Page 133 of 210 FirstFirst ... 3383123131132133134135143183 ... LastLast
Results 1,321 to 1,330 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1321
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*விவரம் (12/11/20 முதல் 19/11/20 வரை)
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------
    -12/11/20* *சன்* லைப்* - மாலை* 4 மணி - திருடாதே*

    13/11/20* - சன் லைப் - காலை 11 மணி - நாளை நமதே*

    * * * * * * மெகா 24- பிற்பகல் 2.30மணி - தேர்த்திருவிழா*

    14/11/20 -மெகா டிவி -அதிகாலை 1 மணி - குடியிருந்த கோயில்*

    * * * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 7 மணி - ஆயிரத்தில் ஒருவன்*

    15/11/20-மீனாட்சி டிவி -மதியம் 12 மணி - நல்ல நேரம்*

    * * * * * * * *புது யுகம்* - இரவு 10 மணி - மாட்டுக்கார வேலன்*

    16/11/20- சன் லைப் - காலை 11 மணி - ரிக் ஷாக் காரன்*

    * * * * * * * * மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - தேர் திருவிழா*

    * * * * * * * * *பாலிமர் - பிற்பகல் 2 மணி* -இன்று போல் என்றும் வாழ்க*

    * * * * * * * * சன் லைப்* -மாலை 4 மணி - ஆசைமுகம்*

    17/11/20 சன் லைப் -மாலை 4 மணி - வேட்டைக்காரன்*

    * * * * * * * * புதுயுகம்* - இரவு* 7 மணி* - நல்ல நேரம்*

    * * * * * * * * *பாலிமர்* *- இரவு* 11 மணி - தனிப்பிறவி*

    18/11/20-வேந்தர் டிவி -காலை 10 மணி -ஆனந்த ஜோதி*

    * * * * * * * *சன் லைப் - காலை 11 மணி - உழைக்கும் கரங்கள்*

    * * * * * * * *மெகா டிவி - மதியம்* 12 மணி - பணத்தோட்டம்*

    * * * * * * * வேந்தர் டிவி - பிற்பகல் 1.30 மணி - வேட்டைக்காரன்*

    19/11/20 மெகா டிவி - அதிகாலை 1 மணி* - தாயின் மடியில்*

    * * * * * * * மீனாட்சி* - மதியம் 12 மணி - விவசாயி*

    * * * * * * * *மூன் டிவி -பிற்பகல் 12.30 மணி - முகராசி*

    * * * * * * * *மெகா 24- பிற்பகல் 2.30 மணி - கன்னி தாய்*

    * * * * * * * *சன் லைப் - மாலை* 4 மணி - என் அண்ணன்**

    * * * * * * * புதுயுகம் - இரவு 7 மணி - நீரும் நெருப்பும்*

    * * * * * * * பாலிமர் - இரவு 11 மணி - தொழிலாளி*** * * * * * * **

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1322
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    # இப்போதெல்லாம் நன்றாக காமெடி செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து போனது, வடிவேலு வேற இப்போதெல்லாம் படங்களில் நடிப்பதில்லை, சந்தானம் ஹீரோ ஆயிட்டார் எனவே தமிழ் சினிமாவுக்கே கொஞ்சம் காமெடிப்
    பஞ்சம் வந்து விட்டது என்று நினைப்பவர்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி,

    அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம், இந்தா வந்துட்டுல்ல புதிய டீம்,

    ஏற்கனவே இருக்கும் போண்டா மணி, "தில்லானா மோகனாம்பாள்" வைத்தி, லொள்ளு சபா மனோகர், கனடா நியூ மன்னாரன் கம்பெனி தங்கவேலு இவர்களுடன் அதிரடியாக உங்களையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைப்பதற்கு இன்னும் ஒரு நாலைந்து நகைச்சுவை மன்னர்கள் இதோ வந்து விட்டார்கள் உங்களைத் தேடி

    முறையே "அல்டாப்" அருணாச்சலம், "மண்ணாங்கட்டி சுப்பிரமணியம், "குபீர் சிரிப்பு "குமரப்பா, காமெடி கந்தன் இவர்களெல்லாம் உங்களை சிரிக்க வைக்க காத்துக்கொண்டு இருக்கிறார்கள்,

    இனி ஷோவுக்குள்ள போவோமா !( மேலே வந்த டயலாக் எல்லாம் "விஜய் " டி. வி யில் " அது, இது, எது நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுவது மாதிரி நினைத்துக்கொண்டால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் )

    " கப்பலோட்டிய தமிழன் " வ.உ. சிதம்பரனார் அவர்களுக்கு என்னுடைய பணிவான வீர வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்,

    அவரின் வீர வரலாற்றை திரு. பந்துலு அவர்கள் திரைப்படமாக எடுக்க நினைத்தது தவறில்லை, ஆனால் கணேசனை வைத்து எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்து படத்தை தொடங்கினார் பாருங்கள் அங்கேதான் விதி விளையாடி விட்டது,

    அந்த படத்தை நன்றாகப் பாருங்கள்,
    வ. உ.சி கதாபாத்திரத்தில் நடித்த கணேசனை விட " பாரதியார் " வேடத்தில் நடித்த எஸ். வி. சுப்பையா, சுப்பிரமணிய சிவா வாக நடித்த திரு. அவ்வை சண்முகம், இளம் காதலர்கள் வேடத்தில் வரும் ஜெமினி கணேசன் சாவித்திரி இப்படி அனைவருமே வெகு இயல்பாக நடித்து படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருப்பார்கள்,

    அதிலும் "காற்று வெளியிடை கண்ணம்மா "பாடலை பார்த்துக் கொண்டே இருக்கலாம்,

    என்ன இருந்து என்ன பயன் சிதம்பரனார் வேடத்தில் வந்த கணேசனின் இயல்புக்கு மாறான ஓவர் அலட்டல் நடிப்பால் படம் படுத்து விட்டது ( கொஞ்ச வருடங்களுக்கு முன்பு தமிழே தெரியாத நடிகர் சாயாஜி ஷிண்டே அவர்களை வைத்து பாரதியார் படம் வெளி வந்தது, அதில் அவர் அவ்வளவு எதார்த்தமாக, இயல்பான முறையில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்,

    நம்முடைய கணேசன் "கை கொடுத்த தெய்வம் " படத்தில் ஒரு பாடலில் பாரதியார் வேடத்தில் நடித்து அந்த முக பாவனைகளை பார்த்தவர்களுக்கு பயத்தில் காய்ச்சல் வந்ததுதான் மிச்சம் )

    அந்த படத்தை எடுத்த வகையில் பந்துலு அவர்களுக்கு அந்த சமயத்தில் 7 லட்ச ரூபாய் நஷ்டம் என்று படத்தில் நடித்த கணேசன் பேசும் படம் சினிமா பத்திரிக்கையில் 1993 ஆம் வருடம் மிகவும் வருத்தப்பட்டிருந்தார்,

    இப்போ அதற்கு என்னா என்கிறீர்களா?
    வேறு ஒன்றுமில்லை

    படத்தில் நடித்த கணேசன், படத்தை தயாரித்த பந்துலு இருவருமே பகிரங்கமாக ஒத்துக்கொண்ட விஷயத்தை இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது கணேசன் ரசிகர்கள் என்னும் பெயரில்
    ஒரு குபீர் சிரிப்பை வரவழைக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கள்,

    அதாவது படம் வெளியான 25 நாளில் 40 லட்சம் பேர் படம் பார்த்தார்களாம்
    குறைந்த பட்சம் 35 லட்சம் வசூல் ஆகி இருக்குமாம்,
    தயாரிப்பு செலவு 15 லட்சம் போக மீதி 20 லட்சம் லாபம் தானே அப்படியிருக்க அந்த படம் எப்படி வசூலில் தோல்வி என்று சொல்லப்படுகிறது என்று மிகவும் வேதனைப் பட்டிருக்கிறார்கள்,

    நமக்கும் மனசு கஷ்டமாகத்தான் இருக்கிறது, என்ன செய்ய உங்களைப்போல் அந்தக் காலத்தில் CHARTED ACCOUNT
    படித்துவிட்டு சூப்பராக கணக்குப்
    போடும் ஆடிட்டர்கள் இல்லை போல் இருக்கிறது, what a pitty?

    ஒரு வேளை 400, 000 என்பதற்குப் பதில் 40, 00000 என்று தவறாக கணக்கு கொடுத்து விட்டார்களோ என்னவோ, எதற்கும் இன்னொரு முறை நன்றாக check செய்து கொள்ளுங்கள் சரியா !

    ஹீரோ 72 என்று பூஜை போட்ட கையோடு சில காட்சிகளுடன் படம் நின்று விட்டது,
    அதற்கு முன்பே சிவந்த மண் கொடுத்த மரண அடியையும் பொருட்படுத்தாமல் ஸ்ரீதர் இந்த படத்திற்கு பூஜை போடக் காரணம் ஒரு வேளை இதாவது நம்மை கரை சேர்த்து விடாதா என்ற நப்பாசைதான், ( ஏற்கனவே " அன்று சிந்திய ரத்தம் " என்ற பெயரில் தலைவரை வைத்து படம் எடுத்து விட்டு ஒரு சிறிய பிரச்சனையினால் அந்த படம் கிடப்பில் போடப்பட்டதால் தலைவரிடமும் போவதற்கு தயக்கம் )

    ஆனால் கணேசன் புதிய படத்திற்கு கால் ஷீட் தராமல் இழுத்தடி த்தார்,
    அதற்கு என்ன காரணம் என்றால் ஸ்ரீதர் பலரிடமும் சிவந்த மண் படத்தால் எனக்கு 50 லட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டம் என்று சொன்னதாக ஒரு டாக் கணேசன் காதில் விழுந்திருந்தது, அதை உறுதிப் படுத்தும் விதமாக அப்போதைய பத்திரிக்கைகளிலும் அதே செய்தி பரபரப்பாக வெளி வந்திருந்தது,

    இதை மனதில் வைத்துக்கொண்டுதான் கணேசன் கால்ஷீட் தராமல் ஸ்ரீதரை அலைய விட்டார் , அதை அரசல் புரசலாக தெரிந்து கொண்ட ஸ்ரீ தர் வேறு வழி இல்லாமல் இந்தி நடிகர் ராஜேந்திரகுமாரை சந்தித்து ஒரு படம் நடித்துத் தருமாறு உதவி கேட்டார்,

    ஆனால் அவர் கொடுத்த idea தான் ஸ்ரீதர் மீண்டும் தலைவரை வைத்து உரிமைக்குரல் படம் எடுத்து பெரிய நரகத்திலிருந்து மீண்ட கதை அனைவருக்கும் தெரியும்,

    ஸ்ரீதர் சிவந்த மண் படத்தால் நஷ்டம் அடைந்தேன் என்று சொன்னதாக சிவாஜி ரசிகர்கள் நன்றி கெட்ட ஸ்ரீதர் என்ற வசனத்துடன் போஸ்டரும் அடித்திருந்தார்கள்,
    அந்த போஸ்டர் விளம்பரத்தையும் சங்கர் சார் ஏற்கனவே ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தார்

    இன்றைக்கும் சிவந்த மண்ணு நம் நாடு படத்துடன் மோதி செத்த மண்ணாகப் போன ஆதாரங்களை
    வெகு சிறப்பாக வெளியிட்டிருந்தார் ( இதற்கு மேலும் செத்த மண்ணு வெற்றிப்படம்தான் என்று பீப்பீ ஊதுவீர்கள் என்றால்????????? )

    வைர நெஞ்சம் பட ஷூட்டிங்கில் ஸ்ரீதர்
    உரிமைக் குரல் கதையை சொல்லி o. k வாங்கியிருந்தாராம் கணேசனிடம் ( நம்பிட்டோம் போண்டா மணி குரூப்ஸ், அது மட்டுமில்ல தலைவர் இடத்தில் கணேசனை கொஞ்சம் பொருத்திப் பாருங்களேன், காமெடியா இல்ல? )

    1977 இல் பாக்ஸ் ஆபீசை அலற விட்ட " மீனவ நண்பன் " படத்தைப் பற்றி இவர்கள் ஒரு விமர்சனம் போட்டிருக்கிறார்கள்
    படிக்கும் போது எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை

    " மீனும் கிடைக்கவில்லை, நண்பனின் வரமும் கிடைக்க வில்லை "

    இந்த டைமிங் காமெடி எனக்குப் புரியவில்லை, உங்களுக்கு ஏதாவது புரிகிறதா பாருங்கள்

    ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் வசூலை அள்ளிக் குவித்த படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம் என்றால் வேறு எந்த படத்தை வெற்றிப்படம் என்று சொல்வார்கள்?

    ஒரு வேளை "இளைய தலைமுறை, ரோஜாவின் ராஜா, உத்தமன், நாம் பிறந்த மண், மன்னவன் வந்தானடி, அவன் ஒரு சரித்திரம் மாதிரியான படங்களைத்தான் சூப்பர் என்று சொல்வார்களோ தெரிய வில்லை,

    1976 ஆம் ஆண்டில்
    சிவாஜியின் சினிமா வாழ்க்கை முடிகிறதா? என்று அட்டைப்படம் போட்டு "கல்கி " பத்திரிக்கை கட்டுரை எழுதியது இந்த குழுவினருக்கு மறந்திருக்காது என்று நம்புவோம்...

    " மோகனப் புன்னகை " படம் கணேசன் ஸ்ரீதருக்கு இலவசமாக நடித்துக் கொடுத்தாராம்,

    இப்படி ஒரு படம் வந்ததே நிறைய பேருக்குத் தெரியாது, அதுவும் ஸ்ரீதர் கடன், மனவேதனையால் இவரிடம் வந்தாராம் ...

    ஏண்டா புளுகல் மன்னன்களா கதை விட்டாலும் கொஞ்சம் நம்பும் படியா விடுங்கடா, உங்க அய்யன் புத்தி தான உங்களுக்கும் வரும்,

    மோகனப்புன்னகை படம் எடுத்தவர் சாரதி, ஸ்ரீதர் அல்ல
    அப்படியிருக்கும் போது ஸ்ரீதருக்கு எப்படி இலவசமாக நடிச்சுக் கொடுத்தார்?

    மோகனப்புன்னகை வருவதற்கு முன்பே "அழகே உன்னை ஆராதிக்கிறேன், இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்களை எடுத்து நல்ல நிலையில் இருந்த ஸ்ரீதர் இவரிடம் போனாராம்,

    அட முண்டங்களா, அய்யனை வைத்து இந்த ஓட்டை டப்பா படத்தை எடுத்த பின்பு அவர் எடுத்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை,

    ஒரு ஓடை நதியாகிறது, ஆலய தீபம், யாரோ எழுதிய கவிதை, இனிய உறவு பூத்தது,

    அதிலும் குறிப்பாக 1985 இல் மோகன், ஜெயஸ்ரீ நடித்து வெளி வந்த " தென்றலே என்னைத் தொடு" அதிரி, புதிரி ஹிட்,

    பாடல்களும் சரி, இயக்கம், நடிப்பு எல்லாமே வேற லெவல்,

    உண்மை இப்படி இருக்க எப்படி மீட்டர் மீட்டரா பூவை அளக்கிறானுவப்பா?

    நாலு நாள் தாக்குப்
    பிடிக்காத அவிஞ்ச புன்னகைக்கு இவ்வளவு பில்டப்,
    கஷ்டம்டா சாமி !

    அப்புறம் செத்த மண்ணு படத்துக்கு தலைவர் ரசிகர்கள் இவர்களிடம் டிக்கெட் கேட்டார்களாம்,

    பெரிய அவதார் படம்
    பிளாக்கில் வாங்கிதான் பார்க்கணும்

    நீங்களே இலவசமாக டிக்கெட் கொடுத்தும் கூட நாய் கூட கிளத் தி மோளாத படத்துக்கு என்ன ஒரு
    பில்டப்பு

    " சிரித்து வாழ வேண்டும் " அழுது கொண்டே ஓடுச்சாம்,

    மதுரை நியூ சினிமா அரங்கில் 104 நாள் ஓடி திரையிட்ட அரங்குகளில் எல்லாம் 50 நாளை நிறைவு செய்து பல அரங்குகளில் 75 நாட்களைக் கடந்து 75 லட்சத்துக்கு மேல் வாரிக் குவித்த படம் அழுது கொண்டே ஓடியது என்றால் , வெளியான நாளில் இருந்து இன்று வரை இடைவெளி இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் படம்,
    இப்போ கொரோனா தளர்வுக்குப் பிறகு கழிந்த 10 ந் தேதி தூத்துக்குடி சத்யா வில் திரையிடப் பட்ட படம் சிரித்து வாழ வேண்டும்...

    அதைப் பற்றி சொல்ல ஒரு அருகதை வேண்டாமா?

    அய்யன் நடிச்ச 300 படத்தில் மறு வெளியீடு கண்டவை எத்தனை?

    2, 3 படங்கள் ஒரு நான்கைந்து தடவை வெளி வந்ததோடு சரி,

    ரிலீஸ் ஆன கையோடு மண்ணோடு மண்ணாய் புதைக்கப்பட்ட படங்களுக்கே இவ்வளவு தெனாவெட்டு காட்டினால் இன்று வரை ஓடிக்கொண்டே இருக்கும் தலைவரின் ரசிகர்களான எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?

    இப்போ கொஞ்ச நாளைக்கு முன்பு புடவை, ஜாக்கெட் எல்லாம் கொடுத்து நீங்களே திரையிட்டு நீங்களே கை தட்டிக் கொண்ட டிசிட்டல் படம் ஒன்றும் வரலையாக்கும் ?!!!

    கேவலம் ஒரு பைசாவுக்கு மதிக்க ஆளில்லை ,
    உங்களையெல்லாம்??????????????

    தலைவரின் பக்தன் ...

    ஜே. ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt).........

  4. #1323
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    P.s.சரோஜா !

    "எனது கணவர் டி.ஆர்.ராமண்னா இரண்டு பேருடனும் நெருங்கிய நட்புடன் இருந்தார். ஒருவரை ஒருவர் அண்ணா என்றே அழைத்துக்கொள்வார்கள். பல நேரங்களில், எம்.ஜி.ஆர் - சிவாஜி என இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைப்பது பற்றிய பேச்சு வரும். தான் சொல்லும் தேவைகளுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே இது சாத்தியம் என்று என் கணவர் அவர்களிடமே சொல்வார்.

    இருவருமே அதற்கு ஒப்புக்கொண்ட பிறகு, அதற்கான சந்தர்ப்பமும் அமைந்தபோது, இருவரையும் அழைத்து, இருவரையுமே தனது படத்தில் நடிக்க வைப்பது குறித்து என் கணவர் கூறினார். எல்லாவற்றுக்கும் மேலாக, நான் தான் படத்தின் நாயகி" என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் பி.எஸ்.சரோஜா.

    படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரம் தங்கராஜ். அவருக்கு மனைவியாக சரோஜா நடித்திருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர் - சிவாஜி என இருவரும் ஒன்றாகத் தோன்றும் காட்சிகள் 'கூண்டுக்கிளி' படத்தில் குறைவே.

    "ஆனால் அந்தக் காட்சிகள் கதைக்கு முக்கியமானவை. அதிகம் பேசப்பட்டவை. இருவருடனும் சேர்ந்து நடிப்பது எனக்கும் அதுதான் முதல் முறை. நான் எப்போதுமே அவர்களைக் கண்டு ஆச்சரியத்தில் இருப்பேன். ஆனால், அவர்களின் தோழமை அணுகுமுறையால் என்னால் எளிதாக நடித்து முடிந்தது" என்றார் சரோஜா.

    தற்போது 93 வயதாகும் சரோஜா தனது மகன் கணேஷ் ராமண்ணாவுடன் வசித்து வருகிறார்.
    நன்றி !
    இந்து தமிழ் திசை இணையத்திலிருந்து .............

  5. #1324
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த நூற்றாண்டின் மாபெரும் மனிதநேயர் எம்.ஜி.ஆர். அவர்களை தமிழகம் தத்தெடுத்துக் கொண்டது.
    அவர் வாழ்வில் உயர உயர தமிழகத்தை தத்தெடுத்துக் கொண்டார். அவர் தத்தெடுத்துக் கொண்ட குடும்பங்களில் ஒன்று நடிகர் குண்டு கருப்பையாவின் குடும்பம். கருப்பையாவின் மறைவிற்கு பின் அந்த குடும்பத்தினரை பாதுகாத்து மகன்கள், மகள்களுக்கு திருமணம் நடத்தி வைத்தவர் எம்.ஜி.ஆர்.

    இங்கே அவர் திருமணம் நடத்தி வைப்பது அ.தி.மு.க. தலைமைக் கழக
    நிர்வாகியாக இருந்த, (தற்போது
    சென்னை தி.நகரிலுள்ள எம்.ஜி.ஆர்.
    நினைவில்ல நிர்வாகியான)
    திரு கே.சுவாமிநாதன்.

    அ.தி.மு.க. வின் வரலாறை முழுமையாகத் தெரிந்த வெகு சிலரில் முக்கியமானவர் இவர். ஆனால் இவரை எம்.ஜி.ஆருக்குப் பின் இந்த இயக்கம்
    கண்டுகொள்ளவில்லை. காரணம் இவருக்கு துதிபாடத் தெரியாது.

    திரு சுவாமிநாதன், அவரது மனைவி
    விஜயலட்சுமி இருவருக்குமே நேற்று
    ஒரே நாள் பிறந்த நாள். அவர்களுக்கு
    நமது நல்வாழ்த்துக்கள்.

    Ithayakkani S Vijayan.........

  6. #1325
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்* மறுவெளியீட்டு சாதனை*தொடர்ச்சி ............20/11/20 (* வெள்ளி முதல் )
    ---------------------------------------------------------------------------------------------------------
    சென்னை* மகாலட்சுமி - தென்னக ஜேம்ஸபாண்டாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.*
    நடித்த ரகசிய போலீஸ் 115- தினசரி மாலை 4 மணி / இரவு 7 மணி காட்சிகள் .


    திருச்சி - அருணாவில் - ரகசிய போலீஸ் 115- வெற்றிகரமான 2 வது* இணைந்த*
    வாரம் - தினசரி* 3 காட்சிகள் -தகவல் உதவி :மதுரை திரு.எஸ். குமார் .


    சேலம் -அலங்காரில் -நம் நாடு -தினசரி 3 காட்சிகள் - வெற்றிகரமான 2வது வாரம்*
    தகவல் உதவி : சேலம் திரு.சத்தியமூர்த்தி .


    ஏரல்* (நெல்லை மாவட்டம் ) சந்திராவில் -எங்க வீட்டு பிள்ளை*
    தினசரி 3 காட்சிகள்*


    திருச்சி - பேலஸில் (21/11/20) முதல் எங்க வீட்டு பிள்ளை -தினசரி 3காட்சிகள்*

    தகவல்* உதவி : மதுரை திரு.எஸ். குமார் .

  7. #1326
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒருமுறை பாய்ஸ் கம்பெனி நாடக குழுவில் தலைவரும் பெரியவரும் தலைவருக்கு அப்போது வயது 7 இல் நடித்து கொண்டு இருக்க.

    உணவு இடைவேளை நேரம்....அந்த கம்பெனி வழக்கம் படி ஹீரோ ஹீரோயின் மற்றும் முக்கிய வேடம் போடும் நடிகர்கள்களுக்கு சிறப்பு பந்தி உணவு.

    சாதம் சாம்பார் பொரியல் கூட்டு அப்பளம் போன்றவை உடன்...உடன் கெட்டி தயிர் உண்டு.

    பசியில் வாடிய தலைவர் ஒருநாள் அந்த முக்கிய நபர்கள் பந்தியில் போய் சாப்பிட அமர்ந்து விட்டார். .இதை கண்காணிக்க அமர்த்த பட்ட ஒருவர் தலைவரை தூக்கி உனக்கு என்ன இங்கே சாப்பிடும் அவசரம் எழுந்து போய் விடு என்று விரட்ட.

    அவமானத்தில் கூனி குறுகி போகிறார்கள் தலைவரும் பெரியவரும்...அவர்களை போன்றவர்களுக்கு சிறப்பு பந்தி முடிந்து மீதம் இருக்கும் சாதம் வெந்நீர் கலக்க பட்ட சாம்பார் நீர் மோர் ஆகியவை தினம் தினம்...

    கண்களில் முட்டி நிற்கும் கண்ணீருடன் அந்த 7 வயதில் நம் தலைவருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது....அதை பின் நாட்களில் அவரே பலமுறை பேட்டிகளில் சொல்கிறார். .

    என்றாவது ஒருநாள் எனக்கு மற்றவர்களுக்கு சாப்பாடு போடும் நிலை வந்தால் ஏழை செல்வந்தர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே வகை ஆன உணவு அளிப்பேன் என்று அன்று தீர்மானிக்கிறார்.

    அதுவே பின் நாட்களில் நடந்தது....ராமாவரம் தோட்ட இல்லத்தில் தன்னை சந்திக்க வரும் பெரும் செல்வந்தர்களும் அழுக்கு வேட்டி புடவை உடன் வரும் சாமானிய மக்களும் ஒரே இடத்தில் ஒருவர் பக்கத்தில் ஒருவர் அமர்ந்து ...

    அனுதினமும் விதம் விதம் ஆன அமோக விருந்து சாப்பாடு கொடுத்து மகிழ்ந்தார் நம் மன்னவன்...

    அதுவே நம் புரட்சிதலைவர்...
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்.

    உலக நாடுகள் இன்று வரை தீர்க்க முடியாத ஏழை பணக்காரன் சம நிலையை தன் வீட்டில் ஆரம்பித்து வைத்த சமுதாயத்தின் நாட்காட்டி அவர்.

    ஆள்காட்டி பிழைக்கும் அற்ப அரசியல் தலைவர் இல்லை.

    வாழ்க நம் தலைவர் புகழ்....உங்களின் குரல் ஆக உங்களில் ஒருவன்.

    நன்றி...இன்னும் தொடரும் தலைவரின் சிந்தனைகள்..நன்றி.

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று உலகம் சொல்லவேண்டும்.

    உலகம் சொல்லியது.
    சொல்லி கொண்டு இருக்கிறது....

    இன்னும் சொல்லும் என்றும்....

    புவி உள்ளவரை புரட்சிதலைவர் புகழ் என்றும் நிலைக்கும்..........vrh...

  8. #1327
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் என்றென்றும்

    #"இதயக்கனி"

    சத்யா மூவீஸ் தயாரிப்பில், ஏ.ஜெகன்னாதன் இயக்கத்தில் வெளிவந்த ப்ளாக்பஸ்டர் படம். ஐம்பதுகள், அறுபதுகள், எழுபதுகள் எந்த வருடமானாலும் மக்கள் திலகம் வசூல் மன்னன் என்பதனை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்த படம்.

    இலட்சங்களில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் சுமார் 2.5 கோடி வசூலை குவித்தது. இன்றைய மதிப்பில் இது கிட்டத்தட்ட 57 கோடிக்கு சமமாகும்.

    தேயிலை எஸ்டேட் உரிமையாளரும், கடமை தவறா காவல் துறை அதிகாரியுமான மோகன் ((மக்கள் திலகம்)) ஒரு பொதுஉடமைவாதி. தன் எஸ்டேட்டில் வருகிற லாபம், செல்வம் அனைத்தையும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பொதுவில் வைத்து அவர்கள் அன்பை பெற்றவர். ஒரு நாள் தன்னை அடைக்கலமாக வந்தடைந்த லட்சுமி யை((ராதா சலூஜா)) தன் எஸ்டேட் வீட்டில் தங்க வைக்கிறார். பின் பெரியவர்களின் ஆசியோடு லட்சுமியை மணந்து கொள்கிறார்.

    ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி கொலையின் பின்னணியில் கொள்ளைக்கூட்டம் இருப்பதை தன் மேலதிகாரியின் மூலம் அறிந்து கொள்கிறார் மோகன். அந்த கொலைக்கான முக்கிய சந்தேகப்படும் குற்றவாளியாக தன் மனைவி லட்சுமியின் புகைப்படமும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார் மோகன். தன் மனைவி குற்றவாளியா? நிரபராதியா? என மோகன் கண்டுபிடிப்பதே மீதிக்கதை.

    மக்கள் திலகத்தின் த்ரில்லர் வகை படங்களில் இது முக்கியமானது. வழக்கம் போல் தெறிக்க விடுகிறார் மக்கள் திலகம். அதுவும் மிஸ்டர்.ரெட் வேடத்தில் கொள்ளைக்கூட்ட தலைவி ராஜசுலோசனாவுடன் மோதும் இடம், வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் போடும் ஆட்டம், வெடித்து சிதறும் குண்டுகளிடையேயான போட் சேசிங், இதை தவிற ராதா சலூஜாவுடன் ரொமேன்ஸ் என்று தெரிக்க விடுகிறார் மக்கள் திலகம்.

    படத்தின் இன்னொரு கதாநாயகர் சந்தேகமில்லாமல் மெல்லிசை மன்னர்தான்."நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற "என்ற அட்டகாசமான இன்ட்ரோ வில் தொடங்கி-"இன்பமே உந்தன் பேர் பெண்மையோ" என்ற அதகள டூயட் பாடல், "இதழே இதழே கனி வேண்டும்" என்ற ரொமான்ஸ் டூயட், "ஒன்றும் அறியாத பொண்ணோ"-"எங்கேயோ பார்த்த நியாபகம்" என்று இன்று வரை பாடல்களை நிற்க வைத்துள்ளார் மெல்லிசை மன்னர்.

    மக்கள் திலகம், அமெரிக்கா-ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது "நீங்க நல்லாயிருக்கணும்" பாடலும் அனைத்து இடங்களிலும்-குறிப்பாக திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது. மக்கள் திலகத்தின் படத்திங்களுக்கு இசையமைத்த, மெல்லிசை மன்னர் பாடல்கள் வெறும பாடல்கள் அல்ல- மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உணர்வோடும், உள்ளத்தோடும் கலந்து விட்ட ஒன்று என்பது படம் வெளிவந்த புதிதிலும் சரி, மக்கள் திலகம் உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெறும்போதும் சரி, மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

    இந்தப்படம் 150 நாட்களுக்கு மேல் ஓடி அந்த வருடத்தின் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை புரிந்தது. அதே போல தமிழகம் எங்கும் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு, படம் வெளியான நாள்முதல் அதிக காட்சிகள் திரையிடப்பட்ட படம் என்ற சாதனையை படைத்தது. அடுத்த மூன்றாண்டுகளுக்கு இந்த சாதனை முறியடிக்கப்படவே இல்லை. இலங்கையில் 25 வாரங்கள் ஓடி பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த காவியம்...

    1978 ம் ஆண்டு தாஷ்கண்ட் ((அன்றைய ரஷ்யா-இன்றைய உஸ்பெகிஸ்தான் தலைநகர்)) உலக திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பில் திரையிடப்பட்ட ஒரே படம் என்ற பெருமையையும் "இதயக்கனி" தட்டிச்சென்றது..!!!

    அண்ணாவின் "இதயக்கனி" என்றென்றும் மக்களிடமே...!!!

    தகவல் & புகைப்படம் :https://en.m.wikipedia.org/wiki/Idhayakkani...Sr.bu...

  9. #1328
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1967 ஆம் ஆண்டு தமிழக அரசியலில்
    சரித்திரம் படைத்த வருடம். ...
    நடந்தது ஒரு சம்பவம் ஆனால் அது
    வரலாற்றை மாற்றி எழுதியது.....
    கொலை செய்தால் கதை முடிந்தது
    என்று நினைத்தான் ஒரு அயோக்கியன்
    ஆனால் கதை இப்போதுதான் ஆரம்பிக்கிறது
    என்று நினைத்தான் இறைவன். ....

    உலக அரசியல் வரலாற்றில் எத்தனையோ
    கொலை முயற்சி வழக்குகளை பார்த்திருக்கிறோம் ஆனால் உயிரை எடுக்க
    நினைத்து அது எங்கேனும் ஆட்சியில் போய்
    அமர்த்தியதை நாம் இதுவரை பார்த்ததில்லை

    கொலை முயற்சி வழக்கு சென்னை செசன்ஸ்
    நீதிமன்றத்தில் நடந்தது
    தலைவருக்கு --- பி.ஆர் கோகுலகிருஷ்ணன்
    அயோக்கியனுக்கு --- என்டி. வானமாமலை
    இந்த இரண்டு வழக்கறிஞர்கள்
    வாதாடினார்கள். ....
    வழக்கு முடிந்து தீர்ப்பு வழங்கியது-
    நீதியரசர் --- ஜி.ஆர் . லக்ஷ்மணன்,
    7 வருட கடுங்காவல் தண்டனை. ....

    கொலை செய்ய வந்தவனை சிறையிலிருந்து
    சிறப்பு சலுகை மூலம் தண்டனை காலம்
    முடியும் முன்பே விடுதலை செய்தான்
    இன்னொரு நன்றி கெட்டவன், ஏற்றிவிட்ட
    ஏணியை மறந்தவன். ....

    மீண்டும் சரித்திரம் உதயமானது
    நம் இரத்தத்தின் இரத்தமான
    கழகம் தோன்றியது. .



    காலத்தை வென்றவன் நீ...
    காவியமானவன் நீ ....
    வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
    வெற்றி திருமகன் நீ ..........

  10. #1329
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர் வெளியீடுகளில் பொங்கி வரும் மக்கள் திலகத்தின் சாதனை.
    ----------------------------------------------------------
    மக்கள் திலகத்தின் படங்கள் முதல் சுற்றின் தொடர்ச்சியாக வெளியான ஊர்களில் தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை புரிந்த விபரங்களை பார்க்கலாம்.
    முதல் வெளியீட்டில் 12 திரையரங்கில் 50 நாட்கள் ஓட்டி விட்டு ஒரு அரங்கில் மட்டும் வெள்ளிவிழா வரைக்கும் ஒட்டும் கைபிள்ளைகளே வெற்றி என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

    முதல் வெளியீட்டிலே 40 அரங்குகளுக்கு மேலே 50 நாட்கள் ஓடிய "உரிமைக்குரல்" தொடர் வெளியீட்டில் மீண்டும் 25 தியேட்டருக்கு மேல் 50 நாட்களும் அதற்கு மேலும் ஓடியதை எண்ணிப் பார்த்து நம்ம ஆள் நாலந்தரம்தான்
    என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்."உரிமைக்குரல்" மட்டுமல்ல எம்ஜிஆரின் பல படங்கள் தொடர் வெளியீட்டில் சாதித்ததை அய்யனின் படங்கள் கனவிலும்
    நினைத்து பார்க்க முடியுமா? இது போன்ற சாதனைகளை. நான் இங்கு கொடுத்தது டிரைலர்தான். முழு விபரங்களும் பதிவு செய்ய இந்த இடம் காணாது.

    ஆனாலும் ஒரு சில கைபிள்ளைகள் உரிமைக்குரல் படத்தை அய்யனை வைத்து எடுக்க ஸ்ரீதர் ஆசைப்பட்டதாகவும் காலமாற்றத்தால் எம்ஜிஆரை வைத்து எடுக்க வேண்டியதாயிற்று என்றும் கதை விட்டுள்ளனர். அய்யனை வைத்து உரிமைக்குரலை
    எடுத்தால் ஏற்கனவே "சிவந்தமண்ணை" எடுத்து அம்போவான ஸ்ரீதர் மீண்டும் அதலபாதாளத்தில் விழுந்தால் என்னவாகும். "அம்பிகையே ஈஸ்வரியே" என்று சாமியாடுபவரை பிடித்து "அம்மன் தேராட்டம் ஆடிக்கொண்டு" என்று பாடினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

    "எங்க வீட்டு பிள்ளை", "உரிமைக்குரல்", "மா.வேலன்" இதை போன்ற வேறு எந்த எம்ஜிஆர் படத்திலும் அய்யனால் நடிக்க முடியாது. எம்ஜிஆரின் உடல் மொழி நடிப்புத்திறன் அய்யனுக்கு கிடையாது. சண்டை காட்சி பாடல் காட்சி மற்றும் பல முக்கிய காட்சிகளில் இயல்பான நடிப்பு இது அனைத்திலும் அய்யன் சொதப்பி மிகை நடிப்பை கையில் எடுத்து படத்தின் கதையை முடித்து விடுவார்.பாடல் காட்சிகளில் ஓவராக வாயசைத்து நடிகையை வாய்ச்சாரலில் நனைய வைப்பது ஐயனின் மாமூல் செயல்.

    இவை அனைத்திலும் புரட்சி நடிகர் தனி முத்திரை பதிப்பதால் வெற்றிக்கனி அவரை தேடி வருகிறது. அய்யனுக்கென்று 2 அல்லது 3 பொண்டாட்டி கதை 10,15 புள்ளகுட்டி கதை, 2,3 மொள்ளமாரி ரெளடி அண்ணன் தம்பி பிரச்னை இது போன்ற படங்களில் மிகை நடிப்பை புகுத்தி படம் பார்க்க வந்தவர்களை வதைத்து அனுப்புவதில் கில்லாடி. கைபுள்ளைங்களுக்கும் இது போன்ற மொள்ளமாரி கதைகள் மிகவும் பிடிக்கும்.

    வசூல் சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யம் எங்கு வரை செல்கிறது என்பதும் எதற்காக அவருக்கு இத்தனை சம்பளம் என்றும். வருமானவரி பாக்கியே இவ்வளவு என்றால் அவருடைய வருமானத்தை அளவிட முடியுமா?. ஆனால் கணேசனோ வரி கட்டும் அளவுக்கு வருமானமே வரவில்லையாம். ஐயோ பாவம். ஸ்ரீதர் சொல்வதை கவனியுங்கள் சிவாஜி ஒரு சீப் ரேட் நடிகன் என்று ஒரு கேள்வி பதிலில் சொல்வதை பார்த்தால் உண்மை அனைவருக்கும் புலப்படும். உங்கள் அய்யன் நடிகைகளை விட கம்மியாக வருமானவரி கட்டினாராம். வருமானம் கம்மியா? இல்லை வேறு ஏதாவது காரணமா? புரட்சி நடிகரின் சம்பளத்தை தெரிந்து கொண்டால் உங்கள் அய்யன் ஒரு சிறு பையன் என்பதை ஒப்புக் கொள்வீர்கள்.

    தன்னுடைய வருமானம் அத்தனையும் ஏழைகளுக்கும், சமுதாய நல திட்டங்களுக்கும் வாரி வழங்கும் வள்ளல் பெருமானுடன் ஒப்பிடக்கூட தகுதியில்லாத கணேசனின் கைபிள்ளைகளின் செயல் வெட்கப்பட வேண்டியது. வேதனை தரக்கூடியது.
    இனிமேல் சற்று ஓரமா சென்று சிறு நடிகர்களுடன் வசூல் விளையாட்டு விளையாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்..........ksr.........

  11. #1330
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*17/11/20 அன்று*அளித்த*தகவல்கள்*
    ----------------------------------------------------------------------------------------------------------------
    கால வெள்ளத்திலே கரைந்து விடுகிற ஒரு கற்பூரம் அல்ல என்பதை இன்றைக்கும் நினைவுபடுத்தி உலக தமிழர்களின் நெஞ்சங்களில் எல்லாம் வீற்றிருக்கின்ற அந்த மன்னாதி மன்னன் அவர்களின் சகாப்தம் தொடர் நிகழ்ச்சி இன்று பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது .* வாட்ஸ் அப் குழுக்களில்**மட்டும் எம்.ஜி.ஆருக்கென்று*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாத இதழ், எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு சங்கம், எவர்க்ரீன் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள், மன்னாதி மன்னன், எங்கள் தங்கம் , எம்.ஜி.ஆர். மலேசியா 2000, புரட்சி தலைவர் கோவை ரசிகர்கள் , ஒளி விளக்கு, ஒளி விளக்கு எம்.ஜி.ஆர். குடும்பம் , வள்ளல் எம்.ஜி.ஆர். பக்தர்கள், வாழும் தெய்வம் எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். , புகழ் வேந்தர் எம்.ஜி.ஆர். புரட்சி படை, எம்.ஜி.ஆர். டிவி* குழு, ஆண்டவன் எம்.ஜி.ஆர். குடும்பம் , எம்.ஜி.ஆர். புரட்சி மன்றம் , எம்.ஜி.ஆர். பக்தர்கள் , மனிதநேய பண்பாளர் எம்.ஜி.ஆர். , டாக்டர் புரட்சி தலைவர் ரசிகர்கள் , எம்.ஜி.ஆர். ரசிகர்கள் டைரி ,உழைக்கும் குரல் தளம் , என்று பல்வேறு தலைப்புகளிலும் ,எண்ணற்ற குழுக்கள் உள்ளன. பக்தர்கள், ரசிகர்கள், அபிமானிகள், விசுவாசிகள், தொண்டர்கள் என்று ஏராளமானோர் தனிப்பட்ட முறையில் வாட்ஸ்**அப் குரூப்பில் உள்ளனர் . என்று நமக்கு கிடைத்த* தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன .*

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் இந்த கொரோனா காலத்தில் ,திரை அரங்குகள் அரசு உத்தரவின் பேரில் திறக்கப்பட்டதும், தமிழகம் எங்கும் டிஜிட்டல் வடிவிலும், சாதாரண படங்களும் முக்கிய நகரங்கள், துணை நகரங்களில் பல்வேறு அரங்குகளில் வெளியாகி உள்ளதை* புள்ளி விவரங்களுடன், பல்வேறு வெளியூர் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு சேகரித்து* நமக்கு வாட்ஸ் அப்பில் சென்னை நண்பர் திரு.லோகநாதன் அவர்கள் நமக்கு தெரிவித்துள்ளார் .* அதுமட்டுமல்ல வேறு எந்த நடிகரின் பழைய படங்களும் இந்த அளவில் தமிழகத்தில் வெளியாகவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார் .தனியார் தொலைக்காட்சிகளில் தினசரி வெளியாகும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்களின் பட்டியலும் அவ்வப்போது செய்திகளாக தெரிவிக்கப்படுகிறது . மேலும், எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி பத்திரிகைகளில் வெளியாகும் பல அரிய* செய்திகள், புகைப்படங்கள் ,அவை எந்த மொழியில் பிரசுரம் ஆகி இருந்தாலும் அவற்றை எல்லாம் திரட்டி பலர் நமக்கு தந்து கொண்டிருக்கிறார்கள் அப்படி ஒரு அரிய பொக்கிஷமாக, கற்பகவிருட்சமாக , தாமரை மலராக, காலமெல்லாம் தொடர்ந்து கொண்டிருக்கிற அவரது சகாப்தத்தில்* அவருடைய மனிதம் என்கிற கோட்பாடுதான்* இந்த நாளிலும் நம் எண்ணங்களில் எல்லாம் மன்னாதி மன்னனாக வீற்றிருக்க செய்கிறது ..**


    கே.பி. காமாட்சி என்பவர் காளி கோயில் பூசாரியாக பராசக்தி படத்தில் நடித்திருப்பார் .* அவர் எம்.ஜி.ஆர். நாடக மன்ற உறுப்பினராக இருந்து முக்கிய பங்காற்றியவர் . நாடக துறையில் இருந்த எம்.ஜி.ஆர்.* அவரது சகோதரர் எம்.ஜி..சக்கரபாணி இருவரையும் நடிகர் எம்.கே.ராதா அவர்களின் தந்தையாரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் கே.பி.காமாட்சி .* ஒரு கால கட்டத்தில் திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் விலகிவிடுவதோடு, ஓரங்கட்டப்படுகிறார் .* அவர் தன் இறுதி காலத்தில் தி.நகரிலே வசித்து வந்தார் . வயது முதிர்ந்த நிலையில், உடல்**நல குறைவால்*காலமாகி விடுகிறார் .* அப்போது நடிகர் சங்க கட்டிடம் இருந்த பகுதியில் குடிசைகள் அதிகம் இருக்கின்றன .* அந்த குடிசை பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார் .* விவரம் அறிந்ததும், எம்.ஜி.ஆர்.,எம்.ஆர். ராதா ,வி.கே. ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் வருகிறார்கள் .* கே.பி.காமாட்சி மறைந்த பிறகு அவரது உடலை சுமப்பதற்கு அவரது உறவினர்களோ, நண்பர்களோ யாரும் இல்லை .* கே.பி. காமாட்சியின் பூத உடலை எம்.ஜி.ஆர். ,என்.எஸ்.கிருஷ்ணன், வி.கே.ராமசாமி ,மற்றும் உறவினர் ஒருவர் ஆகியோர் நால்வரும் சுமந்தபடி ஊர்வலமாக சென்று , தி.நகர் கண்ணம்மா பேட்டை மயானத்திற்கு சுமார் 2 கி.மீ.தூரம் சென்று நல்லடக்கம் செய்கிறார்கள் .* ஒரு சந்தர்ப்பத்தில் வளர்ந்து வரும் நடிகராக எம்.ஜி.ஆர். இருந்தபோது கே.பி.காமாட்சி செய்த உதவிக்கு நன்றி மறவாமல் அவரது பூத உடலை தன் தோளில் சுமந்தவர் எம்.ஜி.ஆர். .மயானத்தில் நல்லடக்கம் முடிந்தவுடன் அங்கிருந்த ஒரு சில உறவினர்களிடம் கே.பி.காமாட்சி பற்றி சில விவரங்களை எம்.ஜி. ஆர் சேகரித்துள்ளார் . அதாவது அவருக்கு ஏதாவது கடன் பிரச்னை உள்ளதா, எவ்வளவு பணம் திருப்பி தரவேண்டி உள்ளது என்று கேட்டு தெரிந்து கொண்டார் .* அப்போது கே.பி.காமாட்சியின் உறவினராக கலைஞானம் அறிமுகம் ஆகிறார் . கலைஞானத்திற்கு பிற்காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார் .* அந்த கலைஞானம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் நான் கே.பி.காமாட்சிக்கு ஒன்றுவிட்ட தம்பி என்கிறார் .* இவருக்கு ஏதாவது கடன் பிரச்னை உள்ளதா என்று எம்.ஜி. ஆர். கேட்க ,கலைஞானம் சில ஆயிரங்கள் உள்ளன என்றார் . உடனே எம்.ஜி.ஆர். அவர்கள் நீங்கள் நாளை எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் அலுவலகத்திற்கு சென்று அந்த சில ஆயிரங்களை நான்* சொன்னதாக கேட்டு* வாங்கி சென்று கடனை அடைத்து விடுங்கள் என்றாராம் . இப்படி என்றோ ஒரு நாள் செய்த உதவிக்காக அவரது பூத* உடலை தன் தோளில் சுமந்து மயானம் வரை சென்று நல்லடக்கம் செய்ததோடு,செய்நன்றி மறவாததோடு**அவரது கடன் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்த மாமனிதர் எம்.ஜி.ஆர்.**


    திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி : சுய நிதி கல்லூரிகள் அதிகமாக உருவாகிய காரணத்தால்*, பல்வேறு வகையான பொறியியல் மாணவ மாணவிகள் பற்றாக்குறையால் ,கல்லூரிகள் மூடப்படும் சூழ்நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது என்பதை நாம் காண்கின்றோம் .அது வேறு விஷயம். ஆனால்*தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சி காலத்தில் இந்த கல்லூரிகள்* கொண்டு வந்ததால்தான் நம்முடைய பணம் நம் தமிழ் நாட்டிலேயே சுற்றி சுழன்று , இங்குள்ள மக்களுக்கு பயன்படும் வகையில்ஒரு* சிறந்த ஏற்பாட்டை** செய்தவர் யாரென்றால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்தான் .வெறும் மூன்றாவது வகுப்பு மட்டுமே படித்த ஒரு சாமான்ய மனிதர் , பி.இ ,எம்.இ , எம்.பி.பி.எஸ். என்று* படிப்பதற்கு**மாணவ மாணவியர்களின் கனவு படிப்புகளை உருவாக்கி, ஆந்த கனவுகளை நிறைவேற்றி காட்டிய தலைவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்று நான் சொல்லவில்லை தோழர்களே, எம்.இ, பி. எச் .டி., . பி.எல்,பி.டி.*. படித்த நமது முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் அவர்கள்* ஒரு கூட்டத்தில் இப்படி ஒரு வசன நடையாக பேசியதை இந்த நேரத்தில்* ஞாபகம் வந்த காரணத்தால்* சொல்கிறேன் .அப்படி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், ஏழை குழந்தைகள் நன்றாக படித்து முன்னேற வேண்டும். பசி கொடுமையால் அவர்கள் வாடுவதோடு படிக்காமல் இருந்துவிட கூடாது என்று கருதி அவர்களை எல்லாம்*படிக்க வைத்தவர்தான் நமது தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .* குலசேகரன் என்று ஒரு எம்.எல்.ஏ இருந்தார் .* அவர் மூலமாக ஒரு வாரியத்தை உருவாக்கி, அந்த வாரியம் செருப்பு தைக்கின்ற ஒரு தொழிலை உருவாக்கியது*, அந்த செருப்பை கூட ஏழை குழந்தைகள் , ,எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு ஊருக்கு சுற்று பயணம் சென்றபோது , கால்களில் செருப்பு இல்லாமல் வெயிலின் தாக்கத்தால் கொதிக்க கொதிக்க நடந்து பள்ளியில் இருந்து வீட்டுக்கு பகல் 3 மணியளவில் நடந்து சென்றார்களாம் . இதை கவனித்த எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த குழந்தைகளின் நிலையை எண்ணி வருந்தி , உடனடியாக தமிழகத்தில் சுமார் 45 லட்சம் ஏழை குழந்தைகள் அணியும் வகையில் ஒரு காலணி திட்டத்தை உருவாக்கியவர்தான் புரட்சி தலைவர்* எம்.ஜி.ஆர். . அந்த கால கட்டத்தில். சிறு குழந்தைகள், இளம் பிஞ்சுகள், பலவித பல்நோய்களுக்கு ஆளாகி துன்பப்படுவதை அறிந்து , ஒரு தேர்ந்த பல்மருத்துவரை வரச்செய்து, ஆலோசனை செய்தபோது, பல்நோய்களுக்கான காரண காரியங்களை ஆய்வு செய்ததில் குழந்தைகள்*செங்கல், அடுப்பு கரி, போன்றவற்றை வைத்து பல் தேய்ப்பதால் பல் ஈறுகளில் காயங்கள் பட்டு, சீழ் வடிதல், பல் சொத்தை ஆகுதல்* போன்ற பாதிப்புக்கு உள்ளாகின்றனர் . இதற்கு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டபோது, நல்ல*தகுதியான பற்பொடியை குழந்தைகளுக்கு அளித்தால் ,இந்த உபாதைகளில் இருந்து அவர்களை காப்பாற்றலாம் .அவர் குறிப்பிட்டதை மனதில் வைத்து இலவச பற்பொடி திட்டம் அறிவித்தார் .* அந்த குழந்தைகளுக்கு ஏற்ற தாழ்வுகள் இருக்க கூடாது என்கிற வகையில் வசதியுள்ள குழந்தை, வசதியில்லாத குழந்தை என்ற ஏற்றத்தாழ்வு அறவே இருக்க கூடாது*.என்று சீருடைத்திட்டம் ஒன்றை காமராஜர் காலத்தில் கொண்டு வந்ததை மீண்டும் வலுப்படுத்தி, அந்த சீருடை திட்டத்தை , வசதியான குழந்தைகள் பட்டு, டெரி* காட்டன் வகையிலும் ,வசதியற்ற குழந்தைகள் பருத்தி ஆடைகளில் அணிந்து வருகிறார்கள் என்கிற வித்தியாசம் வருவதை**தவிர்க்கும் பொருட்டு, அரசே அனைத்து குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் சீருடை திட்டம் ஒன்றை அறிமுகம்* செய்தார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைத்து பாருங்கள் ,அந்த பிஞ்சு உள்ளங்களில் , மாற்று எண்ணம், தாழ்வு மனப்பான்மை**ஆகியன அவர்களுக்கு வர கூடாது என்று அவர் நினைத்து பார்க்கிறார் என்றால், எவ்வளவு பெரிய ஒரு மகானாக, மாமேதையாக , அவர் இருக்க வேண்டும். அதற்கும் அவர் சொல்லுகின்ற காரணம் என்னவென்றால் நான் நடிக்கின்ற காலங்களில், கதாநாயகனாக நடிக்கின்றவர்களுக்கு, குழந்தை நட்சத்திரங்களுக்கு ஒரு வகையான சாப்பாடு, எங்களுக்கு அதைவிட ஒரு படி கீழான உணவு,எங்களுக்கு தனி தட்டு, அவர்களுக்கு தனி தட்டு ,எங்களுக்கென்று தனியான குவளை எல்லாம் இருந்தபோது என்னுடைய மனம் பொங்கி எழுந்தது . இந்த பாகுபாடுகளை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணம் என் ஆழ்மனதில் பதிந்து இருந்தது .அதனுடைய விளைவுதான் இந்த பிஞ்சு உள்ளங்களில் ஏற்ற தாழ்வுகள் இருக்க கூடாது என்று அவர்களுக்கு சீருடை , காலணி , பற்பொடி ஆகியவற்றை இலவசமாக தந்தார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.*

    செல்வி ஜெயலலிதா அவர்கள்* முதல்வரான பின்பு, மாணவ மாணவியருக்கு இலவசமாக சைக்கிள்கள், லேப்டாப்* தரும் திட்டத்தை* திரு.எடப்பாடி பழனிசாமி, திரு. செங்கோட்டையன், திரு.கே.பி.அன்பழகன் போன்றவர்கள் மூலமாக கல்லூரி வரையில் பல* பேருக்கு லேப்டாப்புடன் பல உபகரணங்கள் கொடுத்து*கல்லூரி படிப்பு வரை இலவச கல்வியைத் தரும் ஒரு அரசை, பலர் குற்றம் சொல்லலாம், குற்றச்சாட்டுகள் ,விமர்சனங்கள் கூறலாம் .* குற்றம் பார்க்கின்*சுற்றம் இல்லை .* எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்கின்ற*எண்ணத்தை கவிஞர் கண்ணதாசன் வெளியிட்டது*போல எல்லோருக்கும் எல்லாமும் தரவேண்டும்*என்கிற*ஏற்றமிகு திட்டத்தை கொண்டுவந்த அ. தி.மு.க. வின்*தானை தலைவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ,செல்வி ஜெயலலிதா, இந்த கால தலைவர்கள் இ.பி.எஸ்., ஓ .பி.எஸ். போன்றவர்கள் வழியில்*இன்றைக்கு அ தி.மு.க. ஆட்சி நடைபெறுகின்ற நேரத்தில் குறைபாடுகள் ஏதாவது இருந்தால்*நீங்கள் பொறுமை காத்து, அ.தி.மு.க.விற்கு உங்களது மேலான ஆதரவை தர வேண்டும் என்று இந்த நல்லநேரத்திலே கேட்டு ,இன்னும் தொடரும்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அற்புத* பணிகளை நான் இன்னும் வின் டிவி உரிமையாளர் திரு.தேவநாதன் அன்பால் அருளால், பாசத்தால் நான் மீண்டும் தொடர்வேன் என்று காஷ்மீரத்து சால்வை அணிந்து காஞ்சி பட்டு அணிந்து, கருப்பு கண்ணாடியோடு, குதிகால் செருப்பணிந்து , அரேபிய நாட்டு குதிரையில் வரும் பட்டத்து இளவரசர் போல் நகர்ந்து வந்த நமது தானை தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே,*, உங்களை ராமாவரம் தோட்டத்தில் பார்த்தால் இருகரம் கூப்பி வணங்குவீர்களே,அந்த கைகளில் தாமரை மலரை நாங்கள் பார்த்து மகிழ்ந்தோம் .* ரோஜாக்களை பார்க்க நினைத்தால் உங்களது கனிவான சிரிப்பினில் ரோஜாக்களை பார்த்து மகிழ்ந்தோம்* முத்துக்களை பார்க்க நினைத்தால் எங்கள் முத்தமிழ் காவலனே,*உங்களது 32 பற்களிலே நாங்கள் முத்துக்களை பார்த்து மகிழ்ந்தோம்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் சகாப்தம் நிகழ்ச்சியில் என்னை பேச பணித்த*அருமை சகோதரர் திரு.தேவநாதன் அவர்களுக்கும் இங்குள்ள நண்பர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் வணக்கம் தெரிவித்து விடை பெறுகிறேன். மீண்டும் தொடர்வேன். நன்றி . இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    -------------------------------------------------------------------------------
    1.இடி இடிச்சி மழை பொழிஞ்சி - நீதிக்கு பின் பாசம்*

    2.ஆடை முழுதும் நனைய நனைய - நம் நாடு*

    3.மழை முத்து முத்து பந்தலிட்டு - தேர் திருவிழா*

    4.தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி*

    5.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •