Page 132 of 210 FirstFirst ... 3282122130131132133134142182 ... LastLast
Results 1,311 to 1,320 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1311
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-* வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 13/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒருநாள் காரில் பயணிக்கும்போது கார் கண்ணாடியை இறக்கிவிட்டு வேடிக்கை பார்த்தவண்ணம் வருகிறார் . தி.நகர் வாணி மகால் அருகில் உள்ள ஒரு வீட்டின் கேட்டின் மீது 3* வயது மிக்க குழந்தை ஏறிவிட்டது .இறங்குவதற்கு வழி தெரியாமல் கேட்டை பிடித்தபடி அழுது கொண்டு இருக்கிறது. வீட்டின் உரிமையாளர் யாரும் அருகில் இல்லை .* எம்.ஜி.ஆர். அவர்கள் ஓட்டுனரிடம் உடனே காரை நிறுத்த சொல்லி , அந்த குழந்தையை கேட்டில் இருந்து பாதுகாப்பாக இறக்கிவிட்டு ,வீட்டின் உள்ளே செல் என்று சொல்லிவிட்டு புறப்படுகிறார் .* படப்பிடிப்பிற்கு அவசரமாக செல்லும் வேளையில் குழந்தையின் அழுகுரல் கேட்டு, தாய்மை உணர்வோடு, வண்டியை நிறுத்த சொல்லி,ஓடி சென்று* குழந்தையை பாதுகாப்பாக இறக்கி வீட்டின் உள்ளே அனுப்பிய பண்பு இருக்கிறதே ,அது எல்லோருக்கும் எளிதில் வந்துவிடாது . இந்த மாதிரியான பண்புகள், குணங்கள்தான் மக்களால் ஆட்கொள்ளப்பட்டு மக்கள் தலைவரானார் எம்.ஜி.ஆர்.*


    உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள், பல உயர்ந்த அந்தஸ்துகளை பெற்றவர்கள்*எல்லாம் ஒருபோதும் ,உனக்கு சமானம் நான் என்று எண்ணாமல், எனக்கு சமானம் நீ என்று* அழைத்து பேசுகிற, அன்போடு பழகுகிற ,அந்த பண்பாடுகளை எம்.ஜி.ஆர். அவர்கள் விட்டு சென்றார் என்பதற்கு உதாரணமாக* நாம் சொல்லப்போனால் இப்போது நமது சகாப்தம் தொடரில் பேட்டி அளித்து வரும் திரு.லியாகத் அலிகான் அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.* அவர் மிக பெரிய பதவியில் இருந்தவர் .* அவர் வாழ்க்கையில் மாமன்னர்* எம்.ஜி.ஆரின் கரங்களை,தொட்டு பழகியவர் .அப்படிப்பட்டவரை சமமாக நடத்துகிறார் . வின் டிவியின் உரிமையாளர் திரு.தேவநாதன் அவர்கள் ஒருபோதும் ஒவ்வொருவரையும், உனக்கு சமானம் நான் என்று பேசியதில்லை .எனக்கு சமானம் நீ என்று ஒவ்வொருவரையும் மதித்து, பல்வேறு நிர்வாக விஷயங்களை பகிர்ந்து கொண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் விட்டு சென்ற பண்பாட்டு குணங்களை கடைபிடித்து வருகிறார் . அந்த பண்பாடு இன்றைய இளையதலைமுறைக்கு வரவேற்பு தொட்டிலாக, பதாகையாக மலரவேண்டும் என்பதற்காக சகாப்தம் நிகழ்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது .**.***


    ,முதல்வர் எம்.ஜி.ஆர். ஒரு நாள் கோட்டைக்கு* காரில்**செல்லும்போது சென்னை பல்கலை கழக கட்டிடத்தில் உள்ள கடிகாரம் ஓடவில்லை என்பதை கவனிக்கிறார் .* கோட்டைக்கு சென்றுவிடுகிறார் .* மறுநாள் சாலையில் செல்லும்போது அந்த* கடிகாரம் சரிசெய்யப்படாமல் பழுதாகி நிற்கிறது .**மூன்றாவது நாள் அந்த கடிகாரத்தை பார்த்துவிட்டு ,ஓட்டுனரை சென்னை பல்கலை கழக வளாகத்தில் காரை* நிறுத்த சொல்கிறார் . அங்கிருந்த காவலாளியை அழைத்து, இந்த கடிகாரம் ஓடாமல் நிற்கிறது . இந்த அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தெரியாதா..நானும் கடந்த மூன்று நாட்களாக கவனித்து வருகிறேன். பழுது பார்க்கப்படாமல் இருக்கிறது என்றவுடன், ஐயா நான் அதிகாரிகளிடம் சொல்லி உடனே கவனிக்க சொல்கிறேன் .என்று காவலாளி சொன்னதும் எம்.ஜி.ஆர். புறப்பட்டு சென்றார் .இந்த விஷயம் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, அன்று மாலைக்குள் சரி செய்யப்படுகிறது .* கோட்டையில் இருந்து மாலையில் எம்.ஜி.ஆர். காரில் வரும்போது கடிகாரத்தை கவனிக்கிறார். அது ஓடி கொண்டிருந்தது .ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும் .* அவர் நினைத்திருந்தால் தன் உதவியாளரை அனுப்பி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் இந்த தவறை சொல்லி பழுது பார்க்க செய்திருக்கலாம். அல்லது கோட்டையில் இருந்தவாறே, தொலைபேசியில் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து, உடனே பழுது பார்க்கும்படி உத்தரவு பிறப்பித்து இருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில்தானே இறங்கி வந்து தகவல் தெரிவித்ததற்கு காரணம்* அவர் எடுத்து கொண்ட அக்கறை,**பல்வேறு சிறிய விஷயங்களில் அவர் காட்டுகிற அந்த நுட்பமான கவனிப்பு ஆகியவைதான் மக்களின் ஆழ்மனதில் அவர் குடிகொண்டுள்ளார் என்பதை பறை சாற்றுகிறது .

    திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி :* முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் பொதுக்குழுவில்*பேசும்போது*அமைச்சர்கள் சிலர்*தவறு செய்கிறார்கள் , அவர்களை என்ன செய்யலாம் என்று கேட்டபோது , பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர்*அந்த அமைச்சர்கள் பெயரை சொல்லி* அவர்கள்* எல்லாம் சரியாக*பணியாற்றவில்லை. மேலும் அவர்கள் மீது சில குற்றச்சாட்டுக்கள் தெரிவித்து எழுதி போடும்*நேரத்தில் ஒட்டு மொத்தமாக 10 அமைச்சர்களை தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பதவியில் இருந்து நீக்கிவிடுகிறார்கள் . அந்த பட்டியலில்*அமைச்சர் அரங்கநாயகமும்* உள்ளார் . இது நடந்ததும்* மிகுந்த வருத்தம் அடைந்த*அமைச்சர் அரங்க*நாயகம் தலைவரை சந்திக்க வருகிறார் .அப்போது அங்கே மேலும் 6 அமைச்சர்கள் காத்திருக்கின்றனர் .* அவர்களை பார்க்க வந்த தலைவர் அமைச்சர் அரங்கநாயகத்தை மட்டும் தனியே உள்ளே அழைத்து செல்கிறார் .* தலைவர் அவர்கள் அமைச்சர் அரங்கநாயகத்தை பக்கத்தில் அமர வைத்து ,மாலை சிற்றுண்டியில் ஆளுக்கு இரண்டு*வெங்காய*பஜ்ஜிகளை***இருவர்*தட்டிலேயும் வைக்க சொல்லி*, இருவரும் சாப்பிடுகிறார்கள் .அதன்பின் பால் இருவருக்கும் தரப்படுகிறது .*தலைவர் சாப்பிட ஆரம்பித்தால் தட்டிலே*வைத்த அனைத்தும் காலியாகிவிடும் .ஆனால் அமைச்சர் அரங்கநாயகம் அரைகுறை மனதோடு*ஒன்றரை*பஜ்ஜியை*சாப்பிட்டுவிட்டு அரை பஜ்ஜியை*மீதம் வைக்கிறார் .* மேலும் இரண்டு பஜ்ஜிகளை பணியாளிடம் எடுத்து வர சொல்லிவிட்டு , அரங்கநாயகம் மீதம் வைத்திருந்த அரை பஜ்ஜியை*எடுத்து தன்* தட்டிலே*வைத்து சாப்பிட்டு விடுகிறார் . இந்த சம்பவத்தை என்னிடம் அரங்கநாயகம் அவர்கள் சொல்லும்போது ,தலைவர் அவர்கள் எப்படிப்பட்ட மாமனிதர். வெளியில் 6 அமைச்சர்களை அமரவைத்துவிட்டு, நான் வந்த*நோக்கத்தை அறிந்து*பேசாமல் இருந்தாலும் பரவாயில்லை, ஆனால்* ,என்னை*மட்டும் அழைத்து*சிற்றுண்டி தருகிறார் . நான் சாப்பிட்டு மீதம் வைத்திருந்த பஜ்ஜியை*எடுத்து சாப்பிடுகிறார் என்றால் எந்த அளவிற்கு*நம் மீது பாசமும், நேசமும் வைத்திருக்கிறார் பாருங்கள் என்று மிகவும் சிலாகித்து சொன்னார் .* தலைவர் அவர்கள் இந்த அமைச்சரை நீக்கிவிட்டோமே, அவர் மிகுந்த வருத்தத்தில்*இருப்பாரே என்று எண்ணி, அவருடைய வருத்தத்தை வேறு விதத்தில்*போக்கும் வகையில்*, அவரை*சமாதானம் செய்கிறார். .அப்படித்தான்** அமைச்சர் காளிமுத்துவை* நீக்கியபின்*தலைவர் மதுரைக்கு செல்கிறார் . அங்கு தலைவரோடு*சில அமைச்சர்கள் நின்று பேசி கொண்டிருக்கிறார்கள் .* பதவி நீக்கத்தால் மிகுந்த வருத்தம் அடைந்த*அமைச்சர் காளிமுத்து அங்கே வருகிறார் .* தலைவர் காரில்*அமர்ந்து புறப்படும்*நேரம் அது. மற்ற சில*அமைச்சர்கள் தலைவருடன் காரில் பயணிக்க தயாராக உள்ளனர் .* அந்த நேரத்திலே வந்த அமைச்சர் காளிமுத்துவை அழைத்து*,சில நிமிடங்கள் தலைவர் தனியே பேசுகிறார் .பின்னர் புறப்படும்போது தலைவருடன் சில*அமைச்சர்கள் பயணிக்க தயாராக இருந்த நிலையில்*சிலரை* இறங்க* சொல்லி, காளிமுத்துவை அழைத்து , காரில்*தன்* பக்கத்தில் அமரச்செய்து , அவரை*பதவி* நீக்கம் செய்துவிட்டோமே, அவர் மிகுந்த வருத்தத்தில் இருப்பாரே என்று எண்ணி, அந்த வருத்தத்தை*வேறு விதத்தில்*போக்கும் வகையில்*அவரை சமாதானப்படுத்தி பேசிய மாபெரும்*தலைவர்தான்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*


    நான் எத்தனையோ இலக்கியங்களை படித்திருக்கிறேன் .* மிக பெரிய புராணங்களை எல்லாம் படித்து நாம் கேள்விப்பட்டு இருப்போம்.* அவர்கள் எல்லாம் தங்களுடைய செயலை நியாயப்படுத்தி , தண்டனையை*நியாயப்படுத்தினால் கூட*, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தான் அளித்த*தண்டனையை*வெகு நாட்கள்*ஜீரணித்து கொள்ள முடியாமல்*அவர்களை பக்கத்தில் அமரவைத்து*ஆசுவாசப்படுத்தி அன்பு, பாசம் காட்டுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.* இப்படிப்பட்ட தலைவரோடு*நான் பழகும் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்ததை*எண்ணி* பார்க்கின்றபோது ,* அவருடைய தலைமையிலேதான் என்னுடைய திருமண*வாழ்த்துக்கள்* பெற்று, அவருடைய வாழ்த்துரை*வழங்கப்பட்டது என்பதை*நினைத்து* பார்க்கின்றபோது உள்ளபடியே நான் பெரிதும் உவகையும், மகிழ்ச்சியும் அடைகிறேன் .* அதே தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்* தலைமையில், கோவையில்*மாணவர் மாநில*மாநாடு நடைபெறுகிறது .* அந்த மாநாட்டிற்கு வெள்ளோட்டமாக , ஒரு மாதத்திற்கு முன்னதாக அங்கே வந்து, அந்த மாநாட்டு*ஏற்பாடுகளை எல்லாம் சுமார்*ஒரு மணி நேரம் கலந்து ஆலோசிக்கிறார். அப்போது வந்தவர்கள், கோவைத்தம்பி, திருப்பூர் மணிமாறன், ராமசாமி, முனிரத்தினம், முன்னாள், இந்நாள் மாவட்ட செயலாளர்கள் ,போன்றவர்களுடன், மாணவர்களையும் அவர் அழைத்திருந்தார் .அப்போது திரு.வெள்ளைச்சாமியையும் கோவை*சர்க்யூட் ஹவுஸுக்கு வர செய்தார்* எங்களோடு, பொள்ளாச்சி*ஜெயராமன், வேலுச்சாமி,லிங்கராஜ் ,ராஜேந்திரன் போன்ற மாணவர்களுடன் நானும் செல்கிறேன் .* நான் பேண்ட்,சட்டை அணிந்து அந்த மாணவர்கள் கும்பலுடன் நிற்கின்றேன் .நான் வேட்டி அணிந்து சில கூட்டங்களில் கலந்து கொண்டதையும் தலைவர் பார்த்திருக்கிறார் . தலைவர் அவர்கள் பேசிக்கொண்டே, தொலைபேசியில் சென்னையில் உள்ள திரு.குழந்தைவேலுவுடன் பேசுகிறார் . . கோவையில் மாணவர் மாநில மாநாடு நடைபெறுகிறது அதுபற்றி தெரியுமா உனக்கு என்று சொல்லிவிட்டு வெள்ளைச்சாமியிடம் பேசுகிறார் .நானும் பக்கத்திலேயே நிற்கிறேன்.தலைவர் அவர்கள் என்னுடைய திருமணத்தை நடத்தி வைத்து, வாழ்த்துரை வழங்கி இருக்கிறார். என்னுடைய பெயரை, பல குழந்தைகளுக்குதேர்தல் நேரத்தில்**பெயர் சூட்டி இருக்கிறார் .**


    நான் பதினைந்து மாணவர்களுடன் கும்பலாக நிற்கிறபோது என்னை அடையாளம் கண்டு கொண்டாரா இல்லையா என்று தெரியவில்லை*வெள்ளைச்சாமியிடம் எங்கே லியாகத் அலிகானை காணவில்லை என்று கேட்கிறார் .* நான் பக்கத்திலேயே நிற்கிறேன். அண்ணே நான் தான் லியாகத் அலிகான் என்கிறேன் .நீ சும்மா இரு. உன்னை* *எனக்கு தெரியாதா , நான் விளையாட்டுக்காக வெள்ளைச்சாமியிடம் கேட்டேன் என்றார் .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு என்னுடைய பெயர் எப்போதும் நன்றாக நினைவில் இருக்கும்.* சில நேரங்களில் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருக்கும்போது*என்னுடைய பெயர் சில சமயங்களில் அவருக்கு நினைவுக்கு வருவது கடினம்*ஏனென்றால் கம்பம் தொகுதியில்,என் பெயரை நினைவில் வைத்து* என்னை வேட்பாளராக அறிமுகம் செய்த தலைவரை சந்திப்பதற்கு* நான் ராமாவரம் தோட்டத்திற்கு சென்றேன். அப்போது அங்கு 2000 பேர் கூடியிருந்தனர் . தலைவர் முதல்வர் ஆன பின்பு* அவருக்கு** ஒரு சால்வை அணிவித்து, கையில் ஒரு எலுமிச்சம்பழம் கொடுத்தபோது, அவரது உதவியாளர்கள் என்னை பிடித்து அவர்கள் பக்கம் இழுக்கிறார்கள். நான் உடனே, அண்ணே* நான்தான் லியாகத் அலிகான் என்றவுடன், தலைவர் உதவியாளர்களிடம் அவனை விடுங்கள் என்று சொல்லி, தன்னருகே அழைத்து, என் தோளின்மீது கையை போட்டு, எப்போது வந்தாய், எங்கே தங்கி இருக்கிறாய்* என்று சில நிமிடங்கள் விசாரித்துவிட்டு, சரி, நீ கவலைப்படாதே, ஒரு வாரத்திற்கு இங்கேயே தங்கிவிடு. நான் உன்னை பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி, அந்த மாபெரும் கூட்டத்தினர் இடையே எனக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் .* கோவையில் நடைபெற்ற மாணவர் மாநில மாநாட்டில் என்னை வரவேற்பு குழு தலைவராக பரிந்துரை செய்கிறார் .**அப்போது வெறும் 26 வயது நிரம்பிய எனக்கு அந்த பொறுப்பை தந்தது சாதாரண விஷயமல்ல.* அப்படி நியமிக்கப்பட்ட நான், வெள்ளைச்சாமி, மற்றும் சில மாணவர்களுடன் பேசி கொண்டிருந்தபோது நாங்கள் வேண்டுகோள் வைக்கிறோம். தலைவரே, மாநாடு நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக தாங்கள் வந்துவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் சென்னையில் நடைபெறும் பொதுக்குழுவை இந்த நேரத்தில் கோவையில் நடத்தினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் யோசனை தெரிவித்தோம். அதற்கு ஆரம்பத்தில் பயம் இருந்தாலும், தைரியத்தை வரவழைத்து கொண்டு தலைவரிடம் துணிந்து சொன்னோம் .* ஏனென்றால் எங்கள் வயது அப்படி. எல்லோரும் இளைஞர்கள்..* அப்போது அங்கு வந்திருந்த அண்ணா பத்திரிகை ஆசிரியரிடம்* மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சென்னையில் நடைபெறுவதாக இருந்த அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் கோவையில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடும்படி செய்தார் .* கோவையில் ப்ரெசிடென்சி ஓட்டலில் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உத்தரவின்படி செயற்குழு, பொதுக்குழு நடத்தப்பட்டது . அடுத்த நாள் கோவையில் மாணவர் மாநில மாநாடு நடைபெற்றது . வரவேற்பு குழு தலைவராகிய என் தலைமையில்* ஒரு நாள், வெள்ளைச்சாமி தலைமையில் ஒருநாள் ,ஏ.சி.சண்முகம், ஜெகத்ரட்சகன், கம்பம் வரதன், பொள்ளாச்சி ஜெயராமன் போன்றவர்கள் எல்லாம் கலந்துகொண்டு உரையாற்றுகிறோம் என்று சொன்னால், இளைஞரகளை அவ்வளவு* உற்சாகப்படுத்தி, அவர்களுக்கு தனி பொறுப்பை கொடுப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். பயப்பட மாட்டார் .இவர்களால் இதை செய்ய முடியும் என்று நம்பிக்கை வைத்து* துணிந்து முடிவு எடுத்து எங்களை எல்லாம் வளர்த்துவிட்ட,உருவாக்கி விட்ட* தலைவர்***எம்.ஜி.ஆர். அவர்கள் .என்றைக்குமே மறக்கலாகாத தலைவராக*33ஆண்டுகள் ஆகியும் கூட இன்னும்* மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒப்பற்ற தலைவராக*,ஓய்வில்லாமால் உழைத்த காரணத்தால்தான் அவருடைய 70 வது* வயதிலேயே அவர் நம்மைவிட்டு பிரியும் ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டது .* அவர் ஒருநாளும் சும்மா உட்கார்ந்ததில்லை. ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்*என்று வெறுமனே அவர் பாடவில்லை. அதன்படி நடந்து ஒரு வரலாறு*படைத்தார் .* இவ்வாறு திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .*
    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்/காட்சிகள் விவரம்*
    ---------------------------------------------------------------------------------
    1.ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் -குடியிருந்த கோயில்*

    2.இன்பமே உந்தன் பேர் பெண்மையோ - இதயக்கனி*

    3.துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில்*

    4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1312
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    12.11.1972- அன்று திரு.கருணாநிதி அரசு மீதான ஊழல் பட்டியலை குடியரசுத்தலைவர் கே.கே.ஷாவிடம் கொடுத்தார் #புரட்சித்தலைவர்..

    புரட்சித்தலைவருடன் கே.ஏ.கே., எஸ்.டி.எஸ்., மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி கல்யாண சுந்தரம் ஆகியோர் உடன் சென்றனர்.

    'தமிழகத்தில் இயல்புக்கு மாறான நிலையும், பெருங் குழப்பமும்
    நிலவுவதாக குற்றம் சாட்டி,
    உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்'

    - என்று அன்றைக்கு தமிழகத்திலுள்ள அனைத்து எதிர் கட்சிகளும் குரல் எழுப்பிய நிலையில் நவம்பர் 13-சட்டமன்ற மன்றம் கூடுவதாக அறிவிக்கபட்டது.

    இந்த நிலையில் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொன்டது...

    அப்போது சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 5...

    திமுகவிலிருந்து மேலும் அதிமுகவிற்கு யாரும் செல்லாமல் இருக்கவும், சட்டமன்ற உறுப்பினர்களை கண்காணிக்கவும், திமுக மாவட்ட செயலாளர்களையும், முக்கிய நிர்வாகிகளையும் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்தார் திரு.கருணாநிதி.

    திரு.கருணாநிதியின் ஆசை வார்த்தைகளுக்கும், பதவி சுகத்திற்கும் திமுகவின் சுயநலக் கூட்டம் அடி பணிந்தது.

    ஆனால் #எம்ஜிஆர் என்கிற வார்த்தையை உயிர் மூச்சாய்க் கொண்ட லட்சோப லட்சம் தொண்டர்களை திரு.கருணாநிதியால் விலைக்கு வாங்க முடியவில்லை.

    பரபரப்பான சூழ்நிலையில்தான்
    சட்டமன்றம் கூடியது...

    அதற்கு பின்னால் நடந்ததுதான் நம் அனைவருக்கும் தெரிந்ததுதானே...........vr...

  4. #1313
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கார்த்திகை மாதம் 1 திங்கள்கிழமை
    உலக எம்ஜிஆர் ரசிகர்களே
    இந்திய எம்ஜிஆர் ரசிகர்களே
    தமிழக எம்ஜிஆர் ரசிகர்களே
    உங்கள் அனைவருக்கும் கோடி நமஸ்காரங்கள்
    நீங்கள் பார்க்கும் இந்த வீடியோவில் உங்கள் முன் அமர்ந்து வீடியோவில் பேசுகின்றவர்பெயர்

    கலைஞானம் அவர்கள்
    சிவாஜி அவர்களை வைத்து. மிருதங்க சக்கரவர்த்தி என்ற படத்தை தயாரித்தவர்

    இவர் ரஜினிகாந்த் அவர்களை வைத்தும் படம் தயாரித்துள்ளார்

    வேறு பல நடிகர்களை வைத்தும் படம் தயாரித்துள்ளார்

    இவர் கதை வசனம் எழுதக்கூடியவர்
    இவர் எம்ஜிஆர் அவர்களுக்காக. கொடுத்து சிவந்த கரம் என்ற ஒரு கதையை எழுதி வைத்திருந்தார் அந்தக் கதையை பெங்களூரில் இருந்த எம்ஜிஆர் அவர்களிடம் சொல்லி இருக்கிறார்

    கதையைக் கேட்ட எம்ஜிஆர் அவர்கள் இந்த படத்தை நாம் தயாரிக்கலாம்
    சென்னை சென்று ஆர் எம் வீரப்பன் இடம் மற்ற வேலைகளை ஆரம்பிக்க சொல்லுங்கள் என்று இவரை பெங்களூரிலிருந்து சென்னைக்கு எம்ஜிஆர் அனுப்பிவிட்டார்
    பிறகு அரசியல் சூழ்நிலை காரணமாக அந்தப் படம் தயாரிக்கப்படவில்லை எம்ஜிஆர் முதலமைச்சராக வந்துவிட்டார்
    இந்தத் தகவலை கலைஞானம் அவர்களே வீடியோவில் கூறியிருக்கிறார்
    அந்த வீடியோவை நான் துளைவிக் கொண்டிருக்கிறேன் கிடைத்தவுடன் உங்களுக்கு பதிவு செய்கிறேன்

    1955 ஆண்டில் பாடலாசிரியர் காமாட்சி அவர்கள் இறந்த பொழுதுநடந்த நிகழ்ச்சியை கலைஞானம் கூறுகிறார்

    யார் வாயை திறந்தாலும் எம்ஜிஆர் பணம் கொடுத்தார் கொடுத்தார் என்றுதான் கூறுகிறார்கள்

    எந்த நடிகையாவது சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இப்படி மற்றவருக்கு உதவி செய்திருந்தால்
    அதை பேப்பரில் படித்திருந்தால்
    அல்லது டிவியில் கேட்டிருந்தாலும்

    அந்த நடிகையின் ரசிகர்கள் முகநூலில்அந்த

    அற்புத செய்தியை
    ஆனந்த செய்தியை
    அதிசிய செய்தியை
    அடுத்தவர்கள் கேட்டு வாயைப் பிளக்கும் அந்த செய்தியை
    அடுத்தவர்கள் கேட்டு ஆர்பரிக்கும்செய்தியை
    அடுத்தவர்கள் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் அந்த செய்தியை

    அந்த நடிகையின் பெயரில் ரசிகர் மன்றம் வைத்த அந்த ரசிகர்கள் முகநூலில் அதை வெளியிட அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
    . பதிவிட கேட்டுக்கொள்கிறேன்

    தர்மம் செய்வதில் எம்ஜிஆருக்கு ஈடு இணை யாரும் கிடையாது

    எம்ஜிஆர் கால் தூசுக்கு கூட அவர்கள் நிகராக மாட்டார்கள்.........vr...

  5. #1314
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாலு பேருக்கு நன்றி என்கிற பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்

    'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
    வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
    போகும் போது வார்த்தை இல்லை...
    போகும் முன்னே சொல்லி வைப்போம்..!

    இந்த கடைசி இரு வரிகளை மட்டும் மாற்றிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அதைக் கண்ணதாசனிடமும் தெரிவித்தார்.

    சரி... மாற்றித் தருகிறேன் என்று சொன்ன கவியரசர்

    'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
    வார்த்தையாலே நன்றி சொல்வோம்.
    வார்த்தை இன்றிப் போகும் போது...
    மௌனத்தாலே நன்றி சொல்வோம்..!'

    என்று மாற்றிக் கொடுத்தார். இதைப் பார்த்த பிறகுதான் எம்.ஜி.ஆருடைய முகத்தில் திருப்திப் புன்னகை பரவியது. காரணம் என்னவெனில் தனது பாடல்களில் வலிமை மிகு எதிர்மறையான வார்த்தைகள் இடம்பெறக் கூடாது என்பதில் மக்கள் திலகம் உறுதியாக இருந்ததுதான்.

    கவிஞர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் தான் எழுதியதை மாற்றமாட்டார்கள். ஆனால் அதை மாபெரும் கவியரசர் இயைந்து மாற்றினார் என்றால் அவரது பெருந்தன்மைக்கு அளவில்லை..!...

  6. #1315
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மக்கள்_திலகம்...

    #மீனவ_நண்பனாக..

    உரிமைக்குரல் என்ற ப்ளாக்பஸ்டரை படத்தை 1974ம வருடத்தில் கொடுத்து,மக்கள் திலகம் +இயக்குநர் ஸ்ரீதர் கூட்டணி அசைக்க முடியாத வெற்றிக்கூட்டணி ஆனது.

    அந்த வெற்றிக்கூட்டணியின் இரண்டாவது படைப்புதான் மீனவ நண்பன்.இந்த படத்தை துவக்கும்போது அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த மக்கள் திலகம் , படம் 1977 ம் ஆண்டு சுதந்திர தினம் அன்று வெளிவந்தபோது கோட்டையில் கொடியேற்றும் முதல்வராகிவிட்டார்.

    திரைப்படத்தில் குமரன் என்ற மீனவ நண்பராய் வரும் மக்கள் திலகம், வி.கே.ராமசாமி-நம்பியார்-வீரப்பா கூட்டத்தினர் மீனவர்கள், அடிமாட்டு விலைக்கு மீன்களை தங்களிடம்தான் விற்க வேண்டும் என்ற ஏகாதிபதியத்தை எதிர்த்து போராடுகிறார். மோட்டார் போட்டில் மீன் பிடித்து மீனவர்கள் நல்ல விலைக்கு மீன்களை விற்க உதவுகிறார். எதிர்ப்பை மீறி கமலி ((லதா))யை மணக்கிறார். இறுதியில் தவறு செய்தவர்கள் மனம் திருந்துகின்றனர்.

    இயக்குநர் ஸ்ரீதருக்கு முக்கோண காதல் கதைகள்தான் எடுக்க முடியும் என்பதை இரண்டாவது முறையாக இப்படத்தின் மூலம் உடைத்துக்காட்டினார் ஸ்ரீதர்.

    "எங்கிட்ட நெருங்காதே..நெருங்கின சுட்ருவேன்" என நம்பியார் துப்பாக்கியுடன் எச்சரிக்கை விடுக்க..
    மக்கள் திலகம் " சும்மா சுடு..எனக்கு துப்பாக்கியால் சுடப்பட்ட அனுபவம் ஏற்கனவே உண்டு" என சொல்லும் போது எழுந்த கைதட்டலும் ஆரவாரமும் இன்னும் காதில் ஒலிக்கிறது.

    மக்கள் திலகத்தோடு ..லதா, வெ.ஆ.நிர்மலா, நம்பியார், வி.கே.ஆர், ,நாகேஷ் என பலர் நடித்திருந்தாலும் மக்கள் திலகமே கடைசி வரை படத்தை தனி மனிதனாக தூக்கி நிறுத்தியுள்ளார்.

    வழக்கம்போல் மக்கள் திலகத்தின் பட பாடல்கள் மெல்லிசை மன்னர் இசையில் விருந்துபடைக்கின்றன. "பொங்கும் கடலோசை".."நேருக்கு நேராய் வரட்டும்".."தங்கத்தில் முகமெடுத்து".." கண்ணழகு சிங்காரிக்கு".."பட்டத்துராஜாவும் பட்டாள சிப்பாயும்".."நேரம் பெளர்னமி நேரம்" ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.

    இந்த படம் தமிழகமெங்கும் நூறு நாட்கள் ஓடி வசூலில் சாதனை படைத்து சூப்பர் ஹிட்டானது. அறுபதுகளில் படகோட்டியாய் வென்றவர்..எழுபதுகளில் "மீனவ நண்பராயும்" வென்றார்.கோட்டையையும் பிடித்தார்.

    தகவல் :https://en.m.wikipedia.org/wiki/Meenava_Nanban...Sr.bu...

  7. #1316
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    # சூரிய குலத்தைச் சேர்ந்த மன்னன் திருயருனி,
    அவனுடைய ஏக புத்திரன் சத்தியவிரதன்,
    தந்தை சொல்லைக் கேட்காமல் சுற்றித் திரிந்தான்,
    மன்னனும் அதைக் கண்டு மனம் வருந்தி மகரிஷி "வசிஷ்டரி டம் " அனுப்பி வைத்தான்,
    அந்த மகானுடைய போதனையாவது தன் மகனை திருத்தி விடாதா என்று மன்னன் நினைத்துக் கொண்டிருக்க கடைசியில் அந்த மகன் மகரிஷி வசிஷ்டருக்கே அடங்கவில்லை, அதனால் மனம் வெதும்பிய மகான் தகப்பனுக்கு சொல்லி அனுப்பி விட்டு ஆசிரமத்தை விட்டே துரத்தி விட்டார், அதைத் தொடர்ந்து மன்னனும் இனி என் முகத்தில் விழிக்காதே என்று சொல்லி அரண்மனையை விட்டு வெளியே அனுப்பி விட்டார்,

    ஆனால் சத்திய விரதனோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் காட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான்,

    அந்த நேரத்தில் மகரிஷி "விஷ்வாமித்திரர் கடும் தவம் புரிய வேண்டி தன் மனைவி, பிள்ளைகளை காட்டில் தனியாக விட்டு விட்டு இன்னொரு காட்டுக்கு சென்று விட்டார்,

    தனியே விடப்பட்ட முனிவரின் குடும்பத்துக்கு இந்த சத்தியவிரதன் உணவுக்கான தேவையை கவனித்துக் கொண்டான்,

    அப்போது ஒரு சமயம் மழைப்பொழிவு இல்லாததால் காடு வறண்டு உணவுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டு விட்டது, அந்த நேரத்தில் நம் சத்தியவிரதன் வேறு வழி இல்லாமல் வசிஷ்டர் வளர்த்த பசுவைக் கொன்று அதன் இறைச்சியை தானும் உண்டு விஷ்வாமித்திரர் குடும்பத்துக்கும் கொடுத்து விட்டான்,

    சம்பவத்தை அறிந்த வசிஷ்டர் கடும் கோபம் கொண்டு நீ மூன்று பாவங்களை செய்திருக்கிறாய்
    " முதல் பாவம் தகப்பன் சொல் பேச்சு கேட்காதது, இரண்டாவது பாவம் பசுவைக் கொன்றது,
    மூன்றாவது பாவம் பசு என்றும் பாராமல் அதன் இறைச்சியை உண்டது,
    இந்த மூன்று பாவங்களை நீ செய்ததால் இன்று முதல் உன் பெயர் "திரி சங்கு " என்று அழைக்கப்படட்டும், அது மட்டும் அல்லாமல் உன் உருவமும் அருவருப்பாக மாறிப் போகட்டும் என்று சாபம் கொடுத்து விட்டார்,

    இந்த நேரத்தில் கடும் தவம் முடிந்து வந்த விஷ்வாமித்திரர் நடந்த சம்பவங்களை எல்லாம் அறிந்து கொண்டார்,

    ஆனால் அவருக்குள் ஒருவித இரக்கம் சத்தியவிரதன் மேல் ஏற்பட்டது, தன் குடும்பத்திற்காகத்தானே பசுவைக் கொன்றிருக்கிறான் எனவே அதை பாவமாக நான் கருத மாட்டேன் என்று சொல்லி திரி சங்குவைப் பார்த்து என் குடும்பத்துக்கு உதவியதால் நீ இந்த நிலையை அடைந்தாய் எனவே அதற்கு பரிகாரமாக உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்று சொல்லி விட்டார்,

    யோசித்துப் பார்த்த திரி சங்குவும் பசுவை கொன்றதால் இந்த ஜென்மத்தில் நான் சொர்க்கம் போக முடியாது என்று வசிஷ்டர் சாபம் கொடுத்து விட்டார் எனவே இந்த உடலுதான் நான் சொர்க்கம் போக நீங்கள் அருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டான்,

    உடனே விஷ்வாமித்ர முனிவரும் திரி சங்கு சொர்க்கம் போக வேண்டி அதற்க்கான வேள்வியை ஆரம்பித்தார்,

    திரி சங்குவும் சொர்க்கத்தை நோக்கி முன்னேற ஆரம்பித்தான், அதை க் கண்ட இந்திரன் இந்த பூத உடலோடு நீ சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது என்று சொல்லி தடுத்தாலும் திரி சங்கு அதை பொருட்படுத்தாமல் மேலும் முன்னேறவும் இந்திரன் கோபத்தில் திரி சங்குவை எட்டி உதைக்கவும் திரி சங்கு கீழே விழ ஆரம்பித்தான்,
    இதைப் பார்த்த விஷ்வாமித்ரர் சொர்க்கத்துக்கும், பூமிக்கும் இடையில் வந்து கொண்டிருந்த திரி சங்குவைப் பார்த்து திரி சங்குவே நில் என்று சொல்லி இடையிலேயே ஒரு சொர்க்கத்தை அவனுக்காக படைத்தார் என்று புராணம் சொல்லுகிறது,

    அதைத்தான் நாமும் திரி சங்கு சொர்க்கம் என்று அழைக்கிறோம்,

    சரி என்னடா இவன் எதற்காக இந்த கதையை சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்?
    காரணம் இருக்கிறது

    " தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஒரே குரலில் "பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி என்றால் அது மக்கள் திலகம் மட்டும்தான் அங்கே உனக்கு இடமில்லை என்று ஒரே உதையாக கணேசனை உதைத்தாலும் கணேசனின் பிள்ளைகள் இப்போது இவர்களே ஒரு இடைவசூல் சொர்க்கத்தை கணேசனுக்காக உருவாக்கி கணேசனை அங்கு குடியேற்றி வைத்திருக்கிறார்கள்,


    பின்ன என்னங்க சண்டித் தனத்துக்கு ஒரு அளவில்லியா?

    " பாவ மன்னிப்பு " படம் சென்னையில் முதன் முதலாக 10 லட்சம் வசூல் பண்ணுச்சாம்,

    ஏண்டா கோக்கு மாக்கு கோமாளிப் பயலுவளா 10 லட்சம் என்பது 1961 இல் உங்களுக்கெல்லாம் நிசாரமாப் போச்சு இல்லே?

    "சாந்தி " தியேட்டர் ஆரம்பித்து முதல் முதலாக திரையிட்ட படம் இந்த பாவ மன்னிப்பு, அது மட்டும் அல்லாமல் அந்த படத்தை 100 நாட்கள் அல்லது வெள்ளி விழா? (வெட்டி விழா )கொண்டாடுவதற்கு கணேசன் செய்த தில்லு முல்லுகள் அனைத்தையும் " கல்கண்டு " இதழில் அமரர் தமிழ் வாணன் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தார் ( அப்போது தமிழ் வாணன் நடு நிலையாளராகத்தான் இருந்தார், அதன் பிறகுதான் தலைவரின் எதிர்ப்பாளராக மாறிப் போனார் )

    பலூன் பறக்க விட்டது, எந்த பாடல், காட்சிகள் நன்றாக உள்ளது என்று பரிசுப் போட்டி( பாதி டிக்கெட் இணைத்து அனுப்ப வேண்டும், மற்றபடி ஜி. என். வேலுமணியின் " சரவணா பிலிம்ஸ் " அலுவலகம் மூலமாக ஆட்கள் பிடித்து தியேட்டருக்கு அனுப்பி வைத்தது என்று ஏகப்பட்ட டிங்கிரி, பிங்கிரி வேலைகளை எல்லாம் தமிழ் வாணன் அன்போடு வெளிப்படுத்தியிருந்தார் ( படத்தை தயாரித்தது ஏ. வி. எம் மற்றும் பீம் சிங்கின் புத்தா பிலிம்ஸ் பேனராக இருந்தாலும் இந்த மோசடிகளில் ஜி. என். வேலுமணிக்கும் பங்கு இருந்தது காரணம் அப்போது வேலுமணி சிவாஜியை வைத்து படம் தயாரித்ததுதான் )இது மட்டும் அல்லாமல் அதே வருடத்தில் தெலுங்கிலும் "பாப்பா பரிகாரம் " என்ற பெயரில் டப் செய்து அங்கேயும் பீப் பீ ஊதியது இந்த பாவ மன்னிப்பு ,

    அப்படியிருக்க இந்த 10 லட்சம் எங்கேயிருந்து வந்தது என்று சொல்ல முடியுமா கோப்பால்? ( இந்த கோப்பால் என்னும் வார்த்தையை புதிய பறவையில் சரோஜா தேவி சொல்லுவது மாதிரி நினைத்துக் கொள்வது இன்னும் கொஞ்சம் காமெடியாக இருக்கும் )

    சரி இதையெல்லாம் தாண்டி இதே வருடம் வெளி வந்த தலைவரின் " திருடாதே" படமும், தாய் சொல்லைத் தட்டாதே படமும் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் உலகையே புரட்டிப் போட்டது, அப்படியிருக்க பாவ மன்னிப்பு படம் எங்கேயும் மன்னிக்கப்பட்ட மாதிரி தெரியலையே
    கோப்பால்?

    சரி இதையெல்லாம் விடுவோம் " பேசும் படம் " சினிமா பத்திரிக்கை சிவாஜியின் ஊதுகுழலாக வெளி வந்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான் ( நடிகர் திலகம்? பட்டம் கொடுத்ததும் அவர்கள்தானே )
    அந்த பத்திரிக்கையில் வாசகர் ஒருவர் கேட்ட கேள்வி இது : "பாவ மன்னிப்பு, திருடாதே இரண்டில் எது சிறந்த படம்?

    பேசும் படம் கொடுத்த பதில் : நடிப்புக்கு பாவ மன்னிப்பு, வசூலில் "திருடாதே "
    பேசும் படத்தில் வந்த இந்த பதிலை நம் அன்பர்கள் "மய்யம் " இணைய தளத்திலும் ஆதார பூர்வமாக வெளியிட்டதை போண்டா மணி, வைத்தி, மன்னாரன் கம்பெனி தங்கவேலு மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புவோம்,

    அடுத்தது " திருவிளையாடல் " படம் சென்னையில் 13. 80லட்சம் வசூல் செய்ததாக ஒரு அணுகுண்டை இந்த அல்லக்கைகள் குரூப் பதிவாக போட்டிருக்கிறது,

    எனக்கு ஒரு சின்ன சந்தேகம் , 1969ஆம் ஆண்டு வெளிவந்து வசூலில் தென்னகத்தை மட்டுமல்லாது, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலும் ஜெய பேரிகை கொட்டிய "அடிமைப் பெண் " படம் சென்னையில் வெளியிட்ட நான்கு திரையரங்கிலும் 450 காட்சிக்கு மேல் அரங்கு நிறைந்தது,

    அந்த விபரங்கள் எல்லாம் அதிகாரப் பூர்வமாக வெளி வந்தது, அப்படியிருந்தும் " அடிமைப் பெண் " சென்னை வசூல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது 13 லட்சத்து 60ஆயிரம்தான்,

    அப்படியிருக்க சாந்தி மற்றும் குத்தகை அரங்குகள் கிரவுன், புவன்னேசுவரியில் மொத்தம் 100 காட்சிகள் கூட அரங்கு நிறையாத " திருவிளையாடல் " படம் எப்படி இவ்வளவு வசூல் செய்தது என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா? 1965 இல் வந்த படம் தெரு விளையாடல்,
    இவ்வளவு வசூல் வருவதற்கு சாந்தி மற்றும் குத்தகை அரங்குகள் திருப்பதி உண்டியலா என்ன?

    பொய் சொல்லுவதற்கும் ஒரு அளவு உள்ளது, இது உலக மகா பொய்யாக உங்களுக்கே தெரியவில்லையா போண்டா மணி குரூப்ஸ்?

    சென்னையில் மட்டும் வசூல்? வெளியிட்டு மகிழ்ச்சி கொள்ளும் இந்த கூட்டத்திற்கு தெரியவில்லையா என்ன? சென்னை இவர்கள் அரங்குகள் தவிர தமிழ்நாடு முழுவதும் " எங்க வீட்டுப் பிள்ளை" செய்த வசூலில் நான்கில் ஒரு பங்கு கூட தெரு விளையாடல் செய்யவில்லை,

    இந்த விபரம் பேசும் படத்தில் வெளி வந்த விபரம்தான்

    சாந்தி தியேட்டர் சாதனை என்பது எப்படி என்பதற்கு ஒரு சிறிய விளக்கம் தருகிறேன்

    1972 இல் வெளி வந்த " வசந்த மாளிகை " படம் 175 நாளில் வசூல் பண்ணிய தொகை 8.50 லட்சம் மட்டும்தான்,
    ஆனால் அதே சாந்தியில் 1974 இல் வெளி வந்த " தங்கப்பதக்கம் "175 நாளில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
    11 லட்சத்து 65000,
    இப்படி கணக்கு வெளியிடுவதற்கு முன் யோசிக்க வேண்டாமா? இது சாத்தியம் ஆகுமா? கட்டணம் உயர்ந்தாலும் கூட இவ்வளவு வித்தியாசம் எப்படி வரும் என்பதை இந்த போண்டா மணி குழுவினர் யோசிக்கவே மாட்டார்கள் போல் தெரிகிறது,
    இப்படி பொய் வசூல் கணக்கு கொடுக்க காரணம் " வாலிபனை " மிஞ்சி சென்னையில் மட்டுமாவது காட்ட வேண்டும் என்ற வெறி,

    மற்ற இடங்களில் பார்க்கும் போது இந்த தகர கூஜா வாலிபன் செய்த வசூலில் பத்தில் ஒரு மடங்கு கூட செய்யவில்லை,

    1965 முதல் 1977 வரை சிவாஜி படங்கள் சாந்தி தவிர வெளி தியேட்டர்களில் மொத்தம் 57 படங்கள் வெளியானது,
    இதில் மொத்தமே 100 நாள் ஓடிய படங்கள் 9 மட்டுமே,

    இந்த 9 படத்திலும்
    ஒரு தியேட்டரில் மட்டும் 100 நாள் ஓடிய படங்கள்

    இரு மலர்கள் : வெலிங்டன் மட்டும்

    ஞான ஒளி : பிளாசா மட்டும்

    குலமா குணமா :பிளாசா மட்டும்

    தவப்புதல்வன் :பைலட் மட்டும்

    சொர்க்கம் : தேவி பாரடைஸ் மட்டும்

    இரண்டு தியேட்டர் 100 நாள் படங்கள்

    ராஜா : தேவி பாரடைஸ், ராக்சி

    கந்தன் கருணை : சித்ரா, சயானி


    நான்கு தியேட்டர் 100 நாள் ஓடிய படம்

    சிவந்த மண் மட்டும்

    இதில் இந்த செத்த மண் படத்தைப் பற்றி பேசும் படம் பத்திரிக்கை போட்ட விமர்சனம் என்ன தெரியுமா?

    போட்ட முதலை எடுப்பதற்கே இந்த படம் வெள்ளி விழா ஓடினாலும் சாத்தியம் மிகவும் குறைவு காரணம் 80 லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்

    அப்படியிருக்க 50 நாளைக்குப் பிறகு குளோப் அரங்கில் இப்படி ஆளில்லாமல் ஓட்டுகிறீர்களே என்று கேட்டதற்கு 84 பைசா டிக்கெட்டிற்கு மட்டும் கொஞ்சம் ஆள்கள் வருகிறது,
    தியேட்டர் வாடகையும் வருகிறது என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்,

    இந்த செய்தி அப்போதைய திரை உலக பத்திரிக்கையிலும் வெளி வந்தது, என்னிடமும் காப்பி உள்ளது,

    1965 முதல் 77 வரை சாந்தி யில் வெளியான சிவாஜி படம் மொத்தம் 34 படங்கள்,

    இதில் 100 நாள் ஓடிய படங்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

    21 படங்கள் 100 நாள்

    இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள் சாந்தி அரங்கம் எப்படிப்பட்டது??!!!

    இவர்கள் காட்டும் வசூல் விபரங்கள் எப்படிப்பட்டது என்பதை ?!



    தலைவரின் பக்தன்...


    ஜே. ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt)...

  8. #1317
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    விஜயா இன்டர்நேஷனலின் தயாரிப்பான "நம்நாடு"
    தலைவர் நடித்த படங்களில் தனி இடத்தை பிடித்தது என்றே சொல்ல வேண்டும்.அதோடு மோதவந்த "சிவந்த மண்" அதன் தயாரிப்பாளர் உட்பட பலரின் எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கியது என்றால் அது மிகையாகாது. நம்நாட்டில் தொடங்கிய பருவகால (வசூல்) மழை சிவந்தமண்ணை சேறாக்கி சின்னாபின்னமாக ஆக்கிவிட்டது. எத்தனையோ பேர் ஸ்ரீதரிடம் எடுத்துச் சொல்லியும்
    கேட்காமல் அவர் அந்தப் படத்துக்காக மெனக்கெட்டு கண்மூடித்தனமாக செலவு செய்து மிகுந்த பேராபத்தில் சிக்கி கொண்டார்.

    படத்தை வெளியிட்ட முதல் வாரத்திலேயே படத்தின் முடிவு தூத்துக்குடியில் தெரிந்து விட்டது. "சிவந்தமண்" கூட வெளிவந்த "நம்நாடு" முதல் வாரத்திலேயே வெற்றிக்கொடியை பறக்க விட்டது. மிகவும் அதிகமான செலவில் எடுக்கப்பட்ட "சிவந்தமண்ணை" சிதறடித்து வெற்றி கொண்டது குறைந்த நாட்களில் சொற்ப செலவில் எடுக்கப்பட்ட "நம்நாடு". இருப்பினும் 100 நாட்கள் ஓடவே தடுமாறிய "சிவந்தமண்ணை" வெள்ளிவிழா ஓட்ட பயன்படுத்திய ஸ்டெச்சர், வடக்கயிறு எதுவுமே பலனளிக்காமல் நியூகுளாப் தியேட்டரில் குப்புற கவிழ்ந்து கைபிள்ளைகளின் சோகத்தை அதிகப் படுத்தியது.

    ஈரமண்ணை "சிவந்தமண்ணா"க்கிய
    கண்ணீர் கதை கைபிள்ளைகளுக்கு மிக்க அதிர்ச்சியை கொடுத்தாலும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குற கைபிள்ளைகள்தானே, இதையும் தாங்கி கொண்டதில் வியப்பேதுமில்லை. இதிலிருந்தே 'சிவந்தமண்" ஒரு படு தோல்விப்படம் என்பது ஊர்ஜிதமாகிறது. 80 லட்சம் செலவில் தமிழில் தயாரான. சிவந்தமண்" தயாரிப்பாளர் தலையில் ஈரமண்ணை கொட்டி 20 லட்சம் கூட வசூலாகாமல் "நம்நாட்டி"ன் காலடியில் வீழ்ந்தது.

    "அடிமைப்பெண்ணு"டன் வசூலை ஒப்பீடு செய்தால் ஏன் "நம்நாடு" என்னவாயிற்று என்றவர்களுக்காக "சிவந்தமண்ணை" "நம்நாடு" வசூலுடன் சேர்த்து பார்க்கலாம்.
    "சிவந்தமண்" யூனிட்டின் விமானக்கட்டணம் கூட
    திரும்பக் கிடைக்கவில்லை என்ற பேச்சு வெளிவந்தது நினைவிருக்கலாம். ஆனால் "நம்நாடு" வெளிநாடு செல்லாமல் உள்நாட்டிலேயே புரட்சி நடிகரின் நடிப்பாற்றலால் வெளிவந்து வெற்றிக்கொடியை உயர்த்தி பிடித்த காட்சியை பலரும் புருவங்களை உயர்த்தி பார்க்க வைத்தது என்றால் அது மிகையாகாது.

    அந்த மூன்றெழுத்தில்(எம்ஜிஆர்) தமிழக மக்கள் மூச்சிருக்கும் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டிய உன்னத திரைப்படம்தான் "நம்நாடு". நினைத்ததை 'நடத்தியே முடிப்பவன் நான் நான்' எனறு தலைவர் பாடும் பாடலின் உள்ளர்த்தம் யாருக்கு புரிகிறதோ இல்லையோ மாற்று முகாம் அணியினருக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும். முதல் வாரத்திலேயே "சிவந்தமண்" திரையிட்ட திரையரங்கு காற்று வாங்க ஆரம்பித்ததை பொருட்படுத்தாமல் வடக்கயிறு சகிதம் லட்சிய வேகத்துடன் அவர்கள் சென்றதை பார்க்கும் போது நாட்டை பேரழிவில் இருந்து காக்க செல்கிறார்களோ என்று நீங்கள் தவறாக நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

    அதிலும் ஒரு கைபுள்ளை "சிவந்தமண்" ஒரு சிறந்த தேசபக்தி படம் என்று குறிப்பிட்டதை எண்ணி அழுவதா? சிரிப்பதா? ஒண்ணும் புரியவில்லை.தேசபக்தி என்று எதை சொல்கிறார்கள். "நாடோடி மன்னனி"ல் முதல் காட்சியிலேயே மக்கள் போராட்டத்தை மையமாக காட்டியிருப்பார்கள். "அடிமைப்பெண்ணி"லும் மக்கள் போராட்டத்தை தலைவர் காட்டியிருப்பார். ஆனால் "சிவந்தமண்ணி"ல் நண்பன் சிந்திய ரத்தத்திற்கும், "தர்மம் எங்கே"யில், குடும்பச்சண்டையையும், பதவிச்சண்டையையும் காண்பித்து விட்டு தேசபக்தி என்று சொல்வது வெகு காமெடியான ஒரு விஷயம்.

    அதிலும் இன்னொரு கைபிள்ளை "சிவந்தமண்ணி"ற்கு பிறகுதான் எல்லோரும் வெளிநாட்டில் படமெடுக்கவே ஆரம்பித்தார்களாம். அண்டப்புளுகன் என்பார்களே? அது இதுதான். எப்படி 6 கஜம் போர்வையில் அய்யனின் அண்டாவயிறை மறைக்க முடியாதோ அது போலதான் இந்த அண்டப்புளுகும். "சிவந்தமண்ணி"ன் படுதோல்விக்குப்பின் 4 ஆண்டுகளாக எந்தப்படமும் வெளிநாட்டில் எடுக்கப்படவில்லை "வாலிபனை" தவிர. "வாலிபனி"ன் நிகரற்ற வெற்றிக்குப்பின்தான் வெளிநாட்டில் தமிழ்ப்படம் எடுக்க ஆரம்பித்தார்கள். தனக்கு "பாரத்" பட்டம் கிடைக்காது என்பதை முன்னமே அறிந்து கொண்ட அய்யன் தனது பெயரை 'பாரத்' என்று வைத்துக் கொண்டு செய்யும் வீரதீர சாகசச் செயல்கள் சொல்லி மாளாது.

    "அந்நியன்" படையெடுத்தால் பதுங்கி திரியும் இவர்கள் அந்நிய மண்ணில் எடுத்த ஆபாச படத்துக்கு போர்க்கால அடிப்படையில் வடக்கயிறும் ஸ்டெச்சருமாக அலைந்தது அருவருப்பை தந்தாலும் அவர்கள் வேட்கையை எண்ணிப் பார்க்கையில் சற்று பரிதாபமாகத்தான் தோன்றியது. சச்சுவை வேறெந்த படத்திலும் இவ்வளவு கவர்ச்சியாக ஆடவிட்டது கிடையாது. ஒருவேளை சிவந்த தேசத்தை காப்பாற்றுவதற்காக சச்சு குனிந்து, நிமிர்ந்து, வளைந்து, நெளிந்து ஆடியதை தேசபக்தி டான்ஸ் என்று கைபுள்ளைங்க சொல்லியிருக்கலாம்.

    சிவாஜியால் படத்தை காப்பாற்ற முடியாது என்பதை அறிந்த ஸ்ரீதர் சச்சுவுக்கு உடல் முழுவதும் மேக்கப் போட்டு கவர்ச்சி பாடல் காட்சியை வைத்து காப்பாற்றி விடலாம் என நினைத்ததில் வியப்பில்லை. அந்த பாடல் காட்சி முடிந்ததும் இருந்த ஒருசிலரும் தியேட்டரை விட்டு வெளியேறுவதை பார்த்ததும்தான் புரிந்தது. மற்றொரு காட்சியில் மேஜிக் ராதிகாவை கவர்ச்சி உடையில் ஆடவிட்டு, ஆனால் அதில் வரும் பின்னணி இசை அற்புதம், படத்தை ஒப்பேத்தி விடலாம் என்று நினைத்ததோடு நில்லாமல், கலர் கதாநாயகி காஞ்சனாவை படத்தின் கதைப்படி இளவரசியை, ஆபாசமாக ஜிகு ஜிகு டைட் பேண்ட்டில் ஆட வைத்த கொடுமையை சொல்லவோ?அது சுகமான கதையல்லவோ? இதுவும் படத்தை காப்பாற்றும் என்று நினைத்தார்கள்.

    க்ளைமாக்ஸில் சிவாஜியின் கொடூரமான நடிப்பை பார்க்க தியேட்டரில் ஆளே இல்லை. இதில் பலூன் சண்டை வேறு. அதற்கு நம்பியாரை விரட்டிச்சென்று பலூனில் ஏறி பலூனை கிழித்த பின்தான் பலூன் கீழே இறங்குமாம். கீழே இருந்து ஒரு கத்தியை விட்டெறிந்தாலே பலூன் தன்னால் இறங்கி விடும். இந்த ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்து சொன்ன கதாசிரியர் வாழ்க! இதே போல ஒரு காட்சியை "லிங்கா"வில் வைத்து படத்துக்கு சங்கு ஊதினார் ரவிகுமார்.

    இதுபோன்ற அறுவை காட்சிகள் படத்தின் தோல்விக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. எல்லோரும் இறுதி காட்சிவரை இருக்காமல் கைபிள்ளைங்க உட்பட தியேட்டரை காலி செய்து அடுத்த காட்சிக்கு டிக்கெட் கிழிக்கும் பணியில் துரிதகதியில் ஈடுபட்டதை பார்க்கும் போது புல்லரித்து போய்விடும் நமக்கு. கவர்ச்சிக்காக ஒரிரு வாரங்கள் ஓடியதும் படம் சண்டிமாடு படுத்ததை போல படுத்துக்கொண்டு அழிச்சாட்டியம் பண்ணியது.

    அதன்பிறகு icu வில் இருந்த பேஷண்ட் போல தீவிர கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு பிறகு கோமா ஸ்டேஜிக்கு போய் ஸ்டெச்சரில் தூக்கி வைத்துக் கொண்டு "வசூல் ராஜா எம்பிபிஎஸ்ஸி"ல் வரும் கோமா நோயாளி போல கணேசன் ரசிகர்கள் தூக்கிக் கொண்டு அலைந்ததை இப்போது நினைத்துப் பார்த்தாலும் "மனதுக்குள் மத்தாப்பூ"
    தோன்றி "புன்னகை பூ"க்க வைக்கிறது. 100 நாட்கள் ஸ்டெச்சர் தூக்கிய களைப்பில் கைபுள்ளைங்க வெகுநாளாக ஓய்வெடுத்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

    மீண்டும் சந்திப்போம்..........ksr.........

  9. #1318
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    19.11.2020இன்று...

    முன்னாள் பிரதமர் அன்னை
    "இந்திரா காந்தி" பிறந்தநாள்....

    புரட்சி தலைவர் நிர்வாக திறமைக்கும், சாதுர்யத்திற்க்கும் மற்றுமொறு எடுத்துக்காட்டு.

    இங்கே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தின் நினைவுகளை சுருக்கமாக பதிவு செய்கிறேன்...

    ஆந்திரா மாநிலத்தில் புரட்சி தலைவரை
    பின்பற்றி நாமும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது திரு.என்.டி.ஆர்
    அவர்களின் லட்சியம்.
    பிறகு எம். ஜி. ஆர் அவர்களிடம் ஆலோசனை பெற்று தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார் என்.டி.ஆர்
    அவர்கள்.

    பின்பு புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களை பார்த்து நன்றி
    தெரிவிக்க வேண்டும் என்று புரட்சி தலைவர் அவர்களை சந்தித்து பேசினார்
    என்.டி.ஆர்.

    பேச்சுவார்த்தையின் பொழுது நான் வெற்றி பெறுவதற்க்கு உங்களின் ஆலோசனை பெரிதும் முக்கிய உதவியாக இருந்தது
    தங்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று
    நினைக்கிறேன்.என்ன உதவி வேண்டும்
    கேளுங்கள் என்று என்.டி.ஆர் கேட்க?

    மக்களின் நலனை மட்டுமே நினைக்கும்
    நமது புரட்சி தலைவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

    எனக்கு என்ன உதவி தேவையிருக்கு?
    எனது கடமையை செய்தாலே போதும்.

    ஆனாலும் நீங்கள் கேட்பதால் மக்கள் பயன்பெறும் வகையில் எனக்கு ஒரு யோசனை உள்ளது.
    சென்னைவாசி மக்களுக்கு தண்ணீர் பற்றாகுறை உள்ளது.
    அதற்க்காக
    தங்களின் மாநிலத்தில் தண்ணீர் தேவை தன்னிறைவு அடைந்துள்ளதை
    நான் அறிவேன்.
    ஆகையால் ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதிநீர் தந்தால் தமிழக மக்கள் பயனடைவார்கள்
    என்று கேட்டார்.
    தலைவர் கேட்டால் மறுப்பு ஏது?
    அப்பொழுது தோன்றியதுதான் "கிருஷ்ணா நதிநீர்" திட்டம்.

    கிருஷ்ணா நதிநீர் தொடக்க நிகழ்ச்சியில்
    பாரத பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்டால் நன்மையாக இருக்கும்
    என்பது புரட்சி தலைவரின் யோசனை.

    தலைவர் என்.டி.ஆர் அவர்களிடம் கூற
    மறுத்தார் என்.டி.ஆர் காரணம் ஆந்திராவில் காங்கிரஸை எதிர்த்துதான் என்.டி.ஆர் அவர்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பிறகு எம்ஜிஆர் அவர்கள் என்.டி.ஆர்
    அவரிடம் தேர்தலில் போட்டி என்பது வேறு?
    நம்மை மக்கள் முதல்வர்களாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
    இப்பொழுது நாம் மக்களின் முதல்வர்கள்
    மக்களுக்கான நல்ல செயல்கள்
    நாம் செய்ய கடமை பட்டுள்ளோம்.
    மக்களுக்கான நல்ல திட்டத்தை செயல்படுத்தும் பொழுது பிரதமர் தலைமையில் துவங்கினால் நன்மையாக இருக்கும் என்று தெளிவுபடுத்த ஏற்றுக்கொண்டார்
    என்.டி.ஆர்.

    அப்படி துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் இந்திரா காந்தி கையினால் "கிருஷ்ணா நதிநீர்" திட்டத்துக்கு முதல் தவணையாக ரூபாய் 30 கோடிக்கான காசோலையை வழங்கினார் நமது புரட்சி தலைவர்.

    Remembering The IRON LADY , INDIRA GANDHI 103th Birth Anniversary
    தியாகத்தலைவியை வாழ்த்துவோம்.........Ml.Jn...

  10. #1319
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*16/11/20* அன்று அளித்த*தகவல்கள்*
    ----------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றி யாராவது தவறாக பேசினாலோ, இழிவாக பழித்தாலோ, யாராவது தகுந்த காரணமின்றி விமர்சித்தால் அவரது பக்தர்கள், ரசிகர்கள், ஏன் பொதுமக்கள் கூட கோபம் அடைந்தார்கள் .* அதற்கு காரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறேன்.* 1968ல் வெளியான பணமா பாசமா இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று வெள்ளிவிழா கண்டது .* அதன் வெற்றி விழா ஆசியாவின் மிக பெரிய திரை அரங்கான மதுரை தங்கத்தில் நடைபெற்றது .* *கோபாலகிருஷ்ணன் விழாவை கொண்டாடுவதற்காக* புதிய கார் ஒன்றை வாங்கி ,சென்னையில் இருந்து மதுரைக்கு பயணித்தார் .* அந்த விழாவில் நடிகர் ஜெமினி கணேசன், நடிகை சரோஜாதேவி போன்றவர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் கோபாலகிருஷ்ணன் எனது இயக்கத்தில் வெளிவந்த பணமா பாசமா படம் ,தமிழகத்தின் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டவர்களின் படங்களை* *வென்று புதிய சகாப்தம் படைத்தது .* என்னுடைய படத்தின் வெற்றிக்கு நிகர் வேறு யாருமில்லை நான்தான் என்று கனத்த குரலில் உணர்ச்சி போங்க பேசினார் .பலத்த கைதட்டல்கள், ஆரவாரங்கள். மெய்சிலிர்த்து போனார் கோபாலகிருஷ்ணன் .அப்படியே ஏகாந்தமாகிவிட்டார். தமிழ் திரையுலகமே தன்னுடைய காலடியில் கிடப்பதாக ஒரு நினைப்பு .* விழா முடிந்து அரங்கை விட்டு வெளியேறுகிறார் சென்னையில் இருந்து பயணித்து வந்த புதிய கார் நொறுங்கி போய் கிடக்கிறது உடனே அரங்க மேலாளரை சந்தித்து விசாரிக்கிறார் .* எங்கே எனது புதிய காரை காணவில்லை என்று கேட்க. மேலாளர் இதோ உங்கள் கார்தான்* நொறுங்கி கிடக்கிறது என்று காட்டுகிறார் .**


    மன்னாதி மன்னன், வசூல் மன்னன் என்று பெயர் கொண்டவர்களின் படங்களை என்னுடைய படம் வென்றுள்ளது வசூலில் சாதனை புரிந்துள்ளது என்று சொன்ன வார்த்தைகள் மதுரைவாழ்* எம்.ஜி.ஆர். ரசிகர்கள், பக்தர்கள் உள்ளங்களை காய படுத்தி உள்ளது . அந்த வார்த்தைகளின் விளைவு, தான் விருப்பப்பட்டு, ஆசைப்பட்டு, வாங்கிய புதிய கார்* சின்னா பின்னமாக நொறுக்கப்பட்டுள்ளது .அதை கண்டு பதறி போன கோபாலகிருஷ்ணன் ,ஐயோ, நான் சொல்லக்கூடாததை சொல்லவில்லையே. நான் இயக்கிய*படம் வெற்றி அடைந்தது பற்றிதானே* பேசினேன் . அதனால்*யார் மனமோ*புண்பட்டுவிட்டதே என்று நினைத்து ஓடோடி வந்து அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணாவை*சந்தித்தார் .* என்னுடைய பணமா பாசமா*படத்தின் வெற்றிவிழாவில் மதுரை*தங்கம் அரங்கில்*நான் சில கருத்துக்களை வெளியிட்டேன்.* எம்.ஜி.ஆர். ரசிகர்கள் நான் தவறாக பேசிவிட்டதாக கருதி, என் காரை அடித்து சுக்கு*நூறாக*நொறுக்கிவிட்டார்கள் .என்று புகார் தெரிவித்தார்.*பேரறிஞர் அண்ணாவிற்கு எம்.ஜி.ஆர். வேண்டப்பட்டவர் என்பதால் ஒருவேளை இது குறித்து*முதல்வர் அண்ணா*நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவாரோ என்ற கவலையுடன் வீட்டுக்கு திரும்பினார் .*


    சில நாட்கள் கழித்து வேறு ஒரு காரில்*இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்*குற்றாலம் சென்றார் . அங்கு அருவிகளில் குளிக்கும்போது யாரோ சிலர் தன்னை* கூர்ந்து**கவனித்து கொண்டிருப்பதை உணர்ந்தார் .* சில* முரட்டு ஆசாமிகள் இவர் லாட்ஜுக்கு , கோயிலுக்கு* ஓட்டலுக்கு எங்கு போனாலும்*தொடர்ந்து வந்து பின்பற்றி கண்காணித்து கொண்டிருந்தார்கள் .* இதுபற்றி முதல்வர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு*விசாரித்தபோது, முதல்வர் அண்ணாதான் பாதுகாப்பிற்காக சிலரை*அனுப்பி கண்காணிக்க சொன்னாராம் . அதாவது எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்ற போர்வையில்*விஷமிகள்*யாராவது*தொல்லை தராமல் இருக்க பேரறிஞர் அண்ணா*பாதுகாவலர்களை அனுப்பினாராம் .* இந்த விஷயங்கள் அறிந்ததும், கோபாலகிருஷ்ணன் ,அண்ணாவை*நேரில் சந்தித்து,* தங்களின் பாதுகாப்பு செயல்பாடுகள் என்னை மிகவும் நெகிழ செய்துவிட்டன. மிகவும் நன்றி ஐயா என்று குறிப்பிட்டாராம் .* தம்பி. எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. தெரிந்தாலும் அவர் கோபப்பட்டிருக்க மாட்டார். எதற்கும் நீங்கள் ஒன்று செய்யுங்கள். நீங்கள் தம்பி எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிப்பதாக ஒரு அறிவிப்பு வெளியிடுங்கள். எல்லாம் சகஜ நிலைக்கு வந்துவிடும் என்று யோசனை தெரிவித்தாராம் .அதன்படி வந்த அறிவிப்புதான்* கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்குவதாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவாக இருந்த படம் தங்கத்திலே வைரம் .* விளம்பரம் வெளியானதோடு சரி. படம் வெளியாகவில்லை .**.

    .திரு.கா. லியாகத் அலிகான்*:* தான் முதல்வராகிவிட்டோமே ,சரி,அதைப்பற்றி என்ன கவலை என அவர் நினைத்ததில்லை. வீட்டில்*ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைத்தால் ஓய்வெடுப்பார். ஆனால் அதே நேரத்தில் தன்னுடைய உடலை*ஆசுவாசப்படுத்தி, உற்சாகப்படுத்தி கொண்டால்*மீண்டும் உழைத்து ,உடல் களைப்பே*அடையாத வகையில்*உழைப்பார். அந்த உழைப்பு அனைத்துமே*இந்த நாட்டு மக்களுக்காக, தொண்டர்களுக்காக, ஏழை எளியவர்களுக்காக மட்டுமே இருக்குமே ஒழிய, வேறு யாருக்காகவும் இருக்காது .அப்படிப்பட்ட தலைவர்தான்*,சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை*நடந்த*பின்னர் முறையாக ஒய்வு எடுத்திருக்க வேண்டும் . எப்படி பேரறிஞர் அண்ணா*அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்று திரும்பிய பின்னர் மருத்துவர்கள் அறிவுரைப்படி*முறையாக ஒய்வு*எடுக்காது ,தொடர்ந்து உழைத்த*காரணத்தால் அந்த நோயின் தாக்கம் தீவிரமடைந்து* அவர் நம்மைவிட்டு வெகு விரைவில் பிரிந்துவிட்டார் .* அவருடைய 60 வது*வயதிலேயே அவர் மறைய நேரிடும்*நிர்பந்தத்திற்கு உள்ளானார் .*அதே போல அமெரிக்க மருத்துவர்களும், ஜப்பான்*டாக்டர் கானு* போன்றவர்கள் எவ்வளவோ* .எடுத்து சொல்லியும்** நான் உழைப்பேன்*, உழைப்பேன் ,இந்த நாட்டு மக்களுக்காக நாள்தோறும் உழைத்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி தேனீயை போல் உழைத்தார் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். தலைமை கழகத்தில் அவர் நேரில் வந்து தொண்டர்களிடம், மனுதாரர்களிடம் விண்ணப்பம் வாங்க வேண்டிய* அவசியமே கிடையாது .ஆனால் வாங்கினார் ..* கோட்டைக்கு சென்றால்,அங்கு பிற்பகல் 1 மணி வரை பணியாற்றிவிட்டு, 1.30 மணியளவில் தலைமை கழகத்திற்கு தலைவர் நிச்சயம் வந்துவிடுவார் என்று ஏங்கி காத்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான தொண்டர்களை வரிசையாக நிறுத்தி ,*அந்த கூட்டத்திலே அனைவரையும் அழைத்து பேசுவார். நலம் விசாரிப்பார் .அந்த நேரத்தில் மதிய உணவை பற்றிக்கூட கவலைப்படாமல் பேசி கொண்டிருப்பார் .* அங்கிருக்கும் நூற்றுக்கணக்கான தொண்டர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும்* விஷயத்தில்தான் அதிகம் அக்கறை காட்டுவார். அதிலேதான் அவருக்கு மகிழ்ச்சி ஏற்படும் .* அன்றைய கால கட்டத்தில் இப்படிப்பட்ட கூட்டங்களில் செல்வி ஜெயலலிதா அவர்களும் கலந்து கொள்வார் . தலைவர் அவருக்கு யோசனைகள் சொல்லி தொண்டர்களின் குறைகள் நிறைவேறும் வகையில் உத்தரவுகள் பிறப்பித்து கொண்டிருப்பதை பல சமயங்களில் நானே நேரில் கண்டிருக்கிறேன் .**

    *ஒருமுறை கடலூரை சார்ந்த நண்பர் ஒருவருக்கு எஸ்.ஐ.பதவி தேர்வில் குறைபாடு ஏற்படுகிறது .* தலைவரை பார்த்து, இந்த விஷயத்தில் இவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது அண்ணே என்று சொன்னபோது , உடனே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு இந்த அநீதியின் தன்மையை பற்றி தெரிந்து கொண்டதோடு முடிவில் அந்த* நபருக்கு எஸ்.ஐ. பதவி தருவதற்கு தகுந்த உத்தரவு இடுகிறார்* தவறு இழைத்தவர் அதிகாரியாக இருந்தாலும் கூட அதை முறையாக விசாரித்து , கண்டித்து ,மீண்டும் தவறு நடக்கா வண்ணம் அறிவுரை சொல்லி, அந்த பதவி உரியவருக்கு அளிப்பதில்*முன்னுரிமை தரக்கூடிய பக்குவமிக்க தலைவர் எம்.ஜி.ஆர்* அவர்கள் .அந்த எஸ்.ஐ.அவர்கள், செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத்தில் பாதுகாப்பு அதிகாரியாக வளர்ந்து,எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார் .* அந்த அநீதியை அங்கேயே தடுத்து அவருக்கு உத்யோகம் தரப்படாமல் இருந்து இருந்தால் ,அவர் வாழ்க்கையில் இந்த அளவிற்கு உயர்ந்த நிலைக்கு வந்திருக்க மாட்டார் .அதற்கு நல்ல முடிவு எடுத்து பேருதவி புரிந்தவர் புரட்சி தலைவர் .இப்படி மக்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதில்தான் அவருக்கு உற்சாகமும், திருப்தியும் ஏற்படும்* இதனால் அவர்* உள்ளமெல்லாம் பூரித்து,உடலெல்லாம் களைப்பு அடையும் வகையில் உழைத்து* பசி வேளையில் அதை கூட மறந்து செயல்பட்ட பாங்கினை நாங்கள் எல்லாம் கண்டு வியப்பு அடைந்திருக்கிறோம் .* அவரோடு, பழகினோம். வாழ்ந்தோம் என்கிற வாய்ப்பு கிடைத்தது பற்றி மிகவும் பெருமை அடைகிறேன் .* பழகுகிறவன் என்று சொல்வதால் , நான் தலைவருடன் மிக சரிசமமாக பழகியதாக நீங்கள் யாரும் தவறாக எடுத்து கொள்ள கூடாது .* எங்களை பொறுத்தவரை தலைவருக்கு நாங்கள் எல்லாம் தொண்டர்கள்தான் .அந்த தொண்டர்களுக்கு தலைவர் மரியாதை செய்வார். மகத்துவம் கொடுப்பார் .* அநீதி இழைக்கப்பட்ட எஸ்.ஐக்கு*தலைவர் பதவி அளித்தார் என்று நான் குறிப்பிட்டேன் அல்லவா. அவர் பெயர் இப்போதுதான் ஞாபகம் வருகிறது அப்துல் கனி என்று .* அந்த அப்துல் கனியை அழைத்து கொண்டு வந்து, முருகுமணி என்பவர் என்னை கேட்டு கொண்ட காரணத்தால் புரட்சி தலைவரிடம் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி முறையிட்டேன் .* அன்றைக்கு அந்த அநீதியை தடுத்து அவருக்கு முறையான*பணி உத்தரவை பிறப்பித்த தலைவர்தான்ஏழை எளியோரின் இதயங்களில் மட்டுமின்றி* எல்லா இன மக்களின் நெஞ்சங்களில் மறைந்தும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .* தலைவரை பற்றி குற்றம் குறை சொல்லிவிட்டு யாரும்* சென்றுவிட முடியாது . அந்த அளவிற்கு மாற்று முகாம்***நண்பர்கள் கூட புரட்சி தலைவரை மதிக்கிறார்கள் என்று சொன்னால் அமரர் ஆகிவிட்டார் தலைவர் எம்.ஜி.ஆர். அமரர் ஆகிவிட்டார் ஜெயலலிதா, அமரர் ஆகிவிட்டார் கருணாநிதி ஆதலால், அ.தி.மு.க.வினர் கருணாநிதியின் மறைவிற்கு தி.மு.க. தலைவர் இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்தார்கள் .அதே போல ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு தி.மு.க.வில் இருந்து தலைவர்கள் வந்து துக்கம் விசாரித்தார்கள் .* அதே போல தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் மறைந்தபோது, அதிகாலையில் கருணாநிதி ,ராமாவரம் தோட்டத்திற்கு சென்று அன்னை ஜானகி அம்மையாரிடம் துக்கம் விசாரித்தார் .இப்படி அமரர்கள் ஆகிவிட்ட தலைவர்களை பற்றி பெரிதாக* விமர்சனம் செய்யாத நாகரிகம் மிகுந்த இந்த கால கட்டத்தில் முரசொலியில்* இன்றைக்கு*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி மிகவும் கேவலமாக ,கிண்டல், கேலி செய்துமீண்டும்* விமர்சிக்கிறார்கள் என்று சொல்லும்போது எனக்கு அவர்கள்மீது வருத்தமாக இருந்தது . எனவே நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.துரை பாரதி அவர்களிடம் சொல்லி இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று கடந்த பேட்டியில்* நான் வருத்தப்பட்டு கொண்டேன் .* இதுபோன்ற நிகழ்வுகளை, மறைந்த தலைவர்களை, பெருந்தலைவர் காமராஜர் , பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி போன்றவர்களை விமர்சனம் செய்திருக்கிறார்கள் . பேரறிஞர் அண்ணாவே, காமராஜரை விமர்சனம் செய்திருக்கிறார் .* ராஜாஜி அவர்களை அண்ணா செய்திருக்கிறார் .* அவர்களும் திரும்பி பேரறிஞர் அண்ணா அவர்களை விமர்சித்து இருக்கிறார்கள் .* அனால் தலைவர்கள் மறைந்த பிறகு யாரும் விமர்சனம் செய்வதில்லை .* காமராஜர் அங்கிருந்தபோது அவருடைய செல்வாக்கு உயரும் வகையில் காங்கிரஸ் கட்சி பாடுபட்டால் தவறில்லை .அதை வரவேற்கலாம் .* ஆனால் தி.மு.க.வே* காமராஜர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பியதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா .குடியாத்தம் தொகுதியில் காமராஜர் நிற்கிறார். வென்று முதல்வரும் ஆகிவிட்டார் .* அரசியல் சட்டத்தில் முதல்வராக தேர்வு ஆகுவதற்கு 6 மாத காலத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும். அந்த வகையில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டபோது ,பேரறிஞர் அண்ணா அவருக்கு ஆதரவு தரும் வகையில் தி.மு க. அந்த தொகுதியில் போட்டியிடாது என்று அறிவித்தார் . அன்றைக்கு காமராஜர் வெற்றி பெற**பெரிதும் துணை புரிந்த பேரறிஞர் அண்ணாவின் நாகரிக செயலை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.*காமராஜருக்கு சிலை வைக்க செய்தவர் பேரறிஞர் அண்ணா என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் .* தந்தை பெரியாரை எடுத்து கொண்டால், காமராஜரை பச்சை தமிழன் என்றதோடு, அவர் ஆட்சியில் அமர்ந்ததால்தான் குழந்தைகள் பள்ளிக்கு தரவும், படிக்கவும் முடிந்தது .* அதே போல புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், காமராஜரின் மதிய உணவு திட்டம் இடையில் நிறுத்தப்பட்ட போது 1982ல் சத்துணவு திட்டம் என்று அமுல்படுத்தினார்*இந்த திட்டத்தை அமுல்படுத்த அரசிடம் பணமில்லை என்று தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் அரசு அதிகாரிகள் சொன்னபோது , நான் பிச்சை எடுத்தாவது, வீடு வீடாக சென்றாவது, இந்த இளம் குழந்தைகள், பிஞ்சுகள் படித்து முன்னேற பாடுபடுவேன் . *அதற்கு பசி ஒரு தடையாக இருக்க கூடாது .* அந்த பசி கொடுமையால்தான் இந்த ராமச்சந்திரன் சிறு வயதில் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க இயலாமல் போனது . அந்த நேரத்தில் நானும், அண்ணன் சக்கரபாணி அவர்களும் படிப்பை தொடர முடியாமல், பசி கொடுமையால், நாடக துறையில் புகுந்து நடித்து குடும்பத்தை காக்க வேண்டிய* ஒரு சூழ்நிலை ஏற்பட்டது . அந்த நிலைமை இந்த நாட்டு மக்கள் எவருக்கும் வரக்கூடாது .**அதை நான் உருவாக்குவேன். எல்லோரையும் படிக்க வைப்பேன் என்று சொல்லி,*படித்த அனைத்து மாணவ மாணவியர் பொறியியல் கல்லூரிகளில் எளிதாக*மேற்கல்வி படிக்க ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளை செய்தவர் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். இவ்வாறு திரு. லியாகத் அலிகான் பேசினார் .

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    --------------------------------------------------------------------------------
    1.புத்தன் இயேசு, காந்தி பிறந்தது -* சந்திரோதயம்*

    2.தூவானம் இது தூவானம் - தாழம்பூ*

    3.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்திரோதயம்*

    4..திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
    **

  11. #1320
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    20/11/20 முதல் திருச்சி அருணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தென்னக ஜேம்ஸ்பாண்டாக நடித்த"ரகசிய*போலீஸ் 115" தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .வெற்றிகரமான 2 வது* இணைந்த வாரம்*

    தகவல் உதவி : மதுரை. திரு.எஸ்..குமார்.*

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •