Page 41 of 177 FirstFirst ... 3139404142435191141 ... LastLast
Results 401 to 410 of 1768

Thread: Makkal Thilagam MGR Part 26

 1. #401
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,925
  Post Thanks / Like
  எம் ஜி ஆர் குறள்
  எம் ஜி ஆர் வாத்தியாராய் தன் தத்துவபாடல் வழி கூறாத கருத்தே இல்லை எனலாம்

  தெய்வம்
  பெற்று எடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவா அவள் பேசுகின்ற தெய்வம் அல்லவா

  வளர்ப்பு
  எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்பதிலே

  கல்வி
  கற்றவர் சபையில் உனக்காக தனி இடம் தரவேண்டும்
  உன்னை பெற்றதினால் மற்றவராலே போற்றி புகழ வேண்டும்

  உழைப்பு
  உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

  வாழும் முறை
  ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடிபாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்

  உண்மை
  உண்மை என்பது தெய்வத்தின் மொழி ஆகும்

  நாடு
  நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி

  கடவுள்
  ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே கடவுள் என்று கூறுவோம்

  ஜாதி
  ஒரு தாய் மக்கள் நாம் என்போம் ஒன்றே எங்கள் குலம் என்போம்

  தலைவன்
  என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
  இருட்டில் நீதி மறையட்டுமே தன்னால வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் கலங்காதே

  திருட்டு
  திருடாதே பாப்பா திருடாதே சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தெரிந்து தெரியாமலும் மீண்டும் வராமல் பார்த்துக்கோ

  பெண்கள்
  இப்படி தான் இருக்கணும் பெண்கள்
  இங்கிலீஸ் படிச்சாலும் இன்ப தமிழ் நாட்டிலே

  தவறான ஆட்சிக்கு
  ஒரு நாள் இந்த நிலைமைக்கு மாறுதல் வரும் அதை மாற்ற தேர்தல் வரும்

  புகழ்
  இருந்தாலும் மறைந்தாலும் இவர்போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

  இன்னும் மனித வாழ்வின் அத்தனை கட்டங்களிலும் வாழ பாமரனின் குறளாக எம் ஜி ஆர் பாட்டு உள்ளது பக்தி பாடலாய் தினம் காலை இல்லங்கள் தோறும் ஒலிக்கட்டும் நல்ல சமூகம் உருவாகட்டும்

  வாழ்க எம் .ஜி .ஆர் ., புகழ்.........

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #402
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,925
  Post Thanks / Like
  #இன்றைய #திரைப்பட #இயக்குநர்களுக்கு #ஒரு #வேண்டுகோள்  "இந்த தப்பை நான் பண்ணவே மாட்டேன்... ஏன்னா ! நான் இன்னிக்கே செத்து நாளைக்கே உங்க வயித்துல பிறக்கமாட்டேன்னு என்ன நிச்சயம் ... தாய்க்குலமல்லவோ! எங்க அண்ணன் (வாத்தியார்) எனக்கு சொல்லித்தந்த முதல் பாடமே இது தானே ...! "

  என்று இந்த சண்டைக்காட்சியின் இடையே அரைகுறை உடையுடன் காணப்படும் நடனப்பெண்மணிகளைப் பார்த்து நாகேஷ் கூறுவார்...!!!

  இந்த சிந்தனை மக்கள்திலகத்தைத் தவிர வேறு யாருக்கு வரும்???

  சண்டையின் முடிவில் அடிபட்டு விழுந்த ஜஸ்டினை தண்ணீர் தெளித்து எழுப்புவார்.

  சண்டையில் வீரத்தைக் காண்பிப்பதிலும் சரி... அடிபட்டுக்கிடக்கும் வில்லனை மன்னிக்கும் கண்ணியத்திலும் சரி... வாத்தியார்னா ... வாத்தியார் தான்...

  கராத்தே மிக்ஸிங் ஸ்டைலில் வித்தியாசமாக அமைத்துள்ள வாத்தியாரின் சண்டைக்காட்சியைக் கண்டுகளியுங்கள்.

  உ.சு.வா...படத்தைப் பற்றி ஒரு சரித்திரமே எழுதிவிடலாம்...

  இன்றைய கதாநாயகர்கள்/காமெடி நடிகர்கள் தாம் நடிக்கும் திரைப்படங்களில் தாய் தந்தையை மரியாதையில்லாமல் கேவலமாக நக்கலடிப்பது ( அதிலும் தந்தையை தரக்குறைவாக நக்கலடிப்பது தான் அதிகம்) .....

  இதெல்லாம் யாருடைய குற்றம்? நடிகருடையதா ? இயக்குநருடையதா ? கதாசிரியருடையதா ? அல்லது மக்களின் ரசனை தரம் தாழ்ந்துவிட்டதா !!!

  வாத்தியார் மாதிரிக்கூட படம் எடுக்கவேண்டாம்...இளம் தலைமுறையின் மனதில் திரைப்படக் கதாசிரியர்கள்/ இயக்குநர்கள் நஞ்சை விதைக்காமலிருந்தாலே போதுமானது............

 4. #403
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,925
  Post Thanks / Like
  மிக நீண்ட நாள் கழித்து தலைவரின் பதிவு :-

  மக்கள் வெள்ளத்தில் எம்.ஜி.ஆர்..

  திமுக-வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் இருந்து அவரது ரசிகர்கள் சென்னைக்கு வந்து சத்யா ஸ்டூடியோ முன் குவிந்தனர்.

  “இன்னும் அரை மணி நேரத்திற்குள் தலைவர் இங்கே வந்து சேரவில்லை என்றால் அவர்கள் சத்யா ஸ்டுடியோவுக்குள் புகுந்துவிடுவார்கள் தலைவரை உடனே வரச்சொல்லுங்கள்!” என்ற தொலைபேசியில் சத்யா ஸ்டூடியோ நிர்வாகி பத்மநாபன் கூறினார். செய்தியறிந்ததும் புரட்சித் தலைவர் சில நண்பர்களுடன் புறப்பட்டு காரில் விரைந்து வந்தார்.

  புரட்சித்தலைவர் கிண்டி கவர்னர் மாளிகையை நெருங்கும்பொழுதே வழியெல்லாம் தோழர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து. அவருடைய காரைக் கண்டதும் புரட்சித்தலைவர் வாழ்க! பொன்மனச்செம்மல் வாழ்க! என்று விண்ணதிரத் தோழர்கள் முழங்கினர்.
  புரட்சித் தலைவர், அந்தத் தோழர்களைக் கடந்து அடையாறு முனைக்கு வந்து சேருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. தேர் அசைவது போல அவருடைய கார் மிக மெதுவாகவே ஊர்ந்து செல்ல நேரிட்டது.

  அடையாறு சந்திப்பை அடைந்தபோதே, அதற்கு மேல் எம்.ஜி.ஆர் கார் போகவே முடியாது என்னும் நிலை ஏற்பட்டதால், மக்கள் வெள்ளத்திற்குள் போய் நின்றார். அப்பொழுது அங்கே கூடியிருந்த தொண்டர்களின் உணர்ச்சியும், உற்சாகமும் கட்டு மீறின. எழுச்சி கொண்ட தொண்டர்கள் தங்கள் தலைவரைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள்.
  ஏக காலத்தில் தங்கள் அன்புத் தலைவரின் பொன்னுடலைத் தொட்டுப் பார்க்கவும், அவரோடு கைகுலுக்கவும், எல்லாரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினர். அப்படி முன்னேறிய தோழர்கள் எல்லாரும் சேர்ந்து நெருக்கித் துன்புறச் செய்து விடுவார்களோ? என்று அவரோடு வந்த நண்பர்கள் அஞ்சி நடுங்கினார்கள்.

  ஆனால், புரட்சித் தலைவரோ, சற்றும் அஞ்சாமல் தொண்டர்களின் அன்பினில் திளைத்தார். தமக்கே உரிய வீரசாகசங்களைப் புரிந்து கீழே இறங்கி நின்றார். தம்மை நெருங்கிய தொண்டர்களைப் பார்த்து, “இனிமேல் நானும் உங்களோடு நடந்தே வருகிறேன்.

  வாருங்கள் போகலாம்!” என்றூ கூறி விட்டுப் புறப்பட்டார். ஆனால், எம்.ஜி.ஆர் மீது தங்கள் உயிரையே வைத்திருந்த தொண்டர்கள் அவரை நடக்க விடுவார்களா? அவரைத் தம் தோளில் தூக்கிக்கொண்டனர்.
  அதற்குப் பின்னர் அடையாறு சந்திப்பிலிருந்து சத்யா ஸ்டுடியோ வாசல் வரை இலட்சக்கணக்கான தம் தம்பிகளின் தலையிலும் தோளிலும் அமர்ந்து ஊர்வலமாய்ப் போய்ச் சேர்ந்தார், எம்.ஜி.ஆர்.

  அடையாறு சந்திப்புக்கும், சத்யா ஸ்டுடியோவுக்கும் இடையே உள்ள தூரம் அரை கிலோமீட்டர்தான். ஆனால் அந்தத் தூரத்தைக் கடந்து செல்ல அன்று புரட்சித் தலைவருக்கு இரண்டு மணி நேரம் ஆனது; ஆம்; செல்லும் வழியெல்லாம் மக்கள்.
  கால் வைக்ககூட இடமில்லாத அளவுக்கு எல்லாத் திக்குகளிலும் மக்கள். எள் விழவும் இடமற்ற அந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் புகுந்து செல்வது இயலாத காரியமாகவே இருந்தது.
  எம்.ஜி.ஆரைத் தொண்டர்கள் தூக்கிக் கொண்டுதான் சென்றார்கள் என்றாலும் அவர்கள் முன்னேறிச் செல்லவும் இடம் வேண்டுமல்லவா? நெருக்கியடித்து நின்ற தொண்டர்கள் வழிவிட்டால்தானே? அவர்கள் வழிவிட அங்கே துளி இடமாவது காலியாக இருந்தால்தானே? எப்படியோ ஒரு வழியாக புரட்சித்தலைவர் சத்யா ஸ்டுடியோ வாசலை அடைந்தார்.

  தொண்டர்களின் உணர்வுகள் வடியட்டும் என்று காத்திருந்த புரட்சித்தலைவர் பின்னர் அவர்களை ஒரு வழியாகச் சமாதானப் படுத்தினார்.
  மக்கள் யார் பக்கம்’ என்று அதுவரை மருகிக் கொண்டிருந்த அந்த மக்கள் திலகம், தாம் அழைக்காமலே வந்து திரண்டு நின்று, அன்பைச் சொரிந்து, ஆதரவு முழக்கம் எழுப்பிய அந்தமக்கள் கடலைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.

  அவர்களிடையே சில நிமிடங்கள் பேசிய அவர் அடுத்து தாம் என்ன செய்யவிருக்கிறார் என்று ஒரு கோடு காட்டிவிட்டு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ”நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

  அப்பொழுதும் அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மன்ற மறவர்களும், பொதுமக்களும், ”தனிக்கட்சி அமையுங்கள்! தமிழகத்தை காப்பாற்றுங்கள்!” என்று குரல் கொடுத்தனர்.
  அவர்கள் கோரிக்கையை புன்னகைத்ததும்ப வரவேற்றார், புரட்சித் தலைவர். பின்பு அவர் , ”ஓரிரு நாள்களில் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். மக்கள் கருத்தை அறிந்து கொண்டு உங்கள் கருத்துப்படி செயல்படுவேன்” என்று உறுதியளித்தார்............

 5. #404
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,925
  Post Thanks / Like
  மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய சில் நினைவலைகள்.........
  ************************************************** ********************

  குடும்பத்தலைவன் . 15.8.1962
  ****************************
  மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் வந்த குடும்ப படம் . இனிமயான பாடல்கள் . மாறாதய்யா மாறாது மனிதன்

  குணமும் மாறது -பாடலில் இயற்கையாக மனிதரிடம் உள்ள குணங்கள் பற்றி பாடும் காட்சி அருமை .

  எதோ எதோ ஒரு மயக்கம் --காதல் பாடல் இனிமை .நல்ல பொழுது போக்கு படம் .

  நீதிக்கு பின் பாசம் - 15.8.1963
  **************************

  மக்கள் திலகம் வக்கீலாக நடித்த படம் .ஏராளமான நட்சத்திர கூட்டம் .இனிமையான பாடல்கள் .சரோவிற்கு
  சைக்கிள் கற்று கொடுக்கும் காட்சி பாடலுடன் சூப்பர் . போனாளே ...சொக்ஸ் பாடலில் மக்கள் திலகத்தின் நடிப்பு பிரமாதம் 1963. ல் வந்த எம்ஜிஆரின் 9 படங்களில் 100 நாட்கள் ஓடிய படங்கள் -3 பெரிய இடத்து பெண் -2. நீதிக்கு பின் பாசம் .3-பரிசு .

  கணவன் -15.8.1968
  ******************

  மக்கள் திலகம் கதை எழுதிய ஒரே படம் . பணக்கார பெண்ணின் ஆணவத்தை அடக்கும் ஆணழகனாக - கணவனாக
  மக்கள் திலகம் நடித்த படம் .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .1968ல் மக்கள் திலகம் நடித்த 8 படங்களிலும் ஜெயா
  ஜோடி குறிப்பிடத்தக்கது .

 6. #405
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,925
  Post Thanks / Like
  "கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு
  கொண்டாடி வரும் வளையல் - அம்மா
  பூவோடு வருமே பொட்டோடு வருமே
  சிங்காரத் தங்கவளையல்"

  என்ற கவிஞர் வாலியின் வரிகளில் மின்னும் இந்த பாடல் ‘படகோட்டி’யில் வருவதாகும். படத்தின் கிளைமாக்ஸீக்கு (உச்சகட்ட காட்சிக்கு) முன்னதாக வரும் இதில் எம்.ஜி.ஆர் வளையல்காரராக மாறுவேடமிட்டு நடிப்பார். விதம் விதமான வளையல்களை தோளில் சுமந்து அந்தக்கால வளையல்காரரை அட்சர சுத்தமாக பிரதிபலிப்பார். மனித வாழ்வில் வளையல்களின் பங்கு என்னவென்பதும் அதில் வெளிப்படும். தொந்தியும், தொப்பையுமாக இடுப்பில் கனத்த பெல்ட் அணிந்து, கனமான மீசை, விக் என்று ஏராளமான உபரியான ஒப்பனை சாதனங்களை அணிந்து தன்னை வருத்திக் கொண்டு நடித்திருப்பார் எம்.ஜி.ஆர்.

  அதனால் தானோ என்னவோ இந்தப் பாடல் சாதி வேறுபாடின்றி ரசிகர் வேறுபாடின்றி எல்லா கல்யாண வீடுகளிலும் ஒலித்தது, ஒலிக்கிறது. எம்.ஜி.ஆரின் தத்துவ பாடல்களில் இதுவும் முக்கிய இடம் வகிக்கிறது.

  இந்தப்பாடலில், "மாமியாரை மாமனாரை சாமியாரா மாத்திவிட
  மந்திரிச்சுத் தந்த வளையல் - இளங்
  காளையர்கள் கெஞ்சி வர கன்னியர்கள்
  கொஞ்சி வர தோதாக வந்த வளையல்"

  என்ற வரிகள் வரும் போது, அதில் நம்பியார் வீட்டு பணிப்பெண், கன்னிப்பெண்ணாக எம்.ஜிஆர் நடிப்புக்கு எதிர் நடிப்பைத் தந்தவர் துளசி எனப்படும் துளசியம்மாள். இந்தக் காட்சியில் துளசி எப்படி நடிக்க வேண்டுமென்று எடுத்துச் சொல்லி, நடித்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர்.

  எம்.ஜி.ஆரைப் பார்த்தாலே மரியாதை, நடுக்கத்தோடு ஒதுங்கி நின்று விடுவார் துளசி. எம்.ஜி.ஆர் அதைப் புரிந்து கொண்டு, "என்ன ஆச்சு- என்னைக்கண்டால் பயமா? அப்படியெல்லாம் ஒதுங்கி நிற்காதே.
  சகஜமா இரு" என்று தைரியப்படுத்துவாராம்.

  துளசியம்மாள் ஒளிப்பதிவாளர்
  திரு. ரவீந்தரின் தாயார். சின்னதம்பி வேலை கிடைச்சிடுச்சு, மிஸ்டர் மெட்ராஸ், கிழக்குகரை ஆகிய பி. வாசு இயக்கிய படங்களின் ஒளிப்பதிவாளர். கே. பாலசந்தரின் தொலைக்காட்சித் தொடர்களையும் ஒளிப்பதிவு செய்தவர். இயக்குநராக, பின் நடிகராக சில படங்களில் நடித்துமிருக்கிறார்.

  ரவீந்தர் குழந்தை நட்சத்திரமாக ‘அரசிளங்குமரி’யில் ‘சின்னப்பயலே சின்னபயலே சேதி கேளடா’ பாடலில் எம்.ஜி.ஆரின் கரங்களில் தவழ்ந்தும், ‘பாவமன்னிப்பு’ படத்தில் ‘அந்த நாள் முதல் இந்த நாள் வரை’ பாடலில் சிவாஜியுடன், ‘காஞ்சித்தலைவன்’ படத்தில் எம். ஆர். ராதா தூக்கிச் செல்லும் குழந்தையாக, "நீ தான் காஞ்சித்தலைவன்" என்று ராதாவால் சொல்லப்படுபவராக நடித்தவர்.

  எம்.ஜிஆரது பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் துளசியம்மா. சத்யா ஸ்டியோவில் ஒரு நாள் படப்பிடிப்பிற்கு வந்த போது எம்.ஜி.ஆரைக் கண்டதும் ஒதுங்கி நின்றார். வணக்கம் சொன்ன போது எம்.ஜி.ஆர். அவரிடம், "என்ன துளசி, நீ ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்காக காஷ்மீர் வர்றீல்ல?" என்று கேட்டார்.

  "இல்லங்க ஐயா, என்னைக் கூப்பிடல. அந்த கம்பெனிக்காரர் (தயாரிப்பு நிர்வாகி) என்னைக் கூப்பிடவும் மாட்டார்" என்றார், ‘துளசி’.

  "அப்படியா?, ...சரி" என்ற எம்.ஜி.ஆர்., "நீ உடனே நம்ம ஸ்டுடியோவில் பத்மநாபனைப் போய்ப்பார். நான் சொன்னேன்னு சொல்லு" என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

  திரு. பத்மநாபனை சந்தித்து துளசி, "சின்னவர் ஐயா உங்களை பார்க்க சொன்னார்" என்றதும், "ஆமாம், உங்க முகவரி மற்ற விபரங்களைத் தந்து விட்டு போங்க - நான் தகவல் அனுப்பறேன்" என்றவர், "சின்னவரை பார்த்ததும் நான் சொன்னதைச் சொல்லிடுங்க" என்று கேட்டுக் கொண்டார்.

  "குறிப்பிட்ட சில தினங்களில் காஷ்மீருக்கு புறப்பட தகவல் வந்தது. புதுடெல்லி வரை ரயிலில் சென்று, அங்கிருந்து எங்களுடன் வந்த அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் காஷ்மீர் சென்றோம்.

  எம்.ஜி.ஆர் படமல்லவா, எங்களுக்கு நல்ல உபசரிப்பு, எம்.ஜி. ஆர்., காஷ்மீருக்கு வந்த அனைத்து பெண்களுக்கும் உயர்தர புடவை பரிசளித்தார். கடைசி நாளில் அவரோடு படமெடுத்துக் கொண்டோம்" என்றார் துளசியம்மாள்.

  (இதன் தொடர்ச்சி வரவிருக்கும் ஆகஸ்ட் 'இதயக்கனி' யில் 'எல்லாம் அறிந்த
  எம்.ஜி. ஆர்.' தொடரில் இடம்பெறுகிறது).

  Ithayakkani S Vijayan.........

 7. #406
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,925
  Post Thanks / Like
  அகில இந்திய அளவில் சிறந்த நடிகர் பட்டம் "ரிக்ஷாக்காரன்" படத்துக்கு எப்படி கிடைத்தது என்பதை பற்றி திரு இராம. வீரப்பன்
  விளக்கி சொல்கிறார். எம்ஜிஆர் எப்போதுமே பட்டங்களை தேடி அலைவதில்லை. அவருடைய படங்கள் விருதுக்கு சென்றதே இரண்டே இரண்டு படங்கள்தான்.
  ஒன்று "மலைக்கள்ளன்" 16 வருடங்கள் கழித்து இன்னொன்று "ரிக்ஷாக்காரன்".

  விருதுக்கு அனுப்புவதை எம்ஜிஆர்
  அவ்வளவாக விரும்ப மாட்டார்.
  "ரிக்ஷாக்காரன்" படமும் சிறந்த நடிகர் தேர்வுக்காக அனுப்பபடவில்லை.
  சிறந்த ஒளிப்பதிவாளர் தேர்வுக்காகவும், "சவாலே சமாளி" சிறந்த இசையமைப்பாளர் தேர்வுக்காகவும் அனுப்ப பட்டதில்
  எம்ஜிஆரின் இயல்பான நடிப்பால் "ரிக்ஷாக்காரன்" சிறந்த நடிகர் தேர்வில் பாஸாகி சிறந்த நடிகர் பட்டத்தை வென்றது.

  "சவாலே சமாளி"
  படத்தின் பாடலுக்கு பின்னணி இசை பாடிய p.சுசீலாவுக்கு அகில இந்திய சிறந்த பாடகி விருது கிடைத்தது. சிறந்த பிராந்திய படவிருது தமிழுக்கு "வெகுளிப்பெண்" படத்துக்கு கிடைத்தது. எம்ஜிஆருக்கு அனுப்பிய இரண்டு படங்களில் மலைக்கள்ளன் படத்துக்கு அகில இந்திய சிறந்த படத்துக்கான வெள்ளி பதக்கமும்
  16 வருடங்கள் கழித்து அனுப்பப்பட்ட
  "ரிக்ஷாக்காரனு"க்கு சிறந்த நடிகர்
  'பாரத்' பட்டமும் கிடைத்தது. "ரிக்ஷாக்காரன்" படத்துக்கு 'பாரத்' பட்டம் கிடைத்தது, சிவாஜிக்கும் அவரது ரசிகர்களுக்கும் பொறுக்கவில்லை.

  எம்ஜிஆருக்கு கொடுக்காமல் வேறு யாருக்கு கொடுத்திருந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள். அத்தனை வருடமாக பட்டம் கிடைக்கவில்லை என்று கவலைப்படுவதைவிட அந்த வருடம் எம்ஜிஆருக்கு கிடைத்தது அவர்களுக்கு மிக கவலை அளித்து விட்டது. அதிலும் கூட உள்ள ஜால்ராக்களும் சிவாஜியை
  தூண்டி விட நடிகர் சங்க பாராட்டு விழாவில் சிவாஜியின் முகத்தை பாருங்கள் நன்றாக தெரியும், வாடிய முகத்துடனும் இறுகிய முகத்துடனும் ஏதோ அவருடைய கையிலிருந்த விருதை யாரோ பறித்த தோற்றத்தில் வலம் வருவதை நாம் பார்க்கலாம்.

  இதில் 'சோ' வேறு 'பாரத்' பரிசுக்கு இவர்தான் தேர்வாளர் மாதிரி கார்ட்டூனெல்லாம் போட்டு. சிவாஜியை வெறுப்பேற்றி கடுப்பேற்றினார். "அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்" என்ற வள்ளுவரின் வாக்கு அங்கு பலித்து விட்டதை நாம் பார்க்கலாம்.
  சிவாஜி விஷயத்தில் எல்லோருமே தேர்வாளர்கள் போல ஆளுக்கொரு கருத்தை சொல்லி திரிந்தார்கள். வாத்தியாருக்கு தெரியாதா எந்த பிள்ளை காப்பி அடிக்காமல் பரீட்சை எழுதியது என்று.

  அதன்பிறகும் எவ்வளவோ கஜகர்ணமடித்து நடிப்பு வித்தைகளை காண்பித்தும் யாரும் ஏற்றுக் கொள்வதாக இல்லை.அதற்கு முன்பும் பின்பும் எம்ஜிஆரின் எந்த படமும் அனுப்பியதில்லை
  என்பதை இராம.வீரப்பன் சுட்டிக் காட்டியுள்ளார். சில நடிகர்கள் தங்களுடைய நடிப்பை உயர்வாக எண்ணி 'ஆஸ்கர்' வரைக்கும் அனுப்பி பார்த்து விட்டார்கள். ஆனால் எங்கும் தேர்வாளர்கள் மிகை நடிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

  "அடிமைப்பெண்" படத்தை விருதுக்கு அனுப்ப எம்ஜிஆர் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்பதையும் ஆர்எம்வீ குறிப்பிட்டுள்ளார். தலைவர் எதையும் கண்டு கொள்வதில்லை. நம்மால் முடிந்தவரை மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதிலே தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தினார்..........

 8. #407
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,925
  Post Thanks / Like
  #இதயக்கனி (1975)

  சினிமாவில் வெற்றிக்கென சில ஃபார்முலாக்கள் உண்டு, அந்த ஃபார்முலாவில் மிக மிக முக்கியமானதொரு ஃபார்முலா தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் முக்கியமாக ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை, பன்மடங்கு லாபத்தைக் கொடுத்தது. சந்தோஷம், வெற்றி என்பதையெல்லாம் தாண்டி, படத்தின் நடிகருக்கு மிகப்பெரிய இமேஜை உருவாக்கிக் கொடுத்தது. அந்த ஃபார்முலா... எம்ஜிஆர் ஃபார்முலா. அதனால் அவருக்குக் கிடைத்த வரவேற்பும், மரியாதையும் இமேஜும் நாம் அறியாதது அல்ல. இப்படியான ஃபார்முலாவுடன் வந்து, வெற்றிக்கனியைக் கொடுத்த படம்தான்... ‘இதயக்கனி’.

  திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, எம்ஜிஆர், தன் படங்களில் இன்னும் வசனங்களில் கவனம் செலுத்தினார். தன் கட்சிக் கொடியை திரையில் காட்டினார். கொடியைப் பார்த்ததுமே கைத்தட்டிய ரசிகர்கள், வசனம் பேசும் போது ஆர்ப்பரித்துத் தெறித்தனர். சத்யா மூவீஸ் தயாரிப்பான ‘இதயக்கனி’ பிரமாண்டமான படமாக உருவாக்கப்பட்டது. இந்தி நடிகை ராதாசலூஜா, வெண்ணிற ஆடை நிர்மலா, ராஜசுலோசனா, பண்டரிபாய், தேங்காய் சீனிவாசன், வி.கோபாலகிருஷ்ணன், மனோகர், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.சுப்பையா, ஐசரி வேலன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்தனர்.

  மிகப்பெரிய எஸ்டேட் முதலாளி மோகன், தொழிலாளர்களுக்கு அள்ளியள்ளிக் கொடுப்பவர். அவர் ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறார். ஆதரவில்லாத அந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். ஊர்மக்கள் ஒருமாதிரியாகப் பேச, அவளைத் திருமணம் செய்கிறார். இந்த நிலையில், போலீஸ் அதிகாரியைப் பார்க்க மோகன் செல்கிறார். அப்போதுதான், அவர் ரகசிய போலீஸ் என்பது ஆடியன்ஸூக்குத் தெரிகிறது. பெங்களூரில் நடந்த ஒரு கொலைவழக்கைக் கண்டறியும் பணி மோகனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதுகுறித்த பணியில் இறங்கும் போது அவருக்கு ஓர் அதிர்ச்சி... கொலை செய்தவள் ஒரு பெண். அதுமட்டும் அல்ல... அவள் மோகனின் மனைவி.

  அதிர்ந்த மோகன், அடுத்தடுத்து பெங்களூர் செல்கிறார். அங்கே ஒரு கூட்டத்தைச் சந்திக்கிறார். மனைவியையே கைது செய்கிறார். அந்தக் கூட்டத்துக்கும் கொலைக்கும் உள்ள தொடர்பையும் அவர்களின் செயல்களையும் கண்டுபிடிக்கிறார். தன் மனைவி குற்றவாளி அல்ல எனும் உண்மையை உணர்த்துகிறார்.

  1975ம் ஆண்டு வெளியானது ‘இதயக்கனி’ திரைப்படம். ஆர்.எம்.வீரப்பனின் திரைக்கதையிலும் தயாரிப்பிலும் உருவானது இந்தப் படம். அறுபதுகளிலும் எழுபதுகளின் தொடக்கத்திலும் கூட, தன் படங்களில் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருந்த எம்ஜிஆர், தானே கட்சி ஆரம்பித்ததும் இன்னும் கவனம் செலுத்தி, காட்சிகளைப் புகுத்தினார்.

  படம் போட்டதுமே அறிஞர் அண்ணாவின் ஓவியம். பின்னணியில் அண்ணாவின் குரல். ‘மரத்தில் ஒரு கனி பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அது யாருடைய மடியில் விழுமோ என்று நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக அந்தக் கனி, என் மடியிலேயே விழுந்துவிட்டது. விழுந்த கனியை எடுத்து பத்திரமாக நான் என் இதயத்தில் வைத்துக்கொண்டேன்’ என்று ஒலிக்க, அப்போது ரசிகர்களை எகிறடித்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

  அண்ணாவின் ‘இதயக்கனி’ மேட்டர் முடிந்ததும்தான் ‘இதயக்கனி’ என்றே டைட்டில் போடப்படும். டைட்டில் முடிந்ததும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற... இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற...’ என்று எம்ஜிஆர் புகழ் பாடும் பாடல். எம்ஜிஆரின் ஓபனிங் சீன். பிறகு இந்தப் பாடல் ஹிட்டானதும் அரசியல் கூட்டங்களில் பேச்சாளர்கள் வருவதற்கு முன்னால், ஒலிப்பெருக்கியில் இந்தப் பாடலை ஒலிபரப்பி, மக்களை உசுப்பிவிட்டதெல்லாம் தமிழகத்தால் மறக்கவே முடியாத எபிஸோடுகள்.

  எஸ்.ஜெகதீசனின் வசனங்கள் எம்ஜிஆரின் இமேஜை உயர்த்திக்கொண்டே இருக்கும் வகையில் எழுதப்பட்டன. ‘நான் எப்பவுமே என் மருமக கட்சிதான்’ என்று பண்டரிபாய் சொல்லுவார். ‘நான் உங்க கட்சி’ என்பார் ராதாசலூஜா. ‘எதுக்கு சண்டை. நாம மூணு பேருமே ஒரே கட்சிதான்’ என்பார் எம்ஜிஆர். உடனே தேங்காய் சீனிவாசன், ‘எல்லாருமே உங்க கட்சிதான்’ என்பார். உடனே ஐசரிவேலன், ‘இப்ப எல்லாரும் அண்ணா கட்சிதான்’ என்று சொல்லுவார்.

  எழுபதுகளில் வந்த எம்ஜிஆர் படங்கள், கொஞ்சம் கிளாமர் தூக்கலாகத்தான் இருந்தன. ராதாசலூஜா, ராஜசுலோசனா, வெண்ணிற ஆடை நிர்மலா என நடிகைகளின் கவர்ச்சி ஆடையும் கேமிரா ஆங்கிளும் பேசப்பட்டன. மிகப்பெரிய ஹிட்டடித்த ‘இன்பமே...’ பாட்டு ஒரு ரகம். ‘இதழே இதழே தேன் வேண்டும்’ என்கிற பாடலை எஸ்பிபி பாடியிருப்பார். ‘தொட்ட இடமெல்லாம்’ என்றொரு பாடலுக்கு ராதாசலூஜாவும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் ஆடியிருப்பார்கள். டான்ஸ் மூவ்மெண்ட்டுகள் அப்பவே வேற லெவல்தான்.

  ராதாசலூஜா டபுள் ஆக்ட் போல் காட்சிப் படுத்திவிட்டு, திரைக்கதை விறுவிறுப்பாகும். ஆனால், கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மாலாவும் எம்ஜிஆரின் மனைவி லக்ஷ்மியும் ஒருவரே என்பதை க்ளைமாக்ஸில் விவரிக்கும் போது, ஸ்கிரிப்டின் நுட்பம் வியக்கச் செய்தது. ஒகேனக்கல், பெர்க்காரா, சிதம்பரம் பிச்சாவரம் என எல்லா இடங்களிலும் அழகு கொஞ்ச விட்டிருப்பார் ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன். படத்துக்கு வில்லன் இல்லை. வில்லி. இதுவும் பேசப்பட்டது. மேலும் படத்தில், ஒரு ஆங்கிலப்பாடல். இதை உஷா உதூப் பாடியிருப்பார். எம்.எஸ்.விஸ்வநாதன் தன் இசையாலும் மெட்டுக்களாலும் படத்துக்கு பிரமாண்டம் கூட்டியிருப்பார்.

  வாலி, புலமைப்பித்தன், நா.காமராசன்,ராண்டார்கை ஆகியோர் பாடல்களை எழுதியிருப்பார்கள். என் பேர் பிளாக் . அவர் பேரு ரெட்.எம்.ஜி. ரெட்’ என்பார் தேங்காய் சீனிவாசன். இந்தப் படத்துக்கு ராதாசலூஜாவின் மழலைக் குரலும் அவரின் கிளாமரும் மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்தன. ஏ.ஜெகநாதனின் இயக்கம் படு கச்சிதம். பின்னாளில், வெள்ளைரோஜா, மூன்று முகம், காதல் பரிசு என ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தார் ஜெகநாதன்.

  ’தோட்டாவுக்கே டாட்டா காட்டினவர் எங்க பாஸ்’, எல்லாரும் ஒரு இலைலதான் விருந்து போடுவாங்க. நீங்க ரெட்டை இலைல விருந்து போட்டுட்டீங்க’ என்றெல்லாம் வசனம் வரும்.

  1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ரிலீசானது ‘இதயக்கனி’. படம் வெளியாகி, 45 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் மக்கள் மனங்களில், நிரந்தரமாகவே இருக்கிறது... இருக்கிறார்... இதயக்கனியும் இதயக்கனியான எம்ஜிஆரும்!

  வசூலிலும் வெற்றி... படத்துக்கும் நல்லபெயர்... எம்ஜிஆரின் இமேஜையும் உயர்த்தியது... என எம்ஜிஆரின் மறக்க முடியாத படங்களில் ‘இதயக்கனி’யும் மிக முக்கியமானதொரு இடத்தைப் பிடித்துவிட்டது.

  பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிய... நீங்க நல்ல இருக்கனும் இந்த நாடு முன்னேற.. பாடல்

  .........

 9. #408
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,488
  Post Thanks / Like
  பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில்* திரு.துரை பாரதி*27/07/20 அன்று அளித்த*தகவல்கள்*
  ------------------------------------------------------------------------------------------------------------------
  உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் ஆரம்ப காட்சியில் மின்னலில் இருந்து மின்சாரத்தை சேமித்து ஆக்க சக்திக்கு பயன்படுத்துவது குறித்து விஞ்ஞானி முருகன் ஆராய்ச்சி செய்து வெற்றி பெற்று சக விஞ்ஞானிகள் கூட்டத்தில் அறிவிப்பு செய்வார் .இந்த ஆராய்ச்சியின் பார்முலாவை பற்றி கூறும்போது*முதல் காட்சியிலேயே ஜவஹர்லால் நேரு,மூதறிஞர் ராஜாஜி, லால்பகதூர் சாஸ்திரி போன்ற பெரும் தலைவர்கள், இறுதியில் பேரறிஞர் அண்ணா ஆகியோரது புகைப்படங்கள் காண்பிக்கப்படும் . விஞ்ஞானத்தை பற்றி பேரறிஞர் அண்ணா பேசும் சில வார்த்தைகள்* சில நிமிடங்கள் வெளிப்படும் . இப்படி தேசிய தலைவர்கள், மாநில தலைவர்களை போற்றி சில வார்த்தைகளும், அதன் மூலம் நாட்டின் பெருமையை பறை சாற்றுவது போல காட்சிகள் அமைத்து படத்தை துவக்கி தனது தேச பக்தியை வெளிப்படுத்தி* இருப்பார் படத்தின் நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான எம்.ஜி.ஆர்.*


  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று மன*வருத்தம் இருந்தாலும் ,வெளிக்காட்டி கொள்வதில்லை .காரணம் தன் அண்ணன்*சக்கரபாணிக்கு 10 குழந்தைகள் இருந்தார்கள் . அவர்களை தன் குழந்தைகள் போல் எம்.ஜி.ஆர். பாவித்தார் .* பாசத்தை பொழிந்தார் . அவர்களும் சித்தப்பா எம்.ஜி.ஆர்.மீது மிகவும் அன்பாக, பாசமாக இருந்தனர் . அவர்களை படிக்க வைப்பது, பிறந்த நாள் நிகழ்ச்சிகள் , திருமண நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு முன்னின்று நடத்துவது, செலவினங்கள் மற்ற பொறுப்புகளை ஏற்றுக் கொள்வது* என்று ஆர்வம் காட்டினார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.சக்கரபாணி அவர்கள்* அ .தி.மு.க. கட்சி , திரைப்படத்துறை , பட தயாரிப்பு* போன்ற எம்.ஜி.ஆர்* சம்பந்தப்பட்ட பணிகளில் தானும் பங்கு கொண்டு தனது சகோதரனுக்கு உகந்த உதவிகள் பலவற்றை செய்து வந்துள்ளார் . ஆனால் எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பு ,கட்சியிலோ,ஆட்சியிலோ ,தன் குடும்பத்தை சார்ந்தவர்கள் , உற்றார் உறவினர்கள் எவருக்கும் பொறுப்பு, பதவி ,எதுவும் தரவில்லை . இதுபற்றி ,விவரமாக, தெளிவாக , என் மனைவி, சகோதரர், உறவினர்கள் யாருக்கும் ஆட்சியிலோ, அரசு அதிகாரத்திலோ தலையிட உரிமை கிடையாது . என்*அனுமதியின்றி யாரும் அவர்களை இது விஷயமாக தொடர்பு கொள்ள*கூடாது என்று பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டு இருந்தார் . இந்தியாவில் எந்த மாநில முதல்வரும் இதுபோன்ற அறிக்கை வெளியிட்ட வரலாறில்லை .ஆனால் இன்றைக்கு பல மாநிலங்களிலும், தேசிய அளவிலும் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் சர்வ சாதாரணமாக, வெகு சகஜமாக புழக்கத்தில் உள்ளது என்பதை பார்த்து வருகிறோம் .


  குழந்தைகள் அக்கறையாக, கவனமாக* படிக்க வேண்டும் ,வீரமாக வளர வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் உலகத்தின் பொருளாதார நிலையை*மாணவ மாணவிகள் பருவத்தினர் அறிந்து ,அவர்களின் பெற்றோர்கள் அவற்றிற்கு எதிராக போராடுவதற்கு தங்களை தயார் செய்துகொண்டு ,படித்து*முன்னேறி உலகத்தை தெரிந்து கொள்ள வேண்டும்* இந்த வேட்கை எம்.ஜி.ஆருக்கு இருந்ததால் , ஒவ்வொரு படத்திலும் குழந்தைகளுக்காக*பிரத்யேகமாக பாடலை இடம் பெறச்செய்தார் .* அரசிளங்குமரியில் சின்ன பயலே, சின்ன பயலே என்ற பாடல் , திருடாதே படத்தில் ,திருடாதே பாப்பா திருடாதே , பெற்றால்தான் பிள்ளையா படத்தில் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, நம் நாடு படத்தில் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, உலகம் சுற்றும் வாலிபனில்* சிரித்து வாழ வேண்டும் , நான் ஏன் பிறந்தேன் படத்தில் தம்பிக்கு ஒரு பாட்டு ,ஊருக்கு உழைப்பவன் படத்தில் பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்* என்று பல பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம்*  தனது ஒவ்வொரு செயலிலும் அடுத்த தலைமுறைக்கு என்ன செய்ய வேண்டும்*என்ன சொல்ல போகிறோம் என்பதை சிந்தித்துக் கொண்டே இருந்தார் .நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி பாடலில், யார் யார் எப்படி நடந்துகொள்ள வேண்டும், யாரைப்போல்* பேச வேண்டும், யாரைப்போல் வாழ்க்கையில் படித்து முன்னேற வேண்டும் ,பெற்றோர்களிடம் எப்படி பழகுவது, மரியாதை தருவது*பற்றியெல்லாம் குறிப்பிட்டு சொல்லுவார் .சிரித்துவாழ வேண்டும்* பாடலில்*வரும் சிக்கு மங்கு சிக்கு மங்கு சாச்சா பாப்பா என்ற வரிகள் யாருக்கு எப்படி சொல்ல வேண்டும் ,குழந்தைகளுக்கு சொற்களை எப்படி அமைக்க வேண்டும் என்பதில் கவனமாக உரிய கவிஞர்களிடம் கேட்டு பெறுவதில், தேர்ந்த நிபுணராகவும், வல்லுனராகவும் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .


  நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
  -------------------------------------------------------------------------------
  1.பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் - ஊருக்கு உழைப்பவன்*

  2.விஞ்ஞானி முருகன் ஒரு காட்சியில் - உலகம் சுற்றும் வாலிபன்*

  3.நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம் நாடு*

  4.சின்ன பயலே, சின்ன பயலே* - அரசிளங்குமரி*

  5.திருடாதே பாப்பா திருடாதே - திருடாதே*

  6.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - பெற்றால்தான் பிள்ளையா*

  7.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*

 10. Likes suharaam63783 liked this post
 11. #409
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,925
  Post Thanks / Like
  #தேசியத்தலைவர்

  #சுதந்திரதின #வாழ்த்துக்கள்!!! ������������

  நாட்டின் சுதந்திரத்துக்காக தியாகங்கள் செய்த தலைவர்கள் மீதான பக்தியும் தேசப்பற்றும் வெகுஜனங்கள் மனதில் அழிக்க முடியாத கல்வெட்டாக பதிய நினைத்தார் நம்ம வாத்தியார். மற்ற நடிகர்களிடமிருந்து வேறுபட்டு தேசிய முகத்தை சினிமாவில் வெளிப்படுத்தத் தொடங்கினார்...பல படங்களில்...

  இதற்கு உதாரணமாக, நாடோடி (1966) படத்தில் இடம் பெறும்
  ” நாடு அதை நாடு – அதை நாடாவிட்டால் ஏது வீடு ?
  பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு.

  பாலைவனம் என்ற போதும் நம்நாடு
  பாறை மலைக் கூட நம் எல்லைக் கோடு
  ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம் ”
  -என்று #தேசப்பற்றை ஊட்டி பாடிய இந்த பாடலில் ” வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம் ” என்ற வரிகளில் தேசிய உணர்வைத் தூண்டியிருப்பார்.

  இதயவீணை’ படத்தில் வரும் ‘காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்’ பாடலிலும் காண்பித்தார். அப்பாடலில்,
  ” என் தாய் திருநாட்டுக்கு வாசலிது
  என்னாட்டவருக்கும் கலை கோவிலிது.
  அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப் போல்
  நேருவின் புகழ் சொல்லும் பூமியிது ”
  – என்றவர், இதே பாடலில்
  ” யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ ?
  வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ? ”
  என்று காஷ்மீர் பிரச்னையையும் லேசாக தொட்டுப் போவார் நம்ம வாத்தியார்.

  அடிப்படையில் மகாத்மாகாந்தியின் தீவிரபக்தரான எம்ஜிஆர் தனது பக்தியை திரையில் வெளிப்படுத்தவும் தயங்கிடவில்லை. எப்படி தனது ஒவ்வொரு படத்திலும் அறிஞர்அண்ணாவின் படம் அல்லது சிலை இடம் பெற்று வந்ததோ அதற்கிணையாக காந்தியும் அங்கம் வகித்து வந்தார்.

  ‘பணம் படைத்தவன்’ (1965) படத்தில் வரும் ” கண் போன போக்கிலே” பாடலில் ” மனிதன் போன பாதையை மறந்து போகலாமா ” என்ற வரிகள் வரும் போது காந்தி தடியூன்றி நடந்து போகும் ஓவியப்படத்தை குளோசபில் காண்பிப்பார்
  எம்ஜிஆர்.

  இதே படத்தில் ” எனக்கொரு மகன் பிறப்பான்..” பாடலில்
  ” சாந்தி வழியென்று #காந்தி வழிச் சென்று
  கருணைத் தேன் கொண்டு தருவான் ”
  – என்று ஆசைப்பட்டார்.

  ‘ எங்க வீட்டுப் பிள்ளை’யில் (1965) ” நான் ஆணையிட்டால்…” பாடலில்,
  ” முன்பு ஏசு வந்தார்; பின்பு காந்தி வந்தார் – இந்த
  மானிடர் திருந்திடப் பிறந்தார் – இவர்
  திருந்தவில்லை; மனம் வருந்தவில்லை.
  அந்த மேலோர் சொன்னதை மறந்தார் ”
  – என்று வருத்தப்பட்டார்.

  ” புத்தன் ஏசு காந்தி பிறந்தது
  பூமியில் எதற்காக தோழா
  #ஏழை #நமக்காக ”
  – என்று ‘சந்திரோதயம்’ (1966) படத்தில் பாடலாக சொன்னார்.

  நம்நாடு (1969) படத்தில் வில்லன்களால் பலமாக அடிபட்ட நிலையில் #காந்தியடிகள் சிலைக்கடியில் தான் எம்ஜிஆர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து கிடப்பார். அந்த கோலத்தைக் கண்டு நாயகி (ஜெயலலிதா) காந்தி சிலையை பார்த்து ஆதங்கத்தோடு பேசும் வசனம்:
  ” பார்த்தீங்களாய்யா.. உங்க வழியே உயர்ந்த வழி ; உன்னத வழின்னு சொல்லிகிட்டிருந்த இவரோட நிலையை ? அடிச்சி உங்க காலடி யிலேயே போட்டுட்டு போயிட்டாங்க ”

  அதே படத்தில் ” வாங்கையா வாத்தியாரய்யா…” பாடலில்,
  ” தியாகிகளான தலைவர்களாலே
  சுதந்திரமென்பதை அடைந்தோமே
  ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல்
  பலருக்கும் பயன் பெறச் செய்வோமே..”
  – என பாடல் வரிகளின் போது காந்தி, நேரு ஆகியோரின் படத்துணுக்குகள் (கிளிப்பிங்ஸ்) காண்பிக்கப்படும்.

  தேசியக்கவி பாரதிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இவரது படங்களில் முக்காலே முழுவீசம் #பாரதியார் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததே இதற்கு சான்று.
  பெற்றால் தான் பிள்ளையா படத்தில் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி..’ பாடலில்
  ” கவிதைகள் வழங்கு #பாரதியைப் போல் ” என்று குழந்தைகளுக்கு அறிவுரையே செய்வார்
  தம்ம வாத்தியார்..........

 12. #410
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,488
  Post Thanks / Like
  இன்று (15/08/20) 74 வது* சுதந்திர*தினத்தை*முன்னிட்டு*காலை*9 மணியளவில்** சென்னை*,சைதை*ஜோன்ஸ்*சாலையில் உள்ள பிள்ளையார் கோயில் அருகில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நல்லாசியுடன்* ,ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, நிர்வாகிகள் திரு.பாண்டியராஜ்,திரு.லோகநாதன்,திரு.ஜி.வெங்கட ேச பெருமாள்* திரு.முருகன் ,திரு.கணேசன் ஆகியோர்* *சார்பில்*பொது மக்கள் சுமார்*100 பேர்களுக்கு*இலவச*முக கவசம், சுண்டல் , கபசுர*குடிநீர்* ஆகியன* வழங்கப்பட்டன; நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து நன்கொடை அளித்த*பாசத்திற்குரிய இனிய நண்பர் திரு.ராஜா (ஈரோடு*) அவர்களுக்கு எங்கள்*நெஞ்சார்ந்த நன்றி . . நிகழ்ச்சியில்அமைப்பின் நிர்வாகிகளுடன்* உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு, பொன்மன*செம்மல்*எம்.ஜி.ஆர். நற்பணி*சங்கத்தை சார்ந்த*திரு.இளங்கோவன், திரு.எம்.எஸ். மணியன்*ஆகியோரும்*பங்கேற்று சிறப்பித்தனர் . .நிகழ்ச்சியின் புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •