Page 119 of 210 FirstFirst ... 1969109117118119120121129169 ... LastLast
Results 1,181 to 1,190 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1181
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பிஜேபி தலைவர் முருகன் எம்ஜிஆர் மாதிரி மோடியும் நல்ல பேர் சேர்த்துள்ளார் என்று சொல்லிருக்கார். எம்ஜிஆருடன் யாரயும் ஒப்பிட முடியாது. இருந்தாலும் எல்லாரும் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடுவது நமக்கு சந்தோசமாக உள்ளது. அவர் எல்லாருக்கும் பொதுவானவர். நடிகர் வி.சி.கணேசனை யாரும் சொந்தம் கொண்டாடுவது கிடையாது. அதுதான் கணேசன் ரசிகர்களுக்கு பொறாமை. இதில் அவர்களுக்குள்ளே பிளவு. நல்லா கவனிச்சு பாருங்க. முஸ்லிம், கிறிஸ்டின், திமுக ஆதரவு கணேசன் ரசிகர்கள் எல்லாம் பிஜேபியை எதிர்ப்பார்கள். அய்யர்கள், மேல்ஜாதிக் கார இன்னும் திமுகவை பிடிக்காத பழய காமராஜ் அபிமானிகளாக இருக்கும் கணேசனின் ரசிகர்கள் எல்லாம் பிஜேபியை ஆதரிப்பார்கள். இதுதான் நிஜம். வேற ஒரு கொள்கயும் மண்ணும் இல்லை. திமுக அய்யரை திட்டுவான். அதனால் கணேசன் ரசிகர் அய்யரெல்லாம் பிஜேபியை ஆதரிப்பார்கள். பிஜேபி முஸ்லிமை திட்டுவான். அதனால் கணேசன் ரசிகர் முஸ்லிம் எல்லாம் திமுக. இதுதான் அவர்கள் கொள்கை. இதில் அவர்கள் பிரிஞ்சு கிடக்கிறார்காள். ஆனால் எந்த ஜாதி, மதம், இனம் எல்லாம் நம்பளை பிளவுபடுத்தாமல் நம்ப எல்லாரையும் புரட்சித் தலைவர் ஒன்றாக வைத்திருக்கிறார். இதுதான் அவரின் பெருமை. மனித நேய ஒப்பற்ற தலைவன் மதங்கள், ஜாதிகள், இனங்கள் தாண்டிய ஒற்றுமையை வளர்க்கும் மகாத்மா கடவுள் புரட்சித் தலைவர் வாழ்க..... Rajarajan...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1182
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் கணேசன் ரசிகர்கள் பொய் தாங்கவே முடியலை. மரியாதையா பேசினால் நாம்பளும் மரியாதையா பேசுவோம். செல்வராஜ் பெர்னாண்டஸ் என்று ஒருத்தர். மரியாதயாத்தான் எழுதிருக்கார். ஆனால் அவர் சொல்லும் செய்தி பொய். பல்லாண்டு வாழ்க படத்தில் வி.கே. ராமசாமி புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல் என்று எம்ஜிஆரை புகழ்ந்து பேசமாட்டேன் என்று சொன்னாராம். அப்புறம் நடிகர் கணேசன் தான் அவரை சமாதானம் பண்ணி பேச வெச்சாராம். ஏங்க இப்பிடி பொய்யெல்லாம் பரப்புறீங்க. புரட்சித் தலைவர் மறைந்த பிறகு வி.கே.ராமசாமி பேசின வீடியோ இது. மரியாதையா புரட்சித் தலைவர் என்று பேசறார்.வி.கே ராமசாமியின் கடன் அடைக்க படம் நடிச்சு கொடுப்பதாகவும் நம் கருணை வள்ளல் சொல்லி இருக்கிறார். அது கூட பெரிசு கிடயாது.நேற்று இன்று நாளை படத்தின்போது அதிமுகவில் சேர விரும்பியதாகவும் புரட்சித் தலைவர் நீங்க எல்லாருக்கும் பொதுவானவர் என்று சொல்லி கட்சியில் சேர்க்கவில்லை என்றும் வி.கே.ராம்சாமியே சொல்றார். ் அப்படி உள்ளவர் புரட்சித் தலைவர் பேர் சொல்ல மாட்டேன் என்றாராம். ஏன்யா இப்படி பொய் சொல்றீங்க? இதெல்லாம் உங்களுக்கு யார் சொல்றது? இல்ல நீங்களே யோசிப்பீங்களா. செல்வராஜ் பெர்னாண்டஸ் இப்ப்டி எல்லாம் பொய் பரப்பாதீர்கள். வி.கே.ராமசாமி பேட்டி பாருங்கள். ...

  4. #1183
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரை அவர்கள் பேத்தி போன்ற நடிகைகளுடன் நடிச்சார் என்று சொல்வதால் நாம்பளும் சொல்றோம். நடிகர் வி. சி. கனேசணுக்கு ஜோடியா நடிச்ச ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி எல்லாம் சம வயசா? அவங்களும் கணேசனுக்கு பேத்தி மாதிரிதானே? தனக்கு பொண்ணா நடிச்ச சீதேவியோடு சோலாப்பூர் ராணி சொறிஞ்சுக்கிட்டு வா நீ ந்னு கணேசன் ஜோடியாக பாடுவதை ரசிச்ச நீங்களாடா எம்ஜிஆர குறை சொல்வது? அதுவும் அம்பிகா, ராதா எல்லாம் கணேசனுக்கு அவர் மகள் சாந்தியின் பேத்தி மாதிரி. முதல் மரியாதையில் ராதாவோடு முறை தப்பின கள்ளக் காதல். வாழ்க்கை யில் அம்பிகாவோட ஜோடிப் பாட்டு வேற. தொப்பயை மறைக்க கோட்டுக்கு பட்டன் போடாம திறந்துவிட்டிருப்பார். அது தொப்பைய விட பெரிசா, நீளமா கோட் முன்னாடி நீட்டிக்கிட்டு இருக்கும். நடிகைகள் 3 அடி தள்ளியே இருப்பார்கள். கிட்ட நெருங்கினால் கோட் தடுக்கும். இந்த கேவலத்த எல்லாம் ரசிச்ச கணேசன் ரசிகர்கள் புரட்சித் தலைவரை சொல்ல என்ன வாய் இருக்கு.?...rr...

  5. #1184
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தாழம்பூ: 1965 அக் 23 தீபாவளி அன்று வெளியான சுமாரான வெற்றிப் படம். நல்ல சஸ்பென்ஸ் நிறைந்த படத்தின் கதையில் உறவுகளில் குளறுபடி படத்தின் மிகப் பெரிய வெற்றியை தடுத்து நிறுத்தி விட்டது. இதே போல் உறவுகளில்
    தடுமாற்றம் "தாலி பாக்கியம்" என்ற
    படத்திலும். மக்கள் இதுமாதிரியான கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தயங்கிய காலம். அதுவும் எம்ஜிஆர் இப்படிபட்ட கேரக்டரில் நடிப்பதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.

    சிறப்பான கதையமைப்பு கொட்டாரக்காராவுடையது. வசனம் ஆரூர்தாஸ். பாசமலர் காம்பினேஷன். இசை k v மகாதேவன். பாடல்கள் அத்தனையும் மனதுக்கு இதமளிக்கும் தூவானம் போல மனதை குதூகலிக்க வைக்கிறது. 'தாழம்பூவின் நறுமணத்தில்', 'தூவானம் இது தூவானம்' 'ஏரிக்கரை ஓரத்தில் எட்டு வேலி நிலமிருக்கு' போன்ற ஜோடிப்பாடல்கள் அருமை. 'வட்ட வட்ட பாத்தி கட்டி' முதல் கதாநாயகி அறிமுகப். பாடலாக வருகிறது. 'எங்கே போய் விடும் காலம்' பாடல் தலைவரின் நம்பிக்கையூட்டும் தத்துவப் பாடல்.

    நாகேஷின் காமெடி ரசிக்கும்படி இருக்கும். அசோகன் வரும் இடங்களில் சற்று தொய்வு ஏற்படுகிறது. யார் உண்மையான வில்லன் என்பது படத்தின் இறுதிக்கட்டத்தில் தான் தெரியவரும். நம்பியாரும் எம்ஜிஆரும் சண்டை போடும் போது முடிவில் நம்பியார் இறந்து கிடக்க எம்ஜிஆர் கையில் கட்டுடன் உள்ளே இருக்கும் காட்சியில் m r ராதா எப்படி எம்ஜிஆரை கட்டிப் போட்டார் என்பது புரியவில்லை..

    நல்ல தரமான ஒளிப்பதிவு பாடல்கள் என அத்தனை இருந்தும் படம் பெரிய அளவில் வெற்றி பெறாதநற்கு காரணம் அந்த ட்விஸ்ட் தான் என்று நினைக்கிறேன். ஆனால் இப்போது பார்த்தாலும் படத்தில் ஒரு காட்சி கூட போரடிக்கவில்லை. அந்த காலத்தில் 5000 ரூ நோட்டு செல்லாது என்று அறிவிப்புக்கு சற்று முன் வெளிவந்த படமாக இருக்கலாம்.. 'தாழம்பூ'வை அடுத்து 'ஆசைமுகம்' வெளியானது
    'தாழம்பூ'வின் நீண்ட கால ஓட்டத்துக்கு தடையானது.

    சென்னையில் பாரகன், நடராஜ், மகாராஜா, கிருஷ்ணவேணி முதலான தியேட்டர்களில் வெளியாகி 56 நாட்கள் ஓடி சுமாரான வெற்றியை பதிவு செய்தது. மற்ற பிரதான ஊர்களில் 70 நாட்கள் வரை ஓடியது குறிப்பிடத்தக்கது. படம் வெளிவந்த காலத்தில் "தாழம்பூ" புத்தகத்தில் பக்கத்துக்கு பக்கம் 5000 ரூபாய் நோட்டை மறைத்து வைத்திருக்கும் யுக்தியை பலரும் வீட்டுக்கு வீடு பேசி பரவசமடைந்தார்கள் என்பது சிறப்பு தகவல்..........ksr.........

  6. #1185
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சங்கத்தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 1981 இல் உலக தமிழ் மாநாடு கண்டார் தலைவர்.

    திருக்குறள் முனுசாமி அவர்கள் தலைமையில் திருக்குறள் பற்றிய அன்றைக்கு நிகழ்வு முடிந்து பாண்டியன் ஹோட்டல் அறைக்கு திரும்பும் போது நல்ல மழை...

    அறைக்கு வந்த முதல்வர் உடனே மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை உடனே தன்னை சந்திக்க சொல்கிறார்.

    அவரும் பதற்றம் கொண்டு ஓடி வர அவருக்கு சில உத்தரவுகளை பிறப்பிக்கிறார் பொன்மனம்....அதன் படி ....அன்று இரவு காவல் பணியில் இருந்த அனைத்து காவலர்களும் மதுரை பாண்டியன் ஹோட்டல் வரவழைக்க பட.

    வந்த அனைவருக்கும் ரகசிய போலிஸ் படத்தில் வருவது போல அற்புதம் ஆன முழு மழை கோட்டுக்கள் வழங்கி...அத்துடன் ஆளுக்கு ஒரு உயர்தர குடை ஒன்றையும் கொடுத்து...

    மாவட்ட காவல் அதிகாரி இடம்...என் ஒருவருக்கு இவ்வளவு பேரையும் அந்த கொட்டும் மழையில் நிற்க வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

    மனம் தவித்தது...அதனால் என்னால் முடிந்த அன்பு பரிசு உங்கள் அனைவருக்கும்...

    யாரும் எங்கும் போய் விட கூடாது...இன்று இரவு உங்கள் அனைவருடனும் நானும் சிறப்பு விருந்து சாப்பிட ஏற்பாடு செய்து உள்ளேன்..அனைவரும் கண்டிப்பாக சாப்பிட்டு விட்டுத்தான் போகணும் என்கிறார் தலைவர்...

    அனைவரும் வியக்க அதன் படி நடக்க நிம்மதி பெரு மூச்சு விடுகிறார் அந்த உயர் அதிகாரி..

    சென்னை தலைமை செயலகத்தில் இன்றும் உயர் பாதுகாப்பு பொறுப்பில் இருக்கும் அன்று அப்போது சாதாரண கான்ஸ்டபிள் பொறுப்பில் இருந்தவர் இன்றும் தலைவர் நினைவில் அந்த குடையை பத்திரம் ஆக வைத்து இருப்பதாக பகிர்ந்து கொள்கிறார் நினைவுகளை.

    வாழ்க தலைவர் புகழ்.
    உங்களின் குரலாக உங்களில் ஒருவன்.
    நன்றி...தொடரும்.........

  7. #1186
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம் ஜி ஆருக்கு வந்த சோதனையும் ,சாதனையும்!

    1980 – ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்! வெற்றியெனும் படிகளில் ஏறியே பயணப்பட்டு, பழக்கமாகிப் போன எம்.ஜி.ஆர். இத்தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தார்.

    இந்திரா காங்கிரஸ் – தி.மு.க. என்ற கூட்டணித் திமிங்கலம், எம்.ஜி.ஆர். என்ற கடலில் இருந்த வெற்றி எனும் சுறாமீன்களையெல்லாம் விழுங்கிவிட்டது.

    எம்.ஜி.ஆர். இயக்கம் சிவகாசி, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய இரு பாராளும்ன்ற இடங்களை மட்டுமே பெற்றது.

    ‘இரு விரல்களைக் காட்டியவர்க்கு இரண்டு இடங்களே கிடைத்தன’ என்று வலுவான எதிர்முகாமினர், இரட்டை இலைச்சின்னத்தையும் இடித்துரைத்துப் பேசலாயினர்.

    இத்தோடு விட்டார்களா? கூட்டணி பலத்தை நம்பி எம்.ஜி.ஆர். அரசு மீதும் இல்லாத பொல்லாத ஊழல் குற்றச் சாட்டுகளைக் கூறி, அரசையும் கலைத்து விட்டார்கள்.

    மாபெரும் வீரர் எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மானப்பிரச்சனையாய் மாறிவிட்டது.

    அரசைக் கலைத்தவுடன், இனி, எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான் என்ற அதிரடிப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.

    எம்.ஜி.ஆர். ஆமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நாஞ்சில் கி. மனோகரன், மொடக்குறிச்சி சுப்புலட்சுமி போன்ற பலரும் மாற்று முகாம்களை நோக்கிப் புறப்பட்டனர்.

    1980 – ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ‘தி.மு.க – காங்கிரஸ்’ கூட்டணி இரு கட்சிகளும் சரி பாதி இடங்களில் போட்டியிட்டன. கூட்டணி வென்றால் கலைஞர் கருணாநிதியே தமிழக முதல்வர் என்று அறிவிக்கப்பட்டது.

    தமிழகப் பத்திரிக்கை உலகமோ, ‘சாய்ந்தால் சாய்கின்ற பக்கம்’, என்ற போக்கில் ‘தி.மு.க – இந்திரா காங்கிரஸ் கூட்டணி 210 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில், விட்டலாச்சார்யா படங்களில் வரும் மாயமந்திர ஜாலங்களைப் போன்றவற்றைச் செய்திகளாக்கி மக்கள் மத்தியில் திணித்தன.

    ஆர்ப்பரிக்கும் ஆரவாரக் கூட்டணிக்கு நடுவில், மத்திய மந்திரிசபையின் படையெடுப்பிற்கு மத்தியில், கலைஞரின் உடன்பிறப்புகளின் உற்சாகப் போர்ப்பரணிக்கு இடையில், எம்.ஜி.ஆர் என்ற தனி மனிதர், தாய் சத்தியா கருவினிலே வளர்த்து ஈந்த தைரியத்தைத் தாரக மந்திரமாய்க் கொண்டு, தனது அனைத்திந்திய அண்ணா தி.மு.கழக மறவர்களின் மாபெரும் துணையோடு, என்றும் தளராத பாசத்தை அள்ளித்தரும் தாய்மார்களின் தணியாத பக்கபலத்தோடு தமிழக மக்களைத் துணிச்சலோடு தேர்தல் களத்தில் சந்தித்தார்.

    நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்? எனது தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது நியாயமா? மக்களே! நீங்களே எனக்கு நீதி வழங்குங்கள்!’ என்றே, எம்.ஜி.ஆர். சென்ற இடங்களில் எல்லாம் பேசினார்.

    மறுமுனையில், பத்திரிக்கை கணிப்புகள், பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதங்களை எடுத்துக் கூறியே, ஏகோபித்த நம்பிக்கையுடன் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே மறுமுனையில் வெற்றிவிழாச் சுவரொட்டிகள், நன்றி அறிவிப்புச் சுவரொட்டிகள் தயாராயின என்றும்; வள்ளுவர் கோட்டத்தில் கலைஞர் பதவியேற்பு விழாவிற்காக ஆயத்தங்கள் செய்யப்பட்டு விட்டன என்றும் பேச்சுகள் எழுந்தன.

    ஆனால் தேர்தல் முடிவுகளோ?… தலைகீழாய் மாறிப்போயின.

    மானப்பிரச்சனையாய், தன்மானத்தோடு தேர்தலைச் சந்தித்த மாவீரன் எம்.ஜி.ஆர். இயக்கமே மாபெரும் வெற்றியைப் பெற்றது.

    எம்.ஜி.ஆர். மதுரை மேற்குத் தொகுதியில் இருந்து, இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1977 – ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 126 இடங்களைக் கைப்பற்றிய புரட்சித்தைவரின் அ.இ.அ.தி.மு. கழகம் 1980 – ஆம் ஆண்டுத் தேர்தலில் 139 இடங்களைக் கைப்பற்றியது.

    எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மனிதநேயச் செல்வருக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கைக் கண்டு, எதிர் அணியினர் அதிர்ந்தனர். பத்திரிக்கை உலகமோ பிரமித்தது. அன்னை இந்திராவோ அவசரப்பட்டுச் செய்த தன் செயலுக்காகப் பின்னர் வருந்தினார்....da...

  8. #1187
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சிக்காகோவில் இருந்து தமிழ்நாட்டுக்கு.. கண்ணதாசன் உடலை கொண்டு வந்த எம்.ஜி.ஆர் - ஜெயந்தி கண்ணப்பன்!
    கவிஞர் கண்ணதாசன் 1981ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி இயற்கை எய்தினார்.

    KANNADASAN இறந்ததும் MGR எடுத்த முடிவு

    அவரது பூத உடலை எப்படியாவது தமிழ்நாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என எம்.ஜி.ஆர் செய்த அரும்பாடுகளை அப்படியே நினைவு கூர்ந்துள்ளார் ரீவைண்டு ராஜா நிகழ்ச்சியில் ஜெயந்தி கண்ணப்பன்.

    சமீபத்தில் கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், இந்த பேட்டி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

    Jayanthi Kannappan remembered how MGR helping Kannadasan body to came Tamil Nadu
    ஏற்கனவே ஏகப்பட்ட பேட்டிகளை நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு கொடுத்துள்ள ஜெயந்தி கண்ணப்பன், இப்போ ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சியில், கவிஞர் கண்ணதாசன் எப்படி கோமாவிற்கு போனார். அவருக்கு அமெரிக்காவில் என்ன மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது. எந்த இடத்தில் தவறு நடந்து, அவர் உயிரிழக்க நேர்ந்தது என எல்லா விஷயங்களையும் தெள்ளத் தெளிவாக அழகிய தமிழில் எடுத்து உரைக்கும் இந்த வீடியோவை மறக்காமல் பார்த்து விடுங்கள்.

    அய்யோ.. இன்னும் எத்தனை பேரோ.. இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த இலங்கை நடிகை.. கடுப்பான ரசிகர்கள்!

    புகைப்பழக்கத்தின் காரணமாக கவிஞர் கண்ணதாசனின் உணவுக் குழாய் சுருங்கி போனது அறியாமல் அமெரிக்க மருத்துவர்கள் வழக்கமாக செய்யும் சிகிச்சையை மேற்கொண்டதன் காரணத்தால் தான் 54 வயதிலேயே அப்படியொரு அரும்பெரும் கவிஞரை நாம் இழக்க நேரிட்டது எனும் அரிய தகவல்களையும் ஜெயந்தி கண்ணப்பன் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

    ஜவஹர்லால் நேரு, தனது உடல் எரியூட்டப்பட்ட பின்னர், அதன் சாம்பல், நாட்டில் உள்ள அத்தனை வயல் வெளிகளிலும் தெளிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டதை போலவே, கவிஞர் கண்ணதாசனின் உடலும் தமிழகத்திற்குத் தான் என எண்ணிய எம்.ஜி.ஆர் அரசு செலவில் அத்தனை ஏற்பாடுகளையும் செய்து, கண்ணதாசனின் உடலை அப்பவே எம்ஃபார்மிங் எல்லாம் பண்ணி அழகாக தமிழக மக்களுக்கு அஞ்சலி செலுத்த கொண்டு வந்தார் என்பதையும் விளக்கி உள்ளார்...

    Jayanthi Kannappan Interview Mgr Kannadasan
    Jayanthi Kannappan remembered how MGR helped for to get Kannadasan dead body to Tamil Nadu on that period in a recent Rewind Raja interview..........

  9. #1188
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எதிரியும் போற்றுவான் உங்கள் கொடை கண்டு கிள்ளி கொடுப்பவர் அல்ல
    அள்ளி கொடுப்பவர் நீங்கள்

    உலகிலே மோழிக்கு ஒரு பல்கலைகழகம் கண்ட மேதை
    தமிழ் அன்னைக்கு கோவில் கட்டினார்
    தமிழ் எழுத்து சீர்திருத்தம் செய்தார் எம் ஜி ஆர்
    தமிழில் அரசாணை இடவைத்தார்
    தமிழ் புலவரை அரசவை புலவர் ஆக்கினார்
    ஏழை தமிழ் அறிஞர்களுக்கு உதவி தொகை வழங்கினார்
    எவரும் நடத்தாத பிரம்மாண்ட தமிழ் மாநாட்டை நடத்தி காட்டினார் எம் ஜி ஆர்

    எம் ஜி ஆருக்கு முன்னும் பின்னும் பலர் தமிழகம் ஆண்டனர் மொழிக்கு இவ்வளவு பெருமை எவரும் சேர்க்க வில்லை
    தமிழ் மூன்று எழுத்து இருக்கும் வரை எம் ஜி ஆர் என்ற தமிழ் ஆன ஆங்கில எழுத்து இருக்கும்

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........

  10. #1189
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 26/10/20 அன்று அளித்த தகவல்கள்*
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    தலை வணங்குவதில் கூட , தலையை குனிந்து நெற்றிக்கு நேராக இரு கரம் கூப்பி வணங்குகிற பண்பாடு தமிழகத்தில் உருவானது என்றால் அந்த பண்பாட்டிற்கு சொந்தக்காரர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் . அவர்கள் ..அவர் மறைந்தும் மறையாமல் இன்றைக்கும் மக்கள் தலைவராக, மக்கள் மனதில் வீற்றிருக்கும் காரணம் தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம்* என்பதை இன்றைக்கும் அவரது திரைப்படங்களில் இருந்துதான்* காப்பாற்ற படவேண்டும் , அந்த திரைப்படங்களில் இருந்துதான் கற்று கொள்ள வேண்டும் என்று ஒரு பல்கலை கழகமாக வழிநடத்தியவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .* மக்கள் திலகம் என்கிற அந்த மகோன்னதமான மாமனிதரின் ஆற்றல், திறமை, ஆகியவற்றை இன்றைய இளைய தலைமுறை எப்படி எடுத்துக்கொள்ள போகிறது அதாவது மாத வாடகை ரூ.15/-க்கு சென்னை யானை கவுனி பகுதியில் 1940களில் தன்,தாயார், அண்ணன், அண்ணி ஆகியோருடன் வசித்து வந்த ஒரு சாமான்ய மனிதர் 40 ஆண்டுகள் கழித்து தமிழகத்தை 11 ஆண்டுகாலம்* முதல்வராக தொடர்ந்து**ஆட்சி புரிவதற்கு உரிய திறமை எங்கிருந்து வந்தது .அந்த ஆளுமையை எப்படி கற்றுக்கொண்டார் . மக்களின் மனங்களை எப்படி வென்றார் .எப்படி இந்த ராஜ்யத்தை தனதாக்கி கொண்டார் . இதற்கெல்லாம் அவர் படித்த படிப்பு* பாடம், அனுபவம் ,என்ன என்கிற ஒரு தத்துவத்தை நாம் தெரிந்து கொள்வதற்கு ஒரு சாமான்ய மனிதர் எளிய மனிதர்களின் மனங்களை வென்று தலைவனாக முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .அவர் இங்கிலாந்து, ஐரோப்பா அல்லது வேற்று மொழி நாட்டை சேர்ந்தவராக இருந்திருந்தால் ,உலக வரலாற்றிலே அவர் ஒரு பாடமாக திகழ்ந்திருப்பார் .அவர் இலங்கையில் பிறந்து தமிழகத்தில் வளர்ந்ததாலோ என்னவோ அவரை உலகம் சரியாக கண்டுகொள்ளவில்லை என்றே சொல்லலாம் .* நிச்சயமாக வருங்காலத்தில் தமிழர்களின் இளைய தலைமுறை கட்டாயம் படித்து பாடமாக தெரிந்து கொள்ள வேண்டியதாக எம்.ஜி.ஆரின் வரலாறு இருக்கும் என்பது திண்ணம் .**


    1959ல் சீர்காழியில் இன்ப கனவு எனும் நாடகம் நடைபெறுகிறது .அதில் 75கிலோ எடை கொண்ட எம்.ஜி.ஆர். அவர்கள் சுமார் 200 கிலோ* எடையுள்ள நடிகர் குண்டுமணியை தூக்கி கீழே போடும் காட்சியில் தவறி எம்.ஜி.ஆரின் கால் மீது விழுந்து ,கால் முறிவு ஏற்படுகிறது . உடனே மேடையில் திரை விழுகிறது .நாடக கொட்டகையே மிகவும் பரப்பான சூழ்நிலையில் உள்ளது .* மைக் மூலம் எம்.ஜி.ஆருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது .ஆனாலும் தற்சமயம் நாடகம் தொடர முடியாத சூழ்நிலை என்று சொல்லப்படுகிறது .எம்.ஜி.ஆர். திரையை விலக செய்யுங்கள் நான் மக்களை சந்தித்து அவர்களுடைய ஆவலை பூர்த்தி செய்ய அவர்களிடம் பேச வேண்டும் என்கிறார் .ஆனால் நடிகர் குண்டுமணி இந்த சம்பவத்தை குறித்து மிகவும் கலங்கி போய் நிற்கிறார் .* எம்.ஜி.ஆர். பக்கத்தில் கலங்கி நிற்கும் நடிகர் குண்டுமணி, மற்றும் உதவியாளர் கே.பி.ராமகிருஷ்ணன் ஆகியோரின் தோள்களை பிடித்தபடி, தன் கால்வலியை தாங்கியவாறு ,.மக்களிடம் சிறிது நேரம் பேசுகிறார் . எனக்கு ஒன்றும் ஆபத்தில்லை .யாரும்*வீணாக பதற்றமோ, கவலையோ படவேண்டாம். சிறிய காயம்தான் ஏற்பட்டுள்ளது .சில நாட்களில் மீண்டும் வந்து இந்த நாடகத்தை* இதே ஊரில் ,இதே மேடையில் நடத்தி காட்டுவேன் . அனைவரும் தயவுசெய்து அமைதியாக தற்சமயம் கலைந்து செல்லுங்கள் என்றார் .அதுதான் எம்.ஜி.ஆர். அவரது கால் முறிந்துவிட்டது .ஒரு அடிகூட எடுத்து நடக்க முடியாத சூழ்நிலை மருத்துவரின் அறிவுரையை மீறி, மக்கள் இடையே கலவரம் ஏற்பட்டு விடக்கூடாது, கலங்கி விட கூடாது என்று எண்ணி ,தன மன வலிமையால் ,மனோதிடத்துடன், நம்பிக்கையுடன் மக்களிடம் மீண்டும் வந்து நாடகத்தை நடத்தி காட்டுவேன் என்று உறுதி அளித்தார் . தன்னால் பழையபடி நடக்க முடியுமா, வழக்கமான அலுவல்களை அன்றாடம் சந்திக்க முடியுமா என்று மருத்துவர்களே உறுதியாக சொல்ல முடியாத நிலையில் ,மனோதிடம், தன்னம்பிக்கை, உண்மை, உழைப்பு, உயர்வு என்ற கொள்கையின்படி யாரும் எந்த சூழ்நிலையையும் மீறி உயர்ந்த இடத்தை எட்டி பிடிக்க முடியும் என்பதற்கு தன்னம்பிக்கை நிறைந்த ஒரு சாதனையாளர் எம்.ஜி.ஆர்.*

    ethics of religion , நினைவே தெய்வம், அந்த தெய்வத்தை பூஜிக்கும் பக்தர்கள் இன்றைக்கும் ஏராளமானோர் தமிழகத்தில் இருக்கிறார்கள் .* குறிப்பாக திருவல்லிகேணி,சென்னையில் இருந்து சிங்காரவேலு ,70 வயது நபர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் . 1958ல் நாடோடி மன்னன் வெளியானபோது சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட்டது . அந்த மலரில் பேரறிஞர் அண்ணா அவர்கள் நாட்டை திருத்த வந்த நாடோடி மன்னன் என்று வாழ்த்து செய்தி வெளியிட்டார் .அந்த மலரில் மு.கருணாநிதி, எஸ்.எஸ்.ஆர்., சி.சுப்பிரமணியம்* போன்றவர்களும் வாழ்த்து செய்தி வெளியிட்டனர் . அண்ணா அவர்கள் வெளியிட்ட செய்தியில் தங்கத்தை நீங்கள் எப்படி உருக்கி என்ன செய்தாலும் அதன் நிலை அப்படியே தான் இருக்கும் உரு மாறாது .அப்படிதான் தம்பி எம்.ஜி.ஆர். அவர்கள் எந்த துறையில், எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி பெறுவார் என்று சொல்லியுள்ளார் . அது போலவே வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களில் சாதித்தும் காட்டியவர் எம்.ஜி.ஆர்.* திருச்சி மிளகுபாறையில் இருந்து திரு.அப்துல் மஜீத் என்பவர் தன்னுடைய சிறு வயதில் இருந்தே எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தை 68 தடவைகள் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார் .*பள்ளிக்கு போகாமல் அடிக்கடி படம் பார்க்க வருவதை கண்ட அரங்கின் காவலாளி இவரை பிடித்து அடித்து பள்ளிக்கு போ என்று சொல்கிறார் . உடனே இவர் அழுதவாறு, அரங்கின் மேலாளரிடம்* என்னை படம் பார்க்க விடாமல் தடுத்தது மட்டுமில்லாமல் என்னை அடித்துவிட்டார் என்று புகார் அளிக்கிறார் .உடனே மேலாளர் நடவடிக்கை எடுத்து காவலாளியை பணிநீக்கம் செய்கிறார் .மறுநாள் படம் பார்க்க வந்த மஜீத் ,அந்த காவலாளி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து ,மேலாளரிடம், தயவு செய்து காவலாளியை மீண்டும் பணியில்* சேர்த்து கொள்ளுங்கள். நான் வேண்டுமானால் படம் பார்ப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் .என்று கெஞ்சினாராம் அந்த சிறுவயதில் .* அதுதான் எம்.ஜி.ஆர். என்கிற மாமனிதர் உருவாக்கிய மிகப்பெரிய தத்துவம் .* அதன்பின் அந்த காவலாளியை வேலையில் சேர்த்து கொண்டதை உறுதி செய்துகொண்டு நிம்மதி அடைந்தார் மஜீத் .**

    திரு.கா. லியாகத் அலிகான் : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எடுத்து கொண்டால் அதே போல ஒரு பிரச்னை வருகிறது 1992லே .* பாபர் மசூதி வழக்கு ஒன்று வருகிறது .அதில் தேசிய ஒருமைப்பாட்டு குழு ஒன்று அமைக்கப்படுகிறது .அந்த குழுவில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையில் ,எல்.கே.அத்வானி அவர்கள் , மற்றும் சில மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள் .* ஜெயலலிதா கலந்து கொள்கிறார் . மாநிலங்களின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு தரப்படுகிறது .ஆனால் கருணாநிதி அதில் கலந்துகொள்ளவில்லை .* அந்த கூட்டத்தில் ஜெயலலிதா அவர்கள் ஒரு கருத்தை சொல்கிறார்கள் .* அந்த கருத்தை இஸ்லாமியர்களுக்கு 90 சதவீதமும்*இந்துக்களுக்கு 90 சதவீதமும் ஆதரவாக இருப்பது போல அவர் பேசினார் .ஆனால் தனக்கு தோன்றிய நல்ல பல கருத்துக்களை சொல்வதில் அண்ணா தி.மு.க.வை பொறுத்தவரையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும்,*ஜெயலலிதா அவர்களுக்கும் எந்த தயக்கமும் இருந்ததில்லை .அந்த கூட்டத்தில் தலைவர்கள் முன்னிலையில் ஜெயலலிதா அவர்கள் பேசும்போது ,ராம ஜென்ம பூமியா, பாபரி மசூதியா என்ற கேள்விக்கு இடமில்லை .* ராமர் கோவிலும் இருக்கட்டும் . மசூதியும் இருக்கட்டும்.* எங்கள் கட்சியை பொறுத்தவரையில் ,சிறுபான்மை கட்சியினருக்கு எந்த அளவிற்கு வேண்டுமானாலும் ஆதரவாக செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் .* அதே நேரத்தில் பெரும்பான்மை கட்சியினரின்உணர்வுகள் , உரிமைகள் பாதிக்கப்படாமல் காப்பற்றுவதற்கு அரசு கடமையாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா அவர்கள் சொன்ன* வாசகத்தை மத்திய அரசு நிறைவேற்றி இருந்தால் ராமர் கோவிலும், மசூதியும் நிலைத்து நின்றிருக்கும் .* நீதிமன்ற தீர்ப்பின்படி அங்கு ராமர்கோவில் கட்டப்பட்டாலும், பாபர் மசூதி குறித்து இஸ்லாமிய அமைப்பு வழக்கு ஒன்று தொடுத்திருப்பதாக தொலைக்காட்சியில் நான் பார்த்தேன் . அடுத்த தேர்தலை பற்றி சிந்திக்காமல், அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கும் தலைவர்களாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அவர்களும் செயல்பட்டார்கள் என்பதை இன்றைய கால கட்டத்தில் அனைவரும் ஏற்று கொள்கிறார்கள் .30 ஆண்டுகள் கழித்து நாடும் இதை கண்டு கொண்டிருக்கிறது .* அதை இந்த நேரத்தில் சொல்லுகின்ற வாய்ப்பை எனக்கு உருவாக்கி தந்த வின் டிவி உரிமையாளர் திரு.தேவநாதன், நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.துரை பாரதி அவர்களுக்கும் இந்த சமயத்தில் குறிப்பிட்டு நன்றி செலுத்த* விரும்புகிறேன்*


    அதே போல பதர்* சயீத் என்கிற அம்மையார் வக்ப் வாரிய தலைவராக இருந்து*பதவியில் இல்லாமல் இருந்தபோது தர்கா குறித்து ஒரு பிரச்னையை சந்தித்தபோது ஜெயலலிதா அவர்களிடம் இதுபற்றி பேசுகிறார் .* இந்த பிரச்னையில் எப்படி ஈடுபடுவது ,என்ன முடிவெடுப்பது என்று யோசனை கேட்ட நேரத்தில் ,அவர் அனுப்பிய கடிதத்தில் ,இந்த விஷயத்தில் திரு.லியாகத் அலிகான் அவர்களும் ,திரு.செங்கோட்டையன் அவர்களும் கலந்து ஆலோசித்து*எனக்கு அறிக்கை தரவேண்டும் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தார் .* நாங்கள் இருவரும் கலந்து ஆலோசித்து ஜெயலலிதா அவர்களுக்கு பதில் அறிக்கை சமர்ப்பித்த நினைவுகளும் பசுமையாக நெஞ்சில் இருக்கிறது .* நான் எதற்கு சொல்கிறேன் என்றால், இஸ்லாமியர் சட்ட திட்டங்களை* எடுத்து கொண்டால் ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழி தோன்றலாகிய ஜெயலலிதா அவர்கள் இப்தார் நிகழ்ச்சியில் முதன் முதலாக என்னை முன்வைத்து தான் கலந்து கொண்டார் .* அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை ஜெயலலிதாஅவர்களின் ஆலோசனையின் பேரில் நான் எல்லோருக்கும் கொடுத்து ,முதன் முதலாக கூட்டம்* முன்னாள் அமைச்சர் முத்துசாமி அவர்களின் ஓட்டலில் (தற்போதைய* *குமரன் மருத்துவமனை) கட்டிடத்தில் நடைபெற்றது . பின்னர்* உட்லண்ட்ஸ் ஓட்டலில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது .பின்னர் பல்வேறு இடங்களில் நடைபெற்றது .அப்போது திரு.மூப்பனார், திரு.வை.கோ.போன்ற தலைவர்கள் கூட கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள் .* அந்த நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய தலைவர்கள்,*சமூகத்தினருக்கு ,நானும், ஜெயலலிதா அவர்களும் இணைந்து ரோஜா இதழ்களை கொடுத்து* வாயிலில் இருந்து**வரவேற்ற நிகழ்வுகளும் உண்டு .*இஸ்லாமியர்களுக்கு அண்ணா தி.மு.க.,தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து மிக பெரிய மரியாதை, மதிப்பை கொடுத்து கொண்டிருக்கிறது .* தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் முன்னாள் அமைச்சர் திரு.ராஜா முகமது அவர்களுக்கு பொதுப்பணி துறை ஒதுக்கப்பட்டது . பொதுவாக இஸ்லாமியர்களுக்கு முக்கிய இலாகாக்கள் தருவதில்லை என்று ஒரு நிலை இருந்தது . ஆனால் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த* நிலையை மாற்றினார் . திரு.ஒய்.எஸ்.எம்.யூசுப் அவர்களுக்கும் பொதுப்பணித்துறையை வழங்கினார்* *ஆகவே இஸ்லாமியர்களுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கி மதிப்பும் மரியாதையும் காட்டியவர்கள்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அவர்களும் என்பதை இந்த நேரத்தில் ஒரு இஸ்லாமியர் என்ற வகையில் மகிழ்ச்சியுடன்*தெரிவித்து கொள்கிறேன் .***இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .


    திரு.அப்துல் மஜீத் அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை 48 முறையும்*உலகம் சுற்றும் வாலிபன் படத்தை 78 தடவையும் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார் .பார்க்க பார்க்க படங்களை ரசிக்க தோன்றுகிறது . எத்தனை முறை பார்த்தாலும்,சலிப்பு ஏற்படவில்லை. திகட்டவில்லை .என்பதை எம்.ஜி.ஆர். அவர்கள் சரித்திர பூர்வமாக நிரூபித்தார் என்பதற்கு அப்துல் மஜீத், சிங்காரவேலு போன்றவர்கள் மட்டுமின்றி இன்னும் ஏராளமானோர் பட்டியலில் இருக்கிறார்கள் .கள்ளக்குறிச்சியில் பல ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ,ரசிகர்களாக இருந்து இது போன்று ஆர்வமாக செயல்படுகிறார்கள் .நிகழ்ச்சியை* பாராட்டி கடிதம் எழுதி வருகிறார்கள் .* சென்னையில் ஒய்வு பெற்ற வங்கி ஊழியராகிய திரு.லோகநாதன் ராமச்சந்திரன் நமது நிகழ்ச்சியின் தொடர்களை தொடர்ந்து* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்கிற இணையதளத்திலும் பல்வேறு எம்.ஜி.ஆர்.மன்ற அமைப்புகள் சார்ந்த வாட்ஸ் அப் குரூப்புகளுக்கும் செய்திகளாக பதிவு செய்து வருகிறார் .அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ,லட்சக்கணக்கான எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் ,பக்தர்களுக்கு இந்த செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்கிற பெயருக்கு ஒரு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஏழை எளியோரின் நம்பிக்கை நட்சத்திரம் , ஒளிவிளக்கு, கலங்கரை விளக்கம் என்று சொல்லிக்கொண்டே போகலாம் .*


    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ------------------------------------------------------------------------------
    1.உழைக்கும் கைகளே,உருவாக்கும் கைகளே - தனிப்பிறவி*

    2.ஓடி ஓடி உழைக்கணும் - நல்ல நேரம்*

    3.இது நாட்டை காக்கும் கை - இன்று போல் என்றும் வாழ்க*

    4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

    5.கண் போன போக்கிலே கால் போகலாமா - பணம் படைத்தவன்*

  11. #1190
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இலங்கை தலைநகரான கொழும்பில்
    மக்கள் திலகத்தின் புரட்சிபடைப்பு
    நீரும் நெருப்பும் திரைக்காவியம்
    ஒரே ஏரியாவில் மட்டும் 136 நாட்கள் ஒடி
    மகத்தான வெற்றியை கடந்து வசூலில்
    வரலாற்றை படைத்துள்ளது.
    மற்றும் யாழ்நகரில் 11 வாரங்களும்....
    திரிகோணமலையில் 53 நாட்களும்...
    மற்றும் ஏனைய பகுதிகளிலும் ஒடி
    5 மாத காலத்தில் 13 லட்சத்தை வசூலாக கொடுத்தது....
    இலங்கையில் முதல் வெளியீட்டில்
    மொத்தம் ஒடிய நாட்கள் : 431 நாட்கள்........கொள்கைத்தங்கம் எம்.ஜி.ஆர்..
    பாரத் விருது பெற்றபின் சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்கம் பாராட்டு விழாவில்...
    நடிகர் சிவாஜிகணேசன்
    கொடை வள்ளல் ....
    கொற்றவர்க்கு...
    குடைபிடித்து....
    தன் பாராட்டை தெரிவிக்கின்றார்....

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் பல வழிகளிலும் பலன் பெற்றவர்
    நடிகர் சிவாஜிகணேசன்...

    அவர் குடும்பத்திற்கும்....
    சிவாஜிகணேசன் நடிகர் சங்கத்தில் இருந்தபோது....
    தலைவர் செய்த உதவிகள் ஏராளம்...

    ஆனால் தலைவரின்
    மக்கள் செல்வாக்கு என்ன என்பதை
    அறிந்தவர் சிவாஜிகணேசன்
    1982 க்கு பின் சிவாஜிகணேசன் குடும்ப பிரச்சனை... மேலும் பல நல்லகாரியங்களை செய்தவர்
    புரட்சித்தலைவர்...

    ஆனால் அவரின் ரசிகர்கள் என்று
    சிலது மட்டும்
    தலைவரை தகுதியில்லாது
    பதிவிடுகிறது....
    தரம் தாழ்த்துவதினால் அந்த
    கேவலமான வார்த்தைகள்
    உங்கள் நடிகர் சிவாஜிகணேசனுக்கு தான் போய் சேரும்...

    உங்கள் அன்னை இல்லத்தில் போய் அவரின் பிள்ளைகளிடம் கேட்டுபாருங்கள்...

    பொய் சொல்லி சிவாஜிகணேசன் என்ற நடிகருக்கு புகழ் சேர்காதீர்கள்...

    எம்.ஜி.ஆர் என்ற மாமனிதரின் புகழ்
    எட்டாத தூரத்தில் இன்று வரை எவராலும் மறைக்க முடியாத சாகாவரம் பெற்ற புகழாக ஒளிவிசுகிறது...

    யார் யாரெல்லமே வந்தார்கள்...
    போனார்கள்... உலகில்
    ஆனால் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் மட்டும் பறந்து... விரிந்து... நிறைந்து
    உலக தமிழர்களிடம் வாழ்கிறது.
    பேசப்படுகிறது...

    இனி எதுவும் உங்காளால் நடக்கபோவதில்லை...
    ஏன்..என்றால்...
    நடிகர் சிவாஜிகணேசன் என்பவர்
    உலகில் இல்லை!

    எம்.ஜி.ஆர். சினிமா நடிகர் இல்லை
    எம்.ஜி.ஆர். அரசியல்வாதி இல்லை

    இந்த இரண்டிலும் பவனி வந்த...
    எம்.ஜி.ஆர். ஒரு புனிதமான
    மனிதநேயர் ஆவார்....
    அதை யாராலும் தடுக்கமுடியாது.......bsr...

    .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •