Page 94 of 210 FirstFirst ... 44849293949596104144194 ... LastLast
Results 931 to 940 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #931
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*01/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
    -------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலைஞர்களுக்கும், கலைத்துறையை சார்ந்தவர்களுக்கும் எவ்வளவு மரியாதை கொடுப்பார் என்பதற்கு பல்வேறு உதாரணங்களில் மிக சிறந்தது கவிஞர் கண்ணதாசனுக்கு அளித்தது எம்.ஜி.ஆருக்கும் ,கண்ணதாசனுக்கும் நாடோடிமன்னன் காலத்திற்கு முன்பே தொடர்புகள்* இருந்தாலும் அரசியல் கருத்து வேறுபாடுகளால் பின்னி, பிரிந்து இருந்தபோதிலும் கூட அவரை அரசவை கவிஞராக அலங்கரித்து பார்த்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .


    கவிஞர் கண்ணதாசன் எம்.ஜி.ஆரை புகழ்ந்து பல பாடல்கள்* மிக சிறப்பாக*எழுதியுள்ளார் .அவற்றில் ஒன்று நீதிக்கு பின் பாசம் படத்தில் மானல்லவோ கண்கள் தந்தது என்ற பாடலில் தேக்கு மரம் உடலை தந்தது ,சின்னையானை நடையை* தந்தது ,பூக்களெல்லாம் சிரிப்பை தந்தது பொன்னல்லவோ நிறத்தை தந்தது என்கிற வரிகள் முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரை வர்ணித்து எழுதிய* பாடல் .அதே போல பணத்தோட்டம் படத்தில் பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்ற பாடலில் பாடுவது கவியா, இல்லை பாரிவள்ளல் மகனா ,சேரனுக்கு உறவா , செந்தமிழன் நிலவா என்கிற வரிகளும் எம்.ஜி.ஆரை வர்ணித்து பாடியதுதான் .கண்ணதாசனுக்கு அரசவை கவிஞர் பட்டம் அளித்தபோது ,நான் இதற்கு நன்றி சொல்வதற்கான வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ ,இப்போதே அந்த நன்றியை முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன் என்றார் .அவர் அமெரிக்காவில் இறந்தபோது ,அவர் உடலை சென்னைக்கு கொண்டு வரச்செய்து , அரசவை கவிஞருக்கு உண்டான அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்தவரும் எம்.ஜி.ஆர்.தான்*


    நாடோடி மன்னன் படத்தின் வெற்றி விழாவில் பல்வேறு தரப்பினரும் பலவகையான விஷயங்களை சொன்னாலும் , எம்.ஜி.ஆர்.சந்தித்த ஒவ்வொரு சோதனையும் அந்த கால கட்டத்தில் வளர்ந்து வரும் ஒரு நடிகர் தனக்கான வாய்ப்புகள் கொட்டி கிடக்கும்போது சொந்த படத்திற்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறாரே* என்று**வருத்தப்பட்டவர்கள் பலருண்டு .* இத்துடன் அவர் மன்னனல்ல .நாடோடியாக போய்விடுவார் என்று விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தபோது ,அந்த சிரமமான நேரத்திலே ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளை ,பாடல்களை,வசனங்களை,பல்வேறு விஷயங்களை* யோசித்து யோசித்து , வெற்றிகரமாக செய்தாரென்றால் அவர் தன் தொழிலமீது காட்டிய உண்மையான அக்கறை, பக்தி, பற்று ,திறமை, ஆற்றல் கவனம்தான் அவரை நாடோடி மன்னன் ஆக்கியது .* அந்த படத்திலே அவரே சொன்னதுபோல நாடோடி மன்னன் என்கிற படம் பேரை சொன்னால் ஊரை வாங்கலாம் என்பது போல நாடோடி மன்னன் படம் அவருக்கு பெயரை மட்டுமல்ல இந்த தமிழ்நாட்டையே*வாங்கி கரங்களில் ஒப்படைத்தது .


    1936ல் ஜெமினி நிறுவனம் அதிபர் வாசனின் கதையில் முதல் படமாகிய* சதி லீலாவதி* படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒருசில காட்சியில் மட்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில்* வருவார் .*காலத்தின் கட்டாயம் என்பது போல அதே ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பான எம்.ஜி.ஆரின் 100 வது* படமாகிய ஒளிவிளக்கு படத்தில் 1968ல் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றது .ஒளிவிளக்கு படத்தில் எம்.ஜி.ஆர். மது அருந்துவது போல ஒரு காட்சி .அதன்பின் 5 எம்.ஜி.ஆர்.கள் வந்து குடிப்பதால் வரும் தீமைகளை விளக்கும் தைரியமாக சொல் நீ மனிதன்தானா என்ற* அறிவுரை கூறும்**பாடல் உண்டு .அந்த காட்சியில் 5 எம்.ஜி.ஆர் கள் தோன்றும் காட்சியில் மாஸ்க் ரிஸ்க் உள்ளது*அந்த படப்பிடிப்பு காலையில் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது .ஆனாலும் அந்த காட்சியில் அந்த 5 எம்.ஜி.ஆர்.கள் தோன்றும் காட்சி நன்றாக எடுக்கப்பட்டுள்ளதா என்று பார்ப்பதற்கு வாசனும் ,அவர் மகன் பாலசுப்ரமணியனும் எதற்கும் சரிபார்த்து விடலாம் என்று நள்ளிரவில் முடிவு எடுக்கிறார்கள் எம்.ஜி.ஆர். மிகவும் களைத்து போனதால் புறப்படுகிறார் .ஜெமினி ஸ்டுடியோவில் நாம் ரஷ் போட்டு பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நாளை காலையில் தொலைபேசியில் சொல்லிவிடலாம் என்று பேசிவிட்டு பார்க்கிறார்கள் .நேரம் நள்ளிரவை கடந்துவிட்டது .இருவரும் பார்த்து திருப்த்தி* அடைந்து நாளைக்கு எம்.ஜி.ஆர். அவர்களுக்கு சொல்லிவிடலாம் என்று பேசி கொண்டிருந்தபோது வாசனின் மகன் பாலு தோளில் ஒரு கை தட்டுகிறது .திரும்பி பார்த்தால் எம்.ஜி.ஆர். நிற்கிறார் .தான் நடித்த காட்சி நன்றாக வந்திருக்க வேண்டும் ,அதை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வீட்டுக்கு செல்லாமல் திரும்பி வந்தவர் ஜெமினிக்கு வந்து அந்த ரஷ் காட்சிகளை சத்தம் போடாமல்*அவர்களுக்கு தெரியாமல்* வந்து**பார்த்திருக்கிறார் .இதற்கு காரணம் தொழிலமீது அவருக்கு இருந்த அக்கறை, பக்தி, பாசம், நேசம், பற்று ,கூடுதல் கவனம்*,என்று சொல்லிக்கொண்டே போகலாம் .


    திரு.கா.லியாகத் அலிகான் :காங்கிரஸ் ஆட்சியில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்கிற படத்திற்காக சுற்று பயணம் செய்து வர முடிவு செய்து பாஸ்போர்ட்டுக்கு மனு செய்தபோது அப்போது தர மறுத்துவிட்டார்கள் .அப்போது தமிழ்நாட்டில் பக்தவச்சலம் முதல்வராக இருந்தார் .காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் பக்தவச்சலத்திற்கு நெருங்கிய நண்பராக இருந்த காலம் அது .அவர் மூலமாக பக்த்வசலத்தை அணுகி* பாஸ்போர்ட் வாங்கிவிட்டு வெளியே வந்த பிறகு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜீ படம் இப்போதைக்கு சரியாக அமையாது .எனவே அடிமைப்பெண் எடுக்கலாம் என்று மனதில் ஏற்றிக்கொண்டார்*காஞ்சிபுரம் எம்.எல்.ஏ .அமிர்தம் என்பவர்தான் எம்.ஜி.ஆருக்கு உதவியவர் .அப்போதே அவர் எம்.ஜி.ஆரிடம்* சொல்லியிருக்கிறார் .கவலைப்படாதீர்கள் .நீங்களும் ஒருநாள் இந்த இருக்கையை அலங்கரிக்கும் காலம் வரும் என்று .எம்.ஜி.ஆர். அமிர்தத்திடம் ,மாணவர்கள் எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு கற்பனை எனக்கு இருக்கிறது அந்த கற்பனையை பற்றி யோசிக்கும்போது என் நினைவுக்கு வருகிறவன்,தெரிந்தவன்* இந்த லியாகத் அலிகான்தான் என்று சொல்லி இருக்கிறார்.அவன்தான் மாணவர் அணி எப்படி இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேனோ அதன்படி வெகு வேகமாக* செயல்படுகிறான் என்றாராம்* அப்படித்தான் நான் தலைவரிடம் நேரடியாகவோ, வேறு யார் மூலமாகவோ எனக்கு பதவி கொடுங்கள் என்று கேட்டதில்லை .எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் இருந்தது .ஆனாலும் என் உழைப்பு,திறமை, ஆற்றல் இதையெல்லாம் கண்ட அமைச்சர் குழந்தைவேலு என் வெற்றிக்காக* பாடுபட்ட உனக்கு ஏதாவது ஒரு பதவி வாங்கி கொடுத்தே ஆகவேண்டும் என்று என்னை வற்புறுத்தி அழைத்து சென்றார் .என்னை கட்டாயப்படுத்தி அவர் அழைத்து சென்றதற்கு காரணம் ,அப்போது எனக்கு தேர்வு எழுத வேண்டி இருந்தது .6 தேர்வுகள் நான் எழுதவில்லை தேர்வுகள் எழுதாமல் அமைச்சர் குழந்தைவேலுவுக்காக சிறப்பு ஏஜெண்டாக தேர்தல் பணிமனையில் 1980ல் பணியாற்றினேன் .என் பணியின் வேகத்தை பார்த்து குழந்தைவேலு மெல்ட்* ஆகிவிட்டார் . அப்போது தமிழக ஆளுநராக பிரபுதாஸ் பட்வாரி இருந்தார் .



    அமைச்சர் குழந்தைவேலுவின் அலுவலகத்தில் நாங்கள் தங்கியிருந்தபோது தி.மு.க.வினர் சிலர் உள்ளே புகுந்து ஐஸ் கடை ஆனந்தன் என்பவர் ஏதோ தவறு செய்தார் என்ற காரணத்திற்காக அடித்து காயப்படுத்தினார்கள் .அவர்களின் ஆட்கள் பலமானவர்கள் என்பதால் எங்களால் அவர்களை எதிர்க்க முடியவில்லை .அந்த நேரத்தில் அமைச்சர் குழந்தைவேலு அங்கு இல்லை .தலைவரோட தொலைபேசி எண் நல்லவேளையாக என்னிடம் இருந்ததால் அவருடன் தொடர்பு கொண்டு பேசினேன் .அப்போது தேர்தல் முடிந்த நேரம் அநேகமாக1980ல்* மே மாதம் கடைசியில் .ஆனால் ஒட்டு எண்ணிக்கை நடைபெறாத நேரம் .* தலைவருக்கு போன் செய்து மிகவும் படபடப்பாக அண்ணே ,நான் லியாகத் அலிகான் பேசுகிறேன் .இங்கு தி.மு.க.வினர் ரகளை செய்து எல்லோரையும் அடிக்கிறார்கள். வெளியே சுமார் 100 பேர் திரண்டு இருக்கிறார்கள் .வெளியே வந்தால் அடித்து நொறுக்கிவிடுவோம் என்கிறார்கள் என்றேன் .தொடர்ந்து 3 நிமிடம் பேசுகிறேன் .அனைத்தையும் கேட்டுக்கொண்டே உம் உம*சொல்லு என்று கேட்டு கொண்டார் .சரி,போனை வை .நான் கவனித்து கொளகிறேன் என்றார் சுமார் 15 நிமிடம்* கழித்து , 3 போலீஸ் வேன் வந்தது .தி.மு.க.வினருக்கு தாங்கள் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நினைப்பு உடுமலை தொகுதியில் .எதிர்த்து நின்றவர் சாதிகபாட்சா .போலீஸ் வேனை பார்த்ததும் ,தி.மு.க.வினர் இருந்த இடம் தெரியாமல்* ஓடிவிட்டார்கள் .அவர்களை எல்லாம் விரட்டிவிட்டு , நாங்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டோம் .அடுத்த நாள் ஒட்டு எண்ணிக்கை முடிவில்மீண்டும் அதே தொகுதியில்* அ.தி.மு.க.வெற்றி பெற்றது .தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தது .1980 நாடாளுமன்ற தேர்தலில் அவர்களின் கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றியது . கோபிசெட்டிபாளையம் ,சிவகாசி இரண்டு தொகுதிகளில் மட்டுமே அ .தி.மு.க. வெற்றி பெற்றது .எம்.ஜி.ஆர். வழக்கமாக அவர் காட்டும் இரட்டை இல்லை சின்னத்திற்கு அடையாளமாக இரு விரலை* காட்டுவார் இல்லையா அதனால் அவருக்கு கிடைத்த பரிசு இரண்டுதான் என்று தி.மு.க.வினர் அப்போது பரிகாசம் செய்த நேரம் .தலைவர் இந்த விமர்சனங்களை எல்லாம் ரசிப்பார் . கருணாநிதியே ஏதாவது கிண்டலாக பேசினால் கூட ரசிக்கும் மன பக்குவம் கொண்டவர் தலைவர் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடருவோம்*


    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    -------------------------------------------------------------------------------
    1.வாங்கய்யா வாத்தியாரய்யா* - நம் நாடு*

    2.பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா -பணத்தோட்டம்*

    3.மானல்லவோ கண்கள் தந்தது - நீதிக்கு பின் பாசம்*

    4.உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் -வேட்டைக்காரன்*

    5.காடு விளையாட்டும் பொன்னே - நாடோடி மன்னன்*

    6.எம்.ஜி.ஆர். -மனோகர் உரையாடல் - ஒளி விளக்கு*

    7.தைரியமாக சொல் நீ மனிதன்தானா - ஒளி விளக்கு*

    8.திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி*

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #932
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமணி*04/10/20
    -----------------------------
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் மனித*நேயம்*
    -----------------------------------------------------------------------
    சத்யா ஸ்டுடியோவில் படப்பிடிப்பின்போது விலையுயர்ந்த எளிதில் கிடைக்காத காமிரா ஒன்றை தொழிலாளி ஒருவர் கீழே போட்டு விட்டார் .அது பழுதாகிவிட்டது .அங்கிருந்தவர்கள் எம்.ஜி.ஆர். என்ன சொல்ல போகிறாரோ என்று தயங்கி தயங்கி ஒப்பனை அறையில் இருந்தவரிடம் விவரத்தை சொன்னார்கள் .அவர் காமிரா பழுதானத்தைப்பற்றி கவலைப்படவில்லை .* அந்த தொழிலாளியை அழைத்து உனக்கு அடி எதுவும் படவில்லையே .பயப்படாதே. காமிரா பழுதை சரிசெய்துவிடலாம் என்று சொன்னதோடு ஸ்டூடியோ பொறுப்பாளரிடம் வயதான அந்த தொழிலாளியை இனிமேல் கனமான காமிராவை தூக்க சொல்லவேண்டாம் என்றார் .

    1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது .செய்தித்துறை சார்பில் நலிந்த கலைஞர்களுக்கு கலைவாணர் அரங்கில் பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது .* ஒருவருக்கு பொற்கிழி வழங்கிய எம்.ஜி.ஆர். அவர் காலில் விழுந்து வணங்கினார் .* அங்கே இருந்தவர்கள், பார்த்தவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டனர் .அப்போது எம்.ஜி.ஆர்.ஒரு காலத்தில் நான் உணவிற்கு கஷ்டப்பட்டபோது எனக்கு உணவு வழங்கினார் என்று தன் நன்றி உணர்வை வெளிப்படுத்தினார் எம்.ஜி.ஆர்.*
    கோட்டை செல்வம்*

  4. #933
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மலரும் நினைவுகள்
    தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதன் முதலில் வசூலில் சாதனைகள் புரிந்த சந்திரலேகா படத்தின் சாதனைகளை

    முறியடித்த முதல் படம் மக்கள் திலகத்தின் ''மதுரை வீரன் '' 1956ல் நடந்தது .

    மக்கள் திலகத்தின் ''நாடோடிமன்னன் '' 1958ல் வெளிவந்து அதற்கு முந்தய மதுரைவீரனின் வசூலை முறியடித்து ஒரு புதிய சாகப்தத்தை உருவாக்கினார் எம்ஜிஆர் .

    1958 முதல் 1965 வரை நாடோடி மன்னன் வசூலை எந்த படமும் நெருங்க முடியவில்லை .

    நாடோடிமன்னன் ரிக்கார்டை 1965ல் வந்த எங்க வீட்டு பிள்ளை முறியடித்தது மிகப்பெரிய சாதனை .

    1965 முதல் 1969 வரை எங்க வீட்டு பிள்ளை - வசூலில் முதலிடத்தை தக்க வைத்து கொண்டார் .

    1969ல் வந்த எம்ஜிஆரின் அடிமைப்பெண் முந்த சாதனைகளை முறியடித்து

    முதலிடத்தில் மகுடம் சூட்டியது .

    1970ல் மாட்டுக்கார வேலன்

    1971ல் ரிக் ஷாக்காரன்
    [
    1972ல் நல்லநேரம்
    வசூலில் சாதனைகள் தொடர்ந்தாலும்
    1973ல் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் - வசூல் வரலாற்றை உருவாக்கியது
    1936-1973 வரை வெளிவந்த தமிழ் படங்களில் அதிக வசூல் மற்றும் சாதனைகள் புரிந்த காவியமாக உலகம் சுற்றும் வாலிபன் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டது .
    1974ல் உரிமைக்குரல் 200 நாடகளுக்கு மேல் ஓடி பல இடங்களில் உலகம் சுற்றும் வாலிபன் வசூலை முறியடித்து விட்டது .

    1975ல் இதயக்கனி மீண்டும் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்து காட்டிய படம் .
    மக்கள் திலகம் எம்ஜிஆர் 1977ல் தமிழக முதல்வராக பதவி ஏற்று கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்களின் கனவை நிறைவேற்றினார் .
    1947- 1977
    30 ஆண்டு காலம் இந்திய திரை உலகில் முடிசூடா மன்னன்
    1977-1987
    10 ஆண்டுகாலம் தமிழக முதல்வராக ஆட்சி நடத்திய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் .

    1987 லிருந்து 2020 இன்று வரை 33 ஆண்டுகளாக எம்ஜிஆர் என்ற மாமனிதரின் திரை உலக ஆளுமைகள் , அரசியல் வெற்றிகள்
    சமூக வலைத்தளங்கள் , ஊடகங்கள் , பத்திரிகைகள் தொடர்ந்து பயணித்து வருவது மூலம் உலகமெங்கும் வாழும் எம்ஜிஆரின் கோடிக்கணக்கான ரசிகர்கள் பெருமை கொள்கிறார்கள் . எங்கள் எம்ஜிஆர் வெற்றி பயணம் தொடரும்.........vds...

  5. #934
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தாய் உள்ளம் எம் ஜி ஆர்

    தமிழக சட்டமன்ற அலுவலக மேல்மட்ட அதிகாரி ஒருவரின் உதவியாளருக்கு ஒரு போன் வர ஹலோ என்று கூற இது தோட்டத்தில் இருந்து சி எம் ன் உதவியாளர் ஐய்யாவை மதியம் உணவு அருந்தும் முன் தோட்டத்திற்க்கு வர சொல்லுங்கள் சி எம் கூறினார் என கூற இதை அதிகாரியிடம் கூற நாம் ஏதுவும் தப்பு செய்துவிட்டமோ என எண்ணி பின் எதற்க்கு என்று எண்ணிவாறு மதியம் தோட்டம் செல்லுகிறார் அவரை சி எம் எம் ஜிஆர் வாங்க நலமா என விசாரித்து விட்டு வாங்க சாப்பிட போகலாம் என அழைக்க தயக்கத்தோடு எதற்க்கு அழைத்தீர்கள் என கூற அது ஒன்றும் இல்லை சில நாட்கள் முன் தோட்டத்தில் நடத்த ஒரு கூட்டத்தில் நீங்கள் நானும் உண்ணும் போது ஒரு கறியின் பெயரை சொல்லி அதை விரும்பி சாப்பிட்டீர்கள் அது இன்று இங்கு சமைக்க பட்டபோது உங்கள் ஞாபகம் வந்தது அது தான் சாப்பிட அழைத்தேன் எனகூற
    என் கண்கள் குளமாகியது என் தாயை தவிர எவருமே உணவை இந்த அளவு அன்போடு நினைத்ததில்லை அப்போது எம் ஜி ஆர் வடிவில் என் தாயையே பார்த்தேன்
    இது அந்த அதிகாரி எழுதிய நூலில் இருந்து

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........Am...

  6. #935
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "சிரித்து வாழ வேண்டும்" 1974 நவ 30 ம்தேதி வெளியான உதயம் புரடொக்ஷன்ஸாரின் வெற்றிக் காவியம். எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் கலக்கிய படம். அப்துல் ரஹ்மான் என்ற முஸ்லீமாகவும், இன்ஸ்பெக்டர் ராமுவாகவும் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். ஜெமினி அதிபர், ஆனந்த விகடன் உரிமையாளர். S.S. வாசனின் மகன் S S பாலன் இயக்கிய ஒரே படம். உதயம் புரடொக்ஷன்ஸார் மொத்தம் 3 படங்கள் தலைவரை வைத்து எடுத்ததில் மூன்றுமே 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றதில் இது இரண்டாவது படம்.

    முதல் படம் "இதய வீணை" இரண்டாவது படம்தான் "சிரித்து வாழ வேண்டும்". ஒரு சிவாஜி ரசிகர் கமெண்ட்டில் எம்ஜிஆருக்கு இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் வெளிவந்திருக்கிறதா? என்று கேள்வி கேட்டிருந்தார். அவருக்கு "உரிமைக்குரல்" "சிரித்து வாழ வேண்டும்" இரண்டும் ஒரே மாதத்தில் வந்த படங்கள் என்று நினைவில் இல்லை என்று நினைக்கிறேன். இதற்கு முன்னாலும் இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் வெளிவந்து வெற்றி
    பெற்றாலும் அதை சாதனையாக நாங்கள் எண்ணுவதில்லை. அதை தயாரிப்பாளர்களின் வேதனையாகத்தான் பார்க்கிறோம்.

    இரண்டையும் ஒரே மாதத்தில் வெளியிடும் எண்ணம் இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் கிடையாது.
    நெருக்கடியான காலகட்டத்தில் இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகின்ற சூழ்நிலை உருவாகி விட்டது. இரண்டு படங்களுமே 100
    நாட்களை கடந்தாலும் "உரிமைக்குரல்"
    200 நாட்கள் ஓடியது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி எனலாம்.
    தமிழ்ப்பட உலகம் கண்டிராத மாபெரும் வெற்றி படமாக "உரிமைக்குரல்" அமைந்து விட்டது

    நெல்லை சீமையிலே வெள்ளி விழா கொண்டாடி நகரிலேயே 182 நாட்கள் ஓடிய ஒரே படம் இன்று வரை "உரிமைக்குரல்"தான். இதே ஊரில் சிவாஜியின் எந்த படமும் 125 நாட்கள் கூட வடக்கயிறால் கட்டி இழுக்க முடியவில்லை என்பது மகாகேவலமான ஒரு சோக நிகழ்வுதான். எம்ஜிஆருக்கோ மதுரை வீரன் 132 நாட்களும், நாடோடி மன்னன் 127 நாட்களும், மாட்டுக்கார வேலன் 140 நாட்களும், எங்க வீட்டுப் பிள்ளை 149 நாட்களும் ஓடியது குறிப்பிடத்தக்கது.

    "சிரித்து வாழ வேண்டும்" மதுரை நியூசினிமாவில் 104 நாட்கள் ஓடி நல்ல வசூலை பெற்றது. 24 சென்ட்டரில் 50 நாட்களை கடந்து சிறந்த வெற்றியை பதிவு செய்தது.
    இருப்பினும் "உரிமைக்குரல்" படத்தின் வெற்றியின் வேகம் பின்னால் வந்த "சிரித்து வாழ வேண்டும்" படத்தின் வெற்றியை பாதித்தது என்றே சொல்ல வேண்டும்.

    சென்னையை பொறுத்தவரை இரண்டு படங்களுமே 10 லட்சத்தை தாண்டி வசூல் செய்தது. தனியாக "சிரித்து வாழ வேண்டும்" வெளியாகி இருந்தால் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கும் என்றே சொல்லலாம். பாடல்கள் எல்லாமே அருமையாக இருந்தாலும் 'பொன்மனச்செம்மலை' பாடல் மிக இனிமை. 'நீ என்னை விட்டு போகாதே' பாடல் மேலும் சிறப்பு. 'கொஞ்ச நேரம்' பாடல் கர்னாட்டிக் இசையில் சற்று மெதுவாக சென்றாலும் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும். தலைவர் பலவித உடைகளில் வந்து பரவசப்படுத்துவார். "மேரா நாம் அப்துல் ரஹ்மான்" பாடலில் பிரமிக்க தக்க செட்டிங்ஸை பார்க்கலாம். பாடலும் அருமை பாடலின் கருத்துகளும் அருமை. படத்தில் லதா பேசும் சேரி பாஷை அவ்வளவாக நன்றாக இல்லை.

    '"ஆடுவது கடமையின் நினைவாக'" பாடல் நெடுநேரம் வந்தாலும் க்ளைமாக்ஸில் விறுவிறுப்பை உண்டாக்கி விடும். அதில் வரும் பாடல் வரிகள் ரசிகர்களை ஆனந்த கூத்தாட வைத்தது. படம் ஹிந்தியில்
    அமிதாப் நடித்த "ஜஞ்ஜீர்" படத்தின் கதையாக இருந்தாலும் ஒரு சிலரைப்போல் ஜெராக்ஸ் காப்பி எடுக்காமல் தலைவர் தனக்கே உரிய பாணியில் கையாண்டிருப்பார். படம் சிறப்பாக இருந்தாலும் ஒரு தடவை பார்த்து விட்டு அடுத்த முறை பார்ப்பதற்கு "உரிமைக்குரலை"யே தேர்ந்தெடுத்தார்கள் ரசிகர்கள்.

    அந்த வயதில் "சிரித்து வாழ வேண்டும்" சார்லஸில் இருமுறைதான் பார்த்தேன். ஆனால் "உரிமைக்குரலை" 17 முறை பார்த்தேன். நான் மட்டுமல்ல தலைவர் ரசிகர்கள் அனைவரும் "உரிமைக்குரலை"தான் அதிக தடவை பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். பார்க்க பார்க்க மீண்டும் அடுத்த முறை எப்போது பார்க்கலாம் என்ற எண்ணத்தை உண்டாக்கி விடும் படம்தான் "உரிமைக்குரல்".

    சென்னையில் பிளாசா(83) கிருஷ்ணா(83) மகாலட்சுமி(62) கிருஷ்ணவேணி(62) ஆகிய திரையரங்குகளில் வெளியாகி
    மொத்தம் 290 நாட்கள் ஓடி ரூ 10,55,974.05 வசூலாக பெற்று வெற்றி பெற்றது. மதுரை நியூசினிமாவில் 104 நாட்கள் ஓடி. ரூ 3,59,634.60 வசூலாக பெற்றது. திருச்சியில் 82 நாட்கள் ஓடி ரூ 3,12,875.00 வசூலாக பெற்றது.

    மேலும் கோவையில் 81 நாட்களும் சேலத்தில் 90 நாட்களும் ஈரோட்டில் 77 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.
    மொத்தம் 24 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை செய்தது.
    நெல்லையில் 62 நாட்கள் ஓடி ரூ. 1,41,732.55 வசூலாக பெற்று மகத்தான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    நெல்லை கணேசன் ரசிகர்களுக்கு தொல்லையாகவும்
    தலைவர் ரசிகர்களுக்கு வெற்றியின் எல்லையாகவும் இருந்தது எனலாம்.
    "வசந்த மாளிகை"யை மதுரையில் 200 நாட்கள் வடக்கயிறு போட்டு இழுத்தவர்களால் நெல்லையில் 69
    நாட்களுக்கு மேல் தேரை இழுக்க முடியாமல் பாதி வழியிலேயே நின்றது இழுவை ரசிகர்களுக்கு ஒரு சோகமான முடிவாகும்.......... Courtesy: KS.........

    .

  7. #936
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மிகச் சிறந்த கருத்துக்கள் மிக மிகச் சிறந்த கருத்துக்கள் புரட்சித் தலைவரை பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள நடிகர் பேரரசர் எம்ஜிஆர் என்ற குழு உதவுகிறது மிகவும் பாராட்டுக்குரியது புரட்சித்தலைவரின் எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும் 100 நாட்களுக்குக் குறையாமல் தான் ஓடியுள்ளது வசூலில் மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளது உரிமைக்குரலை எடுத்துக்காட்டாகக் கூறலாம் ஸ்ரீதருக்கு வாழ்வு கொடுத்த படம் அதுவரை புரட்சித்தலைவரின் அருமை தெரியாமல் இருந்தவர் பின்னர் உணர்ந்துகொண்டார் அதை மனம்விட்டு பலமுறை கூறியுள்ளார் பொன்மனச் செம்மலின் வாழ்க்கை ஒரு காவியம் ஆகும் பரம்பொருளாகிய இறைவன் அவர் அளவுக்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் அவருக்கு மக்கட் செல்வம் வழங்க வில்லை அதனால் என்ன நாம் அனைவருமே புரட்சித்தலைவர் அவர்கள் பிள்ளைகள்தானே தயவுசெய்து புரட்சித் தலைவரைப் பற்றி நிறைய விஷயங்கள் வெளியிடுங்கள் சந்தோஷமாக உள்ளது படிப்பதற்கு பதிவிட்டமைக்கு நன்றி... Srinivasan Kannan...

  8. #937
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தங்கள் பதிவு சூப்பர்!
    "சிரித்து வாழ வேண்டும்" திரைப்படம் புரட்சித்தலைவர் இரட்டைவேட நடிப்பில் மாறுபட்ட படமாகவும், இந்து முஸ்லிம் ஒற்றுமையை விளக்கும் சிறப்பான படமாகவும் அமைந்தது அருமையான படம்.
    ��������������
    புரட்சித்தலைவர் திரைப்படங்கள் அனைத்தும் ஆறு மாதங்களுக்கு ஒரு படம் என்று ரிலீஸ் ஆகி இருந்தாலும், சொந்த தியேட்டர் இருந்திருந்தாலும் எல்லா படங்களும் வெள்ளி விழா படங்களாக இருக்கும் ஆனால் புரட்சித்தலைவர் தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து தான் நடித்த படங்களை வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்தார். தலைவர் படங்களுக்கு தலைவர் படங்களே போட்டியாக வந்தது இருந்தும் அனைத்தும் வெற்றி பெற்றது வசூல் சாதனை புரிந்தது.
    ��������������
    ��������������... Kumar Govindarajan

  9. #938
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின் எந்த படமும் சொந்த தியேட்டரில் 100 நாள் ஓட்டவில்ல. அவருக்கு சொந்த தியேட்டரே இல்ல. சத்யா ஸ்டுடியோ தான் வாங்கினார். பெரியார், அண்ணா மாதிரி புரட்சித்தலைவருக்கும் பிள்ளைங்க இல்லை. பிள்ளைங்க இருந்து அதுங்க அவர் வாங்கின சத்யா ஸ்டுடியோவை இடிச்சு காம்ப்ளக்ஸ் கட்டி விட்டு, அங்கே ஓரத்தில் சூம்பிப்போன தேங்கா மட்டை மாதிரி சிலை வெச்சு அதுவும் வெளங்காம போனா என்ன பண்ணறது? அந்த மாதிரி தறுதல பிள்ளைங்க மக்கள் செல்வம் பிறக்கறதுக்குப் பிறக்காமயே இருக்கலாம். இன்னொரு விசயம். சில நடிகர்கள் தொழிலுக்காக வெளியூர் போயிடுவாங்க. கூட்டுக் குடும்பத்தில் அவங்க தம்பிதான் வீட்டுல இருந்து குடும்பத்தில் எல்லாரையும் பார்த்துப்பாங்க. புரட்சித் தலைவருக்கு அந்த மாதிரி உதவிக்கு யாரும் இல்லை. தானே எல்லாம் செய்தார். சிரித்து வாழ வேண்டும் உட்பட அவரின் எந்த படமும் சொந்த தியேட்டரில் பிறர் உதவியோடு ஓட்டப்படவில்லை.......... Rajarajan...

  10. #939
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சிரித்துவாழ வேண்டும் படத்தில் அப்துல் ரஹ்மானாக வரும் மக்கள் திலகம் கொஞ்சம் கரகரப்பான குரலில் பேசி வித்தியாசம் காட்டியிருப்பார். என்னைவிட்டுப் போகாதே.. பாடலின்போது பிளாக் சூட்டில் வரும் மக்கள் திலகம் கொள்ளை அழகு. கூடவே சுற்றுப்புறத்தையும் ஆட்களையும் எடைபோடும் கூர்மையான நிதானப் பார்வை. எல். காஞ்சனா அவரது கையைப் பிடித்து இழுத்தபோதும் நகராமல் ‘நீ இழுத்த இழுப்புக்கு நான் வர முடியாது’ என்பதுபோல வலுவாக அதே இடத்தில் நிற்பார். பிறகு, ‘ப்ளீஸ்’ என்று கெஞ்சியபிறகுதான் நடந்து செல்வார். அந்த இடத்திலேயே தான் யார், தனது கேரக்டர் என்ன என்பதை அற்புதமாக வசனமே இல்லாமல் உடல்மொழியால் காட்டியிருப்பார்.

    ‘ஒரே இடத்தில் இரண்டு அறிவாளிகள் இருந்தால் அங்கு வேலை நடக்காது... விவாதம்தான் நடக்கும் .அதனால், என் முதலாளியை நான்தான் கொன்னேன்’’... நம்பியாரின் அதிர்வேட்டு வசனத்துக்கு சொந்தக்காரர் ஆர்.கே.சண்முகம். லதாவை அடியாள் கூட்டம் துரத்தும்போதும், ரயில் தண்டவாளத்தில் மக்கள் திலகம் அடித்துப் போடப்பட்டிருக்கும்போதும் க்ளைமாக்ஸிலும் இருட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளில் கூட ஒளிப்பதிவு துல்லியமாக இருக்கும். இனிமையான பாடல்கள் போனஸ். கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்.. பாடலில் 8 வண்ண உடைகளில் மக்கள் திலகம் சொக்கவைப்பார். பாடல் காட்சியில் அதிகபட்ச உடைகளில் அவர் தோன்றியது இந்தப் பாடலில்தான்.

    உரிமைக்குரல் வெளியாகி 24 வது நாளில் சிரித்துவாழ வேண்டும் வெளியானது. உரிமைக்குரலின் பிரம்மாண்ட வெற்றியால் மதுரையோடு தனது 100 நாளை சுருக்கிக் கொண்டது. இன்னும் சில மாதங்கள் கழித்து வெளியாகியிருந்தால் மேலும் பல ஊர்களில் 100 நாள் ஓடியிருக்கும். உரிமைக்குரலும் இன்னும் சில தியேட்டர்களில் வெள்ளி விழா ஓடியிருக்கும். ஒரு தியேட்டரில் மட்டும் 100 நாள் ஓடினால் அதற்கே பெருமைப்பட்டு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கும் வழக்கம் நமக்கு இல்லை. நினைத்ததை முடிப்பவன் மதுரையில் 100 நாள் ஓடியபோதும் ஒரு தியேட்டர் என்பதால் அதற்கும் விளம்பரம் கொடுக்கப்படவில்லை.

    ஆனந்த விகடன் பத்திரிகையில் வேலைபார்த்து வந்த பத்திரிகையாளர் மணியனை இதய வீணை படம் மூலம் திரைப்படத் தயாரிப்பாளராக மக்கள் திலகம் உயர்த்திவிட்டார். உதயம் ப்ரொடக்க்ஷன்ஸ் என்று அவரது நிறுவனத்துக்கு தானே பெயர் சூட்டினார். உதயம் ப்ரொடக்க்ஷன்சின் இதயவீணை வெற்றியைத் தொடர்ந்து அந்நிறுவனம் தயாரித்த சிரித்து வாழ வேண்டும், அடுத்து தயாரித்த பல்லாண்டு வாழ்க என்று மக்கள் திலகத்தை வைத்து தயாரித்த மூன்று படங்களுமே 100 நாட்களைக் கடந்து ஓடி வெற்றிப் படமானது. புரட்சித் தலைவர் யானையைப் போன்றவர். அவர் காலைத் தொட்டால் தொட்டவரை தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு, ராஜ சவாரி செய்ய வைத்துவிடுவார். அப்படி சவாரி செய்து உயர்ந்த நிலையை அடைந்தவர்களில் மணியனும் ஒருவர்...... Swamy...

  11. #940
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*02/10/20 அன்று சொன்ன*தகவல்கள்*
    -------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் அந்த காலத்திலேயே ஸ்டண்ட் கலைஞர்கள் மாடக்குளம் அழகிரிசாமி, தர்மலிங்கம் போன்றவர்கள் அவருடன் இருந்து*படங்களில் பணியாற்றியவர்கள் அவர்களிடம் இருந்து ஸ்டண்ட் பற்றிய பல்வேறு வித்தைகளை எம்.ஜி.ஆர். கற்றுக்கொண்டார் .எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பும் இவர்களுடன் தொடர்பில் இருந்தார் .தனக்கு பாதுகாப்பிற்கு அரசு சார்பில் காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்து பணியாற்றினாலும் ,இந்த ஸ்டண்ட் கலைஞர்களை தனி உதவியாளர்களாகவும் ,பாதுகாப்பிற்கும் வைத்து கொண்டார் .* காவல்துறை அதிகாரிகள் பதவியில் இருக்கும் வரையில் தான் பாதுகாப்பிற்காக துணை இருப்பார்கள் .5 ஆண்டுகள் முடிந்த பின்பு அவர்களது பாதுகாப்பு பணி இருக்காது என்பதனால் ஸ்டண்ட் கலைஞர்களிடம் எனக்கு எப்போதுமே நீங்கள்தான் நிரந்தரம் பாதுகாப்பிற்கும்,மற்ற உதவிகளுக்கும் என்று தனது இறுதி காலம் வரையில் வைத்து கொண்டு அவர்களுக்கு தேவையான தனி ,குடும்ப உதவிகள் எல்லாவற்றையும் செய்து வந்தார் .


    தாய்க்கு பின் தாரம் தொடங்கி தனது இறுதி காலங்களில் வெளியான உழைக்கும் கரங்கள் படம் வரையில் பல்வேறு வகையான* சண்டைக்கலைகளை திரைப்படங்களில் புகுத்தினார் .தமிழர்களின் கலாச்சார , பாரம்பரிய சண்டை கலைகளான சிலம்பம், கம்பு சண்டை, வாள் சண்டை , சுருள்வாள் வீசுதல், மான் கொம்பு சண்டை ,பல்வேறு வகையான கத்தி, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்திய சண்டை காட்சிகள் ஆகியவற்றை பல திரைப்படங்களில் படமாக்கி பிரபல படுத்தினார் .சுருள்வாள் வீசுவது என்பது சாதாரண விஷயமல்ல .ரிக்ஷாக்காரன் படத்தில் சுருள்வாள் வைத்து சண்டை போடுவார் .அதை எக்கு தப்பாக பயன்படுத்தினால் வீசுபவர் உடலையே பதம் பார்த்துவிடும் .அப்படி ஒரு அபாயகரமான கலை .இது ஒரு தற்காப்பு கலை.அதே சமயத்தில் அதிக ரிஸ்க்கான கலை என்பது பலரும் அறியாத செய்தி .அதே போல உழைக்கும் கரங்கள் படத்தில் மான் கொம்பு சண்டை செய்வதற்கு முன்பு தனக்கு வாத்தியார், குரு , உஸ்தாதாக* நடிகர் திருப்பதிசாமியை எண்ணி* அவரிடம் ஆசி பெற்றபடி தலைவணங்கி பின்னர் சண்டை செய்வார் .


    மதுரையை சார்ந்த திரு.ஷேக் உஸ்மான் என்பவர் கூறுகிறார் எம்.ஜி.ஆருக்கு தெரியாத சண்டை* கலை வித்தைகளே* கிடையாது .ஒவ்வொரு சண்டை கலைகளிலும் , சிலம்பத்திலும்* இத்தனை வீடு கட்ட வேண்டும் இத்தனை நடை இருக்கிறது .கருட வரிசை ,நாக வரிசை, புலி வரிசை என்று பல்வேறு வரிசைகள் உள்ளன .அந்த வரிசைகள் எல்லாவற்றையும் அறிந்தவர் எம்.ஜி.ஆர். அவர் முதல்வராக* இருந்து மதுரையில் உலக தமிழ் மாநாட்டை நடத்தும்போது பாரத பிரதமர் இந்திரா காந்தி தலைமையேற்று பார்வையிட வந்திருந்தார் .அந்த மாநாட்டில் சுமார் 100குழுக்களுக்கு சிலம்ப சண்டை கலையில் போட்டி வைத்தார் .சிறந்த பயிற்சியாளர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்து பாராட்டினார் .அப்படி பரிசு பெற்றவர்களில் முக்கியமானவர் மதுரையை சேர்ந்த திரு.ஷேக் உஸ்மான் என்பவர் .* அப்படி தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை*வளர்ப்பதற்காகவே ,தமிழ் வளர்ச்சி துறையோடு*சேர்த்து* ,தமிழ் பண்பாட்டு வளர்ச்சி துறை ஒன்றை உருவாக்கி அந்த சிலம்ப கலைஞர்களெல்லாம் சோர்ந்து விடக்கூடாது*என்று கருதி*,அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஸ்டண்ட் கலைஞர் மாடக்குளம் அழகிரிசாமி என்பவரின் வாரிசுதாரரை அந்த துறைக்கு தலைவராக* நியமித்தார் .

    திரு.கா.லியாகத் அலிகான் :மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு ,நீதி கேட்டு நெடிய பயணம் ஒன்றை கருணாநிதி மேற்கொண்டார் .அதாவது* சுப்ரமணிய பிள்ளை என்பவரின் மரணம் இயற்கையானது அல்ல அதற்கு காரணம் அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்தான் என்று குற்றம் சுமத்தியபோது தமிழக முதல்வராக* இருந்த எம்.ஜி..ஆர். பால் கமிஷன் என்று ஒரு குழுவை நீதி விசாரணை செய்ய அமைத்தார் .பால் கமிஷன் அறிக்கை தாயாராகி வெளியிட சில காலதாமதம் ஆகியது என்று சொல்லிவழக்கம் போலகருணாநிதி** தன் ஆட்கள் மூலம் செய்திகளை திரட்டி அறிக்கையை வெளியிட்டார் .நீதி விசாரணை குழுவின் அறிக்கை எப்படி கருணாநிதி கைகளுக்கு போய் சேர்ந்தது .நீதிபதியே கொடுத்தாரா அல்லது கருணாநிதியிடம் அறிக்கை ஒப்படைத்தது யார் என்று அரசு சார்பில் விசாரிக்கக்கூடாது என்று முரசொலி செல்வம் பத்திரிகையில் எழுதுகிறார் என்றால் எந்த வகையில் நியாயம் .காவல்துறையினர் முரசொலி அலுவலகத்தில் சென்று விசாரித்துள்ளனர் .இது தவறு என்று எம்.ஜி.ஆர்.அரசு அராஜக நடவடிக்கை என்று** குற்றம் சுமத்துகிறார் முரசொலி செல்வம் .இன்னொரு விஷயம் என்னவென்றால்,நீதி கேட்டு நெடிய பயணம் போவதாக சொல்லி மதுரைக்கு சென்றுவிட்டார் கருணாநிதி .அப்போது சென்னையில் இருந்து புரட்சி தலைவர் மதுரைக்கு போன் செய்து இந்த வயதில் இந்த பயணம் வேண்டாம். உங்கள் உடல்நலம் பாதிக்க கூடும் ,நீங்கள் கேட்டபடி விசாரணை கமிஷன் வைத்தாகிவிட்டது .அதன் அறிக்கையும் விரைவில் வெளியிடப்படும்*உங்கள் உடல்நலத்தை தயவுசெய்து கெடுத்து கொள்ளாதீர்கள் என்று பக்குவமான* ,கருணை மிக்க , நட்புக்கு இலக்கணம் வகுத்த மரியாதை கொடுத்த* ஒரு மாபெரும் தலைவன் அமரர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பற்றி விமர்சிக்கும் என் உள்ளம் கொதிக்கிறது .கருணாநிதி நல்லவரோ, கெட்டவரோ .அவரும் அமரர்தான் .அவரைப்பற்றி நாங்கள் தவறாக பேசுவதில்லை .இ பி.எஸ்., ஓ பி.எஸ். கூட கருணாநிதி பற்றி எந்த விமர்சனமும் செய்வதில்லை .ஜெயலலிதா மறைந்துவிட்டார் .அவரும் அமரர்தான் .ஸ்டாலின் கூட ஜெயலலிதா அம்மையார் என்றுதான் பேசுகிறார் .எனவே அமரர் ஆனவரை பற்றி ,கடந்த கால*நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி இன்றைய முரசொலியில் எழுதி வருவது சரியல்ல .உண்மை விசுவாசிகளான என்னை போன்ற எம்.ஜி.ஆர்.தொண்டர்களின் உள்ளங்கள் கொதிக்கின்றன அது மிகப்பெரிய தவறு.நியாயமும் இல்லை .

    திரு.துரை பாரதி :தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் தன்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்று சொல்லி கொள்கிறார் .அது சரியா தப்பா என்று வாதிடவில்லை .எப்படியோ 29 சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து அவருக்கு கிடைத்தது .அதே போல நடிகர் ரஜினிகாந்த் நான் ஆட்சிக்கு வந்தால் எம்.ஜி.ஆர்.*ஆட்சி அளிப்பேன் .ஆனால் நான் எம்.ஜி.ஆர். அல்ல .அப்படி நீங்கள் நினைத்தால்*நான் ஒன்றும் சொல்வதற்கில்லை .ஏனென்றால் எம்.ஜி.ஆர். ஒரு யுகபுருஷன் .மேலும் என்னால் எம்.ஜி.ஆர். அளித்த அந்த சாமான்ய ஆட்சி, ஏழை எளியோருக்கான ஆட்சி, மத்திய வர்க்கத்தினருக்கான* ஆட்சி தர முடியும்*என்கிற**இந்த வாதங்கள் எந்த அளவிற்கு எடுபடும்*


    திரு.கா. லியாகத் அலிகான்*: இப்போது நான் அண்ணா தி.மு.க.வில் இருக்கிறேன் .அந்த கட்சிக்கு*உயிராக இருப்பது இரட்டை இலை சின்னம் .இப்போது தலைவர்களாக இருக்கும்*இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகிய இருவருக்குள்ளும் மனத்தாங்கல் வந்து ,அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது என்று சொல்லி பிரயோஜனமில்லை .* இருவரும்*சண்டையிட்டு சமாதானமாகி இரட்டை இலை சின்னத்தை*மீண்டும்* கொண்டு வந்துள்ளனர் .தினகரன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் தரக்கூடாது*என்று வாதாடியபோதும்*எப்படியோ சாமர்த்தியமாக இருவரும்*இணைந்து போராடி இரட்டை இலையை***.தக்க வைத்துக் கொண்டதை பாராட்டியே ஆகவேண்டும் . அந்த இரட்டை இலை சின்னம் வருங்காலத்திலும் தோற்க கூடாது .அப்படி தோற்றால் எம்.ஜி.ஆர். தோற்றதாகத்தான் அர்த்தம் .ஜெயலலிதா தோற்றதாக அர்த்தம் அதனால்தான் நாங்கள் இரட்டை இலையின்*வெற்றிக்காக எந்த நேரத்திலும், எதற்காகவும் தயாராக இருக்கிறோம்*ரஜினிகாந்த் எம்.ஜி.ஆர்.ஆட்சி பற்றி பேசுகிறார் .அவர் அப்படி பேசினால் கூட தமிழருவி மணியன் அவரை விடமாட்டார் போலிருக்கிறது .நீங்கள் ஏன் எம்.ஜி.ஆர் ஆட்சி பற்றி பேசுகிறீர்கள் .வேறொரு ஆட்சி பற்றி பேசுங்கள் என்பார் .எப்படி சொன்னாலும் பரவாயில்லை.அப்படியெல்லாம் பேசுவதால் இங்குள்ள அ .தி.மு.க. தொண்டர்கள், எம்.ஜி .ஆர்.ரசிகர்கள் ஆகியோரின்* எம்.ஜி.ஆர். வாக்குவங்கி*மாறாது .ஜெயலலிதாவின் வாக்கு வங்கி மாறிவிடாது*.இரட்டை* இலைக்குத்தான்* அவர்களெல்லாம் வாக்களிப்பார்கள் .அதில் ஓரிரண்டு வாக்குகள்*மாறலாம் . சிதறலாம் .ஆனால் கணக்கில் வராது .தினகரன் கட்சியை பற்றி ஆரம்பத்தில் பெரிதாக பேசினார்கள் .நானும் சென்று பார்த்தேன் .நான் சொன்ன*ஆலோசனைகளை அவர்கள் ஏற்பதாக தெரியவில்லை .மதுசூதனன் அவைத்தலைவராக உள்ளார்*.அவர் அ.தி.மு.க.விற்காக போட்டியிடும்போது அவரை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று பிறர் மூலம் கோரிக்கைகள் வைத்தேன் .ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் பின்னர் பணத்தினாலோ, சொந்த செல்வாக்கிலோ,வேறு ஏதாவது ஒரு பலத்தினாலோ வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்* என்றால் கூட இன்றைக்கு மதுசூதனன்தான் அவை தலைவராக*உள்ளார் .தினகரன் நிலைமை இன்றைக்கு என்ன என்று அனைவருக்கும் தெரியும் .என்று லியாகத் அலிகான் பேசினார் .


    திரைப்படத்துறையை விட்டு வெளியே வந்து முதல்வராகிய பின்பும், ஸ்டண்ட்*கலைஞர்களை, ஸ்டண்ட் இயக்குனர்களை எல்லாம் அவர் காப்பாற்றி வந்தார் .நடிகன் குரல் பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது ஸ்டண்ட் நடிகர்களில் சிறந்தவர் யார் என்று கேட்டதற்கு ஜஸ்டின் என்று சொன்னார்*.தன்னிடம் உதவியாளர்கள், பயிற்சியாளர்கள் பலர் இருந்தாலும்கூட ஜஸ்டின் என்கிற ஸ்டண்ட் கலைஞனை உயர்த்தி*சொல்லும்*மனோபாவம் எம்.ஜி.ஆரிடம் இருந்தது .வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் ,எம்.ஜி.ஆருக்கு துணையாக படங்களில் நடித்தபோதும் ,ஆர்.என்.நம்பியார் என்கிற ஸ்டன்ட் இயக்குனர்தான் எம்.ஜி.ஆருக்கு வாள்**சண்டை பயிற்சி அளித்தவர் அந்த ஆர்.என்.நம்பியார் என்கிற*ஸ்டண்ட்* இயக்குனரின்* குழுவின்*பங்களிப்பு* எம்.ஜி.ஆரின் நிறைய படங்களில் இருக்கும் .


    சென்னை கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில்*உள்ள ஜிம்மில் இருந்து ஒருவர் வெளியே* வருகிறார் .அவரது கைகளில் இரட்டை இலை சின்னமும் , எம்.ஜி.ஆரின் உருவமும் வரைந்து இருக்கிறார் .அவரிடம்வணக்கம் சொல்லி , எம்.ஜி.ஆரை பற்றி உங்களின் அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டதற்கு எங்கள் குடும்பத்திற்கு அவர்தான் குலதெய்வம் என்று சொன்னார் எப்படி என்று கேட்டால் அவருடைய அப்பாவிற்கு அப்பாவுக்கு வி.வி.சாமி என்பவர் சன்டை பயிற்சியாளராக இருந்தாராம் வி.வி.சாமியின் தம்பியும் சண்டை பயிற்சியாளராம் ..குடியிருந்த கோயில் படத்தில் கூட சண்டை காட்சியில் நடித்து இருக்கிறார்களாம் .* எங்கள் குடும்பத்தில் கிட்டத்தட்ட 3 தலைமுறை அளவிற்கு இல்ல திருமணங்களை நடத்தி வைத்தவர் எம்.ஜி.ஆர்.தான் .திரையுலகத்திற்கு வெளியே ,தொழில் ரீதியான நண்பர்களோடு நல்ல உறவு ,அந்த நண்பர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார் .தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .அக்கறையை காட்டி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.என்பதில்தான் அவரது வாழ்க்கை சகாப்தமாக இருக்கிறது .

    இந்த நிகழ்ச்சியில் திரு.லியாகத் அலிகான் அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களுடன் தன்* நிழல் அனுபவங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் .அதன் தொடர்ச்சி ,ஆற்று நீராக, அன்பு பெருவெள்ளமாக தொடர்ந்து வந்து உங்களை நனைக்கும் .அந்த அன்பு பெருவெள்ளத்திலே தொடர்ந்து நாம் நனைவோம் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ----------------------------------------------------------------------------------
    1.பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே - நான் ஆணையிட்டால்*

    2.அன்புக்கு நான் அடிமை - இன்று போல் என்றும் வாழ்க*

    3.சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர். - காவல்காரன்*

    4.சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர்.-பெரிய இடத்து பெண்*

    5.சைக்கிள் ரிக் ஷா சண்டை காட்சி - ரிக்ஷாக்காரன்*

    6.மான் கொம்பு சண்டை காட்சி - உழைக்கும் கரங்கள்*

    7.சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர்.- அடிமைப்பெண்*

    8.கடவுள் வாழ்த்து பாடும்* - நீரும் நெருப்பும்*

    9.சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர்.-நினைத்ததை முடிப்பவன்*

    10.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •