Page 14 of 210 FirstFirst ... 412131415162464114 ... LastLast
Results 131 to 140 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #131
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.
    சிதம்பரம் ஜெயராமன் பாடிய பிரபலமான எம்.ஜி.ஆர் பாடல்
    ’’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உருவம் தானே ரெண்டு
    உயிரோவியமே கண்ணே நீயும் நானும் ஒன்று” கல்யாணி ராகம்.
    புதுமைப்பித்தன் படத்தில் பைத்தியம் பிடித்தவுடன் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும் பாடல் சிதம்பரம் ஜெயராமன் பாடியது தான். “நீயும் கெட்டு நானும் கெட்டு பாதை விட்டு பாதை மாறிப் போவதோ? தந்தானத்தன தன்னானத்தன தன்னானத்தன தானா” அதற்கு ஆர்ப்பாட்டமாக சில ஸ்டெப் போடுவார்.
    ஏ.எம் ராஜா மோகன ராகத்தில் பானுமதியுடன் பாடிய “ மாசிலா உண்மைக் காதலே, மாறுமோ செல்வம் வந்தபோதிலே” பாடல்
    “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
    இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா”
    சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்
    சபாஷ் மாப்பிள்ளையில் ’ஜிளு ஜிளு உடையிலே ஜிகுஜிகு நடையிலே ஜெகமே தன்னால் மயங்குதே
    சிங்காரச்சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே’
    நல்லவன் வாழ்வான் “ சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”
    கொடுத்து வைத்தவள் “ பாலாற்றில் சேளாடுது இடையில் நூலாடுது இரண்டு
    வேலாடுது”
    பி.பி.ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.ஆருக்காக பாடிய பாடல்கள்:
    திருடாதே படத்தில் “என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்”
    பாசம் -” பால்வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்”
    காதல் வாகனம் ‘ இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்”
    பாடல் காட்சிகளில் அவர் எப்போதும் கதாநாயகி பாடும்போது அல்லது ஆடும்போது ரசித்து தலையாட்டுவார்.
    கதாநாயகியைப் பார்த்து சிரித்து தன் உதட்டைக் கடித்து தலையை ஆட்டி சைட் அடிப்பார்.
    ( மதுரையில் ரொம்ப காலம் சல்லிகள் சைட் அடிப்பது என்றால் இந்த எம்.ஜி.ஆர் மேனரிசம் தான். ’ஜாரி’ மிரண்டு ஓடும்!)
    கதாநாயகியின் உதட்டை செல்லமாக கிள்ளி ஆட்டி விடுவார்.
    கைககளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை அழகாக ஆட்டுவார்.
    solo songs எல்லாமே காண கண் கோடி வேண்டும்.
    ’உலகம் பிறந்தது எனக்காக
    ஓடும் நதிகளும் எனக்காக’
    'அன்னை மடியை விரித்தாள் எனக்காக' எனும்போது கைகளை விரித்துகாட்டுவார்!
    அன்னை மடியை விரித்தாள் எனக்காக
    (என்னைப் பெற்றுக்கொள்வதற்காக என் தகப்பனுக்கு மடியை விரித்தாள்
    பிரசவத்தின் போதும் நான் பிறப்பதற்காக தன் மடியை விரித்தாள்.)
    உலகம் பிறந்ததும் எனக்காக பாடலில் நதி,மலர்கள், நிலவு, குயில்கள்என்றும் பெற்ற தாய் பற்றியும் கலந்தே எழுதப்பட்டது.கவித்துவமாக அன்னை மடியை விரித்தாள் என்பதில் அன்னையை ’இயற்கை’யின் படிமம் எனவும் கொள்ளலாம்.
    ‘நெல்லின் மணி போல்’ என்ற (போனாளே,போனாளே ஒரு பூவும் இல்லாமல் பொட்டுமில்லாமல்) வரிக்கு கை கட்டை விரலுடன் நடுவிரலை குவித்துக் காட்டுவார்.
    கைகள் இரண்டும் பாடல் காட்சிகளில் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.பாடல் வரிகளை விளக்கும் விதமாக எப்போதும் அவர் உடல் மொழி இருக்கும்.
    ”நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனையல்ல புலி தானென்று போகப் போகக் காட்டுகிறேன் போகப்போக காட்டுகிறேன்” பாடலின் ஒவ்வொருவரிக்கும் அவருடைய எக்ஸ்ப்ரசன்!முடிவில் ரௌத்திரம் தெரியும் முகம்.தலையை ஆக்ரோசமாக ஆட்டி நிறுத்துவார். அப்போது தியேட்டர் அதிரும் என்று சொன்னால் அது குறைவு தான்.
    நான் ஏன் பிறந்தேன் பாட்டில் புலியூர் சரோஜா மகனிடம் “ பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும்.உன்னை பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றிப்படவேண்டும்.கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் வரவேண்டும், உன் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும் உலகம் அழவேண்டும்” வாத்தியார்! அப்போது அவர் முகம் காட்டும் உருக்கம்.
    ’இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’
    உருக்கம் என்ற உணர்வை எப்போதும் நேர்த்தியாக முகத்தில் வெளிப் படுத்துவார்.
    ”முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை
    இது தான் எங்கள் வாழ்க்கை
    தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான்
    கரை மேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்”
    ”ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை... உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா”
    “தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு”
    அதே போல உற்சாகத்தையும்.
    ”எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்”
    “முத்து முகம் முழு நிலவோ! முப்பது நாள் வரும் நிலவோ!சச்சா மம்மா பப்பா”
    ”எனக்கொரு மகன் பிறப்பான்!அவன் என்னைப்போலவே இருப்பான்” காலை தரையில் சந்தோசமாக உதைத்துக்கொள்வார்.
    வாயில்லாப்பூச்சியான பண்டரிபாயிடம் “ இங்கு உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும் நானா பார்த்திருப்பேன்.”
    குதூகலம்!குஷி! - ”புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமலை பொழிகிறது!
    நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது!”
    சண்டை போட்டுக்கொண்டே ஆடிப்பாடி நடிப்பார்.
    ’மயிலாட வான்கோழி தடை சொல்வதோ
    மாங்குயில் பாட கோட்டான்கள் தடை சொல்வதோ
    முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
    அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
    ஆடப்பிறந்தவளே ஆடி வா!’
    ‘நான் செத்துப் பிழைச்சவண்டா
    எமனை பாத்து சிரிச்சவன்டா’
    சண்டைக் காட்சி பற்றி ஒருவிஷயம்
    முதலில் வில்லனிடம் ’மிஸ்டெர் தயவு செய்து நான் சொல்றதெ கேளுங்க’என்று ரொம்ப கனிவாக சொல்வார். வில்லன் அலட்சியமாக ஒரு குத்து விடுவான்.’ தயவு செய்து வழிய விடுங்க ‘ என்று புன்னகையுடன் மீண்டும்சொல்லிப்பார்ப்பார். அதன் பின்பும் வில்லன் அதை சட்டையே செய்யாமல் முகத்தில் குத்துவான். எம்.ஜி.ஆர் உதட்டை தடவிப்பார்ப்பார். விரல்களில் ஆ.. ரத்தம்! அப்புறம் வில்லன் ஒருவனாக இருந்தாலும் சரி,கூட்டமாக இருந்தாலும் சரி அடி வெளுத்து விரியக் கட்டிவிடுவார்.
    மற்றபடி பல சமயங்களில் சிரித்துக் கொண்டே தான் கத்தி சண்டையும் போடுவார்.
    தங்கையுடன் தங்கைக்காக எம்ஜிஆர் பாடல்கள்:
    “ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
    அண்ணன் தங்கை உறவு முறை வளர்ந்ததம்மா வளர்ந்ததம்மா” -காஞ்சித்தலைவன்
    ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே”- பணக்காரக்குடும்பம்
    ”பூமலை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது”-நினைத்ததை முடிப்பவன்.
    தாய் எம்.ஜி.ஆருக்கு தெய்வம்.தாயை வணங்கி பாடுவது
    ‘எல்லாம் எனக்கும் இருந்தாலும் அன்னை மனமே என் கோயில் \
    அவளே என்றும் என் தெய்வம்’
    ’தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை.
    தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால் வேறொரு தெய்வமில்லை’
    ’தாயில்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறந்ததில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள்’
    காதலியிடம் கூட சவால் விட்டு வாளோடு பாடுவார்!
    ‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
    உனை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால்’
    ரொமான்ஸ்
    ‘காதல் ரோமியோ கண்ட நிலா
    கன்னி ஜூலியட் சென்ற நிலா
    பாவை லைலா பார்த்த நிலா
    பாதி தேய்ந்தது வெள்ளை நிலா’
    ’நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
    நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்’
    ‘நீயா இல்லை நானா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நீயா இல்லை நானா
    பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா’
    ‘கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன வா
    கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
    கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா
    ஒரு நாள் இரவு நிலவையெடுத்து உன் முகம் படைத்தானோ
    பல நாள் முயன்று வானவில் கொண்டு நல் வண்ணம் செய்தானோ
    ஒரு கோடி முல்லைப்பூ விளையாடும் கலையென்ன
    வாவென்பேன் வரவேண்டும் தாவென்பேன் தரவேண்டும்’
    டி.எம்.எஸ் பாடல்கள் தான் எம்.ஜி.ஆருக்கு என்றிருந்த நிலையில் அதை உடைத்தார். புதுப்பாடகர் எஸ்.பி.பி பாட்டுக்கு தன்னம்பிக்கையோடு சந்தேகமேயில்லாமல் நடித்தார்.
    “ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”
    ”வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
    அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்”
    “நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் வெண்ணிலவில்
    தலைவன் வாராது காத்திருந்தாள்”
    ஜேசுதாஸ் பாடல்கள்
    ”விழியே கதையெழுது
    கண்ணீரில் எழுதாதே’
    ”பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்
    ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்”
    ”அந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திபூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்”
    செல்லங்கொஞ்சும் சிறு குழந்தை போல எஸ்.வரலட்சுமி பாடும்போது அவர் மடியில் தலை வைத்துப் படு்த்துக்கொள்வார்.
    ”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
    அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
    ஒன்றே குலம் என்று பாடுவோம்
    ஒருவனே தேவன் என்று போற்றுவோம்”
    எம்.ஜி.ஆர் இசை ஞானமிக்கவர். கர்நாடக சங்கீத ரசிகர். வாய் பாட்டு என்றில்லை.தனியாவர்த்தனமாக மிருதங்கம் மட்டுமே ரசிக்கக்கூடிய அளவுக்கு அபார இசை அறிவு. இதனால் சினிமாவுக்கு மெல்லிசைப் பாடல்களை தேர்ந்தெடுப்பதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார்.இசையமைப்பாளர்களுக்கு ’பென்டு’ கழண்டுவிடும்!...... Thanks......

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #132
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எஸ்! வீ!! சேகர்!!
    --------------------------
    மனித நேயத்தின் பொருளைப் பார்த்தோம் என்றால்-
    தானம்,,தர்மம்,,கொடை,,உதவி--இப்படிப் பலவகை நற்காரியங்களுக்கும் அடிப்படை மனித நேயேம் தான்!
    அதாவது ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மேல் காட்டும் அன்பு என்றாலும்-
    எந்தவித பிரதியும் எதிர் நோக்காமல்,,அதே சமயம் அடுத்தவர் மீது அன்பு காட்டுதலையும் மீறி,,அவரைத் தானாக நினைத்துக் கொண்டு அவருக்கு உதவுவது மனித நேயம்!! அந்த மனித நேயம் புரிவதில்-
    இன்றைய உதாரணமாகத் திகழும் மிகச் சிலரில் எஸ்.வி.சேகரையும் கொள்ளலாம்!
    கொரானா வில் பாதி இறந்து,--
    குரானில் நல்வழித் தேட விழையும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு கஞ்சி ஊற்றும் மார்க்கமாக ஒரு குடும்பத்துக்கு 25 கிலோ என்ற வகையில் நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு உதவி வருகிறார், எஸ்.வி.சேகர்!
    மதம் பார்த்துப் பழகினால் வம்பு!
    மனம் பார்த்துப் பழகினால் அன்பு!!--இந்த இலக்கணத்தை இனிய முறையில் பேணுபவர்களில் நமக்குத் தெரிந்து சேகரும் ஒருவர்!
    இந்த உதவி மட்டும் என்றில்லாமல்--
    வருடந்தோறும் மாணவர்கள் சிலருக்கு மடிக் கணிணி,,
    அவர்கள் படிப்புக்கான நிதி உதவி..
    மாற்றுத் தொழிலாளிகள் சிறக்க,,அவர்களுக்குப் பொருளுதவி--இப்படிப் பல வகையிலும்,,தமது அறக்கட்டளை மூலம் உதவி வருகிறார். அதையும் சத்தம் இல்லாமல் செய்கிறார்!!
    உங்களுக்கு இப்படி உதவுவதில் உந்து சக்தி யார் என்று கேட்டால்--
    WHETHER EAST OR WEST
    M.G.R. JS THE BEST!!--என்று சொல்லி சிரிக்கிறார்!!
    அ.தி.மு.க அரசின் இன்றைய செம்மையான ஆட்சியைப் பாராட்டும் அதே சமயம்--
    தி.மு.க என்ற தீய சக்தியைக் களத்திலிருந்தே அப்புறப்படுத்த வேண்டும். அதை அ.தி.மு.க வால் மட்டுமே செய்ய முடியும்-- அதற்கு அக்கட்சி,,
    எம்.ஜி.ஆர்,,ஜெ இருவரை மட்டுமே கட்சியில் முன்னிலைப் படுத்திக் கொண்டு செல்லவேண்டும் என்று அழுத்தமாகக் கூறுகிறார்.
    அ.தி.மு.கவுடனான புரிதலுடன் கூடிய இவரது தொடர்பைப் பதிவிலுள்ள படத்திலிருந்து அறியலாம்!
    மனதில் எதையும் வைத்துப் பழகத் தெரியாதவர் மேடம் என்பது இவரது அனுபவம் உரைக்கும் வார்த்தை/
    சோவுக்கும்,,ஜெவுக்கும் சரியானப் புரிதல் இல்லாமல் இடைப்பட்ட சிறிது காலம் இருந்தபோது இருவரிடமும் தைரியமாகத் தமது கருத்தை உரிமையுடன் கூறி,,அவர்கள் இருவரும் இணையப் பின்புலமாக இவர் செயல்பட்டதைக் கேட்கும்போது பிரமிப்பாகவும் இருக்கும். பெருமையாகவும் இருக்கும்!
    அந்த நிகழ்வை அப்படியே இங்கே விவரிக்க இயலாத நிலை?
    எல்லாரும் சொல்றா மாதிரி இல்லே,
    மேடத்துக்கிட்டே ரொம்ப தைரியமா யாரு வேணாப் பேசலாம். ஆனா நம்ம மனசுல ஏதாவது குறுக்கு புத்தி இருந்தா தான் பிராப்ளம்! அவங்க ரொம்ப ஷார்ப். ஈஸியா கண்டு பிடிச்சுடுவாங்க என்று சர்ட்டிஃபிகேட் தரும் சேகரின் வார்த்தைக்கு உதாரணம்--
    திரு சைதையாருக்குக் கிடைத்த மேயர் பதவி!
    மேடம்,,சைதையார் மாதிரியான சீனியர்களுக்கு உரிய பதவி கொடுத்தா நன்னாயிருக்கும் என்று சைதையாருக்காக,,ஜெ விடம் துணிச்சலாகப் பேசினாராம் சேகர்??
    இதை நம்மிடம் சேகர் சொல்லவில்லை.
    சைதையாரே நம்மிடம் தெரிவித்தது இது!!
    திட்டம் போட்டு வருஷக் கணக்காக் காத்திருந்து வேலை செய்ய ஒரு கூட்டமே மேடத்துக்குப் பின்னால் வேல செய்யும்போது நம்ம மாதிரியான ,,,நேராப் பேசறவங்களுக்கு சங்கடம் தானே?
    சேகர் வைக்கும் பொடியில் காரமும் சாரமும் இருக்கத் தான் செய்கிறது!
    தேசத்தைப் பத்தி உண்மையாக்க் கவலைப்படும் மனிதர்கள் தாம் இப்போதைய இந்திய அரசியலுக்குத் தேவை!!
    சேகர் மாதிரியானவர்களை மத்திய அரசோ,,மானில அரசோ உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நம் அவா!!
    இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இன்ன பிறர்க்கும் சேகர் செய்து வரும் உதவிகளுக்காக அவரைப் பாராட்டலாம் தானே பாச உறவுகளே???!!!........ Thanks.........

  4. #133
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தற்போது சன் தொலைக்காட்சி புதிய படம் தனுஷ், சினேகா நடித்த பட்டாசு படம் ஒளிபரப்பாகிறது... ஒரு காட்சியில் சினேகா தனுஷிடம் "எம்.ஜி.ஆர்." மாதிரி மாப்பிள்ளை பார்க்க போகிறோம் என சொல்லும் காட்சி வருகிறது... மக்கள் திலகம் பெயர் வராத புது படமா?! என்ன?......��

  5. #134
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1957 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தலைவர் ஒரு ஜோடி சிங்கம் வாங்கினார்...அவை ஸ்வஸ்திக் பிலிம்ஸ் அரங்கில் பராமரிக்க பட்டன...

    ஒரு மதியம் பள்ளி விட்டு வந்த பெரியவர் சக்கிரபாணி அவர்களின் குழந்தைகள் அந்த சிங்கங்களை பார்க்க அழைத்து செல்ல பட்ட போது அப்படி ஒரு துர்நாற்றம் அங்கே.. அவர்கள் வாந்தி எடுத்து விடுகின்றனர்.

    சிறிது நாட்கள் கழித்து ஒரு பெரிய கூண்டு தயார் ஆகி அவை அங்கே அடைக்கப்பட்டன. நம்மவர் போய் அடிக்கடி பார்வையிட்டு வந்தார்...

    ராஜா ராணி என்று அந்த சிங்கங்களுக்கு பெயர் வைக்க பட்டன.
    தோட்டகாரர் மணி சமையல் வேலைகள் தவிர அந்த சிங்கங்களுக்கு நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட்ட ஆட்டு இறைச்சியை அவைகளுக்கு உணவாக கொடுத்து பராமரித்து வந்தார்.

    ஒரு நாள் பவானி என்ற படத்தின் படப்பிடிப்பு அந்த ஸ்வஸ்திக் அரங்கில் மாடியில் நடைபெறும் போது சிங்கங்களை நடைப்பயிற்சி போல அழைத்து கொண்டு வாசல் கேட் அருகில் சங்கிலிகளுடன் அழைத்து கொண்டு மணி வர.

    ராணி சிங்கத்தின் சங்கிலி சற்று தளர்ந்து இருக்க ராஜா சிங்கத்தின் கண்ணில் ஏதோ காயம் போல இருக்க அதை மணி அவர்கள் பார்த்து கொண்டு இருக்கும் போது.

    சற்றே திறந்து இருந்த வாசல் கேட் வழியாக ராணி சிட்டாய் வெளியே ஓடி எதிர் பக்கம் ஒரு கம்பில் கட்ட பட்டு இருந்த ஒரு எருமை மாட்டை முழு பலம் கொண்டு ராணி அறைய.

    நகங்கள் வெட்டப்பட்டு இருந்ததால் அந்த மாடு தப்ப மாடு முழுபலம் கொண்டு கட்ட பட்டு இருந்த கம்பை பிடுங்கி கொண்டு ஓட்டம் பிடிக்க.

    படப்பிடிப்பில் இருந்த நடிகர்கள் மேலே இருந்து பார்த்து கொண்டு இருக்க இரண்டு வீடுகள் தள்ளி ராவ் பகதூர் ராம சாஸ்திரி வீட்டில் சிங்கம் நுழைய.

    அவர் தங்கை அலறி வீட்டுக்குள் ஓடி கதவை மூடி கொள்ள...சிங்கம் கதவை சுரண்ட...அதற்குள் ராஜாவை கட்டி போட்டு வந்த மணி ராணி அருகில் போக ராணி அவர் மேல் பாய இருவரும் உருண்டு புரண்டு தன் கையில் கொண்டு வந்த ஒரு சுருள் கம்பி போல இருந்ததை கொண்டு ராணி வாயில் நுழைக்க அதன் இரண்டு பற்கள் தெறித்து கீழே விழ.

    பின் ஒருவழியாக அந்த ராணியை தூக்கி கொண்டு கூண்டில் கொண்டு மணி போட்டு காயம் கண்ட இடத்தில் ரத்த கசிவு நின்ற பின் உணவு கொடுக்கப்பட்டது.

    சில மாதங்களில் ராஜா இறந்துவிட 6 மாதங்கள் கழித்து பதப்படுத்தப்பட்ட அதன் உடலை முதலில் லாயிட்ஸ் சாலை வீட்டிலும் பின் தலைவரின் ராமாவரம் வீட்டில் தலைவர் மாடிக்கு போகும் படிகள் இருக்கும் அறையில் அந்த ராஜா வைக்க பட்டு பின் தலைவரின் நினைவு இல்லத்தை இன்றும் அலங்கரித்து கொண்டு இருக்கிறது.

    கொஞ்ச காலம் கழித்து மூர் மார்க்கெட் அருகில் முதலில் இருந்த மிருகக்காட்சி அரங்கில் விட பட்ட ராணி பின் சென்னை வண்டலூர் zoo வில் விடப்பட்டு அங்கே இறந்தது.

    தலைவர் நடித்த அடிமைப்பெண் சிங்கத்துக்கும் தலைவர் நினைவு இல்லத்தில் இருக்கும் சிங்கத்துக்கும் தொடர்பு கிடையாது என்பதை தெளிவு படுத்தவே இந்த பதிவு.

    சிங்கம் வளர்த்த தங்கம் எம்ஜியார் புகழ் வாழ்க

    நன்றி...தொடரும்....உங்களில் ஒருவன் நெல்லை மணி...

    மேலே சொல்லப்பட்ட ராஜா ராணி சிங்கங்கள் தலைவரின் நாடோடிமன்னன் படத்தில் நடிக்க வாங்க பட்டு பின் முடிவுகள் மாற்றி கொள்ளப்பட்டன.......... Thanks Nellai Mani...

  6. #135
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
    எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
    அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!"
    # இது எப்போதோ ஒருமுறை நான் எழுதியது...!
    ஆனால் இப்போதும் , எம்.ஜி.ஆர்.பற்றி என் கண்ணில் படும் ஒவ்வொரு செய்தியும் , நான் எழுதியதை மேலும் மேலும் உறுதி செய்கின்றன..!
    # இதோ , ஒரு வெண்பொங்கல் செய்தி..!
    # அந்தக் கால தேர்தல் பிரச்சார சமயங்களில் , அண்ணா - காமராஜர் – கருணாநிதி - எம்.ஜி.ஆர். போன்ற அரசியல் தலைவர்கள் , முக்கியமான நகரங்களில் , ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து பிரச்சாரம் செய்து விட்டுப் போவார்களாம்..!
    அவர்கள் பேச்சைக் கேட்பதற்காக அன்று மாலை முதலே பக்கத்து கிராமங்களில் இருந்து , மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து , கூட்டம் கூட்டமாக காத்துக் கிடப்பார்களாம் !
    ஒரு வழியாக நள்ளிரவில்தான் தலைவர்கள் மேடைக்கு வந்து சேருவார்களாம்..!
    அவர்கள் பேசி முடித்து விட்டுப் போன பிறகு , அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அங்கேயே....அந்த பிரச்சார திடலிலேயே துண்டை விரித்துப் போட்டுத் தூங்கி விடுவார்களாம்..! வேறு என்ன செய்வது..? விடிந்த பிறகுதான் ஊருக்குப் போக முதல் பஸ் வரும்..!
    எந்தத் தலைவர் வந்து பேசி விட்டுப் போனாலும் , இதுதான் நிலைமை..!
    வருவார்கள்...பேசுவார்கள்...செல்வார்கள்..!
    ஆனால் ..ஒரே ஒரு தலைவர் மட்டும் , நள்ளிரவில் வந்து பேசி முடித்து விட்டுப் புறப்பட்டுப் போகும் முன் , தன் கட்சியை சேர்ந்த அந்த ஏரியாவின் பொறுப்பாளரைக் கூப்பிட்டு , திடலில் தங்கி இருக்கும் மக்கள் அனைவருக்கும் , காலை எழுந்தவுடன் சுடச்சுட சாப்பிட வெண்பொங்கல் கொடுத்து அனுப்ப ஏற்பாடு செய்ய சொல்லி விட்டு , அதற்கான செலவையும் கொடுத்து விட்டுத்தான் போவாராம்..!
    அவர்.....வேறு யாராக இருக்க முடியும்..?
    எம்.ஜி.ஆர்.!
    சில வேளைகளில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் கூட , எம்.ஜி.ஆரின் இந்த வெண்பொங்கலை சாப்பிட்டு விட்டு , எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்களாக மாறிய அனுபவங்களும் உண்டாம்..!
    # எண்ணிப் பார்க்கிறேன்...!
    என்ன அவசியம் வந்தது எம்.ஜி.ஆருக்கு...?
    மற்ற தலைவர்களைப் போலவே ..வந்தோமா..? பேசினோமா..? புறப்பட்டுப் போனோமா? என்று இல்லாமல் , எதற்காக அங்கே இருக்கும் மக்களின் அடுத்த நாள் காலை பசியைப் பற்றி கவலைப்பட வேண்டும்..?
    அதனால்தான் மீண்டும் அழுத்தமாக சொல்கிறேன்..!
    "அத்தனை ஆண்களுக்கும் ஆணின் இதயத்தை வைத்துப் படைத்த இறைவன் ,
    எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஏனோ ,
    அன்னையின் இதயத்தை வைத்துப் படைத்து விட்டான்..!"......... Thanks...

  7. #136
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "கண்ணில் பட்ட 'அது'... கொதித்தெழுந்த எம்.ஜி.ஆர்!" - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்.
    �� அத்தியாயம் : 7��

    நடிகர்கள் பொதுவாக உணர்ச்சியவயப்படுபவர்கள். நாடகத்தின் பெயர் கதர் பக்தி; கதாநாயகன் காந்தியின் கொள்கைகளை கொண்டாடுபவன். மதுவிலக்கை வலியுறுத்தி பக்கம் பக்கமாய் வசனங்கள்... கதாநாயகன் ராம்சந்தரின் மனசுக்குள் காந்தி வந்து அமர இது போதாதா?! காங்கிரஸின் காலணா உறுப்பினராகும் அளவு அவரது காந்தியப்பற்று வளர்ந்தது. காந்தியையும் நேரிலும் தரிசித்திருந்ததால் அது இன்னும் உச்சத்திற்கு போனது.

    அப்போதெல்லாம் கள்ளுக்கடை மறியல் போராட்டங்கள் தீவிரமாக காங்கிரஸ் மற்றும் பல அமைப்புகளால் நடத்தப்பட்டு வந்தன. மறியல் நடப்பதும் அதை போலீஸார் தடியடி நடத்தி கலைப்பதும் வாடிக்கையாக இருந்த காலம். மறியல் போராட்டங்களில் சாரிசாரியாக இளைஞர்கள் சிறையில் அடைபட்டு வந்தனர். யானைக்கவுனியில் ராம்சந்தர் வீடருகே, இயங்கிவந்த கள்ளுக்கடை முன் காங்கிரஸ் தொண்டர்கள் அன்று மறியல் செய்ய இருப்பதாக சொல்லப்பட்டது. “என்னண்ணே உங்க தம்பி கூட மறியல்ல கலந்துக்க போறாமே! தேசபக்தி முத்திடுச்சா” - போகிற போக்கில் ஒரு நடிகர், சக்கரபாணியிடம் சொல்லிவிட்டுப் போனார்.

    ராம்சந்தராவது போராட்டத்தில் கலந்துகொள்வதாவது என மனதிற்குள் சிரித்துக்கொண்டு வேறு வேலையில் ஈடுபட்டார் சக்கரபாணி. தகவலை அவர் உறுதிபடுத்தாதற்கு காரணம் சத்தியபாமா. வறுமையினால் ஊர் விட்டு ஊர் வந்து படிப்பையும் துறந்து நாடகத்தில் நடிக்கும் தம் பிள்ளைகள் சுதந்திரப்போராட்ட உணர்வுகளுக்கு ஆட்படுவதை அவர் ஆரம்பத்திலிருந்தே விரும்பவில்லை. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த ஒரு தாயின் கவலை அது. தனது கவலையை தொடர்ந்து பிள்ளைகளிடம் அவர் வலியுறுத்திவந்திருக்கிறார். இதனால் அம்மாவின் பேச்சுக்கு மாறாக ராம்சந்தர் அப்படிப்பட்ட விஷயங்களில் ஈடுபடமாட்டான் என்பதில் சக்கரபாணிக்கு அத்தனை நம்பிக்கை இருந்தது.

    நாடக கொட்டகைக்கு கிளம்பிவந்தவர் ஒத்திகையில் மூழ்கினார். ஆனால் கொஞ்சநேரத்தில் மனதில் ஏதோ நெருடியது. வீட்டிலிருந்து தனக்கு முன்பு கிளம்பிய தம்பி எங்கே? ....மனது தேடத்துவங்கியது. கொட்டகையில் விசாரித்ததில் எல்லோரிடமும் ஒரே பதில் “ராம்சந்தரா... காலையிலிருந்தே அவனைப் பார்க்கலையே...” பகீர் என்றது சக்கரபாணிக்கு. 'நமக்கு வந்த தகவல் உண்மைதானா...' பதறியபடி மறியல் நடந்த கள்ளுக்கடைக்கு விறுவிறுவென சென்றார்.

    சந்தேகம் உறுதியானது. மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலீஸார் ஜீப்பில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அவர்களின் மத்தியில் குல்லா போடாத ஒரு இளைஞனும் வண்டியில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தான். அது ராம்சந்தரேதான்.

    வண்டி புறப்பட்டது. அதை பின்தொடர முடியவில்லை. கடைசியில் ராம்சந்தரை பூக்கடை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றதாக தெரிந்து அங்கு சென்றார் சக்கரபாணி. காவல்நிலையத்தில் சிரித்தபடி நின்றிருந்தார் ராம்சந்தர். “ஏண்டா உனக்கு இந்த வேலை...அம்மா சொன்னதைப்பற்றி கொஞ்சமும் கேட்கலை இல்லையா? ...சரி வா பெயில் எடுக்கிறேன்” என கடுங்கோபத்துடன் அவரை திட்டினார். “தேவையில்லை ஏட்டா... அவ்வளவு பெரிய பெரிய தலைவர்களாலேயே இன்னும் சுதந்திரம் வாங்க முடியலை...நீ போராடி என்னத்தை வாங்கப்போறே” என இன்ஸ்பெக்டர் கேஸ் எழுதாமல் தன்னை வெளியே அனுப்பிவிட்டதை ராம்சந்தர் சொல்ல... அத்தனை மணிநேர பதற்றத்தை மீறி சிரிக்கத்துவங்கினார் சக்கரபாணி.

    ராம்சந்தரின் மதுவிலக்குப் போராட்டம் அத்துடன் முடிவுக்கு வந்ததா என்றால் இல்லை!..மதுவிலக்குக்காக தெருவில் இறங்கி ஒரு பக்கம் ராம்சந்தர் கொடிபிடித்துக்கொண்டிருக்க, அவருக்கு அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று அவரது வீட்டிலேயே பல மாதங்களுக்குப்பின் நடந்தது. ... அப்போது சக்கரபாணிக்கு திருமணமாகிவிட்டிருந்தது. ஒருநாள் செலவிற்கு பணம் இல்லாமல் வீட்டில் துழாவிக்கொண்டிருந்தார் ராம்சந்தர். வழக்கம்போல அம்மாவின் பீரோவிலும் தேடியபோது துணி அடுக்கவைக்கப்பட்ட அடுக்கில் துணிகளுக்கு மத்தியில் ஏதோவொன்று அவர் கைக்கு தட்டுப்பட்டது.

    வழக்கத்துக்கு மாறான பொருளாக தென்படவே, ஆவலுடன் அதை உள்ளேயிருந்து எடுத்த ராம்சந்தர் அதிர்ச்சியின் விளிம்புக்கே சென்றுவிட்டார்... அது பாதி குடிக்கப்பட்டு மீதம் இருந்த ஒரு மது பாட்டில். மதுவிலக்கை வலியுறுத்தி நாடகங்களும், தெருவில் இறங்கி போராட்டங்களும் நடத்திவர, சொந்த வீட்டிலேயே மது பாட்டில் இருந்தது கோபத்தை உண்டுபண்ணியது. மூக்கை பரபரபரவென தேய்த்துவிட்டுக்கொண்டு வீட்டின் நடுஹாலுக்கு வந்தார்.

    அங்கே தாயும் அண்ணியாரும் பிறந்த குழந்தையான மணியை கொஞ்சிக்கொண்டிருந்தனர்.

    “ யாரு இங்க மது குடிச்சது...”உச்சஸ்தாயியில் கத்தினார் எம்.ஜி.ஆர். ஒருவரிடமும் பதிலில்லை. என்னடா இது இப்படி அசிங்கமா சத்தம் போடறே... அக்கம்பத்தினர் கேட்டா என்ன நினைப்பாங்க... போய் வேலையைப் பாரு....” - சத்தியபாமாவின் பேச்சு இன்னும் கொதிப்பை ஏற்படுத்த, “ஓஹோ குடிக்கிறது தப்பு இல்லை. அது மத்தவங்களுக்கு தெரியறதுதான் உங்களுக்கு பிரச்னையா” - பதிலுக்கு எகிறினார் ராம்சந்தர்.

    “இது உன் அண்ணன் வாடகை தர்ற வீடு... உனக்கு பெரியவனே சும்மா கிடக்கான். நீ என்னமோ எகிறுறியே.. இஸ்டமிருந்தால் இரு இல்லேன்னா வெளியே போ...”சத்தியபாமா மகனுக்கு சளைக்காமல் குரலை உயர்த்திப் பேசினார். தாயின் பேச்சில் கொதிப்படைந்த ராம்சந்தர், கையிலிருந்த பாட்டிலை தரையில் ஓங்கி அடித்துவிட்டு சட்டையை மாற்றிக்கொண்டு ஒரு முடிவோடு விறுவிறுவென

    தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்... அவரது கால்கள் கடற்கரையை நோக்கி நடந்தன...
    தொடரும்...
    Posted : M.G.Nagarajan
    1 May 2020 6:56 PM
    Thanks for :
    Published : Naveenan
    Vikatan Vanna Thirai
    யாழ் இணையம்......... Thanks...

  8. #137
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஊழலை எதிர்த்து உழைப்பை மதித்து உழைப்பவர்களை பாதுகாத்திட உழைப்பவர்களை உயர்த்திட.....
    பல தியாகிகளின் ரத்தம் சிந்தி ஆரம்பித்த கட்சி....
    நமது புரட்சித்தலைவர் ஊழலை இல்லாமல் லஞ்சம் இல்லாமல் மக்களை வைத்து பணம் பார்க்காமல் அவரு உழைப்பால் சம்பாதித்த அவரது சொத்தையும் மக்களுக்காகவே அள்ளிக்கொடுத்த நாம் நேரில் பார்த்து பழகிய வள்ளல்...
    நமது புரட்சித் தலைவர் ஆட்சியில் லஞ்சம் இல்லை ஊழல் இல்லை ஏன் நமது புரட்சித்தலைவர் இருக்கும் வரை எதிர்க் கட்சி கருணாநிதி அவர்கள் மெரினா பீச்சில் ஓய்வெடுத்தார்...
    புரட்சித்தலைவர் மறைந்த பிறகு கருணாநிதி அவர்கள் முதலமைச்சரான பிறகு கண்ணில் எண்ணெய் ஊற்றி புரட்சித்தலைவர் ஆட்சியில் ஊழல் நடந்ததா என்று தனி படையை வைத்து தேடிப்பார்த்தேன் அலசி ஆராய்ந்து பார்த்தால் அதில் அவருக்கு கிடைத்த தகவல் நமது புரட்சித்தலைவர் உழைத்து சம்பாதித்த அவரது சொத்துக்களை விற்றதாக தான் அவருக்கு தகவல் கிடைத்தது தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை ஏன் நமது புரட்சித் தலைவர் ஆட்சியில் இருந்தபோது எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் யார் மேலேயும் குற்றம் சாட்ட முடியவில்லை.
    1987 வரலாறு மாறியது இதை யாராலும் மறுக்க முடியாது....
    இன்று உழைப்பாளர் தினத்தன்று தலைவர் சொன்னது போல் உழைப்பவரே உயர்ந்தவர் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு 2021 இதுவும் மாறும் என்று எதிர்பார்ப்போம்......... Thanks.........

  9. #138
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தற்போது (01-05-2020) இரவு 7 மணி முதல் புதுயுகம் டிவியில் "பெற்றால் தான் பிள்ளையா" திரைப்படம் ஒளிபரப்பாகி கொன்டிருக்கிறது
    அடுத்த வாரம் சன் லைப் டிவியில் மக்கள் திலகத்தின் காவியங்கள் திரைப்படங்கள்
    O3 - 05-2020 திங்கள் காலை 11 மணிக்கு "நாளை நமதே "
    05-05-2020 புதன் காலை 11 மணிக்கு "வேட்டைக்காரன்"
    O7-05 2020 வெள்ளி காலை 11 மணிக்கு "ஆனந்த ஜோதி " ஆகிய திரைப்படங்களை கண்டு மகிழவும்
    தகவல் : மதுரை ராமகிருஷ்ணன்....... Thanks...

  10. #139
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் வாரம் சன் டிவியில் இரவு காவியங்கள் ஒளி பரபாகும் விபரங்கள்... மே 5ம் தேதி "ரிக்க்ஷாக்காரன்"......... மே 7ம் தேதி "குடியிருந்த கோயில்".........

  11. #140
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஆமாம். யாரையும் கூட்டி கட்சி ஆரம்பிக்கலாமா? வேண்டாமா! இது சரியாக வருமா?! முதல்வர் பதவி யாருக்கு?! என்றெல்லாம் ஆலோசிக்காமல் தலைவர் நீதான் கட்சி இதுதான் என்று ரசிகர்களாகிய தொண்டர்களால் துவங்கப்பட்ட கட்சி இது. உலக அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றது இல்லை. இதுவே சரித்திரம், சாதனை, சகாப்தம்......... Thanks to mr.Thiagarajan.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •