Page 42 of 114 FirstFirst ... 3240414243445292 ... LastLast
Results 411 to 420 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #411
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #412
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #413
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #414
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    Thanks Nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #415
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இந்து நாளிதழில்...
    வி.சி.கணேசன், சிவாஜி கணேசன், சிவாஜி... நடிகர்திலகம்! நடிப்பில் எட்டாவது அதிசயம்; எட்டாத ஆச்சரியம்! - நடிகர் திலகம் சிவாஜி 92வது பிறந்தநாள் ஸ்பெஷல்
    By வி. ராம்ஜி

    கடல், யானை, வானம், நிலா என்று எப்போது பார்த்தாலும் பிரமிப்புதான். எத்தனை முறை பார்த்தாலும் சந்தோஷம்தான். அப்படி எத்தனைமுறை பார்த்தாலும் பிரமிப்பு ஏறிக்கொண்டே இருக்கும். அவரை எத்தனை முறை பார்த்தாலும் சந்தோஷம் கூடிக்கொண்டே இருக்கும். பிரமிப்பும் வியப்பும் மேலிடுகிற, சந்தோஷமும் உற்சாகமும் தருகிற அவர்... நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.
    1952ம் ஆண்டுக்கு முன்பு தமிழ் சினிமாவில் ‘நடிப்பு’ என்றொரு வார்த்தை புழக்கத்தில் இருந்ததா என்பதெல்லாம் தெரியவில்லை. ரசிகர்கள் மத்தியிலும் படம் நன்றாக இருந்தது, பாடல்கள் அருமையாக இருந்தது என்றெல்லாம் இருந்திருக்கலாம். மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்தார் என்று எவரையேனும் சொல்லியிருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. ஆனால் ‘பராசக்தி’க்குப் பிறகுதான் இந்த வார்த்தையெல்லாம் தமிழ் சினிமாவிலும் ரசிகர்களிடமும் புழக்கத்துக்கு வந்தன. சிவாஜி என்ற சொல்லும் நடிப்பு என்ற சொல்லும் பிரிக்கவே முடியாதவை என்பதை அடுத்தடுத்து வந்த படங்களிலேயே புரிந்து உணர்ந்து சிலிர்த்தார்கள் ரசிகர்கள்.
    தமிழ் சினிமாவில் அப்போது கதைகள் பண்ணிவிடுவார்கள். அந்தக் கதையை மிக அழகாக திரைக்கதையாக்கிவிடுவார்கள். கதைக்குள் உலவுகிற கதாபாத்திரங்களையும் ஏற்படுத்திவிடுவார்கள். 20 ரீல் கொண்ட படங்களில் 22 பாடல்களைக் கொண்டு, இசை விருந்தே படைத்துவிடுவார்கள். ஆனால், கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டுவது, ஒவ்வொரு கேரக்டர்களுக்குமான உடல்மொழியை உருவாக்குவது, உடல் மொழியுடனும் வசன ஏற்ற இறக்கங்களில் கதையின் சூழலை, கதாபாத்திரத்தின் நிலையை உணர்த்துவது என்று சிவாஜி செய்த ஜாலங்களெல்லாம் கருப்பு வெள்ளை காலத்திலேயே டாலடித்தன. ‘இவர் வித்தியாசமான நட்சத்திரம், துருவ நட்சத்திரம்’ என்று வியக்கச் செய்தன.
    ‘இந்தக் கதையில்தான் நடிப்பேன்’, ‘இதுமாதிரியான கேரக்டரில்தான் நடிப்பேன்’, ‘என்னுடைய இந்த கதாபாத்திரம் இப்படியெல்லாம் வடிவமைத்திருந்தால்தான் நடிப்பேன்’ என்று லிமிட்டேஷனே வைத்துக்கொள்ளவில்லை சிவாஜி. இமேஜ் எல்லைகள் போட்டு, தன்னைச் சுற்றி வட்டமெல்லாம் சுழித்துக்கொண்டு நிற்கவில்லை அவர். அப்படி லிமிட்டுக்குள் இல்லாமல் இருந்ததால்தான், நடித்ததால்தான்... நமக்குக் கிடைத்தன சிவாஜியிடம் இருந்து ‘அன் லிமிடெட்’ மீல்ஸ் நடிப்புகள்.
    நாட்டுக்கு உதவும் நல்ல மன்னராக நடிப்பார். மது, மாது என்றிருக்கும் மன்னனாகவும் நடிப்பார். இரண்டு ராஜாக்களும் நடுவே ஒரு கோடு கிழித்துக்கொண்டு, நடிப்புக்கபடி விளையாடுவார் சிவாஜி. ஆங்கிலேயரை எதிர்க்கும் அரசனாகவும் வருவார். பகத்சிங்காகவும் நடிப்பார். இரண்டுமே வீர நெஞ்சம்தான். ஆனால் நெஞ்சு விறைத்துக்கொண்டு நிற்பதிலும் நடப்பதிலும் வித்தியாசம் காட்டுகிற வித்தையெல்லாம் சிவாஜியின் நடிப்புப்பசிக்கான தீனிகள்.
    ‘பாகப்பிரிவினை’யும் ‘பட்டிக்காடா பட்டணமா’வும் கிராமத்துக்கதைதான். ஆனால், இரண்டு சிவாஜிகளுக்குள்ளும் இருநூறு வித்தியாச மேனரிஸங்கள். ‘ராஜா’வும் ‘தங்கப்பதக்கம்’ செளத்ரியும் போலீஸ்தான். இதில் ஸ்டைல் என்றால் அதில் மிடுக்கு. சுதந்திரத்துக்காக வெள்ளையனை எதிர்த்த கட்டபொம்மனாகவும் சிவாஜியை ரசிக்கமுடியும். தேச ரகசியங்களையே விற்கத்துணியும் ‘அந்தநாள்’ சிவாஜியையும் ரசிக்கமுடியும். ‘பலே பாண்டியா’வில் வருகிற விஞ்ஞானி சிவாஜி வேறு. ‘பாலும் பழமும்’ படத்தில் மருத்துவ விஞ்ஞானி வேறு. கூடுவிட்டு கூடு பாய்வது என்றொரு வார்த்தை உண்டு. அப்படிப் பாய்கிற சக்தி யாருக்கு இருந்ததோ... தன் நடிப்பால், வசன உச்சரிப்பால், உடல் மொழியால், நடையால், பார்வையால் கூடுவிட்டு கூடு பாய்ந்துகொண்டே இருந்ததுதான் அவரின் அளப்பரிய நடிப்புச் சக்தி. அப்படி அவர் தந்ததெல்லாம் நமக்கு, சினிமாவுக்கு, சினிமா ரசிகர்களுக்கு... எனர்ஜி பூஸ்டர்.
    'என்னய்யா சிவாஜி சிவாஜின்னு. பணக்கார கேரக்டர்தானே’ என்று பட்டியலிட்டு, அந்த ஆக்டிங் கங்கையை, ‘பணக்கார’ சொம்புக்குள் அடைத்துப் பார்க்கமுடியாது. குற்ற உணர்ச்சியில் தவித்து மருகி, நண்பன் துரோகம் செய்கிறான் என்று வெதும்பி, சொத்தும் வேண்டாம் சுகமும் வேண்டாம் என்று மரண விளிம்பு தொடும் ‘ஆலயமணி’ சிவாஜியும் பணக்காரர்தான். அப்பாவின் சொல்லை மீறமுடியவில்லை, காதலித்தவளை கரம்பிடிக்கமுடியவில்லை என்று இன்னொருத்தியை திருமணம் செய்துகொண்டு, அவளுக்கும் நேர்மையாக, காதலியின் நினைவுகளிலும் மூழ்கி, மிடுக்குடனும் தவிப்புடனும் இருக்கிற ‘உயர்ந்த மனிதன்’ சிவாஜியும் பணக்காரர்தான். இரண்டு மகள்களையும் கண்களாக பாவிப்பதும், இதில் ஒருத்தி தன் மகளில்லை என்று தெரிந்து வெறுப்பதும், அதனால் அப்படியே புறக்கணிப்பதும், அந்தஸ்து போய்விடுமே என்று பதறுவதும் இவள் மகளா, அவள் மகளா என்று தவித்துக் கலங்குவதும், இறுதியில் கெளரவத்தை விட அன்பும் பிரியமுமே சாஸ்வதம் என்று புரிந்துகொள்வதுமாக இருக்கிற ‘பார் மகளே பார்’ சிவாஜியும் பணக்காரர்தான்.
    'புதிய பறவை’ சிவாஜி ஒருவிதம். ‘வசந்தமாளிகை’ சிவாஜி இன்னொரு விதம். ‘அவன் தான் மனிதன்’ சிவாஜி மற்றொரு விதம். அப்பாவி என்றால் அப்பாவிதான். ஆனால், சூழ்ச்சிகள் ஏதும் தெரியாத அப்பாவி, வெள்ளந்தியான அப்பாவி... இன்னொரு பக்கம் இயலாமை கலந்த அப்பாவி என்றெல்லாம் வெரைட்டி காட்டமுடியுமா. ‘படிக்காத மேதை’ சிவாஜியையும் ‘பாகப்பிரிவினை’ சிவாஜியையும் இப்படித்தான் பிரித்துப் பார்த்து பிரமித்தார்கள் ரசிகர்கள்.
    ‘பாவ மன்னிப்பு’ சிவாஜி இஸ்லாமியர். ‘ஞான ஒளி’ சிவாஜி கிறிஸ்தவர். ‘வியட்நாம் வீடு’ சிவாஜி பிராமணர். மூன்று திசையாக இருக்கும் இந்த கதாபாத்திரங்களை நடிப்பு எனும் நாலாவது திசைக்குக் கொண்டு வந்து, சகலத்தையும் கலை எனும் ஒரே திசைக்குள் கட்டிப்போடுகிற செப்படிவித்தை, சிவாஜிக்கு மட்டுமேயான கலை. சிவமாகவும் வருவார். விஷ்ணுவாகவும் வருவார். கர்ணனாகவும் வருவார். கந்தனுக்கு அருகில் உள்ள வீரபாகுவாகவும் வருவார். அம்பிகாபதியாகவும் பாடுவார். மகாகவி காளிதாஸாகவும் பாடுவார். தான்சேன் அவதாரமும் எடுப்பார். கிரேக்க சக்கரவர்த்தியாகவும் ஆளுவார்.ராஜராஜ சோழனாகவும் உலவுவார். வ.உ.சி.யாக, பாரதியாராக, வாஞ்சிநாதனாக, திருப்பூர் குமரனாக, பக்தசிங்காக... அவ்வளவு ஏன்... வயோதிகமான அப்பர் பெருமானாகவும் வருவார். கம்பீரம் குறையாத திருமங்கை ஆழ்வாராகவும் வருவார். பெரியாழ்வாராகவும் தோன்றுவார்.
    ஸ்டைலாக சிகரெட் பிடித்துக்கொண்டு பியானோ வாசித்தால், ‘சிவாஜிக்கு பியானோ வாசிக்கவும் தெரியும் போல’ என்று சொல்லுவோம். ‘நல்வாழ்த்து நான் சொல்லுவேன்’ என்று கிடார் வாசித்தால், ‘அட, கிடாரும் தெரியும் போல’ என்போம். நாகப்பட்டினம் பக்கத்தில் சிக்கல் என்ற ஊரில்தான் சிவாஜி நாகஸ்வர வித்வானாக சிலகாலம் வாழ்ந்திருக்கிறார் என்று இருநூறு காலம் கழித்துச் சொல்லிவிட்டு, ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தைப் போட்டுக்காட்டினால் நம்பிவிடுவார்கள். ‘நாயனம் மட்டுமில்லை, மிருதங்கமும் சிவாஜி வாசிப்பார்’ என்று ‘மிருதங்க சக்கரவர்த்தி’யைப் பார்த்தால் சொல்லுவார்கள். ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ என்றும் சிதார் வாசிப்பார். அவ்வளவு ஏன்... எப்படியும் பத்துப்படங்களிலாவது பியானோ வாசிப்பது போல் சிவாஜி நடித்திருக்கிறார். ஆனால், பத்துப் படங்களிலும் நூறு எக்ஸ்பிரஷன்களைக் காட்டியிருப்பார் என்பதுதான் ஆச்சரியம். சிவாஜி எனும் கலைஞன் எட்டாவது அதிசயம்; எவருக்கும் எட்டாத அதிசயம்.
    சிகரெட் பிடிப்பது போல் பல படங்கள். உலகில் எத்தனை பிராண்டுகள் இருக்கிறதோ தெரியாது. ஆனால், சிகரெட் புகைக்கும் ஸ்டைல், பிராண்டுகளின் கணக்கை விட அதிக ஸ்டைல். இயல்பாகப் பிடிப்பது, ஸ்டைலாகப் பிடிப்பது, கோபத்துடன் புகைப்பது, வன்மத்துடன் புகைப்பது, சோகத்துடன் புகைப்பது, சந்தோஷத்தில் புகைப்பது, திருட்டுத்தனம் செய்துவிட்டு புகைப்பது, திருடர்களைப் பிடிக்கச் செல்லும்போது புகைப்பது, நல்லவன் தான்... ஆனால் புகைப்பது. புகைப்பதிலேயே கெட்டவன் என்று வெளிப்படுத்துவது... என ஒரு சிகரெட்டுக்குள் புகையிலை திணிப்பது மாதிரி, நடிப்பைத் திணித்து புகைத்தவர் சிவாஜியாகத்தான் இருக்கமுடியும். இதிலும் சிகரெட் புகைப்பதும், பீடி வளிப்பதும் பைப் பிடிப்பதும் எழுத தனித்தனிக் கட்டுரைகள் தேவை.
    சிவாஜியின் ஆகச்சிறந்த படங்கள் ஏராளம்.ஆனால் எந்தப் படங்களாக இருந்தாலும் அங்கே சிவாஜி பிராண்ட் லேபிள்களை ஒட்டாமல் இருக்கமாட்டார். தன் முத்திரையைப் பதிக்காமல் இருக்கமாட்டார். பக்கம்பக்கமாக வசனங்கள் பேசுகிற சாதுர்யமும் ஞாபக சக்தியும் உண்டுதான். ஒரு விழி உருட்டலில் காட்சியை விவரித்துவிடுவார் சிவாஜி. கழுத்தில் உள்ள ‘டை’ யை கழற்றுகிற விதத்திலேயே சட்டை பட்டனைப் போட்டுக்கொள்கிற விதத்திலேயே, தோள் துண்டை உதறிவிட்டு அணிந்துகொள்கிற விஷயத்திலேயே காட்சியின் கனத்தை நமக்குள் கடத்திவிடுகிற மிகப்பெரிய கெமிஸ்ட்ரி லேப்... நடிப்புப் பல்கலைக்கழகம் சிவாஜி கணேசன்.
    அப்பாவை மதிக்கச் சொல்லுகிற படமா? சிவாஜி நடித்திருப்பார். அம்மாவுக்கு பாசம் காட்டுகிற படமா... சிவாஜி நடித்திருப்பார். தங்கை மீது பாசம், தம்பியிடம் எப்படியான பிரியம், உறவை மதிக்கும் பாங்கு, ஊரை நேசிக்கும் மனிதநேயம், பிள்ளைகளிடம் காட்டுகிற வாஞ்சை, எதிராளியிடம் காட்டுகிற திமிர், தோல்வியின் துக்க அடர்த்தி, வெற்றியின் அகல ஆழ உணர்வுகள்... என்று மூன்று தலைமுறை மனிதர்களுக்கு தன் நடிப்பால் சொல்லிக் கொடுத்த சக்கரவர்த்தி... சிவாஜி கணேசன்!
    ஜாலியும் கேலியுமான சிவாஜி கேரக்டர்களை வைத்து தனி ஆய்வு நடத்தலாம். சிவாஜியின் வயதான கேரக்டர்களில் அவரின் பாடி லாங்வேஜ் பற்றி பி.ஹெச்டி பண்ணலாம். ‘சாப்பாட்டு ராமன்’ மாதிரியான சிவாஜி, வண்டி இழுக்கும் ‘பாபு’ மாதிரியான சிவாஜி, ‘இருமலர்கள்’ மாதிரியான சிவாஜி, மாலைக்கண் நோயால் அவதிப்படும் ‘தவப்புதல்வன்’ மாதிரியான சிவாஜி, ‘சவாலே சமாளி’ மாதிரியான சிவாஜி, ‘எங்கிருந்தோ வந்தாள்’ மாதிரியான சிவாஜி, போலீஸ் சிவாஜி, வக்கீல் சிவாஜி, கொள்ளைக்கார சிவாஜி, பட்டாகத்தி பைரவன் சிவாஜி, என்றெல்லாம் தனித்தனியே ஆய்வுகள் போல் எழுதினால், சிவாஜியின் நூற்றாண்டு தாண்டியும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். அத்தனை பிரமாண்டமான, மெகா சைஸ் புத்தகம்... டிக்*ஷனரி... சிவாஜி!
    அதனால்தான் வி.சி.கணேசன், சிவாஜி கணேசனானார். சிவாஜி கணேசன்... சிவாஜியானார். சிவாஜி... நடிகர்திலகமானார்!
    நடிப்புக்குத் திலகமிட்ட, திலகமிட்டு கெளரவித்த சிவாஜி கணேசன், 1928ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்தார். இன்று அந்த மகத்தான கலைஞனுக்கு 92வது பிறந்தநாள். இன்னும் ஏழு ஆண்டுகள் இருக்கின்றன... நூற்றாண்டு கொண்டாடுவதற்கு! 99 ல் இருந்தே கொண்டாடிவிடுவோம் அந்த மகா கலைஞனை! இன்னும் பல நூறு ஆண்டுகளானாலும் கொண்டாடிக்கொண்டே இருக்கும் தமிழ் உலகம்!
    நடிகர் திலகத்தைக் கொண்டாடுவோம்

    Thanks The Hindu
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #416
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கர்ணன் 1964 ல் ரிலீஸான போது மொத்த வசூல் தொகை ரூ 58.5 லட்சங்கள்,
    ஆவணங்கள் கொண்டு அற்புதமான விளக்கங்கள்,
    35 திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து ரூ 52.8 லட்சம் வசூல் குவித்து சாதனை படைத்தது,

    தொடர்ந்து மேலும் 21 திரையரங்குகளில் 78 நாட்களும்
    தொடர்ந்து சென்னையில் 3 அரங்கு+ மதுரை தங்கம் உட்பட 4 அரங்குகளில் 100 நாட்கள் கொண்டாடியது,

    அன்றைய பிரமாண்டமான வெற்றிப் படம் கர்ணன்
    18 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட கர்ணன் 58.5 லட்சம் வசூல் குவித்தது,

    48 % வரியை நீக்கிப் பார்த்தாலுமே 29லட்சம் ரூபாய் இருக்கிறது
    பந்துலுவிற்கும் விநியோகஸ்தர்களுக்கும் எப்படியும் 11 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறது,

    பொய்யர் கூட்டம் இன்னமும் கர்ணன் தோல்வி அடைந்தது என கதறிக் கொண்டு வருகிறது
    சரி.
    2012 ஆவது வருடத்துக்கு வந்தாவது உண்மையை உணர்ந்து கொள்,

    சுமார் 20 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்து சாதனை படைத்தது டிஜிட்டல் கர்ணன்,




    Thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #417
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    05-10-2020
    தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!

    எமனுக்கு எமன்-.................................................. .... 9:30 am ராஜ் டிஜிட்டல்,
    சவாலே சமாளி- .................................................. .....1:30 pm ராஜ் டிவி,
    முரடன் முத்து-.................................................. ......... 2:30pm ராஜ் டிஜிட்டல்,
    தெய்வமகன் -.................................................. .......... 4 pm சன் லைப்,
    நல்லதொரு குடும்பம்-............................................ 7:30 pm வசந்த் டிவி,
    ஆலயமணி -.................................................. ........... 10 pm ஜெயா மூவியில்,
    காவல் தெய்வம் -.................................................. ... 10:30 pm ராஜ் டிஜிட்டல்,

    நடிகர் திலகத்தின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி மறு ஒளி பரப்பு
    6 pm- 7 pm ஜீ திரை சேனலில்,

    Thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #418
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜி கணேசன் - சில அரிய தகவல்கள் ....
    சிவாஜி கணேசன் மன்றாயர் எனும் உலகப்புகழ்பெற்ற மகா கலைஞனை நடிகர் திலகமாகவும், சிம்மக்குரலோனாகவும் அனைவரும் அறிவோம். சிவாஜி கணேசனின் கொடைத்தன்மையை பற்றி இந்த தலைமுறையினர் முழுமையாக அறிந்திருக்க வாயப்பில்லை.
    சிவாஜி கணேசன் திரைப்படத்தில் மட்டும் அல்லாது நிஜ வாழக்கையிலும் கர்ணனாகவே வாழந்தவர். சிவாஜி கணேசனை போல கொடை பண்பில் சிறந்தவர் வேறு யாரும் இலர் எனும் கூறும் அளவுக்கு, எந்த விளம்பரமும் இல்லாமல் இவர் செய்த கொடைகள் பல.
    இவர் தமிழ் இனத்தின் சொத்து. தமிழ் தாய் ஈன்ற முத்து. சிவாஜி கணேசன் அளித்த கொடைகளில் பொதுவெளியில் பதிவு செய்யப்படாதது பல. வெளி உலகத்திற்கு தெரியவந்தது சில.
    அவற்றை காண்போம்.
    * தமிழக அரசு ஆடும் வைஜெயந்தி மாலாவுக்கு மாதம் ரூ 1000 மும், பாடும் மதுரை சோமுவுக்கு மாதம் ரூ 1000 மும் அளித்துவிட்டு, வறுமையில் வாடிய கக்கன்ஜிக்கு வெறும் ரூ 500 ஐ அளித்தது. அதைக்கண்டு வெகுண்ட சிவாஜி கணேசன் தனது 10 பவுன் தங்க சங்கிலியோடு( இன்றைய மதிப்பில் 2,50,000 ரூ) சேலம் நேரு கலை அரங்கில் " தங்கப் பதக்கம்" நாடகம் நடத்தி கிடைத்த தொகை ரூ 15000 ( இன்றைய மதிப்பு 5 லட்சம்) அளித்தார்.
    * பல கோடிகள் மதிப்புள்ள , தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக அளித்தார்
    * கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட இடத்தை ( 47 சென்ட்) வாங்கி தனது சொந்த செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்து அது நினைவு சின்னமாக திகழ்கிறது.
    * பாண்டிச்சேரி பள்ளிகளுக்கு பகலுணவு நிதியாக ரூ 1 லட்சம்( இன்றைய மதிப்பில் ரூ 51 லட்சம்) அளித்தார்.
    * மதுரையில் சரஸ்வதி பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த பொழுது பாதிக்கப்பட்ட மாணவியருக்கு ரூ 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு ரூ 50 லட்சம்)
    * கோயில் திருப்பணிகளுக்காக கிருபானந்த வாரியாரிடம் பல்லாயிரம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கினார்.
    * தமிழக வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் எம்ஜிஆரிடம் நாடக வசூல் மூலம் ரூ 1 கோடிக்கு மேல் அளித்தார்.( இன்றைய மதிப்பு :11 கோடிக்கு மேல்)
    * சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை அமைத்தார்.தமிழகத்தில் பல பகுதிகளில் அம்பேத்கார் சிலை அமைய தாராளமாக நிதியுதவி செய்துள்ளார்.
    * சென்னை பெசன்ட் நகரிலுள்ள மங்கையர்கரசி மகளிர் மன்றக் கட்டிடத்திற்காக தங்கப்பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.
    * தேசப்பாதுகாப்பு நிதிக்காக தமிழகத்தின் சார்பில் ரூ 5 லட்சம் வசூலித்து கொடுத்தார்.
    * 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1.5 கோடி கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.
    * மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 8.5 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.
    * 1959ல் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் , மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் 70 லட்சம்) வழங்யுள்ளார்.
    * சேலத்தில் தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி அதன்மூலம் வசூலான தொகையில் சேலம் முள்ளுவாடி கேட் அருகில் உள்ள மாவட்ட காங்கரஸ் கமிட்டி கட்டிடத்தை வாங்கிக் கொடுத்தார்.
    * 1962 ல் இந்தியா சீனா போரின் போது பிரதமர் நேருவை சந்தித்து ரூ 40 ஆயிரம் யுத்த நிதியாக கொடுத்த முதல் இந்தியர் சிவாஜிதான்.( இன்றைய மதிப்பு :26 லட்சம்)
    * 1962 ல் இந்தியா சீனா போரின் போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மீண்டும் ரூ 25000 த்தை( இன்றைய மதிப்பு 16 லட்சம்) போர் நிதியாக கொடுத்தார்.
    * 1962ல் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட ராக்கி திரைப்படத்தின் அகில இந்திய ஒரு நாள் வசூல் முழுவதையும் யுத்த நிதியாக அளித்தார்.
    * 1960 களில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 22 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.
    * பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது அப்போதைய குடியரசு தலைவர் ஜாகிர் உசேனை சந்தித்து ரூ 50 ஆயிரத்தை(இன்றைய மதிப்பு 21 லட்சம்) யுத்த நிதியாக அளித்தார்.
    * பெங்களூர் நாடக அரங்கம் கட்ட" கட்ட பொம்மன்" நாடகம் மூலம் ரூ 2 லட்சம்( இன்றைய மதிப்பு 1.5 கோடி) நன்கொடையாக அளித்தார்.
    * பெங்களூர் மக்கள் நலனுக்காக ரூ 15 லட்சம்( இன்றைய மதிப்பு 10 கோடி) நிதியினை வழங்கினார்.
    * கம்யூனிஸ்ட் கட்சிக்காக கட்டபொம்மன் நாடகம் நடத்தி தோழர் ஜீவாவிடம் நிதி உதவி அளித்துள்ளார்.
    * அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலத்தில் திமுகவை வளர்த்தவர்கள் வரிசையில் சிவாஜி கணேசனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
    * திமுகவை வளர்க்க பல நாடகங்களை ஒரு பைசா கூட பெறாமல நடத்திக்கொடுத்தவர் சிவாஜி, மற்றும் பல நாடகங்கள் மூலம் நிதி வசூல் செய்து திமுகவிற்கு அளித்தவர் சிவாஜி என கலைஞர் தனது நூலான நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டுள்ளார்.
    * தேசத்தந்தை காந்திக்கு சிலை, நேருவுக்கு சிலை, இந்திரா காந்திக்கு சிலை, பெரியாருக்கு சிலை, கன்னியாகுமரியின் தந்தை ஐயா நேசமணிக்கு சிலை என நாட்டுக்காக உழைத்தவர்களுக்கு சிலை வைத்து அழகு பார்த்தார் சிவாஜி. பெருந்தலைவர் காமராஜருக்கு தமிழகமெங்கும் சிலைகள் வைத்து பெருமை சேர்த்தார்.
    * தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கட்டிட நிதிக்காக " வியட்நாம் வீடு" நாடகம் மூலம் ரூ 30 ஆயிரம் நிதியை அளித்தார்.( இன்றைய மதிப்பு : 12 லட்சம்)
    * வேலூர் பென்லன்ட் மருத்துவமனை கட்டிட நிதிக்காக வியட்நாம் வீடு நாடகத்தின் மூலம் ரூ 2 லட்சம் நிதி அளித்தார்.( இன்றைய மதிப்பு 80 லட்சம்)
    * தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவராக 8 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது பெரிய நாடக அரங்கம் ஒன்றினை சங்கரதாஸ் சுவாமி பெயரிலும், திரையரங்கம் ஒன்றினை தேவர் பெயரிலும் கட்டினார்.
    * கோயில் நிதி என்றால் ரூ 2 ஆயிரம், வெள்ள நிவாரண நிதி என்றால் ரூ 75 ஆயிரம், பாரதி விழாவிற்கு ரூ 50 ஆயிரம், மருத்துவமனை கட்ட ரூ 50 ஆயிரம், பள்ளிக்கூடம் கட்ட ரூ 25 ஆயிரம், தேச பக்தர்களுக்கு சிலை அமைக்க ரூ 25 ஆயிரம், அறிஞர் பெருமக்களுக்கு பணமுடிப்பு அளிக்க ரூ 10 ஆயிரம் எனவும் அளித்துள்ளார்.
    * சென்னையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமண மண்டபத்தின் கட்டிட நிதிக்காக தங்கப் பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.
    * நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு கோவில் மணி அமைக்கும் முழுச்செலவையும் ஏற்றார்.
    *திருச்சி திருவானைக்கால் கோயில், தஞ்சை பெரிய கோயில், தஞ்சை முத்து மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களுக்கு யானைகளை வழங்கினார்.
    *வல்லக்கோட்டை முருகன் கோயில் திருப்பணிக்காக ரூ 10 ஆயிரம் த்தை கிருபானந்த வாரியாரிடம் அளித்தார்.(இன்றைய மதிப்பில் பல லட்சம்)
    * சென்னை கொசப்பேட்டை கந்தசாமி கோயில் தெப்பக்குளத்தில் செய்த திருப்பணி செலவை முழுமையாக ஏற்றார்.
    * 1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் நிவாரண நிதிக்காக விருது நகரில் தெருத்தெருவாக சென்று பராசக்தி வசனங்களைப் பேசி ரூ 12 ஆயிரம்( இன்றைய மதிப்பில் 10 லட்சம்) வசூலித்துக் கொடுத்தார்.
    * 1957ல் இருந்து 1961 வரை பம்பாயில் நாடகங்கள் நடத்தி குழந்தைகளின் கல்விச் செலவுக்காக ரூ 5 லட்சத்தை ( இன்றைய மதிப்பு 3.5 கோடி) கொடுத்த முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன் தான்.
    * 1960ல் தமிழகம் பெரும்புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, சிவாஜி கணேசன் 1 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 800 மூட்டை அரிசியையும் தானமாகக் கொடுத்தார்.
    * 1961 ல் பிரதமர் நேருவிடம் கிழக்கு தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ 1 லட்சம் கொடையாக அளித்தார். (இன்றைய மதிப்பில் 70 லட்சம்)
    * 1964 ல் மகாராஷ்டிரா கொய்னா பூகம்ப நிதியாக அம்மாநில முதல்வர் ஒய் பி சவானை சந்தித்து ரூ 1 லட்சம் கொடுத்த முதல் இந்திய நடிகர் சிவாஜி தான்.( இன்றைய மதிப்பு 60 லட்சம்)
    * 1964 ல் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில் ஒரு பெரிய கால்நடை மருத்துவமனையை அமைத்துக் கொடுத்து வாயில்லா ஜீவன்கள் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.
    * 1965 ல் பிரதமர் நேருஜி நினைவு நிதியாக ரூ 1.5 லட்சம் கொடுத்தார்.
    ( இன்றைய மதிப்பு 75 லட்சம்)

    * 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-18 தேதிகளில் நீதியின் நிழல், களம் கண்ட கவிஞன் நாடகங்கள் நடத்தி வசூலான ரூ 1 லட்சத்தை யுத்த நிதியாக தமிழக முதல்வர் பக்தவச்சலத்திடம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 55 லட்சம்)
    * 1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டபோது நிதியுதவியாக ரூ 10,000 அளித்தார்.( இன்றைய மதிப்பு :5 லட்சம்)
    * 1967 ஆம் ஆண்டு உலக தமிழ் மாநாடு சிறக்க வள்ளுவர் சிலை அமைத்ததுடன் முதலமைச்சர் அண்ணா அவர்களிடம் ரூ 5 லட்சம் வழங்கினார்.( இன்றைய மதிப்பு : 2.5 கோடி)
    * 1968 ஆம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் கல்லூரியின் கட்டிட நிதிக்காக ரூ 40,000 அளித்தார்.( இன்றைய மதிப்பு 15 லட்சம்)
    * 1968 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி கட்டிட நிதிக்காக ரூ 1,30,000 அளித்தார்.( இன்றைய மதிப்பில் 50 லட்சம்)
    * 1971 ல் இராணுவ வீரர்கள் முகாமில் தானும் தனது மனைவி கமலாவும் இரத்ததானம் செய்து தனது ரசிகர்களிடம் இருந்து பெருந்தொகை வசூலித்துக் கொடுத்தார்.
    * 1972 ல் காஷ்மீர் மாநில முதலமைச்சர் மீர்காசிமை சந்திந்து அம்மாநில தாழத்தப்பட்ட மாணவர்கள் கல்விநிதிக்காக ரூ 25 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 8.5 லட்சம்)
    *1972 ல் ஈரோடு ஸ்தாபன காங்கரஸ் மாநாட்டில் கட்சி நிதியாக ரூ 1.25 லட்சத்தை அளித்தார்.( இன்றைய மதிப்பில் 45 லட்சம்)
    * 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.
    * 1974 ல் சிங்கப்பூர் சிறுநீரக மருத்துவமனைக்கு ரூ 45 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 12 லட்சம்)
    *1974 ல் கடற்படை வீரர்கள் நிதிக்காக அட்மிரல் குல்கர்னி அவர்களிடம் ரூ 50 ஆயிரம் வழங்கினார்.( இன்றைய மதிப்பு 14 லட்சம்)
    * 1975 ஆம் ஆண்டு தன் வீட்டிற்கு வந்து ஆசீர்வதித்த காமராஜரிடம் ரூ 1 லட்சம் பொதுநிதியாக அளித்தார்.( இன்றைய மதிப்பு 30 லட்சம்)
    * பீகாரில் வெள்ளம் ஏற்பட்டபோது பெரும் நிதியை நிவாரண நிதியாக அளித்தார்.
    * 1975 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டபோது நிதியுதவியாக 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 22 லட்சம்)
    * 1977ல் தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபொழுது கொடி நாளுக்காக 1.2 கோடியை வசூலித்து கொடுத்தார்.
    * 1978ல் புயல் நிவாரண நிதியாக மூப்பனாரிடம் ரூ 20 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 4.5 லட்சம்)
    * 1982 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களை இளைய திலகம் பிரபு நேரில் சந்தித்து தன் சார்பில் 25 ஆயிரமும் சிவாஜி கணேசன் சார்பில் ரூ 1 லட்சமும் சத்துணவு திட்டத்திற்கு அளித்தார்.( இன்றைய மதிப்பு 20 லட்சம்)
    * 1993 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் லாட்டூரில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு ரூ 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 10 லட்சம்)
    * 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நிதியாக கலைஞரிடம் ரூ 1 லட்சம் கொடுத்தார்.( இன்றைய மதிப்பு 6 லட்சம்)
    தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம்.
    நடிகர் திலகம் மறைந்த பின்பும், இளைய திலகம் பிரபு குடும்பத்துடன் சென்று வேலூரில் உள்ள பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு சீர் செய்து நன்றி செலுத்தி வருகிறார்கள் என்பது எத்துனை பேருக்குத் தெரியும்!
    சிவாஜி கணேசன் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டு மக்களுக்காக வாரி வழங்க தவறியதில்லை. ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சிவாஜி கணேசன் தமிழுக்கும், இந்திய தேசத்திற்கும், தமிழ் உலகிற்கும் செய்த தொண்டுகள் ஏராளம்.
    (தகவல்கள் : புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை வெளியீடு:- நடிகர் திலகம் 90 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு மலர் 27.01.2019)


    Thanks Ganesh Pandian
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #419
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    யாழ் மாவட்டம் சிவாஜி ரசிகர்களால் நடாத்தப்பட்ட

    நடிகர் திலகத்தின் 92 வது பிறந்தநாள் விழா.

    அன்றைய தினம் ஏழை குழந்தைகளுக்கு கல்வி

    வசதிக்கான் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #420
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 42 of 114 FirstFirst ... 3240414243445292 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •