Page 21 of 29 FirstFirst ... 111920212223 ... LastLast
Results 201 to 210 of 287

Thread: pala suvaik kavithaikaL.

  1. #201
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Lord Murugan's Deviation and Author's Devotion


    இனிய உறக்கம்




    இக் கதிர்காம மாலை எனும் நூலின் காணப்படுகின்ற இன்னொரு பாடலை இப்போது பாடி இன்புறுவோம்.


    இன்னிமை யாகமனம் வேறுவைத்த நாள்முதலாய்
    சொன்னதை மறந்து தோகைதனைக் கடிநீர்
    மன்னீர் தனக்கு மல நீர் நிகராமோ?
    கண்டீரோ சொல்லும் கதிர்காம வேலோனே.


    இன் இமையாக = இனிய உறக்கமாக, வள்ளியை கனாக்கண்டுறங்கி ; அதனால்:

    மனம் வேறு வைத்த = பக்தர்களை மறந்து, வேறு வழிச்சென்று, அவள்மேல் மனம் இட்டுவிட்ட;

    நாள் முதலாய் = அந்த நாள் தொடங்கி;

    சொன்னதை மறந்து = அடியார்களுக்குக் கூறிய உறுதிமொழிகளை மறந்து;

    தோகைதனை = வள்ளியை;

    கடிநீர் கண்டீரோ = மணம்செய்து கொண்டீரோ;

    சொல்லும் = அடியேனுக்குக் கூறுங்கள்;

    மன் நீர் தனக்கு = நிலை நிற்கும் உமது தன்மைக்கு;

    மல நீர் நிகராமோ - நிலையற்ற, மணம் செய்துகொண்டு வாழும் இவ்வுலக இல்லற வாழ்வு
    ஒப்பாகுமோ?

    கதிர்காம வேலோனே = கதிர்காமத்தில் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானே, என்றவாறு.


    இமைத்தல் - உறங்குதல்; இமை - உறக்கம், முதனிலைத் தொழிற்பெயர்.

    அன்றி, இனிமை -" இன்னிமை" என்று எதுகை நோக்கி விரிந்தது எனினுமாம்.

    கடிநீர், மன்னீர், மலநீர் என்று முந் நீரோடும் விளையாடி யிருக்கின்றார் இப் பாவலர்.இச்சொல் விளையாட்டு இனிமையானது.

    இவ்வுலக வாழ்வில்தானே ஆன்மா மலம் பற்றித் தூய்மை இழக்கிறது? ஆதலின் இறைவனாகிய முருகனுக்கு அது தரமன்று என அஞ்சி, நிகராகுமோ என்கிறார். யான் மனிதனாதலின் நீர் சொன்னாலன்றி யான் அறியேன் என்பதுதோன்ற "சொல்லும்" என்று முடித்து, பெருமானை விளிக்கின்றார்.

    நிகராமோ, கண்டீரோ என்ற இரு வினாக்களும், "சொல்லும்" என்று இறைஞ்சியவாறு முடிந்தது.

    இந்நூலுக்கு உரை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இது என் உரை.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #202
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    principles of divinity.



    பரிபாடல்,


    (திருமாலின் பெருமை )



    அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
    அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்‘ என்னும்
    வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?
    ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட
    சேவல் ஊர்தியும், ‘செங் கண் மாஅல்! 60

    ஓ!‘ எனக் கிளக்கும் கால முதல்வனை;
    ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்;

    தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
    கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
    அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; 65

    வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
    வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
    அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,

    உறையும் உறைவதும் இலையே; உண்மையும்
    மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70

    முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
    பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே;

    பறவாப் பூவைப் பூவினோயே!
    அருள் குடையாக, அறம் கோலாக,
    இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும்
    B.I. Sivamaalaa (Ms)

  4. #203
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    principles of divinity.

    This inadvertent repeat is deleted.
    B.I. Sivamaalaa (Ms)

  5. #204
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    Friend's god; enemy's god.?

    (Ref to the above post)


    வரிகள் : அன்னவர் பட, அல்லா .................................................. ................... அறிந்தனம் :




    பொருள் :


    அமரர்க்கு முதல்வன், திருமால். அப்படியாயின் அமரர் அல்லாத அசுரர்க்கு யார் முதல்வன்? அசுரர்க்கும் அவனே முதல்வன். இறைவன் யாவர்க்கும் பொதுவானவன்,

    அன்னவர் =அத்தகையோர்; பட = வீழ, ஒழிய.

    அல்லா = நட்புடையோர் அல்லாத,

    அவுணர் = அசுரர்.
    நட்டோர் = நட்பு உடையவர். பகைவர் என்பதன் எதிர்ச்சொல்,
    இனைமை = ஒப்பீடு; இத்தன்மை.
    நற்கு = நன்கு (நல்+கு).
    அணர்தலை = மேலெழுந்ததலை.
    அரவு = பாம்பு.

    சேவல் ஊர்தி = சேவல் வாகனம்.

    செங்கண் மாஅல்= சிவந்த கண்களையுடைய கரிய மால். அதாவது கண்கள் சிவப்பு, உடல் கருப்பு.

    அறிந்தனம் = தெரிந்துகொண்டோம்

    இறைவனை, நம் நண்பனின் ( நட்பு நாட்டானின் ) கடவுள் என்றும் பகைவனின் கடவுள் என்றும் சொல்வது சரியன்று. அது இறைமரபு அன்று.

    தொடரும்..
    B.I. Sivamaalaa (Ms)

  6. #205
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    How do you invoke god

    கிளக்கும் அல்லது அழைக்கும் முறை

    (Ref to post , last but two: Posted: Fri Oct 15, 2010 9:18 am Post subject: principles of divinity. )
    Pl also see the last post, this is continuation)
    Ignore cancelled post.


    ஓ!‘ எனக் கிளக்கும் கால முதல்வனை;
    ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்;

    கடவுளை "ஓ தெய்வமே" என்றாலும் "ஏ தெய்வமே" என்று விளித்தாலும் ஒன்றுதான்.

    ஓ தெய்வமே எனில் தொடக்கத்தில் ஓ என்ற விளி இடைச்சொல்லும் இறுதியில் "ஏ" என்ற இடைச்சொல்லும் உள்ளன.

    அதேபோல், ஏ தெய்வமே என்றாலும் ஏ முதலும் ஏ இறுதியும் உள்ளன.

    கிளக்கும் = சொல்லும்.
    கிளத்தலின் = சொல்வதனால்.

    உலக மொழிகளில் ஓ என்றவிளியும் ஏ என்ற விளியும் உள்ளன.

    அதாவது,இறைவனை எப்படி அழைக்கிறீர் என்பது முக்கியமன்று. எந்த மொழியில் அழைக்கிறீர் என்பதும் முக்கியம் அன்று. அவனன்பைப்பெற அவன்பால் பற்றுக்கொள்வதே முதன்மையாகும்.

    Notes

    E > hey, hail, hare, etc. (Hail Mary! )
    O > ( O God! )
    Om, Aum, Amen, Ameen etc


    continued...
    B.I. Sivamaalaa (Ms)

  7. #206
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    god's attributes

    continued from last post.
    (Ref to post , Posted: Fri Oct 15, 2010 9:18 am Post subject: principles of divinity. )

    சிவப்பு எழுத்துக்களில் உள்ள பகுதியை (Oct 15) இறுதியில் கவனிப்போம்.

    இப்போது நாம் பொருள் காணும் வரிகள் இவை:


    உறையும் உறைவதும் இலையே; உண்மையும்
    மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70
    உறை = வீடு; உறைவது = குடியிருப்பது.
    இலை = இல்லை' மறவி = மறதி, குற்றம்.
    மாயம் =விந்தை; ஆர் = நிறைந்த; அனையை = அத்தகையோன் நீ.

    இறைவன் உறைவதற்கு , அல்லது தங்குவதற்கென்று எந்தத் தனியிடமும் இல்லை; அவன் எங்குமுள்ளவன். அவன் இருக்கின்ற தன்மையும் அன்பரை மறந்துவிடாத சிறப்பினை உடைமையும் விந்தையின் நிறைவேயாகும்; அத்தகையவன் நீ என்கிறார் புலவர் இறைவனை நோக்கி.

    பற்றி நிற்பாரைக் கைவிடுபவன் - மறப்பவன், அவனல்லன் என்பது நன்கு வெளிப்படுமாறு, "மறவி இல்" என்றார்.

    தொடர்வோம்.
    B.I. Sivamaalaa (Ms)

  8. #207
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    The three functions

    முத்தொழில் புரிவோன்


    continued from last post.
    (Ref to post , Posted: Fri Oct 15, 2010 9:18 am Post subject: principles of divinity. )

    முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
    பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே;
    இறைவன், முத்தொழில் புரிவோன். அவை, படைத்தல், காத்தல், அழித்தல் என்பன. இத்தொழில்களைப் புரியுங்கால், அவன் பிறவாத பிறப்பு இல்லை; அவனைப் பெற்ற மனிதத் தாயுமில்லை என்கிறார் புலவர்.

    முதல்முறை - படைத்தல். இங்ஙனமே பிற முறைத் தொழில்களுக்கும் கண்டுகொள்க.
    பறவாப் பூவைப் பூவினோயே!
    அருள் குடையாக, அறம் கோலாக,
    இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும்
    பறவா = நீங்காத; பூவை = பெண். இங்கு திருமாலின் துணைவியைக் குறித்தது. பூவினோயே -பூவிற் பிறந்தோனே, அல்லது தங்குவோனே.

    இரு நிழல் - இருவினை(களின்) தாக்கம். படாமை - படாதபடி. மூ = மூன்று அல்லது பழைய (மூத்த). நாம் பிறவா முன்பிருந்தே இருப்பவை ஆதலின், மூத்த என்றாலும் பொருத்தமே. மூதுலகு என்னும் வழக்கையும் நோக்குக.

    அருளைக் குடையாகவும் அறம் கோலாகவும் கொண்டு உலகைக் காப்பவன்.

    தொடர்வோம்.
    B.I. Sivamaalaa (Ms)

  9. #208
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    hindu god principles


    இறைவன் எங்கே


    பரிபாடல் தரும் இறை நெறிமுறைகள்.

    கீழ்வரும் பாடல்பகுதி மிக்கத் தெளிவாகவே உள்ளது.

    இருப்பினும் பொருள் :


    continued from last post.
    (Ref to post , Posted: Fri Oct 15, 2010 9:18 am Post subject: principles of divinity. )

    தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
    கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
    அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; 65

    வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
    வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
    அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,



    தீயினுள் தெறல் நீ -- நெருப்பில் உள்ளிருக்கும் வெம்மை நீயே;
    பூவினுள் நாற்றம் நீ = மலரில் உள்ளிருக்கும் மணம் நீயே;
    கல்லினுள் மணி நீ = கல்லின் உள்ளமைந்து கொண்டு அதை வைரம் முதலியவையாய் ஆக்குகின்ற ஒளி நீயே;
    சொற்களில் வாய்மை நீ; அறத்தில் அன்பு நீயே;
    மறம்= வீரம். அதில் மைந்து = வலிமை நீயே.
    இறை நூல்களில் உள் பொதிந்த மறைபொருள் நீயே.
    பூதத்து முதலும் நீ : பூதம் - ஐம்பூதங்கள்.


    நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
    கலந்த மயக்கம் உலக மாதலின் (தொல்.)


    இவற்றை உருவாக்கிய முதல்வன் நீயே.

    வெஞ்சுடர் = பகலோன், அளி - தண்மை.


    இறைவன் எங்கே இருக்கிறான் என்பதற்கு, இந்துமதம் தரும் விடை இந்தச் சங்கப் பாடலில் மிக்க அழகாகத் தொகுத்தளிக்கப் படுகிறது. அவன் எங்குமிருக்கிறான் என்பதை விரிவு படுத்தி, தீயினில் - பூவினில் - கல்லினில் - சொல்லினில், அறத்தில், மறத்தினில், வேதத்தில், அதன் உட்பொருளில், பூதத்தில், சூரியனில், நிலவில், சொல்லவேண்டுமெனில் அனைத்திலும் உள்ளே மறைந்திருக்கிறான். இதனை ஏனைக் கடவுட் கொள்கையினர் கண்டுகொண்டார்களில்லை. இறைவன் சொர்க்கத்தில் மட்டும் இருக்கிறான் என்று எண்ணலாகாது. அனைத்தையும் நிறுவி, ஆகிய அனைத்தையும் ( நிறுவி, ஆகும்=) நிருவாகம் செய்பவன் அவனே.

    அங்கிங்கெனாதபடி எங்கும் "பிரகாசமாய்" இருக்கிறான் என்பார் தாயுமான அடிகள்.
    பாலில் நெய்போல என்று சொன்ன அரும்பெரியார் யார்?
    B.I. Sivamaalaa (Ms)

  10. #209
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    anjchaik kaLaththu appan

    அஞ்சைக் களத்தப்பனே


    வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழித்தேன்
    விளங்குங் குழை காதுடை வேதியனே
    இறுத்தாய் இலங்கைக்கு இறையாளனைத்
    தலை பத்தொடு தோள் பல இற்றுவிழக்
    கறுத்தாய் கடல் நஞச அமுதுண்டு கண்டங்
    கடுகப் பிரமன் தலை ஐந்தினுள் ஒன்று
    அறுத்தாய் கடலங்கரை மேல் மகோதை
    அணியார் பொழில் சூழ் அஞ்சைக் களத்தப்பனே



    வெறுத்தேன் மனை வாழ்க்கையை = இல்லற வாழ்க்கையயின்பால் விருப்பம் ஒழிந்தேன்;
    விட்டொழித்தேன் = அவ்வாழ்க்கை தரும் உடலின்பத்தைப் பற்றிய மனவுணர்வுகளையும் அழித்துவிட்டேன்;

    விளங்குங் குழை காதுடை வேதியனே = ஒளி வீசும் காதணியை உடைய வேத மூல அறிஞனே;

    இலங்கைக்கு இறையாளனை = இலங்கையின் ஆட்சியாளனாகிய இராவணனை;

    தலை பத்தொடு தோள் பல இற்றுவிழ = பத்துத் தலைகளுடன் பல தோள்களும் முறிந்து விழும்படிக்கு;

    இறுத்தாய் = அவனுயிரை எடுத்து முடித்தாய்;

    கடல் நஞ்ச அமுதுண்டு = கடலில் தோன்றிய நஞ்சை அமுதுபோல உண்டு;

    கண்டங் கருத்தாய் = கழுத்துக் கறுத்தாய்;

    கடுக = விரைந்து;

    பிரமன் தலை ஐந்தினுள் ஒன்று அறுத்தாய் = ...;

    கடலங்கரை மேல் மகோதை = கடலின் அழகிய கரையில் அமைந்துள்ள மகோதை என்னும் உயரிய நகரில்;

    அணி ஆர் பொழில் =அழகு நிறைந்த சோலையில்; ( சூழ் = சூழ்ந்த,)

    அஞ்சைக் களத்து அப்பனே = அஞ்சைக் களத்தில் கோயில்கொண்டிருப்போனே என் தந்தையே;

    என்றவாறு.

    யார் பாடியது?
    B.I. Sivamaalaa (Ms)

  11. #210
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like

    Re: hindu god principles

    Quote Originally Posted by bis_mala

    இறைவன் எங்கே


    பரிபாடல் தரும் இறை நெறிமுறைகள்.

    கீழ்வரும் பாடல்பகுதி மிக்கத் தெளிவாகவே உள்ளது.

    இருப்பினும் பொருள் :


    தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
    கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
    அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; 65

    வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
    வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
    அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,



    பாலில் நெய்போல என்று சொன்ன அரும்பெரியார் யார்?

    “கறந்த-பாலுள் நெய்”

    ...என பரமனைக் காட்டியவர் :



    நம்மாழ்வார்



    எதுவே-ஆகக் கருதும் கொல் இம்மா-ஞாலம் பொறை தீர்ப்பான்
    மதுவார் சோலை உத்தர-மதுரைப் பிறந்த மாயனே

    பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீ இன்னே
    சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவும்-ஆய பெருமானே
    கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டுகோள்
    இறந்து-நின்ற பெருமாயா உன்னை எங்கே காண்கேனே.?.!!!



    திருவாய்மொழி : 08-05-10


    ..

Page 21 of 29 FirstFirst ... 111920212223 ... LastLast

Similar Threads

  1. Replies: 72
    Last Post: 13th April 2009, 11:00 AM
  2. en kavithaikal
    By senthilnathan_r in forum Poems / kavidhaigaL
    Replies: 13
    Last Post: 3rd December 2006, 05:12 PM
  3. Seithikal Pala Kodi - Athellaam unmai alla
    By RR in forum Current Topics
    Replies: 26
    Last Post: 28th August 2005, 05:49 PM
  4. maRRa kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 161
    Last Post: 18th August 2005, 09:36 PM
  5. akil kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 54
    Last Post: 12th November 2004, 01:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •