Page 16 of 210 FirstFirst ... 614151617182666116 ... LastLast
Results 151 to 160 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #151
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை நமதே !
    _________________
    மக்கள் திலகம் கட்சி தொடங்கிய நேரம் இரவும் பகலும் சந்து முனைகளில் கூட தொடர் கூட்டங்கள் ஆளுங்கட்சியின் இரும்புக்கரங்கள், சொல்லொண்ணா தொல்லைகள் !

    மக்கள் திலகத்திற்கு பணநெருக்கடி , வன்முறையால் தொண்டர்கள் மீது இரக்கமற்ற தடியடிகள்
    பாதித்த தொண்டர்களை காண தொடர் ஓட்டம் அப்பப்பா இயந்திரத்தை மீறிய கடும் உழைப்பு , தாங்க முடியாத மனஉளைச்சல் !

    இன்று தி மு க , அ தி மு க வில் உள்ள அனைத்து பதவிகளில் மக்கள் திலகத்தின் இரத்தம் உள்ளது !

    தி மு க , அ தி மு க வை சேரந்த அனைவரின் முன்னேற்றங்களுக்கும் மக்கள் திலகத்தின் உழைப்பே காரணம் இது சத்தியனான உண்மை !

    இத்தனை இடர்பாடுகளிலும் அவரால் சினிமாவில் கவலைகளின் ரேகைகள் தென்படாமல் நடித்துள்ளார் என்றால் இது நிச்சயம் உலக சாதனையே ! அதுவும் நாளை நமதே என்ற பாடல் உலகபிரசித்தி பெற்றது நீங்களும் பாருங்கள் ........ Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #152
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கருணை உள்ளமே .....புரட்சித்தலைவரின் உள்ளம் !!

    கிராமப்புறத்தில் பெண்கள் நீர் நிலைகளில் குளித்துவிட்டு , தங்களிடம் உள்ள "ஒரே" சேலையை பாதி அணிந்துகொண்டு மீதியை " வெயிலில்" நின்று காயவைத்து பின் அணிந்து கொள்கிறார்கள் என்பதால் முதல்வர் "மக்கள் திலகம்" MGR அவர்கள் , பண்டிகை நாட்களில் பெண்களுக்கு " இரண்டு சேலைகள் " வழங்க ஆணை பிறப்பித்தார்கள் ....

    #இனிய காலை வணக்கம்........ Thanks...

  4. #153
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
    நமது மக்கள் திலகம் முதல்வராக பதவியேற்ற புதிதில் 1977 ல் சென்னை கன்னிமாரா ஓட்டலலில் சில வெளிநாட்டு பிரமுகர்களை கௌரவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் விருந்தும் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து தலைவர் வீட்டுக்கு புறப்பட இரவு 11 மணி ஆகிவிட்டது. காரில் போய்க்கொண்டிருக்கும் போது டிரைவரிடம் " நீ சாப்பிட்டியா " என கேட்க அவரும் சாப்பிட்டேனய்யா என பதில் கூற அவர் சொன்ன பதிலால் சந்தேகம் வரவே என்ன சாப்பிட்ட சொல்லு என கேட்க டிரைவர் சில உணவுகளைச் சொல்ல .இந்த உணவு இன்றைய டின்னரில் பரிமாறவே இல்லையே உண்மையைச் சொல் சாப்பிட்டாயா இல்லையா என சற்று கோபத்துடன் கேட்க இல்லிங்கய்யா சாப்பிடலை எனக் கூற மற்ற டிரைவர்கள் சாப்பிட்டார்களா எனக்கேட்க "யாருமே சாப்பிடலய்யா "ஏன் அதற்கு பாதுகாப்பு அதிகாரி அரசு சார்பில் விழா நடந்தால் டிரைவர்களுக்கு சாப்பாடு கிடையாது எனக்கூற அவ்வளவு தான் முகம் கோபத்தில் ரத்த சிவப்பாகி மறுநாள் காலை தலைமச் செயலகம் வந்து எல்லா அலுவல்களையெல்லாம் ஒத்திப் போட்டு பொதுத்துறை, நிதித்துறை அதிகாரிகளை கூப்பிட்டார். முக்கிய பிரமுகர்கள். அதிகாரிகள். விருத்தினர்களுக்கு மட்டும் தான் வயிறு இருக்கிறதா? டிரைவர்களுக்கு இல்லையா ? அவர்களுக்கு பசிக்காதா? இது என்ன உத்தரவு ? யார் போட்டது? எனக் கேட்க அதிகாரிகள் விளக்க நேற்றைம விருந்தின்படி நபர் 1க்கு ரூ 256 மட்டுமே அனுமதி விருந்துக்கு வந்தவரை தவிர மற்றவர்கள் சாப்பிட முடியாது என தயங்கியபடியே சொல்ல இதை கேட்டும் சமாதானமடையாமல், இனி இதுமாதிரி விழா நடந்தால் டிரைவர்களுக்கும் உணவுக்கு வழி செய்திட வேண்டும் இந்தச் செலவுகளை அரசின் கணக்கில் எழுத முடியாதென்றால் கூறிவிடுங்கள் எனது சொந்த பணத்திலிருந்து கொடுக்கிறேன் இது முடியாதென்றால் என்னை அழைக்காதீர்கள் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார் இந்த சம்பவத்துக்கு பின் அரசாங்க டிரைவர்கள் விருந்துக்கு வந்தால் அவர்கள் தனியே சாப்பிடலாம் எனவும் அவ்வாறு சாப்பிடலைன்னா அந்த உரிய தொகை படியாக வழங்க முடிவு செய்யப்பட்டது. தங்களுக்காக முதல்வரே வாதாடினார் எனக் கேட்ட டிரைவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லேயே இல்லை. [நாளை போடப் போறேன் சட்டம் பாரு அது நாடு புகழும் திட்டம்] .எவ்வளவு தீர்க்கதரிசி நமது தெய்வம்........ Thanks..........

  5. #154
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
    உலகில் நிச்சயம் உண்டு
    ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
    உலகம் செழிப்பதுண்டு
    எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால்
    துணிவே துணையாய் மாறும்
    இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
    பூமியே புதிய பூமி
    ==================

    #இனிய மதிய வணக்கம் ,
    #என் இரத்தத்தின் இரத்தங்களே... Thanks...

  6. #155
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இதோ புரட்சித்தலைவர் பேசுகிறார்

    ============================

    பேரன்பு கொண்ட தாய்மார்களே, பெருமைக்குரிய தமிழ் பெருமக்களே, என்ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் அமரர் அண்ணா அவர்கள். அதைதான் மக்கள் ஆட்சி தத்துவமாக அறிவித்தார்கள் அரசியல் அறிஞர்கள் . மக்களுக்காக மக்களால் மக்களே அமைத்து கொள்கின்ற ஆட்சி மக்கள் ஆட்சி. அந்த மக்கள் ஆட்சிக்கு அஸ்திவாரம் போன்றதுதான் மக்களின் வாக்குரிமை. அந்த வாக்குரிமையின் மீது எழுப்பப்படும் அற்புதமான மாளிகைதான் நல்லரசு. அந்த அரசு நடத்தும் ஆட்சிதான் மக்கள் ஆட்சி. அத்தகைய ஆட்சி நடத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் வல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. நல்லவர்களாகவும் இருக்க வேண்டும். நா நயம் மிக்கவர்களாக இருந்தால் மட்டும் போதாது, நாணயம் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும். நெஞ்சுரம் கொண்டவர்களாக இருந்தால் மட்டும் போதாது, அன்புள்ளம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். மக்களின் மீது அதிகாரம் செலுத்துபவர்களாக மட்டும் அமைய கூடாது. இப்படி மக்களின் பிரதிநிதிகளாக ஆட்சிக்கு வருபவர்கள், அரசில் இடம் பெறுபவர்கள் தூய்மை உள்ளவர்களாக, தொண்டுள்ளும் கொண்டவர்களாக, ஏழை எளிய மக்களின் தோழர்களாக, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசாதவர்களாக, அரசியல் அதிகாரம் என்பது மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பே தவிர மக்களை ஆட்டி படைக்கும் உரிமையை தரும் சாதனமாக கருதாதவர்கலாக, மக்களோடு மக்களாய், மக்களின் தொண்டர்களாய் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதுதான் அமரர் பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்கு அளித்த அரசியல் நெறியாகும்..........👌 Thanks...

  7. #156
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாக.ம்* 26-ஐ* துவக்கி வைத்துதிரியை*பயணிக்க வைக்கும்*நண்பர் திரு.சுகாராம் அவர்களுக்கு பாராட்டுக்கள் /நல்வாழ்த்துக்கள்.,*

  8. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  9. #157
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரையில் மட்டும்தான் நடிப்பு
    அரசியலில் இல்லை.

    போலி நாத்திகன் போர்வையில் இருந்தது கிடையாது.

    பெரியாரின் நெறியிலே
    அண்ணாவின் வழியிலே
    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் அவரின் நம்பிக்கை

    இனம், மதம், மொழி என அனைத்திற்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் தூக்கி வைத்து கொண்டாடிய திராவிடத் தலைவன்.

    தன்னை எதிர்த்தவருக்கும் ஏற்றத்தை மட்டுமே பரிசாய் அளித்த ஏழைப் பங்காளன்.

    தான் வாழ்ந்த காலத்தில் இவர் எப்படி வாழ்ந்திருப்பார் என்பதற்கு இன்று அவரின் நினைவு தினத்தில் ரோட்டோரங்களிலும், ஆட்டோ ஸ்டெண்ட்களிலும், தொழிலாளர் கூடங்களிலும் அவரின் புகைப்படம் வைக்கப்பட்டு அதற்கு கடந்த 32 ஆண்டுகளாக எரிந்து வரும் விளக்கும் ஊதுபத்தியுமே சாட்சி.

    லோகநாதன் சேகர்

    #என்றும்எம்ஜிஆர்..... Thanks...

  10. #158
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    விண்ணும் அழுதது , மண்ணும் அழுதது
    மன்னவன் மறைகையிலே - நகக்
    கண்ணும் அழுதது , கவிதையும் அழுதது
    காவலன் பிரிகையிலே .......
    இப்படி ஒருவன் பிறந்ததில்லை
    இனியும் ஒருவன் பிறப்பதில்லை !
    சந்திர , சூரியர் வாழ்கின்ற வரையிலும்
    சந்திரன் புகழ் இருக்கும் ;
    ராமச்சந்திரன் என்னும் பேருக்குள்ளே
    சரித்திரம் ஒளிந்திருக்கும் !

    #மறக்க முடியாத மாமனிதரை
    வணங்குகிறேன்.......... Thanks...

  11. #159
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 33 வது ஆண்டு தொடக்கம் .... .

    கடத்த 33 ஆண்டுகளாக மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்மோடு பசுமையான நினைவுகளோடு வாழ்ந்து கொண்டு வருகிறார். இன்னமும் நம்மோடு தொடர்ந்து பயணிப்பர் . உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்று அவருடைய பிறந்த தினத்தை அனுசரித்து கொண்டு வருகிறார்கள் .

    1987 முதல் 2020 இன்றுவரை மக்கள் திலகம் எம்ஜிஆரின் ஆளுமைகள் நம்மை பிரமிக்க வைக்கிறது . உலகத்தில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவர்க்கு மட்டுமே கிடைத்துள்ளது .

    32ஆண்டுகள்
    இடைவெளி இல்லாமல் அவருடைய திரைப்படங்கள் தமிழகமெங்கும் திரை அரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது .
    மக்கள் திலகம் புகழ் பாடும் புதிய புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் வந்த வண்ணம் உள்ளது .
    எல்லா தரப்பிலிருந்தும் பல்வேறு எம்ஜிஆர் விழாக்கள் உலகமெங்கும் தெடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது .
    எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பல்வேறு அமைப்புகள் மூலம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது .
    அனைத்து ஊடகங்களும் எம்ஜிஆர் நினவு நாளை சிறப்பித்தார்கள் .
    பத்திரிகைகள் அனைத்தும் எம்ஜிஆர் நினைவு நாளை கூர்ந்து கட்டுரைகளை பதிவிட்டார்கள்

    மக்கள் திலகமே
    நாங்கள்
    கோடிக்கணக்கான உங்கள் ரசிகர்கள்
    கடந்த முப்பது ஆண்டுகளாக உங்களின் திருவுருவம் தினமும் காணாத நாளே இல்லை .
    தினமும் உங்கள் படங்கள் , பாடல்கள் எங்களுக்கு விருந்தது .
    உங்கள் பெயரை சொல்லி வெற்றி கண்டோர்கள் பட்டியல் ..... நீள்கிறது .
    இன்றும் உங்கள் அரசாங்கம் நடக்கிறது .
    தமிழக அரசியலில் நீங்களதான் மைய்யம்
    வாழ்ந்த காலத்தில் பலரையும் வாழ வைத்தீர்கள் .
    33 ஆண்டுகளாக உங்கள் பெயரை உச்சரித்தவர்களை வாழ வைத்தீர்கள் .
    உலகத்தில் எங்கும் நடக்காத அதிசயம்
    உங்கள் ரசிகனாக நாங்கள் வாழ்வதை எண்ணி பெருமை கொள்கிறோம்........... Thanks...

  12. #160
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின்
    ரசிகன் பக்தன்
    என்ற
    பெருமிதத்துடன்
    இந்த பதிவு

    த*மிழ*க முத*ல்வ*ர் எம்.ஜி.ஆர் செய்த* ந*லத்திட்ட*ங்க*ளில் சில...
    ---------------------------------------------------------------
    குறு விவசாயிகளுக்கு
    --------------------------------------
    இலவச மின்சாரம்--
    விவசாயக் கடன் தள்ளுபடி--
    பயிர் பாதுகாப்பு இன்ஷூரன்ஸ் திட்டம்--
    கரும்பு கொள்முதலை அரசே ஏற்றுக் கொண்டது.

    பெரு விவசாயிகளுக்கு
    குந்தா மின் நிலையம்--
    TAMIN--கிரானைட் தொழிற்சாலை--மணலியில்--
    பாதிக் கடன் சலுகையில் விவசாய உற்பத்திக்கு பணம் வழங்கியது--
    காற்றாலை மின்சாரம்

    ஏழைகளுக்கு
    ------------------------
    குடிசை தோறும் ஒரு இலவச மின் விளக்கு-
    TNPL--காகித உற்பத்தி தொழிற்சாலை தொடங்கியது--
    நியாய விலைக் கடைகளில் பாமாயில் 10லி வழங்கியது--
    சரளைச் சாலைகளுக்கு கிராமம் முழுவதும் ஒரே சீராக தார் சாலை போட்டது--
    6300 க்கும் மேலாக அரசு பேருந்து வழித்தட போக்குவரத்து தொடங்கப்பட்டது.

    பள்ளிக்கு செல்லும் பாலக*ர்க*ளுக்கு மட்டுமின்றி அனைத்து ஏழைக் குழ*ந்தைக*ளுக்கும் தினன் ஒருவேளை ச*த்துணவு சாப்பிட உறுதி செய்த*து.

    அத*ன்மூலம் எண்ணற்ற ஆத*ர*வ*ற்ற, வித*வை தாய்மார்க*ளுக்கு வேலை கொடுத்த*து.

    விலைவாசியை தான் ஆண்ட 11 ஆண்டுக*ளிலும் பெரிதாக உய*ராமல் க*ட்டுக்குள் வைத்த*து. நியாயவிலைக் க*டைக*ளில் சீரான விநியோகம்.

    அப்போத*ய எஸ்.எஸ்.எல்.சி மாணவ*ர்க*ள் பெரும்பாலோனோர் அத்துட*ன் ப*டிப்பை நிறுத்தி க*ல்லூரி ப*டிப்பை தொட*ராமல் (குறிப்பாக கிராம*ப்புற பிள்ளைக*ள்) இருந்த* நிலையை மாற்ற ப*ள்ளியிலேயே +2 என்ற மேற்ப*டிப்பை தொட*ர*ச்செய்த*து.

    இலவ*ச* ஆம்புலன்ஸ் சேவையை இந்தியாவிலேயே முத*ன்முத*லில் அறிமுக*ப்ப*டுத்தி செய*ல்ப*டுத்திய*து.
    வ*ச*தி குறைந்த* வ*குப்பின*ர் இலவ*ச*மாக*வும்,மற்ற*வ*ர்க*ள் குறைந்த தொகையில் அர*சு மருத்துவ*ம*ணையில் ட*யாலிசிஸ் செய்துகிள்வ*து.

    இர*ண்டுபேர் சைக்கிளில் செல்ல அனும*தி

    காவ*ல*ர்க*ள் அனைவ*ரும் முழுக்கால் ச*ட்டை ம*ற்றும் கூம்பு வ*டிவிலான தொப்பியை மாற்றிய*து.
    காவ*ல*ர்க*ள் அனைவ*ருக்கும் ரெயின்கோட் அளித்தது.

    ம*க*ளிர்க்காவ*ல் நிலைய*ம் அமைத்த*து.

    புதிய க*ல்லூரிக*ள், புதிய ப*ல்க*லைக்க*ழ*க*ங்க*ள், பொறியிய*ல் க*ல்லூரிக*ள் நிறுவி அத*னால் க*ல்விப்புர*ட்சியை ஏற்ப*டுத்தியது.

    உலகத்த*மிழ் மாநாட்டை சிற*ப்பாக ந*ட*த்திய*து.

    த*மிழுக்கென த*னிப*ல்க*லைக்க*ழ*க*ம் க*ண்டது.

    எழுத்துச்சீர்திருத்த*ம் கொண்டுவ*ந்த*து.

    15 ஆண்டுக*ளாக ந*டைபெறாமலிருந்த* உள்ளாட்சி, ந*க*ராட்சி தேர்த*லை ந*ட*த்திய*து.

    ப*ர*ம்ப*ரை க*ர்ணம் முறையை ஒழித்து கிராம நிர்வாக அலுவ*ல*ர்க*ளை தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கச் செய்தது.

    முல்லைப்பெரியாறு அணையை ப*லகோடி செலவில் செப்ப*னிட்டு இன்றைக்கும் 142 அடி உய*ர*த்திற்கு தேக்கி வைக்கும் அளவிற்கு ப*லப்ப*டுத்தி த*ந்தது.

    ப*ராமரிப்பில்லாத* கோவில்க*ளுக்கும் ஒருவிளக்கு பூஜைக்கு உறுதி செய்த*து.

    ந*க்ச*ல்பாறி, ஜாதிச்ச*ண்டைக*ள், வன்முறைக்க*லாச்சார*ம் அதிக*ம் நிக*ழாவ*ண்ணம் பார்த்துக்கொண்ட*து.

    இவைகள் எல்லாம் யார் ஆட்சியில் என்றால்---
    நடிகன் நாடு ஆண்டதால் தான் நாடு நாசமானது என்று நா கூசாமல் நவில்கின்றவர்களுக்கு---
    சினிமா கவர்ச்சியால் சீரழிந்தது செந்தமிழ் நாடு என்னும் செம்மொழித் தலைவருக்கும்???
    தெரிந்திருந்தும் தெரியாதது போல் நடிக்கும் திசையில்லா ஏனைய உதிரிக் கட்சிக்காரர்களுக்கும்--
    நினைவூட்ட விரும்புகிறோம்??
    எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் இத்தகைய ஏற்றங்கள் நடந்தேறின!!!!!
    இன்னும்,,,,தறியாளர்களுக்கு,,தொழிலாளர்களுக்கு--நடுத்தர வர்க்கத்தினருக்கு என்று--
    எம்.ஜி.ஆர் ஆட்சியின் இன்ன பிற சாதனைகள் தொடர்ந்து பதிப்பிக்கப்படும்!! காத்திருக்கவும்!

    இனிய மதிய வ*ணக்கத்துட*ன்....... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •