Page 75 of 210 FirstFirst ... 2565737475767785125175 ... LastLast
Results 741 to 750 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #741
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம்பிக்கை விடியல் கீதம்

    ஏழையரின் இதய வானில் ஒளி
    ஏற்றி வைத்த சூரியன் நீ !
    வாழையென வைத்திழந்தும் நானும்
    வளர் பிறை தான் ; சந்திரன் நீ !
    காளையரின் வழிப்பயணம் ; திசை
    காட்டுவதால் துருவ விண்மீன் !
    நாளையவர் வாழ்வினுக்கோர் நல்ல
    நாள்; நம்பிக்கை விடியல் கீதம்!

    விதைத்தவன் ; அறுத்துச் சேர்த்தே
    விளைச்சலால் உள்ளம் சோர்ந்தோன்
    சிதைத்திடும் கடனின் பின்னல்
    சிக்கலைத் தீர்த்தாய் வாழி !
    கதைப்பவர் கதைத்துப் பார்த்தார்;
    கலகமும் மூட்டிப் பார்த்தார்!
    நினைத்ததை முடிப்பவன் நீ!
    பெரு நெருப்பினைச் சருகா மூடும்?

    நடை பயிலக் காலிரண்டு. உலகை
    நலம் பார்க்கக் கண்ணிரண்டு!
    உடை கூட அணிகையிலே இரண்;
    உழைப்பதற்கோ கையிரண்டு!
    தடையெதற்கு சைக்கிளிலே இருவருக்கு?
    தக்க வழிப் பயண மன்றோ ஏழையர்க்கு?
    விடை யெதற்கு ? கேள்விக்கே;
    ஆட்சி வினாக்குறிகள் நிமிர்வதற்கே ! ....

    குளிருக்குப் போர்வை யானாய், விழி
    குருடர்க்குப் பார்வை யானாய்!
    நலிவிற்குச் செல்வ மானாய்; இந்நாட்டிற்கே
    முதல்வனானாய் ! பொலிவுக்குப் புதையலானாய் ; உயர்
    புரட்சிக்கோ தலைவனானாய்!
    அழிவிற்கோர் ஆக்கமானாய்;
    நல்ஆட்சிக் கோ வாழி ! வாழி ! ...

    ---கவிஞர் முத்துலிங்கம் .........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #742
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எம்.ஜி.ஆரின் அக்கறை"

    m.g.r. படங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு, அவர் தனது திரைப்படங்களில் பாடிய பாடல்கள், பேசிய வசனங்கள் பின்னாட்களில் அப்படியே நடந்தது வரலாறு. அதற்கு ஓர் உதாரணம்தான் ‘திருவளர்ச் செல்வியோ... நான் தேடிய தலைவியோ...’ என்று ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் கதாநாயகி ஜெயலலிதாவைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடிய பாடல்.

    ஜெயலலிதா அரசியலுக்கு வந்து சிறந்து விளங்குவார் என்பதை முதலில் கணித்ததும் எம்.ஜி.ஆர்தான். ரேகை சாஸ்திரப்படி அவருக்கு கொஞ்சம் கைரேகை பார்த்து பலன் சொல்லத் தெரியும். இதே ‘ராமன் தேடிய சீதை’ படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு நாள் ஜெயலலிதாவின் கைரேகையைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர், ‘‘அம்மு (ஜெயலலிதா) நீ அரசியலுக்கு வருவாய்’’ என்று கூறினார்.

    அப்போது ஜெயலலிதா அதை மறுத்தார். ‘‘நானாவது அரசியலுக்கு வரு வதாவது? அதற்கு சான்ஸே இல்லை’’ என்றார். எம்.ஜி.ஆர். விடாமல், ‘‘எழுதி வைத்துக்கொள் அம்மு. நான் சொல்வது நிச்சயம் நடக்கும்’’ என்றார். என்ன நடந்தது என்பதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே.

    எம்.ஜி.ஆர். நடித்த ‘பாக்தாத் திருடன்’ படத்தில் பாலையாவின் ஜோடியாக ஜெயலலிதாவின் தாயார் சந்தியா நடித்திருப்பார். படப்பிடிப்பைக் காண 11 வயது சிறுமியான ஜெயலலிதாவும் வந்திருந்தார். அப்போதுதான் எம்.ஜி.ஆரை முதல்முறையாக பார்த் தார். ஜெயலலிதாவின் துறுதுறுப்பும் சுட்டித்தனமும் எம்.ஜி.ஆரை கவர்ந்து விட்டது. அடுத்த சில ஆண்டுகளில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் மூலம் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிப்போம் என்று ஜெயலலிதாவுக்கு அப்போது தெரியாது. எம்.ஜி.ஆருக்கே அது தெரியாது. பின்னர், இந்த ஜோடி எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியிலும் திரை யுலகிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

    சத்யா மூவிஸ் பேனரில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்து எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா, வாணி நடித்த திரைப்படம் ‘கண்ணன் என் காதலன்’. படத்தில் ஜெயலலிதா கால் ஊனமுற்றவரைப் போல நடிப்பார். ஒரு நாள் காலை படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு மதியம் எம்.ஜி.ஆர். புறப்படத் தயாரானார். மதியம் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. காரில் ஏறும்போது இயக்குநரிடம் ‘‘மதியம் என்ன காட்சி எடுக்கப் போகிறீர்கள்?’’ என்று கேட்டார்.

    ‘‘சக்கர நாற்காலியில் இருந்து மாடிப் படியில் ஜெயலலிதா உருண்டு விழும் காட்சி...‘‘இயக்குநரிடம் இருந்து பதில் வந்ததும் காரில் ஏறப்போன எம்.ஜி.ஆர். இறங்கிவிட்டார். ‘‘அது ரிஸ்க்கான காட்சி. நானும் உடன் இருக்கிறேன். அந்தப் பெண் (ஜெயலலிதா) விழுந்து விட்டால் என்ன ஆவது?’’ என்று கூறி வந்துவிட்டார்.

    படியில் உருள்வது டூப்தான் என்றாலும் படியின் விளிம்பு வரை சக்கர நாற்காலியில் ஜெயலலிதா வரவேண்டும். சில அங்குலங்கள் கூடுதலாக நாற்காலி நகர்ந்தாலும் ஜெயலலிதா விழுந்துவிடுவார். எனவே, முன்னெச்சரிக்கையாக நாற்காலி சரியான தூரத்துக்கு மேல் நகர முடியாத படி நாற்காலியின் பின்னே கயிறு கொண்டு கட்டச் செய்தார் எம்.ஜி.ஆர்.

    ஒத்திகையின்போது அந்த நாற்காலியில் எம்.ஜி.ஆர். தானே அமர்ந்து படியின் விளிம்பு வரை நகர்ந்து பார்த்து, அதற்குமேல் நாற்காலி உருண்டுவிடாமல் பின்புறம் கயிறு இறுக்கமாக கட்டப்பட்டுள்ளதா என்று ஒருமுறைக்கு 10 முறை உறுதி செய்த பின்னர்தான் ஜெயலலிதா நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அந்த அளவு உடன் நடிப்பவர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் ஆகியோரின் நலனில் அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.

    ஜெயலலிதா இனிமையாகப் பாடக் கூடியவர். அதை அறிந்து ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘அம்மா என்றால் அன்பு...’ பாடலை இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் இசையில் ஜெயலலிதாவைப் பாடச் செய்தவர்தான் எம்.ஜி.ஆர்தான்.

    1971-ம் ஆண்டு ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டது. திரையுலகிலும் அரசியல் உலகிலும் யாரும் தொட முடியாத உச்சத்துக்கு எம்.ஜி.ஆர். சென்றதன் காரணம் என்ன? ‘பாரத்’ விருது பெற்றதற்காக நடிகர் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில் அதற்கான காரணத்தை ஜெயலலிதா தெளிவாக விளக்கினார். அவரது பேச்சு:

    ‘‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ‘பாரத்’ விருது பெற்றதில் ஆச்சரியம் இல்லை. அந்த விருதை அவர் பெறாவிட் டால்தான் ஆச்சரியம். தனக்கென்று அமைத்துக் கொண்ட கொள்கைகளை எம்.ஜி.ஆர். யாருக்காகவும் விட்டுக் கொடுத்தது இல்லை. அந்த பிடிவாத குணம்தான் அவரை சிறந்த நடிகராக்கி உள்ளது.

    மக்களிடம் எம்.ஜி.ஆர். இவ்வளவு புகழடைந்திருப்பதற்கு என்ன காரணம்? ‘மக்களிடம் லட்சியத்தின் காரணமாக எவர் பெருமையடைகிறாரோ அவர்தான் சிறந்த கலைஞராக இருக்க முடியும்’ என்று ரஷ்ய எழுத்தாளர் மாக்காமோன் கூறியுள்ளார். அந்தப் பெருமைக்கு பாத்திரமாக எம்.ஜி.ஆர். இருக்கிறார். சிறந்த அரசியல்வாதியாகவும் லட்சியத் தில் தூய்மை உள்ளவராகவும் இருப்பதால்தான் இவ்வளவு பெரு மையும் எம்.ஜி.ஆருக்கு கிடைத் திருக்கிறது.’’

    ஜெயலலிதாவைப் பற்றி எம்.ஜி.ஆர். கணித்தது சரி. எம்.ஜி.ஆர். பற்றி ஜெயலலிதா கூறியிருப்பது மிகச் சரி.

    எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ சூப்பர் ஹிட். 2014-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறை யில் வெளியான அந்தப் படம் சென்னையில் வெள்ளிவிழாவை கடந்து 190 நாட்கள் ஓடி மறுவெளியீட்டில் வெள்ளி விழா கண்ட திரைப்படம் என்ற சாதனை படைத்தது. வெள்ளிவிழாவை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் ‘‘எனது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட படம்’’ என்று குறிப்பிட்டார். எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெயலலிதா. மொத்தம் 28 படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார்..........

  4. #743
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் நன்றாக ரசித்து சாப்பிடுவார். அவருக்கு உள்ள சிறப்பு, மற்றவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் என்று விரும்புவார். தான் என்ன சாப்பிடுகிறாரோ அதே உணவு அதே தரத்தில் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் தனித்து சாப்பிட்ட நேரங்கள் மிக அபூர்வம். எப்போதும் குறைந்தது 10 பேராவது தன்னுடன் சேர்ந்து சாப்பிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு திருப்தி.

    எம்.ஜி.ஆர். என்றாலே எல்லாவற்றிலும் முதலா வதுதானே. சமீபத்தில் கூட அவர் படித்த கும்பகோணம் ஆனையடி பள்ளி தமிழ்நாட்டி லேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற பள்ளி என்ற சிறப்பை பெற்றுள்ளது.

    கும்பகோணம் ஆனையடி பள்ளியில் 2-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் வறுமை அவரை நாடகத்தில் தள்ளியது. பிள்ளைகளை பிரிய நேர்ந்தாலும் அங்கே போனாலாவது தன் இரண்டு பிள்ளைகளும் (எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும்) வயிறார சாப்பிடுவார் களே என்ற எண்ணத்தில் இருவரையும் நாடக கம்பெனியில் சேர்க்க கனத்த இதயத்துடன் அனுமதி அளித்தார் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா அம்மையார்.

    அங்கும் சில நேரங்களில் மூன்று வேளைகள் சாப்பாடு கிடைக்காது. நாடக கம்பெனிகளை சொல்லியும் குற்றம் இல்லை. கிடைக்கும் வருமானத்தை வைத்து அனைவருக்கும் சோறுபோட வேண்டிய நிலை. எனவே, குறிப்பிட்ட நாளில் நாடகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்ற விதிமுறை. இப்படியே சுழற்சி முறையில் நடிகர்களுக்கு சாப்பாடு.

    இது தெரியாத சிறுவன் எம்.ஜி.ஆர்., ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்காக பசியோடு மற்ற நடிகர்களுடன் பந்தியில் அமர்ந்தார். நாடக கம்பெனி மேலாளர் இதை கவனித்துவிட்டு ‘‘இன்றைய நாடகத்தில் நீ இல்லை. உனக்கு சாப்பாடு கிடையாது’’ என்று சிறுவனாக இருந்த எம்.ஜி.ஆரை எழுப்பி கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று சாப்பாட்டு கூடத்துக்கு வெளியே விட்டு வந்தார்.

    அன்று பசியுடன் அழுத கொடுமையான அனுபவங்கள்தான் சிறுவர், சிறுமிகள், பள்ளிப் பிள்ளைகள் வயிறார சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி சத்துணவுத் திட்டம் என்ற ஐ.நா.சபை பாராட்டும் திட்டத்தை கொண்டுவர எம்.ஜி.ஆருக்கு உந்து சக்தியாக விளங்கியது.

    இளம் வயதில் கிடைத்த அனுபவங்களால், சாப்பாடு விஷயத்தில் யாராவது பாரபட்சம் காட்டினால் எம்.ஜி.ஆருக்கு கடும் கோபம் வரும். படப்பிடிப்புகளின்போது படத்தை தயாரிக்கும் கம்பெனி சார்பில் யூனிட்டில் உள்ள எல்லாருக்கும் சாப்பாடு வழங்கப்படும். சில பட கம்பெனிகளில் பட்ஜெட் கருதி, படத்தின் கதாநாயகன், நாயகி, டைரக்டர் போன்றவர்களுக்கு உயர்தரமான சாப்பாடும் தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடும் போடப்படும். தான் நடிக்கும் படங்களில் தொழிலாளர்களுக்கும் தரமான சாப்பாடு போடப்படுவதை எம்.ஜி.ஆர். உறுதி செய்து கொள்வார்..........

  5. #744
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆரின் வெற்றியை சகிக்க முடியாத ஒரு சில சிவாஜி ரசிகர்கள் எம்ஜிஆருக்கு நடிக்க தெரியாது என்ற விஷத்தை பலருக்கும் விதைத்து கொண்டிருந்த காலத்தில் என்னிடமும் அதை சொன்ன போது அருகிலிருந்த ஒரு பெரியவர் அவருக்கா நடிக்க தெரியாது போடா! போய் "பாசம்" படத்தை பார்த்து விட்டு சொல்! என்றார்.

    அவர் என்னிடமும் தம்பி "பாசம்" படத்தை பாருங்கள். அவர் நடிப்பின் ஆழத்தை உணர்ந்து
    கொள்ளலாம் என்றார்.
    எனக்கு அப்போதே "பாசம்" படத்தின் மீது ஒரு வித லயிப்பு உண்டாகி விட்டது. ஆனால் அச்சமயம் "பாசம்" சிறிது காலமாக திரையிடாமல் இருந்தார்கள். திடீரென்று 1967 வாக்கில் மேளம் அடித்து கொண்டு ஒரு விளம்பர வண்டி வருவதை பார்த்தவுடன் ஏதோ புதிய படம் வெளியாகிறது போலும் என்று நினைத்து வாசலுக்கு ஓடினேன்.

    வாசலை பார்த்தால் ஜோஸப் தியேட்டர் விளம்பர வண்டி மேள தாள சத்தத்துடன் நோட்டீஸையும் விநியோகித்துக் கொண்டு சென்றதை கண்டவுடன் என்ன படம் என்று பார்த்தால் "பாசம்".
    மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டேன். உடனே பார்த்து விடலாம் என நினைத்து நண்பர்களை அழைத்தேன். அவர்கள் இரவுக் காட்சிக்கு போகலாம் என்றனர்.

    அன்று சனிக்கிழமை என்னடா புதுப்படத்தைக் காட்டிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று சிரமப்பட்டு டிக்கெட்டை எடுத்து தியேட்டருக்குள் அமர்ந்து படத்தை பார்த்தோம். எந்தப் படத்திற்கும் கலங்காத நான் முதன்முதலாக "பாசத்தை" பார்த்து மனம் கனத்து வெளி வந்தேன். அப்படியொரு படம்
    வேறு எந்த நடிகனாயிருந்தாலும் அப்படியொரு நடிப்பை வெளிப்படுத்த இயலாது.

    சில நடிகர்கள் கத்தி கதறி மிகை நடிப்பின் விளிம்புக்கே நம்மை அழைத்து சென்று எல்லையில்லா தொல்லை கொடுத்திருப்பார்கள். மிகை நடிப்புக்கு வாய்ப்பிருந்தும் இயற்கையான நடிப்பின் மூலம் நம்மை கசக்கி பிழிந்திருப்பார் புரட்சி நடிகர். எம்ஜிஆரின் சோகத்தை நம்மால் சகிக்க முடியுமா? அதுவும் எம்ஜிஆர் பெண் கேட்டு அசோகன் மறுக்கும் போது நமக்குள் இனம் புரியாத வேதனை புகுந்து விடும்.

    ஆனால் மற்றவர்களுக்கு
    குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு அனாதைகளுக்கு அவர் உதவும் பாங்கு, சொன்ன சொல்லை காப்பாறுவது இது போன்ற அவரின் நற்குணங்கள் நமக்கும் சற்று ஊடுருவ ஆரம்பித்து விடுகின்றன. பாடல்களில் அப்படியொரு இனிமை. அதிலும் "ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி". பாடல் "சிங்கார வேலனுக்கு" அடுத்தபடியாக என்னை மிகவும் கவர்ந்த பாடல்.

    "உறவு சொல்ல ஒருவனின்றி வாழ்பவன்" சுசீலா குரலில் ஜொலித்தது. தேர் ஏது! சிலை ஏது! பாடல் சோகமயமாக தொடங்கினாலும் தலைவரைக் கண்டதும் வருகின்ற உற்சாகம் நாயகிக்கு மட்டுமல்ல நமக்கும் தொற்றிக் கொள்கிறது. "பால் வண்ணம்" பாடல் இன்று வரை எவர்கிரீன் வரிசையில் முதலிடத்தில் இருப்பது பாடலின் இனிமையை பறை சாற்றுகிறது.

    "உலகம் பிறந்தது எனக்காக" பாடல் ஒரு புதிய உற்சாகத்தை நமக்குள் விதைத்ததை கண்டேன். அந்த அருமையான பாடலுக்கு தலைவரின்
    முகபாபம் அற்புதமாக இருக்கும். "மாலையும் இரவும்" பாடல் இப்ப கேட்டாலும் அனைத்தையும் மறந்து பாடலின் இனிமையில் மூழ்கி விடுவேன். கிளைமாக்ஸ் காட்சியில்
    எம்ஜிஆர் உயிர் பிரிவது தாளாத சோகத்தை நமக்குள் ஊன்றி விடுகிறது. அதனால் மீண்டும் பார்க்கும் எண்ணம் வராவிட்டாலும் முதலில் பார்த்த காட்சியே இன்று வரை கண்களை விட்டு அகல மறுக்கிறது.

    "பாசம்" படத்தின் கதையை எம்ஜிஆரிடம். ராமண்ணா சொன்னதும் எம்ஜிஆர் வேண்டாம் இந்த விஷப்பரீட்சை படத்தின் கதை அற்புதமாக இருந்தாலும் இறுதி காட்சியில் நான் இறப்பது போல நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எச்சரித்தார். ஆனால் ராமண்ணா விடவில்லை எனக்கு நம்பிக்கை இருக்கிறது கதையின் மேல் என்றார். உடனே தலைவர் உங்களுக்காக நடித்து கொடுக்கிறேன் ஆனால் படத்தின் வெற்றி தோல்விக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்லி நடித்தார்.

    வேறு சில நடிகர்களின் மரண காட்சியை பார்த்து ரசித்த ரசிகர்கள் எம்ஜிஆர் படத்தில் மட்டும் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் படத்தையே கை விட்டு விடுகிறார்கள். இருப்பினும் ஒரு தடவை அவர்கள் பார்த்ததே படத்தின் சுமாரான வெற்றிக்கு வித்திட்டது. மறு வெளியீட்டிலும் ஓரளவு வெற்றி பெற்று ரசிகர்கள் மனதிலும் நிரந்தரமான இடம் பிடித்தது எனலாம்.

    1962 ஆக 31 ம் தேதி வெளியான படம். பெண்களை மிகவும் ஈர்த்த படம் என்றுதான் சொல்ல வேண்டும்.படத்திற்கு பெண்கள் கூட்டம் அதிகம் வந்ததாக சொன்னார்கள். படம் சென்னையில் பாரகன் மகாராணி மகாலட்சுமியில்
    வெளியாகி 84 நாட்கள் ஓடியது. தமிழகத்தின் மற்ற ஊர்களிலும்
    அதிகபட்சமாக 84 நாட்கள் வரை ஓடி மிதமான வெற்றியை பதிவு செய்தது..........

  6. #745
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கேரளாவின் சூப்பர் ஹீரோவாக இருந்த எம்.ஜி.ஆர்.! -பிரபல ஒளிப்பதிவாளர் புகழாரம் !

    மணிரத்தினம் இயக்கிய ரோஜா, இருவர், ராவணன், உயிரே (இந்தியில்
    'தில்சே') மற்றும் விஜய் நடித்த 'துப்பாக்கி', ரஜினி நடித்த 'தர்பார்' உட்பட
    தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் 40 க்கும் மேற்பட்ட படங்களை ஒளிப்பதிவு செய்தவர், சில படங்களை இயக்கியவர் என்று பன்முகம் கொண்டவராய் தேசிய அளவில் புகழ் பெற்ற, விருதுகள் பல பெற்றவர் சந்தோஷ் சிவன்.

    இன்று (13 -09 -2020) சந்தோஷ் சிவனின் பேட்டி 'டைம்ஸ் ஆப் இந்தியா' (Times of India) நாளிதழில் இடம் பெற்றுள்ளது. அதில் எம்.ஜி.ஆர். படங்கள் பற்றி குறிப்பிட்டிருக்கின்றார்.

    "நான் 70' களில் எம்.ஜி.ஆரது பல படங்களை பார்த்து ரசித்தது இன்றும் நினைவில் இருக்கின்றது.
    அன்றைக்கு மலையாளத்தில் சூப்பர் ஹீரோ படங்கள் கிடையாது. அன்றைய மலையாளத்தின் பெரும்பகுதி ரசிகர்களின் சூப்பர் ஹீரோவாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மட்டுமே"

    Ithayakkani S Vijayan.........

  7. #746
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புரட்சி_தலைவர்
    #ஏழைகளின்_இதயம்
    #இதயதெய்வம்
    #பாரத_ரத்னா
    #டாக்டர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய #ஞாயிற்றுகிழமை_காலை_வணக்கம்...

    பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் திரைப்படத் துறையில் இருந்தபோதும் சரி, ஆட்சியில் இருந்தபோதும் சரி, தனக்கு உள்ள செல்வாக்கை தனது குடும்பத்தார் தவறாகப் பயன்படுத்த அனுமதித்தது இல்லை. அரசு நிர்வாகத்தில் அவர்களது குறுக்கீட்டை விரும்பியதும் இல்லை. தனது உதவியாளர்கள் தவறு செய்தபோதும் அதற்கு பரிகாரம் கண்டிருக்கிறார்.

    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒரு நாள் கோட்டைக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார். முதல்வரை சந்தித்து குறைகளை தெரிவிக்கவும் மனு கொடுக்கவும் அவரது ராமாவரம் தோட்ட வீட்டில் எப்போ தும் கூட்டம் இருக்கும். காரில் எம்.ஜி.ஆர். ஏறும் சமயத்தில், கூட்டத்தில் இருந்து ஒருவர் திடீரென ஓடிவந்து அவரது காலில் விழுந்தார். பதற்றமடைந்த உதவியாளர்கள் அந்த நபரை தூக்கிப் பிடித்தனர். அவரை விட்டுவிடும்படி கூறிய எம்.ஜி.ஆர். அந்த நபரைப் பார்த்து, ‘‘என்ன விஷயம்?’’ என்றார்.

    ‘‘நான் ஈரோட்டைச் சேர்ந்தவன். உங்களைப் பார்த்து என் குறையை சொல்ல வந்தேன்’’ என்றார் அந்த நபர். ‘‘என்ன குறை?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

    அங்கே நின்றுகொண்டிருந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர்களில் ஒருவரை சுட்டிக்காட்டி, ‘‘இந்த ஆளு என்னை 45 ஆயிரம் ரூபாய் ஏமாத்தி விட்டாருங்க’’ என்று அந்த நபர் விசும்பலுடன் சொன்னார்.

    எம்.ஜி.ஆர். சற்று நம்ப முடியாமல் கேட்டார்… ‘‘யாரு?’’

    ‘‘இதோ இங்கே நிக்கிறாரே, இவர்தாங்க’’ என்று மீண்டும் அந்த உதவியாளரை காண்பித்து சொன்னார் வந்த வர். தொடர்ந்து, ‘‘இன் ஜினீயரிங் காலேஜ்லே சீட் வாங்கித் தரேன்னு சொல்லிட்டு 45 ஆயிரம் ரூபாயை வாங்கிட்டு ஏமாத் திட்டாருங்க’’ என்றார்.

    கோபத்தில் ரத்த நிற மாக மாறிய முகத்துடன் உதவியாளரை எம்.ஜி.ஆர். பார்த்தார். கருப்புக் கண்ணாடியையும் மீறி அவரது கண்கள் தகிப்பது தெரிந்தது. உண்மையை மறுக்க முடியாததோடு, எம்.ஜி.ஆரின் கோபமும் சேர, உதவியாளர் சப்தநாடியும் ஒடுங்கி சிலை போல நின்றார்.

    புகார் சொன்னவரை பார்த்து எம்.ஜி.ஆர்., ‘‘சொன்ன மாதிரி சீட் கிடைச்சிருந்தால் என்கிட்ட வருவீங்களா? இல்லை, பணம் கொடுக்கும் போது என்னைக் கேட்டுவிட்டு கொடுத்தீங்களா?’’ என்று கோபம் அடங்காமல் கேட்டார். பதிலளிக்க முடியாமல் வந்தவர் மவுனமானார். ‘‘உங்க அட்ரஸை கொடுத்துவிட்டு போங்க’’ என்று அவரை அனுப்பிவைத்தார். பொது மக்கள் எல்லாரும் சென்றபிறகு அந்த உதவியாளரை எம்.ஜி.ஆர். அழைத்து ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டார். ‘‘ஏன் இப்படி செஞ்சே? உன்னாலே எனக்கில்லே கெட்ட பேரு. நீ பண்ணின காரியத்தாலே என்னை இல்லே வந்து கேட்கிறான்’’ என்று சத்தம்போட்டு அவரை வேலையை விட்டு அனுப்பிவிட்டார்.

    அப்போது, சட்டப்பேரவை நடந்து
    கொண்டிருந்த சமயம். எதிர்க்கட்சித் தலைவர் கருணா நிதி. அவருக்கு இந்த விஷயம் எப்படியோ தெரிந்துவிட்டது. மறுநாளே இந்தப் பிரச் சினையை சட்டப்பேரவையில் எழுப்பினார். ‘‘முதல்வரின் உதவியாளர் ஒருவர், இன்ஜினீயரிங் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ஒருவரிடமிருந்து 45 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தாராமே?’’ என்று கேட்டார்.

    முதல்வர் எம்.ஜி.ஆர். எழுந்தார்.
    எதிர்க் கட்சித் தலைவர் கருணாநிதியைப் பார்த்து, ‘‘நீங்கள் கூறுவது உண்மைதான். சம்பந்தப்பட்ட உதவியாளரை நேற்றே பணியில் இருந்து நீக்கிவிட்டேன். பணத்தை இழந்தவருக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தாகிவிட்டது.’’ என்று கூறினார்.

    தனது வீட்டில் நடந்த விஷயம் வெளியில் தெரிந்து விட்டதே என்று எம்.ஜி.ஆர். நினைக்கவில்லை. குற்றச்சாட்டை மறுக் கவோ, சப்பைக்கட்டு கட்டவோ இல்லை. நடந்த விஷயத்தையும் அதற்கு பரிகாரம் காணப்பட்டதையும் தெளிவாக சொல்லி விட்டார்.

    தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர். ஏகபோக சக்கரவர்த்தியாக இருந்த நிலையில், தனது அண்ணன் சக்ரபாணி நடிகராக இருந்தபோதும், தான் நடிக்கும் படங்களில் சக்ரபாணிக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்று எந்த தயாரிப்பாளரையும் அவர் வற்புறுத்தியதில்லை. தயாரிப்பாளர்கள் தாங்களாக விரும்பினால் எம்.ஜி.ஆரின் அண்ணனாகவோ, தந்தையாகவோ நடிக்க சக்ரபாணியை ஒப்பந்தம் செய்வார்களே தவிர, எம்.ஜி.ஆர். கட்டாயப்படுத்தியதில்லை.

    சக்ரபாணியின் மகன் எம்.ஜி.சி.சுகுமார் சில படங்களில் நடித்தார். அவரையும் கூட, தனது செல்வாக்கை பயன்படுத்தி திரையுலகில் முன்னேற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்ததில்லை.

    உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின், அவரது குடும்பத்தினர் சிலர் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார் எழுந்தது. இது எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. உடனே, ‘அரசு நிர்வாகத்தில் சம்பந்தம் இல்லாத யாருடைய தலையீட்டையும் குறுக்கீட்டையும் நான் எப்போதும் விரும்புவதில்லை. எனது மனைவியாகவே இருந்தாலும் அல்லது எனது உறவினர் என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந் தும். அமைச்சர்கள், அதிகாரிகள் என் அபிப்ரா யத்தை அறிந்து நடக்க வேண்டும்’ என்று 13-6-86 தேதியிட்டு முக்கிய அறிவிப்பை முதல்வர் எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.

    அந்த அறிவிப்பு நாளிதழ்களில் வெளிவந்தது. தன் குடும்பத்தார் அரசு நிர்வாகத்தை பயன் படுத்தி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய் வதை எம்.ஜி.ஆர். ஒருபோதும் அனுமதித்த தில்லை.
    பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதில் இப்போதைய அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.!

    ‘சுவாச் பாரத்’ என்ற பெயரில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு 2014-ல் அறி வித்தது. பிரதமர் மோடி, டெல்லியில் தெருவை சுத்தம் செய்தார். இதை ‘நேற்று இன்று நாளை’ திரைப்படத்திலேயே எம்.ஜி.ஆர். கூறியிருப்பார். சேரிப் பகுதியில் வசிக்கும் எம்.ஜி.ஆர்., சுகாதாரத்தையும் தூய்மையை யும் வலியுறுத்தி அந்தப் பகுதியில் தெருவை கூட்டி சுத்தம் செய்வார். அப்போது, ‘நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று…’ பாடல் இடம் பெறும். அந்தப் பாடலில் வரும் அர்த்தம் நிறைந்த வரிகள் இவை…

    ‘தெருத் தெருவாய் கூட்டுவது பொதுநலத் தொண்டு

    ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு

    மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்

    தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்...’

    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, நெசவாளர், தீப்பெட்டி தொழிலாளர், பனை ஏறும் தொழிலாளர்களுக்கு விபத்து நிவாரணத் திட்டத்தை அமல்படுத்தினார். மீனவர்களுக்கும் நெசவாளர் களுக்கும் சிறப்பு வீட்டு வசதி திட்டம் கொண்டு வந்தார்.

    #பதவி_வரும்போது_பணிவும்
    #வரவேண்டும்_துணிவும்_வரவேண்டும்.. #பாதை_தவறாமல்_பண்பு_குறையாமல் #என்ற_வரிகள்_மூலம்_வாழ்ந்து #காட்டியவர்_நம்_தலைவர்...

    அன்புடன்.........

  8. #747
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*26/08/20அன்று சொன்ன*தகவல்கள்*
    ------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போது ,ஒரு முறை தனது பழைய நாடக துறை நண்பரான டி.வி.நாராயணசாமியை இயல் இசை நாடக மன்ற தலைவராக நியமிக்கிறார் . எம்.ஜி.ஆர். தனிக்கட்சி ஆரம்பித்தபோது ,அவரது நாடகங்களில் நடித்த எஸ்.எம்.கிருஷ்ணா என்பவர் தி.மு.க.வின் தீவிரமான தொண்டர் அதனால் .அவர் அ தி.மு.க.வில் சேரவில்லை . ஆனாலும் அவர் நலிந்து போய் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். இயல் இசை நாடக மன்ற தலைவரான டி.வி.நாராயணசாமியிடம் ,கிருஷ்ணாவிற்கு தமிழக அரசின் குடும்ப கட்டுப்பாடுபிரச்சார* விளம்பர நாடகங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு அளிக்க சொல்லி அவரது குடும்பத்தை வாழ வைத்தார் .* அது மட்டுமல்ல திரு.கிருஷ்ணா அவர்கள் சேலம் அருகே ஒரு நாடகத்தில் நடிக்கும்போது மாரடைப்பால் காலமானார் . இந்த செய்தியை அப்போது மதுரையில் இருந்த எம்.ஜி.ஆர். அறிந்து டி.வி.நாராயணசாமியை தொடர்பு கொண்டு அவர்* உடலை**நல்லபடியாக* அடக்கம் செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்து தரும்படி கேட்டு கொண்டார் .அதன்பின் திரு.கிருஷ்ணாவின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு* எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறியதோடு ,அவரது மகனுக்கு அரசு மருத்துவமனை ஒன்றில் பரிசோதனை கூட டெக்னீஷியன் வேலை ஒதுக்கி தந்தார்* என்பதுதான் மாற்று கட்சி தோழராக இருந்தாலும் எம்.ஜி.ஆர். அவரை மதித்து மரியாதை செய்ததோடு ,அவர் குடும்பத்தை வாழ வைத்து வழிகாட்டிய தெய்வமானார் .


    ஒரு நாள் எம்.ஜி.ஆர். காரில் கிண்டி பகுதியில் செல்லும்போது கார் டயர் பஞ்சர் ஆகிவிடுகிறது . காரை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவர் பஞ்சர் ஓட்டும் கடையை தேடும் சமயம் , தானாகவே ஒரு நபர் வந்து பஞ்சர் ஆனா டயரை மாற்றிவிட்டு பழுது பார்த்து சரி செய்கிறார் . வேலை முடிந்ததும் எம்.ஜி.ஆர். அவரை பற்றி விசாரிக்கிறார் .நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள். உங்கள் கடை எங்குள்ளது என்று கேட்க ,அவர் நான் இந்த பகுதியில்* சைக்கிள் பஞ்சர்* கடை வைத்துள்ளேன்.உங்கள் காரை கண்டதும் உங்கள் அவசரத்தை கருதி பழுது பார்க்க உடனே வந்துவிட்டேன் என்றார் . .நாளை என்னை ராமாவரம் தோட்டத்தில் வந்து பார் என்று சொல்லிவிட்டு புறப்படுகிறார் எம்.ஜி.ஆர்.*.அந்த நபர் மறுநாள் தோட்டத்தில் சென்று எம்.ஜி.ஆரை பார்க்கிறார் . அவருக்கு 20 சைக்கிள்கள் வாங்கி தந்து உதவுகிறார் எம்.ஜி.ஆர். அந்த நபர் எம்.ஜி.ஆரிடம் உங்கள் பெயரில் எம்.ஜி.ஆர். சைக்கிள் மார்ட் என்று ஆரம்பிக்க போகிறேன் என்று சொல்ல ,அதற்கு எம்.ஜி.ஆர். மறுப்பு தெரிவித்து என் பெயரில் கடை நடத்த கூடாது,அப்படியானால் தான் உங்களுக்கு இந்த உதவி கிடைக்கும் என்று*திட்டவட்டமாக சொல்லி அனுப்பி வைத்தார்*


    எம்.ஜி.ஆர். மலையாளி, தமிழனல்ல என்றும், இந்தி திணிப்பு பற்றியும் தமிழ்நாட்டில் தீவிர பிரச்சாரம் போன்ற செய்திகள் தலை தூக்கிய காலம் .ஆனால் எம்.ஜி.ஆர். இந்தி மொழி திணிப்பைத்தான் எதிர்த்தார் . இந்தி படங்களில் நடித்த நடிகர் நடிகைகள் சென்னைக்கு வரும்போதெல்லாம் நல்ல வரவேற்பு*அளிக்க தயங்கவில்லை .இந்தி பட நடிகர் நடிகைகள் நடிப்பை பெரிதும் மதித்தார் இப்படி பல சம்பவங்கள் உண்டு . எம்.ஜி.ஆர்.* ஒரு மொழி திணிப்பைத்தான் எதிர்த்தாரே தவிர மொழியை எதிர்க்கவில்லை என்பதற்கு சாட்சியாக நவரத்தினம் படத்தில் அவரே நடிகை ஜெரினா வகாப்புடன்* ஒரு இந்தி மொழி பாடலில் நடித்துள்ளார் .* .


    புதிய பாடகர்கள், வேற்று மொழி பாடகர்களுக்கு எம்.ஜி.ஆர். எளிதில் வாய்ப்பு கொடுக்கமாட்டார் .அதற்கு பல காரணங்கள் உண்டு .குரல் ஒத்துபோகவேண்டும் .ரசிகர்கள் ஏற்று கொள்ளவேண்டும் என்று பல விஷயங்கள் . ஒருமுறை ஒரு இசை அமைப்பாளர் ஒரு பாடகரை அறிமுகப்படுத்தி ,இவரை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் ,உங்கள் படங்களில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார் .* அவரை பற்றி நன்கு விசாரித்துவிட்டு,அந்த இசை அமைப்பாளர் சென்ற பிறகு* எம்.ஜி.ஆர். ஒப்பனை அறைக்கு செல்கிறார் .*பின் தொடர்ந்து சென்ற அந்த பாடகர் ,எம்.ஜி.ஆரிடம், நான் ஒரு மலையாளி, நீங்கள் தயவுசெய்து என்னை ஆதரிக்க வேண்டும் .எனக்கு வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்று சொன்னதும் , உடனே இந்த இடத்தை விட்டு ஓடி போய்விடுங்கள் .திரும்பி இந்த பக்கம் வந்துவிடாதீர்கள் .என்று எச்சரித்து அனுப்பினார் எம்.ஜி.ஆர். . மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    --------------------------------------------------------------------------------
    1.தர்மம் தலை காக்கும் பாடல்* - தர்மம் தலை காக்கும்*

    2.வாங்கய்யா வாத்தியாரய்யா* - நம் நாடு*

    3.எத்தனை பெரிய மனிதனுக்கு - ஆசைமுகம்*

    4.எம்.ஜி.ஆர்.- மனோகர் உரையாடல் - ஆயிரத்தில் ஒருவன்*

    5.நீதிமன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். -ரிக்ஷாக்காரன்*

    6. எம்.ஜி.ஆர்.-ஜெரினா வஹாப்* - நவரத்தினம்*

    7.ஒரு தாய் மக்கள் நாமென்போம்* - ஆனந்த ஜோதி*

  9. #748
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தெரியுமா உங்களுக்கு தலைவர் நெஞ்சங்களே......

    தலைவர் குண்டடி பட்டு கழுத்தில் கட்டுடன் படம் தமிழகம் முழுவதும் ஒட்ட பட....

    வறண்டு கிடந்த திமுக அரசியல் களத்தில் வசந்தம் வீச காரணம் ஆன படம் இது.

    அந்த படத்துக்கு அந்த பிரஸ் வாசலில் காத்து இருந்து 2000 படம் வாங்கி முதல் முதலாக தமிழகத்தில் தான் போட்டி இட்ட தொகுதி முழுவதும் ஒட்டி ஐய்யோ பாருங்கள் என்று அனுதாபம் தேடி கொண்ட முதல் நபர் வேறு யாரோ இல்லை அவர்தான்.

    அன்று இருந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர்... இது என்ன படம் ஏதோ பாகிஸ்தான் நாட்டு போரில் ஈடுபட்டு ஏற்பட்ட குண்டு காயமா இது என்று கேலி செய்ய.

    அமரர் அண்ணா அவர்கள் பதிலடியாக ஆமாம் இதுக்கு முன் எம்ஜிஆர் அவர்களை தெரியாதா... இந்த படம் மூலம் தான் விளம்பரம் எங்களுக்கு அவசியமா.

    நீங்கள் சொன்ன படி ஒருவேளை அப்படி ஒரு யுத்தத்தில் அவர் இருந்து இருந்தால் அவர் கையில் துப்பாக்கி கொடுக்க பட்டு இருந்தால் அப்போதும் அவரே வெற்றி பெற்று இருப்பார் என்றார்.

    ராதா அவர்கள் சுட்ட வழக்கில் அவர் சார்பில் ஆஜர் ஆனவர் என்.டி வானமாமலை என்ற அக்காலத்தில் புகழ் பெற்ற வக்கீல் ஆவார்.

    அவர் என்ன சமுதாயம் ஜாதி என்று தேடமாட்டோம்.

    தெரியுமா தலைவர் நெஞ்சங்களே...அரசு தரப்பு வக்கீல் ராதா அவர்கள் உபயோகித்து லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி என்று சொல்ல.

    ராதா அவரே குறுக்கிட்டு ஆமாம் சுட்ட நானும் சுடப்பட்ட அவரும் சாகாத போது இந்த மானம் கெட்ட துப்பாக்கிக்கு லைசென்ஸ் ஒரு கேடா என்றார்..

    வழக்கு முடிந்து 7 ஆண்டுகள் தண்டனை தீர்ப்பில்...

    அப்போது இருந்த ஒரு யாரிடம் நிருபர்கள் என்ன இப்படி ஒரு சம்பவம் என்று கேட்ட பொழுது அவர் சொன்னார்.

    கூத்தாடியை கூத்தாடி ஒருவன் சுட்டு இருக்கான்..இதில் என் கருத்து என்ன வேண்டி கிடக்குது என்றார்..

    அந்த கருத்தில் சுட்ட அவருக்கு மிகவும் வருத்தம்...அட இவரும் இப்படியா என்று சிறையில் இருந்த போது சிந்தனைகள் என்ற அவர் எழுதிய புத்தகத்தில் வருத்த படுகிறார்.

    தெரியுமா உங்களுக்கு

    இன்னும் தொடரும்.நன்றி..

    அவர் துப்பாக்கி கொண்டு தலைவரை மட்டும் அல்ல அதற்கு முன்னால் என்.எஸ்.கே அவர்களிடமும் துப்பாக்கி காட்டி மிரட்ட அவர் சுதாகரித்து சமாதானம் ஆக அது ஒரு தனி சம்பவம்...........

  10. #749
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பாவங்க கருணா நிதி!!
    -----------------------------------
    எம்.ஜி.ஆரிடம் அப்படியென்ன ஜோக்கடித்தார் கண்ணதாசன?
    கருணா நிதிக்காக அப்படியென்ன பரிந்து பேசினார் எம்.ஜி.ஆர்??
    பதிவுக்குள்ளே போனால் தெரிஞ்சுடப் போகுது--
    கலைமாமணி வலம்புரி சோமனாதன்!
    அந்த காலத்தில் பல படங்களுக்கு வசனம் எழுதியவர்!
    துணையிருப்பாள் மீனாட்சி--லலிதா--சிகப்புக் கல் மூக்குத்தி--இப்படிப் பல படங்களுக்கு எழுதியவர் நாடகங்களும் எழுதியிருக்கிறார்--
    அது எம்.ஜி.ஆர்,,தி.மு.கவில் சேர்ந்த காலக் கட்டம்!
    அரசியலும்--திரையும் ஆரத் தழுவியிருந்த அக் காலக் கட்டத்தில்--
    எம்.ஜி.ஆர்,,கருணா நிதி ,,கண்ணதாசன் மூவரும் ஒன்றாக இருந்த பீரியட்!
    வலம்புரி சோமனாதனின் புதுமனைப் புகு விழாவுக்கு மூவரும் செல்வதாகப் பேசிக் கொண்டனர்.!
    வலம்புரி சோமனாதனின் பொருளாதார நிலை அறிந்து,,ஆளுக்கு இரண்டாயிரம் என போட்டு,,மூவரும் ஒன்றாக அவரிடம் அளிக்க முடிவு செய்தனர்!
    கவிஞர் கண்ணதாசன் முன்னாலேயே வந்துவிட,,எம்.ஜி.ஆரும் கருணா நிதியும் ஒன்றாக வருகின்றனர்!
    கவரில் தன் பங்கு பரிசாக 2000 ரூபாயைப் போட்டுக் கொண்டே,,மற்ற இருவரிடமும் கவிஞர் கேட்க--
    கருணா நிதிக்கும்,,தமக்குமாகச் சேர்த்து 4000 ரூவை எம்.ஜி.ஆர் நீட்ட--
    விஷயத்தைப் புரிந்து கொண்ட கண்ணதாசன்,,நறுக்கென்றும் சுருக்கென்றும் கருணாவிடம் கேட்கிறார்--
    ஏய்யா? தன் கையிலிருந்து ஒத்த ரூபா தவறிக் கூடக் கொடுத்துடக் கூடாதுன்னு,,வேலை மெனக்கெட்டு தோட்டத்துக்குப் போய் இவரோட ஒட்டிக் கொண்டு வந்தியா??
    தன்னை மறந்து எம்.ஜி.ஆர் சிரித்து விடுகிறார்!
    அப்போது இவர்களை வரவேற்க வந்த நம் சோமனாதன்,,எம்.ஜி.ஆரைப் பார்த்து--
    காலையில் பெரியவர் சக்கரபாணி வந்து,,உங்க சார்புல பரிசு கொடுத்துட்டு வாழ்த்திட்டுப் போனதாலே நீங்க வர மாட்டீங்கன்னு நினைச்சேன் என்று கூற--
    இது வேறயா? என்று அடிக்குரலில் எம்.ஜி.ஆரிடம் கண்ணதாசன் கேட்கவும்--
    சங்கடத்தில் தவிக்கிறார் எம்.ஜி.ஆர்??
    அதாவது,,காலையிலேயே தன் அண்ணா மூலம் 10000 பரிசுப் பணம் அளித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்!!
    தனிமையில் எம்.ஜி.ஆர்,,கண்ணதாசனிடம்--
    என்னதான் காமெடி என்றாலும்,,முகத்துக்கு நேராக இப்படி சொல்லிட்டீங்களே,,கலைஞருக்கு வருத்தமாக இருக்காதா என்று கேட்க--
    அதற்குக் கவிஞர் சொன்ன பதிலால் மீண்டும் பலமாக சிரிக்கிறார் எம்.ஜி.ஆர்---
    அட அப்படி வருத்தப்பட்டு,,ரோஷம் வந்து அவரு கொடுக்கற புத்திய வளர்த்துக்க மாட்டாரு.,,நீங்க பயப்பாடாதீங்க????
    எனக்குத் தெரிந்து ஒரு பிச்சைக்காரனுக்கு நாலணா கூட தர்மம் செஞ்சதில்லை கருணா நிதி--
    இது,,பின்னால்--1976இல் கவிஞர் ,,கருணா நிதி பற்றி பகிரங்கமாக உரைத்தது
    மற்றபடி--
    கருணா நிதி மாற மாட்டார் என்று கவிஞர் அடித்துச் சொல்லிவிட்டதால்--
    நகைச்சுவை--அதற்கு-
    நகைச்சு---வை!!!.........

  11. #750
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரின் 'அன்பே வா' (1966) - திரை விமர்சனம்
    MGR's Anbe Vaa Tamil Review 1
    ஒரு நாள் இயக்குனர் A.C. திருலோகசந்தர் அவர்கள், Rock Hudson நடித்த Come September படத்தை பார்த்தார். அந்த படம் ஒரு Romantic Comedy வகைப் படம். இந்த படத்தின் மையக் கருவை மட்டும் எடுத்து தமிழிற்கு ஏற்றாற்போல் மாற்றி நாம் ஒரு படத்தை இயக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, அதை தன் ஆஸ்தான கம்பெனியின்
    முதலாளி திரு. A.V. மெய்யப்ப செட்டியாரிடம் தெரிவித்தாராம். செட்டியாரும், 'சரி, பண்ணலாம். யாரை ஹீரோவா போடலாம்னு இருக்க?' என்று அவர் கேட்க, அவர் ஒரு வித தயக்கத்தோடு 'எம்.ஜி.ஆரை போட்டு படம் பண்ணலாம்னு இருக்கேன்' என்று சொன்னாராம். செட்டியாரோ 'எம்.ஜி.ஆரா? அவர் நமக்கு தோது பட மாட்டாரே? அதுவுமில்லாம இது காதல் & காமெடி கலந்த படம். அவர் இதுக்கு ஒத்துக்குவாருன்னு நினைக்கிறியா?' என்று கேட்க, அதற்க்கு A.C. திருலோக்கோ 'நீங்க அனுமதி மட்டும் கொடுங்க. நான் போய் பேசி பார்கிறேன்' என்று சொன்னார். A.V. மெய்யப்ப செட்டியாரும் அனுமதி கொடுக்க, எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு பறந்தது A.C. திருலோகசந்தரின் கார்.


    ராமாவரம் தோட்டத்து வீட்டு ஹாலில் ஏற்கனவே பல தயாரிப்பு கம்பெனி மேனேஜர்களும், இயக்குனர்களும் எம்.ஜி.ஆரை தங்களின் அடுத்த படத்தில் புக் செய்ய காத்துக்கொண்டிருந்தார்கள். A.C.திருலோகசந்தரும் தான் வந்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் தெரியப்படுத்த சொல்லிவிட்டு, அவரும் தலைவரின் வருகைக்காக காத்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர் 'அவர் எங்க இந்தப்பக்கம்? அட்ரஸ் மாறி வந்துட்டாரா?' என்று சொன்னாராம். காரணம், A.V. மெய்யப்ப செட்டியாருக்கு மிகவும் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன். அதனால் தான் எம்.ஜி.ஆர் அப்படி கேட்டார். சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வந்த எம்.ஜி.ஆர், 'உள்ளே வாங்க' என்று திருலோக்கை அழைத்து கதை கேட்க ஆரம்பித்தார். முழு கதையை கேட்ட எம்.ஜி.ஆர் 'கதை நல்லா இருக்கு. ஆனா என் ஆடியன்ஸுக்கு பைட்டு சீன்ஸ் இருந்தா தான் பிடிக்கும். இதுல ஒரு ரெண்டு இடத்துல மட்டும் பைட்டு வைக்கிற மாதிரி திரைக்கதை வைங்க. நாம இந்த படத்தை பண்ணலாம்' என்று சொன்னாராம். அந்த படம் தான் இந்த 'அன்பே வா'
    படத்தின் கதை ரொம்ப சிம்பிள். பெரும் தொழிலதிபரான ஜே.பி, விடுமுறைக்காக சிம்லாவில் இருக்கும் தன் கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்கிறார். ஆனால் அந்த மாளிகையை நிர்வகிக்கும் வேலைக்காரன், வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருப்பதை அறிந்து கொள்ளும் ஜே.பி, அங்கே தன்னை பாலுவாக அறிமுகப்படுத்திக்கொண்டு சொந்த வீட்டிற்க்கே வாடகை கொடுத்துக்கொண்டு தங்க ஆரம்பிக்கிறார். ஏற்கனவே அந்த மாளிகையில் தங்கி வரும் கீதா என்ற பெண்ணுடன் சின்னத் சின்ன மோதல்கள் ஏற்பட்டு அதுவே காதலாக மாறுகிறது அவருக்கு. இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பதை மிகவும் பொழுது போக்காக காட்டியிருக்கும் படம் தான் இந்த 'அன்பே வா'.


    ஜே.பி என்கிற பாலுவாக எம்.ஜி.ஆர். எனக்கு தெரிந்து தலைவர் நடித்த படங்களில், ரொமாண்டிக் காமெடி Genre வகை திரைப்படம் இது ஒன்று தான். இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்தாலும், அதுவும் சிறப்பான படமாக அமைந்தது எம்.ஜி.ஆரின் சிறப்பு. இந்த படத்தில் தலைவர் காமெடியில் கலக்கியிருக்கிறார். அதுவும் புரட்சித் தலைவரின் குறும்புத்தனங்கள் இந்த படத்தில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. சரோஜா தேவியை செல்லமாக 'சின்ன பாப்பா' என்று கிண்டலாக அழைக்கும்போதும் சரி, ஒவ்வொரு முறையும் கண்டத்து பைங்கிளியை ஏமாற்றும் போதும் சரி, ஒவ்வொரு இடத்திலும் சிக்சர் அடிக்கிறார் தலைவர். 'நாடோடி' பாடலில் தலைவரின் வேகத்தை நடனத்தில் கலந்து கட்டி அடிக்கிறார். அதே போலத் தான் சண்டை காட்சிகளும். குறிப்பாக Sitting Bull 'ஆந்திரா' குண்டுராவை அசால்டாக தூக்கி தோளில் நிறுத்தும் காட்சி இருக்கே, கலக்கிட்டிங்க தலைவரே (இந்த படத்தில் நடிக்கும்போது தலைவருக்கு வயது 49 என்பதை நினைவில் கொள்ளவேண்டும்). தலைவர் பொதுவாகவே அழகு தான் என்றாலும், இந்த படத்தில் பலவிதமான உடைகளில் இன்னும் அழகாக தெரிகிறார் மக்கள் திலகம்.

    கீதா என்கிற 'சின்ன பாப்பாவாக' கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி. அன்றைய காதல் கதாநாயகிக்கே உரிய நடையில் நளினம், காதல் சொட்டும் பார்வை என்று நடிப்பில் பல பரிமாணங்களை காட்டுகிறார். அதுவும் அவரின் குரல், நிஜக் குயிலே தோற்று விடும் போங்கள். சமையற்காரன் ராமையாவாக நாகேஷ் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் வெடிச் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள். 'உங்க கிட்ட நிறைய பணம் இருக்கு. என் கிட்ட கொஞ்சம்... கூட பணம் இல்ல' என்று நாகேஷ் வசனம் பேசும் போது செய்யும் ஏற்ற இறக்கம், நாகேஷால் மட்டுமே செய்ய முடிகிற விஷயம். சரோஜா தேவியின் அப்பாவாக வரும் T.R. ராமச்சந்திரன், மனோரமா, S.A. அசோகன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    படத்தின் ஒளிப்பதிவு, மாருதி ராவ். ஈஸ்டர் மேன் கலரில், சிம்லாவை மிகவும் அழகாக தன் கேமராவில் படம் பிடித்திருக்கிறார். பாடலாசிரியர் வாலி & M.S. விஸ்வநாதனின் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மயக்கும் ரகம். புதிய வானம், நான் பார்த்ததிலே, ராஜாவின் பார்வை, நாடோடி மற்றும் அன்பே வா போன்ற பாடல்கள் அனைத்தும் அருமை. எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடித்த பாடல்கள் புதிய வானம் & நாடோடி. வசனம், ஆரூர் தாஸ். 'ஒருத்தன் ஏழையா கூட இருக்கலாம், ஆனா எந்திரமா மட்டும் இருக்கவே கூடாது', ஒருத்தன் நொண்டியா கூட இருக்கலாம், ஆனா ஒண்டியா மாத்திரம் இருக்கவே கூடாது' என்று மிகவும் யதார்த்தமான வசனங்கள் மூலம் நம்மை கவர்கிறார். கதை & இயக்கம், A.C. திருலோகசந்தர். படத்தின் எந்த இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாமல் படத்தை கொண்டு சென்ற விதம், மிகவும் அருமை. எந்த ஒரு இடத்திலும் 'Come September' படத்தின் ஒரு காட்சியைக் கூட காப்பியடிக்காமல், வெறும் மூலக்கதையை வைத்து அற்புதமான திரைக்கதையை இயற்றி படம் எடுத்தது Simply Super. படத்தை தயாரித்தது, AVM Productions.
    MGR's Anbe Vaa Tamil Review 4
    'அன்பே வா' திரைப்படம், 1966 அன்று வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அந்த வருடத்தில் எம்.ஜி.ஆர் நடித்த 9 படங்களில், இந்த படம் தான் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனத்திற்கு ஆன தொகை, 30 லட்சம். ஆனால் வசூல் ஆன தொகையோ 62 லட்சம். ஏ.வி.எம் நிறுவனம், எம்.ஜி.ஆருக்கு தந்த சம்பளம் 3 லட்சம். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும், ராமாவரம் தோட்டத்தில் நன்றாக ரிகர்சல் பார்க்கப்பட்ட பின், படமாக்கப்பட்டது. காரணம், எம்.ஜி.ஆரின் தொழில் பக்தி மற்றும் ஸ்டன்ட் ஆட்களுக்கு எந்த காயமும் ஏற்படக்கூடாது என்ற அக்கறை. இந்த படம் வெள்ளிவிழாவை நோக்கிக் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென்று அன்பே வா படம் அனைத்து திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. காரணம், ஏ.வி.எம்மின் மற்றொரு படம் திரைக்கு புதிதாக வந்திருந்தது. எம்.ஜி.ஆர் செட்டியாரிடம், 'படம் வெள்ளிவிழா நாள் வரைக்கும் இருக்கட்டும். அப்போ தான் படத்துக்கு ஒரு Record கிடைக்கும்' என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதனால் தான் எம்.ஜி.ஆருக்கு 'அன்பே வா' திரைப்படம் ஏ.வி.எம் நிறுவனத்தோடு முதலும், கடைசியுமான படமாக போய் விட்டது.




    என்றும் அன்புடன்

    N.H. Narasimma Prasad

    Thava:
    @@ கீதா என்கிற 'சின்ன பாப்பாவாக' கன்னடத்து பைங்கிளி @@
    நல்ல பார்வை....

    இந்த படம் பார்க்க வேண்டுமென்ற ஆவல், சில வருடங்களுக்கு முன்பு பாடல்களை கேட்ட போதே உருவாகியது..படத்தை டவுன்லோடு போட்டு இதுவரை ஏறக்குறைய 4 முறை பார்த்திருப்பேன்.அதுவரை என்னக்கவர்ந்த உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண் வரிசையில் இந்த படத்தையும் சேர்த்துவிட்டேன்..ரொம்ப அழகான படம்..நான் பார்த்த சிறந்த ரொமாண்டிக் காமெடி படங்களில் இதற்கும் ஒரு இடம் உண்டு.அருமையான விமர்சனம்.மிக்க நன்றி.



    திண்டுக்கல் தனபாலன்:
    எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்... பாடல்களும் அப்படியே... அறியாத தகவல்களுக்கும் நன்றி...



    Good citizen:
    விமர்சனம் அருமை, சில தெரியாத விசயங்களை தெரிந்து கொண்டோம்,, ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை நான் மட்டுமல்ல மற்றவர்களும் உள்ளே உள்ள லிங்கில் அதன் ஒரிஜினலை பார்த்து தெரிந்து கொள்ளட்டும்



    ராஜ்:
    மற்றும் ஒரு வித்தியாசமான பதிவு உங்களிடம் இருந்தது. அதற்கு என் நன்றி....நீங்கள் ஏற்கனவே "Come Septembe" படத்தை பற்றி வேறு எழுதி உள்ளீர்கள். அதையும் படித்து உள்ளேன்.
    "அன்பே வா" எவர்கிரீன் மூவி. எனக்கு நினைவு தெரிந்து உடன் எனது அப்பாவுடன் பார்த்த முதல் திரைப்படம். மறக்க முடியாத படம்..
    நீங்கள் தீவிர எம்.ஜி.யார் ரசிகர் போல் தெரிகிறது. படத்தை அனுபவித்தது எழுதி உள்ளீர்கள். அந்த காலத்தில் தலைவர் ஆடிய டான்ஸ் ரசித்து பார்த்தேன்.


    வருண்:
    To me, the movie was dragged after 80% completion. The last "anbe vaa" repeated song in a "fast tune" was intolerable to me. And the climax was boring. Other than that that was a good entertainer, great songs and comedy was good. I could not appreciate the fights in this movie as this movie supposed to be a love story









    @ராஜ்:

    எனக்கு எம்.ஜி.ஆரை ரொம்ப பிடிக்கும்.



    அன்றைய கதாநாயகர்கள் யாருக்குமே சரியாக நடனம் ஆட வராது. அந்த வகையில் புரட்சித் தலைவர் ஆடும் நடனம் எவ்வளவோ தேவல.




    @வருண்:

    Thanking for Visiting my Blog Varun. Whatever it is, MGR's Anbe vaa Movie is a Best Romantic Comedy Movie Which i ever seen.



    sajirathan:
    தலைவர் பற்றிய ஒரு பதிவு எழுதி எங்களை(தலைவரின் இக்கால இளம் ரசிகர்களை) சந்தோசப்படுத்திட்டீங்க.. நன்றி பிரசாத். எத்தனை தடவை வேணும்னாலும் இந்த படத்தை பார்க்கலாம்.. எல்லா பாடல்களுமே அருமை.. இதில் வரும் "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்ற பாடலை மிகுந்த கஷ்டப்பட்டு இசையமைத்ததாக ஒருமுறை எம்.எஸ்.வி சொன்னாராம்..........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •