Page 37 of 84 FirstFirst ... 27353637383947 ... LastLast
Results 361 to 370 of 837

Thread: Makkal Thilagam MGR Part 26

 1. #361
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,099
  Post Thanks / Like
  #சரித்திரத்தில் #ஒரு #சரித்திரம்

  எம்ஜிஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக,மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல்சக்கரவர்த்தியாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்கவீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரகமந்திரமாக, #புவி #போற்றிடும் #புரட்சித்தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி,தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக் கண்டத்திலேயே எந்தநடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.

  115 படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்த எம்ஜிஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவரமுடிந்தது ? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? எனறெல்லாம் வினாக்கள் எழும்!

  எம்ஜிஆர் காலத்திலும், அவரது காலத்திற்குப்பின்னும் திரையுலகில் புகுந்து ஏராளமான படங்களில் நடித்த சிவாஜிகணேசனும்; காதல் மன்னன் ஜெமினி கணேசனும், இலட்சிய நடிகர்எஸ்.எஸ். ராஜேந்திரனும் பெறமுடியாத, ஈட்ட முடியாத மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆர் எட்டிப்பிடிக்கக் காரணங்கள் என்ன?

  இடைப்பட்ட காலத்தில் திரையுலகையே திக்குமுக்காடச் செய்த ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ஏவி.எம்.ராஜன்போன்றோர் காணமுடியாத மக்கள் ஆதரவைஎம்.ஜி.ஆர். மட்டும் கண்டது எப்படி?

  கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை,அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட கமல்ஹாசன், ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?

  இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்ஜிஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.

  எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் மட்டுமல்லர். அவர் அனைத்துக்கலைநுட்பங்களையும் நுணுக்கமாக அறிந்த கலைவித்தகர். நாட்டு மக்களின் இரசனைகளை நாடிபிடித்து அறிந்தவர். எனவேதான், அவரதுபடங்களில் வரும் பாடல்களை ஒலிப்பதிவு அறைகளில் அமர்ந்து, சொல்லுக்குச் சொல் கேட்டே, பதிவு செய்திடஅனுமதிப்பார். அதேபோல், படங்களில் இடம்பெறும் வசனங்களையும் வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ந்தே இடம்பெறச் செய்வார். இவையே அவரது வெற்றியின்மூல இரகசியமாகும்.

  நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டிய,செய்யவேண்டிய நல்ல கருத்துகளையும், செயல்களையுமே தனது படங்களின் பாடல்கள்,வசனங்களில் எம்ஜிஆர் இடம்பெறச் செய்தார்.அவ்வாறு செய்த காரணத்தால் தான், #எம்ஜிஆர் #என்ற #மந்திரசக்தி இன்றளவும் மக்களின் இதயங்களில் மாமகுடம் தாங்கி வீற்றிருக்கிறது.

  சத்யா எனும் தாய், கருவினிலே வளர்ந்த போதே தனது அன்பு மழலையாம், எம்ஜிஆர் என்றமகனுக்குத் தைரியத்தை ஊட்டி வளர்த்த தாயல்லவா!

  பெற்ற தாயின்மீது பெறுதற்கரிய பாசத்தைச்செலுத்தியதோடு, நாட்டிலுள்ள தாய்மார்களின் மீதெல்லாம் அளவிடற்கரிய பாசத்தைச் செலுத்தி, அவர்களது மானம் காக்க, களங்கத்தைப் போக்கக்காலமெல்லாம் துணையாய் நின்ற காவல்தெய்வமல்லவா எம்.ஜி.ஆர்! அதனாலன்றோ இன்றும்தாய்க்குலத்தின் தணியாத செல்வாக்கோடு,மறைந்தும் இம்மண்ணில் மங்காத புகழோடு எம்.ஜி.ஆர் வாழ்கின்றார்.

  #கோடிமக்கள் #இம்மண்ணில் #வாழ்ந்ததுண்டு. #வாழ்ந்தசுவடுகள் #தெரியாமல் #மறைந்ததும் #உண்டு. #ஆனால்மக்களின் #மனங்களில் #நிலைத்து #நிற்பவர் #யாவர்?

  #மாபெரும் #வீரர்! #மானத்தைக்காப்போர்!

  இவர்கள் மக்கள் மனங்களில் மட்டும் அல்ல….#வருங்காலச்சரித்திரத்திலும் #சாய்ந்துவிடாது #நிலைத்து #நிற்பர்.

  உண்மைதானா? உண்மையே! உதாரணம்.....#நம் #பொன்மனச்செம்மல் #புரட்சித்தலைவரே!!!.........

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #362
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,099
  Post Thanks / Like
  "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" புரட்சி தலைவரின் கடைசி படம். 1978
  ஜன 14 பொங்கல் திருநாளுக்கு வெளிவந்த வெற்றிப் படம். இந்த படத்தின் வெற்றியில் எதிர்முகாமை சேர்ந்தவர்களுக்கு சிறிது சந்தேகம் இருப்பதால் இந்தப்படம் அடைந்த வெற்றியை பற்றி பேசலாம். முதலில் இந்த படமே எம்ஜிஆரின் முழு கைவண்ணத்தில் வந்த படமல்ல.
  தலைவர் முதலமைச்சர் ஆகி விட்ட
  படியால் அவசரமாக முடித்து கொடுத்த படம். அவருக்கு நேரம் இருந்திருந்தால் இன்னும் டச்அப் காட்சிகளை எடுத்து படத்துக்கு இன்னும் மெருகேற்றியிருப்பார்.
  படமும் முழு வளர்ச்சி பெற்றிருக்கும்.

  சரித்திர படம் இவ்வளவு குறைந்த நீளத்தில் வந்ததை வைத்து தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் எம்ஜிஆர் படமல்லவா? சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் அதன் சீற்றம் குறையுமா? அப்படி சீற்றத்துடன் வந்த சிங்கத்தின் வெற்றியை பற்றி பார்ப்போம்.

  சென்னையில் தேவிபாரடைஸ், அகஸ்தியர, உமா, கமலாவில் திரையிடப்பட்டு மொத்தம் 186 நாட்களில் வசூலாக பெற்ற தொகை ரூபாய்11,56,560-62
  ஆனால் எங்கும் 100 நாட்கள் ஓட்டப்படவே இல்லை. ஆனால்
  "அந்தமான் காதலி" என்ற சிவாஜி நடித்த முக்தாவின் படம், முக்தாவின் படங்களிலேயே அதிக வசூலை பெற்றதே இந்தப்படம் தான். அந்தப்படம்
  சென்னையில் 100 நாட்கள் ஓடியதாக விளம்பரம் செய்திருந்தனர். சென்னையில் மொத்தம் 243 நாட்களில் பெற்ற வசூல் ரூ 9,69,715.20 தான்.

  ஆனாலும் தமிழ்நாட்டில் சுமார் 5 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓட்டி விட்டார்கள். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பதை போல
  ஒவ்வொரு படத்துக்கும் இதையே திருப்பி திருப்பி செய்து தங்கள் தோல்வியை மறைக்க அரும்பாடு படுவதை பார்க்கும் போது சற்று பரிதாபமாகத்தான் இருக்கிறது. மேலும்

  சிவாஜியின் 100 நாட்கள் படங்களான "சொர்க்கம்" "எ.வந்தாள்"
  "வி.வீடு" "சவாலே சமாளி" "பாபு" "பா.விலாஸ்" "எ.த.ராஜா" "கெளரவம்"
  "ம.வந்தானடி" போன்ற நிறையபடங்கள்
  100 நாட்கள் ஓட்டப்பட்டதே தவிர அனைத்தும் ம.மீ.சு.பாண்டியனிடம் வசூலில் மண்டியிட்ட படங்கள்தான்.
  ஆனால் வாய் கூசாமல் ம.மீ.சு.பாண்டியனை தோல்வி படம் என்று கூறுகிறீர்களே
  தைரியமிருந்தால் உங்கள் பட வசூலை வெளியிட்டு நிரூபித்து காட்டுங்கள்.

  நெல்லையில் "ம.மீ.சு.பாண்டியன்" பெரிய திரையரங்கமான சென்ட்ரலில் வெளியாகி 55 நாட்கள் ஓடி சிவாஜியின் வெள்ளிவிழா படங்களான "ப.பட்டணமா"? "வசந்த மாளிகை" வசூலை அநாயசமாக தூக்கி எறிந்ததை கண்ணுற்றால் சிங்கத்தின் சீற்றத்தை நாம் புரிந்து கொள்ளலாம். "ம.மீ.சு.பாண்டியன்" நெல்லையில் 55 நாட்களில் பெற்ற வசூல் ரூ 1,50,009.45 .

  சிவாஜியின் வெற்றிப் படங்கள் ஏதாவது இந்த சாதனையை சமன் செய்திருக்கிறீர்களா? வசூலை ஆராய்ச்சி செய்து சொல்லுங்கள். மதுரை சென்ட்ரலில் 76 நாட்கள் ஓடி வெற்றியை பதிவு செய்தது. கோவை கர்னாட்டிக் 41 நாட்கள் காலைக்காட்சி 7 நாட்கள் என மொத்தம் 48 நாட்கள் ஓடியது. தொடர்ச்சியாக கோவை ஸ்ரீபதியில் 7 நாட்கள் 3 காட்சி வீதம் ஓடியது. சேலம் சங்கீத்தில் 55 நாட்களும் srvயில் 6 நாட்களும், நாகர்கோவில் தங்கத்தில் 63 நாட்களும் ஓடி வெற்றிக்கொடி நாட்டியது குறிப்பிடத்தக்கது. திருச்சி கலையரங்கத்தில் 48 நாட்கள் ஓடி சுமார் ரூ 3,00,000 தாண்டி வசூல் செய்தது.

  இதை விட முக்கியமான ஒரு சாதனை பட்டுக்கோட்டையில் நடத்தியிருக்கிறார் சுந்தர பாண்டியனார். இதுவரை வெளிவந்த எந்த ஒரு படமும் செய்யாத சரித்திர சாதனையாக தொடர்ந்து 101 காட்சிகள் ஹவுஸ்புல்லாகி வசூலிலும் புரட்சி செய்திருக்கிறார்.. இந்த சாதனையை யாராலும் இதுவரை முறியடிக்க முடியவில்லை.

  அரசியலிலும் சினிமாவிலும் வெற்றி வாகை சூடியவர் புரட்சித் தலைவர். அரசியலிலும் சினிமாவிலும் தோற்று புறமுதுகு காட்டி ஓடியவர்களை நாம் மன்னித்து ஏற்றுக் கொண்டாலும் குள்ளநரிகள் போல ஒரு சிலதுகள் ஊளையிட்டு என்ன பயன்?. திருந்தினால் தலைவரைப் போல் மன்னிப்போம்! மறப்போம்! என்று அவர்களை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயார்..........

 4. #363
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,383
  Post Thanks / Like
  பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*18/07/20 அன்று அளித்த*தகவல்கள்*
  ---------------------------------------------------------------------------------------------------------------------
  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை பற்றி நாம் பகிர்ந்து கொள்கின்ற பல்வேறு விஷயங்கள் ஆச்சர்யப்படத்தக்கவை .அதிசயிக்கத்தக்கவை .மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு சென்னை பல்கலை கழகமும், அமெரிக்காவின் அரிசோனா பல்கலை கழகமும் டாக்டர் பட்டங்கள் வழங்கின .அவரை புரட்சி நடிகர் என்று கலைஞர் கருணாநிதி வாழ்த்தினார் . கிருபானந்த வாரியார் பொன்மன செம்மல் என்று போற்றினார் .அவரை மக்கள் திலகம் என்று கல்கண்டு இதழ் ஆசிரியர் தமிழ்வாணன் புகழ்மாலை சூட்டினார் . எந்தெந்த பட்டங்கள் ,விருதுகள்* எப்படி வழங்கப்பெற்றாரோ* அதற்கு தகுந்தபடி*, சினிமா, அரசியல் , பொது வாழ்க்கை அனைத்திலும் அனைவரும் போற்றும்படி, பாராட்டும்படி , வாழ்த்தும்படியான*செயல்களை*,காரியங்களை அவர் செய்ய மறக்கவில்லை .


  தன்னுடைய*தானை தலைவர் பேரறிஞர் அண்ணா*தோற்றுவித்த தி.மு.க. கட்சியை*, அண்ணா அவர்கள் வாழ்ந்த*போதும் , மறைந்த*பின்னரும்*அந்த கட்சிக்கு*தன்னுடைய*உடல், பொருள், உழைப்பு , திறமை, ஆற்றல் , கொடை*உதவி அனைத்தும் அளித்து , பல்வேறு வகைகளில்*திரைப்படங்களில் கட்சியை*சின்னத்தை*விளம்பரப்படுத்தி , நாடு, நகரங்கள் ,பட்டி ,தொட்டியெல்லாம் கட்சியை, சின்னத்தை கொண்டுபோய் சேர்த்து , அந்த* க*ட்சி*ஆலமரமாக*வேரூன்றி ,பரந்து*விரிந்து வளர்ந்த*பின்னர் , அதே கட்சியால் பதவி நீக்கம் ,அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் பெற்றவர் , அந்த பெரிய கட்சியை எதிர்த்து*தானே*அண்ணா*திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை*துவக்கி , மக்களுக்கு*தன் கொள்கைகளை திட்டங்களை*தெளிவாக சொல்லி , எதிர்க்கட்சியின் ஊழல்கள் , அராஜகங்கள் ,குறைகள் ஆகியவற்றை* *எடுத்துரைத்து* மக்களின்*ஏகோபித்த ஆதரவை*பெற்று ஒரு முறை அல்ல தொடர்ந்து மூன்று முறை முதல்வராக ஆட்சி நடத்தி ,முதல்வராகவே மறைந்தார்* என்பது*எம்.ஜி.ஆரால்*மட்டுமே*முடிந்த காரியம் .வேறு எவராலும் சாத்தியம்*இல்லாத விஷயம் .


  மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு நடிக்க தெரியாது*என்று பரவலாக பேசப்பட்டது .நடிக்க தெரியாமலா*அவரது*படங்களை*மக்கள் ரசித்தார்கள் . ஒரு சில*ஆண்டுகள்*தவிர ,ஏறத்தாழ 30 ஆண்டுகள்*வசூல் சக்கரவர்தியாகவும் ,*முடிசூடா மன்னனாகவும் திகழ்ந்தார் என்றால் எப்படி சாத்தியம் . இந்த சாதனைகளை*பொறுக்காத*பொறாமைக்காரர்களின் விமர்சனம்தான்*அது .அவற்றை*எம்.ஜி.ஆர். பொருட்படுத்தவேயில்லை .தனித்தன்மை என்று ஒன்று இல்லாவிட்டால் வாழ்க்கையில்*எந்த விஷயத்திலும் தனி மனிதன் , நடிகன் வெற்றிபெற*முடியாது என்பது எம்.ஜி.ஆருக்கு*நன்றாக தெரிந்து இருந்தது .அனுபவபூர்வமாக நாடக காலத்தில் சிவாஜி*கணேசன் மனோகரா*படத்தில் நடித்தது போல நாடகத்தில் மனோகரா*வேடத்தில்*நடித்துள்ளார் .தனக்கு*என்று ஒரு* தனி பாணி வேண்டும் .* அந்த பாணியை*யாரும் பின்பற்றல் ஆகாது*என்பதில்*உறுதியாக இருந்தார் .


  நடிப்பு என்றால் என்ன , நடிப்பின் இலக்கணம் என்ன என்பதை அறிந்தவர் .ஒரு நடிகன் காமிராவின் முன்பு நிற்கும்போது இடதுபுறம்* உள்ள அவனுடைய**தோற்றம் ,வலதுபுறம்* உள்ள**தோற்றத்துடன் ஒப்பிடும்போது வெவ்வேறாக இருக்கும் .* எந்த தோற்றம் உகந்ததாக இருக்கும் .எந்த தோற்றம் சரியாக*காமிராவில்* அமையாது*என்பதையெல்லாம் நுட்பமாக அறிந்தவர் .பொதுவாக இரட்டை வேடங்கள்*ஏற்று நடிக்கும்போது ,எந்த வேடத்தில்*, குரல், முக பாவம் மட்டுமல்ல , மனோபாவமும்* எப்படி இருக்க வேண்டும் ,மனோரீதியான நடை, உடை, பாவனை போன்ற எல்லாவற்றையும் கொண்டு வருவதில்*எம்.ஜி.ஆர். வல்லவராக இருந்தார்*என்பதை*உதாரணமாக* .எங்க வீட்டு*பிள்ளை படத்தின்*இமாலய வெற்றிக்கு*காரணமாக* ,கோழை*,வீரன் என்ற இரண்டு பாத்திரங்களிலும் நல்ல வித்தியாசம் காட்டி அசத்தியிருப்பதை காணலாம் . . அதை தொடர்ந்து வந்த* பல**இரட்டை வேட*படங்களில் அதே முறையை கையாண்டார் . இரட்டை வேட*படங்களில் நடிக்கும்போது சிரிப்பு ,புருவத்தை*உயர்த்துதல் , தாழ்த்துதல், புன்னகை வரவழைத்தல்*, பாசம், அன்பு, வீரம் , துணிவு, காதல், கனிவு, கோபம்*என்று பலவிதமான*உணர்ச்சிமிக்க* காட்சிகளில் நடிப்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பல்வேறு கருத்துக்கள் வெளியிட்டுள்ளார் .


  நடிப்பின்*பல்வேறு விதமான கலைகளையும், பல்வேறு அம்சங்களையும் தெரிந்து வைத்திருந்தார் . நடிப்பு பற்றி சிலர் சொல்வது*போல அறியாதவரல்ல*தனக்கென்று ஒரு**பாணியை கடைபிடித்தார் .* அதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் .அதைத்தான் செய்ய முடியும்* ,பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள் அனைவரின்*நிதி நிலைமை , வருமானம்* பராமரிப்பு, செலவினம்*ஆகியவற்றை கருத்தில் கொண்டு*அவ்வாறு செய்தால்தான் திரைப்படத்துறை வளர்ச்சி பெறும், படங்கள்*வியாபார*ரீதியில்* நல்ல* விற்பனை ஆகும்**அரசுக்கும்*கணிசமான வரி என்கிற வகையில் வருமானம் பெருகும்*என்ற*நடைமுறையில் உள்ள செயல்பாடுகளை , பயனுள்ளதாக செயல்படுத்தினார் .*  தன்னுடைய வழக்கமான*பார்முலாவில் இருந்து சற்று விலகி, வித்தியாசமான பாத்திரத்தில்*உணர்ச்சிகளை கொட்டி*நடித்த*படம் பெற்றால்தான் பிள்ளையா*.இந்தப்படத்திற்கு பல சிறப்புகள் உண்டு . எம்.ஜி.ஆர். தான் நடித்த*மிக சிறந்த ,பிடித்த*படங்களில் ஒன்று . நடிகர் சிவாஜி கணேசன் இந்த கதையில் நடிப்பதாக இருந்தது*என்று பேசப்பட்டது . அவரும்*வசன ஆசிரியர் ஆரூர்தாஸிடம் இந்த காதையை*என்னிடம் சொல்லியிருந்தால் நான் நடித்திருப்பேன் என்று சொன்னதாக தகவல்கள் வெளியாகின .. எம்.ஜி.ஆர். சரோஜாதேவி ஜோடி கடைசியாக* நடித்து வெற்றிகரமாக 100 நாட்கள்*ஸ்டார், மகாராணி அரங்குகளில்**கடந்த படம் .எல்லாவற்றிற்கு மேலாக இந்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போது தான் ராமாவரம் தோட்டத்திற்கு பட தயாரிப்பாளர் வாசுவுடன் வந்த*எம்.ஆர். ராதா , எம்.ஜி.ஆரிடம்*பேசிக் கொண்டிருந்தபோதே வாக்குவாதம் ஏற்பட்டு*துப்பாக்கியால் சுட்டு, தானும் சுட்டுக் கொண்டார் .இந்த படத்தில்*நான்* குணச்சித்திர வேடத்தில்*நடிப்பது*போல ஒரு உணர்வு உள்ளது . அதனால்*சண்டை காட்சிகள் அமைப்பதை தவிர்க்கலாமே என்று இயக்குனருக்கு யோசனை தெரிவித்தார் .எம்.ஜி.ஆர்.*ஒரு சில*சண்டை காட்சிகள் கூட இல்லையென்றால் உங்கள் ரசிகர்களின் விமர்சனத்தை எதிர்நோக்குவது மிகவும் கடினம்*. உங்கள் ரசிகர்கள் அதை எதிர்பார்ப்பார்கள் , நிச்சயம் வரவேற்பார்கள் .அவசியமான*கட்டத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று இயக்குனர்கள் சமாதானம்*சொன்னார்கள் .இதற்காக*எம்.ஜி.ஆர். அரை மனதுடன்*, வருத்தத்துடன் சம்மதித்து இருக்கிறார் .படத்தின்*வெற்றி செய்தி வந்த பிறகு அனைவரும் மகிழ்ச்சியுற்றனர் .படங்களிலே காதல்*காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் . எந்த அளவுக்கு நளினமாக, அதே சமயத்தில் மிகவும்**தூக்கலாக* இருக்கக் கூடாது .ஒரு வரைமுறை , வரம்பு இருக்கவேண்டும் என்று விலாவாரியாக இயக்குனர்களிடம் விளக்குவார் .எம்.ஜி.ஆர். ஒரு கதாசிரியர், எடிட்டர்,காமிராமேன் , சவுண்ட்*பொறியாளர் ,என்று* பல்வேறு துறைகளிலும் நுட்பங்களை அறிந்தவர் .*திரைப்படத்துறையில் எந்த இடத்தில,பகுதியில் தவறுகள் நிகழ்ந்தாலும் அதை எளிதில்*கண்டுபிடித்து*நீக்குவதற்கு யோசனை தெரிவித்து உதவுவார் .  பிரபல*நகைச்சுவை நடிகர்*சார்லி*சாப்ளின் பாதிப்பு இல்லாமல் நடித்த*நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் . எம்.ஜி.ஆர். அவர்கள்*பெற்றால்தான் பிள்ளையா படத்தில்*கால்களை அகற்றியவாறு வித்தியாசமான நடையை காட்டியிருப்பார் . தேடி வந்த*மாப்பிள்ளை படத்தில் சார்லி சாப்ளினை போல நடை, உடை , பாவனைகள் ,கையில்*வாக்கிங் ஸ்டிக்*, தலையில் குல்லா*,கருப்பு*கண்ணாடி*;அணிந்து*பாட்டு வாத்தியாராக வந்து மேலைநாட்டு*பாடலான, தொட்டு காட்டவா, மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டு காட்டவா* என்று**பாடி, ஆடி , அசத்தியிருப்பார் .*


  அடிமைப்பெண் படத்தில் ஏமாற்றாதே, ஏமாற்றாதே ,பாடலை*டி.எம்.சௌந்தரராஜன் பாடுகிறார் .எம்.ஜி.ஆருக்கு திருப்தியில்லை .இரண்டு, மூன்று முறை பாடியும்* நான் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை என்றார் எம்.ஜி.ஆர். அதாவது பொது நீதிக்கும்*நேர்மைக்கும் பயந்துவிடு ,*நல்ல அன்புக்கும் , பண்புக்கும்*வளைந்து கொடு*என்ற இடத்தில* இன்னும்* தெளிவான**உணர்ச்சிகளும் , பாவங்களும் கொஞ்சம் அழுத்தமாக இருக்க வேண்டும் என்கிறார் .ஒரு கட்டத்தில் டி.எம்.எஸ். ஏன் நம்மை*இத்தனை முறை பயிற்சி எடுக்க வைக்கிறார்கள் . வேண்டுமானால் வேறு பாடகரை வைத்து பாட வைத்துக் கொள்ளுங்கள் என்று இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம் குறைபட்டுக் கொண்டாராம் . கடைசி முறையாக பாடும்போது*பாடல் நன்றாக அமைந்ததும்*எம்.ஜி.ஆர். டி.எம்.எஸ்.ஸை* கட்டி பிடித்து* இதைத்தான்*நான் எதிர்பார்த்தேன் என்று பாராட்டினாராம் ..எம்.ஜி.ஆருக்கு இசை ஞானம் இருந்ததால்தான் , அவர் எதிர்பார்க்கிற அளவிற்கு , பாடலில் , அழுத்தம், ஆழம் ,*உணர்ச்சிகள், பாவங்கள்*, ஆகியவற்றை நுட்பமாக பின்னணி பாடகர்கள், பாடகிகளிடம் இருந்து வற்புறுத்தி* வழங்கப்பெற்று , பாடல்களை பதிவு செய்தார் .* அதனால்தான் அன்றும், இன்றும் , என்றும் எம்.ஜி.ஆர் அவர்களின்*பாடல்கள்*காலத்தை வென்று , கடந்து நிற்கின்றன .*


  தனது பாணி இதுதான் என்று மக்களுக்கு அறிமுகம் செய்தார்*, கடை பிடித்தார் , மக்களின் நம்பிக்கையை பெற்றார் .,அதில்*வெற்றியும்* பெற்றார் .அந்த மக்கள் நம்பிக்கைதான்*இன்று நாடாள வைக்கும்*அளவிற்கு அவரை கொண்டு போய்*நிறுத்தியது .மற்ற விஷயங்கள்*அடுத்த அத்தியாயத்தில் தொடரும் ......

  நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
  ------------------------------------------------------------------------------------
  1.பாட்டு ஒரு பாட்டு - தாய் சொல்லை தட்டாதே*

  2. தர்மம் தலை காக்கும் பாடல் - தர்மம் தலை காக்கும்*

  3.எம்.ஜி.ஆர். -எம்.ஆர்.ராதா உரையாடல் - தர்மம் தலை காக்கும்*

  4.உன்னை*அறிந்தால்*உலகத்தில் போராடலாம்*- வேட்டைக்காரன்*

  5.ஒரு பக்கம்* பாக்குறா* - மாட்டுக்கார வேலன்*

  6.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - பெற்றால்தான் பிள்ளையா*

  7.தொட்டு காட்டவா,மேலை நாட்டு சங்கீதத்தை -தேடி வந்த மாப்பிள்ளை*

  8.ஏமாற்றாதே, ஏமாற்றாதே - அடிமை பெண்*

 5. #364
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,099
  Post Thanks / Like
  .மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு சென்னை பல்கலை கழகமும், அமெரிக்காவின் அரிசோனா பல்கலை கழகமும் டாக்டர் பட்டங்கள் வழங்கின .அவரை புரட்சி நடிகர் என்று கலைஞர் கருணாநிதி வாழ்த்தினார் . கிருபானந்த வாரியார் பொன்மன செம்மல் என்று போற்றினார் .அவரை மக்கள் திலகம் என்று கல்கண்டு இதழ் ஆசிரியர் தமிழ்வாணன் புகழ்மாலை சூட்டினார் . எந்தெந்த பட்டங்கள் ,விருதுகள் எப்படி வழங்கப்பெற்றாரோ அதற்கு தகுந்தபடி , சினிமா, அரசியல் , பொது வாழ்க்கை அனைத்திலும் அனைவரும் போற்றும்படி, பாராட்டும்படி , வாழ்த்தும்படியான செயல்களை ,காரியங்களை அவர் செய்ய மறக்கவில்லை .

  தன்னுடைய தானை தலைவர் பேரறிஞர் அண்ணா தோற்றுவித்த தி.மு.க. கட்சியை , அண்ணா அவர்கள் வாழ்ந்த போதும் , மறைந்த பின்னரும் அந்த கட்சிக்கு தன்னுடைய உடல், பொருள், உழைப்பு , திறமை, ஆற்றல் , கொடை உதவி அனைத்தும் அளித்து , பல்வேறு வகைகளில் திரைப்படங்களில் கட்சியை சின்னத்தை விளம்பரப்படுத்தி , நாடு, நகரங்கள் ,பட்டி ,தொட்டியெல்லாம் கட்சியை, சின்னத்தை கொண்டுபோய் சேர்த்து , அந்த க ட்சி ஆலமரமாக வேரூன்றி ,பரந்து விரிந்து வளர்ந்த பின்னர் , அதே கட்சியால் பதவி நீக்கம் ,அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் பெற்றவர் , அந்த பெரிய கட்சியை எதிர்த்து தானே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை துவக்கி , மக்களுக்கு தன் கொள்கைகளை திட்டங்களை தெளிவாக சொல்லி , எதிர்க்கட்சியின் ஊழல்கள் , அராஜகங்கள் ,குறைகள் ஆகியவற்றை எடுத்துரைத்து மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று ஒரு முறை அல்ல தொடர்ந்து மூன்று முறை முதல்வராக ஆட்சி நடத்தி ,முதல்வராகவே மறைந்தார் என்பது எம்.ஜி.ஆரால் மட்டுமே முடிந்த காரியம் .வேறு எவராலும் சாத்தியம் இல்லாத விஷயம் .

  மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு நடிக்க தெரியாது என்று பரவலாக பேசப்பட்டது .நடிக்க தெரியாமலா அவரது படங்களை மக்கள் ரசித்தார்கள் . ஒரு சில ஆண்டுகள் தவிர ,ஏறத்தாழ 30 ஆண்டுகள் வசூல் சக்கரவர்தியாகவும் , முடிசூடா மன்னனாகவும் திகழ்ந்தார் என்றால் எப்படி சாத்தியம் . இந்த சாதனைகளை பொறுக்காத பொறாமைக்காரர்களின் விமர்சனம்தான் அது .அவற்றை எம்.ஜி.ஆர். பொருட்படுத்தவேயில்லை .தனித்தன்மை என்று ஒன்று இல்லாவிட்டால் வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் தனி மனிதன் , நடிகன் வெற்றிபெற முடியாது என்பது எம்.ஜி.ஆருக்கு நன்றாக தெரிந்து இருந்தது .அனுபவபூர்வமாக நாடக காலத்தில் சிவாஜி கணேசன் மனோகரா படத்தில் நடித்தது போல நாடகத்தில் மனோகரா வேடத்தில் நடித்துள்ளார் .தனக்கு என்று ஒரு தனி பாணி வேண்டும் . அந்த பாணியை யாரும் பின்பற்றல் ஆகாது என்பதில் உறுதியாக இருந்தார் .

  நடிப்பு என்றால் என்ன , நடிப்பின் இலக்கணம் என்ன என்பதை அறிந்தவர் .ஒரு நடிகன் காமிராவின் முன்பு நிற்கும்போது இடதுபுறம் உள்ள அவனுடைய தோற்றம் ,வலதுபுறம் உள்ள தோற்றத்துடன் ஒப்பிடும்போது வெவ்வேறாக இருக்கும் . எந்த தோற்றம் உகந்ததாக இருக்கும் .எந்த தோற்றம் சரியாக காமிராவில் அமையாது என்பதையெல்லாம் நுட்பமாக அறிந்தவர் .பொதுவாக இரட்டை வேடங்கள் ஏற்று நடிக்கும்போது ,எந்த வேடத்தில் , குரல், முக பாவம் மட்டுமல்ல , மனோபாவமும் எப்படி இருக்க வேண்டும் ,மனோரீதியான நடை, உடை, பாவனை போன்ற எல்லாவற்றையும் கொண்டு வருவதில் எம்.ஜி.ஆர். வல்லவராக இருந்தார் என்பதை உதாரணமாக .எங்க வீட்டு பிள்ளை படத்தின் இமாலய வெற்றிக்கு காரணமாக ,கோழை ,வீரன் என்ற இரண்டு பாத்திரங்களிலும் நல்ல வித்தியாசம் காட்டி அசத்தியிருப்பதை காணலாம் . . அதை தொடர்ந்து வந்த பல இரட்டை வேட படங்களில் அதே முறையை கையாண்டார் . இரட்டை வேட படங்களில் நடிக்கும்போது சிரிப்பு ,புருவத்தை உயர்த்துதல் , தாழ்த்துதல், புன்னகை வரவழைத்தல் , பாசம், அன்பு, வீரம் , துணிவு, காதல், கனிவு, கோபம் என்று பலவிதமான உணர்ச்சிமிக்க காட்சிகளில் நடிப்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பல்வேறு கருத்துக்கள் வெளியிட்டுள்ளார் .

  நடிப்பின் பல்வேறு விதமான கலைகளையும், பல்வேறு அம்சங்களையும் தெரிந்து வைத்திருந்தார் . நடிப்பு பற்றி சிலர் சொல்வது போல அறியாதவரல்ல தனக்கென்று ஒரு பாணியை கடைபிடித்தார் . அதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் .அதைத்தான் செய்ய முடியும் ,பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள் அனைவரின் நிதி நிலைமை , வருமானம் பராமரிப்பு, செலவினம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவ்வாறு செய்தால்தான் திரைப்படத்துறை வளர்ச்சி பெறும், படங்கள் வியாபார ரீதியில் நல்ல விற்பனை ஆகும் அரசுக்கும் கணிசமான வரி என்கிற வகையில் வருமானம் பெருகும் என்ற நடைமுறையில் உள்ள செயல்பாடுகளை , பயனுள்ளதாக செயல்படுத்தினார் .

  தன்னுடைய வழக்கமான பார்முலாவில் இருந்து சற்று விலகி, வித்தியாசமான பாத்திரத்தில் உணர்ச்சிகளை கொட்டி நடித்த படம் பெற்றால்தான் பிள்ளையா .இந்தப்படத்திற்கு பல சிறப்புகள் உண்டு . எம்.ஜி.ஆர். தான் நடித்த மிக சிறந்த ,பிடித்த படங்களில் ஒன்று . நடிகர் சிவாஜி கணேசன் இந்த கதையில் நடிப்பதாக இருந்தது என்று பேசப்பட்டது . அவரும் வசன ஆசிரியர் ஆரூர்தாஸிடம் இந்த காதையை என்னிடம் சொல்லியிருந்தால் நான் நடித்திருப்பேன் என்று சொன்னதாக தகவல்கள் வெளியாகின .. எம்.ஜி.ஆர். சரோஜாதேவி ஜோடி கடைசியாக நடித்து வெற்றிகரமாக 100 நாட்கள் ஸ்டார், மகாராணி அரங்குகளில் கடந்த படம் .எல்லாவற்றிற்கு மேலாக இந்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போது தான் ராமாவரம் தோட்டத்திற்கு பட தயாரிப்பாளர் வாசுவுடன் வந்த எம்.ஆர். ராதா , எம்.ஜி.ஆரிடம் பேசிக் கொண்டிருந்தபோதே வாக்குவாதம் ஏற்பட்டு துப்பாக்கியால் சுட்டு, தானும் சுட்டுக் கொண்டார் .இந்த படத்தில் நான் குணச்சித்திர வேடத்தில் நடிப்பது போல ஒரு உணர்வு உள்ளது . அதனால் சண்டை காட்சிகள் அமைப்பதை தவிர்க்கலாமே என்று இயக்குனருக்கு யோசனை தெரிவித்தார் .எம்.ஜி.ஆர்.

  ஒரு சில சண்டை காட்சிகள் கூட இல்லையென்றால் உங்கள் ரசிகர்களின் விமர்சனத்தை எதிர்நோக்குவது மிகவும் கடினம் . உங்கள் ரசிகர்கள் அதை எதிர்பார்ப்பார்கள் , நிச்சயம் வரவேற்பார்கள் .அவசியமான கட்டத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று இயக்குனர்கள் சமாதானம் சொன்னார்கள் .இதற்காக எம்.ஜி.ஆர். அரை மனதுடன் , வருத்தத்துடன் சம்மதித்து இருக்கிறார் .படத்தின் வெற்றி செய்தி வந்த பிறகு அனைவரும் மகிழ்ச்சியுற்றனர் .படங்களிலே காதல் காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் . எந்த அளவுக்கு நளினமாக, அதே சமயத்தில் மிகவும் தூக்கலாக இருக்கக் கூடாது .ஒரு வரைமுறை , வரம்பு இருக்கவேண்டும் என்று விலாவாரியாக இயக்குனர்களிடம் விளக்குவார் .எம்.ஜி.ஆர். ஒரு கதாசிரியர், எடிட்டர்,காமிராமேன் , சவுண்ட் பொறியாளர் ,என்று பல்வேறு துறைகளிலும் நுட்பங்களை அறிந்தவர் . திரைப்படத்துறையில் எந்த இடத்தில,பகுதியில் தவறுகள் நிகழ்ந்தாலும் அதை எளிதில் கண்டுபிடித்து நீக்குவதற்கு யோசனை தெரிவித்து உதவுவார் .

  பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பாதிப்பு இல்லாமல் நடித்த நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் . எம்.ஜி.ஆர். அவர்கள் பெற்றால்தான் பிள்ளையா படத்தில் கால்களை அகற்றியவாறு வித்தியாசமான நடையை காட்டியிருப்பார் . தேடி வந்த மாப்பிள்ளை படத்தில் சார்லி சாப்ளினை போல நடை, உடை , பாவனைகள் ,கையில் வாக்கிங் ஸ்டிக் , தலையில் குல்லா ,கருப்பு கண்ணாடி ;அணிந்து பாட்டு வாத்தியாராக வந்து மேலைநாட்டு பாடலான, தொட்டு காட்டவா, மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டு காட்டவா என்று பாடி, ஆடி , அசத்தியிருப்பார் .

  அடிமைப்பெண் படத்தில் ஏமாற்றாதே, ஏமாற்றாதே ,பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாடுகிறார் .எம்.ஜி.ஆருக்கு திருப்தியில்லை .இரண்டு, மூன்று முறை பாடியும் நான் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை என்றார் எம்.ஜி.ஆர். அதாவது பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு , நல்ல அன்புக்கும் , பண்புக்கும் வளைந்து கொடு என்ற இடத்தில இன்னும் தெளிவான உணர்ச்சிகளும் , பாவங்களும் கொஞ்சம் அழுத்தமாக இருக்க வேண்டும் என்கிறார் .ஒரு கட்டத்தில் டி.எம்.எஸ். ஏன் நம்மை இத்தனை முறை பயிற்சி எடுக்க வைக்கிறார்கள் . வேண்டுமானால் வேறு பாடகரை வைத்து பாட வைத்துக் கொள்ளுங்கள் என்று இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம் குறைபட்டுக் கொண்டாராம் . கடைசி முறையாக பாடும்போது பாடல் நன்றாக அமைந்ததும் எம்.ஜி.ஆர். டி.எம்.எஸ்.ஸை கட்டி பிடித்து இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் என்று பாராட்டினாராம் ..எம்.ஜி.ஆருக்கு இசை ஞானம் இருந்ததால்தான் , அவர் எதிர்பார்க்கிற அளவிற்கு , பாடலில் , அழுத்தம், ஆழம் , உணர்ச்சிகள், பாவங்கள் , ஆகியவற்றை நுட்பமாக பின்னணி பாடகர்கள், பாடகிகளிடம் இருந்து வற்புறுத்தி வழங்கப்பெற்று , பாடல்களை பதிவு செய்தார் . அதனால்தான் அன்றும், இன்றும் , என்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்கள் காலத்தை வென்று , கடந்து நிற்கின்றன .

  தனது பாணி இதுதான் என்று மக்களுக்கு அறிமுகம் செய்தார் , கடை பிடித்தார் , மக்களின் நம்பிக்கையை பெற்றார் .,அதில் வெற்றியும் பெற்றார்.........

 6. #365
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,383
  Post Thanks / Like
  பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 20/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
  -----------------------------------------------------------------------------------------------------
  மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.என்கிற சொல் பல சாமானியர்களை மாமனிதர்களாக பல்வேறு பதவிகளுக்கு உயர தூக்கிவிட்ட ஒரு மந்திரச்சொல் .* அந்த மந்திர சொல்லை பலரும் கொண்டாடி கொண்டிருக்கும் காலம் இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன .அன்றைக்கு அந்த மலர்ச்சிக்கான ஒரு விதையாக, வித்தாக தான் இருந்ததாக சென்னை பெருநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி பெருமை பட்டுக் கொள்கிறார் . அதில் நியாயம் இருக்கிறது .ஏனென்றால் , எங்கேயாவது ஒரு சிறு துளியில்தான்* பெருவெள்ளம் காத்திருக்கிறது என்பதற்கு அன்றைக்கு* ஆட்சியை அலங்கரித்து பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வந்த* அ .தி.மு.க.தலைவர் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகளே காரணம் .


  அப்படியான தொண்டர்களின் குரலை பொறுமையாக கேட்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார் எம்.ஜி.ஆர். ஒருமுறை* இரண்டு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளில்*தலைமை பொறுப்பை யார் ஏற்றுக் கொள்வது , பொறுப்புகளை யார் பகிர்ந்து கொள்வது என்பதில் ,பிரச்னைகள், குழப்பங்கள் ஏற்பட்டு , இரண்டு அமைப்பினரும் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை சந்திக்க சென்றனர் . உங்களுக்குள் சமாதானம் ஏற்பட்டு பொறுப்புகளை பகிர்வதில் தொடர்ந்து சண்டை சச்சரவுகள் செய்தால் அந்த மன்றங்களை கலைப்பதை தவிர வேறு வழியில்லை என்றார் எம்.ஜி.ஆர். அதை கேட்ட ஒருவர் உரிமையுடன்* ,தலைவரே உங்களுக்காக தான் மன்றங்கள் செயல்படுகின்றன . நாங்கள்தான் மன்றங்களை உருவாக்கினோம் . நாங்களே பிரச்னைகளை தீர்த்து கொள்கிறோம் . மன்றங்களை நீங்கள் கலைக்கும் அளவிற்கு நிலைமை நீடிக்காது என்றார் .அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர் .மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வாசகத்தை எம்.ஜி.ஆர். மதித்தார் .அவரே சொல்லியிருக்கிறார் என்னவென்றால் ஆலந்தூர் மோகனரங்கம் துவக்கிய அ.தி.மு.க .வில் நானும் ஒரு தொண்டனாக* என்னை இணைத்துக் கொண்டேன் என்று .ஒருபோதும்* . தான் ஒரு தலைவன் என்ற மமதையில் எப்போதும் தொண்டர்களிடம் எம்.ஜி.ஆர். பேசியதில்லை .*தொண்டர்கள்தான் அவரை தலைவர் என்று அழைப்பார்கள் .பல ஊர்களுக்கு ,நகரங்களுக்கு, கிராமங்களுக்கு எம்.ஜி.ஆர். தேர்தல்* பிரச்சாரத்திற்காகவும் , கட்சி பொது கூட்டத்திற்காகவும் , அரசு சார்பில் நடக்கும் விழாக்களுக்கும் செல்லும்போது முதலமைச்சர் வருகிறார் என்பதைவிட ,எம்.ஜி.ஆர். வருகிறார் என்று சொல்லப்படுவதைத்தான் பெரிதும் விரும்புவார் .காரணம் அரசு பதவி, முதல்வர் பதவி என்பது 5 ஆண்டுகள் மட்டுமே , எம்.ஜி.ஆர். என்ற சொல்தான் எப்போதும் நிரந்தரம் என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறார் .  ஒருமுறை சிலம்பு செல்வர் ம .பொ.சிவஞானம் அவர்கள் வரவேற்று* பேசும்போது எங்கள் முதலமைச்சரே வருக என்று* சேலம் அருகே உள்ள ஒரு ஊரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில்* பேசினார் . மேடையில் இருக்கும் ஒருவர் அப்போது எப்படி எம்.ஜி.ஆர். அவர்களை எங்கள் முதலமைச்சரே வருக என்று அழைக்கலாம் . அவர் அனைவருக்கும் பொதுவானவர் , ஒரு மாநிலத்தின் முதல்வர் ,எப்படி நீங்கள் சொந்தம் கொண்டாடலாம் என்றார் .பதிலுக்கு ம.பொ.சி.அவர்கள் நாம் ஒரு பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு செல்லும்போது குழந்தையிடம் பரிசு பொருள் கொடுத்தபின்**தூக்கி கொஞ்சும்போது ,என் செல்லமே, என் தங்கமே என்று கொஞ்சவில்லையா அதுபோலத்தான் என்று நினைத்துக் கொள்ளுங்கள் அந்த* கண**நேரத்தில் அந்த குழந்தை நமக்கு சொந்தம் என்பது போலஒரு பாவனையில் கொண்டாடி*மகிழ்ச்சி அடைகிறோம் இல்லையா* அது போலத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழகத்தின் முதல்வராக இருந்தாலும்கூட , மாநிலத்தின் எந்த பகுதிக்கு செல்கிறாரோ, அந்த மண்ணின் மக்கள் அவரை சொந்தம் கொண்டாடுவதை*யாரால் தடுக்கமுடியும் என்றார் .**  ஒரு மாநிலத்தில் மக்கள் தங்கள் பிரச்னைகளுக்காக உரிமையோடு மாநில முதல்வரை அணுகி கோரிக்கைகள் வைக்கலாம்* கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் போராடலாம் . ஆனால் ஒரு மாநில முதல்வரே மக்களின் பிரச்னைக்காக* மத்திய அரசு போதிய அளவு அரிசி* வழங்க மறுத்ததற்காக*சென்னை கடற்கரையில் எம்.ஜி.ஆர். ஒருநாள் முழுதும் உண்ணாவிரதம் கடைபிடித்தார் . அந்த நிகழ்ச்சியில் பல தாய்மார்கள் எம்.ஜி.ஆர். அவர்கள் இடையில்* ஒரு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததை சைகை மூலம் மறுத்து , மத்திய அரசின்* ஒப்புதல் கிடைத்ததும்*உண்ணாவிரதத்தை* முடித்துக் கொண்டு இறுதியில் கொஞ்சம் பழச்சாறு சாப்பிட்டார் .அதாவது மக்கள் பிரச்னையை மத்திய அரசின் முன்வைத்து போராடும்போது* அந்த பிரச்னைகள் சுமுகமாக முடியவேண்டும் என்பதில்தான்*தீர்மானமாக இருந்தார் எம்.ஜி.ஆர். என்பதற்கு இது ஒரு உதாரணம் .  எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலர், திரைப்படங்களில் அவர் போதித்த பல நல்ல குணங்களை பின்பற்றி நடந்து வருகிறார்கள் .உதாரணமாக உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அவருடன் நடித்த தாய்லாந்து நடிகை மேத்தா ரூங் ராத் (பச்சைக்கிளி முத்துச்சரம் என்கிற புகழ் பெற்ற பாடலில் நடித்தவர் ) இப்போது அவர் முதிய பெண்மணி ..இந்த முதுமையான வயதிலும் ,அவர் தாய்லாந்தில் உள்ள மருத்துவமனைகளில் மது அருந்துவது, புகை பிடிப்பது ஆகியவற்றிற்கு எதிராக* பிரச்சாரம் செய்துகொண்டு வருகிறாராம் .இதுதான் எம்.ஜி.ஆர். விதைத்துவிட்டு போன விதையின் ,விருட்சத்தின் நிழல்*


  எம்.ஜி.ஆர். பள்ளி படிப்பு அதிகம் படிக்காதவர் என்றாலும் ,அவரது வீட்டு நூலகத்தில் தமிழகத்தில் வந்த*, இலக்கியத்தில் மிகப்பெரிய பேர் வாங்கிய ஜாம்பவான்கள் அடங்கிய மணிக்கொடி புத்தகங்களின் தொகுப்பு கைவசம்* இருந்தது .இவை ஒரு அரிய தகவல்கள் அடங்கிய பொக்கிஷங்கள் .எம்.ஜி.ஆர். என்கிற பெயர் ஒரு தன்னம்பிக்கை,ஒரு மந்திரச்சொல், ஒரு உற்சாகம் .ஒரு உந்துசக்தி .இந்த மந்திர சொல்லை பூஜித்து கொண்டிருப்பவர்கள் ஏராளம், ஏராளம் .அவர்களெல்லாம் இந்த சகாப்தம் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து ஊக்கமும், உற்சாகமும் தந்து வருகிறார்கள் .* தொடர்ந்து நாம் அந்த மாமனிதரின் வாழ்க்கை கனவுகளை , நனவாக்க, பயணப்பட்டு , சிந்திப்போம், பேசுவோம், செயல்படுவோம் .மேலும் தகவல்கள் அறிய அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்*

  நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
  -----------------------------------------------------------------------------------
  1. என்னை தெரியுமா, நான் சிரித்து பழகி* *- குடியிருந்த கோயில்*

  2.நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற - இதயக்கனி*

  3.நான் உங்கள் வீட்டுப்பிள்ளை - புதிய பூமி*

  4.நகரசபை கூட்டத்தில் எம்.ஜி.ஆர். - நம் நாடு*

  5.வீராங்கன் - மார்த்தாண்டன் சந்திப்பு - நாடோடி மன்னன்*

  6.பச்சைக்கிளி முத்துச்சரம் ,முல்லைக்கொடி -உலகம் சுற்றும் வாலிபன்*

  7.காஷ்மீர் பியூட்டி புல் காஷ்மீர்* *- இதய வீணை*

  8.விழியே, விழியே உனக்கென்ன வேலை - புதிய பூமி*

 7. #366
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,383
  Post Thanks / Like
  தனியார் டிவிக்களில் நடிக*மன்னன் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்* 01/08/20*முதல் 07/08/20 வரை ஒளிபரப்பான*விவரங்கள்*
  --------------------------------------------------------------------------------------------------------------------------
  01/08/20* - முரசு டிவி - மதியம் 12 மணி /இரவு 7 மணி - பெற்றால்தான் பிள்ளையா*

  02/08/20* -மெகா 24 - பிற்பகல் 2.30 மணி - தாய் சொல்லை தட்டாதே*

  03/08/20 - சன் லைப் - காலை 11 மணி - இதயக்கனி*

  * * * * * * * * * *முரசு டிவி -மதியம் 12மணி/இரவு 7 மணி -ஆனந்த ஜோதி*

  * * * * * * * * *கிங் டிவி* - பிற்பகல்* 2 மணி* - அன்பே வா*

  * * * * * * * *பாலிமர் டிவி - பிற்பகல் 2 மணி - இன்றுபோல் என்றும் வாழ்க*

  * * * * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி - தனிப்பிறவி*

  04/08/20* -சன் லைப் - மாலை 4 மணி - உழைக்கும் கரங்கள்*

  * * * * * * * *புதுயுகம் டிவி* -இரவு 7 மணி - சங்கே முழங்கு*

  *05/08/20- சன் லைப் -காலை 11 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*

  * * * * * * *தமிழ் மீடியா* - பிற்பகல் 2 மணி - மதுரை வீரன்*

  * * * * * * *மெகா 24 -* இரவு 9 மணி - தாய்க்கு பின் தாரம்*

  * * * * * * * வேந்தர் டிவி - இரவு 10.30 மணி - தனிப்பிறவி*

  06/08/20 - ஜீ திரை - அதிகாலை 4.30 மணி - பறக்கும் பாவை*

  * * * * * * * * முரசு டிவி - மதியம் 12 மணி /இரவு 7 மணி - தொழிலாளி*
  ** * * * * * * புதுயுகம் டிவி - இரவு 7 மணி - தர்மம் தலைகாக்கும்*

  07/08/20 - சன்* லைப் - காலை 11 மணி* - எங்கள் தங்கம்*

  * * * * * * * * *சித்திரம் டிவி -காலை 11 மணி /மாலை 6 மணி - அபிமன்யு*

  * * * * * * * *மீனாட்சி* டிவி- மதியம் 12 மணி - நல்ல நேரம்*

  * * * * * * * *விஷ்ணு டிவி* - பிற்பகல் 2.30 மணி - படகோட்டி**

 8. #367
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,099
  Post Thanks / Like
  திமுகவை போல அலட்டிக் கொள்ளாமல் சரித்திர சாதனை படைத்த எம்.ஜி.ஆர்..!  'இதில் வேடிக்கை என்னவென்றால், இடையில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்து போன தி.மு.க.வால் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டங்கள் எதிலும் கைவைக்க முடியவில்லை.*  சாமான்யருக்கான சமூகத் திட்டங்கள். எம் ஜி ஆர் கொண்டு வந்த நலத் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள், கடுமையான விமர்சனங்கள், கண்டனங்களை முன்வைத்தன. எல்லாரும் சொன்ன பொதுவான குற்றச்சாட்டு - 'அரசுப் பணம் வீணாகிறது'. 'இலவசங்கள் கொடுத்து அரசுக் கருவூலத்தைக் காலி செய்கிறார்'!*
  இந்தப் புகார்களுக்கு எல்லாம், பல்லாண்டுகளுக்கு முன்பே பதில் கூறி விட்டார் எம்.ஜி.ஆர். தனது சொந்தத் தயாரிப்பான 'நாடோடி மன்னன்' படத்தில் கூறுவார்:'மக்களிடம் இருந்து பெற்ற வரிப் பணத்தை மக்களுக்காகச் செலவிடுகிறோம்.'இதில் வேடிக்கை என்னவென்றால், இடையில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்து போன தி.மு.க.வால் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டங்கள் எதிலும் கைவைக்க முடியவில்லை. காரணம், இவற்றால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட நற்பயன்கள். உதாரணத்துக்கு, சத்துணவுத் திட்டம். சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் இரத்த வாந்தி எடுத்தனர் என்றெல்லாம், தனது ஆதரவு நாளிதழ் மூலம், பீதியைப் பரப்பியவர்கள், ஆட்சிக்கு வந்து ஏன் அந்தத் திட்டத்தைக் கைவிடவில்லை..? வலுவான காரணம் இருந்தது.*

  சத்துணவுத் திட்டம் அமலாக்கப்பட்ட முதல் ஆண்டில், சுமார் 2,63,000 குழந்தைகள் புதிதாக பள்ளிகளில் சேர்ந்தனர். அடுத்த ஆண்டில், 2,68,000 பேர் சேர்ந்தனர். எம்.ஜி.ஆர். மறைந்த 1987இல், தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 100% என்று உச்சத்தைத் தொட்டு இருந்தது. 'பள்ளிக் கூடத்தின் பக்கம்' போகாதவர்களே இல்லை என்கிற நிலையை ஏற்படுத்தியது எம்.ஜி.ஆர். ஆட்சி. இந்தச் சாதனையில், சத்துணவுத் திட்டம் மிக முக்கிய பங்கு வகித்தது.*
  இதேபோன்று, மேலும் பல திட்டங்களும் காரணம் ஆகும்.
  அவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது - பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச காலணி திட்டம். தமிழ்நாட்டில் பல ஊர்களில் பல பகுதிகளில் சாதிய அடக்குமுறை மேலோங்கி இருந்தது.காலில் செருப்பு அணிந்து கொண்டு ஊருக்குள் நடந்து செல்ல முடியாத அவலநிலை இருந்தது. மாற்றி அமைக்க எண்ணினார் எம்.ஜி.ஆர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசக் காலணி வழங்கினார். அதனை அணிந்து கொண்டு,'எம்.ஜி.ஆரு குடுத்தது' என்று ஆனந்தமாய்க் கூறியபடி ஊருக்குள் சுற்றி வர முடிந்தது. மௌனமாய் ஒரு மிகப் பெரிய சமுதாயப் புரட்சியை நடத்திக் காட்டினார் மக்கள் திலகம்.*
  சாதிக்கு எதிராகப் போராடுவதாக சொல்லிக் கொல்லும்... மன்னிக்கவும், சொல்லிக் கொள்ளும் கட்சி, தான் ஆட்சியில் இருந்த போது செய்யத் துணியாத காரியத்தை, எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி, எவருடைய எதிர்ப்பும் இல்லாமல், அமைதியாக செய்து முடித்தார் எம்.ஜி.ஆர். சாதிகளை மறந்து அ.தி.மு.க. பக்கம் மக்கள் நிற்பதற்கு முழுமுதற் காரணமே சாதிகளைக் கடந்த அதன் பார்வைதான். எம்.ஜி.ஆர். இட்ட அடித்தளம், ஜெயலலிதா எழுப்பிய கற்கோட்டை, மக்களின் பேராதரவு பெற்று விளங்குவதற்குக் காரணமே சாதிகளுக்கு அப்பாற்பட்டு எல்லாருக்கும் பொதுவான இயக்கமாக அது இருப்பதுதான்.*
  இந்தச் சமயத்தில் சத்துணவு திட்டம் குறித்த இன்னொரு தகவலையும் குறிப்பிட வேண்டும். *இந்தத் திட்டம் அறிமுகமான ஆண்டிலேயே, 17.4 லட்சம் (13.7%) *எஸ்.சி., எஸ்.டி. பிள்ளைகள், இதனால் பயன் பெற்றனர்; ஒரு மிகப் பெரிய சமூக, பொருளாதார பிரசினைக்கு சுமுகமான நிரந்தரத் தீர்வு கண்டார் எம்.ஜி.ஆர்.
  சாதிய ஏற்றத் தாழ்வுகளை முற்றிலுமாகக் களைந்து சமதர்ம சமுதாயமாகத் தமிழ்நாடு மலர வேண்டும் என்பதில், உண்மையான அக்கறை கொண்ட இயக்கமாக அதிமுக இருப்பதால், அனைத்து சாதிப் பிள்ளைகளும் ஆரோக்கியத்துடன், தரமான கல்வி பெற்று வாழ்க்கையில் உயர்வதற்கான*திட்டங்களை அடுக்கடுக்காய் நிறைவேற்றி வருகிறது.
  பெருந்தலைவர் காமராஜர் ஆற்றிய அரும் பணியால் 1976-77இல், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் 942 இருந்தன. இவற்றில் உயர்நிலைப் பள்ளிகள் (High Schools) 21; நடுநிலைப் பள்ளிகள் - 80; தொடக்கப் பள்ளிகள் - 841. *இந்தச் சிறப்புப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 1,65,822 பேர். எம்.ஜி.ஆர். அமரரான போது என்ன நிலைமை..? எந்த அளவுக்குத் தரம் உயர்த்தப் பட்டன பாருங்கள்: மேல்நிலைப் பள்ளிகள் - 963; உயர்நிலைப் பள்ளிகள் - 51; தொடக்கப் பள்ளிகள் - 844. மொத்தம் - 963. பயன் பெற்றவர்கள் - ஆண் பிள்ளைகள் - 124503; பெண் பிள்ளைகள் - 104018. மொத்தம் - 2,28,521.*
  இப்பள்ளிகளில் 1 - 8ஆம் வகுப்பு படித்த அத்தனை பேருக்கும், ஆண்டுதோறும் இலவச சீருடைகள், இரண்டு வழங்கப்பட்டன. அரசு நடத்திய விடுதிகளில் ('ஹாஸ்டல்') தங்கிப் படித்த அனைவருக்கும் கூட இலவச சீருடை வழங்கப் பட்டது. இலவச புத்தகங்கள், நோட்டுகள் வழங்கும் திட்டம் அமலாக்கப் பட்டது.
  தொழிற் பயிற்சி பெறுவோருக்கு தொழிர்கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) திட்டமும் அறிமுகப் படுத்தப் பட்டு, 5,50,000 பேருக்கு உதவி தரப் பட்டது.*
  ஆதி திராவிட மாணவர் விடுதிகள் 743 இயங்கின; இவற்றில் கல்லூரி மாணவர்களுக்கு- 48; தொழிற் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு 8. இங்கே மொத்தம் 47,040 பேர் தங்கிப் படித்து, தமது அறிவாற்றலால் வாழ்க்கையில் உயர்ந்தனர்.1977 தொடங்கி 1987 வரை ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 15 விடுதிகள் கட்டப்பட்டன. ஆதி திராவிடர் நலனுக்காக வீடுகள் கட்டித் தரப் பட்டன. ஒரு அலகுக்குக் கட்டிட செலவு ரூ 4000 என்று முந்தைய அரசு வைத்து இருந்தது.*எம்.ஜி.ஆர். அதனை ரூ 10,000 என்று கணிசமாக உயர்த்தினார். இதன் மூலம் தரமான உறுதியான வீடுகள் கட்டித் தர முடிந்தது. எம்.ஜி.ஆர் ஆண்ட 10 ஆண்டுகளில், 61,000 வீடுகள் கட்டி முடித்து பயன்பாட்டுக்கும் வந்தன.*
  நிறைவாக, ஆதி திராவிடர் குடியிருந்த பகுதிகளில் தரமான குடிநீர் வசதி செய்து தருவதிலும் எம்.ஜி.ஆர். தனிக் கவனம் செலுத்தினார். அப்போதைய கணக்குப்படி, தமிழ்நாட்டில் 25000 குடியிருப்புகள் இருந்தன; இவற்றில், 23,311 பகுதிகளில் குடிநீர்க் கிணறுகள், மேல்நிலைத் தொட்டிகள் அரசால் நிறுவப் பட்டன. இதுவும் எம்.ஜி.ஆர். ஆட்சியின் மிகச் சிறந்த மக்கள் நலத் திட்டமாகும். *
  *

  இத்தொடரை வாசிப்பவர் யாரும் தயவு கூர்ந்து, சாதி அடிப்படையிலான தகவலாக இதனைப் பார்க்க வேண்டாம். சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பகுதிகள், தாழ்த்தப்பட்ட மக்கள் நோக்கிய எம்.ஜி.ஆர். பார்வையும் செயல்பாடுகளும் எப்படி இருந்தன என்பதைப் பதிவு செய்யவே இந்த விளக்கங்கள். எல்லாப் பிரிவினருக்கும் பொதுவான தலைவராக விளங்கும் எம்.ஜி.ஆர். கடைப்பிடித்த அரசியல் நாகரிகம் குறித்தும் பார்த்து விடலாமா..? *

 9. #368
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,099
  Post Thanks / Like
  மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகப்பெருமக்களை கொண்டிருந்தார். அவர் வேற்று மொழிப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும் அவருடைய படங்களை மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்கள். தமிழில் இருந்து
  தெலுங்கு மற்றும் இந்தி மொழியில்
  டப் செய்து வெளியிட்டார்கள்.

  எல்லா மொழிகளிலும் அவர் படங்கள் இணையற்ற வெற்றியை பதிவு செய்தது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் "அடிமைப்பெண்" ஹிந்தியில் "கோயி குலாம் நயி". என்ற பெயரில் டப் செய்து கல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் 10 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டார்கள் படம் 50 நாட்களை தாண்டி ஓடி
  ஒரிஜினல் ஹிந்தி படங்களை காட்டிலும் நல்ல வெற்றியை பதிவு செய்தது. ஆனால் "தர்த்தி" என்ற நேரடி ஹிந்தி படம் பார்க்க ஆளில்லாமல் பரிதவித்த கதை அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

  "நாடோடி மன்னன்".
  வெற்றி காவியத்தை ஆங்கில விளக்கத்துடன் லண்டனில் திரையிட்டு சுமார் 8 வாரங்களுக்கு மேல் ஓடி வெற்றியை பதிவு செய்து
  வெற்றி விருதையும் பெற்று தந்தது. அவர்கள் கொடுத்த விருதை வாங்க மக்கள் திலகம் லண்டன் சென்று தம்பட்டம் அடிக்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து பெற்ற விருதினை நாவலர் நெடுஞ்செழியனிடமிருந்து எந்தவித ஆர்ப்பாட்டமும்
  இல்லாமல் தலைவர் பெற்றுக் கொண்டது அவரது தன்னடக்கத்தை
  காட்டுகிறது.

  இலங்கை, சிங்கப்பூர், பர்மா, ரஷ்யா முதலான நாடுகளிலும் மக்கள் திலகத்தின் படங்கள் பல வெற்றிகளை குவித்துள்ளது. சிலர் நேரடி இந்தி தெலுங்கு மலையாளம் என மாற்று மொழிப்படங்களில்
  நடித்தும் அந்தந்த மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டு தாய்மொழிக்கே திரும்பி வந்து உலகப்பெரும் நடிகன் என்று தற்பெருமை பேசுபவர்கள் மத்தியில் எந்த தற்பெருமையும் கொள்ளாமல் மாற்று மொழியில் மதிப்பிருந்தும் தமிழுக்கே தன்னை அர்ப்பணித்து கொண்டது தமிழ் மக்கள் செய்த பாக்கியமே. மற்ற எல்லா மொழிகளிலும் உலகப் பெரும் நடிகனின் நடிப்பை உதாசீனப்படுத்தியது மிகுந்த கண்டனத்துக்குரியது. இவரைவிட அவர்கள் மொழியில் சிறந்த நடிகர்கள் இருந்தார்களோ? என்னவோ? நமக்கேன் அடுத்த மாநில வம்பு.

  தனக்கு வந்த பத்ம விருதையும் பாரத் விருதையும் மறுத்து திருப்பி அனுப்பியவர் அல்லவா? "அடிமைப்பெண்" படத்துக்காக பிலிம்பேர் அவார்டும் கிடைத்தது. விருதுகள்தான் மக்கள் திலகத்தை தேடிவருமே தவிர விருதுகளை தேடி அவர் என்றுமே போனதில்லை.

  உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட இந்தி படமொன்று வடக்கில் படுதோல்வி அடைந்ததுடன் பெரும் நஷ்டத்தை உண்டு பண்ணியது அதன் தயாரிப்பாளருக்கு. இதைத்தான் குதிரை கீழே விழுந்ததுடன் நில்லாமல் குழியையும் பறித்தது என்பார்கள்.ஆனால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரம், மகாராஷ்டிரா, வங்கம் போன்ற மாநிலங்களிலும் வெற்றி கொடி நாட்டியதுடன் அங்கும் தமிழ்படத்துக்கு நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தவர் மக்கள் திலகம் எனலாம்.

  இலங்கையில் மக்கள் திலகத்தின் படங்களுக்கு தனி மரியாதை உண்டு. ரஷ்யாவில் "ரகசிய போலீஸ் 115" படத்தில் வரும் சண்டை காட்சிகளை பார்த்து விட்டு ஒன்ஸ்மோர் கேட்டதாக செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இப்படி கடல்கடந்தும் தன்னுடைய வெற்றி கொடியை பறக்கவிட்ட மக்கள் திலகம் என்றுமே அகந்தை கொண்டதில்லை.

  சிலர் வெளிநாட்டில் வற்புறுத்தி வாங்கிய விருதை
  வைத்துக்கொண்டு
  தம்பட்டம் அடிப்பதை பார்த்து நாடே கைகொட்டி சிரிக்கிறது என்கிறார்கள். காரணம் என்னவென்றால் அதன்பிறகும் அதற்கு முன்பும் இப்படிப்பட்ட ஒரு விருதை யாரும் கேள்விபட்டதில்லை.
  தெரிந்தால் சொல்லவும் அதற்கு முன்பு யார் யார் வாங்கினார்கள்? பின்பு யார் யார் வாங்கினார்கள்? என்று. அப்படியானால் தான் விருதின் தரத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

  இல்லை, அந்த ஆண்டு மட்டும்தான் பிரத்யேகமாக விருது கொடுக்கப்பட்டதா? என்ற விபரங்கள் தெரிய வரும். நாசர் எகிப்தின் அதிபராக இருக்கும் போது எகிப்திந்திய உறவுக்காக காங்கிரஸில் இருந்த ஒருவருக்கு கலாசார விருதாக கொடுக்கப்பட்டதா? அந்த ஆண்டோட அவருடைய நடிப்பு நின்று போய் விட்டதா? ஏன் அடுத்தடுத்து ஆண்டுகளில் அவருக்கு கிடைக்கவில்லை?

  இல்லை, இவரை விட சிறந்த நடிகர் கிடையாது என்பதற்காக விருது கொடுப்பதை நிறுத்தி விட்டார்களா? அதுவும் ஒரு நாடக சினிமாவுக்கு வெளிநாட்டில் விருது
  கொடுக்கிறார்களா? அப்படியானால்
  ஆஸ்கர் விருது ஏன் அந்த படத்துக்கு கொடுக்கப்படவில்லை என்ற காரணமும் புலப்படும். ஒரு தமிழனுக்கு உலகப்பெரும் விருது கிடைத்தால் மகிழ்ச்சி அடையும் முதல் தமிழன் நாமாகத்தான் இருக்க முடியும்.

  இது நமக்கே தெரியவில்லை, அப்பாவி தமிழர்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும்.? இதை பார்த்து விட்டு ஆத்திரம் அடைவதை விடுத்து தகுந்த விபரங்களை. ஆதாரங்களுடன் அளித்தால் நமக்கும் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இல்லையென்றால் கல்யாண பரிசு தங்கவேல் m சரோஜாவின் "உங்களை யாரோ பூக்கடையில் பார்த்ததாக சொன்னாங்களே". காமெடி காட்சி தான் ஞாபகத்துக்கு வரும்..........

 10. #369
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,099
  Post Thanks / Like
  கிறிஸ்தவ மதமும் மக்களும்!*

  எம்.ஜி.ஆர் தன் படங்களில்
  சிலுவையில் அறைந்த இயேசு
  கிறிஸ்துவைப் பல காட்சிகளில்
  காட்டியிருக்கிறார். எங்கள் தங்கம்
  படத்தில் அவர் ஒரு கம்பை குறுக்கே
  பிடித்துக்கொண்டு நிற்பது கூட நிழல் காட்சியாக சிலுவை இயேசு போல காட்டப்படும்.
  ரிக் ஷாக்காரன்
  படத்தில் அங்கே சிரிப்பவர்கள்
  சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
  என்ற பாட்டில் அவர் சிலுவை இயேசு சிலையைக் கட்டிப்
  பிடித்து நிற்கும் காட்சி வரும்.
  எம்.ஜி.ஆர் தான் நடித்த ஜெனோவா
  படத்தில் சிப்ரஸ் நாடு மன்னனாக
  நடித்திருப்பார். அந்தப் படத்தில் மட்டும் அவர் முழங்காலிட்டு பைபிள் வாசிப்பது போன்ற காட்சி உண்டு.

  பரமபிதா என்ற பெயரில் அவரை
  இயேசுவாக நடிக்கவைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டனர். ஆனால், அவரை
  சவுக்கால் அடித்து அவர் தலையில்
  முள்கிரீடம் வைத்து அழுத்துவதை
  ரசிகர்கள் காணப் பொறுக்க
  மாட்டார்கள். திரையைக் கிழித்து
  விடுவர் என்று திரையரங்க
  உரிமையாளர்கள் தெரிவித்ததால் படம் எடுக்கும் முயற்சி கை விடப்பட்டது.

  ஷூட்டில் எடுக்கப்பட்ட
  எம்.ஜி.ஆர் இயேசுவாக தோற்றம் தரும்
  படம் கேரளாவில் பலர் வீடுகளில்
  மாட்டப்பட்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் ‘என்னப்பா
  உயிரோடு இருக்கும்போதே என் படத்துக்கு பத்தி
  கொளுத்துகிறார்களா’ என்று
  சிரித்தாராம்.

  எம்.ஜி.ஆர் சினிமாவில் ஏழ்மையான
  சூழ்நிலையில் இருக்கும் தன் வீட்டை காட்டும் போது அந்த வீட்டில்
  திருவள்ளுவர் பாரதியார் அறிஞர்
  அண்ணா ஆகியோர் படங்களோடு
  இயேசு கிறிஸ்து படத்தையும்
  மாட்டியிருப்பார். இதனால்
  கிறிஸ்தவர்கள் அவரை சீக்ரெட்
  கிறிஸ்ட்டியன் என்றே சொல்ல
  ஆரம்பித்துவிட்டனர்.

  அவர் தனிக் கட்சி
  ஆரம்பித்ததும் கிறிஸ்தவர்கள் பலரும் அவரது ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர்.
  எம்.ஜி.ஆர் முதல்வரானதும்
  அமெரிக்கன கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் நோவா அவரைப்
  பார்த்து சிறைகளில் ஊழியம் செய்ய
  அனுமதி கேட்டார். எம்.ஜி.ஆரும்
  சம்மதித்தார்.

  அப்போது நோவா
  அவர்கள் சிறைகளில் கழிப்பறை வசதி
  தேவை என்று கேட்டதும் எம்.ஜி.ஆர்
  உடனே செய்து தருவதாக
  ஒப்புக்கொண்டார்.

  எம்.ஜி.ஆர்
  காலத்தில்தான் சிறை கைதிகளின்
  அறைகளுக்குக் கழிப்பறை வசதி
  கிடைத்தது. அதுவரை அறையில்
  வைக்கப்பட்ட சட்டிகளில்தான் அவர்கள்
  இரவில் சிறுநீர் மலம் கழித்தனர்.
  மறுநாள் அதை கொண்டு போய்
  கொட்டிவிட்டு சுத்தம் செய்து
  கொண்டு வந்து வைத்துக் கொண்டனர்.

  எம்.ஜி.ஆர் டிசம்பர் 24 நாளன்று இரவில்
  ஒரு மணி வரை உயிரோடு
  இருந்ததாக சில செய்திகள் வந்த
  போது கிறிஸ்தவர்கள் பலர் அவர்
  கிறிஸ்துமஸ் அன்று மறைந்ததாகவே
  கருதினர்.

  எம்.ஜி.ஆர் மீதிருந்த
  நன்மதிப்பு காரணமாக அவர்
  கிறிஸ்தவர் அதிகமாக வாழும்
  சாத்தான் குளம் தொகுதியில்
  நீலமேகம் என்ற இந்துவை
  நிறுத்தியபோதும் அங்கு வாழ்ந்த
  கிறிஸ்தவர்கள் இரட்டை இலைக்கு
  வாக்களித்து அவரை வெற்றி பெறச்
  செய்தனர். .........

 11. #370
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,383
  Post Thanks / Like
  பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 21/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
  ---------------------------------------------------------------------------------------------
  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி அவரது ரசிக பெருமக்களும் , பக்தர்களும் அன்றாடம் அவரை போற்றி புகழ்ந்து* பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் .சகாப்தம் நிகழ்ச்சியில் அவரது அரிய தகவல்கள் பற்றி அறிந்து ,வாழ்த்து செய்திகளும், நெகிழ்வான பாராட்டுக்களும் வந்த வண்ணம் உள்ளன*இன்றைய அத்தியாயம் 90 வது* நிகழ்ச்சி .விரைவில் இந்த நிகழ்ச்சி சதம் ,/100 வது நாளை (அத்தியாயத்தை ) உங்களது பேராதரவுடன்* காண போகிறது*


  1982ல் தமிழக முன்னாள் முதல்வர் அறிமுகப்படுத்திய சத்துணவு திட்டத்தின்*வெற்றி, வளர்ச்சியைக் கண்டு உலக நாடுகள் பெரிதும் பாராட்டின .இந்த மாபெரும் திட்டம்* மனிதாபிமான மிக்க**எம்.ஜி.ஆர். அவர்களுக்கு* சிறு வயதிலேயே* பசி கொடுமையை அனுபவித்ததன் காரணமாக ஆட்சிக்கு வந்ததும் எந்த குழந்தையும் தன்னைப்போல பசி கொடுமையை சிறு வயதில்* அறியக்கூடாது என்று திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது . எத்தனை முறை பசி எடுத்தாலும் ,, அத்தனை* முறை அந்த பந்தியில் உட்கார்ந்த பிறகு ,எழுப்பி வெளியே அனுப்புகின்ற அவமானத்தை சிறு வயதிலேயே அனுபவிக்கும்போது தன் மனம் என்ன பாடுபட்டது என்பதை அறிந்தவர்*எம்.ஜி.ஆர். நாடகத்தில்தான் உனக்கு இன்று வேடம் இல்லையே, வேடம் போடுபவர்களுக்குத்தான் இன்று* முதலில்**சாப்பாடு . இன்று உனக்கு வேடமில்லை. எனவே* உனக்கு கடைசியில்தான் சாப்பாடு என்று பரிகசிக்கப்பட்டவர் , வெளியேற்றப்பட்டவர் என்கிற வருத்தம் நாடகத்துறையில்* எம்.ஜி.ஆருக்கு உண்டு .பசி கொடுமையை உணர்ந்தவர் எம்.ஜி.ஆர். என்பதால்தான்**குழந்தைகள் பசியை போக்கும் இந்த மாபெரும் திட்டத்தை தாரக* மந்திரமாக செயல்படுத்தினார் .**


  1973ல் கட்சி ஆரம்பித்த புதிதில் ,ஒரு இடத்தில மதிய உணவு திட்டத்தை துவக்கி வைத்தார் என்பது பலரும் அறியாத விஷயம் .அப்போது லயோலா கல்லூரியில்*முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.சி.டி.பிரபாகரன் படித்து வந்தார் .அவருடன் படித்த தாம்பரத்தில் இருந்து வரும்* மாணவர் ஒருவர்* மதிய உணவு பெரும்பாலும்* சாப்பிடுவதில்லை என்று அறிந்தார் .இதுபற்றி அந்த மாணவரிடம் கேட்டபோது , என் தாயார் வீட்டு வேலைகள் செய்வதற்காக காலையில் புறப்பட்டு சென்று மாலையில்தான் வீடு திரும்புவது வழக்கம் . எனவே மதிய உணவு அவரால் தயார் செய்து தரமுடியாததால் நான் சாப்பிட முடியவில்லை என்றார் .இதே போன்ற நிலை மேலும் பல மாணவர்களுக்கு உண்டு என்பதை அறிந்ததும் ,இதற்கு* நல்லதொரு தீர்வு காணவேண்டும் என்று விழைகிறார் .சுமார் 16 மாணவர்களுக்கு இந்த நிலைமை உள்ளது என்று தெரிந்து இவர்களுக்கு*நிரந்தரமாக மதிய உணவு அளிக்க வழிவகை செய்ய வேண்டும் . அதற்கான நிதி திரட்ட வேண்டும் என்று முடிவு செய்து, தான்* பற்றுக் கொண்டிருந்த தானை தலைவர் எம்.ஜி.ஆரை சந்திக்க சென்னை தி.நகர் , ஆற்காடு சாலையில் உள்ள அலுவலகத்திற்கு செல்கிறார் . அங்கு தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களை காண, பேச பெரும் கூட்டம் கூடியுள்ளது .கட்சி ஆரம்பித்திருந்த நேரம் என்பதால் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு, அரசியல் , கட்சி கூட்டங்கள் ,கட்சி பிரமுகர்களுடன்*ஆலோசனைகள் என்று மிகவும் பிசியாக இருந்த நேரம் . அப்போது தரை தளத்தில்* டேப் பக்தன் என்பவர் ,திரு.பிரபாகரனை பார்த்து, நீங்கள் லயோலா கல்லூரி மாணவர்கள்* என்று அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள் ,தலைவர் உங்களிடம் நிச்சயம் உடனே* அழைத்து**பேசுவார் என்று யோசனை தெரிவித்தார்அதன்படி பிரபாகரன் சுய அறிமுகம் செய்து கொண்டதும் ,எம்.ஜி.ஆர். உடனே அழைத்து பேசுகிறார் நீங்கள் எல்லாம் உணவருந்தி விட்டீர்களா என்று கேட்கிறார் .அவர்கள் அருந்திவிட்டோம் என்றவுடன்*. பிரபாகரன் தனது திட்டத்தை தெளிவாக எடுத்துரைத்தார் .


  என்னுடன் படிக்கும் மாணவர்கள் பலர் மதிய உணவு அருந்துவதில்லை .அவர்களுக்கு நிரந்தரமாக மதிய உணவு அளிப்பதற்காக வைப்பு நிதி திரட்டி*அதன்மூலம் அவர்களது மதிய உணவு பிரச்னையை தீர்க்கலாம் என்று முடிவு எடுத்துள்ளோம். அதற்கு நடிகர் நடிகைகளை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினால் ஓரளவு நிதி திரட்டலாம் என்று யோசனை தெரிவித்தார் பிரபாகரன் .எம்.ஜி.ஆர். நல்ல திட்டம், உடனே ஏற்பாடு செய்யுங்கள் என்று சம்மதம் தெரிவித்து*. என்றைக்கு நிகழ்ச்சி வைத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு அக்டொபர் 22 ம் தேதி என்று சொன்னார்கள் .விரைந்து ஏற்பாடுகளை செய்யுங்கள் .அந்த தேதியில் நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்கிறேன் என்றார் எம்.ஜி.ஆர். மாணவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி .நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். வருகை தருகிறார் என்று சொன்னாலேயே , மாணவர்கள் மத்தியில் கணிசமான அளவு நிதி திரட்ட முடியும், அத்துடன் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்* என்று திட்டமிடுகிறார்கள் .


  அ .தி.மு.க. ஆதரவு பத்திரிகையான தென்னகத்தில் எம்.ஜி.ஆர். கர்நாடக மாநிலம்,ஷிமோகாவில் படப்பிடிப்பில் உள்ளார் .எனவே சென்னைக்கு 22ம் தேதிக்கு பின்னர்தான் திரும்புகிறார் என்று செய்தி பிரசுரம் ஆகியிருந்தது என்பது அறிந்ததும் பிரபாகரன் உள்பட அனைத்து மாணவர்களும் பதறிவிட்டனர் .சென்னை பல்கலை கழக நூற்றாண்டு மண்டபத்தில் நிகழ்ச்சி ஒப்பந்தம் ஆகிவிட்டது .என்ன செய்வது என்ற குழப்பத்தில் ,எம்.ஜி.ஆர். எண்ணை* தேடிப்பிடித்து பிரபாகரன் ஷிமோகாவில் உள்ள எம்.ஜி.ஆர். தாங்கும் விடுதிக்கு போனில் தொடர்பு கொள்கிறார் . பத்திரிகை செய்தி பற்றி சொன்னதும் ,நான் ஏற்கனவே ஒத்துக்* கொண்டபடி கண்டிப்பாக 22ம் தேதி மாலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் . உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் என்று உறுதி அளித்தார் .மாணவர்கள் இதைக் கேட்டு ஜரூராக மற்ற பணிகளை கவனிக்கிறார்கள் .நடிகர் சங்கத்திடம் தொடர்பு கொள்ளும்போது ரூ.10,000/-கொடுத்தால்தான் நடிகர் நடிகைகள் கலந்து கொள்வார்கள் என்று நிர்பந்திக்கவே*ஒரு வழியாக நிதி திரட்டி பணம் கட்டுகிறார்கள் .* நிகழ்ச்சிக்கு மாலை 6 மணிக்கு எம்.ஜி.ஆர். சரியாக வந்துவிடுகிறார் . இந்த மதிய உணவிற்கான நிதி திரட்டும் ,பசியை போக்கும் திட்டத்திற்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு .என்கிறார் .மாணவர்களிடம் இருந்து நடிகர் சங்க நிர்வாகிகள் ரூ.10,000/- வாங்கியது தவறு .அதற்கு காசோலையாக என் சொந்த பணத்தில் இருந்து நான் தருகிறேன் என்று*நடிகர் சங்கத்திற்கு அளித்து, மாணவர்களின் பணத்தை திரும்ப பெற செய்தார் .இவ்வாறு* 1973ல்* லயோலா கல்லூரியில் மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். துவக்கி வைத்தார் என்பது வரலாறு .

  மேலும் தகவல்களுக்கு அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்*

  நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
  -------------------------------------------------------------------------------------
  1.அதோ அந்த பறவை போல - ஆயிரத்தில் ஒருவன்*

  2.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீனிவாசன் உரையாடல் -ரிக் ஷாக்காரன்*

  3.மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா - தாய்க்கு பின் தாரம்*

  4.எம்.ஜி.ஆர்.- நாகையா உரையாடல் -நம் நாடு*

  5.அன்னமிட்டகை பாடல்* - அன்னமிட்டகை*

  6.எம்.ஜி.ஆர்.- அசோகன் உரையாடல் - தொழிலாளி*

  7.எங்கே, என் இன்பம் எங்கே - நாடோடி மன்னன்*

  8.ஆண்டவன் உலகத்தின் முதலாளி - தொழிலாளி* .*

Page 37 of 84 FirstFirst ... 27353637383947 ... LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •