Page 111 of 182 FirstFirst ... 1161101109110111112113121161 ... LastLast
Results 1,101 to 1,110 of 1817

Thread: Makkal Thilagam MGR Part 26

 1. #1101
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  எம்ஜிஆர்ஒப்புக் கொண்டிருந்த அரச கதை படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.. ராஜாதேசிங்கு விக்ரமாதித்தன் அரசிளங்குமரி, ராணி சம்யுக்தா பாக்தாத் திருடன் போன்ற படங்கள் தான் அவை.

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கிய இவை வெளிவந்தபோது பெரிய அளவில் எம்ஜிஆருக்கு வெற்றியை தேடித் தரவில்லை.

  ஒரு டெக்னீசியன் ஆகவும் டைரக்டசனும் தெரிந்த அவர், காட்சியமைப்புகளில் எம்ஜிஆர் தெரிவித்த யோசனைகளை தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஏற்றுக் கொள்ளாததும் இதற்கு ஒரு காரணம். மாஸ் ஹிட்டை கொடுத்த மதுரை வீரன் தயாரிப்பு நிறுவனமான கிருஷ்ணா பிக்சர்சின் ராஜா தேசிங்கு படம், வீம்புக்காக போய் இப்படித்தான் தோல்வியை தழுவியது.

  இப்படிப்பட்ட சூழலில் அரச கதைகளில் இருந்து விடுபட்டு சமூகப் படங்களில் நடிக்க பெரிதும் ஆர்வம் காட்டி னார்.. மன்னனாகவும் தளபதியாகவும் வாளை சுழற்றிய எம்ஜிஆர் மார்டனாக பேண்ட் ஷர்ட் கிராப் தலை என தோற்றத்தையே அடியோடு மாற்றி கொண்டார்.

  1961 இல் வெளியான திருடாதே என்கிற சமூகப் படம் இப்படித்தான் எம்ஜிஆருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.. திருடாதே பாப்பா திருடாதா என்ற காலத்தால் அழிக்க முடியாத பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலை சுமந்திருந்தது படம் அது.

  சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா போன்ற பாடல்கள் மூலம் எம்ஜிஆருக்கு கொள்கை பாடல்களால் சிம்மாசனம் ஏற்படுத்தித் தந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இளவயதிலேயே அகால மரண மடைந்து விட்டது எம்ஜிஆரை பொறுத்தவரை பெரிய இழப்பு.

  பின்னாளில் முதலமைச்சரானபோது எம்ஜிஆர் சொன்னார் நான் அமர்ந்திருக்கும் நாற்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரித்திற்கு சொந்தமானது என்று..

  1960களின் தொடக்கத்தில் எம்ஜிஆரின் திரைஉலகப் பயணம் புதிய பரிமாணத்தில் பறக்க ஆரம்பித்தது. தாய்க்குப்பின் தாரம் படத்தோடு கோபித்துக்கொண்டு போன உயிர் நண்பனும் திரைப்பட தயாரிப்பாளருமான சாண்டோ சின்னப்பா தேவர் மீண்டும் திரையில் கூட்டணிக்கு கைகோர்த்தார்.

  தாய் சொல்லை தட்டாதே என்ற படம் மிகக் குறைந்த காலத்தில் உருவாகி வெளிவந்து சக்கை போடு போட்டது.
  பேண்ட் ஷர்ட் கூலிங் கிளாஸ் தொப்பி என படு ஸ்டைலாக சிஐடி ஆபீஸராக வந்த எம்ஜிஆர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

  எம்ஜிஆரை வைத்து பூஜை போட்ட அன்றே படத்தை தேதியை வெளியிட்ட தேவர் சொன்னபடி அதே தேதிக்கு படத்தை ரிலீஸ் செய்தார். இது அப்போதைக்கு மிகப்பெரிய அதிசயம்.

  மிகப் பெரிய கம்பெனிகளில் நடிப்பதையும் பிரமாண்ட தயாரிப்புகளையும் எம்ஜிஆர் தவிர்த்தார். சின்னப்பா தேவர் போன்ற சாமானிய தயாரிப்பாளர்களை ஊக்குவித்தார்

  பீம்சிங் இயக்கத்தில் நடிகர் திலகம் பாகப்பிரிவினை பாவமன்னிப்பு, பாசமலர் பாலும்பழமும், பார் மகளே பார் என ‘’பா’’ வரிசையில் ஹிட் கொடுத்ததுபோல எம்ஜிஆர் தேவரோடு இணைந்த ‘த’’ வரிசையை ஆரம்பித்தார். தாய்ச்சொல்லை தட்டாதே, தாயைக்காத்த தனயன், தர்மம் தலைகாக்கும், என்று ஹிட்டடித்தார். .எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து விநியோகஸ்தர்கள் மத்தியில் மினிமம் கியாரண்டி ராமச்சந்திரன் என்ற அர்த்தத்தில் பேசப்பட்டது.

  சின்னப்பா தேவரைப் போலவே ஆர் ஆர் பிக்சர்ஸ் உரிமையாளரும் இயக்குநருமான டி ஆர் ராமண்ணா, எம்ஜிஆரின் மனம் கவர்ந்த ஒருவர்..

  1963-இல் டி ஆர் ராமண்ணா தயாரித்து இயக்கிய பெரிய இடத்துப் பெண் மெகா பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. பணக்கார பெண்ணின் திமிரை வேறுவேடத்தில் வந்து கதாநாயகன் அடக்கும் பக்கா கமர்சியல் மசாலா கதை.. பட்டிக்காடா பட்டணமா சகலகலாவல்லவன் போன்ற படங்களுக்கெல்லாம் இதுதான் ட்ரெண்ட் செட்டர்..

  1963-ல்தான் எம்ஜிஆருடன் நாகேஷ் காமடியான இணைந்து நடித்த பணத்தோட்டம் போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தன. அது முதல் நாகேஷை தன் படங்களில் தவறாமல் இருக்கும்படி பார்த்துக் கொண்டார் எம்ஜிஆர்..

  ஏற்கனவே நம்பியார் அசோகன் எம் ஆர் ராதா ஆகிய மூவர் எம்ஜிஆரின் படங்களில் முக்கிய பாத்திரங்களில் வலம் வந்தனர்..

  பத்மினி பானுமதிக்கு பிறகு ஆஸ்தான கதாநாயகியாக சரோஜாதேவி வலம்வந்தார். இடையே மகாதேவிக்கு பிறகு நடிகர் திலகம் சாவித்திரி இரண்டு படங்களிலும் தேவிகா ஒரே ஒரு படத்திலும் ஜோடி போட்டுவிட்டு போய் விட்டார்கள்.

  தொட்டதெல்லாம் துலங்கி ஏறுமுகத்தில் இருந்தார் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட சிவாஜியின் பிரமாண்ட படமான கர்ணனை, பொருட்செலவே இல்லாத வேட்டைக்காரன் என்ற கறுப்பு வெள்ளை படத்தை முன்னிறுத்தி வெற்றி காணும் அளவுக்கு இருந்தார் எம்ஜிஆர்....vr...sbb...

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #1102
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  #இனிய_நினைவுகளில்

  #ஒளி_விளக்கு படத்தின் விசேட அம்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

  * மக்கள் திலகத்தின் நூறாவது படம்-ஜெமினி நிறுவனம் தயாரித்தது...இது உங்களுக்கு தெரிந்ததே...!!! தெரியாதது தர்மேந்திரா-மீனாகுமாரி நடித்து வெளிவந்த phool aur paththar என்ற இந்திப்படத்தின் தழுவலே இந்த படம்..

  *மக்கள் திலகம், ஜெயலலிதா, அசோகன், மனோகர், கொள்ளைக்கூட்டம் என்ற வழக்கமான கமர்ஷியல் விடயங்கள் இருந்தாலும், சாந்தி ((செளகார் ஜானகி)) என்ற பால்ய விவாகத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு கைம்பெண் சமூகத்தால் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறாள் என்ற சமூக கருத்து படத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது...இது தொடர்பான காட்சி அமைப்புகள் இந்திப்படத்தை விட அழுத்தமாயும், பெண்களை கவரும்படியும் பாடமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  *இந்த படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை செளகார் ஜானகியின் பாத்திரத்தின் மூலமாகத்தான் கதை நகர்வதால் மக்கள் திலகம் இந்தப்படத்தின் கதாநாயகன் என்பதை விட கதையின் நாயகன் என்பதே பொருத்தமானது..

  *சாந்தி (செளகார்) முத்து (மக்கள் திலகம்) வால் மீட்கப்பட்டு, முத்துவின் வீட்டிலேயே குடி வைக்கப்படுகிறார். இருப்பினும் இருவருக்கும் இடையே காட்சிகளை எந்த வித விரசமும் இல்லாமல், ஒரு நல்ல நண்பர்கள் ஒரே இடத்தில் குடியிருப்பது போன்று அமைத்திருப்பது இயக்குநர் சாணக்யாவின் திறமை. அதுவும் மக்கள் திலகம் குடித்து விட்டு வரும்காட்சியில் செளகாரின் நடிப்பும், வசனமும் அட்டகாசம்.

  *"தைரியமாக சொல் நீ மனிதன் தானா" என்ற பாடல் காட்சியில் மக்கள் திலகம் குடித்து விட்டு தள்ளாடிகொண்டே வருவதாய் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மக்கள் திலகம் தயங்கவே, கவிஞர் வாலி ஒரு யோசனை சொன்னார், "மக்கள் திலகத்தின் மனசாட்சி நான்கு எம்.ஜி.ஆராக உருவெடுத்து அவருக்கு அறிவுரை சொல்வதுபோல் எடுக்கலாம்" என யோசனை கூற அதன்படியே படமாக்கப்பட்டது. பாடல்-படமாக்கப்பட்டவிதம்-மக்கள் திலகத்தின் நடிப்பு ஆகியன இந்தப்படத்திற்கு ஹைலைட்டாக அமைந்து பட்டையை கிளப்பியது.

  * இந்த படத்தின் ஆரம்ப காட்சியில் மாங்குடி கிராமத்தில் கொரோனா போன்றே விடக்காய்ச்சலினால் மக்கள் பாதிக்கப்பட்டு, கிராமத்தை விட்டே காலி செய்வதாய் காட்சி இடம் பெறும்.

  தலையில் அடிபட்டு மக்கள் திலகம் உயிருக்கு போராடும்போது செளகார் ஜானகி கதறிக்கொண்டே பாடும் "ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டுவேன்" என்ற பாடல், ,1984 ம் வருடம் மக்கள் திலகம் உடல் நலக்குறைவினால் அமெரிக்காவில ப்ரூக்ளின் மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் மக்கள் திலகம் நலம் பெற வேண்டி பாடப்பட்டது // ஒலிபரப்பப்பட்டது.அந்த வகையில் மக்கள் திலகம் மறு பிறவி எடுத்ததில் இந்த பாடலுக்கு பெரும் பங்கு உண்டு எனலாம்.

  தமிழகத்தின் பல பகுதிகளில் இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி "ப்ளாக்பஸ்டர்" ஹிட்டானது. "தைரியமாக சொல் நீ.." "நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க" .." ருக்குமணியே.."" நான் கண்ட கனவினில் " போன்ற மெல்லிசை மன்னரின் சூப்பர் ஹிட் பாடல்களும் படத்தின் ஹைலைட்டுக்களாகின.

  தகவல்:https://en.m.wikipedia.org/wiki/Oli_Vilakku... Sridhar Babu

 4. #1103
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  சிவன் ஆடிய விளையாடலை ஆன்மீகவாதிகள் "திருவிளையாடல்" என்றனர். சிவாஜி சாவித்திரியிடம் ஆடிய விளையாடலுக்கு என்ன பெயர் வைப்பது. சேரி நடையும் குளோஸப்பில் சாவித்திரியை பதம் பார்க்க வரும் வேகத்தையும் பார்த்தால் சிவாஜியின் "விரச விளையாடல்" என்றே அழைக்கலாம். ஆண்டவனின் புனிதமான விளையாடலை அலட்சியமாகவும் ஆபாசமாகவும் நடித்து பரம்பொருளையே பதம் பார்க்க துணிந்த ஐயன் ஒரு சாதாரண பையன் போல நடக்கலாமா? ஆண்டவன் விஷயத்திலாவது அருட்கடாட்சம் பொருந்தி நடித்திருக்கலாம்.

  நம்ம kr விஜயா கூட பக்தி படம் நடிக்கும் போது 40 நாட்கள் விரதம் இருந்து பக்தியுடன் நடித்ததாக குறிப்பிட்டிருந்தார். மதுரை வீரனில் 'ஆடல் காணீரோ' பாடலில் பத்மினியின் பரதநாட்டியத்தில் தெய்வீக மணம் கமழும் விதத்தில் படமாக்கி இருப்பார்கள். ஆனால் படப்பிடிப்பில் ஐயன் சாவித்திரியோட எப்படி ஸ்டைலாக கையில் சிகரெட்டுடன் போஸ் கொடுப்பதை பார்த்தால் பக்தி பகல் வேஷமானது தெரிகிறதா ?

  கடற்கரையில் சிவன் நடப்பதை இன்றைய காவல்துறை பார்த்தால் சிவனை ஈவ் டீஸிங்கில் உள்ளே பிடித்து போட்டிருப்பார்கள். எல்லாவற்றையும் விட ஐயனின் கைபுள்ளைங்க ஆடிய டிக்கெட் கிழி விளையாடலுக்கு என்ன பெயர் வைப்பது "கிழி விளையாடல்" என்று பெயர் வைக்கலாமா? ஐயன் விளையாடிய "விரச விளையாடல்" திரையில், அவர் கைபுள்ளைங்க ஆடிய "கிழி விளையாடல்" டிக்கெட் கிழிக்கும் அறையில். சென்னையில் சுமார் 3 லட்சத்துக்கு மேலும் மதுரையில் சுமார் 1 லட்சத்துக்கு மேலும் டிக்கெட்டை சர்வ நாசம் பண்ணிய "கிழி விளையாடலி"ன் முதல் பகுதியாக விளம்பர மோசடி ஆடலை இப்போது பார்க்கலாம்.

  'கள்ளத்தனம் என்னடி? எனக்கொரு காவியம் சொல்லு என்றாள்'. ஆகா பாரதியாரின் அருமையான பாடல் வரிகள். கைபுள்ளைங்க இந்த பாடலில் வரும் கள்ளத்தனத்தை மட்டும் கையிலேந்தி பொய்யுரைத்து ஐயனை வைத்து ஒரு பொய் காவியம் படைக்கும் அழகிருக்கிறதே
  அது சிறு குழந்தைகள் கூட நம்பும் படி இல்லையே!. "திருவிளையாடல்" 1965 ல் வந்த ஒரு சாதாரண பக்தி படத்தை வைத்து கொண்டு "எங்க வீட்டு பிள்ளை" செய்த சரித்திர சாதனையை முறியடிக்க கைபுள்ளைங்க கிளம்பிட்டாங்க.

  சென்னையிலும், மதுரையிலும் மட்டுமாவது முறியடித்து விடலாம் என்ற பகல்கனவுடன் களம் இறங்கினார்கள். ஆனால் காரியம் என்று வந்துவிட்டால் நம்ம கைபிள்ளைங்க ஆற்றும் களப்பணி இருக்கிறதே! அடேயப்பா மிகவும் வியப்பாக இருக்கும். எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் கண் துஞ்சாமல், கடமையாற்றும் அதாவது டிக்கெட் கிழிக்கும் பணி மிகவும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமல்ல இடையில் செய்த சாதனைகளை அவ்வப்போது பத்திரிகையில் விளம்பரப் படுத்துவார்கள்.

  அது போல் ஏதாவது ஒரு ஊரில் படத்தை தூக்கி விட்டாலும் விளம்பரத்தில் அதை தூக்க மாட்டார்கள். அப்படி செய்து "எங்க வீட்டுப் பிள்ளை"யைக் காட்டிலும் அதிக தியேட்டரில் ஓடியதாக காண்பிக்க முனைவார்கள். அதற்கு ஆதாரமாக திருவிளையாடல் படம் 17 வது வார விளம்பரத்தில் நாகர்கோவில் தங்கம்
  தியேட்டர் போட்டு விளம்பரம் வந்ததை கண்ணுற்ற தலைவர் ரசிகர்களுக்கு ஒரே அதிர்ச்சி. என்னடா இது 16 வது வாரம் கடைசி வாரம் என்ற விளம்பரம் வந்ததே!

  அதுவும் நாகர்கோவில் தங்கத்தில் என்ற பிரத்யேகமான விளம்பரத்துடன்.
  என்னடா படம் இன்னுமா ஓடுகிறது? என்று பார்த்தால் படம் 16 வது வாரத்திலேயே பணால் ஆனது உறுதி செய்யப்பட்டது. இவ்வளவுக்கும் நாகர்கோவிலில் 100 நாட்கள் ஓட்டியும் ரூ84000 தான் வசூல். அதன்பிறகும் 12 நாட்கள் ஓட்டி மேலும் ஓட்ட முடியாமல் 112 நாளோடு நிறுத்தப்பட்டது. "குடியிருந்த கோயில்" 42 நாளிலேயே ரூ 73000. தாண்டி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
  "அடிமைப்பெண்" 100 நாட்களில் ரூ 130000 வசூலாக பெற்றது.

  ஆனால் கைபிள்ளைங்க கலங்காமல் யார் இதை பார்க்கப் போறா என்று கள்ளத்தனம் செய்ததை நமது ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.
  அந்தக்காலத்தில் கள்ளன் போலீஸ் ஆட்டம் சின்னக்குழந்தைகளிடம் மிகவும் பிரபலம். இதில் நம்ம கைபிள்ளைங்க விளையாடினால் கள்ளனைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு படத்திலும் கள்ளத்தனம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள்

  பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு பிழைப்பது கைபிள்ளைங்க மட்டுமல்ல அவர்கள் ஐயனும் இந்த திருட்டுத்தனத்துக்கு உதவி செய்வார். காசு கொடுத்து தியேட்டர் வாங்கலாம், விருது வாங்கலாம் ஆனால் சாதனையை வாங்க முடியுமா? எப்போதுமே குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி செய்து பின்னர் தோல்வியடைவதையே வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.
  ஐயனோ கஞ்சத்தனத்தில் "மாந்தோப்பு கிளியே" சுருளியுடன் போட்டி போடுபவர்.

  இந்த டிக்கெட் கிழிப்பது அதற்கு தனது சொந்த தியேட்டரை பயன்படுத்துவது போன்ற மொள்ளமாரித்தனம் ஒன்று விடாமல் செய்வார். படம் அவர் தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டி விட்டால் தனது மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணிக்கலாம் என்று தனக்குத்தானே சாதனையை உருவாக்குவதில் வல்லவர். இருக்கும் ஒன்றிரண்டு தயாரிப்பாளர்களும் எப்ப இவரை விட்டுத் தொலையலாம் என்று காத்திருப்பதை உணர்ந்து தனக்குத் தானே சாதனை செய்து கொள்வது பின்னர் விழா எடுப்பது என்று இதுபோன்ற சில்லரை விஷயங்களில் ஈடுபட்டு தனக்கு மார்க்கெட் இருப்பதாக பீலா விட்டு ஓட நினைக்கும் வசதியுள்ள தயாரிப்பாளரை அமுக்கி விடுவார்.

  அப்படியும் பாலாஜி இவரை வைத்து படமெடுத்தால் நாம் காலி என்பதை உணர்ந்து சரி ரஜினியை கூட வைத்து நடிக்க
  வைத்தால் ரஜினியின் மார்க்கெட்டை வைத்து தப்பி விடலாம் என்று "விடுதலை" என்றொரு படத்தை எடுத்தார். ஹிந்தியில் வந்த குர்பானி மெகா ஹிட் படத்தை அதிக காசு கொடுத்து வாங்கி தமிழில் எடுக்க ஐயோ பாவம், தோல்வி படம் கொடுக்காத ரஜினி கூட பயங்கர தோல்வியை தாங்க வேண்டிய சூழ்நிலை கணேசனால் உருவானது.

  கடைசி முயற்சியாக "குடும்பம் ஒரு கோவில்" திரைப்படத்தை எடுத்தது கூட யாருக்கும் நினைவிருக்காது. அதை திரையிட்ட ஞாபகமே இல்லை. அத்தோட சிவாஜியை விட்டு தலை தெறிக்க ஓடியதில் கொஞ்சம் நெஞ்சு வலி வந்ததாக கேள்வி. அதோடு இனி படங்கள் கணேசனை வைத்து எடுக்க முடியாது என்று அத்தோடு நிறுத்திக் கொண்டார். எந்த ஊரிலாவது இவ்வளவு பெரிய உருண்டை போலீஸ் அதிகாரி. இருப்பாரா என்று தெரியவில்லை.

  ஹிந்தியில் வரும் அம்ஜத்கான் உருவத்தில் உருண்டையாக இருந்தாலும் நடிப்பில் தூள் கிளப்புவார். ஆனால் நம்ம கணேச உருண்டை பண்ணுகிற சேஷ்டைகள் இருக்கே நடிப்புக்கே இலக்கணம் கிழித்த மாதிரியல்லவா இருக்கும். அதைப்பார்த்து பல
  தயாரிப்பாளர்கள் பயந்து
  போக் ரோடு திசைப்பக்கம் கும்பிடு போட்டு ஓடியதை எண்ணிப் பார்த்து
  திருந்துங்க கைபிள்ளைகளே. கைபிள்ளைகளின் "கிழி விளையாடலை" வெளிச்சத்துக்கு கொண்டு வர உதவிய திரு சைலேஷ் அவர்களுக்கு விழி நிறைந்த பாராட்டுக்கள். நன்றி! நன்றி!.........ksr...

 5. #1104
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  1947 ல் இந்தியா சுதந்திரம் பெற்றது.
  அதே ஆண்டில் இந்திய திரையுலகமும் மக்கள் திலகம் வருகையால் ....
  சுதந்திரம் பெற்றது...

  இந்தியாவின் ஒழுக்கமான ஒரே கதாநாயகன் என்ற வட்டத்தை....
  1947 ல் மக்கள் திலகத்தின்
  ராஜகுமாரி காவியம் மூலம்
  இந்திய சினிமா பெற்றது.

  1947 மே மாதம் வெளியான ராஜகுமாரி மாபெரும் வெற்றியை தந்து தமிழ் சினிமாவின் முதல்வரானார்
  மக்கள் திலகம்!

  அதிலிருந்து
  சரியாக 30 ஆண்டுகள் கழித்து...
  1977 மே மாதத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழக கோட்டையில் முதல்வராக பதவி வகித்தார் புரட்சித்தலைவர்.!

  முதல் படத்தில் பெரிய சாதனை என பீற்றிக்கொண்டவர்கள்...
  50 ஆண்டும்..... நடித்தும் ....
  காலம் தள்ளியும்...
  ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட ஆகாதவர்கள் எல்லாம் நம் இதயதெய்வத்தை வசைபாடி திரிக்கின்றனர் ....பாவம்....
  இப்படியே இறுதி வரை
  போகவேண்டியது தான்....

  ராஜகுமாரில் கடைசி காட்சியில்
  மக்கள் திலகம் ராஜகுமாரனாக பதவியேற்பார்...
  அதே 1977 ல் உண்மையாகியது...
  இது தான் தலைவரின்
  திரைப்பட சக்தியாகும்...
  ஆனால் பராசக்தி நாயகனுக்கு
  திருவையாறு தோல்வியை
  1989 ல் மரண அடியாக கொடுத்தது...

  115 படநாயகனின் வெற்றி பெரியதா...
  300 பட நாயகனின் தோல்வி பெரியதா...

  உலக சரித்திரத்தில் சினிமாவில்
  இருந்து குறைந்த காலத்தில்....
  ஆட்சியை பிடித்து மூன்று முறை முதல்வராகிய பெருமை....
  நிகழ்வு...சரித்திரம்......
  மக்கள் திலகம் என்னும் மாபெரும்
  தனி கதாநாயகனுக்கே பொருந்திய சகாப்தமாகும்!

  தலைவர் பதவி ஏற்ற 1977 ல் சென்னையில் வெளியான ராஜகுமாரி
  திரைப்பட விளம்பரம்...
  என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்.............ur...

 6. #1105
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  திருமுருக வாரியார் குரல் ...
  தெய்வத்தின் திருக்குரல்!

  திருநீறு பூசிய நெற்றியும், வள்ளி மணாளன் முருகன் பெயர் மணக்கும் நாவும் கொண்ட தமிழ்க்கடல், சமயத்துறையில் பழுத்த பெரியார் ஒருவர், ராமாவரம் தோட்டத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைக் காணச் சென்றார். வாசலில் காத்திருந்து, வாயிலும் நாவிலும் இதயத்திலும் வற்றாத அன்பினை வார்த்தைகளாலும்,முகமலர்ச்சியாலும் காண்பித்து, உரிய மரியாதையுடன் வரவேற்று உள்ளே அந்தப் பெரியவரை அழைத்துச் சென்றார் எம்.ஜி.ஆர்.

  தமிழ்மலைக்கு தமிழகத்தின் மணம், மலர் மாலை சூட்டுகின்றது. பெரியவரை அமரவைத்து, சிற்றுண்டியைத் தன் கையினால் பரிமாறுகிறார் எம்.ஜி.ஆர். அன்போடு உணவு படைத்தவரின் அகம்குளிர , தமிழ்ச் சமயப் பெரியவர் செவிக்கு விருந்து படைக்கின்றார். இருவரும் அதன்பின்பு பல கருத்துக்களைப் பற்றி உரையாடிக் களிக்கின்றனர். பெரியவர் புறப்படுகிறார். வாசல்வரை வந்து எம்.ஜி.ஆர். அவரை வழியனுப்பி வைக்கிறார்! கார் ராமாவரம் தோட்டத்திடம் விடைபெற்று , புறப்படுகின்றது திணறியபடி! காரணம்? உள்ளே இருப்பவர்கள் கனம்!

  எம்.ஜி.ஆரைப்பற்றி அந்தப் பெரியவர் கருத்து என்னவென்று அறிவதற்கு உடன் வந்தவர்களுக்கு ஆசை! தங்கள் விருப்பத்தை வினாவாகத் தொடுத்தனர். " எம்.ஜி.ஆரை எல்லோருமே பாராட்டுகிறார்கள் . நானும் அவரைப்பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் , என்னால் மற்றவர்களைப்போல் பாராட்ட முடியவில்லை" என்றார் அந்தப் பெரியவர்.

  ஏன் கேள்வியை எழுப்பினோம் என்று கேட்டவர்கள் முகம் கூம்பியது! " என்ன .... அய்யா .... இப்படிச் சொல்லிவிட்டீர்களே! " என்றனர் பொறுக்க முடியாத மனக்குமுறலோடு! " ஆமாம் ... அப்படித்தான்! " என்றார் மீண்டும் அந்தத் தமிழ்ப் பெரியார் சிரித்தபடி! உடன் வந்தவர்கள் காரை நிறுத்தி, அவரைக் கீழே இறக்கிவிடவில்லை! காரணம்? அவர் அவ்வளவு சாதாரணமானவரல்ல ! அருகில் இருந்த மற்றவர்களும் அத்தனை மோசமானவர்களல்ல!

  சமயத்துறையில் மாமேதையாகத் திகழ்பவர், எம்.ஜி.ஆரை எப்படிப் பாராட்டப் போகின்றார் என்று அறிய நினைத்தவர்க ளுக்குப் பெரிய ஏமாற்றம்!

  ' திரு ' என்றால் செல்வம் !
  ' முருகு ' என்றால் அழகு !
  ' கிருபை ' என்றால் கருணை !

  அழகு தமிழ்ச் செல்வத்தைக் கருணையுடன் வாரி வாரித்தருபவர் .... அதனையே பெயராகக் கொண்ட திருமுருக கிருபானந்த வாரியார், இப்படிக் காலை வாரிவிடுவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை . அமைதியாகச் சிந்தித்தனர்! வாரி வாரி வழங்குவதில் பாரியாய் விளங்குபவரான எம்.ஜி.ஆர் . குறித்து , திருமுருக வாரியார் கூறுவதில் ' ஏதோ விஷயம் இருக்க வேண்டும்! ஏனெனில் , அவருக்கு விஷமம் செய்யத் தெரியாது என்று நினைத்தனர்.

  கந்தவேலை. எந்த வேளையும் துதிக்கும் அந்தத் தமிழ் மலையிலிருந்து கருத்துத்தேன் அருவி கொட்டப் போகின்றது. வேடன், விருத்தனாக , வள்ளியிடம் முருகன் வேடமிட்டு வந்து வேடிக்கை காட்டியதைப்போல் ' திருமுருக ' வாரியார் விளையாட்டுக் காட்டுகின்றார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். வாரியார் என்ன கூறினார்?

  "எம்.ஜி.ஆர். பாராட்டுக்கு உரியவரல்ல. மற்றவர்களைப்போல் அவரை நான் பாராட்ட மாட்டேன்." உண்மைதானே! மற்றவர்கள் போல் பாராட்ட மாமேதை , சமயப் பெரியார் வாரியார் எதற்கு?

  சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளுக்கு இங்கு என்ன குறைவா? எதையாவது எதிர்பார்த்து, எப்போதும் எதிரில் நின்று காக்கையாய் கரைபவர்கள், எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அவரைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள், 'ஏதாவது ஒரு கூட்டம் அருகில் இருக்கட்டும் ' என்று விரட்டாமல் விட்டு வைத்திருக்கிறார்களோ!

  " அய்யா ... நீங்கள் சொல்வது புரியவில்லை ... ” அருகில் இருந்த கருத்து மலர்களைத் தொடுக்க வினா தொடுத்தனர்.

  " பாம்புக்குக் குடிக்க என்ன ஊற்றி வைக்கிறோம்?" வாரியாரும் கேள்வி கேட்டார் . " பால் " - பதில் வந்தது.

  " பசுவுக்குக் குடிக்க நாம் என்ன ஊற்றுகிறோம்? " கேள்வி தொடர்கின்றது. “ கழனித் தண்ணீர்! ”

  “பால் ஊற்றுகின்ற நமக்கு , அதைக் குடித்துவிட்டு , பாம்பு என்ன திருப்பித் தருகிறது? " “ விஷத்தை "

  “நாம் பால் ஊற்றுகின்ற பாம்புக்குத் தண்ணீரும் , பசுவுக்குப் பாலும் ஊற்றி வைத்தால் பாம்பு பால் தருமா? பசு விஷத்தைக் கொடுக்குமா? "

  "அது எப்படி அய்யா கொடுக்கும் ? பசு பால் தருவதும், பாம்பு விஷத்தைத் தருவதும் அவை ஒவ்வொன்றின் இயற்கைத் தன்மை . பிறவியின் தன்மையே அதுதான் . படைப்பை மாற்ற முடியுமா .... அய்யா ... "

  "அதைப்போலத்தான் எம்.ஜி.ஆரும் ! அவருக்கு இளம் பருவத் திலேயே தருமம் செய்கின்ற தன்மை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் . நல்லது செய்வது அவர் உடலிலேயே ஊறிக்கிடக்கும் பண்பு. தருமம் செய்வது இயற்கையிலேயே அவருக்குப் பிறவியிலேயே வந்த பழக்கம் . பசு பால் தருவதற்குப் பாராட்டுக் கூட்டமா போடுகின்றோம் ? பாம்பு விஷம் கக்குவதற் குக் கண்டனத் தீர்மானம் போட்டுப் பயன் என்ன ? அதெல்லாம் போகட்டும் ..... அம்மா ... பாசத்துடன் பிள்ளைக்கு உணவு ஊட்டுகிறாள் . ' தேங்ஸ் ' என்று மகன் சொல்லும் பழக்கம் நம்ப ஊரில் உண்டா? மகனுக்குத் தாய் செய்வதற்குப் பாராட்ட வேண்டுமா?" வாரியார் கேட்கிறார் . மௌனம் அங்கே பதிலாகிறது! “

  வள்ளல்களையும் , இல்லாமையைப் போக்கும் அன்புள்ளம் கொண்டவர்களையும் என்றும் மக்கள் , இதயத்தில் வைத்துப் போற்றுவார்கள் . உலகம் உள்ளவரை எம்.ஜி.ஆர் . புகழ் நிலைத்திருக்கும். வாரியார் குரல் தெய்வத்தின் திருக்குரலாக ஒலிக்கிறது .... !

  தர்மதேவன் எம்.ஜி.ஆர் . ஆட்சி , நல்லோர் இதயத்தில் தொடர்கின்றது.

  நன்றி : அண்ணன் "நாகை" தருமன் .........

 7. #1106
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  # பொது உடைமை வாழ்வியலின் களஞ்சியம் நம் மனித தெய்வம் பொன்மனச் செம்மல் #.........


  சினிமாவை 1885 இல்
  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திரு. லூயி பிரின்ஸ் அவர்கள் கண்டு பிடித்த போது
  அதை ஒரு சாதாரண மான பொழுது போக்கு சாதனமாக மட்டும்தான் நினைத்திருப்பார்,


  ஆனால் சினிமா என்பது மிகப்பெரிய ஊடகம், அதன் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைக்க முடியும், அது மட்டுமல்லாமல் நம்முடைய உரிமைகளுக்கான ஒரு போராட்டக் களமாகக் கூட மாற்ற முடியும் என்பதை மேலை நாடுகளில் திரு.மார்லன் பிராண்டோ, திரு. சார் லி சாப்ளின் போன்ற மாபெரும் தலைவர்கள்(சாதாரண நடிகன் என்று எழுதி அவர்களை கொச்சைப் படுத்த விரும்பவில்லை )நிரூபித்தார்கள்,

  கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக சினிமா என்னும் ஊடகத்தின் மூலம் கடுமையான போராட்டங்களை நடத்தினார் திரு. மார்லன் பிராண்டோ அவர்கள், அது போலவே நகைச்சுவை கடவுளாக பார்க்கப் பட்ட சார்லி அவர்கள்
  சுரண்டப் படும் தொழிலாளர்களுக்காக தன் ஊமைப் படங்களை போர்க்களமாக மாற்றிக் காட்டியவர்,

  இந்தக் கருத்துகளை நான் முன் வைக்க என்ன காரணம் என்று அனைவரும் நினைக்கலாம்,

  நம்முடைய தமிழ் சமுதாயத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னுடைய திரைப்படங்கள் மூலம் மிகப்பெரிய மறுமலர்ச்சிக்காக போராடியவர் நம் தங்கத் தலைவர், நிருத்திய சக்கரவர்த்தி மக்கள் திலகம் அவர்கள் என்று சொன்னால் மிகையாகாது...

  காரல் மார்க்ஸ், இங்கர் சால், சவுல் பெல்லோ போன்ற பேரறிஞர்கள் தன்னுடைய எழுத்துக்கள் மூலம் மக்களை எப்படி செம்மைப் படுத்தினார்களோ அதே போல் நம் கொள்கை தங்கம் தன் திரைப் படங்களில் எழுச்சிக் கருத்துக்களை முழங்கியதன் விளைவுதான் அடிமையாய் கிடந்தவன் கூட நம்மாலும் நிமிர முடியும் என்று துணிவுடன் எழுந்து
  நிற்க முடிந்தது...

  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தன் பொது உடைமை கருத்துக்களை மக்களிடம் சொல்லத் துடித்த போது வாராமல் வந்த மாமணி போல் வந்து உதித்தார் நம் தங்கம்,

  "அரசிளம் குமரி"யில்
  சின்னப் பயலை சேதி கேட்கச் சொன்னவர் திருடாதேயில் திருடாதே பாப்பா என்று அறிவுரை சொன்னதோடு நில்லாமல் வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே என்று தன்னம்பிக்கை, தைரியம் இவைகளையும் சேர்த்தே ஊட்டி விட்டார்.

  நாடோடி மன்னனில்
  " மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான் " என்று கேள்வி கேட்க வைத்து " அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே சேர்வதனால் வரும் தொல்லையடி " என்று பதிலும் சொன்னார்.

  " நாடு அதை நாடு
  அதை நாடாவிட்டால் ஏது வீடு " என்று நாட்டுப் பற்றை ஊட்டி யதோடு நின்று விடவில்லை,
  " உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால் உலகம் உருப்படி ஆகும் என்று புரட்சிக் கருத்தை விதைக்கவும் தயங்கவில்லை...

  வெறும் கருத்துக்களை மட்டும் சொன்னால் நம் ஜனங்கள் கேட்க மாட்டார்கள் என்று தலைவருக்கு நன்றாகத் தெரியும்,
  அதனால்தான் இந்த கசப்பு மருந்தையெல்லாம் கொஞ்சம் தேன் தடவி
  ரசிக்க வைத்து யோசிக்க வைத்தார்,

  கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது அதில் உயர்ந்தவன், தாழ்ந் தவன் என்ற ஏற்றத் தாழ்வு கூடாது என்னும் பெரியாரின்
  கருத்தையும் " பெரிய இடத்துப் பெண்ணில் " சுட்டிக்காட்டவும் தயங்கவில்லை ,

  சினிமா என்பது மிகப்பெரிய சக்தி அதை சரியான முறையில் கையாண்டால் எவ்வளவு பெரிய வெற்றியையும் சுலபமாக அடையலாம் என்பதை நிரூபித்தவர் நம் தலைவர்,

  அதனால்தான் அவரின் உடல் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் இன்று வரை மக்களின் நெஞ்சில் அழியாத கல்வெட்டு போல நிலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.......

  வந்தவரை லாபம் என்று நடிப்பு என்ற பெயரில் கூட சமுதாயத்தை கெடுத்து விடக்கூடாது என்று வாழ்ந்து மறைந்தவர் நம் தலைவர்,

  ஆயிரம் பகுத்தறிவுப் புத்தகங்கள் உண்டாக்காத தீப் பொறியை தம் படங்களின் மூலம் மக்கள் உள்ளங்களில்
  பெரு நெருப்பு போல் எரியச் செய்தவர் நம் தலைவர்,

  அப்படிப்பட்ட ஒரு தலைவனுக்கு இந்த எளியவனும் ஒரு ரசிகனாய் இருப்பதற்கு எனக்கு கொடுத்து வைத்திருக்கிறது என்பதே என்னுடைய வாழ்நாள் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது உறுதி !


  தலைவரின் பக்தன் ...

  J.Jameswatt...

 8. #1107
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  நாடு அதை நாடு!!
  --------------------------
  எம்.ஜி.ஆர்!
  அரசியல் சித்தர்!
  எம்.ஜி.ஆர்!!
  ஒருவர்,,தாம் நினைப்பது சரியானபடி இருந்துவிட்டால் பஞ்ச பூதங்களும் அவன் ஆணைக்கு உட்படும் என்பதற்கான விளக்கவுரை!
  உயிரோடு இருப்பவர்கள் பேரில் எந்த மண்டபமோ திட்டங்களோ இருத்தல் கூடாது என்று எம்.ஜி.ஆர் மிக திட்டமாகவே எண்ணினார்!
  எம்.ஜி.ஆர் மட்டும் புகழுக்கு ஆசைப்பட்டு அன்று அரைக் கண் அசைத்திருந்தால் கூடப் போதும்--
  அன்றைய மத்திய அரசாலேயே பலவற்றுக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டிருக்கும்!
  சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி!
  தன் பெயர்,,தானிருக்கும் வரை சூட்டப்படக் கூடாது என்ற தமது பலத்த பிடிவாதத்தையும் மீறி அக்கல்லூரி எம்.ஜி.ஆர் பெயரில் திறக்கப்பட இருந்தது!
  ஆனால்??
  அன்றைய காலை 10 மணிக்கு அது துவக்கப்பட இருந்த அன்று தான்--
  விடியற்காலையில் வேந்தர் விடை பெறுகிறார்!!!
  மறைந்தும் மறையாதபடி தன் பெயரோடு!!
  மருத்துவத்தை ஜெயித்த மகிமைக்காக--
  மருத்துவக் கல்லூரி பெயரிலேயே நித்தம் மணம் பரப்பி!!
  அவன் ஒரு அரசியல் சித்தன் என அமைந்ததை அடுத்தொரு நிகழ்வில் காணலாமா?
  ஏழைகளுக்கு இரண்டு ரூபாய்க்கு அரிசி வினியோகம் நடை பெற்ற காலம் அது!
  அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்ட போது பத்து பைசா உயர்த்தலாமா என்று எண்ணுகிறார் அப்போது இங்கே பொறுப்பில் இருந்த நாவலர்!
  அமெரிக்காவிலிருந்தபடி அதற்குத் தடை விதிக்கிறார் எம்.ஜி.ஆர்!!
  ஏழைகளுக்கு இன்றியமையாத அரிசியின் விலை இரண்டு ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கூட உயர்த்தப்படக் கூடாது!!!
  இப்போது சொல்லப் போவதை ஆழமாக உள் வாங்கினால் நிச்சயம் உங்கள் கண்கள் மாத்திரமல்ல,,நெஞ்சமேக் கலங்கும்!
  அன்றைய சட்டசபையின் கேள்வி நேரம்!
  தி.மு.க தரப்பில் எழுப்பப்பட்ட கேள்வி--
  மத்திய அரசால் வழங்கப்படும் அரிசிக்கான மானியம் குறைவாக இருக்கும் காரணத்தால் ரேஷனில் அரிசி விலை உயர்த்தப்படுமா??
  ஆவேசமாக எழுந்து பதில் சொல்கிறார் முதல்வர் எம்.ஜி.ஆர்--
  அரிசியின் விலை அப்படி ஏற்றப்பட்டு தான் தீர வேண்டும் என்ற நிலை வந்தால்??
  அன்று எதிர்க் கட்சித் தலைவரும் என் நண்பருமான திரு கருணா நிதி அவர்கள் ஒரு மாலையோடு ராமாவரம் தோட்டத்திற்கு வரலாம்??
  காரணம்??
  அன்று இந்த ராமச்சந்திரன் உயிரோடு இருக்க மாட்டான்???
  எத்தகைய அன்பைத் தம் மக்களிடம் வைத்திருந்தால் ஒரு தலைவன் இதயத்திலிருந்து இத்தகைய வார்த்தைகள் ஜனித்திருக்கும்??
  மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரி மான்!!!
  அந்தத் தலைவன் இன்னமும் மறையவில்லை!
  இறவாது வாழ்கிறான் என்பதற்கு அத்தாட்சியாகத் தானோ--
  அவனது அரசு இன்றுவரை வழங்குகிறது--
  இலவசமாய் அரிசியை ரேஷன் கடைகளில்???
  எம்.ஜி.ஆர்--
  நாட்டையே தன் குடும்பமாக நினைத்தார்!
  இன்னொருவர்--
  தன் குடும்பத்தையே நாடாக நினைத்தார்!!
  உண்மை தானே உறவுகளே??? Vt...

 9. #1108
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  அரிய படம் உடன் ஒரு அரிய தலைவர் செய்தி..........

  "பல்லாண்டு வாழ்க" தலைவர் நடித்த படத்தின் மூலம் ஐயா சாந்தாராம் அவர்களின் படைப்பில் இருந்து வந்தது.

  சாந்தாராம் அவர்களின் படைப்பை தமிழில் தான் நடிக்க விரும்பி இயக்குனர் சங்கர் அவர்களை அவருடன் தொடர்பு கொண்டு உரிமை பற்றி பேச அனுப்புகிறார் தலைவர்...

  தலைவர் அனுப்பிய விவரம் சொல்லாமல் அவர் பட உரிமை தமிழில் எடுக்க கேட்பதாக எண்ணிய சாந்தாராம் மறுக்க...

  மீண்டும் இங்கே வந்து தலைவர் இடம் சொல்ல
  நீங்க எனக்கு நான் நடிக்க என்று சொல்லுங்க ...

  அவர் சொன்ன படி சங்கர் சொல்ல....அவரும் அருமை இந்த கதையில் நடிக்க அவரை விட சிறந்தவர் இந்தியாவில் இல்லை சம்மதம் என்று சொல்ல...

  தலைவர் நிரப்ப படாத காசோலை உரிமைக்கு கொடுக்க மீண்டும் அவர் மறுக்க ஒரு வழியாக சங்கர் அவர்களே ஒரு பெருந்தொகையை அவர் கைப்பட நிரப்பி அவர் மேசை மீது வைத்து விட்டு திரும்ப...

  இதை போல நிகழ்வுகள் இன்றைய தமிழ் அல்லது வேறு எந்த மொழி படங்களில் நடக்குமா.....அவர் தான் தலைவர்...

  படத்தில் இடம் பெற்ற இன்னும் ஒரு சுவை யான சம்பவம்....6 குற்றவாளிகளையும் தலைவர் திருத்த கூட்டி வர அவர்கள் அனைவரும் ஒரு நாள் தப்பி விட...

  அவர்களை கண்டு பிடித்த தலைவர் அவர்களை அடிப்பது போல ஒரு காட்சியில் யாருக்கும் அடி படாமல் அடி பட்டது போல காட்சிகள் அருமையாக வர...

  சாந்தாராம் படத்தில் நடித்த ஹீரோ பெயர் படம் பெயர் தெரியவில்ல...

  தெரிந்தவர்கள் சொன்னால் மகிழ்ச்சி.
  அந்த படத்தின் ஹீரோ இதே காட்சியில் அவர் எண்ணப்படி அந்த 6 பேர்களை அடிக்க...
  அவர்கள் பெருத்த காயங்கள் உடன் அந்த ஹீரோ மீது வருத்தம் கொண்டு சண்டை நடந்தது கிளை செய்தி.

  அவர்தான் தலைவர்.
  காட்சி உண்மையாக இருக்கும்...ஆனால் யாருக்கும் பாதிப்பு இருக்காது...

  வாழ்க தலைவர் புகழ்.
  நன்றி உங்களில் ஒருவன்....தொடரும்...

  தலைவர் என்ன ஒரு அழகு பழைய படத்தில்.

  தலைவருக்கு யாரை எங்கே எப்படி முறையாக அடிக்கணும் என்று தெரியும்...

  உண்மையாக அடி பட்டவர்கள் வலிக்காதது போல நடிப்பது...நடித்தது அதை விட சூப்பர்...

  அது பொது வாழ்வில் கூட இருக்கலாம்...

  அந்த ஹிந்தி படத்தின் கதாநாயகன் சாந்தாராம் அவர்கள் தான் என்று தெரிந்து கொள்ள...மிக்க மகிழ்ச்சி....

  பதிவுக்கு பின் நன்றி...

  தங்கவேல் அண்ணன் சொன்ன மாதிரி படம் எடுக்க தெரிந்த அளவு அவருக்கு சரியா அடிக்க தெரியலே என்று எடுத்து கொள்வோம்...

  பதிவில் பதில் உதவி

  அருமை தலைவர் இதயம் சோழ வேந்தன் அவர்கள்...மிக்க நன்றி.

  அடுத்து சாந்தி அவர்கள் ..மலேசிய தலைவர் உள்ளம் நன்றி....

  மாடக்குளம் பிரபா அண்ணன் அவர்கள் நன்றி...

 10. #1109
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம் என்ன?

  இந்தி திரையுலகம் சிலரின் கைப்பிடிக்குள் சிக்கியிருக்கிறது; பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு அதுதான் காரணம் என்று குற்றசாட்டுகள் எழுகின்றன.
  இங்கே தமிழ் திரையுலகம் ஒரு தனி மனிதன் இரும்பு பிடியில் முப்பது வருடங்கள் சிக்கியிருந்தது.  1925ல் நடிக்க வந்த எம்.ஜி.ஆர் நடிப்பு துறையில் ஒரு இடம் பிடிக்க 22 வருடங்கள் போராடினார். 1947ல் திரை கதாநாயகன். 1958ல் வசூல் சக்ரவர்த்தியாக உருவெடுத்தபோது அவருக்கு வயது 41.
  1960 களில் எம்.ஜி.ஆர் தனக்கான இடத்தை பிடித்தார். உதவிகள், துரோகங்கள், ஏமாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள் என 35 வருடங்கள் போராடி பெற்ற இடம்.
  இடத்தை பிடித்ததும் அதுவரை ஒதுக்கியவர்களை ஓரத்தில் வைத்தார். உதவியவர்களை மதித்தார். மறுத்தவர்களை மண்டியிட செய்தார். பட்டியலில் இயக்குனர் ஸ்ரீதர், பாடகர் டி.எம்.சௌந்தர ராஜன், நடிகர்கள் அசோகன், சந்திரபாபு, காதல் இளவரசன், சூப்பர் ஸ்டார் என்று பலர்.
  அந்த காலங்களில் மேற்படி விஷயங்களுக்கு யாரும் சிபிஐ விசாரணை கேட்கவில்லை.
  மாறாக "வாத்தியார் தனது வகுப்பை எப்படி கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்" என்று ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்தார்கள். அவரது கீர்த்தி மேலும் கூடியது!
  எம்.ஜி.ஆரின் புகழ் என்பது தெளிவாக கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம். ஒவ்வொரு அங்குலமாக அவரே செதுக்கியது.  பிரஷாந்த் கிஷோர் படித்த பள்ளியில் எம்.ஜி.ஆர் பெரிய வாத்தியார்

  உயிருடன் இருந்தவரை அசைக்கமுடியாத பிரபலமாக இருந்ததற்கு அவரது "டகால்ட்டி" வேலைகள் காரணமாக இருந்திருக்கலாம்.

  ஆனால் இறந்தபின்னரும் நினைவில் நிற்கும் வகையில் எம்.ஜி.ஆரின் புகழ் நிலை நாட்டப்பட்டிருக்கிறது.

  சமீபத்தில் இறந்த பெருந்தலைகளை மறந்த அரசியல் களம், 90ஸ் கிட்ஸ்கள் முகம்கூட பார்த்திராத இந்த மனிதனை இன்னும் பேசுகிறது. வணங்குகிறது.
  எவரையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் எம்.ஜி.ஆரின் குண நலன்கள், வறுமையில் இளமையை தொலைத்த அனைத்து ஏழை சிறுவர்களுக்கும் பொதுவானவை.
  எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டாவது வயதில் தந்தையை இழந்தார். வறுமையில் வீழ்ந்த குடும்பத்தில் வாழ்ந்தார்.
  சின்னங்சிறு வயதில் நாடக சபாவில் தனது தமையனுடன் சேர்க்கப்பட்டார் ராமச்சந்தர். "அன்னையை பிரியமாட்டேன், மேலே படிக்கவேண்டும்" என்று கதறி அழுதவரை, "உணவுடன் தங்குமிடம் கிடைக்கும்" என்று ஆறுதல் சொல்லி சபாவில் சேர்ந்துவிட்டார் அவரது தாயார்.
  எந்த சபாவிலும் முன்னணி நடிகர்களுக்குத்தான் முதல் பந்தி. உப நடிகர்களுக்கு தனி பந்திதான்.
  "தனி" பந்தியில் மீந்தியதை சாப்பிடும்போது ஒருவேளை அவர் தீர்மானித்திருக்கலாம் "எப்படியாவது முதல் இடத்தை பிடிக்கவேண்டும், யாருக்கும் அதை விட்டுத்தரக்கூடாது" என்று.
  மக்கள் திலகமாக உருமாறிய பின்னாளில் அவரது வீட்டிற்கு வரும் அனைவரையும் அவரே "சாப்பிட்டீர்களா" என்று விசாரிப்பார்; சமபந்தியில் சாப்பிட வைப்பார் என்று பலரும் நினைவு கூறுகிறார்கள்.
  எட்டு வயதில் உணவிற்காக தனது அம்மாவையும், கல்வியையும் பிரிய நேர்ந்தது அவர் வாழ்வின் முதல் துயரம். அது 50 வருடங்கள் கழித்து அவர் மாநிலத்தின் முதல்வரான போது மேம்படுத்தப்பட்ட மதிய உணவுத்திட்டமாக உருவெடுத்தது.
  கேள்விக்குரிய நிர்வாகத்திறனுடன் நடத்தப்பட்ட அதிமுக ஆட்சியை அசைக்க முடியாத ஆட்சியாக மாற்றிய திட்டம் அது.  38 வருடங்களுக்கு முன்னால் இதே தேதியில் (18.07.1982) திருச்சியில் திட்டத்தை துவங்கி வைத்து பேசுகையில் இரு வேளை உணவுக்கு தன்னை பிரிய நேர்ந்த தனது அன்னையை ஒருவேளை நினைத்திருக்கலாம்..

  "வேலைக்குப்போகும் ஏழை தாய்மார்கள் இனி தனது மகன் அங்கே வயிறார சாப்பிட்டுக்கொண்டிருப்பான்; சத்தான உணவு அவனுக்கு கிடைக்கிறது என்று நிம்மதியுடன் அவர்கள் வேலையை தொடரலாம்"

  திரையின் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு பிழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். கழுத்தில் கட்டுடன் வெளிவந்த அவரது போட்டோ அவர் ரசிகர்களை வெறி கொள்ள செய்தது. ஒரு தேர்தலையே வெற்றிகொள்ள வைத்தது.
  ஆனால் எம்.ஜி.ஆரால் பழைய குரலில் பேசமுடியவில்லை. எதிர்தரப்பினரால் பெரும் கேலிக்குள்ளானார். இருந்தாலும் அவருக்கேயுரிய பிடிவாதத்துடன் கடைசிவரை சொந்த குரலில் பேசி நடித்தார்.
  "ஊமையன்" என்று கேலி செய்த குரல்கள் தன்னை காயப்படுத்தியதாக அவர் என்றுமே காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவரது மரணத்திற்கு பின் வெளியான உயிலில் தனது சொத்தில், ராமாவரத்தில் 6.5 ஏக்கர், ஊமை குழந்தைகளுக்கான பள்ளிக்கென்று எழுதி வைத்திருந்தார்.
  எம்.ஜி.ஆர். புகழ் இன்றும் நிலைத்திருக்க என்ன காரணம்?

  தனக்கென ஒரு இடத்தை உருவாக்க நடத்திய நீண்டதொரு போராட்டம்.

  கிடைத்த இடத்தை தக்க வைக்க செய்த தந்திரங்கள், தளராத முயற்சிகள்.

  ஏற்பட்ட காயங்களை இறுதி நாள் வரை மறக்காத குணம்.

  தான் பட்ட கஷ்டத்துக்கு, சமூகத்தை பழிவாங்க முற்படாமல், அந்த சிரமங்களை ஏழை மக்கள் படாமலிருக்க முயற்சி மேற்கொண்ட பொன்மனம்.

  "கோடிகள் சம்பாதித்து, பாதியை தர்மத்துக்கு எழுதி, மீதியையும் தனது குடும்பத்துக்கு நிரந்தரமாக தராமல், அவர்கள் காலத்துக்கு பின்னர் கட்சிக்கும் பொதுவுக்கும் வருமாறு உயிலெழுத ஒரு மனம் வேண்டும். சென்னை நகருக்குள் ஏக்கர் கணக்கில் வாங்கிய தனது சொத்துக்களை எழுதிவைத்த ஒரு தலைவனை இனி பார்க்க முடியுமா" என்று அவர் ரசிகர்கள் கேட்கிறார்கள்.

  தான் கட்டமைத்த பிம்பமானாலும் அதாகவே மாறிப்போனார் எம்.ஜி.ஆர்.
  தமிழகமும் அந்த புகழ் பிம்பத்திலிருந்து வெளிவர விரும்பாமல் அதை நிரந்தரமாக்கிவிட்டது.  நன்றிகள்: ஆர். முத்துகுமாரின் "வாத்தியார்" நூல் | எம்.ஜி.ஆர் எழுதிய "நான் ஏன் பிறந்தேன்" | கூகிள் |*M. G. Ramachandran filmography*|*MGR: The original 'ladies man' | India News - Times of India*|*mgr-advice-to-rajini-kanth*|*M.G.R. Home and Higher Secondary School for the Speech and Hearing Impaired*|

  Quora App. Q&A

 11. #1110
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,972
  Post Thanks / Like
  அண்ணாவுக்காக முதல் சொட்டுக் கண்ணீர்?

  பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணன் பாராட்டு என்பது சாதா ரணமானதல்ல என்கின்ற காலத்தில்(1965) , அவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடத்தக்க வரிகள் இவை:

  "சென்னையில் மழையில் நனைந்து குளிர் எடுத்துப் போய், அணு அணுவாகச் செத்துக் கொண்டிருந்த ரிக்ஷாக்காரர்களுக்காக எம்.ஜி.ஆர் . மழைக்கோட்டுகள் கொடுத்தார். மயிலுக்கு போர்வையிட்டு, போர்த்தி விட்டு, மயிலை மூச்சுத்திணற வைத்த வள்ளல்களைத் தான் தமிழகம் சந்தித்திருக்கிறது.

  ஆனால் , எம்.ஜி.ஆர் . நல்ல பகுத்தறிவோடு ரிக்ஷாக்காரர்களுக்கு மழைக்கோட்டு கொடுத்தார். அந்தப் பெரிய விழாவையும் அண்ணா அவர்களைத் தம் பக்கம் வைத்துக் கொண்டுதான் நடத்தினார் .

  கலைவாணர் என்.எஸ்.கே.யின் புதல்விகளுக்கு எம்.ஜி.ஆர். தம் செலவில் திருமணம் நடத்தியபோதும் அண்ணாவையே தலைமை தாங்க வைத்துப் பெருமைப் பட்டிருக்கிறார். அண்மையில் "எங்க வீட்டுப் பிள்ளை" படத்தின் வெள்ளி விழாவின்போது கூட அவர் அண்ணாவை மறந்துவிடவில்லை.

  இவ்வாறு தன் வாழ்வின் வெற்றிப்படிகளில் ஒவ்வொரு அடியை எடுத்து வைத்து வரும்போதும், மக்கள் திலகம் காஞ்சித்தலைவரை நினைக்கவும், வணங்கவும் தவறியதே இல்லை. அண்ணாவுக்குச் சென்னை நீதிமன்றத்தில் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டபோது அங்கேயே எம்.ஜி.ஆர் . விக்கி விக்கி சிறு குழந்தைபோல் அழுதுவிட்டார். இந்த நாட்டிலேயே அண்ணா பெற்ற தண்டனையை நினைத்து, முதல் சொட்டுக் கண்ணீர் உருண்டு வந்து விழுந்தது எம்.ஜி.ஆரின் கண்களிலிருந்துதான்.
  அண்ணாவைத் தாங்கள் வளருவதற்காக மட்டும் சிலர் பயன்படுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர். வளர்ந்த பின்பும் அண்ணாவை மறக்கவில்லை. எம்.ஜி.ஆரின் அண்ணா பக்தியை யாராலும் கண்களால் பார்க்க முடியாது ; காதுகளால் கேட்க முடியாது ; இதயத்தால் மட்டுமே உணரமுடியும்."
  கடைசியாகத் தமிழ்வாணன் குறிப்பிட்டுள்ள வரிகள் என் வாழ்க்கையின் அனுபவங்களாயின!

  நன்றி : அண்ணன் "நாகை"தருமன்.........

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •