Page 117 of 210 FirstFirst ... 1767107115116117118119127167 ... LastLast
Results 1,161 to 1,170 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1161
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் திரைப்பட உலகத்தின் பொற்காலம்-2

    இந்தக் குழுவின் ஆலோசனைகளை அப்போது இருந்த தி.மு.க. அரசாங்கம் அதன் பிறகு வந்த குடிஅரசுத் தலைவரின் ஆட்சியில் ஆளுநர் திரு. மோகன்லால் சுகாதியாவும், இவைகளை ஏற்றுச் செயல்ய படுத்தவில்லை. இங்கு முக்அ கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று திரு.எம்.ஜி.ஆர் . அப்போது முதல் அமைச்சராக இல்லாது இருந்தாலும் அப்போதே ஆளுநர் திரு.சுகாதியா அவர்களைச் சந்தித்து ஒருங்கிணைந்தவரி ( Compounding Tax ) விதிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியது ஆகும். இருந்த போதும் இந்தக் குழுவின் பரிந்துரைகள் ஆலோசிக்கப்பட்டு ஏற்கவோ செயல்படுத்தப்படவோ இல்லை . ஆனாலும் திரைப்பட உலகம் மீண்டும் மீண்டும் பலமுறை இதனைச் படுத்த வலியுறுத்திக்கொண்டே வந்தது.

    தென்னகத் திரைவானில் மங்காது ஒளிவீசும் நட்சத்திரமான திரு.எம்.ஜி . ஆர். முதல்வரானதும் அவரது அ . தி . மு . க . அரசு பதவி ஏற்றதும்- திரைப்பட உலகின் எல்லாவிதமான துன்பங்களை - பிரச்னைகளை நன்கு உணர்ந்திருந்த முதல்வர் தமிழ்ப் பட உலகின் இந்தப் பிரச்சினை களைக் கவனித்து அதன்மீது நட வடிக்கை எடுக்க ஆரம்பித்தார்.

    கலைவாணர் அரங்கில் 1977 அக்டோபர் முதல் நாள் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முதல்வர் திரு.எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்:

    "அரசும் தன் வரி வருமானத்தை இழக்காமல், திரைப்படத்துறையும் அதிகமான வரித் தொல்லைகளுக்கு ஆளாகாமல் இருக்கும் வண்ணம் ஒருங்கிணைந்த வரி ( Compounding Tax ) முறை விரைவில் செயல்படுத்தப்படும்"' என்பதாகும்.
    தமிழ்த் திரைப்படத் துறையினை நல்லதொரு நிலைக்கு உயர்த்திடவும் இழந்துவிட்ட பொலிவினை மீண்டும் பெற்றிடச் செய்திடவும் தன்னால் இயன்ற அளவுக்குப் பாடுபடுவதாக முதல்வர் அவர்கள் உறுதி கூறினார்.
    அவரது உறுதியினைச் செய்லாக்கிடும் விதத்தில் 1977 - ஆம் ஆண்டு டிசம்பர் 26 - ஆம் நாள் முதல் " ஒட்டுமொத்த வரி"அல்லது "ஒருங்கிணைந்த வரி"' ' யாக வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    ஏற்கெனவே ஆலோசனைக் குழுவின் பரிந்துரை பஞ்சாயத்து கிராமங்கள் வரை ஒருங்கிணைந்தவரி முறை அமலாக்கப் படவேண்டும் என்றிருந்த போதும் இந்தப் புதிய ஒருங்கிணைந்த வரி முறை இரண்டா வது நிலை ( Second Grade ) நகராட்சிகள் உள்ள ஊர்கள் வரை சுமார் 1,200 திரை அரங்குகளிலும் அமலாக்கப்பட்டது. இந்தப் புதிய வரி முறைக்கு உட்படாத சுமார் 3001 திரை அரங்குகள் முதல் நிலை நகராட்சிகள் மேலும் மாநகராட்சிகள் உள்ள பெரிய நகரங்களில் உள்ளவையாகும் . மற்ற இடங்களில் செயல்படும் முறையினை நன்கு ஆராய்ந்த பின்னர் இந்த ஊர்களிலும் புதிய வரி முறை செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.
    புதிய வரிவிதிப்பின் மாற்றத் தினால், நலிந்திருந்த தமிழ்த் திரைப்பட உலகம் புத்துணர்ச்சி பெற்று ஒளிர்ந்து வலிவுற்று வளம் பெற ஆரம்பித்தது.
    திரு. டி.ராமனுகம்
    பொது செயலாளர்,
    தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்.

    தொடரும்.........SB...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1162
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த வாரம் தனியார் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் திரைக் காவியங்கள்:
    1 ) 27-10-2020 பகல் 11 மணிக்கு சன் லைபில் - குடியிருந்த கோவில்.
    2) 29-10-2020 இரவு 10 மணிக்கு ஜெயா மூவீஸ் - இதயவீணை
    3) 30-10-2020 பிற்பகல் 1.30 மணிக்கு வசந்த் டிவியில் - புதிய பூமி
    4) 31 - 10- 2020 பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில் அலிபாபாவும் 40 திருடர்களும்
    5) 01-11-2020 காலை 09.30 மணிக்கு வசந்த் டிவியில் நீரும் நெருப்பும் - ஆகிய திரைப்படங்களை கண்டு மகிழவும் - முதல் தகவல் மதுரை ராமகிருஷ்ணன்( இவை தவிர ஒவ்வொரு நாளுக்கும் முன்தினம்தான் மெகா உள்ளிட்ட மேலும் பல டிவிகளில் தலைவர் படங்கள் ஒளிபரப்புவது தெரியவரும். எனவே கூடுதல் தகவல் அன்றன்று பதிவிடப்படும்)...rk...

  4. #1163
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் திரைப்பட உலகத்தின் பொற்காலம்-3
    பொறுமையாக படிக்கவும் அனைத்தும் முக்கியமானவை!

    1978 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இருந்த ஆண்டுக்கு 50 படம் என்பது 150 என்று உயர ஆரம்பித்தது. 700 டூரிங் அரங்குகள் என்றிருந்த நிலை 1,000 - க்கு மேல் என்ற அளவுக்கு இன்று வளர்ந்துள்ளது . இந்தத் துறையிலிருந்து வரும் வருமானம் மீண் டும் இந்தத் தொழிலிலேயே முதலீடு செய்யப்பட்டது.
    குறிப்பிட்ட பகுதிக்குக் குறிப்பிட்ட தொகையினைக் கொண்டு பட விநியோக உரிமை பெற்று வந்த விநியோகஸ்தர்கள் கொடுத்து வாங்கிய விலையினைப் போலத் தற்போது இரண்டு மடங்கு கொடுத்துப் படங்களும் அதிகம் வாங்கும் அளவுக்கு அவர்கள் நிலை உயர்ந்துள்ளது.
    நடிக நடிகையர்கனிடம் 1978 ஜனவரிக்கு முன் "இனாமாக" தயாரிப்பாளர்கள் கால்ஷீட்டுகள் பெற்றார்கள் என்ற நிலை முற்றிலும் மாறி தற்போது எல்லா நடிக நடிகையரும் ஒரு நாளில் ஒரு படப்பிடிப்புக்குச் சில மணி நேரங்களே ஒதுக்கித்தர இயலும் என்ற அளவுக்கு மிகவும் சுறுசுறுப்பு அடைந்து ஓய்வின்றி உள்ளனர். பட உலகின் எந்தப் பிரிவிலும் கதவடைப்போ, வேலை நிறுத்தமோ ஏற்பட வில்லை. நாள் முழுதும் ஓயாது பல மணி நேரம் எல்லாப் பிரிவினரும் சுறுசுறுப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.
    புதிய பல குறிப்பிடப்பட வேண்டிய நல்ல மாறுதல்கள் அடைவதற்குக் காரணமாக இருந்த " ஒருங்கிணைந்த வரி"' முறையினால் இன்னும் புதிய நன்மைகளும் கூட விளைந் துள்ளன.
    (1) வரி ஏய்ப்பு நடை பெறவில்லை.
    (2) வரி ஏய்ப் பினைக் கண்டுபிடிக்க அரசு செலவு செய்து வந்த தொகை முழுதும் தற்போது அரசுக்கு மிஞ்சுகிறது.
    (3) அரசுக்கு ஏற்கெனவே கிடைத்து வந்த வரித் தொகை எந்த வகையிலும் குறையவில்லை.
    (4) அரங்க உரிமையாளர்கள் வாரத் துக்கு 21 காட்சிகள் என்பதற்குப் பதில் 28 காட்சிகள் நடத்த அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
    (5) வணிக வரி நிர்ணயிப்பதையும், செலுத்து திரை வதையும் பற்றி அஞ்சிக் கொண்டிருந்த நிலை இப்போது இல்லை!
    தற்போது ஒரு திரை அரங்கின் 21 காட்சிகளுக்கு ஆகும் மொத்த வசூல் தகுதி என்னவோ அதில் இத்தனை சதவீதம் "ஒருங் கிணைந்த வரி"' யாக கட்டாயம் வாராவாரம் செலுத்திட வேண்டும் என்றும் எஞ்சியுள்ள காட்சி களுக்கு வரி செலுத்திட வேண் டிய அவசியம் இல்லை, என்பதனால் அதில் வரும் தொகை திரை அரங்க உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் - ஏன் திரைப்படத் தயாரிப்பாளர் படப்பிடிப்பு நிலைய உரிமையாளர் என்று எல்லோருக்குமே பயன் படுகிறது.
    படங்கள் நல்ல வகுலுடன் ஓடி விநியோகஸ்தர்களுக்கு அதிக வருமானம் வரும்போது அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு அதிகத் தொகை கொடுக்க முன் வருவதும், தயாரிப்பாளர்கள் நடிக நடிகையர்களுக்கு அதிகத் தொகை கொடுக்க ஒப்புக் கொள்ளுவதும் இயற்கையே. இந்த ஒருங்கிணைந்த வரி முறை என்பது ஆலோசனைக் குழுவினரால் நன்கு தீவிரமாகப் பகுத்து, அலசி ஆராயப்பட்ட ஒன்று ஆகும். எத்தனைச சதவீதம் வரி விதிக்கலாம் என்ன முறையில் விதிக்கலாம் என்பதனைக் கீழ்க்கண்டவாறு அறியலாம்.
    ஒரு பகுதியில் எத்தனை அரங்கங்கள் உள்ளன அதன் வசூல் நிலைமை ஒரு ஆண்டுக்கு எவ்வளவு என்பதனை ஆய்ந்து அந்த ஒரு ஆண்டுக்காலத்திற்குச் செலுத்தப்பட்டுள்ள கேளிக்கை வரி என்ன என்பதனைக்கொண்டு வகுத்து முடிவு செய்யப்படவேண்டும் என்பதாகும்.
    உதாரணத்துக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஒரு திரை அரங்கின் ஒரு ஆண்டின் மொத்த வசூல் 10 ஆயிரம் ரூபாய் ஆகவும் அதே ஒரு ஆண்டில் செலுத்தப்பட்டுள்ள கேளிக்கை வரி ஆயிரம் ரூபாயாகவும் இருந்தால் அந்தத் திரை அரங்கம் செலுத்தப்பட வேண்டிய வரி பத்து சதவீதம் என்ற அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது.
    இந்த முறையினால் தற்போது திரை உலகம் வளர்ச்சியும் வலிவும் பெற்றுள்ளது. திரை உலகின் அனுபவம் நிறைந்த திரு.எம்.ஜி.ஆர். அவர்களின் திறமைமிக்க வழிகாட்டும் தன்மையினாலும், அவரது திறமைமிக்க தளபதி திரு இராம.வீரப்பன் அவர்களின் ஒத்துழைப்பாலும் தற்சமயம் தமிழ்ப்பட உலகம் செழிப்புற்று வருகிறது. முதல்வர் அவர்களைப் போலவே திரு.வீரப்பன் அவர்களும் இத்துறையின் துன்பங்களை நன்கு அறிந்துள்ள கடுமையானதொரு உழைப்பாளி ஆவார்.
    திரையரங்குகள் கட்டுவதற்கான கடுமையான விதிமுறைகளை அவர் வெகுவாகத் தளர்த்தியுள்ளார். இதனால், புதிய திரை அரங்கங்கள் கட்டப்பட்டன. கட்டப்பட்டு வருகின்றன. கடந்த 10 மாத காலத்தில் 300-400 டூரிங் அரங்குகள் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. எத்தனையோ பல நன்மைகளைத் திரை உலகுக்கு செய்துள்ள அண்ணா தி.மு.க. அரசு இன்னும் பல புதிய நன்மைகளைத் தமிழ்ப்பட உலகம் பெற்றிட வேண்டும் என்று பாடுபடுகிறது என்ற உண்மை - திரை உலகில் உள்ள எல்லோருமே அறிந்த ஒன்று.
    தமிழ்ப்பட உலகும் நன்றி உணர்வோடு அரசின் நடவடிக் கைகளை நோக்கி வருவதுடன் எப்போதும் அரசு செய்யும் பல நல்ல காரியங்களுக்கு உறவுக் கரங்கள் நீட்டக் காத்திருக்கிறது..........sb...

  5. #1164
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*21/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    சகாப்தம் நிகழ்ச்சி என்பது தமிழக வரலாற்றில் அந்த மூன்றெழுத்து மந்திரமான எம்.ஜி.ஆர். என்கிற மகோன்னதமான மாமனிதரை கடந்து போக முடியாது என்கிற முக்கியத்துவம் வாய்ந்த அந்த மன்னாதி மன்னன் , மக்கள் மனதில் ஆழமாக வீற்றிருக்கின்ற அந்த ராஜராஜனின் வாழ்க்கை வரலாறை அயராமல் பேசிக் கொண்டு இருக்கிறோம் . 1982ல் சத்துணவு திட்டத்தை முதல்வர் எம்.ஜி.ஆர். துவக்கி வைக்கிறார் .இந்த திட்டத்தை துரிதமாக துவக்கி வைக்க எப்படி உங்களுக்கு யோசனை தோன்றியது என்று நிருபர்கள் கேட்க, பதிலுக்கு நான் சிவகாசி அருகே நடந்த ஒரு விபத்தை பற்றி விசாரிக்க சென்றிருந்தேன் அந்த விபத்தில் சிக்கி* காயமடைந்த மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு திரும்பும்போது, ஒரு இடத்தில வயல்வெளியில் பணியில் இருந்த பெண்கள் எனது காரை பார்த்ததும் தங்கள் கைகளில் தவழ்ந்த குழந்தைகளுடன் ஓடிவந்து கொண்டிருந்தனர் .அதை கண்டநான் காரை நிறுத்த சொன்னேன் என்றார் எம்.ஜி.ஆர். அப்போது மாலை 4.30மணி இருக்கும். அவர்களிடம் நீங்கள் எல்லாம் மதிய உணவு சாப்பீட்டீர்களா ,உங்கள் குழந்தைகள் சாப்பிட்டார்களா என்று கேட்டேன் .இல்லை.ஐயா, நாங்கள் காட்டில் வேலை செய்துவிட்டு கூலி வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றுதான் சமைத்து சாப்பிடுவோம் என்றனர் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்தீர்களா என்று* கேட்டதற்கு இல்லை.அவர்களும் எங்களுடன் பட்டினிதான் கிடப்பார்கள் .வீட்டிற்கு சென்றுதான் அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்றனர் .அன்றுதான் எம்.ஜி.ஆர். முடிவெடுத்தார் . எப்பாடு பட்டாவது அரசு சார்பில் ஒருவேளையாவது குழந்தைகளுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்வது என்று .அதன்படி திரை உலகை சார்ந்த நடிகர் நடிகைகள் மூலம் கலை நிகழ்ச்சிகள்,*நட்சத்திர இரவு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி இந்த திட்டத்தை துவக்கினார் .இதனால் பல கோடி குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வந்தனர் என்று திருச்சி அருகில் உள்ள பாப்பாக்குறிச்சி என்கிற இடத்தில நிருபர்களுக்கு எம்.ஜி.ஆர். பேட்டி அளித்தார் .


    மதுரையில் ஒரு முறை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை எம்.ஜி.ஆர். நடத்தினார் .* அந்த மாநாட்டின் ஊர்வலத்தை பார்வையிட தமுக்கம் மைதானத்தில் ஒரு மேடை அமைக்க சொல்லி அங்கிருந்து அந்த ஊர்வலத்தை பார்வையிடுகிறார் .* அந்த மேடையில் எம்.ஜி.ஆர். ஏறும்போது , மேடைக்கு பின்புறம் 70 வயதான ஒரு மூதாட்டி ஒரு பானையில் மோர் கொண்டுவந்து*விற்று கொண்டிருக்கிறார் .அதை பார்த்துவிட்டு இருக்கையில் அமர்கிறார் எம்.ஜி.ஆர். சிறிதுநேரம் ஊர்வலத்தினரை பார்த்து கையசைத்து விட்டு பின்புறம் திரும்பி பார்க்கும்போது அந்த வயதான மூதாட்டியை காணவில்லை . மறுபடியும் சிறிது நேரம் ஊர்வலத்தினரை பார்த்து கையசைத்துவிட்டு ,சில நிமிடங்கள் கழித்து மேடையின் பின்புறம் திரும்பி பார்க்கிறார் . இதை கவனித்த அரசு* அதிகாரி ,எம்.ஜி .ஆரிடம் என்ன விஷயம்.அடிக்கடி பின்புறம் திரும்பி பார்த்த வண்ணம் இருக்கிறீர்கள் .ஏதாவது பிரச்னையா, நான் விசாரிக்கட்டுமா எனும்போது ,ஒன்றுமில்லை ,மேடையின் பின்புறம் ஒரு வயதான மூதாட்டி பானையில் மோர் விற்று கொண்டிருந்தார் .அவரை திடீரென்று காணவில்லை*அவரை கொஞ்சம் தேடி பார்க்க சொல்லுங்கள் என்றார் . அந்த அதிகாரி ,கீழே உள்ள காவல்துறை அதிகாரியிடம் சொல்லி*தேடி பார்த்து மேடைக்கு அழைத்து வருகின்றனர் .* மேடைக்கு வந்ததும் எம்.ஜி.ஆர். தன் ஜிப்பாவில் இருந்து கட்டு கட்டாக*.பணத்தை*அள்ளி அந்த மூதாட்டியின் கைகளில் கொடுத்து*ஏதாவது கடை வைத்து பிழைத்த கொள்ளுங்கள் என்று கைகள் நிறைய அள்ளி கொடுத்தாராம் . அப்படி பாவப்பட்ட மனிதர்கள் , விளிம்பு நிலை மனிதர்கள் ,சொந்த உழைப்பினால் முன்னுக்கு வருபவர்கள் போன்றவர்களை தேடி பிடித்து உதவிகள் செய்கிற மனோபாவம் எம்.ஜி.ஆருக்கு*இருந்தது*என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம் இதை பலரும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள் .**


    திரு.கா. லியாகத் அலிகான்*:* சமீபத்தில் நீங்கள் பேசியது*போல ,ராஜா தேசிங்கு படத்தில்*வரும் ஆதி கடவுள் ஒன்றேதான் அதில் பேதம் கிடையாது என்ற பாடலில் தனது*சிந்தனையை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தி இருக்கிறார் .என்னுடன் சம்பந்தப்பட்ட விஷயம் ஒன்றை குறிப்பிடவேண்டும் என்றால் உடுமலைபேட்டையில் எனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலந்துகொள்ள இருந்தபோது ,நான் என் மனைவியுடன் திருமண வரவேற்பு மேடைக்கு*செல்ல வேண்டும் என்று எனது பெற்றோர்களிடம் வேண்டுகோள் வைத்தபோது*,நமது மத*கோட்பாடில்*அப்படி ஒரு வழக்கம் கிடையாது என்று மறுப்பு தெரிவித்தார்கள் .பின்னர் ஜமாத்காரர்கள் தெரிவித்த*கருத்துக்களின்படி மணமக்கள் வரவேற்பு மேடையில் அமர்வது*அவ்வளவு சரியாக,நன்றாக இருக்காது என்றனர் .இந்த கருத்துக்கள், எதிர்ப்புகளை எல்லாம் மீறி , நான் மணமகளை அழைத்து கொண்டு*தாஜ்*திரையரங்கிற்கு நேராக வந்துவிட்டேன் .இதை கண்ட*எனது தந்தை மிகவும் வேதனை அடைந்து, நீ மணமகளுடன் வரவேற்பு மேடையில் அமருவதைவிட ,உரிமையாளர் அலுவலகத்தில் மணமகளை*அமரவைத்துவிட்டு எம்.ஜி.ஆர். அவர்களை வரவழைத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்/வேண்டுமானால் நீ தலைவர் எம்.ஜி.ஆரிடம் கேள்.*,அவர் விருப்பப்பட்டால் மேடையில்*மணமகளை*அமரவை*.எனக்கு ஒன்றும் ஆட்செபனை இல்லை.* .*நமது*ஜமாத்காரர்கள் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்வது நமது பாரம்பரியத்திற்கு,குடும்பத்திற்கு நல்லதல்ல, எதற்கும் யோசித்து முடிவு எடு**என்றார் .அதன்படி*சிறிது நேரம் யோசித்து ,மணமகளை*உரிமையாளர் அலுவலகத்தில் அமரவைத்து விட்டு ,நான் வரவேற்பு மேடையில்*சென்று அமர்ந்தேன் . சற்று நேரத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*திருமண மண்டபத்திற்கு காரில் வந்து இறங்கினார் . என்னை பார்த்தவுடன்*காதில் சாந்தி முகூர்த்தம் முடிந்துவிட்டதா என்று மெதுவான குரலில்*கேட்டார் .இந்த கேள்வியில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்னுடன் எந்த அளவு*நட்பும், பாசமும், அன்பும் புரட்சி தலைவர் எம்.ஜி..ஆர் வைத்திருந்தார் என்பதை .*இல்லை அண்ணா என்று சொன்னதும், என் தோளின்மீது கையை போட்டு அன்பாக*தட்டி கொடுத்து,பின்னர் அவருடைய இருக்கையில் அமர்ந்துவிட்டு ,மணமகள் எங்கு இருக்கிறார் என்று கேட்டார் .நான் விஷயத்தை விவரமாக கூறினேன் .* மணமகள் அருகில்தான் இருக்கிறார். அண்ணன் உத்தரவிட்டால் நான் மேடைக்கு அழைத்து வருகிறேன் என்றேன் .* அவர் வேண்டாம் என்று சொன்னார் .மணமகளை மேடையில்*இருக்கையில் அமர செய்வதை உன் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்கிறாய். ஜமாத்காரர்களுக்கும் அதில் விருப்பமில்லை .எனவே இஸ்லாம் மத கோட்பாடின்படி ,நாம் நடந்து கொள்வது எப்போதும் நல்லது .இல்லையென்றால் உன்னையும், உன் மனைவியையும்*குறை சொல்லி*பின்னர் பேசுவார்கள். அதற்கு இடம் தரவேண்டாம்*.என்று சொல்லி ,என்னையும், என் மனைவியையும் வாழ்த்தி சுமார்*35 நிமிடங்கள்*மேடையில் இருந்தபடி பேசினார் .அப்போதுதான்*புரட்சி தலைவர் ஒரு சட்டத்தை இயற்றுவது பற்றி பேசினார் .அவர் பேசும் சமயம்*ஒருவர் குடித்துவிட்டு, அவரை பார்த்து இருகரம் கூப்பி*வணக்கம் வைத்தபடி இருந்தார் .ஒருமுறை எம்.ஜி.ஆர். வணக்கம் சொன்னார். சில நிமிடங்களில் மீண்டும் வணக்கம் வைத்தார் .அதற்கும் பதில் வணக்கம் சொன்னார் எம்.ஜி.ஆர். சிறிது நேரம் கழித்து மூன்றாவது முறையாக* வணக்கம் தெரிவித்தபோது அவர் குடி த்துள்ளார் என்று எம்.ஜி.ஆர்.கண்டுபிடித்துவிட்டார் .இந்தமுறை வணக்கம் தெரிவிக்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டே*இருக்கிறார் .அப்போது ஒரு சட்டத்தை பற்றி விளக்கமாக பேசினார் .தமிழக அரசு இது போல தன்னிலை தெரியாமல் மது அருந்துபவர்களுக்குமன்னிக்க செய்யாமல், முதல்முறையாக இருந்தால்* மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் . அடுத்த முறை தவறு செய்தால் ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும் .* மூன்றாவது முறை தவறு செய்தால் நாடு கடத்தப்படுவார்கள் என்று எனது திருமண மேடையில்தான் இந்த சட்டம் இயற்றப்போவதை பற்றி பேசினார் . பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருமூர்த்தி மலை அருகில் உள்ள ஆய்வு மாளிகையில் ஓய்வெடுக்க சென்றார் .நாங்கள்*சிலர் அவருக்காக உணவை எடுத்துக்கொண்டு சென்றோம்**அங்கு வந்திருந்த சில எம்.எல்.ஏக்கள், முக்கிய விருந்தினர்கள் அந்த உணவை சாப்பிட்டு ஒரு திருப்தி இல்லாத சூழலை உருவாக்கினார்கள். அதாவது உணவு நன்றாகத்தான் இருக்கிறது .சிக்கன் சமைத்தது சரியில்லை என்பதுபோல பேசி கொண்டதை எப்படியோ எம்.ஜி.ஆர். அவர்கள் தெரிந்து கொண்டார்கள். இருப்பினும் எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து சாப்பிட்ட வண்ணம் முதல்வர் இருக்கிறார் .நான் மறுபடியும் அவருக்கு பரிமாற உள்ளே சென்றேன் .அப்போது அங்குதலைமை தாங்கிய**குழந்தைவேலு , திருப்பூர் மணிமாறன், கோவைத்தம்பி, மருதாச்சலம், அண்ணா நம்பி போன்றவர்கள் எல்லாம் இருந்த சூழ்நிலையில் கல்யாண சாப்பாடு மிகவும் ருசியாகவும், அருமையாகவும் இருந்தது என்று என்னிடம் குறிப்பிட்டார் .ஆனால் முதலில் சாப்பிட்ட எம்.எல்.ஏக்கள் , உணவு சுமாராகத்தான் இருந்தது என்று சொன்னார்கள். புரட்சி தலைவரும் அதே போலத்தான் சொல்லுவார் என்று நான் எதிர்பார்த்தேன் .எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அனைவரின் முன்னிலையில் என்னிடம் உணவு ரொம்ப பிரமாதமாக இருந்தது என்று திரும்ப திரும்ப சொன்னார் . அதை கேட்ட எனக்கு மனது நிறைவாக இருந்தது .பிறகு அவர் விடைபெறும்போது ,நீ சென்னைக்கு உன் துணைவியாரை அழைத்து கொண்டு என் இல்லத்தில் வந்து சந்திக்க வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார் . அவர் சென்றபிறகுதான் அங்கு வைக்கப்பட்டிருந்த சிக்கன் அனைத்தையும் எம்.ஜி.ஆர். அவர்கள் சாப்பிட்டு உள்ளார்* என்று தெரிந்தது .அதாவது பலர் சிக்கன் சமையல் நன்றாக இல்லை என்று விமர்சித்ததை கண்டு கொள்ளாமல் அவர் முழுவதையும் சாப்பிட்டுள்ளார் .அப்போதுதான் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது .


    நபிகள் நாயகத்திடம் ஒரு வயதான மூதாட்டி திராட்சை பழங்களை கொண்டுவந்து கொடுக்கிறார் . ஒரு திராட்சையை சாப்பிட்ட நபிகள் நாயகம் முழு பழங்களையும் அவரே சாப்பிட்டு முடித்துவிடுகிறார் . பின்னர் அந்த மூதாட்டிநன்றிகூறி விடை பெற்று* சென்றதும், சீடர்கள் அவரிடம் எப்போதும் எங்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டுத்தான் தாங்கள் சாப்பிடுவது வழக்கம். இன்று ஏன் இப்படி* வழக்கத்திற்கு மாறாக தாங்கள் செய்தீர்கள் என்று கேட்டதற்கு, அந்த திராட்சை பழம் மிகவும் புளிப்பாக இருந்தது . உங்களால் சாப்பிட்டு இருக்க முடியாது .அப்படியே சாப்பிட முயன்றாலும், உங்கள் முகத்தில்மிகவும் புளிப்பாக உள்ளது என்பதை** காட்டிவிடுவீர்கள் அல்லது வாயை திறந்து அந்த மூதாட்டி முகம் கோணும்படி ஏதாவது சொல்லிவிடுவீர்கள் .அதற்கு இடம் தராமல்தான் அந்த மூதாட்டி மனம் நிறைவு அடையும்படி நானே சாப்பிட்டு முடித்தேன் என்றாராம் .அதே போலத்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும்* அருகில் ப.உ.சண்முகம் போன்றவர்கள் இருந்தாலும், எங்கே உணவு சரியில்லை என்று எனக்கு முன்பாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் மறுபடியும் சொல்லி விமர்சனம் செய்துவிடுவார்களோ என்று எண்ணி , அவரே எல்லா சிக்கன், மட்டன் உணவு வகைகளை சாப்பிட்டு முடித்தபோது ,எனக்கு நபிகள் நாயகம் நடந்து கொண்ட விதம் பற்றித்தான் நினைவுக்கு வந்தது .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு தொண்டனின் மனம் கோணாதபடியும்,அந்த தொண்டனின் மனம் நிறைவடையும்படியும் அன்று நடந்து கொண்டதை*நபிகள் நாயகத்தோடு* ஒப்பிட்டுதான்* நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன் .இவ்வாறு திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .


    சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் ஒருமுறை முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது .விழா முடிந்து உணவருந்தியபின் எம்.ஜி.ஆர். புறப்படுகிறார் . பாதுகாப்பிற்காக வந்திருந்த கார் ஓட்டுனர்கள், ஊழியர்கள் அவருடன் புறப்பட தயாராகின்றனர் காரில் அமர்ந்திருந்த அவர்களை*.* எம்.ஜி.ஆர். அனைவரும் சாப்பீட்டீர்களா என்று கேட்கிறார் .அனைவரும் நாங்கள் சாப்பிடவில்லை. பரவாயில்லை புறப்படலாம் என்கின்றனர் . கார் ஓட்டுனர்கள், ஊழியர்களுக்கு அரசு விழா முடிந்து இரவு நேரத்தில் ஓட்டல்களில் உணவு வழங்கும் பழக்கம் இல்லையென்று கேள்விப்பட்டு ,மறுநாளே, அவர்களுக்கு இரவு நேர உணவுப்படியாக ரூ.100/- வழங்கவேண்டும் என்று ஆணையிட்டார் .


    2016ல் மோடியின் தலைமையிலான மத்திய அரசு ,ரூ.500/- ரூ.1000/- ஆகிய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கிறது .இதன் மூலம் கருப்பு பணத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்று முடிவெடுத்தது .ஆனால் இதை 1974லேயே எம்.ஜி.ஆர். யோசனை தெரிவித்து அறிக்கை விட்டார் .1958ல் நாடோடி மன்னன் படத்தின் மூலம் பொருளாதார ரீதியில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்று சொல்லி, ஆட்சிக்கு வந்தபின்னர் மக்களின் பொருளாதார வாழ்க்கை மேம்பட பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தினார் .

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்/காட்சிகள் விவரம்*
    ----------------------------------------------------------------------------------
    1.தொட்டால் பூ மலரும்* - படகோட்டி*

    2. புத்தன் இயேசு காந்தி பிறந்தது - சந்திரோதயம்*

    3.காவல்துறை அதிகாரி வேடத்தில் எம்.ஜி.ஆர்.-என் கடமை**

    4. திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி .

    5. அன்னமிட்டகை* பாடல்* *- அன்னமிட்டகை*

    6.குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் - மகாதேவி*
    *

  6. #1165
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்திய கலைத்துறையில் ....
    +++++++++++++++++++++++
    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் மட்டுமே அதிக அளவில் வருமானவரி கட்டியுள்ளார்.
    +++++++++++++++++++++++++(
    இதோ....ஆதாரபூர்வமாக
    ஆண்டு...தேதி வாரியாக (7 வருடங்கள்)
    +++++++++++++++++++++++++++++++++
    26 லட்சத்து 42 ஆயிரத்து 180 ரூபாய்கள்..
    இன்று இந்த தொகையின் மதிப்பு
    எவ்வளவு என்பதை பார்த்தால்...
    எண்ணிலடங்காத கோடிகளாகும்...
    இது தவிர 3 லட்சம்... தனியாக செலுத்தியுள்ளார்...
    +++++++++++++++++++++++++++++++
    பிறர்க்காக வாரி வழங்கிய வள்ளல் மட்டும் அல்ல...
    அரசுக்கும் இந்தியாவிலேயே அதிக வருமான வரி செலுத்தியவரும்
    வள்ளல் புரட்சித்தலைவரே....
    ++++++++++++++++++++++++++++++++
    ஒரு பக்கம் தன் திரைப்படங்கள் மூலம்
    அதிக வரிகட்டி சாதனை...
    மறு பக்கம் தன் வருமானம் மூலம் அதிக தொகை வரியாக செலுத்தி சாதனை...
    +++++++++++++++++++++++++++++++(
    எல்லோருடைய முகதூலிலும் பதிவிடுங்கள்....
    தலைவரின் அன்பு உள்ளங்களே........ru...

  7. #1166
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1972 ல் தென்னகப்படவுலகின்
    மாபெரும் சாதனை கதாநாயகன்
    மக்கள் திலகத்தின்
    வெற்றி படைப்பான
    ராமன் தேடிய சீதை....
    13,04,1972 ல் வெளியாகி
    வசூலில் வீரவரலாறு படைத்தது.
    ++++++++++++++++++++++++++++
    44 திரையரங்கில் வெளியாகியது...
    ++++++++++++++++++++++++++++++
    நல்லநேரம் காவியம் வெளியாகி சூப்பர் ஹீட்டாக ஒடிக்கொண்டு இருக்கும் போது
    ஒரு மாதம் கழித்து... வெளியான காவியம்.
    +++++++++++++++++++++++++++++++++
    சென்னையில்....
    மிட்லண்ட் 64 நாள்
    கிருஷ்ணா 64 நாள்
    சரவணா 50 நாள்
    ஒடிய மொத்த நாட்கள் : 178
    ஒடி முடிய வசூல் : 6,79,022.51 ஆகும்.
    +++++++++++++++++++++++++++++++++
    மதுரை சிந்தாமணி 84 நாள்:
    ஒடி முடிய வசூல் :2,48, 631.75
    சேலம் 84 நாள் : 2,04,116.40
    திருச்சி 84 நாள்
    கோவை 78 நாள்
    +++++++++++++++++++++++++++++
    18 அரங்கில் 50 நாளை கடந்து சாதனை..
    வேலூர்.... பாண்டி... ஈரோடு...
    திண்டுக்கல்.... நெல்லை.... ஆத்தூர்
    நாகர் கோவில்... தஞ்சை... குடந்தை
    கரூர்..... ப.கோட்டை.... மாயூரம் (48)
    ++++++++++++++++++++++++++++++++
    இலங்கையில்....
    1972 ல் நல்லநேரம் திரைப்படத்திற்கு பின் வெளியாகி .....
    ராமன்தேடிய சீதை வெற்றி முழக்கம்..
    +++++++++++++++++++++++++++
    கொழும்பு கெப்பிட்டல் அரங்கில்
    105 நாட்கள் ஒடியது....
    ஒடி முடிய வசூல் : 4,62,309.50
    வெள்ளவத்தை பிளாசா : 51 நாள்
    ஒடி முடிய வசூல் : 1,58,046.50
    யாழ்நகர் வெலிங்டன் : 75 நாள்
    மற்றும் பல பகுதிகளில் திரையிடபட்ட
    திரைப்படம்...
    மக்கள் திலகத்தின்
    ராமன் தேடிய சீதை ஆகும்....
    +++++++++++++++++++++++++++++
    ஆண்டுகள் 48 யை கடந்தாலும்...
    1972ம் ஆண்டில் வெளியான
    வசூல்பேரரசின் ஆறு காவியங்களும்
    இன்று வரையில் வெள்ளித்திரையில்
    அரங்கேறி வருவதே மிகப்பெரிய சாதனை.... சரித்திரமாகும்.............ur.........

  8. #1167
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெயஸ்ரீ ஷங்கர்.
    யோகத்தின் முகவரிகள்:
    நாங்கல்லாம் எம்.ஜி.ஆர் கட்சி. நீ யார் கட்சி? எனது பள்ளி நாட்களில் இந்த ஒரு கேள்வி மிகவும் சகஜமாக எனது தோழிகளிடையில் ஒருவருக்கொருவரைப் பார்த்துக் கேட்டுக் கொள்ளும் கேள்வியாகவே இருந்தது. அதை வைத்துத் தான் எங்களுக்குள் நட்பு வட்டமும் அமையும். அது போன்றதொரு காலமது. அப்போது எனக்கு பத்து வயது இருக்கும்.. எனக்குப் பிடித்த தோழிக்காக, நானும் எம்.ஜி.ஆர் கட்சி தான் என்று சொல்லி அவளோடு சேர்ந்து கொண்டேன். எம்.ஜி.ஆர் பாடல்கள் தான் எங்கள் நட்புக்கு வித்தாகி, உரமாகி, மரங்களாகி நந்தவனமாகியது. அதையும் கடந்து, இள நெஞ்சங்களுள் அவரால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தின் ஆதிக்கம் அபாரமானது என்றே சொல்ல வேண்டும்…
    இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு யோகம் கைதூக்கி விட்டு கடைசி வரையில் கூட வரும் என்றும் சொல்வார்கள். அந்த விதத்தில் பரிபூரணமா அமைந்த ‘யோக ஜாதகம்’ அவருடையது தான். அப்பேர்பட்ட யோகக்காரருக்கு தனது உயர்ந்த பண்பால், செல்வமும், பெரும்புகழும், அழிவில்லாத மக்கள் செல்வாக்கும் வாழ்வின் எல்லை வரை அமையப் பெற்றால் அவர் மனிதருள் மாணிக்கமாவர் .
    இந்நிலையில் தான் ஒரு நாள் நம்ப ஊருக்கு எம்.ஜி.ஆர் வருகிறார் என்ற செய்தி ‘காட்டுத் தீ’ போலப் பரவியது. எந்தவித தொலைத் தொடர்பும் அதிகரித்திராத காலம். மதுரையில் அவருக்கு ரசிகர்கள் கடலளவு என்பதை உணர்த்திய அனுபவம் எனக்கு அதுதான். திரையில் பார்த்திருந்த ஒரு மனிதனை நேரில் பார்க்கும் அந்த சந்தர்ப்பம் மிகவும் பிரமாண்டமானது என்று தான் சொல்ல வேண்டும். அத்தனை பிரமிப்பு மனத்துள். நேரமாக நேரமாக மக்கள் வெள்ளம் அலைமோதத் தொடங்கியது. அந்த ரசிகர் கூட்டத்தின் மத்தியில் நானும் எனது தோழியின் வீட்டு மொட்டைமாடியில் நின்றபடி அவரைக் காணும் ஆவலுடன் நின்றிருந்தேன். அவர் நடித்த திரைப்படப் பாடல்கள் ஒலிபெருக்கியில் தொடர்ந்து ஒலித்த வண்ணம் இருந்தது.
    “நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
    நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
    என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
    நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே”
    அத்தோடு கூடவே இன்னொரு பாடலாக …
    “வாங்கய்யா வாத்தியாரையா
    வரவேற்க வந்தோமைய்யா “
    இந்தப் பாடலும் திரும்பத் திரும்ப ஒலித்த வண்ணம் இருந்தது. மதுரையின் தெருக்கள் முழுதும் அவருக்காக அலங்கரிக்கப் பட்டு அத்தனை இதயங்களுக்குள்ளும் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ‘ஒரே எண்ணம் ‘ நிறைந்ததாக இருந்ததைக் உணரவும் முடிந்தது. அத்தனை அன்புக்கும் சொந்தக்காரர் ‘அமாவாசை வானில் எழுந்த முழு நிலவாக’ வசீகரமான தோற்றப் பொலிவோடு வெண்பஞ்சுத் தொப்பியும், கறுப்புக் கண்ணாடியும், வெள்ளை அங்கியும் கழுத்தைச் சுற்றிய ஷாலோடு , கூப்பிய கரங்களில் ஒரு வாகனத்தில் நின்று அனைவரையும் பார்த்து கையசைத்த வண்ணம் எங்களைக் கடந்து சென்றார். வானுலக தேவனே வந்து எழுந்தருளியது போன்ற ஒரு நிம்மதி அவரைக் கண்டுவிட்ட முகங்களில் தெரிந்தது. கூட்டத்தில் பெருத்த ஆரவாரம். அந்த ஆனந்த அலை ஓயாது நீண்ட நேரம் ஒலித்தவண்ணம் இருந்தது. இன்றும் கூட நான் முதன் முதலாகக் கண்ட அந்த மாபெரும் பிரம்மாண்டமான மக்கள் திரள் கண்ணுள் நிறைந்து வழிகிறது. அன்றிலிருந்து எனது மனத்துள் அவரை ஒரு அதிசயப் பிறவியாகவே எண்ண ஆரம்பித்தது.
    பள்ளியில் மாறுவேடப் போட்டியில் அநேகமாக அத்தனை தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு ‘எம்.ஜி.ஆர்” வேடமிட்டு ‘என் ரத்தத்தின் ரத்தமே ‘ என்ற அவர் மேடையில் பேச ஆரம்பிக்கும் போது, பொது மக்களிடையே தனக்கு இருக்கும் பந்தத்தை உறுதி செய்யுமுகமாக உபயோகப் படுத்தும் அந்த சக்திப் பிரயோக வாக்கியத்தையே வசனமாகச் சொல்ல வைத்து அப்படியே மெய் சிலிர்த்துப் போவார்கள். அத்தனை ஈடுபாடும், அன்பும், பக்தியும் கொண்ட தாய்குலங்கள் அவரை ஒரு அவதார புருஷராகவே எண்ணியிருந்தனர் . அவர் மக்கள் இதயத்தின் தாரக மந்திரம்.
    வெள்ளித் திரை நடிகர் என்பதையும் மீறிய ஒரு பிணைப்பும், ஆளுமையும் அவர் மீது பொது மக்களிடையில் இருப்பதை காணும் போதெல்லாம் ‘இது எப்படி சாத்தியம்’ என்ற கேள்விக்கே இடமில்லாமல் அத்தனை பேர்களின் உள்ளத்தையும் ஈர்த்த வினோத காந்தமாக அவரது எளிமையும், காருண்யமும் இருந்தது தான் அந்த உயர்ந்த ஆன்மாவின் உன்னத சாட்சி. அவரைச் சந்திக்கும் எவரையும் அவரது ரசிகனாகவே மாற்றிவிடும் இரகசியம் தெரிந்தவர். அவர் பிறந்ததும், வாழ்ந்ததும், வெள்ளித் திரையில் சாதனைகள் புரிந்ததும், அரசியலில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பற்றி பொது மக்களின் நலனுக்காக சேவைகள் பல புரிந்ததும் அறியாதவர் யாருமே தமிழ் நாட்டில் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர் என்ற இந்தப் பெயரில் தான் எத்தனை ஆணித்தரமான நம்பிக்கை மக்களிடத்தில் இருந்திருக்க வேண்டும்.
    செல்வம்:
    இந்நிலையில் அவர் நடித்து வெளிவந்த படங்களும், கருத்துமிக்கப் பாடல்களும், பட்டிதொட்டி எங்கும் அவர் புகழ் பரப்பும் ஏணியாகி, அவரைத் தமிழக மக்களின் மத்தியில் ஓர் அரிய மேதையாக,மங்காத புகழ் தாங்கி நிற்கும் ‘மக்கள் திலகமாக’ மாற்றக் காரணமாயிருந்தது.. அவரை ‘ரத்தத்தின் ரத்தமாக’ அவர் நடித்த நடிப்பு வளர்த்ததா, அவரது சமூக சிந்தனை வளர்த்ததா, மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பு வளர்த்ததா என்றெல்லாம் ஆராய இயலாத குறுகிய காலக்கட்டம், அவர் பெயரை எம்.ஜி.ஆர் என்று சொல்லும் போதே ஒரு மிகப்பெரிய கடலுக்கு முன்னால் கம்பீரமாக எழுந்து நிற்கும் கலங்கரை விளக்கம் போன்றதொரு பாதுகாப்பு அவரிடத்தில் நமக்கு ஏற்பட்டதில் எந்த வியப்பும் இல்லை எனலாம். அத்தனை இறைவனும் அவர் பக்கம் நின்று ஒன்றாக ஆசீர்வதித்திருக்க வேண்டும். ஒரு சாமானிய மனிதனால் அசாதாரண உயரத்தில் ஒவ்வொரு இதயத்திலும் கோலோட்சி செய்தவர் நமது எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டும் தான் என்றாலும் அது மிகையில்லை.
    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறி பரந்த மனப்பான்மையை நெஞ்சில் விதைத்தவர் திருமூலர். அந்த உயர்ந்த கருத்தை பட்டி தொட்டி எங்கும் பரப்பி மனித நேயத்தை வளர்த்தவர் நம் புரட்சித்தலைவர். அவருக்காகவே கவிஞர்கள் இதயத்தில் சுரக்கும் அமிர்த சஞ்சீவியாக கவிதை வரிகள் பொங்கி எழும். அதை எம்.ஜி.ஆர். பாடும்போது, ரசிகர்களின் நெஞ்சம் பெருமையில் பூரித்துப் போகும். சாமான்ய மக்களையும் அவரது திரையிசைப் பாடல்களால் வாழ்வியல் முறைகளை எளிமையாகக் கற்றுக் கொள்ள வைக்கும். எத்தனையோ பேர்களின் உந்து சக்தி அவரது பாடல்களாகவே இருந்திருக்கிறது. தன்னம்பிக்கையின் அஸ்திவாரத்தை அதன் மூலமாகவே மக்களிடம் எழுப்பி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
    எந்த உயரமும் ஒரே நாளில் ஏற்பட்டு விட முடியாது என்பது நியதி. இருப்பினும், அவரது அரசியல் உயரம் ஆரம்பித்த போதே பிரம்மாண்டமாக வளர்ந்து உயர்ந்த நிலையில் தான் உருவானது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இருந்தாலும், ஒரு சராசரி மனிதன் தனது சொந்த வாழ்வில் படும் அத்தனை அவஸ்தைகளையும் சந்தித்தவர் தான் எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கித் தவித்தவர் தான். இதிலிருந்தெல்லாம் அவர் வெளிவர அவருக்குள் வெகுண்டு வெளிவந்த தைரியமும், தீர்க்கமான அறிவும், பகட்டே அறியாத தூய அன்பும் நல்ல மனமும் மட்டும் தான் துணையாக இருந்தது. அங்கிருந்து நாடே போற்ற அந்த மனிதர் மாமனிதர் ஆனார். வயது வித்தியாசமில்லாமல் சகலமானவர்களும் போற்றும் உயர்ந்த பொக்கிஷமாக கருதப்பட்டார். அவரைச் சுற்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாப்பு வளையமாக வலம் வந்தார்கள். ஒரு நாட்டின் அத்தனை இதயங்களுக்கும் ஒரே ‘ஏகாந்தம்’ அவராகவே திகழ்ந்தார், அவரது புகழ் உயர்ந்தாலும், அவர் வந்த பாதையை மறக்காமல் , ஏழை எளிய மக்களுக்கு அவரது உதவும் கரங்களை நீட்டிக் கொண்டே இருந்தார். அவருக்கு வாழ்க்கை தந்த திரை உலகத்தையும், அவரால் மக்களுக்கு வாழ்க்கை தர முடிந்த அரசியல் உலகத்தையும் தனது இரண்டு கண்களாகவே போற்றியவர் தனது அரசியல் சின்னத்திற்கு ‘இரட்டை இலையை ‘ அடையாளமாக்கி அதையே என்றென்றும் அரசியல் செல்வத்தின் முத்திரையாகப் பதித்தவர்..
    பெரும்புகழ்:
    பள்ளிக் கூட கல்வி என்பது அவரது வாழ்வில் எட்டாத கனியாகி இருந்தாலும், தமிழகக் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணர்த்தி அவர்களது வளர்ச்சிக்கு உதவும் வண்ணம் பள்ளிகளில் ‘மதிய உணவு திட்டத்தை ‘ ஏற்படுத்தி அதன் மூலம் வருங்கால சந்ததியினரின் அறிவுக்கும் உணவு ஊட்டி அழகு பார்த்தார்.. இது ஒரு சமுதாயப் புரட்சியாகவே மக்களிடையில் பெருமையாகப் பேசப்பட்டது. நல்லதொரு தலைவன் நம் நாட்டைக் காக்கிறான் என்னும் நம்பிக்கையில் மக்கள் கவலைகளற்று இருந்த நேரம். மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் வார்த்தைகளும் எளிமையானவை. வாழ்க்கையும் எளிமையானவை தான். காலம் அவருக்கான செயல்களை மிகவும் சிறப்பாகவே செய்தது. அதே போல்,
    தமிழக மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அளவை வேறு எதனாலும் அளவிட்டுக் குறித்து விட முடியாததாகும். அவரையே தன்னுயிராக பாவித்து வாழ்ந்தவர்கள், அவருக்கு ஒன்றென்றால் தனது உயிரையும் துச்சமாக எண்ணி உயிர் கொடுத்து உயிர் காக்கக் கடமை பட்டவர்களாகவே பெரும்பாலான அவரது ரசிகர்கள் இருந்தார்கள் என்பது கண்கூடு. அப்படித்தான் ஒருமுறை ‘எம்.ஜி.ஆர் அவர்களின் திடீர் மரணச் செய்தி ‘ கொண்ட பொய்யான தகவல் காற்றுவாக்கில் பரவத் தொடங்கியதும், மக்களின் வேதனை கரை மீறியது. அந்த மாலை வேளையில் ஊரே ஸ்தம்பித்து ஆக்ரோஷித்தது. அந்தச் செய்தியை ஜீரணிக்க இயலாத பல ரசிகர்கள் தங்களையே எமனுக்குத் தாரை வார்த்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டின் அந்தக் கொந்தளிப்பை அடக்க, அந்தச் செய்தி பொய்யான வதந்தி என்ற செய்தியால் மட்டுமே முடிந்தது. அவர் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த ரசிகர்களின் நெஞ்சங்களின் வலிமையை அனைவரும் உணர்ந்து கொள்ள அந்த ஒரு நிகழ்வு போதுமாயிருந்தது.
    மனிதன் என்று பிறந்தானோ மரணமும் அவனோடு சேர்ந்தே பிறந்து விடும் என்னும் உண்மையைப் பொய்யாக்கி எம்.ஜி.ஆர் அவர்களை சிரஞ்சீவியாக வாழவைக்க வழி தேடியது அவரது ரசிக மனங்கள். அதன் வெளிப்பாடும் தெரியப் படுத்தும் விதமாக அந்த நாளும் வந்தது.
    அழிவில்லாத மக்கள் செல்வாக்கு:
    அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரம் தான் அது. ஒரு நாட்டையே உலுக்கி எடுத்த நாட்கள் அவை. கூட்டுப் பிரார்த்தனை இல்லை. நாட்டுப் பிரார்த்தை அது. எங்கள் எம்.ஜி.ஆர். மீண்டும் நலம் பெற வேண்டும் என்ற ஒரே பிரார்த்தனை. தொடர்ந்த பிரார்த்தனையாக அவர் நடித்த படப்பாடலே எங்கும் ஒலித்து பிரபஞ்ச சக்தியை கெஞ்சிக் கொண்டிருந்தது.
    இறைவா உன் மாளிகையில்
    எத்தனையோ மணி விளக்கு
    தலைவா உன் காலடியில்
    என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு…!
    இதன் அடுத்த வரி நம் அனைத்து இதயத்துள்ளும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பிரார்த்தனை வரிகள் தான்..நம்பிக்கையோடு பல்லாயிரக் கணக்கான இதயங்களின், ஒரே ஒரு மனிதனின் இதயத்துடிப்பின் தொடர்ச்சிக்காக இசையால் கையேந்திக் கதறிய நாட்கள் அவை. இந்த நாட்டுப் பிரார்த்தனை எந்தக் காலக்கட்டத்திலும் நடந்திராத ஒரு உலகளாவிய அதிசயம் தான். அதன் முன்பும், அதன் பின்பும் யாருக்காகவும் நடந்திருப்பதாக சரித்திர வரலாறு கூட இல்லை எனலாம்.. ஒரு உயிரின் மீது லட்சோப லட்ச மக்களின் ஆளுமையும் அன்பும் கரை புரள அதைத் தாங்கிய புரட்சித் தலைவர் எனும் அந்தப் பொன்மனச் செம்மலை மட்டுமே சேரும். பிரபஞ்சம் விடை சொன்னது. அவரை மீட்டுக் கொடுத்தது. மக்களின் மனத்துள் பால் வார்த்தது. இந்த நாடே அவர் ஒருவருக்காகவே உருவானதோ என்று எண்ணும் அளவுக்கு அவரது செல்வாக்கும் புகழும் ஓங்கி உலகளந்தது .
    ஒரு தனி மனிதனின் புகழ் என்பது காலப்போக்கில் மாறும் இயல்புடையது. அனால் அதையும் முறியடித்தது அவர் வாழ்ந்த வரலாறு காணாத ஒரு தனி மனித சகாப்தம். இல்லையில்லை, அந்தக் கீர்த்தியை சத்திய உலகின் பிரதிநிதி என்றே சொல்லவேண்டும். எம்.ஜி.ஆர் அவர்களை எத்தனையோ புகழாரங்கள் சரணடைந்திருக்கலாம். அத்தனைக்கும் தலை வணங்கிய அவரது தலை செருக்கில் நிமிராது தாழ்ந்திருந்தமையால் தான் தரணியில் அவருக்கென்ற தனியிடம் நிரந்தரமானது. கோடியில் ஒரு நட்சத்திரமாக தமிழகத்தில் ஒளிவிட்டு மங்காத சரித்திரதை உருவாக்கி என்றென்றும் ‘சிரஞ்சீவி’ யாகவே இன்றும் மனத்தில் நிறைந்து நிற்பவர் நம் மக்கள் திலகம் மட்டும் தான். எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் இதயங்கள் தான் அவர் வாழும் உறைவிடம்.
    ��
    ஜெயஸ்ரீ ஷங்கர்
    எழுத்தாளர்............

  9. #1168
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி நடிகரை 'டோபா தலையன்' என்றும் மேலும் அச்சிலேற்ற முடியாத கொடும் வார்த்தைகளால் அபிஷேகம் செய்யும் ஐயனின் கைபுள்ளைங்களுக்கு நாம் கொடுக்கும் வசூல் உண்மை என்ற கசப்பு மருந்து அவர்கள் தாயிடம் குடித்த பாலை கக்கியதோடு நில்லாமல் புரட்சி தலைவர் மீது ஆலகால விஷத்தையும் கக்க ஆரம்பித்து விட்டனர். தோல்வியை மறைக்க இப்படி தரம் இறங்கி அழ ஆரம்பித்து விட்டார்கள். நாமும் மாற்று அணி நாயகனை பீப்பா வயிறன், பாப்பா லோலன், குடிகாரன், தொப்பையன், சாப்பாட்டு ராமன் என்றெல்லாம் விளிக்காமல் அவரை "மிகை நடிகன்" என்றே கண்ணியத்துடன் பதிவிடுவது நமது உயர்ந்த பண்பையே அது காண்பிக்கிறது.

    புரட்சி நடிகர் செயற்கை சிகையலங்காரத்தில் தனி கவனம் செலுத்துவார். ஒவ்வொரு கேரக்டருக்கும் தகுந்த மாதிரி சிகை அமைப்பை மாற்றிக் கொள்வார். ஆனால் உண்மை எது? போலி எது? என்று கண்டுபிடிக்க முடியாமல் மிகவும் கச்சிதமாக அவருக்கு பொருந்தி போகும். அதை வைத்து மாற்று அணியின் கைபிள்ளைங்க நம் தலைவரை தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார்கள். சிவாஜிக்கு டோபா மிகவும் அசிங்கமாக இருப்பதால் பொறாமையால் கைபிள்ளைக கண்டபடி கதற ஆரம்பித்திருப்பார்கள் போல!

    அவர்களின் ஐயன் செயற்கை சிகை அணியாதவர் என்ற எண்ணமா?
    அவர் செயற்கை சிகை மட்டுமல்லாமல் நடிகைகளுடன் நெருங்கி நடிப்பதற்கு அவருடைய தொப்பை பகையாக இருப்பதால்
    10 முழம் தார்ப்பாவை இடுப்பில் இறுக்கி, ஒரு அடிக்கும் அதிகமான தொப்பையை பாதியாக குறைத்து
    நெருங்கி நடிக்கும் போது மூச்சு திணறி தவித்ததை நாம் பார்த்தோம்.

    பேசாமல், அண்டா தொப்பையோடு வீட்டிலே இருப்பதை விட்டு விட்டு நடிக்கிறேன் பேர்வழி என்று நம்மையும், நடிகையையும் தொல்லை செய்வதுடன் மூச்சை இறுக்கி பிடித்து நடித்ததில் நுரையீரல் சுருங்கி விரியாமல் போக மூச்சுத் திணறலுடன் மருத்துவரிடம் போனது கைபிள்ளைகளுக்கு ஞாபகம் இல்லையா?. வயதான கேரக்டரில் நடிக்கும் போது தொப்பையுடனே நடிப்பார்.

    கொஞ்சம் இளநாயகிகள் கூட நடிக்கும்போதுதான் பெரும் தார்ப்பா தேவைப்பட்டது. கழுத்துக்கு மேலே தலை இருக்கிறவனெல்லாம் தலைவனாக முடியாது என்ற "அடிமைப்பெண்" வசனத்தை எண்ணி கழுத்தை தேடினால் கழுத்தையே காணோமே. பீப்பா வயிறு கழுத்தே இல்லாமல் தலையில் ஜாயின்ட் ஆகிடிச்சி. இந்த கொடுந்தோற்றத்துடன் திரிந்த "கல்தூண்" ஐயனை வைத்து கொண்டு தங்கத்தலைவரை தரம் தாழ்த்தி பழிக்கலாமா? ஐயனின். கைபிள்ளைகளே.

    தலையிலோ பொருந்தா சிகை ! தோற்றமோ பெருந்தோகை !
    வயிற்றிலோ பெரிய பீப்பா! அதை மறைக்க ஒரு தார்ப்பா!. ஜோடிக்கு இரண்டு ஸ்ரீூ பாப்பா! அதிலே ஒன்னு உன் ஐயனின் கீப்பா! ரொம்ப சீப்பா இருக்கே அய்யப்பா. அட போப்பா! இதெல்லாம் ரொம்ப தப்பப்பா. எங்களுக்கும் இதுபோல் கவிதைகள் வடிக்க தெரியும். ஆனாலும் மனம் ஒவ்வாத(விரும்பாத) காரணத்தால் நாங்கள் தரக்குறைவாக எழுதுவது கிடையாது.

    நன்றியுடன் மீண்டும் சந்திப்போம்..........ksr.........

  10. #1169
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வணக்கம் ...

    சிவாஜியின் திரை உலக சரித்திர சாதனையை யாரும் முறியடிக்கமுடியாது..

    இந்த உண்மை தெரியாமல் சிவாஜியின் மாபெரும்
    World record ஐ இன்று வரை எந்த ஒரு நடிகராலும் முறியடிக்க முடியாது..

    இந்த உண்மைகளை இனி எந்த காலத்திலும் யாராலும் மறைத்து எழுத முடியாது....

    எனக்கு தெரிந்து இந்த உலகம் அழியும் வரை அழிக்க முடியாத சாதனையை படைத்த சிவாஜியை
    எப்படி மறக்க முடியும்..

    அது என்ன அப்படி பட்ட உலக சாதனை..
    என்று அனைவரும்
    யோசிப்பது தெரிகிறது..

    எங்கள் வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டையில்...
    பாண்டியன் திரையரங்கில்..
    வசந்தத்தில் ஓர் நாள்
    என்ற படம்
    காலை காட்சி
    மதிய காட்சி
    மாலை காட்சி
    என மூன்று
    காட்சிகளிலுமே
    மொத்தம்
    நாற்பத்தி மூன்று
    டிக்கெட்டுகள் மற்றுமே
    விற்று தீர்ந்து
    இரவு காட்சி ஓட்டினால்
    கரண்ட் செலவுக்கு கூட காசு வராது என
    அத்தோடு தியேட்டரை விட்டு படத்தை தூக்கி படப்பெட்டியை தரித்திரம்
    தொலைந்தது என கை ரிக்சாவில் ஏற்றி அனுப்பபட்டது..
    அந்த உலக சாதனை இது வரை முறியடிக்கப்படவில்லை.......... Sivakumar...

  11. #1170
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் பக்தர்கள் - 1970's
    சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அங்கே ஈகா திரையரங்கு அருகில் "இந்திய ரிசர்வ் வங்கி குடியிருப்பு" உள்ளது. அந்த காலத்தில் மாதம் ஒரு முறை திரைப்படம் உண்டு. அந்த குடியிருப்பி பகுதியில் இந்திய ரிசர்வ் வங்கி பள்ளிக்கூடம் உள்ளது அந்த பள்ளிக்கூடத்தின் மேடையில் தான் திரை அமைக்கப்படும். பொதுவாக நடிகர்கள் சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், சில நேரங்களில் ஹிந்தி படங்கள், ஆங்கில படங்கள் என்பது வழக்கம். நல்ல கூட்டம், அந்த குடியிருப்பு பக்கத்தில் இருக்கும் பொதுமக்களும் வருவது வழக்கம்.
    புரட்சித்தலைவர் நடித்த "பணம் படைத்தவன்" 'ஒரே ஒரு முறை' தான் அங்கு காண்பிக்கப்பட்டது. அன்று நாங்கள் பார்த்தது "மக்கள் சுனாமி" கூட்டம். ப்ரொஜெக்டர் இருக்கும் இடத்திற் விட்டு எங்கு பார்த்தாலும் மக்கள். சென்னையில் வாழும் அனைவரும் அங்குதான் இருந்தார்களோ என்று நாங்கள் நினைத்தறோம், அப்படிப்பட்ட கூட்டம். குடியிருப்பின் இன்னொரு பகுதியிலும் [ அங்கு ஒரு விநாயகர் கோயில் உண்டு] மக்கள் கூட்டம் - படம் பார்க்க முடியாது, வசனம், பாடல்கள் மட்டுமே கேட்கமுடியும்]
    "இனி புரட்சித்தலைவர் படத்தை போடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டார்கள்". பிறகு தொலைக்காட்சி வந்தது .......... வருடம் ஒரு முறை படம் காட்டுவது என்று ஆனது.
    இதுதான் மக்கள் சக்தி - இப்படியும் ஒரு மனிதர் "எண்ணிலடங்காத பக்தர்கள்" என்று பல நாட்களுக்கு அந்த குடியிருப்பில் தினமும் பேச்சு.
    நேரம் கிடைக்கும் பொது அந்த இடத்தை சென்று பாருங்கள், அப்போதுதான் நான் சொல்லுவதை உங்களால் உணர முடியும்........சைலேஷ்பாசு...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •