Page 24 of 29 FirstFirst ... 142223242526 ... LastLast
Results 231 to 240 of 287

Thread: pala suvaik kavithaikaL.

  1. #231
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    முன் இடுகையின் தொடர்ச்சி.

    நல்லிசை = ஈகையினால் வந்த பழுதற்ற புகழ்.
    வரைவளி = மலையில் வீசும் காற்று. காண்டல் வேண்டினை = பார்க்க வேண்டுமென்றால்.
    கலவ மஞ்ஞை = கலாப மயில்.
    கூந்தல் உளர = நெடுந் தலைமுடி பரப்பிப்பறக்க
    மாரி = மழை. அன்ன = போல.

    ஆய் அண்டிரன்: அண்டிரன் என்ற சொல்லில் இருந்து ஆந்திரம் என்ற பெயர் வந்ததென்பர் ஆய்வாளர் சிலர்.ஆய் ஆண்ட மலை இப்போதையத் தமிழ் நாட்டிலில்லை என்று தெரிகிறது.
    If you know about this part of Tamil history, please post some details. Thanks.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #232
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    வாத்தியக் கருவிகளை மூட்டை கட்டிக்கொள்.......&#

    சங்கப் புலவரிற் சிலர், பல்வேறு வாத்தியங்கள் வாசிக்கும் திறமுடையோராக விருந்தனர். அத்தகைய ஒரு புலவரே "நெடும்பல்லியத்தனார்". இயம் என்ற பழந்தமிழ்ச்சொல், வாத்தியத்தைக் குறிப்பது. மணவிழாக்கள் போன்றவற்றில் வாழ்த்தி இசைக்கப்படுவது : வாழ்த்தியம்> வாத்தியம். பல்வேறு இயங்கள் இயக்கப்படின், அது பல்லியம் ஆகும். பல்+ இயம் = பல்லியம். பல்+இயம்+அத்து +அன்+ஆர் = பல்லியத்தனார். அத்து என்பது சாரியை. அன், ஆர் என்பன விகுதிகள்.

    பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை பல்லியத்தனார் பாடியுள்ளார். வா! நம் கோமான் வழுதியைக் கண்டுவரலாம்....என்று விறலியை அழைக்கின்றது இப்பாடல். தண்ணீரும் கஞ்சியும் உண்டு வாழும் இவ் ஏழை வாழ்க்கைக்கு விடை கொடுத்துவிடுவோம்.
    உன் வாத்தியக் கருவிகளை மூட்டை கட்டிக்கொள். வா
    என்கிறார் புலவர்.
    விறலியின் ஏழ்மை, அவள் அணிந்துள்ள ஒன்றிரண்டு வளையல்களினால் நன்கு புலப்படுகின்றதே! "சில் வளை விறலி!" என்று விளிக்கின்றார் புலவர்.

    புற நானூறு: பாடல் 64.

    இனிப் பாடலைப் பார்ப்போம். தொடரும் ...
    B.I. Sivamaalaa (Ms)

  4. #233
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    பாடலும் பொருளும்.

    முன் இடுகையின் தொடர்ச்சி.


    "நல்யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கி
    செல்லாமோதில் சில்வளை விறலி
    களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
    விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்ப
    பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
    குடுமிக் கோமான் கண்டு
    நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே."

    யாழ் சிறந்த இசைக்கருவியாதலின், " நல்யாழ் " எனப்பட்டது. ஆகுளி என்பது ஒரு சிறிய பறை. துயர நிகழ்வுகளின்போது வாசிக்கப்பட்டது போலும். (ஆகுலித்தல் = துயர்ப்படுதல் லி >ளி )
    பதலை = ஒரு புறமே வாசிக்கப்படும் ஒரு பெரிய பறை. செல்லாமோ தில் = விழைந்து போகமாட்டாமோ?

    களிறு+ கணம் = களிற்றுக்கணம்.களிறு = யானை. கணம் = படைப்பிரிவு, பொருத = போரிட்ட. கண்ணகன் = இடமகன்ற. பறந்தலை - போர்க்களம். விசும்பு = ஆகாயம். ஆடு = பறக்கின்ற. எருவை = பறவை; கழுகுகள். பசுந்தடி = பச்சை ஊன் அல்லது தசை. பகைப்புலம் மரீஇய = பகைவரை வீழ்த்திப்பெருவெற்றி பெற்ற. தகைப் பெருஞ் சிறப்பின் = தக்க உயரிய சிறப்பிற்குரிய. குடுமிக் கோமான் - முதுகுடுமிப் பெருவழுதியை; கண்டு = சென்று சந்தித்து ; நெடுநீர் புற்கை = உண்ணும் நீரும் கஞ்சியும்; நீத்தனம் = இனிமேல் நீக்கிவிடுவோம் ; வரற்கே = வருவதற்கே.

    will continue.
    B.I. Sivamaalaa (Ms)

  5. #234
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    "பசுந்தடி தடுப்ப..............."

    முன் இடுகைத் தொடர்ச்சி.

    "விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்ப"

    இந்த வரியைச் சற்று உற்றுநோக்கி ஆராய்வோம்.

    மாமன்னன் முதுகுடுமிப் பெருவழுதி, பெரும் படைபலத்துடன் போர்க்களத்துள் புகுந்தான். பகைவரை எதிர்கொண்டு,அவனும் அவன் படைவீரர்களும் அவர்களை வெட்டிவீழ்த்திக்கொண்டு முன்னேறுகின்றனர். அவர்களின் வாள்களினால் வெட்டுண்ட தசைத்துண்டுகள் வானோக்கி எழுகின்றன.அவ்வமயம் வானிலே பறவைகள் வட்டமிட்டுக்கொண்டுடிருக்கின்றன. அந்தப் பச்சைத் தசைத்துண்டுகள் போய், பறவைகளின் பறக்கும்பாதையில் குறுக்கிட்டுத் தடுக்கின்றன. பறவைகளும் தயங்கித் தடுமாறுகின்றன. இந்த நிகழ்வைப் படம்பிடித்துக் காட்டுகின்றார், பல்லியத்தனார்.

    எதிரி பிழைத்தோடும் எந்த வாய்ப்புக்கும் வழியில்லாதபடி வெட்டிச்சாய்க்கிறான், முதுகுடுமிப் பெருவழுதி, அவன்றன் படைமறவர் துணையுடனே.

    எதற்கும் அஞ்சாத, இரக்கமற்ற எம வாள்வீச்சு.

    வழுதி போரிட்ட பகைவர் யார்? சிலவேளைகளில் அவர்கள் மற்ற தமிழரசரின் படைவீரர்கள். வேறு சமயங்களில் வேற்றுமொழியினர் (மொழிபெயர் தேஎத்தர்). தேஎம் - தேயம். தமிழராயின் ஒன்றுபடுவோமே என்று யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதைக் கூறவும் வேண்டுமோ. தமிழரிடம் என்றும் ஒற்றுமை இருந்ததில்லை!!

    போருக்குப்பின் வந்த அமைதி நாட்களில், முதுகுடுமி, புலவரையும் இரவலர் பிறரையும் புரந்த பெருவள்ளல் என்பதை இப்பாடல் சொல்லாமல் சொல்கிறது.
    B.I. Sivamaalaa (Ms)

  6. #235
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    நன்கு அறிந்தவர்

    முன் இடுகைத் தொடர்ச்சி

    பல்லியத்தனார் முதுகுடுமிப் பெருவழுதியை நன்கு அறிந்தவர் என்றுதான் நாம் முடிவுகட்டவேண்டும். அவன் ஆட்சித் திறன், போர்த்திறன், தெய்வ வணக்க ஈடுபாடு முதலியவையும் அத்துடன் (பாடல் மூலம் நமக்கவர் அறிவிக்க விழைந்த) முன்மைப் பொருளாகிய அவன் வண்மை ( வள்ளன்மை)யும் அவருள்ளம் கவர்ந்த அவன் பண்புநலன்கள்.

    அவனை நன்கு அறிந்தவரென்றோம். எனவே " குடுமிக் கோமான்" என்ற அவர்தம் சொற்கள், அதனை நமக்குத் தெளிவுறுத்த வல்லவை.
    Last edited by bis_mala; 27th July 2011 at 05:19 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  7. #236
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    நீ இல்லாத பகற் பொழுதும் ஒரு பகலோ?

    புறப்புண் என்பது போரிட்ட வேந்தன் அல்லது போர்மறவன் நெஞ்சும் முகமும் நீங்கிய பிறவிடங்களில் புண்படுவது. அங்ஙனம் புண்பட்டவர் வடக்கு நோக்கி இருந்து உணவு முதலிய கொள்ளாமல் உயிர்விடுவர். இதுவே வடக்கிருத்தல் எனப்படும். . இது தமிழர் மரபு ஆகும்.
    சோழன் கரிகால் வளவனுடன் போரிட்ட சேரமான் பெருஞ்சேரலாதன் போரில் தோற்று இங்ஙனம் வடக்கிருந்தான். அது கண்டு பெருந்துயருற்றார் சங்கப் புலவர் கழாத்தலையார்.

    தம் துயரினை எப்படி வெளிப்படுத்துகிறார்?

    முழவுகள் (ஒரு வகைப் பறை) ஒலிக்க மறந்தன.
    யாழ்கள் பண்பாடுதலை மறந்தன.
    சுற்றத்தார் தேறலை (பானத்தை) மறந்தனர்.
    உழவர் செய்யும் ஒலிகளும் ஊர்மக்கள் விழாக்களும் அடங்கிவிட்டன. கொடுமையிலும் கொடுமையாய் அன்றோ இருக்கிறது.

    நீ இல்லாத பகற் பொழுதும் ஒரு பகலோ?

    ..................என்று அரற்றுகின்றார் புலவர்.

    புறம் பாடல் 65. இனி, பாடலைப் பாடிமகிழ்வோம்.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #237
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    மேல் இடுகையின் தொடர்ச்சி:

    கழாத்தலையாரின் பாடல்:

    மண்முழா மறப்பப், பண் யாழ் மறப்ப
    இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்பச்,
    சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப,
    உழவர் ஓதை மறப்ப, விழவும்
    அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப,
    உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து,
    இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
    புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்,
    தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
    புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்
    வாள் வடக்கு இருந்தனன்; ஈங்கு,
    நாள்போல் கழியல, ஞாயிற்றுப் பகலே!
    B.I. Sivamaalaa (Ms)

  9. #238
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    புலவர் பெயர்.

    இனி கழாத்தலையார் என்ற பெயரினைப் பார்ப்போம்.
    - தலை என்று முடியும் பல ஊர்ப்பெயர்கள் உள.
    குளித்தலை, சீத்தலை என்பன காண்க. தலை என்பது தலா என்று திரியும். "அகர்தலா" என்பதோர் எடுத்துக்காட்டு.

    கழைத்தலை என்பது கழாத்தலை என்று திரிந்ததோ? கழை = மூங்கில்.
    புழை > புழா (ம) (ஆலப்புழை > ஆலப்புழா) என்ற தமிழின் இனமொழிகளில் ஏற்படும் திரிபுகளும் நோக்கத்தக்கவை. கழா = கழுவாத என்றும் பொருள்படும்.எ-டு: கழாக்கால்,

    எங்ஙனமாயினும் இஃது ஒரு காரணப்பெயரே யன்றி இயற்பெயரன்று என்று நாம் கொள்ளலாம்.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #239
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    commentary on kazAththalaiyaar poem:

    எளிதாக்கும் பொருட்டு எச்சவினைகளை முற்றுகளாக்கிப் பொருள் கூறப்படும்.

    மண் முழா மறப்ப = மண் பூசப்படாததால், முழவு ஒலி செய்யாமற் கிடந்தது; இங்கு மண் என்பது, முழவின் ஒலிசெய்யும் தோலில் பூசப்படும் குழம்பு.

    பண் யாழ் மறப்ப = பண் பாடுவாரின்மையால் யாழ் வாசிக்கப்படாமல் கிடந்தது;

    இருங்கண் குழிசி = உள்ளே அகலமுடைய பானை;
    இரு - பெரிய; கண் = இடம்;

    கவிழ்ந்து இழுது மறப்ப = தயிர் இன்றிக் குப்புறக் கிடக்க; இழுது, பல பொருளுடைய சொல். தேன், நெய் என்றெல்லாம் பொருளுண்டாயினும், தயிர் என்று கொள்க;

    இழுது என்ற சொல் பின் சொல் ஆய்வில் கொணரப்படும்.

    சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப; (இதைச் சுற்றம் சுரும்பு ஆர் தேறல் மறப்ப என்று மாற்றுக )

    சுரும்பு = வண்டு; சுரும்பு ஆர் தேறல் = வண்டுகள் வந்து குடிக்க விழையும் பானம். சுற்றம்= ஊர்மக்களாம் உறவினர்.

    தொடரும்.
    Last edited by bis_mala; 3rd August 2011 at 10:08 AM. Reason: typo
    B.I. Sivamaalaa (Ms)

  11. #240
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    continuation of commentary on KazAththalaiyaar poem

    continued from last post


    உழவர் ஓதை மறப்ப- உழவில் ஈடுபடும் மக்கள் அதுபோது எழுப்பும் ஓசைகளைச் செய்யாதொழிந்தனர்;
    விழவும் அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப = நாட்டில் சிற்றூர்களின் மக்களும் விழாச் செய்தலை விட்டொழித்தனர்;
    உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து =புது நிலவு நிகழும் பெரு நாட் பொழுதிலே;
    இருசுடர் தம்முள் நோக்கி = கதிரவனும் அந் நிலவும் ஒன்றை ஒன்று எதிர்கொண்டு;
    ஒரு சுடர் புன்கண் மாலை மலைமறைந் தாங்கு = அவற்றுள் ஒன்று துயர்தரும் மாலைப்பொழுதில் மலைக்கப்பால் சென்று மறைந்ததுபோல; புன்மை+கண் =புன்கண்,
    தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த புறப்புண் நாணி = தன்னைப்போன்ற மன்னனுடன் போர்செய்கையில் உண்டான புறப்புண்ணுக்காக வெட்கி;
    மறத்தகை மன்னன் வாள் வடக்கு இருந்தனன்; = வீரம் பொருந்திய இம்மன்னன் வாளுடன் வடக்கு நோக்கி உயிர்விட அமர்ந்தனன்;
    ஈங்கு, நாள்போல் கழியல, ஞாயிற்றுப் பகலே! = இனிக் கதிரோன் தோன்றிடும் பகற்பொழுது பகலாகக் கழியுமோ? கழியமாட்டாதே !

    கரிகால் வளவன் நிலவென்றால், இங்கு சூரியன் ஆவான் சேரமான். சேரமான் (சூரியன்) மறைவதால் இனிப் பகல் இல்லை...இனி வரும் வெறும் பகல் ஒரு பகலாமோ?

    தோற்றாலும் செங்கதிரோன் செங்கதிரோனே .....


    நீங்கள் தோற்றால் உங்களுடைய கூட்டணியிலிருந்து உங்கள் நண்பர்கள் போய்விடுவர். கழாத்தலையார் அன்புறவு (விசுவாசம்)மாறாதவர் என்பது தெளிவு.

    I have not had the benefit of reading the previous learned commentaries on this poem recently or at the time of writing my own commentary. If you have read any and would like to add, you are welcome to point out differences.
    Last edited by bis_mala; 3rd August 2011 at 11:23 AM.
    B.I. Sivamaalaa (Ms)

Page 24 of 29 FirstFirst ... 142223242526 ... LastLast

Similar Threads

  1. Replies: 72
    Last Post: 13th April 2009, 11:00 AM
  2. en kavithaikal
    By senthilnathan_r in forum Poems / kavidhaigaL
    Replies: 13
    Last Post: 3rd December 2006, 05:12 PM
  3. Seithikal Pala Kodi - Athellaam unmai alla
    By RR in forum Current Topics
    Replies: 26
    Last Post: 28th August 2005, 05:49 PM
  4. maRRa kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 161
    Last Post: 18th August 2005, 09:36 PM
  5. akil kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 54
    Last Post: 12th November 2004, 01:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •