Page 27 of 29 FirstFirst ... 172526272829 LastLast
Results 261 to 270 of 287

Thread: pala suvaik kavithaikaL.

  1. #261
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    கலைவாணர் விளக்க வரிகள்

    பாரதியாரின் கவிதை பற்றி எடுத்தியம்ப தனித் திரிகள் இங்கு உண்டு. ஆனாலும் பலசுவைக் கவிதைகளையும் நாம் நுகர்ந்து வருவதனால், அவருடைய கவிதை ஒன்றிரண்டை அவ்வப்போது தொட்டிணைத்துக்கொள்வதில் தவறொன்றும் இல்லையென்றே கருதுகின்றேன்.

    நாம் இன்று படித்தின்புறும் அவர் வரிகள் இவை:

    நீலத் திரைக்கடல் ஓரத்திலே -- நின்று
    நித்தம் தவம்செய்த குமரிஎல்லை -- வட
    மாலவன் குன்றம் இவற்றிடையே -- புகழ்
    மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு.


    இந்த வரிகளுக்கு நகைச்சுவை அரசு என்று பெரும்புகழ் வாய்ந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் வரைந்திருந்த சில விளக்க வரிகள்,இலக்கிய நோட்டம் என்னும் தகுதிக்கு நன்கு ஏற்புடையன என்னலாம்.

    அவ்வரிகள் இவை:

    தொடரும்.
    Last edited by bis_mala; 30th August 2012 at 09:02 PM. Reason: line space unable
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #262
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    கலைவாணர் விளக்க வரிகள் continued...

    continued from the last post:

    தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் யோகசாலிகள்தான். தமிழென்றாலே இனிமை என்பது பொருள். தமிழில் சில வார்த்தைகளுக்கு இரும்பைக் காந்தம் இழுக்கும் தன்மைபோன்ற சக்தியுண்டு. இது கற்பனையல்ல. கடைந்தெடுத்த அனுபவ உண்மை.

    "மண்டி" என்ற சாதாரண வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வார்த்தையில் விசேஷமாக ஒரு சக்தியோ கவர்ச்சியோ இருப்பதாகத் தோன்ற வில்லை அல்லவா? சிறந்த கலைஞர்கள் இவ்வார்த்தையைக் கையாண்டு எத்தனை ஆச்சர்யகரமான அற்புத சக்தியை ஏற்படுத்தி விடுகிறார்களென்பதைப் பாருங்கள்.

    பாரதியார் பாடலொன்றில் ("புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு" ) புகழ் மண்டிக் கிடக்கிறதாம். புகழானது கொழித்து, கொப்பளித்து, உறைந்து, ஊறித் ததும்பி எங்கும் பரந்து நிரம்பிக் கிடக்கிறதாம். இந்த ஒரு வார்த்தை கவிதையில் ஜீவகளையைப் படம்பிடித்துப் படிப்போர் கருத்தைப் பரவசமாக்குகிரது. இன்னும் பல உதாரணங்கள் காட்டலாம்.

    என். எஸ். கிருஷ்ணன். கட்டுரை. ஜூன் 1952,
    B.I. Sivamaalaa (Ms)

  4. #263
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    tholkaappiyach chuvai: vaakaiththiNai.

    தொல்காப்பியம் என்பது ஓர் இலக்கண நூல். உண்மையில் அது இலக்கியம் அன்று. எனினும் அதில் கூறப்பட்ட பெரும்பாலானவை இன்று நடைமுறையில் இல்லை. நன்கு படித்தவர் பேச்சிலும் எழுத்திலும் கூட இல்லை. ஆகவே அங்குக் கூறப்பட்டவை பலவும் வரலாற்று அறிவுக்கு ஊட்டம் தருவது, இலக்கியச் சுவை நல்குவது என்று வைத்துக்கொள்ளவேண்டும். அதைப் படித்தால் நம் தமிழறிவு மேம்படும் என்றும் சொல்லலாம்.

    இப்போது நாம் ஒரு தொல்காப்பிய நூற்பாவைப் படித்து இன்புறுவோம். அதற்குமுன், ஒரு சில சிறு கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

    "என்று சொன்னார்கள் படித்தவர்கள்" என்று எழுதாமல். "என்மனார் புலவர்" என்று எழுதினால், அவர் எந்தப் புலவர் என்றுதான் உங்களுக்குக் கேட்கத் தோன்றும். என்மன் + ஆர் என்பது, என்னும்+அன்+ஆர் என்பதன் சுருக்கமென்பது ஆய்வுக்குரியது. இக்காலத்தில் "என்பார் புலவர்", "என்ப (புலவர்)," என்று எழுத அமையும்,

    தொல்காப்பியனாருக்குப் பிடித்த நடை: " என்மனார் புலவர்" என்பதுதான். மன் என்று ஓர் இடைச்சொல்லும் இருக்கிறதென்பர்.

    அது இசை நிறைவுக்காக என்+மன்+ ஆர் என்று நீட்டம் பெறுகிறது, "என்ப புலவர்" என்றால் நூற்பா ஓசை குன்றுவது தெரிகிறது. இப்போது இதை நான் ஆராயவில்லை.

    நீங்கள் இங்கு புகுந்து ஆய்வு செய்யலாம்.
    You may compare these and others you come across in your own readings:

    என்+உம்+அன்+ஆர்= # என்னும்+அன்+ஆர் = என்+ம்+அன்+ஆர் = என்மனார்.

    என்+உம்+ஆர் (இதில் அன் இல்லை)= என்+உ+ஆர் = என்னுவார்> என்(னு)வார் > என்பார். வ- ப திரிபு.

    அல்லது ப தான் முந்தி, வ பேச்சுத் திரிபு என்று வாத்தியார்கள் வாதிடலாம்.
    வேறு விளக்கங்களும் உண்டாயினும், பின் காண்போம்.

    பாடலைக் காண்போமா?

    அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
    ஐவகை மரபின் அரசர் பக்கமும்
    இருமூன்று மரபின் எனோர் பக்கமும்
    .................................................. ..........................
    அனைநிலை வகையோடு ஆங்கெழு வகையில்
    தொகை நிலை பெற்றது என்மனார் புலவர் "
    (தொல். புறத்திணையியல், 75)


    என்ற வரிகளைப் பற்றிப் பேசுவோம்.


    இப்பாவின் மூலம் நமக்குத் தெரியவருவது என்னவென்றால், பார்ப்பன மக்கள் அறுவகைப் பட்டு நின்றது, மரபுவழியாக வந்தது அன்று என்பதுதான். அரசருக்கும் ஏனோருக்கும் மரபு கூறப்படுகிறது. பார்ப்பன மக்கட்கு அது புது நிலையாகும்.

    நச்சினார்க்கினியர் கருத்துப்படி இந்த நூற்பா துறைப்படுத்திக் கூறமுடியாத பரப்பு உடைய செய்கை(கள்) பலவற்றைத் தொகுத்து ஒவ்வொன்றாகக் குறித்து மொத்தம் ஏழுவகையாக்கிக் கூறுவதனால் ஒரு சிறப்பிலக்கணத்தை வாகைத் திணைக்குப் பொதுவகையால் கூறுகின்றது. இவற்றுள் மூன்று மட்டும் மேலே எடுத்துக்காட்டினேன்.


    அறுவகைச் செய்கைகள் ஆவன, ஏற்றல், ஈதல், ஓதல், வேட்டல், ஓதுவித்தல் வேட்பித்தல் என்பன. இவை பார்ப்புச் செயல்கள்.

    ஓதுதலுக்கு நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுவது; கல்விபயில்தல் பற்றிய நாலடியார் பாடலொன்றை. நாலடி. 14:2. கல்விபோல் சிறந்தது யாதுமில்லை என்பது இப்பாடலின் கருத்தாக இருப்பதால், இஃது யாவர்க்கும் உரியது என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். இந்த ஓதல் செய்கையில், பார்ப்பனருக்கோ அரசருக்கோ சிறப்பாகக் கூறத்தக்கது ஒன்றுமில்லை.

    தொடர்வோம்.

    Note

    என்மனார் புலவர் என்பதை வாக்கியமாக விரித்து எழுதினால்:

    என் உம் அன் ஆர் புலவர் = என்னும் அன்னார் புலவர் = என்று சொல்லும் அவர்கள் புலவர்கள்.

    இதைச்சுருக்கினால்:

    என்னும் அன்னார் புலவர் = என்னுமன்னார் புலவர் = என்(னு)ம(ன்)னார் புலவர் = என்மனார் புலவர் என்று அழகாகச் சுருங்கிவிடுகிறதே.....இங்கு (னு) (ன்) முதலியவை மறைந்தால் போதுமல்லவா?

    இப்படிப் பலவாறு எழுதி விளையாடி மகிழுங்கள்.


    vAkai or vAkaith thiNai in ancient poems: theme of a conqueror wearing a chaplet of sirissa flowers and celebrating his victory over royal enemies; or a. theme in which the members of any group of persons exalt their characteristic attainments; also good behaviour.

    பக்கம் - கூறு, மக்கள் தொகுதி, பகுதி. ( பகு+அம் = பக்கம் ). This need not necessarily refer to any physical segregation of people. These are divisions conceptualised based on activities, useful in writing poems.
    Last edited by bis_mala; 3rd November 2012 at 08:46 AM. Reason: color&notes
    B.I. Sivamaalaa (Ms)

  5. #264
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    தொல்காப்பியச் சுவை : பக்கம் என்பதற்கு......

    Quote Originally Posted by bis_mala View Post
    தொல்காப்பியம் என்பது ஓர் இலக்கண நூல்................
    மேல் இடுகையின் தொடர்ச்சி:

    பக்கம் என்பதற்குப் பொருள்


    அறுவகைப் பட்ட பார்ப்பியற் கூறும் என்று பாடாமல், பார்ப்பனப் பக்கமும் என்று ஆசிரியர் தொல்காப்பியனார் பாடுவதால், இது சற்று பொருள் விரிவு உடையதாகி, பார்ப்பனர் அவரல்லாதாரின் பெண்களை மணந்து பிறந்த பிள்ளைகளையும் உள்ளடக்கும் என்பது நச்சினார்க்கினியர் கருத்து. பார்ப்பனரும் அவர்கள்தம் பக்கத்திலிருக்கும் அவர்கள் கலப்புடையவரும் என்று உரையாசிரியர் பொருள் கொள்கிறார். நச்சினார்க்கினியர் காலத்தில் புலவோர் இங்ஙனம் பொருள்கொண்டனர் போலும். இக்கலப்புப் பிறப்பினரும் பார்ப்பு போலவே அவர்களுக்குரிய செய்கைகள் சிலவற்றை தம் தொழிலில் மேற்கொண்டுவந்தனராம்.இருப்பினும் முழுப்பார்ப்புகள் போல் இவ்வரைப் பார்ப்புகள் செயல்பட இயலவில்லை என்று தெரிகிறது. அரைப்பார்ப்புகளுக்கும் நூலும் சிகையும் உண்டென்பர். பின் (after some decades or centuries ) அவர்கள் பார்ப்பியலுள் முழுமையாய்ப் புகுந்திருப்பர்.

    அதாவது ஒரு புலவர் ஒரு கலப்புப் பார்ப்பனனைப் புகழ்ந்து பாடினாலும் அது பார்ப்பன வாகையின்பாற் படுவதே என்பது பொருளிலக்கணம்.பாடலுக்குத் திணை துறை காண்பது எப்படி என்ற கேள்விக்கு இங்கு பதில் உள்ளது. சாதிப்பாகுபாடுகள் செய்து விதி இயற்றுவது இதன் நோக்கமன்று.

    மேலும் புலவர் பிறர் இங்ஙனம் கூறினர் என்று , தொல்காப்பியனார் நழுவிக்கொள்கிறார். என்மனார் புலவர் என்றால் அதுதான் பொருள்.

    தொடரும்.

    Note: Tolkappiyam itself might have been amended for application to new social conditions by succeeding generations of teachers for their students. There was no control copy and few possessed anything in writing at the time of teaching and learning. That is why, it is right to say that the term vaaththiyaar came from vaay (mouth). The student learnt by heart what the teacher was reciting. This interpretation of relevant Tolkappiyam stanza here is "as it is".
    Last edited by bis_mala; 5th November 2012 at 06:20 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  6. #265
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    தொல்காப்பியச் சுவை : பக்கம் என்பதற்கு....

    Quote Originally Posted by bis_mala View Post
    மேல் இடுகையின் தொடர்ச்சி:
    பக்கம் என்பதற்குப் பொருள் ( தொடர்ச்சி: )

    பக்கம் என்ற சொல்லையே அரசர்க்கும் பயன்படுத்தியுள்ளார் தொல்காப்பியனார். பார்ப்பனர்க்குப் போலவே, அரசர் தம் நிலையில் இல்லாத பிறர்வீட்டிற் பெண்கொண்டு அதன் பயனாய்த் தோன்றிய பிள்ளைகட்கும் அரச குலத்தினர் போல் சில செய்கைகள் / நடவடிக்கைகள் ஒப்புடையனவாய் இருக்கும். இப்பிள்ளைகள் புகழ் எய்தியவிடத்து அவர்கள் மேலெழுந்தபாட்டும் அரசவாகையின் பாற்படுவதே ஆகும். பக்கம் என்ற சொல் இதையே குறிப்பதாம்.

    இருமூன்று மரபின் ஏனையோர் அனைவருக்கும். பக்கம் என்றசொல்லே வருதலால் இங்ஙனமே அவர்க்கு அன்னியர் ஆவாரையும் ஆங்கு உள்ளடக்க வேண்டும். அவர்களில் எவரையும் புகழ்ந்து புலவர் இயற்றிய பாட்டும் வாகைத்திணையுள் அடங்கும் என்றவாறு. Nothing is said by the commentators about marriage between these castes and their children.

    அனை நிலை = அனைய நிலை. அந்நிலை, அத்தகைய நிலை. இது சுட்டு.
    This chUththiram in Tolkappiyam seems quite messy. It probably was a later update with insertions.


    will edit later as necessary, There is some bug here and it keeps saying I am not logged in. edit difficult,
    Last edited by bis_mala; 5th November 2012 at 06:15 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #266
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    தொல்காப்பியச் சுவை tholkaappiyach chuvai: vaakaiththiNai. some questions

    Quote Originally Posted by bis_mala View Post
    ............
    மேலிடுகையின் தொடர்ச்சி.

    இதில் அறுவகைப்பட்ட என்ற தொடருக்கு யாது பொருள்? ஒவ்வொரு பார்ப்பனனும் தம் பொருளீட்டும் தொழிலில் ஆறுவகையான செய்கைகளில் அல்லது சொல்லப்பட்ட ஆறில் ஒன்றிலிருந்து ஆறுவரையிலுமான எண்ணிக்கையுள்ள செய்கைகளில் ஒன்றிலோ அதனின் மேற்பட்டவற்றிலோ ஈடுபட்டிருந்தான் என்று பொருள். மடைப்பள்ளியில் வேலை செய்வோன் இவற்றுள் எதைச் செய்தான் என்று கேட்கக் கூடாது. ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் தட்சிணை பெற்றான் என்றால்,"ஏற்றல்" எனும் செய்கையைப் புரிந்தான் என்று வைத்துக்கொள்ளவேண்டியதுதான். (1/6),

    அரசன் நீங்கலான ஏனையோருக்கும் பார்ப்பனனைப்போல் ஆறு செய்கைகளே சொல்லப்பட்டன.
    ஆனால் ஏனையோர் மரபுவழியில் ஆறு செய்கைகள் செய்துவந்தனர். ஆகவே பார்ப்பனருக்கு ஒரு நூற்பாவை ஒதுக்கிவிட்டு, அரசர் -பிறருக்கெல்லாம் இன்னொரு நூற்பாவைப் போட்டிருக்கலாம்.தொல்காப்பியம், ஏன் எல்லாவற்றையும் ஒன்றாக்கியது என்று தெரியவில்லை.

    நிற்க இவர்களில் யார் செயற்கரிய செய்து வெற்றி பெற்றாலும் வாகைத்திணை தான். ஆறு செய்கைகள் புரிவார் ஆயினும் ஐந்து புரிவாராயினும் அதேதான். வாகையென்பது அவன் பொருளீட்டுத் தொழில் யாது என்பதைப் பொறுத்ததில்லை. பின் ஏன் ஆறு செய்கையுடையார், ஐந்து செய்கையுடையார் என்றெல்லாம் விதந்து ஓதவேண்டும் நம் தொல்காப்பியர் என்பதும் இதில் எழும் கேள்வியாகும்.

    மேலும், ஒருவன் தன் தொழிலில் செய்வது, மரபுவழிப் பட்டதாயிருந்தால் என்ன, அல்லாததாய் இருந்தால் என்ன என்பதும் அடுத்த கேள்வியாகும்! எப்படியாயினும் வாகை தானே?

    வரலாற்றை நாம் உணரவேண்டும் என்பதற்காகவே தொல்காப்பியர் வேண்டாத விடயங்களையெல்லாம் நூற்பாவில் புகுத்தி நமக்கு உதவி செய்திருக்கிறார் என்கிறீர்களா?

    அரசனுக்கு மட்டும்தான் வாகை! பிறருக்கு இல்லையென்று கலகங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த நாட்களிலே நம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றினாரோ? நிலைமையைச் சரிக்கட்ட இப்படி ஒரு சூத்திரம் எழுதவேன்டியதாயிற்றோ?

    உங்கள் கருத்துக்களையும் இவண் பதியலாமே!

    If any typos, will correct when I have the time. Pl self rectify and read until then.
    Last edited by bis_mala; 5th November 2012 at 06:11 PM. Reason: tamil title
    B.I. Sivamaalaa (Ms)

  8. #267
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    அந்தணர் பார்ப்பனர்

    Quote Originally Posted by bis_mala View Post
    மேலிடுகையின் தொடர்ச்சி.
    நிற்க. ஏன் தொல்காப்பியனார் அந்தணர் என்னாது " பார்ப்பன" என்ற சொல்லைப் பெய்து பாடியுள்ளார் (அவர் பாடியது என்று வைத்துக்கொள்வோம் ) என்றும் கேட்கவேண்டும்

    யாரைப் போய்க் கேட்பது? அந்தணர் என்று போட்டிருந்தால், " அறுவகைப் பட்ட அந்தணர் பக்கமும்" என்று முதலிலும் மூன்றாவதிலும் அகரமே வந்து மோனையழகு மோர்குழம்புபோல் சுவை மிக்கு நின்றிருக்கும். இதைத் தொல்காப்பியம் செய்யவில்லை யாதலால், பார்ப்பனர் என்பதும் அந்தணர் என்பதும் நுட்ப வேறுபாடு உடைய சொற்கள் என்று தெரிகிறது. ஆனால் பதிற்றுப் பத்தில் : "ஆறுபுரிந்தொழுகும் அறம்புரி அந்தணர்" என்று வந்துள்ளது. ஆகவே குறிப்பிட்ட தொல்காப்பிய நூற்பா எழுந்த காலத்தில் இரு சொற்களும் சற்று வேறுபட்ட பொருள் உடையனவாய் இருந்தனவாதல் தெளிவு. அந்தணர் என்போர் அறவோர் (தட்சிணை கேட்காதவர்கள் என்க.) ஒன்றுக்குத் தக்க இணை எதிர்பார்ப்பவர்கள் - தக்க இணை - தக்கிணை - தட்சிணை - அதைத் தொழிலாய் மேற்கொண்டோர். பிற்காலத்து இவ்வேறுபாடு ஒழிந்துவிட்டதெனலாம். பொருளிலக்கணத்தில் "அந்தணர் வாகை" என்று வழங்கப்படவில்லை தொல்காப்பியக் காலத்தில்.


    heavy rains, internet too slow, any fault will edit later! Just enjoy whatever has come through to you,
    Last edited by bis_mala; 4th November 2012 at 02:46 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  9. #268
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Resolving opposing views in one stanza, பொருள்முரண்

    பல சுவைக் கவிதைகளில் வெகுகாலமாக ஏதும் எழுதவில்லை. இத்திரியை மீட்டெழுப்பும் முகத்தான் ஒரு கவிதையை இப்போது கண்டு இன்புறுவோம்.

    அந்தக் கவிதை:

    "என்னைச்
    சுற்றிப் பறந்த வண்டே சும்மா நீ போகாதே
    புத்தம்புது மலரின் தேனைச்
    சுவைத்துப் போவாயே!

    இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்
    அன்புக் கயிறிதுதான் அறுக்க
    ஆரா;லும் ஆகாதையா!"

    இவை பாரதிதாசனின் வரிகள் என்று தெரிகிறது.

    இதில் ஒரு பொருள்முரண் அழகைக் கவிஞர் புகுத்தியுள்ளார், முதல் வரியில் "தேனைச் சுவைத்துவிட்டுப் போய்விடு" என்று வண்டைப் பார்த்து மலர் (பெண்) சொல்கின்றது.நான் புத்தம்புது மலர் என்றுவேறு மலர் பேசிற்று.

    அடுத்த வரியில், நீ எங்கும் போய்விட முடியாது, என்பால் ஓர் அன்புக் கயிறு உன்னைப் பிணித்துவிட்டது, தேனைச் சுவைத்தபின் போய்ப்பாரேன் என்கிறது,மலர், மிகுந்த மனத்திடத்துடன். அன்புக் கயிற்றால் ஏற்பட்ட தைரியமே அது.

    வெளியிலுள்ள யாரும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது என்ற திடமும் பூவிடம் இருக்கிறது.

    சுவைத்துவிட்டுப் போவாய், ஆனால் நீ போவதெங்கே, நான் தான் உன்னைக் கட்டிப்போட்டுவிட்டேனே என்பதே இதிலுள்ளமுரணழகு.

    திருமணத்தில் கட்டப்பெறுவது தாலிக்கயிறு.பூ இங்கு வண்டுக்குக் கட்டுவது அன்புக்கயிறு.

    மணமகன் தாலிக்கயிற்றைக் கட்டினால், மணமகள் அன்புக்கயிற்றை அவனுக்குக் கட்டுகிறாள்.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #269
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    கம்ப நாடனின் இராமாயணம் பாடப்பெறு முன்னரே தமிழர் இராம சரிதையை நன்கறிந்திருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.தமிழில் இராமாயணங்களும் இருந்தன என்று தெரிகிறது. அந்த முழு நூல்களும் கிடைக்காவிடினும், சில செய்யுள்கள் உரையாசிரியர்களால் மேற்கோள்களாகக் கிடைத்துள்ளன. அப்படிக் கிட்டியவற்றுள் ஒரு செய்யுளை இப்போது காண்போம்.


    “மேலது வானத்து மூவா நகரும்
    கீழது நாகர் நாடும் புடையன
    திசைகாப் பாளர் தேயக் குறும்பும்
    கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் தந்த
    பல்வேறு விழுநிதி எல்லாம் அவ்வழிக்
    கண்நுதல் வானவன் காதலின் இருந்த
    குன்(று)ஏந்து தடக்கை அனைத்தும் தொழிலுறத்
    தோலாத் துப்பின் தாள்நிழல் வாழ்க்கை
    வலம்படு மள்ளர்க்கு வீசி வகுத்தனன்
    மாலை வெண்குடை அரக்கர் கோவே.

    இங்கு அரக்கர் கோ என்றது இராவணனை. தோல்வியறியாத போர்த் திறனுடைய அவனது அடி நிழலில் தங்கள் வாழ்க்கையை அமைத்துகொண்ட போர்மறவரோ பலராவர். தான் வென்ற விழு நிதியம் பலவற்றையும் அவன்
    அவர்கட்குப் பகிர்ந்து அளித்தான். அரக்கர் கோவாயினும் இரக்க குணம் படைத்தவனே அவன்.

    கம்பரில்போல் விருத்தச் செய்யுளாய் இல்லாமல் இஃது ஆசிரியத்தால் பாடப்பட்டுள்ளது. கம்பர்காலத்தில் ஆசிரியம் அருகிவிட்டதென்பர்.
    Last edited by bis_mala; 31st July 2013 at 07:11 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  11. #270
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    continued

    மேலது வானத்து மூவா நகரும்
    கீழது நாகர் நாடும் புடையன


    என்ற வரிகளை வாசித்துணர்வோம். மேலது வானத்து என்பதை வானத்து மேலது என்று மாற்றிக்கொள்ளவேண்டும். மூவா என்றால் மூப்பு அல்லது பழமை அக்டையாத, என்றும் பொருள் கூறலாம். புதுப்பிக்கப் படாத எந்த நகரும் பழமை அடைதல் இயற்கை. இங்கு தெய்வ நகர்பற்றிக் கூறுவதால், "இது காலத்தால் மாற்றமே அடையாத" என்று கொள்ளலாம்.

    மூ என்பது மூன்று என்ற எண்னையும் குறிக்கலாம். எனவே, மூவாம் = மூன்றாகும் என்று கொள்வதிலும் தவறில்லை. மூ ஆகும் = மூவாகும் = மூவாம் = மூவா என்று வரக்காணலாம். மூன்று நகர்களில், ஒன்று பூமியிலும், மற்றொன்று வானிலும் இன்னொன்று இறைவனுடைய இருப்பிடத்திலும் இருப்பதாகக் கூறுவர். இம்மூன்றும் வானத்து நகரங்களே ( aerial cities) என்று புலவர் கருதியிருக்கலாம்.
    தொடரும்.

    Notes


    மூன்று நகரங்கள் பற்றிய தொன்மக் கதை எக்காலத்தது, இப்பாடல் எக்காலத்தது என்று தெரிந்தாலன்றி, இவ்வரியின் பொருளை இடரின்றி உரைத்தலியலாது.

    மூவா - மூப்படைதல் இல்லாத என்று முடித்தல் எளிது.

    மூ ஆ நகர் என்று பிரித்து, "ஆ நகர்" வினைத்தொகை என்று கொள்ளலும் ஒன்று.
    Last edited by bis_mala; 3rd August 2013 at 12:29 PM.
    B.I. Sivamaalaa (Ms)

Page 27 of 29 FirstFirst ... 172526272829 LastLast

Similar Threads

  1. Replies: 72
    Last Post: 13th April 2009, 11:00 AM
  2. en kavithaikal
    By senthilnathan_r in forum Poems / kavidhaigaL
    Replies: 13
    Last Post: 3rd December 2006, 05:12 PM
  3. Seithikal Pala Kodi - Athellaam unmai alla
    By RR in forum Current Topics
    Replies: 26
    Last Post: 28th August 2005, 05:49 PM
  4. maRRa kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 161
    Last Post: 18th August 2005, 09:36 PM
  5. akil kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 54
    Last Post: 12th November 2004, 01:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •