Page 90 of 90 FirstFirst ... 4080888990
Results 891 to 896 of 896

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #891
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jul 2013
    Posts
    5,151
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது.....நெல்லை முத்தையா

    பாவேந்தர் நூல்களை வெளியிடுவதற்காக 1944 ல் முல்லைப் பதிப்பகம் தொடங்கப் பெற்றது. சென்னைக்கு வரும்போது அறிஞர் அண்ணா அவர்கள் பதிப்பகத்துக்கு வருவது வழக்கம். பாவேந்தர் அவர்களும் அடிக்கடி வருவார்கள்.

    பாவேந்தரும், அறிஞர் அண்ணாவும் ஒரு முறை கூட பதிப்பகத்தில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதில்லை.

    பாவேந்தரைக் காண இலக்கிய நண்பர்களும் ரசிகர்களும் வருவார்கள்.

    அண்ணா அவர்களைக் காண அரசியல் நண்பர்களும், கட்சித் தோழர்களும் அதிகமாக வருவார்கள்.

    எஸ்.வி. லிங்கம், நடிகமணி டி.வி. நாராயணசாமி, அரங்கண்ணல், ஆர்.எம்.வீ., பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், டி.எம். பார்த்தசாரதி, சொல்லின் செல்வர் சம்பத், திருமதி சத்தியவாணிமுத்து, முன்னாள் மேயர் முனுசாமி முதலானோர் அண்ணா அவர்களைக் காண பதிப்பகத்துக்கு வருவார்கள்.

    முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி, என் உள்ளத்தில் பசுமையாகத் திகழ்கிறது.

    1945-ல் ஒரு நாள் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் பதிப்பகத்துக்கு வந்தார்கள். பார்த்ததும் நான் தெரிந்து கொண்டேன். அதற்கு முன் நான் பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை.

    சிவந்த மேனி, சுருண்ட முடி, வெள்ளைக் கதர் ஜிப்பா, கை சுருட்டி விடப்பட்டிருந்தது. கவர்ச்சி மிகுந்த தோற்றம்.

    நான் வணக்கம் தெரிவித்தேன்.

    பதில் வணக்கம் கூறி, புன்முறுவலுடன், ‘அண்ணா வந்திருக்கிறார்களா?’ என்று கேட்டார்.

    ‘வருவார்கள். உட்காருங்கள்.’ என்று கூறி உபசரித்தேன்.

    சிறிது நேரம் இருந்துவிட்டு, எழுந்து புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பீரோவைப் பார்த்து, ‘அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, பாரதிதாசன் கவிதைகள், குடும்ப விளக்கு, காதல் நினைவுகள்’ ஆகிய நூல்களை எடுத்து, ‘இதற்கு பில் போடுங்கள்’ என்று கூறி நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து என்னிடம் எடுத்து என்னிடம் நீட்டினார் புரட்சி நடிகர்.

    (அப்போது நூறு ரூபாய் நோட்டைக் காண்பதே அரிது.) நான் பிரமித்து விட்டேன்.

    ‘ரூபாய் வேண்டாம் புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினேன்.

    ‘இது வியாபாரம். மூலதனம் போட்டு அச்சிட்டிருக்கிறீர்கள். வருகின்றவர்களுக் கெல்லாம் பணம் வாங்காமல் புத்தகங்களைக் கொடுத்தால் தொழில் என்ன ஆகும்?’ என்று கூறி நோட்டை நீட்டியவாறு இருந்தார்.

    அவர் கூறிய சொற்களும், நடந்து கொண்ட பெருந்தன்மையும் என் உள்ளத்தை நெகிழச் செய்துவிட்டது. அதன் பின் என்னால் மறுக்க இயலவில்லை. பணத்தை அந்தச் சிவந்த கரங்களிலிருந்து பெற்றுக் கொண்டேன்.

    சிறிது நேரத்தில் அண்ணா அவர்கள் வந்து விட்டார்கள். புரட்சி நடிகரும் அண்ணாவும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டார்கள்.

    அப்போது அவர் புன்னகை தவழ எனக்கு வணக்கம் தெரிவித்து விட்டுப் புறப்பட்ட காட்சியும், அவரது பெருந்தகைமையையும் என் உள்ளத்தில் பசுமையாய் பதிந்து விட்டது.

    இப்பொழும் அதை நினைத்துப் பார்க்கிறேன். ‘ இந்தப் புத்தகங்களை எடுத்துக் கொள்கிறேன்’ என்று கூறி (பணம் கொடுக்காமல்) எடுத்துச் சென்றவர்களைப் பார்த்திருக்கிறேன். சொல்லாமலேயே எடுத்துக் கொண்டவர்களையும் கண்டிருக்கிறேன்.

    ஆனால் வற்புறுத்தி பணத்தைக் கொடுத்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட புரட்சி நடிகரை நினைக்கும் போது எனக்கு பிரமிப்பாக இருந்தது.
    - நூல் பதிப்பாசிரியர் திரு. முல்லை முத்தையா. (1982-ல்)
    ...mgn.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #892
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jul 2013
    Posts
    5,151
    Post Thanks / Like
    பிறக்கும்போது செல்வந்தராகப் பிறந்து வளர்ந்து விபரம் அறியும் முன் எல்லாத்தையும் இழந்து வறுமையில் வாடி பட்டினி கிடந்து வயிற்று பிழைப்புக்காக கலைத்துறையில் சிறுவயதிலேயே நுழைந்து ஒரளவு ஒரளவு தான் முன்னேறியபிறகு எப்படி கலைத்துறையில் நுழைந்தாரோ தான் கலைத்துறையிலிருந்து அரசாள செல்லும் வரை பாதை மாறாமல் பயணம் தடுமாறாமல் இந்தக்காட்சியில் நான் நடிக்க மாட்டேன்... இந்த வசனத்தை பேசமாட்டேன் ... இந்தப் பாடல் காட்சி நான் நடிக்கும் படத்தில் வேண்டாம் என்று சொன்ன உலகத்தில் ஒரே ஒருவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே... ஒரு பாடகர் ஒரு படத்தில் ஒரு நடிகருக்காக தேசபக்தி பாடலைப் பாடுவார். அதே பாடகர் அதே. நடிகருக்காக நாளைமுதல் குடிக்கமாட்டேன், இன்னிக்கே குடிச்சுக்கிறேன் னு பாடுவார்... வாயசைத்த நடிகரும் அப்படியே இவரைப்போல் முடியாது ! என்று சொல்ல அவர்களாலும் முடியும்... ஆனாலும், சொல்ல மாட்டார்கள். பணம்,... அப்புறம் எதுக்கு புரட்சித்தலைவரின் புகழ் போல நாமும் பெறமுடியலயேனு பொறாமை படணும். அரசு மரியாதை அரசாங்க கெளரவம் எல்லாமே என்றைக்கும் பெறத் தகுதியான ஒரேமனிதர் எம் ஜி.ஆர். அவர்கள் மட்டுமே ... என்பது அச்சு அசலான உண்மை நடப்பு... நன்றி மதுரை sk.,எம்ஜிஆர் மன்றம்.........

  4. #893
    Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
    Join Date
    Feb 2013
    Posts
    27,390
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*25/09/20 அன்று அளித்த*தகவல்கள்*
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    பொன்மனச்செம்மலின் அந்த ரசிகர்கள் கூட்டம், அவரது அன்புக்குரியவர்கள் ஆசி பெற்றவர்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருக்கிறார்கள் .அவரை பலரும் சொல்கிறார்கள் பாமர மக்களின் கடவுள் என்று .ஆனால் உண்மை என்னவென்றால் புத்தக அறிவுக்களஞ்சியம் என்பது 36( வால்யூம்கள்0 பாகங்கள்* கொண்டது .,அந்த காலத்தில் தோராயமாக ரூ.15,000/- விலையுள்ள புத்தகங்கள் .வாங்கி வைத்திருந்தார் .உலகத்திலேயே 3 செட்டுகள் தான் இருந்தது .ஒரு செட்டில் 1099 தொகுப்புகள் கொண்டதாக இருக்கும் .அதை கவர்னர் செட் என்று சொல்வார்கள்.1960ல் அந்த கவர்னர் செட்டின்* விலை மதிப்பு ரூ.50,000/-.ஆனால் அந்த காலத்தில் இந்தியாவில் விலை போகாது என்ற எண்ணத்தில் கலெக்டர் செட் என்று கொண்டு வந்தார்கள் .அதுகூட இந்தியாவிற்கு வெறும் மூன்று செட்டுகள்தான் தருவிக்கப்பட்டன.விலையும் குறைக்கப்பட்டது . .அதில் முதல் செட்டை* ரூ.25,000/- கொடுத்து வாங்கிய முதல் மனிதர் எம்.ஜி.ஆர். அவர்கள் .இன்னும் சொல்ல போனால் முன்னாள்* பிரதமர் இந்திரா ஆர்டர் செய்த செட் கிடைக்காமல் போனது .காரணம் மீதம் இருந்த 2 செட்டுகளை வேறு சில நிறுவனங்கள் வாங்கிவிட்டன .அதன் பின்னரும் சிலர் ஆர்டர் செய்து சில செட்டுகள் வாங்கியதாக சொல்லப்படுகிறது .


    இன்றைக்கு கணக்கு பார்த்தல் எம்.ஜி.ஆர்.அவர்கள் தன்னுடைய நூலகத்தில்* பல லட்சக்கணக்கான விலை மதிப்புள்ள நூல்களை இருப்பு வைத்திருந்தார் .இன்றைக்கும்தேடினாலும்* கிடைக்காத பல அரிய வகை நூல்களான சைக்காலஜி ,முதன் முதலில் கடவுள் தோன்றியது* எப்படி போன்றவற்றை வைத்திருந்தார் .மேரி அம்மையார் பற்றி ஒரு படம் 1960ல்* எடுக்கப்படுகிறது அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் 16 வயதுள்ள* ஒரு இளம்பெண் கடைசியில் .அந்த இளம்பெண் முதியவராகி ,யேசுநாதருக்கு எல்லாம்* பின்னால் வரும் காட்சி வரை நடிக்க வைத்திருக்கிறார்கள் .எப்படி அந்த 16 வயதுள்ள இளம்பெண்ணை பல்வேறு விதமான காட்சிகளில் ,பலவித வேடங்களில் காட்டினார்கள் என்றால் அந்த காலத்திலேயே அதற்கான ஒப்பனைதான் காரணம் ஒப்பனை கலையை பற்றி ரூ.1,220/-க்கு ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது .அந்த புத்தகத்தை முதலில் விலை கொடுத்து வாங்கியவர் எம்.ஜி.ஆர்.தான் .இப்படி எம்.ஜி.ஆர்.அவர்கள் அந்த காலத்திலேயே லட்சக்கணக்கான செலவில் நூல்கள் வாங்கியுள்ளார் என்றால் அதன் இன்றைய மதிப்பு பல கோடிகளை பெறும்* என்பதில் ஐயமில்லை .


    கட்சி தொடங்கிய காலத்திலேயே இளைஞர்கள் பட்டாளத்தை ஈர்த்தவர்* எம்.ஜி.ஆர்.தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், நகரங்களில் உள்ள இளைஞர்களுக்கு படிப்புக்கான செலவை ஏற்றவர், மாதாமாதம் பணம் அனுப்பி உதவி பலரை படிக்க வைத்தவர் . இன்றைக்கும் உதாரணமாக தி.மு.க. தலைவர்களில் ஒருவரான துரை முருகன்* என்பவரை சொல்லலாம் .* எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து தூக்கி எறியப்பட்டார் என்ற* செய்தி அறிந்ததும் உடுமலையில் இளைஞர் பட்டாளத்தை கூட்டி, ஊர்வலம் நடத்தி எம்.ஜி.ஆரின் உண்மை தொண்டராக தன்னை அடையாளம் காண்பித்தார் திரு.லியாகத் அலிகான் .இவரை இனம் கண்டு, அரசியலுக்கு கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர். அந்த உடுமலையில் உதிர்த்த இளைஞர் ,மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருடனான*தன் தொடர்புகளை, அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் .**


    ஒரு காலத்தில் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க வருபவர் நல்ல சிவப்பு நிறம் கொண்டவராக இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது .அது காலப்போக்கில் மாறிவிட்டது .எம்.ஜி.ஆர்.அரசியலில் தீவிரமான கால கட்டம் ,சினிமாவை விட்டு ஒதுங்கக்கூடிய நேரத்தில் ,ரஜினிகாந்த் போன்றவர்களின் வருகையால் சினிமா உலகில் ட்ரெண்ட் செட் மாறிவிட்டது என்று சொல்வார்கள் .இப்போது வரும் கதாநாயகர்கள் பெரும்பாலும் தாடி, மீசையுடன் இருப்பார்கள்*ஷேவிங் செய்யமாட்டார்கள்* திராவிட சிந்தனையில் அதன் கொள்கையை பற்றி பேசுவதெல்லாம் இப்போது கேலியாகிவிட்டது .இந்த நிலையில் ரஜினிகாந்தின் வருகை எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கியை ஈர்ப்பதாக* இருக்குமா ?

    கா. லியாகத் அலிகான் பேட்டி : எம்.ஜி.ஆரின் வாக்குவங்கி என்பது நிரந்தர சொத்து .அது அ.தி.மு.க.விற்குத்தான் சொந்தம் என்பது போல எம்.ஜி.ஆர்.அடையாளம் காட்டிவிட்டு சென்றார் . அவருக்கு பின்னால் வந்த ஜெயலலிதா அதை கட்டி காத்தார் . இப்போது இ .பி.எஸ்./ஓ .பி.எஸ்.ஆகிய இருவர் கைவசம் உள்ளது .வரும் தேர்தலில்தான் இந்த வாக்கு வங்கியை எந்த* அளவிற்கு இவர்கள் கட்டி காப்பார்கள் என்பது .தெரிய வரும் .இருந்தாலும் இந்த வாக்கு வங்கியை அவ்வளவு சுலபமாக யாரும் களவாட முடியாது .காரணம்* கருணாநிதியும் அவரது தி.மு.க.வும் தீய சக்திகள் என்பதை மக்கள்,தொண்டர்கள் ,ரசிகர்கள் மத்தியில் ஆழமாக எம்.ஜி.ஆர். விதைத்துள்ளார் .எம்.ஜி.ஆர். பெயரை ஒருவர் உச்சரிப்பதால் எம்.ஜி.ஆர்.வாக்குகள் எல்லாம் அவர்களுக்கு விழுந்துவிடாது .கருணாநிதி கூடஅமெரிக்காவில் இருந்து* எம்.ஜி.ஆர்.உயிரோடு திரும்பி வந்தால் அவரிடம் ஆட்சியை ஒப்படைக்கிறேன் .எனக்கு வாக்களியுங்கள் என்றார் . ஸ்டாலின் கூட அவ்வப்போது நான் எம்.ஜி.ஆர். மடியில் தவழ்ந்தவன் .எம்.ஜி.ஆர். படங்களை முண்டியடித்து பார்த்த ரசிகன் என்று சொல்லி கொள்கிறார் .நடிகர் விஜயகாந்த் நான் கருப்பு எம்.ஜி.ஆர். என்று கூறுகிறார் .ரஜினிகாந்த் கூட எம்.ஜி.ஆர். ஆட்சி பற்றி பேசும்போது மகிழ்ச்சியாகத்தான் உள்ளது .* இவரால் எம்.ஜி.ஆர்.அவர்களின் கொள்கைகளை கடைபிடிக்க முடியுமா என்பது கேள்விக்குறி .அவருடைய செல்வாக்கை நிரூபிக்கும் அளவிற்கு இன்னும் அவர் தயாராகவில்லை .இரட்டை இலை சின்னம் இருக்கும் வரையில் எம்.ஜி.ஆர். வாக்கு வங்கியை வேறு யாரும் எளிதில் பறிக்க முடியாது .இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் கருணாநிதி ,ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லை .வெற்றிடம் உருவாகி உள்ளது .தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்து வாக்குகளை பிரிக்கிறார் . இ .பி.எஸ்./ஓ.பி.எஸ்.அணியினர் இடையே பிளவு ஏற்பட்டு ஒன்றிணைந்தனர் .


    கடந்த வருடம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 38 தொகுதிகளை பெற்றுள்ளது .இதனால் அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க.வெல்வதற்கு சாத்தியம் உண்டா ? அதற்கு காரணம் இந்திய அளவில் பா.ஜ .க.விற்கு சாதகமான சூழ்நிலை இருந்தது ,தமிழகத்தை தவிர ..அந்தநேரத்தில் ஜி.எஸ்.டி. அறிமுகம் 500/1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது போன்றவை பா.ஜ .க.விற்கு பாதகமாக இருந்தது தமிழகத்தில் .இதுவே தி.மு.க.விற்கு சாதகமாக இருந்தது .ஆனால் அதற்கு பின்னர் நடைபெற்ற இடை தேர்தலில் தி.மு.க.விற்கு சொற்ப இடங்களும் அ.தி.மு.க.விற்கு 13 இடங்களும் கிடைத்தன*இதனால் இ.பி.எஸ்./ஓ .பி.எஸ்.கூட்டணிக்கு செல்வாக்கு கூடியதாகவும், இருப்பதாகவும் நீங்கள் நம்பவில்லை என்றாலும் நாங்கள் சொல்லுகிறோம் அவர்களுக்கும் தனிப்பட்ட செல்வாக்கு ஒன்று இருக்கிறது என்று .பொதுவாகவே ஆளும் கட்சி ஆட்சியில் இருக்கும்போது குறைகள் சுட்டிக்காட்டுவது* எளிது . அதே சமயத்தில் ,எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போன்ற ஆளுமைகளுக்கு* வாக்களித்த தொண்டர்கள் வேறு கட்சிக்கோ ,அணிக்கோ வாக்களிக்க விரும்ப மாட்டார்கள் . மற்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போதும் இதே நிலைதான் .குறைகள் எல்லோருக்கும் இருக்கும் .கருணாநிதியும் ,ஜெயலலிதாவும் இருக்கும்போது இருவராலும் தொடர்ந்து வெற்றி பெற முடியவில்லை பல்வேறு அரசியல் காரணங்களால்.இருவரும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தார்கள் .ஆனால் தற்போது இருமுறை தொடர்ந்து ஜெயலலிதா தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது .எம்.ஜி.ஆர். ஒருவர்தான் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்தார் . இந்த முறை மூன்றாவது முறையாக அ.தி.மு.க.வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது .ஆனால் அதை அ.தி.மு.க. தலைவர்கள் ஜெயலலிதா இல்லாத நிலையில்* மக்களிடம் அணுகி வாக்குகள் பெறும் சாமர்த்தியத்தில் தான் உள்ளது .இந்த அரசியல் சூழலில் தி.மு.க.வினர் வீணாக ஏன் எம்.ஜி.ஆர்.பெருமைகளை சிதைக்கும் வகையில் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் என்பது புரியாத புதிர் .காங்கிரசின் தூண்டுதல் பேரில் கணக்கு கேட்டு*குழப்பம் விளைவித்து ,கட்சி* ஆரம்பித்தார் . கருணாநிதியை சிறையில் தள்ளினார் என்றெல்லாம் குற்றம் சுமத்துகின்றனர் .


    எம்.ஜி.ஆர். பெரியார் சிலை அமைப்பதாக 1976 இறுதியில் பேசினார் .ஆனால் உடனே நிறுவ முடியவில்லை .1977ல் ஜெமினி, (அண்ணா) மேம்பாலம் கீழே* பீடம் மட்டும் அமைக்க செய்தார் .சிலை அமைக்க கொஞ்சம் காலதாமதம் ஆயிற்று .அப்போது சில போராட்டங்களை அறிவித்து ,நடத்துவதில் மும்முரமாக இருந்த கருணாநிதியை சிறைக்கு அனுப்பவேண்டும் என்று சில*உள்ளூர் தலைவர்கள் அ .தி.மு.க.வில் பேசினர்* ஆனால் எம்.ஜி.ஆர். எப்போதும்*எந்த தலைவரையும் தரக்குறைவாக பேசுவதோ ,உச்சகட்ட நடவடிக்கை எடுப்பதோ போன்றவற்றில் ஈடுபடமாட்டார் .அப்போது கருணாநிதி பீடம் இங்கே, சிலை எங்கே,கைகள் இங்கே, விலங்குகள் எங்கே* என்று போராட்டம் செய்தார் .*அப்போது எம்.ஜி.ஆர். தகுந்த காரணமின்றி யாரையும் கைது செய்ய முடியாது நான் சர்வாதிகாரி அல்ல என்றார் .பாரத பிரதமர் இந்திரா காந்தி ஒருமுறை சென்னை வந்தபோது தி .மு.க. தொண்டர்கள், குண்டர்கள் காட்டினால் கருப்பு கொடி திருப்பினால் அதுவே தடி என்று தாக்க தொடங்கினார்கள் .நல்லவேளையாக திரு.நெடுமாறன் அந்த நேரத்தில் சாயோஜிதமாக* செயல்பட்டு முன்னாள் பிரதமர் இந்திராவை பாதுகாத்து தலையணைகளை வைத்து காப்பாற்றினார் என்பது வரலாற்று உண்மை . அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். முன்னாள் பிரதமர் இந்திரா* உயிருக்கு உலை வைப்பதாக இருந்தால் சிறை செல்ல நேரிடும் என்று சொல்லி கருணாநிதியை* சிறைக்கு அனுப்பினார் .* ஜாமீனில் செல்லலாம் என்று அரசு சார்பில் சொன்னதற்கு கருணாநிதிக்கு சம்மதம் இல்லை . எம்.ஜி.ஆரும்* விடுவிப்பதாக இல்லை .40 நாட்கள் சிறையில் இருந்தார் .அந்த நேரத்தில் காவல்* துறை சார்பில் முரசொலி அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது .எம்.ஜி.ஆர். தனிப்பட்ட முறையில் சென்று சோதனையிடவில்லை .கருணாநிதியை சித்திரவதை செய்தார் எம்.ஜி.ஆர். என்று தி.மு.க.வினர் குற்றம் சாட்டினார்கள்* .அதில் உண்மையில்லை .நாங்களும் பதிலுக்கு சொல்வோம்**ஜெயலலிதா அவர்கள் ராஜினாமா செய்வதாக ஒரு கடிதத்தில் எழுதி வைத்திருந்ததாகவும் அதை நடராஜனிடம் கொடுத்து வைத்திருந்தார் என்று சொல்லப்பட்டது .ஆனால் அவர் மேஜையில்தான் வைத்திருந்தார் .இதை அறிந்த காவல் துறையினர் அந்த கடிதத்தை எடுக்க சொல்லி கருணாநிதியே தூண்டிவிட்டார் என்று ஜெயலலிதா*குற்றச்சாட்டு சொன்னார்கள் போலீசார் என் இல்லத்தில் அத்துமீறி நுழைந்து நடராஜன் வைத்திருந்த*கடிதத்தை கைப்பற்றி* வெளியிட்டார்கள்*என்றார் .இதுவும் ஒருவகை அராஜகம்தானே .கடந்த கால குப்பையை கிளறினால் நடக்க போவது ஒன்றுமில்லை .எம்.ஜி.ஆர் மீது குற்றம் சொல்லும்போது என்னை போன்ற எம்.ஜி.ஆர். ரசிகர்ளுக்கும் ,ஜெயலலிதா மீது குற்றம் சொன்னால் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் கோபம் வருகிறது .அதனுடைய விளைவுதான் நீங்கள் கேட்டதற்கு நான் அளிக்கின்ற பதில்* என்று கூறினார் .


    எம்.ஜி.ஆர்.அவர்களது வாழ்க்கை பாடங்கள் படிப்பினையாக*வந்து குவிந்து கொண்டே* இருக்கிறது .நேற்று கூட திருச்சி மிளகு பாறையை சார்ந்த* திரு.அப்துல்* .மஜீத்*அவர்கள் எம்.ஜி.ஆரின் பொக்கிஷம் என்ற நூலை அனுப்பி இருக்கிறார் .* அதே போல வேதநாயகம் எம்.ஜி.ஆர்.என்கிற கவிஞரின் தொகுப்பை திரு.லியாகத் அலிகான்*கொடுத்திருக்கிறார் . இது போன்று தகவல்கள் மட்டுமல்லாமல் அவருடைய பாடங்கள், படிப்பினைகள், அவரது வழிகாட்டிகள் பலருக்கு நம்பிக்கை ஊட்டுகிற விதையாக இருக்கிறது .நம்பிக்கை ஊட்டுகிற நட்சத்திரமாக, ஒளிவிளக்காக*,கலங்கரை விளக்கமாக இருக்கிறது என்று பலரும் தொலைபேசி மூலம் சொல்லி கொண்டிருக்கிறார்கள் .**


    தொடர்ந்து அந்த மகோன்னதமான மன்னாதி மன்னனின், ராஜராஜனின், மக்கள் திலகத்தின் அந்த அன்பை, பாசத்தை, பண்பினை, நேசத்தை, கொடை தன்மையை* ஆராய்ந்து*அடுத்த அத்தியாயத்தில் பகிர்ந்து கொள்வோம் .


    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    -------------------------------------------------------------------------------------
    1. புதிய வானம் ,புதிய பூமி - அன்பே வா*

    2.எம்.ஜி.ஆர்.-லட்சுமி உரையாடல் - சங்கே முழங்கு*

    3.அறிவுக்கு வேலை கொடு - தலைவன்*

    4.திரு.கா. லியாகத் அலிகான் அவர்களின் பேட்டி*

    5.நானொரு குழந்தை,நீயொரு குழந்தை - படகோட்டி*



    *

  5. #894
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jul 2013
    Posts
    5,151
    Post Thanks / Like
    Old IS. GOLD திரைப்படங்கள் ...என்றும் மக்கள் திலகத்தின் காவியங்கள் மட்டுமே.. கடந்த பல ஆண்டுகளாக
    மக்கள் திலகத்தின் காவியங்களை வைத்து தான் பல திரையரங்குகள் வாழ்வு பெற்றது.... லட்சத்தில்....
    கீழே சிறு துளி விளம்பரங்கள்....

    திரையிட்ட விளம்பர விபரங்கள்
    ++++++++++++++++++++++++++++
    26.3.1999. படகோட்டி
    திருச்சி பேலஸ் 2 வாரம் ஒடியது.
    புதுக்கோட்டை ஈனா
    23.9.2001 ரகசியபோலிஸ் 115
    கோவை கர்னாடிக் 2 வாரம் ஒடியது.
    25.05.1990 உலகம் சுற்றும் வாலிபன்
    கோவை கவிதா 2 வாரம் ஒடியது.
    01.03.1991 ஒளி விளக்கு
    கோவை சண்முகா 14 நாள் ஒடியது.
    22.07.1996 அன்பே வா
    கோவை டிலைட் 2 வாரம்
    11.11.2004 சக்கரவர்த்தி திருமகள்
    மதுரை மீனாட்சி 13 நாள் ஒடியது
    8.9.2000 குலேபகாவலி
    மதுரை மீனாட்சி 2 வாரம் ஒடியது.
    14.5.2004 மாட்டுக்கார வேலன்
    மதுரை மீனாட்சி இணைந்த 4 வாரம்
    திரையிடப்பட்டது.
    சேலம் சபரி அடிமைப்பெண்
    1997 ல் 2 வாரம்
    சேலம் சங்கம் எங்கவீட்டுப்பிள்ளை
    04.06.2000 ...15 நாட்கள் ஒடியது..........UR...

  6. #895
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jul 2013
    Posts
    5,151
    Post Thanks / Like
    #உலகம் சுற்றிய எம்ஜியார்#

    எந்த அதிகாரப் பதவியில் இல்லாதபோதும் பல்வேறு நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்குச் சென்றுள்ளார் மக்கள் திலகம்..ந*டிக*ரான ஒருவரை அவரது மக்கள் சேவைக்காக பல்வேறு உலக நாடுகள் அழைப்பு அனுப்பி கவுரவித்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள சிறப்பு!
    #ர*ங்கூன்
    சிறு வயதில் நாடகத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆர். ரங்கூனுக்குச் சென்றுள்ளார்.

    #இலங்கை
    1965-ம் ஆண்டு இலங்கையில் தொண்டு அமைப்புகள், பத்திரிகை சங்கங்கள் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, நடிகை சரோஜா தேவி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோருடன் இலங்கை சென்ற எம்.ஜி.ஆரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்ற னர். முன்னும் பின்னும் பைலட் கார்கள் அணிவகுக்க எம்.ஜி.ஆருக்கு இலங்கை அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர்.

    யாழ்ப்பாணம் விளையாட்டு மைதானத்தில் நடந்த வரவேற்பு கூட்டத்துக்கு இலங்கை நீதிபதி தம்பையா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ‘‘எம்.ஜி.ஆர். சிறந்த கலைஞர் மட்டுமல்ல; சிறந்த கொடையாளி. என் வாழ்நாளில் இந்தப் பகுதியில் இப்படி ஒரு பெருங்கூட்டத்தை பார்த்ததில்லை. தன்னைக் காண இலங்கையிலும் பெரும் கூட்டம் கூடும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்துவிட்டார்’’ என்றார்.
    இலங்கை பிரதமர் டட்லி சேனநாயகாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த எம்.ஜி.ஆர், அவருக்கு தென்னிந்திய நடி கர் சங்கத்தின் சார்பில் தந்தத்தால் செய்யப்பட்ட நேரு சிலையையும் தன் சார்பில் தந்தத்தில் ஆன மேஜை விளக்கையும் பரிசளித்தார். சிங்கள திரைப்படக் கலைஞர்கள் சார்பில் இலங்கை விஜயா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தான் பிறந்த கண்டி நகரையும் சென்று பார்த்தார்.
    1965 அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. இலங்கை உள்நாட்டு அமைச்சர் தகநாயகா வரவேற்புரை வழங்கினார். அப்போது பலத்த மழை. அப்படியும் எம்.ஜி.ஆரின் பேச்சை லட்சக்கணக்கானோர் நனைந்தபடியே கேட்டனர். இலங்கை கலாச்சாரத் துறை அமைச்சர் காமினி ஜெயசூர்யா, எம்.ஜி.ஆருக்கு ‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

    #சிங்க*ப்பூர்
    சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த வருமாறு அந்நாட்டு அரசு எம்.ஜி.ஆருக்கு 1972-ல் அழைப்பு அனுப்பியது. அதை ஏற்று, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்டோருடன் சிங்கப்பூருக்கு எம்.ஜி.ஆர். சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தி நடிகர் சசிகபூரும் வந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சிங்கப்பூர் மேயர், எம்.ஜி.ஆருக்கு வர வேற்பு அளித்தார். எலிசபெத் ராணிக்குப் பிறகு வாகனங்கள் நிறுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது!
    ‘‘எங்கள் குழுவினரின் கலை நிகழ்ச்சி கள் மூலம் சுமார் ஒரு லட்சம் டாலர் வரை (செலவு போக) சேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன். அந்த வரவேற்பை, அந்நாட்டின் வளர்ச்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது’’ என்று 1973-ம் ஆண்டு ஜனவரி மாத ஃபிலிமாலயா இதழில் சிங்கப்பூர் பயணம் பற்றி எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.

    #மாஸ்கோ
    மாஸ்கோவில் 1973-ல் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள வருமாறு எம்.ஜி.ஆருக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது. ரஷ்யா செல்லும் முன் டெல்லி சென்ற எம்.ஜி.ஆருக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய படவிழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.
    இந்திய அரசின் சார்பில் அப்போது செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் (பின்னாளில் பிரதமராகவும் பதவி வகித்தார்) கலந்து கொண்டு பேசினார். படவிழா பிரதிநிதிகளுக்கு எம்.ஜி.ஆரை அவர் அறிமுகம் செய்து வைத்ததோடு, தமிழகத்தில் அவரது செல்வாக்கு பற்றியும் அவரது படங்களின் மகத்தான வெற்றிகள் பற்றியும் எடுத்துரைத்தார். லெனின்கிராடு நகருக்கும் எம்.ஜி.ஆர் சென்றார். ரஷ்ய வானொலி நிலை யத்தினர் அவரைப் பேட்டி கண்டு அதை ரஷ்ய மொழியில் ஒலிபரப்பினர்!

    #லண்ட*ன்
    பின்னர், மாஸ்கோவில் இருந்து லண்டனுக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.!
    லண்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., லண்டன் பி.பி.சி. வானொலிக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.

    #பாரீஸ்
    அங்கிருந்து பாரீஸ் நகருக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்..

    #கிழ*க்கு ஆப்பிரிக்கா
    பின்ன*ர் லண்ட*னிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கா சென்றுவிட்டு இந்தியா திரும்பினார்!

    #மொரீஷிய*ஸ்
    நடிகராக இருந்தபோது, ஒரு நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு!
    1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார்!

    #அமெரிக்கா
    1974-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆர். அமெரிக்கா சென்றார். அமெரிக்க அரசின் தூதர் வரவேற்று அழைத்துச் சென்றார். ஹவாய் பல்கலைக்கழகத்தில் அளித்த பேட்டியின்போது சிக்கலான கேள்வி களுக்கு எம்.ஜி.ஆர். சாதுர்யமாகவும், நேர்மையாகவும் பதிலளித்து வியப்பில் ஆழ்த்தினார்! புகழ்பெற்ற மவுன்ட் சினாரியோ கல்லூரி சார்பில் அவருக்கு வரவேற்பிதழ் அளிக்கப்பட்டது. அரிசோனா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த போது அதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்!
    ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் படமாக்கி, தயாரித்து, இயக்கி, எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. நிஜத்திலும் அவர் உலகம் சுற்றிய வாலிபன்தான்!.........ns...

  7. #896
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jul 2013
    Posts
    5,151
    Post Thanks / Like
    1972 அக் 20 தேதி வெளியான படம்தான் உதயம் புரடொக்ஷன்ஸாரின் "இதயவீணை". சென்னையில் குளோப் ஸ்ரீகிருஷ்ணா மகாலட்சுமி ராஜகுமாரி ஆகிய 4 திரையரங்குகளில் வெளிவந்து குளோபில் 105 நாட்கள் ஓடிய வெற்றிக் திரைக்காவியம்.
    படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது. ஆரம்ப காட்சியிலேயே காஷ்மீரின் கொள்ளை அழகுடன் தலைவர் தோன்றும் காட்சி மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது.

    "உலகம் சுற்றும் வாலிபனின்" வெளிநாட்டு படப்பிடிப்புக்கு பேருதவியாக இருந்த மணியனுக்காக எம்ஜிஆர் நடித்துக் கொடுத்த படம். "உலகம் சுற்றும் வாலிபனுக்கு" முந்தி வந்து வெற்றி பெற்ற திரைப்படம். எம்ஜிஆரின் இயல்புக்கு மாறான கதை. மணியன் 'ஆனந்த விகடனில்' தொடராக எழுதி வெற்றி பெற்ற "இதயவீணை" என்ற நாவலின் கதை. பொதுவாக பத்திரிகையில் வருகின்ற கதை வெற்றி பெற்றால் அதை சினிமாவாக தயாரிக்கும் போது அநேக படங்கள் தோல்வியானதை பார்த்திருக்கிறோம். ஆனால் எம்ஜிஆரிடம் அதுவும் பொய்த்து விட்டது.

    படம் வெற்றி பெற்று மணியனுக்கும் வித்வான் வே லெட்சுமணனுக்கும் ஒரு புது உத்வேகத்தை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.
    பெரியவர் தலைவருக்கு தந்தையாக நடித்திருப்பார். 'பொன்னந்தி மாலைப்பொழுது' எத்தனை முறை பார்த்தாலும் புதிதாக தோன்றும். அப்படி ஒரு நேர்த்தி. பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமையாக இருக்கும். படத்தில் தலைவரின் ஆடை வடிவமைப்பு கண்கொள்ளா காட்சி.

    'இன்று போல என்றும் வாழ்க' பாடல் சாந்தம் தவழும் தலைவரின் முகம் ஞானிகளை நினைவு படுத்தும். 'ஆனந்தம் இன்று ஆரம்பம்' பாடலில் பழைய "வேட்டைக்காரன்" ஸ்டைலில் இளமையாக வந்து கலக்கும் போது அனைவருக்கும் உற்சாகம் பீரிடுவதை பார்க்க முடியும். படத்தின் ஆரம்ப காட்சி ஷூட்டிங் அந்த பாடல் காட்சிதான் என்று நினைக்கிறேன். சிவகுமாரின் வயதுக்கு மீறிய நடிப்பை ரசிக்க முடியவில்லை. அவரெல்லாம் தலைவரை அடிக்கும் போது அவரிடம் மெச்சூரிட்டி இல்லாததை. அந்தக்காட்சி வெளிப்படுத்துகிறது.

    நீராடும் அழகெல்லாம்' அருமையான மெலடி. 'ஒரு வாலுமில்லை பாடல்'
    அன்றைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப எழுதிய பாடல் தலைவர் குழந்தையை வைத்து பாடியிருப்பார். கேமரா கோணங்கள் அந்த பாடலில் வெகு சிறப்பாக இருக்கும். 'வசந்தா உன் கையை அய்யா வசம்தா' போன்ற வசனங்கள் படத்துக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
    'தரையிலே ஓடுமே லாரி' என்று கேட்டதும் நம்பியார் உடனே 'தரையிலும் ஓடும் நான் நினைத்தால் நாலு பேர் தலையிலும் ஓடும்' என்பது அவரது குணாதிசயத்தை ரசிக்கக்கூடிய காட்சி.

    தலைவர் அதிமுக ஆரம்பித்தவுடன் வெளிவந்த முதல் படம். அப்போதிருந்த சூழ்நிலையில் நல்ல அரசியல் விழிப்புணர்வு மிக்க படமாக இருந்திருந்தால் ரசிகர்களுக்கு ஊக்கம், உற்சாகம் அதிகமாக பெருகியிருக்கும். ஆனால் இது போன்ற குடும்ப கதைகள் வெளிவரவேண்டிய நேரம் அதுவல்ல. அந்த கால சூழ்நிலைக்கு ஏற்ற படம் "நம்நாடு" மாதிரியான திரைக்காவியம்தான் என்றாலும் தலைவர் படம் என்பதால் சென்னையில் சாதா திரையரங்கில் வெளியாகி 10 லட்சத்தையும் தாண்டி வசூல் செய்தது பிரமிக்க தக்கது.

    சென்னையில் மொத்தம் 331 நாட்கள் ஓடி ரூ10,12,765.80 வசூலாகப் பெற்றது. நெல்லையில் 63 நாட்கள் ஓடி மொத்தம் 1,02,078.25 வசூலாக பெற்றது குறிப்பிடதக்கது. மதுரை தேவியில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை செய்த முதல் படம் இதய வீணைதான். மொத்தம் 112 நாட்கள் ஓடி ரூ 3,11691.20 வசூலாக பெற்று சாதித்த படம் இதய வீணை.

    திருச்சி பேலஸில் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. கோவையில் இரண்டு திரையரங்குகளில் தொடர்ந்து திரையிட்டு 116.நாட்களும், சேலத்தில் மூன்று தியேட்டரில் வெளியாகி 133 நாட்களும் ஓடியது.
    தமிழகத்தில் மொத்தம் 31 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடி முதல் ஆறு மாத காலத்துக்குள் 75 லட்ச ரூபாய் வசூல் செய்து சாதனை
    படைத்தது.

    சென்னை குளோபில் 105 நாட்களும் ஸ்ரீகிருஷ்ணா வில் 86 நாட்களும் மகாலட்சுமி மற்றும் ராஜகுமாரியில் 70 நாட்களும் ஓடி வெற்றியை பதிவு செய்தது. ஆனாலும் கோவையில் தலைவர் படத்துக்கே உரிய கெத்துடன் சிவாஜி படத்தின் வசூலை கால்பந்தாடி மகிழ்ந்ததை காணலாம். 'இதயவீணை'யின் 4 வார வசூலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் கணேசனின் படங்கள்
    'தரிகிணதோம்' போட்டதை
    பார்க்கவும். (இணைப்பில்). தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில் 40
    நாட்கள் ஓடியது மேலும் சிறப்பு............ks.........

Page 90 of 90 FirstFirst ... 4080888990

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •