Page 118 of 210 FirstFirst ... 1868108116117118119120128168 ... LastLast
Results 1,171 to 1,180 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1171
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1971 ம் ஆண்டு வெளியான
    மக்கள் திலகத்தின்....
    "ரிக்க்ஷாக்காரன்" காவியம் வெளிவந்து சரித்திரம் படைத்தது..
    சென்னை தேவிபாரடைஸ் அரங்கில்
    தொடர்ந்து 163 காட்சிகள் அரங்கு நிறைந்து 142 நாட்கள் ஒடி....
    9 லட்சத்தை வசூலில் கடந்த முதல் காவியமாக திகழ்ந்தது.
    பல முறை திரைக்கு வந்து
    வெற்றிகள் புரிந்துள்ளது.
    45 ஆண்டுகள் கடந்து மீண்டும் அதே
    தேவிபாரடைஸில்....
    திரையிட்ட ஒரேக்காவியம்...
    மக்கள் திலகத்தின்
    ரிக்க்ஷாக்காரன் ஆகும்.
    முதல் மூன்று நாட்களில்....
    வெள்ளி,சனி,ஞாயிறு
    (3 காட்சிக்கு மட்டும்)
    வசூலான தொகை :
    2 லட்சத்து 35 ஆயிரத்தை கடந்தது.
    ஒரு டிக்கட் விலை :152 ரூபாய் ஆகும்.
    ஞாயிறு மாலைகாட்சி (1200 பேர் மேல்)
    அரங்கு நிறைந்து சாதனை...
    7 நாட்கள்(தேவிபாரடைஸ் 3 நாள் தேவிபாலா 4 நாள்) ஒடி 3 லட்சத்தை வெற்றி கொண்டது.
    +++++++++++++++++++++++++
    இது போன்ற சாதனையை 300 படம் நடித்த எந்த பொய் நிறைந்த திலகமும்
    தேவி காம்பளக்ஸில் படைத்ததில்லை....bsr.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1172
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்திடம் ஒரு முறை சிலர் சென்று ஆதங்கப் பட்டார்களாம் .... தலைவரே உங்களை பற்றி கருணாநிதி ... ஊமையன் நாட்டை ஆளலாமா என்று மக்களிடம் மேடை தோறும் கேட்டு வருகிறார் என்று .... அதற்கு மக்கள் திலகம் சொன்னது என்ன தெரியுமா ? ரசிகர் மன்றக் கூட்டத்தை கூட்டுங்கள் என்றார் ... கூடிய மாபெரும் கூட்டத்தில் மக்கள் திலகம் பேசியது சில வார்த்தைகள் தான் .... அதாவது என் ரத்தத்தின் ரத்தங்களே நீங்கள் எல்லோரும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்றார் .... மேடையில் இருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி ... என்ன தலைவர் இப்படி பேசுகிறாரே என்று .... அடுத்த நாள் எல்லா ஊடகங்களிலும் இது தான் தலைப்புச் செய்தி ... கிளம்பினார் கருணாநிதி .... ஒரு முதல்வர் இப்படி பொறுப்பற்ற முறையில் தொண்டர்களை கத்தி வைத்துக் கொள்ளச் சொல்லி பேசலாமா என்று மேடைகள் தோறும் கேள்வி எழுப்பினார் .... 2 வாரங்களுக்கு பிறகு மக்கள் திலகத்திடம் ஆதங்கப் பட்டவர்களை மீண்டும் அழைத்தார்

    என்னை ஊமையன்னு ஊரெல்லாம் சொன்ன அதே கருணாநிதியை இன்னைக்கு அதே ஊரெல்லாம் சென்று முதல்வர் இப்படி பேசலாமா என்றும் கேட்க வைச்சிட்டேன் பாருங்க .... நான் பேசுவதை அவரே மக்களிடம் ஒப்புக் கொள்கிறார் .... என்றார் ....

    இது தான் கருணாநிதி ....
    அது தான் மக்கள் திலகம் .........

  4. #1173
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர்., ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார். அதுபற்றி அவரே எழுதுகிறார்:

    "பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி சில நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது, நான் வைத்துக் கொண்டிருக்கும் கார் பழையது; அதை வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்பது, அவளது கண்டுபிடிப்பு!

    பொதுவாக சினிமா கலைஞர்கள் நினைத்தால், புதுக் கார் வாங்கி விடுகின்றனர். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், அது ஏனோ, இதுவரை கைகூடவில்லை.
    மனைவியின் முணுமுணுப்பிலும் நியாயம் இருக்கிறது. சென்ற ஆண்டு, பொங்கல் அன்று, புது கார் வாங்கி விட வேண்டும் என்ற அவளது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தேன். அதற்கேற்ப, இருவரிடம் காரின் விலை விவரங்களை கேட்டு வந்தேன். அது கண்டு என் மனைவியின் முகத்தில் மலர்ச்சி!

    ஆனால், சென்ற ஆண்டு வரையில், புது கார் வாங்கும் பேச்சு, பேச்சாகவே போய் விட்டது. நான் என்ன செய்வது?
    சில காரின் விலையை கேட்கும் போது, அசந்து போகிறேன். காரின் விலை கேட்டு, மலைக்கும் போதெல்லாம், என்னை சுற்றியிருக்கும் படவுலகப் பிரமுகர்களும், கார் தரகர்களும், 'நீங்களா இப்படி கேட்கிறீர்கள்...
    புது கார் வாங்க
    எம்.ஜி.ஆர்., தயங்குவதா...?' என்று கேட்கின்றனர். நான் என்ன விலை கொடுத்தும், புது மாடல் கார் வாங்க முடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

    இப்படிக் கேட்டு கேட்டு, அடுத்த பொங்கலும் வந்து விட்டது. ஆனால், நான் இன்னும் புது கார் வாங்காததற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது, பழைய காரிடம் பழகிய பாசம் தான். அந்த பாச உணர்ச்சி, என்னை புது கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை, மாற்றிக் கொண்டே வருகிறது.

    என்னிடம், இப்போதுள்ள பெரிய கார் மிகவும் விசுவாசமுள்ளது; தென்னகம் முழுவதும், என்னைச் சுமந்து சென்றிருக்கிறது; பல வெற்றிப் படங்களில் நடிக்க, அது, ஸ்டுடியோக்களுக்கு என்னை விரைவாக ஏற்றிச் சென்றிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான ரசிகப் பெருமக்களால் சூழ்ந்து கொள்ளப்பட்டு, தனக்கும் பெரிய செல்வாக்கை பெருக்கிக் கொண்டிருக்கிறது.
    தொலைவில் வரும் போதே, அதை, பலர் அடையாளம் கண்டு, என் பெயரைக் கூறி, ஆரவாரம் செய்து வருகின்றனர். அந்த பெருமையை, கடந்த பத்து ஆண்டுகளாக அது அனுபவித்து வருகிறதே, அதை நான் தகர்க்கலாமோ? என் மனம் ஏனோ இடம் கொடுக்கவில்லை.

    பழசாகி விட்டதாலேயே, சில நல்ல மனிதர்களை உதறி விட முடிகிறதா? என் காரும் அப்படித் தான் என்று, எனக்கு தோன்றுகிறது.
    என் சமாதானங்களையும், நான் கண்டுபிடித்திருக்கும் காரணங்களையும், என் மனைவி ஏற்றுக் கொள்வாளா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், என் பழைய கார், இன்னும், என்னிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

    —'சுதேசமித்திரன்' பொங்கல் மலரில் எம்.ஜி.ஆர்., எழுதிய கட்டுரையிலிருந்து.

    நடிகர் #நிழல்கள் ரவி படித்து ரசித்து நமக்கு அனுப்பியது.

    Ithayakkani S Vijayan with Plato Rajagopalan.....

  5. #1174
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1969 ல்....சேலத்தில் ஒரே ஆண்டில் கலைத்தங்கத்தின் இரண்டு காவியங்கள்
    ஒடி.... வசூலிலும்.... அதிக நாட்களையும் கடந்து சாதனையாகும்.
    ******************************
    மக்கள் திலகத்தின்
    அடிமைப்பெண்
    சாந்தி 133 நாட்கள்
    வசூல் : 3,00,474.12
    புரட்சிப்பேரரசின்
    நம் நாடு
    பேலஸ் 109 நாள்
    வசூல் : 2,43,342.20
    ++++++++++++++++++++++
    நகரில் அதிக வசூல் பெற்ற திரைப்படங்கள் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண், நம்நாடு...
    இரண்டு மட்டுமே.
    ++++++++++++++++++++++++++
    சேலம்,நாமக்கல் மாவட்டம்...
    முழுவதும் திரையிட்ட
    இந்த இரண்டு காவியங்களே
    மகத்தான வெற்றி... மாபெரும் வசூல்
    போட்டிக்கு வந்த.....
    வெளிநாட்டில் எடுக்கபட்ட செம்மண் திரைப்படம் சேலம் உட்பட.....
    அனைத்து சென்ட்ரிலும்
    படுதோல்வியை தழுவியது....
    (ஆதாரத்துடன் பதிவு....).........ukr...

  6. #1175
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின்
    "வேட்டைக்காரன்"
    1964 ல் பொங்கல் திருநாளில்...
    வெளியாகி....
    பல வெற்றிகளை படைத்து
    வசூலில் பெரும் புரட்சியை கண்டு...
    இன்று வரை வெள்ளித்திரையில்
    56 ஆண்டுகளை கடந்து வருகிறது...
    +++++++++++++++++++++++++++
    நடிகப்பேரரசின் வேட்டைக்காரன்
    திரைப்படம் வெளியான
    அதே நாளில் வெளியான...
    ஒரு வண்ணத்தை....
    ஒரு புராணத்தை....
    ஒரு பெரும் பட்டாளத்தை...
    ஒரு பெரும் இயக்கத்தை...
    ஒரு பெரும் முதலீட்டை....
    ஒரு பெரும் தயாரிப்பை.....
    திரையிட்ட அனைத்து ஊர்களிலும்....
    கும்பகர்ணனை கூடாரத்துடனும்....
    பங்கு கொண்ட
    நடிக...நடிகரின்
    கூடாரத்தை .....
    வெளியான முதல் நாள்
    முதல் காட்சியிலேயே
    நிரந்தர தூக்கத்தை கொடுத்த....
    ++++++++++++++++++++
    சுறுசுறுப்பின் டானிக்....
    M. G.r.ன்.....வேட்டைக்காரன்
    +++++++++++++++++++++++++
    எளிமையான படபிடிப்பில்......
    குறைந்த நாளில்....
    குறைந்த செலவில்....
    கறுப்பு வெள்ளையில்....
    வெளிமாநில படப்பிடிப்பின்றி....
    எடுக்கப்பட்டு...
    சாதனை நாட்களான
    100 நாட்களை வெற்றிக்கொண்டது
    வசூல் பேரரசின்
    வேட்டைக்காரன
    +++++++++++++++++++++
    சென்னை.....
    சித்ரா....மேகலா...பிராட்வே...
    சேலம் நியூசினிமா
    100 வது வெற்றி நாளை கொண்டாடியது.
    மற்றும் 18 திரையில் 50 நாளை கடந்தது..
    **********-********************
    ஆனால்... கும்பகர்ணன்
    சென்னை சாந்தியிலும்
    மதுரை தங்கம்
    2 லட்சம் கூட வசூல் இன்றி படுதோல்வி..
    மொத்தமே 13 திரையில் தான 50 நாள் ஒட்டபட்டது.
    +++++++++++++++++++++++++
    (கும்பகர்ணன் சென்னை
    100 நாள் சாந்தி அரங்கு
    தமிழ் விளம்பரம் தரவும்...
    மேலே நமது சாதனை காவியமான...
    வேட்டைக்காரன் திரைப்பட விளம்பரம்
    கொடுக்கபட்டுள்ளது...)......ukr...

  7. #1176
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருநெல்வேலி (நெல்லை )பெருநகரில் என்றுமே
    சாதனை சக்கரவர்த்தி ...
    மக்கள் திலகமே ஆவார்....
    ***************************************
    கலை, வசூல் சக்கரவர்த்தியே....
    ஆண்டு தோறும் பல வெற்றிகளை படைத்து இமாலய சாதனபுரிந்துள்ளார்....
    +++++++++++++++++++++++++++++++++
    நகரில்....தொடர்ந்து 7 ஆண்டுகளில்
    9 திரைக்காவியங்கள் 100 நாட்களையும்
    20 வாரங்களையும்.... 25 வாரங்களையும்
    வசூலில் வெற்றி கொண்டு இதுவரை எந்த நடிகர்களும் ஏறேடுத்து பார்க்க முடியாத மிகப்பெரிய சாதனைகளாகும்.
    ++++++++++++++++++++++++++++
    1969 ல் அடிமைப்பெண்
    சென்ட்ரல் 120 நாள்
    1970 ல் மாட்டுக்காரவேலன்
    லட்சுமி 140 நாள்
    1971 ல் ரிக்க்ஷாக்காரன்
    லட்சுமி 101 நாள்
    1972 ல் நல்லநேரம்
    சென்ட்ரல் /அசோக் 105 நாள்
    1973 உலகம் சுற்றும் வாலிபன்
    சென்ட்ரல் 119 நாள்
    1974 ல் உரிமைக்குரல்
    லட்சுமி 180 நாள்
    1974 ல் நேற்று இன்று நாளை
    பார்வதி 119 நாள்
    1975 ல் இதயக்கனி
    சென்ட்ரல் 101 நாள்
    1975 ல் பல்லாண்டு வாழ்க
    பூர்ணகலா 101 நாள்
    ++++++++++++++++++++++++
    வசூலில் இக்காவியங்கள் மூலம்
    சரித்திரம் படைத்து சிகரத்தில்
    புகழ் கொடியை.... வெற்றிக்கொடியை
    பறக்கவிட்டார் பொன்மனச்செம்மல் அவர்கள்.
    (ஆதாரத்துடன் தகவல்கள்....)....ukr.........

  8. #1177
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*23/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ---------------------------------------------------------------------------------------------------------------சகாப்தம் நிகழ்ச்சியை பொறுத்தவரை தமிழக வரலாற்றில் எம்.ஜி.ஆர். என்கிற அந்த மூன்றெழுத்தை கடந்து போக முடியாது என்கிற முக்கியத்துவம் வாய்ந்த அந்த மன்னாதி மன்னன், மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ள மகோன்னத மாமன்னரின் வரலாறு குறித்து பேசி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம் 1971ல் தேர்தல் முடிந்த பிறகு கருணாநிதியிடம் எம்.ஜி.ஆர். சுகாதார துறை என்று கேட்பதற்கு பதிலாக மெடிக்கல் மினிஸ்டர் பதவி கேட்டதாகவும், ஹெல்த் மினிஸ்டர் என்று கூட கேட்க தெரியாமல் மெடிக்கல் மினிஸ்டர் என்ற பதவி கேட்டதாக தி.மு.க.வினர் கிண்டலும் கேலியும் செய்தார்கள் .ஆனால் அவர் காலத்தை சொல்லி, பெயரை சொல்லி எத்தனையோஆயிரக்கணக்கான** பேராசிரியர்கள், கல்வித்துறையில் வல்லுநர்கள் உருவாகி* இருக்கிறார்கள் . எம்.ஜி.ஆர். காலத்தில்தான் எத்தனையோ பல்கலை கழக வேந்தர்கள் உருவானார்கள் .வேலூரில் ஜி.விஸ்வநாதன் தலைமையில் வி.ஐ.டி.பல்கலை கழகம். கும்மிடிப்பூண்டியில் முனிரத்தினம் தலைமையில் ஆர்.எம்.கே.பொறியியல் கல்லூரி,மற்றும் பல்கலை கழகம் , சோழிங்கநல்லூரில் ஜேப்பியார் தலைமையில் சத்யபாமா பல்கலை கழகம், பல்லாவரம் அருகில் ஐசரி கணேஷ் தலைமையில் வேல்ஸ் பல்கலை கழகம், மதுரவாயல்* அருகில் ஏ.சி.சண்முகம்* தலைமையில் எம்.ஜி.ஆர். பல்கலை கழகம் என்று தனது ரசிகர்கள், பக்தர்கள், தொண்டர்களாக இருந்தவர்களை பல்கலை கழக வேந்தர்களாக உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். கல்வித்துறையில் மறுமலர்ச்சியும் நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகளும், மருத்துவ கல்லூரிகளும் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்தான் உருவாகியவை என்பதை தி.மு.க.வினர் மறந்திருக்க மாட்டார்கள் .எம்.ஜி.ஆர். தனது ஆட்சி காலத்தில் அமைச்சர்களை ஜப்பான் , போன்ற கல்வித்துறை, தொழில்துறையில் அசுர வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு அனுப்பி ,விவரங்களை சேகரிக்க செய்து , தமிழ்நாடு கல்வித்துறையில் பிரதான இடத்தை பெறும் வகையில் ஒரு ஆக்க சக்தியாக திகழ்ந்தார் என்பது வரலாறு .


    வெளியூரில் ஒரு விருந்தினர் மாளிகையில் எம்.ஜி.ஆர்.அவர்கள் 3 நாட்கள் தங்கியிருந்து அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார் .அந்த விருந்தினர் மாளிகையை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு* யாரும் எளிதில் உள்ளே நுழைய* முடியாதபடி காவலர்கள் பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள் . சில அதிகாரிகளும்* அவர்களுடன் இருக்கிறார்கள். நிகழ்ச்சிகள் முடிந்து ஒருநாள் காலையில் எம்.ஜி.ஆர். காரில் புறப்படும் சமயம் தடுப்பு கட்டைகளை தாண்டி ஒரு தொண்டர் எம்.ஜி.ஆரை பார்க்க முற்படும்போது ஒரு அதிகாரி அவரை தடுத்து அடிக்கிறார் .அந்த தொண்டர் ,தலைவரே,என்னை அதிகாரி அடிக்கிறார் என்று குரல் எழுப்ப ,எம்.ஜி.ஆர். அதை கேட்டு காரை நிறுத்த சொல்கிறார் .அதற்குள் அந்த அதிகாரி கூட்டத்திற்குள் நுழைந்து* மறைந்து கொள்கிறார் .அந்த தொண்டரை அழைத்து கொண்டு மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு* *அவருடன்*சென்று மதிய உணவு அருந்துகிறார் . அவரை பற்றி நலம் விசாரித்து, விவரங்கள் சேகரித்த பின் அவர் தோளில் தட்டி கொடுத்து ,காவல்துறை அதிகாரியை பார்த்து ,என்னை பார்க்க வந்த தொண்டனை இப்படி அடித்து துன்புறுத்திய அதிகாரி யார் என்று கேட்கிறார் . அடித்த அதிகாரி கண்ணுக்கெட்டாத தூரம் சென்றுவிட்டார் . ஆனாலும் எம்.ஜி.ஆர்.பிரச்னையை* விடுவதாக**இல்லை . என்னுடைய தொண்டனை அடித்த அதிகாரியை என் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துங்கள் .அவரை பார்க்காமல் இங்கிருந்து நான் நகருவதாக இல்லை என்றார். மற்ற அதிகாரிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டும், கையை பிசைந்து கொண்டும் நிற்கிறார்கள்**எம்.ஜி.ஆர்.புறப்பட்டதும் பாதுகாப்பிற்கு செல்லும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் நிறைந்த கார்கள் முன்னும் பின்னும் செல்வதற்கு தயாராக உள்ளன. ஆனால் எம்.ஜி.ஆர்.நகராமல் அங்கேயே நிற்கிறார் .ஏறத்தாழ 10 நிமிடங்கள் மேல் ஆகிவிட்டது .ஒரு* காவல்துறை**அதிகாரி ஓடிப்போய்* ஒரு நாற்காலி கொண்டுவந்து கொடுத்து எம்.ஜி.ஆரை அமரச்சொல்கிறார் .எம்.ஜி.ஆர். இதில் ஒன்னும் குறைச்சல் இல்லை. என் தொண்டனை தாக்கிய அதிகாரியை பார்க்காமல் இங்கிருந்து புறப்படுவதாக இல்லை என்று கூறி அமர்கிறார் .அந்த காவல்துறை அதிகாரி யார் என்று கண்டுபிடித்து அவருக்கு தகுந்த தண்டனை*வழங்கப்பட்ட செய்தி அறியாமல் நான் புறப்பட மாட்டேன் என்று பிடிவாதம் செய்கிறார் .சிறிது நேரம் கழித்து, மாவட்ட ஆட்சியர் வந்து எம்.ஜி.ஆரை சந்தித்து ,அந்த காவல்துறை அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் . அவர் தன்* கைப்பட மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார் .என்கிற விவரங்களை கேட்டு அறிந்த பின் ,அந்த தொண்டனை அழைத்து ,இனிமேல் இந்த மாதிரி தவறு செய்து காவலர்களிடம் அடிபடாதே, பார்த்து நடந்து கொள் என்று அறிவுரை சொல்லி ,**பத்திரமாக செல் என்று வழியனுப்பி வைத்தார் . இப்படி ஒரு தொண்டன் காவல்துறை அதிகாரியால் அடிபட்டதற்கு , அதிகாரிகள் மீது கோபப்பட்டு ,தகுந்த நடவடிக்கை எடுக்க செய்து , தொண்டனுக்கும் அறிவுரைகள் சொல்லி அனுப்பிய*முதல்வர் இந்தியாவில் இருக்கிறாரா என்று கேட்டால்,* ஆமாம் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.தான் இந்த வரலாற்று செய்திக்கு உதாரணமாக திகழ்ந்தவர் .

    சென்னை தி.நகர் ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். அலுவலகம் அருகில்தான் நடிகர் சிவகுமார் குடியிருந்தார் .அவர் வீட்டு மொட்டைமாடியில் இருந்து பார்த்தால் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பதவியில் இருந்தபோதும்*நாள்தோறும் சுமார் 50க்கு மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பசகிதமாக வாயிலில் காத்திருப்பார்கள் என்பது கண்கூடாக தெரியும் .*.அவர்களும், அவர்கள் கைகளில் சுமந்துள்ள குழந்தைகளும் அழுக்கான , கிழிந்த உடைகளுடன், பல நாட்கள் குளிக்காத நிலையில் , பெண்கள் குட்டை பாவாடை அணிந்தும், ரவிக்கையுடனும், பல்வேறு பாசி மணிகள் அணிந்தவாறும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் தலைமுடிகள் கலைந்த நிலையில், குழந்தைகள் பெரும்பாலும் சட்டையில்லாமல், மூக்கு ஒழுகலுடன் இருப்பார்கள் அலுவலகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியே வரும்போது அவர்கள் அவரை சூழ்ந்து கொள்வார்கள் .அவர்களின் குழந்தைகளை அப்படியே வாஞ்சையுடன் கைகளில் ஏந்தி,மார்போடு அணைத்து கொள்வதோடு மட்டுமல்லாமல், தலையை கோவிவிட்டு* நெற்றியில் முத்தமிட்டு ,கொஞ்சுவாராம் . எந்த ஒரு தனி மனிதனும் அவர்கள்மீது ,அவர்கள் அணிந்துள்ள ஆடைகள், மற்றும் தோற்றங்களை பொருட்படுத்தாது மனிதநேயமிக்க அன்பை ,பாசத்தை, கருணையை காட்டி அவர்களை மகிழ்வித்ததாக எந்த தலைவரும் இப்படி நடந்து கொண்டதாக நான் கேள்விப்பட்டதும் இல்லை* கண்டதும் இல்லை* ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள் மனிதநேய மிக்க மாணிக்கமாக திகழ்கிறார் . இது என்றோ ஒரு நாள் நடக்கும் நிகழ்ச்சி அல்ல. அனுதினமும் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சி என்பதை என் கண்ணார கண்டு* வியப்பும், ஆச்சர்யமும் அடைந்தேன் .உண்மையிலேயே மனிதர்கள்மீது அன்பை பொழிகின்ற தலைவராக இவரைத்தான் காண முடியும் அன்பு இருந்தால்தான் இப்படியெல்லாம் நடந்துகொள்ள முடியும் .. அவர் அருவருப்பை பார்க்க மாட்டார் .தன் ஜிப்பாவில் இருந்து அந்த குழந்தைகளுக்கு நோட்டு கட்டுகளை அள்ளி அள்ளி கொடுத்ததை நானே பல தடவைகள் பார்த்துள்ளேன் .இப்படியும் இந்த பூவுலகில்இப்படி* ஒரு மனிதரா என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார் .*அது மட்டுமல்ல, அவர் பட வாய்ப்புகள் தேடி வந்தபோது யானை கவுனியில் இருந்து நடந்தே பல ஸ்டுடியோக்களுக்கு சென்றுள்ளார் . அப்போது நாடக நடிகர்கள் சிலர் எதிர்படும்போது , சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது, ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டால் , தன், கையில் உள்ள பத்து ரூபாயில் இருந்து மூன்று ரூபாயை அவருக்கு தந்துவிடுவாராம் .இவருக்கே,நாளைய வருமானம் உறுதி இல்லை என்ற நிலையிலும் தர்மம் செய்ய தவறவில்லை என்றும் நடிகர் சிவகுமார் செய்தி அளித்துள்ளார் .**


    திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி :* ஒரு இஸ்லாமிய சகோதரர் என்.கே.எஸ்.என்ற பள்ளி ஒன்றை நடத்துகிறார் .அந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைதான் படிக்க முடியும் . பிறகு எவ்வளவோ முயன்றும் கூட, அந்த இஸ்லாமியர்கள் வேறு கட்சியை சார்ந்தவர்கள் என்று ஒரு பிம்பத்தை சிலர்*உருவாக்கி* அவர்களுக்கு உரிய உரிமம் கிடைத்து விடாமல் செய்கிறார்கள். இந்த தகவல்கள் எனக்கு தெரிவிக்கப்படுகிறது . இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர நீங்கள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் எங்களுக்காக சிபாரிசு செய்து உரிமம் பெற்றுத்தர முயல வேண்டும் என்றார்கள் .* அப்போதெல்லாம் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களை அவ்வளவு எளிதில் சந்தித்துவிட முடியாது .ஏனென்றால் அவ்வளவு பிசியாக இருந்தார் . இருப்பினும் காலையில் எப்போதும்*9 மணிக்குள் அவர் வீட்டுக்கு சென்றுவிட்டால் எப்பேர்ப்பட்ட சாமான்ய மனிதனும்* .பாமரர்களும் கூட சந்தித்து பேசலாம் . அவர் வீட்டில் குறைந்த பட்சம் 300 பேராவது பிரச்னைகளுக்காக சந்தித்து பேச காத்திருப்பார்கள் .இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த 300* பேர்களையும் பார்த்து விஷயங்களை கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டபின் தான் கோட்டைக்கு புறப்படுவார் என்பது யாருமே நம்பமுடியாத செய்தி .* ஒரு நபரை பார்த்த மாத்திரத்தில் அவனுடைய பிரச்னைகளை எளிதில் புரிந்து கொள்ளும் அசாத்தியமான , நுட்பமான அறிவு அவருக்கு வரப்பிரசாதமாக இருந்தது . அந்த 300 பேர்கள் மனதிலும் புகுந்து வெளியே வந்துவிடுவார் . என்ன உன் பிரச்னை என்பார்* வந்த நபர் விஷயத்தை சொன்ன உடனேயே ,அவன் சொல்லுகின்ற விஷயத்தில் உண்மை இருக்கிறதா என்று தன் எக்ஸ்ரே கண்கள் மூலம் கண்டுபிடித்து, அருகில் உள்ள உதவியாளரை திரும்பி பார்த்தால் அவர்*மூலம் அவன் தகுதிக்கேற்றார் போல,தேவைக்கு தகுந்தாற் போல* பணம் அள்ளி கொடுப்பார் .* எம்.ஜி.ஆர். என்கிற மாமனிதர் ஒரு ஸ்கேனிங் பெர்சனாலிட்டி ..அவரிடம் பொய்யான செய்திகளை சொல்லி எதையும் வாங்க முடியாது . அதே சமயம் உண்மைகளை சொல்லி* எதுவும் இல்லாமல் வெறும் கையுடன் திரும்பிய சரித்திரம் கிடையாது தங்களிடம் ஒன்றுமில்லை என்று சொல்லி வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கிய மனித கடவுள் எம்.ஜி.ஆர்.*.


    ஒரு முறை காயல்பட்டினத்தில் உயர்நிலை பள்ளி, மேனிலைப்பள்ளி நடத்தும் இஸ்லாமியர்கள் அவர்கள் பிரச்னைக்காக என்னை அணுகியபோது ,அவர்களை அழைத்து கொண்டு சென்னைக்கு வந்தபோது சற்று நேரமாகிவிட்டதால் ,அவர் இல்லத்திற்கு செல்லாமல் நேராக கோட்டைக்கு அழைத்து சென்றேன் .முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க செல்லும்போதெல்லாம் எனக்கு எப்போதும் சிறப்பு அனுமதி கிடைக்கும் எனக்கும் அந்த வகையில் சில உரிமைகள் அளித்து வந்தார்கள் . என்னை பார்த்ததும் என்ன பிரச்னை என்று கேட்டார். என்னுடன் வந்தவர்களை அறிமுகப்படுத்தி பிரச்னைகளை எடுத்துரைத்தேன் வந்தவர்களிடம் சில கேள்விகள் கேட்டு அவர்களுடைய பிரச்னையில் உண்மை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார் ..உடனே இன்டர் காமில் கல்வி அமைச்சர் அரங்கநாயகத்தை வர சொன்னார் .அவர் வந்ததும் இவர்களின் கோரிக்கைகள் மனு மீது உரிய நடவடிக்கையை விரைந்து*எடுக்க வேண்டும் .அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு,சில நிபந்தனைகளின்படி ,வேண்டிய வசதிகளுடன்* கல்வி நிலையங்களை நிறுவவும், நடத்தவும் உத்தரவிட வேண்டும் என்றார் .அதன்படி சில நாட்களில் உரிய அனுமதி கிடைத்தது .இப்படி காயல்பட்டினத்தில் ஒரு இஸ்லாமியர் நடத்தும் பள்ளிக்கு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்து உரிய அனுமதி கொடுத்தார் . அதே காயல்பட்டினத்தில் ஒரு பிரச்னைக்காக முதல்வர் எம்.ஜி.ஆர். மீது கல்லெறிந்த சம்பவமும் நிகழ்ந்தது .அதாவது திருச்செந்தூரில் இடை தேர்தல் நடைபெற்ற நேரத்தில், ஒரு பொது கூட்டத்தின்போது சில இளைஞர்கள் ஏதோ ஆவேசத்தில் கல்லெறிந்தார்கள் . சிறிது நேரத்தில் எம்.ஜி.ஆர். அவர்களே, நான் நலமாக இருக்கிறேன். கழக தோழர்கள் அமைதி காக்க வேண்டும். எந்த ஒரு அசம்பாவிதத்திலும் ஈடுபடக்கூடாது என்று தானே ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட்டார் .அண்ணா தி மு.க. தொண்டர்கள் ,தி.மு.க. தொண்டர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்துவிட கூடாது என்பதில் கவனமும், எச்சரிக்கையும்*செய்து அவர்களுக்கு அன்பு கட்டளை இட்டார் .இந்த சம்பவத்தை நான் குறிப்பிட்டு சொல்லவேண்டிய காரணம் என்னவென்றால் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு இஸ்லாமியர் நடத்தும் பள்ளிக்கு சில நிபந்தனைகளுடன், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, வேண்டிய வசதிகளுடன்* உரிய அனுமதியை கொடுத்தார் என்பது வரலாறு .அதே சமயத்தில் தி.மு.க.வினர் எம்.ஜி.ஆருக்கு திடீரென இஸ்லாமியர் மீது அன்பு வர காரணம் என்ன. ஒரு காலத்தில் அவர்களை வெறுத்தவர் தானே இவர் என்று உண்மைக்கு மாறாக சில கருத்துக்களை சொல்லி பரப்பினர் ,கதை கட்டினர் .வேண்டுமென்றே சில பொய்யான செய்திகளை சொன்னதும் உண்டு .எந்த ,எப்படிப்பட்ட கருதுக்களாக இருந்தாலும் , அந்த கருத்துக்களை எதிர்நோக்கி,அஞ்சாமல்எதிர்வரும் விளைவுகளை பற்றி கவலைப்படாமல் தைரியமாக* தன்னுடைய பதிலை,கருத்துக்களை சொல்வதில் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் யாருக்கும் சளைத்தவர் அல்ல .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .


    எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். குறித்து பல்வேறு விஷயங்களை அள்ளி அள்ளி குவித்து வருகிறார்கள் .பல்வேறு நண்பர்கள் இன்றைக்கும் அவரது படங்களின் பாடல்களின் வரிகளை கேட்டு ரசித்து, மகிழ்ந்து அவற்றால்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று மிக பெரிய உயரத்தில் இருந்து* விளிம்பு நிலை மனிதர்கள் வரையில் ஆயிரமாயிரம் கைகள் , ஆயிரமாயிரம் கண்கள், ஆயிரமாயிரம் நெஞ்சங்கள் துடித்து கொண்டிருக்கின்றன .அந்த துடிப்புக்கு காரணம் அவர் திரைப்படம் என்பதை ஒரு கருவியாக பயன்படுத்தியதோடு ,ஒரு அறிவு ஆயுதமாகவும், மக்களுக்கு கற்று தந்த ஒரு பாடமாகவும், பல்கலை கழகமாகவும் பயன்படுத்தினார் .அதை தன்னுடைய வாழ்க்கைக்கான ஏணியாக பயன்படுத்தினார் .அந்த வாழ்க்கை ஏணியை பயன்படுத்தியதாக ,தன்னை நம்பி வந்த ரசிகர்களை தான் ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்பதற்காக ,தன் வாழ்நாளில் அவர்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தார் .அதாவது அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் நல்லவர்களாக இருப்பதில்லை அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் நல்லவர்களாக நீடிப்பதில்லை என்பதை ரூசோ சொன்னார் என்பதை எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் தம்பி எம்.ஜி.ஆருக்கு அடிக்கடி நினைவுபடுத்தினார் .அரசியலில் பல நுட்பங்களை எம்.ஜி.ஆர். தெரிந்து கொண்டதனால் தானே முன்னோடியாக இருந்து பல விஷயங்களை நடத்திக்காட்டினார் .தன்னுடைய கட்சி தொண்டர்கள், முக்கியஸ்தர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்க வேண்டியே அண்ணா தி.மு.க. கட்சி கொடியை பச்சை குத்துவது அவசியம் என்று எடுத்துரைத்தார் .இது காட்டுமிராண்டித்தனம், முட்டாள்தனம் என்று கருத்து சொன்னவர்களை வாயடைக்க செய்து தானே முன்னுதாரணமாக திகழ்ந்து பச்சை குத்தி கொண்டார் .பல்வேறு விஷயங்களிலும் முன்மாதிரியாக நடந்து கொண்டார் .பல முன்மாதிரிகளை உருவாக்கினார் ..தமிழ் தமிழ் என்று பேசியவர்கள் கூட*தமிழை விடுத்து தங்களின் குடும்பங்கள் இன பெருக்கத்தை உருவாக்குவதில் பெரிதும் விருப்பம் காட்டிய நேரத்தில் ,எங்கும் தமிழ், எதிலும் தமிழ், பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தம், தமிழ் பல்கலை கழகம் சுமார் ஆயிரம் ஏக்கரில் ,அமைய உருவாக்க திட்டம் என்று சிந்தித்து செயல்பட்டார் .தமிழனாக வாழ்ந்தார் தமிழனாக மலர்ந்தார் .தமிழ் மண்ணில் மறைந்தாலும் மறையாது நிலைத்து நிற்கிறார் .என்றால் அதற்கு காரணம் தமிழ் மொழியின் மீது அவருக்கு இருந்த பற்றுதான் .யாராவது ,எங்கேயாவது தமிழ் மொழியை பற்றியோ, தமிழனை பற்றியோ, ஏதாவது அரைகுறையாக சொன்னால் கூட கொதித்து எழுந்து கோபப்பட்டதோடு தன் கடும் கண்டனத்தை பதிவு செய்த தமிழராக திகழ்ந்தார் .தமிழுக்கு பெருமை சேர்த்தார்* ஒருமுறை* முதல்வர் பதவி பற்றி கேள்வி எழுப்பியபோது ,இன்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவர்தான் முதல்வர் நாற்காலியை அலங்கரித்திருப்பார் . அவரது அமைச்சரவையில் நான் பங்கு கொண்டிருப்பேன் என்று பேட்டி அளித்தவர் எம்.ஜி.ஆர்.* திரையுலகில் அள்ளி கொடுப்பதில் எம்.ஜி.ஆருக்கு முன்னோடியாகவும், குருவாகவும் இருந்தவர்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் .

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    --------------------------------------------------------------------------------
    1.என்னம்மா சௌக்கியமா - கொடுத்து வைத்தவள்*

    2.புதியதோர் உலகம் செய்வோம் - பல்லாண்டு வாழ்க*

    3.நேருக்கு நேராய் வரட்டும் - மீனவ நண்பன்*

    4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

    5.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய்*

  9. #1178
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.
    சகாப்தம் நிகழ்ச்சி என்பது தமிழக வரலாற்றில் அந்த மூன்றெழுத்து மந்திரமான எம்.ஜி.ஆர். என்கிற மகோன்னதமான மாமனிதரை கடந்து போக முடியாது என்கிற முக்கியத்துவம் வாய்ந்த அந்த மன்னாதி மன்னன் , மக்கள் மனதில் ஆழமாக வீற்றிருக்கின்ற அந்த ராஜராஜனின் வாழ்க்கை வரலாறை அயராமல் பேசிக் கொண்டு இருக்கிறோம் . 1982ல் சத்துணவு திட்டத்தை முதல்வர் எம்.ஜி.ஆர். துவக்கி வைக்கிறார் .இந்த திட்டத்தை துரிதமாக துவக்கி வைக்க எப்படி உங்களுக்கு யோசனை தோன்றியது என்று நிருபர்கள் கேட்க, பதிலுக்கு நான் சிவகாசி அருகே நடந்த ஒரு விபத்தை பற்றி விசாரிக்க சென்றிருந்தேன் அந்த விபத்தில் சிக்கி காயமடைந்த மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு திரும்பும்போது, ஒரு இடத்தில வயல்வெளியில் பணியில் இருந்த பெண்கள் எனது காரை பார்த்ததும் தங்கள் கைகளில் தவழ்ந்த குழந்தைகளுடன் ஓடிவந்து கொண்டிருந்தனர் .அதை கண்டநான் காரை நிறுத்த சொன்னேன் என்றார் எம்.ஜி.ஆர். அப்போது மாலை 4.30மணி இருக்கும். அவர்களிடம் நீங்கள் எல்லாம் மதிய உணவு சாப்பீட்டீர்களா ,உங்கள் குழந்தைகள் சாப்பிட்டார்களா என்று கேட்டேன் .இல்லை.ஐயா, நாங்கள் காட்டில் வேலை செய்துவிட்டு கூலி வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றுதான் சமைத்து சாப்பிடுவோம் என்றனர் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்தீர்களா என்று கேட்டதற்கு இல்லை.அவர்களும் எங்களுடன் பட்டினிதான் கிடப்பார்கள் .வீட்டிற்கு சென்றுதான் அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்றனர் .அன்றுதான் எம்.ஜி.ஆர். முடிவெடுத்தார் . எப்பாடு பட்டாவது அரசு சார்பில் ஒருவேளையாவது குழந்தைகளுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்வது என்று .அதன்படி திரை உலகை சார்ந்த நடிகர் நடிகைகள் மூலம் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர இரவு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி இந்த திட்டத்தை துவக்கினார் .இதனால் பல கோடி குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வந்தனர் என்று திருச்சி அருகில் உள்ள பாப்பாக்குறிச்சி என்கிற இடத்தில நிருபர்களுக்கு எம்.ஜி.ஆர். பேட்டி அளித்தார் .

    மதுரையில் ஒரு முறை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை எம்.ஜி.ஆர். நடத்தினார் . அந்த மாநாட்டின் ஊர்வலத்தை பார்வையிட தமுக்கம் மைதானத்தில் ஒரு மேடை அமைக்க சொல்லி அங்கிருந்து அந்த ஊர்வலத்தை பார்வையிடுகிறார் . அந்த மேடையில் எம்.ஜி.ஆர். ஏறும்போது , மேடைக்கு பின்புறம் 70 வயதான ஒரு மூதாட்டி ஒரு பானையில் மோர் கொண்டுவந்து விற்று கொண்டிருக்கிறார் .அதை பார்த்துவிட்டு இருக்கையில் அமர்கிறார் எம்.ஜி.ஆர். சிறிதுநேரம் ஊர்வலத்தினரை பார்த்து கையசைத்து விட்டு பின்புறம் திரும்பி பார்க்கும்போது அந்த வயதான மூதாட்டியை காணவில்லை . மறுபடியும் சிறிது நேரம் ஊர்வலத்தினரை பார்த்து கையசைத்துவிட்டு ,சில நிமிடங்கள் கழித்து மேடையின் பின்புறம் திரும்பி பார்க்கிறார் . இதை கவனித்த அரசு அதிகாரி ,எம்.ஜி .ஆரிடம் என்ன விஷயம்.அடிக்கடி பின்புறம் திரும்பி பார்த்த வண்ணம் இருக்கிறீர்கள் .ஏதாவது பிரச்னையா, நான் விசாரிக்கட்டுமா எனும்போது ,ஒன்றுமில்லை ,மேடையின் பின்புறம் ஒரு வயதான மூதாட்டி பானையில் மோர் விற்று கொண்டிருந்தார் .அவரை திடீரென்று காணவில்லை அவரை கொஞ்சம் தேடி பார்க்க சொல்லுங்கள் என்றார் . அந்த அதிகாரி ,கீழே உள்ள காவல்துறை அதிகாரியிடம் சொல்லி தேடி பார்த்து மேடைக்கு அழைத்து வருகின்றனர் . மேடைக்கு வந்ததும் எம்.ஜி.ஆர். தன் ஜிப்பாவில் இருந்து கட்டு கட்டாக .பணத்தை அள்ளி அந்த மூதாட்டியின் கைகளில் கொடுத்து ஏதாவது கடை வைத்து பிழைத்த கொள்ளுங்கள் என்று கைகள் நிறைய அள்ளி கொடுத்தாராம் . அப்படி பாவப்பட்ட மனிதர்கள் , விளிம்பு நிலை மனிதர்கள் ,சொந்த உழைப்பினால் முன்னுக்கு வருபவர்கள் போன்றவர்களை தேடி பிடித்து உதவிகள் செய்கிற மனோபாவம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம் இதை பலரும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள் .

    திரு.கா. லியாகத் அலிகான் : சமீபத்தில் நீங்கள் பேசியது போல ,ராஜா தேசிங்கு படத்தில் வரும் ஆதி கடவுள் ஒன்றேதான் அதில் பேதம் கிடையாது என்ற பாடலில் தனது சிந்தனையை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தி இருக்கிறார் .என்னுடன் சம்பந்தப்பட்ட விஷயம் ஒன்றை குறிப்பிடவேண்டும் என்றால் உடுமலைபேட்டையில் எனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலந்துகொள்ள இருந்தபோது ,நான் என் மனைவியுடன் திருமண வரவேற்பு மேடைக்கு செல்ல வேண்டும் என்று எனது பெற்றோர்களிடம் வேண்டுகோள் வைத்தபோது ,நமது மத கோட்பாடில் அப்படி ஒரு வழக்கம் கிடையாது என்று மறுப்பு தெரிவித்தார்கள் .பின்னர் ஜமாத்காரர்கள் தெரிவித்த கருத்துக்களின்படி மணமக்கள் வரவேற்பு மேடையில் அமர்வது அவ்வளவு சரியாக,நன்றாக இருக்காது என்றனர் .இந்த கருத்துக்கள், எதிர்ப்புகளை எல்லாம் மீறி , நான் மணமகளை அழைத்து கொண்டு தாஜ் திரையரங்கிற்கு நேராக வந்துவிட்டேன் .இதை கண்ட எனது தந்தை மிகவும் வேதனை அடைந்து, நீ மணமகளுடன் வரவேற்பு மேடையில் அமருவதைவிட ,உரிமையாளர் அலுவலகத்தில் மணமகளை அமரவைத்துவிட்டு எம்.ஜி.ஆர். அவர்களை வரவழைத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்/வேண்டுமானால் நீ தலைவர் எம்.ஜி.ஆரிடம் கேள். ,அவர் விருப்பப்பட்டால் மேடையில் மணமகளை அமரவை .எனக்கு ஒன்றும் ஆட்செபனை இல்லை. . நமது ஜமாத்காரர்கள் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்வது நமது பாரம்பரியத்திற்கு,குடும்பத்திற்கு நல்லதல்ல, எதற்கும் யோசித்து முடிவு எடு என்றார் .அதன்படி சிறிது நேரம் யோசித்து ,மணமகளை உரிமையாளர் அலுவலகத்தில் அமரவைத்து விட்டு ,நான் வரவேற்பு மேடையில் சென்று அமர்ந்தேன் . சற்று நேரத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருமண மண்டபத்திற்கு காரில் வந்து இறங்கினார் . என்னை பார்த்தவுடன் காதில் சாந்தி முகூர்த்தம் முடிந்துவிட்டதா என்று மெதுவான குரலில் கேட்டார் .இந்த கேள்வியில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்னுடன் எந்த அளவு நட்பும், பாசமும், அன்பும் புரட்சி தலைவர் எம்.ஜி..ஆர் வைத்திருந்தார் என்பதை . இல்லை அண்ணா என்று சொன்னதும், என் தோளின்மீது கையை போட்டு அன்பாக தட்டி கொடுத்து,பின்னர் அவருடைய இருக்கையில் அமர்ந்துவிட்டு ,மணமகள் எங்கு இருக்கிறார் என்று கேட்டார் .நான் விஷயத்தை விவரமாக கூறினேன் . மணமகள் அருகில்தான் இருக்கிறார். அண்ணன் உத்தரவிட்டால் நான் மேடைக்கு அழைத்து வருகிறேன் என்றேன் . அவர் வேண்டாம் என்று சொன்னார் .மணமகளை மேடையில் இருக்கையில் அமர செய்வதை உன் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்கிறாய். ஜமாத்காரர்களுக்கும் அதில் விருப்பமில்லை .எனவே இஸ்லாம் மத கோட்பாடின்படி ,நாம் நடந்து கொள்வது எப்போதும் நல்லது .இல்லையென்றால் உன்னையும், உன் மனைவியையும் குறை சொல்லி பின்னர் பேசுவார்கள். அதற்கு இடம் தரவேண்டாம் .என்று சொல்லி ,என்னையும், என் மனைவியையும் வாழ்த்தி சுமார் 35 நிமிடங்கள் மேடையில் இருந்தபடி பேசினார் .அப்போதுதான் புரட்சி தலைவர் ஒரு சட்டத்தை இயற்றுவது பற்றி பேசினார் .அவர் பேசும் சமயம் ஒருவர் குடித்துவிட்டு, அவரை பார்த்து இருகரம் கூப்பி வணக்கம் வைத்தபடி இருந்தார் .ஒருமுறை எம்.ஜி.ஆர். வணக்கம் சொன்னார். சில நிமிடங்களில் மீண்டும் வணக்கம் வைத்தார் .அதற்கும் பதில் வணக்கம் சொன்னார் எம்.ஜி.ஆர். சிறிது நேரம் கழித்து மூன்றாவது முறையாக வணக்கம் தெரிவித்தபோது அவர் குடி த்துள்ளார் என்று எம்.ஜி.ஆர்.கண்டுபிடித்துவிட்டார் .இந்தமுறை வணக்கம் தெரிவிக்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார் .அப்போது ஒரு சட்டத்தை பற்றி விளக்கமாக பேசினார் .தமிழக அரசு இது போல தன்னிலை தெரியாமல் மது அருந்துபவர்களுக்குமன்னிக்க செய்யாமல், முதல்முறையாக இருந்தால் மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் . அடுத்த முறை தவறு செய்தால் ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும் . மூன்றாவது முறை தவறு செய்தால் நாடு கடத்தப்படுவார்கள் என்று எனது திருமண மேடையில்தான் இந்த சட்டம் இயற்றப்போவதை பற்றி பேசினார் . பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருமூர்த்தி மலை அருகில் உள்ள ஆய்வு மாளிகையில் ஓய்வெடுக்க சென்றார் .நாங்கள் சிலர் அவருக்காக உணவை எடுத்துக்கொண்டு சென்றோம் அங்கு வந்திருந்த சில எம்.எல்.ஏக்கள், முக்கிய விருந்தினர்கள் அந்த உணவை சாப்பிட்டு ஒரு திருப்தி இல்லாத சூழலை உருவாக்கினார்கள். அதாவது உணவு நன்றாகத்தான் இருக்கிறது .சிக்கன் சமைத்தது சரியில்லை என்பதுபோல பேசி கொண்டதை எப்படியோ எம்.ஜி.ஆர். அவர்கள் தெரிந்து கொண்டார்கள். இருப்பினும் எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து சாப்பிட்ட வண்ணம் முதல்வர் இருக்கிறார் .நான் மறுபடியும் அவருக்கு பரிமாற உள்ளே சென்றேன் .அப்போது அங்குதலைமை தாங்கிய குழந்தைவேலு , திருப்பூர் மணிமாறன், கோவைத்தம்பி, மருதாச்சலம், அண்ணா நம்பி போன்றவர்கள் எல்லாம் இருந்த சூழ்நிலையில் கல்யாண சாப்பாடு மிகவும் ருசியாகவும், அருமையாகவும் இருந்தது என்று என்னிடம் குறிப்பிட்டார் .ஆனால் முதலில் சாப்பிட்ட எம்.எல்.ஏக்கள் , உணவு சுமாராகத்தான் இருந்தது என்று சொன்னார்கள். புரட்சி தலைவரும் அதே போலத்தான் சொல்லுவார் என்று நான் எதிர்பார்த்தேன் .எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அனைவரின் முன்னிலையில் என்னிடம் உணவு ரொம்ப பிரமாதமாக இருந்தது என்று திரும்ப திரும்ப சொன்னார் . அதை கேட்ட எனக்கு மனது நிறைவாக இருந்தது .பிறகு அவர் விடைபெறும்போது ,நீ சென்னைக்கு உன் துணைவியாரை அழைத்து கொண்டு என் இல்லத்தில் வந்து சந்திக்க வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார் . அவர் சென்றபிறகுதான் அங்கு வைக்கப்பட்டிருந்த சிக்கன் அனைத்தையும் எம்.ஜி.ஆர். அவர்கள் சாப்பிட்டு உள்ளார் என்று தெரிந்தது .அதாவது பலர் சிக்கன் சமையல் நன்றாக இல்லை என்று விமர்சித்ததை கண்டு கொள்ளாமல் அவர் முழுவதையும் சாப்பிட்டுள்ளார் .அப்போதுதான் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது .

    நபிகள் நாயகத்திடம் ஒரு வயதான மூதாட்டி திராட்சை பழங்களை கொண்டுவந்து கொடுக்கிறார் . ஒரு திராட்சையை சாப்பிட்ட நபிகள் நாயகம் முழு பழங்களையும் அவரே சாப்பிட்டு முடித்துவிடுகிறார் . பின்னர் அந்த மூதாட்டிநன்றிகூறி விடை பெற்று சென்றதும், சீடர்கள் அவரிடம் எப்போதும் எங்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டுத்தான் தாங்கள் சாப்பிடுவது வழக்கம். இன்று ஏன் இப்படி வழக்கத்திற்கு மாறாக தாங்கள் செய்தீர்கள் என்று கேட்டதற்கு, அந்த திராட்சை பழம் மிகவும் புளிப்பாக இருந்தது . உங்களால் சாப்பிட்டு இருக்க முடியாது .அப்படியே சாப்பிட முயன்றாலும், உங்கள் முகத்தில்மிகவும் புளிப்பாக உள்ளது என்பதை காட்டிவிடுவீர்கள் அல்லது வாயை திறந்து அந்த மூதாட்டி முகம் கோணும்படி ஏதாவது சொல்லிவிடுவீர்கள் .அதற்கு இடம் தராமல்தான் அந்த மூதாட்டி மனம் நிறைவு அடையும்படி நானே சாப்பிட்டு முடித்தேன் என்றாராம் .அதே போலத்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் அருகில் ப.உ.சண்முகம் போன்றவர்கள் இருந்தாலும், எங்கே உணவு சரியில்லை என்று எனக்கு முன்பாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் மறுபடியும் சொல்லி விமர்சனம் செய்துவிடுவார்களோ என்று எண்ணி , அவரே எல்லா சிக்கன், மட்டன் உணவு வகைகளை சாப்பிட்டு முடித்தபோது ,எனக்கு நபிகள் நாயகம் நடந்து கொண்ட விதம் பற்றித்தான் நினைவுக்கு வந்தது .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு தொண்டனின் மனம் கோணாதபடியும்,அந்த தொண்டனின் மனம் நிறைவடையும்படியும் அன்று நடந்து கொண்டதை நபிகள் நாயகத்தோடு ஒப்பிட்டுதான் நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன் .இவ்வாறு திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .

    சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் ஒருமுறை முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது .விழா முடிந்து உணவருந்தியபின் எம்.ஜி.ஆர். புறப்படுகிறார் . பாதுகாப்பிற்காக வந்திருந்த கார் ஓட்டுனர்கள், ஊழியர்கள் அவருடன் புறப்பட தயாராகின்றனர் காரில் அமர்ந்திருந்த அவர்களை . எம்.ஜி.ஆர். அனைவரும் சாப்பீட்டீர்களா என்று கேட்கிறார் .அனைவரும் நாங்கள் சாப்பிடவில்லை. பரவாயில்லை புறப்படலாம் என்கின்றனர் . கார் ஓட்டுனர்கள், ஊழியர்களுக்கு அரசு விழா முடிந்து இரவு நேரத்தில் ஓட்டல்களில் உணவு வழங்கும் பழக்கம் இல்லையென்று கேள்விப்பட்டு ,மறுநாளே, அவர்களுக்கு இரவு நேர உணவுப்படியாக ரூ.100/- வழங்கவேண்டும் என்று ஆணையிட்டார் .

    2016ல் மோடியின் தலைமையிலான மத்திய அரசு ,ரூ.500/- ரூ.1000/- ஆகிய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கிறது .இதன் மூலம் கருப்பு பணத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்று முடிவெடுத்தது .ஆனால் இதை 1974லேயே எம்.ஜி.ஆர். யோசனை தெரிவித்து அறிக்கை விட்டார் .1958ல் நாடோடி மன்னன் படத்தின் மூலம் பொருளாதார ரீதியில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்று சொல்லி, ஆட்சிக்கு வந்தபின்னர் மக்களின் பொருளாதார வாழ்க்கை மேம்பட பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தினார்....da...

  10. #1179
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1931 முதல் 2000 வரை எந்த தனி கதாநாயகனும் தமிழ்த்திரையில்...
    வெள்ளித்திரையில் ....பல படங்கள் (150,200,300) நடித்தும் சாதிக்காத வெற்றிகளை...

    115 காவியங்களில்......
    தனிப்பெரும் கதாநாயகனாக
    பவனி வந்து சரித்திரத்தை ஏற்படுத்திய ஒரே ஒப்பற்ற கதாநாயகன்...
    தமிழ்ப்படவுலகின் சாதனை திலகம்
    மக்கள் திலகம் எம்.ஜி ஆர் அவர்களின்
    வெற்றிக்காவியங்களின் சாதனை தொகுப்பு....
    ++++++++++++++++++++++++++++++++
    முதல் வெளியீட்டில்
    10 திரையரங்குகளுக்கு மேல்
    100 நாட்களை கடந்த......
    அதிக திரைக்காவியங்களை
    தமிழ்படவுலகில் வெற்றியுடன்
    தந்த பொன்மனச்செம்மலின்....
    சாதனை பட்டியல்..
    ++++++++++++++++++++++++++

    1) சாதனை ! அதிக அரங்குகள் : 38
    **************************************
    மக்கள் திலகம் கதாநாயகனாக
    பவனி வந்த 17 வது காவியம்...
    1956 ல்... வெளியான
    +++++++ மதுரைவீரன் ++++++
    தமிழகம் 35 அரங்கு 100 நாட்கள்
    பெங்களுர் ஒரு அரங்கிலும்...
    இலங்கையில் இரண்டு திரையிலும்...
    100 நாட்களை வெற்றிக் கொண்டு
    மொத்தம் 38 அரங்கில் 100 நாட்கள்.
    அதிக நாட்கள் : 180

    2) சாதனை! அதிக அரங்குகள் : 19
    ++++++++++++++++++++++++++*****
    கதாநாயகனாக.... 23 வது காவியம்
    ++++++நாடோடி மன்னன்+++++++++
    தமிழகம் 14 அரங்கு 100 நாள்
    இலங்கை 5 அரங்கு 100 நாள்
    அதிக நாள் : 161
    ++++++++++++++++++++++++
    குறிப்பு....
    ஒரு நடிகர் 10 தியேட்டரில்100 நாளை காண்பதற்கே... 75 படம் நடித்த பின் தான்.... நடந்தது... அதுவும்
    ஜெமினிகணேசனை சேர்த்துக் கொண்டு
    ஒடிய பாவம் தேடி மன்னிப்புபாகும்...
    ++++++++++++++++++++++++++++++

    3) சாதனை ! அதிக அரங்குகள் 18
    ++++++++++++++++++++++++++++
    கதாநாயகனாக... 53 வது காவியம்
    ++++++++எங்க வீட்டுப்பிள்ளை++++
    தமிழகம் 17 திரையரங்கு
    இலங்கை 1 அரங்கு....
    அதிக நாள் : 236

    குறிப்பு :
    ஒரு நடிகர் 100 படங்களை கடந்த பின் தான் ....அதுவும் பக்தி படம் தெருவிளையாடல் மூலம் பல முன்னனிகளை சேர்த்துக்கொண்டு
    இரண்டாவதாக 10 அரங்கில் 100 நாளை கொடுத்தார்...

    4) சாதனை! அதிக அரங்குகள் : 10
    +++++++++++++++++++++++++++++
    கதாநாயகனாக 76 வது காவியம்
    ++++++++குடியிருந்த கோயில்+++++
    தமிழகம் 10 அரங்கு 100 நாள்
    அதிக நாள் : 133

    5) சாதனை! அதிக அரங்குகள் : 16
    +++++++++++++++++++++++++++++
    கதாநாயகனாக.... 84 வது காவியம்
    ++++++++அடிமைப்பெண்+++++++++
    தமிழகம் 15 அரங்கு 100 நாள்
    இலங்கை 1 அரங்கு 100 நாள்
    அதிக நாள் : 176

    6) சாதனை! அதிக அரங்குகள் : 14
    +++++++++++++++++++++++++++++
    கதாநாயகனாக... 86 வது காவியம்
    ++++++++மாட்டுக்கார வேலன்+++++++
    தமிழகம் 12 அரங்கு 100 நாள்
    இலங்கை 2 அரங்கு 100 நாள்
    அதிக நாள் : 177

    7) சாதனை! அதிக அரங்குகள் : 12
    ++++++++++++++++++++++++++++++
    கதாநாயகனாக .... 92 வது காவியம்
    ++++++ரிக்க்ஷாக்காரன்++++++
    தமிழகம் 12 திரையில் 100 நாள்
    அதிக நாள் : 161

    குறிப்பு : 150 படம் தாண்டிய பின் தான்
    வறண்ட மாளிகை 10 தியேட்டரை மூன்றாவதாக ஒட்டபட்டு நடந்தது.

    8) சாதனையில்.. அதிக அரங்குகள் : 25
    +++++++++++++++++++++++++++++++++
    கதாநாயகனாக 100 வது காவியம்...
    ++++++உலகம் சுற்றும் வாலிபன்++++
    தமிழகம் 20 அரங்கில்.....
    பெங்களுர் 3 அரங்கில்......
    இலங்கை 2 அரங்கில்......
    100 நாளை கடந்தது...
    அதிக நாள் : 217

    9) சாதனையில்..அதிக அரங்குகள் : 12
    +++++++++++++++++++++++++++++++++
    கதாநாயகனாக 103 வது காவியம்...
    +++++++++உரிமைக்குரல்+++++++++
    தமிழகம் 12 திரையில் 100 நாள்
    அதிக நாள் : 200

    குறிப்பு..... 160வது படத்தை கடந்த
    பின் நான்காவதாக தகரபதக்கம்
    10 திரையை கடந்தது...

    10) சாதனையில் ...அதிக அரங்குகள் 12
    ++++++++++++++++++++++++++++++++++
    கதாநாயகனாக.... 107 வது காவியம்...
    ++++++++++இதயக்கனி+++++++
    தமிழகம் ..10 திரையில்....
    இலங்கை 2 திரையில்.....
    அதிக நாள் : 146
    +++++++++++++++++++++++++

    மக்கள் திலகம் பவனி வந்த
    115 திரைக்காவியங்களில்....
    10 திரைப்படங்கள் தமிழகத்தில் மட்டும்....
    100 நாள் அரங்குகள் மொத்தம்.. 157
    பெங்களுர்... இலங்கை மொத்த
    அரங்கு 100 நாள் : 19
    +++++++++++++++++++++++++
    10 திரைப்படம் மட்டும் : 176 ஆகும்....
    ++++++++++++++++++++++++++++
    குறிப்பு... 200வது படம் சூலம் வரை
    5 படம் மட்டுமே
    10 தியோட்டரில் 100 நாள் காண்பிக்கபட்டது...
    +++++++++++++++++++++++++
    இந்த லட்சணத்தில்....
    பொய்யான தகவல்கள் கணேசனின் புள்ளைங்களுக்கு..............ukr...

  11. #1180
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாம்ப யார் வம்புக்கும் போகமாட்டோம். புரட்சித் தலைவர் புகழ் மட்டும் பாடுவோம். ஆனால், புரட்சித் தலைவரை யாராச்சும் திட்டினால் தாங்க முடியாது. ஏண்டா, ராஜ ராஜன் முட்டாள் நாய் என்று என்னை திட்டுங்கடா. கவலை இல்லை. எதுக்குடா எங்க தலைவரை திட்டுறீங்க? அந்தப் பதிவுங்களை பார்த்தாலே மனம் குமுறுகிறது. குட்டம் முட்டாள் குமார் என்று ஒரு நாய் உள்ளது. சொட்ட மண்டய தலப்பாகட்டி மூடிருக்கான். எம்ஜிஆர் மாதிரி மோடி அடுத்தவன் மனைவிய கூட்டி வருவாரா என்று சொல்றான். அறிவு கெட்ட நாயே. ஜானகி யை புரட்சித் தலைவர் சட்டப்படி திருமணம் செய்தார். கருணாநிதி ராஜாத்திய கூட்டிவந்தா மாதிரி கூட்டி வரலை. ஏண்டா முட்டாள் குமார்.. நடிகர் கணேசனோட மகன் ராம்குமார் ஸ்ரீபிரியாவோட அக்காவை கீப்பா வெச்சிருக்கான். சட்டப்படி மனைவி அந்தஸ்து கொடுக்கலை. அவனுக்குப் பிறந்த கள்ளக்குழந்தை ஒருத்தன். சிவாஜிதேவ். அவன் திருமனத்தை ரகசியமாக நடத்தி ராம்குமார் முதல் மனைவி உள்பட அவர்கள் கும்பத்தில் எல்லாரும் புறக்கணித்தனர். இப்படிப்பட்ட குடும்பம். இந்த ராமக்குமார்தான் சிவாசி ரசிகர் மன்றத் தலைவன். அதயும் ஏத்துக்கிட்டீங்க. வெளங்கும்டா. முட்டாள் கூமார்.. நீயெல்லாம் புரட்சித் தலைவர் பத்தி பேசக்கூடாது. இன்னொருத்தன் சொல்றான் எம்ஜிஆர் நல்லவர்னா ஏன் குடும்பம் குட்டி அமையலை.. மோடிக்கும் இது பொருந்தும் என்கிறான். ஏண்டா.. காமராஜ்க்கு ஏன் குடும்பம் குட்டி அமையலை. அவர் கெட்டவரா.. குடிகார நாய்ங்களா. உங்களோடு 50 வருசமா சண்டை போடறோம். அந்த் உரிமையில் சொல்றோம். எம்ஜிஆரை திட்டி இன்னும் அழிஞ்சு போகாதீங்கடா. போதையில் இருந்து தெளிஞ்சு திருந்துங்கடா.... Rajarajan...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •