Page 121 of 210 FirstFirst ... 2171111119120121122123131171 ... LastLast
Results 1,201 to 1,210 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1201
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தங்கத்திலே_வைரம்

    இயக்குனர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில் ஜெமினி கணேசன் சரோஜாதேவி நடித்து வெளிவந்த பணமா பாசமா திரைப்படம் வெளியாகி தமிழகமெங்கும் வசூல் மழை கொட்டியது

    பட்டி தொட்டி எங்கும் அன்று பிரபலமாகி அனைத்து ரசிகர்களால் முனுமுனுக்க பட்ட இலந்த பழம் பாடல் இந்தப் படத்தில்தான் இடம்பெற்றது.

    மதுரை தங்கம் திரையரங்கில் பணமா பாசமா படத்தின் வெற்றி விழா நடந்தது.

    இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அந்தப் படத்தின் இயக்குனர் என்ற முறையில் சமீபத்தில்தான் புதிதாக வாங்கிய காரில் சென்னையிலிருந்து மதுரை வந்தார்.

    விழாவில் பேசிய கே எஸ் கோபாலகிருஷ்ணன் ,

    "என் படத்திற்கு நிகர் என் படம் தான்... வசூல் மன்னர்களை எல்லாம் ஓவர்டேக் பண்ணி விட்டது இந்தப் படம் "

    என்று பெருமிதமாக பேசினார் .விழா முடிந்து வெளியே வந்த கோபாலகிருஷ்ணன் காரை காணவில்லை.

    தியேட்டர் மேனேஜரிடம் கேட்க அவர் சேதம் அடைந்த ஒரு காரை கொண்டு வந்து இதோ இதுதான் உங்கள் கார் என்று சொல்ல அதிர்ந்து போனார் கோபாலகிருஷ்ணன் .

    "என்னாச்சு ?" என்று கேட்டார் ....

    வசூல் மன்னன் என்று எம்ஜிஆரை தான் அவரது ரசிகர்கள் சொல்வார்கள்.. வினியோகஸ்தர்களும் சொல்வார்கள்...

    ஆனால் நீங்கள் வசூல் மன்னர்களை எல்லாம் படம் ஓவர்டேக் பண்ணிடுச்சு என்று பேசினீர்கள் அல்லவா ....

    அதான் தங்களுடைய தலைவரை ஓவர்டேக் செய்ததாக நீங்கள் பேசியதால் ஆவேசப்பட்ட எம்ஜிஆர் ரசிகர்கள் உங்க காரை நொறுக்கி விட்டார்கள் "

    என்று சொல்ல அதிர்ச்சி அடைந்தார் கோபாலகிருஷ்ணன் .

    "இனி ஒரு நிமிடம் கூட நீங்க மதுரையில் இருக்கக்கூடாது உங்களை எங்களால் பாதுகாக்க முடியாது "

    என்று தியேட்டர் நிர்வாகம் வேறு ஒரு கார் ஏற்பாடு செய்து அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தது .

    சென்னை வந்து சேர்ந்த கோபாலகிருஷ்ணன் முதல் வேலையாக அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களை சந்தித்து முறையிட்டார் .

    "நான் எதார்த்தமாக தான் பேசினேன்... எம்ஜிஆரை குறிப்பிட்டு பேசவில்ல என்ற விஷயத்தை நீங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் '

    என்று அண்ணாவிடம் கோரிக்கை வைத்தார் கோபாலகிருஷ்ணன். மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தார் அண்ணா .ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.

    சில நிமிட மௌனம் நீடிக்கவே அண்ணாவிடம் "சரி கிளம்புகிறேன் "என்று சொல்ல அண்ணாவும் "சரி" என்று தலையாட்டினார். கிளம்பிவிட்டார் கோபாலகிருஷ்ணன்.

    "நாமோ காங்கிரஸ்காரன்.....எம்ஜிஆர் அவர் கட்சிக்காரர் ....அதனால் எம்ஜிஆரை விட்டுக்கொடுப்பாரா. விட்டுக்கொடுக்க மாட்டார் .நடப்பது நடக்கட்டும்"

    என்று நொந்து கொண்டு கிளம்பி போய்விட்டார் கே எஸ் கோபாலகிருஷ்ணன்.

    இது நடந்து ஒரு வாரத்திற்கு பிறகு குற்றாலத்திற்கு தன் உதவியாளர் ஒருவரோடு ஓய்வெடுக்கச் என்றார் இயக்குனர் கோபாலகிருஷ்ணன்.

    ஐந்தருவியில் அவர் எண்ணை தேய்த்துக் குளித்து கொண்டிருந்த போது மேலே இரண்டு வாட்டசாட்டமான முரட்டு ஆசாமிகள் இவரை உற்றுப் பார்த்தபடி இருக்க

    "ஐயையோ மதுரைகாரர்கள் இங்கேயும் வந்து விட்டார்களே "

    என்று பதறி அவர் தன் உதவியாளரை அழைத்து

    "என்னை அட்டாக் பண்ண வந்து இருக்காங்க ....நீ போய் பார்க்கிங்கில் இருக்கிற என் காரை எடுத்துக் கொண்டு வா "

    என்று சொல்ல அதன்படி காரை எடுத்துக்கொண்டு குளித்தும் குளிக்காமலும் காரில் ஏறி ஹோட்டல் அறைக்கு சென்று விட்டார் இயக்குனர் கோபாலகிருஷ்ணன்.

    ஹோட்டல் சென்று ஜன்னல் வழியே வெளியே பார்த்தபோது அங்கேயும் அந்த இரண்டு முரட்டு ஆசாமிகள் அவர்களை நோட்டம் விட்டபடியே இருந்தனர்.

    கோபாலகிருஷ்ணனுக்கு உடல் நடுங்க தன் உதவியாளரை அழைத்து ,

    "பிரச்சனை அன்றே முடிந்துவிட்டதே இன்னும் ஏன் என்னை பின் தொடர்ந்து வருகிறார்கள்"

    என்று கேட்டு வர சொல்லி அனுப்பியிருக்கிறார்.

    உதவியாளரும் அவர்களை அணுகி , "ஏன் எங்களைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வருகிறீர்கள் "என்று கேட்க அந்த இருவரில் ஒருவர்

    "அந்தப் பிரச்சினை நடந்ததில் இருந்து எங்க டிபார்ட்மென்ட் ஆட்கள் உங்கள் பாதுகாப்பிற்காக பின் தொடர்ந்து வருகிறோம் .இது தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு .நாங்கள் ரகசிய போலீஸ் "

    என அந்த இருவரும் சொல்ல நெகிழ்ந்து கண்கலங்கி விட்டார் கோபாலகிருஷ்ணன்...

    "அறிஞர் அறிஞர்தான் .....
    நான்தான் அண்ணாவை தப்பாக நடை போட்டு விட்டேன் .....

    உடனே சென்னை கிளம்பி அண்ணா அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்...

    என்று சென்னை கிளம்பினார். அண்ணாவை சந்தித்து நீங்கள் செய்த உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று கண்ணீர் மல்க சொன்னார் இயக்குனர் கோபாலகிருஷ்ணன்.

    அதற்கு அண்ணா அவர்கள் ,

    "கே எஸ் ஜி நீங்க ஒன்னு செய்யுங்க... நாளைக்கு எம்ஜிஆரை வைத்து நீங்க படம் எடுக்கப் போறதா ஒரு விளம்பரம் கொடுங்க ....

    அவர் உங்கள் படத்தை நடிக்கிறாரோ இல்லையோ அது முக்கியமில்லை ....

    அப்படி ஒரு விளம்பரம் வந்தால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு ஏற்படும் ...

    என அண்ணா அவர்கள் சொல்லி அனுப்பினார் ...

    அண்ணாவின் பேச்சுக்கு மறுப்பு சொல்ல மாட்டார் எம்ஜிஆர் .

    இதனால் எம்ஜிஆரிடம் கேட்காமலே விளம்பரம் தயார் செய்தார் மறுநாள் நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் வந்தது .

    புரட்சி நடிகர் எம் ஜி ஆர் நடிக்கும் #தங்கத்திலே_வைரம் என்ற விளம்பரம் வெளிவந்தது.(இந்த பெயரில் பின்னால் சிவகுமார் ஜெயசித்ரா நடிக்க திரைப்படமாக வெளிவந்தது)

    விளம்பரம் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே கோபாலகிருஷ்ணனின் கற்பகம் ஸ்டூடியோவில் எம்ஜிஆர் ரசிகர்கள் திரண்டு வந்து டைரக்டருக்கு எங்க வாழ்த்துக்களை சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு போனார்கள்.

    இந்த சம்பவம் நிகழ்ந்த ஒரு வாரத்திற்கு பின் ரஷ்யா சென்றுவிட்டார் கோபாலகிருஷ்ணன் .பணமா பாசமா திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார் .

    விழா முடிந்து 10 நாட்களுக்கு பின் வீட்டிற்கு வந்த கோபாலகிருஷ்ணன் அவருடைய மகன்களில் ஒருவரை காணாமல் திகைத்து கேட்க இரண்டாவது மாடியிலிருந்து கீழேவிழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

    இரவு நேரம் இந்த விஷயம் எம்ஜிஆருக்கு தெரிய கால நேரம் பார்க்காமல் மருத்துவமனைக்கு விரைந்தார் எம்ஜிஆர்.
    மருத்துவமனையில் இருந்த அனைவரும் இவரைப் பார்க்க கூடி விட்டனர் .

    எம்ஜிஆர் வந்ததும் அவரை பார்க்க வந்தவர்களிடம்

    "எலும்பு நரம்பு இப்படி எந்த பிரிவு இருக்கும் அந்தந்த ஸ்பெஷலிஸ்ட் களை வைத்து ட்ரீட்மெண்ட் குடுங்க....

    தேவைப்பட்டால் வெளியூரில் இருந்தும் ஸ்பெஷலிஸ்ட் களை வரவழைங்க... எவ்வளவு செலவானாலும் நான் பார்த்துக்கிறேன் ...என்ன செய்வீங்களோ தெரியாது சீக்கிரமே குழந்தை எழுந்து நடக்கனும் ....பேசணும் ...பழைய மாதிரி அவனை கொண்டு வந்துவிடனும்"

    என்று எம்ஜிஆர் கேட்டுக்கொண்டார் குழந்தையின் அப்பா ரஷ்யாவில் இருப்பதை தெரிந்து கொண்ட எம்ஜிஆர் ஒரு அப்பாவின் ஸ்தானத்தில் இருந்து தினமும் மருத்துவமனைக்கு வந்து பார்த்து நலம் விசாரித்து விட்டு செல்வதை கண்ணுங்கருத்துமாக செய்தார் .

    அவர் மகனும் ஓரளவு உடல்நலம் தேறி விட்டான் இன்று நாம் நம் மகன் உயிரோடு இருக்க காரணம் எம்ஜிஆர்தான் என்று திருமதி கோபாலகிருஷ்ணன் சொல்ல கண்களில் நீர் பொங்கி இருக்கிறது கோபாலகிருஷ்ணனுக்கு.

    "தெய்வம் என்பது எங்கேயும் இல்லை... மனித உருவில் இருக்கும் என்பதை எம்ஜிஆர் உருவத்தில் தெரிந்துகொண்டேன் "

    என்று குறத்தி மகன் படப்பிடிப்பில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கோபாலகிருஷ்ணன்..........vr...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1202
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று
    (31.10.1975. - 31.10.2020)
    மக்கள் திலகம் அவர்கள்
    வெள்ளித்திரைக்கு வழங்கிய...
    சமுதாய சீர்திருத்த
    கொள்கை காவியம்....
    மக்கள் உள்ளம் கவர்ந்த
    உன்னத காவியம்....
    சரித்திரம் படைத்த
    மாபெரும் காவியம்.....
    புரட்சித்தலைவரின்
    புரட்சிக்காவியம்.....
    பல்லாண்டு வாழ்க
    திரைக்காவியம்
    வெளியான திருநாள்....
    +++++++++++++++++++++++++++
    1975 ல் வெளியான...
    இதயக்கனி வெளியாகிய பின்
    31,10,1975.... தீபாவளி திருநாளில்
    வெளியாகி வெற்றிகளை குவித்த
    வசூல் புரட்சியை கண்டு..
    வெற்றிக்கொடி நாட்டிய காவியம்.
    +++++++++++++++++++++++++++++
    1974 ல் தீபாவளி திருநாளில்
    வெளியான உரிமைக்குரல் காவியத்துடன் வெளியான
    கணேசனின் ... அன்பைதேடி...
    இன்று வரை விலாசம் தெரியாது
    போனது....

    1975 ல் தீபாவளி திருநாளில்...
    வெளியான பல்லாண்டு வாழ்க காவியத்துடன் .... மூக்குடைபட்டு
    ஆஸ்பத்திரியில் அனுமதி ஆகிய
    டாக்டர் சிவா...வே இன்று வரை
    அட்ரஸ் இல்லாது முடங்கினாரு..
    +++++++++++++++++++++++++++++++
    சாதனை நாயகன் எம்.ஜி. ஆர் அவர்களின் திரைப்படங்கள் சாதாரண நாளில் வந்தாலே....
    தாக்குபிடிக்க முடியாத கணேசன் படங்கள்....
    பண்டிகை காலங்களில் வந்தால்
    என்னாகும்....
    சேறும்....சகதியுமாகி... சின்னபின்னாமாகி விடும்.....
    ++++++++++++++++++++++++++++++++
    சி... சென்டர் என அழைக்கப்படும்
    வேலூர் மாவட்ட ஆம்பூர் ராமு அரங்கில்
    பல்லாண்டு வாழ்க திரையிடப்பட்டு
    5 காட்சியில் சக்கைபோட்டது.........ukr...
    +++++++++++++++++++++++++++++

  4. #1203
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கும் வெற்றிநடை போட்ட
    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
    "பல்லாண்டு வாழ்க"...
    திரைப்பட வெற்றிகள்....
    ++++++++++++++++++++
    சென்னை தேவிபாரடைஸ்
    104 நாள் வசூல் : 7,93,428.80
    சென்னை அகஸ்தியா
    104 நாள் வசூல் : 4,28,967.19
    சென்னை சரவணா
    70 நாள் வசூல் : 2,30,891.37
    ++++++++++++++++++++++++
    278 நாள் வசூல் : 14,53,287.36
    +++++++++++++++++++++++++
    எந்த நடிகனுக்கும் சென்னையில் இந்த குறைந்த நாளில் இவ்வசூல் கொடுத்ததில்லை...
    ++++++++++++++++++++++
    மதுரை அலங்கார் 105 நாள்
    மதுரை சினிப்பிரியா 28 நாள்
    வசூல் : 4,17,355.35
    +++++++++++++++++++++++++
    திருச்சி சென்ட்ரல் 100 நாள்
    வசூல் : 3,19,730.85
    நெல்லை பூர்ணகலா 100 நாள்
    வசூல் : 2,60,534.80
    சேலம் அப்சரா 105 நாள்
    வசூல் : 3, 35,116.40
    கோவை ராஜா / முருகன்
    ஒடிய நாள் 104 நாள்
    வசூல் : 4,01,570.65
    ++++++++++++++++++++++
    குடந்தை செல்வம் 71 நாள் : 2,05,985.35
    தஞ்சை ராஜா 70 நாள் : 2,01,243.60
    பரங்கிமலை ஜோதி 76 நாள் : 2,76,156.00
    +++++++++++++++++++++++++++++
    தமிழ்நாடு, இலங்கை,பெங்களுர்
    மொத்தம் 38 திரையில் 50 நாட்கள்..
    15 திரையில் 10 வாரங்கள்...
    முதல் வெளியீட்டில் மட்டும்
    85 லட்சம் வசூல் மொத்த வசூல் ஒரு கோடி ரூபாய் கடந்த காவியம்............ukr...

  5. #1204
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*28/10/20 அன்று அளித்த தகவல்கள்*
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாய மச்சீந்திரா என்ற படத்திற்காக கொல்காத்தா பயணமானார் அவருடன் 15,16 வயது நிரம்பிய இளம் கதாநாயகியர்*உடன் சென்றனர் .* *கொல்கத்தாவில் சாலையின் ஓரமுள்ள கால்வாய்கள், சாக்கடைகள் ஆகியவற்றை பல இடங்களில் தாண்டித்தான் செல்ல வேண்டும் .எம்.ஜி.ஆர். அந்த வயதில் துள்ளி குதித்துதான் அந்த அகலமான சாலையில் உள்ள சாக்கடைகளை ஒரே பாய்ச்சலில் மறுபுறம் செல்ல தாண்டுவார் . அப்படி ஒருநாள் செய்யும்போது அவரது காலணியில் ஒன்று அறுந்து பழுதாகிவிடுகிறது .* உடனே தங்கும் இடத்திற்கு திரும்பிவிடுகிறார் .* நாளை காலை ஸ்டுடியோவிற்கு படப்பிடிப்பிற்கு செல்வதற்கு காலணி வேண்டும் என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை கடைக்கு செல்வதற்கு துணைக்கு அழைக்கிறார் . இரவு நேரமாகிவிட்டது கடையை அடைந்திருப்பார்கள் .* நாளை காலையில் நான் வாங்கி தருகிறேன். இப்போது வேண்டாம் என்கிறார் . நாளை காலையில் 7 மணிக்கெல்லாம் புறப்பட வேண்டும் என்று சொன்னதற்கு ,கவலை வேண்டாம் பதற்றம் அடையாதே .காலையில் சீக்கிரம் கடை திறக்கப்படும் . நாம் வாங்கி கொண்டு புறப்படலாம் என்று என்.எஸ்.கிருஷ்ணன் ஆறுதல் சொல்கிறார் .* காலையில் எழுந்ததும் எம்.ஜி.ஆர். தயாராகிவிட்டு ,என்.எஸ்.கிருஷ்ணனை*கடைக்கு புறப்பட அழைக்கிறார் .* என்.எஸ்.கிருஷ்ணன் கொஞ்சம் பொறு என்று சொல்லிவிட்டு பழைய பேப்பரில் சுற்றப்பட்டுள்ள ஒரு பண்டலை பிரிக்கிறார் .அதில் எம்.ஜி.ஆரின் பழைய காலணி பழுது பார்க்கப்பட்டு, பாலிஷ் போடப்பட்டு பளபள என்று மின்னுகிறது .அதை பார்த்த எம்.ஜி.ஆர். மிரண்டு போகிறார் .கலைவாணர் தன்னைவிட வயதில் மூத்தவர் . திரைப்பட குழுவினருக்கு குரு* போன்றவர் . அனுபவஸ்தர் அவர் தன்னுடைய காலணி அறுந்து போனதை எடுத்து பொறுப்புடன் கடையில் கொடுத்து தைத்து, பாலிஷ் போட்டு இரவோடு இரவாக அதை வாங்கி பாதுகாப்பாக வைத்திருந்து கொடுத்ததை எண்ணி வியந்தார் .அப்போது கலைவாணர் ,ராமச்சந்திரா, உனக்கு இளம் வயது .உன்னுடன்* வருபவர்கள் இளம் நடிகைகள் .நீ இருக்கும் சூழ்நிலையில் அப்படிதான் நடந்து கொள்ள மனம் இடம் கொடுக்கும் .அறுந்து போனது ஒரு காலணி தானே என்று அலட்சியம் காட்ட கூடாது . வாழ்க்கையில் நீ கற்றுக்கொள்ள இன்னும் எவ்வளவோ இருக்கிறது .* வாழ்க்கையில் நீ கடந்து செல்லும் தூரமும் மிக அதிகம் .இப்போதுதான் திரையுல பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறாய் ஆகவே பொறுப்புடன் எளிமையாக நடந்து கொண்டால் எதையும் சாதிக்கலாம் என்று அறிவுரை கூறினாராம் .* அதனால்தான் அந்த கலைவாணரை தன் குருவாக, ஆசானாக வாழ்நாள் முழுவதும் எம்.ஜி.ஆர். மதித்து ,மரியாதை செய்து போற்றி வந்தார் .* அது மட்டுமல்ல அவருடைய நடவடிக்கைகளிலும் கலைவாணரின் பாதிப்பு இருப்பது போல நடந்து கொண்டார் .**


    பறவைகளை வேட்டையாடுவதில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அலாதி பிரியம்*அவர் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம்,கோவை போன்ற நகரங்களுக்கு காரில் செல்லும்போது இடதுபுறம் அமர்ந்திருப்பார் .* கார் செல்லும்போது சாலையில் ஓரத்திலுள்ள மரங்களில் உள்ள பறவைகளை துப்பாக்கியால்* சுட்டு வீழ்த்துவது வழக்கம் .* சுட்டு வீழ்த்தப்பட்ட பறவைகளை* அவர் எங்கு தங்குகிறாரோ, அங்கே தன்னுடன் வந்திருக்கும் உதவியாளர்கள், படப்பிடிப்பு குழுவினருடன் சமைத்து சாப்பிடுவது வழக்கம் .* ஒரு முறை மதுராந்தகம் அருகில் வந்தபோது* சுடப்பட்ட பறவைகளை ஒரு மூட்டையில் சேகரிக்கும் போது, கார் ஒரு இடத்தில நிற்கும்போது எம்.ஜி.ஆர். தன காலுக்கு கீழே துப்பாக்கியை வைத்துவிட்டு சற்று அயர்ந்து தூங்கிவிட்டார் .* திடீரென்று சிறிது நேரம் கழித்து அவர் கால் பட்டு துப்பாக்கி வெடித்து குண்டு கார்* கதவில்**பாய்ந்தது .*.அந்த டபுள் பேரல் துப்பாக்கி**வெடித்தபோது தலைக்கு மேலே தூக்கி எறியப்பட்டது .* இந்த சம்பவத்தினால் எம்.ஜி.ஆரின் தர்மம்தான் அவர் தலையை காத்தது என்று* சொன்னார்களாம் .* அவர் வேட்டையாடுவதில் எவ்வளவு நுட்பமாக இருந்தாரோ , அப்படி ஒவ்வொரு தடவையும் இந்த துப்பாக்கி, தோட்டா, குண்டு ஆகியவற்றை அடிக்கடி சந்தித்தே வாடிக்கையாகி விட்டது என்பார்கள் .**


    பிரபல இசை அமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன்* தமிழகத்தில் இருந்து சுமார் 25 நபர்களை தேர்ந்தெடுத்து மைலாப்பூரில் ஒரு இடத்தில அவர்களுக்கு* வயலின் பயிற்சி அளித்து கொண்டிருந்தார் .* மாணவர்கள் தங்களால் இயன்ற அளவில் ஒரு சொற்ப பணத்தை தங்கள் குருவிற்கு பயிற்சி கட்டணமாக அளிக்கிறார்கள் . அந்த பணத்தில் உரிய முறையில் பயிற்சி அளிக்க மிகவும் கடினமாக இருப்பதாக வருத்தத்துடன்* குன்னக்குடி வைத்தியநாதன் தெரிவிக்கிறார் . இந்த செய்தி எம்.ஜி.ஆர். அவர்களின் காதுகளை எட்டுகிறது .**.*உடனே எம்.ஜி.ஆர். தனியார் நடத்தி வந்த அந்த பயிற்சி பள்ளிக்கு ரூ.5 லட்சம் நிதியளித்து அதை அரசு சார்பில் நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்தார்*இப்படி இயல், இசை, நாடகம், நடனம் என்று எல்லா இடத்திலும் தன்னை வைத்து பார்த்தார் .* தன்னைத்தான் எல்லார் மத்தியிலும் பார்த்தார் .* அப்படிப்பட்ட மகோன்னதமான மாமனிதர் பல்வேறு விஷயங்களில் அள்ளி அள்ளி தந்துகொண்டே இருக்கிறார்.* ஆனாலும் அவர் எப்படி உடை அணிந்தார் . எப்படி தலையை சீவி இருந்தார்* எப்படி நடந்தார், பாடினார், ஆடினார் என்று அவரது ரசிகர்கள் பலர் ரசித்து,நினைத்து கொண்டு இருக்கலாம் .* ஆனால் இதையெல்லாம் தாண்டி அந்த ஆத்மா, ஒரு மோர் விற்றுக்கொண்டிருந்த மூதாட்டியை அழைத்து அவருக்கு உதவிகள் செய்ய வேண்டும். அவருக்கு உற்றார் உறவினர் இல்லை,அவர் யாராக இருந்தாலும் சரி ,* எப்படியாவது அவருக்கு உதவ வேண்டும் என்று நினைத்ததே அந்த ஆன்மா தான் பல்வேறு மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக, ஒளிவிளக்காக ,அந்த மன்னாதி மன்னனின் நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிறது .**


    திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி :* *குணத்தில் உயர்ந்த, பண்பில் மிகுந்த* காவியமாம் நம்முடைய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு புதுமை தலைவர புத்துயிர் ஊட்டக்கூடிய தலைவர் , புது தாக்கம் தரக்கூடிய தலைவர். ஏழை எளியோர் துயர் துடைப்பதற்காக வாழ்ந்த தலைவர்* ஏழை எளியோருக்காகவே வாழ்ந்து* தன்னுடைய துயர் பற்றி கவலைப்படாமல் வாழ்நாளில் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று தி.மு.க.வில் இருந்த காலகட்டத்தில் முயன்று அது முடியாமல் போன கட்ட த்தில்* எல்லோரும் தவறான வழியில் பணம் சேர்க்கிறார்கள் என்கிற நிலையை மாற்றியாக வேண்டும் ,ஏழை எளியோருக்கு நல்வாழ்வு கிடைக்க நாம் பாடுபடவேண்டும் என்ற உத்வேகத்தில் தன்னுடைய உள்ள கிடக்கை உரியவர்களிடத்தில் எடுத்து சொல்லும்போது அது தட்டி கழிக்கப்பட்டது . கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் கோரிக்கைகள் மறுக்கப்பட்ட நேரத்திலேதான் இனி ஏழை எளியவர்க்கு வாழ்க்கை கிடைக்க வேண்டுமானால் நாம் முயன்றுதான் ஆக வேண்டும் . நாம் சவாலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்கின்ற நிலையில் தி.மு.க.வில் இருக்கின்ற 184 எம்.எல்.ஏக்களை எதிர்த்து நாம் குரல் கொடுத்தால் நாம் காணாமல் போய்விடுவோம் என்கிற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருக்கழுக்குன்றம், ராயப்பேட்டை ஆகிய இடங்களில் குரல் கொடுத்தார் என்றால் அது ஒரு சாதாரண விஷயமல்ல. அருமை தோழர்களே, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை என்பது அன்றைய* கால கட்டத்தில், திரைப்பட நடிகராக ,மின்னி கொண்டிருந்த நேரத்தில் ஒரு மாநில முதல்வர்* என்கிற அந்தஸ்திலேதான் அவருடைய வாழ்க்கை நடைபெற்று கொண்டிருந்தது .அந்த அளவிற்கு சொந்த வாழ்விலே முன்னேற்றத்தை கண்டிருந்த அந்த தலைவர் எதற்காக இந்த மாநில மக்களுக்காக கோரிக்கைகள் வைத்து போராட வேண்டும் . நான் நன்றாகத்தானே இருக்கிறேன் நான் வசதியோடு தானே இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் என்ன குறை கண்டுவிட்டேன் என்று நினைத்திருப்பாரேயானால் அந்த கேள்விக்கணைகளையே தொடுத்திருக்க மாட்டார் .* இந்த கேள்விக்கணைகளை தொடுத்தால் எதிர்காலம் நமக்கா அல்லது நமக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடுமா என்ற சிந்தனையே இல்லாமல் , ஏழை எளியவர்களுக்கு நம் வாழ்நாளிலே ஏதாவது நல்லது செய்தே ஆகவேண்டும் என்ற முயற்சிக்குயார்**முட்டுக்கட்டை போட்டாலும் சரி, திரைப்படத்தில் நான் பேசுகின்ற* வசனம் போல ஒன்றுமில்லாமல் போய்விடக்கூடாது .அது* உள்ளபடியே* வெட்ட வெளிச்சமாக மக்களுக்காக நான் வாழ்ந்தாக வேண்டும் என்கிற உறுதியோடு திருக்கழுக்குன்றத்திலும் ராயப்பேட்டையிலும்* குரல் எழுப்பிய நேரத்தில்தான் 184 எம்.எல்.ஏக்கள் வைத்திருந்த தி.மு.க.வால்*புரட்சி தலைவர் எழுப்பிய குரல் அப்படியே நசுக்கப்பட்டது .அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தூக்கி எறியப்பட்டார்* .அப்படி தூக்கி எறியப்படுவதற்கு முன்னால் வேறு யாராவதாக இருந்தால், சிந்தித்து இருப்பார்களேயானால்*நிச்சயமாக அந்த கேள்விக்கணைகளை தொடுத்திருக்க மாட்டார்கள் .


    இன்றைக்கு கட்சியில் இல்லாமல் , வேறு பொறுப்புக்களில் இல்லாமல்*இருக்கின்ற பல நடிகர்களை நான் பார்த்திருக்கின்றேன். ஆசைப்படுகிறார்கள்*முதல்வர் பதவிக்கு வரவேண்டுமென்று. ஆனால் வசதி, வாய்ப்புகள்* எதையுமே விட்டு கொடுக்க தயாராக உள்ள நடிகர்களைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம்*எத்தனையோ நடிகர்களை சொல்கிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப்போல எந்த துயரத்திற்கும்* எந்த போராட்டத்திற்கும் நான் தயார் என்று சொல்லி வரக்கூடிய தலைவர்கள் இன்று வரை யாரும் பட்டியலில் இல்லை அருமை தோழர்களே .அந்த வகையில் அமெரிக்காவில் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகிய ரீகனுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் நம்முடைய தானை தலைவர் ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் .என்பதை நினைத்து பார்க்கும்போது நமக்கெல்லாம் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது .* 1972 அக்டொபர்* மாதம் 10ம் தேதி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஆதரவாக* முதன் முதலில் உடுமலை பேட்டையில் குரல் கொடுத்த ஒப்பற்ற இளைஞர்* உடுமலை இஸ்மாயில் என்பவர் .* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை* தி.மு.க.வில் இருந்து நீக்கியது தவறு. அதற்காக நான் விஷம் அருந்தி உயிரை மாய்த்து கொள்கிறேன்*என்று உடுமலையில் முக்கிய சாலைகளில் முழக்கம் இட்டு ,விஷத்தை பருகிய*உடுமலை இஸ்மாயில் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக விஷம் அருந்தினார் என்ற செய்தி பத்திரிகைகளில் பிரசுரம் ஆகாமல் இருக்க அன்றைக்கு இருந்த ஆளும் கட்சியான தி.மு.க மறைக்க முயன்று*. அராஜக வேளைகளில் ஈடுபட்டது . போயும் போயும் எம்.ஜி.ஆருக்காக* உயிர் நீப்பதா**அது வரலாறாக மாறிவிடும் என்று தடுத்து முற்பட்ட நேரத்திலே நாங்களெல்லாம் ஒன்று திரண்டு, பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று உடுமலை இஸ்மாயில் எம்.ஜி.ஆர். அவர்களுக்காகத்தான் உயிர் நீத்தான்* எம்.ஜி.ஆர். மீது அவர் பற்று கொண்டவர். எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி நடனம் ஆடக்கூடியவர் தொடர்ந்து பத்து நாட்கள் சைக்கிளில் சுற்றியபடியே எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி வந்தவர் எம்.ஜி.ஆருக்காகதான் உயிர் நீத்தார் என்பது அன்றைய தினமலர் நாளிதழில் செய்தியாக புகைப்படத்துடன் வெளியாகி மிக பிரபலமானது .இந்த செய்தியை தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் கவனத்திற்கு நாங்கள் எல்லாம்* கொண்டு செல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அந்த கால கட்டத்தில் அக்டொபர் 15ம் தேதி, என்னுடைய தலைமையிலே, நான் ஏற்கனவே* *குறிப்பிட்டது போல*நான் கல்லூரி மாணவர் தலைவராக இருந்தேன் .* அந்த பதவியில் இருந்தபோது எனக்கு மிக பெரிய நெருக்கடி எல்லாம் இருந்ததை தூக்கி எறிந்துவிட்டு எனது நண்பர்களோடு சேர்ந்து நான் அச்சகத்திற்கு சென்று, எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்துவதற்காக கோரிக்கை வைத்தபோது எந்த அச்சகத்திலும்* ஆளும் கட்சியின் எதிர்ப்பை சந்திக்க பயந்து எங்களுக்கு நோட்டீஸ் அச்சடித்து தரமுன்வரவில்லை .* எனவே நாங்கள் நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அன்றைக்கு ஒரு பேப்பரில் எங்களது செய்தியை எழுதினோம். பின்பு எம்.ஜி.ஆர். பக்தர் பாபு என்கிற எனது நண்பர் மூலம்* ஒரு கட்டான பேப்பர்களை வாங்கி வந்து கார்பன் வைத்து, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்காக 1972ல் அக்டொபர் 15ம் தேதி* காலை 9 மணிக்கு உடுமலை கல்பனா அரங்கு அருகில் இருந்து* ஊர்வலம் துவங்கும் என்று குறிப்பிட்டபோது எங்களை தேடிவந்து தி.மு.க.வினர் மிரட்டிய காலகட்டத்தை எல்லாம் எண்ணி பார்க்கின்றேன் .* அங்கே எல்லோரும் பயந்து கொண்டு, வருவதற்கே பயந்து இருந்த அந்த சூழலிலே வெறும் 30 நபர்களுடன் புறப்பட்ட ஊர்வலமானது*கல்பனா அரங்கில் இருந்து பல்வேறு சாலைகளின் வழியே சென்று மீண்டும் கல்பனா அரங்கிற்கே வந்து சேர்ந்தது . 30 நபர்களுடன் புறப்பட்ட ஊர்வலம் நிறைவடையும் போது 3000நபர்களுடன் முடிவுற்றது .* அந்த நிறைவு கூட்டத்தில் என்னை உடுமலை எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக தேர்ந்தெடுத்த அந்த வரலாறுகளை* எல்லாம் எண்ணி பார்க்கின்றபோது இன்றைக்கு பல்வேறு தலைவர்களை பார்க்கின்றோம் . திரட்டப்பட்ட கூட்டத்தைத்தான் அந்த தலைவர்கள் பார்க்கிறார்களே தவிர திரண்ட கூட்டத்தை யாருமே பார்க்கவில்லை .**


    அருமை தோழர்களே, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வருகிறார் என்று சொன்னால் அப்போதெல்லாம் கூட்டம் லட்சக்கணக்கில்* தானாக சேர்ந்துவிடும் .இந்தக்கால இளைஞர்களுக்கு அந்த காட்சியை எல்லாம் காண கொடுத்துவைக்கவில்லை என்றே சொல்லவேண்டும் .* ஆனால்* எனக்கும், எனக்கு சமமான நண்பர்கள், தோழர்களுக்கு அந்த காட்சிகள் பசுமையாக நினைவில் நிற்கும் . நின்றாள் மாநாடு, நடந்தால் ஊர்வலம் ,பார்த்தால் பொதுக்கூட்டம் என்ற அளவில்தான் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கை முறை அன்றைக்கு இருந்தது .* அவர் நிற்கின்ற இடத்திலே குறைந்த பட்சம் ஆயிரம் பேர் எங்கிருந்துதான் வருவார்களோ தெரியாது. அப்படி திரண்டு வந்து விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு தலைவரை இன்றைக்கு என் வாழ்நாளிலே தேடி தேடி பார்த்தாலும் கிடைப்பது அரிதாக உள்ளது .* அந்த அளவிற்கு மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக அவர் திகழ்ந்தார் .* மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ* வேண்டும்* என்கிற பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர். உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்கிற போராட்ட களத்திற்கு*அடித்தளம் அமைத்து கொடுத்தவர் .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.அப்படி போராட்ட களத்திலே புரட்சி தலைவர் இறங்கிய நேரத்திலே எங்களை போன்றவர்கள் ஆங்காங்கே ஊர்வலங்கள்* நடத்தியபோது அங்கே நமது நண்பர் சைதை துரைசாமி ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை குறிப்பிட்டு கழகத்தின் முதல் தியாகி என்று சைதை துரைசாமியை* சொன்னார் என்றால் அன்றைக்கு தி.மு.க.தலைவர் கருணாநிதி கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் ,கருணாநிதிக்கு*எலுமிச்சம் பழம் மாலை போட்டு, அந்த தி.மு.க. மேடையிலேயே கருணாநிதியை விமர்சனம் செய்து பேசுவது என்பது சாதாரண விஷயமல்ல.*அத்தகைய எந்த உயிருக்கும் ஏதாவது பாதிப்பு வரலாம் என்கிற அந்த நிலையை கூட எண்ணி பார்க்காமல்**எதிர்ப்பு குரல் கொடுத்த அந்த நண்பர்களையெல்லாம் நினைத்து பார்க்கின்றபோது நாம் உள்ளபடியே, அன்றைக்கு கழகத்தில் தலைவர் எம்.ஜி.ஆருக்காக உயிர் கொடுக்க துணிந்த எத்தனையோ பேர் இருக்கின்றார்கள் .ஏன் நண்பர் சைதை துரைசாமியை நான் குறிப்பிட்டு சொன்னேன் என்றால்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவரை ஆறுமாத காலம் தன் அலுவலகத்திலேயும்*ராமாவரம் தோட்டத்து இல்லத்திலேயும்* வைத்து**பாதுகாத்தார் . அப்படி பாதுகாக்கப்பட்ட* *அதுபோன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள்**அண்ணா தி.மு.க. வின் முன்னேற்றத்திற்காக உழைத்தார்கள் .* என்பதை எண்ணி பார்க்கும்போது அப்போதெல்லாம் ஒரு கூட்டம் போடுவது என்று சொன்னால் மிக கடினமான வேலையாக இருக்கும் காரணம்*கையில் காசு இருக்காது .*



    காசில்லாதவர்கள் கூட்டம் போடமுடியாத நிலையில் நானும் அண்ணன் குழந்தைவேலுவும், உடுமலைபேட்டையில் கூட்டம் போட்டு , கொள்கை முழக்கத்தை உருவாக்கி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக பாடுபட்டோம் அருமை தோழர்களே.* இன்றைக்கு* குறைந்த பட்சம்**ரூ.20,000/- இல்லையென்றால் ஒரு கூட்டம் போட* முடியாது .* ஆனால் 1972ல் உடுமலையில் ஒரு கூட்டம் போடுவதற்கு நான் செலவழித்த பணம் வெறும் ரூ.93/-தான் .உடுமலையில் நண்பர் விஸ்வநாத நாடார் என்பவர் மரக்கடை வைத்து நடத்தி வந்தார் .* அவர் எங்களுக்கு மரபலகைகள் எல்லாம் இலவசமாக தந்து மேடையும் அமைத்து தந்துவிடுவார் . அப்போது அதற்கு கட்டணம் ரூ.50/- தான் . துண்டு பிரசுரத்திற்கு ரூ.15/- துண்டு சுவரொட்டிக்கு ரூ.25/- உடுமலை கூட்டங்களில் நான் துண்டு ஏந்தி கூட்டம் நிறைவடைவதற்கு முன்பு வசூல் செய்து அடுத்த கூட்டத்திற்கு நிதி சேர்த்துவிடுவேன் .* அன்றைக்கு வேறு யாருடைய உதவியும் இல்லாமல், கட்டாய வசூல் செய்யாமல், பொதுமக்கள்* இடையே துண்டு ஏந்தித்தான் கூட்ட செலவுகளை சமாளித்தோம் .அப்படி ஒரு ஏழ்மையான நிலை அன்று இருந்தது .* அப்போது கூட்ட செலவுகளுக்கு உதவி செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ,நான், அண்ணன் குழந்தைவேலு ,நகரத்தில் பொறுப்பாளராக இருந்த அழகிரிசாமி, வேலுச்சாமி, நாராயணசாமி மேலும் சில நண்பர்கள் இணைந்து பொது கூட்டங்களை நடத்தி வந்தோம் கிராமப்புறத்தில் எடுத்து கொண்டால் அன்றைக்கு எதிர்க்கட்சி என்று சொல்லப்படாத வகையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மீது கொண்டிருந்த அபரி மிதமான அன்பு, பாசம், பற்று காரணமாக தாங்களாகவே கிராமத்தினர் முன்வந்து செலவு செய்து, பொதுக்கூட்டங்கள் அமைத்து , கட்சியை வளர்த்து , அண்ணா தி.மு.க.வை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்காக எங்களை போன்றவர்கள் பாடுபட்டார்கள் என்றால் தலைமை பதவியில் உள்ள புரட்சி தலைவர்*எம்.ஜி.ஆர். அவர்கள் அனுதினமும் சோதனைகளை சந்தித்து வந்தார் .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .**


    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ---------------------------------------------------------------------------------
    1.அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் - ஆயிரத்தில் ஒருவன்*

    2.புதிய வானம், புதிய பூமி - அன்பே வா*

    3.நான் செத்து பொழைச்சவன்டா - எங்கள் தங்கம்*

    4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*


    *


    *

  6. #1205
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1964 இல் நம் இதயதெய்வம் நடித்த படகோட்டி இறுதி கட்ட காட்சிகள் கேரளாவில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த நேரம்.

    13 நாட்கள் மொத்தம்.
    10 வது நாள் காலை நல்ல வெளிச்சத்தில் பட பிடிப்பு நடந்து கொண்டு இருந்து இடைவேளை நேரம்.

    தலைவருடன் இருந்த ஐயா கே.பி.ஆர். அவர்கள் தோளை தட்டி ஒருவர் அங்கே பாருங்கள் என்று சொல்ல....அங்கே ஒரு முதியவர் ஏதோ சைகை செய்ய அவர் அருகில் செல்கிறார் அவர்...

    அப்போது அந்த முதியவர் ஐயா நான் எம்ஜிஆர் அவர்களை சந்திக்க வேண்டும்.....
    நான் அவரின் தந்தை உடன் பணி புரிந்தவன்.

    பாலக்காடு என் சொந்த ஊர்....என்று தொடர நான் சிறுக சிறுக சேமித்து வைத்து இருந்த தொகை என் மகள் திருமணம் வேண்டி....அவளின் திருமணம் முடிவாகி அடுத்த கட்டம் நோக்கி நான் நகர...

    நெடுங்காடு வங்கியில் இருந்து நான் சேமித்த வைத்து இருந்த பணம் ரூபாய் 20000 அதை எடுத்து கொண்டு வரும் வழியில் தலை சுற்றி நான் மயக்கம் அடைந்து சாலை ஓரம் வீழ்ந்து விட்டேன்....

    மயக்கம் தெளிந்து அடுத்தவர் உதவியில் நான் கண் திறக்கும் போது....பேரிடி எனக்கு என் பண பையை காணவில்லை...இடிந்து போய் என் வீடு போய் சேர்ந்தேன்...

    மொத்த குடும்பமும் செயல் இழந்து போக என் மகள் சொன்னாள்.

    அப்பா நீங்கள் எம்ஜிஆர் அவர்களின் தந்தை கோபாலன் அவர்கள் உடன் பணி புரிந்தவர் தானே...அவர் கூட நீங்கள் இருந்த நினைவுகள் சொல்லி அவர் பெற்ற மகன் இப்போது நம் ஊருக்கு பக்கத்தில் வந்து இருக்கிறார்...

    நீங்கள் போய் நடந்ததை சொல்லி அவரிடம் உதவி கேளுங்கள்...அவரை பற்றி நான் நிறைய படித்து உள்ளேன் என்று மகள் விருப்பம் சொல்லி வந்த விவரம் சொல்ல...

    கே.பி.ஆர்...கண்களில் கண்ணீர் முட்ட ஐயா பொறுங்கள் என்று சொல்லி சற்று நேரத்தில் தலைவர் இடம் விவரங்கள் சொல்ல...துடித்து போன தலைவர் அவரை வர வைத்து...

    ஐயா உங்கள் விவரங்களை இவரிடம் சொல்லுங்க....ஒரு வாரம் கழித்து சென்னைக்கு வாருங்கள் என்று சொல்ல அதன் படி பெரியவர்...

    சென்னை வந்து இறங்கி ஐயா கே.பி.ஆர். அவர்களை அந்த பெரியவர் சந்திக்க...அவர் தலைவர் இல்லம் அந்த பெரியவரை அழைத்து போக....

    பெரியவரை எல்லோருக்கும் அறிமுகம் செய்து அவரை சிறப்பிக்க நல்ல உணவு கொடுத்து வரவேற்று.

    ஒரு சிறப்பு உடை பணம் வைக்க ஒரு ஜிப் வைத்து உடனே தயார் ஆகி அதற்கு மேல் ஒரு பெல்ட் வாங்கி கொடுத்து அதில் மொத்த பணம் 20000 ரூபாயை பத்திரம் ஆக வைத்து தைத்து.. மீண்டும் பணத்தை அவர் தவற விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில்...

    அந்த பெல்ட்டை தயார் செய்து கொண்டு வந்தவர் அண்ணன் திருப்பதிசாமி அவர்கள்.

    கே.பி.ஆர்....அவர்களை சென்னை ரயில் நிலையம் வரை அந்த பெரியவருக்கு துணை ஆக அனுப்பி பாலக்காடு ரயிலில் அவரை பத்திரம் ஆக ஏற்றி விட்டு அவர் ஊர் சென்று பணத்துடன் பத்திரம் ஆக போய் சேர்ந்த விவரத்தை எனக்கு தெரிவியுங்கள் என்கிறார்..... கொடை வள்ளல் எம்ஜிஆர்..

    பெற்ற தாய் தந்தைக்கே சோறு போடாத இந்த பொல்லாத உலகத்தில் தன் தந்தைக்கு தெரிந்தவர் என்றவுடன் அவர் சொன்னவை உண்மையா என்று கூட ஆராயாமல் அள்ளி கொடுக்கும் வள்ளல் இவர் போல யார் உண்டு..

    பெரியவரை சுமந்து சென்ற அந்த விரைவு வண்டி பாலக்காடு போய் சேர்ந்து அவர் பணத்துடன் வீடு போய் நடந்தவை பற்றி குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு பணத்தை இடுப்பில் இருந்து எடுத்து கொடுக்க..

    அவர் மகள் அப்பாடா திருமணம் இருக்கட்டும் நான் எம்ஜிஆர் மீது வைத்து இருந்த என் நம்பிக்கை வீண் போக வில்லை என்று மனதுக்குள் மகிழ.

    அவர்தான் தலைவர்.

    அன்னை சத்தியா அவர்களின் புதல்வர்.

    அன்று 20000 என்பது இன்றைய பணமதிப்பில் 20 லட்சம் பெறுமா. தாண்டுமா...இறைவா நன்றி.. நன்றி..

    தொடரும்...நன்றி...
    உங்களில் ஒருவன் நெல்லை மணி............

  7. #1206
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1973 ல் வெளியான ....
    புரட்சித்தலைவரின்
    உலகம் சுற்றும் வாலிபன்
    மாபெரும் வரலாற்று காவியத்தை தொடர்ந்து....
    ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியான
    "பட்டிக்காட்டுப் பொன்னையா"
    திரைக்காவியத்தில்...
    மக்கள் திலகம்
    இருவேட கதாபாத்திரத்தில்
    (பொன்னையா.... முத்தையா)
    சிறப்பான முறையில் வலம் வந்தனர்...
    +++++++++++++++++++++++++++++++++
    இக்காவியம் சென்னையில்...
    குளோப் 50 நாட்களும்
    மகாராணி 36 நாட்களும்
    சரவணா 35 நாட்களும்
    பழனியப்பா 28 நாட்களும்
    ஒடியது....
    ஆனால் மற்ற ஊர்களில் மகத்தான
    சாதனை படைத்தது...
    +++++++++++++++++++++++++
    மதுரை அலங்கார் 70 நாள்
    வசூல் : 2,11,711.50
    சேலம் 84 நாள் ஒடியது....
    திருச்சி 77 நாள்
    நெல்லை 62 நாட்கள் ஒடியது..
    நாகர்கோவில் தங்கம் 50 நாள்
    திண்டுக்கல் சோலைஹால் 55 நாள்
    ஈரோடு 68 நாள், பாண்டி 58 நாள்
    வேலூர் 50, குடந்தை 55 நாள்
    தஞ்சை 50, ப.கோட்டை 50 நாள்
    கரூர் 50 நாள்.....
    ++++++++++++++++++++++++++++
    கோவையில் ஒரே நேரத்தில்
    3 திரையரங்குகளில் திரையிடப்பட்டது
    நாஸ் 56 நாள், அருள் 18 நாள்,
    டிலைட் 10 நாள் (84 நாள்)
    15 திரையில் 50 நாட்கள் ஒடியது...
    ++++++++++++++++++++++++++++
    40 திரையில் வெளியாகி
    35 திரையில் 5 வாரங்களும்...
    20 திரையில் 6 வாரங்களும்
    15 திரையில் 50 நாட்களை கடந்தும் சாதனையாகும்.
    ++++++++++++++++++++++++++++++
    1973 ல் எங்க தகர ராஜா
    12 திரையில் தான் 50 ஒட்டபட்டது...
    மதுரையில் ஏரியாவில் 9 பிரிண்ட் போட்டு வெளியான இப்படம்
    மதுரை மட்டுமே 50 நாள்...100 நாள்
    சென்னை 3,வேலூர்,திருச்சி
    கோவை, சேலம், நெல்லை, நா.கோவில்
    தஞ்சை,குடந்தை...
    இதில் 9 தியேட்டர் 100 நாள் ஒட்டபட்டது.
    +++++++++++++++++++++++++++++++
    1973 ல்
    விலாசமில்லாத பாரத விலாஸையும்....
    எங்க தகர ராஜாவையும்...
    சோளதட்டை ராஜராஜசோழனையும்...
    நாடக ராஜபார்ட்டையும்...
    ஆணவ கெளரவத்தையும்...
    அறுந்த பொன்னுஞ்சலையும்...
    மனிதரில் (இருள்) மாணிக்கத்தையும்..
    +++++++++++++++++++++++
    இப்படி இப்படங்களை
    விட அதிக இடங்களில்
    அதிக வசூலை தந்த காவியம்
    பட்டிக்காட்டுப்பொன்னையா ஆகும்.
    ++++++++++++++++++++++++
    விழுப்புரம்... நாமக்கல்..தர்மபுரி
    திருப்பூர்.... பொள்ளாச்சி...உடுமலை
    விருதுநகர்... ஊட்டி... பவானி....
    ஆத்தூர்.... ராம்நாட்.... கோவில்பட்டி
    காரைக்குடி... புதுக்கோட்டை..
    காஞ்சிபுரம்.. சிதம்பரம்... தி.மலை
    கடலூர்.... தூத்துக்குடி.... தேனி..
    தின்டிவனம்.... குடியாத்தம்... மே.பாளையம்....பாண்டிச்சேரி....
    இப்படி அத்தனை சென்டரிலும்
    உலகம் சுற்றும் வாலிபன்
    காவியத்திற்குப் பின் இரண்டாவதாக
    அதிக வசூல் பெற்றக்காவியம்...
    பட்டிக்காட்டுப்பொன்னயா திரைப்படமாகும்....
    ++++++++++++++++++++++++++
    மற்றும் பி....சி...சென்டர்களிலும்
    சாதனை ஏற்படுத்தியது...
    ++++++++++++++++++++++++++++
    1973 ல் இந்தியா திரையுலகில்
    உலகம் சுற்றும் வாலிபன்
    இமாலயச்சாதனையாகும்...
    அந்த வசூல் ஒட்டம் வெற்றி மகத்தானது..
    அக்காவியத்தை வெல்ல 1978 வரை எந்த திரைப்படத்தை வெல்ல எந்த படமும் இல்லை..
    ++++++++++++++++++++++++++++++
    ஆனால் பட்டிக்காட்டுப் பொன்னையா பெற்ற வெற்றியையே சந்திக்க முடியாமல் போன பல படங்கள்
    பல நடிகரின் படங்களால் தாக்கு பிடிக்காது போனது...
    +++++++++++++++++++++++++++
    குறிப்பிட்ட சென்னை மதுரை
    திருச்சி நெல்லை, நாகர்கோவில்
    தவிர ஏனைய ஊர்களில்....
    பட்டிக்காட்டுப்பொன்னையா
    85 சதவீகிதம் சாதனையில்....
    வசூலில்...... முதலிடமாகும்!
    +++++++++++++++++++++++++++++
    பட்டிக்காட்டுப்பொன்னையா
    கோவையில் மட்டும்
    2010 முதல் 2019 வரை
    12 முறை வெளிவந்துள்ளது...
    (நாஸ், டிலைட், சண்முகா).........ukr.........
    +++++++++++++++++++++++++++++++

  8. #1207
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1972 ல் வெளியானா
    நடிகப்பேரரசின் "நான் ஏன்பிறந்தேன் " காவியம்
    வெளியாகி மகத்தான வெற்றியை படைத்தது...

    சென்னையில் 9 வாரத்தில்
    ஒடி முடிய 8 லட்சத்தை கடந்தது...

    சென்னையில் 4 அரங்கில் வெளியாகி அனைத்திலும் 50 நாட்களை கடந்தது.

    சென்னை பழனியப்பா அரங்கில் 50 நாள் ஒடிய முதல் காவியம்.

    சென்னை அரங்குகள்
    குளோப் 67 நாள் : 2,77,185.00
    கிருஷ்ணா 66 நாள் : 2, 65,229.50
    சரவணா 50 நாள் : 185,755.54
    பழனியப்பா 50 நாள் : 1,55,990.35
    ++++++++++++++++++++++++++
    மொத்த வசூல் : 8,84,160.39
    ++++++++++++++++++++++++++++
    வடசென்னையில்
    சங்கே முழங்கு கிருஷ்ணா
    69 நாள் வசூல் : 2,33,071.50
    நல்லநேரம் மகாராணி
    105 நாள் வசூல் : 3,45,615.85
    ராமன் தேடிய சீதை கிருஷ்ணா
    64 நாள் வசூல் : 2, 21,953.60
    நான் ஏன் பிறந்தேன் கிருஷ்ணா
    66 நாள் வசூல் : 2,65,229.50
    அன்னமிட்டகை பிரபாத்
    50 நாள் வசூல் : 1,95,250.38
    இதயவீணை கிருஷ்ணா
    86 நாள் : 3,23,505.40
    வடசென்னையில் மட்டும்
    மக்கள் திலகத்தின் 6 திரைப்படங்கள்
    16 லட்சத்தை வசூலில் கடந்தது...
    +++++++++++++++++++++++++
    மதுரை தங்கம் 10 வாரத்தில்
    3 லட்சத்தை தொட்டது...
    ஒரு வார வசூல் ;.62,094.00 ஆகும்.
    இரண்டு வார வசூல் : 1,11,,300.50 ஆகும்.
    4 வார வசூல் : 1,78,984.55 ஆகும்.
    50 நாள் வசூல்! : 2,64,689.40 ஆகும்.
    +++++++++++++++++++++++++++++++
    கோவை இருதயா / அருள் 99 நாள்
    வசூல் : 3,26,119.30 ஆகும்.
    +++++++++++++++++++++
    44 அரங்கில் வெளியாகி...
    28 தியேட்டரில் 50 நாள்..
    ++++++++++++++++++++++
    திருச்சி 84, தஞ்சை 63 , குடந்தை 63
    மாயூரம் 53, ப.கோட்டை 53, கரூர் 53
    திண்டுக்கல், பழனி, கடலூர் 53
    காரைக்குடி, விருதுநகர்....
    ஈரோடு 70 நாள், திருப்பூர் 53 நாள்
    சேலம் 83 நாள், பாண்டி 68 நாள்
    ஆத்தூர் 53, தர்மபுரி 53, வேலூர் 66
    காஞ்சிபுரம் 50 நாள், நெல்லை 58
    நாகர்கோவில் 50 நாள்...
    +++++++++++++++++++++++++
    இலங்கையில்....
    நகரில் ஒரே நாளில் 8 காட்சி
    நடைபெற்ற முதல் காவியம் ...
    நடு இரவு 12 மணிக்கு காட்சி ஆரம்பிக்கபட்டு சாதனை....
    ஜெசிமா 77 நாள்
    ராணி 75 நாள்
    கல்பனா 52 நாள்
    அனைத்து ஏரியாக்களிலும் சாதனை.
    +++++++++++++++++++++++++++
    பெங்களுர்...
    அபேரா 6,நடராஜ் 6,சிவாஜி 6,
    18 வாரங்கள் ஒடியது....
    +++++++++++++++++++++++
    குறுகிய நாட்களில் அதிக வசூல் பெற்றக்காவியம்..........ukr...

  9. #1208
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை மக்கள் திலகத்தின் கோட்டையாக திரையுலகத்தில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் விளங்கியது. அரசியலில் யாரும் நெருங்க முடியாத வெற்றியை தலைவருக்கு பெற்று தந்தது தென் மாவட்டங்கள்தான்.தெற்கில் வெற்றிக்கொடியை பறக்க விட்ட அதிமுக திமுக வசம் இருந்த மெஜாரிட்டி தொகுதிகளை
    அதிமுக வசம் சேர்த்தது தலைவரின் அளப்பரிய ஆற்றலால்.

    அதில் முக்கியமானதுதான் மதுரை.
    அப்பேர்ப்பட்ட எம்ஜிஆர் ஆளுமை நிறைந்த மாநகர் எம்ஜிஆர் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய காலத்தில் அவர் படைத்த சாதனைகள் எண்ணிலடங்கா.
    அவருடைய எந்தப்படமும் இயற்கையாகவே மதுரையில் சாதனை செய்யும். அந்தந்த காலகட்டங்களில் அவருடைய படங்கள் செய்யும் சாதனையை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது.

    அதை முறியடிக்க ஒரு சிலர் வடக்கயிறோடும், ஸ்டெச்சரோடும்
    மதுரையில் ஒரு சில திரையரங்குகளில் அலைவதை பார்த்தால் பாவமாக இருக்கும். சங்கம் வளர்த்த மதுரை புரட்சி நடிகரின் திரைப்படங்களை வரவேற்பதில் மற்றவர் படங்களை விட முன்னிலை பெறுவது ஒன்றும்
    ஆச்சர்யமானதல்ல. 1973 ல் அப்பேர்ப்பட்ட மகத்தான சாதனையை செய்தது மக்கள் திலகத்தின் "உலகம் சுற்றும் வாலிபன்".

    சுமார் 20 ஆண்டுகள் கழித்து வந்த கமல் நடித்த "தேவர் மகன்" படத்தால் கூட கமலின் பின்னால் ஒளிந்து நின்ற சிவாஜியால் முறியடிக்க முடியவில்லை என்பது ஆச்சர்யமான ஒன்று என்றால் மிகையில்லை.
    "தேவர் மகன்" படத்தின் விளம்பரத்தை கவனியுங்கள், அதில் எங்கள் திரையரங்கில் "உலகம் சுற்றும் வாலிபனு"க்கு பிறகு "தேவர் மகனு"க்குதான் இவ்வளவு வரவேற்பு இருந்தது என்கிறார்கள்.

    4 வார வசூல் சுமார் ரூ 602000 என்று போட்டிருக்கிறார்கள். "உலகம் சுற்றும் வாலிபன்" 31 வாரங்களில் பெற்ற வசூல் ரூ685000. ஆனால் இது 1973 நிலவரம். அதனால் படத்தை பார்த்தவர்களை வைத்து வசூலை மதிப்பிடலாம்."தேவர் மகனை" 4 வாரத்தில் பார்த்தவர்கள் எண்ணிக்கை சுமார் 166000
    பேர். ஆனால் "உலகம் சுற்றும் வாலிபன்" 31 வாரங்களில் பார்த்தவர்கள் எண்ணிக்கை சுமார் 725000.

    ஒரு சின்ன கணக்கு. 166000
    பார்த்து வந்த வசூல் ரூ 602000 என்றால் 725000 பேர் பார்த்தால் வசூலாகும் தொகை சுமார் ரூ 26,30,000 வருகிறது. அதாவது 26 லட்சத்துக்கும் மேல். "தேவர் மகன்" மதுரையில் வெள்ளி விழா மீனாட்சி பேரடைஸில் கொண்டாடியது. ஆனால் தலைவரின் "உலகம் சுற்றும் வாலிபன்" மீனாட்சியிலேயே வெள்ளி விழா தாண்டி 217 நாட்கள் வரை ஓடி சாதனை செய்தது. மீனாட்சி பாரடைஸ் மிகவும் சிறிய தியேட்டர் என்பதால் பார்வையாளர்கள் நிச்சயம் "உலகம் சுற்றும் வாலிபன்" அளவுக்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை.

    முதல் 4 வார பார்வையாளர்களை எடுத்துக்கொண்டால் தொடர்ந்து hf
    ஆகியிருக்க வாய்ப்பில்லை. மேலும் "தேவர் மகன்" வந்த காலத்தில் தினசரி 4 காட்சிகளுக்கும் குறைவில்லாமல் திரையிடப்பட்டது.
    ஆனால் "உலகம் சுற்றும் வாலிபன்" காலத்தில் தினசரி 3 காட்சிகளும் சனி ஞாயிறு 4 காட்சிகளும் திரையிடப்பட்டது என்பது நினைவு கூறத்தக்கது. எனவே காட்சிகள் அதிகம் திரையிடப்பட்டும் "உலகம் சுற்றும் வாலிபனி"ன் பார்வையாளர்களை நெருங்க முடியவில்லை என்பதே யதார்த்தம்.

    காலம் கடந்தும் அவருடைய சாதனை நிலைத்து நிற்கும் ஆற்றல் படைத்தது. மேலும் 20 வருடங்களில் மக்கள் பெருக்கம் பல மடங்கு அதிகரித்ததையும் கணக்கில் எடுத்தால் மதுரையில் மட்டும் கிட்டத்தட்ட சுமார் 75 லட்சத்துக்கும் அதிகமாக வசூலாகியிருக்கக் கூடும் என்று தெரிகிறது. எத்தனை சூலங்கள் வந்தாலுமே தலைவரின் வசூல் வியூகத்தில் சிக்கி சின்னாபின்னமாகிப் போவார்கள்
    என்பது திண்ணம்.

    இன்று வரை எந்தப் படமும் இவ்வளவு பார்வையாளர்களை பெற்றதில்லை என்பது திண்ணம். மதுரையில் 1991 ல் மக்கள் தொகை சுமார் 20 லட்சம் இருக்கலாம். ஆனால் 1971 ல் சுமார் 7 லட்சம்தான் மக்கள் தொகை. உலகம் சுற்றும் வாலிபனை பார்த்தவர்களோ சுமார் 725000 பேர்.
    1992 என்றால் சுமார் 20 லட்சம் பேர் பார்த்திருக்க கூடும்.

    நாம் நடிகப்பேரரசரில் பதிவாகும் அத்தனைக்கும் ஆதாரங்கள் இல்லாமல் தருவது கிடையாது. தகுந்த ஆதாரங்களை வைத்து மதிப்பீடு செய்கிறோம். யாரையும் இழிவு படுத்தும் நோக்கம் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
    மாற்று கருத்து இருந்தால் தகுந்த(போலி அல்ல) ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்..........ksr.........

  10. #1209
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு முறை படப்பிடிப்பு இடை வேலையில் ஆழ்வார் குப்புசாமி என்ற நாடக நடிகர் தலைரை தேடி வந்து திருமண உதவி தன் மகளுக்கு கேட்க அன்றே ஒரு கணிசமான தொகையை அவரிடம் தருகிறார் பொன்மனம்.

    அத்துடன் நில்லாமல் அதே படத்தில் ஒரு வேஷம் கொடுக்க ஸ்ரீனிவாசன் அவர்கள் இடம் பரிந்துரை செய்கிறார்.

    ஆண்டவன் சொல்லக்கு மறுப்பு ஏது.... உடனே படத்தில் நடிக்க ஒரு பட்லர் வேடத்தில் அவர் நடிக்கட்டும் என்று அவர் சொல்ல...உடன் முன் பணம் 500 கொடுக்க படுகிறது.

    தலைவர் சிரித்து கொண்டே குப்புசாமி இது முன் பணம் தான் காட்சிகள் முடிந்த உடன் அதுக்கு தனி சம்பளம் உண்டு என்று சொல்ல.

    இரட்டை மகிழ்ச்சி அவருக்கு...தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு எந்த எல்லையும் இல்லாமல் உதவி செய்யும் ஒரே மாமனிதர் புரட்சிதலைவர் மட்டுமே.

    இது ஸ்ரீனிவாசன் சொல்லும் கருத்து தலைவர் பற்றி.

    யார் இந்த சீனிவாசன் என்றால் நடன இயக்குனர் புலியூர் சரோஜா அவர்களின் கணவரே இவர் ஆவார்.

    வாழ்க தலைவர் புகழ்.
    தொடரும்...உங்களில் ஒருவன்.....
    நெல்லை மணி..நன்றி.... Dr

  11. #1210
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி 29/10/20 அன்று அளித்த தகவல்கள்*
    ------------------------------------------------------------------------------------------------------------------------------
    சாமான்ய மக்களின் தெய்வம் என்று* அழைக்கப்படுகிற* எம்.ஜி.ஆர். என்பவரது வரலாறு நமக்கெல்லாம் பாடம், படிப்பினை, ஒரு புதிய பாதை .


    ஒரு விழாவில் பேசிய ஸ்டண்ட்* நடிகர் மற்றும் பயிற்சியாளர்* ஜாக்குவார் தங்கம் என்பவர் ஒரு கருத்தை சொன்னார் . எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருக்கிறார் . அவரைத்தேடி ஒரு மாமியாரும், மருமகளும் வருகிறார்கள் .* மருமகளோ இளம்பெண் . மாமியார் கொஞ்சம் வயதானவர் .இருவரும் சேர்ந்து அழுது* கொண்டு இருக்கிறார்கள் .* உதவியாளர் கேட்கிறார் .என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள் என்று . இல்லை. முதல்வர் ஐயாவை பார்க்க வேண்டும் ஒரு விஷயமாக என்கிறார்கள் .சிறிது நேரம் கழித்து முதல்வர் எம்.ஜி.ஆர். வருகிறார் .என்ன விஷயமாக வந்துள்ளீர்கள். ஏன் இருவரும் அழுகுகிறீர்கள் என்று கேட்கிறார் .என் மகன் இறந்துவிட்டான். என்னுடைய மருமகள் இவர். எங்களுக்குள் பிரச்னை இல்லை . என் கணவரும் இறந்துவிட்டார் . எங்களுக்கு ஒரு சிறிய வீடும் ,வீட்டுக்கு பின்னால் ஒரு சிறிய* நிலம் இருக்கிறது .* அந்த நிலத்தை உங்கள் கட்சியை சார்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததோடு* வீட்டையும்* அபகரிக்க* முயற்சி செய்கிறார் .எங்களுக்கு சொந்தம் கொண்டாட உறவினர் யாருமில்லை .* எங்களுக்கு என்று யாரும் இல்லாதபோது, பாதுகாப்பு, அதற்கான வழிமுறைகள் எல்லாம் நீங்கள்தான் என்று எண்ணி இருந்த உங்கள் கட்சிக்காரரிடம் இருந்து எங்களுக்கு ஆபத்து வந்திருக்கிறது .* என்ன செய்வதென்று தெரியவில்லை .என்கிறார்கள்.* எம்.ஜி.ஆர்.*ஜாக்குவார் தங்கத்திடம் தொடர்பு கொண்டு, இன்று ஒருநாள் மட்டும் இருவரையும் உங்கள் இல்லத்தில் தங்க வையுங்கள் . நாளை மதியம் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து வாருங்கள் என்கிறார் .* மறுநாள் மதியம் அனைவரும் ராமாவரம் தோட்டம் செல்கிறார்கள் .* எம்.ஜி.ஆர். ஒரு அறைக்கு அந்த இரு பெண்களையும் அழைத்து செல்கிறார்* நீங்கள் இருவரும் இங்குள்ளவர்களில் யாரையாவது பார்த்த ஞாபகம் இருக்கிறதா என்கிறார் .* அவர்கள் பதிலளிக்கவில்லை .அங்கிருந்த கட்சிக்காரர் ஒருவரை இந்த பெண்களை உங்களுக்கு தெரியுமா என்று கேட்கிறார் .* அதில் ஒருவர் மழுப்பலாக பேசுகிறார் . நிச்சயமாக உங்களுக்கு தெரிய வாய்ப்புள்ளது . தெரியாது என்று மட்டும் சொல்லாதீர்கள் என்றவர் வேகமாக நாற்காலியில் இருந்து எழுந்து வந்து ,அந்த கட்சிக்காரரை பளார் என்று கன்னத்தில் பலமாக அறைந்தாராம் எம்.ஜி.ஆர் .*அதை கண்ட ஜாக்குவார் தங்கம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம் .நீங்கள் எனது கட்சிக்காரராக இருக்கலாம். அதற்காக இப்படியா அத்து மீறுவது*அவர்களுடைய நிலத்தையும், வீட்டையும் உடனடியாக திருப்பி கொடுங்கள். திருப்பி கொடுக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா என்று மிரட்டியது மட்டுமல்லாமல் இதுவெல்லாம் நாளைக்கே நடந்தாக வேண்டும் என்று சொல்லி அனுப்பினாராம் எம்.ஜி.ஆர். அந்த பெண்களிடம் நீங்கள் இவர்களுக்காக பயப்பட வேண்டிய அவசியமில்லை .நான் உங்கள் மாவட்ட ஆட்சியருக்கும் , காவல்துறை கண்காணிப்பாளருக்கும் தொடர்பு கொண்டு சொல்லிவிட்டேன் .அவர்கள் எப்போதும் உங்கள் தொலைபேசி அழைப்புக்காக காத்திருப்பார்கள் .உங்களுக்கு ஏதாவது பிரச்னை நேர்ந்தால் உடனே அவர்களை தொடர்பு கொள்ளலாம் நீங்கள் எதற்கும், யாருக்காகவும் பயப்பட வேண்டாம். இந்த வீடு*யாருடையது என்று கேட்டால் எம்.ஜி.ஆர். வீடு என்று சொல்லுங்கள் . நான் எப்போதும் உங்களுடைய அழைப்புக்காக காத்திருப்பேன் .* உங்களுக்கு காவல்காரனாக இருந்து பணியாற்றுவேன் என்று சொன்னாராம் எம்.ஜி.ஆர்.**


    எம்.ஜி.ஆரும் ,நடிகர் காக்கா ராதாகிருஷ்ணனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து தாய்க்கு பின் தாரம் படத்தில் நடித்துள்ளார்கள்*காக்கா ராதாகிருஷ்ணன் வைத்திருந்த நவீன துப்பாக்கியைத்தான் படப்பிடிப்புக்கு, வேட்டைக்கு* போகும்போதெல்லாம் எம்.ஜி.ஆர். வாங்கி செல்வாராம் .* அந்த அளவிற்கு நெருக்கமானவர்கள் .* தாய்க்கு பின் தாரம் படத்தில் அந்த கிராமத்தினர் ஒருவரை ஏளனமாக பேசியதால் காக்கா ராதா கிருஷ்ணனை தாக்குவது போல ஒரு காட்சி .* எம்.ஜி.ஆர். அந்த காட்சியை அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்து பார்த்து கொண்டிருக்கிறார் .* ஆனால் அந்த துணை நடிகர் காக்கா ராதாகிருஷ்ணனை வெளுத்து வாங்குகிறார் . ஒரு கட்டத்தில் நிஜமாகவே அடிக்கும்போது படத்தின் இயக்குனர், மற்றவர்கள் யாரும் தடுக்க முயலவில்லை .எம்.ஜி.ஆர். கட் கட் என்று சொல்லியபடியே இடைமறித்து நீங்கள் எதற்காக இப்படி அடிக்கிறீர்கள் என்று கேட்கிறார் .அருகில் இருந்தவரை அழைத்து, காக்கா ராதாகிருஷ்ணனை அருகிலுள்ள மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்காக அழைத்து செல்லுங்கள் என்றாராம் .அப்படி தனது படப்பிடிப்பில், பிறர் பாதிக்கப்பட்டாலும், துன்பப்பட்டாலும் ,அவர்மீது அக்கறை கொண்டு உரிய பாதுகாப்பு, மருத்துவ சிகிச்சை செய்வதில் முனைப்பாக இருப்பவர் எம்.ஜி.ஆர். என்று தனது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் காக்கா ராதாகிருஷ்ணன் .* அதுபோல தன்னுடைய சக தொழிலாளிகள் யார் யாருக்கெல்லாம் சம்பளம், கூலி குறைவாக இருக்கின்றதோ,அவர்களை தேடி பிடித்து , அவர்களுக்கு தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து கணிசமாக தொகை கொடுத்து உதவும்* பண்பு அவரிடம் இருந்ததாம் .*


    திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி :* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும்,*நாஞ்சில் மனோகரன், கல்யாணசுந்தரம் போன்றவர்கள் ஆவடிக்கு செல்லுகின்ற நேரத்தில் தி.மு.க.வினர் திரண்டு வந்து எம்.ஜி.ஆர். அவர்கள் செல்லுகின்ற வேன்* இதுதானே என்று சொல்லி*நொறுக்கிய நேரத்தில்,முன்கூட்டியே எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தெரியப்படுத்தி*அவர் மாற்று காரில் சென்ற காரணத்தால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உயிர் தப்பினார். அந்த அளவிற்கு* அன்றைக்கு ஆளும்*தி.மு.க.வினர் மிரட்டல்கள் தொடுத்த நேரத்தில், தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பயப்படாமல் களம் கண்டு தன்னுடைய எண்ணங்களை எல்லாம் நிறைவேற்றுவதற்கு அண்ணாவின் கொள்கைகளை இந்த நாட்டிலே*பரப்புவதற்கு தன்னை*ஈடுபடுத்தி கொண்டார் என்று சொன்னால்* நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும் தோழர்களே, ஒன்றே ஒன்று . நான் முன்பே* சொன்னது போல வாழ்விலே*அவருக்கு என்ன குறை இருக்கிறது என்று* பார்த்தால்*ஒன்றுமே கிடையாது . பயணப்படுவதற்கு**மூன்றுக்கு மேற்பட்ட கார்கள் இருக்கின்றன. ஒரு பெரிய தோட்டம் இருக்கிறது .* அனைத்து வசதிகளும் நிறைந்த வீடு இருக்கிறது . பாதுகாப்பிற்கு உதவியாளர்கள்* இருக்கிறார்கள் பணம் உதவி செய்வதற்கு உகந்த முதலாளிகள் இருக்கின்றார்கள் .* இந்த சூழலில் ஒரு ரிஸ்க்கை*எடுத்து கொண்டு*,ரிஸ்க் என்றால் சாதாரண* ரிஸ்க் அல்ல தோழர்களே, அன்றைக்கு 184 எம்.எல்.ஏக்களை எதிர்த்து குரல் எழுப்பினார், களம் கண்டார்* என்று சொன்னால்*, நாம் நினைத்து பார்க்க கடமை* பட்டிருக்கிறோம் இன்றைக்கு நாம் எண்ணி பார்க்கின்றோமே* ஒவ்வொரு கால கட்டத்திலும் நாம் நம்முடைய பாதுகாப்பை மட்டுமே கருத்திலே கொண்டு*என்ன தவறுகள்*நடந்தாலும் சரி, அதை பற்றி* நமக்கு அக்கறை இல்லை என்கிற*அளவிற்கு இருக்கின்ற தலைவர்களையும், பிரபலங்களையும் தான் நாம் பார்க்கின்றோம்.* ஆனால் தனக்கு வரப்போகின்ற பாதிப்புகள், ஆபத்துகளை உணர்ந்தும்கூட அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. இந்த நாட்டு மக்களுக்கு*ஏதாவது நல்லது நான் செய்தாக வேண்டும் அண்ணாவின் கொள்கைகள், லட்சியங்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று சொல்லி*அவர் அன்றைக்கு ஆரம்பித்த இயக்கமானது அவருடைய உயிருக்கே,பல்வேறு வகைகளில்*சிக்கல்களை* தந்தபோது*அவற்றையெல்லாம் அவர் முறியடித்தார் .* திண்டுக்கல்*இடை தேர்தலில் அவர் சென்றபோது , பலபேர்* சொல்கிறார்கள் எம்.ஜி.ஆர். அவர்கள் லட்சக்கணக்கான பணங்களை* வைத்து கொண்டுதான்* தேர்தலை சந்தித்தார் என்று .* ஆனால் உண்மை அதுவல்ல. அவரிடம்*போதிய பணம் கிடையாது .* தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு வாகனங்களுக்கு டீசல்*போடுவதற்கு*போதிய பணம் இல்லாமல் அவருடைய வாகனங்கள் சாலையில் ஸ்தம்பித்து நின்ற நேரத்தில் சென்னையில் பிரபல*பட தயாரிப்பாளர்* ஆர்.எம்.வீரப்பனை*தொடர்பு கொண்டு எப்படியாவது சத்யா ஸ்டுடியோவை அடகு வைத்தாவது*எனக்கு*உடனடியாக தேர்தல் செலவுகளுக்கு பணம் அனுப்புங்கள் என்று சொல்லி* அந்த பணம் வந்தபிறகு வாகனங்களுக்கு டீசல்*போட்ட விவரங்கள் எல்லாம் எங்களுக்கு தெரியும்.**


    திண்டுக்கல் தேர்தலில் அவர் அப்படி பணியாற்றி கொண்டிருந்த நேரத்தில் யாராவது ஒருவர் ரூ.5,000/-* தருகிறேன் ,எங்கள் ஊருக்கு , கிராமத்திற்கு வாருங்கள்*என்று அழைத்தால்*அது 50,100 கி.மீ. தூரம் இருந்தாலும் கவலைப்படாமல் பகலில் சென்று*அந்த கூட்டங்களில் கலந்து கொண்டு, அங்கு* கழக தோழர்கள்* திரட்டிய* *நிதியை*வாங்கி வந்து ,திண்டுக்கல்லில் மாயத்தேவர்*போட்டியிட்ட*நேரத்தில்,அவருக்கு உதவி செய்துதான்*இந்த கட்சியை வளர்த்தார் . மே*1ம் தேதி அன்று உடுமலைப்பேட்டைக்கு எம்.ஜி.ஆர். அவர்களை நானும், அண்ணன் குழந்தைவேலு அவர்களும்*அழைத்து வந்து உடுப்பி*திடல்*என்ற இடத்தில பொதுக்கூட்டம் நடத்தி ,தேர்தல் நிதி* ரூ.10,000/- வசூலித்து அண்ணன் குழந்தைவேலு மூலம் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கொடுத்து, தலைவரை*அண்ணன் குழந்தைவேலு வீட்டிற்கு*அழைத்து சென்று*அங்கு எங்களோடு அமர்ந்து*தலைவர் எம்.ஜி.ஆர். உணவருந்திய வாய்ப்பை*எண்ணி மகிழ்ந்தோம்*ஒரு மாபெரும் தலைவர், மக்கள் தலைவர், நாடு போற்றும் தலைவர் , நல்லவர் தமிழகம் மட்டுமல்ல ,இந்தியா முழுவதும்*நன்கு அறிமுகமான தலைவர்* அவர் சொன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய கூடிய தொண்டர்கள் கொண்ட*அந்த மாபெரும் தலைவரோடு*,ஒரு சாமான்ய*தொண்டன்*லியாகத் அலிகான் போன்றவர்கள் எல்லாம் அவருடன் அமர்ந்து*உணவருந்தும் வாய்ப்பு கிடைத்தது என்று சொன்னால் , தியாகத்தை, தியாகியை என்றைக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கைவிட்டது கிடையாது அவர் தான தருமங்கள் செய்வதைக்கூட பார்ப்பீர்களேயானால் இங்கே ஒருபுறம் வசூலாகும். அதே தொகையை மறுபுறம் தானமாக கொடுத்துவிடுவார் .பணமில்லை என்று சொன்னால்*தன்னுடைய நண்பர்களிடம் கடனாக வாங்கி*அங்கே தான தருமங்கள் செய்தவர்தான் நமது*தலைவர் .* அவரது*ஆரம்ப கால எதிர்க்கட்சி வாழக்கையை எடுத்துக்கொண்டால் எத்தனையோ இன்னல்களை சந்தித்துதான் முன்னேற்றம் கண்டு வெற்றிகளை அடைந்தார் .* அ.தி.மு.க.வின் முதல் தியாகி இஸ்மாயில் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது*இல்லத்திற்கு விஜயம் செய்தபோது ஒரு திட்டத்துடன்தான் வந்தார்*.* மே .தின* கூட்டத்தில் நாங்கள் கொடுத்த ரூ.10,000/ பணத்துடன்* அவர் சொந்த*தொகையான ரூ.15,000/- போட்டு மொத்தம் ரூ.25,000/- பணத்தை*மறைந்த*தொண்டர் இஸ்மாயிலின் தாயாரிடம் எங்கள் கைகளின்**மூலமாக*அந்த பணத்தை கொடுக்க செய்தார் .* இஸ்மாயிலின் தாயாரிடம் இந்த நிகழ்வு மிகவும் சோகமானது. இப்படி* நடந்திருக்கக்கூடாது .அதற்காக*நான் மிகவும் மனம் வருந்துகிறேன் .* எதற்கும் கவலைப்படாதீர்கள்*உங்கள் குடும்பத்திற்கு அ.தி.மு.க. கடமைப்பட்டுள்ளது என்று கூறி அரைமணி நேரத்திற்கு மேலாக அவர்கள் இல்லத்தில் இருந்து ஆறுதல் கூறினார் .**


    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பு, உடுமலை*இஸ்மாயீலின் தந்தைக்கு*புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானபோது, கோட்டையில் தலைவரை*1978ல் சந்தித்து*இஸ்மாயீலின் தந்தைக்கு*புற்றுநோய் என்று சொல்கிறார்கள் தலைவரே என்றபோது , அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தவர்தான்*. தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்..புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையில் இந்த இயக்கத்தில் சேர்ந்ததால்தான்* நான் ஒரு மதிப்புக்கு உரியவனானேன் .* நான் ஒரு விஷயத்தை பற்றி தலைவரிடம் சொன்னால் ,அதற்கு மதிப்பளித்து அதற்குரிய உதவிகளை*செய்ய முற்பட்டு,25 வயதுள்ள ஒரு இளைஞன்தானே என்று நினைக்காமல், அவன்* எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அளவிற்கு*,சிந்தித்து, முடிவுகள் எடுத்து, தியாகத்தை போற்றுகின்ற*தலைவர்தான்*நமது புரட்சி தலைவர் . அந்த மாபெரும் தலைவரின், உழைப்பு, சிந்தனை, எளிய, சாமான்ய*தொண்டர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பண்பு, தியாகத்தை போற்றும் தன்மை ஆகியவற்றை* நினைத்து பார்க்கின்றபோது என் இதயம் கனத்து*போகிறது . அந்த அளவிற்கு*தன்னுடைய*வாழ்க்கை முறைகளை நடத்தி வந்த*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சி, 1980ல் சதி திட்டத்தால், கலைக்கப்பட்டது . கவிழ்க்கப்பட்டது . அந்த நேரத்தில் எத்தனையோ எதிர்ப்புகள் அவர்மீது*தொடுக்கப்பட்டன .* எத்தனையோ தோழர்கள் கட்சியில் இருந்து இழுக்கப்பட்டார்கள் .* நாஞ்சில் மனோகரன், சுப்புலட்சுமி ஜெகதீசன் போன்றவர்களும் தி.மு.க.விற்கு சென்றார்கள் .* எதுபற்றியும் கவலைப்படாமல்*தன்னுடைய கடமை ஆற்றிக்கொண்டிருந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*வங்கி கணக்கில் அன்றைக்கு இருந்த*இருப்பு வெறும் ரூ,30,000/-தான் இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .**


    திருவல்லிக்கேணி சிங்காரவேலு அவர்கள் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார் .பலரை*உண்ணவைத்து அந்த அழகை* ரசிப்பவர்கள்தான் யோகி என்று திருவருட்பாவில் வள்ளலார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் .* பிறர் உண்பதை, தான் உண்டு பசியாறுவது போல ஒரு நிம்மதி பெருமூச்சு விடுகிற பெருமகனார் எம்.ஜி.ஆர். அவர்கள்.* வாழும்போதெல்லாம் யார் யாருக்கெல்லாம் என்னென்ன நேரங்களில் பசி என்கிற கொடுமை*யின்*உச்சத்தைசந்தித்தார்களோ, அதை* எம்.ஜி.ஆர்.அவர்கள் தன் சிறு வயதிலேயே சந்தித்தார் தன்னை சந்திக்க வருகின்ற அனைவரையுமே*பசியாற்ற வேண்டும் என்கிற*வாழும் வள்ளலாக*எம்.ஜி.ஆர். திகழ்ந்தார் என்று சொன்னால் மிகையாகாது .**

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ---------------------------------------------------------------------------------
    1.நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்*- நான் ஆணையிட்டால்*

    2.நான் ஆணையிட்டால் - எங்க வீட்டு பிள்ளை*

    3. அன்று வந்ததும் அதே நிலா - பெரிய இடத்து பெண்*

    4. திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*.**.**

    **

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •