Page 134 of 210 FirstFirst ... 3484124132133134135136144184 ... LastLast
Results 1,331 to 1,340 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1331
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பான mgr ரசிகர்களுக்கு[பக்தர்களுக்கு]
    *********************************
    சரித்திரம் தெரியாத தரித்தரங்கள் வாழும் காலம் இது.

    எத்தனையோ இன்னல்கள்
    போட்டியும் பொறாமையும்
    திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தகர்த்து எரிந்து
    வெற்றி வாகை சூடியவர் நம் தலைவர் mgr.

    அதற்க்காக அவர் அனுபவித்த
    துயரங்கள் கொஞ்சமல்ல
    இரவு பகல் பாராது உழைத்த உழைப்பின் உதியத்தை
    மக்களுக்காக வாரிக் கொடுத்த வள்ளல் அவர்.

    அன்பையும்
    பாசத்தையும்
    கலந்து கொடுத்து
    அதில் ஒழுக்கத்தையும்
    கற்றுக் கொடுத்து
    வீரத்தை நெஞ்சிலே வளர்த்த
    வெற்றி திருமகன் mgr.

    கோழைகள் அல்ல நாங்கள்
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    என்று மக்களின்
    உணர்ச்சியை தட்டி எழுப்பியவர்.

    மாபெரும் சபைதனில்
    நீ நடந்தால்
    உனக்கு மாலைகள்
    விழவேண்டும்
    என்று பாடம்
    நடத்திய வாத்தியார்.

    ஏழையாக பிறந்து
    ஏழைகளுக்கவே வழ்ந்தவர்.

    அவரது அரசியல் வரலாறு ஒன்றும்
    மிகச் சாதாரணமாக அமைந்து
    விடவில்லை.

    எத்தனை தொண்டர்களின்
    இரத்தங்களால் தியாகங்களால் உருவானது.
    அதை
    என்னிப் பார்க்கவே பேசுவதற்க்கோ இன்று யாருமே இல்லை.

    ஆனாலும் இன்றைக்கும்
    எம்ஜிஆர் இருக்கிறார் நம்மை அவர் காப்பாற்றுவார்
    என்று நினைப்பார்கள் ஏராளம்.

    இன்றைக்கு அரசியலுக்கு வருபவர்கள் கூட
    எம்ஜிஆர் பெயரை செல்லி ஏமாற்றி விடலாம்
    என்று நினைக்கிறார்கள்.

    ஒரு திரைப்படத்தில் வேண்டுமானால் குடியரசுத் தலைவராக, பாரதப் பிரதமராக,
    கவர்னராக, மாநில முதல்வராக, நடிக்கலாம்... பன்ச் டயலாக் பேசலாம்...
    அது இரண்டு மணி நேர பொழுது போக்கு மாயயை
    மக்கள் ரசிப்பார்கள்...
    கைதட்டி
    ஆராவாரம் செய்வார்கள். ஆனால்
    நிஜ வாழ்க்கை என்பது வேறு?!.

    Mgr அவர்கள்
    மக்கள் மனது அறிந்து நடித்தவர்...
    நடித்ததுபோல் வாழ்ந்தவர்...
    அதனால் தான் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.....

    மக்களின் அறியாமை என்ற
    இருளை அகற்றி
    மூட நம்பிக்கையை ஒழித்தார்
    அவர் திரைப்படங்கள் பாடமாக
    இருந்தது.

    இறை நம்பிக்கை,
    மாய மந்திர காட்சிகளில் கூட அவர் நடித்ததில்லை
    உழைப்பின் பயனையும்
    விவசாயத்தின் பெருமையையும்தான்
    பல படங்களில் பாடமாக அமைந்து இருக்கும்
    உழைப்பவரே உயர்ந்தவர்
    என்றெ கையெழுத்திடுவார்
    mgr.,

    mgr திரைப்படங்களில்
    வீரத்தையும் விவேகத்தையும்
    இளைஞர்கள் மனதில் புகுத்தினார்.
    குடும்பத்தில் ஒருவராக மக்கள் இதயங்களில் குடி புகுந்தார்
    அவரை எங்க வீட்டு பிள்ளையாக்கி கொண்டார்கள் தமிழக மக்கள்.

    Mgr என்றெரு மகான் வாழ்ந்தார் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் இன்னமும் வாழ்வார்
    நேற்று அல்ல...
    இன்று அல்ல...
    நாளை யும்...
    அவர்தான்
    மக்களின் இதயத்தில் நிரந்தரமான முதல்வர்.
    என்றும் அவர் புகழ் வாழும்
    வாழ்ந்து கொண்டு இருக்கும்.

    இன்று அவர் படத்தை மறைத்து விட்டால் அவர் புகழை
    மறைத்து விட முடியுமா?

    Mgrரை பற்றி நேரத்திற்கு தகுந்தபடி பலர் அலங்காரமாக பேசுவார்கள் அடுக்கு மெழியில் பேசி புகழ்வார்கள்
    கைத் தட்டல் பெறுவார்கள்.

    அங்கே கைதட்டி ஆரவாரம் செய்பவன் எதையும் எதிர் பார்க்காத அடிமட்ட தொண்டன்
    அவனுக்கு வேண்டியது எல்லாம்
    mgrரை பற்றி பேச வேண்டும்
    mgrரை புகழ வேண்டும்
    அதை அவன் கேட்க வேண்டும்.

    இப்படித்தான்
    எத்தனை எத்தனை ரசிகர்கள்
    வாழ்கிறார்கள்.
    வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
    அவர் புகழை அளிக்க நினைப்பவர்கள்
    வரலாற்றில் அழிந்து போவார்கள்...

    என்றும் எம்ஜிஆர்
    புகழ்பாடும் உங்கள்
    *எம்ஜிஆர்நேசன்*.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1332
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #கற்பனைக்கும் #எட்டாத #அற்புதமே

    தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்தில் இருந்து இரவு இரண்டு மணிக்குப் புறப்பட்டு எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போகிறார். கார் கிண்டி வழியாகச் சென்று கொண்டு இருக்கும் போது, ஒரு குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு ஒருவன் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தான்.

    எம்.ஜி.ஆர். அதைப் பார்த்து விட்டார். அவன் குழந்தையைக் கடத்திக் கொண்டு ஓடுகிறான் என்று நினைத்துக் காரை நிறுத்தச் சொன்னார். அவனுக்கு முன்பாகக் காரை நிறுத்தி இறங்கி ஓடுபவனைத் தடுத்து நிறுத்தினார். காவலர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.

    ‘யார் நீ? இந்தக் குழந்தை யாருடையது? எதுக்காக இந்த நேரத்துல தூக்கிட்டுப் போற?’ என்று கேட்டார்.

    ‘ஐயா இது என் குழந்தைதாங்க. காய்ச்சல் நெருப்பாக் கொதிக்குதுங்க. விடியற வரைக்கும் தாங்குமான்னு தெரியல. அதான் டாக்டர் கிட்டக் காட்டலாம்னு போய்க் கிட்டு இருக்கேன்’ என்றான்.

    எம்.ஜி.ஆர் குழந்தையைத் தொட்டுப் பார்த்தார். அவன் சொன்னது உண்மைதான். ‘என் வண்டியில ஏறு. டாக்டர்கிட்ட நானே அழைச்சிட்டுப் போறேன்’ என்றார்.

    ‘தலைவா என்று அவன் காலில் விழப்போனான். காவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அத்துடன், ஐயா முதல் அமைச்சர் என்கிற முறையில் உங்களைப் பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது எங்க பொறுப்பு என்றார் அதிகாரி.

    ‘ஒரு குழந்தை காய்ச்சலால் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும்போது நான் வீட்டுக்குப் போறதுதான் முக்கியமா? நீங்க யாரும் என்கூட வர வேண்டாம். நான் பார்த்துக்கறேன்’ என்று சொல்லிவிட்டு, அவனைக் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

    ‘எந்த டாக்டர் ?’ என்று கேட்டு அங்கே போனார். டாக்டரை எழுப்பி வைத்தியம் செய்தார். அதன்பிறகு குழந்தையின் தந்தை கையில் 10000 ஐக் கொடுத்து, போலீசார் வண்டியில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு போய் விட்டு விட்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார். மகராசன் வாழ்க என்று நன்றியோடு விடை பெற்றார் அந்தத் தந்தை.
    வாத்தியார் நினைத்திருந்தால் தனது உதவியாளர்களை அனுப்பி அக்குழந்தைக்கு வைத்தியம் பார்த்திருக்கலாம்....அப்படிச் செய்யவில்லை...
    ஏனெனில் அக்குழந்தையைத் தன் குழந்தையாகவே பாவித்ததன் விளைவு தான்...இது...

    இதைப்போல...பல கற்பனைக்குக் கூட எட்ட முடியாத செயல்களைப் புரிந்தவர் தான் நம் பொன்மனச்செம்மல்...

    தலைவர்கள் தெய்வமாவதுண்டு...
    ஆனால்...
    தெய்வமே தலைவராக வந்து மக்களை வழிநடத்தியது என்றால் அது நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மலைத் தவிர யாராக இருக்கமுடியும் ??? Bsm...

  4. #1333
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தேர்தலுக்கு மட்டும் தான் எம்.ஜி.ஆரா?
    https://www.thaaii.com/?p=55137

    அ.தி.மு.க.வில் சுயநலக்காரர்கள் அதிகமாகி விட்டனர். கண்ணை மறைக்கக் கூடிய அளவிற்கு, அவர்கள் வசதியாகி விட்டனர். அந்த மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆரையே மறந்து விட்டனர்.

    அ.தி.மு.க.வை துவக்கி மாபெரும் கட்சியாக வளர்த்து ஆட்சி அமைத்துக் கொடுத்தவர், எம்.ஜி.ஆர். என்பதை இப்போதைய ஆட்சியாளர்கள் மறந்து விட்டனர்.

    எம்.ஜி.ஆர். உத்தரவுபடி, அண்ணாதுரை உருவத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் உடலில் பச்சை குத்திக்கொண்ட அ.தி.மு.க.வின் உண்மை விசுவாசிகள் வருத்தத்தில் தான் உள்ளனர்.

    மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தவில்லை.

    குடிநீர், உணவகம், உப்பு, உடல் பரிசோதனைத் திட்டம், மருந்தகம் என எங்கும், 'அம்மா' என்று, தன்னைத்தான் முன்னிலைப்படுத்திக் கொண்டார்.

    தன்னை அரசியலில் ஆளாக்கிய எம்.ஜி.ஆர். பெயரை, உணவகத்திற்கு சூட்டியிருக்கலாம்; அது, பொருத்தமாக இருந்திருக்கும்.

    ஜெயலலிதா முதல் இ.பி.எஸ். வரை தேர்தல் வந்துவிட்டால் மட்டும் எம்.ஜி.ஆர். படத்தையும் பெயரையும், ஊறுகாய் போல தொட்டுக் கொள்கின்றனர்; மற்ற நேரங்களில் அவரை மறந்து விடுகின்றனர்.

    இப்போது நடக்கும் அரசு நிகழ்ச்சி விளம்பரங்களில் ஜெயலலிதா, இ.பி.எஸ். படங்கள் பெரிதாக இருக்கின்றன; அதில், எம்.ஜி.ஆர். படத்தைக் காணவில்லை.

    மறைந்த தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடும், அ.தி.மு.க. தலைமையிலான அரசு, தமிழகத்தின் முதல் பெண் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் பிறந்தநாளை ஏன் கண்டுகொள்வதில்லை.

    இப்போதுள்ள அ.தி.மு.க. கூட்டுத் தலைமைக்கு எம்.ஜி.ஆரின் அருமை தெரியாமல் போய் விட்டது. தேர்தல் வரும்போது மட்டும் ஓட்டுக்காக அவரின் பெயர் நினைவுக்கு வந்துவிடும்.
    ****

    இன்றைய தினமலர் (20.11.2020) நாளிதழில் வாசகர் கடிதங்கள் பக்கத்தில், சென்னையைச் சேர்ந்த டி.ஈஸ்வரன் என்ற வாசகர் எழுதிய கடிதம்.

    நன்றி: தினமலர்

    #எம்ஜிஆர் #அதிமுக #ஜானகிஎம்ஜிஆர் #அண்ணாதுரை #ஜெயலலிதா #இரட்டைஇலைசின்னம் #இபிஎஸ் #MGR #AIADMK #JanakiMGR #Annathurai #Jayalalithaa #EPS.........

  5. #1334
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணன் என் காதலன் 26.4.1968
    .காஞ்சிபுரம் - ராஜா அரங்கில் விநியோகிக்கப்பட்ட வாழ்த்து மடல் .

    வாழ்த்து மடல்

    பூவிதழ் சிவப்பில் துள்ளும்
    பூவையர் கோபியர் நெஞ்சில்
    மேனிய மாயவன் தன்னை
    மீதினில் சிறக்க எண்ணி
    ஓவியர் மாதரர் அன்பில்
    உரிமையில் திளைக்க வேண்டி
    காவிய நாயகன் '' கண்ணன் என் காதலன் '' என்றே சொன்னார் .
    தீந்தமிழ் மொழியின் இன்பத்
    தென்னக ஏழைகள் நெஞ்சம்
    ஏந்திடும் சுமைகள் எல்லாம்
    எம்ஜி யார் பெருமை அன்றோ ?
    மாந்தருள் மனித தெய்வம்
    மாசில்லா மக்கள் திலகம்
    வேந்தர்க்கு வேந்தராகும்
    வெற்றிமகள் மைந்தன் '' கண்ணன் என் காதலன் ''
    என்ற கலைப்பட திரையில் தோன்றி
    விண்ணில் தவழும் சந்திர வெண்ணிலா போல
    இன்பப் பண்ணின் இசையை மீட்டி
    பாரெல்லாம் போற்றி பாடி
    மண்ணில் நீண்ட வாழ்வை மகிழ்வுடன் பெற்று வாழ்க ....vs...

  6. #1335
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #இனிய_நினைவுகளில்

    #மதுரையை_மீட்ட_சுந்தரபாண்டியன்

    இந்த படம் 1978 ம் ஆண்டு வெளிவந்த போது வழக்கமான மக்கள் திலகத்தின் படங்களுக்கே உரிய பரபரப்பு இல்லை...ஏனென்றால் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கட்சி தொண்டர்களாகவும்; ரசிகர் மன்ற தலைவர்கள் அமைச்சர்களாகவும்; புரட்சி நடிகர் - மக்கள் திலகம்...புரட்சித்தலைவராகி தமிழக முதல்வராகவும் கோலோச்சிக்கொண்டிருந்தார்கள். அதாவது மக்கள் திலகம், திரையுலக முதல்வராயிருந்தவர், தமிழக முதல்வராக பதவி உயர்வு பெற்று திரையுலகை விட்டே விலகிவிட்டார்.இது அவருடைய கடைசிபடமாகவும் அமைந்தது.

    பிரபல சரித்திர எழுத்தாளர் "அகிலனின்" கயல்விழி என்ற புதினத்தை சிறு மாறுதல்களுடன் படமாக்கினார் மக்கள் திலகம்.

    சோழ நாட்டின் அடிமை நாடாக, அவர்களுக்கு கப்பம் கட்டும் நாடாக இருந்த பாண்டிய நாட்டை, அதன் இளவரசன் சுந்தரபாண்டியன், பைந்தமிழ் குமரன் என்ற புலவர் வேடத்தில் நாடெங்கிலும் சென்று புரட்சிக்கவி பாடி மக்களை தட்டி எழுப்பி, மதுரையை-பாண்டிய நாட்டை மீட்பதுதான் கதை. இதை விறுவிறுப்பாக படமாக்கியிருந்தார் மக்கள் திலகம்.

    சரித்திர கதைகள், போர் காட்சிகள், வாள் சண்டைகள், இலக்கண தமிழில் உரையாடல் போன்றவைகளெல்லாமே கிட்டத்தட்ட முடிந்து போய் தமிழ் திரையுலகம் கிராமங்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருந்த நேரத்தில், அன்றைய தேதியில் பெரும் பொருட்ச்செலவில் ஒரு சரித்திர கதையை படமாக்க துணிந்த மக்கள் திலகத்தின் துணிவு பாராட்ட தக்கது.

    இந்த படத்தில் மக்கள் திலகத்துடன்-லதா, பத்மபிரியா, நம்பியார், வீரப்பா, சுப்பையா,போன்றோரும சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார்கள்.

    "கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்" என்ற வரிகள் கொண்ட "தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை" என்ற பாடல் அன்றைய அரசியல் மேடைகள்-அரசு விழாக்களில் ஒலிக்காத இடமே இல்லை...மீண்டும் மெல்லிசை மன்னரின் இசை மக்கள் திலகத்தின் அரசியல் வாழ்வுக்கு பேருதவி புரிந்தது.இது தவிர "வெற்றி மகன் போராட" "தென்றலில் ஆடும்" "அமுத தமிழில் எழுதும் கவிதை" போன்ற மெலடியிலும் தூள் கிளப்பினார் எம்.எஸ்.வி.

    இந்த படம் தோல்விப்படமல்ல..கமார்ஷியலாக வெற்றி கண்டது.

    சுந்தரபாண்டியன் என்றென்றும் வீரபாண்டியன்தான்.........Sr.bu.

  7. #1336
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*18/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரிப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் , பேரறிஞர் அண்ணாவின் யோசனைப்படி மேலும் பிரச்னைகள் உருவாகாமல் இருக்க தங்கத்திலே வைரம் பட விளம்பரம் வெளியானது . ஆனால் படம் பல்வேறு காரணங்களுக்காக தயாரிக்கப்படவில்லை .* அதற்கு பதிலாக வ*ள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் சங்கே முழங்கு படத்திற்கு கதை வசனம் எழுதும் வாய்ப்பு கே.எஸ்.கோபாலக்ரிஷ்ணனுக்கு அளிக்கப்பட்டது .* படத்தை இயக்கியவர் ப. நீலகண்டன் .* மதுரையில் கே.எஸ்.ஜியின் கார் அடித்து நொறுக்கப்பட்ட விஷயம் அதை தொடர்ந்த சம்பவங்களை எம்.ஜி.ஆர். அவர்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை .* மதுரை சம்பவத்திற்கு பிறகு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் /பக்தர்கள்*கே.எஸ்.ஜியின் விஷயத்தில் தலையிடாமல் அமைதி காத்தார்கள் . அதன் பின்னர் உலக பட விழாவில் பங்கேற்க ரஷ்யாவிற்கு புறப்பட்டு சென்றார் கே.எஸ்.ஜி..அங்கு பணமா பாசமா படம் திரையிடப்பட்டது .* அங்கு ஒரு மாதகாலம் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது . அந்த கால கட்டத்தில் அவரது இளைய மகன் மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமுற்று, மருத்துவமனையில் அவசர* சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகிறார் .* விவரம் அறிந்த எம்.ஜி.ஆர். உடனே அந்த மருத்துவமனைக்கு சென்று மருத்துவ அதிகாரிகளை சந்தித்து ,எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை.நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன் . அந்த குழந்தையின் உயிர் காப்பாற்ற பட வேண்டும். பழையபடி அவன் நடமாட வேண்டும். அதற்கு தகுந்தாற்போல உயர்தர சிகிச்சை அளியுங்கள் என்று கேட்டு கொண்டார் . அந்த குழந்தை குணமாகி வீட்டுக்கு வந்தபின், கே.எஸ்.ஜி. ரஷ்யாவில் இருந்து சென்னை வந்ததும் நடந்த விவரங்களை சொல்லி அழுதாராம்,கே.எஸ்.ஜி.யின்*மனைவி .*. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இல்லாவிட்டால் நம் குழந்தையை நாம் உயிருடன்* பார்த்திருக்க முடியாது .எப்பேர்ப்பட்ட மாமனிதர் . எம்.ஜி.ஆர். அவர்கள் என்று வானளாவ புகழ்ந்தாராம் .தன்னை எதிரியாக பாவிக்கிறவர்களுக்கு ஒருபோதும் துரோகம் நினைக்காமல் ஓடோடி சென்று வேண்டிய உதவிகள் செய்து ஒரு உயிரை காப்பாற்றும் நல்ல உள்ளம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருந்தது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி*


    சென்னையில் பி.டி.தியாகராயர் என்பவர் மேயராக இருக்கும்போதுதான் முதன் முதலாக குழந்தைகளுக்கு பள்ளியில் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார் . இந்த திட்டத்தைத்தான் 1982ல் எம்.ஜி.ஆர். அவர்கள் இரண்டாவது முறையாக முதல்வரானதும் சத்துணவு திட்டமாக விரிவாக்கம் செய்தார்* *செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது சைதை திரு.துரைசாமி அவர்கள் சென்னை மேயராக பதவி ஏற்றபின் அம்மா உணவகம் என்கிற திட்டத்தை அமுல்படுத்தினார் .* செல்வி ஜெயலலிதா அவர்கள் இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சிக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தின் இதர மாநகராட்சிகளிலும் செயல்படுத்தும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்தார். பிற்காலத்தில் நடமாடும் அம்மா உணவகம் உருவாக*இந்த திட்டம் பேருதவியாக இருந்தது .* நீங்கள் எப்போதெல்லாம் மக்களுடைய பசியை பற்றி திட்டம் வகுத்து, அதை போக்குவதற்கு உரிய சிந்தனையுடன்*திட்டங்களை செயல்படுத்துகிறீர்களோ அப்போதெல்லாம் உங்களுக்கு வாக்கு வங்கி சாதகமாக இருப்பதோடு உங்கள் மனமும் குளிரும் என்பது போல புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் , செல்வி ஜெயலலிதா அவர்களும் செயல்பட்டார்கள் .ரிக்ஷாக்காரன் படத்தில் ஒரு வசனம் வரும். அதாவது ஒரு ரிக்ஷா தொழிலாளி வண்டி ஒட்டாமல் உடல்நல குறைவால் வீட்டில் இருக்கும்போது எம்.ஜி.ஆர். விவரம் அறிந்து தான் அரைகுறையாக சாப்பிட்டு , கணிசமான அளவு சாப்பாட்டை அந்த ரிக்ஷா தொழிலாளி வீட்டுக்கு அனுப்பி வைப்பார் . அப்போது*சக தொழிலாளி எம்.ஜி.ஆரை பார்த்து நீங்கள் சாப்பிடவில்லையா என்றதற்கு மற்றொரு தொழிலாளி தான் குறைவாக சாப்பிட்டு, உடல் நலம் பாதித்த தொழிலாளி குடும்பம் நிறைவாக சாப்பிடட்டும் என்ற கொள்கை உடையவர் எம்.ஜி.ஆர்..இது தெரிந்த விஷயம்தானே என்பார் .* மேலும் மற்றவர்கள் வயிறு நிறைஞ்சா இவர் மனசு நிறைஞ்சா மாதிரி என்பார். அதற்கு எம்.ஜி.ஆர்* சிலர் அரை மனதுடன் வாழ்த்துவார்கள்.அதை ஏற்று கொள்ள கூடாது . ஆனால் வயிறுநிறைஞ்சு* வாழ்த்தினால் சரி என்பார் .பசிப்பிணியை போக்கும் வள்ளலார் போல எம்.ஜி.ஆர். அவர்கள் வாழ்ந்தார் .*

    தமிழகம் முழுவதும் இருக்கின்ற சைக்கிள்*ரிக்ஷா ஸ்டாண்டுகள், ஆட்டோ ரிக்ஷா ஸ்டாண்டுகளில்* எம்.ஜி.ஆர். கோட் அணிந்து*கைகளில் பூச்செண்டுடன் ,கழுத்தில்*மாலையணிந்த படம் ஒட்டப்பட்டிருக்கும் . இந்த மாதிரியான படங்கள்*சைக்கிள் ரிக்*ஷா*வின்*பின்புறமும்* சில*ஆட்டோக்களில் முன்புறமும் ஒட்டப்பட்டிருக்கும் .தலைவர் படம் வண்டியில் இருந்தால்*நல்ல சவாரி*கிடைக்கும் என்பது*அவர்களுடைய நம்பிக்கை . பல டீக்கடைகளில் கல்லா பெட்டியில்*அல்லது கடையின் உள்ளே எம்.ஜி.ஆர். படம் இருக்கும்.**பல அமைச்சர்களின் கார்களில் வெளியே இருந்து பார்த்தால்*, செல்வி*ஜெயலலிதா*படமும்*உள்ளே கார் இருக்கைகளில் தலைவர் எம்.ஜி.ஆர். படமும் இருக்கும் .* அந்த காலத்தில் முகராசி என்று எம்.ஜி.ஆர். படம் வெளியானதில் இருந்தே*அப்படி* எம்.ஜி.ஆர். படம் ஒட்டினாலே, நல்ல சவாரி கிடைக்கும். வருமானம் பெருகும் , தொழில் முன்னேற்றம் அடையும் என்கிற*நம்பிக்கை இன்றைக்கும் தொழிலாளர்கள் மத்தியில் உண்டு .* தலைவருடைய முகராசிதான்* இந்த முன்னேற்றத்திற்கு காரணம்* என்று சொல்பவர்கள் இன்றைக்கும் உண்டு .* அதே*போல ரிக்ஷாக்காரன் படத்தில்*சைக்கிள்*ரிக்ஷா*தொழிலாளரை பற்றி உயர்வான*வசனங்கள் அமைந்திருக்கும்.* பொதுவாக ரிக்ஷாக்காரர் என்றாலே*உங்களுக்கு எல்லாம் ஒரு தப்பான அபிப்பிராயம் உள்ளது . அதை மாற்றுவதற்காகத்தான் இந்த போர்டு. அதாவது நியாயமான கட்டணம் .* கூலி குறைவாக கொடுத்தாலும், அதிகமாக கொடுத்தாலும்* வாங்க மாட்டோம். முதல் வண்டிக்கு கிராக்கி வந்து போனால்தான் இரண்டாவது வண்டி நகரும்.* குடித்துவிட்டு ஓட்டுபவர்களை நாங்கள் ஆதரிப்பதில்லை . என்று எம்.ஜி.ஆர். அவர்கள் பேசுவதாக வசனம் இருக்கும்.* இன்றைக்கும் இந்த வசனங்களை பார்த்தீர்களானால், அவை ஒரு பாடமாக, படிப்பினையாக*இன்றைக்கு வண்டி ஓட்டுபவர்களுக்கும்,அதில் சவாரி செய்பவர்களுக்கும் கற்று தரும் பாடங்களாக அமைந்திருக்கும் .**

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
    ------------------------------------------------------------------------------------
    1. கண் பட்டது கொஞ்சம் , புண் பட்டது*நெஞ்சம் - தாலி பாக்கியம்*

    2.இரண்டு கண்கள்* சேரும்போது*- சங்கே*முழங்கு*

    3.காற்று வாங்க போனேன்* - கலங்கரை விளக்கம்*



    .***

  8. #1337
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மக்கள்_திலகத்தின்

    #இதயவீணை..

    இந்தப்படம் ஒரு பரபரப்பான சூழ்நிலையில் வெளிவந்தது..1972ம் ஆண்டு மக்கள் திலகம், தான் சார்ந்திருந்த இயக்கத்திலிருந்து வெளியேறி,தனி இயக்கம் தொடங்கி அப்போதுதான் சில நாட்கள் ஆகியிருந்தன. அந்த சூழ்நிலையில் இப்படத்திற்கு மக்களின் // ரசிகர்கள் அளிக்கப்போகும் ஆதரவை அனைத்து தரப்பினருமே எதிர்நோக்கியிருந்தார்கள். படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
    இப்படத்தின் தயாரிப்பாளர்கள், மக்கள் திலகத்தின் அபிமானத்துக்குறிய "இதயம் பேசுகிறது" மணியன் மற்றும் வித்வான் வே.இலட்சுமணன் ஆவார்கள். மணியன் ஆனந்தவிகடன் இதழில் இதே பெயரில் தொடர்கதையாக வெளிவந்து, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்ற கதையை, மக்கள் திலகத்திற்காக சிறு மாறுதல்களுடன் படமாக்கி வெற்றி கண்டுள்ளளர்.

    கண்டிப்பான தகப்பனாரும், புகழ் பெற்ற வக்கீலுமான சிவராமன் (சக்ரபாணி) தன் மகன் சுந்தரம் (மக்கள் திலகம்)செய்யாத தவறை, மன்னிக்காமல் வீட்டை விட்டு துறத்தி விடுகிறார். எதிர்காலத்தில் சிவராமன், சுந்தரம்தான் தன் மகன் எனக்கூறும் வரை வீட்டை - தன் தந்தையை - பார்க்க வர மாட்டேன் என வீட்டை விட்டு வெளியேறி, காஷ்மீரில் சுற்றுலா கைடாக பணிபுரிகிறார் சுந்தரம்.

    ஒரு நாள் காஷ்மீருக்கு வரும் கல்லூரி மாணவிகளோடு தன் தங்கை நளினி (லட்சுமி)யை பார்த்து தன் தந்தை பற்றி அறிந்துகொள்கிறார் சுந்தரம். அங்கே விமலா (மஞ்சுளா) வையும் சந்தித்து காதல் கொள்கிறார். சென்னை திரும்பிய சுந்தரத்திற்கு நளினியின் காதலன் கிரி (சிவக்குமார்) அண்ணாமலை(நம்பியார்) கார்மேகம் (மனோகர்) ஆகியோரால் பல பிரச்சனைகள் வருகின்றன. அவற்றை சுந்தரம் எவ்வாறு எதிர்கொண்டார்.தன் தந்தையை ஏற்றுக்கொண்டாரா? என்பதே கதையின் இதர பகுதி.

    மக்கள் திலகத்தின் ஒரு குடும்பம் சார்ந்த பொழுதுபோக்கு படம். காஷ்மீரில் சுற்றுலா கைடாகவும், சென்னையில் பாசமுள்ள அதே சமயத்தின் தன் நெருங்கிய உறவுகளைகூட வெளிக்காட்டி கொள்முடியாதவராக தூள் கிளப்பியிருக்கிறார் மக்கள் திலகம்.மக்கள் திலகத்திற்கு ஏற்ற பாத்திரத்தை கொடுத்ததோடு, படத்தை விறு விறுப்பாகவும் இயக்கியுள்ளனர் கிருஷ்ணன்-பஞ்சு இரட்டையர்கள்.

    சங்கர்-கணேஷின் இசையில் "காஷ்மீர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர்".."பொன்னந்தி மாலைப்பொழுது".."ஆனந்தம் இன்று ஆரம்பம்".."திருநிறைசெல்வி மங்கையர்கரசி".."ஒரு வாலும் இல்லே.." ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.

    சிக்கலான சூழ்நிலையில், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால் "இதயவீணை" நூறு நாட்களை கடந்தது மட்டுமல்ல, இரு மடங்கும் வசூலித்தது.

    தகவல் & புகைப்படம் :
    https://en.m.wikipedia.org/wiki/Idha............Sr.bu...

  9. #1338
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1965 இல் தாழம்பூ பட பிடிப்பின் போது தயாரிப்பாளர் சுலைமான் அவர்களுடன் தலைவர் செட்டில் பேசி கொண்டு இருக்க...

    படத்தின் ஸ்டில் புகைப்பட நிபுணர் கண்ணப்பன் தனது திருமண அழைப்பிதழை தலைவரிடம் கொடுக்க..

    வழக்கம் போல சிறிது நேரம் கழித்து தலைவர் ஒரு தொகை ஏற்பாடு செய்து அவரிடம் கொடுக்க அதை அவர் வாங்க மறுக்கிறார்.

    ஏன் என்று தலைவர் கேட்க நேற்று நடந்த சண்டை காட்சி போது உடைந்த உங்கள் ப்ளோ அப் க்கு பதிலா நிறைய போட சொல்லி நிறைய பணம் அதில் தயாரிப்பாளர் மூலம் கிடைத்து விட்டது என்று சொல்ல...

    இன்னும் ஒன்று அனைத்து தரப்பினருக்கும் சம்பள பாக்கி கொடுக்க நீங்கள் சொல்ல அதன் படி அவரும் கொடுக்க இந்த தொகை போதும் என்று சொல்கிறார்.

    சிரித்து கொண்டே அது வேறு இதை வைத்து கொள்ளுங்கள் திருமணம் என்றால் ஆயிரம் செலவு இருக்கும் என்று அவர் கையில் பணத்தை திணிக்கிறார்....

    1977 இல் வள்ளல் மக்கள் விருப்பப்படி முதல்வர் ஆக பின் கோட்டைக்கு வருகிறார்...அவ்வளவு கூட்டம் நிருபர்கள் புகை பட வல்லுநர்கள் அங்கே குழுமி இருக்க.

    ஒரு மெலிந்த உருவம் கொண்ட ஒருவர் கூட்டத்தில் முன்னுக்கு வர முடியாமல் தன் காமெராவுடன் தள்ளாடி போராட.

    அவருக்கு வழி விடுங்கள் என்று முதல்வர் சொல்ல நதி பிளந்தது போல நம் தங்க தலைவர் அருகில் அவர் தள்ளாடி நடந்து செல்ல....

    அவர் விருப்பப்படி படங்களை அவர் எடுக்க தலைவர் நீங்க தாழம்பூ கண்ணப்பன் தானே என்ன ஆச்சு என்று சொல்லி அருகில் இருந்த உதவியாளர் இடம் இவர் விவரம் வாங்கி என்னிடம் சேருங்கள் என்று சொல்ல.

    சுற்றி இருந்த மற்ற கேமராக்கள் பளிச் பளிச் என்று தொடர்ந்து மின்ன அனைவரும் மெலிந்த தேகம் கொண்ட கண்ணப்பனை வியப்புடன் பார்க்க.

    நிகழ்வு முடிந்து மூன்றாம் நாள் கண்ணப்பன் வீட்டு கதவை தட்டி ஒரு சீட்டில் எழுத பட்ட கே.கே நகர் விலாசம் கொடுத்து நீங்கள் நாளை இந்த முகவரியில் உள்ள வீட்டுக்கு முதல்வர் உங்களை குடி போக சொன்னார்...இதோ அந்த வீட்டின் சாவி இது என்று நீட்ட...

    நடுங்கிய கரங்கள் உடன் சாவியை பெற்று கொண்ட கண்ணப்பன் விழிகளில் கண்ணீர் ஆறாய் பெருகி ஓடுவதை கண்டு அவர் குடும்பத்தினர் திகைத்து நிற்கின்றனர்...

    அவர் தான் தலைவர்.
    அன்னை சத்தியா அவர்களின் புதல்வர்

    உங்களில் ஒருவன்

    நன்றி வாழ்க தலைவர் புகழ்..தொடரும்...

    கண்ணப்பன் அவர்களுக்கு அன்று கண்ணப்ப நாயகன் ஆக நம் காவிய நாயகன் தோன்றி இருப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்...

    என்ன தலைவர் நெஞ்சங்களே...நன்றி..........

  10. #1339
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    # பிரான்ஸ் நாட்டில் 1503 ஆம் ஆண்டு பிறந்து 1566ஆம் ஆண்டு மறைந்தவர் பிரபல தத்துவ ஞானி, ASTROLOGER
    நாஸ்டர்டாமஸ் அவர்கள்,

    அவர் வாழ்ந்த காலத்தில் எழுதி வைத்த பல குறிப்புகள் மற்றும் அவர் கணித்த இயற்கை சீற்றங்கள்,
    கொள்ளை நோய்கள்
    இன்னும் இப்போது நடந்து கொண்டிருக்கும் பல சம்பவங்கள் இவைகளையெல்லாம் நாஸ்டர்டாமஸ் வாழ்ந்த காலத்திலேயே கணித்து வைத்து விட்டுப் போய் விட்டார் என்று சொல்கிறார்கள் இப்போதைய ஆராய்ச்சியாளர்கள்,

    அவரைப் போலவே இப்போது சிலபேர் ஆராய்ச்சிகள் செய்து அவரையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஆராய்ச்சி முடிவுகளை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள் ( என்ன புரியலயா?
    விளக்கமாக சொல்கிறேன் )

    போண்டா மணி இப்போது போட்டிருக்கும் ஒரு பதிவு 1959ஆம் ஆண்டில் வெளியான, அதன் பிறகு வெளியில் தலையையே காட்டாமல் போன நம்
    "கண்ணையன் " நடித்த "பாகப் பிரிவினை " படத்தைப் பற்றிய பதிவு,

    போண்டா மணியின் ஆராய்ச்சிப்படி மதுரையில் முதன் முதலாக 3 லட்சம் வசூல் செய்தது பாகப் பிரிவினை படம்தானாம், அதற்காக மெனக்கெட்டு உட்கார்ந்து ஏகப்பட்ட ஆராய்ச்சி, கணக்கு எல்லாம் போட்டு பாகப் பிரிவினைதான் 3 லட்சம் வசூல் செய்தது, ஆனால் இந்த முட்டாள் விநியோகஸ்தர்கள் எப்படி சொல்லலாம்?
    "மதுரை வீரனும்", "நாடோடி மன்னன்"ம் முதல் முதலாக 3 லட்சம் வசூல் செய்ததாக என்று போட்டு விட்டு எம்ஜிஆர் ரசிகர்கள் சொல்லுவது பொய்,
    இப்போ நாம் சொல்லியிருக்கோம் பாருங்க அதுதான் உண்மை என்று ஏதோ " கீழடி " ஆராய்ச்சிக்கு இணையாக ஆராய்ச்சி முடிவுகளை பரபரப்பாக அறிவித்திருக்கிறார்,

    உடனே இதற்க்காகவே காத்திருக்கும் கனடா நியூ மன்னாரன் கம்பெனி தங்கவேலு துள்ளிக் கொண்டு அப்படிப் போடு, ஆமா ய்யா இதுதான் உண்மை என்று காப்பி பேஸ்ட் பண்ணி போட்டு குதூகலம் அடைந்திருக்கிறது,
    ( ஒண்ணு செய் இந்த ஆராய்ச்சிக் குறிப்பை தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிட்டு நீயும் பக்கத்தில உட்கார்ந்து க்க, கூடவே போண்டா மணியையும் வேணா கூப்டுக்க, இரண்டு பேரும் சேர்ந்து கல்வெட்டை பார்க்க வரும் இப்போதைய சந்ததியினருக்கு இந்த ஆராய்ச்சியைப் பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லி ஜென்ம சாபல்யம் அடைஞ்சிருங்க சரியா? )

    போண்டா மணி இந்த ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இருந்த வனிலா ஐஸ் குச்சி குமாரனுக்கு அன்போடு நன்றியை தெரிவித்துக் கொண்டு, பாருங்களேன் ஐஸ் குச்சி சார் எவ்வளவு துல்லியமாக கணக்கு ப் போட்டு வசூல் விபரங்கள் சொல்கிறார்,
    அது மட்டுமா தியேட்டர்காரர்கள் பங்கு, விநியோகஸ்தர்கள் பங்கு என்று துல்லியமாக சொல்வதை பார்க்கும் போது நமக்கு அப்படியே ரோமாஞ்சனம் வருதப்பா என்று புகழ் மாலை சூட்டியிருக்கிறார் ( பின்ன சென்ட்ரல் தியேட்டர்ல டிக்கெட்
    கிழிச்சவனப் புடிச்சி புதுசு புதுசா எங்களுக்கு எவ்வளவு தோணுதோ அந்த வசூலையெல்லாம் இட்டு நிரப்பி போடுவதற்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று ஐஸ் குச்சி அப்படியே கண்ணடிக்குது பாரு )

    இன்னும் ஒன்றிரண்டு ஆராய்ச்சியாளர்கள் ஒரு படி மேலே போய்

    எம்ஜிஆர் ஏன் வருடா வருடம் குறைவான படங்களில் நடிக்க வேண்டும்?
    பெரிய கம்பெனி படங்களில் ஏன் நடிக்க வில்லை? என்று அந்த அல்லக்கைகளே கேள்வியும் கேட்டு பதிலையும் அவர்களே சொல்லியிருக்கிறார்கள்,

    ஏண்டா ,தலைவர் உன்னைப் போல சினிமா மட்டும்தான் கதி என்று கிடப்பவரா என்ன, காலையில் சினிமா மாலையில் கட்சிப் பணிகள் என்று எப்போதும் பிசியாய் இருப்பவர்,

    அதனால்தான் சில படங்கள் காலம் கடந்து ரிலீஸ் ஆக வேண்டி வந்தது,
    அசோகன் போன்ற பச்சை நாதாரிப் பயலுவள்ளாம் முறுக்கியதற்கு அதுதான் காரணம்,

    ஆனால் எவ்வளவு காலம் கடந்தாலும் படம் ரிலீஸ் ஆகும் போது மடி நிறைய பணத்தை கட்டிக்கொண்டு போனவர்கள்தான் அனைவரும்,

    இப்போது வரைக்கும் அசோகன் குடும்பத்துக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது
    " நேற்று இன்று நாளை " காவியம்,

    விரைவில் வின்சென்ட் அசோகன் அந்த படத்தை டிஜிட்டல் செய்து வெளியிடுவார் என்று நம்புவோம்,

    அது மட்டும் அல்ல நீ கோணல் மாணலா கத்திக் கதறி 25 படங்களில் நடித்து வாங்கும் பணத்தை தலைவர் ஒரே படத்தில் வாங்கிக்கொண்டு போயிட்டே இருப்பார்,
    அதனாலதான் 1970 களில் " நிச்சய தாம்பூலம் " பட டைரக்டர் திரு B. S ரங்கா அவர்கள் சொன்னார் " எம்ஜிஆர் அவர்களுக்கு 25 லட்சம் சம்பளம் கொடுக்க தயாராக இருக்கிறேன், ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் எனக்கு படத்தை முடித்துத் தர வேண்டும் "

    ஆனால் அய்யனோட நிலைமை என்ன தெரியுமா?

    1975, 76 இல் தொடர் தோல்விகளுக்குப் பிறகு கணேசன் படத் தயாரிப்பாளர்களிடம்" நீங்கள் கொடுப்பதை கொடுங்கள், நான் வந்து நடித்துத் தருகிறேன் என்று கெஞ்சும் நிலைதான் இருந்தது, இந்த செய்தி அப்போதைய பத்திரிக்கைகளில் வந்து நாறியது அனைவருக்கும் தெரியும், ( இந்த செய்தி ஆதாரம் என்னிடம் காப்பி உள்ளது, தேவைப்படுவோர் வாங்கிக்கொள்ளலாம் )

    இப்படி ஒவ்வொரு நாளும் போண்டா மணி மற்றும் ஐஸ் குச்சி போடும் பதிவுகளைப் பார்த்தால் நாளைக்கே இப்படி ஒரு பதிவு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை

    " முன்பு ஒரு காலத்தில் கண்ணகி மதுரை நகரை அழித்த பிறகு கண்ணகி, கோவலன் இருவரையும் வானத்தில் இருந்து புஷ்பக விமானம் வந்து அழைத்துச் சென்றது, அது போலவே எங்கள் அய்யனையும் கண்ணம்மா பேட்டையில் இருந்து வானத்திலிருந்து தேவர்கள் பூமாரி பொழிய தனி சார்ட்டடு புஷ்பக விமானம் வந்து கூட்டிக் கொண்டு போனதை எங்கள் கண்ணால பார்த்தோம் "

    எகிப்தில் பழைய கால மன்னர் குடும்பங்களை சேர்ந்தவர்களை இறந்தபிறகு புதைக்கும்" மம்மி "களில் கூட நிறைய தங்க, வைர, வைடூரியங்கள் இப்போது தோண்டும் போது கிடைக்கிறது

    ஆனால் நீங்கள் மண்ணோடு மண்ணாய்ப் போன உங்கள் பொய்யனின்
    படங்களை தோண்டி எடுத்து பதிவுகள் போடுவது உங்களுக்கே வேடிக்கையாய் இல்லை?

    இரண்டு கார்களை வாங்கி வாடகைக்கு விடுகிறோம்,

    அதில் ஒன்று துவக்கத்தில் மிகவும் நன்றாக ஓடி கார் உரிமையாளருக்கு காசை அள்ளிக் குவிக்கிறது, காலம் செல்லச் செல்ல புதிய கார்களின் வரவு காரணமாக அந்த கார் கொஞ்சம் பழையதாக போனாலும் மவுசு குறையாமல் கார் ஓனருக்கு வருமானத்தை தந்து கொண்டே இருக்கிறது,

    ஆனால் இன்னொரு காரோ வாங்கின புதிதில் சொற்ப வருமானத்தைக் கொடுத்து விட்டு அதன் பிறகு ரிப்பேர் ஆகி காயலான் கடைக்கு போனால் ஓனர் எதை மதிப்பார்?

    அதே போல்தான் தலைவர் படங்களும்,
    கணேசன் படங்களும்

    தலைவர் படங்கள் கொரோனாவால் திரை அரங்குகளுக்கு
    வராமல் இருந்த நிலையில் இப்போது தமிழ்நாடு முழுவதும் வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டு வருகிறது,
    இப்போது சிங்காரச் சென்னையிலும் தலைவரின் திரைக் கொண்டாட்டங்கள் களை கட்டத் துவங்கியாச்சு,

    முதற் கட்டமாக சென்னை மகாலட்சுமி அரங்கில் தலைவரின் டிஜிட்டல் " ரகசியப் போலீஸ் 115" நவம்பர் 20 முதல் கோலாகலத் துவக்கம், ...


    ஒண்ணு செய்ங்க, ஒரு இடிந்த மாளிகை படத்தை தூக்கிக் கொண்டு திரிவீர்கள் அல்லவா அதை உங்கள் விநியோகக் கம்பெனி மூலமே வாங்கி ஏதாச்சும் தியேட்டர் கிடைத்தால் வெளியே ஒரு கட் அவுட் வைத்து ஒரு லட்ச ரூபாய்? மாலை போட்டு நீங்கள் நாலைந்து பேர் உள்ளே போய் நீங்களே கை தட்டி ஆனந்தப் படுங்கள்
    சரியா?

    " கீதா கோவிந்தம் " தெலுங்கு படத்தில் சூப்பராக நடித்து பார்ப்போர் மனதை எல்லாம் கொள்ளை அடித்த நடிகை " ராஷ்மிகா மந்தனா " வுக்கு இந்த வருடம்

    "NATIONAL CRUSH OF THE YEAR " என்னும் பெருமை கிடைத்திருக்கிறது,

    அதே போல் இந்த வருடம் மட்டுமல்ல இனி வரும் காலங்களிலும்
    போண்டா மணிக்கு, ஐஸ் குச்சிக்கு

    "NATIONAL LIER OF THE YEAR " என்னும் பெயர் கிடைக்க வேண்டும், கண்டிப்பாக கிடைக்கும் என்று அன்போடு வாழ்த்தி மகிழும் ...


    தலைவரின் பக்தன்...

    ஜே.ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt)...........

  11. #1340
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம் தலைவருக்கு கேமராக்கள் மீது ஆமோக ஆசை உண்டு..

    சரித்திர சாதனை படம் உ.சு.வா..க்கு அவர் தன் சொந்த கை கேமரா மூலம் சாதனை படம் எடுத்தார்...

    ஆனால் தன் பொன் பொருள் அனைத்தையும் அடகு வைத்து அதையும் தாண்டி கடன் வாங்கி அவர் எடுத்த முதல் சொந்த படம் நாடோடிமன்னன் நாம் அறிவோம்...

    சுப்பிரமணி என்ற பெரியவர் தலைவர் உடன் நாடக குழுவில் பயணித்து பின் தலைவர் இடமே பணிக்கு சேர்ந்தார்.

    வயதில் மூத்தவர்...அரங்க நிர்மாண பொறுப்புகளை கவனித்து வந்தவர்....
    ஆயிரம் தடங்கல்கள் தாண்டி அந்த படம் தயார் ஆகி கொண்டு இருந்தநேரம்.

    படத்தில் பானுமதி சிறையுள் இருக்கும் தலைவரை மேலே அறையில் இருந்து பார்ப்பது....

    மன்னன் நாடோடி இருவரும் சந்திக்கும் காட்சிகள் ஆகியவை அந்த காலத்தில் ஸ்டாண்ட் வைத்து நாலு பேர் சேர்ந்து உருட்டி கொண்டு கொண்டு வரும் அளவுக்கு கணம் வாய்ந்த ஒரு காமெரா வைத்து எடுக்க பட்ட காட்சிகள் அவை.

    ஒரு நாள் படப்பிடிப்புக்கு அனைவரும் சம்பந்த பட்ட காட்சிகளுக்கு தயார் ஆக ஆட்கள் வர தாமதம் ஆனதால் அந்த கேமராவை அந்த வயதானவர் மணி மட்டும் உடன் ஒருவர் இருக்க அவரும் தள்ளி கொண்டு வர...

    தரையில் இருந்த விரிப்பில் தட்டி கேமரா குப்புற கவிழ்ந்து கீழே விழுந்து சுக்கல் சுக்கல் ஆக லென்ஸ் நொறுங்கி போக அங்கே சத்தம் கேட்டு அனைவரும் விபரீதம் அறிந்து உறைந்து போயினர்.

    தலைவர் சுறுசுறுப்புடன் வர எடுக்க பட வேண்டிய காட்சிக்கு தயார் ஆக போக மற்ற அனைத்து முகங்களும் மாறி போய் இருப்பதை அரை நொடியில் கணித்து விடுகிறார் மன்னன்.

    என்ன விஷயம் என்று கேட்க.....ஒருவர் மட்டும் தயங்கி தயங்கி சம்பவம் சொல்ல...
    இதற்கு காரணம் யார் என்று தலைவர் கேட்க.

    அவர் பதில் சொல்ல.
    நடுங்கிய படி அந்த மூத்தவர் இன்றுடன் இங்கே சரி என்ற முடிவுடன் தலைவர் அருகில் நடுக்கத்துடன் செல்ல.

    வாங்க....இது சரியா..

    உங்க வயதுக்கு ஏற்ற வேலையை நீங்க செய்ய வேண்டும்...
    உங்கள் மேலே அல்லது காலில் விழுந்து அடி பட்டு இருந்தால் உங்கள் குடும்பத்துக்கு யார் பொறுப்பு?

    போகட்டும் விடுங்கள். இனி நீங்கள் மற்றவரை இங்கே வேலை வாங்க வேண்டும்...இதே போல ஒன்று விரைவில் நாளைக்குள் தயார் செய்கிறேன்....யாரும் அவர் மீது கோவம் கொள்ள வேண்டாம்.

    என்று அந்த பெரியவர் தோள் மீது கை போட்டு கொண்டு ஓய்வரை நோக்கி ஒன்றும் நடக்காதது போல நடந்து கடந்து செல்கிறார் பொன்மனம்.

    சும்மா இல்லை நாம் அவரை பற்றி இந்த நிமிடம் வரை பேச எழுத அதை பலர் ரசிக்க.

    இந்த உலகில் அன்றும் இன்றும் என்றும் ஒரே மன்னன் மனிதாபிமானி என்றால் அது நம் தங்க தலைவர் மட்டும் தானே?...

    கருத்துக்கள் வரவேற்க படுகின்றன....நன்றி.

    உங்களில் ஒருவன்.

    வாழ்க தலைவர் புகழ்.
    தொடரும்.............

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •