Page 25 of 29 FirstFirst ... 152324252627 ... LastLast
Results 241 to 250 of 287

Thread: pala suvaik kavithaikaL.

 1. #241
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Oct 2005
  Location
  My
  Posts
  1,789
  Post Thanks / Like

  commentary on KazhAththalaiyAr poem continuued

  வைத்து என்ற எச்ச்ச்சொல், வச்சு, வைத்தாள் > வச்சா(ள்) என்றெல்லாம் பேச்சுவழக்கில் தகரம் சகரமாகத் திரிதல் கண்டுகொண்டவர்க்கு, ஓதை > ஓசை என்ற திரிபு எளிதிலறியக்கூடியதே. இவைபோலும் திரிபு பல.

  நிலவு > நிலா என்பதுபோல,விழவு > விழா. உவவு>உவா. முழவு (பறை) > முழா.

  அகலுள் (இதன் சொல்லாக்கப் பொருள் அகலம்). அகன்ற (அகண்ட) இடம்: நாடு, வீதி முதலியவை குறிக்கும் சொல். கட > கடவுள் என்பதுபோல, அகல் > அகலுள். உள் என்பது விகுதி.

  சிறு+ ஊர் = சீறூர் ஆகும். இது, சிறு + ஊர்= சிற்றூர் என்றும் உருக்கொள்ளும்.
  B.I. Sivamaalaa (Ms)

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 3. #242
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Oct 2005
  Location
  My
  Posts
  1,789
  Post Thanks / Like
  வாரார் தோழி

  ஔவையாரின் பாடல், ( குறுந்தொகை, பாடல் 200).

  பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்
  மீ மிசைத் தாய வீஇசுமந் துவந்து
  புனலும் இழிதரும் வாரார் தோழி;
  மறந்தோர் மன்ற மறவா நாமே
  கால மாரி மாலை மா மழை
  இன்னிசை உருமின முரலும்
  முன்வரல் ஏமம் செய்தகன்றோரே


  பெய்த குன்றத்து = மழை பொழிந்த சிறு மலையில்,
  பூ நாறு = மலர் மணம் கமழும்;
  தண் கலுழ் = தண்மையான கலங்கலின்;
  மீ மிசைத்தாய = மேலதாக;
  வீஇ சுமந்துவந்து = மலர்களைச் சுமந்துகொண்டு வந்து;
  புனலும் இழிதரும் = வெள்ளமும் கீழிறங்கியோடும்;
  மாலை மா மழை = மாலையிற் பெரு மழையைக் கொணர்ந்த;
  கால மாரி = பருவ முகில்கள்;
  இன்னிசை உருமின முரலும் = உருமி இனிய ஒலியை ஏற்படுத்தும்;
  மறந்தார் = தலைவர் என்னை மறந்தார்;
  மன்ற மறவா நாமே = ஆனால் நாமோ சிறிதளவும் மறக்கவில்லை.
  முன்வரல் ஏமம் செய்தகன்றோரே = கார்மழையும் வெள்ளமும் வருமுன்பே வந்துவிடுவேன் என்று சொல்லிச் சென்றவர்.

  தலைவியின் ஏக்கம் நமக்குத் தெளிவுறுத்தும் அழகிய பாடல்.
  Last edited by bis_mala; 13th September 2011 at 09:19 PM.
  B.I. Sivamaalaa (Ms)

 4. #243
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Oct 2005
  Location
  My
  Posts
  1,789
  Post Thanks / Like
  குறுந்தொகை : 200 - ஔவையார் - தொடர்ச்சி.

  இயற்கை நிகழ்வுகளை இங்கு ஔவைப்பாட்டி மிக்க நயமுடன் கையாண்டிருக்கிறார்.

  சொன்ன சொல்லை மறந்துவிட்டுக் காணமற் போய்விட்ட காதலனை எண்ணிக் கலங்கிய காதலியர் முன் காலங்களில் மிகப்பலர். அவர்கள் அழுத கதைகளைப் பல மொழி இலக்கியங்களிலும் காணலாம். தொலைத் தொடர்பு ஏதுமற்ற பழங்காலத்தில் இப்படிக் கலங்குவதைத் தவிர, காதலியருக்கு வேறுவழி எதுவும் இல்லை.

  பருவ காலத்திற்கேற்பக் குன்றிலிருந்து இழிந்தோடும் ஓடை நீர், உரியபடி வந்திடத் தவறவில்லை. அழகிய பூக்களைச் சுமந்துகொண்டு, மணம் வீசிக்கொண்டு அது மலையிலிருந்து கீழிறங்குகிறது. காலத்தில் வர மறவாத ஓடை அது.

  புனல் நீர் கீழிறங்குதல் போலக் காதலன் மனம் இறங்கவில்லை. இரங்கவுமில்லை. ஓடை காலாகாலத்தில் ஓடிவந்தது போல, அவன் ஓடி வரவுமில்லை. மீண்டும் தலைவியை வந்து காணும் எண்ணம் அவனுக்கிருந்தால் தானே! அது நன்கு தெரிய, "வாரார் தோழி" என்கிறாள் தலைவி.

  கார் காலம் வந்தவுடன், அந்த மேகங்கள் மேலூர்ந்து வந்து , மழை உடன் பொழியாவிட்டாலும் உருமியாவது தாமிருப்பதைக் காட்டுகின்றனவே! காதலன் அப்படித் தொலைவிலிருந்து செவியில் வந்து சேரும்படி ஒலிக்குறிப்புகள் எதையும் அனுப்பவில்லை. தோழியோ வேண்டியவர்கள் பிறரோ கண்டோ கேட்டோ சொல்லும்படியான எந்தச் சேதியும், கார்முகில் வந்ததைப் போல காலத்துடன் வரவில்லை.

  அதைப்போல, இதைப்போல என்றெல்லாம் வெளிப்படையாகச் சொல்லாமல், இயற்கை நிகழ்வுகளை இலைமறை காயைப் போல வைத்து, ("சூசகமாக" எனலாமா?) சொற்களை இசைத்துப் பாடியுள்ளார் நம் பாட்டி.

  அவர் கவியழகே அழகு!
  B.I. Sivamaalaa (Ms)

 5. #244
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Oct 2005
  Location
  My
  Posts
  1,789
  Post Thanks / Like
  குறுந்தொகை, பாடல் 200, - ஔவையார் - தொடர்ச்சி.

  பெய்த, மாலை மாமழை, என்ற சொற்கள், "மாலை பெய்த மா (பெரிய) மழை" என்று கூட்டிப் பொருள்கொள்ளவேண்டியவை. தலைவியின் வீடு, குன்றத்திலோ அதற்கருகில் சாரலிலோ இருந்தது. அவள் வீட்டினண்டை உள்ளது அந்த ஓடை. அவள் அங்கு தோழியுடன் ஏங்கி நிற்கின்றாள்.

  மழை பொழிந்தது நேற்று அல்லது அதற்கு முந்தின மாலை. நேற்று மாலை என்பதே மிகப்பொருத்தம். இப்போது கலங்கலாக ஓடி வந்துகொண்டிருக்கும் ஓடை, அணிமைக்காலதிற் பெய்த மழையைக் காட்டுகின்றது. நீர் இன்னும் தெளியவில்லை.

  அந்த நீர் தலைவியின் மனம் போலவே மிகவும் தண்மையானது. கலங்கலாக இருப்பது, தலைவியின் கலங்கிய உள்ளத்தையும், "தண்" என்பது, 'ஆனாலும் தலைவிக்கு அவர்மேல் கோபம் ஏதும் இல்லை' என்பதையும் பதிவு செய்கின்றன. அது கலங்கல் தான், ஆனால் தண்மையான கலங்கல். அதனால், அவள் அவரை வையவில்லை. அவர் வரமாட்டார் என்று மட்டும் நாகரிகமாகச் சொல்கிறாள்.

  முன் பொழிந்த மழை, அவர் முன் பொழிந்த அன்பு மழையைக் கொண்டுவந்து நிறுத்துகிறது. இப்போது மழை இல்லை என்றாலும், வானத்தில் எழும் உருமல், மீண்டும் மழையும் வரும், அவரின் அன்பு மழையும் வரும் என்ற நம்பிக்கையை ஊட்டவல்லது. அதனால், "மறந்தோர்" (=மறந்தார்) என்று உயர்வுப் பன்மையில் கூறுகிறாள். (உயர்வுப் பன்மை = மரியாதைப் பன்மை). தோழிக்கும்தான் கவலை. ஆகையால், அவளையும் உட்படுத்தி,மறவா நாமே என்று பன்மையில் கூறுகிறாள்.
  Last edited by bis_mala; 16th September 2011 at 09:14 PM.
  B.I. Sivamaalaa (Ms)

 6. #245
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Oct 2005
  Location
  My
  Posts
  1,789
  Post Thanks / Like
  குறுந்தொகை, பாடல் 200, ஔவையார் (தொடர்ச்சி).


  இன்னிசை:

  முகில்களின் உருமுதல், இன்னிசை ஆகின்றது. எதிர்காலத்தில் மழை வரும், அவர்தம் அன்புமழையும் வரும் என்ற நம்பிக்கையினால்.

  முன்வரல் ஏமம்:

  சில குறிப்பிட்ட நிகழ்வுகளின்முன் வந்துவிடுவேன் என்று கூறும் பாதுகாப்புச் சொற்கள்.

  மீ மிசைத்தாக:

  மீ - மேல்; மிசை = மேல். ஆக மேலே என்பது.
  floating on the "water surface" and clearly visible.
  (Things can float in water at different levels. This floating was right at top level)

  ஓடையில் ஓடிவரும் மலர்கள், மணமுள்ள நன்மலர்கள். கசங்கி அமிழ்ந்துவிடாமல் மேலாக மிதந்துகொண்டு வருகின்றன. தலைவர் வருவார், வாழ்வு மணம்பெறும் என்பதன் நம்பிக்கை அறிகுறி.

  தலைவியின் வாழ்வு மணம்பெறுக என்பதே நம் வேண்டுதலுமாம்.

  ஔவையாரின் பாடலை மீண்டும் படித்து மகிழுங்கள்.
  Last edited by bis_mala; 17th September 2011 at 07:42 AM. Reason: correct typos and added expln.
  B.I. Sivamaalaa (Ms)

 7. #246
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Oct 2005
  Location
  My
  Posts
  1,789
  Post Thanks / Like
  கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி,
  பெருந்துறை வந்த இரும்புனல் விரும்பி
  யாம்ஃது அயர்கம் சேறும் தான் அஃது
  அஞ்சுவதுடையள் ஆயின் வெம்போர்
  நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
  முனையான் பெருநிரை போலக்
  கிளையொடும் காக்க தன் கொழுநன் மார்பே.
  ----குறுந்தொகை 80.

  இதுவும் ஔவையார் பாடல்.

  தலைவியை யன்றிப் பிற பெண்டிர்பால் தொடர்பு ஏற்படுதலைக் காத்துக்கொள்ளாத தலைவனுக்கு, பிற காதலியரால் விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்பட்டு விடும். இத்தகைய பிற பெண்ணினைப் பழித்த தலைவியை அப் பெண்ணும் பழிப்பள்.
  இதனைச் சுவைபடைக் கூறுகிறது இப்பாடல்.


  [இப்பாடலுக்கு நான் எழுதியவை, இணையத் தொடர்பு அறுந்ததால், காணாமற் போயின. மீளுருவாக்கி வரைந்துள்ளேன்.

  வேண்டிய மாற்றங்கள் செய்து, மறு இடுகை செய்வேன்
  Last edited by bis_mala; 24th October 2011 at 06:49 PM.
  B.I. Sivamaalaa (Ms)

 8. #247
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Oct 2005
  Location
  My
  Posts
  1,789
  Post Thanks / Like

  muththoLLAyiram

  இனி முத்தொள்ளாயிரம் என்ற இனிய சங்க நூலிலிருந்து ஒரு சுவைமிக்க பாடலைக் காண்போம்.

  மாலை விலைபகர்வார் கிள்ளிக் களைந்தபூ

  சால மிகுவதோர் தன்மைத்தாய் --- காலையே

  வில்பயில் வானகம் போலுமே வேல்வளவன்

  பொற்பார் உறந்தை அகம்.


  இதன்பொருள்:

  வேல்வளவன் = வேலையுடைய சோழமன்னன் (தலை நகரமான )

  உறந்தை அகம் = உறையூர் என்னும் பெயரிய நகரின் உள்ளே;

  மாலை விலைபகர்வார் = மாலை நேரத்தில் பூ விற்கும்போது விலை கூறுகிறவர்கள்,


  கிள்ளிக் களைந்த பூ = கிள்ளி வீசிய மலர்கள்,

  சால மிகுவதோர் தன்மைத்தாய் = குவிந்து கிடக்கும், கூடுதலான அளவின ஆனதினாலே ;

  காலையே - காலை நேwரத்தில்,

  வில்பயில் வானகம் போலுமே = வானத்து (வான-)வில்லைப் போலே
  தோன்றும்.

  சிறந்த வணிக நகரம் உறையூர் அதன் சுற்று வட்டாரங்களும் வளமுடையன என்பது கருத்து.  பொற்பார் என்பதை இரு வகையாய்ப் பிரித்துப் பொருள் சொல்லலாம்.

  பொற்பு + ஆர் = (அழகு மிக்க).

  பொன் +பார் (பொன்னுலகம், அதுபோன்ற ).
  Last edited by bis_mala; 9th March 2012 at 07:22 AM.
  B.I. Sivamaalaa (Ms)

 9. #248
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Oct 2005
  Location
  My
  Posts
  1,789
  Post Thanks / Like
  இதுவும் முத்தொள்ளாயிரப் பாடலே, அழகிய வெண்பா.


  சுடரிலைவேல் சோழன் பாடலம் ஏறி

  படர்தந்தான் பைந்தொடியார் காண ---- தொடர்புடைய

  நீல வலையில் கயல்போல் பிறழுமே

  சாலேக வாயில்தொறும் கண்.


  சுடரிலைவேல் சோழன் பாடலம் ஏறி = ஒளி வீசும் இலை போல் முனையுள்ள வேல் கையிலெடுத்த சோழன் குதிரைமீது ஏறி,

  படர்தந்தான் பைந்தொடியார் காண = ஊர்வலம் வந்தான் வளையல் அணி மகளிர் காணும்படியாக;


  தொடர்புடைய - நீண்ட;

  நீல வலையில் = மீன் பிடிக்கும் வலையில்


  சாலேக வாயில்தொறும் கண். = சாலேக வாசல்தோறும் கண்கள்.;

  கயல்போல் பிறழுமே -= மீன்கள் போல் பிறழும்;


  சால ஏக = சாலேக என்று எதுகை நோக்கித் திரிந்தது.
  சோழன் ஊர்வலம் நன்றாக ஓர் அணிவகுப்புப் போல சென்றது என்பது இதன்மூலம் அறிந்தோம்.


  சாலேகம் என்பது சன்னலையும் குறிக்கக்கூடும். அப்படி எடுத்துக்கொண்டால், சாலேக வாயில் என்பது "சன்னல் வாயில்" என்று கோடல் கூடும்.
  Last edited by bis_mala; 29th June 2012 at 11:03 AM. Reason: typos corrected
  B.I. Sivamaalaa (Ms)

 10. #249
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Oct 2005
  Location
  My
  Posts
  1,789
  Post Thanks / Like
  தமிழில் நிகண்டுகள் பல, திவாகரம், பிங்கலம், சூடாமணி, உரிச்சொல்,கயாதரம், பாரதி தீபம், ஆசிரியம், அகராதி, கைலாசம் பொதிகை என்பன
  நிகண்டுகளின் பெயர்கள்.

  இவற்றுள் ஒன்றிலிருந்து ஒரு பாடலைச் சுவைப்போம்.

  பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்
  பகலே நாள் ஒரு முகூர்த்தம் பகலவன் நடுவே தேக
  மகரமே சுறா பூந் தாதாம் வசி கூர்மை வசியம் வானே
  அகம் மணம் மனையே பாவம் அகலிடம் உள்ளும் ஆமே.

  இது சூடாமணி நிகண்டுப் பாடல்.

  பழங்காலத்தில் அகரவரிசைகள் இல்லை. இதுபோன்ற பாடலைக்கொண்டே பொருள் அறியவேண்டும்.
  Last edited by bis_mala; 11th March 2012 at 07:24 PM.
  B.I. Sivamaalaa (Ms)

 11. #250
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Oct 2005
  Location
  My
  Posts
  1,789
  Post Thanks / Like

  உலகம் நல்லதாக இருக்கவேண்டுமெனில்

  இனி, ஒளவையாரின் ஒரு புறப்பாடலைப் படித்து இன்புறுவோம் வாருங்கள்.

  இதில், உலகம் நல்லதாக இருக்கவேண்டுமெனில், ஆண்கள் நல்லோராக இருக்கவேண்டும் என்று பாட்டி கூறுகின்றாள்.ஆண்மக்கள் கோணல் வழிகளில் செல்வராயின், அப்புறம் உலகம் எங்ஙனம் ந்ல்லுலகமாய் இருப்பது. ஆண்களே பெண்டிருக்கும் தீங்கிழைத்துவிடுகின்றனர் என்பது தெளிவு. பெண்கள் தீயவழிகளில் சென்றிருப்பராயின், அதற்கும் ஒரு கேடுறும் ஆடவனே பின்புலத்தில் நின்றிருப்பன் என்று நாம் சொல்லலாம், பெரும்பாலும் இக்கருத்து பிழையாகிவிடாது,

  நாடா கொன்றோ காடா கொன்றோ
  அவலா கொன்றோ மிகையா கொன்றோ
  எவ்வழி நல்லவர் ஆடவர்
  அவ்வழி நல்லை வாழிய நிலனே.

  புறம் 187.

  தொடர்வோம்.
  B.I. Sivamaalaa (Ms)

Page 25 of 29 FirstFirst ... 152324252627 ... LastLast

Similar Threads

 1. Replies: 72
  Last Post: 13th April 2009, 11:00 AM
 2. en kavithaikal
  By senthilnathan_r in forum Poems / kavidhaigaL
  Replies: 13
  Last Post: 3rd December 2006, 04:12 PM
 3. Seithikal Pala Kodi - Athellaam unmai alla
  By RR in forum Current Topics
  Replies: 26
  Last Post: 28th August 2005, 05:49 PM
 4. maRRa kavithaikaL
  By Oldposts in forum Poems / kavidhaigaL
  Replies: 161
  Last Post: 18th August 2005, 09:36 PM
 5. akil kavithaikaL
  By Oldposts in forum Poems / kavidhaigaL
  Replies: 54
  Last Post: 12th November 2004, 12:49 AM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •