Page 71 of 210 FirstFirst ... 2161697071727381121171 ... LastLast
Results 701 to 710 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #701
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR News with Unseen Images
    கர்நாடக மாநிலம் பெங்களூரில் பார்வைத் திறன், செவித் திறன் இழந்தோர் பள்ளி ஒன்றின் விழாவில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடப்பட்டது. அதை ஏற்று அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். இந்த விழாவில் ‘கர்நாடக எம்.ஜி.ஆர்.’ என்று அழைக்கப்படும் பெருமை பெற்ற நடிகர் ராஜ்குமாரும் கலந்துகொண்டார்.
    விழாவில் எம்.ஜி.ஆர். பேச ஆரம்பித் ததும் அவரது பொன்மனம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. அந்தப் பள்ளியின் வளர்ச்சிக் காக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார். விழி இழந்தவர்கள் பார்க்க முடியாவிட்டாலும் அவர் அறிவிப்பைக் கேட்டு கரவொலி எழுப்பினர். இதைப் பார்த்து காது கேளாதோரும் கைதட்டினர்.
    உணர்ச்சிமயமான இந்தச் சூழலில் எம்.ஜி.ஆர். பேசியது மேலும் உள்ளத்தை நெகிழ வைத்தது. அந்த பள்ளிக்கு, தான் நிதி வழங்குவதற்கான காரணம் என்ன என்பதை எம்.ஜி.ஆர். தனது பேச்சில் குறிப்பிட்டார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு எம்.ஜி.ஆருக்கு கண் திருஷ்டி போல, சீர்காழியில் ‘இன்பக் கனவு’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கால் முறிந்துபோனது.
    நாடகத்தில் பெண்ணை ஒருவன் மான பங்கம் செய்வது போல ஒரு காட்சி. அந்தக் காட்சியில் நடித்தவர் நடிகர் குண்டுமணி. பெயருக்கேற்றபடி சிறு குன்று போலவே இருப்பார். பெண்ணைக் காப்பாற்ற குண்டுமணியுடன் எம்.ஜி.ஆர். சண்டையிடும் காட்சிதான் அவரது அறிமுகக் காட்சி.
    மக்களின் ஆரவாரத்துக்கிடையே குண்டு மணியை எம்.ஜி.ஆர். தனது வலிமையான கரங்களால் ‘அலாக்’காக தலைக்கு மேல் தூக்குவார். அன்று அந்தக் காட்சியில் நடிக் கும்போது சமநிலை தவறி எம்.ஜி.ஆருக்கு கால் முறிந்துவிட்டது. சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர். 6 மாதங்கள் சிகிச்சை காரண மாக ஓய்வில் இருக்க வேண்டிய நிலை.
    சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரை சந்திக்க பார்வையற்றவர்கள் இரண்டு பேர் வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்கச் சொன்ன எம்.ஜி.ஆர். ‘‘எதற்காக இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்தீர்கள்?’’ என்று பரிவுடன் கேட்டார்.
    ‘‘உங்களைப் பார்க்கத்தான் வந்தோம்’’ என்று பதில் வந்தது.
    ‘‘என்னைப் பார்க்கவா?’’ பரிதாபத்தோ டும் வியப்போடும் எம்.ஜி.ஆர்.கேட்டார்.
    ‘‘ஆமாம். உங்களைப் பார்ப்பதற்குதான் வந்தோம். பார்வை இழந்த நாங்கள் எப்படி உங்களைப் பார்க்க முடியும் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? எல்லாரையும் போல உங்களை பார்ப்பதற்கு எங்களுக்கு புறக் கண்கள் இல்லையே தவிர, எங்கள் அகக் கண்களில் நீங்கள் ஆழமாக பதிந்திருக்கிறீர்கள். உங்களை எங்கள் கரங்களால் தொட்டு, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்’’ என்று அவர்கள் சொன்னபோது அவர்களது அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.
    இந்த சம்பவத்தை மேடையில் விவரித்து விட்டு தொடர்ந்து பேசும்போது எம்.ஜி.ஆர். கூறினார்... ‘‘இதுபோன்று என் மீது அன்பு செலுத்துவதற்கு லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்ற எண்ணமே எனக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுத்ததோடு, நான் விரைவில் குணமடையவும் உறுதுணை யாக இருந்தது. கண்களை இழந்த அவர்கள் என் மீது காட்டிய அன்பு எனது வாழ்நாளில் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது. அவர்களுக்கெல்லாம் என் வாழ்நாளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று சிறிய உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.’’
    எம்.ஜி.ஆர். இதை சொன்னபோது உணர்ச்சி மேலிட கலங்கிய கண்களுடன் கூட்டத்தினர் எழுப்பிய கரவொலி பெங்களூர் முழுவதும் எதிரொலித்தது.

    - தி இந்து ..........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #702
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    30.11.1968 ‘தீர்ப்பு நாடகப் பொன்விழாவில்...

    நான் ஒரு நாத்திகனா? இல்லவே இல்லை. என்னைப் பற்றி பலர் தவறாக இப்படி புரிந்து கொண்டு தவறாகவும் எழுதி வருகிறார்கள்.

    உண்மையாக நான் நாத்திகன் அல்ல. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ‘ஒருவனே தேவன்’ என்ற கொள்கையை உடையவன் நான். நம் சக்தியை எல்லாம் மீறிய ஒரு சக்தி இருக்கிறது. அதைத் தான் நாம் கடவுள் என்று சொல்கிறோம். வழிபடுகிறோம்.

    பலர் இந்தச் சக்திக்கு பல உருவம் கொடுத்துப் பெயர்கள் கொடுத்து கடவுளாக வணங்கி வழிபடுகிறார்கள். நான் என் தாயின் உருவத்தில் அந்தச் சக்தியை இப்போது வழிபட்டு வருகிறேன். அப்படியானால் நான் கோவிலுக்கு போனது கிடையாதா? போயிருக்கிறேன். ’மர்மயோகி’ படம் கோவை சென்ரலில் நடைபெற்ற போது நான் பழனி மலைக்குப் போய் முருகனை தரிசித்து வந்திருக்கிறேன்..........எம்.ஜி.ஆர்.,........ .

  4. #703
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் "ராஜகுமாரி" திரைப்படம் பின்னாளில் மகத்தான பல வெற்றிகளை படைத்துள்ளது. 1950 ஆம் ஆண்டுக்குப் பின் இக்காவியம் பல ஊர்களில் 4 வாரங்கள் 5 வாரங்கள் ஓடி பல சிறப்புகளைப் பெற்றுள்ளது.
    1995 ஆம் ஆண்டு வரை இத் திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டு வந்துள்ளது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கின்றோம்.

    புரட்சி நடிகர் நடித்த முதல் படமான ராஜகுமாரி பல ஊர்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடியது போல் எந்த நடிகரின் படமும் இது போன்று ஒடியதில்லை.எந்த முதல் கதாநாயகனின் வெற்றியும்* இது* போன்று சாதனையை பெற்றது இல்லை.. தொட்டதில்லை.

    1991...1992...
    சென்னையில் திரையிட்ட அரங்குகள்!
    1991 ல் மதுரை சி.டி.சினிமாவில் ராஜகுமாரி 21 நாள் ஒடியது.

    சென்னை ...1991
    பிளாசா 7 நாள் : 57,980.55
    பிராட்வே 7 நாள் : 20,761.00
    (பகல் காட்சி ஆகும்)
    காமதேனு 7 நாள் 40,940.80
    1992. ல் முருகன் 7 நாள் ஒடியது.
    மற்றும்...
    பழனியப்பா, தங்கம்,*
    சரவனா, நேஷனல் (3 காட்சி)*
    லிபர்ட்டி ,ஜெயராஜ்...பகல் காட்சி....
    பிரிண்ட் சரியில்லை பல கலாட்டாக்கள் திரையரங்குகளில் நடந்தது.

    ஆனால் ஒரு நடிகரின் முதல் படம் இன்று வரை புத்தம் புதிய பிரிண்டு
    மற்றும் டிஜிபீட்டா ஏவி.எம்மில்*உரிமை உள்ளது. அதை வாங்கி சென்னையில் திரையிட 1980 முதல் (40 ஆண்டுகள் மட்டுமின்றி) 2020 வரை ஆள் இல்லை...
    தொடரும் ....
    Ur.........

    *

  5. #704
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் திரைஉலக வாழ்வில் சரித்திரம் & சாதனை திருப்புமுனை படைத்த காவல்காரன் திரைக்காவியம்
    சுடப்பட்ட எம்ஜிஆரின் குரல் மாறி வந்த முதல் படம் ‘காவல்காரன்’; அழுது அழுது, திரும்பத் திரும்ப பார்த்த எம்ஜிஆர் ரசிகர்கள் - ‘காவல்காரன்’ வெளியாகி 53 ஆண்டுகள்

    1967ம் ஆண்டு, தமிழக அரசியலிலும் தமிழ்த் திரையுலகிலும் மறக்கமுடியாத ஆண்டாக, பரபரப்பான ஆண்டாக அமைந்தது. திரையுலகையே பதறவைத்த ஆண்டாகவும் அமைந்தது. அரசியலில், திமுகவின் ஆட்சி அந்த வருடம்தான் அமைந்தது. அண்ணா முதல்வரானார். திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்த எம்ஜிஆரை, வருடத்தின் தொடக்கத்தில், ஜனவரி 12ம் தேதி எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார். 13ம் தேதி ‘தாய்க்கு தலைமகன்’ வெளியானது. ஆனாலும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பொங்கல் இனிக்கவில்லை. சுடப்பட்டு எட்டு மாதங்கள் கழித்து, ‘காவல்காரன்’ வெளியானது. துக்கமும் அழுகையுமாக வந்து படம் பார்த்தார்கள். எதிர்பார்த்த வெற்றியை விட, இரண்டு மூன்று மடங்கு வெற்றியைத் தந்தார்கள். அதுதான் எம்ஜிஆர் மேஜிக்.

    67ம் ஆண்டு ‘தாய்க்கு தலைமகன்’ வந்தது. மே மாதம் 19ம் தேதி ‘அரசகட்டளை’ வந்தது. அது தேவர்பிலிம்ஸ். இந்தப் படத்தை இயக்கியவர் எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி. இந்தப் படங்களெல்லாம் 66ம் ஆண்டிலேயே வேலை தொடங்கி, 95 சதவிகிதம் முடித்துக் கொடுக்கப்பட்டது. அதாவது எம்ஜிஆர் சுடப்படுவதற்கு முன்பே நடித்துக் கொடுத்திருந்தார். மீதமுள்ள ஐந்து சதவிகிதம் ‘அரசகட்டளை’யில் குரல் மாறிய நிலையில் டப்பிங் செய்யப்பட்டது. ஆனாலும் அவ்வளவாகத் தெரியவில்லை. இதுவும் எம்ஜிஆரின் மேஜிக்தான்.


    ஆனால், 67ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி எம்ஜிஆர் சுடப்பட்டு, அதன் பின்னர், நடிக்கப்பட்டு, டப்பிங் பதிவு செய்யப்பட்டு முழுமையாக குரல் மாறிய நிலையில் வந்த முதல் படம்... ‘காவல்காரன்’. சத்யா மூவீஸ் ஆர்.எம்.வீரப்பன் தயாரிக்க, ப.நீலகண்டன் இயக்க, ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், அசோகன், பண்டரிபாய், மனோகர், சிவகுமார் முதலானோர் நடித்திருந்தனர்.



    67ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. முதல்நாள் படம் பார்த்துவிட்டு, அழுதுகொண்டே வந்தார்கள். கதறி கண்ணீர்விட்டபடியே வந்தார்கள். ‘வாத்தியார் குரலே மாறிப்போச்சே’ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு, அடுத்த காட்சிக்கு அப்படியே நின்றார்கள். முதல் ஷோ பார்த்துவிட்டு, இரண்டாவது ஷோவும் பார்த்தார்கள். எம்ஜிஆரின் குரல் மாறியிருக்கும் விஷயம், தமிழகம் முழுவதும் தீயாய்ப் பரவியது. கூட்டம்கூட்டமாக வந்து பார்த்தார்கள். குடும்பம் குடும்பமாக வந்து பார்த்தார்கள். பார்த்தவர்கள் எல்லோரும் அழுதுகொண்டே பார்த்தார்கள். சுடப்பட்டு குரலே மாறிப் போய்விட்ட எம்ஜிஆர், வசனம் பேசப்பேச, ‘தலைவா தலைவா’ என்கிற கோஷங்கள், எம்ஜிஆரின் லாயிட்ஸ் சாலை வீட்டிலும் தி.நகர் வீட்டிலுமாக எதிரொலித்துக் கதறியது.

    எம்ஜிஆர் போலீஸ் அதிகாரி. நம்பியார் வில்லன். அவரின் மகள் ஜெயலலிதா. அங்கே ஒரு பங்களாவில் நடக்கும் கொலை குறித்து துப்பறிய எம்ஜிஆர், நம்பியார் வீட்டு கார் டிரைவராக வருவார். அவர் போலீஸ் என்பது அம்மாவுக்கு கூட தெரியாது. கொலை செய்தது யார், நம்பியார், அசோகன், மனோகரின் வேலைகள் என்னென்ன என்பதையெல்லாம் எப்படிக் கண்டறிந்தார் என்கிற முழுக்க முழுக்க எம்ஜிஆர் ஃபார்முலா கதைதான் ‘காவல்காரன்’. அதை தனக்கே உரிய பாணியில், எம்ஜிஆரின் மனமறிந்து இயக்கி அசத்தினார் ப.நீலகண்டன்.



    எம்ஜிஆருக்கு தேவர் பிலிம்ஸும் சத்யா மூவீஸும் ரொம்பவே ஸ்பெஷல். 67ம் ஆண்டில் சுடப்பட்ட சம்பவம் நடந்த மறுநாள் தேவர் பிலிம்ஸ் படம் வெளியானது. சுடப்பட்டதால் குரல் மாறிய நிலையில் வெளியானது சத்யா மூவீஸின் ‘காவல்காரன்’. நடுவே, எம்ஜிஆரின் அண்ணன் சக்ரபாணி இயக்கிய ‘அரசகட்டளை’ வெளியானது. ‘தாய்க்கு தலைமகன்’ படத்தில் நடித்த சரோஜாதேவியும் ‘காவல்காரன்’ படத்தில் நடித்த ஜெயலலிதாவும் ‘அரசகட்டளை’யில் நடித்திருந்தார்கள்.

    ’கட்டழகு தங்கமகள்’ என்றொரு பாடல். ‘மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ’ என்றொரு பாடல். ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ என்றொரு பாடல். ‘அடங்கொப்புரானே சத்தியமா நான் காவல்காரன்’ என்றொரு பாடல். ‘காது கொடுத்து கேட்டேன் குவாகுவா சத்தம்’ என்றொரு பாடல். எல்லாப் பாட்டுகளும் செம ஹிட்டு. என்றாலும் ‘காது கொடுத்து கேட்டேன்’ பாடலும், ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ பாடலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. வாலியின் பாடல்கள். எம்.எஸ்.வி.யின் இசை. அட்டகாச கூட்டணியில் அற்புதப் பாடல்கள்.



    இப்போது மூடப்பட்டுள்ள அகஸ்தியா, குளோப், மேகலா, நூர்ஜஹான் முதலான திரையரங்கிலும் தமிழகத்திலும் வெளியாகி சக்கைப்போடு போட்டான் ‘காவல்காரன்’. எம்ஜிஆரின் முகமும் எம்ஜிஆரின் படமும் எம்ஜிஆர் பட பாடல்களும் மிகப்பெரிய எனர்ஜியைத் தரவல்லவை; ஊக்கத்தைக் கொடுக்கக்கூடியவை; உற்சாகத்தை வழங்குபவை; உத்வேகத்தை ஊட்டுபவை என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்தன. இன்றைக்கும் அவையெல்லாம் நிஜம். ஆனால், ‘காவல்காரன்’ படம், அழுதுகொண்டே ரசிகர்கள் பார்த்த படம். பெண்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போதே அழுதபடியே வந்தார்கள். படம் பார்த்தார்கள். இன்னும் வெடித்து அழுதார்கள்.



    சென்னை குளோப் தியேட்டரில், பெண்களுக்காகவே தனிக்காட்சி திரையிட்டதெல்லாம் உலக சாதனை. இலங்கையில் இந்தப் படம் 170 நாட்களைக் கடந்து ஓடியது. மிகப்பெரிய வசூலை பெற்றுத்தந்தது.

    67ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, வெளியானது ‘காவல்காரன்’. எம்ஜிஆரின் குரலே மாறிப்போயிருந்த நிலையில் வந்த முதல் படம். ஆனாலும் தன் பலவீனத்தையே பலமாக்கிக் காட்டினார் எம்ஜிஆர். அப்படி பலமாக்கிக் காட்டினார்கள் எம்ஜிஆரின் ரசிகர்கள். இதுவும் எம்ஜிஆர் மேஜிக் தான்!

    படம் வெளியாகி, 53 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் எம்ஜிஆர் சுடப்பட்ட வரலாறுடன், "காவல்காரன்" படமும் இணைந்துகொண்டது. சகாப்தமாகிவிட்டது.........

  6. #705
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "இதயக்கனி*" காவியம்...
    மருதானை மனோகரா
    136 நாள்* : 3,98,105.00
    யாழ்நகர்* சென்ட்ரல்
    102 நாள் : 4,30,024.75
    மட்டு நகர் ரீகல்*
    70 நாள் : 1,15,701.70
    பாமன் கடை ஈரோஸ்
    50* நாள் : 2,04,341.50
    வவுனியா முருகன்
    54 நாட்கள்....
    நெல்லியடி லஷ்மி 44 நாள்
    கல்முனை ராஜ்* 41 நாள்
    திருமலை சரஸ்வதி 45 நாள்
    மற்றும் 10 இடங்களுக்கு மேல் 4,5,வாரங்களை கடந்து சாதனை.

    நாளை நமதே

    கொழும்பு.... சமந்தா
    140 நாள் : 5,06,955.50
    யாழ்நகர் ராணி
    102 நாள்* : 4,05,786.75
    பாமன்கடை ஈரோஸ்
    88 நாள் : 3,43,310.50
    கல்முனை ராஜ்*
    61 நாள் : 1,67,089.90
    நெல்லியடி லஷ்மி 52 நாள்
    மற்றும் சந்திரா 47 நாள்,
    இந்திரா 40 நாள்...
    பல இடங்களில்
    நாளைநமதே 5,6,வாரங்களை கடந்து சாதனையாகும்....

    "நினைத்ததை முடிப்பவன்" காவியம்...
    யாழ் வின்சர் 80 நாள்
    வசூல் : 2,82,945.00
    கொழும்பு சென்ட்ரல்
    75 நாள் : 3,01,398.60
    மட்டு நகர் விஜயா 56 நாள்
    மற்றும் பல இடங்களில்*
    சாதனைகள்....
    "பல்லாண்டு வாழ்க" காவியம்...
    யாழ்நகர் 84 நாள் ஒடியது...
    கொழும்பு நிலவரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறோம் ...

    இலங்கையில் என்றுமே
    நிரந்த வசூல் பேரரசர் என்றால்
    மக்கள் திலகம் என்ற மாணிக்கச்சுடர்
    எம்.ஜி.ஆர். ஒருவரே!*

    நம் பதிவில் என்றும் பொய்யும் பித்தலாட்டமும் கிடையாது... அதற்கு எந்தவித அவசியமுமில்லை...

    நன்றி!
    திரு. ராஜசிங்கம்
    திரு. டேவிட்
    திரு. சதானந்தன் இலங்கை... கனடா...
    யாழ்நகர் - பிரான்ஸ்

    தொடரும் .....

    *
    இலங்கை திருநாட்டில் 1975 ல் புரட்சித்தலைவரின் மகத்தான காவியங்கள் படைத்த சாதனைகளின் வரலாறு.....

    "இதயக்கனி", " நாளை நமதே" இரண்டு திரைப்படங்கள் இரண்டு திரையரங்குகளில் ஓடி மொத்தம் நான்கு திரையரங்குகளில்*
    100 நாட்களை வெற்றிகொண்ட ஆண்டாக 1975 ஆம் ஆண்டு மக்கள் திலகத்திற்கு அமைந்தது ஆகும்.

    இதயக்கனி திரைக்காவியம் மனோகரா திரையரங்கில் 132 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதன் பின் சென்ட்ரல் திரையரங்கில் 105 நாட்கள் ஓடி வெற்றி சாதனை புரிந்தது.

    நாளை நமதே திரைக்காவியம் சமந்தாஅரங்கில் 140 நாட்களும், ராணி அரங்கில் 102 நாட்களும் ஈராஸ் திரையரங்கில் அடுத்து வெளியீடாக 88 நாட்களும் ஓடி வசூலில் மிகப்பெரிய சரித்திரத்தை ஏற்படுத்தியது.

    மற்றும் அதே ஆண்டில் வெளியான நினைத்ததை முடிப்பவன்*
    வின்ஸர் அரங்கில் 80 நாட்களை கடந்தும்.... பல்லாண்டு வாழ்க* செல்லமகாலில் 12 வாரங்கள் ஓடி மிகப்பெரிய தாக்கத்தை வசூலை ஏற்படுத்தி.... மிகப்பெரிய வெற்றியையும் படைத்தது.........
    *

  7. #706
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரையில் அதிசயம்...
    4 வாரங்களில் 1 லட்சத்தை வசூலில் கடந்த காவியங்களில்...
    1968 வரை.... 15 படங்கள்.... அதில்..
    கலையுலக சக்கரவர்த்தின் காவியங்கள்
    மட்டும் -11 ஆகும்.....

    நாடோடி மன்னன்
    தங்கம் : 1,37,530.95
    காவல்காரன்
    சிந்தாமணி : 1,25,316.25
    ரகசிய போலிஸ்115
    சிந்தாமணி : 1,24,326.46
    குடியிருந்த கோயில்
    நீயு சினிமா : 1,16,081.15
    ஆயிரத்தில் ஒருவன்
    சென்ட்ரல் : 1,12,232.53
    ஆசைமுகம்
    தங்கம் :.1,08,453.72
    அன்பே வா
    சிந்தாமணி : 1,06,357.44
    எங்க வீட்டுப்பிள்ளை
    சென்ட்ரல் : 1,05,832.51
    மற்றும்
    மதுரைவீரன்
    பறக்கும் பாவை
    ஒளி விளக்கு....

    1968 வரை மக்கள்திலகத்தின் சாதனையே அனைவரும் போற்றும் படி முதன்மை ஆகும்.
    தொடரும்...ur.,.........

  8. #707
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தமிழ்_சினிமாவில் #எம்ஜிஆர்_செய்த #முதல்_சாதனைகள்!.........

    தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள்.

    * எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'.

    * எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர்

    * எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'.

    * எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.

    * எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'.

    * எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'.

    * எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ தயாரித்த 'பெரிய இடத்துப் பெண்'.

    * எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'.

    * எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அணுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி', 'பணம் படைத்தவன்'.

    எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.

    எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.

    எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.

    எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.

    எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'

    எம்.ஜி.ஆர். நடித்து ரிக்க்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ், இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்க்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து "பாரத்" இந்தியாவின் சிறந்த நடிகர் பட்டத்தைப் பெற்றார்.

    எம்.ஜி.ஆர். படத்தில்தான் நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'.

    எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.

    எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.

    எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.

    எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்தினம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான்.

    எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.

    எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்).

    எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி 100 நாட்கள், வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.

    எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம்.

    எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.

    அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'. இந்த பானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.

    எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'.

    எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.

    எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'.

    எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.

    எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'.

    எம்.ஜி.ஆர். சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.

    எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம் 'படகோட்டி'.

    எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ்.

    எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். 'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார்.

    எம்.ஜி.ஆர். நடித்து விளம்பரப்படுத்தப்பட்டும், பூஜைபோடப்பட்டும் நின்று போன படங்களின் பட்டியலும் கொஞ்சம் பெரிதுதான்.

    'சாயா', 'குமாரதேவன்', 'வாழப் பிறந்தவன்', 'பாகன் மகன்', 'மக்கள் என் பக்கம்', 'மறுபிறவி', 'தந்தையும் மகனும்', 'வெள்ளிக்கிழமை', 'தேனாற்றங்கரை', 'அன்று சிந்திய ரத்தம்', ' இன்ப நிலா', 'பரமபிதா', 'ஏசுநாதர்', 'நாடோடியின் மகன்', 'கேரளக் கன்னி', 'கேப்டன் ராஜா', 'வேலு தேவன்', 'உன்னை விடமாட்டேன்', 'புரட்சிப் பித்தன்', 'சமூகமே நான் உனக்கே சொந்தம்', 'தியாகத்தின் வெற்றி', 'எல்லைக் காவலன்', 'சிலம்புக்குகை', 'மலைநாட்டு இளரவசன்', 'சிரிக்கும் சிலை, 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, இன்பக் கனவு', 'நானும் ஒரு தொழிலாளி'.

    அ முதல் அஃகு வரை..........

  9. #708
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை நகரில் திருவல்லிக்கேணி ஸ்டார் அரங்கிலும்,வடசென்னை பகுதி திரையரங்கான கிரவுன் அரங்கிலும் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    1947 ல் ஜூபிடர் நிறுவனம் தயாரித்த திரைப்படம்மான "கஞ்ஜன்" தோல்வியைத் தழுவியது. அதே நிறுவனத்திற்கு பல வெற்றியையும், சாதனை யையும், வசூலையும் பெற்று தந்த* முதல் கதாநாயகன் மக்கள் திலகமே! ராஜகுமாரி திரைப்படம் மூலம் ஜூபிடர் நிறுவனம் தலை நிமிர்ந்து நின்றது.

    1947 ல் தமிழ் பட உலகில் புதிய கதாநாயகனாக புரட்சி நடிகர்*
    எம் ஜி ஆர் வலம் வந்த ராஜகுமாரி மாபெரும் வெற்றி என எங்கும் முரசு கொட்டியது.

    மதுரை சிந்தாமணி திரையரங்கில் 112 நாட்கள்... திருச்சி வெலிங்டன் திரையரங்கில் 147 நாட்கள் மற்றும் வேலூர், சேலம், கோவை, நெல்லை நகரங்களில் 100 நாட்களை கடந்து பெங்களூரில் நகரிலும் 100 நாட்களை வெற்றிகொண்ட திரைப் படமாக ராஜகுமாரி காவியம் திகழ்ந்தது.

    சிறந்ததொரு திரைப்படமாக ராஜகுமாரி தென்னக மெங்கும் பவனி வந்தது. தமிழக திரை உலக வரலாற்றில் 30 திரையரங்குகளில் முதன் முறையாக திரையிடப்பட்டது அதன் பின்பு 18 திரையரங்குகளில அதிகமான பிரிண்டுகள் போடப் பட்டு மொத்தம் 48 திரையரங்கு களில் ராஜகுமாரி திரைப்படம் வெற்றிகரமாக ஒடியது.*

    எவருடைய சிபாரிசும் இல்லாமல் தனிப்பெரும் கதாநாயகனாக தனித்து நின்று வெற்றியைக் கண்ட முதல் கதாநாயகன்.... சுதந்திர இந்தியாவின் முதல் கதாநாயகன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒருவரே !

    தான் நடித்த முதல் திரைப்படத்தி லேயே வீரத்தையும், கருத்தையும், நல்ல காட்சிகளையும், நல்ல பாடல்களையும், கொள்கைப்படி விதைத்த முதல் கதாநாயகன் மக்கள் திலகம் எம். ஜி.ஆர் ஒருவரே.........

  10. #709
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரை தொட முயன்று அடித்து வீசப்பட்டேன் - ஜேப்பியார்.

    " 1954 ஆம் ஆண்டில் நான் S S L C படித்து முடித்திருந்தேன்.பெண்களை தொட்டுப் பார்க்க துடிக்கும் வயது அது. ஆனால் நான் தொட்டுப் பார்க்க விரும்பியதோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை. அப்படி ஒரு அழகு, தேஜஸ் அவரிடம். 'இன்பக்கனவு' நாடகம் நடந்தபோது மேடைக்கே போய் விட்டேன். நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். அருகில் போய்விடலாம் என்று முயன்றால் அடித்து தொலைதூரம் வீசப்பட்டேன்.அப்படி யொரு அடியை அதற்கு முன் நான் வாழ்வில் பெற்றதில்லை. அடிக்கு பயந்து எம்.ஜி.ஆரைத் தொடும் ஆசையை விட்டுவிடவில்லை.'நாடோடி மன்னன்' வெற்றி விழாவிலும் எம்.ஜி.ஆரைத் தொட முயன்று முன்பைவிட வலுவான அடி, உதை கிடைத்தது.

    1962ல் எனக்குத் திருமணமாகி பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு எம். ஜி.ஆரைக் காண பாலர் அரங்கம் (கலைவாணர் அரங்கம்) சென்றேன். குழந்தையோடிருந்தால் எப்படியும் அங்கு நடைபெறும் விழாவுக்கு வரும் அவரை நெருங்கிவிடமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு. அது வீண் போகவில்லை. என்னைப் பார்த்ததும் அருகில் வரச் சொன்ன எம்.ஜி.ஆர். 'உன் குழந்தைக்கு பெயர் சூட்டத்தானே கொண்டு வந்திருக்கிறாய் ? ' என்று கேட்டார். நானும் ஆமாம் என்று தலையாட்டினேன். "என்ன பெயர் வைக்க முடிவு செய்திருக்கிறாய் ? " என்று கேட்டார். "நீங்களே ஒரு பெயர் சூட்டிவிடுங்கள் " என்றேன். "இல்லை பெற்றோர் கருத்து தெரிந்து தான் சொல்வேன்" என்றார். விடாமல் நானும் "ராஜேஸ்வரி" என்ற பெயரைச் சொன்னேன். "விஜய ராஜேஸ்வரி" என்று பெயர் சூட்டினார். அதற்கு பின் எம்.ஜி.ஆரிடம் வந்துவிட்டேன். எனது வாழ்க்கையே அவரோடுதான் என்றானது" - AVM நினைவு அறக்கட்டளை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி சொற்பொழிவில் 'சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் பேசியதிலிருந்து - "

    '#இதயக்கனி' ஆகஸ்ட் 2008 இதழிலிருந்து .

    18 -06 -2020 திரு ஜேப்பியாரின்
    4 ம் ஆண்டு நினைவு நாள்.

    Ithayakkani S Vijayan.........

  11. #710
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணென்ன கண்ணென்ன கலங்குது ... பாடலில் நடன அசைவுகளில் புரட்சித் தலைவர் கலக்கியிருப்பார். இன்னொன்று முக்கியமாக கவனிக்க வேண்டியது தலைவரின் அற்புதமான நடிப்பு. சண்டைக் காட்சிகள், இயக்கம், கேமரா கோணம், இசையறிவு ஆகிய அவரது பன்முகத்தன்மைகைள் பேசப்பட்ட அளவுக்கு அவரது நடிப்பு பேசப்படவில்லை. இந்தப் படத்தில் முருகப்பனாக வரும்போது கிராமத்தானாகவே வாழ்ந்திருப்பார். பெரும்பாலான நடிகர்கள் கைகளை என்ன செய்வதென்று, எப்படி பயன்படுத்துவதென்று தெரியாமல், அல்லது ஸ்டைல் காட்டுவதாக நினைத்து கோமாளித்தனம் செய்வார்கள். ஆனால், இதில் கிராமத்தானாக வரும்போது பல காட்சிகளில் தோளில் கிடக்கும் துண்டின் நுனியை இரு பக்கத்திலும் தலைவர் பிடித்திருக்கும் அழகே அழகு. நவநாகரிக அழகப்பனாக மாறியபிறகு அதற்கேற்ற நடை, உடை, பாவனை ஸ்டைல், அன்று வந்ததும் இதே நிலா பாடலில் நளின அசைவுகள், சரோஜா தேவி வீட்டில் வந்து அமரும் கெத்து என்று வித்தியாசத்தில் அமர்க்களப்படுத்தியிருப்பார். மறுபடியும் கண்ணென்ன... பாடலில் குடுமி வைத்தபடி கிராமத்தானின் நடன அசைவுகளை காட்டியிருப்பார். இவ்வளவையும் மிகையில்லாமல், அலட்டல் இல்லாமல், ஆ... ஓ... ஊ.... என்று கத்தாமல் வித்தியாசம் என்ற பெயரில் முகத்தைக் கோணாமல் இயற்கையாக நடித்திருப்பார். .........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •