Page 208 of 216 FirstFirst ... 108158198206207208209210 ... LastLast
Results 2,071 to 2,080 of 2160

Thread: Latest News on Tamil Cinema

  1. #2071
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    வெளியானது மணிரத்னத்தின் அடுத்தபட தலைப்பு -Tamil vikatan



    மணிரத்னம் ஓ காதல் கண்மணி படத்தையடுத்து தனது அடுத்தப் படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். கார்த்தி, சாய் பல்லவி நடிக்கும் இப்படத்தின் கதை தீவிரவாதிகளை மையமாகக் கொண்டு ரோஜா பாணியில் உருவாக உள்ளதாக தகவல்கள் முன்பு கசிந்தன.

    தற்போது இப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. மேலும் போஸ்டரில் ஒற்றை ரோஜாவும், துப்பாக்கியும் ரத்தம் சிந்திய நிலையில் காட்சியளிக்க, குருதிப் பூக்கள் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
    எனவே போஸ்டரும் ரோஜாவை மறக்காமல், அதே சமயம் அப்படத்தின் தீவிரவாதத்தைக் காட்டும் படியும் துப்பாக்கி சகிதம் இருப்பதிலேயே காதலும், வன்முறையும் கலந்த படம் என்பதைக் காட்டுகிறது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை படத்திற்கும் மேலும் எதிர்பார்ப்புகளை கூட்டியுள்ளது
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2072
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Poster looks so plain..

  4. #2073
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் ஐக்கியமானார் பவர் ஸ்டார் சீனிவாசன்

    சென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடிகர் சீனிவாசன் பாஜக கட்சியில் இணைந்திருக்கிறார்.வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தற்போது களைகட்ட ஆரம்பித்துள்ளது. இதனையொட்டிபிரபலமான நடிக, நடிகையர் பலரும் தங்களுக்கு விருப்பமான கட்சிகளில் ஐக்கியமாகி வருகின்றனர்.

    சமீபத்தில் நடிகை நமீதா முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் நடிகர் பவர்ஸ்டார் தற்போது பாஜக கட்சியில் இணைந்திருக்கிறார்.மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடிகர் சீனிவாசனின் அரசியல் நிகழ்வு அரங்கேறியது.இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ''உடன்பிறப்புகளே! உங்களுக்காக நான்.உங்களுக்காகவே நான்" என்று குறிப்பிட்டிருக்கிறார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் காமெடி நடிகராக அறிமுகமான சீனிவாசன் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர்.மேலும் பல்வேறு மோசடி வழக்குகளுக்காக சீனிவாசன் சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இமான் அண்ணாச்சி, விந்தியா, செந்தில், நமீதா வரிசையில் பவர்ஸ்டாரும் பட்டையைக் கிளப்புவாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  5. #2074
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'நெஞ்சம் மறப்பதில்லை'யில் சந்தோஷ் விலகல்; யுவன் ஒப்பந்தம்

    செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. கெளதம் மேனன் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

    அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு முதலில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
    இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இப்படத்துக்காக 2 பாடல்களை முடித்து கொடுத்துவிட்டார் யுவன். இன்னும் 7 நாட்கள் மட்டுமே இப்படத்தின் படப்பிடிப்பு இருக்கிறது.

    'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன், யுவன் தான் இசையமைப்பாளர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
    செல்வராகவன் - யுவன் கூட்டணி என்பது இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  6. #2075
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    உடலமைப்பு மாற்றம்: பின்னணி பகிர்கிறார் ஆர்யா


    88 கிலோ அளவுக்கு உடலமைப்பை தான் மாற்றியதன் காரணம் குறித்து நடிகர் ஆர்யா தெரிவித்தார்.

    'பெங்களூர் நாட்கள்' படத்துக்குப் பிறகு, ராகவ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
    இப்படத்திற்காக முன்பு எப்போதும் இல்லாத வகையில் தனது உடலமைப்பை மாற்றியிருக்கிறார் ஆர்யா. சமீபத்தில் மேலும் தனது உடலமைப்பை மாற்றி புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிந்தார். அவருடைய உடலமைப்பு மாற்றத்தால் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள்.

    இது எப்படி சாத்தியமானது? ஏன் இந்த மாற்றம்? என்று ஆர்யாவிடம் கேட்டபோது, "ராகவ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் பழங்குடியினர் வேடத்தில் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
    இப்படத்தில் பழங்குடியினர் வேடத்திற்காக 88 கிலோ அளவிற்கு உடலமைப்பை மாற்றினேன். சுமார் 6 மாதங்கள் நாள் முழுக்க உடற்பயிற்சி கூடத்திலேயே இருந்து இந்த அமைப்பை கொண்டு வந்திருக்கிறேன். வேடத்திற்கு ஏற்றவாறு உடலமைப்பை மாற்றுவது எனக்கு எப்போதுமே பிடிக்கும்" என்று கூறினார்.

    மீண்டும் காதல் நாயகன் வேடம் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, "மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துவிடலாம். சைக்கிளிங் மற்றும் சில உடற்பயிற்சிகள் மூலம் பழைய நிலைமைக்கு திரும்பிவிடலாம். அதில் ஒன்றும் பிரச்சினையில்லை" என்றார் ஆர்யா.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  7. #2076
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ரசிகர்கள் மனம்கவர்ந்த ஹீரோ இவர்தான்..! - சினிமா விகடன் சர்வே - VIKATAN

    மக்களுக்கு விருப்பமான நடிகர் யார்னு ஒரு பத்திரிகை கருத்துக் கணிப்பு நடத்தி இவர்தான்’ன்னு அறிவிக்க அவர் தான் ஃபர்ஸ்ட் வந்தார் இவர்தான்னு எப்டி சொல்லலாம்?ன்னு ஒருத்தர் கேட்க பரபரப்பா இருக்கு இணையம்.
    உண்மையில் யார் தான் வெற்றியாளர் என விஜய், அஜித், சூர்யா, தனுஷ் நால்வருக்குமிடையே கடந்த சனிக்கிழமை மாலை முதல் சினிமா விகடனில் சர்வே நடத்தினோம்.. அதன் படி வெற்றியாளராக 51 சதவீத வாக்குகளுடன் விஜய் முதலிடமும், 35 சதவீதத்துடன் அஜித் இரண்டாம் இடமும், சூர்யா , தனுஷ் முறையே 10 மற்றும் 4 சதவீதத்துடன் மூன்றாம், நான்காம் இடம் பிடித்துள்ளனர். அதன் விபரங்கள் பின்வருமாறு. மேலும் உடனுக்குடன் வாக்களித்து ரிசல்ட்டும் அங்கேயே தெரியும்படி செய்திருந்தோம்.
    இந்நிலையில் ஆரம்பித்த சில மணிநேரங்கள் அஜித்தும், பின்னர் விஜய்யும் என மாறி மாறி முன்னிலை வகித்தனர். ஒரு நாள் இடைவேளையில் தற்போது விஜய் வெற்றி பெற்றுள்ளார். நமக்குத் தெரிந்து இப்போதைக்கு இப்படி போட்டி நடத்தினால் ஒன்று விஜய் அல்லது அஜித் இருவர் மட்டுமே முதலிடம் வகிப்பார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மையே. அதன்படி இப்போது விஜய் முதலிடத்தில் இருக்கிறார்.

    வாக்குகளின் நிலவரங்கள்

    மொத்தம் 15, 836 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. விஜய் 8080அஜித் 5492 சூர்யா 1582தனுஷ் 681
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  8. #2077
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    மூணு கோடி ரூவா படம் உப்புமாவா? #வாட்ஸ்அப்பில் வலம் வரும் டெல்லி கணேஷின் பரபரப்பான ஆடியோ

    டெல்லி கணேஷ் தயாரிப்பில் என்னுள் ஆயிரம் படம் கடந்த வெள்ளி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. குறைந்த தியேட்டர்களில் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் அவர், ஒரு ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.அதில் அவர் பேசியிருப்பது..

    நான் நடிகர் டெல்லி கணேஷ் பேசுகிறேன். என்னுள் ஆயிரம் என்ற படத்தை எடுத்து எப்படியோ ரிலீஸ் செய்துவிட்ட, ஒரு தயாரிப்பாளர். ரொம்ப சிரமம். யாருமே மதிக்க மாட்டீங்கறாங்க. ஒரு இந்திப் படம், ஒரு தெலுங்குப் படம், ஒரு இங்க்லீஷ் கார்ட்டூன் படம் இதுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுக்கறாங்க. தமிழ் வாழ்க, தமிழன் என்று சொல்லடா.. புண்ணாக்கு புடலங்கான்னு சொல்றாங்க. ஆனா தமிழ்நாட்டுல தமிழ்ப்படங்களுக்கு ஒரு ஷோ குடுக்க மாட்டீங்கறாங்க. அந்த இந்திப் படத்தையும், இங்க்லீஷ் படத்தையும் மத்தியானம் ஒரு மணிக்குப் போட்டா ஒண்ணும் குடிமுழுகிப் போறதில்ல. பார்ப்பாங்க. ஆனா நம்ம படத்த ஒரு மணிக்குப் போட்டா ஒரு பய வரமாட்டீங்கறான். சார்.. மூணு மணி ஷோ இல்லையா சார்.. ஆறு மணி ஷோ இல்லையா சார் அப்டின்னு கேட்கறாங்க.

    ரொம்ப மோசம்.. திருச்சில எல்லாம் என் படம் ரிலீஸ் ஆகவே இல்லை. கோயமுத்தூர்ல ஒரு தியேட்டர்ல.. எங்கயோ ஓரத்துல இருக்கற தியேட்டர். திருநெல்வேலில எங்கயோ கொடுத்திருக்காங்க. அதும் ஒரு ஷோ. ஏ.ஸி. இல்ல. இந்த வெயில்ல சாகறாங்க அங்க உட்கார்ந்து. ஒரு பய போமாட்டீங்கறான். ‘உங்களுக்காகத்தான் போனேன் சார். இல்லீன்னா அந்த தியேட்டருக்கு மனுஷன் போகமாட்டான்’ங்கறாங்க. அப்டி ஒரு தியேட்டர்.

    இப்டி யாராலும் தேவையில்லாத, இந்த மாதிரி ஒன்னரை மணிக்கு வர்ற படங்களெல்லாம்.. வாசல்ல ப்ளாக்ல டிக்கெட் விக்கற பய என்ன சொல்றான்னா, இதெல்லாம் உப்புமா கம்பெனின்னு சொல்வாங்க சார் நார்மலா அப்டின்னு. நம்ம மூணு கோடிரூவா போட்டு க்வாலிட்டியா டெக்னிஷியன்லாம் வெச்சு படம் எடுத்தா, ஒன்னரை மணிக்கு ரிலீஸ் ஆகறதால உப்புமா கம்பெனின்னு சொல்லுவாங்களாம். அதும் யாரு சொல்றா. ப்ளாக்ல டிக்கெட் விக்கறவன் சொல்றான்.

    எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கு.. நமக்குத்தான் ஒரு எழவும் தெரிய மாட்டீங்குது.. யாரும் சொல்லவும் மாட்டீங்கறாங்க. என்ன பண்றது.. யார்கிட்ட போய்க் கேட்கறது..

    ஒண்ணாந்தேதி வந்தா, ‘ஐயயோ.. ஒண்ணாந்தேதி வராதீங்க. எட்டாம் தேதி.. அய்யயோ எட்டாம் தேதி நெறைய படம் வருது... பக்கத்துலயே வராதீங்க.. பதினாலு.. ஐயோ போச்சு தெறி வருது.. இருபத்து இரண்டு.. ம்ம்ம். பாக்கலாம்... எப்படி போனாலும் உங்களுக்கு வர்ற கூட்டம் வரும் அப்டின்னு சொல்லி ஆரம்பிச்சு.. இப்ப எல்லாரும் என்ன சொல்றாங்க.. 29 வந்திருக்கணும் சார்.. நீங்க ஏன் 22ல வர்றீங்கன்னு..

    மொத்தத்துல என்னமோ பைத்தியக்காரன் மாதிரி ஆக்கிடறாங்க.. சரி போகட்டும்.. ஏதோ நம்ம ஒரு படம் எடுத்தோம்.. நெறைய கத்துக்கிட்டேன். இத்தன வருஷத்துல நான் கத்துக்காத விஷயங்கள்லாம் இப்ப கத்துகிட்டேன். ‘நண்பரும் பகைபோல் தெரியும்.. அது நாள்படப் நாள்படப்புரியும்’ அப்டிங்கற பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது.. பார்ப்போம்!

    எல்லாரும் சேர்ந்து என்ன முடிவெடுக்கணும்னு தெரியாதபடி.. எதாவது கொஞ்சம் சம்பாதிச்சா முடிவெடுக்க உட்காரலாம். சம்பாத்யமே இல்லாம மூணு கோடி போட்டு மூணு லட்சம் சம்பாதிச்சா (விரக்தியாகச் சிரிக்கிறார்) என்ன முடிவெடுக்க வருவா? பார்ப்போம். தொடர்பிலிருப்போம். ஆவன செய்வோம். நன்றி”

    இவ்வாறு தன் படம் வெளியிட தியேட்டர்கள் கிடைக்காத ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறார். இந்த ஆடியோவுக்கு ‘படம் நன்றாக இருந்தால், எப்படி ஆயினும் வென்றே தீரும். எத்தனையோ படங்கள் இதுபோல கண்டுக்கொள்ளப் படாமல், தரமாக இருந்ததன் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக ஹிட்டடித்திருக்கிறது! 35 வருடங்களுக்கு மேல் துறையில் இருப்பவருக்கு இது தெரியாதா.. இதற்குப் போய் மொழிப்பிரச்னையெல்லாம் இழுப்பதா?’ என்று எதிர்ப்புக் குரல்களும் ஒலிக்காமல் இல்லை.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  9. #2078
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் 61...!

    விஜய் இப்போது பரதன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தை விஜயாபுரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஒரு சில நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. இப்போது கோடைவிடுமுறையைக் குடும்பத்துடன் கழிக்க வெளிநாடு சென்றிருக்கிறார் விஜய். அவர் வந்ததும் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்கிறார்கள். தொடங்கினால் வேகவேகமாக நடந்து முடிந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.

    இந்நிலையில் விஜய் தன்னுடைய அடுத்தபடத்துக்கான தயாரிப்புநிறுவனத்தை முடிவுசெய்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அவரை வைத்துப் படம் தயாரிக்கப் பலர் தயாராக இருக்கிறார்கள். அவர்களில் சிவாஜி புரொடக்ஷன்ஸூம் அடக்கம். தங்கள் நிறுவனத்துக்கு ஒருபடம் நடிக்கவேண்டும் என்று கேட்டு அவர்கள் அணுகியதாகவும் அதற்கு விஜய் ஒப்புக்கொண்டதாகவும் சொல்கிறார்கள்.

    அந்தப்படத்தை இயக்கப்போகிறவர் தெறி படத்தை இயக்கிய அட்லிதான் என்றும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சிவாஜிபுரொடக்ஷன்ஸ் தரப்பில் கேட்டால், விஜய் சாரிடம் பிரபு சார் பேசியிருக்கிறார், ஆனால் இன்னும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று சொல்கிறார்கள்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  10. #2079
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    கலையுலக சேவைக்காக டாக்டர் பட்டம் பெறுகிறார் நாசர்!



    தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவரும், நடிகருமான நாசருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவிருக்கிறது. இவரின் கலைச்சேவையைப் பாராட்டி, வேல்ஸ் பல்கலைக்கழகம் வருகின்ற 7ம் தேதி காலை 9 மணியளவில் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கவிருக்கிறது.

    நாசர், தன்னுடைய 6வது வயதிலேயே நாடகங்களில் நடித்து, தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர், பின்னர், 1985ல் இயக்குநர் கே.பாலசந்தரின் இயக்கத்தில் “கல்யாண அகதிகள்” என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். கடந்த 30 வருடங்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராக, குணச்சித்திர நடிகராக, வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 6வது பட்டமளிப்பு விழாவின்போது நாசருக்கு டாக்டர் பட்டம் வழங்கவிருக்கிறார்கள். விழாவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர். ஐசரி கே.கணேஷ் தலைமையேற்று அவருடன் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.ஜெஸ்டி செலமேஸ்வர் சிறப்பு விருந்தினராக உரையாற்ற, முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மாண்புமிகு டாக்டர் .P.S.சவ்ஹான் அவர்கள் டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  11. #2080
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    தேசிய விருது மீது அதிருப்தி ஏன்?- இளையராஜா விளக்கம்

    இசைக்கான தேசிய விருதை சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் இசையமைப்பு என பிரிக்க தேவை என்ன இருக்கிறது என இசையமைப்பாளர் இளையராஜா கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த செவ்வாய்க் கிழமை டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 63-வது தேசிய விருதுகளை வழங்கினார். தாரை தப்பட்டை படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த விருதினை பெற்றுக்கொள்ள இளையராஜா செல்லவில்லை.

    இது குறித்து திருவண்ணாமலை ஸ்ரீ ரமண ஆசிரமத்தில் இருந்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு இளையராஜா அளித்த பேட்டியில், "கடந்த 2010-ம் ஆண்டு வரை சிறந்த இசையமைப்புக்கான தேசிய விருது என்று ஒரு பிரிவு மட்டுமே இருந்தது. சாகர சங்கமம், சிந்து பைரவி, ருத்ர வீணா போன்ற படங்களுக்காக சிறந்த இசையமைப்புக்கான விருதினை நான் பெற்றிருக்கிறேன்.

    அந்த நடைமுறையை மாற்றி சிறந்த இசையமைப்பு (பாடல்), சிறந்த பின்னணி இசையமைப்பு என இரு பிரிவுகளில் தற்போது தேசிய விருது வழங்கப்படுகிறது.
    இந்த ஆண்டு எனக்கு சிறந்த பின்னணி இசைக்கும், ஜெயச்சந்திரனுக்கு சிறந்த இசையமைப்புக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படி இசைக்கான விருதை இரண்டாக பிரித்துள்ளது நான் ஏதோ பாதி வேலையை மட்டுமே சிறப்பாக செய்திருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

    இசைக்கான தேசிய விருதை சிறந்த பின்னணி இசை, சிறந்த இசையமைப்பு (பாடல்) என பிரிக்க தேவை என்ன இருக்கிறது? ஒருவேளை தேசிய விருது வழங்கும் கமிட்டி இசையமைப்பாளர்கள் பாதி வேலையை மட்டும் சிறப்பாக செய்தால் போதும் என்பதை ஊக்குவிக்கிறதா?" என்றார்.

    இளையராஜா கடிதம்
    இது தொடர்பாக இளையராஜா மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு இரண்டு கடிதங்களை எழுதியிருக்கிறார்.
    அக்கடிதத்தில், "சினிமா இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற துறையினருக்கு வழங்கப்படுவதுபோல் இசையமைப்புக்கும் ஒரே ஒரு விருது மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஒரு இசையமைப்பாளரின் திறமையை அவர் ஒரு படத்திற்காக படைத்த பாடல்கள், அமைத்த பின்னணி இசை என எல்லாவற்றையுமே ஒருசேர சீர்தூக்கி பார்த்து விருதுக்கு தேர்வு செய்ய வேண்டும். அதைவிடுத்து பாதி வேலைக்கும் மட்டும் அங்கீகாரம் அளிக்கும் முறை எதற்காக? தேசிய விருதுகள் வழங்கப்படுவதற்கான இலக்கும் இதுவல்ல என்றே கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

Similar Threads

  1. Karthik Raja (KR) Albums and Latest news
    By Hulkster in forum Current Topics
    Replies: 161
    Last Post: 13th January 2011, 06:58 PM
  2. Latest News & Other Tidbits on AR Rahman (II)
    By NOV in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1486
    Last Post: 2nd September 2009, 08:30 AM
  3. Listen to Latest n Old Tamil Albums Over 2k Here
    By logon2future in forum World Music & Movies
    Replies: 0
    Last Post: 19th February 2007, 10:45 PM
  4. Latest Tamil songs & Videos
    By mottufx in forum Classifieds
    Replies: 0
    Last Post: 3rd August 2005, 02:01 PM
  5. TAMIL LATEST RINGTONES
    By ferrari9845 in forum Classifieds
    Replies: 1
    Last Post: 20th June 2005, 08:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •