Page 28 of 29 FirstFirst ... 1826272829 LastLast
Results 271 to 280 of 287

Thread: pala suvaik kavithaikaL.

  1. #271
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    continued

    "கீழது நாகர் நாடும் புடையன" என்ற வரியைப் படித்தறிவோம்.

    கீழது என்றது, இங்கு மேலது என்பதற்கு முரணாக வந்து அழகு தருகிறது. சரி, மேலது வானமென்றால், கீழது யாது? பாதாளமோ? இல்லை! இராவணன் ஆண்ட இடத்துக்குப் பக்கத்தில் நாக நாடு இருந்தது என்பது கருத்து. கீழது = வானத்தின் கீழ் அருகில் என்று பொருள் படும். புடை = பக்கம் என்று கூறுக. இங்கு "புடையன" என்று தொளிவுறப் பன்மையில் கூறியதால், வானத்து மூவா நகரும் கீழிலங்கிய நாகர் நாடும் பக்கமிருந்தன என்று பொருள்.

    தொடரும்.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #272
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    old Ramayaana stanza - interpretation

    continued.....

    இனி, வேறொரு விதமாகவும் சொல்வதற்கு இடமிருக்கிறது? அது என்ன? மேல் என்பது மேற்றிசை அல்லது மேற்குத் திசையையும் குறிக்கலாம். வானவர் என்று தமிழர்களால் கருதப்பட்ட சிற(வ)ந்த நிறமுடைய மக்களின் (அல்லது தேவர்களின்) நகரமும் பக்கம்தான் என்பதுதான் அது. எனினும் அது நகரம் மட்டுமே! பாடலாசிரியர் அதை நாடு என்று சொல்லவில்லை. நாடில்லாத நகரம். ம்! சிங்கப்பூர் மாதிரி. ஆசிரியர் சொல்லாததை யெல்லாம் இல்லாதது என்று எடுத்துக்கொள்வதிலும் இடர் ஏற்படலாம். சரி, நாகருடையது நாடு; நகரமன்று. சற்று விரிந்து பரந்தது, -- நகரத்துடன் ஒப்பிடும்போது.

    அதேபோல், நாகர் கீழை நாட்டவர் என்பதும் பெறப்படும்.யார் அவர்கள்? நாகர் என்ற பெயர்தான் பின் நாயர் என்று திரிந்துவிட்டது என்பது ஓர் ஆராய்ச்சிக் கருத்து. நாகங்களை வணங்கியதனால் அப்பெயர் எய்தினர் என்றனர். அதுவன்று! நயத்தல் என்பதன் அடியாகப் பிறந்த சொல்லே நாயரென்பது, நாகர் என்பது வேறு என்கிறது இன்னோர் ஆய்வு. நய+அர் = நாயர். முதனிலை நீண்டதென்பர். நாயக் என்ற சங்கத வடிவமும் வந்து குழம்புகிறது ! நாகரென்பார் மஞ்சள் நிறத்தவர், மங்கோலிய வழியினர் என்பதும் கூறுவதுண்டு. இராவணாதிகளைத்தாம் கேட்டறியவேண்டும். இப்போதுதான் நாகாலாந்து இருக்கின்றதே.... அங்குபோய்ப் பார்த்தால்..! அந்த நாகர்தாம் இந்த நாகரோ? ஆய்வு செய்யுங்கள்.

    ஆக நாம் பாடலில் அறியவேண்டியது, நாக நாடு இராவண தேயத்திற்குப் பக்கத்தில் என்பதுதான். எனவே மேலது கீழது என்பன மேற்றிசை கீழ்த்திசை (West and East ) குறித்தனவாகவுமிருக்கலாம்.

    to be continued...
    Last edited by bis_mala; 4th August 2013 at 04:09 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #273
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    old ramayana interpretation

    continued.....

    திசைகாப் பாளர் தேயக் குறும்பும்
    கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் தந்த
    பல்வேறு விழுநிதி எல்லாம்



    எத்திசைக்குத் திரும்பினாலும் அத்திசையில் ஆங்கிருக்கும் செல்வங்களையும் காப்பதற்குரிய பிறவற்றையும் காத்து நிற்போரைத் திசைகாப்பாளர் என்று பாடலாசிரியர் குறிக்கின்றார். அவ்விடங்களை வெற்றிகொள்ள நினைப்போன் யாராயினும் இத் திசை காப்பாளரை அழிக்கவேண்டும். இல்லையேல் அவண் உள்ள செல்வங்களை எப்படி எடுத்துக்கொள்வது?

    இதைப் புலவர் "திசைகாப்பாளர் குறும்பும் தேய" என்ற சொற்களால் தெரிவிக்கின்றார். திசைகாப்பாளர் தேய, அவர்களின் குறும்பும் (வல்லமையும்) தேய என்று விரித்துக்கொள்ளவும்.

    கொள்ளை சாற்றி - போர் முரசறைந்து. கொள்ளை என்பதால் இது வெற்றிபெற்ற போர் என்பதாம். வெற்றி பெற்றாலே பகையரசர் நிதியைக் கொண்டுவர முடியுமென்பதால்.

    "அப்படிக் கொண்டுவந்த செல்வங்களையெல்லாம்" என்பார், "கவர்ந்து முன் தந்த
    பல்வேறு விழுநிதி எல்லாம்" என்றார்.

    விழு நிதி = செல்வம். இருப்பில் உள்ள செல்வமே நிதி எனப்படுவது.

    தொடரும்.
    Last edited by bis_mala; 4th August 2013 at 05:01 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  5. #274
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    continued...

    திசைகாப்பாளர் யார்?


    எண்டிசைகளையும் காத்து நிற்போர் மானிடர்களா? ஆசிரியர் வேறு குறிப்புகள் ஏதும் தந்துள்ளாரா? என்று வினவலாம். அரக்கர்கோ முரசறைந்து அவர்கள் வல்லமை அழியுமாறு படை நடத்தினான் என்பதால், மானிடர்களாய் இருக்கலாம். ஆங்காங்கு ஆட்சி செலுத்தும் நாட்டுக்குரியோரைக் குறித்ததாகலாம். ஆனால் திசைக்கொரு காவல் தெய்வம் இருப்பதாகப் பரவலாகப் பண்டைய மக்கள் நம்பினர். சீனர், கம்போடியர், சாவகத்தார், வியட் நாமியர், இந்தியர் என அனைவரிடத்தும் இத்தகைய நம்பிக்கை இருந்திருக்கிறது. எனவே, திசைகாப்பாளர் என்பது இத்தேவதைகளைக் குறித்ததாகவும் கொள்ளற்கு இடமுண்டு.

    தேவதைகளாயின், அவர்களை முற்றாக அழித்துவிடுதல் இயலுமோ? ஆகவே, ஆசிரியர் கவனமாக : "குறும்பும் தேய" என்கிறார். அவர்களின் வல்லமையைக் குறைத்து இடர் ஏதும் செய்யாமல் செய்துவிடின் அதுவே இயல்வதாகும் என்று தோன்றுகிறது. "தேய" என்பதற்கு அழிக்க என்று உரைப்பதில் தவறில்லை யாயினும், "குறைய" என்பதே மிகுபொருத்தம் என்று தோன்றுகிறது.
    B.I. Sivamaalaa (Ms)

  6. #275
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    continued from last post.

    திசை காப்பாளர் பற்றிக்கண்டோம். திசைகள் நான்கு. இவற்றினுட்பட்ட திசைகளையும் சேர்த்து எண்திசை எனவும் படும். எண்டிசை என்று புணர்ச்சிபெறும் சொல் இதுவாகும். இனி, மேல் - கீழ் அதாவது வானம் பூமி (பாதாளம்) இவற்றின் திசைகளையும் சேர்த்து, திசைக்கொரு காப்பாளர் இருக்கின்றார் என்று கூறப்படுதலும் உண்டு. இவற்றின் விவரத்தை தொன்ம நூல்களில் காணலாம்.

    திசைத்தேவர்களின் வல்லமை தேய்வுறவே. ஆங்காங்கு ஆட்சிசெய்துகொண்டிருப்போரின் வல்லமையும் அதற்கொப்பத் தேய்ந்து, இராவணன் போறிட்டவிடத்தெல்லாம் வெற்றியை ஈட்டி, விழு நிதியங்களைக் கொணர்ந்தான்.

    "வலம்படு மள்ளர்க்கு வீசி வகுத்தனன்"

    வலிமைவாய்ந்த தம் வீரர்களுக்கு இராவணன் இந்த நிதியையெல்லாம் வகுத்து, விரைந்து அளித்தான் என்பது இதன் பொருள். வீசி என்பது விரைவையும் மேலும் அவனுக்கு இனி அவை வேண்டாதவை என்பதையும் தெளிவாக உணர்த்துகின்ற சொல்லாகும். வகுத்தான் என்ற சொல் அவர்களில் யாவருக்கும் பங்கு கிடைக்குமாறு அந்நிகழ்வு நடந்தேறியது என்பதைத் தெரிவிக்கின்றது.

    தொடரும்.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #276
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    (சிவ பக்தன்)

    continued.

    இராவணன் சிவப்பற்றாளன் (சிவ பக்தன்) என்பது இராமயணம் சிறிதறிந்தோரும் அறிந்து வைத்துள்ள செய்தியாகும். இப்பாடலும் இதையே தெரிவிக்கின்றது.

    கண்நுதல் வானவன் காதலின் இருந்த

    என்ற வரி அவன்றன் சிவப்பற்றினை எடுத்தியம்புகின்றது. கண்ணுதல் வானவன் என்பது நெற்றிக்கண் தேவன் என்று பொருள்தரும், மூன்றாவது கண்ணை நெற்றியில் உடையோன் சிவன்.

    இப்பற்றும் திண்ணிய பற்றாதலின் "காதல்" என்கின்றார். சிவனைக் காதலித்துக் கிடந்த இராவணன் சீதைபால் ஏன் விருப்பம் கொள்ளவேண்டும்? சீதையைக் கடத்திக் கொண்டு வைத்திருந்தது ஓர் அரசியல் நடவடிக்கைபோன்றது. சீதாப்பிராட்டியை அவன் தொட்டானில்லை.

    தொடரும்.
    Last edited by bis_mala; 17th August 2013 at 09:19 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #277
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    cont:d from last post

    இருந்த என்ற சொல்லும் மிக்க ஆழமான கருத்துடையதாகும். சிவனைத் தேடி இராவணன் அலையவில்லை. சிவக்காதலினால் ஒரே இடத்தில் சீரிய கூரிய எண்ணங்களின் நிலைநிறுத்தத்தினால் அசைவற்று ஆழ்ந்தமர்ந்ததையே இச்சொல்லாட்சி நம்முன் கொணர்கிறது.


    மாலை வெண்குடை அரக்கர் கோவே என்பது:

    இராவணன் அரசவையில் (தர்பாரில் ) மாலை அணிந்து வெண்குடையின் கீழ் அமர்ந்து தனது அலுவல்களை கவனிக்கும் பழக்கமுடையவன் என்பது தெரிகிறது. இது மன்னர் பிறரும் பின்பற்றிய முறைதான். இராவணன் அரக்கர்கோ என்ப்பட்டாலும் அவன் பிராமண மன்னன் தான்.

    அவனை அரக்க பிராமணன் (அல்லது பிரம்ம ராட்சஸன்) என்றாலும், ராட்சஸனானது அவன் செயல்களாலா அல்லது பிறப்பினாலா என்று தீர்மானிப்பது கடினம். செயல்களால் என்று கூறின் பிறப்பினால் என்று வாதிடுவர்.


    தொடரும்.
    Last edited by bis_mala; 19th August 2013 at 09:36 AM.
    B.I. Sivamaalaa (Ms)

  9. #278
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    continued from last post

    "குன்(று)ஏந்து தடக்கை அனைத்தும் தொழிலுற"

    இஃது இராவணன் கைவலிமையைக் குறிப்பிடுகிறது. அவனுடைய வலிமை வாய்ந்த கைகள் ஒரு குன்றினையும் ஏந்தும் வலிமை வாய்ந்தன என்கிறார் இவ்வாசிரியர். தடக்கை - வலிமை வாய்ந்த கைகள். இராவணன் பல கரங்களை உடையவன்.

    விழு நிதியத்தைப் பங்கிட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கையில், அவனது அத்தனை கைகளும் அவ்வேலையில் முற்றும் ஆழ்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தன.

    தொழிலுற = செயல்பட, வேலைசெய்ய.

    இவ்வழகிய பழம்பாடல் இப்போது நன்கு புரிவதுடன். இத்தகு பாடல்களை படித்தின்புறுவதற்கு நம் நேயர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமையும் என்று நம்புவோம்.

    0-0-0-0-0
    B.I. Sivamaalaa (Ms)

  10. #279
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    அன்னையும் தந்தையும்

    பல சுவைக் கவிதைகளில் இப்போது ஓர் அழகிய இனிய பாடலைப் பதிவுசெய்வோம். இப்பாடலை எழுதிய கவிஞர் , இசைமேதை பாப நாசம் சிவன் என்று அறிகிறோம்.

    அன்னையும் தந்தையும் தானே --- பாரில்
    அண்டசரா சரம் கண்கண்ட தெய்வம்;

    தாயினும் கோயிலிங் கேது -- ஈன்ற
    தந்தைசொல் மிக்கதோர் மந்திரமேது;
    சேயின் கடன் அன்னை தொண்டு -- புண்ணிய
    தீர்த்தமும் மூர்த்தி ஸ்தலமும் இதிலுண்டு!

    தாயுடன் தந்தையின் பாதம் --- என்றும்
    தலை வணங் காதவன் நாள்தவறாமல்
    கோயிலில் சென்றென்ன காண்பான் --- நந்த
    கோபாலன் வேண்டும் வரம்தருவானோ?

    பொன்னுடன் ஒண்பொருள் பூமி ---- பெண்டிர்
    புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வு,
    அன்னை பிதாவின்றி ஏது -- மரம்
    ஆயின் விதையின்றிக் காய்கனி ஏது!
    Last edited by bis_mala; 22nd August 2013 at 09:17 AM. Reason: ல்
    B.I. Sivamaalaa (Ms)

  11. #280
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    நாலடியார் அல்லது நாலடிநானூறு என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்.


    மற்றறிவாம் நல்வினை யாமிளையம் என்னாது
    கைத்துண்டாம் போதே கரவா தறஞ்செய்க
    முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
    நற்காய் உதிர்தலும் உண்டு.

    இந்தப் பாடல் என்ன சொல்கிற தென்பது உங்களுக்குத் தெரிந்தால் இங்கு பதிவுசெய்யுங்கள்.
    B.I. Sivamaalaa (Ms)

Page 28 of 29 FirstFirst ... 1826272829 LastLast

Similar Threads

  1. Replies: 72
    Last Post: 13th April 2009, 11:00 AM
  2. en kavithaikal
    By senthilnathan_r in forum Poems / kavidhaigaL
    Replies: 13
    Last Post: 3rd December 2006, 05:12 PM
  3. Seithikal Pala Kodi - Athellaam unmai alla
    By RR in forum Current Topics
    Replies: 26
    Last Post: 28th August 2005, 05:49 PM
  4. maRRa kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 161
    Last Post: 18th August 2005, 09:36 PM
  5. akil kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 54
    Last Post: 12th November 2004, 01:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •