Page 213 of 216 FirstFirst ... 113163203211212213214215 ... LastLast
Results 2,121 to 2,130 of 2160

Thread: Latest News on Tamil Cinema

  1. #2121
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    வலுவாகிறது 'உட்தா பஞ்சாப்' சென்சார் சர்ச்சை: அனுராக் காஷ்யப் கொந்தளிப்பு

    இயக்குநர் அனுராக் காஷ்யப் | படம்: ஏஎப்பி
    'உட்தா பஞ்சாப்' படத்தில் சுமார் 90 இடங்களில் கத்தரி போடவேண்டும் என்ற சென்சார் குழு முடிவின் தொடர்ச்சியாக பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரும், இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநருமான அனுராக் காஷ்யப் விரிவான கருத்துகளுடன் கொந்தளித்துள்ளார்.

    அபிஷேக் சாவ்பே இயக்கியுள்ள 'உட்தா பஞ்சாப்' திரைப்படம் பஞ்சாப் மாநிலத்தின் போதைப்பொருள் இருள் உலகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக எழுந்த தகவல்களைத் தொடர்ந்தே சென்சார் சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டது.

    அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான அனுராக் காஷ்யப்பின் 'ஃபேண்டம் பிலிம்ஸ்' இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் அதேவேளையில், பஞ்சாப் அரசின் கைப்பாவையாக சென்சார் வாரியத் தலைவர் செயல்படுவதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    'உட்தா பஞ்சாப்' படத்தின் காட்சிகளில் 89 இடங்களில் கத்தரி போட வேண்டுமென்று சென்சார் வாரியம் முடிவெடுத்ததோடு, தலைப்பிலிருந்து ‘பஞ்சாப்' என்பதை அகற்றவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் கடுமையாக சாடினார்.

    ஆனால், திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் நிஹலானியோ, "அனுராக் காஷ்யப், ஆம் ஆத்மியிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு பஞ்சாப் மாநிலத்தை மோசமாகக் காட்டியுள்ளார் என்று நான் கேள்விப்பட்டேன்” என்று கூறி வருகிறார். தற்போது தயாரிப்பாளர்கள் தரப்பினர் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

    பஞ்சாப் மாநிலத்தின் ஆளும் கட்சியும், பாஜகவின் கூட்டணி கட்சியுமான சிரோமணி அகாலி தளம், இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க உள்நோக்கம் இருப்பதாக கூறுகிறது. அதாவது, இதன் பின்னணியில் ஆம் ஆத்மி இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறது.

    நிஹலானி கருத்தை மறுத்துள்ள ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், பாஜகவை கடுமையாக குறைகூறியுள்ளார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே சென்சார் வாரியம் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பஞ்சாப் மாநிலத்தில், உட்தா பஞ்சாப் படத்துக்கும் சென்சார் வாரியத்துக்கும் இடையிலான மோதலுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டு வருவதாக தெரிகிறது.

    அனுராக் காஷ்யப் காட்டம்
    இந்நிலையில், சென்சார் அதிகாரிகள் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்களை அடுக்கி இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

    "தணிக்கைத் துறையுடன் கடுமையான போராட்டம் கண்டுள்ளோம். இந்த நேரத்தில் இந்தப் பிரச்சினையிலிருந்து கவனத்தை திசை திருப்பும் வண்ணம் அப்பட்டமான பொய் குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன.
    நான் பலமுறை தணிக்கைக் குழுவுடன் போராடியுள்ளேன். முதலில் 'பான்ச்' திரைப்படத்துக்காக. அனைவரும் அது தணிக்கையால் தடை செய்யப்பட்ட படம் என நினைத்திருக்கின்றனர். ஆனால், தணிக்கை மறுஆய்வுக் குழு சில காட்சிகளை நீக்கச் சொல்லி படத்தை வெளியிட அனுமதித்தது. அதுதான் தற்போது இணையத்தில் காணக் கிடைக்கிறது.

    'பிளாக் ஃப்ரைடே' தணிக்கையால் எந்த வித வெட்டுகளும் இன்றி ஒப்புதல் பெற்றது. ஆனால் வழக்கு நடந்து கொண்டிருந்ததால், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. கடைசியில் 2 வருடங்களுக்குப் பிறகு, நீதிபதி சபர்வால், அந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் முன்னரே, படத்தை வெளியிட அனுமதியளித்தார். கிட்டத்தட்ட ஒட்டுமொத்த படமும் அப்படியேதான் வெளியானது. சிவசேனாவைக் குறிக்கும் ஒரு சில காட்சிகள் மட்டும் வேறு வழியின்றி நீக்கப்பட்டன.
    'குலால்' எந்த தணிக்கை சர்ச்சையிலும் சிக்கவில்லை. அதில் இருந்த சில வசனங்கள் மட்டும் நீக்கப்பட்டன. அது தயாரிப்பு தரப்பு பிரச்சினையால் முடங்கியது. இணையத்தில் தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் மீம்களில், அனைத்து படங்களிலும் பல்லாயிரக்கணக்கான வெட்டுகள் இருப்பதாக கூறுகின்றன. ஆனால் அந்த வெட்டுகள், தொலைக்காட்சிக்கான மறு தணிக்கையின் போதே செய்யப்படுகின்றன.

    'அக்லி' எந்த பிரச்சினையையும் சந்திக்கவில்லை. புகை பிடித்தல் எச்சரிக்கை விளம்பரத்தை வைக்க மாட்டோம் என சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் போராடினோம். அப்போதைய அரசாங்கத்துடன் இதுகுறித்து போராட வேண்டும் என நினைத்தது எங்கள் தனிப்பட்ட முடிவே. நீதிமன்ற வழக்கில் நாங்கள் தோற்றோம். படம் எந்த வெட்டும் இன்றி வெளியானது.

    'வாட்டர்' படம் படப்பிடிப்பே அனுமதிக்கப்படவில்லை. அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அல்ல. அப்போதுதான் முதன்முதலில் அருண் ஜேட்லியை சந்தித்தேன். அப்போதிலிருந்து இன்றுவரை அவர் மீது நன்மதிப்பு கொண்டுள்ளேன். இந்த சர்ச்சைகளில், போராட்டங்களில் எப்போதுமே நான் அச்சுறுத்தப்படுவதாகவோ, நிர்பந்திக்கப்படுவதாகவோ, என் விருப்பத்துக்கு மாறாக செயல்பட வறுபுறத்தப்படுவதாகவோ நினைக்கவில்லை.

    அனைத்து போராட்டங்களுமே நியாயமாக, இரண்டு நம்பிக்கைகளுக்கு நடுவில் நடந்தவை. அந்தப் போராட்டங்கள் அனைத்தும் என்னவென்று தெரியாமல் தோல்வியடையவும் இல்லை. அந்தச் சமயங்களில், எங்கள் எதிரி யார், என்ன, அது ஒரு தனிப்பட்ட நபரா, அல்லது ஒரு சிந்தனையா அல்லது தணிக்கைத் துறையின் புரிதலா என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இது வித்தியாசமானது. இது அச்சுறுத்தல். இது பொய் மூட்டைகள்.

    அதிகாரபூர்வமாக எங்களுக்கு கடிதம் கிடைத்தது, நாங்கள் ஊடகங்களை அணுகிய அடுத்த நாள், நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணை முடிந்தவுடனே கிடைத்தது. நிஹ்லானியின் அலுவலகத்திலிருந்து, அவரது கையெழுத்துடன், 7 ஜூன் தேதியிட்ட கடிதம் எங்களிடம் இருக்கிறது. நாங்கள் அதிகாரபூர்வ கடிதம் தருமாறு அவருக்கு அளித்த கோரிக்கை விண்ணப்பத்தின் நகல் இருக்கிறது. எனவே, திங்கள்கிழமை கடிதம் தந்ததாக அவர் கூறுவது அப்பட்டமான பொய்.
    படத்தின் வெளியீட்டை தாமதமாக்கவும், சொன்ன வெட்டுகளை ஏற்றுக்கொள்ளவும் தரப்படும் திட்டமிட்ட அழுத்தம் இது. ஆம் ஆத்மி கட்சியிடம் நான் பணம் பெற்றுள்ளதாக அவர் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. அதோடு, உண்மையான பிரச்சினையிலிருந்து திசைதிருப்பி ஒரு திரைப்பட இயக்குநர் தனது உரிமைக்காக அரசியல் ரீதியாக போராடுமாறு செய்கிறார். இதற்கு இணையத்தில் வரும் நையாண்டிகளும் அவருக்கு திசைதிருப்ப உதவுகின்றன.
    கருத்து சுதந்திரத்துக்காக போராடும், எங்கள் உரிமைகளோடு, எங்கள் படத்துக்கும் தணிக்கைத் துறைக்கும் இடையிலான பிரச்சினையாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும் என வேண்டுகிறேன். வேறெந்த புரளிகளிலும் தலையிட விரும்பவில்லை.

    நான் ஆம் ஆத்மி அல்லது காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவன் அல்ல. எந்த அரசியல் கட்சி சார்புடையவனும் அல்ல. நான் மற்றவர்களை விட மிக அதிகமான படங்களை பணம் வாங்காமல் எடுத்துள்ளேன். நியாயமற்ற முறையில் வரும் பணத்தை வாங்கியதுமில்லை. நன்றி" என்று அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.
    'உட்தா பஞ்சாப்' சர்ச்சை குறித்து பல்வேறு முன்னணி இந்தி திரையுலக பிரபலங்கள் த
    ங்களது ஆதரவை படக்குழுவுக்கு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2122
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    கதாநாயகி தேர்வில் தலையிடுகிறேனா?- ஜி.வி. பிரகாஷ் சிறப்பு பேட்டி

    டார்லிங்’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமான இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’. இந்தப் படத்தில் ஆக்*ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் அவரிடம் பேசியதிலிருந்து…
    ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு' ட்ரெய்லரைப் பார்த்தால் சண்டைக் களத்தில் இறங்கிவிட்டீர்கள் போல இருக்கிறதே?
    ‘டார்லிங்' முடிந்தவுடன் அந்தப் படத்தின் இயக்குநர் சாம் உடன் மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும் எனத் தீர்மானித்தேன். அப்படித்தான் இந்தப் படம் ஆரம்பித்தது. ஆனந்தி, சரவணன், மொட்டை ராஜேந்திரன், கருணாஸ் இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். முழுக்க காமெடி படம்தான், அதில் கொஞ்சம் ஆக்*ஷன் இருக்கும். மக்கள் திரையரங்குக்கு வந்தார்கள் என்றால் கைதட்டி ரசிக்கும் வகையில் இருக்கும்.

    காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களே பண்றீங்களே. எப்போது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் பண்ண திட்டம்?
    நான் கமர்ஷியல் படங்கள்தான் பண்ண வந்திருக்கிறேன். இங்கு நடிப்புத் திறமையைக் காண்பிக்க வரவில்லை. ‘இவன் படம் ஜாலியா இருக்கும்பா’ என்று நம்பி மக்கள் வர வேண்டும். அது மட்டும்தான் என் எண்ணம். நான் பெரிய நடிகன் எல்லாம் கிடையாது. என்னுடைய வரம்புகள் என்னவென்று எனக்குத் தெரியும். அதற்காக எனக்கு நடிப்பு தெரியாது என்றும் கிடையாது. மக்கள் ரசிக்கிற படங்கள் பண்ணினால் போதும். அவ்வளவுதான்.

    ராஜேஷ், சசி, பாண்டிராஜ் என வரிசையாகப் படங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறீர்களே?
    அடுத்து ‘ப்ரூஸ்லீ ' செப்டம்பரில் வரும். அது ஒரு அவல நகைச்சுவை ஆக்*ஷன் படம். ‘சூது கவ்வும்' பாணியில் இருக்கும். அதைத் தொடர்ந்து ராஜேஷுடன் ‘கடவுள் இருக்கான் குமாரு' வெளியாகும். சந்தானம் இல்லாத இயக்குநர் ராஜேஷின் படம். நான், ஆர்.ஜே.பாலாஜி, சிங்கம்புலி, ரோபோ சங்கர் எனப் புதிய கூட்டணியோடு களம் இறங்கியிருக்கிறோம்.
    இந்தப் படத்துக்காக ஆனந்தியை நான்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தேன் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. உண்மையில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா' பார்த்து இயக்குநர் சாம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்துக்கு ஒப்பந்தம் செய்தார். இயக்குநர் ராஜேஷும் ஆனந்திதான் இந்த கேரக்டருக்கு கரெக்ட் என்று ஒப்பந்தம் செய்தார். கதாநாயகி விஷயத்தில் இப்போதும் எப்போதும் நான் தலையிட மாட்டேன். இயக்குநர் பாண்டிராஜ் படம் பேச்சுவார்த்தையில் இருக்கிறது.

    ராஜீவ் மேனன் படத்தில் ஜி.வி. பிரகாஷ் என்று செய்திகள் வெளியானதில் பலருக்கும் ஆச்சரியம்!
    திடீரென்று ஒரு நாள் போன் பண்ணினார் ராஜீவ் சார். கதையைச் சொன்னார். இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்று சொல்லலாம். மூன்று பாடல்களை முடித்துக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான் அங்கிள். எனக்கு லோக்கல் பையன் கதாபாத்திரம்.

    வெளிப் படங்களுக்கு இசையமைப்பதைக் குறைத்துக்கொண்டுவிட்டீர்களா?
    அப்படி எதுவும் இல்லயே. ‘தெறி' பண்ணினேன். எனக்கென்று ஒரு சில இயக்குநர்கள் இருக்கிறார்கள். ‘மீண்டும் ஒரு காதல் கதை' என்னுடைய இசையில் வெளிவர இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளைத் தொடர்ந்து ‘காக்கா முட்டை' மராத்தி ரீமேக் மூலமாக அங்கும் இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். இப்போது நான் நடிக்கும் படங்களில் ராஜீவ் மேனன் படம் தவிர மற்ற படங்களுக்கு நானேதான் இசையமைக்கிறேன். நடிப்பு - இசை என மாறி மாறிக் கவனம் செலுத்திவருவதால், வெளிப் படங்களைத் தேர்வு செய்து இசையமைக்கிறேன்.

    திரையுலகில் உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் என்று யாருமே இல்லையா?
    இல்லை. பத்து வருடங்கள் இசையமைப்பாளராக இருந்துவிட்டேன். நெருங்கிய நண்பர்களாக இருந்தால் சண்டையில்தான் முடிகிறது. ஏதோ ஒரு இடத்தில் என்னுடைய எண்ணமும் அவர்களுடைய எண்ணமும் வித்தியாசப்படுகிறது. அதனால் எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாருமே கிடையாது.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  4. #2123
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Bombay HC to CBFC: Your Job Is to Certify Films Not Censor Them

    The Bombay High Court, on Friday, came down heavily on the Central Board of Film Certification (CBFC) for the cuts ordered in the movie 'Udta Punjab' and observed that the board's job is to certify films and not censor them.
    In a scathing observation, the court asked CBFC that if it thinks the movie glorifies drugs, then why is it not banning the whole movie. Mincing no words in its observation, the court categorically told the CBFC, that whether its TV or cinema, the board should leave it to the people to decide whether the film is defaming a state.

    During the hearing, the CBFC argued that the vulgar words and scenes from the movie must be removed. Claiming that the dog in the movie which is named after Jackie Chan is contemptuous, the board tried to justify its decision for the cut.
    Anurag Kashyap, who the producer of the film, had earlier accused CBFC chief Pahlaj Nihalani of bullying and purposely not certifying the film. The CBFC has demanded 89 cuts in the film that features Shahid Kapoor, Kareena Kapoor, Alia Bhatt and Diljit Dosanjh. Directed by Abhishek Chaubey, the film is scheduled to release in theatres on June 17.

    Meanwhile, the makers have agreed to cut one scene, where Shahid Kapoor's character is seen urinating in front of the public in the song 'Chitta Ve'. The cut was one of the numerous scenes that CBFC demanded be changed.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  5. #2124
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சென்சாருக்கு எதிராக 'உட்தா பஞ்சாப்' வெற்றி: சசிகுமார் பெருமிதம்

    கடுமையான சர்ச்சைகளுக்கு உள்ளான 'உட்தா பஞ்சாப்' திரைப்படம் தற்போது வெளியாவது குறித்து, நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தணிக்கை வாரியத்துக்கு எதிரான போராட்டத்தில் அனுராக் காஷ்யப்புக்கு கிடைத்த வெற்றி எங்களுக்கும் உரித்தானது என்று கூறியுள்ளார்.
    இதுகுறித்து சசிகுமார் வெளியிட்டுள்ளா ட்விட்டர் பதிவில், ''அனுராக் காஷ்யப் அவர்களே, தணிக்கை வாரியத்துக்கு எதிரான உங்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி உங்களுடையது மட்டுமல்ல, எங்களுடையதும்தான்'' என்று தெரிவித்துள்ளார்.

    'உட்தா பஞ்சாப்' சர்ச்சை பின்னணி
    அபிஷேக் சாவ்பே இயக்கியுள்ள 'உட்தா பஞ்சாப்' திரைப்படம் பஞ்சாப் மாநிலத்தின் போதைப்பொருள் இருள் உலகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக எழுந்த தகவல்களைத் தொடர்ந்து சென்சார் சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டது.

    'உட்தா பஞ்சாப்' திரைப்படத்தை தணிக்கை செய்த தணிக்கைக் குழுவினர், ஆபாசமாகவும், வன்முறையைத் தூண்டுவதாகவும் இருப்பதாகக் கூறி, 89 இடங்களில் கத்தரி போட பரிந்துரைத்தனர். மேலும், படத்தின் தலைப்பில் இருந்து பஞ்சாப் என்ற பெயரையும் நீக்குமாறு உத்தரவிட்டனர். திரைப்படத் தணிக்கை வாரியத்தின் உத்தரவு நாடு முழுவதும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது.

    அதைத்தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் அனுராக் காஷ்யப், சென்சார் அதிகாரிகள் மீது கடுமையான விமர்சனங்களை அடுக்கினார். அவர் பலமுறை தணிக்கைக் குழுவுடன் போராடியுள்ளதாகக் கூறியவர், கருத்து சுதந்திரத்துக்காக மட்டுமே போராடுவதாகக் கூறினார். இந்தப் பிரச்சனைக்கு அரசியல் சாயம் பூசாமல் படத்துக்கும் தணிக்கைத் துறைக்கும் இடையிலான பிரச்சினையாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    'உட்தா பஞ்சாப்' சர்ச்சை குறித்து பல்வேறு முன்னணி இந்தி திரையுலக பிரபலங்கள் தங்களது ஆதரவை படக்குழுவுக்கு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மறு தணிக்கைக் குழுவின் பரிந்துரையின் பேரில், படத்துக்கு 13 இடங்களில் கத்தரி போடப்பட்டு, படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து படத் தயாரிப்பு நிறுவனமான பான்தம் பிலிம்ஸ் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒரே ஒரு வெட்டு மற்றும் திருத்தி அமைக்கப்பட்ட பொறுப்புத் துறப்பு வாசகங்களுடன் படத்தை வெளியிட படக்குழுவினருக்கு அனுமதி அளித்துள்ளனர். ஷாகித் கபூர் கூட்டத்தினர் மத்தியில் சிறுநீர் கழிக்கும் காட்சியை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் தொடர்பான வாசகங்களை நீக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    மேலும், நீதிமன்றம் தனது உத்தரவில், ''தணிக்கை வாரியம் பாட்டி மாதிரி செயல்படக் கூடாது. காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும். கலையை மிக அதிக உணர்வுப்பூர்வமாக அணுகக் கூடாது. படைப்பாளிகளுக்குத் தடை போடக் கூடாது" என்றும் தணிக்கை வாரியத்துக்கு அறிவுரை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  6. #2125
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'உட்தா பஞ்சாப்' சர்ச்சை: படம் கற்றுக்கொடுத்த பாடம்



    இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு ‘உட்தா பஞ்சாப்’ என்ற இந்திப் படத்தைக் கையாண்டிருக்கும் விதமும், அதன் அணுகுமுறைக்கு எதிராக பாம்பே உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பும் திரையுலகில் மீண்டுமொரு விவாதத்தை உருவாக்கியிருக்கின்றன.
    ‘உட்தா பஞ்சாப்’ என்றால் ‘பறக்கும் பஞ்சாப்’ (போதையில் மிதக்கும் என்றும் வைத்துக்கொள்ளலாம்) என்று அர்த்தம். பஞ்சாப் மாநிலத்தின் தீவிர பிரச்சினையாகப் பேசப்படும் போதை மருந்துப் பழக்கத்தைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. இயக்குநர் அபிஷேக் சவுபே இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஷாஹித் கபூர், கரீனா கபூர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

    ஜூன் 17-ம் தேதியான இன்று படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவிடம் சான்றிதழ் பெறச் சென்றதிலிருந்து பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது இந்தப் படம்.

    படத்தை வெளியிடத் தணிக்கை குழு பல நிபந்தனைகளை முன்வைத்தது. படத்தின் பெயரில் இருக்கும் ‘பஞ்சாப்’ நீக்கப்பட வேண்டும்; எந்தக் காட்சியிலும் ‘பஞ்சாப்’ மாநிலத்தைப் பற்றிய குறிப்பு இருக்கக் கூடாது; 89 காட்சிகளை வெட்ட வேண்டும்; ‘சிட்டா வே’ என்ற பாடலை நீக்க வேண்டும் என தணிக்கைக் குழுவின் கோரிக்கைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போனது.

    தணிக்கைத் துறையின் மறுபரிசீலனைக் குழுவை படத் தயாரிப்பாளர்கள் அணுகியபோது, 13 காட்சிகளை நீக்கிவிட்டுப் படத்தை ‘ஏ’ சான்றிதழுடன் வெளியிடலாம் என்று அறிவித்தது. இதை எதிர்த்துப் படத்தின் தயாரிப்பாளர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். இந்த வழக்கின் தீர்ப்பில், படத்தில் ஒரேயொரு ஒரு காட்சியை மட்டும் நீக்கிவிட்டு, ‘ஏ’ சான்றிதழ் வழங்கத் தணிக்கைக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அத்துடன், மாற்றம் செய்யப்பட்ட பொறுப்புத் துறப்பு வாசகத்துடன் படத்தை அறிவித்த தேதியில் வெளியிடலாம் என்றும் சொல்லியிருக்கிறது.

    தீர்ப்பு தரும் நம்பிக்கைகள்
    இந்தப் படத்தைத் தணிக்கைக் குழு கையாண்ட விதம் ஒட்டுமொத்த இந்தியத் திரைப்படவுலகை அதிர்ச்சியடையச் செய்திருந்தது. ஆனால், நீதிமன்றம் இயக்குநரின் படைப்புச் சுதந்திர உரிமையை வலியுறுத்தும்படி வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பு எல்லோரையும் நிம்மதியடைய வைத்திருக்கிறது.
    நீதிபதிகள் எஸ். சி. தர்மாதிகாரி, ஷாலினி பன்சால் ஜோஷி அடங்கிய பெஞ்ச் வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பில், “இந்தப் படத்தின் திரைக்கதையில் நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் எந்த விஷயமும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. ஓர் இயக்குநர் எப்படிப் படமெடுக்க வேண்டும், எந்த மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என யாரும் கட்டளையிட முடியாது. படத்தில் ஒரு காட்சியை நீக்குவதும் வெட்டுவதும் அரசியலமைப்பின் விதிகளுக்கு உட்பட்டதாகவும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும் இருக்க வேண்டும். அதுதான் படைப்புச் சுதந்திர உரிமையைப் பாதுகாக்கும்” என்று நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள்.
    “தணிக்கைக் குழுவுக்குக் காட்சிகளை வெட்டுவதற்கும், மாற்றங்கள் செய்ய சொல்வதற்கும், நீக்குவதற்கும் எல்லா விதமான உரிமைகளும் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால், அதே சமயம் இந்த வழக்கில் தணிக்கைக் குழு படத்துக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் சரியானவையல்ல.
    ஒரு படத்தை அது சொல்லவரும் முழுமையான கருத்தின் அடிப்படையில் அணுக வேண்டுமே தவிர, கதாபாத்திரங்கள், காட்சிகள், பாடல்கள் எனத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது” என்றும் சொல்லியிருக்கிறது நீதிமன்றம். தணிக்கைக் குழு ஒரு பாட்டியம்மா மாதிரி செயல்பட வேண்டாம் என்றும், காலத்துக்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்ளவும் சொல்லியிருக்கிறது நீதிமன்றம்.

    அரசியல் தலையீடு காரணமா?
    ‘உட்தா பஞ்சாப்’ படத்தைத் தணிக்கை குழு இந்த அளவுக்குக் கடுமையாக நடத்தியதற்குக் காரணம், பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தல் என்று சொல்லப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தின் பெரிய பிரச்சினையான போதை பழக்கத்தைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் வெளியாவதை ஆளும்கட்சி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. படத்தில் இடம்பெறும் ‘பஞ்சாப்’, ‘பாராளு மன்றம்’, ‘தேர்தல்’, ‘எம்பி’ போன்ற வார்த்தைகளைப் படத்தில் இருந்து நீக்கச் சொன்னது குறிப்பிடத்தக்கது.

    எப்படிச் செயல்படுகிறது தணிக்கைக் குழு?
    இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், 1952-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு. பன்முகத்தன்மை கொண்ட ஒரு பெரிய ஜனநாயக நாட்டின் ஒரு பெரிய ஊடகமான சினிமாவைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக, அது பல சமயங்களில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. ஆனால், சில சமயங்களில் அதன் செயல்பாடுகள் விவாதத்துக்கும் உள்ளாகின்றன. இது பற்றி மூத்த திரைப்பட வரலாற்றாசிரியர்களில் ஒருவரான தியடோர் பாஸ்கரனிடம் பேசியபோது, “தணிக்கைக் குழு என்பது ஒரு நல்ல அமைப்பு. அதிலிருக்கும் நபர்களுக்கு சினிமாவைப் பற்றிய முழுமையான விழிப்புணர்வும், புரிதலும் இல்லாதபோதுதான் பிரச்சினை உருவாகிறது.
    1977-ல் ஷியாம் பெனகல், கிரிஷ் கர்னாட் போன்ற இயக்குநர்களால் புதிய சினிமா அலை வீசியது. அப்போது இருந்த தணிக்கை குழு இவர்களுடைய புதிய முயற்சிகளைப் பெரிய அளவில் அங்ககீரித்தது. அப்போதிருந்த தணிக்கைக் குழுத் தலைவர், உறுப்பினர்கள், பிராந்திய அதிகாரிகள் என அனைவருக்கும் சினிமாவைப் பற்றிய பரிச்சயம் இருந்ததும் அதற்குக் காரணம்.
    ஆனால், இப்போது அந்த நிலைமை இல்லை. ‘உட்தா பஞ்சாப்’ மாதிரியான சமூக அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கமாகப் பேசும் படங்களில் இந்த மாதிரி கத்திரி போட்டால், அது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் தரமான படங்கள் வெளியாவதைக் தடுத்துவிடும். ஒரு படம் ஏற்படுத்தும் முழுத் தாக்கத்தை வைத்துத்தான் அதை மதிப்பிட வேண்டுமே தவிர, அதில் போதை மருந்துக் காட்சிகள் இருக்கின்றன, கதாபாத்திரங்கள் கெட்ட வார்த்தைகள் பேசுகின்றன என்பதை வைத்து மதிப்பிடக் கூடாது” என்று சொல்கிறார்.

    தீர்ப்பை வரவேற்கும் தமிழகம்
    நீதிமன்றத் தீர்ப்பைத் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களும் வரவேற்றிருக்கிறார்கள். தேசிய விருதுபெற்ற இயக்குநரும், தயாரிப்பாளருமான வெற்றி மாறன், “இது வரவேற்கத்தக்கது. இந்தத் தீர்ப்பில் கூறியிருக்கும் விஷயங்களை முன்வைத்து இனிமேல் தணிக்கைக் குழுவின் நிலைப்பாடுகள் இருக்கும் என்று நம்புவோம். அத்துடன், இயக்குநர்களும் அவர்களுடைய அளவில் சுயபொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்” என்கிறார்.

    இயக்குநர் மிஷ்கினும் இந்தத் தீர்ப்பு இயக்குநர்களுக்கு இனிமையானது என்று வரவேற்றிருக்கிறார். “ஒரு படம் நல்ல படமில்லை, அருவருக்கத்தக்கது, ஆபாசமானது என்று அதை மறுக்கும் உரிமை மக்களுடையது. அதை அவர்களிடம் கொண்டுசெல்வதற்கு முன்பே அது நல்ல படமில்லை என்பதைத் தணிக்கை குழு தீர்மானிக்கக் கூடாது. சினிமா என்பதே பெரியவர்களுக்கான ஊடகம்தான். இயக்குநரின் கருத்துச் சுதந்திரத்தை மதித்திருக்கும் இந்தத் தீர்ப்பு எங்களுக்கு நம்பிக்கையளிக்கிறது” என்கிறார் அவர்.

    பஞ்சாபைச் சேர்ந்த ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், படத்தை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது. அத்துடன், பஞ்சாப் - ஹரியானா நீதிமன்றத்திலும் இந்தப் படத்தை எதிர்த்து வழக்குப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. எனவே, ‘உட்தா பஞ்சாப்’ படத்தை திரையரங்குகளில் பறக்கவிடுவதில் இன்னும் சிக்கல் நீடிக்கவே செய்கிறது.

    தணிக்கைக் குழுவைச் சீரமைக்க அரசு அமைத்த ஷியாம் பெனகல் குழு, தணிக்கை குழு ஒரு சான்றிதழ் வழங்கும் அமைப்பாகச் செயல்பட்டால் போதும் என்று பரிந்துரைத்திருப்பது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்கப் பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் படங்களுக்கு இந்தச் சிக்கல் இல்லை.
    ஏதேனும் ஒரு பிரச்சினையை, தீவிரமான ஒரு விஷயத்தை மையப்படுத்தும் படங்களுக்குத்தான் சிக்கல்கள் முளைக்கின்றன. படைப்பாளிக்கு அதிக சுதந்திரம் தேவைப்படும் இத்தகைய படங்களின் மீதே தணிக்கைத் துறையின் கத்தி கூர்மையாக இறங்குவது இந்தியத் திரையுலகின் முரண்களில் ஒன்று.

    
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  7. #2126
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    புதிய படத்தில் மீண்டும் இணையும் ஜெய் - அஞ்சலி


    சினிஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் ஜெய் - அஞ்சலி இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

    சரவணன் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, சர்வானந்த், அனன்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் 'எங்கேயும் எப்போதும்'. இப்படத்துக்குப் பிறகு ஜெய் - அஞ்சலி இருவரும் இணைந்து படங்கள் நடிக்கவில்லை.

    தற்போது 5 வருடங்கள் கழித்து மீண்டும் ஜெய் - அஞ்சலி இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கவிருக்கும் இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சரவணன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு ரூபன் எடிட்டராக பணிபுரிய உள்ளார்.

    இப்படம் குறித்து சினிஷ், "ஒரு திறமையான நடிகையாக அஞ்சலி மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அஞ்சலியின் நடிப்பாற்றலுக்கு எல்லை என்பதே கிடையாது. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை திரையில் அப்படியே பிரதிபலிக்கும் ஆற்றலை உடையவர் அஞ்சலி.

    ஜெய் - அஞ்சலி கூட்டணி ஏற்படுத்திய இதே உற்சாகம் படம் முழுக்க நீடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்கிறார் இயக்குநர் சினிஷ்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  8. #2127
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ஷாங்காய் பட விழாவில் 'அருவி'க்கு வரவேற்பு: தயாரிப்பாளர் மகிழ்ச்சி


    ஷாங்காய் திரைப்பட விழாவில் 'அருவி'க்கு கிடைத்த வரவேற்பால் தயாரிப்பாளர் பிரபு மகிழ்ச்சியில் இருக்கிறார்.
    'மாயா' படத்தைத் தொடர்ந்து 'காஷ்மோரா', 'ஜோக்கர்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்திருக்கும் நிறுவனம் ட்ரீம் வாரியர். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் 'அருவி' என்ற புதிய படம் உருவாகியுள்ளது.
    இப்படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவிட்டு, அதற்கு பிறகு தமிழகத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் திரைப்பட விழாவில் 'அருவி' திரையிடப்பட்டது. இப்படத்தை புதுமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார்.
    ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் 'அருவி' திரையிடலில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பிய தயாரிப்பாளர் பிரபு, " 'அருவி' எப்போதுமே என்னை பெருமிதம் கொள்ளச் செய்யும் ஒரு படைப்பு. ஒரு சிறப்பான அனுபவத்தை அளித்துள்ளது ’அருவி’.
    பல்வேறு திரைப்பட விழாக்களிலும் ’அருவி’ தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. முற்றிலும் உள்ளூர் உணர்வுகளால் பின்னப்பட்ட காட்சிகளை சர்வதேச பார்வையாளர்கள் ரசனையுடன் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
    இப்படிப்பட்ட ஓர் அற்புதமான படைப்பை உருவாக்குவதில் உறுதுணையாக இருந்த ஒட்டுமொத்த குழுவுக்கு என மனமார்ந்த நன்றி." என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  9. #2128
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'மாயவன்' இயக்குநர் பொறுப்பை ஏற்றது ஏன்?- சி.வி.குமார் விளக்கம்

    'மாயவன்' படத்தின் இயக்குநர் பொறுப்பை ஏற்றது ஏன் என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் விளக்கமளித்துள்ளார்.
    'பீட்சா', 'சூது கவ்வும்', 'தெகிடி' உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். தற்போது 'மாயவன்' என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.

    சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'மாயவன்' படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
    'மாயவன்' படம் குறித்து இயக்குநர் சி.வி.குமார், "முதலில் இப்படத்தின் கதை உருவான பின் நலன் குமாரசாமியை அழைத்து இயக்கி தரச் சொன்னேன். கதையினை படித்தவர் நன்றாக இருப்பதாகவும் தான் திரைக்கதையினை மேற்கொள்வதாகவும் என்னை இயக்கும்படியும் கூறினார்.

    எனக்கு முதலில் படம் இயக்க தயக்கம் இருந்தது. ஆனால் நலன் குமாரசாமி உட்பட என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் என்னால் இதனை இயக்க முடியுமென்று நம்பிக்கை அளித்தனர். பின்னர் மும்முரமாக படம் இயக்கும் வேலையில் இறங்கி, தற்போது படப்பிடிப்பு நிறைவடையும் நிலைக்கு வந்திருக்கிறோம்.

    இதுவரை நாங்கள் தயாரித்த அனைத்து படங்களிலும் பட துவக்கம் முதல் முடிவு வரை அனைத்திலும் எனது பங்களிப்பு இருந்துள்ளது. எனவே பட இயக்கத்தை தைரியமாக மேற்கொண்டேன். ஆனால் தயரிப்பாளராக இருந்து ஒரு படத்தின் இயக்குநரை வேலை வாங்குவதற்கும், இயக்குநராக வேலை செய்வதற்கும் இருக்கும் வித்தியாசத்தை எனக்கு இப்படம் உணர்த்தியது" என்றார்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  10. #2129
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Surya and Kajal Aggarwal locked lips for a scene in 2012's 'Maattrraan'... or did they?
    Maattrraan featured an intimate moment between Surya and Kajal in a movie theatre.

    K. V. Anand’s Tamil film ‘Maattrraan’, which starred Surya and Kajal Aggarwal in leading roles did fairly well at the box office, when it hit theatres in 2012. The science fiction thriller that opened to mixed reviews, went on to be dubbed in different languages including Hindi and Telugu.
    Apart from its stunning visual effects, comic timing and underlining story, the film also featured an intimate moment between the lead actors in a movie theatre. The film shows the two engaging in a short lip-lock.

    A behind the scenes video on the making of this scene has once again started doing the rounds online. Much to fans’ surprise, the two actors didn’t really lock lips on camera. Their brief on-screen smooch happens to be the work of good VFX and face tracking devices.


    Both Kajal and Surya kissed pieces of styrofoam, with face tracking censors, that were then merged together to get the final outcome. VFX thus proved to be a good alternative for those actors who wouldn't want to kiss their co-stars don't you think?
    A similar VFX style was seen in recent films like Shah Ruk Khan’s ‘FAN’ and the Hollywood film ‘The Jungle Book’.


    https://www.youtube.com/embed/SUUU_mftG1E

    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  11. #2130
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    தமிழில் ரீமேக் ஆகிறது 'கோதி பன்ன சாதாரண மைக்கட்டு'


    கன்னடத்தில் வரவேற்பைப் பெற்ற 'கோதி பன்ன சாதாரண மைக்கட்டு' திரைப்படம், தமிழில் ரீமேக்காக இருக்கிறது.

    ஹேம்நாத் இயக்கத்தில் புஷ்கர் மல்லிக்கார்ஜுன் தயாரிப்பில் ஆனந் நாக் மற்றும் ரக்*ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியான படம் 'கோதி பன்ன சாதாரண மைக்கட்டு’.

    சுமூகமாக சென்று கொண்டிருக்கும் நடுத்தரமான குடும்பத்தில் திடீரென காணாமல் போகும் தந்தையை கண்டுபிடிக்க முயற்சிக்கும் மகனின் தேடல் தான் கதைக்களம். இதற்கிடையில் தந்தை கடத்தப்படுவதற்கான காரணிகளை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கும் படம் தான் 'கோதி பன்ன சாதாரண மைக்கட்டு'

    கன்னடத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறார் பிரகாஷ்ராஜ். மேலும், இப்படத்தை தயாரித்து, நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

    இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து முதற்கட்ட பணிகளும் முடிந்து முறையாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

Similar Threads

  1. Karthik Raja (KR) Albums and Latest news
    By Hulkster in forum Current Topics
    Replies: 161
    Last Post: 13th January 2011, 06:58 PM
  2. Latest News & Other Tidbits on AR Rahman (II)
    By NOV in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1486
    Last Post: 2nd September 2009, 08:30 AM
  3. Listen to Latest n Old Tamil Albums Over 2k Here
    By logon2future in forum World Music & Movies
    Replies: 0
    Last Post: 19th February 2007, 10:45 PM
  4. Latest Tamil songs & Videos
    By mottufx in forum Classifieds
    Replies: 0
    Last Post: 3rd August 2005, 02:01 PM
  5. TAMIL LATEST RINGTONES
    By ferrari9845 in forum Classifieds
    Replies: 1
    Last Post: 20th June 2005, 08:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •