தலைவர் விக்ரமனும், செயலாளர் செல்வமணியும் குரல் கொடுத்தனர். கடைசியில் வேறு வழியில்லாமல் பேரம்பேசி ஐந்து லட்சம் கொடுத்து செட்டில் செய்தார் தயாரிப்பாளர். இதுபோல் புது டைரக்டர்கள் நன்றி மறந்து நடந்து கொள்கிறவரை கோடம்பாக்கத்துக்கு கும்பிடு போட்டுவிட்டு, பின்னங்கால் பிடறியில் இடிபட, தலைதெறிக்க ஓடிக்கொண்டேதான் இருப்பார்கள் தயாரிப்பாளர்கள்.
    இதுபற்றி டாக்டர் சண்முகத்திடம் பேசினால், ‘இயக்குநர் சம்பள விஷயத்தில் சிக்கல் வந்தது உண்மைதான். அது பேசி முடிக்கப்பட்டுவிட்டது, ஏழு லட்சம் பேசி, பதினைந்து லட்சம் கொடுக்கப்பட்டதும் உண்மைதான். இந்தப்படம் தொடங்கும்போது ஜி.வி.பிரகாஷுக்கு இருந்த மார்க்கெட் இப்போது அதிகரித்திருக்கிறதென்றும் அதனால் இயக்குநருக்கு அதைவிடவும் அதிகச் சம்பளம் தரவேண்டும் என்றும் சொன்னார்கள். அதையும் கொடுத்துவிட்டோம். படம் நன்றாக வந்திருக்கிறது. நன்றாகப் போகும். ஆனால் படத்தைத் தயாரித்த நாங்கள் மட்டும் நட்டப்பட்டிருக்கிறோம்” என்கிறார் வேதனையுடன்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  11. #2089
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சர்ச்சை: இளையராஜாவின் வாதம் சரியா? - tamil hindu

    பாடலுக்கு ஒரு விருது, பின்னணி இசைக்கு ஒரு விருது என்று திரையிசையை இரண்டாகப் பிரித்து விருது கொடுப்பதை இசையமைப்பாளர் இளையராஜா ஆட்சேபித்திருக்கிறார். பின்னணி இசையும் பாடல்களும் சேர்ந்ததுதான் திரையிசை என்றும் அதை முழுமையாகத்தான் அணுக வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ‘தாரை தப்பட்டை’ படத்தின் பின்னணி இசைக்காக அவருக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை இந்த அடிப்படையில் அவர் மறுத்திருக்கிறார். இது குறித்துத் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்குக் கடிதமும் எழுதியிருக்கிறார். ‘பழசிராஜா’ படத்துக்காகத் தனக்குப் பின்னணி இசைக்கான விருது அளிக்கப்பட்டபோதும் அவர் இதையே சொல்லியிருந்தார்.

    திரையுலகம் கண்ட இசை மேதைகளில் ஒருவர் இளையராஜா என்பதில் சந்தேகம் இல்லை. பாடல்கள், பின்னணி இசை இரண்டையும் ஒருங்கிணைத்து மதிப்பிடும்போது இசையமைப்பாளரின் பன்முகத் திறனும் அவரது முழுமையான இசை ஆளுமையும் வெளிப்படும் என்பதிலும் ஐயமில்லை. ஆனால், இரண்டையும் தனித்தனியாக மதிப்பிடுவது ஒருவருடைய பெருமையைக் குறைப்பதாக அமையும் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று தோன்றுகிறது.
    இரண்டும் ஒரே கலை நோக்கின் மாறுபட்ட வெளிப்பாடுகள் என்றாலும் பல்வேறு காரணங்களால் இவை இரண்டும் தனித்தனியே அணுகக்கூடிய வகையிலேயே இருக்கின்றன. இயக்குநர்கள் இவை இரண்டையும் பார்க்கும் விதத்திலும் இசையமைப்பாளர்கள் இவற்றை அணுகுவதிலும் இவை வெளிப்படும் விதங்களிலும் இருக்கும் வித்தியாசங்கள்தான் இந்தப் பிரிவுக்கு அடிப்படை.
    பல படங்களில் பின்னணி இசை, பாடல்கள் இரண்டும் ஒரே சீரான தரத்தில் அமைவதில்லை. அற்புதமான பாடல்கள் கொண்ட படங்கள் பலவற்றில் பின்னணி இசை மிகவும் சுமாராக அமைந்துவிடுகிறது. பின்னணி இசை அபாரமாக உள்ள சில படங்களில் பாடல்கள் அவ்வளவாகச் சோபிக்காமல்போவதும் உண்டு. எல்லா இசையமைப்பாளர்களுக்கும் இது நேர்கிறது.
    இந்நிலையில் இரண்டையும் சேர்த்துப் பார்ப்பதன் மூலம், சிறப்பாக அமைந்த ஓர் அம்சத்துக்குக் கிடைக்க வேண்டிய பெருமை கிடைக்காமல் போகலாம். இதைத் தவிர்க்க இரண்டையும் பிரித்துப் பார்ப்பது பலனுள்ளதாக இருக்கும்.

    பாடல்களின் இடம்
    உலகத் திரை அரங்கில் பாடல்கள் திரைப்படத்தின் இன்றியமையாத அம்சமாக இல்லை. பின்னணி இசை அவ்வாறு இருக்கிறது. இதன் காரணமாகப் பாடல்களைச் சற்றே குறைத்து எடைபோடுவது இந்தியப் பின்னணியில் பெரும் பிழையாகவே அமையும். இந்தியத் திரையிசையைப் பொறுத்தவரையிலும் பாடல்கள் திரைப்படம் என்னும் கலையின் தவிர்க்கவியலா அம்சமாகிவிட்டன.
    இதற்கான பண்பாட்டு, வரலாற்று, சமூகக் காரணங்கள் பல தளங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்திய இசை வெளி பரந்து விரிந்தது. செவ்வியல், பக்தி, நாட்டார் இசை எனப் பன்முகத்தன்மை கொண்டது. இசையும் பாடல்களும் இங்கே இரண்டறக் கலந்தவை. இந்தியாவைப் பொறுத்தவரை இசை என்றாலே பாடல்கள் என்றுகூடச் சொல்லிவிடலாம்.
    இந்தியப் பொது மனத்தில் பாடல்கள் முக்கியமான இடம்பெற்றுள்ளதாலும் பாடல்கள் படத்தின் மதிப்பைக் கூட்டுவதாலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழில் பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணி ரத்னம், ஷங்கர், ராஜீவ் மேனன், வஸந்த், செல்வராகவன், கௌதம் மேனன் போன்ற இயக்குநர்கள் சிலர் திரைப்படத்தில் பாடல்களின் இடத்தை ஏற்றுக்கொண்டு அவற்றைத் தங்கள் படங்களின் வலுவான அம்சங்களில் ஒன்றாக அமைத்துக்கொள்கிறார்கள். பாடல்களைத் தவிர்த்துவிட்டு இவர்களது படங்களை யோசிப்பதுகூடக் கடினமாகிவிடும் அளவுக்கு அவை வலுவாக இடம்பெற்றுவிடுகின்றன.

    பின்னணி இசையின் இடம்
    இந்தியத் திரைப்படங்கள் பேசத் தொடங்குவதற்கு முன்பே பாடத் தொடங்கிவிட்டன. பேசும்படங்கள் பெருகிவந்த கட்டத்திலும் வசனங்களுக்கு இணையாக, சில சமயம் அவற்றைவிடவும் அதிகமாக, பாடல்கள் இடம்பெற்றன. காலப்போக்கில் பாடல்களின் எண்ணிக்கை குறைந்துவந்தது. 20, 30 என்ற எண்ணிக்கை மெல்லத் தேய்ந்து 5, 6 என்று நிலைபெற்றது. அண்மைக்காலம்வரை நீடித்த இந்தப் போக்கு இப்போது 2, 3 என்று குறைந்துவிட்டது. சில சமயம் பாடல்களே இல்லாமல் படங்கள் வருகின்றன.

    தன் திரை மொழியின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட கலைஞர்கள் பாடல்களைக் கூடியவரையிலும் தவிர்க்கவே பார்க்கிறார்கள். சத்யஜித் ராய் இதற்கு உதாரணம். ஆனால், பின்னணி இசை இல்லாமல் படங்கள் வருவதில்லை.
    காட்சிகளுக்கு உறுதுணையாக வரும் பின்னணி இசை கதையை எந்த விதத்திலும் சிதைக்காமல் உடன் பயணிக்க முடியும். காட்சிகளின் பொருளையும் ஆழத்தையும் கூட்ட முடியும். பின்னணி இசையின் முக்கியத்துவத்தை உணர்த்திய கலைஞர்களில் இளையராஜாவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

    பாடல்களைப் போலவே பின்னணி இசையும் செயற்கையானதுதான் என்றும் வாதிடலாம். காட்சிகளுக்கேற்ற இயல்பான ஒலிகளை மட்டுமே வைத்துப் படம் எடுப்பதே யதார்த்தத்துக்கு நெருக்கமானது என்பதில் ஐயமில்லை. எனவே இரண்டில் எது முக்கியமானது என்னும் விவாதத்தில் இறங்குவதைவிட, இரண்டும் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்று பார்ப்பதுதான் முக்கியமானது.

    பாடல்கள், பின்னணி இசை ஆகிய இரண்டும் சேர்ந்ததுதான் திரையிசை என்று சொல்லும் இளையராஜா, இதில் ஒன்றுக்கு மட்டும் தனக்கு விருது கொடுத்தால் தான் தன் வேலையை அரைகுறையாகச் செய்திருக்கிறேன் என்று பொருள் என்கிறார். இது ஆழமாக யோசிக்க வேண்டிய கருத்து. ஒரு படத்துக்கான பாடல்களும் அதன் காட்சிகளுக்கான பின்னணி இசையும் பிரிக்க முடியாதவை என்றால் இவை இரண்டுமே படத்தை, திரைக்கதையை அதன் காட்சிகளை ஒட்டி எழுபவை என்றுபொருள்.
    ஆனால், நடைமுறையில் அப்படித்தான் இருக்கிறதா? பல சமயம் பாடல்கள் தேவையற்ற திணிப்பாக இருப்பதைப் பார்க்கிறோம். இத்தகைய தருணங்களில் பாடல்கள் படத்தினின்று தனியே நிற்கின்றன. இதற்கு இசையமைப்பாளர் காரணம் இல்லை. இந்நிலையில் இரண்டையும் அவரது படைப்பின் இரு பரிமாணங்களாக எப்படிப் பார்க்க முடியும்?

    படத்தின் பின்புலத்தோடு பார்க்கும்போது பின்னணி இசைக்குப் பாடல்களை விடவும் முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், பாடல்கள் படத்தின், பின்புலத்தைத் தாண்டியும் கதைத் தருணங்களைத் தாண்டியும் முக்கியத்துவமும் உயிர்ப்பும் பெறக்கூடியவை. எனவே படத்திலிருந்து விலக்கியும் அவற்றைப் பார்க்கலாம். பின்னணி இசையை அப்படிப் பார்க்கவே முடியாது.

    ஆக, இரண்டுமே தமக்கே உரிய சாதக, பாதகங்களைக் கொண்டிருக்கின்றன. இரண்டின் உருவாக்கத்திலும் இந்தச் சாதக, பாதகங்களின் பாதிப்பு இருக்கவே செய்யும்.

    ஆக, வெவ்வேறு பின்புலங்களும் காரணங்களும் பரிமாணங்களும் சாதக, பாதகங்களும் கொண்ட பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பது, இவற்றிடையே உள்ள அடிப்படையான வேற்றுமைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் நடைமுறை சார்ந்த அணுகுமுறை என்று கருத இடமிருக்கிறது. ‘தாரை தப்பட்டை’ படத்தில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் ஆதாரத் தன்மையோடும் காட்சிகளோடும் ஒரே விதத்தில் உறவுகொண்டிருக்கின்றன என்பது உண்மைதான்.

    இப்படிப் பார்க்கும்போது அந்தப் படத்துக்கான இசையைப் பிரித்துப் பார்க்க வேண்டாம் என்று சொல்வதற்கான நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இது எல்லாப் படங்களுக்கும் பொருந்தாது. இதற்கு இளையராஜா உட்பட எந்த இசையமைப்பாளரும் விதிவிலக்கல்ல.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  12. #2090
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    thozha movie pirated version was taken from #atsc theatre pollachi on da day of release based on analysis reports
    This theatre was under the lease of thiruppur subramaniyam...

    Pesimbothae theriyuthu fraud nu

Similar Threads

  1. Karthik Raja (KR) Albums and Latest news
    By Hulkster in forum Current Topics
    Replies: 161
    Last Post: 13th January 2011, 06:58 PM
  2. Latest News & Other Tidbits on AR Rahman (II)
    By NOV in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1486
    Last Post: 2nd September 2009, 08:30 AM
  3. Listen to Latest n Old Tamil Albums Over 2k Here
    By logon2future in forum World Music & Movies
    Replies: 0
    Last Post: 19th February 2007, 10:45 PM
  4. Latest Tamil songs & Videos
    By mottufx in forum Classifieds
    Replies: 0
    Last Post: 3rd August 2005, 02:01 PM
  5. TAMIL LATEST RINGTONES
    By ferrari9845 in forum Classifieds
    Replies: 1
    Last Post: 20th June 2005, 08:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •