நடிகர் திலகத்தின் உயரிய பண்பு ����
நன்றி தினத்தந்தியின் மூத்த ஊழியர் சொன்னது ����
புதிய பறவை யின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்த நேரம் நடிகர் திலகம் அங்கேயே தங்கி நடித்துக் கொண்டிருந்தார்​ ஒரு நாள் அவருடைய விலை உயர்ந்த கெடிகாரம் திருட்டுச் போய் விட்டது . கெடிகாரம் போய் விட்டதே என்று நடிகர் திலகம் வருந்தவில்லை. நன்பர் ஒருவரின் நினைவாக அணிந்திருந்த பொருளை இழந்து விட்டோமே என்று வருந்தினார்.சில மணி நேரங்களில் அந்த கெடிகாரம் கிடைத்து விட்டது! அதை எடுத்து ஒளித்து வைத்திருந்தவர் ஸ்டூடியோவைச் சேர்ந்த ஒரு தொழிலாளி. அவனை மற்ற தொழிலாளர்கள் கையும் களவு மாகப் பிடித்து, நடிகர் திலகம் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். நடிகர் திலகம் ஏதோ பெரிய தண்டனை கொடுக்கப் போகிறார், அல்லது போலிசாரிடம் ஒப்படைக்கப் போகிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். பிடிபட்ட தொழிலாளியும் அவ்வாறுதான் நினைத்தான். அவன் உடல் வெடவெ என்று நடுங்கிக் கொண்டிருந்தது .
அவனை நடிகர் திலகம் தன் அருகே அழைத்தார். " ஏம்பா இப்படி செய்தே! உனக்கு பணக் கஷ்டம்னா என்னிடம் சொல்லியிருக்கலாமே! என்று கூறியபடி, தன் சட்டைப் பைக்குள் கையை விட்டு 2 ஆயிரம் ரூபாயை எடுத்தார். " இந்தா இதை வைத்து கொள் இனி திருடமாட்டேல்ல!" என்று கூறியவாறு, அந்த பணத்தை தொழிலாளியிடம் கொடுத்தார்.தன்னைப் போலீசில் ஒப்படைக்கப் போகிறார்கள் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த அந்த தொழிலாளி, நடிகர் திலகம் 2 ஆயிரம் ரூபாயை கொடுத்து பரிவுடன் பேசியதைக் கண்டு திகைத்து, அவர் காலில் விழுந்தான்.
" இனி செத்தாலும் சரி, நான் திருட மாட்டேன்.இது சத்தியம்" என்று கண்ணீர் மல்க தழுதழுத்த குரலில் கூறினான். கூடியிருந்தவர்கள் இக்காட்சியை கண்டு மெய் சிலிர்த்து போனார்கள் தினத்தந்தியின் மூத்த ஊழியர் மூலம் இந்த நிகழ்ச்சியை அறிந்த நானும் உள்ளம் நெகிழ்ந்தேன்������ ����.நடிகர் திலகத்தின் இளகிய நெஞ்சத்தை மனித நேயத்தை உணர்த்த இந்த ஒரு நிகழ்ச்சியே போதுமானதாகும்


Thanks Devakottai Dolphin AR Ramanathan நடிகர்திலகம் ரசிகர்கள் குழு international shivaji fans