Page 42 of 210 FirstFirst ... 3240414243445292142 ... LastLast
Results 411 to 420 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #411
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Filmography Film 41 (Poster)

    1957ஆம் ஆண்டின் முதல் படத்தைப் போல, அந்த ஆண்டின் இறுதிப் படமும் எம்ஜியாருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. ஊமைப்படங்களின் காலத்தில் நடிகனாக, இயக்குனராகத் துவங்கிய சுந்தர் ராவ் நட்கர்னியின் இயக்கத்தில் சாவித்ரி எம்ஜியாருக்கு முதல் முறையாக ஜோடியாகச் சேர்ந்தார்.

    மதுரை வீரனுக்குப் பிறகு கண்ணதாசனின் அழகான வசனங்களைத் தாங்கி விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இனிய பாடல்களுடன் வெளியான இப்படம் ஓரு வகையில் ஜெனோவா படத்தின் மற்றொரு பதிப்பு என்றே இதைச் சொல்லலாம்; நண்பனின் மனைவியின் மீது ஆசை கொள்ளும் ஒரு காமுகன் அதை எதிர்த்துப் போராடி வெல்லும் ஒரு கற்புக்கரசி என்பதாகத்தான் இந்தப் படத்தின் கதையும்; ராமண்ணாவின் தயாரிப்பு இயக்கத்தில் தோல்வி அடைந்த கூண்டுக்கிளியின் கதையும் இதுவே! ஆனால், அந்த சோஷியல் தோல்வி அடைந்தாலும் இந்த இரண்டு காஸ்ட்யூம் ட்ராமாக்களும் வெற்றி பெற்றன. அதிலும் மகாதேவி பெரும் வெற்றி பெற்றது. அதற்கு ஒரு காரணம், முதலிரண்டில் இல்லாத ஒரு விஷயம்: சாவித்ரியின் ஹை பவர் பர்ஃபாமன்ஸ்.

    உண்மையில், இந்த படத்தில் சாவித்ரி - பிஎஸ் வீரப்பா நடிப்பு அபாரம் என்று சொல்ல வேண்டும்.சாவித்ரிக்கு ஈடாக கொடுஞ்சிரிப்பு வில்லன் வீரப்பா படம் முழுதும் விரவியிருப்பார். 'அடைந்தால் மகாதேவி! இல்லையேல் மரணதேவி!' என்ற அவரது பஞ்ச் டயலாக் சாகாவரம் பெற்று விட்டது!

    ஆனாலும், தன் பாத்திரத்தை மிக அழகாகத் தெளிவாகச் செய்திருந்தார் எம்ஜியார்.நாகம் தீண்டி மயங்கிக் கிடக்கும் இளவரசனை அதே பாம்பு தீண்டி விஷத்தை உறிஞ்சினால்தான் பிழைப்பான் என்று பாம்பாட்டிகள் முயன்று தோற்று இனிமேல் முடியாது என்று கை விரிக்க, அடிபட்டு கட்டுகளோடு இருக்கும் எம்ஜியார் ஒரு வார்த்தை பேசாது எழுந்து வந்து அந்தப் பாம்பாட்டியின் கையில் இருக்கும் மகுடியை வாங்கித் தான் ஊதத்துவங்குவாரே, அப்போது அந்த நடையிலும், கண்களிலும் வெளிப்படும் உறுதி - certainly a piece of classic acting. யூ ட்யூபில் படம் இருக்கிறது. பாருங்கள்..........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #412
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் வாரம் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள்
    1) 17-08-2020 பாலிமர் tv பகல் 2 மணிக்கு - நல்ல நேரம்
    2) 19-08-2020- ராஜ் டிவி- இரவு 8 மணிக்கு - புதுமைப்பித்தன்
    3) 19-08-2020-ராஜ் டிஜிட்டல் பிளஸ்-இரவு 7 மணிக்கு உலகம் சுற்றும் வாலிபன்
    4) 20-08-2020- வசந்த். Tvயில் பகல் 1.30 மணிக்கு - ராமன் தேடிய சீதை
    5)21-08-2020, ஜெயா மூவிஸ் இரவு 10 மணிக்கு - ஒரு தாய் மக்கள் ஆகிய திரைப்படங்களை கண்டு மகிழவும்- இன்று மெகா 24 tv யில் மதியம் 2.30 மணிக்கு "தொழிலாளி" காவியம் காண தவறாதீர்கள்.........முதல் தகவல் மதுரை ராமகிருஷ்ணன்

  4. #413
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர்_கேட்காதவர்களுக்கும்_உதவியவர்!

    M.g.r. தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு மட்டுமின்றி, கேட்காதவர்களுக்கும் அவர்களுடைய நிலையை அறிந்து உதவிகள் செய்யக் கூடியவர். இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்கள் உண்டு.

    இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அவ்வளவாக அரங்குகள் கிடையாது. மயிலாப்பூரில் ரசிக ரஞ்சனி சபாவுக்கு சொந்தமான சுந்தரேஸ்வரர் அரங்கு, எழும்பூரில் அரசுக்கு சொந்த மான மியூஸியம் தியேட்டர், வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருந்த ஒற்றை வாடை தியேட்டர், மாநகராட்சி அலுவல கத்தை ஒட்டிய வி.பி.ஹால், அண்ணா மலை மன்றம் போன்ற ஒருசில அரங்குகள்தான் இருந்தன.

    இந்த அரங்குகளில் நடந்த பல கலை நிகழ்ச்சிகளுக்கு எம்.ஜி.ஆர். வருகை தந்து தலைமை தாங்கியிருக்கிறார். மாநகராட்சி அலுவலகம் அருகே இருந்த வி.பி.ஹாலில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார். நிகழ்ச்சி முடிந்து கலைஞர்களை பாராட்டிவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அந்தக் கால கட்டத்தில் அவர் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் வசித்து வந்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்துக்கு எதிரே ஒரு ரயில்வே கேட் உண்டு. இப்போது அந்த பகுதியில் மேம்பாலம் உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து ரயில்வே கேட்டைக் கடந்து சிந்தாதிரிப்பேட்டை வழியாக ராயப்பேட் டைக்கு எம்.ஜி.ஆர். செல்ல வேண்டும்.

    எம்.ஜி.ஆரின் கார் வந்து கொண் டிருந்தபோது ரயில்வே கேட் மூடப் பட்டிருந்தது. அது திறப்பதற்காக கார் காத்திருந்தது. ரயில்வே கேட் அருகே ஒரு குதிரை லாயம். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது, சுற்றும்முற்றும் கூர்ந்து கவனித்தபடி இருப்பார். அவர் பார்த்த போது குதிரை லாயம் அருகே சிறு கூட்டம். கூடவே அழுகை சத்தமும் கேட்டது. என்ன வென்று விசாரித்து வருமாறு காரில் இருந்த தனது மேனேஜர் சாமியிடம் எம்.ஜி.ஆர். சொல்ல, அவரும் விசாரித்து வந்தார்.

    அங்கிருந்த ஒரு குதிரை வண்டிக்கார ருக்கு சொந்தமான குதிரை திடீரென இறந்துவிட்டது. வண்டிக்காரரின் குடும் பமே குதிரை சவாரியை நம்பித்தான் இருந்தது. திடீரென குதிரை இறந்த அதிர்ச்சி, துக்கம், இனி பிழைப்புக்கு என்ன செய்வது என்ற கவலை எல்லாம் சேர, அவரது குடும்பமே இறந்த குதிரையின் அருகில் அமர்ந்து கதறியது. அதைவிடக் கொடுமை, அந்தக் குதிரையை அடக்கம் செய்யக்கூட அவர்களிடம் பணம் இல்லை.

    இந்த விவரங்களை எம்.ஜி.ஆரிடம் மேனேஜர் சாமி தெரிவித்தார். பொறுமையாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக் குதிரை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?’’ என்றார். ‘‘600 ரூபாய் தேவைப்படலாம்’’ என்றார் சாமி. ஒரு பொருளின் விலையை கடைக்காரர் அதிகமாக சொன்னால், ‘‘என்னய்யா... யானை விலை, குதிரை விலை சொல்ற?’’ என்ற வசனத்தை முன்பெல்லாம் கேட்டிருப்போம். 50 ஆண்டுகளுக்கு முன் குதிரை விலை 600 ரூபாய் என்பது அதிகம்.

    சாமி சொன்னதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக்குதிரை வாங்கி வந்து வண்டியில் பூட்டி ஓட்ட வேண்டும். இதற்கு சில நாட் கள் ஆகலாம். அதுவரை அந்த வண்டிக் காரரின் குடும்பம் கஷ்டப்படக் கூடாது. இறந்த குதிரையையும் அடக்கம் செய்ய வேண்டும். எனவே, குதிரை விலையோடு சேர்த்து தேவை யான பணத்தை வண்டிக்கார ரிடம் கொடுத்துவிடுங்கள்’’ என் றார். பணத்தோடு சென்ற சாமி, வண்டிக்காரரிடம் விவரங்களைச் சொல்லி பணத்தைக் கொடுத்தார்.

    வண்டிக்காரருக்கு இன்ப அதிர்ச்சி. நம்ப முடியாமல் கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆர். வந்த காரைப் பார்த்தார். காரில் எம்.ஜி.ஆர். இருப்பதை கவனித்துவிட்டு இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டபடி, கண் ணீருடன் காரை நோக்கி ஓடிவந்து அப்படியே தரையில் விழுந்து வணங்கி னார். காரில் இருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., அவரை தூக்கி ஆறுதல் சொன்னார். ‘‘இறந்த குதிரையை அடக் கம் செய்துவிட்டு, புதுக் குதிரை வாங்கி தொழிலை கவனியுங்கள்’’ என்றார். அதற் குள், விஷயம் பரவி அங்கு பெரும் கூட்டம் சேர்த்துவிட்டது. அந்த நேரத்தில், ரயில்வே கேட் திறக்கப்பட, மக்களைப் பார்த்து கையசைத்து விடைபெற்றபடி எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.

    அந்தக் குதிரை வண்டிக்காரர் நன்றி மறக்காதவர். அடுத்த சில நாட்களில் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு புதிய குதிரை பூட்டிய வண்டியை ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். எம்.ஜி.ஆரை சந்தித்து அவரது காலில் விழுந்து நன்றி சொன்னார். அவரை வாழ்த்தி குதிரையையும் பார்த்து மகிழ்ச்சியுடன் அதைத் தட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.!

    ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ஜெயிலர் ராஜன் என்ற பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். கொடிய குற்றங்கள் செய்த சிறைக் கைதிகள் 6 பேரை தனது பொறுப்பில் அழைத்துவந்து, அவர்களோடு தானும் வாழ்ந்து கைதிகளை திருத்தும் முயற்சியில் ஈடுபடுவார். குற்றவாளி களில் ஒருவராக நடிக்கும் ஆர்.எஸ். மனோகர், கதைப்படி தனது மனைவியை கொன்றுவிட்டதால் சிறை தண்டனை அடைந்திருப்பார். அவரைப் பார்க்க மனோகரின் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது தாயார் வருவார்.

    தனது தள்ளாத வயதில், வீடுகளில் வேலைசெய்து குழந்தைகளைக் காப்பாற்றி வருவதாகவும் தானும் இறந்துவிட்டால் இந்தக் குழந்தைகளின் கதி என்ன என்று மனோகரிடம் கூறி அவரது தாயார் கலங்குவார். என்ன செய்வதென்று புரியாமல் மனோகரும் கண் கலங்கும் கட்டம் பார்ப்பவர் மனதை உருக்கும்.

    இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்., இரு குழந்தைகளையும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறுவார். அந்தத் தாய், நன்றியும் மகிழ்ச்சியும் போட்டிபோட, உணர்ச்சிப் பெருக்கோடு எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சொல்வார்…

    ‘‘இந்த உலகத்துலே ஏழைங்களோட கஷ்டத்தைப் புரிஞ்சவங்க உன்னை மாதிரி வேற யாரும் இல்லப்பா!’’

    #சிறு_குறிப்பு :

    எம்.ஜி.ஆர். குதிரையேற்றம் அறிந்தவர். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் குதிரை சவாரியில் விருப்பம் உள்ளவர். பல குதிரைகளை வளர்த்து வந்தார். மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் குதிரை சவாரி காட்சியில் எம்.ஜி.ஆர். ஓட்டியது, டி.ஆர். சுந்தரத்துக்கு சொந்தமான குதிரை. பெரியகுளம் எம்ஜிஆர் மன்ற நகரச் செயலாளர் வி.டி.எஸ். இராஜ்வேலு பெரியகுளம்.........

  5. #414
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் சினிமா வரலாற்றில் 1931 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டுவரை எந்த நடிகரின் திரைப்படங்களும் சாதிக்காத வெற்றிகளை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தனிப்பெரும் கதா நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்து வரலாற்று சிறப்பு மிகு வெற்றிகளை படைத்துள்ளார்.

    புரட்சி நடிகரின் மலைக்கள்ளன் 50 திரையரங்கில் 50 நாட்களை கடந்து சாதனை.*
    குலேபகாவலி திரைப்படம் 50க்கும் மேற்பட்ட அரங்கில் 50 நாட்களை கடந்து வெற்றி முரசு கொட்டியது.
    *மக்கள் திலகத்தின் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் தென்னக மெங்கும் எழுபத்தைந்து திரையரங்கில் 50 நாட்களை கடந்து முரசு கொட்டியது.

    1956ஆம் ஆண்டில் வெளியான மூன்று திரைப்படங்களும் வெவ்வேறு பற்பல சாதனைகளை தமிழ்சினிமாவில் படைத்துள்ளது.

    மதுரை வீரன் திரைப்படம்*
    35 அரங்கில் 100 நாட்களும்*
    75 அரங்கில் 75நாட்களும்*
    110 அரங்கில் 50 நாட்களும் ஓடி தமிழ் சினிமா சரித்திரத்தில் அசைக்க முடியாத வெற்றியை படைத்தார் மதுரைவீரன்.
    தாய்க்குப்பின் தாரம்*
    சக்கரவர்த்தி திருமகள் திரைப்படங்களும்*
    40க்கும் மேற்பட்ட அரங்குகளில்*
    50 நாட்களை கடந்து வெற்றி முரசு கொட்டி சாதனை படைத்தது..........

  6. #415
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர்_விளம்பரத்தை_விரும்பாத_உள்ளம்!

    M.g.r. ஜாதி, மத, இன, மொழி, மாநில எல்லைகளை எல்லாம் தாண்டி, பாதிக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் உதவுவார். அதேநேரம் தமிழர்களையும் அவர்களது கலாசாரத்தையும் மற்ற மாநிலத்தவர் இழிவுபடுத்துவதை அனுமதிக்க மாட்டார். பாதிக்கப் பட்டவர்களுக்கு செய்யும் உதவியைவிட, தனது எதிர்ப்பையே முன்னிலைப்படுத்துவார்.

    ஒருமுறை ஒடிசா மாநிலத்தில் (அப் போது ஒரிசா) பெரும் வெள்ளம் ஏற் பட்டது. ஏராளமானோர் உயிரிழந்த னர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடு, வாசல்களை இழந்து தவித்தனர். சென்னையில் தங்கியிருந்து மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த ஒடிசா மாணவர்கள், தங்கள் மாநிலத்துக்கு நிவாரண நிதி திரட்டித் தர விரும்பினர்.

    அதற்காக, நடிகை வைஜெயந்தி மாலாவும், நடிகர் கிஷோர் குமாரும் நடித்து அப்போது வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ‘நியூ டெல்லி’ என்ற இந்திப் படத்தை சென்னை அசோக் திரையரங்கில் (இந்த திரை யரங்குதான் பின்னர் சிவசக்தி என்று பெயர் மாற்றப்பட்டது) காலைக் காட்சி யாக திரையிட முடிவு செய்தனர். அது 1956-ம் ஆண்டு. அப்போதே திமுகவில் எம்.ஜி.ஆர். முக்கிய பிரமுகராகவும் திரை உலகில் சூப்பர் ஸ்டாராகவும் இருந்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்க வேண்டுமென்றும் அவர் வந்தால் வசூல் அதிகமாக கிடைக்கும் என்றும் ஒடிசா மாணவர்கள் கருதினர். திரையிடப்படுவதோ இந்திப் படம். திமுகவோ இந்தி திணிப்புக்கு எதிரான இயக்கம். இதனால், எம்.ஜி.ஆரை அழைத்தால் அவர் நிகழ்ச்சிக்கு வரு வாரா என்று மாணவர்களுக்கு சந்தேகம். இருந்தாலும் கேட்டுப் பார்க்கலாம் என்று எம்.ஜி.ஆரை தொடர்புகொண்டு தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

    ஒருவர் துன்பப்படுகிறார் என்றால், அவர்கள் தன்னை எதிரியாக நினைப்பவர் களாக இருந்தாலும் உதவி செய்பவர் எம்.ஜி.ஆர்.! நிகழ்ச்சிக்கு வர சம்மதித் தார். ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்த சமயத் தில் திடீரென ஒரு சிக்கல் முளைத்தது.

    வட மாநிலங்களில் ஓடிக்கொண்டி ருந்த ‘நியூ டெல்லி’ திரைப்படம் சென்னை யிலும் வெளியானது. படத்தில் ஒரு காட்சியில் தமிழர் ஒருவரின் தலையில் செருப்பை வைத்து கதாநாயகன் கிஷோர் குமார் ஆடிப் பாடி வருவார். அருகே கதாநாயகி வைஜெயந்தி மாலாவும் இருப்பார். இந்தக் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ‘‘ஒரு தமிழ் நடிகை கதாநாயகியாக நடித்துள்ள படத்தில் தமிழர்களை இழிவு படுத்துவது போன்ற காட்சி எப்படி இடம் பெற்றது? இது தமிழர்களை அவமதிக்கும் செயல். இந்தப் படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கலாமா?’’ என்று கண்டனக் குரல்கள் கிளம்பின. ‘நியூ டெல்லி’ படத்தை திரையிட ஏற்பாடு செய் திருந்த மாணவர்களுக்கு பயத்தோடு கவலையும் சேர்ந்துகொண்டது. விழாவுக்கு எம்.ஜி.ஆர். வருவாரா? என்று கவலைப்பட்டனர்.

    படத்துக்கு எழுந்த எதிர்ப்பு எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு சென்றது. அவருக்கும் தர்மசங்கடம். ‘‘தமிழர்களை இழிவு செய்யும் காட்சியைக் கொண்ட படத் துக்கு நான் எப்படி தலைமை வகித்து வசூலுக்கு உதவ முடியும்? இதுபோன்ற காட்சி படத்தில் உள்ளது என்று என்னிடம் முன்பே ஏன் தெரிவிக்கவில்லை?’’ என்று விழா ஏற் பாட்டாளர்களிடம் கடிந்துகொண்டார். தாங்கள் அந்தப் படத்தை பார்க்கவில்லை என்றும் தெரிந்திருந்தால் இதுபோன்று நடந்திருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    சிறிதுநேரம் நிதானமாக யோசித்த எம்.ஜி.ஆர்., ‘‘நிகழ்ச்சிக்கு வருகிறேன். ஆனால், எனது எதிர்ப்பைத் தெரிவிப் பேன்’’ என்று உறுதியாகக் கூறிவிட்டார். இதற்கிடையே, எம்.ஜி.ஆரை விமர்சிப் பவர்கள் ஒருபக்கம், ‘‘தமிழர்களை இழிவு படுத்தும் படம் திரையிடும் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். எப்படி கலந்துகொள்ள லாம்?’’ என்று கேள்வி எழுப்பினர்.

    இந்த அமர்க்களங்களுக்கிடையே, குறிப்பிட்ட நாளில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார். திரை யரங்கம் இருந்த பகுதியில் நுழையவே முடியாதபடி மக்கள் வெள்ளம். மாண வர்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே வசூல் கிடைத்தது. படம் திரையிடப்பட்டு இடைவேளையின்போது, எம்.ஜி.ஆர். பேச அழைக்கப்பட்டார்.

    ‘‘திரைப்படம் என்பது சக்தி வாய்ந் தது. பார்ப்பவர்கள் மனதில் ஆழமாகப் பதியக்கூடியது. மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமே தவிர, வெறுப்பை யும் வேற்றுமையையும் ஏற்படுத்தக் கூடாது. இந்தப் படத்தில் ஒரு தமிழரின் தலையில் செருப்பு வைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்தக் காட்சியைப் பார்த்து நான் மிகவும் வேதனைப்பட் டேன். என்னைப் போலவே தமிழ் மக் களும் வேதனை அடைந்துள்ளனர். நாட் டின் எந்த பகுதி மக்களின் உணர்வுகளை யும் பாதிக்கும் காட்சிகள் படத்தில் இடம் பெறச் செய்யக் கூடாது.’’ என்று தனது எதிர்ப்பை எம்.ஜி.ஆர். தெரிவித்தார்.

    அதேநேரம், மாணவர்களின் நாட்டுப் பற்றையும் நல்ல நோக்கத்தையும் பாராட்டுவதாகவும் அதற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் கூறினார். அவரது பேச்சை ஆமோதித்து கூட்டத் தினர் பலத்த கரகோஷம் செய்தனர்.

    நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறும்போது, ‘‘நாளை என்னை வந்து சந்தியுங்கள்’’ என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கூறிவிட்டு எம்.ஜி.ஆர். புறப்பட்டார். மறுநாள் அவரது வீட்டுக்குச் சென்று மாணவர்கள் சந்தித்தனர். அவர்களை வரவேற்று உபசரித்தார் எம்.ஜி.ஆர்.! ‘‘உங்கள் நோக்கம் உயர்வானது. ஆனால், நீங்கள் திரையிட தேர்ந்தெடுத்த படம் பற்றி என்னால் அப்படி சொல்ல முடி யாது. உங்களின் நற்பணிக்கு எனது சிறிய காணிக்கை’’ என்று கூறி, மாணவர்களிடம் ஒரு பெரும் தொகையை நன் கொடையாக அளித்தார்.

    இதை எதிர்பார்க்காத மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தன்னை வந்து சந்திக்குமாறு எம்.ஜி.ஆர். கூறியது இதற்குத்தான் என்பதையும் புரிந்து கொண்டனர். ‘இந்த நன்கொடையை நேற்று மேடையிலேயே கொடுத்திருக்க லாமே?’ என்று மாணவர்களுக்கு சந் தேகம். அதற்கு விடையளிப்பதுபோல எம்.ஜி.ஆர். சொன்னார்…‘‘நேற்று நான் நன்கொடை கொடுத்திருந்தால் அதற்குத் தான் முக்கியத்துவம் கிடைத்திருக்கும். என் எதிர்ப்பின் வலிமை குறைந்து போயிருக்கும்’’ என்றார்.

    ஒடிசா வெள்ள நிவாரணத்துக்கு எம்.ஜி.ஆரின் உதவி வெளியே தெரிய வில்லை. ஆனாலும், விளம்பரத்தை விரும்பாத அவரது உதவும் உள்ளம் ஒடிசா மாணவர்களுக்குத் தெரிந்தது!

    #சிறுகுறிப்பு:

    ‘நவரத்தினம்’ படத்தில், ‘லடுக்கே ஸே மிலீ லடுக்கி’ என்ற இந்திப் பாடல் இடம் பெற்றது. இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆருடன் நடிகை ஜரீனா வஹாப் நடித்திருந்தார். தமிழ் படம் ஒன்றில் முழுமையாக இந்திப் பாடல் இடம் பெற்றது அப்போது புதுமை!.........

  7. #416
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "#புரட்சித்தலைவர் அவர்களின் முதல் ரசிகன் நான்தான்... அப்போது எனக்கு 13 வயது. எம்ஜிஆருக்கு 16 வயது."

    "#எம்ஜிஆர் திரையுலகிலும், அரசியலிலும் கொடி கட்டி வாழ்ந்த காலத்தில் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தார்கள்.

    ஆனால், எம்ஜிஆரின் முதல் ரசிகன் நான்தான் எனச் சொல்லிக் கொள்கிற பெரும் பாக்கியமும் உரிமையும் எனக்கு உண்டு.

    அப்போது எனக்கு 13 வயது. எம்ஜிஆருக்கு 16 வயது.

    கும்பகோணம் பாணாதுறை ஏரியாவில் இருந்த ஒரு பெட்டிக்கடைக்காரர்தான் எம்ஜிஆரைத் தத்தெடுத்து வளர்த்தார்.

    அப்போதெல்லாம் எம்ஜிஆர் துளியளவும் பெயர் பெற்றிருக்கவில்லை. ஆனால், பார்ப்பவர்களை நின்று நிலைத்துத் திரும்பிப் பார்க்கிற அளவுக்கு
    எம்ஜிஆர் பேரழகுடன் இருந்தார்.

    செக்கச் சிவந்தவரான எம்ஜிஆரை எப்படியும் சினிமாவில் சேர்த்துப் பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் அவருக்கு குஸ்தி விளையாட்டு கற்றுக் கொடுத்தார்கள்.

    பாணாதுறையில் இருந்த அசேன்- உசேன் என்கிற பிரசித்தி பெற்ற குஸ்தி வாத்தியார்தான் எம்.ஜி.ஆருக்குப் பயிற்சி கொடுத்து வந்தார்.

    எம்.ஜி.ஆர். கம்பு சுற்றும் அழகை தினமும் வேடிக்கை பார்ப்பேன். என்னோடு இன்னும் சிலரும் எம்.ஜி.ஆர். கம்பு சுற்றும் வேகத்தைக் கண்டு வியந்து பேசுவார்கள்.

    குஸ்தி கற்க வரும் எம்.ஜி.ஆரிடம் பல முறை வலியப் போய் பேசியிருக்கிறேன்.

    நான் மட்டுமல்ல, எம்.ஜி.ஆர். சினிமாவுக்குப் போகப் போகிறார் என்பதாலேயே பலரும் அவரோடு நெருங்கி வந்து பேசுவார்கள்.

    அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். அதிகம் பேச மாட்டார். அவராக நம்மைப் பார்த்து ஒரு வார்த்தை கேட்க மாட்டாரா? எனப் பல முறை ஏங்கி இருக்கிறேன்.

    பல வருடங்களுக்குப் பிறகு அவரே வாய் குளிர என்னையும், எனது சமையலையும் பாராட்டுகிற நேரம் எனக்கு வாய்த்தது.

    எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்குப் போய் தன் உடல்நிலையைச் சரிசெய்து கொண்டு திரும்பி வந்த நேரம். அவர் குணமடைந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக அன்னதான விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான முழுப் பொறுப்பும் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

    எம்.ஜி.ஆர். மீது பேரபிமானம் கொண்டிருந்த எனக்கு சொல்ல வேண்டுமா என்ன? சாதத்தை மலை போல் சமைத்து ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்க கடகடவென ஏற்பாடு செய்தேன்.

    அண்ணாமலையாரின் திருவுருவத்தை சாப்பாட்டாலேயே ஜோடித்து வைத்திருந்தேன்.

    ஆனால் அந்த அன்னதான விழாவுக்கு எம்.ஜி.ஆரால் வர முடியாத சூழல்.

    இருந்தாலும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள் சாதத்தாலேயே வடிவமைக்கப்பட்ட அண்ணாமலையாரின் திருவுருவத்தைப் பற்றிய விஷயங்களை எல்லாம் எடுத்து சொல்லி எம்.ஜி.ஆரை அந்த அன்னதான விழாவுக்கு அழைத்து வந்து விட்டனர்.

    ஜானகி அம்மையாருடன் எம்.ஜி.ஆர். அந்த அன்னதான விழாவுக்கு வந்தார். சாதத்தால் உருவாக்கப்பட்ட அண்ணாமலையாரின் உருவத்தைக் கண்டார். அவர் என்ன சொல்லிப்போகிறாரோ எனப் புரியாமல் படபடப்புடன் நின்று கொண்டிருந்தேன்.

    ‘இந்த ஏற்பாட்டை யார் செய்தது?’ எனக் கேட்டார். அருகே நின்ற அனைவரும் என்னைக் கைகாட்டினார்கள்.

    சட்டென என் கையைப் பிடித்தவர், ‘இது அண்ணாமலையா…. இல்லை அன்னமலையா!’ எனக் கவிதை பாணியில் பாராட்ட, நான் புல்லரித்துப் போனேன்.

    அவரது சாதாரண வார்த்தைகளைக் கேட்கவே ஏங்கிய எனக்கு, அவர் வாஞ்சையோடு வாரியணைத்து வாழ்த்துச் சொனனபோது என்னையும் மீறி ஆனந்த அழுகை வந்துவிட்டது."

    ‘ஞானாம்பிகா’ ஜெயராமன் அவர்களின் நினைவுகளில் இருந்து...........

  8. #417
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் சினிமா வரலாற்றில் மக்கள் திலகத்தின் பொன்னான காவியம் சகோதர பாசத்திற்கு மகுடம் பதித்த திரைப்படம் "என் தங்கை ", காவியம் ஆகும். இத்திரைப்படத்தில் புரட்சி நடிகருக்கு கதாநாயகி கிடையாது .டூயட் பாடல்கள் கிடையாது .எந்த பாடலும் கிடையாது. சண்டைக் காட்சிகள் கிடையாது. இயற்கையாக நடித்து புகழ் பெற்ற முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றவர் புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள்.

    என் தங்கை திரைக்காவியம் 1952 ஆம் ஆண்டு வெளிவந்தது.*
    அதற்கு முன் சகோதர பாசத்திற்கு இப்படிப்பட்ட கதை அமைப்புடன் கூடிய திரைப்படம் வெளிவந்ததில்லை .எவரும் சிறப்புடன் நடித்ததில்லை.

    மக்கள் திலகம் அவர்கள் வேஷ்டி சட்டையுடன் தன் நடிப்பை இயற்கையாக பிரதிபலித்த ஒப்பற்ற காவியம். சகோதர பாசத்திற்கு முதன்முதலாக அச்சாரம் போட்ட திரைப்படம் என் தங்கை ஆகும்.

    என் தங்கை திரைப்படம் போல் பல திரைப்படங்கள் பின்னாளில் சகோதர பாசத்துடன் எடுக்கப்பட்டாலும் வெளிவந்தாலும் அதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்த வெற்றி பெற்ற மகத்தான சாதனையை கடந்த காவியம்.*

    புரட்சி நடிகரின் மென்மையான நடிப்பில் புரட்சிகரமான முகபாவனையில் வெளிவந்த காவியம் என் தங்கை ஆகும்.

    என் தங்கை திரைப்படம் தமிழகத்திலும், இலங்கையிலும் மகத்தான சாதனைகளை படைத்துள்ளது.*

    அதன் பின்பு பாசம் காட்டிய* திரைப்படங்கள் எல்லாம் இன்றுவரை பெட்டியில் தூங்கினாலும்.....*
    என் தங்கை திரைப்படம் எல்லோர் மனதிலும் நிலைத்த மகத்தான காவியமாக என் தங்கை*
    திரைப்படம் திகழ்கிறது.
    சகோதர பாசத்திற்கு இமயமாக திகழ்ந்து கொண்டுவருகிறது..........

  9. #418
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் சினிமா வரலாற்றில் ஏன் இந்திய சினிமா வரலாற்றில் கூட மக்கள் திலகத்தின் சரித்திரப் படங்கள் போல் எந்த நடிகரும் பின்னாளில் அப்படங்கள் மூலம் சாதித்த சாதனைகள் ஒன்றுகூட கிடையாது.
    *ஆனால் மக்கள் திலகம் ஒருவர்தான் சரித்திரப் படங்களுக்கு ஏற்ற*
    கதாநாயகனாக*
    இன்றுவரை*
    வெள்ளித்திரையில்*
    மின்னுகிறார்.

    ராஜகுமாரி முதல் மர்மயோகி சர்வாதிகாரி திரைப்படம் முதல் குலேபகாவலி வந்தது... அலிபாபாவும் வந்தது....
    மதுரை வீரனும் இன்று வரை வெள்ளித்திரையில் ஓடுகிறது. புதுமைப்பித்தனும் புரட்சிகரமாக நடைபெறுகிறது.*
    நாடோடி மன்னனும்* வெள்ளித்திரையில் ஆண்டுதோறும் வருகிறது. ஆனால் மற்ற நடிகர்களின் சரித்திரப் படங்கள் மண்ணோடு மண்ணாக வீழ்ந்தது என்பதுதான் திரையுலக வரலாறு ஆகும்.

    சரித்திரப் படங்களுக்கு ஏற்ற ஒரே வீரமிகு கதாநாயகன், தனிப்பெரும் கதாநாயகன், மக்கள் திலகம், புரட்சி நடிகர் எம் ஜி ஆர் ஒருவர்தான் என்பது அன்று அல்ல இன்று வரை பேசப்பட்டு வரும் ஒரு உன்னதமான புகழ் மிகுந்த பேச்சாகும்.

    புரட்சி நடிகர் சமூகப் படங்களிலும் நடித்து வெற்றி பெற்றார்.*
    என் தங்கை, அந்தமான் கைதி மலைக்கள்ளன்,*
    தாய்க்கு பின் தாரம் திரைப்படங்கள்*
    வெற்றி பெற்றது .
    அதன்பின்பு*
    சரித்திர படங்களான குலேபகாவலி,
    அலிபாபா, மதுரைவீரன், சக்கரவர்த்தி திருமகள், புதுமைப்பித்தன்,*
    நாடோடிமன்னன்,*
    பாக்தாத் திருடன் திரைப்படங்களும்*
    வெற்றிமுரசு கொட்டி*
    இன்றுவரை வெளிவந்து வெள்ளித்திரையை*
    ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறது என்பது தான் கடந்த கால வரலாறும்.....
    இன்றைய வரலாறும்...
    தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

    ஆனால் சில நடிகர்கள் அன்று ஓடிய ஓட்டத்தை வைத்தும், கணக்கை வைத்தும் பதிவுசெய்து வருகின்றார்கள். அப்படங்கள் யாவும் திரைக்கு வருவதேயில்லை. பொய்யும் புரட்டும் கொண்டு போலியான எண்ணத்தை விதைக்கின்றார்கள்
    அந்நடிகரின் ரசிகர்கள்..........

  10. #419
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்திய சினிமா வரலாற்றில் மட்டுமல்ல ...உலக சினிமா வரலாற்றில் மக்கள் திலகத்தின் புதிய படங்கள் ஆனாலும் சரி....
    மக்கள் திலகத்தின் ஓல்ட் இஸ் கோல்ட்... திரைப்படங்களான பழைய திரைப்படங்கள் ஆனாலும் சரி....
    இன்றுவரை பல வெளியீடுகளை நூற்றுக்கணக்கான வெளியீடுகளை....
    சந்தித்து சிறப்புமிகு சாதனைகளை செய்து வருகிறது.

    புரட்சி நடிகர் சினிமா உலகில் தடம் பதித்த வெற்றிகளில் முக்கியமான திரைப்படமான எம் ஜி ஆர் பிக்சர்ஸ் தயாரித்த*
    மக்கள்திலகம் இருவேடங்களில் வலம் வந்த....
    இயக்குனராக சிறப்புமிகு காவியத்தை தந்த....
    பொன்மனச் செம்மலின்*
    "நாடோடி மன்னன்" காவியம் திரைப்படம் போல் எந்த நடிகரின்*
    திரைப்படமும் இதுவரை*
    சாதித்த வரலாறு*
    சினிமா உலகில் கிடையாது.

    1958 ஆம் ஆண்டு முதல்*
    2019 ஆம் ஆண்டுவரை இத்திரைப்படம்*
    பற்பல ஊர்களில்*
    மூன்று வாரம் 5 வாரம் கடந்துள்ளது.
    இப்படி பல வாரங்கள் ஓடி*
    பல வெளியீடுகளை சந்தித்து... மாற்றான் படங்களின் பல
    புதிய வரவுகளை வென்று*
    புதிய சாதனையை....*
    வசூலை....*
    ஆண்டுதோறும் படைத்து வந்துள்ளது.*
    62 ஆண்டு காலம் இத்திரைப்படத்தின்*
    வரலாறு எல்லோராலும் புகழப்படும்.... போற்றப்படும்*
    சரித்திரமாகும்.*

    புரட்சி நடிகரின்*
    நாடோடிமன்னன்*
    வரவால் தமிழ் திரையுலகம் வளர்ந்தது. உலக நாடுகளில் பல வெற்றிகளை பதித்துள்ளது..........

  11. #420
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    "குமரிக்கோட்டம்" k c பிலிம்ஸ் கோவை செழியனின் படம் . ஊட்டி வரை உறவு படத்தின் வசூல் தோல்விக்கு பின்னர் வந்த வெற்றிப் படம். "ஊட்டி வரை உறவு" படத்தை வசூலில் தோல்வி என்று நான் சொல்லவில்லை. சிவாஜியே அவருடைய படத்தை ஒரு வரி விமர்சனம் செய்யும் போது குறிப்பிட்டதுதான்.

    100 நாள் ஓடியும் தயாரிப்பாளர் நஷ்டம் என்று கூறுகிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு காரணம் நிறைய உண்டு. முதலில் வைத்த பெயர் "காலமெல்லாம் காத்திருப்பேன்". அதன்பின் "வயது 18 ஜாக்கிரதை" என்று பெயர் மாற்றம் செய்து படப்பிடிப்பு துவங்கியது. கதை திருப்தி இல்லாததால் அதுவரை எடுத்த காட்சியில் ஒன்றிரண்டை தவிர அனைத்தையும் தூக்கி போட்டு விட்டு தற்போது உள்ளதுபோல் படமாக்கினார்கள்.

    கால தாமதம், வீண் விரயம் போன்றவற்றால் செலவு எகிறிவிட்டது. சிவாஜிக்கு அந்தளவு வியாபார மார்க்கெட் இல்லாததால் படம் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன்பின் நெடுநாள் படம் எடுக்காமல் இருந்தவர் பின் தலைவரின் கண்பார்வை கிடைத்தவுடன் ஆரம்பிக்க பட்ட படம்தான் "குமரிக்கோட்டம்". அறிஞர் அண்ணா எழுதிய "குமரிக்கோட்டம்" என்ற சிறுகதையின் தலைப்பை படத்தின் பெயராக வைத்தார்கள். பெயரும் கவர்ச்சியாக இருந்ததால் எதிர்பார்ப்பும் எகிறி இருந்தது. இந்தப்படமும் சற்று கால தாமதமாகத்தான் வெளிவந்தது.

    படத்தின் ஹைலைட்டே பாடல்கள்தான் என சொல்லலாம். அந்த காலத்தில் ரேடியோ நிகழ்ச்சியில் ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் விவித்பாரதியின் "தேன் கிண்ணம்" நிகழ்ச்சியில் "நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்" பாடல் தொடர்ந்து பல வாரங்கள் முதலிடம் பெற்றிருந்தது பாடலின் சிறப்பை குறிப்பிடுகிறது.

    அந்தப்பாடல் மட்டுமல்ல 'எங்கே அவள்' பாடலும் சூப்பர்ஹிட். அந்தப்பாடலில் தலைவரின் அழகில் மன்மதனே மயங்கி விடுவான் என்று சொல்லும் அளவுக்கு மிகவும் எழிலாக தோன்றுவார். 1971 பொங்கலுக்கு வந்து விடும் என்று நினைத்து ஏமாந்தோம். ஜன 26 அன்று வெளியானது. பொங்கலுக்கு வெளியாகி இருந்தால் வெற்றியின் அளவு கூடியிருக்கும்.

    படம் வெற்றி பெற்று 100 நாட்கள் 4 திரையரங்குகளில் ஓடியது.
    மதுரை சிந்தாமணியில் 100 நாட்கள் ஓடி 2,51,903.08 வசூல் செய்தது. சேலம் பேலஸில் 118 நாட்கள் ஓடி
    2,29,396.96 வசூல் செய்தது. சென்னையில் மொத்தம் 9,01,411.27 ரூ. வசூலாக பெற்றது. "குமரிக்கோட்டம்" வெற்றியை தொடர்ந்து k.c பிலிம்ஸின் அடுத்த படமாக "உழைக்கும் கரங்கள்" தயாரிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •