Page 80 of 210 FirstFirst ... 3070787980818290130180 ... LastLast
Results 791 to 800 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #791
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அறிஞர் அண்ணாவுக்குச் சிலை வைக்க நினைத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணாவைப் போட்டோ எடுத்துவரச் சொன்னார். புகைப்படம் எடுப்பவரிடம் அண்ணா 5 விரலைக் காட்டி புகைப்படம் எடுக்கச் சொன்னார். அதற்கு,” உங்களை ஒரு விரல் காட்டித்தான் படம் எடுத்து வரச் சொன்னார். ” என்றார் போடோகிராபர். அண்ணாவுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ”சரி, தம்பி ராமச்சந்திரன் சொன்னால், அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ” என்று ஒரு விரல் காட்டி, போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார். பிறகு புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரைப் பார்த்தபோது, ”ஐந்து விரலை விரித்துக் காட்டினால், நம் கழகத்தின் சின்னத்தைக் குறிக்கும். ஒரு விரலை காட்டினால் என்ன அர்த்தம்?” என்று கேட்டார். ”ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்ற உங்கள் பொன்மொழியை மக்கள் புரிந்து கொள்வார்கள். ” என்றார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சிலாகித்துப்போன அண்ணா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பாராட்டி மகிழ்ந்தார்..........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #792
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*(02/09/20)அளித்த*தகவல்கள்*
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கை முறை, அவர் வாழ்ந்த விதம் ,*ஆகியவற்றின் மூலம் திரைப்படங்களில் மக்களுக்கு தான் கற்ற, அறிந்த செய்திகளை வாத்தியாராக இருந்து கொண்டு போதித்து வந்தார் .


    தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். ஒரு முறை தஞ்சை அரண்மனைக்கு விஜயம் செய்ய வருகிறார் .அவரை வரவேற்க தஞ்சை மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் வருகின்றனர் .தஞ்சை அரண்மனையை அவர் பார்வையிடுகிறார் .பார்த்துவிட்டு வரும்போது குறிப்பிட்ட* இடத்தில ஒரு சுரங்க பாதை ஒன்று இருக்கிறது என்கிறார் . ஆனால் அதிகாரிகள் மாவட்ட அலுவலக ஆய்வின்படி அப்படி ஒன்றுமில்லை என்கிறார்கள் .அப்படி இல்லை. என்று கூற முடியாது .எனக்கு தெரிந்த வகையில் இருக்கிறது என்றுதான் சொல்லமுடியும் .அதிகாரிகளான நீங்கள் தான் சரியாக ஆய்வு செய்து கூற வேண்டும் என்றார் .அதிகாரிகள் இது குறித்து உடனடியாக தொல்பொருள் ஆராய்ச்சி துறை மூலம் ஆய்வு செய்து தங்களுக்கு தெரிவிக்கிறோம் என்றார்கள் . எம்.ஜி.ஆர். முதல்வராவதற்கு முன்பு எத்தனையோ மன்னர்கள் ஆண்டார்கள். முதல்வர்கள் ஆட்சியில் இருந்தார்கள் .யாருக்கும் இதுபற்றி தெரியவில்லை .கண்டுபிடிக்கவும் இல்லை .ஆனால் எம்.ஜி.ஆர். முதல்வராக வந்து விஜயம் செய்துகண்டுபிடித்து* சொன்ன பிறகுதான் இந்த விஷயம் மக்களுக்கு தெரியும்* வகையில் வெளிச்சத்துக்கு வந்தது, கண்டுபிடிப்பதற்கும் வழி ஏற்பட்டது .


    கதாநாயகர்கள் காலால் சண்டையிடுவது ,உதைப்பது என்பதெல்லாம் நடிகர் விஜயகாந்த் சினிமாவில் நுழைந்த பிறகுதான் பிரபலம் என்று பலர் பேசுவதுண்டு .ஆனால் உண்மை அதுவல்ல .* அதற்கும் முன்னோடி எம்.ஜி.ஆர்தான் .எங்கள் தங்கம் படத்தில் ஒரு காட்சியில் ஜெயலலிதாவை மறித்து நகைகளை பறிக்கும் காட்சியில் அந்த இடத்திற்கு வரும் எம்.ஜி.ஆரும்* ,சோவும்* ஸ்டண்ட் நடிகர்கள் குண்டுமணி,மற்றும் புத்தூர் நடராஜனிடம்* நகைகளை கேட்கும்போது ஏற்படும் வாதத்தில் நாங்கள் அரை* பங்கை கொடுத்து விடுகிறோம் எனும்போது ,சோ சொல்லுவார் . நீங்கள் கொடுத்து அண்ணன் வாங்கி கொள்ள மாட்டார் .வேண்டுமானால் அண்ணன் கொடுப்பார் நீங்கள் வாங்கி கொள்ளுங்கள் என்பார் .அப்போது இவர்களுக்கு அரை எதற்கு கால் ஒன்றே போதும் என்று சொல்லி எம்.ஜி.ஆர். காலால் உதைத்து சில நிமிடங்கள் அவர்களுடன் சண்டை போடுவார் .

    எம்.ஜி.ஆர். ஆரம்ப காலத்தில் இருந்தே சண்டை காட்சிகளில்* புதிய புதிய மரபு சார்ந்த ஆயுதங்களை பயன்படுத்துவது, புதிய புதிய யுக்திகளை கையாளுவது*என்பதில் முனைப்பாக இருந்தார் .உதாரணத்திற்கு ரிக்ஷாக்காரன் படத்திற்கு சுருள்வாள் வீசி சண்டை காட்சியில் நடித்திருப்பார் . சுருள்வாள் வீசுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல .பார்வையாளர் ஒருவர் .சுருள்வாள் வீசும்போது அந்த காட்சியை பார்த்து இது என்ன பிரமாதம் என்று விமர்சனம் செய்வது மிக எளிது . ஆனால் அதை சுயமாக வீசி பார்த்தால்தான்* அதிலுள்ள சிரமங்கள் தெரியும்* ஏனென்றால் சுருள்வாள் வீசுபவர் அந்த சமயத்தில் அவரே பலமாக காயப்படக்கூடிய சூழ்நிலை உள்ளது இந்த காட்சியில் எம்.ஜி.ஆர். ஒரு பெரிய மேஜை மீது முட்டிகள் போட்டு, மிகவும் விறுவிறுப்பாக, சுறுசுறுப்பாக*வீராவேசமாக,அதே சமயத்தில் அநாயாசமாக* பல நிமிடங்கள் காட்சியில் நடித்து ரசிகர்களை பிரமிக்க செய்தார் .அந்த காட்சியில் அரங்கத்தில் கைதட்டல்கள் அடங்க வெகுநேரமாகியது .தமிழ்த்திரையுலகில் இந்த மாதிரி சுருள்வாள் வீசி சண்டை காட்சியில்**பிரமிக்கத்தக்க வகையில் வேறு எந்த நடிகரும் இதுவரை நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது .*


    எம்.ஜி.ஆர். உழைக்கும் கரங்கள் படத்தில் மான் கொம்பு ஒன்றுடன் சண்டையிடும் காட்சி ரசிகர்களால் மறக்க முடியாதது .அந்த படம் வெற்றியடைந்ததற்கு முக்கிய காரணம் அந்த சண்டை காட்சிதான் என்று**அந்த காலத்தில் பேசப்பட்டது .* மான்கொம்பூ சண்டை என்றாலே என்னவென்று தெரியாத ஒரு சமூகம் இருக்கிறது . இந்த மான்கொம்பு சண்டை என்பது நமது முன்னோர்கள் அறிந்திருந்த பாரம்பரிய சண்டைக்கலை . இந்த கலையை மக்கள் மனதில் நிலைநிறுத்தவும், மக்களுக்கு நினைவுபடுத்தவும் இந்த சண்டை காட்சியை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார் . இந்த காட்சியிலும் மிகவும் விறுவிறுப்பாக, சுறுசுறுப்பாக,,சிலம்ப நடையுடன் ,பாவனைகள், அபிநயங்கள் காட்டி* ,அபாரமாக நடித்திருப்பார் எம்.ஜி.ஆர். இந்த காட்சி திரையில் சுமார் 10 நிமிடங்கள் வரை ஓடும். ஆனால் ரசிகர்கள் /பக்தர்கள் கைதட்டல்கள், விசில்சத்தம்* தொடர்ந்து எழுந்தவண்ணமிருக்கும் .* இந்த மாதிரியான சண்டை காட்சியிலும் தமிழ் திரையுலகில் வேறு எந்த நடிகரும் இதுபோல் நடித்து சாதித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம்*. சென்னை சாந்தம்,ஸ்ரீகிருஷ்ணா, உமா, கமலா அரங்குகளில் வெளியானது ..***சாந்தம் அரங்கில் 75 நாட்கள் (தினசரி 4 காட்சிகள் )-* *ஸ்ரீகிருஷ்ணாவில் 82 நாட்கள் (தொடர்ந்து 100 அரங்கு நிறைந்த காட்சிகள் ) உமாவில் 68நாட்கள் ஓடியது . சேலம் அலங்காரில் 96 நாட்கள் ஓடியது .சுமார் 25 அரங்குகளுக்கு மேல் 50 நாட்கள்* கடந்து ஓடியது .


    எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த ராஜகுமாரியில் இருந்து மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை (1947 முதல் 1978 வரை) பல படங்களில் கத்தி சண்டை, வாள் சண்டை காட்சிகளில் நடித்து அசத்தியிருப்பார் .* பல படங்கள் இவரது சண்டை காட்சிகளுக்காகவும், கத்தி சண்டை, வாள் சண்டைகளுக்காகவும் பெரும் வெற்றி பெற்று , ரசிகர்கள், பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளன . எம்.ஜி.ஆர்., நம்பியாருக்கு அடுத்து தமிழ் திரையுலகில் அபாரமாக கத்தி சண்டை, வாள் சண்டை காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் எவருமிலர் .இவர்கள் இருவரும் முறைப்படி சண்டைக்கலை யுக்திகளை அறிந்தவர்கள்*.பல படங்களில் இவர்கள் இருவரும் மோதும் காட்சிகளில் அனல் பறக்கும் .ரசிகர்களின் ஆரவாரம் ,கைதட்டல்கள் பலமாக இருக்கும் . உதாரணத்திற்கு*சர்வாதிகாரி,நாடோடி மன்னன் , பாக்தாத் திருடன் , அரசிளங்குமரி ,கலையரசி , ஆயிரத்தில் ஒருவன் ,அரச கட்டளை, மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய படங்கள் .நீரும் நெருப்பும் படம் எம்.ஜி.ஆர் மணிவண்ணன் வேடத்தில் நல்லவனாகவும், கரிகாலன் வேடத்தில் வில்லனாகவும்இரு வேடங்களில்* நடித்து அசத்தியிருப்பார் . மணிவண்ணன் எப்போதும் இடது கையில் சிரித்துக் கொண்டே சண்டையிடுவார் . கரிகாலன் எப்போதும் கோபமாக, முரட்டுத்தனத்துடன் ,ஆக்ரோஷமாக வலது கையில் சண்டை போடுவார் . இருவரும் ஒட்டி பிறந்த , உடன்பிறந்த சகோதரர்கள் . ஆனால் இரு வேறு குணங்கள் . ஆகவே எம்.ஜி.ஆரை பொறுத்தவரையில் இது வழக்கத்திற்கு மாறான சற்று வித்தியாசமான படம் .கத்தி சண்டையில் ஒரு நேர்த்தி, அழகு, நளினம் எல்லாவற்றையும் காட்டி நடித்திருப்பார் கத்தி சண்டை காட்சிகளை ஒரு நடன காட்சிக்கு ஈடாக செய்திருப்பார் .


    ஆங்கில படங்களில் உபயோகப்படுத்தும் கத்தியான sword ஒரு மாதிரியான வடிவில் இருக்கும் . அதே போல தமிழ் சினிமாவில் கத்திகள், வாள்கள் எப்படி இருக்கும் ,அதை எப்படி வீச வேண்டும் என்பதில் முறையான தேர்ச்சி பெற்றவர் எம்.ஜி.ஆர். அந்த காலத்தில் பலர் பேசுவதுண்டு .அதாவது ஆங்கில நடிகர் ஏரால்*பிளைன் என்பவர் கத்தி சண்டை ,வாள் சண்டை காட்சிகளில் நடிப்பதில் வல்லவர் .அவரை போல் எம்.ஜி.ஆர். நடிக்கிறார் என்று .ஆனால் தான் எழுதிய சுய சரிதையான நான் ஏன் பிறந்தேன் என்கிற தொடரில் ,தனக்கும், ஏரால்* பிளைன் என்பவருக்கும் கத்தி சண்டை ,வாள்* சண்டை* காட்சிகளில் நடிப்பதில் உள்ள வித்தியாசங்கள் பற்றி* தெளிவாக எழுதி இருக்கிறார் .எம்.ஜி.ஆர். சண்டை கலைகளை முறையாக* பயின்றதால் ,சிலம்பம், கம்பு சண்டை, குத்து சண்டை ,கத்தி சண்டை, வாள் சண்டை காட்சிகளில் எதிரிகளுடன் போராடி நடிப்பது*அவருக்கு கைவந்த கலையாக இருந்தது . அந்த காட்சிகளை ரசிகர்கள் /பக்தர்கள்ஏன் பொதுமக்கள் கூட நல்ல வரவேற்புடன் ,ரசித்து மகிழ்ந்தார்கள் .இதனால்தான் எம்.ஜி.ஆர். படங்களை மீண்டும் மீண்டும் ரசிகர்கள் பார்க்க ஆர்வமாக இருந்தார்கள் .இதற்கு காரணம் எம்.ஜி.ஆருக்கு* முன்பும், பின்பும் நடித்தவர்கள் கூட கத்தி சண்டை, வாள் சண்டை காட்சிகளில் நடித்த நடிகர்கள் பலருண்டு .ஆனால் எம்.ஜி.ஆர். போல சோபித்தவர்கள் எவருமிலர் . இதை பல நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் ,தயாரிப்பாளர்கள் தங்களது பேட்டியில் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்கள் .எம்.ஜி.ஆரின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம் ,சினிமா தொழில் மீது இருந்த பக்தி, பற்று, அக்கறை, ஈடுபாடு, அர்ப்பணிப்பு ,கற்று கொள்ளும் ஆர்வம் ,பல கலைகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கம் ,ஆகியவைதான் .அந்த காலத்தில் பலர் சொல்வார்கள் எம்.ஜி.ஆர். அட்டை கத்தி வீசுவதில் வல்லவர் என்று கிண்டலும் , கேலியும் பேசியதுண்டு . உண்மையில் அட்டை கத்தி வைத்து சண்டை காட்சியில் நடிக்க முடியாது . மரக்கட்டையில் கத்தி வைத்தும் ,உலோகத்தில் கத்தி வைத்தும் பயன்படுத்தி இருப்பார்கள் .இதை*எம்.ஜி.ஆர். தனது சுய சரிதையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
    -------------------------------------------------------------------------------
    1.மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றது -தாயை காத்த தனயன்*

    2.சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர். - எங்கள் தங்கம்*

    3.அதிசயம் பார்த்தேன் மண்ணிலே - கலையரசி*

    4.சுருள்வாள் சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர்.-ரிக்ஷாக்காரன்*

    5.மான் கொம்பு சண்டை காட்சி - உழைக்கும் கரங்கள்*

    6.கடவுள் வாழ்த்து பாடும் - நீரும் நெருப்பும்*

    7.எம்.ஜி.ஆர்.-நம்பியார் சண்டை காட்சி - கலையரசி*

  4. #793
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் தலைவரும் இயக்குனர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களும் நல்ல நட்பில் இருக்க..

    அவர் காங்கிரஸ் இயக்கத்தில் அதிக நாட்டம் கொள்ள தலைவர் வேறு திசையில் பயணிக்க தலைவர் பற்றி மற்றவர்களை போலவே தரக்குறைவாக பேச ஆரம்பிக்க.

    மதுரைக்கு வந்து இருந்த அவருக்கு நம் தலைவர் ரசிகர்கள் கோவத்தில் சிறப்பு வழிபாடு நடத்த...விஷயம் அறிந்த தலைவர் நிகழ்வை கண்டிக்க.

    ஆத்திரத்தில் தன் தாக்குதலை தலைவர் மீது அதிக படுத்தினார் கே.எஸ்.ஜி.

    பணமா பாசமா படத்துக்கு ரஷ்ய நாட்டு கலைவிழாவில் அந்த படம் திரை இட பட அங்கே போய் இருந்தார் அவர்.

    இங்கே சென்னையில் மொட்டை மாடியில் விளையாடி கொண்டு இருந்த அவரின் கடைசி மகன் 5 வயது குமார் நிலை தவறி தலை குப்புற கீழே விழ.

    மண்டை உடைந்து பலத்த காயங்கள் உடன் சென்னை அரசு மருத்துவ மனைக்கு அந்த குமார் அனுமதிக்க பட.

    பதறி பறந்து செல்கிறார் தலைவர்.
    மருத்துவமனை டீனை சந்தித்து நல்ல சிகிச்சை செய்யுங்கள் என்ன மருந்து வேண்டுமானாலும் எங்கு இருந்தும் கொண்டு வந்து சிகிச்சை செய்யுங்கள்.

    அனைத்து அதிக செலவுகளுக்கும் நான் பொறுப்பு என்று சொல்ல...அனுதினமும் குமார் உடல் நலம் பற்றி தலைவர் விசாரிக்க.

    அடுத்தவந்த நாட்களில் அந்த குமார் நலம் அடைந்து வீடு திரும்ப.

    ரஷ்ய நாட்டில் இருந்து விழா முடிந்து வந்த கே.எஸ்.ஜி. அவர்களிடம் அவர் மனைவி கண்ணீர் மல்க ஏங்க நம் பையன் குமார் உயிருடன் இருக்க பெரும் உதவி செய்த புண்ணியவான் மனித தெய்வம் எம்ஜிஆர் அவர்களும் ஒரு முக்கிய காரணம் இன்றி சொல்ல...வாய்அடைத்து போகிறார் அதன் பின் கே.எஸ்.ஜி.அவர்கள்.

    அவர்தான் தலைவர்.
    அன்னை சத்தியாவின் புதல்வர்...வாழ்க அவர் புகழ்...நன்றி..தொடரும்..........

    உங்களில் ஒருவன்...

  5. #794
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #பெரியார் மீது #எம்ஜிஆருக்கு மிகுந்த மதிப்பு உண்டு.

    1978-79-ல் எம்.ஜி.ஆர்.ஆட்சியில் பெரியார் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரியார் நினைவுத் தூண் எழுப்பப்பட்டது.

    பெரியாரின் பொன்மொழிகள் நூல் வடிவில் கொண்டுவரப்பட்டன. அவரது வாழ்க்கை வரலாறு மாவட்ட தலைநகரங்களில் ஒளி-ஒலி காட்சியாக நடத்தப்பட்டது.

    பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை எம்.ஜி.ஆர். அமல்படுத்தினார். அதுவரை அதை
    கண்டுகொள்ளாதிருந்த கருணாநிதி,
    எம்.ஜி.ஆர். ஆட்சியில் அறிமுகமானது
    என்பதற்காக 'முரசொலி'யிலோ,
    தி.மு.க. சார்பு விசயங்களிலோ உடனே பயன்படுத்தாமல், காலம் தாழ்த்தி செய்தார். இதை பகுத்தறிவு (!) பீரங்கிகள் கி.வீரமணியிடம் கேட்க
    வேண்டும்.
    தமிழ் நாளிதழ்களில் 'தினமலர்' எழுத்து
    சீர்திருத்தத்தை முதன் முதலில் பயன்படுத்தி பெருமை பெற்றது.

    சென்னையில் #பெரியார் அவர்களின் உருவச்சிலையை தன்னுடைய முதல் ஆட்சி காலத்தில் 17 செப்டம்பர் 1977-ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் #எம்ஜிஆர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள, அன்றைய மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர்
    #பாபு_ஜெகஜீவன்ராம் திறந்து வைத்தார்.

    இந்த சிலையை தி.மு.க.வினர் கண்டு கொள்வதேயில்லை.

    1979-ம் ஆண்டு பெரியார் பிறந்த நாளில் ஈரோட்டை தலைநகராகக் கொண்டு பெரியார் மாவட்டத்தை உருவாக்கினார் எம்.ஜி.ஆர்.

    இருவருக்குமே டிசம்பர் 24-ம் தேதிதான் நினைவு நாள்!
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    இங்கேயுள்ள புகைப்படத்தில், வேலூர்
    சி.எம்.சி.மருத்துவமனையில் பெரியார்
    சிகிச்சை பெற்ற போது எம்.ஜி.ஆர். அவரது உடல்நலம் விசாரித்த காட்சி.
    அருகில் கி.வீரமணி.

    இதயக்கனி எஸ். விஜயன்..........

  6. #795
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் - 2

    ஆனால் இவளவு குறுகிய காலத்துக்குள் எவ்வளவு தூரம் இறுகிவிட்டது எங்கள் நட்பு ! எங்கள் குடும்ப நண்பரும் பழம்பெரும் ஹாஸ்ய நடிகருமான திரு. டி.எஸ். துரைராஜ் அவர்கள்ளின் மகளின் திருமணத்திற்காக சென்றவருடம் நான் தமிழகம் சென்றிருந்தேன் . அப்பொழுதுதான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முதன் முறையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். பேரும் புகழும் செல்வமும் படைத்த அவர் முதல் சந்திப்பிலேயே தன் அன்பு முழுவதையும் கொட்டியதை நினைக்கும் போது இப்பொழுதும் உடம்பு சிலிர்க்கின்றது . சென்னையிலுள்ள தன் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்று அவர் கூறியவை இன்னும் காதுகளில் ங் காரமிடுகின்றன "இந்த வீட்டைக் கொழும்பிலுள்ள உங்கள் சொந்த வீடுபோலவே நினைத்துக்கொள்ளுங் கள். இலங்கையிலிருந்துவரும் தமிழர்கள் தமிழகத்திற்கு வரும்பொழுது ஒரு அந்நிய நாட்டில் இருக்கிறோம் என்ற நினைவே ஏற்படக்கூடாது. அவர்களும் நம்மவர்கள். தாய் நாடு - இலங்கை சேய்நாடு என்றார்கள் . இத்தகைய சொற்களை எம்.ஜி.ஆர் . அவர்களைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும்?"

    நான் சென்னைக்குச் சில நாட்களுக்கு முன்புதான் புதிதாக கார் ஒன்று வாங்கியிருந்தார். சில மைல்கள் கூட ஓடி இருக்கமாட்டார். அவ்வளவு புத்தம்புதிய கார். அந்தக் காரை என்னிடம் கொடுத்து படப்பிடிப்பு வேலைகள் அதிகமாக இருப்பதால் உங்களை முக்கியமான இடங்களுக்கு அழைத்துச் சுற்றிக்காட்ட முடியவில்லை. அதற்கு ஈடாக இந்தக் காரையே உங்களிடம் கொடுத்துவிட்டேன், நீங்கள் தமிழ் நாட்டில் இருக்கும் வரை இந்தக் கார் உங்களுடையது என்னுடைய தல்ல என்று கூறினார் . அன்புள்ளம் கொண்ட எம். ஜி.ஆர் . நண்பர்களுக்காக எதையும் செய்யத் தயாராயிருப்பவர். அவருடன் ஒரு நாள் பழகினாலே போதும் - யுக யுகாந்திரமாகப் பழகியதைப் போன்ற பந்தம் ஏற்பட்டுவிடும்.
    எம்.ஜி.ஆர். அவர்களைப் போலவேதான் இவரது அண்ணன் திரு. சக்ரபாணி அவர்களும் - தம்பிக்கேற்ற அண்ணனாகவே குணத்திலும் செயலிலும் ஒரேமாதிரியகவே இருக்கின்றார்கள். உருவத்தில் வேறுபட்டவர்கள்; உள்ளத்திலும் செயலிலும் இருவரும் ஒருவர் என்றே கூறவேண்டும். சில மாதங்களுக்கு முன்பு வைத்திய சிகிச்சையின் நிமித்தம் சென்றிருந்த எனக்கு திரு . சக்ரபாணி அவர்கள் தன் இல் லத்திலேயே பிரபல வைத்தியர் ஒருவரை வைத்து சிகிச்சை பார்த் தார்கள் . திரு.சக்ரபாணி அண்ணாச்சி அவர்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருந்தும் என் பக்கத்திலேயே இருந்து வைத்தியம் செய் ததை நினைக்கும் பொழுது காலஞ்சென்ற என் தந்யைார் திரு.பட் டக்கண்ணு சுப்பையா ஆச்சாரி அவர்களே பக்கத்தில் இருப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது - மெய்சிலிர்த்தது. மகனுக்குத் தந்தை செய்யும் உப சரணைகள் போன்றிருந்தது இவரது உபசரணை அதை எப்படி எழுதுவது என்றே தெரியவில்லை. மக்களுக்காகவே உழைக்கவும் அவர்கள் தந்த பணத்தை நல்லவழியில் அவர்களுக்கே செலவிட்டு மகிழ்வதிலும் இன்பம் காணும் புரட்சி நடிகர் எம். ஜி.ஆர். அவர்களும் பண்புமிக்க அண்ணாச்சி சக்ரபாணி அவர்களும் இலங்கையிலுள்ள எண்ணற்ற இரசி கர்களைப்போல, நானும் எங்கள் நாட்டிற்கு சீக்கிரம் வரவேண்டும் என்று தான் விரும்புகிறேன். கவிஞர் கண்ணதாசன் பாடியது போல்:
    "நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் நினைவிருக்கும் வரை அவர் முகமிருக்கும்" என்பது போல் என் நெஞ்சில் என் றும் அவர்கள் நினைவு நிலைத்திருக்கும்.

    [கலை,இலக்கிய ஆர்வமும் பொதுவாழ்வில் ஈடுபாடுமுடைய திரு.சற்குருநாதன் அவர்கள் கொழும்பிலுள்ள நகை மாளிகை ஒன்றின் உரி மையாளர். எம்.ஜி.ஆர். அவர்களின் நெருங்கிய நண்பர். மக்களின் திலகமாக மதிக்கப்படும் தன் நண்பரைப் பற்றி இங்கே எழுதுகின்றார்]..........

  7. #796
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    “அன்புக்கு அர்த்தம் மக்கள் திலகம் தான்”
    - ஜானகி எம்.ஜி.ஆர்
    https://www.thaaii.com/?p=48526
    எனக்குத் தெரிந்த எம்.ஜி.ஆர் : தொடர் – 14

    “தொண்டராக இருந்து தலைவராகி, முதல்வராகப் பத்தாண்டுகளுக்கும் மேல் சேவை செய்த செம்மல், உலக அரங்கிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

    நான் அறிந்து மூன்று இதழ்களுக்கு அவர் ஆசிரியராக இருந்தவர். அதில் ‘அண்ணா’ இதழும் ஒன்று.

    எந்த இதழுக்காவது அல்லது சிறப்பு மலர் எதற்காவது கட்டுரை தருவதாக ஒப்புக் கொண்டால், உதவியாளரிடம் கருத்துக்களைச் சொல்லி கட்டுரை தயாரிக்கவோ, குறிப்புகளைத் தேடித் தயார் செய்து தரும்படியோ ஒருபோதும் கேட்கவே மாட்டார்.

    அவரே கைப்பட எழுதித் தருவார். அவரது குறிப்பு நோட்டில் ஒரு சில சின்ன அடித்தல் திருத்தல்களோடு, அது அப்படியே உரியவருக்குச் செல்லும்.

    ஒருவேளை அதனை வெளியிடுகிற அவர்களுக்கு – அதைப் புரிந்துகொள்வது எளிதில்லை என்று உணர்ந்தால் மட்டுமே, உடனே தமிழ் தட்டச்சில் அடித்து அளிக்கும்படி உதவியாளர்களை நாடுவார்.

    ‘சதிலீலாவதி’ முதல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை 136 படங்கள் அவரது திரைப்படச் சாதனைச் சரித்திரம். இதில் தமிழில் வந்த முதல் வண்ணப்படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தின் முதல் நாயகர் இவரே. இப்படி, இவர் ஒரு சகலகலா வல்லவர் – சாதனையாளர் என நான் நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம்.

    அநேகமாக உங்கள் இதயத்தில் என்றும் வாழுகிற என்னவரைப் பற்றி தெரியாததைச் சொல்வது சிறந்தது என்பதால், சிலவற்றை மட்டும் இங்கே சொல்கிறேன்.

    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை என்று கருதுகிறேன். அங்கே ஒரு பஸ் டிரைவர் விபத்தில் சிக்கி விட்டார்.

    காலில்தான் பலத்த அடி. அப்போதைய நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது காலை எடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் அந்த இளைஞரின் அம்மாவிடம் தெரிவித்து விட்டார்கள்.

    “காலை இழந்து விட்டு ஊனமுற்ற பிறவியாக வாழ்வதைவிட சாவதே மேல்” என்று பிடிவாதமாக அந்த இளைஞர் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளவில்லை.

    அவரது அம்மா – பிள்ளையைப் பெற்ற தாய் அல்லவா? அப்படி இருக்க முடியுமா? எப்படியாவது தனது பிள்ளையைப் பிழைக்க வைத்து, இந்த உலகத்தில் வாழ வைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார் அந்தத் தாயார்.

    தன் மகனைச் சாவு நெருங்க நெருங்க அந்தத் தாய் பதறிக் கதறித் துடித்தார்.

    “பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு” என்பார்களே, அது தான் அங்கே நிகழ்ந்தது. அறுவை சிகிச்சைக்கு அந்தப் பிள்ளை ஒத்துக்கொள்ளவில்லை. வயதான அம்மாவை அன்போடு கவனித்துக் கொள்ள வேண்டிய வயதில் இப்படியா?

    ஒரு மகனின் கடமை தொடங்க வேண்டிய நேரத்தில் அந்த அம்மாவுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்பது தான் அந்தப் பிள்ளையாண்டானின் தவிப்பு கலந்த வாதம்.

    இந்த இரண்டு உள்ளங்களும் எவ்வளவு உயர்வானது? அந்த அம்மாவுக்குத் தன் மகனைக் காப்பாற்ற ஒரு வழி தான் தெரிந்தது. பெற்ற பிள்ளையைக் காப்பாற்ற இன்னொரு பிள்ளையை அழைத்து வர முடிவு செய்துவிட்டாள். அது முடியுமா? இயலுமா? என்று அவர் யோசிக்கவில்லை. நம்பிக்கையோடு புறப்பட்டு விட்டார் அந்தத் தாயார்.

    யாரைப் பார்க்க?

    அந்தத் தள்ளாத வயதில், தளராத உறுதியோடு “எப்படியாவது என் மகனைப் பிழைக்க வைத்து விடுவேன்” என்ற எண்ணத்தோடு மட்டுமே அந்த வாசலுக்கு அவர் வந்துவிட்டார்.

    யார் வீட்டு வாசல்?

    ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்றால் எல்லோருக்கும் தெரியும்.

    அந்த அம்மாவின் உதடுகள் சொல்ல முடியாத வார்த்தைகளை அவர் கண்களில் வழிந்த கண்ணீர், வரி வடிவமாகப் வரைந்து காட்டியது.

    இந்தத் தோட்டத்துத் தூயவரும் தாயின் துயர் அறிந்து உடனே மருத்துவமனைக்கு விரைந்தார்.

    அச்சத்தோடு இருந்த அந்த இளம் டிரைவர், “ஆதரவுக்கு நான் இருக்கிறேன்” என்கிற அன்பான ஆறுதல் மொழிகளைக் கேட்டு நம்பிக்கை விதைகளைத் தன்னுள் விதைத்துக் கொண்டார்.

    ஆண்டவன், ஒரு சகோதரனுக்கு இன்னொரு சகோதரன் மூலம் அன்று அச்சத்தை விரட்டினார்.

    அந்த இளம் டிரைவருக்குத் துணிவு துணையானது. காலை இழந்தாலும் நம்பிக்கையோடு செயற்கைக் காலின் உதவியால் நடக்கத் தொடங்கினார்.

    ஓடிக்கொண்டிருந்த அந்த அன்புச் சகோதரனுக்கு கடை வைத்து ஓரிடத்தில் உட்கார்வதற்கு உதவினார் நம் அன்புத் தலைவர்.

    தாய்க்கும் மகனுக்கும் தாங்காத ஆசை என்ன தெரியுமா? தன் தங்கத் தலைவரைப் பார்த்து “நன்றி” என்ற மூன்று எழுத்தைச் சேர்ப்பிக்க வேண்டும் என்பதுதான்.

    அப்போது அன்புத் தலைவர் சொன்ன பதில் இது…

    “என்னைத் தேடி அந்த அன்னை வந்தபோது தன் பிள்ளைகளில் ஒருவனாகத்தான் என்னைக் கருதினார். ஒரு சகோதரனாகத் தான் அந்தத் தம்பியை நான் நினைத்தேன். நன்றி சொல்ல அவர்கள் வருவதென்றால் நான் அந்நியனாகிவிடுவேன்.

    தாயாக, தம்பியாக எப்போது வேண்டுமானாலும் வரலாம். தாய்க்கு ஒழுங்காக ஆதரவு காட்டி அவர் அன்பாக நடத்தினால் போதும்.

    அதுவே என்னைப் பார்ப்பதற்குச் சமம்”

    17.07.1988.........

  8. #797
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ''ஒளி விளக்கு '' ஒரு சிறப்பு பதிவு ..........

    20.09.1968... Producers, Distributors, Exhibitors Lime Light Money Spinners always...In time...Every time...

    52 ஆண்டுகள் நிறைவு நாள் .

    1936 ல் ஜெமினியின் தயாரிப்பில் சதிலீலாவதி - தமிழ் படத்தின் மூலம் சிறு வேடங்களில் நடிக்க துவங்கி 10 ஆண்டுகளில் பல போராட்டங்களுக்கு பிறகு1947ல் தமிழ் சினிமாவில் -ராஜகுமாரி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 1968ல் 100 வது படமான ஜெமினியின் தயாரிப்பில் வந்த
    படம் ''ஒளிவிளக்கு ''

    பிரம்மாண்ட வண்ணப்படம்

    மக்கள் திலகத்தின் அசத்தலான அலங்கார உடைகள் -ஒப்பனைகள் - ஸ்டைல் காட்சிகள் .

    குடியின் தீமைகளை பாடல் காட்சிகளில் மூலம் சித்தரித்த மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .

    திருடுவதால் ஏற்பாடும் தீமைகள் - சமூகத்தில் கிடைக்கும் கேட்ட பெயர் - யாருமே திருடனாக
    மாறக்கூடாது என்ற சமூக சீர்திருத்த கதையில் நடித்த புரட்சி நடிகர் .

    1968ல் அன்றைய அண்ணாவின் அரசின் சாதனைகளை ''நாங்க புதுசா '' என்ற பாடல் மூலம்
    கொள்கைகளை பரப்பியவர் எம்ஜிஆர் .

    மெல்லிசை மன்னரின் அட்டகாசமான டைட்டில் இசை - மக்கள் திலகத்தின் போஸ் சூப்பர் .

    ஆரம்ப காட்சியில் மனோகருடன் மோதும் சண்டை காட்சி -புதுமையான முறையில் இருந்தது .

    சொர்ணம் அவர்களின் வசனங்கள் - பல இடங்களில் நெஞ்சை தொடுவதாக இருந்தது .

    நான் கண்ட கனவில் நீ ..... பாடலில் ஜெயாவின் அறிமுகம்

    மாங்குடி கிராமத்திற்கு மக்கள் திலகம் செல்லும் காட்சி

    சோ வின் சந்திப்பு

    ஜமீன்தார் வீட்டில் சௌகார் ஜானகி அறிமுகம்

    அவருக்கு செய்யும் மக்கள் திலகத்தின் சேவை

    கள்ள பார்ட் நடராஜனை புரட்டி எடுத்த காட்சி

    சௌகாரை மீட்டு தன் வீட்டுக்கு அழைத்து வருதல்

    வலுக்கட்டாயமாக மக்கள் திலகத்தை குடிக்க வைக்கும் காட்சியும்- ஜெயாவின் நடனமும்
    மெல்லிசை மன்னரின் பிரமாதமான இசையும் அதை தொடர்ந்து ''தைரியமாக சொல் ''
    பாடலும் காண்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படம் விறுவிறுப்பாக செல்லும் .

    சௌகாரை கேவலமாக பேசிய ஜஸ்டினை மக்கள் திலகம் படிக்கட்டுகளில் ஏறி தூங்கி கொண்டிருந்த அவர எழுப்பி வீதிக்கு அழைத்து வந்து புரட்டி எடுக்கும் இடம் - சூப்பர் .

    கவர்ச்சி வில்லனிடம் ''வீரன் கோழையான வரலாறு ''என்று அசோகன் கூறும் பிளாஷ் பேக் காட்சி

    மொட்டை நடராஜனிடம் மக்கள் திலகம் மோதும் ஆவேசமான சண்டை

    ''ருக்குமணியே '' என்ற வித்தியாசமான பாடலில் அந்தரத்தில் தொங்கி கொண்டே மக்கள் திலகம்

    பாடல் காட்சி - புதுமை

    திருடன் என்று பெயர் வாங்கியதால் எங்குமேவேலை கிடைக்காமல் சோர்வுடன் திரும்பும் எம்ஜிஆரின் நடிப்பு - முக பாவம் அசத்தல் .

    தீயில் சிக்கிய குழந்தையை காப்பாற்றும் காட்சி - மரணப்படுக்கையில் இருந்த மக்கள் திலகத்தின் உயிரை காப்பாற்ற ஆண்டவனிடம் சர்வ மதத்தினரும் பிராத்தனை - சௌகாரின் பாடல் -உருக்கமான காட்சிகள் -

    மாம்பழ தோட்டம் -பாடல் சீர்காழி - ஈஸ்வரி குரலில் இனிமையான பாடல் .

    இறுதி காட்சிகளில் மக்கள் திலகம் - மனோகர் சண்டை

    மக்கள் திலகம் - அசோகன் சண்டை என்று 15 நிமிடங்கள் விறுவிறுப்பாக சென்ற காட்சிகள் என்று ''ஒளிவிளக்கு '' படம்
    ரசிகர்கள் - பொதுமக்களுக்கு விருந்து படைத்த படம் .

    மொத்தத்தில் எம்ஜிஆரின் ஒளிவிளக்கு -

    உலகம் உள்ளவரை எம்ஜிஆரின் ''அணையா விளக்கு ''.........

  9. #798
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "பணத்தோட்டம்" 1963 ஜன 11 ம்தேதி திரைக்கு வந்த மாபெரும் வெற்றிப் படம். அடுத்தடுத்து வந்த தலைவரின் படங்களை சமாளித்து வெள்ளித் திரையில் வெற்றிகரமாக பவனி வந்த படம். அடுத்து வந்த "கொடுத்து வைத்தவள்" அதையடுத்து வந்த "தர்மம் தலை காக்கும்" என தொடர் தாக்குதலால் துவளாமல் நல்ல வெற்றியுடன் மகத்தான வசூலுடன் ஓடிய படம். 100 நாட்களுக்கு மேல் ஒடிய மற்ற நடிகர்களின் படத்தை விட குறுகிய காலத்தில் அதிக வசூலை ஈட்டிய படம்.

    சில நடிகர்களின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் எடுத்து விட்டாலும் எங்காவது ஒரு திரையரங்கில் மட்டும் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும். அங்கே 100 நாட்கள் ஓட்டியவுடன் 100 நாள் விளம்பரம் முழு பக்க அளவில் கொடுத்து மகிழ்வார்கள். இது தொன்று தொட்டு நடந்து வரும் சிவாஜி ரசிகர்களின் உளவாரப்பணி.

    தலைவருடன் இயக்குநர் k.சங்கர் இணைந்த முதல் படம். மாற்று நடிகரின் கூடாரத்தில் இருந்து வந்த அவர் "பணத்தோட்டம்" இயக்கிய அதே நேரத்தில் "ஆலயமணி" என்ற படத்தையும் இயக்கிக் கொண்டிருந்தார். மிகை நடிப்பையே பார்த்து பழகியிருந்த அவர் தலைவரின் இயல்பான நடிப்பு முதலில் அவருக்கு பிடிக்கவில்லை.
    நிறைய ரீடேக்குகள் போய்க் கொண்டிருந்தவுடன் தலைவர் அவரை கூப்பிட்டு என்னிடம் எது(இயல்பான) கிடைக்குமோ அதை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள். மற்ற நடிகர்களின்(மிகை) நடிப்பை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்று கூறியதாக ஒரு செய்தி உண்டு.

    குடும்பக் கதையில் கொள்ளை கூட்டம் கலந்திருந்தாலும் படம் மிக விறுவிறுப்பாக செல்லும். கள்ள பணத்தை கண்டுபிடிக்க தலைவர் எடுக்கும் வேஷங்கள் சுவையானது.
    "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" பாடல் அனைவருக்கும் வாழ்வில் நம்பிக்கையூட்டுவதாக அமைந்தது.
    "பேசுவது கிளியா"? மெல்லிசையில்
    ஒரு தென்றல் கலந்து வீசியது போல இருந்தது.

    "ஒருவர் ஒருவராய் பிறந்தோம்" மேல் நாட்டுப் பாணியில் இசை முழங்க அதை தலைவர் வாத்யத்தை வாசிக்கும் விதமும் மேக்கப்பும் அந்த காட்சியை வர்ணிக்க இயலாது. "ஜவ்வாது மேடையிட்டு" தலைவரின் போதை நடிப்புக்கு ஈடு கொடுத்து சரோஜாதேவியும் பாடும் பாடலின் ஆரவாரம் அடங்க நெடுநேரம் ஆகும். படம் பார்த்து விட்டு வந்தவர்கள் தண்ணி போடாதவர்கள் கூட போதை மயக்கத்தில் நடந்து போவதை பார்த்தால் அதுதான் எம்ஜிஆரின் நடிப்பு.

    நாகேஷ் வீரப்பன் காமெடி மிகவும் அருமையாக அமைந்தது. இரவுக்காட்சிக்கு நாங்கள் சென்ற
    போது கூட்டம் அதிகமாக இருந்தது.
    ஆங்காங்கே நின்றிருந்த மக்கள் எல்லாம் "ஜவ்வாது மேடையிட்டு" பாடல் காட்சி வந்தவுடன் படம் அரை மணி நேரத்தில் முடிந்து விடும் என்று அனைவரும் அப்போதே டிக்கெட் எடுக்க முண்டியடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதிலிருந்து டிக்கெட் கொடுக்கும் வரை நெரிசலில் நின்று டிக்கெட் எடுத்தபின் சென்றோம்.

    ஜவ்வாது பாடலில் அதிலும் 'ஹே' என்று தலைவர் சொல்லும் போது தியேட்டரே,
    அதிரும். "குரங்கு வரும் தோட்டமடி" தலைவரின் மாறுவேட நடிப்புக்கு
    எடுத்துக்காட்டு. மொத்தத்தில் படம் முடிந்து வரும் அனைவரும் உற்சாகத்தின் எல்லைக்கே சென்று வருவார்கள். சில நடிகர்கள் வெளியில் நாம் படும் பாடு போதாது என்று அவர் பாட்டையும் நம் தலையில் கட்டி படம் பார்த்து வருபவர்களை வேறு வேலைக்கு போக விடாமல் செய்து விடுவார்கள்.

    மேலும் அவர்களை தலைவலி காய்ச்சலில் தள்ளிவிடுவதுடன் 2 நாளைக்கு கனத்த மனதுடன் அலைய விட்டு விடுவார்கள். அதனால்தான் தலைவர் படத்துக்கு கூட்டம் அள்ளுகிறது. சென்னையில் பிளாசா கிரவுன் மேகலாவில் வெளியாகி பிளாசாவில் 84 நாட்களும் கிரவுன் மேகலாவில் 70
    நாட்களும் ஓடி மகத்தான வெற்றி பெற்றது. இதுபோல் முக்கியமான நகரங்களில் 10 வாரங்களை கடந்தும் மற்ற ஊர்களில் 50 நாட்களை தாண்டியும் நல்லதொரு வெற்றியை பெற்ற படம்தான் சரவணா பிலிம்ஸின் "பணத்தோட்டம்.".........

  10. #799
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    courtesy - yaazh sudhagar

    Olivilakku 53rd Anniversary.
    20.9.1968

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூறாவது படம் 'ஒளி விளக்கு'.

    யாழ்ப்பாணம் ராஜா திரை அரங்கில்... அறுபதுகளின் இறுதியில் வெளி வந்து ஒரு கலக்குக் கலக்கிய படம்.

    அதன் பின்பு 12 வருடங்களுக்குப் பிறகு இதே படம் ...பழைய படமாக யாழ் ராஜாவில் திரையிடப்பட்ட போது...தினசரி நான்கு காட்சிகளாக நூறு நாட்கள் ஓடி புதிய வரலாறு படைத்தது.

    இந்தப் படத்தில் பி.சுசீலா பாடிய 'இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு...தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு... ஆன்டவனே உன் பாதங்களை கண்ணீரில் நீராட்டினேன்...'
    என்ற பாடல் தான் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் உயிருக்காகப் போராடிய போது...இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள கோயில்களில் எல்லாம் ஒலித்தது.

    1986 இல் நான் 'பொம்மை' பத்திரிகையில் பணியாற்றிய போது...நடிகை சௌகார் ஜானகி அவர்களைப் பேட்டி கண்ட போது...ஒளி விளக்கில் அவர் பாடி நடித்த இந்தப் பாடல் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறினார்...இப்படி...

    '.... உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நலம் பெறப் பிரார்த்தனை செய்வது போலப் படத்தில் நான் பாடிய பாடல் ....பதினைந்து வருடங்கள் கழித்து உண்மையாகவே அவர் உயிருக்காகப் போராடிய போது மக்களால் பிரார்த்தனைப் பாடலாகப் பயன்படுத்தப்பட்டது...என்னை நெகிழ வைத்தது...' என்றார்.

    உண்மை தான். இந்தப் பாடலில் மட்டுமல்ல... எம்.ஜி.ஆருக்காக எழுதப்பட்ட பல பாடல்களில்... வரப் போவதை முன் கூட்டியே சொன்ன ஒரு தற்செயலான தீர்க்க தரிசனத்தை நானும் கண்டு சிலிர்த்திருக்கிறேன்..........

  11. #800
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திமுக கோஷ்டி என்னதான் ராம்சாமி பற்றி சொன்னாலும், ராம்சாமி மேல் திமுக தலைவர்களுக்கு எக்காலமும் ஒரு வன்மம் இருந்தது என்பதும் , வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அதை வெளிபடுத்தினார்கள் என்பதும் உண்மை

    பின் அவர்களுக்கு புரட்சித் தலைவரின் மக்கள் சக்தியால் ஆட்சி கிடைத்தபின் டெல்லிக்கு எதிரான அரசியல் செய்ய ராம்சாமியினை தூக்கிபிடித்து வஞ்சக நரிதந்திர அரசியல் செய்தார்களே அன்றி, ராம்சாமியிடம் இருந்து அவர்கள் பிரிந்த அந்த 1950க்கும் 1967க்க்கும் இடைபட்ட காலம் காமெடியாய் இருந்தது

    "இவனுகளுக்கு கட்சி தொடங்க என்ன யோக்கியதை இருக்குண்ணே" என ராம்சாமி கேட்க, "அவரிடம் அரசியல் பயின்ற தகுதி இருக்கின்றது" என இவர்கள் சொல்ல தமிழகமே சிரித்தது

    "இவனுக என் சொத்தை உருட்ட திட்டம் போட்டானுக, என்ன கொல்ல பாத்தானுக, வாரிசுக்காகத்தான் கல்யாணம் செய்தேன்" என ராம்சாமி சொல்ல திமுகவிடம் அதற்கு பதில் "நாங்கள் பொதுவுடமைவாதிகள் பொறுக்கிகள் அல்ல" என வந்தது

    பொதுவுடமை என்றால் என்ன என்பதை இப்போதைய திமுக தலைவர்கள் சொத்து பட்டியலிலே தெரிந்து கொள்ளலாம்

    இவர்களை கடுப்பேற்றவே காமராஜரை ஆதரித்தார் ராம்சாமி, ராம்சாமியினை கடுப்பேற்ற புரட்சித் தலைவரை தூக்கிபிடித்தது திமுக கோஷ்டி

    "அய்யய்யோ கூத்தாடி கட்சி" என ராம்சாமி தலையில் அடிக்க , ராம்சாமியினை தங்கள் படத்தில் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சீண்டியது திமுக கோஷ்டி

    அப்படி ஒரு படம் அவர்களுக்கு சிக்கியது அது "நாடோடி மன்னன்"

    என்னதான் அது புரட்சித் தலைவர் சொந்த படமென்றாலும் பின்னணியில் அண்ணா உட்பட திமுக பிம்பங்கள் வேலையும் இருந்தது

    இப்படம் புரட்சிபடம் என சொல்லிய திமுக கோஷ்டிகள், ராம்சாமியினை மிக அழகாக வைத்து செய்தன*

    வீரப்பா தாங்கிய கதாபாத்திரம் ராம்சாமியின் அடாவடியினை அப்படியே கொண்ட பாத்திரம், குரு கோலத்தில் நிறுத்தினார்கள்

    ராம்சாமி செய்த அவ்வளவு அட்டகாசத்தையும் வீரப்பா வடிவில் காட்சியில் வைத்து மகிழந்தார்கள்

    அதில் மகா முக்கியமான காட்சி, தன் வளர்ப்பு மகளான சரோஜா தேவியினை (சரோஜா தேவிக்கு அதுதான் முதல்படம்) வீரப்பா திருமணம் செய்ய முனையும் காட்சி

    அந்த காட்சி இப்படி வரும்

    வீரப்பா அவர் ட்ரேட்மார்க் சிரிப்போடு தான் மகள் போல் வளர்த்த சரோஜா தேவியிடம் சொல்வார் –

    "ரத்னா, என்னை அப்பா என்று அழைக்காதே, அத்தான் என்று அழை

    என் செவிகள் குளிர்ந்து சிந்தை நிறையட்டும், ம்ம் அழை அத்தான் என ஆசையா அழை"

    படம் வந்தபின் கொஞ்சகாலம் ராம்சாமி வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது, அன்றே புரட்சித் தலைவரை சுடும் முடிவினை ராம்சாமியின் சீடன் எம்.ஆர் ராதா எடுத்திருக்கலாம்.
    போன நூற்றாண்டில் புரட்சித் தலைவரூக்கு முன் புரட்சித் தலைவருக்கு பின் என்பதே உண்மையான தமிழக அரசியல் வரலாறு.
    அதுவே இன்று வரை தொடர்கிறது.
    இன்றும் புரட்சித் தலைவர் கொடுத்த கட்சி கொடியும் இரட்டை இலை சின்னம் தானே அனைத்து எதிர் கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்கிறது ..........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •