Page 1 of 8 123 ... LastLast
Results 1 to 10 of 73

Thread: ARR's interview in latest Vikatan

  1. #1
    Senior Member Devoted Hubber
    Join Date
    Dec 2004
    Location
    Bangalore
    Posts
    419
    Post Thanks / Like

    ARR's interview in latest Vikatan

    From ARR's interview in This week's Vikatan - Text in Unicode :

    ‘‘உங்களைப் பாதித்த இசையமைப்பாளர்னா யாரைச் சொல்லுவீங்க?’’

    ‘‘யாராவது ஒருத்தர் மட்டுமே பாதிச்சு இசையமைச்சா, அதுல நிறைய ‘காப்பி’ இருக்கும். எல்லார்கிட்டேயும் இருக்கிற நல்ல விஷயங்களை எடுத்துக்கிட்டு நம் திறமை யோடு கலந்தாதான் புதுசு கிடைக்கும். நல்ல இசை எல்லாமே என்னை பாதிக்கும்.’’

    ‘‘இளையராஜாவின் ‘திருவாசகம்’ கேட்டீங்களா?’’

    ‘‘பிரமாதம்! ராஜா சார், அவருக்கு அடுத்த ஜெனரேஷன் இசையமைப் பாளர்கள் எல்லோரையும் வரவழைச்சு அதை ‘ப்ளே’ பண்ணினார். அந்த நிகழ்ச்சி மறக்க முடியாத விஷயம். இசை என்றாலே, நம்ம ஊர்ல சினிமானு ஆகிடுச்சு. அதை உடைக்கிற முயற்சியா ‘திருவாசகம்’ ஆல்பத்தை நான் பார்க்கிறேன். எல்லாரும் ஆகா ஓகோனு அதைப் பாராட்டிப் பேசிட்டு இருக்காங்க... அப்போ பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம் சிரிச்சுட்டே ராஜா சார் சொல்றார்... ‘இப்ப விட்டா இன்னும் நூறு இடத்தில் கரெக்ஷன் போடுவேன். இன்னும் திருத்தமா பண்ணியிருப் பேன்’னு! அதான் ஒரு கலைஞனுக்கு அழகு.

    ‘நான் எல்லாம் பண்ணிட் டேன்’னு அவர் நினைக் கலை. நாட்டுப்புற இசை அவர் ரத்தத்தில் ஊறி இருக்கு. ஆனால், கர்நாடக இசையைக் கத்துக்கணும், மேற்கத்திய இசையைக் கத்துக்கணும்னு ஓயாமல் உழைச்சுட்டே இருந்தார். அதான் அவரோட சாதனை! சினிமாவில் மேற்கத்திய இசையையும், நாட்டுப்புற இசையையும் அருமையாகக் கலந்து தந்தவர்.

    இசைக்கும் தனிமனித ஒழுக்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாதுங்கற காலம் ஒண்ணு இருந்தது. சகலவிதமான கெட்ட பழக்கங்களும் இருந்தால் தான் இசை வரும்னு நம்பிட்டிருந்தவங்களைக்கூட நான் நிறையவே பார்த்திருக்கேன். அதையெல்லாம் உடைத்தெறிந்தவர் ராஜா சார். ‘திருவாசகம்’ மாதிரி யான இசையைச் செய்ய அவர்தான் தகுதியானவர்! இதுதான் எனக்குத் தெரிந்த இளையராஜா.’’

    ‘‘நீங்க ‘வந்தே மாதரம்’ ஆல்பம் பண்ணீங்க. அப்புறம் வேற முயற்சிகள் செய்யலையே?’’

    ‘‘மனதில் சில விஷயங்கள் இருக்கு. நம்ம கலாசாரம், நம்ம பண்பாடு சம்பந்தமான சில விஷயங்களைச் செய்கிற யோசனையில் இருக்கேன். அது தெளிவானதும் பேசுகிறேன்!’’

    ‘‘இப்போ தமிழ் சினிமாவின் இசை எப்படி இருக்கு? யார் யார் நல்லா பண்றாங்க?’’

    ‘‘உண்மையாகச் சொல்லணும்னா நான் நிறைய மியூஸிக் கேட்பது இல்லை. நேரம் இல்லை. ஆனால். காரில் எங்காவது வெளியே கிளம்பினால், நிச்சயம் எஃ.எம். கேட்பேன். அப்படிக் கேட்டதில், யுவன் நல்லா பண்றார். வித்யாசாகர் பண்றது பிடிக்குது!’’

    For more - you can check this URL (Requires (paid) registration)

    http://www.vikatan.com/av/2005/aug/07082005/av0505.asp
    NagaS

    ********

    My Blog (Tamil): http://nchokkan.wordpress.com/

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Veteran Hubber dinesh2002's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    Malaysia
    Posts
    3,780
    Post Thanks / Like
    can anyone translate this interview????
    Madhushree's HERO (Tamil Version) feat. Tale Spin, Lyrics by me : http://www.youtube.com/watch?v=TqPYBSABOWc

  4. #3
    Senior Member Diamond Hubber A.ANAND's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    K.L MALAYSIA
    Posts
    4,661
    Post Thanks / Like
    ennppa ithu?????

  5. #4
    Senior Member Devoted Hubber coucou's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    416
    Post Thanks / Like
    i can translate last question:
    how do you find the music nowadays IN TFM? who scored music well?

    IF i said the truth, i don't have time to listen to music. but when i listen to music on driving on fm, ysr do very well and i like vidyasagar's music.

  6. #5
    Senior Member Devoted Hubber coucou's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    416
    Post Thanks / Like
    we would say that arr is fan of illayaraja, so ........arr fans must like ilayaraja.

  7. #6
    Senior Member Veteran Hubber dinesh2002's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    Malaysia
    Posts
    3,780
    Post Thanks / Like
    Quote Originally Posted by coucou
    we would say that arr is fan of illayaraja, so ........arr fans must like ilayaraja.

    yentha sattam???
    Madhushree's HERO (Tamil Version) feat. Tale Spin, Lyrics by me : http://www.youtube.com/watch?v=TqPYBSABOWc

  8. #7
    Senior Member Devoted Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    361
    Post Thanks / Like
    I think IR, ARR, YSR and VS have formed some aliance together!!

  9. #8
    Senior Member Devoted Hubber coucou's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    416
    Post Thanks / Like
    Quote Originally Posted by dinesh2002
    Quote Originally Posted by coucou
    we would say that arr is fan of illayaraja, so ........arr fans must like ilayaraja.

    yentha sattam???
    it is logic non?
    god likes humans
    humans like god
    humans must like humans

  10. #9
    Senior Member Devoted Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    361
    Post Thanks / Like
    I meant alliance!!

    coucou - oops ur confusing us

  11. #10
    Senior Member Veteran Hubber dinesh2002's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    Malaysia
    Posts
    3,780
    Post Thanks / Like
    then how come this logicness doesnt apply on this matter :

    ARR creats GOOD music,
    Good music is from ARRahman
    Everyone MUST like Good music

    its NORMAL for people to like GOOD music,so y people still dun like ARR??? 8)
    Madhushree's HERO (Tamil Version) feat. Tale Spin, Lyrics by me : http://www.youtube.com/watch?v=TqPYBSABOWc

Page 1 of 8 123 ... LastLast

Similar Threads

  1. ARR's interview
    By xml in forum Current Topics
    Replies: 30
    Last Post: 27th June 2008, 12:55 PM
  2. arr's tamil albums & arr's hindi albums-which is better
    By nilavupriyan in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 14
    Last Post: 11th November 2005, 09:38 PM
  3. VM's Latest Interview in Kalki: Will he join with IR Again ?
    By NagaS in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 6
    Last Post: 15th March 2005, 01:41 PM
  4. ARR's interview in Vikatan
    By Ramki in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 11
    Last Post: 7th March 2005, 01:51 AM
  5. ARR's interview in Hindu .....-Intresting Point
    By Oldposts in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 36
    Last Post: 16th January 2005, 01:44 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •