Page 56 of 114 FirstFirst ... 646545556575866106 ... LastLast
Results 551 to 560 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #551
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இருமலர்கள். 1/11/1967


    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #552
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ஊட்டி வரை உறவு. 1/11/1967



    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #553
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ஆர்மடா ...வெல்ல முடியாத ஆர்மடா ...
    கீழ்த்திசை நாடுகளுக்கு கடல்வழி காண ஐரோப்பிய தேசங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிய காலமது .
    அப்போது ஸ்பெயின் தேசத்து கடற்படை மிக பிரமாண்டமாக இருந்தது .
    அந்த கடற்படை கப்பல்களுக்குத்தான் ஆர்மடா என்று பெயர் .
    அந்த ஆர்மடாவை பிரிட்டனின் மிக சிறிய கடற்படை வென்றது .ஜெனரல் நெல்சனின் திறமையால் ....மதியூக வியூகங்களால் ....

    ஐரோப்பிய வரலாறு குறித்த பாடமல்ல இந்த பதிவு ..
    வெல்லமுடியாதவர் MGR ....அவர் உயிருடன் இருந்தவரை அசைக்க முடியவில்லை அதிமுகாவை ....
    வெல்ல முடியாத இரட்டை இலை என்று நிறைய பேர் கொக்கரித்து கொண்டு கிளம்பியிருக்கிறார்கள் .
    அது குறித்து சில வரலாற்று செய்திகள் இந்த தலைமுறைக்கு தெரிவிக்க ...
    மறந்து விட்ட அந்த தலைமுறைக்கு நினைவூட்ட ...

    நெருக்கடிநிலைக்கு பின் நடந்த தேர்தலில் admk ,காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது .
    திமுக கூட்டணிக்கு நாலு இடங்கள் .அதுவும் வடசென்னை ,மத்திய சென்னையில் ....காட்பாடி ,நாகர்கோயில் ...
    அடுத்து வந்த தமிழக சட்டமன்ற தேர்தலிலும் admk ,காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றியே .
    திமுக ஐம்பது இடங்களில் வெற்றி பெற்றது .சென்னையில் R.K.நகரை தவிர அத்தனை இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது .....
    அமேதியில் இந்திரா தோல்வியடைந்ததால் M.P ஆகவில்லை .
    நாடாளுமன்றத்தில் நுழைய விரும்பினார் இந்திரா .இங்கே தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் .
    போட்டியிட விரும்பினார் இந்திரா ..ஆதரிக்க வேண்டிய கடமை mgr ருக்கு இருந்தது .ஆதரவு தருவதாக அறிவித்தும் விட்டார் .

    அங்கே மொரார்ஜி பிரதமர் .விடுவாரா ? Mgr கைகளை முறுக்கினார் .....
    இன்றைய அடிமைகளை போலவே mgr ரும் பல்டி அடித்து ஆதரவு இல்லை அன்னை இந்திராவுக்கு என்றார் .
    இந்திரா அம்மையாருக்கு கடும் கோபம் mgr மீது ..
    பிறகு சிக் மகளூரில் இடம் காலியாக அங்கே போட்டியிட்டு மிக பெரிய வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் இடம் பிடித்தார் .
    டில்லியில் ஜனதா சர்க்கார் குடுமிப்பிடி சண்டை உச்சத்தில் .
    ஆட்சி கவிழ்ந்தது .
    திமுக ,காங்கிரஸ் கூட்டணி .
    மகத்தான வெற்றி திமுக கூட்டணிக்கு .இந்திரா அம்மையார் மீண்டும் பிரதமர் .
    இந்த முறை admk விற்கு இரண்டே இடங்கள் நாடாளுமன்றத்தில் ..
    Mgr ,இரட்டை இலை என்கிற இரட்டை மந்திரத்திற்கு முதல் பெரிய மகத்தான தோல்வி அது ......

    அப்படியே விட்டிருந்தால் 1982 ஆம் ஆண்டில் தேர்தல் நடந்திருக்கும் ...
    இரண்டு ஆண்டுகள் தனக்கு எதிரான மத்திய அரசோடு மல்லு கட்டியே சோர்ந்திருப்பார் mgr ..
    ஆனால் மிக பெரிய தவறை செய்தார் கலைஞர் .
    இந்திரா அம்மையாருக்கு mgr மீதிருந்த கோபத்தை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க செய்தார் .
    தேர்தல் வந்தது தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன்பாக .
    Mgr மக்களிடம் நீதி கேட்டார் .மகத்தான வெற்றி ..இந்தமுறை திமுகவிற்கு வெறும் 30கும் குறைவான இடங்கள் மட்டுமே என்று நினைக்கிறேன் .
    அதிலும் 12 இடங்கள் சென்னையில் மட்டுமே கிடைத்தது ....

    நாலு ஆண்டுகளுக்கு மேல் mgr ஆட்சி ...
    1984 ஆம் ஆண்டில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடை தேர்தல் ....
    அண்ணாநகர் ,மயிலாடுதுறை ,தஞ்சாவூர் மற்றும் உப்பிலியாபுரம் .
    இதில் தஞ்சாவூரில் காங்கிரஸ் திமுக ஆதரவோடு வென்ற இடம் ...
    Mgr அந்த இடத்தை காங்கிரஸ் கட்சிக்கே விட்டு கொடுத்தார் .
    நாலு இடங்களிலும் மிக கடும் போட்டி ...
    பிரச்சாரம் மிக கடுமை .
    குறிப்பாக அண்ணா நகரில் அனல் பறந்தது ...
    தேர்தல் ஆணையம் இன்னும் விழித்து கொள்ளாத சேஷனுக்கு முந்திய காலம் அது .அரசு இயந்திரம் முழு வீச்சில் admk வுக்கு ஆதரவாக இயங்கியது .
    பாலசந்தரின் அச்சமில்லை அச்சமில்லை படம் வெளியாக இருந்தது .
    சென்சார் செய்யப்பட்டு வெளியிட தயாராக இருந்த படத்தை நான்குதொகுதி இடைத்தேர்தல் முடியுமட்டும் வெளியிட முடியாமல் செய்தார் mgr .
    அவ்வளவு பயம் ..

    அண்ணாநகரில் கொளுத்தும் வெய்யிலில் பிரச்சாரத்திற்கு போகிறார் mgr .
    ஒரு கடையில் சில பெண்கள் சோடா குடித்து கொண்டிருந்தார்கள் .
    Mgr தனது வாகனத்தை மெதுவாக செலுத்த சொல்லி அந்த பெண்களை பார்த்து இரட்டை விரல்களை காட்டி புன்னகை செய்தார் .
    அந்த பெண்கள் மவுனமாக ஐந்து விரல்களை பிரித்து காட்டி உதய சூரியன் சின்னம் என்றார்கள் ...
    ஆடித்தான் போனார் mgr .
    தமிழ்நாட்டு தாய்க்குலம் தங்கள் கணவர் பேச்சை விட தன் வார்த்தையையே கேட்பார்கள் என்று பகிரங்கமாக அறிவித்த அவருக்கு அதிர்ச்சி தான் அந்த சம்பவம் .ஜூ .வி யில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு எழுதிஇருந்தார்கள் .இன்றும் என்னிடம் அந்த செய்தி இருக்கிறது ...
    Mgr ,ஜெயலலிதா ,நடிகர் திலகம் மற்றும் வைஜயந்தி மாலா ஆகிய நட்சத்திரங்களின் கடும் பிரச்சாரம் அண்ணாநகரில் .

    இருந்தும் என்ன ..அண்ணா நகரிலும் மயிலாடுதுறையிலும் திமுக வெற்றி ...
    அத்தனை பத்திரிகைகளும் ஒரே குரலில்ஒலித்தன . mgr ருக்கு பெரும் பின்னடைவு இந்த இடைத்தேர்தல்தோல்விகள் என்று .....
    அடுத்த ஐந்து மாதங்களில் mgr கடும் நோய் வாய்ப்பட்டார் .இந்திரா அம்மையார் கொலையுண்டார் .
    எனவே டிசம்பரில் பொது தேர்தல் ...
    சட்ட மன்றம் ,நாடாளு மன்றம் இரண்டிற்குமே ....

    அமெரிக்காவில் mgr சிகிச்சை பெறுகிறார் ..
    இந்திராஅம்மையாரின் மரணம் ...
    இரட்டை அலை ...
    தேர்தல் ஆணையம் இயங்கவே இல்லை
    தமிழ் நாட்டில் ....
    அத்தனை திரை அரங்குகளிலும் எந்த படம் ஓடி கொண்டிருந்தாலும் சரி ....
    இரண்டு பாடல்கள் காட்ட பட வேண்டும் நிச்சயம் .
    நீங்க நல்லாருக்கோணும் நாடு முன்னேற ...
    இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு ....
    படம் ஆரம்பிக்கும் முன்னர் ஒரு பாடல் .
    இடைவேளைக்கு முன் ஒரு பாடல் . ..
    இரு பாடல்களும் நூற்றுக்கணக்கில் பிரதிகள் எடுக்க பட்டு அத்தனை திரை அரங்குகளுக்கும் கொடுக்க பட்டு விட்டது .
    தேர்தல் அன்று வரை மட்டும் அல்ல முடிந்தும் கூட ஒளிபரப்ப பட்டன இரு பாடல்களும் .
    முந்தானை முடிச்சு தாறுமாறாக வெற்றி பெற்றிருந்த நேரமது ...
    பாக்யராஜும் ,தவளையும் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
    அந்த தேர்தலில் அதிக பிரச்சாரம் செய்தது தவளக்கா தான் ...
    இத்தனை ஏற்பாடுகளும் செய்தவர் இராம . வீரப்பன் ......

    வேறு எந்த கட்சியும் இவ்வளவு உணர்வு பூர்வமான தாக்குதல்களை எதிர்த்து நின்றிருக்க முடியாது .
    திமுக நின்றது .15 இடங்களில் வென்றது அதில் பத்து இடங்கள் வரை தலைநகர் சென்னையில் ..

    Mgr முதல்வர் ஆனார் 1985 ஆம் ஆண்டில் ...
    அதே ஆண்டில் உள்ளாட்சி தேர்தல் ..
    மாநகராட்சிகளுக்கு கிடையாது .காரணம் பயம் ..நகர் புறங்களில் திமுக விற்கு இருந்த ஆதரவு ...
    அய்யகோ ! நகராட்சிகளிலும் சரியான அடி mgr ருக்கு .
    90% நகராட்சிகளை திமுக வென்றது .
    பிரமிக்க வைக்கும் வெற்றி ...
    தேர்தல் முடிவு வந்த அன்று நளினி -ராமராஜன் இணையின் திருமண வரவேற்பு avm ராஜேஸ்வரியில் . .
    Mgr வந்தார் .தம்பதிகளுக்கு வாழ்த்து கூறி அன்பளிப்பு கொடுத்து விட்டு உடனே வெளியேறினார் .
    மண்டபமே அத்தனை star களும் கூடி இருந்தாலும் அமைதியாக இருந்தது ...
    Mgr வெளியேறிய சற்று நேரத்தில் கலைஞர் வருகிறார் .
    பெரும் ஆரவாரம் .
    அத்தனை நட்சத்திரங்களும் சூழ்ந்து கொண்டனர் கலைஞரை ....
    பெரும் உற்சாகம் .
    இந்த நிகழ்ச்சியை அத்தனை ஏடுகளும் வியப்போடு வெளியிட்டன ...
    ஜெமினி சினிமா ,சினிமா எக்ஸ்பிரஸ் ஏடுகள் கூட வெளியிட்டன இந்த திருமண வரவேற்பில் கலைஞருக்கு கிடைத்த வரவேற்பு பற்றி .

    Mgr இரு ஆண்டுகள் தான் உயிரோடு இருந்தார் ...
    பாடாய் படுத்தி வைத்தார் ஜெயலலிதா அவரை .
    டீ பார்ட்டி வைத்து பிஜேபி அரசை ஜெயலலிதா கவிழ்த்தபோது வாஜ்பாயி சொன்னாரே இன்றுதான் நிம்மதியாக உறங்க போகிறேன் என்று ....
    அப்படி சொல்லமுடியாத நிலையில் இருந்தார் mgr .
    இறக்கும் வரை உறக்கமும் நிம்மதியும் இல்லை அவருக்கு ...
    அது தனிக்கதை .
    ஆக ,வெல்ல முடியாதவராக mgr இல்லை என்பதே உண்மை ...

    Vino Mohan ,,V..

    Thanks Vino Mohan V

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #554
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    திரு .M.S .பெருமாள் அவர்கள் கல்கி இணைய இதழில் எழுதிவரும் ஊடக பறவையின் ஞாபக சிறகுகள் என்கிற அனுபவ தொடரை ரசித்து படித்து கொண்டிருக்கும் ஆயிரவர்களில் நானும் ஒருவன் ....
    இரு வாரங்களுக்கு முன் MGR உடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்லியிருந்தார் திரு .M.S .பெருமாள் .
    அவர் மிக பெருந்தன்மையாகவே விவரித்திருந்தார் அந்த நிகச்சியை .
    சொல்ல போனால் தன்னையே கூட குறை சொல்லி கொண்டு சொல்லியிருந்தார் அந்த அனுபவத்தை ..
    மனம் கசந்துதான் போனது எனக்கு ....

    இந்த இதழில் நடிகர் திலகத்துடனான தன்னுடய அனுபவங்களை பற்றி விவரித்திருந்தார் ....
    இனிதாகவே இருந்தது .வேறெப்படி இருக்க கூடும் !
    அப்போது மதராஸ் வானொலி நிலையத்தில் பணியில் இருக்கிறார் திரு .பெருமாள் .
    அவருடைய தந்தையான சுகி .சுப்பிரமணியம் அவர்கள் எழுதி தயாரித்த உறவுக்கு அப்பால் என்கிற வானொலி நாடகத்தில் நடிக்க நடிகர் திலகத்தை அணுகுகிறார் .திலகமும் ஒப்புக்கொள்கிறார் .
    அந்த நாடகம் இரு தினங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வானொலி நாடக விழாவில் ஒலிபரப்பானது ...
    நீங்கள் ஏன் இதுவரையில் வானொலி நிலைய நாடகங்களில் நடிக்கவில்லை ?
    என்று பெருமாள் கேட்க ,யாரும் கூப்பிட்டதில்லேப்பா என்றாராம் நடிகர் திலகம் பாவமாக ......

    இப்படி ஒரு வெள்ளந்தியான பதிலை இன்றைக்கு அறிமுக நடிகன் கூட சொல்ல மாட்டான் .
    அன்று புகழின் உச்சியில் ,ஓய்வு ஒழிச்சல் இன்றி, குடும்பத்தோடு செலவிட நேரமும் இன்றி வருடத்திற்கு சராசரியாக எட்டு படங்கள் நடித்து கொண்டிருந்த நடிகர் திலகம் யாரும் கூப்பிடலப்பா என்று சொல்கிறார் .
    நேரமில்லை என்று சொல்லவில்லை ....

    பிறகு சில ஆண்டுகள் சென்றபின் திரு .சிவகுமார் அவர்களின் திருமணத்தில்தான் நடிகர்திலகத்தை M.S.பெருமாள் சந்திக்கிறார் .
    தன்னருகே அவரை அமர வைத்து கொண்டு பல விஷயங்கள் குறித்து பேசுகிறார் நடிகர் திலகம் .
    பின் தூர்தர்ஷனில் நாடகங்களில் நடிப்பதற்கு நடிகர்களுக்கு எவ்வளவு தருகிறீர்கள் என்று கேட்க ,நீங்களே நடித்தாலும் 250 ரூபாய்தான் அண்ணே ..
    ஆனால் நாடகத்தில் பின்னணி இசைக்கு ஒரு வயலின் வாசிக்கும் வித்வானுக்கு கூட 375 ரூபாய் என்கிறார் பெருமாள் ..
    ஏன் இப்படி ? என்று வியந்த நடிகர்திலகம் பேசுவோம் இது பற்றி என்றார் ...

    அப்போது அவர் மாநிலங்களவையில் நியமன உறுப்பினர் ..
    பேசித்தான் இருக்கிறார் இந்த ஏற்ற தாழ்வு பற்றி ...காரணம் அடுத்த மாதமே உத்தரவு ஒன்று செய்தி துறை இலாகாவில் இருந்து வந்தது ..
    தூர்தர்சன் நாடகங்களில் நடிக்கும்
    நடிகர்களின் ஊதியத்தை உயர்த்தி ...
    ரூபாய் 750 இல் இருந்து ரூபாய் 2000 வரை ,நடிகர்களுக்கு ஏற்ப .....
    ஏறத்தாழ மூன்று மடக்கில் இருந்து பத்து மடங்கு வரை .....
    சிறு நடிகர்கள் ஊதிய விஷயத்தில் எவ்வளவு அக்கறை எடுத்து கொண்டு
    நாடாளுமன்த்தில் பேசி ,துறை அமைச்சரை கலந்து கொண்டு ,அதிகாரிகளிடம் உரையாடி இந்த ஊதிய உயர்வை செய்திருப்பார் ?

    அதன் பின் தாதா பால்சாஹேப் விருது வழங்க பட்டபோது அன்னை இல்லத்தில் அவரை சந்திக்கிறார் திரு .M.S .பெருமாள் .
    உடன் U.M .கண்ணன் ,தூர்தர்சன் இயக்குனர் நடராஜன் ஆகியோருடன் சென்று ...
    அடுத்தமுறை சந்திப்பு ,நடிகர்திலகத்திற்கு இறுதி மரியாதை செலுத்த ...
    நடிகர் திலகம் மறைந்த அன்றே அவரின் மலரும் நினைவுகளை மறு ஒளிபரப்பு செய்தது D.D....
    பின் முதல் மரியாதை படத்தை நடிகை ராதாவின் உரையோடு ஒளிபரப்பு செய்தார்கள் ...
    நடிப்புசுரங்கம் சிவாஜி கணேசன் பற்றி இப்படி தன் அனுபவங்களை விவரித்திருந்தார் திரு .M.S.பெருமாள் .

    நன்றி ...கல்கி இணைய இதழுக்கு ..

    Thanks Vino Mohan V



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #555
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் வாய் மொழிப்படியே தருகிறேன் இந்த பதிவை.!
    பராசக்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டேன் .
    படத்திற்கு இவ்வளவு தொகை என்ற அடிப்படையில் அல்ல .
    மாதம் 250 ரூபாய் சம்பளம் என்கிற அடிப்படையில் ...
    படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது ...
    அப்போதெல்லாம் மெட்ராஸ் ஹை கோர்ட் எதிரே ஒரு டென்னிஸ் கோர்ட் இருந்தது .
    பராசக்தி படத்தில் நடித்த S.V.சகஸ்ரநாமம் போன்றவர்கள் தினமும் அங்கே டென்னிஸ் விளையாடுவார்கள் .
    நான் S.V.சகஸ்ரநாமம் உடன் செல்வேன் ..விளையாட அல்ல ,வேடிக்கை பார்க்க .
    கல்வி ,விளையாட்டு இரண்டிற்கும் உரிய பருவத்தில் நான் பாய்ஸ் கம்பெனியில் இருந்தேன் .கல்வி ,விளையாட்டு என்ற இரு நல்வாய்ப்புகளையும் இழந்தேன் ...
    எனவே விளையாட்டுகளில் ஆர்வம் மிக உண்டு எனக்கு ...
    ஒரு நாள் அந்த மாத ஊதியமான 250 ரூபாயை பெற்று கொண்டு சகஸ்ரநாமம் ,நண்பர்களுடன் அந்த டென்னிஸ் கோர்ட்க்கு சென்றேன் ..

    அங்கே வழக்கமாய் டென்னிஸ் ஆடும் திரு .ராமநாதன் அன்று அங்கிருந்த தன் நண்பர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் வைத்து கொண்டிருந்தார் .
    லண்டன் நகரில் நடக்க இருக்கும் ஜூனியர் விம்பிள்டன் போட்டிகளில் தன்னுடைய மகன் விளையாட இருப்பதாகவும் அங்கே செல்ல ஆகும் செலவுக்கு நண்பர்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டு கொண்டிருந்தார் ..
    நான் உடனேயே சட்டை பையில் வைத்திருந்த அந்த மாத சம்பளம் 250 ரூபாயையும் அப்படியே கொடுத்து விட்டேன் .
    ராமநாதனே திகைத்து போனார் .
    மகிழ்ந்தும் போனார் .
    என் தோள்களை தழுவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் .
    அன்று அங்கிருந்த டென்னிஸ் விளையாடும், ராமாநாதனின் நண்பர்கள் எவரும் அவ்வளவு தொகையை கொடுக்க வில்லை

    நான் ஏன் கையில் இருந்த ஒரு மாத சம்பளத்தையும் கொடுத்தேன் ?
    நம்மை காலம் காலமாக ஆண்ட வெள்ளையர்கள் நாட்டில் ஒரு இந்திய ,குறிப்பாக தமிழக சிறுவன் விளையாடுவது நமக்கெல்லாம் எவ்வளவு பெருமை?
    கேவலம் பணம் இல்லாமல் அந்த வாய்ப்பு அவனுக்கு மறுக்க படுவதா ? என்கிற உணர்வுதான் என்னை அப்படி கொடுக்க செய்தது ..
    ஜூனியர் விம்பிள்டனில் விளையாடிய அந்த சிறுவன் தான் பிற்பாடு டென்னிஸ் கிருஷ்ணன் என்று உலக புகழ் பெற்றார் ...
    அவரது மகன் ரமேஷ் கிருஷ்ணனும் டென்னிஸ் வீரரே ...
    இப்படியாக 1951-52 ஆம் ஆண்டுகளில் நடந்த அந்த சம்பவத்தை நடிகர்திலகம் சொல்லியிருந்தார் .

    கர்ணன் படத்தில் இந்த சம்பவம் இருந்ததா ? என்று தெரியவில்லை .
    ஆனால் புராணத்தில் இருக்கிறது .
    காலையில் நதிக்கரையில் பொற்கிண்ணம் ஒன்றில் எண்ணெய் எடுத்து தேய்த்து கொண்டிருந்தான் கர்ணன் நீராடுவதற்கு .
    அப்போது ஒரு ஏழை தானம் கேட்டு கைகளை நீட்ட ,இடது கையில் வைத்திருந்த அந்த பொற்கிண்ணத்தை அப்படியே கொடுத்து விட்டான் கர்ணன் .
    இடது கரத்தால் தானம் வழங்கலாகாது என்று அந்த இரவலன் சொல்ல ,பரவாயில்லை ,இடது கரத்தில் இருந்து வலது கரத்திற்கு அந்த பொற்கிண்ணத்தை மாற்றி கொடுப்பதற்குள் இதை விட குறைவாக ஏதாவது தானம் செய்தால் போதும் என்கிற நினைப்பு வரலாம் .எனவேதான் கொடுக்க வேண்டும் என்று நினைத்த கனத்திலேயே இடது கையில் கொடுக்கிறோம் என்று கூட கருதாமல் அந்த கிண்ணத்தை கொடுத்து விட்டேன் என்றான் கர்ணன் .
    அதுபோல்தான் நடிகர்திலகமும் ..
    அன்று கையில் இருந்த ஒருமாத சம்பளத்தையும் அதே கனத்தில் வழங்கி விட்டார் .
    உள்ளத்தில் நல்ல உள்ளம் அல்லவா அவருடைய உள்ளம்.

    Thanks Mohamad Arshath

    ...........................................

    பின்னூட்டம்

    உண்மையில் சிவாஜி மிகச்சிறந்த வள்ளல் ஆனால் கண்டவனெல்லாம் தன்னை வள்ளல் என தனக்கு தானே புகழாரம் சூட்டிக்கொண்டனர் அதில் முதன்மையான சுயவிளம்பரர்கள் திருட்டு திராவிட இயக்கத்தினர்
    எங்கே சிவாஜியின் கொடைத்தண்மை மக்களிடம் பரவினால் தங்கள் வளர்ச்சி பாதிக்குமேயென
    என்னி அவரை கஞ்சன் என விமர்சனபடுத்திய திராவிட வஞ்சகர்கள் ஆனால் அன்று மக்கள் உண்மையை உனராதபோதும் காலம் அவரவர்களின் இறுதிநாட்களில் அனுபவத்ததின் மூலம் நல்லவர்கள் யாரென்பதையும் வஞ்சகர்கள் யாரென்பதையும் தெளிவாக காட்டியது வஞ்சகர்களை வாய்பேச முடியாமலும் நடக்க இயலாமலும் சில ஆண்டுகளாகவே அவர்களை அனுபவிக்க வைத்தான் ஆண்டவன் நல்லவரையோ எவ்வித சிரமுமில்லாது(முதுமையினாலும் தனது தனிப்பட்ட சில பழக்கங்களாலும் ஏற்பட்ட சிறுபாதிப்பை தவிர) தன்னிடம் அழைத்துக்கொண்டான்
    இதுவே மாபெரும் சாட்சி(K R )

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #556
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    சிவாஜி – எம்.ஜி.ஆர்., வள்ளல் யார்?

    பத்திரிகையாளர்களுக்கு ‘கவர்’ கொடுக்கும் பழக்கம் ‘சிவாஜி’யிடம் இல்லாததால் அவரை ‘கஞ்சன்’ என்று கதை கட்டியவர்கள் பத்திரிகையாளர்களே.


    ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை ஒழித்து, காமராஜர் கொண்டு வந்த கிராமபுறப் பள்ளிக் கூடங்கள் திட்டத்திற்காக 1 லட்சம் ரூபாய் கொடுத்தவர் சிவாஜி கணேசன். இன்றைய மதிப்பு சில கோடி.
    அதற்காகவே ‘கொடைவள்ளல்’ என்றுவிடுதலையில் தலையங்கம் எழுதி கொண்டாடினார் சிவாஜியை பெரியார்.

    100 முறைக்கும் மேல் நடத்தப்பட்ட கட்டபொம்பன் நாடகத்தில் வசூலான லட்சக்கணக்கான தொகையையும் அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கே கொடுத்தார் சிவாஜி.

    சிவாஜியைப் போல் அரசு திட்டங்களுக்கு அப்போது எம்.ஜி.ஆர். எந்த நன்கொடையும் கொடுத்ததில்லை. அவர் பிரமுகர்களுக்கு உதவி செய்தார். அதைப் பத்திரிகையாளர்களுக்குக் கவர் கொடுத்து செய்தியாக்கிக் கொண்டார்.
    வாங்கிய பிரபலங்களும் இன்றுவரை அதைப் பிரபலப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். - வே.மதிமாறன்.

    Thanks Cl Joe
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #557
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அன்ன இல்லத்தின் அன்பு தெய்வம்
    வருவோர்க்கெல்லாம் அன்ன லட்சுமியாய் விளங்கிய அன்னை #கமலாம்மாவின் நினைவு நாள் இன்று.

    அவரை போற்றி வணங்கிடுவோம்


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #558
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    DR SIVA 2/11/1975



    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #559
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    வைரநெஞ்சம் 2/11/1975


    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #560
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நவராத்திரி 3/11/1964




    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •