Page 123 of 210 FirstFirst ... 2373113121122123124125133173 ... LastLast
Results 1,221 to 1,230 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1221
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றைய நாளில் நவம்பர் 4அன்று: எம்.ஆர். ராதாவிற்கு தண்டனை வழங்கப்பட்ட நாள்

    அன்றைய ஆண்டில் இதே நாளில் தான், நடிகர் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கில் நடிகர் எம்.ஆர். ராதாவிற்கு தண்டனை வழங்கப்பட்டது.

    அன்றைய ஆண்டில் இதே நாளில் தான், நடிகர் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கில் நடிகர் எம்.ஆர். ராதாவிற்கு தண்டனை வழங்கப்பட்டது.

    கடந்த 1967-ஆம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதியன்று மாலை 5 மணி வாக்கில் எம்.ஆர். ராதாவும், திரைப்படத் தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் போய் அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த சந்திப்பின் போது என்ன நடந்ததென்று இன்று வரை தெரியவில்லை.

    எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். ராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து, ராதா, எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    முதலில் சைதாப்பேட்டை முதன்மை நீதிமன்ற நீதிபதி எஸ்.குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில், ராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்தார். அதன்பிறகு, செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும், ராதா தரப்பில் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையும் வாதாடினார்கள்.

    ஒன்பது மாத கால வழக்கு விவாதத்திற்குப் பின்னர், இதே நவம்பர் 4-ம் தேதி நீதிபதி தனது 262 பக்கத் தீர்ப்பை வழங்கினார். அதில், வாசுவின் சான்றின் அடிப்படையிலும், ராதாவிற்கு எம்.ஜி.ஆர். மீது தொழில்முறை எதிர்ப்புநிலை இருந்ததன் அடிப்படையிலும் ராதா குற்றவாளியென முடிவு செய்ததாக கூறப்பட்டது.

    இக்குற்றத்திற்கென இந்திய தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25(1), 27 பிரிவுகளின் கீழும் அவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ராதாவின் வயது (அப்போது 57) கருதியே மேலும் கடுமையான தீர்ப்பு வழங்கவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

    ராதா மேல்முறையீடு செய்ததன் பேரில் வெறுமனே உயர்நீதிமன்ற விசாரணை சரியா என்று மட்டும் பார்க்காமல் சாட்சிகளை மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது தண்டனைக் காலத்தை ஏழிலிருந்து மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்து தீர்ப்பளித்தது.
    This day that year: On today's day-M.R.Radha's verdict on MGR shot case.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1222
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மக்கள்_திலகத்தின்_திரையுலக_வாழ்வில்

    #அடிமைப்பெண்...

    கே.சங்கர் இயக்கத்தில் மக்கள் திலகம்-ஜெயலலிதா நாயகன்,நாயகியாக நடித்து 1969ம் ஆண்டு வெளிவந்த அடிமைப்பெண் படத்தை பற்றி, அதன் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பற்றி, மக்கள் திலகம் வேங்கையன் பாத்திரத்தில் காட்டு மனிதனாகவும், அழகிய இளவரசராகவும் தூள் கிளப்பியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

    ஆனால் 1965 ம் ஆண்டிலேயே மக்கள் திலகம், தன் இயக்கத்தில் "அடிமைப்பெண்ணை" உருவாக்க திட்டமிட்டிருந்தார். சரோஜாதேவி, ஜெயலலிதா,கே.ஆர்.விஜயா ரத்னா, நம்பியார், அசோகன் என்ற பெரும் நட்சத்திர பட்டாளத்தோடு துவங்கியது படம்.

    நாம் பார்த்த // பார்த்துக்கொண்டிருக்கிற அடிமைப்பெண்ணில் "பண்டரிபாய்" மட்டுமல்ல அவரது நாட்டில் உள்ள பெண்கள் அனைவருமே அடிமை படுத்தப்படுவார்கள். ஆனால் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண்ணில், ஜெயலலிதா எதிரி நாட்டு மன்னனில் கைப்பற்றப்பட்ட தன் சொந்த நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டுக்கு அடிமையாக விற்கப்படுவார்.அவரை மீட்க மக்கள் திலகம் செல்வார். இப்படி திட்டமிடப்பட்ட இந்த பிரம்மாண்ட திரைப்படம் அப்போது கைவிடப்பட்டு, பின் முற்றிலும் புதிய கதைக்களத்தில் 1969 ம் ஆண்டு வெளிவந்தது.

    வெளிவராத முதல் அடிமைப்பெண் படத்தின் செய்தித்தாள் விளம்பரம் நீங்கள் காண்பது.

    தகவல் & புகைப்பட உதவி:http://mgrperannews.blogspot.com/2011/08/1_23.html?m=1... Sridhar Babu.........

  4. #1223
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1972 ல் இமாலய சாதனை படைத்த
    மாபெரும் வெற்றிக்காவியம்.
    மக்கள்திலகத்தின்" நல்லநேரம்" ஆகும்.
    ++++++++++++++++++++++++++++++++
    சென்னையில் 4 அரங்கில் 100 நாட்கள்.
    சித்ரா, மகாராணி,மேகலா,ராம்

    சென்னை சித்ரா...மகாராணி
    திருச்சி, சேலம் 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து சாதனை.

    மதுரையில் 2 அரங்கு வெளியீட்டு
    100 நாட்கள். அலங்கார்,மூவிலேண்ட்

    திருச்சி ஜூபிடர் 126 நாள்....
    பத்மாமணி 38 நாள்...ஒடி சாதனை.

    சேலத்தில் தொடார்ச்சியாக
    3 அரங்கில் 165 நாட்கள்.
    ஒரியாண்டல், பிரபாத், ராம்

    கோவையில் 2 அரங்கில் வெளி வந்து
    116 நாட்கள்..
    ராயல், சிவசக்தி

    நெல்லையில் 2 அரங்கில் வெளியீட்டூ
    105 நாட்கள்.
    சென்ட்ரல், அசோக்...தஞ்சையில் 2 அரங்குகள் யாகப்பா & ஞானம்...

    மற்றும்
    கடலூர்... வேலூர்...பாண்டி..
    காஞ்சிபுரம்.... தி.மலை...
    2 அரங்கில் வெளியீட்டு சாதனை..

    பெங்களுரில் 3 அரங்கில் 8 வாரங்கள்.

    இலங்கையில் 6 அரங்கில் 50 நாள்
    செல்லமஹால் 105, வின்ஷர் 84

    62 அரங்கில் 50 நாள்...

    முதல் சுற்றில் 6 மாதத்தில் 1 கோடியை வசூலில் கடந்தது....

    ஈரோடு 85 நாள்
    குடந்தை 77 நாள்
    தஞ்சாவூர் 77 நாள்
    கரூர் 77 நாள்
    பட்டுக்கோட்டை 77 நாள்
    திண்டுக்கல் 77 நாள்
    வேலூர் 80 நாள்
    பாண்டி 78 நாள்
    காஞ்சிபுரம் 70 நாள்
    மாயூரம் 70 நாள்
    விருதுநகர் 70 நாள்
    சிதம்பரம் 70 நாள்
    கடலூர் 70 நாள்
    ஆத்தூர் 68 நாள்
    திருப்பூர் 66 நாள்
    +++++++++++++++++++
    சாதனை... சரித்திரம் ...சகாப்தம்...
    நல்லநேரமாகும்........ukr...

  5. #1224
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    # நியூ மன்னாரன் கம்பெனி டுபாக்கூர் தங்கவேலுவும், 23ஆம் புலிகேசி வடிவேலுவும் #...



    என்னடா நம்ம கனடா டுபாக்கூர் தங்கவேலுவோட எப்படி வடிவேலு வந்தார் அப்படீன்னு யாரும் குழம்ப வேண்டாம், கதைய சொல்றேன் சரியா !


    நம்ம பக்கத்தில் இருந்து இரண்டு நாளைக்கு முன்புதான் " போலட் பெரம்பு நாத் " படம் இங்கேயும், இலங்கையிலும் காத்து வாங்கிய கதையை எழுதியிருந் தோம், அதுவும் நம்ம டுபாக்கூர் தங்கவேலு இலங்கையில் 50 லட்சம் வசூல் செய்தது என்று பதிவு போட்டதனால் நாம் பதிலுக்கு கேழ்வரகில் நெய் வடி ந்த கதையை விளக்கியிருந்தோம்,
    உடனே தங்கவேலு குதித்துக் கொண்டு சத்தியமாக இலங்கையில் இந்த இந்த இடங்களில் எல்லாம் தாறுமாறா ஓடுச்சப்பா என்று யாழ்ப்பாணம் தொடங்கி கொழும்பு வரையிலும் ஒரு பதினைந்து இருபது ஊர்களை குறிப்பிட்டு வழக்கம் போலவே அங்கே 200நாள் இங்கே 300 நாள் என்று தரையில் சசிகலா ஓங்கி அடித்து சத்தியம் செய்தது மாதிரி செய்து 50 லட்சம் வசூல் ஆனதாக கதறியிருக்கிறார் ( கடைசியா நன்றி சிவாஜி குரூப் என்று நன்றி நவிலல் படலம் வேறு )

    சரி இதெல்லாம் யாரு
    தங்கவேலுவிடம் கேட்டது? அப்படியே பொங்கி கொட்டுறாக,

    நீ அப்பவே பெரிய " நடிகன் " சத்யராஜ் மாதிரி பயங்கரமா பொய்க் கதை அளந்து கொண்டு வலம் வரும் அல்லக்கை என்று உன் சம்பந்தப்பட்ட ஆள்களே சர்டிபிக்கேட் கொடுக்கும் போது இப்போதும் அந்த அளக்கும் குணம் கொஞ்சம் கூட மாறவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது,

    இப்படித்தான் இருக்க வேண்டும், புடிச்ச புடிய கடைசி வரைக்கும் விட்டு விடக்கூடாது சரியா !

    இப்போ இதெல்லாம் பெரிய விஷயம் இல்ல,
    பதிவையும் போட்டு விட்டு கடைசியா நம்ம வடிவேலு சொல்வாரே " ம் கிளப்புங்கள் " என்று
    அதே போல் சிவாஜிக்கு ஒரு பட்டம் கொடுத்திருக்கிறார் பாருங்கள்

    உண்மையிலேயே எனக்கு சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது,

    வேலை செய்யும் போதும் கூட நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டே இருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், எப்படிப் பட்ட காமெடி
    நீங்களும் கண்டிப்பாக சிரிப்பீர்கள் என்று நம்புகிறேன்,

    வேற ஒண்ணும் இல்லீங்க சிவாஜி ( எழுதும் போது கூட சிரிப்பை அடக்க முடியவில்லை ) " அகில உலக வசூல் சக்கரவர்த்தி " யாம்,

    அடப்பாவிங்களா உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா இல்லையா?

    அஞ்சு விரலுலயே அள்ளித் திங்க சோத்தக் காணோமே இதுல ஆறு விரல் வேறயா?

    இந்த மாதிரி ஒரு பட்டம் சிவாஜிக்கு தங்கவேலு கொடுப்பார் என்று தெரிந்துதான் ஹாலிவுட்டின் முதல் ஜேம்ஸ்பாண்ட் சீன் கானரி கூட அக்டோபர் 31ந் தேதியுடன் விடு ஜுட் என்று போய் சேர்ந்துட்டார் போல,

    சீன் கானரி கூட ஒரு டிரைவரின் மகனாகப் பிறந்து சாதாரண ஒரு பால்காரராக வாழ்க்கையைத் தொடங்கியதை என்றும் மறைத்தவர் கிடையாது, ஆனால் இங்கே நாலு காசு கையில் வந்தவுடன் தண்டவாளத் துண்டு பார்ட்டிகள் சுதந்திரப் போராட்ட தியாகிகள் குடும்பம் ஆனதை நாம் எல்லோரும் பார்த்தோம்,

    ஏண்டா உள்ளூரிலேயே சவத்து மூதிய நாத்த
    ஆளில்ல இதுல அகில உலக வசூல்சக்கரவர்த்தி !

    "மிர்ச்சி " சிவா "தமிழ் படம் " என்ற ஒரு படத்துக்கு பிறகு " அகில உலக சூப்பர் ஸ்டார் " என்னும் பட்டத்தை வைத்திருக்கிறார்
    தயவு செய்து அதையும் பறித்து கணேசருக்கு கொடுத்துராதீங்கப்பா பயம்மா இருக்கு,

    ஏற்கனவே "நவராத்திரி " படத்தையும், " கை கொடுத்த தெய்வம் " படத்தையும் சல்லி சல்லியா பிரித்து சங்கர் சார் பதிவு போட்டிருக்கிறார்,

    நான்கு அரங்கில் 100 நாள் ஓட்டி விட்டு அதுல வேற பெருமை பீத்தல்,

    படம் வந்த நேரத்தில் எந்த சிவாசியின் நடிப்பு சிறந்தது என்று பரிசுப்போட்டி எல்லாம் வைத்து அப்படியும் வேலைக்காகாமல் டிக்கெட் கிழித்து படம் ஓட்டியதை அப்போதைய " கல்கண்டு " இதழில் நார் நாராய் கிழித்து எழுதியது மறந்து விட்டதா? அது மட்டுமல்ல தெருக்கூத்து நாடகத்தில் சாவித்திரியை மறைக்கும் அளவுக்கு அய்யா கர்ண கடூரமா க கத்தி நடித்ததை அன்றைய ஏடுகள் சுட்டிக்காட்டியதும் எவ்வளவு பெரிய கேவலம்?

    பட்டறையில் தயார் பண்ணிய வசூலைக் கூட போட துப்பில்லை, வந்துட்டார் பதிவு போட,

    நவராத்திரி படம் மட்டுமல்ல இவர்கள் பெரிய லாடு லபக்கு போல பில்டப் கொடுக்கும் பட்டணமா, தகரப்பதக்கம், இடிந்த மாளிகை, ராசா இப்படிப்பட்ட படங்கள் எத்தனை மறு வெளியீடுகள் கண்டது என்பதை நிரூபிக்க முடியுமா?

    இத்தனை வருடங்களில் ராசாவும், இடிந்த மாளிகையும் ஒரு ஐந்தாறு தடவை வெளியாகியிருக்குமா?
    மற்ற தகரம் உட்பட எல்லா படங்களுமே நிரந்தர தூக்கமாய் கும்பகர்ணன் தூக்கம் தூங்குவதை நாங்கள் சொல்லவில்லை சந்தேகம் இருந்தால் மீரான் சாகிப் தெருவில் போய் கேளுங்கடா குப்பைகளா,

    " கோலி சோடா " படத்தில் அந்த நான்கு
    பசங்களைப் பார்த்து மதுசூதன ராவ் சொல்லுவார் பசங்களா போய் அந்த பக்கம் விளையாடுங்க என்று

    அதேபோல் தலைவர் எத்தனை முறை கணேசனை மூக்கு முகரய எல்லாம் பேத்து மரண அடி கொடுத்திருக்கிறார் என்பதை உங்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டாம் உங்களுக்கே நன்றாக தெரியும்,

    இந்த டிஜிட்டல் காலத்திலேயே இடிந்த மாளிகை படத்தை ஆல்பர்ட் அரங்கில் 2 வாரம் ஆளில்லாமல் பக்கத்தில் இருந்த டாஸ்மாக்கில் சரக்கு வாங்கிக் கொடுத்து ஒரு நாலைந்து பேரை வைத்து பணம் கொடுத்து ஓட்டி விட்டு, மதுரையில் படம் வெளியான 2 வது வாரத்தில் இருந்து வாங்கம்மா வாங்க கோரா பட்டுப்புடவை தர்றோம் வாங்க வாங்க என்று தூக்கு தூக்கி படத்தில் கணேசன் புடவை விக்கிறது மாதிரி விளம்பரப் படுத்தியும்
    25 நாளை கடந்ததாக விழா எடுத்தாலும் போட்ட காசு கைக்கு வந்ததா என்று கேட்டால்???????

    இந்த லட்சணத்துல ஒரு நாலைந்து ஊரில் இவர்களே ஒரு வாரம் இரண்டு வாரம் என்று ஓட்டிவிட்டு கடைசியில் இணைந்த 100 வது நாள் என்று கொடுத்தார்கள் பாருங்கள் ஒரு விளம்பரம்,

    எப்பேர்ப்பட்ட அயோக்கியத் தனம்
    இப்போதே இப்படி என்றால் அந்தக்காலத்தில்?

    மேற்கு மாம்பலம் சீனிவாசாவில் " சிக்காமியோட செல்லையா " படம் ஓட்டுன கதையை சொன்னால் நாறி விடும்,

    எங்கள் குமரியில்
    " ரோசப்பாட்டு லூசுதுரை " யை மனத் துணிவோடு இழுத்த வரலாறு பெரிய கண்ணீர் வரலாறு,


    இப்படி எல்லாம் சதுரங்க வேட்டை பட மோடிமஸ்தான் வேலையெல்லாம் பார்த்து விட்டு அதையும் சாதனை பட்டியலில் வெட்கமில்லாமல் சேர்த்துக்கொள்வது

    ஏண்டா நீங்கல்லாம்
    எப்படி இந்த மாதிரி?

    ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ப்
    ஹிட்லர் தோற்றுக் கொண்டிருக்கும் போது கூட இன்னொரு பக்கம் எந்த தயக்கமும் இல்லாமல் பொய்யன் கோயபல்ஸ் ஹிட்லர்
    வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தான்

    அதை விட மோசமான
    கூட்டம்

    அப்படிப் பார்த்தால் இப்போது தலைவரின் டிஜிட்டல் செய்யப்பட்ட படங்கள் அனைத்தும் வெளியிட்ட நாளிலிருந்து இந்த கொரோனா நோய் வரும் வரைக்கும் இடை வெளி இல்லாமல் ஓடிக்கொண்டே இருந்தது,

    இதுவே கணேசன் படங்கள் என்றால் இவர்கள் இதற்கு முன் வெற்றிகரமான 100, 200, 300 வது இணைந்த வாரம் என்று விளம்பரம் கொடுத்திருப்பார்கள்

    1990 களில் துக்ளக் பத்திரிகையில் திரு. முக்தா சீனிவாசன் அவர்கள் ஒரு தொடர் எழுதினார்,
    அந்த தொடரில் தலைவர் எப்படிப்பட்ட
    கரிஷ்மா வெற்றியின்
    சொந்தக்காரர் என்பதை விலாவாரியாக சொல்லியிருப்பார்
    அதில் ஒரு வார்த்தை
    குறிப்பிட்டிருப்பார்

    "எம்ஜிஆர் அவர்களை வைத்து மற்றவர்கள் மிகப்பெரிய லாபகரமான படங்களை எடுத்துக் கொண்டிருந்தாலும் நானும் பாலாஜியும் கடைசி வரை அசையாமல் நின்று கொண்டிருந்தோம்
    அது எதனால் என்பது
    எங்களுக்குள்ளே முடிந்து போனதாக இருக்கட்டும் "

    இதை அவர் எதனால் சொன்னார் என்பது அவருக்குத்தான் தெரியும், சந்தேகம் உள்ளவர்கள் துக்ளக் இதழ் இப்போதும் குருமூர்த்தி தலைமையில் வெளி வந்து கொண்டிருக்கிறது
    அங்கு சென்று பார்த்து மெய்ப்பித்துக் கொள்ளலாம்

    அவர் இதற்கு முன்னும் ஒரு தலைவர் படம் மற்ற நடிகர்களின் 25 படங்களுக்கு சமம் என்று பகிரங்கமாக அறிவித்தவர்...

    தலைவரை வைத்து படம் பண்ணாத ஏக்கம் அவர் ஆழ் மனதில் எப்படி இருந்தது என்பது மட்டுமல்ல தலைவரின் பவர் என்ன என்பதையும் தெளிவாக உலகுக்கு
    உணர்த்தியவர்,

    கமல்ஹாசன் நடித்த
    " அபூர்வ சகோதரர்கள் " படத்தின் வெற்றி விழாவுக்கு ஆந்திராவின் திரு. என். டி. ஆர், கேரளாவின் திரு. மது , கர்நாடகா வின் திரு. ராஜ்குமார்
    மூவரும் கலந்து கொண்டனர்
    அப்போது மேடையில்
    கன்னட எம்ஜிஆர் ராஜ் குமார் அவர்களே என்று கமல் விளித்தார்,
    விழா முடிந்ததும் நிருபர்கள் அந்த பட்டத்தைக் குறித்து
    கேட்ட போது ராஜ் குமார் சொன்னது

    " இது எனக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒரு விஷயம் காரணம் அண்ணன் எம்ஜிஆர் அவர்கள் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி, அவர் படங்கள் இங்கு மட்டுமல்ல எங்கள் மாநிலத்திலும் மிகப்பெரிய வசூலை குவித்தது, குவித்துக் கொண்டிருக்கிறது
    எனவே எனக்கு இந்த பட்டம் கேட்பதற்கு கூச்சமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பெருமையாகவும் இருக்கிறது"

    இதை விட வேறு என்ன வேண்டும் நமக்கு,

    ஆந்திராவில் தலைவரின் பெயர் எப்படி தெரியுமா?
    "MONEY GUARANTEE
    RAMACHANTHIRAN "

    ஏதாவது ஒரு படம் ஏதாவது ஒரு இடத்தில் தலைவர் படத்தை விட கொஞ்சம் வசூல் கூட வந்து விட்டால் போதும், கணேசன் குஞ்சுகள் உடனே வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பது
    ஆனால் ஏபிசி மூன்று
    சென்டர் வசூல் கேட்டால் வாயை பெவிக்கால் போட்டு ஒட்டி பெரிய போர்வையாகப் போர்த்தி பதுங்குவது,

    இதெல்லாம் ஒரு பொழப்பு?

    உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல you tube இல் திரு.பழ. கருப்பையா, அமீர், உதயகுமார், ஜாக்குவார் தங்கம் போன்றவர்கள் இருக்கிறார்கள், அவர்களிடம் போய் உங்கள் வசூல் கணக்கை சொல்லுங்கள்

    பழைய செருப்பு பரிசாக கிடைக்கும் சரியா?

    தலைவரின் பக்தன்

    ஜே.ஜேம்ஸ் வாட்..........(J.JamesWatt) ............

  6. #1225
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். நடித்து வெளிவரவிருந்த “இணைந்த கைகள்” படத்தை பற்றி குறிப்பு ...

    நித்தின் போஸ் இயக்கத்தில் “நியு தியேட்டர்ஸ்” நிறுவனம் 1934-ஆம் ஆண்டு “டாக்கு மன்சூர்” (கொள்ளைக்காரன் மன்சூர்) என்ற பெயரில் ஒரு படம் தயாரித்து வெளியிட்டது. அதில் ராஜ்கபூரின் தந்தை பிரித்திவிராஜ் கபூர், கே.எல்.சைகல் உட்பட திரையுலக ஜாம்பவான்கள் பலரும் நடித்திருந்தனர்.

    “வார்த்தைகள் சொல்லமுடியாதவற்றை காமிராக் கண்கள் படம்பிடித்துக் காட்டிய படம்“ என்று இப்படத்திற்கு புகழாரம் சூட்டப்பட்டது.

    “இது ஒளிப்பதிவாளர்களின் படம்” என அமர்க்களமாக விமர்சிக்கப்பட்டது.

    இப்படத்தின் கதையைப் பற்றி யாரோ எம்.ஜி.ஆரிடம் சொல்லப்போக அவருக்கு அது மிகவும் பிடித்துப்போனது. இதையே மையமாக வைத்து ரவீந்தரை கதை எழுத வைத்து வடிவமைக்கப்பட்ட படம்தான் “இணைந்த கைகள்”.

    1969- ஆம் ஆண்டு இறுதியில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெயரில் “இணைந்த கைகள்” கதையை பிரமாண்டமான திரைப்படமாக எடுக்க நினைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அதற்காக இரவு பகல் பாராது கண்முழித்து பாடுபட்டார் ரவீந்தர். “ ‘

    மிக பிரம்மாண்டமான அரங்க அமைப்போடு அணை வெள்ளம் உடைத்து கொண்டு வருவது போல் 3 டி பாடம் போல் திட்டமிட்டார் தலைவர்
    ரானில் வாழ்ந்த மன்சூர் என்ற குடித்தலைவனின் வாழ்வில் நடந்த நிஜமான சம்பவங்களை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை இது. பன்மொழிகளில் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் தெலுங்கு தயாரிப்பில் என்,டி,ராமராவ் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

    கதை-ரவீந்தர், வசனம்–சொர்ணம், இசை-எம்.எஸ்.விஸ்வநாதன், பாடல்கள்-வாலி, புலவர் வேதா, ஒளிப்பதிவு-வி,ராமமூர்த்தி, , எடிட்டிங்-ஜம்பு, சண்டைப் பயிற்சி-ஷியாம் சுந்தர், கலை-அங்கமுத்து, இயக்கம்-சாணக்யா என விளம்பரப்படுத்தப்பட்டு “இணைந்த கைகள்” படம் பெரும் பரபரப்பையும் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆவலையும் உண்டு பண்ணியிருந்தது.
    டாக்கு மன்சூர்” இந்திப் படத்தில் கதாநாயகன் மன்சூர் ஒரு கொள்ளைக்காரன்.

    கதையின்படி (“யாதோன் கீ பாராத்” பாணியில்) தாயும், மகனும் தனித்தனியே பிரிகின்றனர். கதாநாயகன் மன்சூர், மூசா என்ற ஏழையினால் காப்பாற்றப்பட்டு வளர்க்கப்படுகிறான். ஏழை எளியவர்களுக்கு உதவுகிறான். மக்களின் ஆதரவை பெறுகிறான், மன்சூர், அரசனை எதிர்த்து போராட்டம் புரிகிறான்.

    இளவரசியுடன் அவனுக்கு காதல் மலர்கிறது. மன்சூருக்கு பலவிதத்திலும் உதவி புரிகிறாள். அவ்வூரில் பயங்கரமான தண்ணீர்ப் பற்றாக் குறை நிலவுகிறது. இளவரசி மன்சூருக்கு துணை நிற்கின்றாள். ஒரு மலையை உடைத்து அவ்வூரில் தண்ணீர் பஞ்சம் தீருவதற்கு வழிவகுக்கிறார். மன்சூருக்கு தன் தாயைப் பற்றிய இரகசியம் பின்னர் தெரிய வருகிறது. இளவரசியின் தந்தை ஹாரூன் ரஷீதுக்கும் மன்சூரின் பிறப்பைப் பற்றிய ரகசியம் பின்னர் தெரிய வருகிறது. இறுதியில் மன்சூர் அரசாட்சியைப் பிடிக்கிறான், இதுதான் கதை.

    இப்படம் முழுக்க முழுக்க ஈரானில் எடுப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இந்திப் படமாக வெளிவந்த “டாக்கு மன்சூர்” படக்கதையிலிருந்து சற்று மாறுபட்டு எழுத வேண்டி ரவீந்தரை எம்.ஜி.ஆர். பணித்தார். அதன் பிறகு கொள்ளைக்காரன் பாத்திரத்தை ஒரு குடித்தலைவனாக மாற்றி கதையமைக்கப்பட்டது.

    ஆனால் ஈரான் அரசாங்கம் இதற்கான அனுமதி தரவில்லை. எப்படி அனுமதி தரும்? வம்சாவழியாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்த ஒரு தேசத்தில் ஒரு கொள்ளைக்காரன் புரட்சி செய்தி முடியாட்சியை கைப்படுத்துவதாக அமைந்த கதைக்கு படப்பிடிப்பு நடத்த அந்த நாடு அனுமதி வழங்குமா?

    ஈரானில் பஹ்லவி வம்சத்தின் இரண்டாம் மன்னரும். அந்நாட்டின் கடைசி அரசருமான முஹம்மது ரிசா ஷா பஹ்லவியின் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயம் அது. ஷாவின் ஆட்சியில் அரசரைக் கிண்டல் செய்தால் நேராக மரணதண்டனைதான்.

    சித்ரா கிருஷ்ணசாமியை வைத்து ஈரான் நாட்டு அரசாங்கத்திற்கு படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதினார்கள். உலகப் புகழ்ப் பெற்ற ஈரானிய நடிகை பர்தீன் மூலமாக இதற்கு அனுமதி கோரி எடுத்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

    அதன் பிறகு இந்தியாவில் நடப்பது போன்று கதையை மாற்றியமைத்து உயர்மட்ட சிபாரிசு வைத்து அனுமதி கோரினார்கள். எதிர்பார்த்ததுபோல் எந்த முயற்சியும் பலிக்கவில்லை.

    நடிகை கீதாஞ்சலி எம்.ஜி.ஆர். இருவரும் இணைந்து நடித்த படக்காட்சிகள் படமாக்கப்பட்டன. சத்யா ஸ்டூடியோவிலேயே பிரமாண்டமான காடு, குகை போன்ற ஒரு செட் நிர்மாணிக்கப்பட்டது, நான்கு பெண்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவது போன்றும், அனாதைக் குழந்தைகளுக்கும் எம்.ஜி.ஆருக்குமிடையே உரையாடல்கள் நடப்பது போன்றும்,காட்சிகள் படமாக்கப்பட்டன.

    வெறும் இரண்டே இரண்டு நாட்கள் நடந்த படப்பிடிப்போடு இப்படம் தடைபட்டு போனது, படத்தயாரிப்பும் கைவிடப்பட்டது. இதனால் மிகவும் துவண்டு போனது ரவீந்தர் மட்டும் தான். எம்.ஜி.ஆர். வழக்கம்போல் இதைப்பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தயாரிப்புக்கான ஆயத்த வேலைகளை தொடங்கச் சொல்லி ரவீந்தருக்கு உத்தரவு போட்டு விட்டார்.

    இப்படத்திற்கு ஈரானிய நாட்டு கதாநாயகியை அறிமுகம் செய்ய எம்.ஜி.ஆர். நினைத்திருந்தார். திட்டமிட்டதுபோல் இப்பட்டம் மட்டும் வெளிவந்திருந்தால் இது மற்றொரு தங்க வாள் பரிசு பெறும் “நாடோடி மன்ன”னாக இருந்திருக்கக்கூடும்.

    இப்படத்திற்காக எழுதப்பட்ட அத்தனை பாடல்களும் “சூப்பர் டூப்பர் – ஹிட்” பாடல்கள்.

    “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தில் “நிலவு ஒரு பெண்ணாகி” என்ற பாடல் – [எம்.ஜி.ஆர். – மஞ்சுளா]
    அதே படத்தில் இடம்பெற்ற “அவளொரு நவரச நாடகம்” என்ற பாடல் [எம்.ஜி.ஆர். – லதா]
    “சிரித்து வாழ வேண்டும்” படத்தில் “கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்” என்ற பாடல் [ எம்.ஜி.ஆர். – லதா]
    மேலும் ஒரு நீண்ட கவ்வாலி பாடல்
    மேற்கண்ட இந்த நான்கு பாடல்களும் “இணைந்த கைகள்” படத்திற்காக எழுதப்பட்ட பாடல்கள். இப்படத் தயாரிப்பு கைவிடப்பட்டபின் இப்பாடல்கள் வேறு சில படங்களில் பயன்படுத்தப்பட்டு மகத்தான வரவேற்பைப் பெற்றன.
    இந்த பட பிடிப்பு சம்பந்தமாக கலைமாமணி ரவீந்தர் அவர்கள் ஈரான் வரை சென்று பேசினார்கள்
    அப்பொழுது தலைவரின் அன்பேவா ஸ்டில்களை கைவசம் எடுத்து சென்று இருந்தார் அதை பார்த்த ஈரான் நடிகர் ஜார்ஜ் மன்னர் படத்தை எடுத்து வந்து இருக்கிரீகள் என்று வியந்தனர் ...
    தலைவர் முயற்ச்சி பலிக்க வில்லை என்றவுடன் எக்ஸ்போ கிளம்பி விட்டார்
    நன்றி அப்துல் கையூம்
    கலைமாமணி ரவீந்தர்.... Elangovan Raja...

  7. #1226
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஆரம்ப காலங்களில், எம்.ஜி.ஆர் படங்களுக்கு கண்ணதாசன் பாடல்கள்தான். இடையில் இருவருக்கும் பனிப்போர். அதையொட்டி, எம்.ஜி.ஆர் படங்களுக்கு கண்ணதாசன் எழுதுவது குறைந்து போயிற்று

    ஆனாலும், எம்.ஜி.ஆருக்கு, கண்ணதாசன் மீது ஒரு அபரிமிதமான ஈர்ப்பு உண்டு. ஆகவே தான், அவர் முதல்வர் ஆன பிறகு கண்ணதாசனை அரசவைக் கவிஞராக்கினார்.

    கண்ணதாசன் எல்லா இடங்களிலும் புகுந்து புறப்பட்டவர். மகாபாரதத்தில் கண்ணன் தேவகிக்கு சிறையில் பிறந்தான், ஆனால், ஒரே இரவில் வேறு இடம் பெயர்ந்து யசோதையால் வளர்க்கப்பட்டான்.

    `ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தவன்’ கண்ணன் அதை, அப்படியே, தாய் சொல்லைத் தட்டாதே படத்தில், கதாநாயகி, கதாநாயகன் எம்.ஜி.ஆரைப் பற்றி பாடுவதாக எடுத்துக்கொண்டார்.

    `ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்

    உருவில் அழகாய் வளர்ந்தவனாம்

    ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்

    உயிரில் உயிராய் கலந்தவனாம்

    சாத்திரம் சரித்திரம் படித்தவனாம்

    தவறு செய்பவரை பிடிப்பவனாம்

    ராத்திரி பகலாய் அலைவானாம்

    ரகசியப் போலீஸ் சேவகனாம்.

    இந்த வரிகளில், எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் திருப்தி., அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயத்திற்கும் பொருத்தமான விளக்கம்.

    பட்டுக்கோட்டைக்கு பிறகு, எம்.ஜி.ஆருக்காக தத்துவ பாட்டை இயற்றியவர் கண்ணதாசன். இதே படத்தில், இன்னொரு பாட்டு,

    ”போயும் போயும் மனிதனிக்கிந்த

    புத்தியைக் கொடுத்தானே – இறைவன்

    புத்தியை கொடுத்தானே அதில்

    பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து

    பூமியைக் கெடுத்தானே – மனிதன் பூமியை கெடுத்தானே”.

    இதை, எம்.ஜி.ஆர் பாடும்போது, தலையில் தூக்கி வைத்து மக்கள் கொண்டாடினார்கள்.........sbb...

  8. #1227
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1964 ல்
    பணக்காரகுடும்பம்
    7 திரையில் 100 நாள்
    15 திரையில் 77 நாள்
    35 திரையில் 50 நாள்

    அடுத்து...
    படகோட்டி
    26 ஊரில் 50 நாள்
    15 திரையில் 10 வாரங்கள்
    சென்னை பிளாசா 101
    மதுரை
    நீயூசினிமா 93
    திருச்சி
    சேலம்
    கோவை 12 வாரங்கள்.

    வேட்டைக்காரன்
    சென்னை சித்ரா
    மேகலா, பிராட்வே
    சேலம் நீயுசினிமா
    மற்றும் 22 ஊரில்
    50 நாள்.

    அடுத்து...
    தெய்வத்தாய்
    சென்னை பிளாசா கிரவுன், புவனேஸ்வரி
    100 நாள்....மற்றும்
    திருச்சி,சேலம், மதுரை
    12 வாரங்கள்...
    26 அரங்கில் 50 நாள்.

    தொழிலாளி...
    18 அரங்கில் 50 நாள்..
    சேலம் திருச்சி, மதுரை
    75 நாள்
    சென்னையில்...
    சித்ரா 70 நாள்
    பிராட்வே 70 நாள்
    மேகலா 70 நாள்
    ++++++++++++++++
    தாயின் மடியில்
    என்கடமை 10 வாரங்கள்
    கடந்து ஒடியது..........ukr...

  9. #1228
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1964 ல் ஆண்டின் முதல் காவியம் வேட்டைக்காரன்
    கும்பகர்ணனை நிரந்தரமாக தூங்க வைத்தது....

    அடுத்து புகழுடன் வந்த வெற்றிக்காவியமான என்கடமை காவியத்தை சில போலிகள் வதந்தி பரப்பியது...
    அதையும் மீறி என்கடமை பல ஊர்களில் வெற்றிநடைப்போட்டது.
    அடுத்ததடுத்து வெளியீடுகளில் என்கடமை வெற்றி மகத்தானது...
    கைகொடுத்த தெய்வம் பகல் போடும் பொழுது
    என்கடமை 3 காட்சி பல திரையில் திரையிடப்பட்ட சாதனைகள் ஏராளம்.

    அடுத்து...
    பணக்கார குடும்பம்
    1964 ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் ...அதிக ஒட்டம்..
    அதிக 100 நாள் யாவும்
    பணக்கார குடும்பம் திரைப்படமாகும்...

    அடுத்து..
    தெய்வத்தாய் வெளியாகி சாதனை படைத்தது.
    சென்னையில் பிளாசா
    கிரவுன், புவனேஸ்வரி
    100 நாட்கள் ஒடி சாதனை.

    தொழிலாளி
    வேட்டைக்காரன் திரைப்படத்திற்கு பின் குறுகிய நாட்களில் சாதனை....

    அடுத்து சரவணா பிலிம்ஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் படகோட்டி
    அலிபாபாவுக்கு பின்
    தலைவர் வண்ணத்தில் ஜொலித்த ஈஸ்ட்மென்கலர் திரைப்படமாகும்.
    சென்னை பிளாசாவில் 101 நாட்கள் ஒடியது.

    சில திரையில் 71 நாளில் எடுக்கபட்டது.
    14.01.1965 ல் எங்கவீட்டுப்பிள்ளை வெளியாகியதால் பொங்கல் முதல் நாள்...

    சென்னை கிரவுன்
    நெல்லை, தஞ்சை
    திண்டுக்கல், பாண்டி கரூர், ஈரோடு
    வரை ஒடியது....

    படகோட்டி படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான
    பரிசு வழங்கபட்டது.

    தாயின்மடியில்
    18.12.1964 அன்று வெளியானது.
    இத்திரைப்படமும் பல திரையில் வெற்றிகள் கண்டது.
    மொத்தத்தில்...
    1964 ல் வெளியான மக்கள்திலகத்தின்
    7 திரைப்படங்களும் வெற்றியை பதித்தது..பல வெளியீடுகளில் இன்று வரை வெளியாகி சாதனை படைக்கிறது.

    கணேசனின்...
    கலர்படங்களான
    புராண கும்பகர்ணன் சாந்தியிலும்...
    சிறகொடிந்த(புதிய) பறவை பாரகனில்
    ஒட்டப்பட்டது...
    எஸ்.எஸ்.ஆர் கணேசன் காம்பினேஷனில்
    கைகொடுத்த தெய்வம்
    பச்சை விளக்கு
    அடுத்து
    சாவித்திரி கணேசன்
    காம்பினேஷனில் நவராத்திரி
    100 நாள் படு மட்டமான வசூலில் தலா 5 லட்சம் கூட வசூல் இல்லாது ஒட்டபட்டது...
    ஆண்டவன் கட்டளை
    முரடன் முத்து
    தோல்வியை தழுவியது......ukr...

  10. #1229
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சுய விளக்கமளிக்கும் விமர்சனம்.
    புரட்சித் தலைவர் மந்திரி குமாரி மற்றும் சர்வாதிகாரி நடித்துவிட்டார்.
    அடுத்தது கணேசமூர்த்திய டி.ஆர் சுந்தரம் தயாரிப்பில் நடிக்க செல்லும்போது தலைவர் டி.ஆர் சுந்தரத்தை பற்றி சொல்லி தனது காரை கொடுத்து அனுப்பினார். திரும்பிப்பார் தோல்வி, இல்லறஜோதி இதுவும் தோல்வி. மூன்றாவது படத்துக்கு கால் சீட் கொடுக்காமல் கணேசமூர்த்தி எஸ்கேப். மீண்டும் தலைவரை வைத்து அளிப்பாபாவும் நாற்பது திருடர்களும் எடுக்கப்பட்டது.
    இப்படி தான் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படப்பிடிப்பின் பொது திரு. டி.ஆர்.சுந்தரம் நடவடிக்கை!!!!
    கணேசமூர்த்தி பிள்ளைகள் இதை பற்றி பேசமாட்டார்கள்!!!...sb...

  11. #1230
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கணேசமூர்த்தி "பிள்ளைகளிடம்" தனுஷ்கோடி ஆதித்தன் என்று சொல்லி பாருங்கள் பாப்போம். குப்பென்று கோபம் வரும். காரணம்:
    நான் கேளிவிப்பட்டது....பை எலேச்டின் ஆம் ஆண்டு நடந்தது திரு. தனுஷ்கோடி ஆதித்தன் போக ரோடு வெற்றிபெற்றதற்கான சுவரொட்டி "தேர்தல் நேரத்தில் தொகுதி பக்கம் வராததற்கு நன்றி" நான் வெற்றி பெற்றுவிட்டேன்!!!!!......sb...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •