Page 22 of 29 FirstFirst ... 122021222324 ... LastLast
Results 211 to 220 of 287

Thread: pala suvaik kavithaikaL.

  1. #211
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Excellent

    சரியான அழகான விடை.

    தங்களுக்கு என் பாராட்டுக்கள்.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #212
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    oru kaNNan paattu

    pallavi


    ஆட வருவாயா கண்ணா - என்னோடுவிளை
    யாட வருவாயா கண்ணா?

    anupallavi

    ஓடையிலே நீதான் முன்னாள் - மலர்
    ஓடையிலே நீதான் முன்னாள் - மடவாரோடுவிளை
    யாடினதுபோலே இந்நாள், -- என்னோடுவிளை....

    charaNam.

    பசுவெண்ணெய் பாலாடை
    பழவகை தருவேனே
    பணியால் உடையால்
    அணிபுரிவேனே;
    இசையொடு பாடியும்
    இன்பம் செய்வேனே,
    எழில்சேர்ந்த பாலா, கோபாலா, --- என்னோடுவிளை.


    உடுமலை நாராயணக்கவி.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #213
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Erezupathu by Kamban

    கலைமகள் பாதங்களை வணங்குவோம்.


    திங்களின் மும்மாரிபெய
    செகத்திலுயிர் செழித்தோங்க
    கங்கைகுலா திபர்வயலிற்
    கருவீறத் தொழுகுலத்தோர்
    துங்கமக மனுநீதி
    துலங்கிடவை யம்படைத்த
    பங்கயன்றன் நாவிலுறை
    பாமடந்தை பதம்தொழுவாம்.

    நூல்: ஏரெழுபது.



    திங்கள் = ஒவ்வொரு மாதமும்; இன் = இனிய; மும்மாரி = மூன்றுமுறை பெய்யும் மழை; பெய = பெய்ய;

    கங்கை குலாதிபர் = கங்கை குலத் தலைவர்கள் ( பயிர்த் தொழிலுடையோர்); வயலில் = வயல்களில்; கரு= மழை மேகங்கள்; வீற = சிறப்படைய; தொழு குலத்தோர் = தொழும் குலத்தவரின் ( இறை நெறி யுடையோர்); துங்க = தூய; மக = பிள்ளைகளின்; மனு நீதி =( மனு வென்னும் பேரரசனினால் இயற்றப்பெற்ற ) மனு நீதி; துலங்கிட = சிறந்து விளங்க; வையம் படைத்த - உலகினைப் படைத்த; பங்கயன் தன் நாவிலுறை = பங்கயனின் (தாமரையில் பிறந்தோன்) நாவில் வாழ்கின்ற; பாமடந்தை = கலைமகள்; பதம் = பாதங்களைத், தொழுவாம் = வணங்குவோம்.

    செகத்தில் உயிர் செழித்தோங்க = உலகில் அனைத்து உயிர்களும் வளமுடன் சிறந்து வாழ்வனவாகுக.

    பங்கயன்< பங்கயம்= தாமரை.

    இன்னொரு பொருள்:

    பங்கன் + அயன்.
    = பங்க + அயன்
    =பங்கயன்.

    பங்கன் = தன் இடத்தைத் தன் மனையாளுக்குப் பகிர்ந்துகொண்டவன். அவளைத் தன் பங்காக உடையவன்.

    கரு என்பது முள்ளையும் குறிக்கும். ஆகுபெயராய், முள்ளை உடைய வேலியைக் குறித்து, வேலிகள் உயரவே, விளைச்சல் உயர்க என்றும் பொருள்படக்கூடும்.
    B.I. Sivamaalaa (Ms)

  5. #214
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    kangkai

    இனி மேற்கண்ட பாடலில் வரும் கங்கை என்ற சொல்லுக்கு வேறொரு பொருளும் காணலாம்.

    கங்கு = வரப்பு.
    ஐ = வியப்பு; அழகு; வியத்தகு அழகு.

    வரப்பால் அழகு பெற்ற குலத்தின் தலைவர்கள் என்று பொருள் விரிக்கலாம்.

    "கங்கை குல அதிபர்"
    B.I. Sivamaalaa (Ms)

  6. #215
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    thayumaanavar

    தாயுமான அடிகளின் ஒரு பாடலைப் பாடி இன்புறுவோம்:


    அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
    ஆனந்தம் பூர்த்தியாகி
    அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
    அகிலாண்ட கோடியெல்லாந்

    தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
    தழைத்ததெது மனவாக்கினிற்
    றட்டாமல் நின்றதெது சமய கோடிகளெலாம்
    தம் தெய்வம் எம் தெய்வம் என்

    றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
    எங்கணும் பெருவழக்காய்
    யாதினும் வல்லெவாரு சித்தாகி யின்பமாய்
    யென்றைக்கு முள்ளதெது மேல்

    கங்குல்பக லறநின்ற எல்லையுள் எதுஅது
    கருத்திற் கிசைந்ததுவே
    கண்டன எலாம் மோன உருவெளியதாகவும்
    கருதி அஞ்சலி செய்குவாம்.


    will continue..
    B.I. Sivamaalaa (Ms)

  7. #216
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    commentary on thaayumaanavar stanza

    தாயுமானவர் பாட்டுக்கு விளக்கம்.
    (மேற்கண்ட...)




    கடவுள் இல்லாத இடமில்லை; எனவே கடவுள் அங்கிருக்கிறான், இங்கிருக்கிறான் என்பதெல்லாம் அறிவு இன்னும் வளர வேண்டியுள்ள நிலையையே காட்டுகிறது. அவன் ஒளியாய் எங்கும் நிறைந்துள்ளான். இதை உணர்ந்து நிற்குங்காலை, மகிழ்வு அருளுடன் கலந்து நிறைவுதருகின்றது.


    உலகின் எல்லா உயிர்களும் நிலைபெறுமாறு விழைந்து, தன் அருள்வெளியிலே உயிருக்கு உயிராய்த் தழைத்து நிற்கின்றான். மனத்திலும் வாக்கிலும் இடையறவின்றி நிற்கின்றான். பல சமயத்தோரும் அவனை "எங்கள் தெய்வம்", "தங்கள் தெய்வம்" என்று உரிமைகோரித் தம்முள் வாதிட்டுக்கொண்டு கொண்டாடுவர்.

    அவனைப் பற்றிய மக்களிடையேயான பேச்சும் அவனிருப்ப தறிந்து நிகழ்த்தும் செயல்பாடுகளும் (மனித இனங்களிடையே) எண்ணிறந்து நீண்டு செல்வனவாகும். எல்லாப் பொருள்களிலும் அவன் நிற்கின்றான், ஆனால் அப்பொருள்களில் அவனே வலிமை மிக்க சித்துப் பொருளாய் உயர்ந்து மிளிர்கின்றான். இன்பமாய் என்றுமுள்ளவன்.

    பகலும் இரவும் என்ற பகுப்பில் அவனை அடக்கிவிட முடியாது.அவன் எல்லை அற்றவன். இரு பக்கங்களும் அவன் வெளிப்பாடுகளே ஆகும். ஒளியில் இருப்பதால் இருளில் இல்லை யென்றோ, இருளில் இருப்பதால் ஒளியில் இல்லை என்றோ ஆகிவிடாது. அவனே என் கருத்திற் கிசைந்தவன்.

    உருவெளியில் ( தோன்றும் வெட்டவெளியில்) காண்பதெல்லம் "மோன நிலை". உருத்தல் = தோன்றுதல். அவன் என்னிடம் மௌனமாகப் பேசுகின்றான் அல்லது தொடர்பு கொள்கின்றான்.

    அவனை நினைத்து வணங்குவோம்.

    Compare: [Yajurveda 40:9]


    கடவுள் என்ற தலைப்பில் ஒரு சிறு கட்டுரை எழுதவேண்டுமென்றால், தாயுமானவரைப் பாடவிட்டு நாம் பகர்ப்பு (காப்பி) செய்துகொண்டால், முழு மதிப்பெண்களும் பெறலாம்!!
    B.I. Sivamaalaa (Ms)

  8. #217
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Bharathithasan

    பாரதிதாசன்



    பாரதிதாசன் பாடிய பாடல்கள் பல. இவை, இயற்கை, தமிழ்,
    சிறுகாப்பியங்கள், குமுகம், நகைச்சுவை எனப்பல துறைகளில்
    விரிந்தடங்குவன. அவர் பாடல்களில் சில, அவர்தம் இதழிலு-
    ம் வெளியிடப்பட்டன என்று அறிகிறோம்.

    இங்கு காமராசர் என்னும் அரசியல் தலைவரைப் பற்றிப்
    பாடிய ஒரு பாடலின் பகுதியை இப்பொழுது காண்போம்.

    அமிழ்து பசித்தோர்க்கு அகப்பட்டது போல
    தமிழர்க்குக் கிடைத்த தரு காம ராசரே.
    அமைச்சுப் பதவிக்கு ஒப்பிய அருள் திறம்
    தமிழர் பலபல தலைமுறை மறப்பு அரிது!

    நொடிப் பொழுதேனும் நூன்முறை வழாமல்
    அடிப்படை நலங்கள் தமிழகம் அடைய
    உள்ளத்தால் பொய்யாது உழைக்கும் நீர் தமிழர்கள்
    உள்ளத்துள் எல்லாம் உள்ளீர் ஐயா

    செய்த நன்றி சிறிதும் மறவோம்

    வாழ்க காம ராசரே
    வாழ்க நும் ஆட்சி தமிழ் வாழ்தற் பொருட்டே.

    5.2.59
    முழுப்பாடலும் இங்குத் தரப்படவில்லை. குமாரசாமிப் புலவர்க்குப் பொன்னாடை போர்த்திய நிகழ்வின்போது பாடியது. ்


    இராஜாஜி அவர்களால் பொன்னாடை போர்த்திப்
    பாராட்டப்பெற்றவர். இலக்கியக் கலைக்கழகத்தின் ( சாகித்திய அகெடெமி ) பரிசும் பெற்றவர்
    பாவேந்தர் பாரதிதாசன்.
    B.I. Sivamaalaa (Ms)

  9. #218
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    yearning for social changes - Bharathithaasan

    இனி கைம்மைத் துயரடைந்த பெண்களின் நிலைக்கிரங்கிப் பாடிய
    ஒரு பாடலையும் பார்ப்போம்.

    ஆடவரின் காதலுக்கும் பெண்கள் கூட்டம்
    அடைகின்ற காதலுக்கும் மாற்றம் உண்டோ?

    பேடகன்ற அன்றிலைப்போல் மனைவி செத்தால்
    பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட்கின்றான்

    வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
    மணவாளன் இறந்தாற்பின் மணத்தல் தீதோ?

    பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
    பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?

    காதலுணர்வு இயற்கையானதால் அகற்குக் கதவடைப்புக் கூடாதென்கிறார் கவி. பாடும் தேனீக்கள், உலவும் தென்றல், பசிக்கும் வயிறென்பன இயற்கையைக் காட்டுவன. மாற்றம் = வேறுபாடு.

    வாடாத பூப்போன்ற =" இளமை மாறாத" எனற் பொருட்டு.


    கைம்மையிலும் இயற்கை உணர்விற்கோர் வடிகால் (மறுமணம்) வலியுறுத்துவது இப்பாடல்.
    B.I. Sivamaalaa (Ms)

  10. #219
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    கருத்தனைப் பொருத்துதல்

    திருவினுந் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த்
    தௌிவினுந் தௌிவதாய்ச் சிறந்த
    மருவினு மருவா யணுவினுக் கணுவாய்
    மதித்திடாப் பேரொளி யனைத்தும்
    பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய்ப்
    பூதலத் துறைந்த பல் லுயிரின்
    கருவினுங் கருவாய்ப் பெருந்தலம் புரந்த
    கருத்தனைப் பொருத்துதல் கருத்தே.


    இது மிக்க அழகு பொருந்திய பாடல். உரை வேண்டாத
    அளவுக்குப் பாடல் மிகவும் தெளிவாகவே உள்ளது இக்கடவுள்
    வாழ்த்துச் செய்யுள்.

    இறைவனைப் பற்றிய நம் கருத்துக்களுக்கு முழுதும் ஒத்துச்
    செல்கிறது இப்பாடல்.

    பாடியவர் யார் என்று தெரிந்தால் செல்லுங்கள்.
    B.I. Sivamaalaa (Ms)

  11. #220
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    பொருள்:

    மேற்கண்ட பாடலில் சில சொற்களுக்குப் பொருள்:

    மரு = வாசனை; மருவினும் மருவாய் = நறுமணங்களில் சிறந்த
    நறுமணமாய்; இனி, மனத்தால் மருவிடில் சிறந்ததொரு
    மணப்பொருளாய் என்று பொருள் கூறினும் இழுக்காது.
    மரு > மருக்கொழுந்து. இது ஒரு வாசனைப்பொருள்.

    மரு வென்பது மலையையும் குறிக்கும்.

    பொரு= உவமை. பொருவினும் பொருவாய் = உவமைக்கு
    உவமையாய் என்றபடி. தனக்குவமை இல்லாதான் இறைவன்
    என்றார் வள்ளுவனார். உவமை கூறவேண்டின், இறைவனுக்கு
    இறைவனே உவமை என்கிறார் கவி.

    புரந்த = காத்தருளிய. கருத்தன் = அனைத்துக்கும் முதலானவன்;
    இது இதுகாலை "கர்த்தர்" என்று உயர்வுப்பன்மையில் வழங்கும். ்
    மறுசொல்: கடவுள் என்பது.

    பொருத்துதல் - பொருந்துதல்; கருத்தன் என்ற பதம் நோக்கி
    வலித்தது. இறைவனைத் தொழுதல் என்பது பொருளாம்.
    B.I. Sivamaalaa (Ms)

Page 22 of 29 FirstFirst ... 122021222324 ... LastLast

Similar Threads

  1. Replies: 72
    Last Post: 13th April 2009, 11:00 AM
  2. en kavithaikal
    By senthilnathan_r in forum Poems / kavidhaigaL
    Replies: 13
    Last Post: 3rd December 2006, 05:12 PM
  3. Seithikal Pala Kodi - Athellaam unmai alla
    By RR in forum Current Topics
    Replies: 26
    Last Post: 28th August 2005, 05:49 PM
  4. maRRa kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 161
    Last Post: 18th August 2005, 09:36 PM
  5. akil kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 54
    Last Post: 12th November 2004, 01:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •