Page 30 of 210 FirstFirst ... 2028293031324080130 ... LastLast
Results 291 to 300 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #291
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    "உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்" என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் அற்புதமானது. இந்த வரிகளை போல நாம் வாழ வேண்டும் என்றால் உண்மையை தெரிந்து கொண்டு
    பொய்களை சொல்லி பிழைக்க வேண்டும் என்ற பொருள் கொள்ளலாம். மீடியா என்று சொல்லக்கூடிய செய்தி ஸ்தாபனங்கள் அதைதான் செய்து கொண்டிருக்கின்றன. செய்தி ஒன்றுதான். ஆனால் அதை ஆளும் கட்சி செய்தி ஸ்தாபனங்கள் அந்த செய்திக்கு கட்சியின் கலர் அடித்து அவர்கள் மக்களுக்கு விநியோகம் செய்வார்கள்.

    அதே செய்தியை எதிர்க்கட்சி அவர்கள் கட்சியின் வர்ணம் பூசி மக்களுக்கு விநியோகிப்பார்கள். ஆக மக்கள்தான் உண்மை எது? பொய் எது?ன்னு ஒண்ணும் புரியலை நம்ம கண்ணை நம்மாலே நம்ப முடியலை,
    என்ற பாடலுக்கு ஏற்ப குழப்ப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
    காரணம் சுய நலம்.

    ஆளுங்கட்சி
    தங்கள் நாற்காலியை கெட்டியாக பிடித்து கொள்ள அந்த செய்தியை
    அவர்களுக்கேற்ற மாதிரி வாசிப்பார்கள். எதிர்க்கட்சி அதே நாற்காலியை குறி வைத்து அந்த செய்தியை வேற கலரில் வாசிப்பது இப்போதெல்லாம் வாடிக்கையாகி விட்டது. நான்தான் மக்களுக்கு சேவை செய்வேன் என்று அவர்கள் அடம் பிடிப்பது உண்மையான மக்கள் சேவைக்காகவா?
    இல்லை அந்த நாற்காலி தரும் எல்லையில்லா செல்வமும் புகழுமா?
    என்று யோசிப்போமானால் நம் அறிவுக்கு தட்டுப்படுவது என்ன என்று நமக்கே நன்றாகவே தெரிகிறது.

    பலமுறை அனுபவித்த கட்சி அந்த
    பதவியின் ருசி அறிந்தவர்கள். தேனை எடுப்பவன் கைகளை வாயில் வைக்காமல் கழுவி விடுவானா? அதே நேரம் மக்களில் சுமார் 60 சதவீதத்தினர் செய்திகளை உண்மை நிலையில் படிக்க விரும்புகின்றனர். மீதம் உள்ளவர்கள்தான் உண்மை எது பொய்மை எது என்ற தடுமாற்றத்தில் இருப்பவர்கள்.

    ஒரு காலத்தில் மக்களுக்கு உண்மையான செய்திதான் விநியோகிக்கப்பட்டது.
    ஆனால் இப்போது அது சாத்யமில்லை. இந்த ரெண்டும் கெட்டான் நடுநிலை செய்தி நிறுவனங்கள் உண்மையை சொல்ல
    தைரியமின்றி அதே நேரம் மக்களுக்கு எப்படியாவது உண்மை செய்தியை சேர்ப்பதற்காக "கிசுகிசு"வை பயன்படுத்தினார்கள்.

    உதாரணமாக ஒன்றை மட்டும் சொல்கிறேன். ஏனென்றால் நேரடியாக உண்மையை சொல்லி விட்டால் அந்த செய்தி நிறுவனத்துக்கே கலர் பூசி விடுவார்கள். அதுமட்டுமல்ல அடுத்தாற்போல் இவர் உண்மையை
    சொல்லி விடுகிறார், எனவே இவரிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
    எனவே உண்மை அவர்களுக்கு மறைக்கப்படுகிறது.

    "நாம்தான் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க உண்மை தன்மையை கண்டுபிடிக்க வேண்டும்.
    அந்த நேரத்தில் வந்த ஒரு கிசுகிசு.
    புராண பிரமாண்ட படங்களை எடுக்கும் ஒரு தயாரிப்பாளர் பல இடங்களில் கடன்பெற்று கிளைமாக்ஸ் காட்சிக்காக போடப்பட்ட 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள
    செட் அடித்த சமீபத்தில் அடித்த சூறைக்காற்றில் சிதைந்து போனதை கண்டு செய்யவதறியாது திகைத்து கை பிசைந்து நிற்கிறார். குறிப்பிட்ட காலத்தில் படத்தை வெளியிட முடியாமலும்
    வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமலும் தவித்து வருகிறார்.
    சம்பந்த பட்டவர்கள் கை கொடுப்பார்களா?. என்று தெரியவில்லை
    என்று முடித்திருப்பார்கள்.

    என்ன இப்படி எழுதிட்டீங்க! இனிமே உங்களுக்கு செய்தி தரமாட்டோம் என்று சொல்லி விட்டால் அடுத்த வாரம் அதை திரித்து தெலுங்கில் புராணப் படத்தை எடுப்பவர்கள் என்று மாற்றி சொல்லுவார்கள். 70 களில் நிறைய சினிமா பத்திரிக்கைகள் சினிமா வில் எம்ஜிஆர் ஆதரவு சிவாஜி ஆதரவு என்று கணக்கற்ற பத்திரிக்கைகள் வெளிவந்தது. அதில் சிவாஜிக்கு ஆதரவாக முழு பொய்களை மட்டுமே. எழுதிக்கொண்டிருந்த 'திரை மன்னன்" மற்றும் "மதிஒளி" போன்ற பத்திரிகைகள் சிவாஜி ரசிகர்களின் சந்தோஷத்துக்காக அவர்களுக்கு கற்பனையில் உதிக்கின்ற அத்தனையையும் அவரின் ரசிகர்களுக்கு விற்பனை செய்வார்கள்.

    1968 ல் சிவாஜிக்கு மொத்தம் 8 படங்களும் எம்ஜிஆருக்கு 8 படங்களும் வந்தது. எம்ஜிஆரின் 8 படங்களுக்கும் நாயகி ஜெயலலிதா தான். மதிஒளி எழுதுகிறது "ரகசிய போலீஸ் 115." தோல்வி அடைந்து விட்டது. "குடியிருந்த கோயில்" இடி விழுந்த கோயில் ஆனது. "ஒளிவிளக்கு" ப்யூஸ் ஆன பல்பாகி விட்டது என்று கூசாமல் பொய்களை கட்டவிழ்த்து விட்டது. அதனால் எம்ஜிஆர் "அடிமைப்பெண்ணை" மட்டும்தான் நம்பியிருக்கிறார் என்று.

    இது அந்த பத்திரிகையின் தவறாக இருந்தாலும் அப்படி அவர்கள் எழுதாவிட்டால் அதே மாதிரி எழுத. இன்னெரு பத்திரிக்கையை சிவாஜி ரசிகர்கள் உருவாக்கி அதை எழுத வைப்பார்கள் என்பதே உண்மை.ஆனால் எம்ஜிஆர் ஆதரவு பத்திரிக்கைகளுக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
    எம்ஜிஆர் படங்கள் இயல்பாகவே சாதனைகள் செய்வதால் அதை பொய் என்று சொல்லி சிவாஜி ரசிகர்களுக்கு உற்சாகமூட்டுவதுதான் இந்த பத்திரிகைகளின் வேலை. இந்த பத்திரிகை ரிக்ஷாக்காரன் வசூலை ராஜா முறியடித்ததாக போட்டிருக்கிறார்கள்.

    அதற்கு காரணம் "ரிக்ஷாக்காரன்" திரையிட்ட பின் தேவிபாரடைஸில் டிக்கெட் கட்டணங்களை கூட்டினார்கள். 1 ஷோ ஹவுஸ்புல்லுக்கு 2722 ரு இருந்ததை ஏறக்குறைய 3600 ரு ஆக்கி விட்டார்கள்.. அப்படியானால் முதல் 10 நாளும் ஹவுஸ்புல் காட்சிகளாக நடைபெறும் போது கட்டணம் உயரத்தானே செய்யும். அதன்பின் வந்த "ரிக்ஷாக்காரன்" வசூலை முறியடிக்க முடிந்ததா?
    இல்லையே, கிருஷ்ணா வசூலையாவது நெருங்கினார்களா? என்றால் இல்லை.

    அதேபோல் "சொர்க்கம்" படத்தின் இரண்டு வார. திருச்சி ஏரியா வசூலை வெளியிட்டிருக்கிறார்கள். தீபாவளிக்கு வெளியான படங்களல்லவா, ஒரளவு கூட்டம் வந்தவுடன் குதிப்பார்கள்.
    ஆனால் அதற்குமேல் வசூலை வெளியிட மாட்டார்கள். அதற்கு மேல் தியேட்டருக்கு ஆள் வந்தால்தானே வெளியிடுவார்கள். இப்படி முட்டாள்தனமாக ரசிகர்களை ஏமாற்றி குறுகிய காலத்துக்கு மனம்
    குதூகலிக்க வைப்பதில் அவர்களுக்கு ஆத்ம திருப்தி.

    சிவாஜி ரசிகர்கள் எம்ஜிஆரை எதிரியாகத்தான் பார்த்தார்கள். திமுக விரும்பிகள் கூட எம்ஜிஆரின் படத்தை ரசிப்பார்கள். ஆனால் ஐயனின் பிள்ளைகள் சிவாஜியே அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் ஐயனை மதிக்காமல் எதிரியான திமுகவுக்கு வாக்களித்து தங்கள் பழியுணர்ச்சியை தீர்த்து கொள்வதுடன் தங்கள் ஐயனை படுகுழியில் தள்ளி விட்டு இந்த பையன்கள் திமுகவின் வெற்றியில்
    புளகாங்கிதம் அடைவார்கள்... நடிப்பில் நேரடி எதிரியான எம்ஜிஆரை எதிர்ப்பது ஒன்றுதான் தங்களது உறுதியான
    கொள்கையாய் வைத்திருக்கிறார்கள்.

    எம்ஜிஆரை எந்தவிதத்திலும் தோற்கடிக்க முடியாத அவர்களது வெறி ரத்தத்தில் கலந்து விட்டது. ஐயனை நம்பி கூட போகலாம் இந்த பையன்களை நம்பி போக முடியவில்லை, இல்லை, இல்லை.
    இதை முன்கூட்டியே உணர்ந்த "ஞானப்பறவை" சிவாஜி "ஜீலியஸ் சீசர்" வேடத்தில் திரைநாடகத்தில் தோன்றி "you too brutus" என்று யாரை பார்த்து கேட்கிறார் என்று நினைக்கிறீர்கள். ஐயனின் பேச்சை கேட்டு அவர் கட்சி கூட்டணிக்கு வாக்களித்த எங்களையா? ஐயனுக்கு துரோகம் செய்து விட்டு திமுக வுக்கு வாக்களித்த புள்ளைங்களையா?

    இவ்வளவுக்கும் 1968 ல் அந்த ஆண்டின் "பிளாக்பஸ்டர்" படமே
    "குடியிருந்த கோயில்தா"ன். சிவாஜிக்கு. B,C யை தவிர A சென்ட்டரில் ஓரளவு நன்றாக ஓடிய படம்தான் "தில்லானா மோகனாம்பாள்". ஆனால் வசூலில் முதன்மை பெற்றது 'குடியிருந்த கோயில்" 2வது "ஒளிவிளக்கு" 3வது "ரகசிய போலீஸ் 115" அதன்பின் தான் மற்ற படங்கள். இது சிவாஜி ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரியும் அதனால் அவர்கள் வசூலை விட்டு சிவாஜியின் நடிப்பை பிடித்து கொண்டு சிலாகித்து பேசுவார்கள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #292
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் முதன்முதலாக அதிமுக போட்டியிட்டது. கட்சி தோன்றி 7 மாதங்களுக்குள் நடைபெற்ற முதல் தேர்தல். இந்தியா முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிமுகவின் எதிர்காலம் அந்த தேர்தல் முடிவை பொருத்துதான் அமையும் என்பதால் எம்ஜிஆர் ரசிகர்கள் பரபரப்புடனும் பதைபதைப்புடனும் காணப்பட்டார்கள். முதலில் தலைவர் "உலகம் சுற்றும் வாலிபன்" வெளியிடுவதில் பிசியாக இருந்தார் படம் மே 11 ல் வெளியான பின்பு தேர்தல் களத்தில் இறங்கினார்.

    படம் வெளியாகி 10 நாட்களில் இடைத்தேர்தல். கருணாநிதியோ தேர்தலுக்கு பல மாதங்கள் முன்னாடியே தேர்தல் வேலையை தொடங்கி விட்டார். அவரின் மந்திரிகள் அத்தனை பேரும் திண்டுக்கல்லில் டேரா போட்டிருந்தனர். எதற்கு! தர்மதேவனை தோற்கடிப்பதற்கு. பல தேர்தலை கண்டவர் கருணாநிதி. சகல யுக்திகளையும் அறிந்தவர். மாநில ஆட்சி அதிகாரம் அத்தனையும் கையில் வைத்திருக்கிறார்.

    இன்னொரு பக்கம் மத்தியில் ஆட்சி அதிகாரத்துடன் இ.காங்கிரஸ் மூணாவது அணியாக காமராஜ் தலைமையில் இயங்கும் ஸ்தாபன காங்கிரஸ் என்று மூன்று அணியாக
    தேர்தல் களத்தில் மோதியது.அதிமுக வேட்பாளராக மாயத்தேவரை எம்ஜிஆர் அறிமுகப் படுத்தினார் திமுக சார்பில் பொன்முத்துராமலிங்கமும் இ.காங்கிரஸ் சார்பில் n s v சித்தனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்கள்.
    புரட்சி தலைவரின் அதிமுகவுக்கு முதல் தேர்தல். ரசிகர்களுக்கு அரசியல் அனுபவம் எதுவும் கிடையாது. திமுகவின் பொன்முத்துராமலிங்கம் பழுத்த அரசியல்வாதி.

    தேர்தல் பிரசாரத்தின் போதே திண்டுக்கல் அருகே ஒரு பாலத்தை கடக்கும் போது எம்ஜிஆர் பிரசார வாகனத்தை எதிர்பார்த்து குண்டு வைத்து விட்டனர். எம்ஜிஆர் சமயோசிதமாக வேறு வாகனத்தில் வந்ததால் உயிர் தப்பினார். உடனேஅவர் கலந்து கொண்ட தேர்தல் பிரசார மேடையில் மைக்கை கையில் வைத்துக் கொண்டு அங்குமிங்கும் நடந்த படியே சிங்கத்தின் சீற்றத்துடன் இந்த காரியத்தை செய்தவர்கள் தைரியமிருந்தால் மேடைக்கு வாருங்கள் நேருக்கு நேராக மோதலாம், கோழைத்தனமாக மறைந்து கொண்டு தாக்குவதை விட்டு விட்டு நேரடியாக வாருங்கள் இங்கேயே வைத்துக் கொள்ளலாம் நான் தயார் என்று அறைகூவல் விடுத்தார்.

    கூட்டம் ஆவேசத்துடன் கொந்தளித்தது. காமராஜர் ஒரு பக்கம் திமுக,அதிமுக இரண்டுமே
    ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தாக்கி பேசினார்.
    தேர்தலில் திமுக ஜெயிப்பது கடினம்
    என்று தெரிந்தவுடன் பெண்கள் ஓட்டை செல்லாத ஓட்டாக மாற்றும் நோக்கத்தில் இரட்டை இலையில் இரண்டு இலைகளிலும் முத்திரை குத்துங்கள் என்று தவறான பிரசாரம் செய்தார்கள்.

    ஆனால் பெண்களோ மிகத்தெளிவாக ஓட்டு போடும் நாளான 20-5-1973 அன்று காலையிலேயே
    வாசலிலே இரட்டை இலை கோலம் போட்டது மட்டுமின்றி அவர்கள் இரட்டை இலை சின்னத்தையும் தலையிலே சூடி கூட்டம் கூட்டமாக
    வாக்களித்து விட்டு வந்தனர்.மறுநாள் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
    வாக்குகள் எண்ணும் நாளன்று ஆங்காங்கே வதந்திகள் தலைவிரித்தாடின.

    ரேடியோவை சுற்றி கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    முதல் அறிவிப்பில் அதிமுக முன்னணி நிலவரம் வெளியான உடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புரட்சி தலைவர் வாழ்க கோஷம் ஆங்காங்கே காணப்பட்டது. வெடிச்சத்தம் தொடர்ந்து ஒலித்து கொண்டே. இருந்தது. அன்று நாங்கள் கொண்ட மகழ்ச்சி விவரிக்க முடியாதது. வெற்றி வித்தியாசம் கிட்டத்தட்ட 142000 வாக்குகள். தேர்தலில் இரண்டாவதாக வந்தது காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ்.
    அதுவும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.

    கள்ள ஓட்டுகளை மட்டும் கட்டுப்படுத்தியிருந்தால் பிரதான கட்சி தனது டெப்பாசிட்டை இழந்திருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதுவரை திமுக பெற்ற வெற்றிக்கு புரட்சி தலைவர் தான் காரணம் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார்.
    செல்லாத வாக்குகள் அளவுக்கு அதிகமாக சுமார் 8000க்கும் அதிகமாக காணப்பட்டது அவர்கள் முயற்சி ஓரளவு பயனளித்தது என்றே சொல்லலாம்.ராஜதந்திரி என்று அழைத்துக் கொண்டவர்களின் ராஜதந்திரம் தர்மத்தின் முன்னே வெட்கித் தலை குனிந்ததை மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தார்கள்.

    எங்கள் காதுகளில் "நம்நாடு" படப்பாடல் "பொய்யும்,புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவரெல்லாம் போனாங்க மூலைக்கு மூலை தூக்கி எறிந்தோம் தலைகுனிவாக ஆனாங்க" பாடலும் "நீதிக்கு இது ஒரு போராட்டம் நிச்சயம் உலகம் பாராட்டும்" என்ற "உலகம் சுற்றும் வாலிபனி"ன் டைட்டில் பாடலும் ஒலித்து கொண்டிருந்தது.

    "நம்மை ஏய்ப்பவர் கைகளில் இருந்து
    அதிகாரம்" நழுவும் காட்சி நம் மனக்கண்ணுக்குள் தெரிய ஆரம்பித்தது. ஆண்டவன் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கை மென்மேலும் வளர ஆரம்பித்தது. இருண்டிருந்த தமிழகத்தின் வானில் ஒரு விடிவெள்ளி தோன்றி விடியலை நோக்கி சென்று கொண்டிருந்தது.

  4. #293
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி ரசிகர்கள் "சிவந்த மண்" ஒரு லாபகரமான படமாகவும் கூட வந்த சிவாஜி முக்கிய வேடத்தில் நடித்த "தர்த்தி" இந்தி படம் தான் தோல்வி படம் என்று வாதாடுகிறார்கள். அதனால் ஒன்றிரண்டு கேள்விகளை மட்டும் முன் வைக்கிறேன். "சிவந்த மண்ணி"ன் பட்ஜெட் அத்தனையும் இந்தி படத்தின் மீது போட்டு விட்டு எங்கள் படம் லாபம் வந்தது என்று
    கூறுகிறார்கள்.

    படத்தின் பட்ஜெட் சுமார் 85 லட்சம் என்பது பத்திரிகையில் வந்த செய்தி. அந்த படத்திக்கு செய்த அதீதமான செலவை பட்டியல் போட்டு அவர்களே பதிவிட்டிருக்கிறார்கள். அதையே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
    ஆனால் நடிகர் நடிகைகள், டெக்னீசியன்ஸ் சம்பளம் இதில் சேர்க்கப்படவில்லை. ஸ்ரீதர் உற்ற நண்பராக இருந்தும் என்னுடைய வியாபார விஸ்தீரணம்
    இவ்வளவுதான். இதற்கு மேல் நீ செலவு செய்தால் உன் முதலுக்கு மோசமாகி விடும் என்று எச்சரிக்கை செய்ய வேண்டாமா?

    ஸ்ரீதர் வட்டிக்கு வாங்கிய பணத்தில் நன்றாக பிரமாண்ட படம் எடுத்து அனுபவித்தார்கள். படம் மொத்தம் 38 தியேட்டரில் 50 நாட்கள்
    ஓடியதாக விளம்பரத்தை சாட்சியாக காட்டுகிறார்கள். ஒரு படம் 50 நாட்கள் ஓடினாலே லாபம் வந்து விடுமா? அதுவும் மிகுந்த செலவு செய்து வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படம். சரி அதை விடுவோம்.

    100 நாட்கள் எத்தனை தியேட்டர்களில் ஓடியது. விளம்பரத்தில் 9 தியேட்டர் என்று போட்டிருந்தார்கள். அப்படியானால் படம் 50 நாளிலே" பணால்" ஆகிவிட்டதென்ற அர்த்தமா?
    அதுவும் தூத்துக்குடியை கழித்து விட்டு பார்த்தால் 8 தியேட்டர் தான் வருகிறது. தூத்துக்குடியில் சிவாஜி படங்கள் 3 வாரமே ஓடாது. அதை 100
    நாட்கள் ஓட்டிய திறமை ஹாலிவுட் நடிகர் ரசிகர்களுக்கு கூட கிடையாது.

    சிவாஜி ரசிகர்கள் பிரமாண்ட வெற்றி எனக்கூறும் "தங்கப்பதக்கம்" தங்களுடைய 51 வது நாள் விளம்பரத்தில் 35 தியேட்டர்களை கொடுத்திருக்கிறார்கள். அதில் ரிலீஸ் தேதிக்கு பின்னாடி ஒரு தியேட்டரிலிருந்து எடுத்து அடுத்த தியேட்டரில் 3 வாரம், 4 வாரம் ஓடிக்கொண்டிருந்த படங்களையும் இணைத்து விளம்பரத்தில் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.

    தூத்துக்குடியில் "தங்கப்பதக்கம்" 50 நாள் கூட ஓட முடியாமல் 41 நாள்தான் ஓடியது. அப்படிப்பட்ட ஊரில் "சிவந்த மண்ணை" 100 நாள் ஓட்டியது உலக அதிசயங்களில் ஒன்றாக பேசப்படுகிறது.
    இது போல சிவந்த மண் 50 நாள் விளம்பரத்திலும் நிறைய செகண்ட் ரிலீஸ் தியேட்டரும் கேரளாவில் சொல்லியிருக்கும் தியேட்டர் 50 நாட்கள் ஓடாத தியேட்டரையும் இணைத்து விளம்பரம் தரப்பட்டிருக்கிறது.

    பொதுவாக எம்ஜிஆர் படங்களுக்கு 50 நாள் விளம்பரம் சென்னை தியேட்டரும் மற்றும் தென்னகமெங்கும் என்ற விளம்பரம் தான் வரும். எம்ஜிஆர் படங்கள் பொதுவாக திரையிட்ட அத்தனையிலும் 50 நாட்கள் ஓடுவதால் இது போன்ற சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவது கிடையாது. மதுரை வீரன் 100 நாட்களே 33 திரையரங்குகளிலும், உலகம் சுற்றும் வாலிபன் 100 நாட்கள் 20 தியேட்டர்களிலும், எங்க வீட்டு பிள்ளை 18 தியேட்டர்களிலும் ஓடியதால் நாங்கள் 50 நாட்களை பற்றி கவலை கொள்வது கிடையாது.

    இது ஒரு படு தோல்வி படம்தான். வெற்றி படம் என்றாலே போட்ட முதல் கைக்கு வந்து அதற்கு மேலும் வசூல் வந்தால்தான் வெற்றிப்
    படம். எம்ஜிஆருக்கு "தாய் சொல்லை தட்டாதே" "தாயை காத்த தனயன்" "பணக்கார குடும்பம்" "திருடாதே" போன்ற படங்களின் அளவே ஓடியிருக்கிறது.ஆனால் எம்ஜிஆர் படங்கள் எல்லாம் வெற்றிப் படங்கள்.
    குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நிறைவான வசூலை பெற்ற படம்.

    1972 ல் வெளி வந்து வசூல் சாதனை என்று பேப்பரில் விளம்பரம் வந்த
    "பட்டிக்காடா பட்டணமா" 6 வாரத்தில் பெற்ற மொத்த வசூல் 30 லட்சம்தான். மீதமுள்ள காலங்களையும் சேர்த்தால் மொத்தம் 40 லட்சம் தான் வருகிறது. வரி நீக்கி பார்த்தால் நெட் கலெக்ஷன் அதிக பட்சம் 23 லட்சம் வரலாம். இதில் தியேட்டர்காரங்க பங்கு சுமார் 8 லட்சத்தை கழித்து பார்த்தால் மிஞ்சுவது 15 லட்சம் மட்டும்தான்.

    "பட்டிக்காடா பட்டணமா" தயாரிப்பு செலவு 7 லட்சம் என்று வைத்துக் கொண்டால் லாபம் சுமார் 8 லட்சம் இருக்கலாம். "சிவந்த மண்ணை" விட அதிகம் வசூல் செய்த "பட்டிக்காடா பட்டணமா" படத்துக்கே மொத்த வரவு இவ்வளவுதான். அப்படியானால் "சிவந்த மண்ணை" தயாரித்த ஸ்ரீதருக்கு 15 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும் மீதம் உள்ள 70 லட்சத்தை யார் தருவார்கள்.

    பாதிதான் எங்களுடைய செலவு என்றாலும் 42 லட்சத்தில் 15 லட்சத்தை கழித்து பார்த்தால் நிகர நஷ்டம் 27 லட்சம் தமிழில் மட்டும்.
    "சிவந்த மண்" தயாரிப்பு செலவு 42 லட்சம் என்று வைத்துக் கொண்டால்
    ₹ 1 கோடி வசூல் ஆனால்தான் போட்ட காசு கைக்கு வரும். எம்ஜிஆருக்கு இந்த விவரங்கள் நல்ல அத்துபடி. அதனால் படத்தின் பட்ஜெட்டுக்கு தகுந்த படிதான் செலவு பண்ண வைப்பார். அதனால்தான் எம்ஜிஆரின் எந்த
    ஒரு படமும் தோல்வியை தழுவிபது கிடையாது. "நவரத்தினத்தை" தோல்வி படம் என்பவர்கள் வாயை அடைக்க திருa p நாகராஜன் அவர்கள் அவர் வாயாலே சொன்னதை இதில் பதிவு செய்திருக்கிறேன். பார்த்து புரிந்து கொள்ளவும்.

    அப்பாவி தயாரிப்பாளர்கள் தலையில் கல்லை தூக்கி போடமாட்டார். ஒரு பொருளை₹10 க்கு வாங்கினால் குறைந்த பட்சம்₹11க்காவது விற்றால்தான் லாபம் ₹1 கிடைக்கும். ₹ 42 க்கு வாங்கிய பொருளை₹15 க்கு விற்று விட்டு, போன பொருளை விட அதிகம் விற்று விட்டோம் என்று வாதிடும் அறிவுக் கொழுந்துகளை நாம் எப்படி பார்ப்பது.

    அதைத் தெரிந்து கொண்ட சிவாஜி தன்னுடைய ரசிகர்களை பிள்ளைகள் (ஒன்றும் தெரியாததால்)
    என்று அழைத்திருக்கலாம். அதனால் தான் அப்பாவி கணேசனின் பிள்ளைகள் சிவாஜியை ஐயன் என்று அழைக்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிகிறது.



    நன்றி* திரு.சங்கர்*

  5. #294
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் வார இதழ் -15/07/20
    ------------------------------------------------
    செருப்பும் பொறுப்பும்*
    ------------------------------------

    தட்சயக்ஞம் ,மாயா மசீந்திரா* படங்களின் தயாரிப்பு பணிகள் கல்கத்தாவில் நடந்தன .**

    ஒருநாள் வெளிப்புற படப்பிடிப்பு நடிகர்களும் ,தொழில்நுட்ப கலைஞர்களும் ,*சென்றனர் .* வழியில் தண்ணீரில் இறங்கி செல்ல வேண்டிய இடத்தில , ஆறு அடி அகலமுள்ள வாய்க்காலை எம்.ஜி.ஆர். ஒரே தாண்டாக தாண்டிக் குதித்தார் .தாண்டிய வேகத்தில் அவரது செருப்பு ஒன்றின் வார் அறுந்துவிட்டது . குனிந்து பார்த்து, காலைத் தூக்கி வேகமாக உதறி , அந்த செருப்பை தூர* விழ**செய்தார் .இன்னொரு செருப்பையும் உதறி எறிந்தார் .* செருப்பில்லாமலேயே நடந்து சென்றார் ,

    பிற்பகலில் தங்கியிருந்த வீட்டிற்கு எல்லோரும் திரும்பி வந்தனர் .* புதிதாக செருப்பு வாங்க வேண்டும் . கடைக்குப் போகலாம் வாங்க என்று கலைவாணரை* அழைத்தார் .எம்.ஜி.ஆர்.* அதற்கு கலைவாணர் , நாளைக்கு ஷூட்டிங் இருக்காது . அதனால் நாளைக்கு போகலாம் என்றார் .

    மறுநாள் காலை 10 மணிக்கு எம்.ஜி.ஆர். வந்தார் .கலைவாணரிடம் வாங்க கடைக்கு போகலாம் என்றார் . போகலாமா, பணம் எடுத்துகிட்டியா , இரு,சட்டையை மாட்டிகிட்டு வருகிறேன் என்று கூறிய கலைவாணர் உள்ளே போய் ராமச்சந்திரா என்று குரல் கொடுத்தார் .* எம்.ஜி.ஆர். உள்ளே போனார் .அந்த நாற்காலியில் உட்கார் என்று சொல்லிய கலைவாணர் , கீழே கிடந்த ஒரு பொட்டலத்தை காட்டி,இந்த செருப்பு உன் காலுக்கு சரியா இருக்கா பாரு என்றார் .பொட்டலத்தை பிரிந்ததும் எம்.ஜி.ஆர். திகைத்தார் .

    உன்னுடைய பழைய செருப்புதான், நீ வீசி எறிந்து விட்டு போனதை , பின்னால் வந்து கொண்டிருந்த நான் பார்த்தேன் . அப்பொழுதே பத்திரமாக எடுத்து வந்துவிட்டேன் .* ஆணி அடித்து, தைத்து சரி பண்ணிவிட்டேன் .இப்போது இதற்கு என்ன குறை . இன்னும் ஆறுமாத காலம் பயன்படுத்தலாம் .முடிஞ்ச வரை எதையும் முழுசா பயன்படுத்தி பழகணும் என்று அறிவுரை சொன்னார் கலைவாணர் .

    தமிழ் சினிமாவின் கதை,அறந்தை நாராயணன் .

  6. #295
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே* புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம் நிகழ்ச்சியில் வின் டிவியில்*21/06/20 அன்று திரு.துரை பாரதி அளித்த தகவல்கள்*
    ------------------------------------------------------------------------------------------------------------------------------

    பல்வேறு துறையில் உள்ள அறிஞர் பெருமக்கள், அரசு அதிகாரிகள், கல்வி வள்ளல்கள், கல்வி தந்தைகள் ஆகியோரை வரலாறு குறித்து வைத்திருக்கிறது .இவர்களெல்லாம், எம்.ஜி.ஆர். என்கிற பெருமழை, மாமழையின் ஈகை தன்மையால் விளைந்த பயிர்கள் என்பதை இன்றைக்கும் தமிழகம் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது .அந்த மாமழையின் துளிகள் பற்றி சிலவற்றை இந்த நாளில்*அறிந்து கொள்வோமாக .


    மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் பத்திரிகையாளருக்கும் உள்ள நட்பு உள்ளதே*அது மிகவும் சுவாரசியமானது . நான் சுதேசமித்திரன் பத்திரிகையில்* நிருபராக*பணியில்*சேர்ந்தேன் . முதல் நாளே, முதல் பணியாக**அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்* அவர்களை சந்தித்து*பேட்டி* காண சென்றேன் .அன்று பிரபல*பேச்சாளர், முன்னாள் அமைச்சர் பி.டி.சரஸ்வதி மற்றும் சிலர்* அ.தி.மு.க.வில் சேர்ந்திருந்தனர் .தலைமை அலுவலகமே விழா கோலம்*பூண்டிருந்தது*. கட்சி*பிரமுகர்கள்*கூட்டம்*அதிக அளவில் இருந்தது .அலுவலக*நுழைவு வாயிலில்*ஒரு வரவேற்பு அறை இருந்தது*.எம்.ஜி.ஆரின் இருக்கை*யை* சுற்றி சில*நாற்காலிகள் போடப்பட்டன . அதில்*சுமார்* நிருபர்கள் 10 பேர் மட்டும் அமர்ந்திருந்தனர் . நான் தாமதமாக வந்திருந்ததால் உட்கார இடமில்லாமல் எம்.ஜி.ஆருக்கு*மிக அருகில் நின்று கொண்டிருந்தேன் .உடனே எம்.ஜி.ஆர். அருகில் உள்ள ஸ்டூலின் மீது இருந்த*பொருட்களை*தன் மேஜை மீது வைத்துவிட்டு*அந்த ஸ்டூலில் என்னை அமர்த்தினார் . கிட்டத்தட்ட எம்.ஜி.ஆரின் தோளை* உரசியபடி அமர்ந்து இருந்தேன் . மேஜையின்*மீது இருந்த* பிஸ்கட்டுகளை* அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார் .சிறிது*நேர மௌனத்திற்கு பிறகு* மேஜையின் மீது உள்ள சில*பத்திரிகைகளை புரட்டி பார்த்த பின்பு நிருபர்கள் கேட்ட*கேள்விகளுக்கு மிக சாதுர்யமாக*பதிலளித்தார் .**


    எம்.ஜி.ஆருக்கும், பட தயாரிப்பாளர் மணியன்*அவர்களுக்கும் இருந்த*நட்பு*மிகவும் நெருக்கமானது .எம்.ஜி.ஆர். எழுதிய*நான் ஏன் பிறந்தேன்*என்கிற*தொடர் உருவான*சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக மணியன்* இருந்து , ஆனந்த*விகடன்*வார இதழில்*வெளிவர செய்தார் . தி.நகரில்*ஒரு வாடகை வீட்டில்* *மணியன்* குடியிருந்தார் .*. அதை பார்வையிட*எம்.ஜி.ஆர். ஒருமுறை விஜயம் செய்தார்*ஒருநாள்*மாலையில்*சூரியனை*போல*எம்.ஜி. ஆர். காட்சியளித்து வருகிறார் . அவரின் தோற்றத்தை*,மணியனும், அந்த வீட்டில்*உள்ளவர்களும் பார்த்து, பரவசமும், அதிர்ச்சியும், பதற்றமும்*அடைகின்றனர் .வீட்டில்*நுழைந்த*எம்.ஜி.ஆர். உட்காரும்*முன்பு*இந்த வீட்டில் எந்த பக்கம் கிழக்கு*என*கேட்டு அந்த பக்கம் நாற்காலியை போட்டு உட்காருகிறார் .* மணியனிடம் நீங்கள் ஒரு படம்* எடுங்கள் .குறுகிய காலத்தில் நான் நடித்து தருகிறேன் என்கிறார் எம்.ஜி.ஆர். நீங்கள் வித்வான் லட்சுமணனுடன் இணைந்து*செயல்படுங்கள்* என்றவுடன், மணியனுக்கு ஆச்சர்யம்*. தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர். முடிசூடா மன்னன் எம்.ஜி.ஆர்.*அவரது*கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் தவம் கிடக்கும்*காலமாயிற்றே . நம்மிடம்*வலிய வந்து படம் தயாரிக்க சொல்லி கேட்டுக் கொள்கிறாரே* என்று*விந்தையுடன்*யோசிக்கும்போது , என்ன சிந்தனை,என்று சொல்லியவாறு, அருகில் உள்ள லெட்டர்*பேடை*எடுத்து, தாயே துணை என்று பிள்ளையார் சுழி போட்டு ,தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் உதயம் புரொடக்ஷன்ஸ் ,படத்தின் பெயர் இதய வீணை என்று எழுதி தருகிறார் . மணியன் சில வினாடிகள்* இன்ப**அதிர்ச்சியில் உறைந்து*போகிறார் .மணியனை*மிக பெரிய இடத்திற்கு உயர்த்தியது எம்.ஜி.ஆருக்கு இருந்த*பண்பு . மணியன்*எம்.ஜி.ஆருக்கு*சிறு உதவிகள்*செய்து வந்தார் . ஒருமுறை பாரத பிரதமர் இந்திரா*காந்திக்கு*ஒரு காரியத்திற்காக எம்.ஜி.ஆர். நன்றி தெரிவிக்க இருந்தார் . எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக*மணியன்*எம்.ஜி.ஆர். அளித்த*பூங்கொத்து*, நன்றி கடிதம் இரண்டையும்*இந்திரா காந்திக்கு*அளித்துவிட்டு வந்தார்*. அந்தநன்றி*விசுவாசத்தின் அடிப்படையில் எம்.ஜி.ஆர். மணியனுக்கும், வித்வான் லட்சுமணனுக்கும்* உதயம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் இதய வீணை படத்தை*எடுக்கும்படி வலிய சென்று*யோசனை தெரிவித்து குறுகிய காலத்தில் நடித்து , வெளியிட்டு ,வெற்றி படமாக்கினார்*


    எம்.ஜி.ஆர். பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தபின், அவர்கள் கேட்ட கேள்விகள் ,அதற்கு*இவர் அளித்த பதில்கள்*எல்லாம் பத்திரிகையில் பிரசுரம்* ஆகுவதற்கு முன்பு ஒரு பிரதியை* எம்.ஜி.ஆரிடம்*காட்டிய*பின்புதான்*பிரசுரம் ஆகவேண்டும் என்பதில்*எம்.ஜி.ஆர். மிகவும் உறுதியாக இருந்தார் .காரணம் அவர் சார்ந்திருந்த கட்சிக்கோ, தனக்கோ* இந்த பேட்டிகளினால் எந்த கருத்து மாறுபாடுகளும், இடையூறும்* வந்துவிடக் கூடாது* என்பதில் கவனமாக இருப்பார் . அப்படிதான்* யார் பேட்டி எடுத்திருந்தாலும் , விமர்சனங்கள் எழுதி இருந்தாலும் ,அவற்றை படித்துப்பார்த்துதான்* பிரசுரம் ஆக அனுமதிப்பார் .எம்.ஜி.ஆர்* சமநீதி*என்ற* பத்திரிகையில் பொறுப்பு ஆசிரியராகவும், அண்ணா*பத்திரிகையின் நிறுவனராகவும், நடிகன் குரல் என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர் . தலை சிறந்த பத்திரிகையாளராக தானே*விளங்கியதோடு , சந்திரோதயம் திரைப்படத்தில்*தேர்ந்த பத்திரிகையாளராக திறம்பட நடித்து* மிளிர்ந்தவர் .*.*


    பொதுவாக எம்.ஜி.ஆர். நிகழ்ச்சிகளில், விழாக்களில்*கலந்து கொள்ளும்போது, தனக்கு*மாலையிட வருபவர்களின் இரு கைகளை*இறுக பற்றிக்*கொள்வார்*. காரணம்* புகைப்படம் எடுக்கும்போது, மாலையிடுபவர் முகமும், மாலையை*பெறும்* தனது முகமும் தெளிவாக புகைப்படத்தில் தெரிய வேண்டும் என்பது* எம்.ஜி.ஆரின் கணக்கு* . அந்த புகைப்படத்தை*, மாலையிடுபவர் வாங்கி பார்க்கும்போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைவார்*என்பது எம்.ஜி.ஆருக்கும்*தெரியும். அதுவும் ஒரு காரணம் . மேலும் தனக்கு*எத்தனை பேர் மாலை அணிவித்தாலும், ஆளுயர*மாலை அணிவித்தாலும் , அவர்கள் முகமெல்லாம் புகைப்படத்தில் தெள்ள தெளிவாக தெரியும்படியும்,அவர்கள் தன்னுடன் இருக்கிறார்கள்* என்ற வகையில்*அனைவரையும் அரவணைத்தபடி*போஸ் கொடுப்பது எம்.ஜி.ஆரின்*வழக்கம் .*


    எம்.ஜி.ஆர். ,சினிமா, அரசியல், மனிதநேயம் ,பொது தொண்டு, கொடை*உள்ளம் ஆகிய* துறைகளில்* அனுபவம் வாய்ந்த ஒரு பல்கலை கழகம் .அவரை பற்றிய வியப்புக்குரிய சம்பவங்கள், வியப்புரிய செய்திகள் ,தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது . அவற்றை*இந்த நிகழ்ச்சியின் மூலம் அள்ளி* *அள்ளி வழங்கி கொண்டே இருக்கிறோம் . அதில்*எம்.ஜி.ஆர். என்கிற*மகோன்னதமான ஒளிவிளக்கு சுடர்விட்டு பிரகாசித்து கொண்டே இருக்கும்*.நன்றி ,வணக்கம்*


    தொடர்ந்து அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
    --------------------------------------------------------------------------------
    1.பாடும்போது*நான் தென்றல் காற்று*- நேற்று இன்று நாளை*

    2.எம்.ஜி.ஆர். - எம்.ஆர். ராதா*உரையாடல் - சந்திரோதயம்*

    3.நீதிமன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். -சங்கே முழங்கு*

    4.ஒரே முறைதான்*உன்னோடு*பேசி பார்ப்பேன்*- தனிப்பிறவி*

    5.ஆனந்தம் இன்று ஆரம்பம் - இதய வீணை*

    6. நான் ஏன் பிறந்தேன்*- நான் ஏன் பிறந்தேன்*

    7. ஒரு வாலுமில்லே* நாலு காலுமில்லே - இதய வீணை*

    8.வாங்கய்யா*, வாத்தியாரய்யா* - நம் நாடு*

  7. #296
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- சகாப்தம் நிகழ்ச்சியில்*வின்*டிவியில்*திரு.துரை பாரதி*22/06/20 அன்று அளித்த*தகவல்கள்*
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சொந்தமாக தயாரித்து, நடித்து, இயக்கிய அடிமைப்பெண்* திரைப்படம்* 1966ல் ஆரம்பிக்கப்பட்டது . அப்போது இரண்டு கதாநாயாகிகளாக சரோஜாதேவியும், கே.ஆர். விஜயாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர் . 1967ல் எம்.ஜி.ஆர். எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டு , குணமாகி வந்த பிறகு ,கதாநாயகிகள் மாற்றப்பட்டு, ஜெயலலிதாவுக்கு இரட்டை வேடம் தரப்பட்டது .ஒன்று ஜீவா, இன்னொன்று பவளவல்லி ராணி . இந்த படத்தில் ஜெயலலிதாவுக்கு பிரத்யேக உடைகள், அணிகலன்கள் அளிக்கப்பட்டன .பவளவல்லி வேடத்தில் அறிமுகம் ஆகும் காட்சியில் எம்.ஜி.ஆர். அவருக்கு*எதிராக* கைதியை போல் இரு கைகளை கட்டி, இரு பக்கமும் இரண்டு வீரர்கள் அவரை சித்திரவதை செய்யும் காட்சி .அந்த காட்சியில் எம்.ஜி.ஆர். கட்டு குலையாத தன் உடல் தோற்றத்தை , வலிமையை , காட்டும் விதத்தில் ,தன் இரு பக்கமும் உள்ள வீரர்களை நிலை குலைய* செய்து , ராணியே* அவரது உடல் வலிமையை கண்டு வியந்து, தனது மெய்காப்பாளராக அறிவிக்கும் அளவிற்கு*அற்புதமாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார் .* அந்த காட்சியில் அரங்கமே அதிரும் வகையில் கைதட்டல்களும், விசில் சத்தமும் இருந்தது .தமிழ் திரையுலகில் , எந்த நடிகரும் தன் உடல் வலிமையை, தோற்றத்தை இப்படி வெளிப்படுத்தி நடித்தது இல்லை .படத்தின் விமர்சனம் விவரிக்கும்போது பத்திரிகைகள் இந்த காட்சியை வெகுவாக பாராட்டின .* அடிமைப்பெண் படம் சிறந்த படத்திற்கான*பிலிம்பேர்* விருது பெறும்போது , மும்பையில் உள்ள ஒரு பத்திரிகை எம்.ஜி.ஆரின் உடல் வலிமை, தோற்றம் பொருந்திய இந்த காட்சியை பிரசுரம் செய்து* பிரமாதப்படுத்தியது .* எம்.ஜி.ஆர். வெகு சுலபமாக இந்த உடல் வலிமையை, தோற்றத்தை பெறவில்லை .நாள்தோறும்** அதிகாலை 4 மணியளவில் எழுந்து சுமார் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்து இந்த உடல் பொலிவை, தோற்றத்தை, வலிமையை பெற்றார் . இந்த உடல் வலிமை, தோற்றம் ஆகியதுதான் அவர் தொடர்ந்து படங்களில் சண்டைக்காட்சிகளில் மிடுக்காகவும், சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் , நடித்து, பேரும் , புகழும் பெற காரணமாக இருந்தது .


    உடற்பயிற்சி செய்வது என்பது எம்.ஜி.ஆருக்கு சினிமாவில் ஆரம்ப காலத்தில்*இருந்தே தொன்று தொட்டு வந்த பழக்கம் . இதற்கு பக்க பலமாக தயாரிப்பாளர் சின்னப்பா தேவரும் உறுதுணையாக இருந்தார் .* திரையுலகில் எம்.ஜி.ஆர்.*நுழைந்த காலத்தில் பட வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்காத நேரம் . ஆகவே, ஒருவேளை சினிமாவில் போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் போனால் , ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது .ராணுவத்தில் சேருவதற்கும் , உடல் வலிமை, பொலிவான தோற்றம், ஆகியவை அவசியம் என்பதால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து ,தன் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொண்டார் . அத்துடன், குதிரை ஏற்றம், சவாரி, சிலம்பம், கம்பு சண்டை, வாள், சண்டை ஆகியற்றிலும் போதிய பயிற்சி எடுத்துக் கொண்டு வந்தார் .


    சினிமா வாய்ப்புகள் தேடி வந்த நிலையில், ராணுவத்தில் இணைந்து , நாட்டிற்கும், தேசத்திற்கும் சேவை செய்ய வேண்டும்* என்ற எண்ணமும்*அவர் மனதில் உதித்தது .அந்த வேளையில் தான் சாயா என்ற படத்தில் கதாநாயகன் வாய்ப்பு கிட்டியது .


    மேஜர் சுந்தரராஜன் ஒருமுறை எம்.ஜி.ஆரை சந்திக்க வீட்டுக்கு செல்கிறார் .அப்போது காலையில் உடற்பயிற்சி முடித்துவிட்டு,எம்.ஜி.ஆர். சிற்றுண்டி சாப்பிடும் நேரம் . மேஜரையும் அழைத்து சாப்பிட சொல்கிறார் . அப்போது எம்.ஜி.ஆர். மிளகாய் பொடியில் ,நிறைய நெய் ஊற்றி, இட்லீ , தோசை போன்றவற்றை உண்கிறார் .மேஜர் சுந்தரராஜன் இவ்வளவு நெய் ஊற்றி சாப்பிட்டால்* உடம்புக்கு கெடுதல் வராதா என்று கேட்க , எம்.ஜி.ஆர்.*உடல் களைப்படையும் வரையில்,, நல்ல பலத்தை பெறும் வகையில்**கடின உடற்பயிற்சி* செய்தால், எவ்வளவு நெய் வேண்டுமானாலும் ஊற்றிக் கொள்ளலாம் ,சில சமயம் அளவுக்கு அதிகமாக எந்த உணவையும் சாப்பிடலாம்*அந்த அளவிற்கு உடல் பக்குவம் அடைந்துவிடும் .நீங்கள் உங்கள் இஷ்டம் போல சாப்பிடுவதற்கு* கொஞ்சம்**கஷ்டப்பட்டு* உடற்பயிற்சி செய்து , உடலை வருத்திக் கொண்டால்தான் இவையெல்லாம் சாத்தியம் என்று எம்.ஜி.ஆர்.*கூறியதாக மேஜர் சுந்தரராஜன் பேட்டி அளித்திருக்கிறார் .



    சத்யா மூவிஸ் தயாரிப்பான ரிக்ஷாக்காரன் படத்தில் நடிப்பதற்காக, சத்யா ஸ்டுடியோவில் சைக்கிள் ரிக்ஷா ஒன்றில் ஓட்டி பயிற்சி மேற்கொண்டார் .*சில நாட்கள், தினமும் சில மணி நேரம் ஒட்டி வந்தார் .அப்போது ஒருநாள்,படத்தின் இயக்குனர் . எம்.கிருஷ்ணனையும், ஒப்பனையாளர் பீதாம்பரத்தையும்*ரிக்ஷாவில்* அமர்த்தி* வலம் வந்தார் . இப்போது படப்பிடிப்பு நடக்கவில்லை*ஆனாலும் உங்களை வைத்து ஓட்ட முடியுமா என்று பார்க்கிறேன் . ஒரு ரவுண்டு வந்த பிறகு , நான் ரிக்ஷா ஒட்டியதற்கு நீங்கள் பணம் தர வேண்டும் என்று கூறி*இருவரிடமும் தலா ரூ.1/- பெற்றுக் கொண்டார் . பிறகு சிரித்துக் கொண்டே திருப்பி தந்து விடுகிறார் . நான் ஆட்டோகிராஃபில் உழைப்பவரே உயர்ந்தவர் என்று எழுதுவது வெறும் வார்த்தையல்ல .நீங்கள் கொடுத்தது ரூ.1/-தான் என்றாலும்* அந்த உழைப்பை மதித்துக் கொடுத்தது .*ஆகவே அனைவரும்*உழைப்பின் உயர்வை மதித்து நடத்தல் நல்லது .என்று கூறினார் எம்.ஜி.ஆர்.*உழைப்பை மதிக்க தெரிந்தவர் எம்.ஜி.ஆர். அதனால்தான் ,நாடோடி மன்னன் படத்தில் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா என்ற பாடலை பாடினார் .



    அடிமைப்பெண் படத்திற்காக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதியில் படப்பிடிப்பு நடந்த சமயம் எம்.ஜி.ஆருக்கு, சண்டை காட்சிகள், நீச்சல் காட்சிகள் , டைவ் அடிக்கும் காட்சிகள் போன்றவற்றில் எம்.ஜி.ஆருக்கு உதவியாகவும், உறுதுணையாகவும்*ஒருவர் இருந்தார் . எம்.ஜி.ஆர். முதல்வரானதும், அவரை தேடி கண்டுபிடித்து ,ஒகேனக்கல் பகுதியில், சுற்றுலா துறை வளர்ச்சி அடைய ,அவரை முக்கிய பதவியில் அமர்த்தினார் .*



    ஒருநாள் ராமாவரம் தோட்டத்தில் இருந்து எம்.ஜி.ஆர். தன் காரில் புறப்படும்போது ,உதவியாளர் ரவீந்திரனிடம் ,நமது வீட்டை ஒருமுறை நன்றாக பார்த்து கொள். நாம் மாலையில் திரும்பி வரும்போது, நம் கையில் வீடு இருக்காது .ஏனென்றால் ஜப்தி யாளர்கள் கையில் இருக்கும் என்று சொல்கிறார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த* ரவீந்திரன் ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் வீடு வாங்கி தருகிறீர்கள், வீடு வாங்க பணம் உதவி செய்கிறீர்கள்**, உங்கள் வீடு ஜப்தி ஆகிவிடுமா,எனக்கு ஒன்றும் புரியவில்லை என்கிறார் . அப்போது எம்.ஜி.ஆர்.*நமது வீட்டின் பெயரில் ஜப்தி நோட்டிஸ் வந்துள்ளது . ஒருவேளை மாலை ஜப்தி ஆகிவிட்டால் நாம் சத்யா ஸ்டுடியோவில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் .நான் வாடகை வீட்டில் இருந்துள்ளேன் . இரண்டு அணாவில் வாழ்ந்துள்ளேன் .இப்போதைக்கு இரண்டு ருபாய் இருந்தால் கூட போதும், என்னால் சமாளிக்க முடியும் என்று கூறினாராம் . ஆனால் நல்ல வேளையாக , மாலையில்* நீதிமன்ற தீர்ப்பு எம்.ஜி.ஆருக்கு சாதகமாக வந்ததால் வீடு தப்பித்தது .



    எம்.ஜி.ஆர். வீடு ஜப்தி ஆகும் என்ற செய்தியை பத்திரிகையில் படித்த, திண்டிவனம் பகுதியை சார்ந்த ஒரு இஸ்லாமிய தாய், தன் மகனிடம் தன்*வீட்டு பத்திரத்தை கொடுத்து, உடனடியாக எம்.ஜி.ஆரை சந்தித்து , எங்களுக்கு வேறு சொத்து, நிலம் உள்ளது, எனக்கு ஒரே மகன்தான்*. இப்போதைக்கு இந்த பத்திரத்தின் மூலம் உங்கள் வீட்டை மீட்டெடுத்து, கொள்ளுங்கள் என்று சொல்ல வைத்தார் . அந்த நபர் விரைந்து வந்து* எம்.ஜி.ஆரை சந்தித்து* தன் தாயின் விருப்பத்தை சொன்னார் . உடனே எம்.ஜி.ஆர். வீடு ஜப்தி ஆகவில்லை . நல்லவேளையாக தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்துவிட்டது . உங்கள் உதவும் மனப்பான்மைக்கு என் கனிவான நன்றி என்று சொல்லி அனுப்பி வைத்தார் .பின்னர் ஒருநாள் திண்டிவனம்* வழியே செல்லும்போது, அந்த தாயாரை எம்.ஜி.ஆர்.சந்தித்து, உங்களுக்கு ஏன் இந்த வீண் சிரமம் என்றார் .அந்த தாயார், நீ எனக்கு ஒரு பிள்ளை மாதிரி .என் பிள்ளைக்கு நான் செய்யும் கடமைதான்* இது .என்றாராம் .உடனே எம்.ஜி.ஆர். அந்த தாயின் இரு கரங்களை பற்றி ,என்மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்களே , நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய போகிறேன் என்று கண்களில் கண்ணீருடன்* ஒற்றிக் கொண்டாராம் . பின்பு* எம்.ஜி.ஆர்.*அந்த தாய்க்கு சிறிது பணம் செலவிற்காக தந்தபோது ,வாங்க மறுத்துவிட்டார் .அந்த தாய் அளித்த பாலை பருகிவிட்டு எம்.ஜி.ஆர். விடை பெற்றார் .சென்னை திரும்பிய பிறகு சில மாதங்கள் கழித்து, அந்த தாய் இறந்து போன செய்தி எம்.ஜி.ஆருக்கு கிடைத்ததும், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, அந்த தாயின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு நடந்தே சென்றாராம் ,


    மேலும் செய்திகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
    ------------------------------------------------------------------------------
    1.எம்.ஜி.ஆர். உடல் வலிமையை காட்டும் காட்சி -அடிமைப்பெண்*

    2.எம்.ஜி.ஆர்.-மஞ்சுளா- மேஜர் சுந்தரராஜன் உரையாடல் -ரிக்ஷாக்காரன்*

    3பெண் வேடத்தில் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். -காதல் வாகனம்*

    4.எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா உரையாடல் -ஆயிரத்தில் ஒருவன்*

    5.எம்.ஜி.ஆர். -மஞ்சுளா உரையாடல் - ரிக்ஷாக்காரன்*

    6.உழைக்கும் கைகளே - தனிப்பிறவி*

    7.எம்.ஜி.ஆர்.* ஜெயலலிதா சண்டை பயிற்சி -அடிமைப்பெண்*

    8.எம்.ஜி.ஆர். பத்திரம் படிக்க வரும் காட்சி -எங்க வீட்டு பிள்ளை*

    9.நாலு பேருக்கு நன்றி - சங்கே முழங்கு*

  8. #297
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே* புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - சகாப்தம் நிகழ்ச்சியில்* 23/06/20 அன்று வின்*டிவியில்*திரு.துரை பாரதி சொன்ன*செய்திகள்*
    -----------------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு பாடலையோ, படத்தின் தலைப்பையோ தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பார் . திருடாதே என்கிற படத்திற்கு*எதிர்மறையான, நெகடிவ் தலைப்புகள் முதலில் பரிந்துரைக்கப்பட்டன ,ஆனால் எம்.ஜி.ஆர். நாம் பல லட்சம் செலவு செய்து படத்தை தயாரிக்கிறோம். அதை கண்டுகளிக்கும் மக்களுக்கு பாசிட்டிவ் ஆன கருத்துக்கள், செய்திகள் அளித்தால்தான் மக்கள் மனதில் பதியும் . படத்தை மீண்டும் பார்க்க ஆவலை தூண்டும் . எனவே நல்ல தலைப்பை தேர்ந்தெடுப்பவர்களுக்கு உடனடி பரிசு உண்டு என்று அறிவித்ததன் பலனாக உருவான தலைப்பு தான் திருடாதே . இந்த தலைப்பை ஒரு போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்தார் . அந்த போட்டியில் நல்லதுக்கு காலமில்லை என்ற தலைப்பும் அறிமுகம் செய்யப்பட்டது . அதை எம்.ஜி.ஆர். நிராகரித்துவிட்டார் . நல்லது என்பதற்கு இணையாக பாசிட்டிவ் வார்த்தைதான் வரவேண்டும் ,நெகட்டிவ் வார்த்தைகள் இணைத்தால் நாம் சொல்லுகிற கருத்துக்கள், செய்திகள் மக்களை சென்றடையாமல் போய்விடும்*என்பதே காரணம் .


    இயல்பாகவே , எம்.ஜி.ஆர். அவர்கள் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ , கோவை சென்ட்ரல் ஸ்டூடியோ ஆகியவற்றில் படப்பிடிப்பு நடைபெறும் காலங்களில் காலை, மாலை வேளைகளில் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதுண்டு . அவருடன் சாண்டோ, சின்னப்பா தேவரும் இணைந்து செல்வார் .*அப்போது எம்.ஜி.ஆர். பயிற்சியாளராக, பயிற்சி கொடுப்பவராக இருந்ததுண்டு .யாரிடமும் பயிற்சி பெற்றதில்லை .ஏனென்றால் அவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பே, நாடக துறையில் இருக்கும்போதே, சிலம்பம், கம்பு சண்டை, குத்து சண்டை, வாள் சண்டை போன்றவற்றில் நல்ல பயிற்சி பெற்றவர் மேலும் ராணுவத்தில் சேரக்கூடிய வாய்ப்பு வந்தால் அதற்கு உடல் வலிமை, தோற்றப்பொலிவு* ஆகியன அவசியம் என்பதும் ஒரு காரணம் .அதனால்தான் ஆரம்பத்தில் இருந்தே எம்.ஜி.ஆரை பலர் வாத்தியார் என்று அழைக்க ஆரம்பித்தனர் ..இந்தியில் வாத்தியார் என்பதற்கு உஸ்தாத் என்று ஒரு பெயர் உண்டு . சிரித்து வாழ வேண்டும் படத்தில் அப்துல் ரஹ்மான் பாத்திரம் ஏற்று நடிக்கும்போது , இன்ஸ்பெக்டர் வேடத்தில் ராமுவாக வரும் எம்.ஜி.ஆர். உண்மையிலேயே நீங்கள் உஸ்தாத் க்கி* உஸ்தாத் என்று சுட்டி காட்டும் காட்சி உண்டு . அதற்கு அர்த்தம் வாத்தியாருக்கெல்லாம்* வாத்தியார் என்பதுதான்*திரையுலகில் பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்ற ஒரு நல்ல வாத்தியாராக தான் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர் .*



    எம்.ஜி.ஆர். தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து நடித்தார் . அந்த பாணியை யாரும் காப்பி அடிக்காமல் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டார் பொதுவாக*எம்.ஜி.ஆர். தனியாக நடித்தாலும், இரட்டை வேடம் ஏற்று நடித்தாலும் தனக்கென ஒரு பார்முலாவை வைத்து , பிரதான பாத்திரங்களை தன் கைவசம் கொண்டு நடிப்பது வழக்கம் ,அந்த பார்முலாவை மற்ற நடிகர்கள் சில படங்களில் பயன்படுத்தினாலும், எம்.ஜி.ஆர். அளவிற்கு முழு வெற்றியை பெறமுடியவில்லை பெரும்பாலான படங்களில் அந்த ஒரே பார்முலாவில் நடித்து பல வெற்றிப்படங்களை அளித்தவர் எம்.ஜி.ஆர். ஒருவரே .. அந்த காலத்தில் சிவாஜியுடன், ஜெமினி, எஸ்.எஸ்.ஆர், முத்துராமன் ,ஜெய்சங்கர் , ஏ.வி.எம்.ராஜன் ,சிவகுமார் என்று பலர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர் .எம்.ஜி.ஆருடன், ஜெமினி, முகராசியிலும் ,எஸ்.எஸ்.ஆர். ராஜா தேசிங்கு, காஞ்சி தலைவன் போன்ற படங்களிலும் ,முத்துராமன், அரசிளங்குமரி* என் அண்ணன், ஒரு தாய் மக்கள் தேர்த்திருவிழா, கண்ணன் என் காதலன்* ஆகிய படங்களிலும் , ஏ.வி.எம்.ராஜன், எங்கள் தங்கத்திலும் ,சிவகுமார் காவல்காரன், இதயவீணை படங்களிலும் நடித்துள்ளனர் .ஜெமினி மற்ற நடிகர்களுடன் நடிக்கும்போது , உங்கள் தனித்தன்மை தெரியாது .ஆகவே கூடுமானவரை இணைந்து நடிப்பதை தவிர்த்து விடுங்கள் என்று ஒரு கட்டத்தில் ஜெமினிக்கு , எம்.ஜி.ஆர். அறிவுரை கூறியிருந்தார் .



    முகராசி படத்தில்*எம்.ஜி.ஆருடன் ஜெமினி கணேசன் நடிக்க ஒப்பந்தம் ஆனார் .அப்போது எம்.ஜி.ஆர். ஜெமினியிடம் இந்த படத்தின்*கதையை*தயாரிப்பாளர் தேவரிடம்*கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .உங்களுக்கு கதை*பிடித்தபின்* நடிக்க*சம்மதம்* என்று சொல்லுங்கள்* என்று கூறியிருந்தார் . அதன்படி இருவரும் இணைந்து*நடித்து* மிக குறுகிய நாட்களில்*(14 நாட்கள்*) தேவர் படத்தை முடித்து 1966 பிப்ரவரி*மாதம் 18ம் தேதி**வெளியிட்டார் . அப்போது* 1966 பொங்கல் திருநாளில் வெளிவந்து அன்பே*வா வெற்றிகரமாக ஓடி கொண்டிருந்த நேரம் . இடையில் சத்யா மூவிஸின் நான் ஆணையிட்டால்* அதே*பிப்ரவரி மாதம் 4ம் தேதி வெளியாகி இருந்தது . இந்த சூழலில் முகராசி கெயிட்டி அரங்கில்*வெற்றிகரமாக* 100 நாட்களை கடந்தது*.100 வது*நாள் விழாவின்போது*ஜெமினிகணேசன், இந்த படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நான் ஒற்றைக்காலில் நடந்தேன்,**நடித்தேன் என்று பேசினார் .விழா முடிவில்*ஜெமினியின் இரண்டு கால்களும்*தரையில்*படாதவாறு, எம்.ஜி.ஆர். அவரை*தூக்கி வந்து காரில் அமர்த்தினார் .


    எம்.ஜி.ஆர்., படகோட்டி*,மீனவ*நண்பன் ஆகிய படங்களில் நடித்தவர் . மீனவர்கள் பிரச்னையை*நன்கு அறிந்தவர் . இரண்டு படங்களிலும் மீனவ சமுதாயத்தில் நிகழும் பிரச்னைகள், துன்பங்கள் ஆகியவற்றை* தனக்கே உரிய பாணியில்*அற்புதமாக*நடித்து வெளிப்படுத்தினார் .* படகோட்டி*படம் கேரளாவில் படமாக்கப்பட்டது . திருக்கைமீன் குப்பம், சுறா*மீன் குழப்பம் ஆகிய இரண்டு குப்பங்களுக்கு நடுவே நிகழும் மோதல்கள், சண்டைகள், திருப்பங்கள் ஆகியவை*முடிந்து இறுதியில் இரண்டு குப்பங்களும் சமாதானமாக இணைவதுதான் கதை .இந்த படத்தில்*படகோட்டியாகவே வாழ்ந்திருப்பார் எம்.ஜி.ஆர். .


    மேலும் செய்திகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் தொடருவோம்*

    நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள் / காட்சிகள் விவரம்*
    ----------------------------------------------------------------------------------
    1.திருடாதே*பாப்பா திருடாதே* - திருடாதே*

    2.ஒரு தாய் வயிற்றில்*வந்த உடன்பிறப்பில்*- உரிமைக்குரல்*

    3.ராமு*- அப்துல்*ரஹ்மான்*சந்திப்பு*- சிரித்து வாழ வேண்டும்*

    4.எம்.ஜி.ஆர். -லட்சுமி உரையாடல் - சங்கே முழங்கு*

    5.எம்.ஜி.ஆர். - ஜெமினி*உரையாடல்* - முகராசி*

    6.எம்.ஜி.ஆர். சிலம்ப*சண்டை காட்சி*- படகோட்டி*

  9. #298
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு சிவாஜி ரசிகர் குள்ளநரி தந்திரத்துடன் சிவனடியார் போர்வையில் என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டார். . சிவாஜி உங்க சாப்பாட்டில மண் அள்ளி போட்டாரா? ஏன் அவரின் நடிப்பை சாடுகிறீர்கள் என்று கேட்டார். மேலும் நான் mgr, சிவாஜி ரசிகன் அவர்களை பற்றி யார் குறை சொன்னாலும் நான் பாய்ந்து தடுப்பேன் என்றும் கதைத்தது.
    அவருக்காகதான் இந்த பதில். "திருவிளையாடல்" படத்தில் தருமி தவறான பாடல் எழுதிக்கொண்டு வந்து மன்னனின் பரிசுக்காக நிற்கும் போது அதை தடுப்பாரே!
    நக்கீரர், அப்போது சொல்வதை கவனிக்க வேண்டும்.

    மன்னன் தவறான பாடலுக்கு பரிசினை கொடுத்தால் முதலில் வருத்தப்படுவது நான்தான்! என்பார்.
    அதை போலதான், தவறான, மிகையான நடிப்புக்கு ஏமாந்து மக்கள் அங்கீகாரம் கொடுத்தால் முதலில் வருத்தப்படுவது கலா ரசிகர்களான நாங்கள்தான்..
    அதனால்தான் அவருடைய மிகை நடிப்பை பற்றி உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். அதற்கு மற்றொரு உதாரணமாக ஒன்றை
    குறிப்பிடுகிறேன்.

    "பழநி" என்றொரு பீம்சிங்கின் திரைப்படம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "ப" வரிசை படம்.
    வெள்ளி விழா காணும் என எதிர்பார்ப்போடு வந்த திரைப்படம்.
    தோற்றுப் போனது எதனாலே?
    மிகை நடிப்பின் உச்சக்கட்டமே பழநி திரைப்படம். முதல் பாடல் "ஆறோடும் மண்ணில்" என்று தொடங்கும் பாடலில் அண்ணன் தம்பி மூவரும் விவசாயம் செய்யும் போது பாடுவது
    போன்ற காட்சியமைப்பு.

    அதில் s.s r ம், முத்துராமனும் பாடும் போது இயற்கையான விவசாயிகள் பாடுவது போல இருக்கும். அண்ணன் விவசாயியாக வரும் சிவாஜியின் நடிப்பை பாருங்கள். இவர் விவசாயியா,இல்லை, கொத்தடிமை விவசாயியா என்பது போல தோன்றும். எண்சாண் உடம்பையும் குழைவுடன் ஒரு சாணாக்கி, இரு கைகளையும்
    தோளில் வைத்துக் கொண்டு அவர் குழைந்து கூழை கும்பிடு போட்டு நடிப்பதை பாருங்கள், என்ன தெரிகிறது?

    S s r ம் , முத்துராமனும்
    நடித்ததை விட தன் நடிப்பு எல்லோரையும் கவரவேண்டும் என்பதற்காகவே மிகை நடிப்பை அங்கே திணிக்கிறார். இதனால் இயற்கையான நடிப்பை வழங்குபவர்களும் தங்களை நிலை தடுமாற வைக்கிறாரே என்ற அங்கலாய்ப்பு அவர்களை ஆட்கொள்கிறது. எங்கெல்லாம் அவருக்கு நடிப்பில் தடுமாற்றம் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் மிகை நடிப்பை தொடங்கி விடுவார்.

    ஏனென்றால் அவர்களின் இயல்பான நடிப்புக்கு போட்டி போட இயலாமையால் அவர் கையாண்டது மிகை நடிப்பு. படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அவர் காட்டுகின்ற மிகை நடிப்பு படத்தின்
    வேகத்தை கட்டுப்படுத்தி பீம்சிங்கை புதைகுழியில் தள்ளியது. அந்த படத்தின் மிகப் பெரிய தோல்விக்கு காரணம் அதோடு சேர்ந்து திரைக்கு வந்த "எங்க வீட்டு பிள்ளை"யும் ஒரு காரணம் என்று சொன்னால் அதுவும் மிகையாகாது.

    சிவாஜியின் மிகை நடிப்பை கண்டு மனம் வெறுத்த சினிமா ரசிகர்கள் எம்ஜிஆரின் இயல்பான நடிப்பில் மனம் மயங்கி திரும்ப திரும்ப பார்த்து நடிப்பென்றால் எம்ஜிஆர்தான் என்பதை புரிந்து கொண்டு, படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய கதை நாம் அறிந்த ஒன்றுதான். இதே விவசாயி வேடத்தில் மக்கள் திலகமும் வருவார் "பெரிய இடத்துப் பெண்" படத்தில்.
    "வள்ளி மனம் நீராட! தில்லை மனம் போராட!. ரெண்டு பக்கம் நானாட! சொந்தமே நீ ஆடு!" என்ற பாடலில்

    உழவு மாடுகளை குளிப்பாட்ட தலையில் தலைப்பாகையோட வரும் போது எத்தனை மகிழ்ச்சி அந்த காட்சியில்தான் எத்தனை குளிர்ச்சி. அதை பார்க்கும் போது நமக்கும் எத்தனை எழுச்சி. மக்கள் நன்றாக புரிந்ததால்தான் "பழநி"க்கு படுதோல்வியையும், இயல்பான விவசாயியாக தோன்றிய எம்ஜிஆரின் "பெரிய இடத்து பெண்ணு"க்கு மாபெரும் வெற்றியையும் பரிசாக கொடுத்தார்கள்.

    விளையாட்டு போட்டிகளிலும், ஒலிம்பிக்கிலும்
    மேலும் பல போட்டிகளில் பங்கெடுப்போர் ஊக்க மருந்து சாப்பிட்டால் போட்டியில் பங்கு கொள்ள முடியாமல் தகுதி இழப்பு செய்யப்படுவர்.. ஆனால் சிவாஜியின் கண்களை உற்று நோக்கினால் அவர் இயல்பான நிலையிலேயே நடித்த மாதிரி தெரியவில்லையே. நடிப்புக்கே ஊக்க மருந்து பயன்படுத்தும் அவருக்கு எங்ஙனம் இயல்பு நடிப்பு வரும்?.

    இயல்பான நடிப்புக்கு இது ஒரு நல்ல உதாரணம். காசுக்காக நடிப்பவரை கலைக்காக நடித்தது போல பில்ட்அப் கொடுக்கும் சிவாஜி ரசிகர்களே! அவர் முதல் படமான "பராசக்தி" யிலேயே ஆரியக்கூத்தாடி, நானும் தாண்டவக்கோனே! காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே!
    என்று கருணாநிதியும் கணேசனும்
    தங்கள் காசு கொள்கையை முதல் படத்திலேயே சொல்லி விட்டார்கள்.

    சிவாஜியின் இந்த கொள்கையை கருத்தில் கொண்டுதான் ஸ்ரீதர் தன்னுடைய "காதலிக்க நேரமில்லை" படத்தில் ஒரு வசனத்தை வைத்திருப்பார். சச்சுவை பார்த்து ஏம்மா? அடுத்த படத்தில் நடிப்பதற்கு காசு ரோம்ப கேப்பியா?
    என்றவுடன் காசு கிடக்கட்டும்! சார், காசு!, நான் கலைக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறேன் என்பார்.

    உடனே நாகேஷ் இது உன்னை வச்சு படம் எடுத்து நொந்து போய் அடுத்த படத்துக்கு வரும் போது இதை சொல்! என்பார். சிவாஜியிடம் பெற்ற அனுபவத்தில் இதை வசனமாக வைத்தாரா? இல்லை இந்த அனுபவத்தை இறுதியில் சிவாஜியிடம் பெற்றாரா? என்பது அவருக்கே வெளிச்சம். வருஷத்துக்கு 9 படங்கள் என்று எண்ணி நடித்து, காசை வாங்கி கல்லாவை நிறைக்கும் கணேசனை ஏதோ கலைக்கு சேவை செய்ததை போல சிவாஜி ரசிகர்கள் கூடி கும்மி அடிப்பது விந்தையிலும் விந்தை.

    நான் சிறுவனாக இருந்த போது ஒருநாள் என் நண்பனின் தாயார் "படிக்காத மேதை" படத்தில் வரும் ஒரு பாடலை பாடிக்கொண்டிருந்தார். "ஒரே ஒரு ஊரிலே" பாடல். அதில் வரும் ஒரு வரியை திரும்பத்திரும்ப பாடிக்கொண்டிருந்தார். "ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படி இல்லை". அம்மா இதையே ஏன் திரும்ப திரும்ப பாடுகிறீர்கள் உங்கள் பிள்ளைகளை நினைத்தா? என்று கேட்டதும் என் பிள்ளைகளுக்கு என்ன எல்லாம் ராசாகுட்டிகள். நான் நம்ம
    சிவாசியை மனசில வைச்சுக்சிட்டுதான் பாடறேன்! என்றார்.

    அப்போது பக்கத்தில் இருந்த அடுத்த வீட்டுக்காரர் சிவாஜிக்கு அவ்வளவு பிள்ளைகள் கிடையாதே! இரண்டோ மூணோன்னுதான் கேள்விப்பட்டிருக்கேன். என்றதும் அந்தம்மா உடனே ஐயோ! அவரு பிள்ளையை பத்தியெல்லாம் இல்லை, அவரு நடிக்கிற படத்தை பத்திதான்சொல்றேன். வருஷத்துக்கு 8,9 படம் வருதில்ல! எல்லாம் ஒண்ணு,இரண்டு வாரத்தில நாம பாக்கிறதுக்குள்ள ஓடிப்போயிருதில்ல! அத நினைச்சுதான் சும்மா பாடிக்கிட்டிருந்தேன்.

    மத்தபடி ஒண்ணுமில்லப்பா? னு சொன்னதும்தான் தெரிந்தது அந்தம்மா சிவாஜி படத்தை விரும்பி பாப்பாங்க. ஆனால் காசு சேருவதற்குள்ளே படத்தை தூக்கிட்டு வேற படத்தை போடாறாங்களேங்கிற ஆதங்கத்தில் அந்தம்மா பாடிச்சின்னு அப்பதான் எனக்கு புரிஞ்சுது.

    மீதி அடுத்த பதிவில்.


    நன்றி : திரு.கிருஷ்ணமூர்த்தி*

  10. #299
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் போல் பட்டம் கௌருவம் பெற்ற எவரும் இல்லை

    தமிழில் முதல் தேசியவிருது எம்ஜஆரின் படத்திற்க்கு

    தென் இந்தியாவின் முதல் பாரத் பட்டம் பெற்றவர் எம்ஜிஆர்

    பத்மஸ்ரீ பட்டம் கொடுத்த போது வாங்க எம்ஜிஆர் மறுப்பு

    இந்தியாவின் மிக உயர்ந்த பட்டம் பாரத்ரத்னா எம்ஜிஆருக்கு

    எந்த முதல்வருக்கும் செய்யாத மரியாதை எம்ஜிஆர் மறைவிற்க்கு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்க விட்டு இந்தியா முழுவதும் விடுமுறை அறிவிக்க பட்டது

    அமேரிக்கா கனடா நாடுகளில் எம்ஜிஆருக்காக மரியாதை செலுத்த பட்டது பாரளுமன்றங்களில் ஒரு சரித்திரம்

    மத்தியரசு இரு முறை எம்ஜிஆர் ஸ்டாம்பு வெளியிட்டது

    எம்ஜிஆர் நாணயம் இந்தியா வெளியிட்டது

    இந்திய பாராளுமன்றத்தில் எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டது

    எம்ஜிஆர் ரயில் நிலயைம் அமைத்தது இந்திய அரசு

    மத்திய சாரணர் வெள்ளி யானை பரிசு பெற்ற ஒரே முதல்வர் எம்ஜிஆர்

    எம்ஜிஆர் சிகிட்சைக்காக இந்தியா தனி விமானத்தையே ஆஸ்பத்திரி ஆக்கி எம்ஜிஆரை அமேரிக்கா அனுப்பிவைத்தது

    ப்ரூக்கிளின் மருத்துவனையில் எம்ஜிஆருக்காக பிராத்தனை செய்து அனுப்பிய பொருட்களை வைக்க தனி பிளாக் கட்டப்பட்டது ஒரு சரித்திரம் அது சுற்றுலா பயணிகளிடம் எடுத்து உரைக்கிறது அமேரிக்கா சுற்றுலா துறை தகவல் ராதாரவி அனுபவம்

    எம் ஜிஆர் சாதனை எவராலும் அடைய முடியாத சாதனைகள்

    வாழ்க எம்ஜிஆர் புகழ்

  11. #300
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    ஒளிவிளக்கு
    இதழ் ஆசிரியரும் -
    மூத்த பத்திரிக்கையாளரும் -
    எனது அன்பு நண்பருமான -
    திரு மேஜர் தாசன் அவர்களின் மறைவிற்கு
    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    - எஸ் ரவிச்சந்திரன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •