Page 175 of 216 FirstFirst ... 75125165173174175176177185 ... LastLast
Results 1,741 to 1,750 of 2160

Thread: Latest News on Tamil Cinema

  1. #1741
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    `கொம்பன்` திரைப்படத்தில் பிரச்னைக்குரிய வசனங்கள்: அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - vikatan


    கார்த்தி நடித்த கொம்பன் திரைப்படத்தில் பிரச்னைக்குரிய வசனங்கள் இருக்கிறதா என்று உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் உட்பட 10 பேர் கொண்ட குழுவினர், படத்தை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொம்பன் திரைப்படம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,

    நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்’ திரைப்படம் ஏப். 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஒரு சம்பவத்தை வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் படத்தில் கதாநாயகன் ஒரு சமூகத்தை சேர்ந்தவராகவும், வில்லன் மற்றொரு சமூகத்தை சேர்ந்தவராகவும் காட்டப்பட்டுள்ளது. வேறு இரு சமூகங்களுக்கு எதிரான வசனங்கள், காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

    இந்தப் படம் வெளியானால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

    ‘கொம்பன்’ படத்துக்கு இதுவரை மண்டல தணிக்கை குழு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. படத்தை மத்திய தணிக்கை குழுவுக்கு மண்டல தணிக்கை குழு அனுப்பியுள்ளது. மத்திய குழுவானது தணிக்கை வாரியத்தின் சீராய்வு குழுவுக்கு படத்தை அனுப்பியது. கொம்பன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது, படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்களை நீக்க உத்தரவிட வேண்டும். அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் பீட்டர் ரமேஷ்குமார், பாஸ்கர் மதுரம் ஆகியோர் வாதிடும்போது, இப்படத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றார்.

    கொம்பன் திரைப்பட தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை வாதிடும்போது, ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரிடம் நிலவும் மோதல் குறித்த படம்தான் கொம்பன். மனுதாரர்கள் கூறுவது போன்ற ஆட்சேபகரமான வசனங்கள், காட்சிகள் எதுவும் கொம்பன் படத்தின் இல்லை என்றார். மத்திய அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றார்.

    இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவர், மனுதாரர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி, அவர் தரப்பு வழக்கறிஞர்கள் 3 பேர், தயாரிப்பாளர், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் 3 பேர் ஆகியோர் சென்னையில் இன்று கொம்பன் படத்தை பார்க்க வேண்டும். பின்னர், பேக்ஸில் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இன்று மாலை தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    Last edited by balaajee; 31st March 2015 at 04:06 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1742
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    WINNER MOVIE PRODUCER.

    மறுபடியும் படம் தயாரிப்பேன்!” - Vikatan

    மீபத்தில் வெளியான ‘கள்ளப்படம்’ படத்தில் ஒருகாலத்தில் சினிமா தயாரிப்பாளராக இருந்து, இப்போது தெருவில் திரிந்து கொண்டிருப்பவராக நடித்தவரின் பெயர் ராமச்சந்திரன். படத்தைப்போலவே நிஜத்திலும் ‘வின்னர்’ என்ற ஹிட் படத்தைத் தயாரித்து, பிறகு பணத்திற்கு வழி இல்லாமல் ஹோட்டலில் வேலை பார்த்தவர். சில பல முயற்சிகளுக்குப் பிறகு இப்போது நடிகர் ஆகிவிட்டவர், “மீண்டும் தயாரிப்பாளரும் ஆகப்போகிறேன்” என்கிறார் உற்சாகமாக.
    “80கள்ல எங்க ஊர் தூத்துக்குடிப் பக்கம் நடந்த கமல், பாரதிராஜா சாரோட படங்களின் ஷூட்டிங்கைப் பார்க்குறதுல எங்களுக்கு அவ்வளவு ஆர்வம். கொஞ்சம் விபரம் தெரிஞ்ச வயசுல எங்க ஏரியா கமல் ரசிகர் மன்றத்துக்குத் தலைவர் ஆனேன். அப்பவே சினிமா மேல ஆசை வந்துச்சு. அப்புறம் சென்னைக்கு வந்து சம்பாதிச்சு, ஏற்கெனவே இருந்த சொத்து, நிலத்தை வித்து ஒரு சினிமா எடுக்கணும்னு ஆசைப்பட்டு ஆரம்பிச்சதுதான் ‘வின்னர்’ படம். 2 கோடி பட்ஜெட்ல முடிச்சிருக்கவேண்டியது.
    சில பிரச்னைகளால நாலு கோடியை நெருங்கிடுச்சு. ஆனா, அப்போதைய நிலவரப்படி அந்த படத்துக்கு மதிப்பு ரெண்டு கோடிதான்னு வினியோகஸ்தர்கள் கையை விரிச்சுட்டாங்க. என்ன பண்றது? சினிமாவுல இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சுதான் வர்றோம். அப்புறம் யாரைக் குத்தம் சொல்லி என்ன பண்ண? இப்பவும் டி.வி.யில் ‘வின்னர்’ படக் காட்சிகள் போட்டா, ரசிகர்கள் விழுந்து சிரிச்சுப் பார்க்கிறாங்க. ஆனா, எங்க வீட்டுல மட்டும் அந்தப் படம் போட்டா டிவியை ஆஃப் பண்ணிட்டு எந்திருச்சுப் போயிடுவாங்க!” - ஃப்ளாஷ்பேக்குடன் ஆரம்பித்துத் தொடர்ந்தார் ராமச்சந்திரன்.
    “அப்புறம் நண்பரோட ஹோட்டல்ல ரிசப்ஷனிஸ்ட்டா வேலைக்குச் சேர்ந்துட்டேன். அந்தக் கஷ்டகாலத்துல எனக்கு உதவியா இருந்தது தயாரிப்பாளர் சங்கத்துல இருந்த நண்பர்களும், என் சொந்தக்காரங்களும்தான். படத்துக்காக பலபேர்கிட்ட கடன் வாங்கியிருந்தாலும், எல்லோரும் ‘இவன் எப்படியாவது ஜெயிச்சிடு வான்’னு நம்பிக்கை வெச்சிருந்தாங்க. தவிர, எனக்கும் சினிமாவை விட்டுட்டு வேற தொழில் பார்க்கணும்னு தோணலை. அதனால, எந்த சினிமாவுல முதலாளியா இருந்தேனோ, அதே சினிமாவுல தொழிலாளியா வாழ்க் கையை ஆரம்பிக்கலாம்னு என் புகைப்படங்களை எடுத்துக்கிட்டு நடிக்க வாய்ப்பு தேடிக் கிளம்பிட் டேன். தயாரிப்பாளரா இருந்தப்போ இருந்த அத்தனை நண்பர்களும் எனக்கு உதவி பண்ணத் தயாரா இருந்தாங்க.

    ‘அரும்பு மீசை குறும்புப் பார்வை’ படத்துல நடிகரா அறிமுகமானேன். சின்னச் சின்ன கேரக்டர்களா இருந்தாலும் 70 படங்க ளுக்கும் மேல நடிச்சுட்டேன். நான் தயாரிப்பாளரா இருந்தவன்ங்கிறதால எந்த ஒரு தயாரிப்பாளர்கிட்ட சம்பளம் வாங்கும்போதும் ‘இவர் போட்ட பணம் கிடைச்சுடணும்’னு வேண்டிக்குவேன். ஏன்னா, தயாரிப்பாளார்களோட நிலைமை அப்படி!’’ என்று விரக்தியாகப் பேசிக்கொண்டிருந்தவர், சட்டென உற்சாக மூடுக்கு மாறுகிறார்.
    “நான் பேசுறதைக் கேட்டா ‘இனிமே நான் தயாரிப்பு பக்கமே தலை வெச்சுப் படுக்க மாட்டேன்’னு நினைச்சிருப்பீங்களே? அதான் இல்லை. நடிப்பு தவிர, சைடு கேப்புல ரியல் எஸ்டேட் பிசினஸும் பண்ணிக்கிட்டு இருக்கேன். முன்னெல்லாம் படத் தயாரிப்புல இருந்த சூட்சமம் தெரியாமப் போச்சு. இப்ப அப்படி இல்லை. இதுதான் படம் தயாரிக்கிறதுக்கு சரியான நேரம்னு நினைக்கிறேன். ஆனா, படத்துக்குப் பூஜை போடுறதுல இருந்து ரிலீஸ் பண்றவரைக்கும் நம்ம கையில தேவையான பணத்தை வெச்சுக்கிட்டுதான் படம் தயாரிக்கணும்னு பார்க்கிறேன். அதுக்கான நேரம் கண்டிப்பா வரும். மீண்டும் நான் தயாரிப்பாளரா ஒரு ரவுண்டு வருவேன். ஏன்னா, முதல் படம் பண்ணப்போ ‘சினிமாவைவிட ஒரு மோசமான தொழில் உலகத்துல கிடையாது’னு தோணுச்சு. இப்போ ‘சினிமாவைவிட ஒரு நல்ல தொழில் உலகத்துல எதுவுமே கிடையாது’னு தோணுது!’’ செமத்தியான பன்ச் டயலாக்குடன் முடிக்கிறார் ராமச்சந்திரன்.

  4. #1743
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'அகில இந்திய புரட்சிதளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்' - விஷால் அறிவிப்பு..- Vikatan


    சினிமாவில் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவை ஒட்டி விஷால் தனது ரசிகர் மன்றங்களை ரசிகர் நற்பனி இயக்கங்களாக மாற்றியுள்ளார். இது குறித்த கூட்டம் நேற்று நடைபெற்றது.

    அதில் பேசிய விஷால் கூறும் போது " நான் சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்படியோ காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த10 ஆண்டுகளில் எனக்கு எவ்வளவோ அனுபவங்கள் பாடங்கள் கிடைத்தன.
    திரும்பிப் பார்த்த போது எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. நான் இந்த அளவுக்கு வருவதற்கு, ஆதரவு கொடுத்த ரசிகர்களும் காரணம். ஆனால் அவர்களுக்கும் எனக்கும் இடைவெளி வந்த மாதிரி உணர்ந்தேன்.

    உண்மையைச் சொன்னால் வெட்கத்தை விட்டுச் சொன்னால் என் மாவட்ட நிர்வாகிகள் யாரென்றே எனக்குத் தெரியவில்லை.இந்த இடைவெளி தவிர என்தரப்பிலும் மன்றச் செயல் பாடுகளிலும் பல குறைகள் தென்பட்டன.

    அது மட்டுமல்ல என்னை அதிர்ச்சியும் வருத்தமும் அடைய வைத்த ஒரு சம்பவம் நடந்தது. அவர் ஒரு மாவட்ட நிர்வாகி. என்னை சந்திக்க முயன்றிருக்கிறார் தகவல் தொடர்பில் பிரச்சினை முடியவில்லை. சந்திக்க முடியாமலேயே போயிருக்கிறார். பிறகுதான் எனக்குத் தெரிந்தது. அவர் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை உதவி கேட்டு வந்திருக்கிறார். மறுபடியும் சந்தித்த போது சொன்னார் அம்மா போய்ட்டாங்க என்று.. அம்மா போனதுதான் மிச்சம். ஆனாலும் நான் உங்களுக்காக வந்திருக்கிறேன். என்றார் இது நடந்தது 2009ல் அது என்னை காயப்படுத்தி பாதித்து விட்டது. மிகவும் வருத்தப்பட்டேன். எதனால் இப்படி ஆனது. தகவல்தொடர்பு இடைவெளி நம் அணுகு முறையில் எங்கோ தவறு இருக்கிறது என்று புரிந்து கொண்டேன். மாவட்ட நிர்வாகிகளைக் கூட எனக்குச் சரியாக அடையாளம் தெரியவில்லையே என வருந்தினேன்.

    அதன்பிறகு யோசித்தேன். நாம் சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்று முடிவு செய்தேன். நிர்வாகிகளை மாற்றினேன். தலைவராக புதியவராக ஜெயசீலன் என்பவரை நியமித்துள்ளேன்.என் ரசிகர் மன்றம். இனி 'அகில இந்திய புரட்சிதளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்' என்று மாற்றப்படுகிறது. வேகம், விவேகம், விடாமுயற்சி இதன் கொள்கைகள்..

    பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். முதலில் மனதில் தோன்றிய விஷயம் இது. பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாததால் கூட பெண் பிள்ளைகள் பள்ளிக்குப் போவதில்லை என்று தெரிகிறது. அப்படிப்பட்ட வசதிகள் செய்து தருவது ஒரு திட்டம்

    நன்றாகப் படிக்கும் மாணவிகள் கல்லூரிக்குச் சென்று படிக்க உதவுவது இப்படி பல திட்டங்கள் இருக்கின்றன. போகப்போக படிப்படியாக இது விரிவடையும்

    இப்படி உதவி கேட்டு வருகிறவர்களுக்கு தேவை உள்ளவர்களுக்கு நாம் செய்கிற உதவி போக வேண்டும்.இதில் தகவல் தொடர்பு சிக்கல் வரக்கூடாது.

    அதனால் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனி நிர்வாகிகள். தங்கள் பகுதியில் இப்படி தேவைப்படுவோரை தேர்ந்தெடுத்து எங்களுக்கு தருவார்கள். தகுதியறிந்து உதவ நான் தயார்.

    இது நாள் வரை நான் தனியாகவும் ரசிகர்கள் ஒரு பக்கம் தனியாகவும் செய்துவந்த நல்ல காரியங்களை இனி இணைந்து முழு சக்தியுடன் செய்ய இருக்கிறோம்.முறைப்படுத்தல் அவசியம் எனப்பட்டது. இனியும் சுதாரிக்கவில்லை என்றால் நன்றாக இருக்காது என்று முடிவு செய்தேன். எனவே இந்த மாற்றங்களை செய்தேன். இதற்காக தனி இணையதளம் தொடங்கியுள்ளேன்.

    இது முழுக்க சமூக நற்பணி சார்ந்தது இதில் அரசியல் ஈடுபாடோ, நோக்கமோ எதுவுமில்லை. கேரளா, பெங்களூரிலும் இம்மன்றங்கள் செயல்படும்.மாதாமாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களை சந்தித்துப் புகைப்படம் எடுக்க ஒதுக்குவேன்.

  5. #1744
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ”’நாயகன்’ படத்திற்கு பிறகு நான் பிரம்மித்த படம் இது” - பாரதிராஜா புகழாரம்

    ’ஜிகர்தண்டா’ படத்திற்காக தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா தற்போது கோலிவுட்டின் செல்லப்பிள்ளை ஆகி வருகிறார். இந்நிலையில் இன்னொரு சிறப்பாக ஏப்ரல் 10ம் தேதி சிம்ஹா நடிப்பில் வெளியாக உள்ள ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படம் தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநர்களுக்கு திரையிடப்பட்டுள்ளது.

    மருதுபாண்டியன் இயக்கத்தில் , காரியம்பட்டி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சென்னை உங்களை அன்புடன்’ வரவேற்கிறது. பாபி சிம்ஹா, பிரபஞ்சன், சரண்யா, லிங்கா ஆகியோர் நடித்துள்ள இப்படம் சென்னைக்கு கனவுகளோடு வரும் இளைஞர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
    இப்படம் பாரதிராஜா, ’அரண்யகாண்டம்’ இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, மற்றும் ‘பாலாஜி மோகன்’ உள்ளிட்டொருக்கு திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்த மூவரும் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும் பாபி சிம்ஹாவிற்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
    பாராதிராஜா ‘ நாயகன் படத்திற்கு பிறகு என்னை பிரம்மிப்பில் ஆழ்த்திய படம்’ எனவும், தியாகராஜா குமாரராஜா ‘ எந்த ஒரு சினிமாத்தனமும் இல்லாத படம்’ எனவும், மேலும் பாலாஜி மோகன் ‘ உலகத் தரம் வாய்ந்த ஒரு படம் பார்த்த உணர்வை இப்படம் எனக்கு கொடுத்தது’ என புகழ்ந்துள்ளனர். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். படம் வருகிற வெள்ளிக்கிழமை ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது.

  6. #1745
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    கிருஷ்ணசாமி மீது நஷ்ட ஈடு வழக்கு - கொம்பன் டீம் அதிரடி! - vikatan

    முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'கொம்பன்'.இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்தது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.‘கொம்பன்’ படத்தில் குறிப்பிட்ட ஜாதியை அவதூறாக சித்தரித்துள்ளதாகவும், மேலும் இதனால் ஜாதி கலவரம் வரலாம் எனவும் ‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பல எதிர்ப்புகளை மீறி இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

    இந்த வழக்கு நடந்த வேளையில் படம் ஏப்ரல் 1ம் தேதி காலயில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, மாலை தான் வெளியானது. இந்நிலையில் ’கொம்பன்’ படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடந்தது.அதில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “இந்தப் படத்துக்கு தடை கேட்ட கிருஷ்ணசாமி வெறும் அம்புதான். இதன் பின்னணியில் அரசியல் உள்ளது. இந்த பிரச்னையால் 120 திரைகள் குறைவகாகவே கிடைதத்து.
    படத்துக்கு இப்போது நல்ல வரவேற்பு இருப்பதால் வரும் இன்று(புதன்கிழமை) முதல் திரையரங்குகளை மேலும் அதிகரிக்க இருக்கிறோம். அதுமட்டுமன்றி, கிருஷ்ணசாமியின் எதிர்ப்பால் வெளிநாட்டுக்கும் சரியான நேரத்தில் படத்தை அனுப்ப முடியாது பண இழப்பை சந்தித்திருக்கிறோம். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் அவரிடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

  7. #1746
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பாபி சிம்ஹா மீது இயக்குநர் பரபரப்பு புகார்! - vikatan

    சமீபத்தில் சிறந்த துணை நடிகருக்காக ‘ஜிகர்தண்டா’ படத்திற்காக தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா மீது ’சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் இயக்குநர் மருது பாண்டியன் திடீர் புகார் தெரிவித்துள்ளார்.

    புகார் குறித்து அவர் கூறியதாவது:

    ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற படத்தில் பாபி சிம்ஹாவை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தேன். இதுதான் அவர் நாயகனாக அறிமுகமான முதல் படம். 67 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். 30 நாட்களுக்கு மேல் நடித்து கொடுத்தார். ஆரம்பத்தில் நன்றாக ஒத்துழைப்பு அளித்தார்.

    ஆனால் ஜிகர்தண்டா படம் ஹிட்டானதும் அவர் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. ஐந்து நாட்கள் நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி இருந்தது. அவற்றை முடித்து கொடுக்கும்படி மறுத்துவிட்டார்.

    இப்போது என் நிலைமை வேறு. ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் கணக்கு வழக்குகளை என்னிடம் ஒப்படையுங்கள். அந்த படத்துக்கான வசூலில் பாதியை எனக்கு தருவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். அப்போதுதான் நடிப்பேன் என்று நிபந்தனை விதித்தார்.

    பல மாதங்கள் காத்திருந்தோம். விஜய்சேதுபதி மூலம் சமரசமும் பேசினோம். ஆனால் நடிக்க வரவில்லை. டப்பிங் பேசவும் மறுத்து விட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானோம். அவர் நடிக்காமல் விட்ட சீன்களை வேறு ஒருவரை நடிக்க வைத்து முடித்துவிட்டோம். வருகிற 10–ந்தேதி படம் ரிலீசாகிறது.

    இதை குறும்படம் என்று பாபி சிம்ஹா கூறி இருப்பது தவறு. 2 மணி நேரம் 15 நிமிடம் படம் வந்துள்ளது. அவரிடம் கதை சொன்னபோதே 115 சீன்கள் விளக்கினேன்.

    திரைப்பட துறையில் சாதிக்க துடிக்கும் மூன்று இளைஞர்கள் பற்றிய கதையே இப்படம். இந்த படத்தை பார்த்து டைரக்டர் பாரதிராஜா ‘நாயகன்’ படத்துக்கு பிறகு நான் பார்த்து வியந்த படம் என பாராட்டினார்.

    டைரக்டர்கள் ராம், தியாகராஜன், குமார ராஜா, பாலாஜி, தரணிதரன் போன்றோரும் பாராட்டு தெரிவித்தனர். ஏ.டி.எம். புரொடக்ஷன்ஸ் மதுராஜ் இந்த படத்தை வாங்கி ரிலீஸ் செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  8. #1747
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like

    த்ரிஷா -வருண்மணியன்

    த்ரிஷா -வருண்மணியன் இடையே என்னதான் ஆச்சு? - Vikatan

    ஜனவரி 23ம் தேதி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது த்ரிஷா வருண்மணியன் நிச்சயதார்த்தம். கடந்த வருட இறுதி முதலே கிசுகிசுக்களில் சிக்கிய இருவரும் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்டனர்.

    தற்போது புதிய செய்தியாக இருவருக்கும் இடையில் மனஸ்தாபங்கள் உருவாகியுள்ளன எனவும், எனவே தான் வருண்மணியன் , திரு, ஜெய் இணைந்துள்ள புதிய படத்தில் த்ரிஷா நடிக்க இருந்து பின் டாப்சி நடிப்பார் என அறிவிக்கப்பட்டது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    திருமணம் விரைவில் என அறிவித்தாலும் கூட த்ரிஷா தொடர்ச்சியாக பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    அதேவேளையில் வருண்மணியன் வீட்டு இல்ல விழா ஒன்றிலும் த்ரிஷா கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.. எனவே இருவருக்கும் இடையில் மனஸ்தாபங்கள் உருவாகி உள்ளது என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.. இதனால், த்ரிஷா-வருண்மணியன் திருமணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விகள் திரையுலக வட்டாரங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து, சம்மந்தப்பட்ட இருவரும் விளக்கம் அளித்தால்தான் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்.

  9. #1748
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Tollywood seems to be STRICT...

    பஞ்சாயத்து முடிந்தது - நாளை முதல் ஆந்திராவை கலக்கயிருக்கும் காஞ்சனா பேய்

    லாரன்ஸ் நடித்துள்ள காஞ்சனா 2 தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்புகிறது. இந்தப் படத்தை தெலுங்கில் வெளியிட லாரன்ஸ் எடுத்த முயற்சிகள் பலனளிக்க ஆரம்பித்துள்ளது. ஆம், நாளை காஞ்சனா 2, கங்கா என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகிறது.

    லாரன்ஸ் கடைசியாக இயக்கிய ரிபெல் படம், பட்ஜெட்டை தாண்டியதால் பல கோடிகள் லாரன்ஸ் ரிபெல் தயாரிப்பாளருக்கு தர வேண்டும் என ஆந்திரா தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டது. அந்த பஞ்சாயத்து இன்னும் முடியாமலிருந்ததால் காஞ்சனா 2 வெளியான அன்று அதன் தெலுங்குப் பதிப்பான கங்கா ஆந்திராவில் வெளியாகவில்லை.

    தமிழில் படம் ஹிட்டானதால் கங்காவை திரையிட ஆந்திரா விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தைப் போல் ஆந்திராவையும் காஞ்சனா பேய் கலக்கும் என்பது நிச்சயம்.

  10. #1749
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    திருமணமான ஒரே ஆண்டில் விவாகரத்து கேட்கும் ரம்யா!(TV anchor)

    திருமணமாகி ஒரே ஆண்டுக்குள் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்கிறாராம் விஜய் டிவி விஜேயும் நடிகையுமான ரம்யா.ரம்யாவுக்கும் அபராஜீத் என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இவரது திருமணத்துக்கும் சரி, திருமண வரவேற்புக்கும் சரி, மொத்த கோலிவுட்டே திரண்டது என்றால் மிகையல்ல. இளம் நடிகர்கள் மொத்த பேரும் ஆஜர். ரஜினி, கமல் போன்ற பெருந்தலைகள் தவிர, மொத்த பேரும் ஆஜர். அந்த அளவு திரையுலகத் தொடர்புகள் மிகுந்தவர் ரம்யா.திருமணமான பிறகு, குடும்பப் பாங்கினியாக செயல்பட மறுத்துவிட்டாராம் ரம்யா. திருமணத்துக்கு முன்பு எப்படி மாலை நேர விருந்துகள், நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தாரோ, அதே போலத்தான் திருமணத்துக்குப் பிறகும் இருந்துள்ளார்.இது ஆச்சாரமான அபராஜித் குடும்பத்துக்குப் பிடிக்கவில்லையாம். இந்த நிலையில் நடிப்பிலும் குதித்தார் ரம்யா. தோழிப் பாத்திரம் என்றாலும் கவனிக்கும்படியான ஒரு வேடத்தில் ஓ காதல் கண்மணியில் நடித்தார். இப்போது அவருக்கும் வாய்ப்புகள் குவிகின்றனவாம்.எனவே திருமண வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்ட ரம்யா, உடனடியாக விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யும்படி கணவரிடம் கூறிவிட்டு, அம்மா வீட்டுக்கு வந்துவிட்டாராம்!சீக்கிரமே குடும்ப நல நீதிமன்றப் படிகளில் ஏறலாம் இந்த ஜோடி என்கிறார்கள்

  11. #1750
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    செப்டம்பரில் திருமணம் - முஸ்லீமாக மாறுவதில்லை என விஜயலட்சுமி முடிவு

    இயக்குனர் அகத்தியனின் மகளும், நடிகையுமான விஜயலட்சுமி உதவி இயக்குனர் பெரோஸ் முகமதுவை காதலித்து வருகிறார். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து வரும் செப்டம்பரில் திருமணம் செய்ய உள்ளனர்.

    முஸ்லீம் ஒருவரை திருமணம் செய்தால் மணமகளும் முஸ்லீமாக மதம் மாறுவதுதான் வழக்கம். ஆனால், திருமணத்துக்குப் பிறகு இஸ்லாம் மதத்துக்கு மாறப் போவதில்லை என விஜயலட்சுமி கூறினார். இந்த விஷயத்தில் நாங்கள் இருவரும் தெளிவாக இருக்கிறேnம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    நடிப்புக்கு முழுக்குப் போட்ட விஜயலட்சுமி படத்தயாரிப்பில் கவனம் செலுத்தயிருக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் ஜுனில் ஆரம்பமாகிறது.

Similar Threads

  1. Karthik Raja (KR) Albums and Latest news
    By Hulkster in forum Current Topics
    Replies: 161
    Last Post: 13th January 2011, 06:58 PM
  2. Latest News & Other Tidbits on AR Rahman (II)
    By NOV in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1486
    Last Post: 2nd September 2009, 08:30 AM
  3. Listen to Latest n Old Tamil Albums Over 2k Here
    By logon2future in forum World Music & Movies
    Replies: 0
    Last Post: 19th February 2007, 10:45 PM
  4. Latest Tamil songs & Videos
    By mottufx in forum Classifieds
    Replies: 0
    Last Post: 3rd August 2005, 02:01 PM
  5. TAMIL LATEST RINGTONES
    By ferrari9845 in forum Classifieds
    Replies: 1
    Last Post: 20th June 2005, 08:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •