Page 62 of 210 FirstFirst ... 1252606162636472112162 ... LastLast
Results 611 to 620 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #611
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இலங்கையில் "நீரும் நெருப்பும் "...திரைக்காவியம் ஓடிய சாதனைகள்* சில!
    01.01 1972 ல் திரையிடப்பட்ட மக்கள் திலகத்தின் மாறுபட்ட இரு வேடங்களில் பவனி வந்த நீரும் நெருப்பும் திரைக்காவியம் கொழும்பிலுள்ள ஜெயின்ஸ்தான் திரையரங்கில் 84நாட்களும் ஈரோஸ் திரையில் 45 நாட்களும் நவா திரையில் ஏழு நாட்களும் காண்பிக்கப்பட்டு மொத்தம் 136 நாட்கள் கொழும்பில் முதல் கட்டமாக ஓடிய திரைப்படம் நீரும் நெருப்பும்.
    01.01 1972 ல் யாழ்ப்பாணம் நகரில் காலை 6 மணிக்கு முதல் காட்சி துவங்கியது. தொடர்ந்து ஆறு காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை. இரண்டாவது நாளில் 5 காட்சி நடைபெற்றது 5 காட்சியும் அரங்கு நிறைந்து சாதனை. தொடர்ந்து நான்கு காட்சிகள் வீதம் காண்பிக்கப்பட்டு மொத்தம் ராஜா திரையரங்கில் 65 நாட்கள் ஓடியது நீரும் நெருப்பும்.
    16 .02 .1972 திரிகோணமலை சரஸ்வதி தியேட்டரில் திரையிடப்பட்ட நீரும் நெருப்பும் திரைப்படம் 50 நாட்களை கடந்து சாதனை படைத்தது. இலங்கையில் நீரும் நெருப்பும் திரைப்படம் பல பகுதியில் திரையிடப்பட்டு சாதனையாகும்.

    அடுத்து இலங்கையில் ரிக்க்ஷாக்காரன் திரைக்காவியம் 18.2 .72 ல் திரையிடப்பட்டு சாதனை படைத்தது. கொழும்பில் 4 திரையில் திரையிடப்பட்டது மக்கள் திலகத்தின் ரிக்க்ஷாக்காரன். கொழும்பு கேப்பிட்டல், கிங்ஸ்லி பிளாசா, சபையர் ஆகிய நான்கு திரைகளில் .....
    கிங்ஸ்லி அரங்கில் 20 நாட்களும், பிளாசா திரையில் 35 நாட்களும், சபையர் திரையில் 12 நாட்களும், கேப்பிட்டல் திரையில் 78 நாட்களும் ஓடி கொழும்பில் மொத்தம் 145 நாட்கள் ஒடி சாதனை படைத்தது.
    யாழ் நகரில் வெலிங்டன் திரை மற்றும் லிடோ திரையரங்கில் திரையிடப்பட்ட ரிக்க்ஷாக்காரன் லிடோ அரங்கில் 29 நாட்களும், வெலிங்டன் தியேட்டரில் 72 நாட்களும் வெற்றி முரசு கொட்டி முதல் வெளியீட்டில் 101 நாட்கள் ஒடியது. ஒரே நாளில் ஆறு காட்சிகள்
    காண்பிக்கப்பட்டு 12 காட்சிகளும் அரங்கு நிறைந்து அதன் பின்பு ஐந்து காட்சிகள் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்து தொடர் சாதனை புரிந்தது....

    இலங்கையில் தொடர்ந்து இடைவெளி இல்லாது வந்து மகத்தான சாதனையை படைத்த இரண்டு காவியங்கள்...
    நீரும் நெருப்பும்
    ரிக்க்ஷாக்காரன்...
    கணேசனின் இரண்டு படங்கள்
    ராஜா... ச.சமாளி* சாதனையின்றி கிடந்தது....
    மேலே மக்கள்திலகம் செய்த சாதனையை பார்த்து முக்காடிட்டு மூலையில் ஒதுங்கி நின்றனர்.*
    தகவல்
    அ.டேவிட்
    57,டேவிட் ரோட்,
    யாழ்பாணம்
    இலங்கை.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #612
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இலங்கையிலுள்ள திரிகோணமலையில் "நீரும் நெருப்பும்"... திரைக்காவியம் 50 நாட்களை கடந்து மாபெரும் வசூலை உருவாக்கியது அதே அரங்கில் அதன் பின்பு திரையிட்ட நடிகர் சிவாஜி கணேசனின் சவாலே சமாளி திரைப்படத்திற்கு கணேசன் ரசிகர்கள் ஒலிபெருக்கியில் நெருப்பை அணைக்க வரும் சவாலே சமாளி* என்று விளம்பரம் செய்தார்கள் ஆனால் நீரும் நெருப்பும் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து ஓடியது. சவாலே சமாளி திரைப்படம் 33 நாட்களில் தூக்கி எறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    திரிகோணமலை ஜோதி அரங்கில் சவாலே சமாளி 33 நாளில் 19 ஆயிரத்து 555 பைசா வசூலை கொடுத்தது. அதற்கு முன் வெளியான காவல்காரன் திரைப்படம் அதே திரையரங்கில் 22 நாளில் 21 ஆயிரத்து 190 வசூலை*
    3 ஆண்டு முன்னே கொடுத்தது.* நீரும் நெருப்பும் திரைப்படம் ஆறு ஆண்டுகளுக்குப் பின் திரிகோணமலையில் 50 நாளை கடந்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது..........

  4. #613
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் பிறருக்கு கொடுப்பது என்று முடிவு செய்துவிட்டால் கையில் பணம் இல்லாவிட்டாலும் மற்றவர்களிடம் கடன் வாங்கியாவது கொடுத்து விடுவார். அப்போதுதான் அவருக்கு நிம்மதி. உண்பது, உறங்குவது போல, கொடுப்பதும் அவருக்கு இயல்பானது.

    ‘இதயவீணை’ படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு எம்.ஜி.ஆர். சென் றிருந்தார். அங்கிருந்த பிரபல ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். இதை அறிந்து ராணுவத்தினர் அவருக்கு வர வேற்பு அளித்தனர். பின்னர், தங்களின் ராணுவ நலச் சங்கம் ஒன்றுக்கு வருகை தர வேண்டுமென்று அழைப்பு விடுத்தனர். அவர்களின் வேண்டு கோளை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார். அவர்தான் எங்கு சென்றாலும் வெறும் கையோடு சென்று பழக்கமில்லையே. ராணுவ நலச் சங்கத்துக்கு நிதி கொடுக்க முடிவு செய்தார். அவரிடம் அப்போது பணம் இல்லை. படத்தின் தயாரிப்பாளரான மணியனிடமும் படப் பிடிப்பு செலவுக்கு வைத்திருந்ததைத் தவிர பெரிதாக தொகை இல்லை.

    அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ஒரு பெரும் தொகையை குறிப்பிட்டு ‘‘கடனாக கிடைக்குமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். அதற்கு தொழிலதிபர், ‘‘தாராளமாக. ஆமாம், அப்படி என்ன தேவை உங்களுக்கு?’’ என்று வினவினார். எம்.ஜி.ஆர். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் தொழிலதிபர் அசந்துபோய்விட்டார். ‘கடன் வாங்கி இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக கொடுக்கிறாரே?’ என்று நினைத்தார். தனது எண்ணத்தை எம்.ஜி.ஆரிடமும் சொன்னார்.

    ‘‘தவறாக நினைக்காதீர்கள். ராணு வத்தினர் விரும்பி உங்களை அழைக்கிறார்கள். ஏதாவது தொகை கொடுக்க வேண்டுமென்றால் கொடுங்கள். ஆனால், இவ்வளவு பெரிய தொகை வழங்குவது தேவையா?’’ என்றார். எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துவிட்டது.

    ‘‘நீங்களும் நானும் சென்னையில் இருந்து லட்சம் லட்சமாக சம்பாதித் துக்கொண்டு பாதுகாப்பாக இருப் பதற்கு நாட்டை பாதுகாக்கும் இந்த ராணுவத்தினர்தான் காரணம். அவர்களது உழைப்புக்கும் தியாகத்துக்கும் இந்தத் தொகை மிகவும் குறைவு. முதலில் பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். சென்னை திரும்பியதும் தருகிறேன்’’ என்று தொழிலதிபரிடம் சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வேகமாகச் சென்றுவிட்டார். பிறகு தொழிலதிபரிடம் மறுப்பேது? அவர் ஏற்பாடு செய்து கொடுத்த தொகையை ராணுவ நலச் சங்கத்துக்கு நன்கொடையாக எம்.ஜி.ஆர். வழங்கினார். இதை எதிர்பார்க்காத ராணுவத்தினர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தனர்.

    - தி இந்து ..........

  5. #614
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் புகைப்பட கலைஞர் ஏ.சங்கர்ராவ் சொல்கிறார். அந்த ஜப்பான் எக்ஸ்போ 70யில் நாள் ஓன்றுக்கு 10 லட்சம் பேர் இருப்பார்கள். அவ்வளவு பெரிய கூட்டத்தில் தான் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அன்று லதா மேடத்துக்கு அன்று ஷாட் இல்லாததால் ஜானகியம்மாவை அழைத்துக் கொண்டு எக்ஸ்போ 70 ஐ சுற்றிப்பார்க்கச் சென்று விட்டார். ஷுட்டிங் பிரேக்கில் மஞ்சுளாவும், சந்திரகலாவும் தனித் தனியாக சேரிலும் ஒரு 10 அடி தள்ளி தலைவரும் நானும் , நாகேஷும் ஒரு சேரில் அமர்ந்திருந்தோம் சண்டை பயிற்சியாளர் ஷ்யாம் சுந்தர் தூரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஜப்பான் கராத்தே ஸ்கூல் வேன் வர அதிலிருந்த கராத்தே மாணவர்கள் இறங்கியவர்கள் மஞ்சுளாவும் ,சந்திரகலாவும் புடவை கட்டிக் கொண்டிருந்த தைப் பார்த்து வேற்று மொழிக் காரர்கள் எனத் தெரிந்து கொண்டு அவர்கள் அருகில் நின்று ஜப்பானிய மொழியில் ஏதோ பேசி சிரித்து கமெண்ட் அடித்து வந்ததைப் பார்த்த நாகேஷ் என்னிடம் ஏதோ நடக்கப் போகிறது நம்மாளு (தலைவர்) கூலிங்கிளாஸ் வழியே அந்த கராத்தே ஸ்டுடண்ஸ் பார்த்துக் கொண்டே இருக்கிறார் எனக் கூறினார்.அப்போது தான் நானும் கவனித்தேன் . கேலியாக பேசிய மாணவர்களில் இரண்டு பேர் மஞ்சுளாவின் தோளில் கை வைத்து விட்டார்கள். உடனே கோட்டை கழற்றி வைத்தவர் முழுக்கை சட்டையை மடித்து விட்டு பத்தடி தூரத்தில் உட்கார்ந்திருந்த மாணவர்கள் மீது பாய்ந்து விட்டார் ஒரே பாய்ச்சலாக நானும் நாகேஷும் அரண்டு போய் ஓரத்தில் ஒதுங்கி விட்டோம் சினிமாவில் வருவது மாதிரி 2 பேரும் 5 அடி தூரத்தில் போய் விழுந்தார்கள். இது எல்லாமே ஒரு சில விநாடிகள் தான் புல்லட் கூட லேட்டாத்தான் போயிருக்கும் அதை விட ஸ்பீடூ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் , நாகேஷ் பேயறைந்த மாதிரி நிற்க இங்க உட்கார்ந்திருந்த மனுஷன் அதற்குள் எப்படிப்பா அங்க போனார் என்று ஆச்சரிய்பட அதற்குள் கராத்தே ஸ்டூடண்ட்ஸ் தாங்கள் செய்தது தவறு தான் என்பது போல நின்றுவிட்டு கிளம்பி போனார்கள். ஸ்டண்ட் மாஸ்டர் ஷ்யாம் சுந்தருக்கு ஒரு பக்கம் பயம் ஒரூ பக்கம் ஆச்சரியம் 10 லட்சம் பேர் இருக்கிற இந்த கூட்டத்தில எம்.ஜி.ஆரோ 1 ஆள் ஸ்டுடண்ட் 40 பேர் நாம வெளிநாட்டினர் அவங்களோ உள்நாட்டுக் காரங்க எவ்வளவு துணிச்சலா அடிச்சிருக்காரு இந்த மாதிரி துணிச்சல் வேகமும் யாருக்கும் வராதுப்பா என்றார்..........

  6. #615
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரின் பெயருக்குள்ள மதிப்பு !

    *தனிமைப்படுத்தப்பட்ட நாட்களில் எப்படி பொழுதைக் கழிக்கிறீர்கள்?*

    "நான் தீவிர எம்.ஜி. ஆர். ரசிகன். அவரது படங்களைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரே தலைவர் அவர்தான். அவரோடு நெருக்கமாக இருந்தவர்களைப் பார்த்தாலே தலைவரைப் போல்தான் பார்ப்பேன்.

    பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரிடம் கேட்ட தகவல்கள் என்னை எம்.ஜி.ஆர். மீது அதிக பற்று கொள்ள வைத்தது. ஒரு முறை சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் படப்பிடிப்புக்குப் போயிருந்தேன் அங்கு ஒரு ‘ரிக்சா ஸ்டாண்ட்’. ‘ரிக்சாக்காரன்’ படப் பெயரிலேயே இருந்தது.

    அங்கே நான்கு ரிக்சாக்களில் இரண்டில் ஓட்டுபவர்கள் இல்லை. அவர்கள் எங்கே என்று விசாரித்தபோது... 'இருவரும் மது அருந்திவிட்டார்கள். அதனால் தொழிலுக்கு வரமாட்டார்கள்' என்றார்கள். அவர்களை யாரும் வர வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்களாகவே வரவில்லை. இதுதான் தொழில் மீது வைத்திருக்கும் பக்தி" என்றார் நடிகர் மயில்சாமி.

    26-7-2020 ராணி இதழிலிருந்து
    ப. இசக்கிபாண்டியன், திருநெல்வேலி

    ('இதயக்கனி' யின் ஜூலை/ஆகஸ்ட் 2020 இதழில் பிரசுரமான தகவல்)

    Ithayakkani S Vijayan.........

  7. #616
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புதுச்சேரியில் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் கோவிந்தசாமி. எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதைவிட வெறியர். தனது திருமணத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வைக்க வேண்டும் என்று கோவிந்தசாமிக்கு ஆசை. இது சம்பந்தமாக கோவிந்தசாமி எம்.ஜி.ஆருக்கு சிலமுறை கடிதம் எழுதினார். எம்.ஜி.ஆரின் உதவியாளர் களே கடிதத்தைப் பார்த்துவிட்டு, ‘புதுச் சேரியில் மீனவர் குப்பத்தில் இருக்கும் யாரோ ஒருவரின் திருமணத்தை நடத்தி வைக்க எம்.ஜி.ஆரால் போகமுடியுமா? ’ என்று நினைத்தார்களோ என்னவோ? கடிதம் எம்.ஜி.ஆரின் பார்வைக்கே போகவில்லை.

    ஒருநாள் கோவிந்தசாமியின் பெற் றோரும் உறவினர்களும் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்ட னர். தன்னை பார்க்க காத்திருந்தவர்களை ஒவ்வொருவராக சந்தித்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினர். ‘‘நாங்க எழுதின கடிதத்துக்கு உங்களிடம் இருந்து பதில் இல்லாததால் கோவிந்தசாமி பித்துப் பிடிச்சவன் போல இருக்கிறான். கடலில் மீன் பிடிக்கவும் சரியாக போவதில்லை. நீங்கதான் கோவிந்தசாமியின் திரு மணத்தை நடத்திவெச்சு அவனைக் காப் பாத்தணும்’’ என்று உருக்கமாக கோரினர்.

    இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்து விட்டது. ‘‘விரைவிலேயே புதுச்சேரிக்கு சுற்றுப் பயணம் வர இருக்கிறேன். நீங்கள் அப்போது அங்கு வந்து என்னை சந் தியுங்கள். உங்கள் மகன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்’’ என்று அவர்களை எம்.ஜி.ஆர். சமாதானப்படுத்தினார். அந்த மீனவர்கள் நம்பிக்கையுடன் சென்றனர்.

    சில நாட்கள் கழித்து புதுச்சேரிக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தனர். விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. ‘‘திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கூட்டத்துக்கு போகலாம். மணமக் களையும் உறவினர்களையும் கூப்பிடுங் கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். மண மக்களை அழைத்துவர எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றபோதுதான் அவர்களுக்கு விஷயமே தெரிந்தது.

    கோவிந்தசாமியின் உறவினர்கள் தயங்கியபடியே, ‘‘மன்னிக்கணும். எங்க குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். நேரில் வந்து தாலி எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம் பண்ணிக்கு வேன் என்று கோவிந்த சாமி பிடிவாதம் பிடிக்கிறான்’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர். உதவியாளர் களுக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘அது எப்படி முடியும்? கடற்கரையோரம் உள்ள குப்பத்துக்கு மணலிலே வரணும். அங்கேயெல்லாம் வண்டி வராது’’ என்று சத்தமாக தெரிவித்தனர். பதிலுக்கு, ‘‘பாதையிலே மணலில் நாங்க செடி, தழைகளை போடுறோம். அதுமேல, வண்டி ஓட்டிக்கிட்டு வந்துடுங்க’’ என்று மீனவர்கள் கெஞ்சினர்.

    வெளியே நடந்து கொண்டிருந்த கசமுசா, எம்.ஜி.ஆரின் காதுகளில் விழுந் தது. உதவியாளர்களை அழைத்து விவரம் கேட்டார். அவர்கள் சொன்னதும் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘‘சரி, போகலாம்’’ என்றார். உதவியாளர்கள் பதறிப்போய், ‘‘நாங்கள் விசாரிச்சோம். கடற்கரை மணலில் வண்டி நின்று விட்டால் நடந்துதான் போகணும். அவங்க குப்பம் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலே தூரமாக உள்ளது. நீங்கள் போக வேண்டாம்’’ என்றனர்.

    எம்.ஜி.ஆர். கோபத்துடன், ‘‘என்ன பேசறீங்க? என்னோட ரசிகன். அவனுக்கு நான் எந்த உதவியும் செய்யலே. அவனை நான் பார்த்தது கூட இல்லே. ஆனாலும் என் மேலே வெறித்தனமான அன்போட இருக்கான். நான் வந்து நடத்தினால்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பித்துப் பிடிச்சா மாதிரி இருக்கான். நான் போய்த் தான் ஆகணும். வண்டி நின்னுபோனா நடந்து போறேன். போய் ஏற்பாடு பண் ணுங்கய்யா’’ என்றார். அடுத்த விநாடி, மீனவர் குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். செல் வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

    மணலிலும் பாதுகாப்பாக செல்லும் வகையில் ஃபோர் வீல் டிரைவ் எனப் படும் நான்கு சக்கரங்களும் ஒன்றாக இயங்கும் ஜீப்பில் எம்.ஜி.ஆர். சென்றார். கடலை ஒட்டிய மணல் பகுதியில் வழிநெடுக மீனவர்கள் திரண்டு நின்று எம்.ஜி.ஆர். தங்கள் குப்பத்துக்கு வரு வதை பிரமிப்பு நீங்காமல் பார்த்தபடியே அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.

    பாதி வழியில், உதவியாளர்கள் பயந்த படியே திடீரென மணலில் ஜீப் சிக்கிக் கொண்டது. டிரைவர் எவ்வளவோ முயன் றும் நின்ற இடத்திலேயே சக்கரங்கள் சுற்றிச்சுற்றி மணலை தோண்டியதே தவிர, நகரவில்லை. எம்.ஜி.ஆர். ஜீப்பை விட்டு இறங்கிவிட்டார்.

    பாதையில் நின்றிருந்த மீனவர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். பலர் ஒன்று சேர்ந்து ஜீப்பை ‘அலாக்’காக தூக்கி வேறு இடத்தில் வைத்தனர். மீனவ மக்களின் ஆரவாரத்துக்கிடையே, எம்.ஜி.ஆர். தலைக்கு மேல் கைகளை உயரே தூக்கி வணங்கியபடி மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்.

    கோவிந்தசாமியின் மீனவ குப்பத்தை ஜீப் அடைந்தபோது பெரிய கூட்டம் ஓடிவந்து வரவேற்றது. அதில் முதலில் ஓடிவந்தவர் இளைஞர் கோவிந்தசாமி. ‘எம்.ஜி.ஆர். வரும்வரை தாடியை எடுக்க மாட்டேன்’ என்ற சபதம் காரணமாக நீண்டு வளர்ந்திருந்த அடர்த்தியான தாடியுடன் கண்களில் நீர்வழிய, ‘‘எனக்காக நேரில் வந்த தெய்வமே’’ என்று கதறியபடி எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார் கோவிந்தசாமி. அவரை வாரி அணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!

    பக்கத்திலேயே மேடான இடத்தில் சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பதினைந்து நிமிடத்தில் மணமக்கள் தயாராகி வந்தனர். எம்.ஜி.ஆர். தாலி எடுத் துக் கொடுக்க, மணமகள் கழுத்தில் கட்டினார் கோவிந்தசாமி. ‘‘இனிமே ஒழுங்கா குடும் பத்தையும் தொழிலையும் கவனி’’ என்று கோவிந்தசாமியிடம் கூறிய எம்.ஜி.ஆர்., மணமக்களிடம் தனித்தனியே கனமான கவர்களை பரிசளித்தார்.

    மீனவர்கள் கொடுத்த கோலி சோடாவை மரியாதைக்காக சிறிது குடித்துவிட்டு ஜீப்பில் ஏறி நாலாபுறமும் திரும்பி கையசைத்தபடி எம்.ஜி.ஆர். விடைபெற்றபோது, கடல் அலைகளின் பேரிரைச்சலையும் அடக்கிவிட்டு, விண்ணை முட்ட எழுந்தது கோஷம்...

    ‘‘புரட்சித் தலைவர் வாழ்க!’’

    - தி இந்து ............

  8. #617
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வசூல் விவரம் பற்றி பதிவு போட்டால் வேறு வேலை இல்லையா என்று அலுத்துக் கொள்பவர்கள் அப்படி கஷ்டப்பட்டு இந்தப் பக்கத்தை படிப்பானேன்? அவர்கள் வேறு வேலையை பார்க்கலாமே? யார் அவர்களை தடுத்தது? இதெல்லாம் தேவையா? என்றும் சில நண்பர்கள் அங்கலாய்க்கிறார்கள். இன்னும் சிவாஜி கணேசன் குழுக்கள், தளங்கள், தனிப்பட்ட சிவாஜி கணேசன் ரசிகர்களின் முகநூல் பக்கங்களில் பாருங்கள். எவ்வளவு பொய்களை அவிழ்த்து விட்டு புரட்சித் தலைவரைப் பற்றியும் அவர் படங்களைப் பற்றியும் மோசமாக விமர்சிக்கிறார்கள் என்று தெரியும். சிவாஜி கணேசன் புகழை பரப்புவதை விட (???????!!!!! புகழ் இருந்தால்தானே பரப்புவதற்கு? வாழும் காலத்திலேயே செல்லாக் காசாகிப் போனவர் அவர்) புரட்சித் தலைவரையும் அவர் படங்களையும் மோசமாக விமர்சிக்கின்றனர். செல்லாக் காசை விமர்சிப்பானேன்? என்று கேட்கலாம். செல்லாக் காசை தங்கக் காசு என்று பொய் சொல்லி ஏமாற்ற நினைப்போருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

    எங்க வீட்டுப் பிள்ளையை திருவிளையாடல் வசூலில் வென்றது.... உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தங்கப் பதக்கம் வசூலில் வென்றது என்று ஜமுக்காளத்தில் வடிகட்டிய மகா கேவலமான பொய்களை கூறி சிவாஜி கணேசன் ரசிகர்கள் தங்களுக்கு தாங்களே சொறிந்து கொண்டு சுகம் தேடுகிறார்கள். அது உண்மை என்றால் விநியோகஸ்தர்கள் கொடுத்த பத்திரிகை விளம்பரத்தை அவர்கள் வெளியிடலாமே. ரிக்ஷாக்காரன் 51 நாட்களில் 50 லட்சம் வசூல் செய்தது என விநியோகஸ்தர் கொடுத்த பத்திரிகையில் வந்த விளம்பரம் கொடுத்துள்ளோம். உலகம் சுற்றும் வாலிபன் விளம்பரமும் இருக்கிறது. அதை முறியடித்ததாக தங்கப்பதக்கம் படத்தின் அதிகாரப்பூர்வ விளம்பரம் அவர்களிடம் உள்ளதா? அதை வெளியிடலாமே? இருந்தால்தானே வெளியிடுவார்கள். வெறும் புளுகுமூட்டைகள். அவர்களுக்கு இதுபோன்று பதிலடிகள், விளக்கங்கள் கொடுத்தால்தான் இளைஞர்கள் உண்மைகளை உணர்ந்து கொள்வார்கள். இல்லாவிட்டால் அவர்கள் சொல்வது உண்மையாகிவிடும். அதை அனுமதிக்கக் கூடாது. நாட்டின் வளர்ச்சி, திட்டங்கள் என்று ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும் எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கவும் ராணுவம் நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட ராணுவம்தான் நடிகப் பேரரசர் எம்ஜிஆர் பக்கம். இதை புரிந்து கொள்ளுங்கள். தொடர்ந்து சிவாஜி கணேசன் ரசிகர்களின் பொய்கள் தோலுரிக்கப்படும். அடுத்த பதிவில் சொல்கிறேன்..........

  9. #618
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    லால் பகதூர் சாஸ்திரியிடம் போர் நிதியாக சிவாஜி கணேசன் 100 பவுன் தங்கப் பேனாவையும் 400 பவுன் நகைகளையும் கொடுத்தார் என்று அவரது ரசிகர்கள் புளுகுவார்கள். சிவாஜி கணேசன் ஏதோ கொஞ்சம் கொடுத்துள்ளார் என்பதை மறுக்கவில்லை. சிவாஜி கணேசன் மட்டுமல்லாமல் சாவித்திரி, ஜெயலலிதா உட்பட எல்லா நடிகர், நடிகைகளும் நகைகள், பணம் கொடுத்தார்கள். அவர்களைப் போலத்தான் சிவாஜி கணேசனும் கொடுத்துள்ளார். ஆனால், சிவாஜி கணேசன் கொடுத்த தங்கப் பேனா முதலில் 200 பவுன் என்றார்கள். இப்போது 100 பவுன் என்கிறார்கள். இதில் குறைத்துவிட்டார்களே என்று பார்த்தால் அதைத் தவிர 400 பவுன் கொடுத்தார் என்று லாரி லாரியாக பொய்களை அள்ளிக் கொட்டுகிறார்கள்.

    இந்தப் படத்தைப் பாருங்கள். அந்தப் பேனாவை சிவாஜி கணேசன் எப்படி பிடித்திருக்கிறார் என்று பாருங்கள். ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலால் அதுவும் மிகவும் லேசாக பிடித்துள்ளார். ஒரு பவுன் தங்கம் 8 கிராம். 100 பவுன் என்றால் 800 கிராம். முக்கால் கிலோவைவிட 50 கிராம் கூடுதல். ஒரு கிலோவுக்கு 200 கிராம் குறைவு. முக்கால் கிலோவுக்கும் மேற்பட்ட எடையை இப்படி இரண்டு விரலால் லேசாகப் பிடிக்க முடியுமா? அவர் பிடித்திருப்பதைப் பார்த்தால் பேனா 100 கிராம்தான் இருக்கும் போலிருக்கிறது. இதைத்தான் 100 பவுன் என்று புளுகுகிறார்கள். 400 பவுன் நகைகள் வேறு கொடுத்தாராம். இதில் விளம்பரம் தேடா வள்ளல் என்று போலி விளம்பரம் வேறு. புரட்சித் தலைவரை கலாய்க்கிறார்களாமாம். இதில் அவர்களை அறியாமல் உண்மையை சொல்லி இருக்கிறார்கள். இந்தப் பேனா சிவாஜி கணேசனுக்கு அன்பளிப்பாக பி.ஆர்.பந்துலு கொடுத்ததாம். இவர்கள் என்னதான் பொய் சொன்னாலும் சிவாஜி கணேசன் கஞ்சன் என்ற பெயர் மக்களிடம் மாறப்போவது இல்லை. இதேபோலத்தான் அவரது படங்களின் வசூல் சாதனைகள் என்று சிவாஜி கணேசன் ரசிகர்கள் புளுகி வருகிறார்கள். அந்தப் பொய்கள் தகர்க்கப்படும்..........

  10. #619
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழக ஊடக விவாதங்கள் இன்றுஒரு பார்வை !! இன்று மக்கள் இயக்கமாம் எங்கள் இதய தெய்வங்கள் வளர்த்த , மாபெறும் தொண்டர்கள் இயக்கம் !! அ.இ.அண்ணாதி.மு.கழகம் " இதனை முன்னிறுத்தியே தினமும் ஊடக விவாதங்கள் இதுவே எங்கள் பலம் !! எங்களை எந்த ஒரு அரசியல் சக்தியும் அல்லது எந்த ஒரு தனி நபரும் அசைத்துகூட பார்க்க முடியாது* !! இதுவே நேற்றும் , இன்றும் , நாளையும் எங்களின் அரசியல் பலம் , இது தொண்டர்கள் தலைமையில் உள்ள மாபெறும் மக்கள் இயக்கம் !! நன்றி ,, போத்தனூர் பாலு அரசியல் செய்தி சமூக கட்டுரையாளர் , சென்னை 28 !!!.........

  11. #620
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    'எம்ஜிஆர்' அது வெறும் பெயர் அல்ல... தமிழகத்தின் அரை நூற்றாண்டுக்கான வரலாறு
    .....
    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள், நாடக கலைஞர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், அரசியல்வாதி என்று பன்முகத் திறமைகளை கொண்டவர், அரசியலிலும், சினிமாவிலும் யாரும் தொடாத உச்சத்தை தொட்டார். கட்சி ஆரம்பித்து ஆறு மாதங்களில் ஆட்சியை பிடித்த என்.டி ராமாராவ் தனக்கு குருநாதர் எம்ஜிஆர் தான் என்று கூறியதே அரசியலில் இந்திய அளவில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தின் வீச்சை புரிந்துகொள்ள போதுமானது. அத்தகைய ஆளுமையை அவர் ஒரே இரவிலோ அல்லது ஒரு படத்தின் வெற்றியிலோ அவருக்கு கிடைத்துவிடவில்லை. அளவிட முடியாத கடினமான உழைப்பே அவர் சினிமாவில் சாதிக்க உதவியது என்றால், தமிழக மக்களின் கனிவான பார்வை அவர் அரசியலில் சாதிக்க ஏதுவாக இருந்தது. 40-களின் ஆரம்பத்தில் திரையில் உதவி நடிகராக தலைகாட்டிய அவர், 50-களில் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ஆனார் என்றால் அவர் அதற்கு அவர் கொடுத்த விலை மிக அதிகம்.

    நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் காட்டிய அந்த கடின உழைப்பை தன் உயிர் மூச்சு இருக்கும் வரையில் தொடர்ந்த காரணத்தால் தான், தமிழக மக்கள் அவரை மூன்று முறை அரியணையில் ஏற்றி அழகு பார்த்தனர். தனக்கு வாய்ப்பு தேடி அலைந்த அந்த நாட்களிலும், வாய்ப்புக்கள் வந்து குவிந்து கைநிறைய சம்பாதித்த அந்த நாட்களிலும் அவரிடம் மாறாதது, இல்லை என்று வந்தவர்களுக்கு, இல்லை என்று சொல்லாத அந்த கருணை உள்ளம்தான். சட்டமன்ற உறுப்பினராக அவர் இருந்தத போதும், பிறகு முதல்வராக பதவி வகித்த போதும் அவரிடம் மாறாதது தனக்கு ஆரம்ப காலத்தில் உதவியவர்கள், நண்பர்கள் என யாரையும் அவர் மறக்காததும், அவர்களின் இன்ப துன்பங்களில் தன்னை இணைத்துக்கொள்வது என்று அதில் உறுதியாக இருந்தார். எதுகை மோனைகளில் அவருக்கு பேச தெரியாவிட்டாலும், நம்பியவர்களை நட்டாற்றில் விடும் பழக்கம் இல்லாதவர் அவர், என்பதை பல சமயங்களில் அவரே நிரூபித்து உள்ளார்.

    1977ம் ஆண்டு அவர் முதல்வர் ஆன சமயம், அவர் உதவியால் படித்து பட்டம்பெற்ற துரைமுருகன் அப்போது திமுகவின் சட்டமன்ற உறுப்பினர். அவரை எதிர்த்து சட்டமன்றத்தில் அரை மணிநேரத்திற்கு மேலாக மூச்சுவிடாமல் பேசுகிறார். அதிமுக உறுப்பினர்கள் எம்ஜிஆரின் கண்ணசைவுக்காக காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் அவர், துரைமுருகனை பார்க்கிறார், ரசிக்கிறார். இதை துரைமுருகனும் கவனிக்கிறார். ஒரு கட்டத்தில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுகிறார், கீழே விழுந்த அவரை ஒருசில வினாடி இடைவெளியில் ஒரு கை தாங்கி பிடிக்கிறது. அந்த கை வேறு யாரும் அல்ல. யாரை தாக்கி பேசி அவர் மயக்கமடைந்தாரோ அந்த வார்த்தை தாக்குதலுக்கு உள்ளான எம்ஜிஆர் தான் அவரை தாங்கி பிடித்தார். தன்னால் வளர்க்கப்பட்டு வாழ்க்கை கொடுத்த ஒருவரின் தாக்குதலை தாயை சீண்டும் குழந்தையிடம் தாய் காட்டும் கோவத்தை கூட அவர் காட்டவில்லை என்பதே அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் காட்டிய நேசத்துக்கு ஒரு சிறிய உதாரணம். தன்னை வாழ்நாள் எல்லாம் எதிர்ப்பதையே கடமையாக வைத்திருந்தவர்களை கூட முதலாளி என்று கூப்பிட்டு முதல் நபராக மதித்தார். தன்னை எதிர்த்தவர்கள் மீதே இந்த அளவு நேசம் காட்டினார் என்றால், தன்னை வாழ வைத்த தமிழக மக்கள் மீது அவர் காட்டிய நேசம் என்றும் அளப்பரியது யாராலும் அளவிட முடியாதது. முதல்வராக அவர் பதவி வகித்த நேரம் நிகழ்ச்சி ஒன்றிற்காக அவர் சிவகாசிக்கு செல்கிறார். உச்சி வெயில் முகத்தில் அடித்த அந்த மதிய நேரத்தில் தங்களின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய்மார்கள் வயல்வெளிக்கு சென்றுள்ளனர். அவர்களை கண்ட அவர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி குழந்தைகளிடம் உணவருந்தினீர்களா? என்று கேட்டுள்ளார். அவர்கள் தங்களின் அம்மாவை பார்க்கவே,நிலைமையை புரிந்துகொண்ட எம்ஜிஆர் அவர்கள் உடனடியாக தொடங்கியதே சத்துணவு திட்டம்.

    பள்ளிக் குழந்தைகளின் நலன்களில் அவர் காட்டிய அக்கறை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல்பொடி வழங்குவதில் தொடங்தி காலுக்கு காலணி வழங்கும் வரை அது தொடர்ந்தது. அவரின் இந்த மக்கள் நலத்திட்டங்களே அவரை பட்டிதொட்டி வரை கொண்டு சேர்த்தது என்றால் அது மிகையல்ல. கடவுளாக, கடவுளக்கும் மேலாக அவரை இன்றும் பொதுமக்கள் கொண்டாடுகின்றார்கள் என்றால் அதற்கான விதை, அவர் போட்ட மக்கள் நலன் கொண்ட திட்டங்களே ஆகும். அதனால்தான் என்னவோ மண்ணில் பிறந்த உயிரினங்கள் எல்லாம் தோன்றி மறைவது இயற்கை என்றாலும், மக்களுக்காக வாழ்ந்த அவரின் இறப்பை அதனால்தான் என்னவோ இன்றும் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை போலும். உயிர் வேண்டுமானால் அவரை விட்டு போயிருக்கலாம், ஆனால் அவரின் புகழை கூட இதுவரை யாரும் நெருங்கவில்லை, நெருங்க போவதும் இல்லை,தலைவா உனக்கு நிகர் நீ மட்டுமே இருக்க வேண்டும் என்று தான் இறைவன் உனக்கு வாரிசு இல்லாமல் செய்து விட்டாரோ, எம்ஜிஆர் எனும் கலியுக தெய்வம் வாழ்ந்த காலத்தில் நாம் அனைவரும் வாழ்ந்தோம் என்பதே நம் பாக்கியம்������❤️❤️��.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •