Page 1 of 5 123 ... LastLast
Results 1 to 10 of 45

Thread: Temple and Tamil - Tamil as the language of worship......

  1. #1
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
    Join Date
    Aug 2005
    Posts
    12
    Post Thanks / Like

    Temple and Tamil - Tamil as the language of worship......

    சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது!

    இடைக்காலத்தில் இருவேறு கருத்துக்கள் தோன்றி வளரலாயின. ஒன்று ஒருவன் அறிஞனாக இருந்தால் அவன் பார்ப்பன குலத்தவனாக இருக்க வேண்டும். மற்றொன்று தமிழில் நு}ல் செய்தால், அது வடமொழியில் இருந்து மொழிபெயர்த்ததாகவோ அல்லது தழுவலாகவோ இருக்கவேண்டும்.

    தொல்காப்பியம் எமக்கு இன்று கிடைத்துள்ள நு}ல்களில் காலத்தால் முந்தியது என்பதை எல்லாத் தமிழறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுமட்டும் அல்லாது தொல்காப்பியம் நீர்மையும் தண்மையும் வண்மையும் தொன்மையும் நிறைந்த தமிழ்மொழியின் எழுத்துச் சொல் இலக்கணத்தையும் தமிழ்மக்களின் வாழ்வியல் இலண்கணத்தையும் (பொருள்) விளக்கும் சிறந்த நு}ல் ஆகும். மொழி, வாழ்வு இரண்டையும் இணைத்து இலக்கணம் சொன்ன சிறப்பு தொல்காப்பியத்துக்கு மட்டுமே உண்டு.

    எழுத்ததிகாரம் ஒலி அளவு, உயிர், மெய் என்ற பிரிவுகள், குறில், நெடில். வல்லினம், மெல்லினம், இடையினம், குற்றியலுகரம், குற்றியலிகரம், மொழிமரபு, புணரியல் போன்றவற்றுக்கு இலக்கணம் சொல்கிறது.

    சொல்லதிகாரத்தில் தமிழ்ச் சொல்லின் சிறப்பும் திணை பால் முதலிய உயிர்ப்புகுப்பு உயிரியல் பகுப்பு முறையும் கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்துக் காரணத்தோடு அமைக்கப்பட்டுள்ளன என்பவற்றை விளக்கிக் கூறுகிறது.

    பொருளதிகாரம் நிலம் பொழுது, கருப்பொருள், உரிப்பொருள், அகத்திணை, புறத்திணை, களவியல், கற்பியல், பாவின் பண்பு, மெய்ப்பாடு, உவமயியல், மரபியல் பற்றிச் சொல்கிறது.

    இவ்வளவு சீரும் சிறப்பும் நிறைந்த நு}லைத் தமிழ்ப் புலவர் ஒருவர் இயற்றி இருப்பாரா? ஒருக்காலும் இருக்காதே! இருக்க முடியாதே! பின் தொல்காப்பியர் எழுதாவிட்டால் யார் அதனை இயற்றி இருப்பார்?
    தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்காப்பியர் அன்று, அதை எழுதியவர் திரணதூமாக்கினி என்பவர், அவரது தந்தையார் பெயர் சமதக்கினி. அதாவது நூலாசிரியர் ஒரு ஆரிய முனிவர்! வடமொழியில் பாணினி எழுதிய பாணினியமே தொல்காப்பியத்துக்கு வழி நூல்.!

    தொல்காப்பியர் வரலாறு போலவே திருக்குறளை எழுதிய திருவள்ளுவரது புகழைக் கண்டு மனம் புழுங்கியவர்கள் முதல் குறளில் உள்ள ஆதிபகவன் என்னும் தொடரைப் பயன்படுத்தி திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தவராகவும் காட்டல் வேண்டிக் கட்டுக் கதைகள் கட்டிவிட்டனர்.

    திருவள்ளுவர் யாளிதத்தன் என்ற பிராமணனுக்கும் சண்டாளப் பெண்ணுக்கும் பிறந்ததாக ஞானாமிர்தம் (6 ஆம் நூற்றாண்டு) தெரிவிக்கிறது. அதற்குப் பிந்திய கபிலர் அகவல் 'அருந்தவ முனியும் பகவற்குப் பருவுூர்ப் பெரும் பதிக்கட் பெரும்புலைச்சி ஆதி வயிற்றினில்" பிறந்தார் என்றும் அவரது பெற்றோர் தங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளைப் பிறந்த இடத்திலேயே விட்டு விட்டுப் போய்விடுவதால் 'தொண்டை மண்டலத்தில் வண்தமி;ழ் மயிலைப் பறையரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தார்" எனக் கூறுகிறது.

    மேலும் திருவள்ளுவரையும் திருக்குறளையும் இழித்துப் பழிக்கும் முகமாக திருக்குறள் அறத்துப் பால் இராமாயணம், மகாபாரதம், பராசர சம்கிதை, பாகவதம், இருக்கு வேதம், மனு ஸ்மிருதி போன்ற சாத்திரங்களைத் தழுவியது என்றும் பொருட்பால் சாணக்கியன் இயற்றிய அர்த்த சாஸ்திரம், காமந்தக நீதி, சுக்கிர நீதி, போதாயன ஸ்மிருதி ஆகியவற்றில் இருந்து கடன் வாங்கப்பட்டதென்றும் காமத்துப்பால் வாத்ஸ்யாயனார் வடமொழியில் இயற்றிய காமசூத்திரத்தின் தழுவல் என்றும் வடமொழிப் பற்றாளர்கள் பகர்கிறார்கள்.

    வாதஸ்யாயனார் கூறும் பிறன்மனை நயத்தலை திருவள்ளுவர் அறத்துப் பாலில் கண்டிக்கிறார். அப்படியிருக்க வள்ளுவரின் காமப் பால் காமசூத்திரத்தில் இருந்து எப்படி வந்திருக்க முடியும்?

    திருக்குறளில் வலியுறுத்தப்படும் அறம் என்ற சொல்லுக்கு விளக்கம் கூற வந்த பரிமேலழகர் தனது உரைப் பாயிரத்தில் 'அவற்றுள் அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியது ஒழித்தலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.

    அவற்றுள், ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்ற, அவற்றிற்கு ஓதிய அறங்களில் வழுவாது ஒழுகுதல்" எனப் பாலில் நஞ்சு கலப்பது போன்று ஆரிய நச்சுக் கருத்துக்களை முதலும் இடையும் முடிவுமாகப் புகுத்தி தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு விளைவித்துள்ளார். திருக்குறளை ஊன்றிப் படிப்பவர்களுக்கு இந்த உண்மை புலப்படும்.

    இவ்வாறு தமிழில் ஒன்றுமில்லை அது சூத்திராள் பேசும் நீச பாஷை வடமொழியே நிலத் தேவர் பேசும் தேவ பாஷை என்பது 'அவாள்" மத்தியில் நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது. இலக்கணம் என்ற சொல் லஷணத்தில் இருந்து வந்தது என்று சொல்லாடல் புரிவதற்கு இந்தத் திமிர்ப்போக்கே முக்கிய காரணி ஆகும்.

    'காஞ்சிகாமகோடி பீடாதிபதியாக இருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த ஆதீனங்களை ஒன்றுபடுத்தி ஒரு பொதுவான சமய அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டார். திருவாவடுதுறை ஆதீனத்துக்கு ஏகப்பட்ட சொத்துகள் இருந்தது. அது போலவே மற்ற ஆதீனங்களுக்கும் வருவாய் இனங்கள் உண்டு. ஆதீனங்களின் வருவாயில் 5 விழுக்காட்டைப் பயன்படுத்தி ஆன்மீகப் பரப்புரை செய்ய வேண்டும் என்பது திட்டம்.

    சொன்னபடி மடங்கள் தங்களது வருவாயில் 5 விழுக்காடு பங்கைக் கொடுக்க முன்வரவில்லை. ஆனால் கூட்டம் மட்டும் நடந்தபடி இருந்தது. அதில் மதுரை பெரிய ஆதீனம் ஒரு பிரச்சினையைக் கிளப்பினார்.

    'கோவில்களைக் கட்டியது தமிழ் மன்னர்கள், அதற்கு உதவி செய்தது, உழைப்புக் கொடுத்தது, வியர்வை கொடுத்தது, வீர்யம் கொடுத்தது, கல் சுமந்தது, மண் சுமந்தது எல்லாம் பிராமணர்களா? கல்சுமந்து மண் சுமந்து கோவில் கட்டியவனுக்குச் சாமியைச் சுமக்க, பூசை செய்யத் தடையா?

    வடநாட்டில், குறிப்பாக காசியில், கோயிலுக்கு வருகிறவர்கள் எல்லாம் அவரவர் பூசை செய்து போகிறார்கள். அதுபோல இங்கேயும் அனைவரும் பூசை செய்யவேண்டும். மடங்களுக்கான அமைப்பு அதற்கு முன் முயற்சி எடுக்கவேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடைபெறவேண்டும் அதற்கு இந்த அமைப்பு உதவவேண்டும்" என்றெல்லாம் மதுரை ஆதீனம் புதிய கருத்துக்களைப் பேசினார்.


    சொன்னதோடு இல்லாமல், தஞ்சாவூர் ஜில்லாவில், கும்பகோணம் சுவாமிமலை இடையே இருக்கிற திருப்புறம்பியம் கோயிலில் குடி கொண்டுள்ள சிவனைப் போலவே வேறொரு விக்ரகத்தைக் கோயிலுக்கு வெளியே வைத்து அதை அனைவரும் பூசிக்க ஏற்பாடும் செய்தார்.

    இது மடங்களுக்கான அமைப்பில் சலசலப்பை உண்டு பண்ணியது. ஏற்கெனவே நிதியாதாரம் இல்லாமல் நடைபோட்ட அமைப்பில் மதுரை ஆதீனத்தின் கருத்தை மகாபெரியவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

    'சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது" என்றார் மகா பெரியவர். (அக்னிகோத்திரம் ராமனுஜதாத்தாச்சாரியார் எழுதும் 'இந்து மதம் எங்கே போகிறது?" - நக்கீரன் 30-03-2005)

    இந்தச் சூத்திராள் வெறுப்பும் தமிழ் வெறுப்பும் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க, புூதபரம்பரை பொலிய" வந்துதித்த ஞானசம்பந்தர், நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவைகலந்து, ஊன்கலந்து, உயிர்கலந்து தித்திக்கும் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் போன்ற பிராமணர்கள் மீதும் உமிழப்பட்டது.

    மன்னார்குடியில் காஞ்சி சங்கராச்சாரியாரின் து}ண்டுதலின் பெயரில் பாவை (திருவெம்பாவை, திருப்பாவை) மாநாடு நடத்தப்பட்டது. வைணவத்தையும் சைவத்தையும் இணைப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். மாநாடு மேடையில் ஆண்டாள் மாணிக்கவாசகர் சிலைகள் பக்கம் பக்கமாகப் போடப்பட்டிருந்தன. வைணவமும், சைவமும் பக்கத்துப் பக்கத்தில் இருப்பதைப் பார்த்து சிலரது கண்கள் அனல் கக்கின. அந்த அனலை அடக்க முடியாமல் மன்னார்குடி ராஜகோபால் தீட்சிதர் அக்னிகோத்திரம் ராமனுஜதாத்தாச்சாரியாரிடம் ஓடினார்.

    'ஸ்வாமி.. என்ன இப்படிப் பண்ணிட்டேள்?" என மொட்டையாக ஆரம்பித்தார்.

    'எதை எப்படிப் பண்ணிட்டேன்? விவரமா சொல்லுங்கோ" என நான் பதில் உரைத்தேன்.

    'தெரிஞ்சுண்டே கேக்கறேளா?" மறுபடியும் மொட்டை மொழிகளையே பேசினார் ராஜகோபால் தீட்சிதர்.

    'தீட்சிதரே.. என்ன சொல்றீர்? நீர் கேக்கறது எனக்கு முன்கூட்டியே தெரியறதுக்கு நான் என்ன பகவானா?"

    தீட்சிதர் அப்போதுதான் தன் உள்ளக் கிடக்கையை உடைத்தார்.

    பகவானுக்கே அபச்சாரம் பண்றேளே... ஆண்டாள் யாரு? மாணிக்கவாசகர் யாரு? ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்தச் சூத்திரன் மாணிக்கவாசகன் இருக்கலாமா? இது பகவானுக்கே பாவம் பண்ற மாதிரி ஆகாதா? அந்தச் சங்கராச்சாரி சொன்னா நீர் கேக்கணுமா? '(இந்துமதம் எங்கே போகிறது?"- அதிகாரம் 27)

    ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்தச் சூத்திரன் மாணிக்கவாசகர் இருக்கலாமா? என தீட்சகர் ஏன் எரிந்து விழ வேண்டும்? அதன் பின்புலத்தில் ஒரு நீண்ட வரலாறே இருக்கிறது.

    ஞானசம்பந்தர் சீர்காழியில் கவுணிய கோத்திரத்தில் பிறந்த பிராமணர். தமிழ்நாட்டில் பவுத்தத்தையும் சமணத்தையும் அழித்தொழித்தவர். அதற்கு அவர் கையில் ஏந்திய ஆயுதம் தமிழ் ஆகும்.

    சைவத்தோடு தமிழை இணைத்துக் கொண்ட சம்பந்தர் தன்னைத் தமிழ் ஞானசம்பந்தன், முத்தமிழ் ஞானசம்பந்தன், செந்தமிழ்வல்ல ஞானசம்பந்தன், சீரார்தமிழ் ஞானசம்பந்தன், தமிழ்விரகன், தமிழ்கெழு விரகினன், என்று பலவாறு பலமுறை கூறிக் கொண்டார்.

    ஞானசம்பந்தர் பாடிய 383 பதிகங்கள் ஒவ்வொன்றிலும் 11 பாடல்கள் இருக்கும். இந்தப் பாடல்கள் பெரும்பாலும் ஒரு சீரான வரிசையில் இருக்கும். எட்டாவது பாடல் கயிலைமலை எடுத்த வாளரக்கன் (இராவணன்) பற்றியதாக இருக்கும். ஒன்பதாவது பாடல் பிரமனும் விட்டுணுவும் தேடியும் அடிமுடி காணாத சிவனைப் போற்றிப் பாடியதாக இருக்கும்.

    பத்தாவது பாடல் புறச் சமயங்களான பவுத்தம் (பொதியர்கள்) சமணம் (பிண்டியர்கள்) இரண்டையும் சாடுவதாக இருக்கும். கடைசிப் பாடல் சம்பந்தரே தன்னைத் தமிழ் ஞானசம்பந்தன், முத்தமிழ் ஞானசம்பந்தன், நான்மறை ஞானசம்பந்தன், முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன், மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் என அழைத்துத் தன் தமிழ்செய் மாலை செப்பவல்லார்கள் அறவன் கழல் சேர்வார், பாவம் கெடும், நற்கதி அடைவார்கள் எனப் பாடுவார்.

    தமிழ்மொழிக்கு சங்கத்தமிழ், சங்கமலித் தமிழ் என நு}ற்றுக்கணக்கான அடைகளைத் தமது தேவாரப் பதிகங்களில் பதிவு செய்துள்ளார்.

    சமயகுரவர்களில் ஒருவரான சுந்தரர் 'நாளும் இன்னிசையால் தமி;ழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்குலகவர் முன் தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும் தன்மை யாளனை" என சம்பந்தரைச் சிறப்பிக்கிறார். தமிழிசை கேட்கும் ஆவலால் சிவன் ஞானசம்பந்தருக்கு பொற்தாளம் கொடுத்தான் என்கிறார்.

    பிற்காலச் சான்றோர்களும் மூவர் தமிழைப் பாராட்டி இருக்கிறார்கள்.

    'தேவரெல்லாம் தொழச்சிவந்த செந்தாள் முக்கண்
    செங்கரும்பே! மொழிக்குமொழி தித்திப்பாக
    மூவர்சொலும் தமிழ்கேட்கும் திருச்செவிக்கே
    மூடனேன் புலம்பிய சொல் முற்றுமோதான்"

    எனத் தாயுமானவர் பாடுகிறார்.

    பிராமணரான ஞானசம்பந்தன் நீச பாசையான தமிழைப் புகழலாமோ? போற்றலாமோ? கூடாதே, அடாதே, பாவமாச்சே என ஞானசம்பந்தருக்கு எதிராகப் பிராமணர்கள் போர்க்கொடி தூக்கினார்கள

    to be continued....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Member Junior Hubber Uthappam's Avatar
    Join Date
    Jul 2005
    Location
    Singapore
    Posts
    87
    Post Thanks / Like
    appadi podu, aruvaala!
    Araitha Maavai Araithal, Iditha Maavai Idithal,
    Avitha Maavai Avithal, Kindal, Kilaral, Mudithal!

  4. #3
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
    Join Date
    Aug 2005
    Posts
    12
    Post Thanks / Like
    ஊர்ப்பெயர்கள் கடவுளர் பெயர்கள் வடமொழி மயப்படுத்தப்பட்டன!


    ஞானசம்பந்தருக்கு அவரது 16 ஆவது அகவையில் திருமணம் நடந்தது. அவருடைய திருமணப் பந்தல் கொளுத்தப்பட்டது. அவர் தனது தந்தை சிவாபாதஇருதையர், மனைவி மற்றும் சுற்றத்தாரோடு பெருநல்லூர்க் கோயிலுக்குச் சென்று சோதியில் புகுந்ததை 'மருவிய பிறவி நீங்க மன்னு சோதியின் உள் புக்கார்" எனப் பெரிய புராணம் (பாடல் 1249) செப்புகிறது. கோயிலுக்குள் அவர்கள் நுளைந்தபோது சோதி ஒன்று தோன்றியது என்றும் அதில் அவர்கள் கலந்து மறைந்து விட்டார்களாம்.

    ஞானசம்பந்தர் தன்னைச் செந்தமிழ்;வல்ல தமிழ்ஞானசம்பந்தன் என்று சொல்வதோடு நில்லாமல் தமிழ்மொழியை சங்கத் தமிழ், சங்கமலித் தமிழ் என வாய்க்கு வாய் போற்றிப் பாடியதோடு தமிழ்மொழி வழிபாட்டை எதிர்த்த பிராமணர்களை 'செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்" எனக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தார்.


    ஞானசம்பந்தர் பிராமணனராக இருந்தும் அவர் தமிழைப் போற்றினார் வடமொழியை பின்தள்ளினார் என்ற வெப்பாரம் காரணமாகவே பிற்கால நந்தன் போல் அவர் உயிரோடு கொளுத்தப்பட்டார். அந்தக் கொலையை மறைக்கவே சோதியில் கலந்தார் என எழுதி வைத்தார்கள்
    .

    திருஞானசம்பந்தர் பிறந்ததாகச் சொல்லப்படும் கவுணிய கோத்திரம் இன்று தமிழ்நாட்டிலோ அல்லது வேறெங்கிலுமோ இல்லை! இது அவரது சந்ததி பூண்டோடு அறுக்கப்பட்டதைக் காட்டுகிறது.

    'பகவானுக்கே அபச்சாரம் பண்றேளே... ஆண்டாள் யாரு? மாணிக்கவாசகர் யாரு? ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்தச் சூத்திரன் மாணிக்கவாசகன் இருக்கலாமா? என்று மன்னார்குடி ராஜகோபால் தீட்சிதர் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் வெறுப்பை உமிழ்கிறார் என்றால் மாணிக்கவாசகரை விட பலபடி தமிழைப் போற்றிய தமிழ்ஞானசம்பந்தரை அவர் காலத்துப் பிராமணர்கள் இலகுவில் விட்டிருப்பார்களா?

    இன்று கூட ஞானசம்பந்தர் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பிராமணனும் வைப்பதில்லை. ஞானசம்பந்தர் என்ற பெயரை ஆதியிற் சைவ வேளாளர்களாயிருந்து பிராமண ஆசாரங்களைக் கற்றொழுகிப் பிராமணர்களென்று தங்களைக் கூறிக்கொள்ளும் குருக்கள்மார்களுக்குள் மட்டும் ஞானசம்பந்தர் என்ற பெயர் வழங்கி வருகிறது.

    திருஞானசம்பந்தரது பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பிராமணனும் வைப்பதில்லை என்பது மட்டுமல்ல எஞ்சிய சமயகுரவர்களான திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் பெயர்களையும் பிராமணர்கள் வைப்பதில்லை! இன்றுகூட இந்த சமய குரவர் நால்வரும் நீச பாஷையான தமிழில் தேவார திருவாசகம் பாடி இறைவனை வழிபட்டார்கள் என்பதற்காகப் புறக்கணிக்கப்படுகிறார்கள்.


    சென்ற நூற்றாண்டில் தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் பள்ளியெழுச்சி பாடிய மகாகவி பாரதியார் பிராமணர்களால் சாதிப் புறக்கணிப்புச் செய்யப்பட்டு அக்கிரகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். பட்டினியாலும் பசியாலும் மெலிந்த பாரதியார் தனது 39வது வயதிலே இயற்கை எய்தினார். யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடித் தனது பாட்டுத்திறத்தாலே இவ் வையத்தை பாலித்த அந்தக் கவிஞனது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர் தொகை எண்ணி 21 பேர்தான்!


    ஞானசம்பந்தர் சூத்திரர் அல்லாவிட்டாலும் நான்மறை வேள்வி மல்கச் செய்தார் என்றாலும் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க, பூதபரம்பரை பொலியப் பாடுபட்டார் என்றாலும் நீச பாஷையான தமிழில் பாடிவிட்டார் என்பதால் அவரைச் சூத்திரனாகவே மன்னார்க்குடி ராஜகோபல் போன்ற தீட்சதகர்கள் பார்க்கிறார்கள். சாதி வெறி பிடித்த ஆதி சங்கரர் சம்பந்தரை திராவிட சிசு என அழைத்தார். அதன் பொருள் ஞானசம்பந்தர் சூத்திரன் என்பதாகும்.


    இந்தத் தமிழ்மொழி வெறுப்பென்பது அங்கிங்கின்னாத படி எங்கும் நிறைந்திருக்கிறது. மொன்றியிலில் ஒரு கோயில் கும்பாபிசேக அறிவித்தலைக் குடமுழுக்கென்று தூய தமிழில் போட்டதைக் கண்டு வெகுண்டெழுந்த குருக்கள் கும்பாபிசேகம் செய்ய மறுத்துவிட்டார்.இலங்கைத் தமிழரே இந்தத் தமிழ் எதிர்ப்பைப் பொறுத்தால் இந்தியத் தமிழர்களைக் குறை சொல்ல முடியுமா?

    சைவமும் தமிழும் ஒன்று, சைவம் இன்றேல் தமிழ் இல்லை என்று ஈழத்தமிழர்கள் போடும் வாய்ப்பந்தலுக்கு எந்தக் குறையும் இல்லை! ஆனால் இங்குள்ள கோயில்களின் திருவிழா அறிவித்தல்களைப் (மஹேபங்சவ விஞ்ஞாபனம்) பார்த்தால் சைவத்தின் தமிழ்மொழி வெறுப்பும் வடமொழி விருப்பும் பளிச்செனத் தெரியும்!


    இந்துக் கடவுளர்க்கு தமிழ் விளங்காது என்ற நினைப்பில் பூசை எல்லாம் வடமொழியில்தான் இடம்பெறுகிறது. ஆனால், முருகனுக்கும் தமிழ் விளங்காது என்று நினைப்பதுதான் ஏனென்று விளங்கவில்லை!


    பிராமணர்களைப் பொறுத்தளவில் தேவார திருவாசகம் பண்டாரப் பாட்டுக்களாகும். அவற்றை ஓதும் பார்ப்பனர்களைப் பார்க்க முடியாது. எனவேதான் தேவார திருவாசம் ஓதுவதற்கு ஓதுவார் என்ற புதிய சாதி உருவாக்கப்பட்டது.

    தேவார திருவாசகங்கள் திருமுறையில் சேர்க்கப்பட்டு, திருமுறைதான் சைவத்தின் பிரமாணம் என்று சைவர்கள் சிலர் உச்சி மீது வைத்து மெச்சினாலும், பிராமணர்களைப் பொறுத்தளவில் அவை பண்டாரப்பாட்டுக்கள்தான்!

    தில்லை ஆடலரசன் கோயிலில் (சைவர்களின் தாய்க் கோயில்) திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம், சிவபுராணம் பாட யாரையும் தில்லைவாழ் தீட்சகர்கள் இன்றும் அனுமதிப்பதில்லை.

    'மடிகட்டிக் கோயிலிலே
    மேலுடை இடுப்பினிலே
    வரிந்து கட்டிப்
    பொடிகட்டி இல்லாது
    பூசி யிருகைகட்டிப்
    படிகட்டித் தமிழரெனப்
    படிக்கட்டின் கீழ் நின்று
    கொண்டுதானே உள்ளனர்?


    என்ற இழிநிலை தமிழ்மொழிக்கு இந்தக் கணமும் நீடிக்கிறது!

    தேவாரம் திருவாசகம் பாட எத்தனித்த ஓதுவார் வி.ஆறுமுகசாமியை தீட்சதகர்கள் நையப்புடைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்! கை கால்களுக்குப் பத்துப் போட்ட நிலையில் மருத்துவ மனையில் இருக்கும் அவரது புகைப்படங்கள் செய்தித்தாளில் வெளிவந்தன!

    ஓதுவார் வி.ஆறுமுகசாமி சிதம்பரத்தைச் சேர்ந்தவர். சிதம்பரம் நடராசர் கோவில் திருச்சிற்றம்பலம் பல மேடையில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் பாடுவதையே தனது வாழ்வின் இலக்காகக் கொண்டவர். மருத்துவமனையில் குணமாகி வந்து மீண்டும் கோயிலில் பாட அனுமதி கேட்டும் தில்லைத் தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. வலியுறுத்திக் கேட்டபோது 'ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாள்பாள்" என்பது போல அவர் கோவிலுக்குள் நுழையவே தடை விதித்து விட்டனர்!

    இதையடுத்து நீதி கேட்டு ஆறுமுகசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி டி.முருகேசன் எல்லா குடிமக்களைப் போல ஆறுமுகசாமி கோவிலுக்குள் செல்லலாம் என்று உத்தரவிட்டார்.

    சைவத்தையும் தமிழையும் வளப்பவர்கள் யார்? இரண்டையும் அழிப்பவர்கள் யார்? தில்லைவாழ் தீட்சகர்களா அல்லது வேறுயாருமா?

    நால்வர் பாடிய தேவார திருவாசகங்களைத் தில்லைக் கோயில் அறையில் பூட்டி வைத்துக் கறையானுக்கு இரையாக்கினவர்களும் இந்தத் தில்லைவாழ் தீட்சகர்கள்தான்! முதலாவது இராசராசன் சோழன், சூழ்ச்சியால் அழிந்தவவை போக எஞ்சியதை மீட்டான்.


    இந்திய மொழிகளுக்கு எல்லாம் வடமொழியே தாய்மொழி என்று ஒரு காலத்தில் சொன்னார்கள். பக்திபோதை தலைக்கேறிய தமிழர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள். மொழி வல்லுனர் முனைவர் கால்டுவெல் அய்யர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஆய்வுநூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிடும் வரை இந்தப் படிமம் தமிழ் படித்த புலவர்கள், பண்டிதர்கள் உட்பட எல்லா மட்டத்திலும் இருந்தது.


    கால்டுவெல் அய்யர் அயர்லாந்தில் மே 1814 இல் பிறந்தவர். இந்தியாவுக்கு 1838 ஆம் ஆண்டு சனவரி திங்கள் வந்தவர். மொத்தம் 54 ஆண்டுகள் சமயத் தொண்டும் தமிழ்த் தொண்டும் ஆற்றிய இப்பெரியார் 1892 இல் காலமானார். அவரது கல்லறை இன்றும் இடையன்குடித் தேவாலயத்திலே தமிழ்த் தொண்டின் சின்னமாக விளங்குகிறது.

    வேதப் பிராமணர் தம் வெண்ணிறத்தையும தம் முன்னோர் மொழியின் ஆரவார ஒலியையும் தமிழரசர்களின் பேதைமைகளையும் கொடைமடத்தையும் மதப் பித்தத்தையும் அளவிறந்து பயன்படுத்திக் கொண்டு தம்மை நிலத்தேவராகவும் தம் முன்னோர் மொழியைத் தேவ பாடை என்றும் அவர்களை நம்பவைத்தனர். அதனால் தமிழ்மொழி திருக்கோயில் வழிபாட்டுக்கும் திருமணம் போன்ற சடங்குகளுக்கும் கொள்ளத்தக்க மொழி அல்ல எனத் தள்ளப்பட்டு வடமொழியே திருக்கோயில் வழிபாட்டு மொழியாகவும், சடங்கு மொழியாகவும் (காது குத்தல், வீடுகுடி புகுதல், திருமணம், திவசம் ....) பிராமணரால் ஆளப்பட்டு வருகிறது.

    மானம் சிறிதும் இல்லாத தமிழர்கள் தங்கள் தாய்மொழி இவ்வாறு இழிவுபடுத்தப்படுவதை இட்டுக் கொஞ்சம் கூடக் கவலைப்படாது இழிவையே பெருமையாகக் கருதி நடக்கின்றனர்.

    கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நடித்து 1943 இல் வெளிவந்த பிரபாவதி படத்தில் ஒரு காட்சி. அடிமைத்தனமும் மூடத்தனமும் கொடி கட்டிப் பறந்த காலம் அது.

    படுத்திருக்கும் அசுரன் ஒருவன் தலையை கலைவாணர் காலால் மிதிப்பார்.

    'ஏண்டா என்னை மிதிச்சே?" கோபத்தோடு கேட்பான் அசுரன்.

    'இப்படித்தான் பகவான் வாமன அவதாரத்திலே மகாபலிச் சக்ரவர்த்தி தலைமீது காலை வச்சு மிதிச்சார்" என்பார் கலைவாணர்.

    'பகவான் இப்படியா மிதிச்சார்? அப்ப நல்லா மிதி" என்று கூறித் தலையைக் காட்டுவான் அசுரன்.

    தமிழர்களது பெயர், ஊர்ப்பெயர், கடவுள் பெயரைக் கூட பிராமணர்கள் வடமொழி மயப்படுத்தினார்கள்.


    மரைக்காடு - வேதாரண்யம் (மரைக்காடு என்பதை மறைக்காடு எனப் பிழையாகப் பொருள் கொள்ளப்பட்டது)

    நாவலம்பொழில் - ஜம்புதீவு
    புளியங்காடு - திண்டிவனம்
    பெருவுடையார் - பிரகதீஸ்வரர்
    பிறவிமருந்திறைவர் - பவஒளஷதீஸ்வரர்
    ஐயாற்றார் - பஞ்சநதீஸ்வரர்
    பற்றிடங்கொண்டார் - வான்மீகநாதர்
    கூடுதுறையார் - சங்கமேஸ்வரர்
    தடங்கண்ணி - விசாலாட்சி
    மாதொருபாகன் - அர்த்தநாரீஸ்வரர்
    கீரிமலை - நகுலேஸ்வரம்
    குரங்காடுதுறை - பித்தலம்
    பழமலை, திருமுதுகுன்றம் - விருத்தாசலம்
    திருநெய்ததானம் - தில்லை ஸ்தானம்
    திருவுச்சி - சிவகிரி
    புள்ளிருக்குவேளுர் - வைத்திருசுவரன் கோயில்
    திருநாணா - பவானி
    திருநல்லம் - கோனேரிராசபுரம்
    தில்லை - சிதம்பரம்
    மயிலாடுதுறை - மாயுூரம், மாயவரம்
    திருப்பருப்பதம் - சிறீசைலம்
    திருச்சுற்று - பிரகாரம்
    திருமுற்றம் - சாந்தி
    கருவுண்ணாழி - கற்பக்கிரகம்
    பல்குடுக்கை நன்கணியார் - பக்குடுக்கச் சாயனா
    இடகலை - இடா
    பிங்கலை - பிங்களா
    சுழிமுனை - சூட்சுமானா[/color
    ]

    பெருங்கதையை எழுதியவர் குணாட்டியர். இந்த நுலைச் சமஸ்கிருதத்தில் பிரசுhகதா எனஎழுதிய புலவரை பைசாச மொழிப்புலவர் என்று அழைத்தார்கள்.

    எல்லாம் வடமொழி எதிலும் வடமொழி என்ற கூப்பாட்டின் வெளிப்பாடே தமிழ்மொழி வார உரையரங்கில் 'லஷ்ண" என்ற வடமொழிச் சொல்லில் இருந்தே இலக்கணம் என்ற தமிழ்ச் சொல் பிறந்தது என்று விஞ்ஞானி வெங்கட்ராமனை கனடாவில் சொல்ல வைத்தது. அப்படித்தான் அவருக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

    இலக்கணம் என்ற சொல் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்திலேயே கையாளப்பட்டுள்ளது

  5. #4
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
    Join Date
    Aug 2005
    Posts
    11
    Post Thanks / Like
    Thalaiva aaruran, asaththure !

  6. #5
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
    Join Date
    Aug 2005
    Posts
    12
    Post Thanks / Like
    Quote Originally Posted by luckylook32
    Thalaiva aaruran, asaththure !
    I am sorry, who is aaruran?

  7. #6
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
    Join Date
    Aug 2005
    Posts
    12
    Post Thanks / Like
    திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை வழிபாடு


    திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை வழிபாடு நடைபெற வேண்டும் என்று குரல் இன்று தமிழகத்திலும் கனடாவிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

    இங்குள்ள கீதவாணி வானொலியில் திருக்கோயில் வழிபாடு செந்தமிழில் நடைபெற வேண்டுமா இல்லையா? என்ற வாதம் நடைபெறுவதாக அறிகிறேன்.

    திருக்கோயில் வழிபாட்டில் தமிழில் அர்ச்சனை என்பது வாதத்துக்கு அப்பால்பட்டது. அது மனிதவுரிமை பற்றியது ஆகும். தமிழில் அர்ச்சனை செய்ய மறுப்பது மனிதவுரிமை மீறலாகும்!

    திருக்கோயில்களில் தமிழில் அருச்சனை செய்வதற்கு இறைவனுக்குச் சிக்கல் இல்லை. இடையில் உள்ளவர்களுக்குத்தான் சிக்கல். சிவபெருமானே தமிழை அகத்தியருக்குக் கற்பித்தார் என்பது ஐதீகம். எனவே தமிழ் கடவுள் மொழிதான். அது அர்ச்சனைக்கு உகந்த மொழிதான்.

    தமிழில் அர்ச்சனை, தமிழ்முறைப்படி குடமுழுக்கு, வேதம் படித்த அனைத்துச் சாதியினரும் பூசகர்களாக ஆகலாம் என்ற கோட்பாடுகளை அர்ச்சகர்கள் தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள். அர்ச்சனை செய்வது அர்ச்சகர்களின் பிறப்புரிமை என்று கூறி அவர்கள் நீதிமன்றம் சென்று வாதாடினார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இப்படி இவர்கள் தமிழ்மொழிப் பயன்பாட்டை ஏன் எதிர்க்கிறார்கள்?


    தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்பதற்காகவே அர்ச்சகர்களில் ஒரு சாரார் தமிழ் அர்ச்சனையை எதிர்க்கிறார்கள்.

    இந்து மதத்தில் மட்டுமே ஒரு குறிப்பிட்ட சாதியினர் வேதாகமம் படிக்கும் உரிமையையும், திருக்கோயில்களில் அர்ச்சனை செய்யும் உரிமையையும் பெற்றிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு அந்த உரிமைகள் மறுக்கப்படுகிறது. ஒரு பிராமணன் எவ்வளவு ஒழுக்கக் கேடனாக இருந்தாலும், கல்வி கேள்வியில் எவ்வளவு தாழ்ந்தவனாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த ஒரே காரணத்துக்காக வேதாகமம் படிக்கும் உரிமையையும், அர்ச்சனை செய்யும் உரிமையையும் பிறப்பின் அடிப்படையில் பெற்றுவிடுகிறான்.


    கனடாவில் உள்ள எந்த சைவாலயமும் சிற்ப, சாத்திர, ஆகம விதிகளுக்கு அமையக் கட்டப்படவில்லை! கோவிலின் அமைப்பு மனித உடம்பை ஒத்ததாக அமைக்கப்பட வேண்டும். இங்குள்ள பல கோயில்கள் முன்னைய பண்டகசாலைகள். அங்கு கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்நாந மண்டபம், அலங்கார மண்டபம், சபாமண்டபம், கொடிமரம். பலிபீடம், நந்தி எதுவுமே இல்லை. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றில் தீர்த்தம் இல்லை.

    மேலும் பிராமணர்கள் கடல் கடக்கப்படாது என்பது விதி. அந்த விதியும் மீறப்பட்டுள்ளது.

    கோயில்களில் தெய்வத்தின் பெயரால் நடைபெற்ற உயிர்ப் பலிகள், தேவதாசி முறை, உடன்கட்டை ஏறுதல், தலித் ஆலயப் பிரவேசம் வேதாகம விதிகளுக்கு ஒப்ப இருந்தபோதிலும் கூட இன்று சட்ட பூர்வமாக அவை தடைசெய்யப்பட்டு விட்டன.

    இவ்வாறு சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் மீறப்படும்போது ஆலயங்களில் தமிழில் போற்றி செய்தால் அது சைவாகம விரோதம் எனக் கூச்சல் இடுவதில் பொருள் இல்லை.

    மேலும் சமஸ்கிருத மொழியில் செய்யப்படும் வேதாகம சம்மேளனக் கிரிகைகளுக்கு மட்டுமே மந்திர சக்தி உண்டென்றும் காஞ்சி காமகோடிபீட ஜெயேந்திர சங்கராச்சாரியார் வாதிடுவதிலும் பொருள் இல்லை. அது தமிழ் மீது அவர்களுக்கு ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் வெறுப்பையும் காழ்ப்பையும் வெளிப்படுத்துகிறதேயொழிய மெய்யறிவை வெளிப்படுத்தவில்லை.

    தி.மு.க ஆட்சியின்போது தமிழக அறநிலையத்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன் 1998 ஆம் ஆண்டு தமிழகக் கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற அரசாணை ஒன்றை வெளியிட்டார். அப்போது அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் தமிழகம் முழுக்கக் குரல்கள் கிளம்பின.

    'தாய்மொழி தமிழைப் புறக்கணிக்கச் சொல்பவர்கள் மீண்டும் புதுவேகம் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். இது வேதனைக்குரிய விடயம். உலகம் முழுக்க உள்ள பசுக்கள் அந்தந்த மொழிகளில் பேசுவதில்லை. ~அம்மா| என்றுதான் தமிழில் கத்துகின்றன. பெருமைவாய்ந்த தமிழ் மொழியைப் புறக்கணிக்கச் சொல்வது, தாயைப் புறந்தள்ளி விட்டு வேறொருத்தியைத் தாய் என்று சொல்வது போன்றது" என மதுரை ஆதீனம் பொன்னம்பல அடிகளார் சொல்லி இருக்கிறார்.

    அர்ச்சனை மட்டுமல்ல குடமுழுக்கும் தமிழில்தான் நடைபெற வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வரும் பேரூராதீனம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் 'ஆகம விதிகள் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். ஆகமம் எந்த சாதிக்கும் சொந்தமானதல்ல. எல்லா இனத்துக்கும் பொதுவானது.

    ஒரு குறுகிய எல்லைக்குள் இருந்துகொண்டு, எல்லாமே நாங்கள்தான் என்று சிலர் சொல்வதை ஏற்க முடியாது. தமிழைத் தீண்டத்தகாத மொழி என்று சொல்லும் அளவுக்கு சிலருக்கு உள்ளத்துணிவு வந்திருப்பதே இந்த நாட்டுக்கு கேவலம். தமிழா, வடமொழியா என்பதல்ல இப்போதைய சிக்கல். எங்கள் மொழியில் எங்களை வழிபட விடுங்கள் என்றுதான் சொல்கிறோம்.

    கடவுளை நேருக்கு நேர் காண வழிவகுத்த மொழி தமிழ், முதலை விழுங்கிய பாலகனை மீட்க உதவிய மொழி தமிழ். இம்மொழியில் குடமுழுக்கு நடத்துவதைத் தவறு என்று சொல்கிற சிக்கலான இன்றைய சூழ்நிலையை ஒன்றுபட்டு நின்று சமாளித்தாக வேண்டும். இனி நடக்கும் எந்தக் குடமுழுக்கும் தமிழில்தான் நடக்க வேண்டும். நடந்தே தீரும். சம்ஸ்கிருதம் வேண்டுவோர் அந்த மொழியில் செய்துகொள்ளட்டும். தமிழில் செய்வதை அவர்கள் தடுக்கக்கூடாது" என்று எச்சரிக்கும் தொனியில் தெரிவித்திருந்தார்.

    எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்திலேயே தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து ஆராயக் குழு அமைத்து, அதன் பரிந்துரையைப் பெற்று தமிழில் அர்ச்சனை செய்ய உத்தரவும் வந்துவிட்டது. அப்போதும் சிலர் அதை எதிர்த்தார்கள் என்பது வேறு விடயம்.

    இன்றைய முதல்வர் ஜெயலலிதா தமிழுக்கு எதிரியல்ல. எல்லா இனத்தவரும் அர்ச்சகராகலாம் எனச் சொல்லி அவர்களுக்கு மந்திரம் சொல்லிக் கொடுக்க வேத பாடசாலை நிறுவியவர். அவர் நாத்திகர் அல்ல. மாறாக நல்ல ஆத்தீகர். அடிப்படைவாத இந்து.

    'தமிழை வலியுறுத்துவது கோயில் அர்ச்சகர்களுக்கு எதிரானது அல்ல. எனவே, யாருடைய தூண்டுதலுக்கும் ஆளாகி அர்ச்சகர்கள் தமிழை எதிர்க்க வேண்டாம். ஜெயேந்திரர் ஏன் இதை எதிர்க்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. தமிழைத் தடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்" என வேண்டுகோள் விடுத்தவர் முன்னாள் இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள்.

    'பொதுமக்கள் மனது வைத்தால், அவர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் எந்தத் தடைகளையும், சட்டங்களையும் தூள் தூளாக்கலாம். தமிழில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று மக்கள் அர்ச்சகர்களிடம் வலியுறுத்தி கேட்க வேண்டும். எனக்குத் தமிழ் அர்ச்சனை தெரியாதே என்று எந்த அர்ச்சகரும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், நான் அமைச்சராக இருந்தபோது இதற்காகவே போற்றி நு}ல்களைத் தயாரித்துத் தந்துள்ளோம்.

    எல்லா சாமிகளுக்கும் நவக்கிரகங்களுக்கும் போற்றி நூல்கள் உள்ளன. அதிலும் தற்போது அம்மன் வழிபாடு அதிகம் என்பதால் காளி, துர்க்கை மற்றும் மாரியம்மன்களுக்கும் கூடப் போற்றிப் பாடல்களைத் தமிழில் வழங்கியுள்ளோம். ஆகம விதிகளைச் சொல்லி நீண்ட நாள் ஏமாற்ற முடியாது. ஏழாம் நு}ற்றாண்டுக்கு முன்பு எந்த ஆகம விதி இருந்தது? தமிழைத் தடுப்பவர்களிடம் இருந்து தமிழைக் காக்க, விழிப்புடன் இருக்க வேண்டியது உங்கள் கடமை." இப்படிச் சொன்னவர் முன்னாள் தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் தமிழ்க் குடிமகன்.

    முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் காலத்திலேயே தமிழ் அர்ச்சனை தொடங்கப்பட்டது. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 1971ம் ஆண்டு அதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இப்போது சைவ, வைணவ அறிஞர்களால் தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்த நு}ல்களிலிருந்து போற்றி வரிகள் தொகுக்கப்பட்டு, தமிழ் நாடெங்கிலும் உள்ள ஆதீனகர்த்தர்களின் பார்வைக்கு அனுப்பி அவர்களது ஒப்புதலின் பின் அர்ச்சனை நூல்கள் முறையாக வெளியிடப்பட்டுள்ளன.

    இதுவரை (1997) தமிழில் அர்ச்சனை நடைமுறைப்படுதப்படும் கோவில்கள் 3127. தமிழில் லட்சார்ச்சனை நடத்தப்பட்ட கோயில்கள் 1082. தமிழில் கோடி அர்ச்சனை நடத்தப்பட்ட கோயில்கள் 11. ஒலிபெருக்கி மூலம் பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்படும் கோயில்கள் 1068.

    ஆனால் தமிழ் அர்ச்சனையை எதிர்த்து அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 'தேவநாகரி மொழி" (வடமொழி) மட்டுமே இறைவனுக்கு உகந்தது என்பது அவர்களது வாதமாகும்.

    தமிழில் அர்ச்சனை செய்யத் தொடங்கினால் இதுவரை காலமும் தாங்கள் அனுபவித்து வந்த ஏகபோக தொழில் உரிமைக்கு (ஆழnழிழடல) எங்கே ஆபத்து வந்து விடுமோ என்ற சுயநலம் காரணமாகவே ஒரு சில அர்ச்சகர்கள் அப்படி நினைக்கிறார்கள்.


    அர்ச்சனை செய்வதற்கு தமிழுக்குத் தகுதி இல்லை என்று கூறுவது உலகிலுள்ள ஏழு கோடி தமிழர்களையும் இழிவுபடுத்தும் செயலாகும். வடமொழிதான் கடவுளுக்குப் புரியும் என்பது கடவுளையும் அவன் சக்தியையும் குறைத்து மதிப்பிடுவதாகும். உலகில் உள்ள மொழிகள் எல்லாமே இறைவன் தந்த மொழிகள்தான். அதை பேதப்படுத்திப் பார்க்கவேண்டிய அவசியமில்லை.

    தமிழில் போற்றி (அர்ச்சனை) மற்றும் குடமுழுக்குச் செய்வதை சாதாரண அர்ச்சகர்கள் தொடங்கி காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் வரை எதிர்க்கிறார்கள். அவை சமஸ்கிருதத்தில்தான் செய்யப்பட வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் எவை?

    (அ) கடவுளுக்கு தமிழ் உகந்த மொழி அல்ல. பாரம்பரியமாக சமஸ்கிருதத்திலேயே மந்திரங்கள் சொல்லி அபிசேகம், ஆராதனையெல்லாம் நடத்தப்பட்டு வருகின்றன.

    (ஆ) ஆகம விதிகளின்படி சமஸ்கிருதத்திலே மட்டும்தான் குடமுழுக்கு (கும்பாபிசேகம்) நடத்தலாம். தமிழில் செய்ய ஆகம விதிகளில் இடமில்லை.

    (இ) மீறித்தமிழில் நடத்தினால் அது கடவுளின் கோபத்திற்கு உள்ளாக்கும் செயலாகிவிடும். அதனால் நாட்டில் இயற்கை உற்பாதங்கள் நேரிடும், நாட்டு மக்களுக்கு பெரும் தீங்குகள் விளையும்.

    தமிழ் அர்ச்சனையை எதிர்ப்பவர்கள் தங்கள் நிலைப்பாட்டிற்கு வலு சேர்க்க சைவாகமத்தைக் கேடயமாகத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

    'ஆகம விதிப்படி கட்டிய கோயிலில் ஆகம விதிப்படிதான் கும்பாவிஷேகம் (குடமுழுக்கு) நடத்த வேண்டும். யாகசாலைகளில் வேத மந்திரங்கள்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஆகமவிதி. தமிழில் மந்திரங்களுக்குரிய பதங்கள் கிடையாது. மந்திரங்களை விட்டு திருமுறைகளை ஓதலாம். ஆனால் அதனால் பலன் கிட்டாது. தமிழ்த் தோத்திரங்களுக்கு மரியாதை இருந்தாலும் அவற்றுக்கு மந்திர சக்தி கிடையாது. ஆன்மீக பலனும் கிடைக்காது" என வரதராஜப்பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலையில் முதல் எதிரியாக குற்றம் சாட்டப்பட்டருவம் இப்போது சிறையில் இருந்து பிணையில் வெளிவந்துவிட்ட காஞ்சி காமகோடி ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் கூறுகிறார்.


    இதன் பொருள் என்னவென்றால் இந்துக் கடவுளர்க்குத் சமஸ்கிருதம் மட்டுமே புரியும். இந்துக் கடவுளர்க்குத் தமிழ் புரியாது. சமஸ்கிருதம் மட்டுமே மந்திர சக்தி உள்ள மொழி. சமஸ்கிருதமொழிக்கு உள்ள மந்திரசக்தி தமிழுக்குக் கிடையாது என்பதாகும்.

    ஆகம விதிகளின்படி இன்று கோயில் வழிபாடு பூசை இடம்பெறுவது குறைந்து வருகிறது. மேலே கூறியவாறு ஆகமம் தமிழர்களில் ஒரு சாராரை தீண்டப்படாதவர் என முத்திரை குத்தி அவர்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வதைத் தடை செய்கிறது. வழிபட்டால் சாமிக்கு தீட்டுப்பட்டுவிடும் என்று சொல்கிறது. ஆனால் இன்று தீண்டாமை அனுட்டிப்பது சட்டப்படி குற்றம் ஆகும். இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இரண்டிலும் இதற்கான தடைச் சட்டம் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.

    ஆகமத்தில் அய்யப்பன்சாமி என்ற ஒரு சாமியே இல்லை. ஆனால் இன்று ஆகமத்துக்கு விரோதமாக அய்யயப்பன் வழிபாடு நடக்கிறது. எனவே ஆகமத்தைக் காரணம் காட்டி தமிழ் அர்ச்சனையையோ தமிழ்முறை குடமுழுக்கையோ எதிர்க்க முடியாது!

    ஆகமத்தில் இடமில்லை அல்லது ஆகம விரோதம் என்று சொல்லி ஆகமத்தை ஒரு ஆயுதமாக தமிழுக்கு எதிராக எப்போதும் தூக்குகிறார்களே? ஆகமம் என்றால் என்ன? ஆகமம் தமிழ்மொழி வழிபாடு பற்றி என்ன சொல்கிறது?

    நீதிபதி டாக்டர் எஸ்;. மகராசன் தலைமையில் கோயில்களில் தமிழில் வழிபாடு செய்யலாமா என ஒரு ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது. நீதிபதி மகராசன் குழு அதையிட்டுப் படித்து ஆராய்ந்து ஒரு அறிக்கை கொடுத்தது.

    கோயில்களில் யார் அர்ச்சகர் ஆகலாம் என ஆகமங்களில் வரையறை செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். அந்த ஆகமங்கள் பற்றியும் அதில் காலத்துக்குக் காலம் இடம் பெற்றுள்ள இடைச்செருகல் பற்றியும் நீதிபதி மகராசன் குழு விளக்குகிறது.


    (வளரும்)


  8. #7
    Junior Member Admin HubberNewbie HubberTeam HubberModerator HubberPro Hubber
    Join Date
    Aug 2005
    Posts
    12
    Post Thanks / Like
    "செந்தமிழர் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனூர்"



    ஆகமங்கள் எங்கே அறுசமயம் தானெங்கே
    போகங்கள் எங்கே உணர்வெங்கே?


    என்று வினவுகிறது திருக்களிற்றுப்படியார் (செய்யுள் -5)

    ஆகமம் என்ற சொல்லின் பொருள் என்ன? எந்தச் சமயமும் தத்துவங்களை நேரடியாக எளிய முறையில் சொல்வதில்லை. சொல்வதும் எளிதன்று. எல்லாவற்றையும் மறைபொருளாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் தருவதாகவும் சொல்லுகின்றன.

    ஆகமம் என்ற சொல்லுக்கு ஒன்றிலிருந்து 'வந்தது" என்று பொருள். அதாவது 'சிவபெருமானிடமிருந்து வந்தன" என்பதைக் குறிக்கின்றன. 'ஆகமம்" இறைவனிடம் இருந்து வந்தது என்பதைக் குறிக்கும் 'ஆ" என்பது அளவு, அறிவு, மரபு என்பதாகும். 'கம" வருதல், போதல், இறைவனை உணர்தல் என்பதைக் குறிக்கும். அதாவது இறைவனிடம் இருந்து வந்த இது இறைவனை உணர்வதற்கு வழிகாட்டும்.



    இன்னொரு விளக்கம். 'ஆ" என்பது பாசம், 'க" என்பது பசு, 'ம" என்பது பதி. ஆகவே ஆகமம் என்பது பதி, பசு, பாசம் மூன்றையும் பற்றிக் கூறுவது. பிறிதொரு விளக்கம் 'ஆ" என்பது சிவஞானம், 'க" என்பது மோட்சம், 'ம" என்பது மலத்தை ஒழித்தல்.

    புலமை வாயந்த தமிழறிஞர்களான பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி) மறைமலை அடிகள், கா.சு பிள்ளை ஆகியோர் ஆகமங்கள் தமிழிலேயே ஆதியில் இருந்தன என எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

    திருமூலர் தாம் எழுதிய திருமந்திரத்தில் சிவபெருமான் 28 ஆகமங்களை வழங்கியதாகக் கூறுகிறார். அதில் ஒன்பது ஆகமங்களின் அடிப்படையில் தமது நு}லை அமைத்துள்ளதாக அவர் கூறுகிறார்.

    வேதம் ஆகமம் இரண்டுமே இறைவன் அருளால் வெளிப்பட்டன என்பதையும் அவற்றின் தனித்தன்மைகளையும் தமிழில் முதன்முதலில் எடுத்துக் கூறியவர் திருமூலரே. சித்தாந்தம் என்ற சொல்லை முதன்முதலில் கையாண்டவரும் திருமூலரே!

    வேதம் பொதுவானது ஆகமம் சிறப்பானது. வேதம் ஆகமம் என்று இரண்டே நு}ல்கள்தான் உண்டு. பிற நூல்கள் இவற்றின் அடிப்படையில் எழுந்தவை. சிவாகமங்கள் வேதத்தின் உட்கருத்தை அதாவது சைவ சித்தாந்தத்தை எடுத்துரைக்கின்றன. வேதத்தின் பிற பகுதிகளை மற்ற நு}ல்கள் எடுத்துக் கூறுகின்றன.

    வேதங்களையும் ஆகமங்களையும் சிவபெருமான் அருளினார் என்பது சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாகும். ஆனால் வேதத்தை சிவபெருமான் அருளியிருக்க முடியாது. ஏனென்றால் சிவன் வேதகாலத்தில் கடவுளாக இருந்ததில்லை! அதாவது வேதத்தில் சிவனுக்கு இடம் இருக்கவில்லை. (மந்திரங்கள் என்றால் என்ன? பக்கம் 19)

    வேதங்களையும் ஆகமங்களையும் இறைவன் அருளினான் என்று சொல்லப்படுவதற்கு காரணம் யாதெனில் இவை ஒருவரால் எழுதப்பெறாது பலரால் பல ஆண்டுகாலமாக எழுதாக் கிளவியாக ஓதப்பட்டு பின்னர் ஏட்டில் எழுதப்பட்டதேயாம்.

    முன்னர் ஆகம விதிகள் காலத்துக்காலம் மாறிக் கொண்டு வந்ததை நீதிபதி மகராசன் குழுவினரது அறிக்கை வாயிலாக எடுத்துச் சொன்னோம்.

    எனவே தமிழில் போற்றி (அர்ச்சனை) செய்வதற்கு ஆகமத்தில் விதியில்லை என்ற வாதம் எடுபடாது. அப்படித்தான் இருந்தாலும் ஆகமத்துக்கும் பன்னிரு திருமுறைக்கும் இடையில் முரண்பாடு காணப்பட்டால் ஆகமத்தை விட்டு விட்டு பன்னிரு திருமுறையையே பிரமாணமாகக் கொள்ள வேண்டும் என்று குன்றக்குடி அடிகளார் சொல்லியிருக்கிறார்.


    நாயன்மார்களில் ஞானசம்பந்தர் தீவிர தமிழ்ப் பற்றாளர் என்பதை முன்னர் கூறினோம். ஞானசம்பந்தர் மொத்தம் 4196 பாடல்களை (283 பதிகங்கள்) பாடியிருக்கிறார். அதில் 147 இடத்திலே தன்னை 'தமிழ்ஞானசம்பந்தன்" 'முத்தமிழ் விரதன்" என்று சொல்லிக்கொள்ளுகிறார்! இஃது அவர் தமிழுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

    பக்தி இயக்க காலத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு நில்லாமல் அடிப்படை வழிபாட்டில் பல மாறுதல்கள் புகுத்தப்பட்டன.

    'வேதங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரிய, வைதீக மதத்தில் கோயில்களோ உருவ வழிபாடோ (விக்ரக ஆராதனையோ) இருக்கவில்லை" என வடமொழி படித்து, ஜெர்மானிய மொழியிலே வேதங்களை மொழி பெயர்த்த மாக்ஸ் முல்லர் என்ற அறிஞர் சொல்கிறார். உருவ வழிபாடு வணக்கம் வந்த பிற்பாடுதான் அவற்றுக்குக் கோயில்கள் எழுப்பப்பட்டன.

    வேதப் பிராமணர்கள் யாகம் முதலியவை நடத்திவந்த காலத்தில் கோயில்களையும் சிலைகளையும் நிறுவ வேண்டிய அவசிய ஏற்படவில்லை. பிராமணர்கள் மட்டுமே அக்னி வளர்க்கலாம் என்ற நியதி இருந்தது. அப்படி அக்னி வளர்த்த பிராமணர்கள் தீக்கடவுள் ஒன்றுதான் தெய்வம். அதற்கு மேலே இந்திரன், வருணன் போன்ற தெய்வங்கள் எதுவாக இருந்தாலும் 'ஸ்வாஹா" என்று சொல்லி அக்னியிலே போடுவதுதான் மரபாக இருந்தது.

    இப்படி அக்னி வளர்த்த பிராமணர்கள் அக்னி ஹோத்திரி தாதாச்சாரியார் என்று அழைக்கப்பட்டார்கள். அக்னி ஹோத்திரிகள் என்றால் அக்னி வளர்க்க உரிமை பெற்றவர்கள் என்று பொருள்.

    மற்ற வருணத்தார் உயர்ந்த பொழுது அவர்களுக்கு வேறு வழிபடு தெய்வங்கள் வேண்டியதாயிற்று. பிராமணர்களின் ஆதிக்கம் குறையவும் அக்னி வணக்கம் தனது செல்வாக்கை இழந்தது. அதிலிருந்து உருவ வழிபாடு ஆரம்பமாயிற்று. உருவங்களுக்கு அபிசேகம் செய்தவர்கள்.

    உருவ வழிபாட்டை வேதம் ஒத்துக் கொள்ளாததால் விக்கிரகம் வைப்பதும் அபிசேகம் செய்வதும் 'கல்லைக் கழுவுகிறவன் தொழில்" என அக்னி ஹோத்திரிகளால் பழிக்கப்பட்டனர்.

    திருவீழிமிழலை பாடல்பெற்ற திருத்தலம். திருஞானசம்பந்தர் திருவீழிமிழலைத் திருக்கோயிலில் 'செந்தமிழர்கள் மறை நாவலர்கள், கலைநலம் தெரிந்தவர்கள், குணத்திற் சிறந்த ஞானிகள் ஆகியோர் ஒருங்குகூடி அர்ச்சனைகள் செய்தனர்" எனப் பாடல் அருளியிருக்கிறார். செந்தமிழர் ஒரு போதும் வடமொழியில் அர்ச்சனை செய்திருக்க முடியாது. செந்தமிழர் செந்தமிழில்தான் அர்ச்சனை செய்திருப்பார்கள்.

    செந்தமிழர் தெய்வமறை நாவா செழு
    நற்கலை தெரிந்த அவரோடு
    அந்தமில்கு ணத்தவர்கள் அர்ச்சனைகள்
    செய்ய அமர்கின்ற அரனூர்
    கொந்தலர் பொழிற்பழக வேலிகுளிர்
    தண்புனல்வ ளம்பெருகவே
    வெந்திறல் விளங்கிவளர் வேதியர்
    விரும்பு வீழி நகரே. (மூன்றாம் திருமுறை)


    இந்த அபிசேகத்தை மூவரும் மிகவும் வியந்து பாடியிருக்கிறார்கள். யார், யார் அபிசேகம் செய்தார்கள், யார் யார் போற்றி செய்தார்கள் என்பதை வரிசைப்படுத்திச் சொல்லியிருக்கிறார்கள்.

    இப்போது கோவிலுக்குப் போனால் அர்ச்சனைத் தட்டைக் குருக்கள்கிட்டே கொடுத்துவிட்டு வெளியே அடியார்கள் நிற்கிறார்கள். ஆனால் ஞானசம்பந்தர் காலத்தில் செந்தமிழர் உள்ளே போய் பைந்தமிழில் அர்ச்சனை செய்தார்கள் என அவரே சொல்கிறார்.

    நாவுக்கரசர் திருக்கயிலாயக் காட்சியில் இன்புற்று மகிழ்ச்சி பெருகி நிற்கையில், அக்காட்சி மறைந்துவிடுகிறது. ஆனால் அவர் கண்ட காட்சியை, சிவமும் சத்தியுமாகிய திருக்கோலத்தைப் பிறைக் கண்ணியானும் மலைமகளும் எனக் காண்கின்றார். காணுமிடத்து, அடியார் பலர், புூவும் நீரும் கொண்டு இருவரையும் போற்றிச் செல்வதும், அவர் பின்னே செல்கின்ற தமக்குக் கயிலைமலைச் சாரலில் பெண் யானைகளோடு ஆண் யானைகள உலா வருவது தெரிகிறது.

    'மாதர்ப் பிறைக் கண்ணியானை
    மலையான் மகளொடும் பாடிப்
    போதொடு நீர் சுமந்து ஏத்திப்
    புகுவார் அவர் பின்புகுவேன்

    யாதும் சுவடு படாமல்
    ஐயாறு அடைகின்ற போது
    காதல் மடப்பிடியோடும்
    களிறு வருவன கண்டேன்"

    'அழகிய பிறை மதியைத் தலைமாலையாக அணிந்தவர் சிவபெருமான். உமாதேவி இமவான்மகள் ஆவார். அச்சிவனை உமையோடு சிலர் பாடிச் செல்கிறார்கள். அவர்கள் பூவோடு நீரை எடுத்துக் கொண்டும் துதித்துக் கொண்டும் போகிறார்கள். அவர்களுடன் நானும் கோயிலுக்குள் போவேன். அப்படிப்பட்ட நான், கால் சிறிதும் நிலத்தின் மேல் படாமல் திருவையாறு என்ற தலத்தை அடைந்தேன். அப்போது அன்பு பொருந்திய இளம் பெண் யானை வந்து கொண்டு இருந்தது. அதனுடைய ஆண் யானையும் வருவதைப் பார்த்தேன். அக் காட்சியில் சிவபெருமானின் திருவடிகளைப் பார்த்தேன். எப்பொழுதும் பார்த்து அறிய முடியாத காட்சிகளை எல்லாம் பார்த்தேன்."

    மாதர் - அழகு
    கண்ணி - தலைமாலை
    போது - மலர்
    சுவடு - கால்
    காதல் - அன்பு
    மடப்பிடி - பெண்யானை.

    திருநாவுக்கரசர் காலத்தில் திருக்கோயில் கதவுகள் எல்லோருக்கும் திறந்து இருந்ததையும் அடியார்கள் நீரும் பூவும் சொரிந்து நேரடியாக இறைவனை தமிழில் வழிபட்டதையும் காணலாம்.

    நாவுக்கரசர் தானும் அடியார்களும் பூவும் நீரும் கொண்டு சென்று நேரடியாக இறைவனைத் தொழுதார் என்கிறார். அதனால்தான் சூலை நோயுற்ற போது 'சலம் பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்" எனப் பாடுகிறார். மேலும்,

    இயக்கர் கின்னரர் யமனொடு வருணர்
    இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
    மயக்கம் இல்புலி வானரம் நாகம்
    வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
    அயிர்ப்பொன் நின்றினின் திருவடி யதனை அர்ச்சித் தார்


    அடியார்கள் மட்டுமல்ல வானவர், இயக்கர், கின்னரர், புலி, சிங்கம், நாகம் எல்லாம் இறைவனின் திருவடிகளை நேரடியாக அர்ச்சித்தனர் என்கிறார் சுந்தரர்.


    பல்லவர் காலத்தில் தமிழோதி வழிபடவும் கருவறை செல்லவும் உரிமை பெற்றிருந்த தமிழர்கள் சோழர்காலத்தில் வடமொழிக்கு இடங்கொடுத்து கருவறை செல்லும் உரிமையை இழந்தனர். இதற்குக் காரணம் பல்லவர்களை மிஞ்சும் வண்ணம் இராசராசன், இராசேந்திரன் போன்ற சோழ மன்னர்கள் பெருவாரியான பார்ப்பனர்களை காசி, கஷ்மீர், வங்கம் போன்ற வடநாடுகளில் இருந்து கொண்டு வந்து குடியேற்றிமையே.

    சங்க காலத்தில் பார்ப்பனர்கள் சேரிகளில் வாழ்ந்தார்கள். பல்லவர் சோழர் காலத்தில் ஆற்றங்கரை நிலங்கள் சூழ்ந்த குளிர்ந்த தனி ஊர்களைப் பெற்று வாழ்ந்தனர். இந்த ஊர்கள் அகரம், அக்கிரகாரம், சதுர்வேதி மங்கலம் பிரமதேயம்

    எஅழைக்கப்பட்டன.

  9. #8
    Member Junior Hubber Uthappam's Avatar
    Join Date
    Jul 2005
    Location
    Singapore
    Posts
    87
    Post Thanks / Like
    Intersting, karthik. Keep them coming!
    Araitha Maavai Araithal, Iditha Maavai Idithal,
    Avitha Maavai Avithal, Kindal, Kilaral, Mudithal!

  10. #9
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    ¿£í¸û ±Ø¾¢ÔûÇ þΨ¸Â¢ø ¯ûÇ ±ØòÐì¸û Óý À¢ýÉ¡¸ò ¦¾Ã¢Å¾¡ø
    ÀÊôÀÐ ¸ÊÉÁ¡¸¢ÈÐ. ±Îòи¡ð¼¡¸ "§¸¡" ±ýÈ ±Øò¾¢ø, "¸" ÓýÛõ "§" À¢ýÛõ "¡" ¸¨¼º¢Â¢Öõ ¦¾Ã¢¸¢ÈÐ. ±ýÉ ±Øò¨¾ô ÀÂýÀÎòи¢È£÷¸û?
    äÉ¢§¸¡¼¡?
    B.I. Sivamaalaa (Ms)

  11. #10
    Senior Member Devoted Hubber
    Join Date
    Mar 2005
    Location
    jeddah, saudi Arabia
    Posts
    399
    Post Thanks / Like
    Dear Kaarthikaipoo,

    You should not be an "Aththippoo". Your concept and explanation is simply superb Continue your postings

    f.s.gandhi
    "Kal thonri man thontra kalathay mun thonri mootha kudi"- a second century literature- means when before stone became sand in earth the tamil tribes were formulated

Page 1 of 5 123 ... LastLast

Similar Threads

  1. Ongkaara Manthiram as portrayed in Tamil Saivaism of Tamil Nadu - Part 3
    By virarajendra in forum Indian History & Culture
    Replies: 11
    Last Post: 31st May 2016, 10:42 PM
  2. UNIQUE Language TAMIL. How?
    By Oldposts in forum Tamil Literature
    Replies: 79
    Last Post: 5th July 2010, 05:58 PM
  3. Why Tamil is a classical language ?
    By joe in forum Indian History & Culture
    Replies: 4
    Last Post: 5th May 2008, 08:50 PM
  4. tree worship
    By padmanabha in forum Indian History & Culture
    Replies: 1
    Last Post: 6th October 2006, 08:08 PM
  5. Is Tamil the most difficult language in the world ?
    By Soomy in forum Miscellaneous Topics
    Replies: 50
    Last Post: 20th July 2006, 07:21 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •