Page 19 of 114 FirstFirst ... 917181920212969 ... LastLast
Results 181 to 190 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #181
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    1961 ஆம் ஆண்டில் கல்கி புத்தாண்டு மலரில் வெளியான விளம்பரம் இது ...
    இந்த விளம்பரம் சில செய்திகளை தருகிறது .
    வெளிப்படையாக சில ..பார்த்து உணர்ந்து கொள்ள சில ...

    உரிமையாளர்கள் D.சண்முகராஜா -G.உமாபதி என்று இருக்கிறது .
    உமாபதி அவர்கள் பின்னால் ஆனந்த் திரையரங்கின் அதிபர் ஆனார் ..
    நடிகர் திலகத்தின் பெயரோ அவரது குடும்பத்தினர் பெயரோ ஏன் உரிமையாளர் என்று குறிப்பிட படவில்லை ?
    ஒரு வார வசூல் Rs .38,803....
    1961ஆம் ஆண்டில் ...
    அம்மாடியோவ் !....

    காலை எட்டு முதல் இரவு பத்து மணி வரை முன்பதிவு உண்டாம் ..
    கட்டிடத்தின் உச்சியில் பட்டொளி வீசி பறக்கும் தேசிய கொடி ...

    நான் ஏழு மாத குழந்தை அன்று ...
    கல்கி இதழுக்கு நன்றி .






    Thanks Vino Mohan

    ..............................
    சென்னையில் 10 லட்சம் வசூலாகப் பெற்ற முதல் படம் பாவமன்னிப்பு
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #182
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 46-வது படமாக...

    அண்ணன் ஒரு கோயில் 1977


    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
    #வெற்றிப்பட்டியல்
    #பகுதி 46

    சென்னை சாந்தி கிரவண் பவுனேஸ்வரி
    மதுரை நியு சினிமா சேலம் சாந்தி
    திருச்சி பிரபாத் கோவை கீதாலயா
    தஞ்சை அருள் குடந்தை செல்வம்

    என 100 நாள் ஓடிய 9 அரங்குகளில் மட்டுமே
    சுமார் 40 லட்ச ரூபாய் வசூலித்த மெஹா ஹிட் திரைப்படம்

    வெளியான நாள் நவம்பர் 10 1977
    திரையிட்ட அரங்கு நியு சினிமா
    ஓடிய நாள் 100

    மொத்த வசூல்.................3 83 950.58
    நிகர வசூல்.....................1 85 509.16
    வி பங்குது; தொகை....... 0 98 639.59

    சென்னையில் குறுகிய காலத்தில்
    மிகப்பெரிய அளவில் வசூலித்த படம்

    சென்னை சாந்தி..............114 நாள்...9 66 353.30
    சென்னை கிரவண்...........114 நாள்...5 27 633.35
    சென்னை புவனேஸ்வரி...114 நாள்...4 99 381.60

    3 தியேட்டர் 342 நாள் வசூல்............19 93 368.25




    நன்றி நிலா


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #183
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 47-வது படமாக...

    அந்தமான் காதலி 1978


    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
    #வெற்றிப்பட்டியல்
    #பகுதி 47

    இவ் ஆண்டின்(1978)முதல் !00 நாள் காவியம் அந்தமான் காதலி

    வெளியான நாள் ஜனவரி 26 1978
    திரையிட்ட அரங்கு சினிப்பிரியா
    ஓடிய நாள் 100

    மொத்த வசூல்.................3 71 270.35
    நிகர வசூல்.....................1 76 466.29
    வி பங்குத் தொகை..........0 94 515.23

    சென்னை லியோ.................. 43 நாள்.....2 06 193.00
    சென்னை மிடலாண்ட்............57 நாள்......3 53 400.60
    .............................................100 நாள்....5 59 593.60
    சென்னை ராக்ஸி....................100 நாள்...3 96 126.10
    சென்னை மகாராணி...............100 நாள்...3 67 395.50

    சென்னை நகர மொத்த வசூல்.................13 23 115.50



    நன்றி நிலா

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #184
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறுநாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 48-வதாக மெகா ஹிட் திரைப்படமாக....

    தியாகம் 1978


    #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
    #வெற்றிப்பட்டியல்
    #பகுதி 48

    1978 ஆம் ஆண்டில் வெள்ளிவிழா ஓடிய முதல் படம்.
    100 நாட்களை கடந்த 8 அரங்ககளில் மட்டுமே
    44 லட்சம் ரூபாய்களை வசூலித்த Mega hit movie

    வெளியான நாள் மார்ச் 4 1978
    திரையிட்ட அரங்கு சிந்தாமணி
    ஓடிய நாள் 175

    மொத்த வசூல்.................6 74 112.97
    நிகர வசூல்.....................3 28 186.55
    வி பங்குத் தொகை..........1 72 434.49

    சென்னை சாந்தி..............104 நாள்...8 79 805.10
    சென்னை கிரவண்...........111 நாள்...5 07 433.90
    சென்னை புவனேஸ்வரி....114 நாள்...4 84 331.15

    3 தியேட்டர் 329 நாள் வசூல்.............18 71 570.15
    கோவை கீதாலயா.104 நாள்..............6 43 911.65
    மதுரை சிந்தாமணி 175 நாள்............6 74 112.97
    திருச்சி யூப்பிட்டர்...125 நாள் ............5 34 168.55
    சேலம் சாந்தி ..........118 நாள்............4 45 954.20
    நெல்லை பார்வதி....104 நாள்............2 58 015.00



    நன்றி நிலா


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #185
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மதுரை மாநகரில் அய்யன் நடித்த கறுப்புவெள்ளை படங்களில்
    150 நாட்களுக்குமேல் ஓடிய 5 படங்கள்.....

    1) மனோகரா ஶ்ரீதேவி-156 நாட்கள்

    2) சம்புர்ண ராமாயணம் ஶ்ரீதேவி -165 நாட்கள்

    3) பாகப்பிரிவினை சிந்தாமணி - 216 நாட்கள்

    4) பாசமலர் சிந்தாமணி--164 நாட்கள்

    5) பட்டிக்காடா பட்டணமா? சென்ட்ரல்-182 நாட்கள்



    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #186
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    1968 ல் சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் போது தமிழ் அறிஞர்களின் திரு உருவச்சிலைகள் மெரினா கடற்கரையில் நிறுவுவதென அன்றைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களது தலைமையில் முடிவு எடுக்கப்பட்டது,
    உலகத் தமிழ் மாநாட்டை சிறப்பிக்கும் விதமாக நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் விழாவிற்கு நிதியாக ரூ 5 லட்சம் அளித்ததோடு திருவள்ளுவர் சிலையையும் தனது சொந்த செலவில் நிறுவுவதாக அறிவித்தார்,
    அதன்படி திருவள்ளுவர் சிலைக்கு தானே முன் மாதிரி மாடலாக நின்று சிலை உருவாக்கும் பணிக்கு துனை நின்றார்,

    (இணைப்பில் காண்பது மெரினாவில் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கும் திருவள்ளுவர் திருஉருவச்சிலை)


    Thanks Sekar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #187
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அன்னை இல்லத்துக்கு 1960-ல் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டது. வீட்டிற்கு புதுக்குடித்தனம் வந்தவுடன் குழந்தைகளுக்கு காதுகுத்தும் விழாவும் நடத்தப்பட்டது.
    அப்போது வீட்டுக்குப் பின்புறம் ஒரு பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது. விழா முடிந்து நான்கு நாட்கள் கழித்து சென்னையில் அடைமழை...!
    அக்கம் பக்கத்தில் வசித்து வந்த குடிசைவாசிகள் அன்னை இல்லத்திற்கு வந்து நடிகர்திலகத்திடம் உதவி கேட்டனர். அவரும் அவர்களுக்கு அரிசி உதவி கொடுக்கச் சொன்னார்.ஆனால், அரிசியை வாங்கி எங்கே சமைத்து சாப்பிடுவது?
    அதனால், போடப்பட்டிருந்த பெரிய கொட்டகையில், குடிசைவாசிகளுக்கு சமையல் செய்யச் சொன்னார் நடிகர்திலகம்.
    முதல்நாள் 300 பேருக்கு என ஆரம்பித்து அடுத்தநாள் 1000 பேர்.... அப்புறம் 2000... பிறகு 10000 என்று கூட்டம்வர ஆரம்பித்தது. அதனால், சமையல் செய்து ஓட்டலில் இருந்து ஊழியர்களை வரவழைத்து சாதம் பொட்டலங்களாக கட்டினார்கள். முப்பது அடுப்புகள் வைத்து சாதம் தயார் ஆனது. அதற்கேற்ப உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வண்டிகள் பணியாற்றின.
    இந்தமாதிரி தொடர்ந்து 5 நாள் மழை பெய்தது. அந்த ஐந்து நாளும், மூன்று வேளைகளும் சாதம், பொட்டலங்களாக கட்டி போட்டார்கள்.
    பெருந்தலைவர் காமராசரும், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் அப்போது சாப்பாடு தயாராகும் இடத்திற்கே வந்து, சாப்பாட்டை ருசிபார்த்து நடிகர்திலகத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
    *****1987 அக்டோபர் பொம்மை இதழில், திரு. திருக்கோணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து....

    Thanks Ramaiah Narayanan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #188
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜியின் கொடைத்திறமையை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 1959 ஏப்ரல் 29ஆம் தேதி வெளியான "குயில்" ஏட்டில் புகழ்ந்து பாடிய கவிதை இதோ....
    "பள்ளியில் மாணவர்கள்
    பகலுண வுண்ணும் வண்ணம்
    அன்று ஓர் இலக்கம் ஈந்த
    அண்ணல் கணேசர் இந்நாள்
    புள்ளினம் பாடும் சோலை
    மதுரையின் போடி தன்னில்
    உள்ளதோர் தொழிற்பயிற்சி
    பள்ளிக்கும் ஈந்து வந்தார்
    இன்றீந்த வெண்பொற் காசுகளோ
    இரண்டரை இலக்கமாகும்
    நன்றிந்த உலகு மெச்சும்
    நடிப்பின் நற்றிறத்தால் பெற்ற
    குன்றொத்த பெருஞ் செல்வத்தை
    குவித்தீந்த கணேசனார் போல்
    எந்தெந்த நடிகர் செய்தார் ?
    இப்புகழ் யாவர் பெற்றார்?"
    -புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

    Thanks Ramaiah Narayanan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #189
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இணைப்பில் உள்ள படங்களுக்கெல்லாம் விளக்கம் சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன்,
    சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்,
    சுதந்திர இந்தியாவின் முதல் துனைக் குடியரசு துணைத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,
    ஆகியோரது பிறந்த நாள் இன்று,
    நடிகர் திலகம் பங்கு பெறாத தேசத் தலைவர்களே இருக்க முடியாது,


    Thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #190
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மீண்டும் ஒரு முறை கர்ணன் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன்,
    கர்ணன் 2012'ஆம் வருடம் டிஜிட்டலில் வந்து அமர்க்களப்படுத்தி புதிய திரைப்படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி பெரும் வசூலைக் குவித்து ஒட்டுமொத்த திரையுலகினரையும் திகைக்க வைத்ததோடு டிஜிட்டல் யுகத்திற்கான புதியதோர் வழி காட்டுதலை ஏற்படுத்தியது
    கர்ணனை நான் கண்ட விதம் பற்றி எழுதுகிறேன்,
    ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் அளவிற்கு மதிப்பிற்குரிய திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்கள் தினத்தந்தியில் அடிக்கடி அரைப் பக்க அளவிற்கு புதிய படங்களுக்கும் மேலாக விளம்பரங்களை தொடர்ந்து கொடுத்து வந்தார், அன்றைய நாட்களில் கர்ணனின் விளம்பரத்திற்காக மட்டுமே தினத்தந்தி பேப்பரை வாங்கிய நடிகர் திலகத்தின் ரசிகர்களில் நானும் ஒருவன்,
    தொடர்ந்து டிரெய்லர் வெளியீடு நடந்தது, டிரெய்லர் வெளியீடு நடந்த அரங்கில் நுழைய முடியாமல் போன அனுபவத்தை பெற்றிருந்தேன், இன்றைய நாட்களில் முகநூல் தொடர்பு போல அப்போது பெற்றிருக்கவில்லை,
    கர்ணன் வெளியாகும் தேதி உறுதியான பிறகு தியேட்டரில் பார்த்து விட பெரும் ஆவலோடு காத்திருந்த நான் முதன் முதலாக ஆன்லைன் புக்கிங் செய்ய ஆசைப்பட்டு நான் பணி புரிந்து வரும் அலுவலகத்தில் சும்மாவாகவே எல்லோரையும் சீண்டி விடுவேன் " 16 ந்தேதி கர்ணன் ரிலீஸ் டிக்கெட் இருக்கா கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் " அவர்களும் கம்ப்யூட்டரில் பார்த்து ஆச்சர்யமாவார்கள் என்ன சார் சிவாஜிக்கு இன்னமும் இத்தனை பெரிய எதிர்பார்ப்பா? எல்லா தியேட்டர்களும் ஹவுஸ்புல் ஆகி இருக்கிறதே? அவர்கள் அப்படி கேட்கும் போது நமக்குத் தான் எத்தனை பேரின்பம், இந்தச் செயல் முதல் வாரத்தில் தொடங்கி இடம் மாறி இடம் மாறி அனைவரையும் சீண்டி அவர்களிடமிருந்து கர்ணனை பற்றி பேச வைத்துவிடுவேன்,
    என் அலுவலகத்தோடு மட்டுமே நிறுத்திக் கொள்ளவில்லை இன்டெர்நெட் மையங்களில் வேண்டுமென்றே கர்ணன் டிக்கெட் புக் செய்ய வேண்டும் என கேட்பேன் அவர்களும் ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் என்பார்கள், நானோ எனக்கு அவ்வளவு நேரமெல்லாம் வேண்டாம் சார் நீங்களே கர்ணன் டிக்கெட் புக் செய்து கொடுத்து விடுங்கள் என்பேன் அந்த உரிமையாளரும் உடனே அலசுவார் எந்தத் தியேட்டரிலும் டிக்கெட் இல்லாமல் இருப்பதைக் கண்டு புருவத்தை உயர்த்தி ஆச்சர்யப் பார்வை பார்த்ததை என்றும் மறக்க முடியாத நினைவு,
    இந்த சூழலில் நான் ஆன் லைன் டிக்கெட் கேட்டிருந்ததை எனது அலுவலக நண்பர் ஞாபகத்தில் வைத்து அந்த வார ஞாயிறு மார்ச் 18 மாலைக் காட்சி என அபிராமி தியேட்டரில் அவருக்கும் சேர்த்து மூன்று டிக்கெட்டை பிடித்து விட்டார்,
    இடைப்பட்ட நேரங்களில் தியேட்டர் ஹவுஸ்புல் எனத் தெரிந்தும் சாந்தி தியேட்டருக்கு வெறுமனே போன் செய்வேன் " சார் கர்ணன் படம் டிக்கெட் வேண்டும் " என்பேன் எதிர்முனையில் " இன்னமும் ஒரு வாரத்திற்கு டிக்கெட் இல்லை " என்பார்கள், இதில் நமக்கு ஒரு சந்தோஷம்,
    கர்ணன் ரிலீஸ் வெற்றி உற்சவத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன், அந்த வார இறுதி ஞாயிறு அபிராமி தியேட்டருக்கு செல்வதற்கு முன் சாந்தி தியேட்டரில் ஆஜர் ஆகினேன், அப்பப்பா என்னா கொண்டாட்டம், வெடி, பேண்டு வாத்தியம் சிங்கத் தமிழன் சிவாஜி வாழ்க என்ற வின்னைத் தொடும் முழக்கங்கள் இவற்றையெல்லாம் பார்த்த எனக்கு புதிய உலகத்திற்கு வந்ததைப் போன்ற சிலிர்ப்பு, இவர்கள் எல்லாம் எங்கிருந்தார்கள், இத்தனை உயிர் நாடியாய் நடிகர் திலகத்தை ஜீவிக்கும் இந்தப் பக்தர்களை இவ்வளவு நாள் நான் எப்படி காணாமல் இருந்தேன், பக்தர் ஒருவர் வேலூர் ராஜாவில் படம் பார்த்த கையோடு மாலைக் காட்சியை சாந்தியில் பார்த்து விட டிக்கெட் கேட்டு அலைந்துக் கொண்டிருந்தார், அலைகடலென திரண்ட கூட்டம் கர்ணனை கொண்டாடுகிறது,
    பிளாக்கில் டிக்கெட் வாங்கி சாந்தி தியேட்டரிலேயே படம் பார்க்க ஆசைப்பட்டு டிக்கெட் எவ்வளவு? என்றேன் ஒரு டிக்கெட் 400 ரூபாய் என்றார்,,

    என்னிடம் அபிராமி தியேட்டரின் டிக்கெட் இருந்ததால் கர்ணன் எய்ய இருக்கும் நாகாஸ்திரத்தை காண அபிராமிக்கு வேக மெடுத்தேன்,
    தொடர்ச்சி இருக்கிறது...

    Thanks Sekar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 19 of 114 FirstFirst ... 917181920212969 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •