Page 39 of 210 FirstFirst ... 2937383940414989139 ... LastLast
Results 381 to 390 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #381
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உலகிலேயே சிறந்த நடிகர் எம் ஜி ஆர் .
    ________________________
    சிரித்து வாழவேண்டும் .
    ________________________
    நாம் வெற்றிகரமாக இயங்க கவலை கொள்ளா மனது வேண்டும்

    நம் அவயங்களை செயலிழக்க செய்வதும் கவலை தான்

    வெள்ளைத்தாளில் சிற்பம் வரைவது சுலபம்
    எழுத்துக்களால் நிறைந்த செய்திதாளில் சிற்பம் வரைவது சாத்தியமா ?

    ஆம் நடிப்பு தொழிலும் அப்படியே

    பரந்து விரிந்த நிறுவனத்திற்கு தகுந்த ஆட்களை நியமித்து வியபாரத்தை வெற்றிகரமாக நடத்திட முடியும்

    ஆனால் கலை அப்படி அல்லவே

    ஓய்வை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து சிறதும் கவலை இன்றி முகத்தில் நவரசத்தை காட்ட இயலும்

    இப்பாடலை படம் பிடிக்கும் நேரம் இராணுவத்தையே சந்திப்பேன் என்ற பலம்
    பொருந்திய அரசால்

    வான் மழை போல் கொட்டும் பிரச்சனைகள்

    இடி முழக்கம் போல் வன்முறைகள்

    போதாக்குறைக்கு புதுவையில் தேர்தல்

    தாங்கியதே என் தலைவனின் உள்ளம்

    சிறிதும் சலனமின்றி கவலை ரேகைகள் முகத்தில் படியாமல் பாடல் காட்சியில் நடித்துள்ளார் பாருங்கள்

    இப்பொழுது விளங்கியிருக்குமே

    இவர் தான் திரை உலகில் சிறந்த நடிகர் என்று .?...............

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #382
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*23/07/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ---------------------------------------------------------------------------------------------------------
    திரைப்பட துறையில் எம்.ஜி.ஆர். பார்முலா என்பது இன்றைக்கும் வெற்றிகரமாக*பின்பற்றப்படுகிறது .* உதாரணமாக, ஜாக்கி சான் நடித்த டிராகன் பிளேட் என்கிற படத்தில் அடிமைப்பட்ட மக்களை* மீட்டு அவர்களுக்கு விடுதலை பெற்று தருவதுதான் கதையமைப்பு . ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மருத்துவராக இருக்கும் எம்.ஜி.ஆர். சந்தர்ப்ப சூழ்நிலையால் அடிமையாக்கப்பட்டு கன்னித்தீவில் கூட்டத்தினரோடு விற்கப்பட்டு விடுவார் . அவர்களுடன் சர்வாதிகாரியை எதிர்த்து போராடி வெற்றி பெற்று அடிமை விலங்கினை உடைத்து தன் இன மக்களுக்கு விடுதலை வாங்கி தந்து வெற்றி பெறுவார் . அதேபோன்ற கதை தான் டிராகன் பிளேட் என்பது .


    ஜாக்கி சான் நடித்த மற்றொரு படம் 2008ல் வெளியாகியுள்ளது . எம்.ஜி.ஆர். நடித்து வெளியான பெற்றால்தான் பிள்ளையா படத்தின் தழுவல்* தான் அது .எம்.ஜி.ஆர். தான் நடித்த படங்களிலே முற்றிலும் மாறுபட்ட கதை, கதாபாத்திரம் , விரும்பி நடித்த படமும் கூட. தனக்கு பிடித்த ஒரு சில* படங்களில்*.ஒன்று .* இந்த கதையில்தான் ஜாக்கி சான் ராபின் ஹூட் என்ற* படத்தில் நடித்து வெற்றிகரமாக ஓடியது . எம்.ஜி.ஆர். தனக்கென உருவாக்கிய எல்லா கதைகளும், கதாபாத்திரங்களும் இன்றைக்கும் பல இளைய நடிகர்களுக்கு பொருத்தமாக*அமைந்து வருகிறது என்பது விந்தையிலும் விந்தை . விஜய், அஜீத் போன்ற நடிகர்களின் படங்களில் எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களின் காட்சிகள் உல்டாவாக்கி படமாக்கப்படுகின்றன .


    மறைந்த கவிஞர் கண்ணதாசனின் இயேசு காவியம் என்கிற நூலை எம்.ஜி.ஆர். வெளியிடுகிறார் .* அப்போது பத்திரிகை நிருபர்கள் எம்.ஜி.ஆரை பார்த்து , நீங்கள் இயேசு வேடத்தில் ஒரு படத்தில் நடித்தீர்களே,அந்த படம் ஏன் வெளியாகவில்லை என்று கேட்கிறார்கள் . அதற்கு ஒரு காரணம் இருக்கிறது .இயேசுநாதர் தனது தேவாலயத்தில் ஒரு பகுதியை வியாபாரஸ்தலமாக மாற்றப்பட்டதை அறிந்து சாட்டை எடுத்து அடித்தார் என்று* ஒரு கதை உள்ளது .அது உண்மைதானா என்று பலரிடம் விசாரித்தேன் .* இப்படி விசாரணைகள் நடத்தும்போது ,இயேசுவின் நியாயமான, அலட்சியத்தனமான வேடங்கள் எனக்கு பொருந்தி வருமே என்றுதான்**உடைகள் அணிந்து,* சில புகைப்படங்கள்**எடுக்கப்பட்டதுஆனால் அதற்கு பின்பு எனக்கு தெரிந்த தகவலின்படிவந்த செய்திகள் மிகுந்த மன* வருத்தத்தை அளித்தது .அதாவதுஇயேசுநாதர் வேடத்தில் இரு கைகளை பின்புறம் கட்டி, தோளில் ஒரு அங்கியுடன்* இருந்த**புகைப்படங்களை சிலர் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜிப்பதாக அறிந்தேன் .அது மிகவும்வருத்தத்துக்குரிய செயல் . இது என் மனதை பாதித்தது .அப்படி* மேலும்**ஒரு விபரீதம் நடக்க கூடாது என்பதனால் அந்த படத்தில் நடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டேன் .*அந்த படம் தாமஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது . அவர்களுக்கு பாதிப்பு* /நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே*அதே நிறுவனத்திற்கு தலைவன் என்ற படத்தில் நடித்துக் கொடுத்தேன் .*



    இரட்டை வேடங்களில் நடிப்பது என்பது ஏதோ ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொள்வது மட்டுமல்ல .* நடை, உடை, முகபாவங்கள் ஆகியவற்றில் எல்லாம் மாறுபாடுகள், வித்தியாசங்கள் இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பி செய்வார் . இதை பல படங்களிலே பார்க்கலாம் . குறிப்பாக இரட்டை வேட படங்களில் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் தவிர்த்துவிடுவது அல்லது ரசிகர்கள் விருப்பம்போல மாற்றி அமைப்பது என்பதில் உறுதியாக இருப்பார்* . நினைத்ததை முடிப்பவன் படத்தில் ஒரு கட்டத்தில் வில்லன் ரஞ்சித் சிகரெட் பிடிக்க முயலும்போது ,சுந்தரம் அதை தட்டிவிட்டு ,எனக்கு முன்பு எவரும் சிகரெட் பிடிக்கக்கூடாது என்று கூறுவார் .அதாவது எந்த பாத்திரத்தில் நடித்தாலும், தான் எம்.ஜி.ஆர். தனது இமேஜ் கெட கூடாது . மக்களுக்கு தன்னை பற்றி தவறான அபிப்பிராயம் வந்துவிடக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். மிகுந்த அக்கறையும், கவனமும் செலுத்தினார் .


    அடிமைப்பெண் படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எவ்வளவு ஆற்றல், திறமை மிக்கவர் என்பதை மக்களுக்கு தெரிய படுத்தவே , அவருக்கு இரட்டை வேடமளித்து, அம்மா என்றால் அன்பு என்று சொந்த குரலில் பாடவும் வைத்தார்* படத்தின் நாயகனும், தயாரிப்பாளரும் ஆகிய எம்.ஜி.ஆர். அடிமைப்பெண் படத்தில்1966ல் ஆரம்பிக்கப்பட்டபோது* முதலில்**கதாநாயகியராக* நடித்தவர்கள் சரோஜாதேவி, கே.ஆர். விஜயா .* 1967ல் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு ,குணமாகி* மீண்டும்* படத்தை ஆரம்பிக்கும்போது ,இருவரும் நீக்கப்பட்டு ,ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம் தரப்பட்டு இரட்டை வேடங்கள் அளிக்கப்பட்டன .ஒன்று ஜீவா, இன்னொன்று* பவளவல்லி ராணி .* பவளவல்லி வேடத்திற்கு என்று தனி மேனரிசம் இருக்கவேண்டும் என்பதற்கு நடை, உடை, பாவனைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன . வீரமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசும்போது ராணி தன் உதட்டை* இடதுபுறம் இழுத்து ,சுழிப்பது போல அவருக்கு பயிற்சிகள் தரப்பட்டன .குறிப்பாக வேங்கையன் எனும் எம்.ஜி.ஆர்.சிறை பிடிக்கப்பட்டு, விலங்கிட்டு இருகைகளை* கட்டி சித்திரவதை செய்யப்படும்போது* அவரது உடல் திறன் , மன வலிமை,**கைகளின் பலம், ஆகியவற்றையம் வீர சாகசத்தையும்**கண்டு மெய்சிலிர்த்து ராணி, இன்றுமுதல் இவர் என் மெய்காப்பாளன் ,இத்தகைய மாவீரனை என் ஆயுட்காலத்தில் நான் பார்த்ததே இல்லை என்று புகழாரம் சூட்டுவார் . இந்த வசனம் பேசுவதற்கு முன்பு நடந்து வரும் காட்சியில் நடை, உடை, பாவனை, உணர்ச்சிகள் ஆகியவற்றில் ஜெயலலிதாவின் நடிப்பில் வித்தியாசமில்லை என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர். ,ஜீவா பாத்திரத்திற்கு வித்தியாசமாக ராணியின் வேடம் இருக்கவேண்டும் என்கிற வகையில் தொடர்ந்து**பல்வேறு வகையான பயிற்சிகள் அளித்து ,ராணி கம்பீரமாக, அலட்சியமான* பார்வையோடு* நடந்து வருவது போல* பல டேக்குகள்* எடுத்த**பின்புதான் திருப்தி அடைந்து படமாக்கினார் . இதே மேனரிஸத்தை இந்த படம் முழுவதும் ஒரே சீராக கையாண்டு நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று பாராட்டி உற்சாகப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.*


    ஜெயலலிதாவின் நடிப்பு ஆற்றலை எப்படி வெளிப்படுத்தவேண்டும் என்று பயிற்சி அளித்து , கற்று கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.* இப்படி பலருக்கு கற்று கொடுத்ததனால்தான் அவரை வாத்தியார் என்று அழைக்கிறார்கள் .எந்த இடத்தில எப்படி நடித்தால் கைதட்டல்கள் பெறுவார்கள் என்பதை அறிந்து வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர்.* *மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில்*


    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    -----------------------------------------------------------------------------------
    1.புதிய வானம் , புதிய பூமி* - அன்பே வா*

    2.எம்.ஜி.ஆர். -நம்பியார் உரையாடல் - ஆயிரத்தில் ஒருவன்*

    3.பெற்றால்தான் பிள்ளையா படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.*

    4.நான் செத்து பிழைச்சவன்டா* - எங்கள் தங்கம்*

    5.அறிவுக்கு வேலை கொடு ,பகுத்தறிவுக்கு வேலை கொடு - தலைவன்*

    6.வில்லன் ரஞ்சித் - சுந்தரம் மோதல் காட்சிகள் - நினைத்ததை முடிப்பவன்*

    7.அம்மா என்றால் அன்பு - அடிமைப்பெண்*

    8.எம்.ஜி.ஆர். வீர சாகசம் காட்சி - அடிமைப்பெண்*

    9.எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா உரையாடல் - அடிமைப்பெண்*

    10.வாங்கய்யா* வாத்தியாரய்யா* - நம் நாடு*



    .**

  4. #383
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அவன் தலைவன்!!
    -------------------------------
    எம்.ஜி.ஆர் ஒன்றை ஒருவரிடம் கேட்டுக் கொண்டு அவர் அதை செய்து கொடுக்க மறுத்திருப்பாரா?
    சரி,,,எம்.ஜி.ஆரிடம் ஒருவர் ஒரு உதவியைக் கேட்டு அதை செய்ய இயலாது என்று எம்.ஜி.ஆர் மறுத்திருப்பாரா??--
    நடப்பதற்கு சாத்தியம் இல்லாத இந்த இரண்டு விஷயங்களையும் இப்போதைக்கு ஒதுக்கி வைத்துவிட்டுப் பதிவுக்குள் சென்றோம் எனில்---
    அது எம்.ஜி.ஆர் கட்சி தோன்றிய நேரம்!
    திண்டுக்கல் வெற்றியைத் தொடர்ந்து பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிக்கிறார்!
    அப்போது எம்.ஜி.ஆர் செய்த ஒரு செயற்கரிய செயலை வேறு எந்தத் தலைவனும் இனியும் செய்வதற்கு வாய்ப்பில்லை எனலாம்!
    பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிக்கும் எம்.ஜி.ஆர்,,அங்கேத் தன் கட்சியைச் சேர்ந்த ராமசாமி என்பவரை முதல்வராக்கி அழகு பார்க்கிறார்!!
    எம்.ஜி.ஆர் நிலையில் எவர் இருந்திருந்தாலும்,,தாம் கட்சியைத் துவக்கிய குறைந்த கால இடை வெளியில் இப்படி ஒரு வாய்ப்பு வந்தால் தாமே முதல்வராக ஆங்கே அரியணையில் அமர ஆசைப் பட்டிருப்பார்!!
    ஆனாலும் தர்ம தேவதை எம்.ஜி.ஆரை விடுவதாயில்லை-
    தமிழகத்து அரியணையின் தூங்கா விளக்காகத் தொடர்ந்து மும்முறை அவரையே பிரகாசமாக எரியச் செய்தது! ஒளி விளக்கு அல்லவா அவர்??
    எம்.ஜி.ஆருக்கு --ஒருவருக்கு--
    கல்வித் தீயை எரிய வைக்கவும்--
    பசித் தீயை அணைய வைக்கவும் தீராத வேட்கை இருந்த அதே நேரத்தில்--
    அரை சாண் வயிறை எரிக்கும் அமிலத் தீயாம் குடியைக் கொளுத்த இருந்தக் கொள்கை மிக அதிகமாக இருந்தது!
    எந்தத் தலைவனுமே செய்வதற்கு அச்சப் படும் ஒரு காரியத்தை அவர் சர்வ சாதாரணமாகச் செய்தார்--
    குடிக்குப் பிரசித்தமான புதுவையில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்த மகோன்னதம் மூலம்,, ,,தம் மனோரதத்தை நிறை வேற்றினார்!
    பிறகு தமிழ் நாட்டிலும் அதைச் செய்து காட்டினார்!
    இந்த இடத்தில் எம்.ஜி.ஆர்,,தம்மைத் தாமே சுருக்கிக் கொண்டு ஆற்றிய ஒரு அரும்பணியைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்--
    அதுவரை பர்மிட் முறை அமலில் இருந்த காரணத்தால் தமக்குத் தொடர்புடைய தமக்கு அறிமுகமுள்ள அத்தனை பேர்களையும் தாமே தொடர்பு கொண்டு,,அவர்களின் பர்மிட் உரிமத்தைத் தாங்களே அரசிடம் ஒப்படைக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார்!
    இந்த விஷயத்தில் ஒருவரிடம் கேட்கிறோமே என்றுக் கொஞ்சமும் எண்ணாமல்,,மது விலக்கு வேண்டி தமது சுய கௌரவத்தைத் தியாகம் செய்தார் எம்.ஜி.ஆர் என்றே சொல்லலாம் அல்லவா???
    அட! பதிவின் துவக்கத்தில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தோம் இல்லை??
    ஆம்! பர்மிட் முறையை ரத்து செய்யச் சொல்லி எம்.ஜி.ஆர்,,அந்த நேரத்தில் சிவாஜியைக் கேட்டார்--தம் உடல் நிலைக்கே அது ஆபத்தாய் முடியும் என்ற மருத்துவ காரணத்தைக் காட்டி சிவாஜி கழன்று கொண்டார்--
    நடிகர் கமல்,,ஒரு உதவி கேட்டு எம்.ஜி.ஆரை அணுகினார்--
    பெரிய தொழில் அதிபர் ஒருவருக்கு,,பர்மிட் பெற்றுத் தரும்படியும்,,பதிலுக்கு அவர் மூலம் அ.தி.மு.கவுக்குக் கணிசமான அளவு கட்சி நிதி தரப்படும் என்றும் அவர் கேட்ட உதவியை செய்ய முடியாது என்று நிர் தாட்சண்யமாக மறுத்து விட்டார் மக்கள் திலகம்!!
    அவரது கொள்கை அன்று எப்படியிருந்தது எனில்--
    வறுமையில் சிக்கிய-- அடி மகன்--
    ஆக வேண்டும் நல்லதொரு குடி மகன்!
    ஆகக் கூடாதே குடி மகன்???!!!.........

  5. #384
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு என்றால் அதில் கலந்து கொள்ளும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். படப்பிடிப்பில் உற்சாகமாக கலந்து கொண்டு அவரவர் பணிகளை எம்ஜிஆர் புகழும் வண்ணம் சிறப்பாக செய்வார்கள். மக்கள் திலகமும் எத்தனை பேர் படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும் அத்தனை பேரையும் தெரிந்து வைத்துக் கொள்வார்.

    புதிதாக ஒருவர் வந்திருந்தாலும்
    உன்னை நான் இதற்கு முன்னால் பார்க்கவில்லையே என்று விசாரித்து தெரிந்து கொள்வார். அவர்களுக்கு நன்றாக ஊக்கம் கொடுத்து சிறப்பாக பணியாற்ற வைப்பார்.
    படப்பிடிப்பில் உற்சாகமாக பணியாற்றிய அவர்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் தலைவரிடம் சொல்லி விட்டு போக யூனிட் தொழிலாளர்கள் அத்தனை பேரும் காத்திருப்பார்கள்.

    தலைவரும் ஷூட்டிங் முடிந்ததும் தயாரிப்பு நிர்வாகியை வரவழைத்து ஒருசில 10 ரூ. புது பணக்கட்டுகளை பெற்றுக்கொண்டு என் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளுங்கள் என்பார். பின்பு அந்த கட்டுகளில் உள்ள நோட்டுக்களில் நான்கைந்தை
    உருவி எடுத்து கொண்டு அதை யாரும் அறியாவண்ணம் உள்ளங்கையில் சுருட்டி வைத்துக் கொண்டு ஒவ்வொரு தொழிலாளிகள் கையிலும் அடுத்தவர் அறியாத வண்ணம் வைத்து திணிப்பார்.

    யார் யாருக்கு எவ்வளவு கிடைத்ததோ? அது அவரவர் யோகத்தை பொறுத்தது. அனைவரும் பணத்தை பெற்றுக்கொண்டு தலைவரிடம் விடை பெற்றுச் செல்வார்கள். அவர்களுடைய மகிழ்ச்சியை கண்டு தலைவர் பூரிப்புடன் அன்றைய ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு உற்சாகமாக அடுத்த வேலைக்கு கிளம்புவார். தொழிலாளர்களும் அடுத்த எம்ஜிஆர் ஷூட்டிங்கிற்காக காத்துக் கொண்டிருப்பார்கள்.

    அன்றைய சூழ்நிலையில் மூன்று 10
    ரூ நோட்டுக்கள் கிடைத்தாலும் அது அன்றைய நாள் சம்பளத்தை விட அதிகமானதாக இருக்கும். 'ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டவர்' புரட்சி தலைவர். இறைவனை ஒரு தடவை பார்த்தாலும் ஆசை தீராமல் அடிக்கடி பார்க்க கோயிலுக்கு செல்வோம் இல்லையா? அதுபோல் புரட்சி தலைவரும் நாள் தவறாமல் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண தவறுவதில்லை.

    மற்ற ஒருசில நடிகர்கள் ஒரு ஷூட்டிங்கை முடித்து விட்டு அரக்க பரக்க அடுத்த ஷூட்டிங்குக்கு பணம் பார்க்க ஓடுபவர்கள் மத்தியில் புரட்சி தலைவர் ஒரு அபூர்வமான பிறவியல்லவா? அதனால்தான் குண்டு துளைத்தும், நோய் தாக்கியும் முப்பிறவி எடுத்து, மூன்று முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்து மக்களுக்கெல்லாம் அரும் பெரும் பொக்கிஷமாக விளங்கினார் என்றால் அது வியப்புக்குரியதல்லவா?..........

  6. #385
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை சித்ரா திரையரங்கில் சிவாஜியின் 208 திரைப்படங்களில் சுமார் 168 படங்கள் வெளியானதாக ஒரு பொய்யான தகவலை சித்ரா தியேட்டர் ஊழியர் ஒருவர் சொன்னதாக வந்த செய்தியில் எள்முனையளவு கூட உண்மை இருப்பதாக தோணவில்லை. ஏனென்றால் சிவாஜி வருடத்துக்கு
    8 படங்கள் நடித்தால் அதில் குறைந்த பட்சம் 4 படத்துக்கு மேல் சாந்தியில்தான் வெளியாகும்.

    மிச்சம் இருக்கின்ற படங்கள் வெவ்வேறு தியேட்டர்களில்
    வெளியானது போக ஒரு 60-70 படங்களாவது சித்ராவில் வெளியாகி இருக்குமா? என்பது சந்தேகமே.
    எதற்காக இந்த அப்பட்டமான பொய் செய்தியை போடுகிறார்களோ தெரியவில்லை. சரி அதை விடுவோம். இத்தனை படங்கள் வெளியாகி அதில் "பாசமலரை" மட்டும் வெள்ளிவிழா ஓட்டினார்கள்.
    மீதமுள்ள படங்களும் வசூலில் பெரிய அளவு சாதனை செய்த மாதிரி தெரியவில்லை.

    1967 ல் வெளியான ரவிச்சந்திரனின் "நான்"
    அதுவரை வெளியான அத்தனை படங்களையும் ஓரங்கட்டி வெள்ளிவிழா ஓடி வசூலில் சாதனை செய்தது. அதை அடுத்து வந்த "நம்நாடு" நவ 1ம் தேதி தொடங்கிய அட்வான்ஸ் புக்கிங் வெறும் ஒன்னே முக்கால் மணி நேரத்தில் 4 சிறப்பு காட்சிகள் உட்பட 10 நாட்கள் எல்லா காட்சிகளும் ஹவுஸ்புல் ஆனது சித்ரா தியேட்டர் சரித்திரத்தில் புதுமையானது. ஏனென்றால் சிவாஜி படங்கள்தான் அதிகமாக வெளியாகியிருப்பதால் இத்தகைய கூட்டத்தை கண்டிருக்க மாட்டார்கள்.

    அட்வான்ஸ் புக்கிங்கில் அசுர சாதனை செய்ததோடு 100 நாள் வசூலிலும் புதிய ரிக்கார்டு வைத்தது. அதையும் தகர்த்து 1972 ல் வெளியான பிளாக்பஸ்டர் படமான "நல்லநேரம்" தொடர்ந்து 116 காட்சிகள் அரங்கு நிறைந்து வசூலில் உச்சநிலையை அடைந்தது. சித்ராவில் "நல்ல நேரம்" 105 நாட்கள் ஓடி வசூலாக ரூ
    3,21,931.00. பெற்றதுதான் அதிகபட்ச வசூல்.

    "எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை, அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை". என்ற புரட்சி தலைவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, சொற்ப படங்கள் சித்ராவில் வந்தாலும் அதில் செயற்கரிய சாதனை படைப்பது தலைவர் படங்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..........

  7. #386
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வாத்தியார் #எனும் #தெய்வம்



    1968இல் திரைக்கு வந்த #புரட்சித்தலைவரின் #"ஒளிவிளக்கு"#
    திரைப் படத்தில் கவிஞர் வாலி எழுதிய ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டினேன் எனத் தொடங்கும் பாடல். படத்தில் திருடனாக வேடமேற்ற எம்.ஜி.ஆர்., தீ விபத்தில் சிக்கிய ஒரு குழந்தையைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். அப்போது அவரைக் காப்பாற்றும்படி முருகனிடம் மனமுருக வேண்டி படத்தின் முக்கியப் பாத்திரங்களில் ஒன்றான சௌகார் ஜானகி பாடுவதாக அமைக்கப்பட்டது.

    எம்.ஜி.ஆரின் வேறு பல திரைப்பாடல்களில் உள்ளதைப் போன்ற நேரடியான அரசியல் எதுவும் இல்லாத அந்தப் பாடல் எம்.ஜி.ஆரைப் பற்றிக் கட்டமைத்த பிம்பம்தான் #அவரை #மற்றவர்களோடு #ஒப்பிடப்படமுடியாதவராக #மாற்றியது.

    1984இல் புரட்சித்தலைவர் , உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவரது கட்சிக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்த பாடல் அது.

    "கடவுள் நம்பிக்கையற்ற, பகுத்தறிவுக் கொள்கையில் தீவிரமான நம்பிக்கை கொண்ட ஒரு கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான #எம்ஜிஆரையே #தெய்வமாக்கியது..."

    உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
    விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்?
    உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
    மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு

    படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்தில் நேர்த்தியற்ற முறையில் உருவாக்கப்பட்ட முருகனின் உருவ பொம்மை ஒன்றின் முன்னால் நின்று உள்ளம் உருகும் குரலில் சௌகார் ஜானகி பாடுவதை இப்போது கேட்டாலும் கண்கள் சுரக்கும்.

    சௌகாரின் குளமான கண்களில் நிழலாடும் சோகத்தையும் எம்ஜிஆரின் மார்பின் மீது முகம் புதைத்து அவர் பரிதவிப்பதையும் கவனியுங்கள். அது தமிழக மக்களின் சோகம், அவர்களது பரிதவிப்பு. அந்தப் பாடலில் இடம் பெற்றிருக்கும் மற்ற சில வரிகளைக் கவனியுங்கள். #அவர் #தெய்வமாக்கப்பட்டிருப்பது #தெரியும்.

    அந்த தெய்வம்தான் 1968 தேர்தலில் போட்டியிட்டது; திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்தது; 1972இல் அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு அதிமுகவைத் தொடங்கியது. மக்கள் #எம்ஜிஆர் #என்ற #அந்த #தெய்வத்தை #தரிசிக்க முண்டியடித்தார்கள்; அதற்கு வாக்களித்தார்கள்; அதிகாரத்தைக் கொடுத்து முதலமைச்சராக்கினார்கள்.

    1984இல் அந்த தெய்வத்துக்கு உடல் நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படட்போது மக்கள் இந்தப் பாடலை அவர் குணமடைந்து மீண்டு வருவதற்கான #பிரார்த்தனைப் #பாடலாகப் பயன்படுத்தினார்கள். அவர் மீண்டு வந்தார்.

    1987இல் மறையும்வரை தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார். மறைந்த பிறகும் இன்னமும் மக்கள் அவரைத் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    இன்றும்கூட அவருடன் புதைக்கப்பட்ட, இன்னும் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளாத அவரது கைக்கடிகாரத்தின் டிக் டிக் ஒலியைக் கேட்பதற்காக கடற்கரையில் உள்ள அவரது சமாதியின் வழவழப்பான மேற்பரப்பின் மீது சாய்ந்தபடி தம் ஒரு காதை அதன் மீது வைத்துக் காத்திருக்கும் #மக்களுக்கு #அவர் #தெய்வமாகவேதான் #தென்படுகிறார். #அவர் #மக்களின் #இதயதெய்வம்.

    கேட்கும் சத்தம் இன்னும் அடங்கியிராத #அவரது #இதயத்தின் #துடிப்பு. அவர்களையெல்லாம் பார்க்கும்போது இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அது தன் துடிப்பை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்று தோன்றும்...என்பது திண்ணம்..........

  8. #387
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Denmark --
    டென்மார்கிலிருந்து ✍️

    ����������������������
    *Makkal Thilagam MGR* fan
    - article about mgr
    ����������������������

    " *எங்கள் எம்ஜிஆர்* "
    ����������������������

    *கலைஞனாய்*– *வள்ளலாய்* – *அரசியலாளராய்* நமது நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் *சத்தியதாய்* பெற்றெடுத்த *உத்தமர் பொன்மனசெம்மலை* அடியேன் தொற்றிக்கொண்டதை நினைத்து மகிழ்ந்து ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் எழுத்து மாலையை படிக்கும் ஒவ்வொருவருக்கம் சூடி மகிழ்கிறேன்.

    ✍️

    ஈழத்தின் வடவளைவுகளை முத்தமிட்டுக்கொண்டிருக்கும் ”அராலி” எனது ஊராகும் குடும்பத்தினருக்கும் எம்ஜிஆருக்கும் நெருக்கம் இல்லை ஆக சிவாஜியின் கண்ணீர்காவியங்களுடன் எனது வளரும் பருவமும் கரைகிறது எனது மாமாவும் அவரின் நண்பரும் திடீர்மழையென ”சந்திரோதயம்” படம் பார்க்க என்னை கூட்டிசென்று எம்ஜிஆரின் அழகை முதன்முதலில் திரையில் காண வழிசெய்தார்கள் சந்திரபிம்பத்துள் சிரித்தமுகத்துடன் எம்ஜிஆர்
    தோன்றி தனது இரசிகர்களைபார்த்து கண்சிமிட்டி தலையசைத்து செல்வார் இன்று நினைத்தாலும் மனம் உவகைபடுகின்றது.

    காலங்கள் கரைந்து அடியேன் 17 வயதை தொட்டிருக்கும் காலத்தில் ஒரு நாள் தெற்குராலியில் பாட்டியாச்சிவீட்டில் 3ரூபாய்க்கு 2படம் காண்டினார்கள் முதலாவதாக சிவாஜியின் ”ரத்தபாசம்” பின்னர் புரட்சிநடிகரின் ”பாசம்” அன்று பாசம் படத்தின் கதையுடன் நன்றாய் ஒட்டிப்போன என்னால் இன்றுவரை அந்தப்படத்தின் நியாயக்கேள்வியில் இருந்து வெளிவரமுடியவில்லை

    அந்தப்படத்தின் ஈர்ப்பே என்னை எம்ஜிஆரின் இரசிகனாக்கியது பின்னர் யாழ் வெலிங்டன் திரையில் ”நாடோடி” பார்க்கின்றேன் மனம் மேலும் எம்ஜிஆரை விரும்பச்செய்கின்றது காரணம் படத்தின் கதையும் அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்பும் பிறகு யாழ் ராஜா திரையில்”ஒளிவிளக்கு” காலை காட்சி 10:30 க்கு 8:30க்கே முதல் வகுப்பு சீட்டை வாங்க வரிசையில் நிற்கின்றேன் நீண்டநேர வரிசைகாத்திருப்பில் பின்னால் நின்ற எனது வயதை ஒத்தவரும் அவரின் தம்பியும் எனக்கு நட்பு முகம் காட்ட மகிழ்ச்சியுடன் மக்கள் திலகத்தை தரிசிக்கும் நினைப்பில் இருக்கும் போது தீடிரென என்னை நோக்கி கதைக்கின்றான்

    நாங்கள் வல்வெட்டிதுறையிலிருந்து வந்திருக்கின்றோம் நீ? என என்னை மரியாதைகுறையாக கேட்க உடனே அண்ணன் தம்பியை அதட்டி அடக்க மீண்டும் விட்டான் சிறுவன் யாழ்ப்பாணத்து மக்களின் பொதுக்கேள்வியை அதுதான் நீ என்ன சாதி- நான் கேள்வியில் சற்றே உதறி விடை சொல்
    வதற்குள் அண்ணன் ஒரு குட்டு போட்டு தம்பியாரை ஒட்டு மொத்தமாய் அமுக்கிவிட்டார் இச் சம்பவம் எனக்குள் இனிய நினைவாக என்றுமே படர்ந்திருக்கின்றது. ”ஒளிவிளக்கு” திரையரங்கினுள் இரசிகர்கள் உற்சாக மழையில் நடமாடியதைப்போல் வேறெங்கும் திரையரங்கத்துள் அதீத உற்சாகத்துடன் நடமாடியதை யான் கண்டதில்லை ”தைரியமாக சொல் நீ மனிதன் தானா” பாடல் காட்சியில் 6 எம்ஜிஆரை அழகிய உடைகளில் பார்த்து இரசிக பித்து பிடித்தது உண்மை இரசிகர்களின் சீட்டி அடிப்புகள் அபாரம் உள்ளங்களை எம்ஜிஆர் தனது உற்சாக நடிப்பாலும் விறுவிறுப்பான சண்டை காட்சிகளாலும் கட்டிப்போட்டிருந்தார்.

    அடுத்து வெலிங்டன் திரையில் ”அன்பேவா” ஒரு இளந்தென்றலை சுகித்து மகிழ்ந்த இன்பத்தை தந்த படம் ”புதியவானம் புதிய…” பாடல் காட்சி என்றும் மறக்கமுடியாதது ”அன்பேவா” இரம்மியமான எம்ஜிஆர் படம் அடுத்து தனபாலண்ணை வீட்டில் தொலைகாட்சி காண்பிப்பாக காட்டப்பட்ட ஊர்மக்கள் ஒன்றாக கூடி பார்த்து இரசித்த ”குடியிருந்தகோயில்” என்னென்று சொல்வது படத்தின் விறுவிறுப்பு எழுத்தோட்டம் அற்புதம் சாதாரண பழிக்கு பழி வாங்கும் கதை ஆனால் தன்னிகரற்ற விதத்தில் படத்தை எடுத்து இரசிகர்களை முழுத்திருப்திக்குள் ஆக்கியிருந்தார்கள் முதலாவது சண்டை காட்சியே படத்தின் பெருமைக்கு சான்றுபகர்க்கும் 51வயதினில் எம்ஜிஆர் ஆடிய வேகம் ”ஆடலுடன்பாடல்”காட்சியில் அற்புதம் வேறுயாரும் நினைத்து பார்க்கமுடியாது.

    மேற்கொண்டு மணியக்கா வீட்டில் ”மாட்டுக்காரவேலன்” எம்ஜிஆர் படங்களில் கலகலப்புக்கு முத்தாய்ப்பான படம் நல்லதொரு பாடலான ”சத்தியம் நீயே” பாடலை எழுத்தோட்டத்துக்குள் போட்டு சாம்பாராக்கி விட்டார்கள் என்று நான் வருத்தப்படுவதுண்டு எழுத்தோட்டம் முடியவிட்டு எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு இனி ஒன்றுமே செய்யமுடியாது இருப்பதை இரசிக்க வேண்டியதே ”மாட்டுக்காரவேலன்” மாபெரும் மணிப்படம்.

    வழியே ”படகோட்டி” கறுப்பு சிவப்பு ஆடையில் முதல் காட்சியிலே தோன்றி சிலம்பாடும் காட்சியுடன் எம்ஜிஆர் குதிப்பார் அழகும் விறுவிறுப்பும் நானா நீயா என போட்டி போடும் சிலம்பாடும் வேகம் அபாரம் வண்ணத்தில் வள்ளலை வைத்து சரவணாபடக்குழு எடுத்து வெற்றியீட்டியது பாட்டுக்கொரு படகோட்டியென புகழ்க்கொடி பறக்கவிட்ட ”படகோட்டி” வெற்றிவாகை சூடி நின்றது.

    குலனையில் தொலைகாட்சி காண்பிப்பாக தர்மயுத்தம் வேறொரு படம் காண்பிப்பதாக சொல்லியிருந்தார்கள் முதலாவதாக தர்மயுத்தம் காண்பித்த கையுடன் ஒரு படத்தை இரண்டாவதாக போட்டார்கள் இரவின் சோம்பல்கொள்ள அங்கும் இங்குமாய் இருந்தோம் திடீரென முதியவர்கள் சிலர் அடிமைப்பெண்ணடா என்று சத்தமாய் கூவியபடி தொலைகாட்சி பெட்டியை நோக்கி முன்னேறினார்கள் உடன் நானும் சோம்பலை நீக்கி முன்னேறி நோக்கினேன் அடடா எதிர்பார மகிழ்வு

    ”அடிமைப்பெண்” 3மணி நேரம் படத்துடன் ஐக்கியம் இப்படியும் ஒரு வீரகாவியம் தமிழ்ப்படவுலகில் என எண்ணி பேருவகைப்படவைத்த மாபெரும் எம்ஜிஆர் சொந்தப்படம். ”தாயில்லாமல் நானில்லை” பாடல் காட்சியில் எம்ஜிஆர் வித்தியாசமான ஆடையில் புரட்சி கட்டுடன் தோன்றி இரசிகர்களை பேரானந்தப்படுத்தியிருப்பார் அதேபோல் ”உன்னைபார்த்து உலகம் சிரிக்கிறது” பாடல் காட்சியில் புரட்சி பு£வாய் மலர்ந்து இறுதியில் வீரக்கனலாவார் நடிப்பால் அதிரடியான எம்ஜிஆர் படம் என்றால் நன்றாய் பொருந்தும் அடிமைப்பெண்.

    அராலி பாரதி சனசமுக நிலையத்தினர் தொலைகாட்சியில் காண்பித்த இன்னொரு பெருமைக்குரிய எம்ஜிஆர் படம் “எங்கவீட்டுபிள்ளை” இந்தப்படம் பின்னர் யாழ் புதிய றீகல் திரையில் இரண்டாம் தடவையாக வந்த பொழுது கரையுர் – பாசையுர் – நாவாந்துறை மக்களின் அன்புதொல்லை படையலுக்குள் இருந்து பார்த்து பரவசப்பட்ட படம் “நான் ஆணையிட்டால் பாடல் வருவதற்கு 3 நிமிடங்களுக்கு முன்னரே சீட்டியடிப்பும் குதூகலமும் இரசிகர்களிடமிருந்து பறியும் படமெண்டா படம்தான் என எண்ணிக்கொண்டு வெளியில்; வந்தது “எங்கவீட்டுபிள்ளை”யை பார்த்தவிட்டு.

    மழையோ மழை அப்படியொரு மழையன்று யாழ் மனோகராவிலும் ஸ்ரீதர் திரையிலுமாய் மக்கள் திலகத்தின் “உலகம் சுற்றும் வாலிபன்” நனைந்தபடி இரசிகர்கள் சீட்டுக்காய் ஸ்ரீதரில் சனத்திரளுக்குள் காக்குளிருக்குள் வெளிநாட்டு அழகை 3ரூபாயுடன் நான் பார்த்து இரசித்த படம் மஞ்சுளாவை அசோகன் தொல்லை பண்ண தொடங்க எம்ஜிஆர் சப்பாத்துகயிறுகளை கட்ட யாழ்ப்பாணத்து இரசிகன்; சீட்டியொலியெழுப்ப ஆகா என்ன´மகா எதிர்பார்ப்பு கொடுக்கப்போகிறார் வாத்தியார் அசோகனுக்கென்று அருமையோ அருமை இன்று கேட்டாலும் நேற்று வந்த பாடலைப்போல் தரம் கொண்ட பாடல்களை கொண்ட படம் “உலகம் சுற்றும் வாலிபன்” புத்தர் கோயில் காட்சியமைப்பு மகா பிரமிப்பை தந்தது ஊசிக்குத்து சண்டை ஆ போட வைத்தது இன்று நடக்கும் ஆயுதமோக அழிவுகலாச்சாரத்தை எம்ஜிஆர் அன்றே தனது படக்கதையில் சொல்லியிருந்தார் எம்ஜிஆரின் சொந்தப்படமான “உலகம் சுற்றும் வாலிபன்” என்றும் மக்கள் பார்த்து பயனடைய வேண்டிய படமென்பேன்.

    யேர்மனில் முன்சன் அகதிகள் விடுதியில் “குலேபகாவலி” படத்தைப் பார்த்து இரசிக்கின்றோம் திடீரென அறைக்குள் நுழைந்த மரியதாசு சொல்லுகிறார் கேலியாக உங்கா வாத்தி கிழட்டுபுலியோடை சண்டைபிடிக்குதென்று உடனே கடுப்பான இரசிகர் யோகநாதன் மரியதாசை கேட்டார் சரி எம்ஜிஆர் கிழட்டுபுலியுடன் சண்டை பிடிக்கிறார் நீ கிழட்டுபுலிக்கு முன்னால் நிப்பாயாவென்று- வெட்கித்த மரியதாசு தலையை திருப்பி அறையைவிட்ட நீங்கினார் “குலேபகாவலி” நாடறிந்த நல்ல படம்.

    எம்ஜிஆர் சண்டைகளில் எனக்கு மிகவும் பிடித்தது அவரின் சிலம்பாட்டமே அற்புதமான படமாயிருந்தும் இரசிகர்களின் பேராதரவை பெறாத படம் “நீரும் நெருப்பும்” காரணம் இறுதியில் நெருப்புஎம்ஜிஆர் இறப்பதாக காண்பித்தமையாகலாம் திரைப்படத்து கதையில்கூட எம்ஜிஆர் இறப்பதை இரசிகர்கள் விரும்புவதில்லை இதுவரையில் வணக்கம் சொல்லி முடித்துக்கொள்ளுகின்றேன்.

    ம.இரமேசு.........

  9. #388
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "அடிமைப்பெண்" படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எவ்வளவு ஆற்றல், திறமை மிக்கவர் என்பதை மக்களுக்கு தெரிய படுத்தவே , அவருக்கு இரட்டை வேடமளித்து, அம்மா என்றால் அன்பு என்று சொந்த குரலில் பாடவும் வைத்தார் படத்தின் நாயகனும், தயாரிப்பாளரும் ஆகிய எம்.ஜி.ஆர். "அடிமைப்பெண்" படத்தில்1965ல் ஆரம்பிக்கப்பட்டபோது முதலில் கதாநாயகியராக நடித்தவர்கள் சரோஜாதேவி, கே.ஆர். விஜயா . 1967ல் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு ,குணமாகி மீண்டும் படத்தை ஆரம்பிக்கும்போது ,இருவரும் நீக்கப்பட்டு ,ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம் தரப்பட்டு இரட்டை வேடங்கள் அளிக்கப்பட்டன .

    ஒன்று ஜீவா, இன்னொன்று பவளவல்லி ராணி . பவளவல்லி வேடத்திற்கு என்று தனி மேனரிசம் இருக்கவேண்டும் என்பதற்கு நடை, உடை, பாவனைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன . வீரமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசும்போது ராணி தன் உதட்டை இடதுபுறம் இழுத்து ,சுழிப்பது போல அவருக்கு பயிற்சிகள் தரப்பட்டன .குறிப்பாக வேங்கையன் எனும் எம்.ஜி.ஆர்.சிறை பிடிக்கப்பட்டு, விலங்கிட்டு இருகைகளை கட்டி சித்திரவதை செய்யப்படும்போது அவரது உடல் திறன் , மன வலிமை, கைகளின் பலம், ஆகியவற்றையம் வீர சாகசத்தையும் கண்டு மெய்சிலிர்த்து ராணி, இன்றுமுதல் இவர் என் மெய்காப்பாளன் ,இத்தகைய மாவீரனை என் ஆயுட்காலத்தில் நான் பார்த்ததே இல்லை என்று புகழாரம் சூட்டுவார் .

    இந்த வசனம் பேசுவதற்கு முன்பு நடந்து வரும் காட்சியில் நடை, உடை, பாவனை, உணர்ச்சிகள் ஆகியவற்றில் ஜெயலலிதாவின் நடிப்பில் வித்தியாசமில்லை என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர். ,ஜீவா பாத்திரத்திற்கு வித்தியாசமாக ராணியின் வேடம் இருக்கவேண்டும் என்கிற வகையில் தொடர்ந்து பல்வேறு வகையான பயிற்சிகள் அளித்து ,ராணி கம்பீரமாக, அலட்சியமான பார்வையோடு நடந்து வருவது போல பல டேக்குகள் எடுத்த பின்புதான் திருப்தி அடைந்து படமாக்கினார் . இதே மேனரிஸத்தை இந்த படம் முழுவதும் ஒரே சீராக கையாண்டு நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று பாராட்டி உற்சாகப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

    ஜெயலலிதாவின் நடிப்பு ஆற்றலை எப்படி வெளிப்படுத்தவேண்டும் என்று பயிற்சி அளித்து , கற்று கொடுத்தவர் எம்.ஜி.ஆர். இப்படி பலருக்கு கற்று கொடுத்ததனால்தான் அவரை வாத்தியார் என்று அழைக்கிறார்கள் .எந்த இடத்தில எப்படி நடித்தால் கைதட்டல்கள் பெறுவார்கள் என்பதை அறிந்து வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். .........

    .

  10. #389
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மூன்று எழுத்து
    மந்திரச் சொல்....
    நிலைத்து நிற்கும்
    தெய்வீகச் சொல்.....

    1947 ல் இந்திய சுதந்திரம்....
    அதே 1947 ல்
    திரையுலகம் மூலம்
    தமிழக மக்களின்
    உண்மையான பிரதிநிதி
    கலையுலகில்
    கதாநாயகனாக
    மலர்ந்த வருடம்....

    1948....
    1949....
    இரண்டு ஆண்டுகள்
    கலையுலகில்
    போராடி
    மீண்டும்
    கதாநாயகனாக பவனி...

    ஆம்.....
    1950 ம் ஆண்டில்
    திரையில் மிகப்பெரிய
    விஸ்வரூபம் எடுத்த பெயர் எம்.ஜி.ஆர்....

    1951 ம் ஆண்டு வெளியான
    மர்மயோகி
    திரைப்படத்தில்...
    தென்னகமெங்கும்
    மக்களிடம் வரவேற்பு பெற்ற புரட்சிப்பெயர்
    எம்.ஜி.ஆர்.....

    1953 ம் ஆண்டில்...
    மேலும் மூன்றெழுத்து மந்திரம் வலுப்பெற்று...
    அரசியல் என்னும்
    துறை மூலம் அவதாரமெடுத்தது....

    1954 ம் ஆண்டு
    தென்னிந்திய திரைவானில்.....
    நிலையான
    மக்கள் செல்வாக்கு
    பெற்ற திருமகனாக
    மலைக்கள்ளன்
    திரைக்காவியம் மூலம்
    உயர்ந்து நின்றது....

    1955 ம் ஆண்டு...
    எம்.ஜி.ஆர். திருப்பெயர் தினமும் சொல்லாத
    மனிதர்களே இல்லை என நிகழ்ந்த காலமாக
    தமிழகம் திகழ்ந்தது...

    1956 ம் ஆண்டு...
    மதுரை வீரன் திரைக்காவியம் மூலம்
    4 வயது குழந்தை முதல்
    பல் போன....
    வயோதியர் வரை
    மட்டுமின்றி
    எல்லா துறைகளிலும்
    எம்.ஜி.ஆர் திருநாமம்
    ஒவ்வொரு நிமிடத்திலும் ஒலித்தது.

    1957 ம் ஆண்டு...
    அன்றைய ஆளும் காங்கிரஸ்காரர் முதல்
    டெல்லி வரை எம்.ஜி.ஆர் திருமந்திரத்தின்
    மக்கள் செல்வாக்கு
    பற்றி பேசப்பட்டது.

    1958 ம் ஆண்டு...
    நாடோடி மன்னன்
    மூலம் உலகமெங்கும்
    எம்.ஜி.ஆர் என்ற
    திரு மந்திரம்
    விண்னைத்தொட்டது...

    எங்கும் எம்.ஜி.ஆர்....
    எதிலும் எம்.ஜி.ஆர்....
    சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர்....
    எதிரிகளின் கூடாரத்தில் எம்.ஜி.ஆர்....
    ஏழைகளின் இரட்சகராக வலம்
    வரும் எம்.ஜி.ஆர்....
    அனாதை இல்லங்களுக்கு
    உதவிகரம் நீட்டும்
    எம்.ஜி.ஆர்...
    பரிதவிக்கும்
    ஏழை வாழ் மக்களுக்கு
    ஒடோடி சென்று உதவும் எம்.ஜி.ஆர்.....
    திரையுலகில்
    மகிழ்ச்சி தரும் எம்.ஜி.ஆர்....
    எந்த துறையை பற்றியும் கருத்து
    சொல்லும்....
    பேசும் ......
    உன்னத மனிதர் எம்.ஜி.ஆர்.....

    இப்படி தமிழ்நாடு
    செழிக்க தான் உழைத்த பணத்தை ஒவ்வொரு
    நிகழ்ச்சிக்கும்....
    கொடுத்த ஒரே
    வள்ளல் எம்.ஜி.ஆர்....

    கடையெழு வள்ளல்களை மிஞ்சிய
    கருணை வள்ளல்
    எம்.ஜி.ஆர் என்ற
    மூன்றெழுத்து மந்திரத்தை அறியாத சில பித்தர்களே....
    ஏதும் அறியாது, தெரியாத சிலர்......
    எம்.ஜி.ஆர்
    என்ற மூன்றெழுத்தின்
    புகழை
    பொய் விமர்சனம் செய்து விளம்பரம் தேடும் புல்லருவிகளே.

    கடந்த 60 ஆண்டுகள் வீசிய விமர்சனங்களை
    இன்று வரை
    வென்று வரும்
    ஒரே ரசிகன்
    ஒரே தொண்டன்
    ஒரே பக்தன்
    நாங்கள்...

    எம்.ஜி.ஆர்.
    என்ற
    மூன்றெழுத்தை
    நித்தம்
    வணங்குபவர்கள் நாங்கள்.

    தினமும் .....
    ஒவ்வொரு வினாடியும் .....
    உலகில்
    கோடி மனிதர்கள்
    உச்சரிக்கும்
    ஒரு சொல்
    உயிர் வாழ்கின்றது
    என்றால் ....அது எம்.ஜி.ஆர் என்ற புனிதபெயர்
    மட்டும்தான்...
    மாமனிதர்
    எம்.ஜி.ஆர். என்ற
    மூன்றெழுத்து
    மனித சக்தியே...

    பொன்மனத்தலைவர்
    மறைந்து...
    33 ஆண்டை
    கடந்தும்....
    ஒரு கோடிபேர்கள்
    ஒரு தலைவரை தினமும் நினைத்து .....
    அந்த புனிதபெயர் சொல்லி வாழ்கின்றார்கள் என்றால்...
    மாமனிதர்
    எம்.ஜி.ஆர்
    அவர்களின்
    மனித சக்தியின்
    பிறப்பு என்பது
    சாதாரணமானதல்ல...இயற்கையின்
    தெய்வசக்தியாகும்.

    என்றும்....
    எப்பொழும்....
    என்றைக்கும்....
    எங்களின்....
    ஒரே சொல் எம்.ஜி.ஆர்...

    அத்தெய்வத்தின்
    புகழைப்பாடும்
    கோடிகளில்...
    நானும் ஒருவன்!
    பாடுவதை
    நித்தம் பெருமை
    கொள்கிறோம்...........r...

  11. #390
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மறைந்த கவிஞர் கண்ணதாசனின் 'இயேசு காவியம்' என்கிற நூலை எம்.ஜி.ஆர். வெளியிடுகிறார் . அப்போது பத்திரிகை நிருபர்கள் எம்.ஜி.ஆரை பார்த்து , நீங்கள் இயேசு வேடத்தில் ஒரு படத்தில் நடித்தீர்களே,அந்த படம் ஏன் வெளியாகவில்லை என்று கேட்கிறார்கள் . அதற்கு ஒரு காரணம் இருக்கிறது .இயேசுநாதர் தனது தேவாலயத்தில் ஒரு பகுதியை வியாபாரஸ்தலமாக மாற்றப்பட்டதை அறிந்து சாட்டை எடுத்து அடித்தார் என்று ஒரு கதை உள்ளது .அது உண்மைதானா என்று பலரிடம் விசாரித்தேன் .

    இப்படி விசாரணைகள் நடத்தும்போது ,இயேசுவின் நியாயமான, அலட்சியத்தனமான வேடங்கள் எனக்கு பொருந்தி வருமே என்றுதான் உடைகள் அணிந்து, சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டதுஆனால் அதற்கு பின்பு எனக்கு தெரிந்த தகவலின்படிவந்த செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை அளித்தது .அதாவதுஇயேசுநாதர் வேடத்தில் இரு கைகளை பின்புறம் கட்டி, தோளில் ஒரு அங்கியுடன் இருந்த புகைப்படங்களை சிலர் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜிப்பதாக அறிந்தேன் .அது மிகவும்வருத்தத்துக்குரிய செயல் .

    இது என் மனதை பாதித்தது .அப்படி மேலும் ஒரு விபரீதம் நடக்க கூடாது என்பதனால் அந்த படத்தில் நடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டேன் . அந்த படம் தாமஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது . அவர்களுக்கு பாதிப்பு /நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அதே நிறுவனத்திற்கு "தலைவன்" என்ற படத்தில் நடித்துக் கொடுத்தேன். .........

    .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •