Page 59 of 114 FirstFirst ... 949575859606169109 ... LastLast
Results 581 to 590 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #581
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன் முதலாக அயல்நாடுகளில் படம் பிடிக்கப்பட்ட திரைப்படம் "சிவந்த மண்'

    சிவந்த மண் வெளியான தினம் 09-11-1969
    சென்ற ஆண்டு பொன் விழா கொண்டாடப்பட்டது,

    இணைப்பில்
    சிவந்த மண் 100 வது நாள் விழாவில் கலந்து கொண்டு நடிகர் திலகத்திற்கு பரிசு வழங்குகிறார் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி,



    Thanks Sekar P

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #582
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவந்த மண்.

    9.11.1969 தீபாவளி அன்று வெளிவந்து, 52 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஒரு அற்புதமான திரைப்படம், நடிகர் திலகம் நடித்து, ஸ்ரீதர் தயாரித்து, இயக்கிய 'சிவந்தமண்'.

    வெளிநாட்டில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமைக்குரிய, காதல், சென்டிமென்ட் கலந்த ஆக்க்ஷன் படம் இது.

    நடிகர் திலகம், காஞ்சனா, m.n.நம்பியார், s.v.ரங்கராவ், சாந்தகுமாரி, முத்துராமன், நாகேஷ், சச்சு, (இயக்குநர்) k. விஜயன், ஜாவர் சீதாராமன், மாலி, தாதா மிராஸி, தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி என்று ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்த படம்.
    ---------

    வசந்தபுரி சமஸ்தானத்தின் மன்னர் குணசீலர் ( ஜாவர் சீதாராமன்). பதவி வெறி, அதிகாரப் பித்துக் கொண்ட கொடுங்கோலனான திவான்( நம்பியார்), போர்த்துகீசிய நாட்டுடன் ஒரு ரகசிய உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு, ஆட்சி அதிகாரம் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயலுகிறார்.

    நாட்டு மக்கள் அதை எதிர்த்துப் போராடுகின்றனர். அந்தப் போராட்டத்தில் தன் தந்தையை இழந்த இளைஞன் ஆனந்த் (முத்துராமன்) புரட்சிக்காரனாக உருவாகிறான்.

    கடமையே உயிரென நினைக்கும் நாட்டின் உயர் போலிஸ் அதிகாரி ( இன்ஸ்பெக்டர் ஜெனரல்) சந்திரசேகர் ( s.v.ரங்கராவ் ).அவரது மனைவி ஜானகி ( சாந்தகுமாரி).

    ஐ.ஜி யின் மகன் பாரத் (சிவாஜி). சுவிட்சர்லாந்து நகரின் பெர்ன் பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவராகத் தேர்ச்சி பெறுகிறார்.

    அதை அறிந்து, அதே நகரில் இருக்கும் வசந்தபுரி இளவரசி சித்ரலேகா, தன்னை வசந்தி என்ற பெயரில் ஒரு சாதாரணப் பெண்ணாக பாரத்திடம் அறிமுகம் செய்து கொள்ள, இருவரும் காதல் வயப்படுகின்றனர்.

    தாய்நாட்டின் சந்தர்ப்ப சூழல் காரணமாக இருவரும் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட, அவர்கள் வந்த விமானம் விபத்துக்குள்ளாகிக் கடலில் விழ, இருவரும் படுகாயங்களுடன் தப்பிப் பிழைக்கின்றனர்.

    திவான் தன்னை மணக்க விரும்பும் சதித்திட்டம் அறிந்த வசந்தி, வசந்தபுரி அரண்மனைக்குச் செல்ல மறுத்து விட, இருவரும் பாரத்தின் நண்பன் ஆனந்த் ( முத்துராமன்) வீட்டுக்குச் சென்று, திவானுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

    போராட்டத்தில் ஆனந்த் சுட்டுக் கொள்ளப்பட, பாரத், வசந்தி இன்னும் சில புரட்சி வீரர்களுடன் இணைந்து தலை மறைவு வாழ்க்கை நடத்தி, திவானை எதிர்த்து ரகசியமாகப் போராடுகிறார்கள்.

    பல கட்டத் தொடர் முயற்சிகளின் தோல்விக்குப் பின்னர், திவான் பாரத்தால் கொல்லப்பட, நாடு திவானின் கொடுங்கோல் அதிகாரத்தில் இருந்து விடுதலை பெற, பாரத் வசந்தி இருவரும் திருமணத்தில் இணைகின்றனர்.

    ------------

    அதுவரை காதல், மெல்லியல் மன உணர்வுகள், நகைச்சுவை என்று மட்டுமே படங்களை இயக்கி வந்த ஸ்ரீதர் இயக்கிய முதல் ஆக்*ஷன் படம் இது.

    நடிகர் திலகம் காதல், சென்டிமெண்ட், ஆக்*ஷன் என்று அனைத்து விசயங்களிலும் படு அமர்க்களமாகப் புகுந்து விளையாடியிருப்பார்.

    ஆனால், படத்தில் அவர் அறிமுகமாகும் காட்சி, ஆடம்பரமின்றி, மிக மிக அமைதியாக, மென்மையாக இருக்கும்.

    சுவிட்சர்லாந்து நாட்டின் புகழ் பெற்ற பெர்ன் பல்கலைக் கழகத்தில் அவர் முதல் மாணவராகத் தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தியைப் பத்திரிக்கையில், அவர் படத்துடன், பார்த்த காஞ்சனா அன்று மாலை ஜூரிச் நகரின் உணவு விடுதி ஒன்றில் தற்செயலாகப் பார்த்து, அவரைச் சந்திக்க அவரருகில் வருவார்.

    அப்போதுதான் நடிகர்திலகம் முதல் முறையில் திரையில் தோன்றுவார்.. வலது கை விரல்களைக் கன்னத்தில் வைத்துக் கொண்டு, ஸ்பூனில் இடது கையில் எடுத்து அவர் ஐஸ்கிரீம் சாப்பிடுவது அவ்வளவு நளினம். காஞ்சனா அருகில் வந்து பேசியவுடன், சாப்பிடுவதை விட்டு விட்டு உடனே எழுந்து நிற்பதும், கொஞ்ச நேர உரையாடலுக்குப் பின்னர் அவரிடம் "உங்க பெயர் என்ன ?" என்று கேட்காமல், "உங்க பெயரை நான் தெரிஞ்சுக்கலாமா ?" என்று கனிவாகக் கேட்பதும் பெண்களுக்கு அவர் தரும் மரியாதையையும் கண்ணியத்தையும் காட்டும்.

    'நான் தோழிகளுடன் பாரீஸ் போகப் போகிறேன்' என்று காஞ்சனா சொன்ன போது, அதையே "பரீஸ் ?" என்று படு ஸ்டைலாக உச்சரித்துக் திருப்பிக் கேட்பது அமர்க்களம்.

    இரண்டொரு நாளில் பாரிஸில் காஞ்சனாவைக் கண்ட போது, அவரிடம் தன் காதலைக் கூற முயன்று, எப்படிச் சொல்லுவது என்ற தடுமாற்றத்துடன் முன்னும் பின்னும் நடந்து, அவஸ்தைப் படுவது அருமை.

    காஞ்சனாவுடன் சேர்ந்து பல இடங்களையும் சுற்றிப் பார்க்கும் போதும், அவருடன் டூயட் பாடும் காதல் காட்சிகளிலும், எக்ஸ்போ காட்சிகளிலும், இருவரும் படகைக் கால்களால் மிதித்து ஓட்டும் போதும், ஏரியில் இருவரும் விளையாடி மகிழும் நீர் விளையாட்டின் போதும், நடை, உடை, பாவனை ஆகிய அனைத்திலுமே மென்மை கலந்த ஒரு கண்ணியத்தைப் படு இயல்பாக வெளிப்படுத்தி இருப்பார்.

    இத்தகைய பூப்போன்ற மென்மையானவரா பிற்பாடு புரட்சி வீரன் பாரத்தாக அப்படி வீர தீர சாகசங்களை நிகழ்த்தியவர் என்று எண்ணும்போது படு வியப்பாக இருக்கும்.

    விமானம் விபத்துக்குள்ளாகி, சிவாஜி காஞ்சனா இருவரின் நினைவற்ற உடல்களும் கரையோரம் நீரில் குப்புறக் கிடப்பதும், பெரிய அலை ஒன்று வரும்போது உடல்கள் அப்படியே அலைக்கழிக்கப்படுவதும், நிஜமாகவே உயிரற்ற இரு உடல்கள் நீரில் மிதந்தால் எப்படி இருக்குமோ அதைப் போலவே மனதைப் பதற வைக்கும். தான் எவ்வளவு பெரிய ஸ்டார் என்றெல்லாம் சிறிதும் நினைக்காமல், டூப் போடாமல் , தானே அந்தக் காட்சியில் சிவாஜி நடித்திருப்பது ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் நிச்சயம் பெருமிதப்பட வைக்கும்.

    அரண்மனைக்கு எதிரில் நடந்த போராட்டத்தில், நம்பியார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நண்பன் முத்துராமன் உயிரிழந்த பின்னர், புரட்சிக்காரனாக மாறும் இவருடைய ஆக்*ஷன் கலந்த நடிப்பு மிகவும் உயர்ந்து கொண்டே போகும்.

    மற்ற புரட்சி வீரர்கள் கீழே நிற்க, உயரமான பாறையின் மேல் நின்றபடி, இவர் நடத்தும் உணர்ச்சிகரமான உரை, சாதாரணமானவர்களுக்குக் கூட நரம்புகளை முறுக்கேற்றி வீரத்தை வர வைக்கும்..

    குண்டுகளைப் போட்டபடியும், துப்பாக்கியால் சுட்டபடியும் ஹெலிகாப்டர் இவர்களைத் துரத்த, அதிலிருந்து தப்பிக்க இவர்கள் ஓடும் காட்சி படம் பார்ப்பவர்களை இருக்கைகளின் நுனியில் உட்கார வைக்கும்.. அதுவும் அந்தக் காட்சியில் டூப் போடாமல் இவரே நடித்து, ஹெலிகாப்டர் இவரது தலையை நிஜமாகவே உரசுவது போல மிகவும் தாழ்வாகப் பறந்து போகும்போது, நொடிப்பொழுதில் அவர் குழிக்குள் குதித்துத் தப்பிக்கும் காட்சி அனைவரின் நெஞ்சையும் பதற வைக்கும். அவர் ஒரு நொடி தாமதித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.

    போர்த்துகீசியக் கப்பலுக்கு வெடிகுண்டு வைக்க இவரும் மாலியும் கடலில் ரகசியமாக நீந்திச் செல்வதும், கப்பலினுள் சென்று குண்டு வைப்பதும் பின்னர் தப்புவதும் ஏதோ ஆங்கிலப்படத்தைப் பார்ப்பதைப் போல அவ்வளவு திரில்லிங்காக இருக்கும்.

    திவானை அழிப்பதை மட்டுமே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்டு, வேறு எந்த விதமான பாச பந்த உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காமல், தான் போடும் ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்ற இவர் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் அற்புதம்.

    திவான் வரும் ரயிலைக் கவிழ்க்கப் பாலத்தை வெடி குண்டு வைத்துத் தகர்த்து திவானைக் கொல்ல முயலும்போது, அதே ரயிலில் வருவது சொந்த அப்பா என்று தெரிந்தும், அதைப்பற்றிச் சற்றும் கவலை இல்லாமல் காரியத்தில் இறங்குவதும், தனது அந்த முயற்சி தோல்வி அடைந்ததற்குக் காரணம் காஞ்சனா என்று தெரிந்ததும் தன் சொந்த மனைவி என்றும் பாராமல் அவரைத் துப்பாக்கியால் சுடத் துணிந்ததும் தன் நோக்கத்தில் அவர் எந்த அளவுக்கு நேர்மையாகவும் உறுதியாகவும் இருந்தார் என்பது புரியும்.

    அதுவும் உயரமான அந்தப் பாலத்தில் வெடிகுண்டு வைக்க இரண்டு இரும்புக் கிராதிகளின் மேல் இரண்டு கால்களையும் விரித்து வைத்துக் கொண்டு நடக்கும் காட்சியில், டூப் போடாமல் இவரே நடித்திருப்பதும், ஒரு இடத்தில் திடீரென்று ஒரு கால் தவறுவதும் அனைவர் மனதிலும் பெரும் படபடப்பை ஏற்படுத்தும்.

    எதற்காக இவர் உயிருக்கு ஆபத்தான இப்படிப்பட்ட காட்சிகளில் டூப் போடாமல், தானே நடித்து தன்னை வருத்திக் கொள்கிறார் என்று அவர் மேல் நமக்கு உண்மையிலேயே கோபம் வந்தாலும், 'நடிப்பு என்று வந்து விட்டால் தனது உயிர் கூடத் தனக்கு இரண்டாம் பட்சம்தான்' என்ற அவரது உயர்ந்த தொழில் பக்தியைச் சொல்ல இந்த ஒரு காட்சியே போதும்.

    உடல்நிலை சரியில்லாத தாயைச் சந்திக்க இரவில் ரகசியமாக வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவுடன் பேசும் காட்சியிலும், தன் வருகை அறிந்த திவானின் உத்தரவுப்படி தன்னைக் கைது செய்யும்படி தன் தந்தையிடம் வேண்டும்போது அவர் மறுக்க, தன் கணவர் கடமை தவறாதவர் என்பதை நிரூபிக்கத் தன் தாயையே தன் கைகளில் விலங்கை மாட்ட வைப்பதுமான காட்சிகளில் அவரது நடிப்பு படு உருக்கமானது.

    கை விலங்குடன் நம்பியாரின் அறைக்கு அழைத்து வரப்பட்டபோது, நம்பியார் சோபாவில் அமர்ந்து செருக்காகக் கால் மேல் கால் போட்டபடி பேச, அடுத்த நொடியே இவரும் நம்பியாருக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து, கால் மேல் போட்டபடி பேசுவது, அசல் வீரபாண்டிய கட்டபொம்மனை நினைவுக்குக் கொண்டு வரும் அற்புதமான நடிப்பு.

    சிறை அதிகாரி அவரை அறையில் அடைக்க உத்தரவிட்டுக் கொண்டுருக்கும்போதே சிறையின் அமைப்பைக் கண்களால் நோட்டமிட்டு, தப்பிக்கும் வழியை முடிவு செய்து கொண்டு, மௌனமாக ஒரு புன்னகை செய்வதும், அறைக்குள்ளே தள்ளி அடைக்கப்படும்போது, நொடிப் பொழுதில் எதிர்ச்சுவரில் கால்களை உந்தித் திரும்பி வந்து, காவலனைத் தாக்கித் துப்பாக்கியைப் பறித்து, சிறை அதிகாரியைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு காவலராகத் துப்பாக்கிகளைத் தன் காலடியில் கொண்டு வந்து வைக்க வைத்து அவற்றை ஒவ்வொன்றாகச் சிறை அறைக்குள் கால்களால் தள்ளி விடுவது மிகவும் வியக்க வைக்கும் காட்சிகள்.

    பட்டத்து ராணி... பாடலின் போது, அரபு ஷேக் வேடத்தில், கையில் சாட்டையுடனும், துப்பாக்கியுடனும், காட்சி முழுவதும் , என்ன நடக்கப் போகிறதோ என்ற பதற்றத்துடனேயே நம்பியாரைத் தவிக்க வைப்பது அருமை... அதிலும் சுழல் மேடையில், மேடை சுழலும் திசையில் காஞ்சனா சுற்ற, இவர் சுழற்சிக்கு எதிர் திசையில் படு கம்பீரமாக அடி எடுத்து நடப்பதும் அதே வேளையில் கவனம் முழுவதும் நம்பியார் மேலும், அவரை நோக்கியே துப்பாக்கியைக் குறி வைத்து இருப்பதும் அமர்க்களம்.

    காஞ்சனா, வழக்கமாகக் கதாநாயகனுடன் வந்து செல்லும் நாயகிகளைப் போல இல்லாமல், ஆரம்பத்தில் சுவிட்சர்லாந்திலும், பின்னர் வசந்தபுரியிலுமாக, படம் முழுவதும் வருவதுடன், புரட்சி வீரன் பாரத்தின் போராட்டத்தில் சிறப்பாகத் துணை நிற்கிறார். எவ்வளவு அடித்த போதும், துப்பாக்கியில் சுடப்படுவாய் என்று மிரட்டப்பட்ட போதும், வெடிகுண்டுத் திட்டத்தின் தோல்விக்கு உதவியது யார் என்ற உண்மையைச் சொல்ல மறுப்பது அருமையான

    நடிப்பு.


    படத்தின் முதுகெலும்பே நம்பியாரின் அமர்க்களமான நடிப்புதான். அவர் வரும் ஒவ்வொரு காட்சியுமே நயவஞ்சகம் மற்றும் கொடூங்கோன்மையின் உச்சத்தை நமக்குக் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகின்றன. துப்பாக்கியை எடுத்து நாமே நம்பியாரைச் சுட்டு விட வேண்டும் என்று பல சமயங்களில் நம்மை நினைக்க வைப்பது அவரது நடிப்பின் மாபெரும் வெற்றி.

    புரட்சிக்காரன் ஆனந்தாகக் கொஞ்ச நேரமே வந்தாலும், முத்து ராமன் மனதில் நிற்கிறார். அதிலும் இறந்து போனதாக நம்பப்பட்ட பாரத் உயிருடன் திரும்பி வந்தபோது நம்ப முடியாமல் அவரது கண்கள், ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒன்று சேர, அகலமாக விரிவது அருமை.

    நாகேஷும், சச்சுவும் மதுபானக் கடை உரிமையாளர்களாக வந்து, பாரத் கூட்டத்தினருக்கு உதவுகிறார்கள். அவ்வப்போது நாகேஷ் லேசாகச் சிரிக்க வைக்கிறார். கல்யாணக் காட்சியின்போது, திடீர் ஐயராக மாறி, மந்திரம் தெரியாமல் அவர் அடிக்கும் கூத்துகள் அருமை.

    சச்சுவை இவ்வளவு படு கவர்ச்சியாகப் படம் முழுவதும் பயன்படுத்தி இருக்க வேண்டுமா என்பது சற்றே நெருடலான கேள்விதான்.

    புரட்சி வீரர்களாக வரும், (இயக்குநர்) k.விஜயன், மாலி (ஜெமினி மகாலிங்கம்), தாதா மிராஸி ( ரத்தத்திலகம், புதிய பறவை, மூன்று தெய்வங்கள் ஆகிய அற்புதமான நடிகர் திலகத்தின் படங்களை இயக்கிய அவரேதான்) போன்றவர்கள் சிவாஜியின் போராட்டத்தில் துணை நின்று அருமையாக

    நடித்திருக்கிறார்கள்.


    படத்தில் நடிகர் திலகத்துடன் இன்னொரு கதாநாயகனும் இருக்கிறார்.

    அவரைப் படத்தில் பார்க்க முடியாது. காதில் கேட்கவும், கேட்டு இதயத்தில் உணரவும் மட்டுமே முடியும்.

    அவர்தான் மெல்லிசை மன்னர் msv.

    அவரது ஆயிரக்கணக்கான படங்களில் சிவந்த மண் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.

    படம் முழுவதும் பின்னணி இசையில் மனுசன் புகுந்து விளையாடி இருப்பார்.

    ஆரம்பத்தில் காதல் ரசம் சொட்டும் காட்சிகளில் மனதுக்கு இதமான பின்னணி இசையைத் தந்தவர், கதைக்களம் வசந்தபுரிக்கு நகர்ந்த பிறகு, விஸ்வரூபம் எடுத்துப் பின்னி எடுத்திருப்பார். ஒரு ஆக்*ஷன் படத்துக்கு எப்படிப் பின்னணி அமைக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு டிக்சனரி. அதுவும் கப்பலில் வெடிகுண்டு வைப்பதற்கு சிவாஜியும் மாலியும் கப்பலுக்குள் நுழைந்த பிறகு அவர் அமைத்த பின்னணி இசை, சஸ்பென்ஸ், திகில் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதாக இருக்கும். கப்பலில் போர்த்துகீசிய நாட்டினருக்கு நடக்கும் பார்ட்டியின் போது, பாடல் எதுவும் இல்லாமல், ராதிகாவின் நடனத்துக்குக் கொடுத்திருக்கும் பின்னணி இசை ஆங்கிலப் படங்களுக்குச் சவால் விடுவது போல இருக்கும்.

    படத்தின் அனைத்துப் பாடல்களையும் மிக அற்புதமாகத் தந்திருக்கிறார் கவியரசர். வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் கழித்தும் இன்றும் நாம் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும் தேனினும் இனிய பாடல்களைக் கவியரசர் மெல்லிசை மன்னர் ஜோடி நமக்கு அளித்தது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.

    முத்தமிடும் நேரமிப்போ....

    ஒரு ராஜா ராணியிடம்....

    பார்வை யுவராணி கண்ணோவியம்...

    பட்டத்து ராணி பார்க்கும் பார்வை...

    சொல்லவோ சுகமான கதை....

    ஒரு நாளிலே உறவானதே....

    ஆகிய பாடல்களில் எதைச் சொல்வது எதை விடுவது ?

    "பட்டத்து ராணி..." பாடலைப் பற்றியும் , அதில் பயன்படுத்தப்பட்ட எண்ணற்ற வாத்தியக் கருவிகளைப் பற்றியும், l.r.ஈஸ்வரி அற்புதமாக அதைப் பாடியதைப் பற்றியும், பாடலில் msv அமைத்த வித்தியாசமான bgm பற்றியும் ஏகப்பட்ட கட்டுரைகள் ஏற்கெனவே வந்துள்ளன.

    "முத்தமிடும் நேரமிப்போ..."

    "சொல்லவோ சுகமான கதை சொல்லவோ..."

    ஆகிய இரண்டு பாடல்களுமே மதுபான விடுதியில் ஆடப்படும் கவர்ச்சியான ஆட்டத்துக்குப் பாடப்பட்ட, நம்மைத் தாளம் போட வைக்கும் பாடல்களாக இருந்தாலும், இரண்டுமே ஒன்றுக்கொன்று மிகவும் வித்தியாசமான இசையில் அமைந்திருக்கும்.

    முன்னதை l.r.ஈஸ்வரி பாடியதில் வியப்பு ஒன்றும் இல்லை. அதற்குப் படு கவர்ச்சியாக சச்சு நடனமாடி இருப்பார்.

    "சொல்லவோ சுகமான கதை..." பாடலை p.சுசீலாவைப் பாட வைத்திருப்பதுதான் ஆச்சரியமான விசயம். தன் தேன் குரலில் அதை மிகவும் இனிமையாகப் பாடி இருப்பார் சுசீலா அம்மா. அதற்கு ஆடிப் பாடி நடித்தது காஞ்சனா.

    "பார்வை யுவராணி கண்ணோவியம்..." (tms
    "ஒரு நாளிலே உறவானதே..." ( tms, p.சுசீலா)
    ஆகிய இரண்டுமே மென்மையான காதல் பாடல்கள்.. தேனில் ஊற வைத்த பலாச்சுளைகள் போன்றவை..

    படத்தில் 7 நிமிடங்கள் வரக்கூடிய, மிக முக்கியமான பாடலான,
    "ஒரு ராஜா ராணியிடம்...." பாடலைப் பற்றி மட்டுமே ஒரு தனிப்பதிவு போடலாம். அவ்வளவு சங்கதிகள் அப்பாடலைப் பற்றி உள்ளது. இருப்பினும் முடிந்தவரை சுருக்கமாகச் சொல்கிறேன்.

    கவியரசரும், மெல்லிசை மன்னரும் தங்கள் இருவரில் யார் பெரியவர் என்ற போட்டியில் கலந்து கொண்டவர்களைப் போல, ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் , இந்தப் பாடலில், ஆளுக்காள் அற்புதத்தைப் படைத்திருப்பார்கள்.

    பாடல் படமாக்கப்பட்ட இடங்கள் ரோம், பாரிஸ், வெனிஸ், சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலை ஆகிய பகுதிகள்.

    உற்றுக் கவனத்தால் படமாக்கப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் ஒரு சரணமும், ஒவ்வொரு சரணத்துக்கும் வித்தியாசமான இசையமைப்பும் இருப்பது தெரியும்..

    அக்கார்டின், வயலின், பாங்கோஸ், கிடார், ப்ளூட், டிரம்பெட் ஆகியவற்றை அந்தந்த சரணத்துக்கு ஏற்ற மாதிரி அற்புதமாகப் பயன்படுத்தி ஒரு ஜூகல்பந்தியே நடத்தி இருப்பார் மெல்லிசை மன்னர். அதிலும் ஆல்ப்ஸ் மலைப் பனிச் சறுக்குக் காட்சிகளின் bgm இல் அக்கார்டினில் அற்புதமாக விளையாட்டுக் காட்டியிருப்பார்.

    கவியரசர் சற்றும் சளைக்காமல் மேலே மேலே போய்க் கொண்டே இருப்பார்..

    ஒரு சரணம் முழுக்க "மோ.." என்ற எழுத்தில் அனைத்து வரிகளும் முடிந்தால், இன்னொரு சரணத்தில் " யோ..."என்று அனைத்து வரிகளும் முடியும். வேறொரு சரணத்தில் "னோ.." என்று முடியும். அதை விட முக்கியம் " "மோ.. யோ..னோ... "என்று முடியும் எழுத்துக்களுடன் நாயகன் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்ட, அதே "மோ..யோ..னோ.." என்று முடியும் எழுத்துக்களுடன் கேள்விகளாகவே கேட்டு நாயகி நாயகனின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதைப் போல எழுதியிருப்பது கவியரசரின் ஒப்பில்லாத கை வண்ணம்.

    மேலும் ஒவ்வொருமுறை மோ..யோ..னோ ஆகிய எழுத்துக்களை இருவரும் பாடும்போதும், ஒவ்வொரு முறையும் அந்த உச்சரிப்புகள் வித்தியாசமாக இருக்கும் வண்ணம் அமைத்திருப்பது மெல்லிசை மன்னர் செய்த அற்புதம்.

    அதுவும் சுசீலா அம்மா "மோ...யோ...னோ.." என்று சற்றே இழுத்த மாதிரி முடிப்பது அப்படியே தேனை நேரடியாகக் காது வழியே நம் நாக்கில் தடவுவதைப் போல இனிக்கும்..மயக்கும்.

    இறுதியில் மெல்லிய வயலின் இசையுடனும், அதை விட இனிய சுசீலா அம்மாவின் குரலுடனும் பாடல் முடியும்.

    பாடல் வரிகளைக் கவனித்தால், வெளிநாட்டுக்குச் சென்றாலும் ஒரு இந்தியப் பெண் எப்படித் தன் பெண்மையை உயர்வாக மதிக்கிறாள் என்பது மிகவும் அருமையாகப் புரியும்.

    "ஓடம்....பொன்னோடம்..." வரிகளின் சரணம் முழுவதும், இருவரும் படகைக் காலால் வலிப்பதாக, லாங் நாட்டில் எடுக்கப்பட்டிருக்கும். முகம் சரியாகத் தெரியாது. அதனால் அந்தச் சரணம் முழுவதையுமே வேறொரு விதத்தில் குளாசப்பில் எடுத்து, லாங் சாட்டில் இவர்கள் படகு வலிப்பதையும், குளோசப் ஷாட்டில் பாடல் வரிகளைப் பாடுவதையும், அதைச் சின்னதாக அப்படியே திரையின் வலது ஓரத்தின் மேற்புறத்தில் சூப்பர் இம்போஸ் செய்து, இரண்டையும் ஒரு சேரத் திரையில் அற்புதமாகத் தந்திருப்பார் இயக்குநர் ஸ்ரீதர்.

    பிற்காலத்தில் 'பிக்சர் இன் பிக்சர்' என்ற, ஒரே நேரத்தில் இரண்டு காட்சிகளைக் காணும் வசதியுடன், tv கள் விற்பனைக்கு வந்தன. அதனை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே, லாங் ஷாட்டையும், குளோசப் ஷாட்டையும் ஒரே திரையில் இடம்பெறச் செய்து அற்புதம் காட்டி விட்டது நடிகர்திலகம் & ஸ்ரீதர் டீம்.

    இப்போது போல, ஒரே ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் வெளிநாடு சென்று, அரைகுறை ஆடைகள் கொண்ட வெளிநாட்டு அழகிகளுடன் ஒரு குத்தாட்டம் போல அதை எடுக்காமல், ஒரு படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாடுகளில் எடுத்தது மட்டும் அல்லாமல், அதை எப்படி எடுக்க வேண்டும் என்று பாடம் நடத்திக் காட்டிய படம்தான் சிவந்த மண்.

    பாரிஸ் நகரத்தின் வீதிகள், கடைகள் ஆகியவை இரவு நேரத்தில் மின்னொளியில் அற்புதமாக மின்னுவதையும், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடக்கும் காளையைக் குத்திக் கொள்ளும் அரிய காட்சியையும், ரோம், வெனிஸ், பாரிஸ் நகரங்களின் அழகிய பகுதிகள், ஆல்ப்ஸ் மலையின் அழகிய பனிச் சிகரங்கள், மற்றும் 7 நிமிடக் காட்சியாக எக்ஸ்போ கண்காட்சியின் விதவிதமான ராட்சஷ ராட்டினங்கள் ரோலர் கோஸ்டர்களையும் அப்படியே கண் முன் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணனின் காமெராவும் மிகவும் பாராட்டத்தக்கது.

    இத்தகைய அற்புதமான ஒரு படம் திரையிட்ட அனைத்துத் திரையரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்து ஓடியதும், சென்னையில் நான்கு தியேட்டர்கள் உட்பட, மொத்தம் ஒன்பது திரையரங்குகளில் நூறு நாட்களைக் கடந்து ஓடி, சிறந்த ஒரு வெற்றியைப் பெற்றது ஒன்றும் வியப்பல்லவே.

    அப்படி நூறு நாட்கள் ஓடிய திரையரங்குகளில் எங்கள் கோயம்புத்தூர் ராயல் தியேட்டரும் ஒன்று என்பதில் எங்களுக்கெல்லாம் பெருமைதான்.

    நன்றி.

    நாகராஜன் வெள்ளியங்கிரி.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #583
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    [COLOR=var(--primary-text)]சிவந்த மண் 9-11-- 1969 -சில நினைவுகள்.

    ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.

    தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்த மண் .இரண்டும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க பட்ட பிரம்மாண்டங்கள். முதல் முறை வெளிநாட்டில் தமிழ் படம். ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). 1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். தமிழ் நாடே திரு விழா கோலம் பூண்டு இந்த படத்தை வரவேற்றது. சிவாஜி வேறு ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" என்ற தொடர் எழுதி இருந்தார்.

    சிவந்த மண் போல் பிரம்மாண்டம் கொண்ட படம் ,இந்திய திரையுலகம் இது வரை கண்டதில்லை. வெளி நாடுகள்(அதுவும் ஐரோப்பிய) படபிடிப்பு, கப்பல்,ஹெலிகாப்ட்டர், காட்டாறு,சுழல் மேடை என்று ஏக தட புடல். படமும் மிக மிக பிரம்மாண்ட வெற்றி படமாய் பத்து திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. பெரும்பான்மையான திரையரங்குகளில் ஐம்பது நாட்களும், repeat ரன்களில் பிரமாதமாய் ஓடி(பைலட் தியேட்டரில் 80 களில் 75 நாட்கள்)

    எனக்கு தெரிந்த எந்த சிவாஜி படத்திலும்,heroine அறிமுகம் ஆகும் முதல் காட்சி இவ்வளவு அமர்க்களமாய் வரவேற்பு பெற்றதில்லை.(காஞ்சனா போன் பேசும் காட்சி). சிவந்த மண்ணின் சிறப்பே அதுவரை வந்த action படங்களில் இருந்து மாறு பட்டு ,கதாநாயகன் திட்டமிடுவார். வில்லன் ரியாக்ட் செய்வார். திட்டங்கள் படு சுவாரஸ்யமாய் ,படம் விறு விறுப்பாய் செல்ல உதவும். மூன்று மணி நேர இன்ப பயணம்.helocopter fight , கப்பல் வெடிகுண்டு காட்சி,தொடரும் சேஸிங், பட்டத்து ராணி, ரயில் பால வெடிகுண்டு காட்சி, அமர்க்களமாய் மாறி மாறி ஊசலாடும் உச்ச காட்சி என்று தமிழில் வெளி வந்த மிக மிக சிறந்த action ,adventure படமாய் இன்றளவும் பேச படுகிறது.

    எம்.எஸ்.விஸ்வநாதனின் பங்களிப்பு இந்த படத்தின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தியது.( அவரின் மிக சிறந்த படம்)ஒரு ராஜா ராணியிடம், முத்தமிடும் நேரமெப்போ, ஒரு நாளிலே உறவானதே,பட்டத்து ராணி, பாவை யுவராணி கண்ணோவியம்,சொல்லவோ சுகமான என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை பாணி,ஒவ்வொரு நாட்டு இசை கோர்ப்பு, பின்னணி இசை(முக்கியமாய் கப்பலில் ராதிகா டான்ஸ்,மாறும் காட்சிகளுகேற்ப மாறும் இசை,) ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார். உங்களுக்கு கடன் பட்டுள்ளோம்.

    சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார்.காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.

    ஹெலிகாப்ட்டர் காட்சி ,கப்பல் காட்சி, ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும்.

    ஸ்ரீதரின் திரைக்கதையமைப்பு புத்திசாலிதனமாய்,விறு விறுப்புடன் இருக்கும். இயக்கம் கேட்கவே வேண்டாம். சிவாஜி-ஸ்ரீதர் இணைவில் மிக சிறந்த படைப்பு இதுதான்.அடிமை பெண்ணிற்கு போட்டியாக வந்திருக்க வேண்டியது ,தீபாவளிக்கு தள்ளி போனது. அதனால் என்ன,நமக்குதான் தீபாவளி ராசியாயிற்றே.!!! இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவாஜி பிலிம்ஸ் ஒரு படத்தை கீழை நாடுகளில் (ஜப்பான் உள்ளிட்ட) படமாக்க திட்டமிட்டு ,திட்டம் கசிந்து விட்டதால்,மாற்று முகாம் அள்ளிதரித்த அவசர கோலத்தில் முந்தி கொண்டது.

    சிவந்த மண் படத்தின் பல தங்க புதையல்களின் நடுவே தொலைந்து விட்ட பிளாட்டின புதையலை பற்றி இந்த பதிவு.பிளாட்டினத்தின் மதிப்பு மக்களுக்கு புரியாததாலோ என்னவோ.

    ஒரு நாளிலே உறவானதே
    கனவாயிரம் நினைவானதே
    வா வெண்ணிலா இசையோடு வா
    மழை மேகமே அழகோடு வா
    மகராணியே மடி மீது வா

    நாளை வரும் "நாளை" என நானும் எதிர்பார்த்தேன்.
    காலம் இது காலம் என காதல் மொழி கேட்டேன்
    போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும்
    போதும் என கூறும் வரை பூவே விளையாடு
    வரும் நாளெல்லாம் இது போதுமே

    மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு
    கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு .
    தஞ்சம் இது தஞ்சம் என தழுவும் சுவையோடு.
    மிஞ்சும் சுகம் யாவும் பெற வேண்டும் துணையோடு
    வரும் நாளெல்லாம்.இது போதுமே

    ஒரு நிர்ப்பந்தமாய் நடந்த காதல் ஜோடியின் நாலு பக்கம் வேடர் சூழ்ந்த நிலையில் (நண்பர் செஞ்சியும்)மானிரெண்டின் காதல்.(மகாராணியின் முதலிரவு கட்டாந்தரையில்).இரவு ஊருறங்கிய பின் குளிக்கும் மனைவியிடம் தாபத்தை கண்ணியமாய் வெளியிடும் புரட்சியாளன்.

    காஞ்சனாவின் தாபம் நிறைந்த விழிகளும்,நடிகர்திலகத்தின் காதல் வயப்பட்ட மோவாய் முத்தங்களும்.போதும் என கூறும் வரை அணைத்து,வினாடி கண் சொக்குவாரே !!!!!வரும் நாளெல்லாம் என்று வீணை மாதிரி மடி கிடத்துவாறே (50 ஆவது நாள் போஸ்டர் என நினைவு),மிஞ்சும் சுகம் யாவும் வரிகளில் காஞ்சனாவின் கண்களை பாருங்கள் .வரும் நாளெல்லாம் என மடியில் இரு கால்களை வெவ்வேறு நிலை மடித்து மயக்குவாறே....

    புரட்சியாளனின் இயல்பான முடியழகும் ,ஆண்மை நிறைந்த கட்டம் போட்ட சட்டையும்,make -up மிதமாக திராவிட மன்மதனின் இளமை பொங்கும் handsome என படும் ஆணழகும்(அந்த மூக்கு ...அடடா) ,காஞ்சனாவின் நாணம்,தாபம் நிறை பெண்மையும், ஆபாசமில்லாத உறுத்தாத ஈர உடையும் உங்களை வேறு உலகத்துக்கே அனுப்பும்.

    நடிகர்திலகத்தின் முதல் ஐந்து காதல்களுக்குள் வரும். நல்ல வேளை ...அசல் திட்ட படி பாலமுரளி இதை பாடவில்லை. டி.எம்.எஸ் -சுசிலாவின் மயக்கும் குரலும் (ரெண்டு பெரும் சௌகரியமான pitch இல் ),எம்.எஸ்.வியின் சாதனை பாடல்களில் ஒன்று.(Yaman kalyan ragam)

    பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ,கேட்டு,கேட்டு,கேட்டு,கேட்டு மகிழவும்.

    [/COLOR]

























    Thanks Gopalakrishnan.S
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #584
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    9/11/1969 இந்தியாவில் திரைக்கு வந்து சாதனை படைத்த சிவந்த மண்

    13/01/1971 ஆம் ஆண்டு இலங்கையில் திரையிடப்பட்டு சாதனை படைத்தது.

    கொழும்பு ...கெப்பிட்டல்... 97 நாட்கள் ஓடியது.
    யாழ்நகர்....வெலிங்டனில்..56 நாட்கள் ஓடியது.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #585
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தியாகம் 1978

    மதுரை மாநகரில் 175 நாளில்
    ரூபாய் 6,74,112- 97 வசூலித்து புதிய சாதனையை படைத்தது,

    10-11-2020
    முரசு தொலைக்காட்சியில் 12pm&7pm ஒளி பரப்பாகிறது,


    Thanks Sekar.P

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #586
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தெய்வமகன் மறு வெளியீடு,
    1994

    7 வது வாரம் ஹவுஸ்புல் ஹவுஸ்புல் ஹவுஸ்புல்,,

    ஆனந்த் திரையரங்கில் ஒரு காட்சியின் வசூல் தொகை முழுமையாக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் திரட்டும் கோயில் நல நிதிக்கு அளிக்கப்படுகிறது,
    ( நன்றி திவ்யா பிலிம்ஸ்)

    10-11-2020 இன்று சன் லைப் தொலைக்காட்சியில். காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது,


    Thanks Sekar.P

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #587
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    விஷமத்தனமான விமர்சனம் செய்த விகடர்களை மண்டையில் சவுக்கால் அடித்தீர்கள்,
    இப்படி அந்த வீனர்களையும் அடிக்கடி சவுக்கால் அடித்துக் கொண்டே இருந்து இருக்க வேண்டும்,

    நாளை முரசு தொலைக்காட்சியில் 12 pm&7pm ஒளி பரப்பாகிறது
    தியாகம்


    Thanks Sekar.P

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #588
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    முத்துக்கள் மூன்று

    10-11-2020
    தொலைக்காட்சி சேனல்களில்

    தெய்வமகன்-11 am சன் லைப் சேனலில்,

    தியாகம் - 12 pm&7 pm முரசு சேனலில்,

    எங்கிருந்தோ வந்தாள்- 11pm பாலிமர் சேனலில்,





    Thanks Sekar.P

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #589
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    15-03-1962 அன்று வெளிநாட்டு சுற்று பயணம் சென்றார் நடிகர் திலகம் ...
    இரு மாத பயணம் ...
    ஜெர்மனி ,இத்தாலி ,பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு சென்றார் .
    மூன்று கண்டங்கள் !
    ஆசியாவில் ஜப்பான் ..
    ஐரோப்பாவில் முக்கிய நாடுகள் சில .
    பின் அமெரிக்காவின் முக்கிய மாகாணங்கள் பலவற்றிற்கு சென்றார் ..
    ஏறத்தாழ இது ஒரு உலக சுற்று பயணமே ..

    தனிப்பட்ட பயணம் அல்ல இது ...
    உடல் நலன் குறித்து சென்ற மருத்துவ சுற்றுலாவும் அன்று ....
    அமெரிக்க அரசின் சிறப்பு விருந்தினராக சென்றார் ....
    அந்த பயணத்தின் வெற்றி குறித்து பலரும் புகைப்படங்கள் பலவற்றுடன் பதிவு செய்திருந்தார்கள் பல குழுக்களில் ...
    அந்த பயணத்தின் துவக்கத்தில் அவரை வாழ்த்தி கல்கி ஏடு வெளியிட்ட வாழ்த்து செய்தி இது ....

    அந்த பயணம் வெற்றியுடன் முடிந்தது ..
    மிக பெரும் வரவேற்பும் நடிகர்திலகம் திரும்பி வந்த அன்று அளிக்க பட்டது .....


    Thanks Vino Mohan

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #590
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவந்த மண் 100 வது நாள் விளம்பரம்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •