Page 87 of 210 FirstFirst ... 3777858687888997137187 ... LastLast
Results 861 to 870 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #861
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நினைப்பால்!

    நடிப்பால்!

    உழைப்பால்!

    ஏழைகளுக்காகவே என

    முப்பால் கண்டவர் எம் ஜி ஆர்!

    எம்.ஜி.ஆர் என்று மூன்று எழுத்து நடிகராக எம்ஜிஆர் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் என்றால் ஆச்சரியபட வேண்டிய விஷயம் காரணம் இதை வடமாநில நடிகர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.ஒரு முறை வடமாநில திரையுல ஜாம்பவான்களான ராஜேஷ்கன்னாவும் திலீப்குமாரும் கூட எம்ஜிஆர் படங்களை இந்தியில் ரீமேக் செய்கிறோம் அதில் அவரைப் போல நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டதற்கு எங்களால் எம்ஜிஆர் போல நடிக்க முடியாது என தெரிவித்தனர்.

    எம்.ஜி.ஆர் என்றால் நல்ல சுறுசுறுப்புத்தனம், அந்த சிவந்த உதட்டின் ஒரத்தில் எப்பொழுதும் உற்சாக பொருந்திய சிரிப்பு, எந்த நடனத்திற்கும் ஈடுகொடுக்கும் நடனம், சண்டைப் பயிற்சி, மாறாக்கொள்கை,ஏழைகள் மீது கருணை மற்றும் தொழிலாளர்கள் மீது அன்பு கலந்த மரியாதை,தாய் மீது பக்தி, தேசத்தின் மீதும் மக்கள் மீதுமான சேவை ஈடுபாடு போன்ற எம்ஜிஆரின் பாத்திரங்கள் மக்களை வசீகரித்தது. திரையுலகில் எப்படி வேண்டுமானால் நடித்துக் கொள்ளலாம் ஆனால் நிஜவாழ்வில் அவ்வாறு இருப்பது சற்று கடினம் ஆனால் இதில் எம்.ஜி,ஆர் விதிவிலக்கு பல லட்சக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் வாழ வைத்தார் எம்ஜிஆர் என்றால் என்ன சொல்வது திரையில் மட்டும் கதநாயகன் இல்லை நிஜத்திலும் கதாநாயகன் தான் இன்றும் அவருடைய திரைப்படங்கள் மக்களால் விரும்பி பார்க்கப்படுகின்றன.அதிக பெண் ரசிகர்களை கொண்ட நடிகராக அந்தக்காலம் முதல் தற்போது வரை வலம் வருபவர்..........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #862
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவதால் ஏற்படும் அலைச்சல், பண விரயம், போக்குவரத்து சிக்கல் உட்பட மக்களின் பல்வேறு சிரமங்களைக் களையும் வகையில் திருச்சி மாவட்டத்தை 2-வது தலைநகராக்க முதல்வராக இருந்த எம்ஜிஆர் முடிவு செய்தார்.

    அதன் தொடக்கமாக திருச்சி நவல்பட்டு அண்ணா நகரில் 1,000 ஏக்கரில் துணை நகரத்தை 1984 செப்.15-ம் தேதி எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது தொடக்கி வைத்தார். மேலும், திருச்சியில் தங்கிப் பணியாற்றும் வகையில் உறையூரில் குடமுருட்டி ஆற்றங்கரையில் எம்ஜிஆருக்கென பங்களாவும் வாங்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் எம்ஜிஆரின் கனவு நிறைவேறவில்லை..........

  4. #863
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புரட்சி_தலைவர்
    #இதயதெய்வம்
    #மக்கள்_திலகம்
    #பாரத_ரத்னா_டாக்டர்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய
    #வியாழக்கிழமை_காலை_வணக்கம்..

    இதயதெய்வம் எம்ஜியார்
    தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு மட்டுமின்றி, கேட்காதவர்களுக்கும் அவர்களுடைய நிலையை அறிந்து உதவிகள் செய்யக் கூடியவர். இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்கள் உண்டு...

    இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அவ்வளவாக அரங்குகள் கிடையாது. மயிலாப்பூரில் ரசிக ரஞ்சனி சபாவுக்கு சொந்தமான சுந்தரேஸ்வரர் அரங்கு, எழும்பூரில் அரசுக்கு சொந்தமான மியூஸியம் தியேட்டர், வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருந்த ஒற்றை வாடை தியேட்டர், மாநகராட்சி
    அலுவலகத்தை ஒட்டிய வி.பி.ஹால், அண்ணா மலை மன்றம் போன்ற ஒருசில அரங்குகள்தான் இருந்தன.

    இந்த அரங்குகளில் நடந்த பல கலை நிகழ்ச்சிகளுக்கு எம்.ஜி.ஆர். வருகை தந்து தலைமை தாங்கியிருக்கிறார். மாநகராட்சி அலுவலகம் அருகே இருந்த வி.பி.ஹாலில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார். நிகழ்ச்சி முடிந்து கலைஞர்களை பாராட்டிவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அந்தக்
    காலகட்டத்தில் அவர் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் வசித்து வந்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்துக்கு எதிரே ஒரு ரயில்வே (பூங்கா ரயில் நிலையம்)
    கேட் உண்டு. இப்போது அந்த பகுதியில் மேம்பாலம் உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து ரயில்வே கேட்டைக் கடந்து (சென்னை மத்திய சிறை பின்புறம்) சிந்தாதிரிப்பேட்டை வழியாக ராயப்பேட் டைக்கு எம்.ஜி.ஆர். செல்ல வேண்டும்.

    எம்.ஜி.ஆரின் கார் வந்து
    கொண்டிருந்தபோது ரயில்வே கேட் மூடப் பட்டிருந்தது. அது திறப்பதற்காக கார் காத்திருந்தது. ரயில்வே கேட் அருகே ஒரு குதிரை லாயம்.
    (இன்றும் அந்த குதிரை லாயம் உள்ளது) காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது, சுற்றும்முற்றும் கூர்ந்து கவனித்தபடி இருப்பார். அவர் பார்த்த போது குதிரை லாயம் அருகே சிறு கூட்டம். கூடவே அழுகை சத்தமும் கேட்டது. என்ன வென்று விசாரித்து வருமாறு காரில் இருந்த தனது மேனேஜர் சாமியிடம் எம்.ஜி.ஆர். சொல்ல, அவரும் விசாரித்து வந்தார்.

    அங்கிருந்த ஒரு குதிரை
    வண்டிக்காரருக்கு சொந்தமான
    குதிரை திடீரென இறந்துவிட்டது. வண்டிக்காரரின் குடும்பமே குதிரை சவாரியை நம்பித்தான் இருந்தது. திடீரென குதிரை இறந்த அதிர்ச்சி, துக்கம், இனி பிழைப்புக்கு என்ன செய்வது என்ற கவலை எல்லாம் சேர, அவரது குடும்பமே இறந்த குதிரையின் அருகில் அமர்ந்து கதறியது. அதைவிடக் கொடுமை, அந்தக் குதிரையை அடக்கம் செய்யக்கூட அவர்களிடம் பணம் இல்லை.

    இந்த விவரங்களை எம்.ஜி.ஆரிடம் மேனேஜர் சாமி தெரிவித்தார். பொறுமையாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக் குதிரை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?’’ என்றார். ‘‘600 ரூபாய் தேவைப்படலாம்’’ என்றார் சாமி. ஒரு பொருளின் விலையை கடைக்காரர் அதிகமாக சொன்னால், ‘‘என்னய்யா... யானை விலை, குதிரை விலை சொல்ற?’’ என்ற வசனத்தை முன்பெல்லாம் கேட்டிருப்போம். 50 ஆண்டுகளுக்கு முன் குதிரை விலை 600 ரூபாய் என்பது அதிகம்.

    சாமி சொன்னதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக்குதிரை வாங்கி வந்து வண்டியில் பூட்டி ஓட்ட வேண்டும். இதற்கு சில
    நாட்கள் ஆகலாம். அதுவரை அந்த வண்டிக்காரரின் குடும்பம் கஷ்டப்படக் கூடாது. இறந்த குதிரையையும் அடக்கம் செய்ய வேண்டும். எனவே, குதிரை விலையோடு சேர்த்து தேவை யான பணத்தை வண்டிக்காரரிடம் கொடுத்துவிடுங்கள்’’ என்றார். பணத்தோடு சென்ற சாமி, வண்டிக்காரரிடம் விவரங்களைச் சொல்லி பணத்தைக் கொடுத்தார்.

    வண்டிக்காரருக்கு இன்ப அதிர்ச்சி.
    நம்ப முடியாமல் கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆர். வந்த காரைப் பார்த்தார். காரில் எம்.ஜி.ஆர். இருப்பதை கவனித்துவிட்டு இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டபடி, கண் ணீருடன் காரை நோக்கி ஓடிவந்து அப்படியே தரையில் விழுந்து
    வணங்கினார். காரில் இருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., அவரை தூக்கி ஆறுதல் சொன்னார். ‘‘இறந்த குதிரையை
    அடக்கம் செய்துவிட்டு, புதுக் குதிரை வாங்கி தொழிலை கவனியுங்கள்’’ என்றார். அதற்குள், விஷயம் பரவி அங்கு பெரும் கூட்டம் சேர்த்துவிட்டது. அந்த நேரத்தில், ரயில்வே கேட் திறக்கப்பட, மக்களைப் பார்த்து கையசைத்து விடைபெற்றபடி எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.

    அந்தக் குதிரை வண்டிக்காரர் நன்றி மறக்காதவர். அடுத்த சில நாட்களில் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு புதிய குதிரை பூட்டிய வண்டியை ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். எம்.ஜி.ஆரை சந்தித்து அவரது காலில் விழுந்து நன்றி சொன்னார். அவரை வாழ்த்தி குதிரையையும் பார்த்து மகிழ்ச்சியுடன் அதைத் தட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.!

    ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ஜெயிலர் ராஜன் என்ற பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். கொடிய குற்றங்கள் செய்த சிறைக் கைதிகள் 6 பேரை தனது பொறுப்பில் அழைத்துவந்து, அவர்களோடு தானும் வாழ்ந்து கைதிகளை திருத்தும் முயற்சியில் ஈடுபடுவார். குற்றவாளிகளில் ஒருவராக நடிக்கும் ஆர்.எஸ். மனோகர், கதைப்படி தனது மனைவியை கொன்றுவிட்டதால் சிறை தண்டனை அடைந்திருப்பார். அவரைப் பார்க்க மனோகரின் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது தாயார் வருவார்.

    தனது தள்ளாத வயதில், வீடுகளில் வேலைசெய்து குழந்தைகளைக் காப்பாற்றி வருவதாகவும் தானும் இறந்துவிட்டால் இந்தக் குழந்தைகளின் கதி என்ன என்று மனோகரிடம் கூறி அவரது தாயார் கலங்குவார். என்ன செய்வதென்று புரியாமல் மனோகரும் கண் கலங்கும் கட்டம் பார்ப்பவர் மனதை உருக்கும்.

    இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்., இரு குழந்தைகளையும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறுவார். அந்தத் தாய், நன்றியும் மகிழ்ச்சியும் போட்டிபோட, உணர்ச்சிப் பெருக்கோடு எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சொல்வார்…

    ‘‘#இந்த_உலகத்துலே_ஏழைங்களோட #கஷ்டத்தைப்_புரிஞ்சவங்க_உன்னை #மாதிரி_வேற_யாரும்_இல்லப்பா!’’

    எம்.ஜி.ஆர். குதிரையேற்றம் அறிந்தவர். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் குதிரை சவாரியில் விருப்பம் உள்ளவர். பல குதிரைகளை வளர்த்து வந்தார். மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் குதிரை சவாரி காட்சியில் எம்.ஜி.ஆர். ஓட்டியது, டி.ஆர். சுந்தரத்துக்கு சொந்தமான குதிரை....

    அன்புடன்
    பாபு...

  5. #864
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வசூல் சக்கரவர்த்தி!!
    --------------------------------
    எம்.ஜி.ஆருக்கு தமிழ் நாட்டில் வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் உணர்ச்சி பூர்வ விசுவாசிகள் அதிகம்!
    அதிலும்,,மதுரையை மீட்ட வீரனுக்கு அங்கேக் காணப்படுவது விசுவாசிகள் கூட அல்ல--பக்தர்கள்!!
    இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்!!
    கற்பகம் படத்தின் மூலமாக நமக்கு கே.ஆர்.விஜயாவையும் வாலியையும் தந்தவர்! குடும்பப் படங்களுக்கு ஒரு கோபாலகிருஶ்ணன் என்று பெயர் எடுத்தவர்!
    அது,,அவரின் இயக்கத்தில் மலர்ந்த பணமா பாசமா படத்தின் வெற்றி விழா!
    பணமா பாசமா?
    கே.வி.மகாதேவன்--கண்ணதாசன் கூட்டணியில் எலந்தப் பயம்--எலந்தப் பயம் என்ற ஈடில்லா இலக்கியப் பாடல் இடம் பெற்ற படம்?
    அந்தப் பாட்டுக்காகவே படம் ஓடியதோ என்னவோ யார் கண்டது?
    மதுரை தங்கம் தியேட்டரில்,,படத்தின் வெற்றிவிழா நடக்கிறது!
    கே.எஸ்.ஜி பேசும்போது--இந்தப் படத்தின் வசூல் மூலம் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக ஜெமினிகணேசன் விளங்குகிறார் என்று குறிப்பிடுகிறார்??
    அவர் அப்படிக் குறிப்பிடும்போது,,ரசிகர்கள் குரல் எழுப்பி ஆரவாரம் செய்கிறார்கள்!
    நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த கே.எஸ்.ஜிக்கு பயங்கர அதிர்ச்சி??
    ஆம்! அவரது கார் மிக நேர்த்தியாக,,தொழில் சுத்தமாக உடைக்கப்பட்டு,,பாகங்கள் ஒரு ஓரமாகக் குவிக்கப்பட்டு இருக்கிறது??
    தங்கம் தியேட்டரின் நிர்வாகி,,கே.எஸ்.ஜியிடம் கூறுகிறார்--
    சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்றால் அது எம்.ஜி.ஆர் ஒருவர் தான்!
    நீங்கள் ஜெமினியைக் குறிப்பிட்டு,,அதுவும் இந்தத் தங்கம் தியேட்டரில் அப்படிப் பேசியிருக்கக் கூடாது1
    ரசிகர்கள் சங்கேதமாக ஒலி கொடுத்து உங்களை எச்சரித்ததை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை!!
    நீங்க தங்கியிருக்கற லாட்ஜுக்கு இப்போது போவது கூட உசிதமில்லை. ஓட்டலையே உடைப்பதற்கு ஒரு கூட்டம் பின்னால் வரும்!1
    தியேட்டர் நிர்வாகி சொன்ன ஆலோசனையின் பேரில் ரகசியமாக ஒரு லாரியில் ஏறி,,செங்கல்பட்டில் அப்போது இருந்த அண்ணாதுரையிடம் தஞ்சம் புகுந்து விஷயத்தைச் சொல்ல--
    அண்ணாதுரை,,எம்.ஜி.ஆரிடம் அதைப் பக்குவமாகத் தெரிவிக்க--எம்.ஜி.ஆரும்,,கே.எஸ்.ஜியிடம் வருத்தம் தெரிவித்து,,காருக்கான நஷ்ட ஈடைத் தாமே வழங்குகிறார்!
    பிறகு ஏன் அண்ணா அப்படி சொல்ல மாட்டார்--
    முகத்தைக் காட்டினால் முப்பதாயிரம் ஓட்டு!!!.........vt...

  6. #865
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #காணாமல் #போனவை

    #நம்நாடு திரைப்படத்தில், தான் சேர்மன் ஆக தேர்ந்தெடுக்கப்படும் இந்த காட்சியில் வாத்தியார் மிக சுருக்கமாக, உயர்ந்த கருத்துக்களை கொண்ட வரிகளைப் பேசுவார்.

    'உண்மையா சொல்றேன்...!
    நீங்க என்னெ தேர்ந்தெடுப்பீங்கன்னு
    நான் எதிர்பார்க்கவே இல்ல...

    ஆனா, ஒண்ணு மட்டும்
    உறுதியா சொல்றேன்...!

    என் உயிருள்ளவரை
    கொஞ்சங்கூட சுயநலமில்லாம
    உங்களுக்காக உழைப்பேன்
    இது உறுதி.

    மூத்தவங்கெல்லாம்
    என்ன வாழ்த்துங்க...

    இளையவர்களெல்லாம் எனக்கு
    கைகொடுங்க...

    இத்தோடு இக்கூட்டம்
    கலைகிறது

    நன்றி வணக்கம்'

    என் மனதில் என்றுமே நிலைத்து நிற்கும் காட்சி... வாத்தியாரின் மிக எளிமையான பேச்சு, கனிவான, சாந்தம் நிறைந்த முகம், மிக எளிய ஆயினும் மிக பொருத்தமான உடுப்பு மற்றும் ஒப்பனை.. ...அத்தோடு வாத்தியார் கும்பிடற ஸ்டைல்...!!!......

  7. #866
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அண்ணன் spபாலசுப்பிரமணியன் அவர்களின் மறைவிற்கு என் கண்ணீர் அஞ்சலி.

    எஸ்.பி.பி.க்காக காத்திருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஆயிரம் நிலவே வா ரகசியம்
    உழைப்பு உயர்வைக் கொடுக்கும். நல்ல நேரம் இருந்தால் உழைப்புக்கேற்ற பலனாக பெயரும் புகழும் பணமும் கிடைக்கும்.

    உண்மையான திறமையிருந்தால்தான் உயர்ந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். இது எல்லாமே பாலுவின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

    தமிழில் பாட வருவதற்குள் சில தெலுங்கு படங்களுக்காகப் பாடியிருக்கிறார். தமிழில் முதலில் பாடிய பாடல் 'இயற்கையென்னும் இளைய கன்னி' என்ற டூயட்.

    இது 'சாந்தி நிலையம்' படத்திற்காக மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடியது. ஆனால் பாலுவை தமிழ்ப் பட உலக ரசிகர்களிடையே பிரபலமாக்கிய பாட்டு ஒன்று உண்டு.

    எஸ்.பி.பாலசுப்ரமணியம்: சங்கீத உலகில் ஓர் அத்தியாயம்
    அந்தப் பாடல் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எல்லாரையும் கவர்ந்த பாடல். ஒரே பாடலால் தமிழகம் முழுவதும் தெரிந்த பின்னணி பாடகர் எஸ். பி. பி. ஒருவராகத்தான் இருக்க முடியும். அவருக்கு புகழை வாங்கித் தந்த பாடல் 'ஆயிரம் நிலவே வா' என்று 'அடிமைப் பெண்'ணில் ஒலித்த பாடல்தான்.

    'ஆயிரம் நிலவே வா' பாடலை எஸ்.பி.பி. பாடக் காரணமாயிருந்தவர் மக்கள் திலகம் தான். பாலு அந்தப் பாடலைப் பாட வேண்டிய நாளில், நல்ல காய்ச்சலில் படுத்திருந்தார் என்பதை முன்பே சொல்லியிருந்தார்.

    பாலு இல்லாமல் கார் திரும்பி வந்ததும், விஷயத்தைப் புரிந்துகொண்ட மக்கள் திலகம், ரிக்கார்டிங்கை ரத்து செய்துவிட்டார்.

    இந்த விவரம் பாலுவிற்குத் தெரியாது. தனக்கு பதிலாக வேறு யாரோ ஒருவர் அந்தப் பாட்டைப் பாடியிருப்பார் என்று தான் நினைத்திருந்தார்.

    இரண்டு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் கார் பாலுவை அழைக்க வந்தபோது, பாலுவிற்கு அதை நம்பவே முடியவில்லை.

    எஸ்.பி.பாலசுப்ரமணியம்: சங்கீத உலகில் ஓர் அத்தியாயம்
    தன்னைப்போல பிரபலமாகாத ஒரு பாடகனுக்காக எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனம் இரண்டு மாதங்கள் காத்திருப்பார்கள் என்பதை பாலுவால் நம்ப முடியவில்லை.

    பாடலைப் பாடிய பிறகு மக்கள் திலகத்தைச் சந்தித்து நன்றி சொன்னார். அப்பொழுது மக்கள் திலகம் பாலுவிடம் 'தம்பி என் படத்திலே பாட்டுப் பாடப் போறீங்கன்னு நீங்க எல்லார்கிட்டேயும் சொல்லியிருப்பீங்க. உங்க நண்பர்கள் இந்தப் படத்தில் உங்க பாடலை ஆவலோடு எதிர்பார்த்திருப்பாங்க, உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரைப் பாடவைத்து உங்களையும், உங்கள் நண்பர்களையும் ஏமாற்ற நான் விரும்பல. அதனால்தான் உங்களுக்காக இந்தப் பாட்டு காத்திருந்தது' என்று கூறி வழியனுப்பினார்.
    அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.........ad.,

  8. #867
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணீர் அஞ்சலி !!!
    ------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தின்*பாடலான*ஆயிரம் நிலவே*வா பாடல் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆகிய பாடும்*நிலா திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று மறைந்து விட்டார்*என்ற செய்தி அறிந்து*மிகவும் துயரமுற்றேன் .*

    அவர் பாடியது*போல அவரின்*தேகம் மறைந்தாலும் உலகெங்கும்**இசையால்*மலர்ந்து கொண்டிருப்பார் .

    மறைந்த*திரு.எஸ்.பி.பி.அவர்களின் ஆன்மா சாந்தி அடைய*அவரை*தமிழ் திரை உலகிற்கு*அறிமுகப்படுத்திய*இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும்*.அன்னாரது பிரிவால்*வாடும்*அவரது*மனைவி, மகன், மகள்,குடும்பத்தினர், உறவினர்கள் ,கோடிக்கணக்கான**அவரது*ரசிகர்கள் அனைவருக்கும் ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்*குழு சார்பில்*ஆழ்ந்த அனுதாபங்களையும் ,இரங்கலையும் தெரிவித்துக்*கொள்கிறேன் .

    ஆர். லோகநாதன் .

  9. #868
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மன்னர் மகள் பார்க்க விரும்பிய நம் மன்னர்.

    கதையல்ல நிஜம்..நம் தங்க தலைவரின் அற்புத நடிப்பில் உருவான ஏ.வி.எம். நிறுவனம் தயாரிப்பில் அமைந்த மாபெரும் வெற்றி சித்திரம் அன்பே வா.

    தலைவர் நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட பொழுதுபோக்கு சித்திரம் இது.....சிம்லா மற்றும் காஷ்மீர் பகுதிகளில் கண்ணை கவரும் இடங்களில் படமாக்கப்பட்ட படம்.

    படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த வேளையில் நம் தலைவர்எம்ஜிஆர் அவர்கள் படப்பிடிப்புக்கு காஷ்மீர் வந்து உள்ள செய்தியை வட நாட்டு பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து எழுத.

    செய்தியை படித்த ஒரு நாட்டு மன்னர் மகள் அப்பா நாம் குடும்பத்துடன் சென்று எம்ஜிஆர் அவர்களை சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்று அவர் ஆசையை சொல்ல...

    நாட்டுக்கு மன்னர் என்றாலும் வீட்டுக்கு தலைவர் ஆக அவர் உடன் பட்டு அன்பே வா பட தயாரிப்பாளர் வசம் தங்கள் குடும்ப விருப்பம் சொல்ல.

    அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதித்து மன்னர் அவர்களை குடும்பத்துடன் வர சொல்ல..

    அவர்கள் வந்த நேரம் படத்தின் முக்கிய பாட்டில் நடனத்தில் நம் மன்னர் அசத்திய பாடல் ஏய்... நாடோடி போகவேண்டும் போக வேண்டும் ஓடோடி என்ற வரலாறு பேசிய அந்த அற்புத பாடல் காட்சி படம் எடுக்கும் நேரம் மன்னர் தன் மனைவி மற்றும் மகளுடன் வர.

    முழு பாட்டு பாடல் காட்சிகள் எடுத்து முடியும் வரை காத்து இருந்து பாடல் காட்சிகள் எடுப்பதை பார்த்து இருந்து இடைவேளையில் எடுக்க பட்ட அரங்கில் நேபாள மன்னர் மகேந்திரா அவர்கள் அவர் மனைவி மற்றும் அவர் மகள் மூவரும் தலைவருடன் அந்த பாடல் உடையுடன் எடுக்க பட்ட அரிய படம் நம் குழுவினர் பார்வைக்கு.

    மன்னர் குடும்பம் மகிழ்ச்சியுடன் தலைவர் அவர்களுடன் பேசி முடிந்து அவர்கள் வீடு திரும்பும் போது மன்னர் மகள் சொன்ன வார்த்தை அப்பா எம்ஜிஆர் அவர்கள் என்ன அழகு இல்ல என்று.

    வாழ்க தலைவர் புகழ்.

    என்றும் அவர் புகழ் காப்போம்...உங்களில் ஒருவன்...நன்றி..
    தொடரும்...

    அந்த கருப்பு டி.ஷர்ட்...அந்த கருப்பு pant இடையில் வெள்ளை பெல்ட்.. என்ன ஒரு அழகு நம் மன்னர் இல்லையா பின்னே.

    சில தலைவர் உண்மை நெஞ்சங்கள் பதிவை தவறாக புரிந்து கொள்ள ஒரு விளக்கம்....நாடோடி பாடல் எடுக்க பட்ட அரங்கில் எடுக்க பட்ட புகைப்படம் பதிவில்..
    பாடல் காட்சி எங்கு எடுக்க பட்டது...தெரியவில்லை.
    ஊட்டியில் உள்ள ஒரு பங்களா என்றா சென்னையில் போட பட்ட அரங்கில் என்றா என்பது தெரியவில்லை.

    அப்போது நேபாள மன்னர் குடும்பம் தமிழகம் வந்து இருந்தது தெரியும்..........Mn...

  10. #869
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் mgr......
    ======================
    தேவர், பிள்ளை, முதலியார், செட்டியார், படையாட்சி , கவுண்டர், நாயக்கர், ஐயர், அய்யங்கார் என தங்கள் சாதி அடையாளங்களை பெருமையாக பேசி வந்த தமிழ் சினிமாவில்

    (அதிலும் 50 களில் சாதி தீ கொழுந்து விட்டு எரிந்த அந்த கால கட்டத்தில்,)

    58 ஆண்டுகளுக்கு முன் 1956 இல் வெளிவந்த "மதுரைவீரன்" திரைப்படத்தில்
    நான் சக்கிலியன் என மார்தட்டி சாதி வேறுபாட்டை சாடி நடித்த நடிகர் எம்ஜிஆர். கலைவாணர் ns கிருஷ்ணன் - மதுரம் ஆகியோர் எம்ஜிஆரின் பெற்றோராக நடித்தது இன்னொரு சிறப்பு.

    கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு.

    ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர்.
    இன்றைக்கும் சினிமா பொழுதுபோக்கிற்காகவும், பணம் பண்ணும் தொழிலாகவும் பார்க்கபடுகிறது.

    இன்றைக்கும் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வாலிப ஹீரோவாக யாரும் நடிப்பதில்லை.

    சினிமா என்பது பொழுது போக்கு அம்சம் மட்டுமல்ல. சமூக புரட்சிக்கான ஆயுதம், அதை சரியாக பயன்படுத்தியவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர்.

    ஏன் எம்ஜிஆர் மற்ற நடிகரிடம் இருந்து வேறுபடுகிறார். ஆதிக்க சாதிகளின் பெருமை பேசாமல்,

    ஒடுக்க பட்ட மக்களின் பிரதிநியாக தன்னை முன்னிலை படுத்தி வர்க்க பேதத்தை சினிமா என்ற ஆயுதத்தின் மூலம் சாடினார்.

    சாதித்தும் காட்டினார். மறைந்தும் மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். வாழ்கிறார்..........Am...

  11. #870
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எஸ்.பி.பி.,க்காக காத்திருந்த எம்.ஜி.ஆர்.,

    எஸ்.பி.பி.க்கு தமிழில் முதன் முதலில் ஹோட்டல் ரம்பா என்ற படத்தில் பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடும் வாய்ப்பை வழங்கினார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை. அதன்பின் சாந்தி நிலையம் படத்தில் ''இயற்கை என்னும் இளைய கன்னி...'' என்ற பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து பாடினார். ஆனால் இதற்கு முன்னதாக எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண் படத்தில் இடம் பெற்ற 'ஆயிரம் நிலவே வா' பாடல் முதலில் வெளிவந்தது. இந்த பாடலின் பின்னணியில் ஒரு பெரிய சுவாரஸ்யமே இருக்கிறது.

    அடிமைப்பெண் படத்தில் புலமைப்பித்தன் எழுதிய 'ஆயிரம் நிலவே வா' பாடலை எஸ்.பி.பி., பாடுவதாக இருந்தது. ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், எஸ்.பி.பி.,க்கு காய்ச்சல். வேறு பாடகரை வைத்து பாடலை பதிவு செய்யவா என இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர், 'பத்திரிகையில் எம்.ஜி.ஆர்., நிராகரித்த குரல் என எழுதுவர். அது, சகாப்தம் படைக்க போகிற இளைஞனின் வாழ்க்கையை வீணாக்கிவிடும். படப்பிடிப்பை தள்ளி வைக்கிறேன்,' என்றார்.

    சில மாதம் கழித்து எஸ்.பி.பி.,யை பாட அழைத்த போது, அவரால் நம்ப முடியவில்லை. பாடலை முடித்ததும் எம்.ஜி.ஆரை சந்தித்து நன்றி கூறினார். அப்போது எம்.ஜி.ஆர்., ''என் படத்தில் பாடுவதாக நண்பர்களிடம் தெரிவித்திருப்பாய். வாய்ப்பு கிடைத்தும் பாடும் வாய்ப்பு தடைபட்டால், நீ ராசியில்லாதவன் என பிறர் கூறத்தொடங்கி விடுவர். நீ வளர வேண்டியவன். உனக்காகவே இப்பாட்டு காத்திருந்தது' என்றார். இப்பாடலை இலங்கை வானொலி மூலம் உலகம் எங்கும் ஒலிக்கச் செய்தார் எம்.ஜி.ஆர்.......... Kannan...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •