Page 119 of 128 FirstFirst ... 1969109117118119120121 ... LastLast
Results 1,181 to 1,190 of 1276

Thread: SIMBHU - Little Super Star

  1. #1181
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    அடப்பாவிகளா, நானும் இதைத்தானே 20 ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்...!

    பாட்டு கேட்க நேரமே இல்லை கடந்த நான்கு நாட்களாக மாற்றி மாற்றித் தொலைபேசி அழைப்புகள். சிம்பு-அனிருத் தொடர்புள்ள பாடல் குறித்து என் கருத்து வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். உண்மையில் எனக்கு ஒருவாரமாக இரவு பகல் பாராத வேலை. வீட்டுக்கும், பணியிடத்துக்குமாக ஓடிக்கொண்டே இருக்கிறேன். இதில் எங்கே போய் இதுபோன்ற பாடல்களையெல்லாம் கேட்பது ?

    பாட்டு கேட்க நேரமே இல்லை கடந்த நான்கு நாட்களாக மாற்றி மாற்றித் தொலைபேசி அழைப்புகள். சிம்பு-அனிருத் தொடர்புள்ள பாடல் குறித்து என் கருத்து வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். உண்மையில் எனக்கு ஒருவாரமாக இரவு பகல் பாராத வேலை. வீட்டுக்கும், பணியிடத்துக்குமாக ஓடிக்கொண்டே இருக்கிறேன். இதில் எங்கே போய் இதுபோன்ற பாடல்களையெல்லாம் கேட்பது ?

    இதில் நான் என்ன சொல்ல என்ன இருக்கு ஆனால் ஊடகங்கள் துரத்த ஆரம்பித்த பின்பு கேட்டு வைத்தேன். அப்புறம்தான் தோன்றியது, இதில் நான் கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது ? என்று. இப்படியெல்லாம் எழுதலாமா, பெண்களை இழிவுபடுத்தலாமா, சமூக சீரழிவு இத்யாதி இத்யாதி....

    அடப்பாவிகளா அடப்பாவிகளா, நானும் இதைத்தானே இருபது ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், இப்போதுதான் ஏதோ புதிதாகக் கண்டுபிடித்தது போல பொங்குகிறார்களே என்று..... நான் சொன்னது மட்டுமல்ல, செய்தே காட்டியிருக்கிறேன். வெறும் வாய்ப்பேச்சில்லை, உதார் விடவில்லை, வாயால் வடை சுடவில்லை, செயலால் காட்டியிருக்கிறேன்.

    நீண்ட நெடிய 18 ஆண்டுகள். ஆபாசமாக எழுதமாட்டேன், அருவருக்கத்தக்க வரிகள் தரமாட்டேன், சமூகத்தைக் கெடுக்கும் பாடல் எழுத மாட்டேன்.... பாடல்கள் மட்டுமல்ல , காட்சிகள், வசனங்கள், நடிகர்களின் உடல்மொழி எதிலும் ஆபாசம் கூடாது என்று வலியுறுத்தி வந்திருக்கிறேன். இதற்காகத் தனிப்பட்ட முறையில் எனக்குப் பல இழப்புகள் இருந்திருக்கலாம், ஆனால் என் ' கலை, கலைஞர்களின் பொறுப்புணர்வு ' தொடர்பான நிலைப்பாட்டில் எந்த சமரசமுமில்லை. நேற்று இப்படித்தான், இன்று இப்படித்தான் , நாளையும் இப்படித்தான்... எனவே, நானே கருத்தாக இருக்கும்போது, தனியாக இது குறித்துக் கருத்து வேறு சொல்ல வேண்டுமா ?...

    சரி போகட்டும், நீங்கள் என்ன விரும்பினீர்களோ அதுதானே கிடைத்திருக்கிறது ?? அப்புறம் ஏன் இந்தப் 'பொங்கல்'? நல்ல பாடல்கள் வரவேண்டும் என்று இந்த சமூகம் விரும்பியிருந்தால், தாமரை போல் இத்தனை நேரம் ஒரு பத்துப்பேராவது வந்திருக்க வேண்டாமா? ' தாமரை சமூகத்தைச் சீரழிக்காத, ஆபாசமற்ற நல்ல பாடல்களை எழுதி வெற்றி பெற்றிருக்கிறார், நானும் அவரைப் பின்பற்றி எழுதப் போகிறேன்' என்று ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவர்கள் எத்தனை பேர்? கை தூக்குங்கள் பார்க்கலாம்...

    இல்லையல்லவா, ஒருவர்கூட இல்லையல்லவா ?? அப்புறமென்ன, ' ஐயோ திரைப்படப் பாடல்கள் சீரழிக்கின்றன ? ' என்ற ஒப்பாரி ?? உண்மை என்னவெனில் தாமரைகள் இந்த சமூகத்திற்குத் தேவையில்லை. தாமரைகள் ' பிழைக்கத் தெரியாதவர்கள், காலாவதியாகிப் போனவர்கள், Museum pieces'... நல்லனவற்றைக் கொண்டாடத் தெரியாத, பாதுகாத்து வைத்துக் கொள்ளாத சமூகத்திற்கு அல்லன தானே கிடைக்கும் ??U asked for it, U got it, அப்புறம் ஏன் புலம்ப வேண்டும் ?

    இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தானே சிம்புவும், அனிருத்தும் அரசியல், ஆன்மிகம், இலக்கியம், குடும்பம், கல்வித்துறை, நீதித்துறை, ஊடகங்கள்..... என சமூகத்தின் எல்லாத்தரப்பிலும் சீரழிவு, சீரழிவு, சீரழிவு... சினிமா மட்டும் சீலத்தோடு இருக்க வேண்டுமெனில் எப்படி ? சிம்புவும் அனிருத்தும் எங்கே இருந்து வந்தார்கள் ? வானத்திலிருந்து குதித்தார்களா ? வேற்றுக்கோள் வாசிகளா ? இந்த சமூகத்திலிருந்துதானே அவர்களும் வந்தார்கள் ??

    இணையத்தில் ஒருவர் எழுதியிருந்தார், குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை, கேட்ட வார்த்தையைத்தான் பேசுகிறார்கள் என்று ! எவ்வளவு உண்மை !! குழந்தைகள் பட்டதைச் செய்வதில்லை, பார்த்ததைத்தான் செய்கிறார்கள். நாம் 'பின்நவீனத்துவவாதி'களாக இருந்து கொண்டு அவர்களை மட்டும் 'முன்நவீனத்துவத்திற்கு'ப் போகச்சொன்னால் எப்படி ஐயா ??? . க்க்குறும்பு.......!!!

    இணையத்தில் ஒருவர் எழுதியிருந்தார், குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை, கேட்ட வார்த்தையைத்தான் பேசுகிறார்கள் என்று ! எவ்வளவு உண்மை !! குழந்தைகள் பட்டதைச் செய்வதில்லை, பார்த்ததைத்தான் செய்கிறார்கள். நாம் 'பின்நவீனத்துவவாதி'களாக இருந்து கொண்டு அவர்களை மட்டும் 'முன்நவீனத்துவத்திற்கு'ப் போகச்சொன்னால் எப்படி ஐயா ??? . க்க்குறும்பு.......!!!

    தாமரை போன்றவர்கள் விதிவிலக்குகள், உதிரிகள். தனிமரம் தோப்பாகாது. தனிமரங்கள் தடையாகக் கருதப்படும், வெட்டப்படும், வீழ்த்தப்படும். நினைவில் கொள்ளவும்: அறம், விழுமியங்கள் அழிந்த சமூகத்திற்கு அறம், விழுமியங்கள் அற்ற படைப்புகள்தாம் கிடைக்கும் என்று கூறியுள்ளார் தாமரை.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1182
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சிம்புவின் மற்றொரு முகம்! - tamil hindu

    ‘பீப்' பாடல் சர்ச்சைக்கு முன்பாக வெள்ள பாதிப்பின்போது ‘நிம் கேர்’ என்ற தொண்டு நிறுவனம் மூலமாக சுமார் 40 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார் சிம்பு. தொண்டு நிறுவனங்கள் மூலமாக உதவி செய்தால் மட்டுமே நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று அடையும் என்பதால் இப்படி செய்தாராம். நிவாரணப் பொருட்களை பேக் செய்யத் தனது வீட்டையும் கொடுத்து உதவியது மட்டுமல்லாமல் குழுவினருடன் அவரும் தொடர்ந்து 48 மணிநேரம் பேக் செய்வதில் சளைக்காமல் வேலை செய்தாராம். நிவராணப் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடித்த அந்த தொண்டு நிறுவனத்தின் தன்னார்வலர்களைப் பாராட்டி சிம்பு அவர்களை அழைத்து விருந்து கொடுத்து கவுரவம் செய்திருக்கிறார்

  4. #1183
    Senior Member Senior Hubber mexicomeat's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    357
    Post Thanks / Like
    There was a **beep** in ethir neechaladi song as well, no one complained then?

  5. #1184
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    T Rajendar's humble and emotional speech on Beep Song Controversy | Simbu, Anirudh | Interview


  6. #1185
    Senior Member Senior Hubber mexicomeat's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    357
    Post Thanks / Like
    Quote Originally Posted by balaajee View Post
    T Rajendar's humble and emotional speech on Beep Song Controversy | Simbu, Anirudh | Interview
    there was nothing humble in the interview
    இலக்கியத்தில் நான் வண்ண தமிழ் மழலைக்கு பாலூட்டும் தாய்
    சினிமாவில் விட்டெரியும் காசுக்கு வாலாட்டும் நாய்

    -Vaali

  7. #1186
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Exclusive Interview with Simbu About Beep Song Controversy - Thanthi TV



  8. #1187
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Ayutha Ezhuthu Neetchi : Debate on "Simbu's Beep Song Controversy.- Thanthi TV



  9. #1188
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Simbu's Controversial Beep Song is Wrong : Sarathkumar Questions Nadigar Sangam Over this Issue...



  10. #1189
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    மன்னிப்புக் கேட்டு விளக்கம் அளிக்க வேண்டும் - சிம்புவுக்கு நடிகர் சங்கம் கண்டனம்!

    நடிகர் சிம்பு எழுதிப் பாடியதாக வெளியாகியிருக்கும் பீப் பாடல் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ''சினிமா என்பது கலைக்கும், பல கோடி வியாபாரத்துக்கும் இடையே பயணிக்கிற ஊடகமாக இருக்கிறது. அதை மக்களும் உணர்ந்தே இருக்கிறார்கள். அதனால், அதற்கு சில எல்லைகளை தளர்த்தி விரிவாக்கி தந்து இருக்கிறார்கள். அதை உணர்ந்த சினிமா கலைஞர்கள் பலரும் சினிமா ஊடகத்தை திறம்பட பயன்படுத்தி வெற்றியும் பெற்றுவருகிறார்கள்.


    அவர்களை மக்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளாக கொண்டாடியும் வருகிறார்கள். ஆனால் அதுவே எல்லை மீறி செல்லும்போதும் முகச்சுளிப்பையும், சினத்தையும் வெளிப்படுத்தி எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள். முறையாக வெளியிடப்பட்டதா, திருட்டுத்தனமாக கசிந்ததா என்ற சந்தேகத்திற்கிடையே சமீபத்தில் அனிருத் இசையமைத்து, சிம்பு எழுதி பாடியதாக வெளியாகி இருக்கும் பாடலில் ‘பீப்’ செய்யப்பட்டு கேட்பவர்களின் யூகத்திற்கு விடப்பட்ட வார்த்தைகள் மிக கொச்சையான உணர்வையும், பெண்களை இழிவுபடுத்தியும் இருப்பதினால் அது நிச்சயம் கண்டனத்துக்குரியது, கண்டிக்கத்தக்கது.
    ஒரு கலைஞனின் கருத்து மக்களிடையே சென்றடைந்து அது எதிர் விமர்சனங்களை ஏற்படுத்துகிறபோது, அது சம்பந்தப்பட்ட கலைஞர்கள் மக்களின் உணர்வை மதித்து வருத்தமோ, மன்னிப்போ கேட்டு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகிறது. அந்த கலைஞர்களுக்கு கால அவகாசம் கொடுத்து காத்திருந்தோம். அதோடு தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த ஒரு மாதமாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா பகுதிகளிலும் இரவு, பகல் பாராமல் வேலை செய்து வந்தது. தொடர்ந்து இந்த விஷயத்தில் உடனடியாக கருத்து தெரிவித்தால் கடந்த தேர்தலில் எங்கள் அணிக்கு எதிராக சிம்பு தீவிரமாக செயல்பட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையாக விமர்சனம் வந்துவிடக்கூடாது என்றும் எங்கள் கருத்தாக இருந்தது.

    வருகின்ற 26-ம் தேதியில் நடக்க இருக்கும் செயற்குழுவில் இதுபற்றி விவாதித்து கருத்து தெரிவிக்கலாம் என்றிருந்தோம். ஆனால் சூழ்நிலை கருதி நிறுவனக்குழுவில் முடிவெடுக்கப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. இன்று இந்த விவகாரம் மக்கள் மன்றத்தை மட்டுமல்ல, நீதிமன்றத்தையும் சென்றடைந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் விரைவில் இதிலிருந்து விடுபட்டு புதுப்பொலிவோடு கலைப்பணி ஆற்ற வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

    தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் இக்காலக்கட்டத்தில் ‘பீப்’ பாடல் என்கிற நிகழ்வு சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு மட்டுமல்ல, எல்லா கலைஞர்களுக்கும் ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. வருங்காலத்தில் இப்படி மீண்டும் ஒரு சங்கடமான சூழல் உருவாகக்கூடாது என்ற விழிப்புணர்வோடு செயல்படவேண்டும் என்பதை இச்சமயத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவுறுத்த விரும்புகிறது" என்று கூறி உள்ளார்.

  11. #1190
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் தொடர்பில்லை: நடிகர் சிலம்பரசன் பேட்டி - tamil hindu

    பீப் பாடலுக்கும், இசையமைப்பாளர் அனிருத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நடிகர் சிலம்பரசன் பாடிய பீப் சாங்க என்ற பாடல் இணையத்தில் வெளியானது. ஆபாசமான பாடல், பெண்களை இழிவுபடுத்துகிறது எனக்கூறி அந்தப் பாடலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு வழக்குகளும், போராட்டங்களும் தொடர்ந்தன.

    முதலில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து சிம்பு பாடியுள்ளார் என்று பரவினாலும், அனிருத் தான் அதை இசையமைக்கவில்லை என்று கூறினார். சிலம்பரசன் தரப்பு அமைதியாக இருக்க, தற்போது அவரும் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதன் ஒலிப்பதிவும் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. பேட்டியின் சுருக்கம் பின்வருமாறு:

    "இந்தப் பாடல் எந்தப் படத்திலும் வரவில்லை, டிவி ரேடியோவில் ஒலிபரப்பாகவில்லை. பிறகு என்னிடம் கேள்வி கேட்பது ஏன்? இது என் பாடல் தான். இதற்கும் அனிருத்துக்கும் சம்மந்தம் இல்லை. இது என் பாடல். அவரை இழுக்க வேண்டாம். எல்லாவற்றையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். ஒரு படமோ பாடலோ நான் அதிகாரப்பூர்வமா வெளியிடப்படும் போது நீங்கள் என்னை கேள்வி கேட்கலாம்.

    நான் எனது வீட்டில் காதல் தோல்வி பாடல், ஹீரோ அறிமுகப் பாடல், கடவுளை வாழ்த்தும் பாடல், நண்பர்களுக்கான பாடல் என பல பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ளேன். தமிழ் சினிமா பாடல் கம்போஸிங்கில் டம்மியான வரிகள் போட்டு பாடுவது என்றைக்குமே வழக்கம் தான். அந்தப் பாடல் கடைசியாக மக்களிடம் சேரும்போது என்ன வடிவத்தில் இருக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

    இதில் எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் பொதுவாக காதல் தோல்வி பாடல்கள் எல்லாம் பெண்களை திட்டியே இருக்கும். ஆனால் என் பாடலில் அப்படி இருக்கக் கூடாது என்பதால் தான் பெண்களை திட்ட வேண்டாம், உன்னை நீயே திட்டிக்கோ என்றுதான் எழுதியுள்ளேன். பெண்களை திட்ட வேண்டாம் என்பதே என் பாடலின் கரு.

    சென்சாரில் சின்ன கெட்ட வார்த்தைகளை கூட நீக்க சொல்லி விடுவார்கள், அதை மனதில் வைத்து தான் இதில் பீப் பயன்படுத்தினேன். அது வேடிக்கையாகத் தான் முயற்சி செய்தேனே தவிர அது இறுதியான யோசனை அல்ல. நான் விளையாட்டாக வீட்டில் வைத்திருந்ததை எடுத்து யாரோ பொதுவெளியில் விட்டதற்கு என்னை கேள்வி கேட்கலாமா? சமைத்துக் கொண்டிருக்கும் உணவை திருடிவிட்டு நன்றாக இல்லை என சொல்வது போல இருக்கிறது. சமைத்து முடித்தவுடன் தானே அசல் சுவை தெரியும்.

    இந்தப் பாடல் குழந்தைகளைப் போய் சேர்கிறது என சொல்லாதீர்கள். டிவியில் வந்தால் தான் குழந்தைகளிடம் சென்றடையும். இணையத்தில் ஆபாச தளங்கள் கூடத்தான் இருக்கிறது. அவை குழந்தைகளை சென்றடையாதா? என் பாடல் மட்டும்தான் குழந்தைகளிடம் போய் சேருமா?

    பெண்ணை அடி, உதை என சொல்லும் பாடல்களை யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் தாடி வளர்க்காத, தண்ணி அடிக்க வேண்டாம் என்று நான் பாடும் பாடலுக்கு மட்டும் எதிர்ப்பு வருகிறது. பெண்களுக்கு ஆதரவான பாடலை எதிர்ப்பது கஷ்டமாக இருக்கிறது. எனக்கு பெண் ரசிகைகள் தான் அதிகம். இதை தேவையில்லாமல் திரித்துவிட்டு சிம்பு என்ற தனிமனிதக்கு எதிராக திருப்பிவிட்டிருக்கிறார்கள்.

    இனிமேல் என் இமேஜ் கெட்டுப்போக எதுவுமில்லை. ஏற்கனவே நிறைய காயப்படுத்திவிட்டார்கள். அதையும் மீறி நான் இன்று உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அதற்குக் காரணம் கூட என் பெண் ரசிகைகள்தான். அவர்களின் ஆதரவு தான்.

    எனக்கு சினிமா மட்டும் தான். சட்டரீதியான விஷயங்கள் எதுவும் தெரியாது. எனது நலவிரும்பிகள், என்னை ஆதரிப்பவர்கள் சட்டரீதியான உதவி செய்கிறார்கள். வக்கீல் வைத்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறேன்.

    என்னை ஆதரிக்கும் இப்படி ஒரு குடும்பத்தை பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கவிஞர்களின் கூட்டறிக்கையை நான் மதிக்கிறேன். அவர்களது தனிப்பட்ட கருத்துகளை மதிக்கிறேன். ஆனால் அதிகாரப்பூர்வமாக நான் வெளியிடாத ஒரு பாடலை விமர்சனம் செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை மட்டும் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன். நான் தவறு செய்தால் முதல் ஆளாக மன்னிப்பு கேட்பேன்.

    மக்கள் மழையால பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் யாராவது விளம்பரத்துக்காக இப்படி ஒரு காரியத்தை செய்வார்களா? என் வீட்டுக்கு வெளியே தண்ணீர் தேங்கி, இணையம், போன் என எதுவும் வேலை செய்யாமல் நானும் கஷ்டத்தில் இருந்தேன். இப்படி ஒரு சூழலில் நான் ஏன் விளம்பரம் தேட வேண்டும்? நான் 30 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன்? என்னை தமிழ்நாட்டில் யாருக்குமே தெரியாதா? இந்த மாதிரி ஒரு பாடல் வெளியிட்டு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கில்லை.

    பலாத்கார வழக்கில் சிக்கியவன் விடுதலையாகிறான். ஆனால் நான் செய்யாத தவறுக்கு அந்தப் பாட்டைக் கூட சரியாக கேட்காமல் உருவ பொம்மை எரிப்பு என போராட்டம் செய்வது ஏன் என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் யாருமே எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. கூட இருந்தவர்கள் கூட ஆதரவிக்கவில்லை. ஆனால் தமிழ் மக்கள் என்னை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது.

    தவறு செய்தால் அதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கும் பக்குவம் எனக்குள்ளது. ஓடி ஒளிய மாட்டேன். இனி இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு கவலையில்லை. எனது நிலைப்பாட்டை நான் தெரிவித்துவிட்டேன்" இவ்வாறு சிலம்பரசன் கூறியுள்ளார்.

Similar Threads

  1. Replies: 1359
    Last Post: 25th July 2014, 03:40 AM
  2. Thalaivar ^ Super Star ^ Rajini's Best Pair
    By Sarna in forum Tamil Films - Classics
    Replies: 57
    Last Post: 4th December 2009, 10:06 PM
  3. Little super star : simbu's kaalai
    By anantha krish in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 11th July 2007, 03:50 PM
  4. Super Star Next movie with Shankar
    By alias in forum Current Topics
    Replies: 0
    Last Post: 19th August 2005, 08:59 PM
  5. YSR, the new super star of TFM
    By Sanjeevi in forum Current Topics
    Replies: 19
    Last Post: 1st April 2005, 07:09 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •