Page 82 of 113 FirstFirst ... 3272808182838492 ... LastLast
Results 811 to 820 of 1122

Thread: Makkal Thilagam MGR Part 26

 1. #811
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,359
  Post Thanks / Like
  புரட்சித்தலைவரின் கருணையுள்ளம் காவல்காரன் திரைப்படத்தில் நடந்த சம்பவம் :

  நடிகர் கே. கண்ணன் கூறியது :

  காவல்காரன் படத்தில் புரட்சித் தலைவருடன் நான் சண்டை செய்யும் காட்சிக்காக ஸ்டண்ட் குழுவினருடன் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன் சத்யா ஸ்டுடியோவில் ! எதிர்பாராத விதமாக எனது கால் நன்றாக பிசகி விட்டது. காற்றோட்டமாக இருக்கட்டுமென்று என்னை வெளியில் மணலில் தூக்கிக் கொண்டு வந்து படுக்க வைத்திருந்தனர். இந்த நிகழ்ச்சி நடந்தபோது புரட்சித்தலைவர் வாகினியில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அவருக்கு செய்தி எப்படியோ எட்டியிருக்கிறது. உடனே சத்யா ஸ்டுடியோவிற்கு வந்து பாசத்தோடு என்னை விசாரித்தார். டாக்டரிடம் அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்தார். எனக்கு கால் பிசகி இருப்பதால் அது சரியாகும் வரையில் 10 நாட்கள் படப்பிடிப்பை தள்ளி போடும்படி கூறினார். நான் ஏற்றிருப்பது சாதாரண வேடம் தான். எனக்கு பதில் வேறு யாரையாவது போட்டு படப்பிடிப்பை உடனடியாக முடித்திருக்கலாம். 10 நாட்கள் படப்பிடிப்பை தள்ளிப் போடுவதால் எவ்வளவு சிரமம் செலவு ஏற்படும் என்பதை பற்றி எல்லாம் புரட்சித் தலைவரும் ஆர்.எம்.வீயும் கருதவில்லை. எனக்கு பதில் வேறு யாரையும் போடாமல் நான் குணமடைந்து நடிக்க வரும் வரை படப்பிடிப்பைத் தள்ளிப்போட்ட புரட்சித்தலைவரின் கருணை உள்ளத்தை, பேரண்பை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.

  ( நடிகர் கே. கண்ணன் கூறியது )

  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #812
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,359
  Post Thanks / Like
  #தலைமுறையாய் #தொடரும் #பக்தி

  #சோ, தன் துக்ளக் பத்திரிகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தொடரும் செல்வாக்கு பற்றிக் கூறும்போது ஒரு சம்பவத்தை மிக வியப்புடன் குறிப்பிட்டிருப்பார்...

  அவர் தான் வரும் வழியில் பிளாட்பாரத்தில் ஒட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் படத்தை ஒரு சிறுவன் வணங்கிவிட்டு வந்ததைப் பார்த்திருக்கிறார்.

  அவனை அழைத்து ` இப்ப என்ன செய்தாய்?' என்று கேட்டபோது, அவன் அவரிடம் `#எம்ஜிஆரை #கும்பிட்டால் #நல்லா #படிப்பு #வரும். #அதனால #கும்பிட்டுட்டுப் #போறேன்' என்றதும் சோ அதிர்ந்திருக்கிறார்...

  இவன் வளர்ந்து பெரியவனாகும்போது, தன் பிள்ளைகளுக்கும் இதை சொல்லி பெருமிதம் கொள்வான்...

  அவர்களும் `என் அப்பா தீவிர எம்ஜிஆர் பக்தர்' என்று அவர்கள் பிள்ளைகளிடம் சொல்வார்கள். இப்படி எம்ஜிஆர் மீதான அன்பு, பக்தியாகப் பல இடங்களில் கனிந்துவிட்டது...

  எம்ஜிஆரைத் தவிர வேறு ஒருவரும் உலகில் இப்படி இருந்ததில்லை..
  இருக்கப்போவதுமில்லை..............

 4. #813
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,359
  Post Thanks / Like
  உலகத்தில் எந்த நடிகரின் 100 வது படமும் ...வெளியான நாள் முதல் இன்று வரை சாதித்த வரலாறு.........
  எங்கள்
  மக்கள் திலகத்தின்
  100 வது
  திரைக்காவியமான
  "ஒளிவிளக்கு"
  போல் ஒடிய வரலாறு கிடையாது!
  எக்காலத்திலும்
  இனி கிடையாது...

  இன்றுடன்
  (20.09.1968 - 20.09.2020) 52 ஆண்டுகளை நிறைவு செய்தும்......
  காலத்தை வென்று நிற்கும் ஒப்பற்ற காவியமாக...

  கலைப்பேரரசர்
  திரையுலக சக்கரவர்த்தி
  வசூல் படமாமன்னன்
  நிறைக்குடம் தழும்பாத
  வெற்றியை தந்த
  மக்கள் திலகம்
  எம்.ஜி.ஆர்.அவர்களின்
  ஒளிவிளக்கு மட்டுமே!
  எல்லோராலும் பேசப்படும் 100 வது சரித்திரமாகும்.....

  100 நாளை வெற்றிக்கொண்ட ஊர்கள்....
  இலங்கை ஜெயின்ஸ்தான்
  162 நாள்
  ராஜா 161 நாள்
  மதுரை 147 நாள்
  திருச்சி 116 நாள்
  குடந்தை 101 நாள்..
  1984 ல் இலங்கை மீண்டும் 4 வது வெளியீடு..
  ராஜா 105 நாள்

  அடுத்து....
  ***********
  சென்னை
  பிராட்வே 92 நாள்
  அகஸ்தியா 31 நாள்
  தஞ்சை 85 நாள்
  ஈரோடு 85 நாள்
  மாயூரம் 85 நாள்
  மன்னார்குடி 85 நாள்
  சேலம் 91 நாள்
  கோவை 85 நாள்
  பாண்டி 80 நாள்
  வேலூர் 85 நாள்
  (லஷ்மி/ கிரவுன்)
  சென்னை
  மகாலட்சுமி 77 நாள்
  மிட்லண்ட் 70 நாள்
  நூர்ஜகான் 70 நாள்
  திண்டுக்கல் 70 நாள்
  மற்றும் 30 திரையில்
  50 நாளை கடந்தது...
  இலங்கையில்
  1984,1992 இரண்டுமுறை
  10 வாரங்கள் கடந்து சாதனையாகும்....

  53 வது ஆண்டின் சாதனையை நோக்கி
  சாகாவரம் பெற்ற வெள்ளித்திரையின்
  வெற்றியில்
  ஒளிவிளக்கு... பவனி!

  ஒளிவிளக்கு வெற்றியின் ஒரு பகுதி தான் மேலே....
  இன்னும் உள்ளது....பல

  53 வது தொடக்கத்தில்
  கொராணா நீங்கி
  அனைவருக்கும்
  மக்கள் திலகத்தின் ஆசியின்...
  ஒளிவிளக்கு
  ஒளிரட்டும் வாழ்வில்............

  உ.ரா..

 5. #814
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,359
  Post Thanks / Like
  1969 மே1 மற்றும் 1970 ஜன 14 பொங்கல் திருநாள், இந்த இரண்டு நாட்களிலிருந்து தொடர்ந்து மக்கள் அலைஅலையாக 'அடிமைப்பெண்' மற்றும் "மாட்டுக்கார வேலன்" திரையிட்ட திரையரங்குகள் நோக்கி
  படையெடுக்க ஆரம்பித்தார்கள்.
  எங்கும் ஒரே பேச்சு படம் பார்த்தாச்சா? என்பதுதான். இரண்டு நாளிலும் வேறொரு நடிகரின் படமும் வந்தது.

  "அடிமைப்பெண்ணு"டன் சேர்ந்து வந்த படத்தை பாவம் வேடிக்கை பார்க்க கூட மக்கள் செல்லவில்லை ."மாட்டுக்கார வேலனு"டன் சேர்ந்து வந்த படம் பொங்கல் திருநாள் அன்று வந்ததால் மற்ற படங்களின் டிக்கெட் கிடைக்காத கூட்டம் முதல் இரண்டு நாட்கள் வந்ததால் ஒரளவு கூட்டம் வந்தது. படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பியதால் படம் விரைவில் படுத்து விட்டது. ஸ்டெச்சரில் கூட தூக்க முடியாத அளவுக்கு நிலமை மோசமானதால் அப்படியே 'அம்போ'வென போட்டு விட்டு சென்று விட்டார்கள்.

  அதிலும் ஹிந்தியில் வெளிவந்த "பிரம்மசாரி" படத்தில் நடித்த நடிகரின் நடிப்பு திறமையால் அந்த படம் வெள்ளி விழா போனது. தமிழில் மிகை நடிப்பு நாயகன் நடித்து படத்தை சொதப்பி படத்தை போர் படமாக மாற்றி விட்டார். படத்தை தொய்வில்லாமல் கொண்டு போக தெரியாமல் விறுவிறுப்பு குன்றி கூட வந்த மாபெரும் வெற்றி படத்துடன் மோதி தோல்வியை பரிசாக பெற்றது. அதன்பின்பு அந்த நடிகரை வைத்து கலர் படம் எடுக்க தயாரிப்பாளர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.

  அதனால் நிறைய கருப்பு வெள்ளை படங்களில் குறைந்த பட்ஜெட்டில் நடிக்க ஆரம்பித்தார். ஜெய்சங்கர் படத்துக்கு ஆகும் செலவில் ஒரு படம் மாற்று நடிகரை வைத்து எடுத்து விடலாம் என்று நினைத்த தயாரிப்பாளர்கள் படம் தோற்றாலும் சிறிய பட்ஜெட் என்பதால் ஒரிரு லட்ச இழப்போடு தப்பி விடலாம் என்று நினைத்தனர். அப்படியும் அந்த நடிகரின் மிகை நடிப்பால் பல கறுப்பு வெள்ளை படங்களும் தோல்வியை தழுவ ஆரம்பித்தன. உதாரணமாக "அஞ்சல் பெட்டி" ,"குருதட்சணை", "அன்பளிப்பு" ,"நிறைகுடம்", "அருணோதயம்" இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

  ஒரு வருடத்தில் வருகின்ற 8 அல்லது 9 படங்களில் 7 படங்கள் தோல்வியை தழுவின. ஒரு சில படங்களில் நடிகர் சொதப்பினாலும் ஏதோ காரணத்திற்காக சுமாராக ஓடியதும் உண்டு. திடீரென்று ஒரு படம்
  ஓடிவிட்டால் போதும் கைபிள்ளைங்களை கையில் பிடிக்க முடியாது. ஏதோ அந்த நடிகரின் நடிப்பால்தான் படம் வெற்றி பெற்றதை போன்ற தோற்றத்தை உருவாக்கி விடுவார்கள். அப்படி ஒடிய "பட்டிக்காட்டு" படத்தை தூக்கி வைத்து லாலி பாடினர். அப்படியும் அந்த படம் முதல் வெளியீட்டோட சரி. மறு வெளியீட்டில் எங்கும் தலைகாட்டவில்லை.

  எம்ஜிஆர் படம் எப்படி ஓடும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
  என்ன இருக்கிறது அந்த படத்தில் இப்படி ஓடுகிறது என்று தெரியவில்லை என்று வருவோர் போவோரிடம் அங்கலாய்த்து. பேசுவார்கள். . அதன்பிறகு அந்தப்படத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வது அவர்களது வழக்கம். எப்போதும் அந்தப் படத்தை திட்டி தீர்ப்பார்கள். அதனால்தான் "அடிமைப்பெண்", "மாட்டுக்கார வேலன்" "ரிக்ஷாக்காரன்" போன்ற படங்கள் எல்லாம் அவர்களுக்கு சிம்ம சொப்பனங்கள்.

  இரவில் கூட கண்விழித்து அலறுவதும் உண்டு.
  அதற்கு காரணம் "அடிமைப்பெண்ணு"ம் "மாட்டுக்கார வேலனும்" நான்கு தியேட்டரில் வெளியான படங்கள். அவர்களுக்கும் நான்கு தியேட்டரில் வெளியான ஒருசில படங்களில் மூன்று படங்களை ஸ்டெச்சர் உதவியுடன் 100 நாட்கள் ஓட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு படங்களை 100 நாட்கள் ஓட்டுவது சுலபம். தியேட்டர் வாடகை கட்டி ஒட்டி விடுகிறார்கள்.பின்பு எவ்வளவு வாடகை கட்டினோம் என்பதை வைத்து வசூல் விபரங்களை போட்டு அசத்துவது அவர்கள் வழக்கம்.

  ஆனால் அந்த நடிகர் தன் வாழ்நாளில் நடித்த 300 படங்களில் ஏதாவது ஒரு படமாவது நான்கு தியேட்டரிலும் 400 காட்சிகள்
  அரங்கம் நிறைத்து ஓட்ட முடிந்ததா?. நெவர். ஒரு காலத்திலும் அந்த சாதனையை செய்ய முடியவில்லை. எனக்கு தெரிந்து தமிழ்ப்பட உலகில் அந்த சாதனையை செய்த இரண்டு படங்களும் தலைவர் படங்களே. காவிரியில் வெள்ளம் வந்தால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசாங்கம் எச்சரிக்கை செய்வது போல தலைவர் படம் வெளியானால் தமிழகத்தில் உள்ள அநேக ஊர்களில் 50,75,100 என்று ஓடி மக்கள் வெள்ளம் அடங்க ஒரு 2 முதல் மூன்று மாதம் வரை ஆகும்.

  புரட்சி நடிகரின் 100 வது படம் "ஒளிவிளக்கு" மதுரையில் 100 காட்சிகளுக்கு மேல் தொடர்ந்து hf ஆனது. ஆனால் உங்கள் 100 வது படம் எங்காவது 50 காட்சிகளாவது தொடர்ந்து அரங்கு நிறைந்ததா? ஆனால் 100 நாட்கள் சென்னையில் 4 திரையரங்கிலும் ஸ்டெச்சரில் தூக்கி கரை சேர்த்த அனுபவம்
  உண்டு. எங்களது சாதனைகள் அனைத்துக்கும் ஆதாரங்கள் அளித்திருக்கிறேன். பார்த்து புத்தியை சானடைசர் போட்டு கழுவிக் கொள்ளவும்.

  ஆனால் மாற்று அணியில் ஏதாவது ஒரு ஊரில் சிறிது பள்ளம் தோண்டி அதில் நீரை ஊற்றி ஆ! வெள்ளம்!
  என்று அலறுவதை பார்த்தால் கோமாளித்தனமாக இல்லையா?
  இதையெல்லாம் நாம் சுட்டிக் காட்டினால் சில சிவாலய மடாதிகள் கூவம் நதிநீர் குடித்து வளர்ந்தவர் போல அசிங்கமான வார்த்தைகளால் தலைவரை அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

  அவர்களின் ஒரு படத்தை 100 காட்சி அரங்கம் நிறைப்பதற்கே ஸ்டெச்சர் தேவைப்பட்டதை சென்ற பதிவில் பார்த்தோம். ஒரு படத்தை 100 காட்சிகள் அரங்கு நிறைத்ததை. ஒரு முழு பக்க விளம்பரம் கொடுத்து கொண்டாடியவர்கள் 400 காட்சிகள் அரங்கம் நிறைத்தால் அவ்வளவுதான் ஆனந்தத்தில் ஹார்ட் அட்டாக் வந்து உயிர் போய் விடும் என்பதால் விட்டு விட்டார்கள் போலும். அதனால்தான் அவர்கள் நடு இரவில் பயந்து போய் கெட்ட சொப்பனங் கண்டு முழித்து வேங்கையா! வேலா! என்று அலறுவதை பார்த்தால் பரிதாபமாக இருக்கும். .

  இந்தப் படங்களின் தொடர் hf காட்சிகள் சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அப்படித்தான். அதுதான் பிரளய வெற்றி. அதிலும் குறிப்பாக "உலகம் சுற்றும் வாலிபன்" தமிழகத்தில் சுமார் 25 திரையரங்குகளில் தொடர்ந்து 100 காட்சிகளுக்கு மேல் அரங்கம். நிறைந்தது அவர்களுக்கு பேதியை உருவாக்கி விட்டது. ஆனால் அவர்கள் ஒவ்வொரு படத்தையும் ஸ்டெச்சரில் தூக்கி கொண்டு 100 நாட்கள் சுமந்து பின் அதை இறக்கி விடுவது வாடிக்கையான செயலாகி விட்டது.

  எங்காவது ஒரு தியேட்டரில் அந்த சமூக சேவை நடத்தி மனம் குதூகலிப்பது ஒரு மனநோயாக கூட இருக்கலாம். பின்னர் பெருமையாக நாங்கள் 90 படங்களை ஸ்டெச்சரில் தூக்கி சாதனை படைத்தோம் என்று சொல்வது எவ்வளவு பெரிய வேதனை. ஆனால் அதை விடாமல் இன்று வரை சிவகாமி, ராஜபார்ட் வரை அலுக்காமல் செய்ய ஒரு பெரிய மனது வேண்டும். வாழ்க உங்கள் ஸ்டெச்சர் பணி என்று வாழ்த்துகிறோம் .

  அரசியலில் புறமுதுகு காட்டி ஓடியதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் தோல்வி தோல்விதானே! சாரி படு தோல்விதானே.! தோற்றவன் பிதற்றுவது சகஜம்தான். சினிமாவில் சிறுவர்களை அண்டி பிழைத்த கொடூரத்தை மறைக்க போலி வசூல் கணக்கை காட்டும் புல்லுருவிகளை என்ன சொல்லி புரியவைக்க!. அனைத்து தோல்வி படங்களையும் வெற்றி படமாக்க ஆதாரமில்லாத பொய் வசூல் காட்டும் ஜாலக்காரர்களின் ஜாலம் எத்தனை நாள் கை கொடுக்கும்.
  அரசியலிலும் சினிமாவிலும் வெற்றியை நிரூபித்த வெற்றித்
  திருமகன் புரட்சி தலைவர் ஒருவரே.

  தன் படத்தை மக்கள் நிராகரிக்கிறார்கள் என்றவுடன் ஆபாசத்தின் எல்லைக்கே சென்று நடித்த "சிவகாமியின் செல்வன்" மற்றும் "லாரி டிரைவர் ராஜா கண்ணு" போன்ற படங்கள் ஊத்திக் கொண்டதும் சிறுமிகளுடன் ஜோடியாக நடித்தால் படம் ஓடி விடும் என்று நினைத்து ஸ்ரீதேவி ஸ்ரீப்ரியா போன்ற இள நடிகைகளுடன் நடித்தார். அந்த படங்களும் ஓடவில்லை. சிவாஜி குண்டா நடித்த படங்களை கூட ஓரளவு ஓட்ட முடிந்தது, ஆனால் வயிற்றில் அண்டாவுடன் நடித்த படங்களை மக்கள் திரும்பிக்கூட பார்க்கவில்லை என்றதும் கட்டாய ஓய்வில் தள்ளப்பட்டார்.

  சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய 80 சதவீத ஆதரவு ஜானகி அம்மாவுக்கு ஆதரவு கொடுத்ததால் கிடைக்க வில்லை என்று ஒரு ஞானசூன்யம் கூறியிருப்பது உலக மகா ஜோக்.
  ஜானகி அம்மாவின் ஆதரவால் அவருடைய டெப்பாசிட் பிழைத்தது.
  இல்லையென்றால் "தில்லானா"வில்
  கத்திக்குத்துக்கு உருண்டதை போல் உருண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்.
  இவ்வளவு ஆதரவு உள்ளவர் கட்சியை ஏன் கலைத்தார் என்று நீங்க விளக்கலையே. அடுத்த தேர்தலில் cm ஆகும் வாய்ப்பை இழந்து விட்டாரே. சும்மா அவரை வைத்து காமெடி, கீமெடியெல்லாம் பண்ணாதீங்கப்பா! பெரிய குடும்பமே பாத்து சிரிக்குதப்பா! உங்க பேச்சை கேட்டு.

  முடிவில் ஒரு சின்ன ஜோக். ஜோக்காக இருந்தாலும் இது உண்மை:
  ------------------------------------'---------------------

  சிவாஜி ரசிகர் :
  ஏம்ப்பா சிவாஜியின் 4 பழைய படத்துக்கு வசூல் வேணும்.
  எவ்வளவு பணம் வேணும்.?

  தியேட்டர் பழைய துப்புரவு பணியாளர்:
  பரவாயில்லையே! இது நல்ல தொழிலாயிருக்கே? சிவாஜி படம் வசூலானதை விட இந்த பொய் வசூல் கொடுக்கிறதிலே வருமானம் அதிகமிருக்கே! அடிச்சு விடுவோம்.

  சிவாஜி ரசிகர்களுக்கு. இந்த ஜோக் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்..........ks.,...

 6. #815
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,359
  Post Thanks / Like
  தமிழக முன்னாள் அமைச்சர், காளிமுத்து எழுதிய, 'வாழும் தெய்வம்' என்ற நூலிலிருந்து:

  ஒருமுறை, எம்.ஜி.ஆர்., திருச்சிக்கு செல்லும் போது, வழியில் ரயில்வே கேட் குறுக்கிட, அவரது கார் நின்றது. அப்போது, அருகில் வயல்களில் வேலை செய்த மக்கள், ஓடி வந்து, எம்.ஜி.ஆரின் காரை சூழ்ந்து கொண்டனர். அவர்களின் பாசத்தில் திக்குமுக்காடி போனார்
  எம்.ஜி.ஆர்.,
  'எல்லாரும் நல்லா இருக்கீங்களா...' என்று, எம்.ஜி.ஆர்., விசாரித்த போது, அவர்கள், 'மகராசா நீங்க நல்லா இருந்தாலே போதும்; நாங்க நல்லா இருப்போம்...' என்று சொல்லி, கையெடுத்துக் கும்பிட்டனர். அவர்களின் கைகளை பற்றி நெகிழ்ந்து போனார், எம்.ஜி.ஆர்.,
  அவர்களிடம் விடைபெற்று காரில் பயணித்த போது, நெகிழ்ந்த குரலில், 'நான் நல்லா இருந்தாலே, தாங்களும் நல்லா இருப்போம்ன்னு சொல்ற இந்த மக்களுக்கு, நான் என்ன கைமாறு செய்யப் போறேன்...' என்றார்.
  மக்கள், தன் மீது காட்டிய பாசத்தை போலவே, அவரும் மக்கள் மீது காட்டிய அன்பையும், அக்கறையையும் அன்று நேரில் பார்த்தேன்.
  அவரது ஆட்சியின் போது, ஒருமுறை, ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை; குடியிருப்பு பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும், உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர்., அவருடன் நானும் சென்றேன்.
  சேறும், சகதியுமான வீதிகளில் கண்ணீரும், கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களை பார்த்ததுமே, காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., சிறிதும் யோசிக்காமல், வேட்டியை மடித்துக் கட்டி, முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க, பதறிப் போன மக்கள், 'அய்யா... எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல; உங்கள பாத்ததே போதும்; சகதியில் நடக்காதீங்க...' என்று தடுத்தும் கேளாமல், அவர்கள் அருகில் சென்று, ஆறுதல் கூறினார்.
  பின், மின்னல் வேகத்தில், நிவாரணப் பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையி

  உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல; தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர், எம்.ஜி.ஆர்.,
  முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அமரராகும் வரையிலான, 11 ஆண்டுகளில், ஒரு சென்ட் நிலமோ, வீடோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம், திரையுலகில் தான் சம்பாதித்த சொத்துகளை, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என, தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்தார். அவர் போல் மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர், வேறு யாரும் இல்லை. ஏனெனில், தான் சம்பாதித்த மாபெரும் சொத்து, மக்களின் செல்வாக்கு என நினைத்தார்; அதை மதித்ததுடன், கடைசி வரை கட்டிக்காக்கவும் செய்தார்.
  இதற்கு உதாரணமாக, இன்னொரு சம்பவத்தையும் கூறலாம்.
  ஒருமுறை எம்.ஜி.ஆருடன் காரில் சென்றேன். அவரது காரைப் பார்த்ததும், சாலையின், இருபுறமும் திரண்ட மக்கள், 'தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர்., வாழ்க...' என்று கோஷமிட்டனர். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., என்னிடம், 'இவங்க எல்லாருமே எம்.ஜி.ஆர்., வாழ்கன்னு வாழ்த்தறாங்களே தவிர, ஒருத்தர் கூட, முதலமைச்சர் வாழ்கன்னு ஏன் சொல்லலன்னு தெரியுமா?' என்று கேட்டார்.
  'உங்க மூன்றெழுத்து பெயர்; அவங்களுக்கு மந்திரம் மாதிரி; அதனால் தான்...' என்றேன்.
  'அதுமட்டுமல்ல; முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா, அது பதவியை வாழ்த்துற மாதிரி.
  எம்.ஜி.ஆர்., வாழ்கன்னு சொன்னா தான், என்னை வாழ்த்துற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதை நான் பத்திரமா காப்பாத்தியாகணும்...' என்றார்.
  இறுதி வரை, அவர் சொன்னது போலவே நின்றார்.............

 7. #816
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,359
  Post Thanks / Like
  எங்கிருந்தாலும் என் சிந்தை முழுவதும் செந்தமிழ் நாட்டில்தான்! - 1
  [வெளிநாடு செல்லும் முன் முதல்வர் விடுத்த செய்தி]

  நான் அமெரிக்க பேரரசு விடுத்த அன்பழைப்பினை ஏற்று, உங்கள் அனைவரின் நல்வாழ்த்துக்களோடு அமெரிக்கா, மெக்ஸிகோ, பிரிட்டன் , ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு என்னுடைய ஐந்து வாரப் பயணத்தை மேற்கொள்ளுகிறேன். இதற்கு மூன்னரும் நான் ஆசிய ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றிருக்கிறேன் என்றாலும் இம்முறை மேற்கொள்ளும் பயணத்தை தனிச் சிறப்புடையதாகக் கருதுகிறேன். இப்போது தான் தமிழக மக்களின் பிரதிநிதியாக இந்த நாடுகளுக்குச் செல்லுகிறேன் என்பதை எனக்குக் கிடைத்துள்ள அரிய நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்.

  அமெரிக்காவிலும் நான் செல்ல இருக்கின்ற இதர நாடுகளிலும் எவ்வாறு வாழ்க்கையில் மக்கள் முன்னேற்றம் பெற்றிருக்கிறார்கள் தொழில் வளர்ச்சி எந்தெந்த வகையிலெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அங்குள்ள அரசுகள் மேற்கொண் டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றை நான் நேரடியாக அறிந்து கொள்வதற்கும், அறிந்தவற்றை நம்முடைய மக்களின் முன் னேற்றத்திற்குப் பயன்படுத்துவதற்கும் என்னுடைய இந்தப் பயணம் சிறந்த வாய்ப்பாக அமையுமென்று நம்புகிறேன்.

  ஐந்து வாரங்கள் தமிழக மக்களோடு நேரடியாகத் தொடர்பு வைத்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போகிறதே என்கிற ஏக்கம் - மனக்குறை எனக்கு இருந்தாலும் வெளிநாடுகளில் தான் பெறும் அனுபவத்தை, மக்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்புக் கிடைக்கிறதே என்கிற எண்ணத்துடன், ஏக்கத்தைப் போக்கிக்கொண்டு, உங்களின் நிறைந்த நல்வாழ்த்துகளோடு என்னுடைய பயணத்தை மேற் கொள்ள முடிவு செய்தேன்.

  ஐந்து வாரங்கள் தமிழகத்திலே தான் இல்லாமல் போனாலும் என்னுடைய அன்புக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கும் உரிய என்னுடைய உடன்பிறப்புக்களைக் கொண்ட அமைச்சரவையும், கடமை தவறாமல் பணிபுரிகின்ற அனுபவமிக்க அதிகாரிகளும் நாட்டு மக்களின் கடமைகளை செவ்வனே நிறைவேற்ற இருக்இறார்கள், தமிழக மக்களும்,அனைத்துக் கட்சித் தலைவர்களும் அரசுப் பணிகளும் மக்கள் முன் னேற்றப்பணிகளும் தொடர்ந்து சீரோடும் சிறப்போடும் நடைபெற அரசுக்கு முழு ஒத்துழைம் பினையும் அளிப்பார்கள் என்பதி லும் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

  தொடரும் ..............

 8. #817
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,359
  Post Thanks / Like
  திரைப்படத் துறையில் மக்கள் திலகம் இருந்தவரைக்கும் அவர்தான் வசூல் சக்கரவர்த்தி. 1971-ம் ஆண்டு பேசும்படம் பத்திரிகையில் கேள்வி பதில் பகுதியில் தென்னகத்தின் வசூல் சக்கரவர்த்தி யார்? என்ற கேள்விக்கு, ‘எம்.ஜி.ஆர்!’ என்று பதில் சொல்லியிருந்தார்கள். பேசும்படம் மக்கள் திலகத்தின் ஆதரவு பத்திரிகை இல்லை. 1973-ம் ஆண்டு பொம்மை பத்திரிகை கேள்வி பதில் பகுதியில் ‘எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரில் அதிகம் சம்பளம் வாங்குவது யார்?’ என்ற கேள்விக்கு ‘‘இப்போதுவரை எம்.ஜி.ஆர்.தான் அதிக சம்பளம் வாங்குகிறார்’ என்று பதில் சொல்லியிருந்தார்கள். பொம்மையும் நடுநிலையான பத்திரிகைதான். மக்கள் திலகம் வாங்கிய சம்பளத்தை கடைசிவரை சிவாஜி கணேசன் வாங்கவே இல்லை.

  அன்பே வா படத்துக்கு மக்கள் திலகத்துக்கு முதலில் ரூ.3 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது. பின்னர், மக்கள் திலகம் மேலும் ரூ.25 ஆயிரம் கேட்டு ஏவிஎம் செட்டியார் கொடுத்தார். இதை ஏவிஎம் சரவணன் மற்றும் அந்தப் படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ் கூறியுள்ளனர். அதேநேரத்தில் 1966-ல் ஆரம்பிக்கப்பட்டு ஏவிஎம் தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக 1968-ல் வெளியான உயர்ந்த மனிதன் படத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல் சிவாஜி கணேசனுக்கு சம்பளம் தர முடியாது என்று செட்டியார் மறுத்துவிட்டார். இதையும் ஆரூர்தாஸ் கூறியிருக்கிறார். ஏவிஎம் சரவணனும், ஆரூர்தாசும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். மக்கள் திலகத்தின் சம்பளத்தில் பாதி கூட சிவாஜி கணேசனுக்கு ஏவிஎம் கொடுக்க விரும்பவில்லை. அவரது மார்க்கெட் வேல்யூ அவ்வளவுதான். இது சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கும் தெரியும். Swamy.........

 9. #818
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,359
  Post Thanks / Like
  ‘உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்.....

  தலைவர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற, கவியரசரின் வரிகளில், ‘மாமா’ மகாதேவன் அவர்களின் இசையில், தெய்வப்பாடகரின் கம்பீரக் குரலில் கேட்டாலே தன்னம்பிக்கையும் எழுச்சியும் கொடுக்கும் ‘உன்னை அறிந்தால்...’

  ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
  உலகத்தில் போராடலாம்
  உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
  தலைவணங்காமல் நீ வாழலாம்...

  மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
  மானென்று சொல்வதில்லையா?
  தன்னைத் தானும் அறிந்து கொண்டு
  ஊருக்கும் சொல்பவர்கள்
  தலைவர்கள் ஆவதில்லையா?....

  மானத்திலே மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான் போல இருக்க வேண்டும். தன்னையும் அறிந்து கொண்டு ஊருக்கும் வழிகாட்டும் அறிவுரைகளை சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா? அப்படி ஊருக்கு நல்லது சொல்லி தலைவர் ஆனவருக்கு நம் தலைவரே உதாரணம்.

  பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
  சாமிக்கு நிகரில்லையா?
  பிறர் தேவை அறிந்து கொண்டு
  வாரிக் கொடுப்பவர்கள்
  தெய்வத்தின் பிள்ளையில்லையா?.....

  இப்புவியில் நேராக, நேர்மையாக வாழும் எல்லோருமே சாமிக்கு நிகர்தான். இதைத்தான் வள்ளுவரும் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறார். பெரியவர்கள் சொல்வார்கள். தெய்வத்திடம் அதுவேண்டும், இது வேண்டும் என்று கேட்காதீர்கள். உனக்கு எது வேண்டும்? என்று தெய்வத்துக்கு தெரியாதா? என்று. அது போல பிறரின் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளைகள். அப்படி மக்களுக்கு தேவை அறிந்து வாரிக் கொடுத்த தலைவரும் தெய்வத்தின் பிள்ளைதானே?

  மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
  உனக்கு மாலைகள் விழவேண்டும்
  ஒரு மாற்றுக் குறையாத
  மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்...

  இந்த வரிகளுக்கு பொருத்தமானவர் தலைவர்தான் என்றாலும், நம்மையும் இதுபோல சபைகளில் நடக்கும்போது மாலைகள் விழுவதற்கும் மாற்றுக்குறையாத மன்னவன் என்றும் மற்றவர்கள் போற்றிப் புகழும் அளவுக்கும் உயர்ந்திட வேண்டும் என்கிறார். தான் உயர்ந்தது போல நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்துக்கு பயன்பட்டு அதன் மூலம் பாராட்டு பெறும் அளவுக்கு உயர வேண்டும் என்கிறார்.

  இந்தப் பாடலில் தலைவரின் கெளபாய் டிரஸ்சும் ஸ்டைலும் அட்டகாசம். ‘மா.... ஹூ.. ஹா.. என்ற ஏ.எல்.ராகவனின் தாளக்கட்டு குரலுக்கேற்ப குதிரையில் இருந்து லாவகமாக தலைவர் இறங்கும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தலைவர் எப்போதுமே நடித்துக் கொண்டிருக்கும்போதும் கூட, சூழ்நிலை குறித்து கவனமாக இருப்பவர். கடைசி பாராவின் போது, நடிகையர் திலகம் சாவித்திரியுடன் தலைவர் வேகமாக, ஸ்டைலாக நடந்து வருவார். சாவித்திரியின் பின்னால் குதிரை வந்து கொண்டிருக்கும்.

  ஒரு கட்டத்தில் சாவித்திரியின் முதுகை முட்டுவது போல அவரது நடையை விட வேகமாக குதிரை வரும். பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை என்றாலும் கூட, குதிரை தன் முகத்தால் சாவித்திரியின் முதுகை தள்ளினால் அவர் கீழே விழலாம். அல்லது தடுமாறி ரீ டேக் எடுக்கும் நிலை ஏற்படலாம்.

  குதிரை சாவித்திரியின் பின்னால் முட்டுவதைப் போல வருவதை ஓரக்கண்ணால் கவனிக்கும் தலைவர், அதன் முகத்தை பிடித்து பக்கவாட்டில் தள்ளிவிடுவார். குதிரையும் தள்ளிச் செல்லும். இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் திரு.சிவாஜி செந்தில் தரவேற்றிய இந்தப் பாடலில் இக்காட்சியை கவனித்தால் தெரியும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாடல் வரிகளுக்கும் சரியாக வாயசைத்துக் கொண்டே குதிரையையும் கவனித்து அதன் முகத்தைப் பிடித்து தள்ளிவிடும் கவனமும், நுட்பமும், திறமையும், விழிப்புணர்வும் தலைவருக்கே சொந்தம்.

  சரி... இப்படி உலகத்தில் போராடி, உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் வாழ வேண்டும், பூமியில் நேராக வாழ வேண்டும், மாபெரும் சபையில் நடந்தால் மாலைகள் விழ வேண்டும், பிறர் தேவையறிந்து வாரிக் கொடுக்க வேண்டும், ஊருக்கும் நல்லது சொல்லி தலைவர்கள் ஆக வேண்டும் ..........இந்த வேண்டும்கள் எல்லாம் நடக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

  உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... என்று தலைவர் வழிகாட்டுகிறாரே. அப்படி நம்மை அறிய வேண்டும். அப்படி அறிந்தால் இந்த சிறப்புகளைப் பெறலாம். அது மட்டுமல்ல....

  ‘ஜீவாத்மா (மனிதன்) வேறு, பரமாத்மா (தெய்வம்) வேறு அல்ல, இரண்டும் ஒன்றே’ என்று அத்வைத தத்துவத்தை போதித்த ஆதிசங்கரரும் நம்மை நாம் அறியச் சொல்கிறார். (நாம் வேறு, தெய்வம் வேறு என்பது இரண்டாக பார்க்கும் கொள்கை. நாமும் தெய்வமும் வேறு அல்ல ஒன்றே, என்பதை விளக்குவதே அத்வைத கொள்கை. த்வைதம் என்றால் இரண்டாக காண்பது, அத்வைதம் என்றால் இரண்டல்லாமல் ஒன்றாக பார்ப்பது. சாத்தியம் என்பதற்கு எதிர்ப்பதமாக முன்னாலே ஒரு ‘அ’ சேர்த்து அசாத்தியம் என்கிறோமே. அதேபோல த்வைதம், அதற்கு எதிர்ப்பதம் அத்வைதம்)

  அப்படி, தெய்வம் வேறு நாம் வேறு அல்ல, என்பதை நாம் உணர்ந்தால் உபநிடதங்களில் ஒன்றான பிரகதாரண்ய உபநிடதத்தில் ஆதிசங்கரர் போதித்த ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற முடிவுக்கு வருவோம். அதாவது நாமே கடவுள் என்று பொருள். மனிதனே கடவுள். மகாகவி பாரதியாரும் ‘தெய்வம் நீ என்று உணர்’ என்று கூறியிருக்கிறார்.

  கடவுள் தனியாக எங்கும் இல்லை. இதைத்தான் ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்றார் பேரறிஞர் அண்ணா.

  அதன்படி, மக்களை, ஏழைகளை... தெய்வமாக அவர்களுக்கு செய்யும் சேவையையே இறைவன் தொண்டாக உணர வேண்டுமானால், நம்மை உணர வேண்டும். அப்படி நம்மை உணர்ந்தால்

  அதாவது.....

  உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்..... அஹம் பிரம்மாஸ்மி.

  இந்தப் பாடலை இன்று எழுதலாம் என்று தோன்றி விட்டது என்று முதலில் கூறினேனே. அந்த உந்து சக்தி ஏற்படக் காரணம், மேலே கூறியபடி அத்வைத தத்துவத்தை போதித்த ஆதிசங்கரர் அவதரித்த நாள் இன்று.

  ‘அஹம் பிரம்மாஸ்மி’.

  Couretsy
  Kalaivendhan sir.........

 10. #819
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,359
  Post Thanks / Like
  நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் - 1

  சென்னையிலே ஒரு வீட்டின் முன்னால் எந்த நாளும் எந்த நேரமும் ஆகக்குறைந்தது நூறு பேராவது ஆவல் ததும்பும் முகத்துடன் நிற் கின்றார்களென்றால் அந்த கொடைவள்ளலாகவும் உயர்பண்புகளின் உறைவிடமாகவம் விளங்கும் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் வீடு என நிச்சயமாகச் சொல்லலாம்.

  ஆம்! அன்புள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர். அவர்கனின் அழகுருவத்தை ஒரு தடவையாவது பார்த்து விடவேண்டும் என்ற ஆசையால் வருபவர் பலர் . அவருடன் உரயைாடி மகிழவேண்டும் என்ற ஆவலில் வருபவர் பலர். அவருடைய ஆசியையும் ஆதரவையும் பெறவேண்டுமென்ற அவாவுடன் வருபவர் பலர். எல்லாரையும் கனிவுடன் வரவேற்கிறார் . அன்புடன் உரையாடுகின்றார், கஷ்டங்களை விசாரிக்கின்றார் . தரமறிந்து தகுதி கண்டு தக்க ஆலோசனைகள் கூறு கின்றார். தகுந்த பணவுதவியும் செய்கிறார். காலஞ்சென்ற கலைவாணர் கிருஷ்ணன் அவர்களின் அடிச்சுவட் டைப் பின்பற்றி அவரையும் விட சிறந்த வள்ளலாக விளங்குகின்றார். நாளாந்த வேலைகளில் உணவு உட் கொள்ளுவதிலும் பார்க்க இத்தகைய வேலைகள்தான் முக்கியமானவையாக எம். ஜி. ஆர். அவர்கட்குத் தோன்றுகின்றன. தன் நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள அவர் தன் அன்புள்ளத்தினால், தாராள மனப்பான்மையினால், தியாக சிந்தையினால் பல லட்சம் மக்களைக் கவர்ந்துள்ளார். எனக்கும் எம்.ஜி.ஆர், அண்ணா அவர்கட்கும் வெகுசமீபத்தில் தான் தொடர்பு ஏற்பட்டது.

  தொடரும்.............sb.,

 11. #820
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,359
  Post Thanks / Like
  நோயில்லா அரசு

  நிர்வாகத்தில் நிகரிலா நாணயம்
  தலையீடில்லாச் சக்கரச் சுழற்சி
  காலத்தாலே காரியம் செய்தல்
  இன்ன தேவை இப்பொழுதென்று
  அன்னதை மட்டும் அளந்து முடித்தல்
  வெற்றுப் பேச்சுகள் விளம்பர மேளம்
  அண்டா திருக்கும் அட க்கப் பெருநிலை
  மந்திரி என்னும் மமதையில்லாமல்
  கலந்து பழகும் கண்ணியப் போக்கு
  போலீஸ் கூட்டம் புடைசூழாமல்
  மக்கள் நடுவே வலம்வரும் அழகு வேளாண்மைக்கு வியத்தகும் உதவி தமிழின் மேன்மையைத் தரணியில் காக்க
  புதுப்புதுச் செயல்கள் ! பொன்னெழுத்தாக எழுதும்
  வண்ணம் இயக்கும் திறமை;
  குறையையே தேடும் கூட்டங்களுக்குத் தீனிபோடாத செம்மையும் மேன்மையும் பற்றாக் குறையெனப் பதறா திருத்தல்
  கடன்களை எழுப்பிக் கவலை தராமல்
  நிவாரணப் பணிஎன நிதிதிரட்டாமல் திட்டத்துடனே செயல்படும் உயர்வு!
  கட்சிக்காரனைக் கட்டுப் படுத்தி ஆட்சி நேர்மையின் அறத்தினைக் காத்தல்;
  வள்ளுவன் வகுத்த வழிகளுக்கிணங்க
  நல்லர சொன்றை நடாத்திக்காட்டுதல்;
  இவையெலாம் பெற்றதே இன்றைய ஆட்சி!
  சுவையெலாம் திரண்டு சோற்றில் விழுந்தபோல்
  பசியுள பேர்க்கெலாம் பயனுள விருந்து புகழ்ந்து
  பேசாது போகின்றவர்களும் இகழ்ந்து பேசிட எதுவுமே இல்லை;
  நல்லர சென்று நவிலும் முறைக்கு இலக்கணம் வகுத்தது இன்றைய ஆட்சி:
  ஓராண்டு போல உயர்ந்து வளர்ந்து நூறாண்டு வாழ்கஇந் நோயில்லா அரசு.

  அரசவைக்கவிஞர் கண்ணதாசன்....சை. பா.

Page 82 of 113 FirstFirst ... 3272808182838492 ... LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •