Page 114 of 210 FirstFirst ... 1464104112113114115116124164 ... LastLast
Results 1,131 to 1,140 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1131
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அண்ணனின் பாதையில்
    வெற்றியே காணலாம்...
    தர்மமே கொள்கையாய்
    நாளெல்லாம் பார்க்கலாம்....
    ++++++++++++++++++++++++
    பொன்மனச்செம்மல்
    எம்.ஜி.ஆர் வழங்கும்
    மீனவ நண்பன்
    திரைப்பட சாதனைகள் சில...
    +++++++++++++++++++
    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வரான பின் தென்னகத்தில் வெளியான இமாலய படைப்பு....
    14.08.1977 ல் வெளியாகி
    52 திரையில்.... 45 ஊர்களில்
    வெளியாகி மிகப்பெரிய வரலாற்று சாதனையை பதித்து....
    வசூல் பிரளயத்தை ஏற்படுத்திய காவியம்...
    +++++++++++++++++++++++++++++++
    சென்னையில் மட்டும்....
    தேவிபாரடைஸ்
    103 நாள் வசூல் : 8,32,943.95
    அகஸ்தியா
    88 நாள் வசூல் : 4,05,956.20
    உமா
    88 நாள் வசூல் :.3,44,963.05
    கமலா
    40 நாள் வசூல் : 1,92,856.70
    +++++++++++++++++++++++++
    319 நாள் வசூல் : 17,76,719.90
    +++++++++++++++++++++++++++
    மதுரை சிந்தாமணி
    117 நாள் வசூல் : 4,46,814.11
    சேலம் அப்ஸரா
    103 நாள் வசூல் : 3,03,642.70
    சேலம் பிரபாத் 40 நாள்
    சேலம் ஜங்ஷன் ராம் 33 நாள்
    73 நாள் வசூல் : 1,02,411.15
    மொத்த வசூல் :. 4,06,053.85
    +++++++++++++++++++++++++
    சென்னை... மதுரை...சேலம்...
    மூன்று ஊர்களில் முதல் வெளியீடு
    வசூல் மட்டும் : 26,29,587.86 ஆகும்.
    +++++++++++++++++++++++++++++
    37 அரங்கில் 50 நாட்கள்....
    18 அரங்கில் 70 நாட்கள்.....
    10 அரங்கில் 12 வாரங்கள்...
    ++++++++++++++++++++++++
    வேலூர் மாவட்டத்தில்....
    ஆம்பூர்... குடியாத்தம்... திருப்பத்தூர்
    50 நாட்கள் சாதனை....
    ++++++++++++++++++++++
    பெங்களுர்....மைசூர்... மங்களுர்
    50 நாட்கள் ஒடி சாதனை.....
    +++++++++++++++++++++++++++++
    6 மாதத்தில் மட்டும் 1 கோடியே
    40 லட்சம் வசூல்.....
    +++++++++++++++++++++++++++++
    இலங்கையில் பல இடங்களில் சாதனைகள்....
    125 நாட்களுக்கு மேல் ஒடி சாதனைகள்...
    ++++++++++++++++++++++++++++++++
    சென்னை தேவிபாரடைஸ்...
    மதுரை சிந்தாமணி....(146 காட்சிகள்)
    சேலம்.... திருச்சி 100 காட்சிகளுக்கு மேல்
    அரங்கு நிறைந்து சாதனை......bsr...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1132
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நீரும் நெருப்பும்....ஆம்
    தலைவரே !
    உண்மையும்... உழைப்பும் ஆவார்..
    ஒழுங்கும்...ஒழுக்கமும் ஆவார்....
    சத்தியமும்... சந்தோஷமும் ஆவார்....
    நீதியும்.... நேர்மையும் ஆவார்...
    அன்பும்... அடக்கமும் ஆவார்....
    கலையும்...காவியமும் ஆவார்...
    சாதனையும்... சரித்திரமும் ஆவார்...
    வெள்ளித்திரையும்...வெற்றியும் ஆவார்..
    கொடுக்கும் வள்ளலும்...
    வசூலை தரும் மன்னரும் ஆவார்...
    ++++++++++++++++++++++++++++
    நீரும் நெருப்பும்...
    +++++++++++++++
    தமிழகத்தில்...
    பெங்களுரில்...
    இலங்கையில்....
    மாற்றான் வண்ணப்படங்களான...
    30 க்கும் மேற்பட்ட படங்களை
    குறைந்த நாளில் ஒடி ...
    துவசம் செய்தார்கள்...
    மணிவண்ணன்...கரிகாலன்

    நீரும்...நெருப்புமாக வந்து வசூலில் புரட்சிகள் பலபடைத்தார்கள்...

    தங்கசுரங்கம்,எங்கமாமா,
    மூன்று தெய்வங்கள், ராஜராஜசோழன்,
    தர்மம் எங்கே, சுமதி என் சுந்தரி,
    பாதுகாப்பு,விளையாட்டு பிள்ளை
    ராஜாபார்ட் ரங்கதுரை, சிவகாமியின் செல்வன், வாணி ராணி, என்மகன்
    இன்னும் பல படங்கள்....
    கறுப்பு வெள்ளை படங்களில் பலபடங்கள் 100 நாள் வசூலை சென்னையில் முறியடித்துள்ளது.
    +++++++++++++++++++++++++++
    சென்னையில் ஒடி முடிய...
    மேலே உள்ள கணேசனின்
    படங்கள் ஒவ்வொன்றும்...
    3,4,5,6,7 லட்சத்தை தான் கடந்தது...
    மற்றும்
    சென்னையில் 100 நாள் ஒட்பட்ட
    ஞானஒளி.... குலமா குணமா...
    தவப்புதல்வன்.... படங்கள் பெற்ற வசூலை நீரும் நெருப்பும் திரைப்படம் முறியடித்துள்ளது..
    +++++++++++++++++++++++++++
    பாபு படத்தை... மதுரையில்
    நீரும் நெருப்பும் முறியடித்தது...
    சென்ட்ரல் 28 நாள் வசூல் : 1,35,219.80
    சென்ட்ரல் 65 நாள் வசூல் : 1,96,842.50
    சென்ட்ரல் 84 நாள் ஒடி 2 லட்சத்திற்கும் மேல் வசூலாகும்.....
    ஆனால்
    பாபு படம் தேவியில் வெளிவந்து
    89 நாள் ஒடி முடிய வசூல் : 1,89,491.55
    (கணேசன் ரசிகர்கள் கொடுத்த தகவல்)

    கிடைத்த வசூல் மட்டும்...
    மதுரை 65 நாள் : 1,96,842.50
    திண்டுக்கல் 50 நாள் : 97,301.43
    நெல்லை 50 நாள் : 1,27,805.50
    பாண்டி 54 நாள் : 1, 22,045.40
    வேலூர் 50 நாள் : 1, 28,505.35

    மேலும் 4 வார வசூலில் பல ஊரில்
    பாபு படத்தின் வசூலை நீரும் நெருப்பும்
    வென்று எட்டாத தூரத்தில் வசூலை பெற்றுள்ளது....

    " நீரும் நெருப்பும்"
    சென்னையில் ஒடிய நாட்கள்...
    +++++++++++++++++++++++++++
    தேவிபாரடைஸ்
    67 நாள் : 4,16,715.90
    ஸ்ரீகிருஷ்ணா
    67 நாள் : 2,65,278.45
    மேகலா
    53 நாள் : 1,87,112.65
    ஒடி முடிய வசூல் : 8,69,107.00 ஆகும்.
    திரையிட்ட
    1971 ம் ஆண்டு தீபாவளி நாளில்
    95% சதவீகித வெற்றியை பெற்று
    போட்டிக்கு வந்த டூப்பிளிக்கட்
    பாபு படத்தை துவசம் செய்து
    சம்ஹாரம் செய்தார்கள்...
    நீரும் நெருப்பும் சகோதரர்கள்...
    ++++++++++++++++++++++++++
    நீரும் நெருப்பும் காவியத்தை பற்றி பொய் விமர்சனம் செய்த கணேசன் ஜடங்களே....
    பாபு படம் பல ஊர்களில் கேவலமாக ஒட்டப்பட்ட விபரத்தை வெளியீட்டால் தாக்கமாட்டீர்கள்....

    சென்னையில் மட்டும்
    சாந்தி...கிரவுன்... புவனேஸ்வரி
    100 நாள் ஒட்டி விட்டால் அது என்ன வெற்றிபடமா.....
    வெளிதியேட்டரில் வெளியீடுவதால் தான் கணேசனின் பல ஓட்டை படங்கள் பற்றி தெரிகிறது....

    1965 முதல் ( சிவந்த மண் தவிர) எந்த படமாவது சரிவர 3 தியேட்டரில் 100 நாள் காண்பிக்க யோக்கிதை உண்டா....

    1973 முதல் 1977 வரை வெளியரங்கில் வெளியான கணேசனின் ஒரு படம் கூட ஒரு தியேட்டரிலும் 100 நாள் கிடையாது...

    இந்த லட்சனத்தில்...
    ஒரு நாய் ...பதிவு வெளியீடுகிறது...
    நீரும் நெருப்பை அணைத்த
    பாபு சாதனை என்று.....

    அடா நாயே...
    நாங்களே....
    நீரும்.... நெருப்பும் ஆவோம்...
    உன் ஒட்ட டூப்பிளிகட் பாபு எப்படிடா...
    அணைக்கமுடியும்...

    பாபு படத்தின் ஒட்டத்தை... வசூலை வெளியீடு பார்ப்போம்!

    நீரும் நெருப்பின் வெற்றியில் கருகிபோன பாபு படத்திற்கு
    மரண அடியாகும்....
    +++++++++++++++++++++++++
    அடுத்து....
    சென்னையில் 100 நாட்களை நெருங்காமலேயே
    நினைத்ததை முடிப்பவன்
    துவசம் செய்த கணேசன் 100 நாள் டப்பா வசூல் படங்கள் விபரம் விரைவில்........ur...

  4. #1133
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1974 ல் தென்னகபடவுலகில்
    தனிப்பெரும் கதாநாயகன் திரைக்கு தந்த மூன்று சாதனை முத்துக்களால்
    தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்தது....
    மக்கள் திலகத்தின்
    உரிமைக்குரல்
    இமாலய படைப்பாகும்...
    நேற்று இன்று நாளை மாபெரும்படைப்பாகும்...
    சிரித்து வாழ வேண்டும்
    வெற்றிபடைப்பாகும்....
    ++++++++++++++++++++++
    சாதனை எண் 1
    +++++++++++++++
    சென்னையில் மூன்று காவியங்கள் மட்டுமே வெளியாகி
    12 அரங்கில் 50 நாட்களை கடந்து...
    8 திரையில் 10 வாரங்களை கடந்து வெவ்வொரு 4 அரங்கில் 100 நாட்களை வெற்றிக் கொண்டவர் மக்கள் திலகமே!
    ++++++++++++++++++++++++++++++++
    சாகவரம் பெற்ற காவியங்களை தந்த
    அன்னை சத்யா புதல்வரின் தனி முழக்கமாகும்....

    சாதாரண அரங்கில் வெளீவந்து...
    32 லட்சத்தை பெற்ற காவியங்களாகும்...

    நேற்று இன்று நாளை
    +++++++++++++++++++
    பிளாசா 105 நாள்
    மகாராணி 105 நாள்
    மற்றும்
    கிருஷ்ண வேணி 72 நாள்
    சயானி 64 நாள்

    உரிமைக்குரல்
    +++++++++++++++
    ஒடியன் 106 நாள்
    மகாராணி 106 நாள்
    உமா 106 நாள்
    மற்றும்
    நூர்ஜகான் 50 நாள்

    சிரித்து வாழ வேண்டும்
    +++++++++++++++++++++
    கிருஷ்ணா 83 நாள்
    பிளாசா 83 நாள்
    மகாலட்சுமி 62 நாள்
    கிருஷ்ண வேணி 62 நாள்

    இதுப்போல் சென்னையில் எந்த நடிகரின் படமும் 12 தியேட்டரில் ஒடியதில்லை...

    சாதனை - 2
    +++++++++++++
    மதுரை நகரில் வெளியான மூன்று முத்துகளும் தொடர் சாதனையில்
    100 நாட்களாகும்.... அதுவும் தனிப்பெரும் நாயகன் மட்டுமே கதாநாயகனாகை வந்து ஏற்படுத்திய வரலாறு ஆகும்...

    உரிமைக்குரல்
    +++++++++++++++
    சினிப்பிரியா : 200 நாள்
    மினிப்பிரியா : 29 நாள்
    வசூல் :7,06,796.38
    215 காட்சிகள் தொடர் அரங்கு நிறைந்து சாதனையாகும்...

    நேற்று இன்று நாளை
    ++++++++++++++++++
    சிந்தாமணி : 119 நாள்
    வசூல் : 4,05,964.78
    152 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்....

    சிரித்து வாழ வேண்டும்
    ++++++++++++++++++++
    நீயூ சினிமா : 104 நாள்
    வசூல் : 3, 59,634.60
    126 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்....
    மூன்று காவியங்கள் மட்டுமே
    மதுரையில் ஒடி முடிய வசூல்
    14 லட்சத்தை கடந்தது....

    சாதனை - 3
    +++++++++++++
    நெல்லை மாநகரில் மூன்று காவியங்கள் படைத்த மகத்தான வெற்றிகள்...
    உரிமைக்குரல்
    ++++++++++++++
    நகரில் முறைப்படி வெள்ளி விழா ஒடிய முதல் காவியம்.
    லட்சுமி : 180 நாள்
    வசூல் : 3,47,125.00

    நேற்று இன்று நாளை
    +++++++++++++++++++
    பார்வதி : 119.நாள்
    வசூல் :.2,38,097.15

    சிரித்து வாழ வேண்டும்
    +++++++++++++++++++++
    பார்வதி : 62 நாள்
    வசூல் : 1,41,732.55
    +++++++++++++++++++++
    நகரில் மூன்று படங்கள்
    361 நாட்கள் ஒடி....7,26,954.70
    வசூலாக கொடுத்தது...
    எந்த நடிகனாலும் ஏறெடுத்து பார்க்க முடியாத வசூலாக திகழ்ந்தது.
    +++++++++++++++++++++++++++++
    மூன்று ஊரில் மட்டும் மூன்று காவியங்கள் படைத்த வரலாற்றை வெல்ல முடியாத போது.....
    100 க்கும் மேற்பட்ட ஊர்களில்
    ஒரு சத வீகிதம் கூட நெருங்க முடியாது...

    கலைக்கோயிலின் மூலஸ்தானத்திலிருந்து (அருள் பாலிக்கும்) வசூலை தருபவர்
    மூன்றெழுத்து வசூல் பேரரசர் ஆவார்.......ur...

  5. #1134
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அகிலத்தை ஆட்டிபடைத்த....
    அகிலம் போற்றிய ஆயிரத்தில் ஒருவன்!
    1947 முதல் ....தமிழ்படவுலகில்....
    தனிமுத்திரை பதித்த கதாநாயகன்
    1952 க்கு பின் வந்த சாதரண நடிகர்களுக்கு.... ஆண்டு தோறும் தன் புகழ்மிகு காவியங்கள் படைத்த
    சாதனைகள் மூலம்....
    அந்நடிகர்களுக்கு...
    தோல்வியை பரிசாக கொடுத்த
    மக்கள் திலகத்தின் வெற்றியில் மேலும் மகுடம் பதித்த மணிமாறன் கதாபாத்திரமாகும்....
    ********************************-***
    1965 ல் தொடக்கத்தில் ஒரு சமூக வண்ணக்காவியத்தை
    தந்த இயற்கைப்பேரரசின்...
    எங்க வீட்டுப்பிள்ளை
    +++++++++++++++++++
    சென்னையில்... 5 அரங்கில் சாதனை
    காஸினோ 211 நாள்
    பிராட்வே 176 நாள்
    மேகலா 176 நாள்
    ஸ்ரீசீனிவாசா 50 நாள்
    பெரம்பூர் வீனஸ் 71 நாள்
    ++++++++++++++++++++++++++++++++
    1965 ல் இரண்டாவதாக....
    வெளியான சரித்திர வண்ணக்காவியம்...
    ஆயிரத்தில் ஒருவன்
    ++++++++++++++++++
    முதல் வெளியீட்டில்
    மிட்லண்ட் 106 நாட்கள்...
    கிருஷ்ணா 106 நாட்கள்....
    மேகலா 106 நாட்கள்..
    மறுவெளியீட்டில் வெள்ளிவிழா....
    2014 ல் ஆல்பட் 190 நாட்கள்
    2014 ல் சத்யம் 161 நாட்கள்....
    5 அரங்கில் 100 நாள் சாதனை!
    ++++++++++++++++++++++++++
    1965 ல் .கலைநாயகனின்
    இரண்டு காவியங்கள்....
    4 அரங்கில் வெள்ளிவிழாவை
    எந்த நடிகரும் இறுதி வரை
    கொடுத்ததில்லை...வென்றதில்லை....
    +++++++++++++++++++++++++++
    எங்க வீட்டுப்பிள்ளை காஸினோ 211
    ஆயிரத்தில் ஒருவன் ஆல்பட் 190
    எங்க வீட்டுப்பிள்ளை பிராட்வே 176
    எங்க வீட்டுப்பிள்ளை மேகலா 176
    ஆயிரத்தில் ஒருவன் சத்யம் 161
    ஆயிரத்தில் ஒருவன் மிட்லண்ட் 106
    ஆயிரத்தில் ஒருவன் கிருஷ்ணா 106
    ஆயிரத்தில் ஒருவன் மேகலா 106
    எங்க வீட்டுப்பிள்ளை ஜனதா 107
    ++++++++++++++++++++++++++++++
    எங்க வீட்டுப்பிள்ளை வீனஸ் 71
    எங்க வீட்டுப்பிள்ளை சீனிவாசா 50
    +++++++++++++++++++++++++++++++
    ஒரே ஆண்டில்....
    எந்த நடிகனாலும் கனவிலும் ஏறெடுத்து பார்க்க முடியாத இரண்டு காவியங்கள் மட்டுமே..... சென்னைக்கு உட்பட்ட பகுதியில் மேலே ஏற்படுத்திய
    9 திரையரங்கில் 100 நாட்களும்....அதில்
    5 அரங்கில் 160 நாட்களும்...
    அதில் 4 அரங்கு 175 நாட்களும்....அதில்
    2 அரங்கு 190 நாட்களும்...அதில் ஒரு அரங்கில் 211 நாட்களும் ஒடிய அகில உலக சாதனையில்.....
    மக்கள் திலகமே
    தன் இரண்டு....சமூக....சரித்திர.. காவியங்களான
    எங்க வீட்டுப்பிள்ளை
    ஆயிரத்தில் மூலம் பெற்றுள்ளார்...
    மற்றும்...சாதனைகளில் ....
    2 அரங்கு 50 நாள் சாதனைகளையும்....
    எந்த ஆண்டிலும் தலைநகர் சென்னையில் எந்த நடிகரும் பெற்றதில்லை வென்றதில்லை....
    ++++++++++++++++++++++++++++
    மேலும் தமிழகத்தில்
    எங்கவீட்டுப்பிள்ளை 17 அரங்கில் 100 நாட்களும்....7 ஊர்களில் 9 திரையில் தொடர் வெள்ளிவிழாவும் கண்டு சாதனையாகும்!
    அதே போல் தமிழகத்தில்
    ஆயிரத்தில் ஒருவன்
    சென்னையில் 5 அரங்கு 100.நாளும்
    அதில் ஒரு அரங்கில் வெள்ளிவிழாவும் மற்றும் சேலம்,கோவை 100.நாளும் கடந்து சாதனையாகும்...
    மெத்தத்தில்....
    தமிழகத்தில் 24 அரங்கில்
    100 நாட்களையும்...
    10 அரங்கில் தொடர் வெள்ளிவிழாவையும் கண்டு
    புகழ்மிகு சாதனை ஆண்டாக
    1965 ம் ஆண்டு திகழ்கின்றது!...
    ++++++++++++++++++++++++++
    ஒரே ஆண்டில் இரண்டு படங்கள்
    மதுரை...சென்னை என கொக்கரித்த கூட்டத்திற்கு.....
    4 திரையில் வெள்ளி விழாவை புகழுடன் தந்த எங்க வீட்டுப்பிள்ளை நாயகனே
    திரையில் நிலைத்து நிற்கும்
    ஆயிரத்தில் ஒருவராவார்...
    ++++++++++++++++++++++++++
    காஸினோ 211 நாட்கள்
    ஆல்பட் 190 நாட்கள்
    பிராட்வே 176 நாட்கள்
    மேகலா 176 நாட்கள்
    சத்யம் 161 நாட்கள்....
    ++++++++++++++++++++++++++
    1961 ல் சென்னையில்
    பாசமலர் (1) பாவமன்னிப்பு (1)
    இரண்டு தியேட்டர் தான்
    +++++++++++++++++++++++++++
    சாதனைகள் தொடரும்.........ur...

  6. #1135
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1966 ல் நடிகப்பேரரசு பவனி வந்த திரைமுத்துக்கள் 9 ஆகும்.
    +++++++++++++++++++++++(
    சாதனை...1
    ++++++++++++

    சென்னை நகரில்....
    14.01.1966
    கலைப்பேரோளியின்
    அன்பே வா
    காஸினோ
    கிருஷ்ணா
    மேகலா வெளி வந்தது...
    அடுத்து
    04.02.1966
    எழில்வேந்தனின்
    நான் ஆணையிட்டால்
    மிட்லண்ட்
    பிராட்வே
    உமா
    ஸ்ரீசீனிவாசா வெளிவந்தது..
    18.02.1966
    திரைப்பேரொளியின்
    முகராசி
    கெயீட்டி
    பிரபாத்
    சரஸ்வதி வெளிவந்தது....

    சென்னையின் மையபகுதியான
    காஸினோவில் அன்பேவா காவியமும்
    அருகில் முகராசி காவியமும் ஒடியது..
    இப்படி அருகாமையிலேயே இரண்டு
    காவியங்கள் ஒடி சாதனையை நிகழ்த்திய வரலாற்றை முதன் முதலில் சென்னை அண்ணாசாலையில் படைத்தவர் மக்கள் திலகமே...

    மக்கள் திலகத்தின்
    அன்பே வா
    காஸினோவில்
    154 நாட்கள் ஒடியது....

    மக்கள் திலகத்தின்
    முகராசி
    கெயீட்டியில்
    100 நாட்கள் ஒடியது....

    இடையில் வெளியான
    நான் ஆணையிட்டால்
    காவியம்
    மிட்லண்ட் 56 நாள் ஒடியது...

    சாதனை ... 2
    ++++++++++++++

    சென்னை அண்ணா சாலையில்
    1966 ல் மட்டும்....
    காஸினோ...
    அன்பே வா 154 நாள்
    மிட்லண்ட் ..
    நான் ஆணையிட்டால் 50 நாள்
    கெயீட்டி....
    முகராசி 100 நாள்
    பிளாசா....
    நாடோடி 57 நாள்
    கெயீட்டி.....
    சந்திரோதயம் 89 நாள்
    வெலிங்டன்....
    தனிப்பிறவி 54 நாள்
    பாரகன்....
    பறக்கும் பாவை 63 நாள்
    ஸ்டார்....
    பெற்றால் தான் பிள்ளையா 100 நாள்
    7 தியேட்டரில் சாதனைகள்.....

    தாலிபாக்கியம் மட்டும் தான்...
    பிளாசாவில் 34 நாட்கள் ஒடியது.

    சாதனை ... .3
    +++++++++++++

    சென்னையில் அனைத்து பகுதியிலிலும் பல அரங்கில் சாதனை செய்தது போல் வேறு எந்த நடிகரின் படங்களும்
    50 நாட்களை ஒரே வருடத்தில்
    ஒடியது கிடையாது....
    ( 27 அரங்கு 50 நாள் முழக்கம்)
    (13 அரங்கு 70 நாள்)
    (10 அரங்கில் 80 நாள்)
    (6 அரங்கில் 100 நாள்)
    (2 அரங்கில் 147 நாள்)
    ( ஒரு அரங்கில் 154 நாள்)

    மேலும் தனிப்பெரும் கதாநாயகனின் சரித்திர வெற்றிகள் தொடரும்....

    சாதனை .... 4
    +++++++++++++
    4 அரங்கில் திரையீட்டு 3 காவியங்கள் பெரும் வெற்றியாகும்...

    பெற்றால் தான் பிள்ளையா
    *****************************
    ஸ்டார் 100 நாள்
    மகாராணி 100 நாள்
    நூர்ஜகான் 84 நாள்
    உமா 80 நாள்

    சந்திரோதயம்
    ****************
    மேகலா 92 நாள்
    கெயீட்டி 89 நாள்
    பாரத் 70 நாள்
    ஸ்ரீசீனிவாசா 70 நாள்

    நான் ஆணையிட்டால்.
    *************************
    மிட்லண்ட் 56 நாள்
    பிராட்வே 50 நாள்
    சீனிவாசா 50 நாள்
    உமா 50 நாள்...

    சாதனை... 5
    ++++++++++++
    நகரில் சாதனை ஏற்படுத்திய காவியம்!

    1.காஸினோ
    அன்பே வா 154 நாள்
    2.கிருஷ்ணா
    அன்பே வா 147 நாள்
    பறக்கும் பாவை 63 நாள்
    3.மேகலா
    அன்பே வா 119 நாள்
    சந்திரோதயம் 92 நாள
    பறக்கும் பாவை 63 நாள்
    4.ஸ்டார்
    பெ. தான் பிள்ளையா 100 நாள்
    5. மகாராணி
    பெ.தான் பிள்ளையா 100 நாள்
    6. கெயீட்டி
    முகராசி 100 நாள்
    சந்திரோதயம் 89 நாள்
    7. நூர்ஜகான்
    பெ.தான். பிள்ளையா 84 நாள்
    9.உமா
    பெ.தான் பிள்ளையா 80 நாள்
    நாடோடி 57 நாள்
    நான் ஆணையிட்டால் 50 நாள்
    10) பாரத்
    சந்திரோதயம் 70 நாள்
    11) ஸ்ரீசினிவாசா
    சந்திரோதயம் 70 நாள்
    நான் ஆணையிட்டால் 50 நாள்
    12)பிராட்வே
    நான் ஆணையிட்டால் 50 நாள்
    நாடோடி 57 நாள்
    தனிப்பிறவி 54 நாள்
    13) பிரபாத்
    முகராசி 70 நாள்
    14) சரஸ்வதி
    முகராசி 56 நாள்
    15) வெலிங்டன்
    தனிப்பிறவி 54 நாள்
    16).சயானி
    தனிப்பிறவி 54 நாள்
    17) பிளாசா
    நாடோடி 57 நாள்
    18) பாரகன்
    பறக்கும் பாவை 63 நாள்
    19) மிட்லண்ட்
    நான் ஆணையிட்டால் 56 நாள்

    நகரில் 19 திரையரங்கில் 8 காவியங்கள் சாதனையாகும்........ur...

  7. #1136
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1965 ல்
    மக்கள் திலகத்தின்
    எங்கவீட்டுப்பிள்ளை ஏற்படுத்திய வெற்றிகள் பல மடங்கு ஆகும்.
    +++++++++++++++++++++++++++
    வெள்ளிவிழா சரித்திரத்தில் முதலிடம் பெற்ற காவியம் எங்கவீட்டுப்பிள்ளை!
    ****************************************
    1) திருச்சி ஜூபிடர் 236 நாள்
    திருச்சி பத்மாமணி 12 நாள்

    2) சென்னை காஸினோ 211 நாள்

    3) சேலம் 207 நாள்...
    சாந்தி 113 நாள்
    சித்தேஸ்வரா 56 நாள்
    பிரபாத் 44 நாள்

    4) கோவை ராயல் 190 நாள்
    கோவை சண்முகா 35 நாள்

    5) சென்னை பிராட்வே 176 நாள்

    6) சென்னை மேகலா 176 நாள்

    7) மதுரை சென்ட்ரல் 176 நாள்

    8) தஞ்சாவூர் யாகப்பா 176 நாள்

    9) நெல்லை லட்சுமி 149 நாள்
    நெல்லை அசோக் 28 நாள்
    ++++++++++++++++++++++++

    7 திரையில் தனி அரங்கில்
    175 நாட்களை கடந்ததும்...
    2 அரங்கில் தொடர் அரங்கில்
    வெளியீட்டு
    வெள்ளிவிழா நாட்களையும் கொண்டாடியது... எங்க வீட்டுப்பிள்ளை.
    ++++++++++++++++++++++++++++++++++
    மேலும்.... 100 நாட்களை வெற்றிக்கொண்ட ஊர்கள்...
    *******************************
    10) பல்லாவரம் ஜனதா
    11) கடலூர் நீயூ சினிமா
    12) வேலூர் தாஜ்
    13) பாண்டி அஜந்தா
    14) ஈரோடு ராஜராம்
    15) திண்டுக்கல் nvgb
    16) தர்மபுரி கணேசா
    17) விருது நகர் ராதா
    +++++++++++++++++++++
    கும்பகோணம் டைமண்ட் 98 நாள்
    கரூர் இரண்டு முறை (50+ 56) 106 நாள்.
    +++++++++++++++++++++++++++++++
    42 அரங்கில் 75 நாட்களும்...
    மொத்தம் 106 அரங்கில் 50 நாட்களும் ஒடியது....
    முதல் வெளியீட்டில் இந்திய முழுவதும் ஒரு வருடத்தில் வசூலித்த தொகை
    இரண்டு கோடியே 15 லட்சமாகும்.
    ++++++++++++++++++++++++++
    தென்னிந்திய படங்களில் 2 கோடியை வசூலாக தந்து 1965 ல் இந்தியாவில் அதிக வசூல் பெற்றக் காவியம்..
    வசூல் மாமன்னரின்
    எங்க வீட்டுப்பிள்ளை ஆகும்.
    +++++++++++++++++++++++++++
    55 ஆண்டுகளில் பல வெளியீடுகளில் பல கோடிகளை வசூலாக பெற்ற காவியம் எங்க வீட்டுப்பிள்ளை ஆகும்......ur...

  8. #1137
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "பராசக்தி". 1952 அக் 17 ல் வெளியான பராசக்தியை பெரிய வெற்றிப் படம் என்று கைபுள்ளைங்க கதறுகிறார்களே அதைப் பற்றி சற்று ஆராயலாம். படத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் தங்கைப்பாசம் என்று சொல்லி தாய்நாடு வந்தவன் வேசியிடம் பணத்தையும் உடமையையும் பறிகொடுத்து பைத்தியம் மாதிரி நடித்து நீள நீள வசனங்களை பேசி வாழும், கையாலாகாத ஒரு அண்ணனின் மோசம் போன கதை. முதலில் "பராசக்தி" வெற்றிப் படமானால் அதில் சிவாஜி ஆற்றிய பங்கு என்ன? "காதலிக்க நேரமில்லை"யின் வெற்றியில் ரவிச்சந்திரனின் பங்கு என்னவோ அதைக்காட்டிலும் குறைவுதான் என்றாலும் "காதலிக்க நேரமில்லை"யின் வெற்றியில் கால் தூசி கூட பெறாத படத்தை வைத்துக் கொண்டு இந்த அலம்பல் தேவைதானா?

    ரவிச்சந்திரன் ரசிகர்கள் இத்தனை மாபெரும் வெற்றிப் படத்தை வைத்துக் கொண்டு இப்படி குதிக்கலையே! 'குறைகுடம் குடம் கூத்தாடும்' என்பதை போலல்லவா இருக்கிறது. "பராசக்தி" சென்னையில் அத்தனை தியேட்டர்களிலும் ஒரே நாளில் வெளியாகவில்லை. சென்னையில்
    அக் 17 தீபாவளி அன்று வெளியானது இரண்டு அரங்கில் மட்டுமே.

    மூன்றாவது அரங்கான 'பாரத்தி'ல் அக் 25 அன்றுதான் வெளியானது. சென்னையில் மூன்று தியேட்டர்களிலும் 100 நாட்கள் ஓடியதாக கைபிள்ளைகள்
    கதறுவதை பார்த்தால் நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. வெளியான அத்தனை அரங்குகளிலும் 100 நாட்கள் ஓடியது போல நயவஞ்சக நாடகமாடும் கைபிள்ளைகள் "பராசக்தி"யின் கதை யாருக்கும் தெரியாது என்று நினைத்து புருடா, கப்ஸா விட ஆரம்பித்து விட்டார்கன்.

    'பராசக்தி'யின் 100 வது நாள் கம்பெனி விளம்பரம் எங்கே.? சென்னையில் பாரகனில் மட்டுமே 106 நாட்கள் ஓடியது. 17.10.52 ல் திரையிட்டு 30.1.1953 வரை 106 நாட்கள். பாரத்தில்வெளியானது 25.10.1952. அன்று. மொத்தம் 98 நாட்கள் 30.1.1953 வரை ஓடியது. இரண்டிலுமே 31.1.1953 அன்று கணேசன் நடித்த அஞ்சலி பிக்சர்ஸ் "பூங்கோதை" திரையிடப்பட்டது நினைவில் இல்லையா! இல்லை எங்களுக்கு கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்தீர்களா?.

    அசோக்கில் ஓடியது 17.10.52 முதல் 5.12.52 வரை
    50 நாட்கள்தான். 6.12.52 முதல் seesha என்ற இந்திப்படம் வெளியானது. சென்னையில் ஒரு தியேட்டரில் ஓடிய ஒரு தொங்கல் படத்தை வைத்துக் கொண்டு ஒரு பெரிய பில்ட்அப் அவசியமா? கைபிள்ளைகளே! உங்களின் எல்லா படங்களுமே வசூலும் பிராடு ஓடிய நாட்களும் பிராடு. மேலும் பெங்களூர், கொழும்பு
    போன்ற ஊர்களில் ஓடியதாக காதில் பூ சுற்றுவதை நினைத்தால் கவுண்டமணி மைக்கேல் ஜாக்ஸன் கூப்டாக! ஜப்பான்ல கூப்டாக! என்ற காமெடி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. தேவையா? இது தேவையா! அட போங்கையா!

    மூன்றில் இரண்டு அரங்கில் ஓடாததற்கு ஆதாரம் கிடைத்திருக்கிறது. பாரகனில் ஓடியதற்கான ஆதாரங்களை தேடிக் கொண்டிருக்கிறோம். "பராசக்தி" வெளியான நேரத்தில் கடவுள் எதிர்ப்பு கொள்கை வலுப்பெறாமல் ஆன்மீகத்தில் மக்கள் ஆனந்த நீராடிக் கொண்டிருந்த நேரம். "பராசக்தி"யை பார்க்க வேண்டாம் என அந்தக் கால பெரியவர்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு
    தடை போட்ட நேரம்.

    திரையிட்ட பல ஊர்களில் படம் பார்க்க ஆளே இல்லாத காரணத்தால் படத்தை பல ஊர்களில் 10, 15 நாட்களிலேயே தூக்கி விட்டார்கள். இதைக்கண்ட
    தயாரிப்பு தரப்பு படத்திற்கு தடை வரப்போவதாக வதந்தியை கிளப்பி
    அதனால் கொஞ்ச பேர் படம் பார்க்க
    வருவார்கள் என்று நம்பி வதந்தியை பரப்பினார்கள். காசுக்காகவும் வாய்ப்புக்காகவும் கணேசன் பேசிய "அது பேசாது கல்" என்று "பராசக்தியை" இழிவுபடுத்தி பேசிய வசனம் அப்போதுதான் சென்ஸார் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது.

    ஆன்மீகவாதிகள் எழுப்பிய எதிர்ப்புக் குரல் வலுத்ததால் படத்துக்கு தடை வரும் என்ற பேச்சு அடிபட்டது. அதை பயன் படுத்தி ஒருசில வாரங்கள் அதிகம் ஓட்டப்பட்டதேயன்றி படம் மிகப் பெரிய வெற்றி என்பது கற்பனைக்கெட்டாத கனவன்றி வேறெதுவுமில்லை. "பராசக்தி" ஒரு பெரிய வெற்றிப் படமல்ல என்பதற்கு கைபுள்ளைங்க தந்த "பராசக்தி" பட்டறை வசூலே சாட்சி. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான தங்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி 112 நாட்களில் மிகக் குறைந்த வசூலாக ரூ 163423.99. பதிவாகியிருப்பதை பார்த்தால் படம் சுமாரான படம் என்றே தெரிகிறது.

    தங்கத்தை விட சிறிய அரங்கமான சிந்தாமணியில் அவர்கள் படமான
    "பாகப்பிரிவினை" 98 நாட்களில் பெற்ற வசூல் ரூ 229000 வந்ததில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இதை வைத்து மற்ற ஊர்களின் லட்சணங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். மாபெரும் வெற்றி படமான "மதுரை வீரனை"யோ "நாடோடி மன்னனை"யோ நாங்கள் போட்டிக்கு வைக்கவில்லை. அதற்கான தகுதியும் "பராசக்தி"க்கு இல்லை என்பதை நாடறியும்.

    திருச்சியில் 100 நாட்களில் தூக்கி விட்டு 6 மாதம் கழித்து மீண்டும் திரையிட்டு தொடர்ந்து ஓடிய மாதிரி பீலா விடும் கைபிள்ளைகளே! பகல் கனவில் இருந்து விழித்து நனவுலகுக்கு வாருங்கள். அது மட்டுமல்ல 1952 ல் அதிகமாக 8 திரையரங்கில் 100 நாட்களும் அதிக பட்சமாக 351 நாட்களும் ஓடி அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் புரட்சி நடிகரின் "என் தங்கை" தான் என்பதை ஏற்றுக் கொண்டு மன அமைதி பெறுங்கள்.
    "என் தங்கை" நீளநீள வசனங்கள் பேசாமல் விழிகளிலே சோகத்தை திரையிட்டு தங்கைக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த ஒரு பாசமிகு அண்ணனின் கதை.

    தகவல் உதவி: திரு சைலேஷ் பாசு.........ksr.........

  9. #1138
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    டாக்டர் எம்.ஜி.ஆர். ஸ்டேடியம்
    முத்துராமன் மனதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த மதிப்பு, மரியாதை மட்டுமல்ல; அதனை முறையாக வெளிப்படுத்த ஒரு பெரிய ஆசை திட்டம் இருந்தது, என்ன அது?
    முத்துராமன் விளையாட்டுப் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் . அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு இது நன்றாகத் தெரியும், சிறந்த கால்பந்தாட்ட விளையாட்டு வீரராக விளங்கிய அவரை, எங்கேயாவது விளையாட்டுப் போட்டியென்றால் அங்கே காணலாம். உடற்பயிற்சி தினசரி செய்து, உடலைக் கட்டாக வைத்திருந்தார். ஓய்வு கிடைத்தால் மாலை வேளைகளில் நீச்சல் குளங்களில் காணலாம்!
    அப்படிப்பட்டவர் ஒருநாள் தனிமையில் நெஞ்சம் திறந்து தன் விருப்பத்தைத் தெரிவித்தார்:
    "விளையாட்டுப் போட்டிகளிலும் , உடற்பயிற்சியிலும் அண்ணன் எம்.ஜி.ஆர் . காட்டும் ஆர்வம் பெரிது. எத்தனையோ விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் உதவியுள்ளார். தமிழகத்தை, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உலகில் முன்னணியில் நிற்க வேண்டும் என்பதில் அவருடைய ஆர்வம் சாதாரணமானதல்ல! அப்படிப் பெருமை தேடித் தந்தவர்களுக்கு பரிசுகளை அள்ளித் தந்திருக்கின்றார். இத்தகைய இதயம் கொண்டவருக்கு காலத்தால் என்றும் அழியாத நன்றிச் சின்னமாக தமிழக மக்கள் சார்பில் ஒன்று செய்ய வேண்டும்.
    தமிழ்நாட்டில் "எம்.ஜி.ஆர் . ஸ்டேடியம்" என்று ஒன்று அமைக்க வேண்டும். திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் எங்கு வேண்டுமானாலும் இதனை உருவாக்கலாம் . நாம் அண்ணனைச் சென்று பார்த்து. அவருடைய அனுமதியைப் பெறவேண்டும். அவர் சம்மதிக்கமாட்டார் . நாம்தான் சம்மதிக்க வைக்க வேண்டும், எப்படியாவது ! அதன்பின்பு நாம் இந்த முயற்சியில் ஆர்வம் உள்ளவர்கள் துணையோடு இதனைச் செய்து முடிக்கவேண்டும் பிரம்மாண்டமாக ! " என்றார் சகோதரர் முத்துராமன்.
    தூய்மையான அன்புள்ள சிறந்த கலைஞனின் அடிப்படையுள்ள மாசற்ற ஆசை இது! அந்த உயில் இத்தனை நாளாக என் உள்ளத்திலேயே இருந்தது. பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் "புரட்சித் தலைவரை நெஞ்சார நேசிக்கும் தமிழ்மக்களின் பார்வையில் வைத்துவிட்டேன்."
    "டாக்டர் எம்.ஜி.ஆர். ஸ்டேடியம்" இது முத்தான ஒரு நடிகரும், மக்கள் திலகம் மீது பித்து கொண்ட நானும் கண்ட கனவாக இல்லாமல் , தமிழகம் ஏற்று செய்யப்போகும் அரிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அமைய வேண்டும்! அவரிடம் பக்தி கொண்டவர்கள் இந்த நேர்த்தியான விருப்பத்தை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது! காலம் கனிந்து, புரட்சித்தலைவரின் பெயரால் ஸ்டேடியம் உருவாகட்டும்!
    சேலத்தில் புதிய கிரிக்கெட் மைதானம் - இதற்கு புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் பாரத் ரத்னா டாக்டர் . எம்.ஜி.ஆர் கிரிக்கெட் மைதானம் என்று பெயர் வைக்க வேண்டும்.
    இதோ நாம் முதன் முதலில் சொல்லிவிட்டோம்......sb...

  10. #1139
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    # கனடா கிளை மன்னாரன் கம்பெனி டுபாக்கூர் தங்கவேலின்
    புதிய ஹைட்ரஜன் குண்டு #

    நம்ம கனடா தங்கவேலு
    சிவாசியோட இந்திய, ஜப்பானிய, இலங்கை, பாகிஸ்தான், ஜெர்மனி, செக் குடியரசு இன்னும் பல நாடுகளில் கரை காணாமல் ஓடி அங்கெல்லாம் நிகழ்த்திய வசூல் சாதனைகளை பதிவிட்டு பதிவிட்டு சலித்து விட்டது போல

    அதனால் அடுத்த தயாரிப்பாக சிவாஜி கை சிவக்க ஈந்ததாக ஒரு புதிய பட்டியலை வெளியிட்டு அந்த காலத்திலேயே இத்தனை லட்சங்களை கணேசன் அள்ளிக்? கொடுத்து ஆனால் யாருக்கும் தெரியாமல் கொடுத்து அதனால் ஈக்
    கஞ்சன் என்று பெயரெடுத்து விட்டாரே என்று கண்ணீர் சிந்தி பதிவு போட்டிருக்கிறார்,

    அதுவும் இது ஒரு மீள் பதிவு,

    சரி போகட்டும், இப்படி கல்வி வளர்ச்சிக்கென்று மட்டும் கொடுத்த லட்சங்களை கணக்கெடுத்தால் 6000 கோடி வருகிறதாம் ( நான் முன்பே சொல்லியிருக்கிறேன் இதய நோய்
    உள்ளவர்கள், பயந்த சுபாவம் உள்ளவர்கள் இந்த மாதிரி பதிவுகளை படிப்பதை தவிர்க்கவும் )

    எனக்கு ஒரு குறை என்னவென்றால் போட்டதுதான் போட்டீர்கள் மொத்தமா
    தெவச்சி ( குழம்ப வேண்டாம் இது எங்க கன்னியாகுமரி மாவட்ட பாஷை ) ஒரு 10000 கோடியா போட்டிருக்கக் கூடாதா?

    சரி பரவாயில்லை அடுத்த தடவை கொஞ்சம் பார்த்து போட்ருங்க சரியா?

    பார்த்துக்கோங்க மகா ஜனங்களே இப்படியெல்லாம் அள்ளி அள்ளி கொடுத்த பரம்பு மலை பாரிக்கு அடுத்த வீட்டுக்காரரான கணேசனின் பெயர் இந்நாள் வரை எந்த பத்திரிக்கையிலோ அல்லது யார் மூலமாகவோ வெளி வராமல் போனது விந்தையிலும் விந்தையாகத்தான் உள்ளது ( ஏ ஊடகங்களே ஒரு வள்ளலின் பெயரை ஏன் இப்படி இருட்டடிப்பு செய்கிறீர்கள்? நீங்கள் நன்றாக இருப்பீர்களா?
    எங்கள் வயித்தெரிச்சல்
    உங்களை எல்லாம் சும்மா விடாது )

    கடைஎழு வள்ளல்களின்
    வரிசையில் வந்த இந்த ஒன்பதாவது வள்ளலையா ( எட்டாவது வள்ளல் என்று தலைவரை அழைக்கிறார்கள் ) மறைந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்து அவர்கள் ஜமுக்காளத்தில் வடி கட்டின கஞ்சன் என்று சொன்னார்,

    " எங்கள் தங்க ராஜா " படப் பிடிப்பின் போது அதில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு அன்பளிப்பாக ஏதாவது கொடுக்கலாம் என்று நினைத்த தயாரிப்பாளர் ராஜேந்திர பிரசாத்தை தடுத்து நீங்கள் ஏன் கொடுக்க வேண்டும்?
    ஸ்டூடியோ முதலாளி கொடுக்கட்டும் என்று சொன்ன புண்ணியவான் இந்த வள்ளல்,

    கடும் பஞ்சத்தினால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் இடம் பெயர்ந்து அடுத்த மாவட்டங்களுக்கு கூட்டம் கூட்டமாக சென்றபோது ஒரு படப் பிடிப்பில் இருந்த கணேசன் அவர்களை சந்தித்து குறை கேட்கிறேன் பேர்வழி என்று குறைகளை கேட்டு விட்டு மெட்ராஸ் போனவுடன் உங்கள் நல்வாழ்வுக்காக என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு
    சென்னை வந்தவுடன் மறதி நோயால் பாதிக்கப்பட்டது அன்றைய ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று,

    இதுவும் ஒன்பதாவது வள்ளல் செய்த மிகப்பெரிய கொடை ( கேட்கும் போதே புல்லரிக்குது )

    1962 இல் இந்திய சீன
    யுத்தத்தின் போது தனக்கு கிடைத்த 100 பவுன் தங்கப் பேனாவையும், தன் மனைவியின் நகைகளையும் யுத்த நிதிக்கு கொடுத்தவர் இந்த ஓரி (1962 இல் அதிக பட்சம் ஒரு கிராம்
    தங்கத்தின் விலை 12 ரூபாய், குறைந்த பட்சம் 8.60 ரூபாய் ) ஆனால் நேரு தெரியாமல் 75000 ரூபாய் கொடுத்த எம்ஜிஆருக்கு எப்படி பாராட்டுக் கடிதம் எழுதினாரோ தெரியவில்லை ( இதிலும் ஒரு பெரிய சதி இருந்திருக்கிறது )

    இதுவெல்லாம் ஒரு சாம்பிள்தான், இன்னும் எவ்வளவோ இருக்கிறது , ஆனால் எம்ஜிஆரை கொடைவள்ளல் என்று சொல்வதன் மர்மம் என்ன என்று நமக்கு விளங்க வில்லை,

    அடுத்தது 1961 இல் வந்த பேசும் பட செய்தியாம் அதாவது அதில் ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார்" அகில இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகர்களை வரிசைப் படுத்துங்கள் பார்ப்போம் "

    பதில் : சிவாஜி, ஜெமினி, எம்ஜிஆர்

    உடனே இவர்கள் பார்த்தீர்களா தி. மு. க எம்ஜிஆரை வளர்த்து விடவில்லை என்றால் s. S. R, ஜெமினி ரேஞ்சில் தான் எம்ஜிஆர் இருந்திருப்பார் ஆனால் தி. மு. க செய்த துரோகம் தமிழனை தமிழனே அழித்தான்.

    அறிஞர் அண்ணாவிடமே நீங்கள் எம்ஜிஆர் கட்சியா என்று கேட்ட நிகழ்வுகளெல்லாம் உண்டு,

    உலகத்திலேயே முதன் முறையாக தான் ஏற்றுக் கொண்ட ஒரு கட்சியின் கொடியை மிகவும் தைரியமாக தன் எம்ஜிஆர் பிக்சர்சின்
    எம்ப்ளமாக திரையில் காட்டியவர் தலைவர்,

    தன் திரை உலக முன்னேற்றத்தை சிறிதும் நினைக்காமல் அப்போதுதான் தொடங்கிய ஒரு திராவிடக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர் தலைவர்,

    ஆனால் தலைவர் கட்சியில் சேர்ந்ததும் சிங்கம் இருக்கும் காட்டில் இந்த சிறு நரிக்கு வேலையில்லை என்று ஓடி தன் சொத்துக்களை பாதுகாக்க ஆளும் கட்சியில் சரணாகதி அடைந்தவன் அல்ல என் தலைவன்,

    உனக்கு கொள்கை தான் பெரிது என்றால் என்ன செய்திருக்க வேண்டும்?

    உனக்கு "சிவாஜி " என்னும் பட்டத்தைக் கொடுத்த பெரியாரின்
    திராவிடர் கழகத்தில் அல்லவா சேர்ந்திருக்க வேண்டும் (ஐயோ அப்புறம் எங்க சொத்தை யார் பாது காப்பது? )

    தான் தி. மு. க வில் இருந்த வரை காலையில் நடிப்பு மாலையில் கழக பொதுக்கூட்டம் என்று தன் பொன்னான மேனியை புண்ணாக்கி உழைத்தவன் என் தலைவன்,

    நெற்றியில் உதயசூரியன் இலச்சினையை வரைந்தும், தன் பெயரையே உதயசூரியன் என்று வைத்துக்கொண்டு நடித்தவன் என் தலைவன்,

    தன் மனைவியின் மரணச் செய்தி கேட்டும் ஒப்புக்கொண்டபடி கூட்டத்தில் பரப்புரையை முடித்துக் கொண்ட பின்பே கதறி அழுதவன் என் தலைவன்,

    இப்படி சொல்லச் சொல்ல ஓராயிரம் கதைகள், இந்த லட்சணத்துல வளர்த்து
    விட்டார்களாம்

    தமிழனாம் தமிழன்,

    யார் தமிழன்?

    ஆந்திராவில் இருந்து பஞ்சம் பிழைக்க இங்கு வந்தவன் தமிழனாம்
    ஆனால் இலங்கை கண்டி என்னும் தமிழ் மண்ணில் பிறந்து தமிழ் நாட்டில் குடியேறி என் தாய் தமிழுக்காக தமிழ் பல்கலைக் கழகம் தொடங்கி, உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழுக்காகவும், தமிழர் களுக்காகவும் தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்து தன் இறுதி உயிலில் கூட தன் சொத்துக்கள் எல்லாவற்றையும் வாய் பேச முடியாத, காது கேளாத தமிழ் நாட்டு செல்வங்களுக்கு எழுதி வைத்து மறைந்து போன என் தலைவனை
    இனம் பிரித்துப் பார்க்க யாருக்குடா தைரியம் இருக்கு?

    இன்றைய மலையாள தேசம் ஒரு காலத்தில் கண்ணகிக்கு சிலை எடுக்க வட நாடு சென்று கனக விசயரை வென்று அவர்களின் தலையிலே கல் சுமக்க வைத்து கற்புக்கரசிக்கு சிலை எடுத்த சேரன் செங்குட்டுவன் ஆண்ட தமிழ் தேசமாக இருந்ததை எவனும் மறைக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது,

    நானும் குமரி மண்ணில் பிறந்தவன்தான், என் பாட்டனாரும் குமரி மண் தமிழகத்தில் இணைந்த நவம்பர் 1 1956 க்கு முன் பிறந்தவர்தான்,
    என்னை மலையாளி
    என்று சொல்வியாடா
    எருமை மாடு,

    யார் தமிழன்?

    தமிழர்களின் அடையாளமாக இன்று உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் உள்ளத்தில் தெய்வமாக வாழும் மாவீரன் பிரபாகரன் தலைவரின் மரணச் செய்தி கேட்டு சிறு பிள்ளைகளைப் போல
    குமுறி கண்ணீர் விட்டது வரலாறு,

    அது மட்டுமல்ல தலைவருக்காக வன்னி மண்ணில் இரங்கல் உரை நிகழ்த்திய போது
    சொன்னார் " தமிழ் இனத்தின் விடுதலைக்காக தன் வாழ்நாளெல்லாம் ஏங்கி அதன் விடுதலைக்காக பாடு பட்ட ஒரு உண்மையான தலைவனை இந்த இக்கட்டான சூழலில் இழந்து நிற்கிறோம்,
    அந்த தலைவனின் இழப்பு நம் தமிழ் தேசிய
    விடுதலையை தள்ளிப் போக வைத்திருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை "

    இதே வார்த்தைகளை வன்னி சென்ற திரு. வை. கோ. அவர்களிடமும், திரு. சீமான் அவர்களிடமும்
    புலம்பித் தீர்த்தவர் மாவீரன் பிரபாகரன் அவர்கள்,

    தன் உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் கூட 2 கோடி ரூபாய்களை தம்பியிடம் சேர்த்து விடுங்கள் என்று சொன்ன மாமனிதன் என் தலைவன்,

    இக்கட்டான நேரங்களில் இந்திய அரசின் குறுக்கீடுகளுக்கு மத்தியிலும் தமிழ் இனத்தின் விடுதலைக்காக துடித்த
    உண்மையான தலைவன் என் தலைவன்,

    ஆனால் சகோதர யுத்தம் நடத்தி வீழ்ந்து போனார்கள் என்று சொல்லி கொச்சைப் படுத்தியவன், பதவிப் பிச்சைக்காக டெல்லிக்கு காவடி தூக்கியவன், உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகமாடி நிருபர்கள் போர் நிறுத்தத்தை மீறி தமிழர்கள் கொல்லப்படுகிறார்களே என்று கேட்டபோது
    " மழை விட்டாலும் தூவானம் விடவில்லை " என்று கேலி பேசியவர்கள் தமிழர்கள் இல்லையா?

    பதிவு போடுவதற்கு முன் கவனமாக எழுதுங்கள்,

    தங்கத் தலைவனைப் பற்றி எழுத நமக்கு தகுதி இருக்கிறதா என்று பார்த்து எழுதுங்கள் புல்லர்களே !


    தலைவரின் அன்புத் தொண்டன்

    ஜே. ஜேம்ஸ் வாட்..........

  11. #1140
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #ஆயிரத்தில்_ஒருவன்’ படத்தில் காதல் காட்சிக்கான பாடல் எப்படிப் பிறந்து வருகிறது…?….!

    ஆண்: “நாணமோ? இன்னும் நாணமோ? – இந்த
    ஜாடை நாடகம் என்ன? – அந்தப்
    பார்வை கூறுவதென்ன?
    நாணமோ?…. நாணமோ?…..

    பெண்: நாணுமோ? இன்னும் நாணுமோ? – தன்னை
    நாடிடும் காதலன் முன்னே – திரு
    நாளைத் தேடிடும் பெண்மை
    நாணுமோ? ….. நாணுமோ?”

    பாடல் பிறந்து வந்த விதம் கண்டீர்! டி.எம்.எஸ். பி. சுசீலா இருவரின் இன்பக் குரல்களில் ஒலிக்கும், இறவாக் கவிஞர் இயற்றிய இந்தப் பாடல் தரும் இனிமையை இன்றும் நம் இதயங்கள் குளிரக் கேட்கலாமே!

    இப்பாடல் காட்சியில் முதன்முதலாகப் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும இணையந்து நடித்த பாங்கும், பார்த்தோர் உள்ளங்களைப் பரவசத்தில் மூழ்கச் செய்தன என்பதும் உண்மையே.

    இப்பாடல் காட்சியில், ஜெயலலிதா நடிக்கும்போது, அவரையும் அறியாமல் ஒருவிதமான நடுக்கம் உண்டாகி விட்டது. அதனைப் பார்த்துவிட்ட எம்.ஜி.ஆர். ‘என்ன? ஏன் இப்படி நடுங்குறே? எதற்காக இப்படியெல்லாம் நடுங்க வேண்டும்? என்றார்.

    எப்படியோ…. பாடல் காட்சியில் ஜெயலலிதா நடித்து முடித்தார். இப்பாடல் காட்சியின் படப்பிடிப்பின்போது, அங்கு வந்திருந்த சாண்டோ சின்னப்பா தேவரும், காட்சியின் படப்பிடிப்பு முடிந்ததும், ஜெயலலிதாவுக்குத் தைரியம் கூறி, ‘தைரியமா நடிக்கணும்மா… எம்.ஜி.ஆரோடு சரோஜாதேவி நடிச்சிருக்கிற மாதிரி நடிக்கணும்!’ என்றும் கூறிச் சென்றார்.

    ஆனால், பாடல் காட்சி திரையில் வரும்போது, கவிஞரின் நாணமோ? இன்னும் நாணமோ?’ என்ற நளின வார்த்தைகளுக்கு ஏற்பவே புரட்சிச் செல்வியின் நடிப்பும் அமைந்திருந்தது கண்டு அனைவரும் பாராட்டினர்

    இப்படிக் கலைச்செல்விக்காக, கவிஞர் தந்த முதல் பாடல்களை எல்லாம் முழுமையான வெற்றி பெற்ற பாடல்களே எனலாம்.

    இதே படத்தில் காதல் ஏக்கத்தில் கதாநாயகன் பாடுவதாகக் கண்ணதாசன் எழுதிய, டி.எம்.எஸ். குரலில் ஒலித்த ஒப்பற்ற பாடல் ஒன்றும் உண்டு. அதுதான்…..

    “ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ!
    ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ!”

    என்று ஆரம்பமாகும் பாடல்.

    “நாடாளும் வண்ண மயில்
    காவியத்தில் நான் தலைவன்!
    நாட்டிலுள்ள அடிமைகளில்
    ஆயிரத்தில் நான் ஒருவன்!
    மாளிகையே அவள் வீடு
    மரக்கிளையே என் கூடு!…..”

    *இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் -இராமமூர்த்தி இணைந்து இசையமைத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்த கடைசித் திரைப்படம் இதுவே*..........ns...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •