Page 46 of 210 FirstFirst ... 3644454647485696146 ... LastLast
Results 451 to 460 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #451
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் அவர்களுக்கு

    உங்களின் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஒருவன் ..........

    அன்பு தெய்வமே

    உண்மையான உங்களது அன்பு உள்ளங்கள் எந்த பிரதிபலன் பாராமல் உங்களது பிறந்த நாளை தங்களின் குடும்பத்தில் ஒருவராக எண்ணி வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் .

    உங்களால் பயன் அடைந்தவர்கள் , உங்கள் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் , உங்கள் திருமுகத்தை
    stamp அளவில் போடவும் மனமில்லாமல் ,அரசியல் சுய லாபத்துக்கு ,உங்கள் பெயரை - திருமுகத்தை மறைத்து , மறந்து ,வாழும் உள்ளங்களை ...

    நீங்கள் பாடிய வரிகள் நினைவுக்கு வருகின்றது

    பொன் பொருளை கண்டவுடன் .. வந்த வழி மறந்துவிட்டு கண் மூடி போகிறவர்கள் போகட்டுமே .

    என் மனதை நானறிவேன் . என் உறவை நானறிவேன்

    நன்றி மறவாத நல்ல மனம் போதும்

    என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் .

    எங்கள் இல்லங்களில் என்றென்றும் நீங்கள் விருந்தாளி .
    நித்தமும் உங்கள் படங்கள் , உங்கள் பாடல்கள் எல்லா ஊடகங்கள் தொடர்ந்து ஒளி பரப்பி கொண்டு வரு கின்றனர் .

    எங்கள் அலை பேசியில் உங்கள் .. பாடல் -- திருமுகம்

    எங்கள் மடி கணினியில் DESKTOP

    உங்கள் பாடல்கள் -- உங்களின் திரைப்படங்கள் .

    COMPUTER - DESKTOP -உங்கள் பாடல்கள் -- உங்களின் திரைப்படங்கள் .

    அன்பு தலைவா

    உங்களது புன்சிரிப்பு

    உங்களது அழகு முகம்

    உங்களது கம்பீர அலங்காரம்

    உங்களது கண் அசைவுகள்

    உங்களது காதல் பார்வை

    உங்களது வாள் வீச்சு

    உங்களது சிலம்பாட்டம்

    உங்களது ராஜ நடை

    உங்களது வெண் கலகுரல் வசனம்

    உங்களது கனிவான பார்வை

    உங்களது பொன்மனம்

    உங்களது வீரமான நடிப்பு

    உங்களது SHORT & SWEET பட காட்சிகள்

    உங்களது லட்சிய வேடங்கள்

    உங்களது நேர் மறையான சிந்தனைகள்

    இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .

    எங்களது நிரந்தர சொத்து - நீங்கள்தான் .

    உங்களை வழி படும் எல்லோருமே எங்கள் சொந்தம்தான் ..........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #452
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உலகில் எந்த ஒரு தனி மனிதனுக்கும் கிடைக்காத புகழ் மக்கள் திலகம் m.g.r என்ற மாமனிதருக்கு கிடைத்திருப்பது ஒரு வரலாற்று சாதனை ..

    பசி என்ற கொடுமை யான ஏழ்மையின் தாக்கம் அவரது இளம் வயதில் பாதிக்க பட்டதின் விளைவுதான் 1982 ஆண்டில் சத்துணவு திட்டமாக தமிழ் நாட்டில் அறிமுகபடுத்தபட்டது .
    இந்த திட்டத்தின் மூலம் பலன் அடைந்த பல லட்சகணக்கான மாணவர்கள் இன்று சமுதயாத்தில் நல்ல நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர் .

    ஒரு தனி மனிதன் தனது வாழ் நாளில் தினமும் சந்திக்கும்
    ஏமாற்றம் - கவலை - வறுமை - துரோகம் - நம்பிக்கை -ஆனந்தம் - என்று பல கோணங்களில் வெளிப்படும் செய்லகளுக்கு மருந்தாய் இருப்பது மக்கள் திலகத்தின் பட பாடல்கள் .

    அந்த பாடல்களை கேட்பதின் மூலம் நமது மனதுக்கு புத்துணர்வும் ,நேர்மறை எண்ணங்களும் அலை மோதும் .

    மக்கள் திலகம் மறைந்து 32 ஆண்டுகள் ஆன பின்னரும்
    உலகமெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் வீட்டிலும் , தெருவிலும் அவரது படத்தை வைத்து மாலை இட்டு பூஜை செய்வது நமது இதய தெய்வம் எங்க வீட்டு பிள்ளை
    ஒருவருக்குதான் என்பது உலக சாதனை .

    மக்கள் திலகம் [1947-1977.] முப்பது வருடங்களில் நமக்கு தந்த காவியங்கள் 115.

    சரித்திர படங்கள் - சமுதாய படங்கள் என்று பலவேறு பாத்திர படைப்புக்கள் . இனிமையான பாடல்கள் இயல்பான நடிப்பு .சமுதாய சீர் திருத்த கொள்கை பாடல்கள் -வீரமான சண்டை காட்சிகள் . இதுதான் நம்முடைய மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் அழியா சொத்து .

    நமக்கு மட்டுமல்ல . இந்த சொத்து அவர் பெயர் மட்டும் கூறி அனுபவிக்கும் கட்சிக்காரர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் - விநியோகஸ்தர்கள் - ஊடகங்கள் உரிமையாளர்கள் -குறுந்தகடு விற்பனையாளர்கள் - தயாரிப்பாளர்கள் - என்று இன்றும் அவர்கள் வாழ்க்கையில் வருமானத்தை அள்ளி தரும் அமுத சுரபியாக நமது மக்கள் திலகம் வாழ்ந்து கொண்டு வருகிறார் .

    இந்த சாதனை படைக்கும் உலகில் ஒரே தனி மனிதர்

    எங்கள் அமுத சுரபி மக்கள் திலகம் .

    அவர் புகழ் வளர்க...வாழ்க... என்றும்...

  4. #453
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்?

    இந்த கேள்விக்கு பதில் காண சரித்திர புத்தகத்தை புரட்டினால் கிடைக்கும் அனைத்து பெயர்களும் வரலாறாக அறிந்தவை மட்டுமே. நம்முடைய சமகாலத்தில் வாழ்ந்து, மறைந்து 30 ஆண்டுகள் கடந்தும் ஒருவரை மக்கள் மறக்காமல் தாமாகவே முன் வந்து நினைவை போற்றுகின்றார்கள் என்றால் அந்த பெருமைக்கு சொந்தக்காரர், எம்ஜிஆர்.

    கொடிது கொடிது இளமையில் வறுமை. அந்த வறுமையின் கொடூரம் தாங்காமல் இலங்கை, பாலக்காடு, சேலம், கோவை என குடும்பத்துடன் புலம் பெயர நேரிட்ட அவலத்தை சந்தித்தவர். அந்த துயர வடுக்களை அனுபவித்த காரணத்தாலேயே வாடிய மக்களை கண்ட போதெல்லாம் துயர் துடைக்க கரம் நீட்டியவர். தமிழக ஜனநாயகத்தின் வரலாற்றை எழுதினால் அவருடைய பெயரை நிச்சயமாக தவிர்க்க முடியாது. சினிமா கவர்ச்சியால் ஆட்சியை பிடித்தவர், அட்டை கத்தி வீரர் என வசைமாரி பொழிந்தவர்கள் தங்கள் உள்மனதை தொட்டுப் பார்த்தால், அவரது நீடித்த புகழுக்கு அது மட்டுமே காரணமல்ல என்ற உண்மை புரியும்.

    மனித நேயம் என்பது எம்ஜிஆரின் ரத்தத்தில் ஊறிய குணம். 1940களில் சாதாரண நாடக நடிகராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியே அதற்கு உதாரணம். நாடக கம்பெனியில் இருந்தபோது தேநீர் அருந்தும் வேளைகளில் தினமும் எம்ஜிஆரே தேநீருக்கு பணம் அளிப்பதை பார்த்த வி.கே.ராமசாமி, ‘ஏம்பா, தினமும் நீயே கொடுக்கிறாய்..?’ என்று கேட்டபோது, ‘எங்கள் வீட்டில் நானும் என் அண்ணனும் சம்பாதிக்கிறோம். ஆனால், நம்முடன் இருப்பவர்களுக்கு அவர்கள் சம்பாத்தியம் மட்டுமே. அவர்கள் கொண்டு செல்லும் பணத்தை எதிர்பார்த்து குடும்பமே காத்திருக்கும்’ என்று பதிலளித்தவர், எம்ஜிஆர். நாடக கம்பெனியில் 4 ரூபாய் சம்பாதித்தபோது இருந்த மனித நேயத்தை லட்சங்களில் சம்பாதித்தபோதும் பட்டுப்போகாமல் காப்பாற்றியதால் தான் கோடிக்கணக்கான மக்களின் நாயகராக உயர்ந்து நிற்கிறார்.

    திரை உலகிலும் தன்னால் யாருக்கும் எந்தவித நட்டமும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். அதனால் தான், தனது முயற்சிகளை ‘நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்’ என சொந்த பணத்தைக் கொண்டே செய்து பார்த்தவர். மேலும், தனக்கு சேர வேண்டிய பணம் வந்தால் போதும் என கருதாமல் தன்னுடன் திரைப்படத்தில் பணியாற்றிய கடைக்கோடி தொழிலாளி வரை சம்பளம் பட்டுவாடா ஆகி விட்டதா என்பதை உறுதி செய்யும் குணம் தான் அரசியல் வரை அவரை அழைத்து வந்தது.
    திரைப்படம் என்பது மக்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்ததாலேயே புகைப் பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகளை அறவே தவிர்த்தவர். வில்லனை கை, கால்களை வெட்டி திருத்தாமல் அடி, உதையிலேயே திருத்துவது அவரது பாணி. இது என்ன சினிமாத்தனம் என்று கேட்கலாம். நிஜத்தில் எவ்வளவோ நடந்தாலும், எதிரியாக இருந்தாலும் ஒரு மனிதனை திருத்துவதற்கு அதுவே சிறந்த வழி என்பது அவரது கருத்து. ஆரம்பத்தில் தனது கதாநாயகியாக நடித்த பெண்களுக்கு மகனாக நடிக்க வேண்டிய சூழல் பின்னாளில் ஏற்பட்டபோது, அவர்களின் கதாபாத்திரத்தை அண்ணி கதாபாத்திரமாக மாற்றியவர். (உதாரணம்=உரிமைக் குரல்)

    திரைப்படத்தில் தனக்கென இப்படி சில கொள்கைகளை பின்பற்றியது மட்டுன்றி, 1952ல் தான் இணைந்த திமுகவின் கொள்கைகளையும் படங்களில் புகுத்தினார், அந்த சமயத்தில் ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருந்தும் கூட. அந்த துணிச்சல், வேறு எந்த நடிகருக்காவது இருக்குமா? அச்சம் என்பது மடமையடா.. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு..., உன்னை அறிந்தால்... தூங்காதே தம்பி தூங்காதே... புதியதோர் உலகம் செய்வோம்... இப்படி அவரது பாடல்களை கேட்டால் போதும் ஆயிரம் தன்னம்பிக்கை புத்தகங்களை படித்து முடித்த உற்சாகம் மனதில் ஊற்றெடுக்கும்.

    எம்ஜிஆரின் இந்த குணங்கள் தான், அரசியலிலும் அவரை உச்ச நிலைக்கு கொண்டு சென்றது. தமிழகத்தில் இருந்து மாநில கட்சியை சேர்ந்தவர்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்புக்கு 1977ம் ஆண்டிலேயே பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் எம்ஜிஆர். மத்தியில் மொரார்ஜி தேசாயின் ஜனதா ஆட்சிக்கும் ஆதரவு அளித்தார். காங்கிரஸ் ஆட்சிக்கும் ஆதரவு அளித்தார். இது முரண்பாடாக தெரியவில்லையா? என்று கேட்டபோது, ‘நான் தனி ஆள் அல்ல. எனது விருப்பு வெறுப்பை பார்க்க. ஒரு மாநில முதலமைச்சர். எனவே, மாநிலத்துக்கு தேவையான உதவிகளை எப்படி பெற முடியுமோ அதை எப்படியும் பெறுவேன்’ என்பது அவரது பதிலாக இருந்தது. அந்த எண்ணம் தான் தமிழக மக்களிடம் இன்னமும் நிரந்தர முதல்வராக எம்ஜிஆரை அமர்த்தி வைத்திருக்கிறது.

    அதேநேரத்தில், மத்திய அரசுக்கு வளைந்து கொடுப்பவரா? என்ற சந்தேகத்தை எழுப்பியவர்களுக்கு, ‘ராணுவம் வந்தாலும் எதிர்கொள்ள தயார்’ என மத்திய அரசுக்கு துணிச்சலாக சவால் விடுத்து மறைமுகமாக பதிலளித்தவர். இலங்கையில் உச்சகட்ட இனக்கலவரம் நடைபெற்றபோது போராளிகளுக்கு வெளிப்படையான ஆதரவு அளித்ததோடு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சென்னைக்கு அழைத்து தனது சொந்த பணம் ரூ.5 கோடியை வழங்கியவர். பின்னாளில், இந்திரா காந்தி மூலமாக புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க உதவியவர்.

    அரிசி, உணவு, போக்குவரத்து என சாதாரண ஏழை மக்களுக்கு தேவையான அனைத்தையும் மிக நிறைவாகவே பூர்த்தி செய்தது, எம்ஜிஆரின் 10 ஆண்டு கால தொடர்ச்சியான ஆட்சி. எம்ஜிஆர் போலவே திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து கோலோச்சி விடலாம் என பலரும் கருதுகின்றனர். சிலர் முயற்சித்தும் பார்க்கின்றனர். அவர்கள் எல்லாம், ‘மனித நேயம், ஏழைகளின் மீதான அன்பு, எதிரியாக இருந்தாலும் அரவணைக்கும் குணம், தன்னம்பிக்கை, நாடி வந்தோருக்கு வாரி வழங்குதல், தேடி வந்தோருக்கு பசிப்பிணி போக்குதல் என நினைத்து பார்க்க முடியாத மாபெரும் குணங்களே அவரது நிரந்தர வெற்றிக்கு காரணம் என்பதை அறியாதவர்கள்.

    இன்றளவும் தமிழக அரசியல் அரங்கில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இருக்கும் மரியாதை அளவிட முடியாதது. அவரது சமாதியை தினந்தோறும் சுற்றி வணங்கிச் செல்லும் மக்களே அதற்கு சாட்சி. .........

  5. #454
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    " வெற்றியையும் தோல்வியையும் எப்படி
    எடுத்துக்கொள்ள வேண்டும்? "

    " எம்.ஜி.ஆர் இதுபற்றிச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து இரண்டு படங்கள் அவருக்கு வெள்ளிவிழா கண்டன. அப்போது நிருபர் ஒருவர், 'இதனை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

    அதற்கு எம்.ஜி.ஆர்., 'என்னைப் போன்றவர்களுக்கு வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான். வெற்றியைக் கண்டு கொஞ்ச நேரமாவது அசந்து நின்றுவிட்டோமானால், பெரிய தோல்வி ஒன்று பின்னால் காத்திருக்கிறது என்று பொருள். அதேபோல், தோல்வியைக் கண்டு மலைத்து நின்றுவிட்டோமானால், எனக்காகக் காத்திருக்கும் வெற்றியையும் இழந்துவிடுவேன். வெற்றியையும் தோல்வியையும் உருவாக்கிக்கொள்பவன் நான் அல்ல. எனவே, அதில் பங்கு கேட்கவும் எனக்கு உரிமை இல்லை’ என்று சொன்னார்.
    இந்த வாத்தியார் பாடம் போதுமே! "

    - விகடன் ..........

  6. #455
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருடாதே முதலிடத்தையும்,*
    தாய் சொல்லை தட்டாதே இரண்டாம் இடத்தையும்,*
    நல்லவன் வாழ்வான் திரைப்படம் மூன்றாவது இடத்தையும், அரசிளங்குமரி திரைப்படம் நான்காவது இடத்தையும்,*
    சபாஷ் மாப்பிள்ளை திரைக்காவியம் ஐந்தாவது இடத்தையும் பெற்று வசூலில் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்தது.

    1961 ஆம் ஆண்டு வெளியான மற்ற படங்களை விட மிகப் பெரிய ஒரு வெற்றியையும் பல இடங்களில் அதாவது ஏ.பி.சி. என சொல்லப்படும் அத்தனை சென்டர்களிலும் திருடாதே*
    தாய் சொல்லை தட்டாதே*
    நல்லவன் வாழ்வான் அரசிளங்குமரி* உட்பட அத்தனை படங்களுமே பல இடங்களில்*
    50 நாட்களையும், 75 நாட்களையும் கடந்து ஒரு வெற்றி புரட்சியை பல ஊர் அரங்குகளில் படைத்தது.

    திருடாதே காவியம் ஒரு புதுமையான காவியம். சமூக திரைப்படத்திலேயே ஒரு கிளைமாக்ஸ் காட்சி அதிக நேரம் மக்கள் விறுவிறுப்புடன் அரை மணி நேரத்திற்கு மேல் ரசித்த காட்சி முதல் முறையாக தமிழ் சினிமாவில் புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்களால் திருடாதே காவியத்தில் காட்சி அமைக்கப்பட்டு...... அக்காட்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகும்.

    நல்லவன் வாழ்வான் திரைக்காவியம் பேரறிஞர் அண்ணா அவர்களின் கதை அமைப்பில் உருவாகி வெற்றிகண்டது. இத் திரைப்படமும் 1961ம் ஆண்டு பல இடங்களில்*
    12 வாரங்களையும், 50 நாட்களையும் கடந்து பல ஊர்களில் சாதனையாகும். நல்லவன் வாழ்வான் காவியம் மக்கள் திலகத்தின் மூன்றாவது வெற்றி காவியமாக வசூலில் அனைத்து ஊர்களிலும்* நின்று விளையாடியது.........

  7. #456
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என்னைய்யா பெரிய ஸ்டார்னு சொல்றீங்க , ஹீரோன்னு சொல்றீங்க , மாஸ்னு சொல்றீங்க .... அதை எல்லாம் அனாயிசமாக கடந்தவர் இருந்தார் என்பதையே தெரியாம ஆடறீங்க ....

    ஜெயந்தி பிக்ச்சர்சின் உரிமையாளர் கனக சபைச் செட்டியார் தயாரிப்பில் உருவானது தான் மாட்டுக்கார வேலன் திரைப் படம் . அந்தப் படத்தின் 100 வது நாள் விழா சேலத்தில் நடந்தது , மக்கள் திலகமும் வந்திருந்தார் . சேலத்தில் விழா நடந்த திரையரங்கத்தின் முதலாளி , ஒரு மூதாட்டியை அழைத்து வந்தார் மேடையருகே மக்கள் திலகத்திடம் ....

    " படம் ஓடிய நூறு நாட்களும் விடாமல் இந்தம்மா டிக்கெட் வாங்கி வந்து பார்த்தார்கள் அவர் உங்களை நேர்ல பாக்கணுமாம் " என்று சொல்ல ... மக்கள் திலகம் எழுந்து கை கொடுத்து அவரை மேடையில் ஏற்றி தன் அருகில் உட்கார வைத்தார் ....

    வந்திருந்தவர்களை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் , அந்த மூதாட்டியிடம் குசலம் விசாரிக்கத் துவங்கினார் ,

    " விதவையாகி 30 வருஷம் ஆச்சு , பிள்ளைங்க இருந்தும் , இல்லை . கீரை வித்து வித்தை களுவரேன் . அந்த கூடையைச் சுமந்தால் ஒரு நாளைக்கு மூணு ரூபாய் கிடைக்கும் அதிலே ஒரு ரூபாய் உங்க படம் பார்க்க செலவழிச்சேன் " என்றார்

    எதுக்கும்மா 100 தடவை பார்க்கணும் ? என்று மக்கள் திலகம் வினவ ...

    " உன் பால் முகத்தை எத்தனை தடவை பார்த்தாலும் ஆவல் அடங்காதுப்பா , அதோடு உன்னை பெத்த புண்ணியவதி எப்படி அதிர்ஷ்டமானவள்னு நினைச்சுப் பார்கிறேன் அது மட்டுமல்ல எங்க சேரியிலே ஆணும் பெண்ணும் வேதனை நீங்குறதா சொல்லி கண்டப் படி ஆடுவாங்க , எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் இல்லே என் வேதனை மறக்க நான் படம் பார்க்குறேன்பா " என்றார் .

    " அம்மா என்னைப் பார்க்க நீங்க நூறு நாட்கள் என்று நூறு ரூபாய் செலவழிச்சீங்க இல்லியா ? நான் அதுக்கு ஆயிரம் ரூபாய் தரேன் வாங்கிக்குங்க , " என்றார் மக்கள் திலகம்

    " யப்பா , உனக்கு அம்மான்னா உசிராமே , தாய் , தன் பிள்ளையைப் பார்க்க கூலி வாங்கனுமா என்ன ? வச்சுக்கோ , ஆண்டவன் கொடுக்குறது போதும் " என்றார் அந்த மூதாட்டி ...

    சுருக்கம் மிகுந்த அந்தக் கையை மக்கள் திலகம் முத்தமிட்டப் பொழுது அரங்கமே அதிர்ந்தது ....

    அவர் தானைய்யா எவர்க்ரீன் ஹீரோ...............

  8. #457
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1972......

    மலரும் நினைவுகள் .

    மக்கள் திலகத்தின் சங்கே முழங்கு , நல்ல நேரம் , ராமன் தேடிய சீதை , நான் ஏன் பிறந்தேன் முற்பகுதியில் வெளிவந்தது .-[ பிப் -ஜூன்]
    மக்கள் திலகம் எம்ஜிஆர் சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாடகத்தில் நடித்தார் .
    மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு ''பாரத் '' பட்டம் .... மே
    எம்ஜிஆருக்கு பாராட்டு விழாக்கள் தொடர்ந்து நடந்தது . மே - ஆகஸ்ட்
    எம்ஜிஆர் கலந்து கொண்ட கடைசி திமுக - மதுரை மாநாடு - ஆகஸ்ட்
    எம்ஜிஆர் பற்றிய செய்திகள் இருட்டடிப்பு தொடங்கியது . செப்டம்பர்
    எம்ஜிஆரின் அன்னமிட்ட கை - செப்டம்பர் .
    எம்ஜிஆர் நீக்கம் - அக்டோபர்
    அதிமுக உதயம் - அக்டோபர்
    எம்ஜிஆரின் இதய வீணை - அக்டோபர்
    மக்கள் வெள்ளத்தில் ரயில் பயணம் சென்னை - மதுரை நவம்பர்
    சென்னை நகரில் மாபெரும் பேரணி - டிசம்பர்.

    சினிமா சாதனைகள் - 1972

    சென்னை நகரில் 4 திரை அரங்கில் வெளிவந்து 4 அரங்கிலும் 100 நாட்கள் ஓடிய படம் நல்ல நேரம் ..

    நல்ல நேரம் , இதயவீணை 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது .
    இலங்கையில் நல்ல நேரம் மற்றும் ராமன் தேடிய சீதை 100 நாட்கள் ஓடியது .
    சங்கே முழங்கு , ராமன் தேடிய சீதை , நான் ஏன் பிறந்தேன் தமிழகத்தில் 12 வாரங்கள் ஓடியது .
    அன்னமிட்ட கை சுமாராக ஓடியது .
    1972ல் மக்கள் திலகம் 10 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் .
    அனைத்து எம்ஜிஆர் மன்றங்களும் மிகவும் சுறு சுறுப்பாக இயங்கி கொண்டு வந்தது .

    ரசிகர்களுக்கு எம்ஜிஆர் தந்த விருந்து .

    சங்கே முழங்கு

    எம்ஜிஆரின் ஸ்டைல் ரசிகர்களுக்கு விருந்து . குறிப்பாக கிருபால் சிங் வேடம் கச்சிதமாக அமைந்து விட்டது .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . மெல்லிசை மன்னரையும் , கண்ணதாசன் - டிஎம் எஸ் - சுசீலா - ஈஸ்வரி பாராட்ட வேண்டும் . நீதி மன்றத்தில் குறுக்கு விசாரணை காட்சியில் எம்ஜிஆர் நடிப்பு பிரமாதம் . சிலர் குடிப்பது போலே நடிப்பார் ,,,பாடல் காட்சியில் அருமையான நடனமும் முக பாவங்களும் , உடை அலங்காரமும் கண்களுக்கு விருந்து .

    நல்ல நேரம்

    தேவரின் முதல் வண்ண படைப்பு . எம்ஜிஆர் அறிமுகமாகி யானையுடன் கால் பந்து விளையாடும் காட்சியில் டைட்டில் இசை ஒன்றே போதும் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு . படம் முழுவதும் எம்ஜிஆரின் இளமை , சுறுசுறுப்பு அட்டகாசம் . நல்ல கருத்துடன் பொழுது போக்கு அம்சங்களுடன் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் விருந்து படைத்த காவியம் .

    ராமன் தேடிய சீதை
    .
    நல்ல நேரம் வெளிவந்து சக்கை போடு போட்டு கொண்டிருந்த நேரத்தில் 33 நாட்கள் இடை வெளியில் இப்படம் வெளிவந்தது .எம்ஜிஆரின் ஜாலியான படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . சண்டைகாட்சிகள் அனைத்தும் அருமை . சிறந்த ஒளிப்பதிவு .மெல்லிசை மன்னரின் இனிய இசை. .காஷ்மீர் காட்சிகள் கண்களுக்கு விருந்து .இந்த இடத்தில் 43 வகையான டிரஸில் எம்ஜிஆர் இளமையுடன் தோன்றும் காட்சிகள் சூப்பர்,
    மொத்தத்தில் ரசிகர்களின் படம் .

    நான் ஏன் பிறந்தேன்

    குடும்ப பாங்கான கதையில் குடும்ப தலைவராக எம்ஜிஆர் இயல்பாக நடித்து அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை அடித்த காவியம் .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .எம்ஜிஆரின் வசனங்கள் ....மிகவும் யதார்த்தம் . மறக்க முடியாத காவியம் .

    அன்னமிட்ட கை

    டைட்டில் காட்சியில் '' முதல் முறையாக பாரத் எம்ஜிஆர்'' என்று திரையில் காணும்போது ரசிகர்களின் கைதட்டலும் விசில் சத்தமும் இன்னமும் காதில் எதிரொலிக்கிறது .1966ல் எடுக்கப்பட்ட காட்சிகளில் எம்ஜிஆரின் கணீர் குரல்; காட்சிகளை காணும் வாய்ப்பு கிடைத்தது
    எம்ஜிஆரின் பாசமிகு நடிப்பு . இனிமையான பாடல்கள் , பிரமிக்க வைக்கும் கம்பு சண்டை காட்சிகள் . நம் கண்களுக்கு விருந்து .

    இதய வீணை

    ராமன் தேடிய சீதை படத்திற்கு பின்னர் மீண்டும் காஷ்மீர் காட்சிகளுடன் வந்த மணியனின் காவியம்
    இனிமையான பாடல்கள் , எம்ஜிஆரின் சிறந்த நடிப்பு , குடும்ப கதை . சூப்பர் காவியம் .
    எழுத்தாளர் மணியன் மூலம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்
    ஆனந்தவிகடனில் ''நான் ஏன் பிறந்தேன் '' - எம்ஜிஆரின் தொடர் கட்டுரை
    உலகம் சுற்றும் வாலிபன் - படப்பிடிப்பிற்கு உதவி
    இதயவீணை
    சிரித்து வாழவேண்டும்
    பல்லாண்டு வாழ்க
    மூன்று மெகா ஹிட் மூவிஸ்
    மணியனை மறக்க முடியுமா ?.

    குறிப்பாக அரசியல் மற்றும் சினிமா இரண்டு துறையிலும் எம்ஜிஆரின் இமாலய வெற்றிகள் துவங்கப்பட்ட ஆண்டு 1972 என்றால் அது மிகையல்ல .எம்ஜிஆரின் வெற்றிகளும் எம்ஜிஆர் ரசிகர்களின் உண்மையான பேராதரவும் மக்கள் மன்றமும் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது என்றால் அது மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற நடிகருக்கும் , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற அரசியல் தலைவருக்கும் கிடைத்த வெற்றிகள் .
    எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாமும் இந்த 1972 முதல் தொடர் வெற்றிகளை 48 ஆண்டுகளாக நினைவு கூறும் நாம் கொடுத்து வைத்தவர்கள் ..........

  9. #458
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*30/07/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வேட்டைக்காரன் படத்தில், வெள்ளிநிலா முற்றத்திலே* என்ற பாடலில்* ஒரு குழந்தைக்கு என்னென்ன அறிவுரைகள் சொல்ல வேண்டுமோ அவற்றை அழகாக, தெளிவாக,சொல்லியிருப்பார் . இதே போல பல படங்களில் குழந்தைகளுக்கு அறிவுரையுடன் கூடிய பாடல்கள் பாடியுள்ளார் .* இந்த காலத்தில் இளைஞர்கள் வருங்காலத்தை எப்படி பார்க்க வேண்டும் . எப்படி நடந்துகொள்ள வேண்டும் . எப்படியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் பொது வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிரச்னைகளை நாம் சந்திக்க உள்ளோம் என்பதை மகாதேவி படத்தில் குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா, தினம் கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா, தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா என்ற பாடலில் எப்படி கட்சியில் அண்ணா தம்பிக்கு* கடிதங்கள்**எழுதியதில் பிரபலம் ஆகியதோ , அதுபோல எம்.ஜி.ஆர். அவர்கள் திரைப்படங்களில் தன்* பாடல்கள் மூலம் மக்களுக்கு , இளைய தலைமுறைக்கு போதனைகள் அறிவுறுத்தி வந்தார் . அதனால்தான் அன்றைக்கு* இருந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள் இன்றைக்கு அவர் மறைந்த பின்னர் பக்தர்களாக உருமாறியிருக்கிறார்கள் .எம்.ஜி.ஆர். அவர்கள் தன் பாடல்களில் சொன்ன பாடங்களை ,கற்று , படிக்காத மேதைகளாக மக்கள் மத்தியில் இன்று நற்பணி ஆற்றிக்கொண்டு இருக்கிறார்கள் .என்பதை பல நகரங்களில், ஊர்களில் கண்கூடாக பார்க்கலாம் .தமிழ்நாட்டில் பல இடங்களில் எம்.ஜி.ஆர். மாதிரி வேடமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது ,திருமணங்களில் தாலி எடுத்து கொடுப்பது, பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆசி கூறுவது , குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது , சமூக நல திட்டங்களில் ஈடுபடுவது, அன்ன தானம் செய்வது பொது ஜன சேவை செய்வது*என்று பல நல்ல காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் .*


    நான் ஏன் பிறந்தேன் படத்தில் தம்பிக்கு ஒரு பாட்டு, அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு, வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதைப்பாட்டு*என்று இளைய தலைமுறைக்கும் , குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் நம்பிக்கை ஒளி தரும் ஒரு மகா சக்தியாக இருந்துள்ளார் . அதே போல நாளை நமதே படத்தில் அன்பு மலர்களே, நம்பி இருங்களேன் , நாளை நமதே என்று* நம்பிக்கை*தரும் பாடலில்* மிக அழகாக கருத்துக்களை சொல்லியிருப்பார் .நவரத்தினம் படத்தில் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் , நல்ல* உத்தமர் காந்தியையும் பார்க்கிறேன் என்று சிறுவர்கள், இளையதலைமுறையினர் எப்படி*வளர வேண்டும், வாழ வேண்டும் என்று கனவு கண்டாரோ, அதை நனவாக்க*படங்களிலே பாடல்கள் பாடி அவர்களை உருவாக்குவதில் பெரும் அக்கறை கொண்டிருந்தார் .அதில் வெற்றியும் கண்டார் . ஆனந்த ஜோதி படத்தில்*ஒரு தாய் மக்கள் நாமென்போம் என்ற பாடலிலும் தேசபக்தி, நாட்டுப்பற்று கொண்ட கருத்துக்கள் இருந்தன என்பதை அறியலாம் .நீரும் நெருப்பும் படத்தில் கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேர காற்று ,என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனை பார்த்து என்ற பாடலில் கூட குழந்தைகளுக்கு ,*அன்பு,பண்பு, ஈகை , வீரம் , உழைப்பு ஆகியன பற்றிய போதனைகள் இருக்கும் .ஏனென்றால் குழந்தைகள் நாளை மலரப்போகும்* மிக பெரிய**நிழல் தரும் மரங்களின் நாற்றங்கால்கள் . அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய பார்ப்பதில் ஒரு கலைஞனுக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்பதை எம்.ஜி.ஆர். மிக நன்றாக உணர்ந்திருந்தார் . அதனால் தான் திரைப்படத்துறையில் தனது பாணியில் அதை திறம்பட செய்து காட்டினார் .*


    ஒரு கலைஞன் என்பவன் சமூகத்திலிருந்து ,தனக்குரிய சன்மானம்*புகழ் ஆகியவற்றை பெறுகிறான் .அவன் இந்த சமூகத்திற்கு அளிக்கக்கூடிய பங்களிப்பு மிக பெரியது .அவன் தனக்கு கிடைத்த சன்மானத்திற்கும், புகழுக்கும், கிடைத்த வாழ்க்கைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறான்* இந்த மனிதகுலத்திற்கு என்பதற்காகத்தான் எம்.ஜி.ஆர். ஒவ்வொரு திரைப்படத்திலும் படத்தின்*தலைப்பு தேர்வு செய்வதில் இருந்து ,ஒவ்வொரு காட்சியிலும் மக்களுக்கு*உகந்த பல நல்ல செய்திகள் அறிவிக்க வேண்டும் , தன்னுடைய*உழைப்பிலே வருகிற*வியர்வை சிந்தி*சம்பாதிக்கிற பணத்திற்கு பயனுள்ளதாக அந்த 3 மணி நேர திரைப்படத்தில்*ஏதாவது நல்ல விஷயங்கள்*தெரிவிக்க வேண்டும் என்பதில்*முனைப்புடன் இருந்தார் .எந்த விஷயத்திலும் நேர்மையை*காட்ட வேண்டும் ,அநியாயத்தை தட்டிக் கேட்கவேண்டும்*,பெண்களிடத்தில் மரியாதை உள்ளவராக இருக்க வேண்டும் , குடும்பத்தில் முதியவர்களை மதிப்பவர்களாக இருக்க வேண்டும் . குழந்தைகளிடத்தில் அன்பு செலுத்த*வேண்டும் சக*மனிதர்களிடம் இரக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும் , ஆபத்து காலத்தில் உதவிக்கரம்*நீட்ட* ஒவ்வொரு தனிமனிதனும்*தயாராக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். தன்னுடைய*படங்களில் ,பாடல்கள், காட்சிகள் மூலம் அறிவுறுத்தி வந்தார் .


    தன்னுடைய*படங்களில் ,பாடங்கள் இல்லாமல், பரீட்சை இல்லாமல், நுழைவு தேர்வு இல்லாமல், ஆசிரியர் இல்லாமல், யாருமே இல்லாமல் அந்த ஆசான்*பாடல்கள், காட்சிகள் ,பதியவைத்து*கருத்துக்கள்*மூலமாக*பட்டங்கள் பெற்றவர்கள் கோடி*பேர் .* அந்த கோடி*பேரும்*அவர் தோளில்*தாங்கிய*மாலைகள் ஆனார்கள் .அதனால்தான் அவரது தோள்களை*கோடி*மாலைகள்*தாங்கியவை*என்று* சொல்லப்பட்டது . அப்படிப்பட்ட மன்னாதிமன்னன், ராஜராஜனின் சரித்திரம், வரலாறு, சாதனை*பட்டியல் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*.


    நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
    ----------------------------------------------------------------------------------
    1.நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா - என் அண்ணன்*

    2.வெள்ளிநிலா முற்றத்திலே விளக்கெரிய -வேட்டைக்காரன்*

    3.குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்*குருட்டு*உலகமடா*- மகாதேவி*

    4.உங்களில்*நம் அண்ணாவை பார்க்கிறேன் - நவரத்தினம்*

    5.அன்பு மலர்களே,நம்பி இருங்களேன்,நாளை நமதே*- நாளை நமதே*

    6.ஒரு தாய் மக்கள் நாமென்போம் - ஆனந்த ஜோதி*

    7.தம்பிக்கு ஒரு பாட்டு - நான் ஏன் பிறந்தேன்*

    8.ஓடி*ஓடி*உழைக்கணும் ,ஊருக்கெல்லாம் கொடுக்கணும் -நல்ல நேரம்*

    9.எம்.ஜி.ஆர். -மஞ்சுளா*-லட்சுமி உரையாடல் -இதயவீணை*

  10. #459
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    22.8.1958
    Historical Day
    19,830 அடி நீளமுள்ள “நாடோடி மன்னன்” திரைப்படம் 22-8-1958-ல் வெளியானது. திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் காலையிலேயே ரசிகர்கள் நீண்ட `கியூ’ வரிசையில் நின்றனர்.

    படம் “மெகா ஹிட்” என்பது, திரையிடப்பட்ட முதல் நாள் -முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது. இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார். இரட்டை வேடக்காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஜி.கே.ராமு அருமையாகப் படமாக்கியிருந்தார்.

    பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா உள்பட பலர் எழுதியிருந்தார்கள். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்திருந்தார். “தூங்காதே தம்பி தூங்காதே”, “சம்மதமா, நான் உங்கள் கூடவர சம்மதமா?” உள்ளிட்ட பாடல்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தன.

    ஏற்கனவே “வசூல் சக்ரவர்த்தி” என்று பெயர் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். இப்படத்தின் மூலம் “தமிழ்த்திரை உலகின் முடிசூடா மன்னன்” என்று புகழ் பெற்றார்.

    “நாடோடி மன்னன்” படத்தின் வெற்றி விழா மதுரையில் நடந்தது. இந்த விழாவை, மதுரை முத்து ஏற்பாடு செய்திருந்தார். தமிழ்நாடு சட்டசபையின் அன்றைய சபாநாயகர் யு.கிருஷ்ணாராவ், எதிர்க்கட்சித் தலைவர் வி.கே.ராமசாமி முதலியார், பி.டி.ராஜன், நடிகர்கள் கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, டி.கே.பகவதி, கவிஞர் கண்ணதாசன், டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.

    4 குதிரைகள் பூட்டிய அலங்கார ரதத்தில் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்லப்பட்ட உலக உருண்டை மீது, 110 பவுனில் தயாரிக்கப்பட்ட தங்க வாள் மின்னியது.

    ஊர்வலம் முடிந்தபின், தமுக்கம் மைதானத்தில் நடந்த பிரமாண்டமான வெற்றி விழாவில் அந்த வீரவாளை நாவலர் நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆருக்கு பரிசாக வழங்கினார் ..........

  11. #460
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிப்புக்கு #மட்டுத்தான் #சம்பளம்

    #அன்பே #வா படப்பிடிப்பிற்காக மக்கள்திலகம் கோவை செல்வதற்காக, சென்னை விமானநிலையத்திற்கு வருகிறார். அங்குள்ள விமானநிலைய அதிகாரி ஜெயக்குமார் என்பவர் எம்ஜிஆர் அவர்களின் நண்பர்...

    அவர் எம்ஜிஆர் வைத்திருந்த சூட்கேஸை எடைபோட்டு அதற்கு ரூ.7000/- பணம் கட்டச்சொன்னார்...

    அதற்கு எம்ஜிஆர் ..."பெட்டிக்குத் தான் மதிப்பா ? அதிலிருக்கும் 40000/- ரூபாய்க்கு மதிப்பில்லையா ? எனக்கேட்டார்...

    அதற்கு ஜெயக்குமார்..."நீங்கள் பணத்தை சூட்கேஸில் வைக்கவேண்டாம். கையிலுள்ள "பேக்" ல் வைத்துக்கொள்ளுங்கள்...என்று பணத்தை எடுத்துக்கொடுத்து ... அது சரி, "ஷூட்டிங்கிற்குத் தானே போகிறீங்க.? அதுக்கு இவ்வளவு பணம் எதுக்குக் கொண்டு போகணும் ? " என்று கேட்டார்.

    அதற்கு எம்ஜிஆர் ... "நான் ஊட்டி, கொடைக்கானல் போனால் அங்கு உடன் வரக்கூடிய அலுவலர்களுக்கும், நான் தங்குகிற இடத்தில் வேலை செய்யறவங்களுக்கும் மப்ளர், ஸ்வெட்டர் வாங்கித் தருவேன். அப்புறம் கொஞ்சம் பணம் என் சொந்த தேவைகளுக்காகவும் " என்று சொன்னார்...

    அதற்கு ஜெயக்குமார்..."#அதெல்லாம் #புரொட்யூஸர் #தானே #பாத்துக்குவாங்க..#நீங்க #ஏன் #கொடுக்கணும் ? "
    எனக்கேட்டார்.

    "#அவங்க #என் #நடிப்புக்கு #மட்டும்தான் #கொடுப்பாங்க...#என் #சௌகர்யத்துக்கெல்லாமா #கொடுக்கச்சொல்லணும்...? #நான் #கொடுப்பதற்காகத்தான் #சம்பாதிக்கிறேன், #சேர்த்துவைக்க #அல்ல..."
    என்றார் நம் வள்ளல்பெருந்தகை

    ஆனால் இன்றைக்கு... ............

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •