Page 35 of 210 FirstFirst ... 2533343536374585135 ... LastLast
Results 341 to 350 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #341
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    "எங்கள் தங்கம்" மக்கள் திலகத்தின் வெற்றிப் படங்களில் இதுவும் ஒன்று.. 1970 அக் 9 ல் வெளிவந்து
    மகத்தான வெற்றி பெற்று 100 நாட்கள் 4 திரையரங்குகளில் ஓடிய படம். படத்தை வேறொரு நல்ல கம்பெனி தயாரித்திருந்தால் இதைவிட மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும்.

    மேகலா பிக்சர்ஸ்
    என்ற கடனில் மூழ்கிக் கொண்டிருந்த கம்பெனியின் தயாரிப்பாகும். இதன் முக்கியமான பங்குதாரர் முரசொலி மாறனின் தயாரிப்பில் வெளிவந்த ஒரு சில படங்களின் கதையை கேட்டால் தெரியும் ஏன் இத்தனை தோல்வியென்று. அந்த படங்கள் தான் "மறக்க முடியுமா"? "வாலிப விருந்து" போன்றவை. . அவர்கள் மாமாவின் மனதில் என்ன தோன்றுகிறதோ அதுதான் கதை. மாமாவின் கற்பனையை விற்பனை செய்ய முடியாததால் கடன் பெருகியது.

    முரசொலி மாறனின் படிப்பு செலவோடு, அவர்களது முட்டாள்தனமான வியாபாரத்தால் பெருத்த நஷ்டமடைந்திருந்த அவரை கை தூக்கி விடுவதற்காக மக்கள் திலகம் சிரத்தை எடுத்து இலவசமாக நடித்து கொடுத்த படம் தான் "எங்கள் தங்கம்". அதன்பிறகு மந்திரி பதவி கிடைத்தவுடன் அவர்கள் ஊரை அடித்து உலையில் போட்டதுடன் பெரிய 100 ,200 கோடி பட்ஜெட் படங்கள் எடுக்கும் அளவுக்கு வளர்ந்த கதை அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

    எல்லா கலைஞர்களிடமும் தங்களது வறுமை நிலையை சொல்லி மிக குறைந்த சம்பளத்துடன் நடிக்க வைத்து படத்தயாரிப்பிலும் பணத்தை செலவு செய்யாமல் கஞ்சத்தனமாக எடுத்த படம். அதனாலே படம் பலமுறை தேதி தள்ளி வைக்கப்பட்டு வெளியான படம். படத்தின் ஆரம்ப காட்சியில் தலைவர் சிறு சேமிப்பு திட்ட துணை தலைவராக உண்மையான முகப் பொலிவுடன் வந்து ரசிகர்களை மகிழ்ச்சிக். கடலில் ஆழ்த்தினார்.

    எம்ஜிஆர் படத்தின் வெற்றிக்கு க்ளைமாக்ஸில் இடம் பெறும் சண்டை காட்சி முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் அதைக்கூட சிறப்பாக எடுக்காமல் ஒரு கிணத்துக்குள்ளே கலர் புகையை விட்டு, AVM ராஜனை தோளில் சுமந்தபடி வெளியேறுவது போன்ற காட்சியை வைத்து படத்தை சுலபத்தில் முடித்து விட்டார்கள். எப்போதுமே கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டை காட்சிக்கு மிகவும் செலவு செய்து செட்டிங்ஸ் போட்டு ஸ்டண்ட் மாஸ்டர் அருமையான புதுபுது
    யோசனைகளை
    அரங்கேற்றுவார்கள்.

    தலைவரின் பெரிய வெற்றிப்படங்களான "நாடோடி மன்னன்" "அடிமைப்பெண்" "மாட்டுக்கார வேலன்" "ரிக்ஷாக்காரன்" "உரிமைக்குரல்" "எங்க வீட்டு பிள்ளை" "உலகம் சுற்றும் வாலிபன்" போன்ற படங்களில் கிளைமாக்ஸ் சண்டை காட்சியை புதுப்புது முறைகளில் மக்கள் வியக்கும் வண்ணம் உருவாக்கி தந்ததால் படம் முடிந்தவுடன் மக்கள் பெரு மகிழ்ச்சியில் வெற்றி சேதியை வெளியில் சொல்வார்கள்.

    ஆனால் "எங்கள் தங்கத்தி"ல் கடைசி ஸ்டண்ட் நடக்கும் போது மக்களுக்கு அவ்வளவாக திருப்தி ஏற்படவில்லை. அதனால் படத்தின் வெற்றியின் அளவு சற்று குறைந்தது என்றே சொல்லலாம். படத்தின் வெற்றிக்கு தலைவரின் கதாகாலேட்சபம் ஒரு முக்கியமான காரணம் "எங்கள் தங்கம்" படத்துக்கு ஒரு பத்திரிகை எழுதிய விமர்சனம்
    இது.

    அடேயப்பா! அந்த சிறிய உருவத்துக்குள் இத்தனை சுறுசுறுப்பு, கண்களில் கொப்பளிக்கும் குறும்பு கதாகாலேட்சபம் செய்யும் பாங்கு அசத்திட்டார் போங்க!. இந்த ஒரு காட்சிக்காக படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று மனம் திறந்து பாராட்டியிருந்தார்கள். தான்தான் "நடிகப்பேரரசர்" என்பதை மிகை நடிப்பில்லாமல் அருமையாக நிரூபித்து விட்டார் அந்த காட்சியின் மூலம்.

    தலைவர் படம் வெளியாகி 20 நாட்களில் வந்த தீபாவளிக்கு வெளியான மாற்று நடிகரின் இரண்டு படங்களை 100 நாள் ஓட்டி
    .அதையும் ஆளில்லாமல் இருந்த தியேட்டரை நிரப்ப அழகான கலரில் எடுத்த அவரின் பிறந்தநாள் காட்சிகளை 2 ரீலுக்கு காண்பித்த பரிதாபநிலையை வேறு என்னவென்று சொல்வது.

    தூத்துக்குடியில் அப்படி. சைடு ரீல் ஓட்டியும் 6 வாரங்களை தாண்ட முடியவில்லை. உடன் வந்த பொன்மகள் படமோ 3 வாரம் கூட ஓட முடியவில்லை. ஆனால் திருநெல்வேலி பாப்புலரில் 100 நாள் ஓட்டியதற்காக தியேட்டருக்கு தான் ஷீல்டு கொடுக்க வேண்டும்.

    படம் வெளியான நேரம் மழை காலமாக இருந்ததால் பாலகிருஷ்ணா தியேட்டருக்குள் தண்ணீர் புகுந்து கொண்டது. மோட்டார் போட்டு அடித்தாலும் ஷோ ஆரம்பிக்கும் போது தண்ணீர் கரண்டைக்கு பெருகி விடும். படம் பார்ப்பவர்கள் கால்களை தொங்கவிட முடியாது.மேலும் கொசுக்கடி காரணமாக 2nd ஷோ கூட்டம் பாதிக்கப் பட்டதால் 50 நாட்கள் ஓட வேண்டிய படத்தை 40 நாட்களில் தூக்கி விட்டார்கள்.

    சென்னையில் ஏசி தியேட்டரில் வெளியாகாமல் சாதா தியேட்டரில் வெளியான தலைவர் படங்களில் "நம்நாட்டு"க்கு பிறகு 10 லட்சம்
    தாண்டிய படம் "எங்கள் தங்கம்" தான். ஓடி முடிய 10,01,765.96 ரூ வசூலாக பெற்று சாதனை படைத்தது. திருநெல்வேலியிலும் 66
    நாட்களில் 1,01,802.77 ரூ வசூலாக பெற்றது. மதுரையில் 100 நாட்களில்
    2, 75,920.91 ரூ வசூலாக
    பெற்று அசத்தியது. "குமரிக்கோட்டம்" (ஜன 26) வரும்வரை 109 நாட்கள் ஓடியது.

    மீண்டும் அடுத்த பதிவில்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #342
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    1972 ம் வருடம் சிவாஜி ரசிகர்கள் ஏதோ பெரிய சாதனை படைத்தது
    போல பிதற்றுவது, மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது. அப்படி என்ன பெரிய சாதனை என்று கேட்டால் வெளியான 7 படங்களில் தங்களது 5 படங்களை வெற்றி கோட்டுக்கு இழுத்து சென்று விட்ட பெருமிதத்தில் புளகாங்கிதம் அடைகிறார்கள். ஆனால் அங்கேதான் தர்மம் வீழ்ந்து எங்கே என்று தேடினாலும் கிடைக்கவில்லை.

    இரண்டு கார்கள் இஞ்சின் சக்தியை தெரியவேண்டி மதுரையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டது. ஒருகார் திருச்சி வருவதற்குள் அதன் சக்தியை இழந்து நின்று விட்டது. இன்னெரு கார் விழுப்புரம் தாண்டி செங்கல்பட்டு வரை வந்து இன்ஜின் சக்தியை இழந்து நின்று விட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் திருச்சியில் நின்ற காரில் வந்தவர்கள் அந்த காரை தள்ளியே சென்னை வரை கொண்டு சேர்த்து விட்டார்கள்.

    சென்னை வந்து சேர்ந்த அந்த மாவீரர்கள் தங்கள் கார் ஜெயித்ததாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். இன்னெரு காரில் வந்தவர்கள் காரை செங்கல்பட்டில் விட்டு விட்டு வேறோரு காரிலே சென்னை வந்து சேர்ந்தார்கள். இதில் வெற்றி பெற்றது யார? என்றால் என்ன பதில் சொல்வீர்கள். அது போலதான் 1972 லும் நடந்தது.

    5 படங்களில் மூன்று படங்களை 100 நாட்களும் 2 படங்களை வெள்ளிவிழாவுக்கும் இழுத்து சென்ற பெருமிதத்தோடு சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர்.உழைத்தவனுக்கு அல்லவா தெரியும் வருத்தம், என்பதை உணர்ந்து பெருமை கொள்வதில் அர்த்தம் இருக்கிறது.
    ஆனால் அவர்கள் அடித்த தம்பட்டத்தில் உண்மையான வெற்றி பெற்ற "நல்ல நேரம்" படத்தின் வெற்றி நமக்கு பெரிதாக தெரியவில்லை.

    அந்த வெற்றியின் வீரியத்தை உணர்த்ததான் இந்த பதிவு.
    1972 எம்ஜிஆருக்கு ஒரு மறக்கமுடியாத ஆண்டு. புரட்சி நடிகராக இருந்த வள்ளல் புரட்சி தலைவராக சிறப்பு அந்தஸ்து பெற்று உயர்ந்த ஆண்டு. ஆனால் சினிமாவில் மட்டும் அவரது இடத்தை வேறு யாராவது பிடிக்க முடியுமா? என்றால் முடியாது. இந்த கருணாநிதியும் கணேசனும் சென்னை சிட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு தாங்கள் தான் வெற்றி பெற்றதாக பெருமிதம் கொள்வதை பார்க்கிறோம்.

    தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதி இருக்கிறது.
    மொத்தம் பாதிக்கு மேல் ஜெயித்தால் தான் ஆட்சியை பிடிக்க முடியும். ஆனாலும் தாங்கள் முயற்சி செய்து பெற்ற ஒன்றிரண்டு வெற்றியை வைத்துக் கொண்டு தாம்தூம் என்று குதிப்பதை பார்த்தால் உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயை பார்த்த மாதிரி அவர்கள் குதிப்பது நமக்கு வேடிக்கையாக இருக்கிறது.

    சரி, இனி விஷயத்துக்கு வருவோம்."தர்மம் எங்கே?" பெற்ற தோல்வி அளவுக்கு நம்முடைய எந்த படமும் தோல்வியை அடையவில்லை. "சங்கே முழங்கு" "ராமன் தேடிய சீதை" "நான் ஏன் பிறந்தேன்" "அன்னமிட்ட கை" உட்பட அனைத்து படங்களும் 50 நாட்களை கடந்து75 நாட்கள் வரை ஓடியது.. "நான் ஏன் பிறந்தேன்" 80 நாட்களை கடந்தும் சராசரிக்கும் மேலான வெற்றியை பதிவு செய்தன. எல்லா படங்களுமே முதல் சுற்றில் 50 லட்சத்தை வசூல் செய்து வெற்றி பெற்றது.

    ஆனால் "பட்டிக்காடா பட்டணமா" "வசந்த மாளிகை" தவிர வேறெந்த படங்களும் 35 லட்சத்தை
    தாண்டவில்லை. "தர்மம் எங்கே" 20
    லட்சம் கூட தாண்டவில்லை."இதய வீணை" 100 நாட்களை கடந்தும் "நல்ல நேரம் 100 நாட்கள் சென்னையில் 4 தியேட்டர்களிலும் மேலும் பல ஊர்களில் 100 நாட்களை
    கடந்தும் இலங்கையில் 2 திரையரங்கில் 100நாட்களை கடந்தும் 1972 ல் "பிளாக்பஸ்டர்" தான்தான் என்பதை நிரூபித்த படம்.

    ஒரு படத்தின் வசூல் என்பது அதிக பட்சம் 50 நாட்களுக்குள் தெரிந்து விடும். அதன் பிறகு ஓடும் படங்கள் ஒரு சில ஊர்களில் 100 நாட்களும்
    175 நாட்களும் நடைபெற்றாலும் வசூலில் பெரிய மாற்றங்கள் செய்வதில்லை. "நல்ல நேரம்" திரையிடப்பட்ட 40 சென்டரில் 39 சென்டர்களில் 50
    நாட்களை கடந்து பிரமாண்ட வெற்றி முத்திரையை பதித்தது.

    ஆனால் "வசந்த மாளிகை" 26 சென்டரில்தான்
    50 நாட்களை கடந்து 12 தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டிய களைப்புடன் 175 நாட்கள் சாந்தியில் ஓட்டிய இரைப்புடன் மூச்சு நின்றது.
    "நல்ல நேரம்" 17 தியேட்டர்களில் 10 வாரங்களை அனாயசமாக கடந்து100நாட்களை 9 திரையரங்கில் கடந்தது. முதல் 6 மாதத்திலேயே 1 கோடியை தாண்டி வசூல் பெற்றது தேவரின் படம் இந்தி படங்களுக்கு இணையான வசூலை பெற்றது ஒரு மிகப் பெரும் ஆச்சர்யம்.

    ஆனால் "பட்டிக்காடா பட்டணமா" படத்தை 18 தியேட்டரில் தான் 50 நாட்கள் ஓட்ட முடிந்தது.
    சென்னையை பொருத்தவரை 4 ஏசி
    இல்லாத சாதாரண திரையரங்கில் "நல்ல நேரம்" வெளியாகி 100 நாட்களை கடந்து
    12 லட்சத்து 67000 க்கும் அதிகமான வசூலை பெற்று அந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் இடத்தை பிடித்தது. எப்படி என்கிறீர்களா?

    சாந்தியில் "வசந்த மாளிகை" மற்றும் "பட்டிக்காடா பட்டணமா" பெற்ற வசூலை 3 ல் வகுத்து வரும் வசூல் தான் சித்ராவின் வசூலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். ஏனென்றால் சாந்தியில் ஒரு டிக்கெட்டின் விலை சராசரி ரூ 3 என்றால் சித்ராவில் அது ரூ1 தான். அதை வைத்து சமன் செய்து பார்த்த ரசிகர்களின் அடிப்படையில் வெற்றி நிர்ணயிக்கப் படுவதுதான் நியாயம் என்று உணர வேண்டும்.

    சாந்தியில் மட்டுமே d c r சிவாஜி ரசிகர்களின் கையில். வசூலை எப்படி வேண்டுமானாலும் காட்ட முடியும். அதனால்தான் "திருவிளையாடல்" "தங்கப்பதக்கம்". வசூல் விளையாட்டு நடந்தது. 2004 சந்திரமுகி வரை (ஆளே இல்லாமல் 800 நாட்கள்) ஓட்டிய இந்த கூத்தும் நடந்தது. தர்மத்தை மறைத்து அவர்கள் நடத்திய "திருவிளையாடல்" இன்று(மன) சாந்தியை இல்லாமல் செய்து விட்டது.

    ஆனால் தர்மத்தை எங்கோ தொலைத்து விட்டு "தர்மம் எங்கே"? என்று தேடுபவர்களுக்கு எங்கே தெரியும் தர்மம். செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து தர்மத்துக்கு எதிரான யுத்தத்தில் இறங்கி தோற்றதை போல் தலைவருக்கு செய்ய வேண்டிய செஞ்சோற்று கடனை மீறி எங்கோ சேர்ந்து படுதோல்வி அடைந்த கணேசனின் நிலை? பரிதாபம்தான்.

    "நல்ல நேரம்" மதுரை மாவட்டத்தில் மதுரையை தவிர 8 ஊர்களில் 50 நாட்கள் ஓடியது.மதுரையில் அலங்கார் மற்றும் மூவிலேண்டில் வெளியாகி அலங்காரில் 112 நாட்களும் மூவியில் 5 வாரமும் ஓடி 4 லட்சம் வசூலை கடந்தது. சென்னை சித்ராவில் தொடர்ந்து 116 காட்சிகளும் மகாராணியில் தொடர்ந்து 121 காட்சிகளும் அரங்கு நிறைந்து சாதனை செய்தது.

    நெல்லையில் 84 நாட்களில் 161000 வசூலாக பெற்று "வசந்த மாளிகை"யை வெற்றி பெற்றது. நெல்லையில் "வசந்த மாளிகை" ஓடியதே 69 நாட்கள்தான். உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது. இன்னும் பல்வேறு சாதனைகளை இன்று வரை செய்து கொண்டிருக்கும் "நல்ல நேரம்" தலைவர் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நேரம்தான் என்று இதைவிட தெளிவாக சொல்ல முடியாது.

  4. #343
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #ஆச்சரியம் #ஆனால் #உண்மை...

    படித்ததைப் பகிர்கிறேன்.

    தீவிர திமுக அனுதாபியான முத்துக்குமார் என்பவரின் எம்ஜிஆரைப் பற்றிய வெளிப்படையான கருத்து.

    எம்ஜிஆர் ஒரு விசித்திர மனிதர். நாகப்பட்டினத்தில் என் வீட்டுச் சுவரில் யாரோ ஒட்டிவிட்டுப் போயிருந்த எம்ஜிஆர் போஸ்டர்களை நான் கிழித்து எறிய, அதனால் கடும் ஆவேசம் கொண்ட சில ரசிகர்களின் கெட்ட பேச்சுகளுக்கு ஆளாகியிருக்கிறேன்.

    ஐந்தாம் வகுப்பு வரை நான் படித்த பள்ளியில் கருணாநிதி, கலியமூர்த்தி என்று இரு தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் என் வகுப்பில் இருந்தனர். தினம் தினம் கலைஞர் கருணாநிதியையும் நடிகர் சிவாஜி கணேசனையும் திட்டித் தீர்ப்பதுதான் அவர்கள் வேலை. அவர்கள் இன்றும் எம்ஜிஆரை வழிபடும் பக்தர்களாகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    தமிழ்சினிமாக்களில் எம்ஜிஆர்தான் முதல் கமர்ஷியல் ஹீரோ. அவரைப் போட்டுப் படம் எடுத்தால் வெற்றி நிச்சயம். ஆனால் அவர் ஆரம்பத்தில் ஒரு ஹீரோவாக நடிப்பதற்கே எண்ணற்ற ஆண்டுகள் ஆயின என்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

    இன்றைக்கு முதல் படத்திலிருந்தே தாங்கள்தான் உலக மகா ஹீரோ என்ற நினைப்புடன் நடிக்கும் அரை வேக்காட்டு அபத்த நடிகர்களை எம்ஜிஆருடன் ஒப்பிட்டால் மலைப்பே ஏற்படுகிறது.

    தனிப்பட்ட முறையில் எந்த எம்ஜிஆர் படத்தையும் முழுதாக உட்கார்ந்து என்னால் பார்க்க முடிந்ததில்லை. அவர் படங்கள் வேறு யாருக்காகவோ எடுக்கப்பட்டுள்ளன என்று விட்டுவிடுவேன். அதேநேரத்தில் முழுவதும் பிடிக்காது என்று சொல்வதற்குமில்லை.

    அரசியல் தளத்தில் எம்ஜிஆர் எனக்குத் தனித்துத் தெரிந்தார். அவரால் எப்படி அந்தக் கட்டத்தில் ஒரு கட்சியை உருவாக்க முடிந்தது என்பதில் எனக்குப் பெருத்த ஆச்சரியம். கருணாநிதி தீவிரமான கட்சி அரசியலில் ஈடுபட்டு, கட்சியில் அமைப்புரீதியாக ஆதிக்கம் செலுத்தினார்.

    ஆனால் எம்.ஜி.ஆர் நிதி திரட்டுவது, பிரசாரங்களில் ஈடுபடுவது, சினிமாவில் திமுக கொடி, சின்னம், கருத்து ஆகியவற்றைப் புகுத்துவது என்ற அளவில்மட்டுமே இருந்து வந்தார்.

    திமுகவிலிருந்து நீக்கப்பட்டதும், கட்சியில் செல்வாக்குள்ள யாருமே எம்ஜிஆர் தரப்புக்கு வரவில்லை. நாஞ்சில் மனோகரன், கே.ஏ.மதியழகன் தவிர. இவர்களுடனும் தன் கூடவே இருக்கும் ஆர்.எம்.வீரப்பனுடனும் சேர்ந்து எம்ஜிஆர் ஒரு முழு அரசியல் கட்சியை உருவாக்கியிருந்தார். அது மாபெரும் வரலாற்று ஆச்சரியம்தான்.

    எம்.ஜி.ஆர் ஒரு முதலமைச்சராக எப்படிப் பணியாற்றினார் என்று தெளிவான பதிவுகள் இல்லை. ஆனால் என் சிறு வயதில், எம்ஜிஆருக்கு எதிராக மக்கள் பேசி நான் கேட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் அவர் மேல் ஒட்டியதே இல்லை. பாராட்டுகள் எல்லாம் எம்ஜிஆருக்குப் போகும்; இழிசொற்கள் எல்லாம் பிற அதிமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் போகும். எப்படி அப்படி ஒரு தெய்வம் போன்ற இமேஜை அவரால் உருவாக்க முடிந்தது என்பது மாபெரும் ஆச்சரியம்தான்.

    என்றாவது, யாராவது ஒருவர் எம்ஜிஆரின் நிர்வாகத்திறன் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களுக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது எம்ஜிஆர்தான் என்று ஏதோ காரணத்தால் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது உண்மையா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர் அவ்வப்போது ‘அண்ணாயிசம்’ என்று தன் ‘கொள்கை’களை விளக்க முற்பட்டாலும், அடிமனத்தில் மக்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படவேண்டும் என்று நினைத்த ஒரு "மக்கள் தலைவர்" என்ற எண்ணமும் என் மனத்தில் ஏற்பட்டுள்ளது.

    அவர் தன் வாழ்நாளில், ஏதோ ஒருவிதத்தில் பெரும்பான்மையான தமிழர்களைப் பாதித்திருந்தார். அவர் நோயில் படுத்திருந்த காலத்தில், அந்த உடல்நிலையில் அவர் நிர்வாகத்துக்குச் சற்றும் செயல்படமுடியாதவர் என்பதைச் சிறிதும் உணராமல் மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.

    "சாதாரண ஏழை மக்களின் நெஞ்சத்தை அவர் தொட்டிருக்காவிட்டால் இதைச் சாதித்திருக்கமுடியாது..."

    அவரது மறைவின்போது சென்னையில் நடந்த கலாட்டாக்களை நான் நேரில் பார்த்தேன். (அப்போது நான் சென்னை ஐஐடியில் படித்துக் கொண்டிருந்தேன். சைக்கிளை எடுத்துக்கொண்டு அண்ணா சாலையில் முட்டாள்தனமாக சுற்றினேன். ரசிகர்கள் யாராவது என்னை நையப் புடைத்திருக்கக்கூடும்! நல்லவேளையாக எந்தச் சேதாரமும் இன்றி ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்துவிட்டேன்!)

    அவர் மறைந்து பல ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அவரது நினைவு நாள் அன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது...!!! ������

    எப்பேர்ப்பட்ட மக்கள் தலைவராக எம்ஜிஆர் வாழ்ந்திருக்கிறார்...!.........

  5. #344
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #கடைக்கோடி #ரசிகனுக்கும் #மதிப்பளித்த #வாத்தியார்

    மக்கள்திலகம் தனது திரைப்படங்களைக் காணவரும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. உழைத்துக் களைத்து படம் பார்க்க வரும் மக்கள், படத்தைப் பார்த்துவிட்டு திருப்தியாக செல்லும் வகையிலேயே அவரது படங்கள் இருக்கும். பொழுதுபோக்கோடு நல்ல கருத்துக்களும் இருக்கும். படங்களில் மட்டுமின்றி; நிஜவாழ்விலும் தன்னைக் காணவரும் ரசிர்களுக்கு மதிப்பளித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் அவர்!

    சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த ‘தேர்த் திருவிழா’ படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் அருகே ஏழு மைல் தொலைவில் காவிரி ஆற்றில் நடந்தது. படப் பிடிப்பு நடந்த சமயம் கோடைக்காலம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். ‘‘படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து யாரும் தொல்லை செய்யக் கூடாது’’ என்று ஒலிப்பெருக்கி மூலம் எம்.ஜி.ஆர். அன்புக் கட்டளையிட்டார்.

    அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து ஒருவர்கூட படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகே செல்லவில்லை. கொதிக்கும் மணலில் நின்றபடியே தூரத்தில் இருந்து எம்.ஜி.ஆரைப் பார்த்து ரசித்தனர்.

    வெயிலில் நிற்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், மோர், தண்ணீர் கொடுக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.

    பத்து நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்து கும்பகோணம் திரும்பும் வழியில் சாலையின் இரு புறமும் மக்கள் கூடி நின்று எம்.ஜி.ஆரை வாழ்த்தினர். மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அன்பை வெளிப்படுத்தினர்.

    படப்பிடிப்பு குழுவினர் கும்பகோணம் டி.எஸ்.ஆர். இல்லத்தில் தங்கியிருந்த னர். அங்கும் தினமும் வாசலில் ரசிகர்கள் திரண்டனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.

    படப்பிடிப்பின் கடைசி நாளன்று திறந்த வேனில் ஏறி நின்று ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். சக கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் அவர்களையும் வேனில் ஏறச் சொல்லி மக்களின் வாழ்த்துக்களை ஏற்கச் செய்தார்.

    ஒரு ரசிகர் கூட்டத்தில் முண்டியடித்து முன்னேறினார். அவரை எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தடுத்தனர்.

    அதை கவனித்த எம்.ஜி.ஆர்., அந்த ரசிகரை அருகில் வரும்படி சைகை செய்தார். சின்னப்பா தேவர் அந்த ரசிகரை ‘அலாக்’காக தூக்கி வேன் மேலே ஏற்றினார். தன் கையில் வைத்திருந்த கடலைப் பொட்ட லத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார் அந்த ரசிகர். உடனேயே, ஒவ்வொரு கடலையாக வாயில் போட்டுக் கொள்ள ஆரம்பித் தார் எம்.ஜி.ஆர்.!

    உலகையே ஜெயித்துவிட்ட திருப்தி அந்த ரசிகரின் முகத்தில் ஜொலித்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது!...

  6. #345
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    படத்துறையில் மட்டுமல்ல கொடை துறையிலும் புரட்சி செய்தவர் புரட்சித் தலைவர்.

    மக்கள் சேவைக்கு "டிரஸ்ட்" அமைத்து ரூபாய் மூன்று லட்சம் ஒப்படைத்த வள்ளலுக்கும் வள்ளல் ஏழை பங்காளன் புரட்சித் தலைவர். இது நடந்தது ஏப்ரல் 1959 ஆம் வருடம். இந்த மூன்று லட்சம் இன்றைய முன்னூறு கோடி ரூபாய்க்கு சமம்

    இதற்கு அய்யனின் "பொய்யன்கள்" என்ன சொல்லப்போகிறார்கள். இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்..........

  7. #346
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய படத்துக்கு பெயர் வைக்கும் போது நம்பர் ஜோதிடம் பார்ப்பதில்லை.
    அந்தக்காலத்தில் படத்துக்கு பெயர் வைக்கும் போது கூட்டுத்தொகை 8
    வராமல் பார்த்துக் கொள்வது வழக்கம். அதையும் மீறி வைத்த
    ஒன்றிரண்டு படங்களும் ஓடாமல் படுதோல்வி அடைந்ததால் எல்லோரும் படத்தின் பெயருக்கு 8 என்கிற கூட்டுத்தொகை வராமல் பார்த்துக் கொண்டனர்.

    புதுமை இயக்குநர் ஸ்ரீதர் தன்னுடைய கனவுப்படம் "மீண்ட சொர்க்கம்" படுதோல்வி அடைந்த பிறகு அவரும் அதை
    தவிர்த்து வந்தார். ஆனால் எம்ஜிஆர் இந்த சென்டிமென்ட் பார்க்க மாட்டார்.
    சில கட்சி தலைவர்கள் வேட்பாளர்களின் ஜாதகங்களை அலசி ஆராய்ந்து தேர்தல் சமயத்தில் கிரகநிலைமை, ஜாதி இத்தனையும் அலசிப்பார்த்துதான் சீட் கொடுப்பார்கள்.

    ஆனால் தலைவரோ எல்லா இடத்திலேயும் நான்தான் நிற்கிறேன் என்று நினைத்து கொள்ளுங்கள் என்று சொல்லி யாரை வேண்டுமானாலும் நிறுத்துவார். அவரும் வெற்றி பெறுவார். அதேபோல் சினிமாவிலும் 8 எழுத்து சென்டிமென்ட் பார்க்க மாட்டார். 8 எழுத்தில் வைத்த அநேக படங்கள் தலைவருக்கு வெற்றியை பெற்று தந்திருக்கின்றன.

    உதாரணமாக "பல்லாண்டு வாழ்க" "எங்கள் தங்கம்" "குமரிக்கோட்டம்"
    "நேற்று இன்று நாளை" போன்ற படங்கள் பெரு வெற்றியை பெற்றன. "நான் ஆணையிட்டால்" "நீரும் நெருப்பும்" "ராமன் தேடிய சீதை" "ஒரு தாய் மக்கள்"
    "பாக்தாத் திருடன்" "மன்னாதி மன்னன்" போன்ற படங்கள் சுமாரான வெற்றியையும் பெற்றன.

    இருந்தாலும் எம்ஜிஆருக்கு எப்போதுமே 7 அதிர்ஷ்ட எண் என்று எல்லோரும் அறிவார்கள். அதற்கு காரணம் எம்ஜிஆர் முதல்வராக பொறுப்பேற்றபின் முதல் சட்டமன்றம் கூடியது 4-7-77 அன்றுதான்..அந்த நாள் தலைவரின் ராசிநாளாக பார்க்கப்பட்டது. அதை நினைவு படுத்தும் வகையில் அவரது கார் நம்பராக 4777 என்ற எண்ணை எம்ஜிஆர் தேர்ந்தெடுத்தார்.

    அதன்பிறகு 7 என்ற எண் எம்ஜிஆர் வாழ்க்கையில் பலமுறை பல முக்கியமான நிகழ்வுகளுக்கு காரணமாக அமைந்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஏழு எழுத்துக்களில் வெளியான அநேக படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை
    பதிவு செய்தது என்றே சொல்லலாம்.
    "மலைக்கள்ளன்" "நாடோடி மன்னன்" "வேட்டைக்காரன்"
    "ரிக் ஷாக்காரன்" "உரிமைக்குரல்" "மீனவ நண்பன்" போன்ற 7 எழுத்தில் முடியும் படங்களை சொல்லலாம்.

    அதேபோல் mgr என்ற எழுத்துக்கு நம்பர் ஜோதிடம் பார்த்தால் 4+3+2=9
    வருகிறது. அதனால் 9ம் எம்ஜிஆருக்கு ராசியான ஒரு நம்பராக எடுத்துக் கொள்ளலாம்.
    9 எழுத்துக்களில் வெளியான படங்கள் எல்லாம் பெரிய வெற்றியை
    பதிவு செய்திருக்கின்றன. அவைகள் என்னவென்று பார்க்கலாம். "எங்க வீட்டு பிள்ளை" "குடியிருந்த கோயில்"
    "மாட்டுக்கார வேலன்" போன்ற பெரிய வெற்றி பெற்ற படங்களை சொல்லலாம்.

    இருப்பினும் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தே வெற்றிக்கு காரணம் என்பதால் தலைவரின் ரசிகர்கள் எதையும் கருத்தில் கொள்வதில்லை.
    இதையே "பல்லாண்டு வாழ்க" திரைப்படத்தில் தலைவர் சொல்லுவார், 'நீங்களெல்லாம் வெறும் நம்பர்கள் அல்ல, என் நெருங்கிய நண்பர்கள்' என்று. அதுவே என்றும் எப்போதும் தலைவரின் நம்பிக்கையாக இருந்தது எனலாம்.

  8. #347
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில்* 07/07/2 0* *அன்று**திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
    -------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் சிலை வைக்கப்பட்டுள்ளது . இந்தியத்தலைவர்களில் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே அங்கு சிலை உள்ளது . இலங்கையில் கொழும்பிலும் எம்.ஜி.ஆருக்கு சிலை இருக்கிறது*மொரீஷியஸ் நாட்டில் ஒருமுறை அவர்களது சுதந்திர தினத்தன்று ,அந்நாட்டின் பிரதமரின் அழைப்பின் பேரில் எம்.ஜி.ஆர். அங்கு சென்று அந்த நாட்டின் தேசிய கொடி* ஏற்றி வைத்து உரையாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது . மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ரசிகர் மன்றங்கள் உண்டு .அந்தமானில் போர்ட் பிளேயரில்* பாரத பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி* 1965ல் பணத்தோட்டம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தை திறந்து வைத்துள்ளார் . ஒரு தென்னிந்திய நடிகருக்கு இந்திய பிரதமர் ஒருவர் ரசிகர் மன்றம் திறந்து வைத்திருப்பது முதலும் கடைசியுமாகும் என்பது சிறப்பு அம்சம் .



    அமெரிக்காவில் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வந்த எம்.ஜி.ஆருக்கு பிரத்யேகமாக பழங்கள், ஹார்லிக்ஸ் போன்ற இதர பானங்கள் ,ஏராளமான ரசிகர்கள் , முக்கிய விருந்தினர்கள், நடிகர் நடிகைகள், பட தயாரிப்பாளர்கள் , அமைச்சர்கள் , கட்சி பிரமுகர்கள் பலர் அனுப்பிய வண்ணம் இருந்தனர் . பக்தர்கள்* மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் பலவேறு வகையான**கோயில் பிரசாதங்கள்* நேரில் வந்து வழங்கினர் . பலர் வெளிநாடுகளில் இருந்து பார்சலில் அனுப்பி இருந்தனர் . இவையெல்லாம் வைப்பதற்கு ப்ரூக்ளின் நகரில் பிரத்யேகமாக ஒரு கட்டிடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு பாதுக்காப்பாக வைக்கப்பட்டிருந்தது என்பது சிறப்பான செய்தி*இந்த அதிசயங்கள் வேறு எந்த நடிகருக்கோ, தலைவருக்கோ நடந்ததாக சரித்திரம் இல்லை .அந்த வகையில் சாதனை படைத்தவர் எம்.ஜி.ஆர்..


    மலேசியா நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற எம்.ஜி.ஆர். கோயில் ஒன்று உள்ளது .அந்த கோயில் உள்ள இடத்தை மலேசியா நாடு சுற்றுலா தலமாக அமைத்துள்ளது .பிரான்ஸ், கனடா, மலேசியா ஆகிய நாடுகள் எம்.ஜி.ஆருக்காக*பிரத்யேக தபால் தலைகள் வெளியிட்டுள்ளன . எம்.ஜி.ஆரின் மறைவிற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அவையில்* இரங்கல் கூட்டம் நடத்தி, அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டது .


    எம்.ஜி.ஆர். சமூக படங்களில் வேரூன்றி நடித்து பல வெற்றிப்படங்கள் அளித்து வந்தபோது , ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு கால கட்டத்திலும் எந்தெந்த*படங்களுக்கு எப்படி பெயர் வைப்பது, எந்தெந்த கதாபாத்திரங்களுக்கு எந்த பெயர் சூட்டுவது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார் . உதாரணமாக பெரிய இடத்துப் பெண் படத்தில் கவிஞர் கண்ணதாசன் கட்டோடு குழலாட ஆட ,கண்ணென்ற மீனாட ஆட என்ற குற்றால குறவஞ்சி பாடலை புகுத்தி இருப்பார் .அந்த பாடலில் எம்.ஜி.ஆருக்கு இணையாக தில்லை, வள்ளியம்மை என்ற இரு கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகள் மணிமாலா, ஜோதிலட்சுமி .*சுதந்திர*போராட்ட தியாகியான தில்லையாடி வள்ளியம்மையின் பெயர் அந்த கதாபாத்திரங்களுக்கு சூட்டி தன்னுடைய தேசப்பற்றை* முடிந்த அளவிற்கு திரைப்படங்களில் வெளிப்படுத்தி ,போதித்தவர்*எம்.ஜி.ஆர்.*


    பெரிய இடத்து பெண் படத்தில் , பொதுஜன சேவகராக பல இடங்களில் பரிமளித்திருப்பார் . கோயிலில் பண்ணையார்கள், முக்கியஸ்தர்கள்* சுயநலமாக தங்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்து கொண்டிருப்பார்கள் . பொதுமக்கள்*அவர்கள் வெளிவரும்வரை வாயிலில் காத்திருப்பார்கள் . அதை கண்ட எம்.ஜி.ஆர். கோயில் எல்லோருக்கும் பொதுவானது . ஒரு சிலருக்காக பொதுமக்கள் வாயிலில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி எல்லோரையும் உள்ளே அழைத்து சென்று பண்ணையாரிடம், சம தர்மம் ,*பொது தரிசனம் ,பற்றி விவரமாக எடுத்துரைத்து பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் கோயிலில் நுழையலாம் . அதற்கு கால நிர்ணயம் கிடையாது*,பொதுஜன சேவையை அனைவரும் மதிக்க வேண்டும் , கோயில் தனிப்பட்ட மனிதருக்கு என்றுமே, எப்போதுமே சொந்தம் கிடையாது என்று வலியுறுத்தி பேசுவார் .*இது காலத்தின் கட்டாயம் என்பது போல திரைப்படங்களில் காட்சிகளை அமைத்தார் .


    தி .மு.க. தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஒருமுறை திரை அரங்குகளில் கேளிக்கை வரியை உயர்த்தினார் . அதற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது திரை அரங்கு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர் .திரை அரங்குகள் சில நாட்கள் மூடப்பட்டன . சில நாட்கள் கழித்து நடிகர் சிவாஜி கணேசன் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்று உடன்பாடு ஏற்பட்டது .அப்போது தி.மு.க. வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டிருந்த நேரம் .எம்.ஜி.ஆர். தன்னுடைய*ஆதிக்கம் திரை உலகில்தான் பிரதானம் என்று முடிசூடா*மன்னனாக*, வசூல் சக்கரவர்த்தியாக ,இதயக்கனி, பல்லாண்டு வாழ்க, நாளை நமதே,நீதிக்கு*தலைவணங்கு* ஊருக்கு உழைப்பவன் , உழைக்கும் கரங்கள் என்று பல படங்களில்தொடர்ந்து முழுமூச்சாக திரைத்துறையை தன் வசப்படுத்தி* , நடித்து கொண்டிருந்த பிஸியான*நேரம் .அந்த படங்களில் தனது*கட்சியின்*கொடி*, கொள்கைகள், திட்டங்கள், செயல்பாடுகள் அனைத்தையும்*பல காட்சிகளில் வெளிப்படுத்தி ரசிகர்கள் , தொண்டர்கள் கவனத்தை கவர்ந்தார் .வெற்றியும் பெற்றார் .


    எம்.ஜி.ஆர். ஒருமுறை பரங்கிமலை*தொகுதியில்*தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது ஒரு வயதான*மூதாட்டி எம்.ஜி.ஆரை*நெருங்கி காபி*கொண்டு வருகிறார் . எம்.ஜி.ஆர். நான் காப்பி*குடிப்பதில்லை என்றதும் ஓடிப்*போய் கடையில் சோடா வாங்கி வந்து தருகிறார்*.எம்.ஜி.ஆர். அதை வாங்கி கொஞ்சம் குடிக்கிறார் . பின்னர் அந்த மூதாட்டி எம்.ஜி.ஆரிடம் ,நான் ஒரு விஷயம் உங்களுக்கு சொல்லலாமா*என்று கேட்கிறார் .பரவாயில்லை சொல்லுங்கள் என்கிறார் . அந்த மூதாட்டி, நீங்கள் எப்போதும்*திரைப்படங்களில் நடிக்கும்போது நம்பியாரிடம் மட்டும் கொஞ்சம்*ஜாக்கிரதையாக இருங்கள்*.அவர் ஏதாவது தொல்லைகள் கொடுப்பார் .உங்களை*அடிக்க வருவார் . உங்கள்* உடம்பை*நன்றாக* வைத்துக் கொள்ளுங்கள் .இது எனது வேண்டுகோள் என்றதும் ,அந்த மூதாட்டியை எம்.ஜி.ஆர். கட்டிப்பிடித்து ,அவருடைய முகத்துடன்* தன்*கன்னத்தை*ஒட்டினாற்போல் பாசத்தை, அன்பை*வெளிப்படுத்தினார் .அதை புகைப்படமாக எடுத்தவர் சுபாஷ் சுந்தரம் என்கிற புகைப்படக்காரர்,.இந்த புகைப்படம் பின்னாளில் வந்த பொது தேர்தல்களில் ,பேனர்கள், சுவரொட்டிகளாக, தினசரிகளில் புகைப்படங்களாக வெளிவந்தன .* பிறகு தன்* உதவியாளர்களிடம் , திரைப்படங்களில் நடிப்பதை*நிஜம் என்று கருதி என்னிடம் அன்பை, பாசத்தை*இந்த முதியவர்கள் பொழிகிறார்களே, இவர்களுக்கு* நான் என்ன கைம்மாறு, எப்படி செய்ய போகிறேன்*என்று தெரியவில்லை என்றுசொல்லி நெகிழ்ந்து போனாராம் .



    உரிமைக்குரல் படத்தில்*எம்.ஜி.ஆர். புதுமையான வடிவில்*கீழ்ப்பாசை வேட்டி* கட்டி நடித்தார் .இந்த படத்தின் வெற்றியை*தொடர்ந்து பல படங்களில் இந்த மாதிரி வேட்டி அணிந்து நடித்தார் .எம்.ஜி.ஆரின்*உடை தயாரிப்பு நிபுணராக*திரு.எம்.ஏ.முத்துவும் அவருக்கு*உதவியாளராக*காதர் என்பவரும் இருந்தனர்*.எம்.ஜி.ஆர். எப்போதும் வயிற்று பகுதியில்தெரிவது போல்**கரை* வரக்கூடாது*அதற்கு*கீழே*சிவப்பு, மேலே கருப்பு வருவது*போலவும் , இடையில் வெள்ளை வருவது போல* .தனது கட்சி கொடி, ,கொள்கைகள் விளக்குவது போல் அந்த வடிவம் அமைய வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார் .அதன்படி*அந்த வேட்டியின் வடிவத்தை*அமைத்து தந்தஎம்.ஏ.முத்துவையும், உதவியாளர் காதரையும்*எம்.ஜி.ஆர். வெகுவாக பாராட்டினார் .*அந்த வடிவம்தான்*எம்.ஜி.ஆரின் இரு கால்கள்* பகுதியில்*பார்டராக அ .தி.மு.க. கட்சி வேட்டியாக ,கருப்பு,வெள்ளை, சிவப்பு*நிறங்கள்*கொண்ட வண்ணத்தில் உருவானது .



    எம்.ஜி.ஆர். சினிமா, அரசியல் இரண்டிலும் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும்*தன் தாயை வணங்கி, வழிபட்டு ,தாயே துணை என்று சுழி போட்டு தான் ,தாயின் கட்டளையை ஏற்று வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்*ஆரம்பிப்பது வழக்கம் . அதன்படி நடந்தார் .நடந்து கொண்டிருந்தார் இறுதி வரை. அதற்கு பல்வேறு உதாரணங்கள் குறிப்பிடலாம் எம்.ஜி.ஆர். 1977 சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல்வராகிறார் .* ஆனால் அவர் உடனடியாக பதவி ஏற்க முயலவில்லை . காலையில் வெற்றி செய்தி வந்ததும் கோட்டை வாயிலில் அவரை வரவேற்க லட்சக்கணக்கான மக்கள் குவியும் சூழ்நிலையில்*எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றுவிட்டார் .அவர்தான் முதல்வர் என்று தீர்மானம் ஆகிவிட்டது உடனே பதவி ஏற்க கோட்டைக்கு செல்லாமல் ,தனக்காக காத்திருந்த பட தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வண்ணம் எஞ்சி இருந்த மீனவ நண்பன் படப்பிடிப்பு வேலைகள், படத்தொகுப்பு, டப்பிங் ,பின்னணி இசை வேலைகளுக்காகவும், தொடர்ந்து மறைந்த இயக்குனர் பந்துலுவின் படமான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தின் வேலைகள்*முடிக்க ஆயத்தமாகவும் செயல்பட்டார் .இடைப்பட்ட நேரத்தில் ஆளுநர் மாளிகையில் இருந்து எம்.ஜி.ஆர். எப்போது பதவி ஏற்க உள்ளார் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்த நேரம் .ஆனால் அவர் பதவி ஏற்பதில் அவசரம் காட்டாமல் பட தயாரிப்பாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றினார் .முதல்வர் பதவிக்காக சண்டை, சச்சரவு, அடித்துக் கொள்ளும் இந்த காலத்தில் எம்.ஜி.ஆர். பொறுமை காத்து ,தான் அபரிமிதமான வெற்றியை பெற்றுவிட்டாலும், பதவிக்காக ஓடோடி சென்று கோட்டையில் சென்று முதல்வர் இருக்கையில் அமருவதில்* முனைப்பு காட்டாமல் தன்னுடைய திரை துறை வேலைகளை முழுமையாக முடித்துவிட்டு , நிதானமாக மக்கள் முன்னிலையில் பதவியேற்று , பத்தாண்டுகள் மேலாக* தொடர்ந்து மூன்று முறை* முதல்வராக நீடித்தார் .


    இந்த சகாப்தம் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள், பொதுமக்கள் தந்து கொண்டிருக்கிற ஆதரவு மிக பெரிய உற்சாகத்தை தருகிறது .* எங்கு எப்போது யார் பார்த்தாலும், நேரிலோ, தொலைபேசியிலோ, கைபேசியிலோ இந்த நிகழ்ச்சியை பற்றி பேசுவது நெகிழ்ச்சியாக உள்ளது .இந்த கொரோனா கொடிய நோய்* பரவல் காலத்தில், மிகவும், நம்பிக்கையாகவும், மாமருந்தாகவும் , ஆறுதலாகவும் இருக்கிறது மனிதநேயம், மனிதாபிமானம் கொண்ட எம்.ஜி.ஆரின் திருமுகத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருந்தாலும் சலிப்பு தோன்றுவதில்லைஎன்று பலரும் வியந்து எம்.ஜி.ஆரை ,அவரின் செயல்பாடுகளை போற்றுகிறார்கள் .இந்த போற்றுதல் தொடர்ந்து கொண்டே இருக்க, இந்த கொரோனா நோய் பரவும் காலத்தில் ஆறுதலாக**இருக்க, சகாப்தம் நிகழ்ச்சியை*எம்.ஜி.ஆர் .என்கிற அரிய மனிதரின் அரிய வாழ்க்கையை, ஏழை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய பல்வேறு வாழ்க்கை எடுத்து காட்டுக்களை தொடர்ந்து அறிந்து கொள்வோம் .


    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ---------------------------------------------------------------------------------
    1.துள்ளுவதோ இளமை - குடியிருந்த கோயில்*

    2.நீல நிறம் , வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் - என் அண்ணன்*

    3.பன்சாயி, காதல் பறவைகள்* *- உலகம் சுற்றும் வாலிபன்*

    4.ஒரே முறைதான் உன்னோடு பேசிப்பார்ப்பேன் - தனிப்பிறவி*

    5.கண் போன போக்கிலே கால் போகலாமா - பணம் படைத்தவன்*

    6.பெரிய இடத்து பெண் படத்தில் எம்.ஜி.ஆர்.*

    7.எம்.ஜி.ஆர். - எம்.ஆர். ராதா உரையாடல் -பெரிய இடத்து பெண்*

    8.இது நாட்டை காக்கும் கை - இன்று போல் என்றும் வாழ்க*

    9.எம்.ஜி.ஆர். -நம்பியார் மோதல் - எங்க வீட்டு பிள்ளை*

    10.நேத்து பூத்தாலே* ரோஜா மொட்டு -* உரிமைக்குரல்*

    11.எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா உரையாடல் - அடிமைப்பெண்*

  9. #348
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பெங்களுரில்�� நட்ராஜ் திரையரங்கில்
    மக்கள் திலகம் எம்ஜிஆர் படம்
    ஒளி விளக்கு படத்தின் கோலகலமாகன
    மலைபோல் மாலைகள்.23-12-2016..அன்று...

    மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு - 1968 முதல் 2013 இன்று வரை 45 ஆண்டுகளாக தொடர்ந்து
    தமிழ் நாடு - கேரளா - ஆந்திரா - கர்நாடகம் - இலங்கை போன்ற இடங்களில் பல முறை
    திரையிடப்பட்டு சாதனை புரிந்துள்ளது .
    1984 - நவம்பர் மாதம் பெங்களுர் நகரில் 7 அரங்கில் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது .

    தேவி - 21 நாட்கள்
    சிவாஜி - 14 நாட்கள்
    நாகா - 14 நாட்கள்
    ஜெயஸ்ரீ - 7 நாட்கள்
    பாலாஜி - 7 நாட்கள்
    கோபால் -7 நாட்கள்
    மாருதி - 7 நாட்கள் - ஓடி வசூலில் சாதனை புரிந்தது

    அசத்தலான படத்தின் தலைப்பு
    ஆரம்பத்தில் மக்கள் திலகம் ஓடி வரும் அற்புத காட்சி.
    தேன்சொட்டும் பாடல்கள்
    வண்ண வண்ண உடைகளில் மக்கள் திலகம் தோன்றும் காட்சிகள். அவரின் நவரச நடிப்பு.
    சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகள்.
    சிறந்த கதை
    உன்னத உரையாடல்கள்.
    பொன்மனச்செம்மலின் 100-வது படமான ஒளி விளக்கு அவரின் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த படம்.....

    நான் கெட்டவன்தான் - அனால் கேவலமானவன் இல்லை - இது போன்ற ஆழ்ந்த பொருள் பொதிந்த வசனங்கள் படம் பூராவும் விரவியிருக்கும்... பட்டன் கத்தியை எவ்வளவோ பெயர் கையாண்டிருக்கிறார்கள் !!! அனால் இந்த படத்தில் mgr அவர்கள் பட்டனை முடிக்கி நீட்டி பின் திரும்பவும் மடக்கும் லாவகம் இருக்கிறதே! அப்பப்பா !!! அதற்கு எவ்வளவு முறையான பயிற்சி எடுத்திருந்தால் காட்சியில் சிறப்புற பரிணமளிக்கும் என்பதை அச்செயலை செய்து பார்த்தவர்களுக்கே விளங்கும்...

    1984 அக்டோபரில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அவர் குணம் அடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தன.
    அப்போது “ஒளிவிளக்கு” படத்தில் வாலி எழுதியிருந்த “இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ திருவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு” என்ற பாடல்தான் பிரார்த்தனை கீதமாக ஒலிபரப்பப்பட்டது.
    எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது, மிகுந்த மனச்சுமையோடு அவரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றிருக்கிறார் கவிஞர் வாலி. திருமதி ஜானகி அம்மாளும், சத்தியவாணிமுத்து அம்மையாரும் கண் கலங்க நின்று கொண்டிருக்க, ஆறுதல் சொன்னார் கவிஞர்.
    “உங்கள் ஒளிவிளக்கு படத்து பாடலைத்தான், நாடே பாடி உங்கள் அண்ணனுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. அந்த பிரார்த்தனையின் பலனாகத்தான், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். இனிமேல் அவருக்கு ஆபத்து இலலை” என்று திருமதி ஜானகி அம்மையார் கண்கள் பனிக்க வாலியிடம் கூறினாராம்.
    “என் பாட்டுடைத் தலைவனுக்கு என் பாட்டே பிரார்த்தனை கீதமாக ஆனது குறித்து, நான் அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். இருந்தாலும், அம்மா! இது வாலி பாக்கியம் அல்ல; உங்கள் தாலி பாக்கியம்” என்று சமயோசிதமாக பதில் கூறினாராம் நம் கவிஞர்....
    ✌✌✌��������✌✌✌✌✌
    வாழ்க தலைவரின் புகழ் என்றுமே.........

  10. #349
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 08/07/20* அன்று திரு.துரை பாரதி*அளித்த தகவல்கள்*
    -----------------------------------------------------------------------------------------------------------
    சகாப்தம் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை ஒரு ஆராய்ச்சியாளனாக, வரலாற்று ஆசிரியராக இருந்து இந்த தொடரில் பல்வேறு விதமான தகவல்களை அளித்து வருகிறேன் .*


    புரட்சி தலைவர் எம்.ஜி .ஆர். அவர்கள் சினிமாவில் வாய்ப்புகள் தேடி வந்த காலத்தில், சென்னையில், வால்டாக்ஸ் சாலை அருகில், ஒற்றைவாடை அரங்கு அருகாமையில் தன் தாயார், அண்ணன் , அண்ணியுடன் மாதம் ரூ.15/- வாடகைக்கு வசதியற்ற வீட்டில் குடி இருந்தவர் ,*இந்த தமிழ்நாட்டை , ஆளும் வல்லமையை எப்படி பெற்றார் என்பதற்கு நீண்ட வரலாறு உண்டு . ஒரு சாமான்ய மனிதர், மிக பெரிய ஆட்கள் பலமில்லை, பெரிய படிப்பு அறிவு இல்லை . பெரும் பணக்காரர் இல்லை ,ஆனாலும் இத்தனை கோடி தமிழர்களின் நெஞ்சங்களில், இதயங்களில் இடம் பிடித்து , பல எதிர்ப்புகளை வென்று, எப்படி ஆட்சியை பிடித்தார் ,அதற்கான வழிகளை எவ்வாறு கண்டறிந்தார் எங்ஙனம் வாழ்ந்து காட்டினார் என்ற தகவல்களை தான் நாம் ஆராய்ந்து வருகிறோம் .



    பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகளை, வழிகளை, பல்வேறு வகைகளில் எம்.ஜி.ஆர். பின்பற்றி நடந்து வந்தார் .* திரைப்படங்களில், நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து, சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா .சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா, எல்லோருக்கும் வழி காட்ட நானிருக்கிறேன் , வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன் , அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியை போல் நேருவின் புகழ் சொல்லும் பூமி இது, விழிபோல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும், தவறான பேர்க்கு நேர்வழி காட்ட வேண்டும் , ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் , தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார் என்று பாடி நடித்தார் ..இன்னும் எவ்வளவோ பாடல்கள் உள்ளன .


    கடவுள் நம்பிக்கையை பற்றி அண்ணா , ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கின்றான் என்று சொன்னார் . எம்.ஜி.ஆர். அடிமைப்பெண் படத்தில்*இறைவன் ஒருவன் இருக்கின்றான் ,அவன் கருப்பா, சிவப்பா தெரியாது ,*ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான் .ஆனந்த ஜோதி படத்தில் கடவுள் இருக்கின்றான் ,அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா என்று பாடி நடித்துள்ளார் .அண்ணாவின் கனவுகளை, பொன்மொழிகளை,நினைவுகளை* தனது திரைப்படங்களின் மூலம் நகரங்கள், கிராமங்கள், பட்டி, தொட்டியெல்லாம் கொண்டு சென்று பேரறிஞர் அண்ணாவுக்கு பெரும் புகழ் சேர்த்த பெருமை மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு .*



    ஒருமுறை பேரறிஞர் அண்ணா சக தலைவர்களுடன் வெளியூரில் காரில் பயணம் செய்யும்போது கார் டயர் பஞ்சர் ஆகி பழுது பார்க்கும் நேரம் . காரில் உள்ள தி.மு.க. கொடியை பார்த்து அண்ணாவிடம் அந்த ஊர் கிராமத்தினர்*நீங்கள் எம்.ஜி.ஆர். கட்சியை சார்ந்தவரா என்று கேட்கிறார்கள். அப்போது அண்ணா பெருந்தன்மையுடன் ஆமாம் என்று சொன்னாராம் . எம்.ஜி.ஆர். கட்சி என்றாலே தி.மு.,க. தான் என்று புற நகரங்களிலும், கிராமங்களிலும் மக்கள் கருதி வந்த காலம் அது .தன்னுடைய உழைப்பு, அறிவு, ஆற்றல் ,அழகு , அனைத்தையும் தி.மு.க.வுக்கு அர்ப்பணித்து கட்சியை வளர்த்த எம்.ஜி.ஆரை*1972ல் தி.மு.க.வில் இருந்து தூக்கி எறிந்தனர் .**



    மதுரையில் நடந்த தி.மு.க. மாநில மாநாட்டை முரசொலி மாறன் தலைமையில் கருணாநிதியின் மகன் மு.க முத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார் . 1972ல் பிள்ளையோ பிள்ளை மு.க.முத்து நடிப்பில் வெளியானது .அந்த நேரத்தில் பிள்ளை இல்லை என்று ஏங்குவோர் பலரிருக்க , இங்கு வந்திருக்கிறார் பிள்ளையோ பிள்ளை என்று எம்.ஜி.ஆரை ஏளனம் செய்து பேசினார்கள் .* இந்த பேச்சுக்களை கேட்டு கொதிப்படைந்த எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினர் கருப்பு சிவப்பு* நிறம் கொண்ட தி.மு.க. கொடியில் தாமரை சின்னத்தை வரைந்து உருவாக்கினார்கள் . அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் திரு. தாமரைக்கனி (முன்னாள் எம்.எல்.ஏ.)தலைமையிலும் மாவட்டத்தில் திரு. எஸ்.டி.எம்.சந்திரன் என்பவர் தலைமையிலும் கொடி ஏற்றி வைக்கப்பட்டது .அங்கு நடந்த முதல் கூட்டத்தில் தேரடி அருகில் திரு.சைதை துரைசாமி அவர்கள் பேசினார்கள் .நீங்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் அவர்களின் கொள்கை காக்கும் பொறுமையாளர்கள்*என்றபோது , கூட்டத்தினர் நீங்கள் பொறுமை காக்க சொல்கிறீர்கள். ஆனால் எங்கு பார்த்தாலும் எம்.ஜி.ஆர். மன்றங்கள் கலைக்கப்படுகின்றன . மு.க. முத்து*மன்றங்கள்* ஆரம்பிக்க சொல்லி வற்புறுத்துகிறார்கள் எம்.ஜி.ஆர். மன்றங்களை எல்லாம் கலைத்தால் நாங்கள் எங்கு செல்வது என்று வருத்தப்பட்டார்கள்*அவர்களது வருத்தத்தில் நியாயம் இருந்தது .ஏனென்றால் , ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், தன்னை எதிர்ப்பவர்களை, முறியடிப்பதில், அடிப்பதில் வல்லவர்* என்கிற கருணாநிதியின் வல்லமையை அறிந்து இருந்தவர் எம்.ஜி.ஆர்.*



    ஆரம்பத்தில் கட்சி ஆரம்பிப்பதில் எம்.ஜி.ஆர். மிகவும் தயக்கம் காட்டினார் .அப்போது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு.கல்யாணசுந்தரத்துடன் தொடர்பு கொள்ள விரும்பினார் . எந்த இடத்தில, எந்த நேரத்தில் சந்திப்பது ,யாருடைய காரில் செல்வது எப்படி பார்ப்பது என்று சில தயக்கங்கள்* இருந்தன* காரணம்*கருணாநிதியின் உளவாளிகள் ஆங்காங்கு உளவு பார்த்து தகவல்கள் சொல்வதற்கு நியமிக்கப்பட்டார்கள் .* எனவே மிகவும் ரகசியமாக வேறு ஒருவர் காரில் எம்.ஜி.ஆர். சென்று கல்யாணசுந்தரம் அவர்களுடன் பேசினார் .இருவரும் கலந்து பேசியபின் கட்சி ஆரம்பிக்க முடிவு செய்த எம்.ஜி.ஆர். ,நான் தனி மனிதன்**,என்னை யார் தாக்கினாலும் தாங்கி கொள்ளும் தைரியமும், எதிர்க்கும் மனோபாவமும் உள்ளது .***ஆனால் ,என்னால் என் அப்பாவி, ரசிகர்கள், தொண்டர்கள் அடிபடுவதை, காயப்படுவதை, உயிர் இழப்பதை எப்படி தாங்க முடியும் . எத்தனை குடும்பங்களை என்னால் காப்பாற்ற முடியும் . இதற்கு ஒரு முடிவு வேண்டும் அதனால்தான் கட்சி ஆரம்பிக்க முடிவு எடுத்துள்ளேன் என்று வெளிப்படையாக பேசினார் . எம்.ஜி.ஆர். மற்றவர்களை போல ஆட்சி, அதிகாரம், பதவி என்ற நோக்கத்தில் முடிவு எடுக்கவில்லை, தன்னை நம்பி இருப்பவர்கள் யாரும் காயப்பட்டு விடக் கூடாது , உயிர் இழந்து விடக்கூடாது , அதனால் அவர்களுடைய குடும்பங்கள் நிர்க்கதியாக தெருவில் நிற்க கூடாது என்று மனதார விரும்பினார் . அதனால் ஆரம்பத்தில் இருந்த தயக்கங்கள், இந்த பேச்சு வார்த்தைகளின் மூலம் நீங்கி கட்சி ஆரம்பிக்க தீர்க்கமான முடிவு எடுத்தார் எம்.ஜி.ஆர்.*

    மேலும் பல தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்*

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    --------------------------------------------------------------------------------
    1.புதிய வானம், புதிய பூமி,* - அன்பே வா*

    2.உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் - வேட்டைக்காரன்*

    3.உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் -நவரத்தினம்*

    4.உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது - அடிமைப்பெண்*

    5.நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி*

    6.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்* - தெய்வத்தாய்*

    7.ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் - உரிமைக்குரல்*

    8.எத்தனை* பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு -ஆசைமுகம்*

    9.ஏமாற்றாதே, ஏமாற்றாதே - அடிமைப்பெண்*

    10.மக்களாட்சிக்காக போராடும் எம்.ஜி.ஆர். -நாடோடி மன்னன்*

  11. #350
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*அவர்கள்* 10/07/20அன்று சொன்ன*தகவல்கள்*
    -------------------------------------------------------------------------------------------------------------

    சகாப்தம் நிகழ்ச்சியை கண்டு களித்து ,ரசித்து வரும் பக்தர்கள் யாராவது சிலர்*ஒவ்வொரு நாளும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய தகவல்கள் அறிந்து ,நெகிழ்ந்து புகழ்ந்த வண்ணம் உள்ளார்கள் என்பது மனதிற்கு தெம்பை தருகிறது .அவரை பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்ளும் பல்வேறு* விஷயங்கள் ஆச்சரியப்படத்தக்க வை . அதிசயிக்கத்தக்கவை* ஆகும்*

    வாழ்க்கையில் ஒரு சொல், இசை, ஒரு ,வார்த்தை, ஒரு மனிதனின் சந்திப்பு எவ்வளவு பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு எம்.ஜி.ஆர்.என்கிற ஒரு மாமனிதரின் பங்களிப்பு ஒரு உதாரணம் . மனிதநேய மிக்க மாமனிதரான எம்.ஜி.ஆர் என்கிற அற்புத மனிதரின் செய்கைகள், செயல்பாடுகள் ,உதவிகள் ,கொடைத்தன்மைகள், பல லட்சக்கணக்கான மக்களிடையே பல அற்புதங்கள்*நிகழ்த்தியுள்ளது என்று அவரது வாழ்க்கை வரலாற்று செய்திகள் ,சம்பவங்கள்*பல நூல்களில் அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளன . இதற்கு பல உதாரணங்கள் கூறலாம் .மும்பையில் தாராவி பகுதியில் புலவர் ராமச்சந்திரன் என்பவர் எம்.ஜி.ஆர். நினைவாக பல நல்ல சமூகநல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார் .பல ஊர்களில், பல நகரங்களில்,ஏன் வெளிநாட்டில் கூட எம்.ஜி.ஆர். நினைவாக இன்றும் பல நல்ல சமூக நல திட்டங்கள் பலரால்* செயல்படுத்தபடுகிறது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன .திலகம் என்றாலே நெற்றியில் இட்டுக் கொள்வது .மறைந்தும் மறையாத மக்கள் திலகமாகிய எம்.ஜி.ஆர். மக்களின் நெஞ்சங்களில் இட்டுக் கொண்ட* திலகமாக திகழ்கிறார் என்பதற்கு* இந்த சகாப்தம் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து பெருகி வரும் ஆதரவு, பாராட்டு, வாழ்த்து செய்தி நம்மை ஊக்குவித்து வருகிறது என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறேன் .


    சென்னை தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். அலுவலகத்தில் சுமார் 15 வயதுள்ள சிறுவன் ஒருவன் பணியாற்றி வந்தான் . அலுவலகத்திற்கு வருபவர்களை கவனிப்பது , இருக்கையில் அமர செய்வது ,நாற்காலிகளை ஒழுங்கு படுத்துவது .போன்ற சிறுசிறு வேலைகள் செய்து வந்தான் .ஒரு நாள் ஏதோ கோபத்தில் எம்.ஜி.ஆர். அந்த சிறுவனை வேலையை விட்டு நீக்கி வெளியே அனுப்பி விடுகிறார் .* பத்திரிகையாளர் கார்த்தி என்பவர் அந்த சிறுவனை ஒரு டீக்கடையில் பார்த்துவிட்டு, ஏன் தலைவர் அலுவலகத்திற்கு வரவில்லை இங்கு என்ன வேலை உனக்கு என்று கேட்க, அந்த சிறுவன் தலைவர் என்னை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று கூறுகிறான் .அப்படியென்றால் எங்கு சாப்பிடுகிறாய், எங்கே தங்குகிறாய் என்று கேட்க*ஏதோ கிடைத்ததை சாப்பிடுகிறேன் .சில சமயம் ஏதாவது பிளாட்பாரத்தில் தூங்கிவிடுவேன் என்கிறான் . என்ன செய்வது என்று புரியவில்லை, எங்கே போவது என்று தெரியவில்லை என்று புலம்பி அழுதான் .* அதன் பிறகு எம்.ஜி.ஆரை சந்தித்த கார்த்தி எங்கே அந்த சிறுவனை காணோம் என்று கேட்க ,அவன் செய்த தவறுகளால் வெளியே அனுப்பிவிட்டேன் . என் பெயரை சொல்லி சிலரிடம் பணம் வாங்கியுள்ளான் செய்யத்தகாத செயல்களை செய்துள்ளான்*என்று கூறினார் .எம்.ஜி.ஆர். பதிலுக்கு கார்த்தி, அவன் எங்கே போவான், அவனுக்கு உற்றார், உறவினர் கிடையாது, சாப்பாட்டுக்கு வழியில்லை . ஏதோ பிளாட்பாரத்தில்தான் தங்குவான் போலிருக்கிறது . நான் ஒரு டீக்கடையில் அவனை பார்த்தேன் .விசாரித்ததில் தலைவர்தான்* என்னை வெளியே அனுப்பி விட்டார் என்று* வருத்தப்பட்டு சொன்னான் என்பதற்கு எம்.ஜி.ஆர். நான் முடிவெடுத்துவிட்டால் அதை மாற்ற முடியாது என்றார் .சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் கார்த்தி எம்.ஜி.ஆரிடம் அவனுடைய பிரச்சனைகளான,உணவு, உடைகள் உறைவிடம், உறவினர் எவரும் கிடையாது என்று மீண்டும் சொல்லி*அவன் மிகவும் கஷ்டப்படுகிறான் , மீண்டும் தவறு செய்யமாட்டான் என்று தோன்றுகிறது என்று கூறினார் கார்த்தி. சில நிமிடங்கள் கழித்து, எம்.ஜி.ஆர். கார்த்தியிடம் நான் அவனை கூப்பிடும் நிலையில் இல்லை . வேண்டுமானால் நீங்கள் சென்று அவனிடம் பேசி , வேலையில் வந்து மீண்டும் சேர சொல்லுங்கள்*மீண்டும் தவறுகள் நடக்காத வண்ணம் அவனுக்கு அறிவுரை கூறுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். எந்த பிரச்னையாக இருந்தாலும் , சொல்கிறவர் சின்னவரா, பெரியவரா , முக்கியஸ்தரா என்று பார்க்காமல் பிரச்னையின் சூழ்நிலையை கருதி , மனம் இரங்கி , மீண்டும் அந்த சிறுவனை மன்னித்து* வேலையில் சேர்த்துக் கொண்டாராம் எம்.ஜி.ஆர்.*


    கார்த்தி என்பவர் சென்னை டீக்கடை உரிமையாளர் சங்கத்தின் தலைவராக* சில காலம்*இருந்தார்.* *டீக்கடை உரிமையாளர் சங்கத்திற்கான வித்து, விதை என்பது*எம்.ஜி.ஆர். என்கிற மாமனிதரின் பேராதரவால் உருவானது .என்பது பலரும் அறியாத விஷயம் .ராயப்பேட்டையில் சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்க அலுவலகம் மறைந்த கார்த்தி வைத்திருந்தார் .அவருக்கு சொந்த வீடு கிடையாது . எம்.ஜி.ஆர். முதல்வராக பக்கத்தில்* இருந்தபோது வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒரு வீடுகூட வாங்கியிருக்கலாம் .ஆனால் வாங்கவில்லை .தான் எந்த வசதியும் பெற்றுக் கொள்ளாதவர் , தனக்கென்று*எதையும் வாங்கி கொள்ளாமல் ஒரு அர்ப்பணிப்போடு பணியாற்றியவர் .பல அமைச்சர்கள் அவரை பார்ப்பதற்காக, அமைச்சராவதற்கு முன்னால்** நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அண்ணா பத்திரிகை அலுவலகத்தில் மணிக்கணக்காக காத்திருந்த காலம் உண்டு .அந்த* காட்சியை நானே பலமுறை*பார்த்திருக்கிறேன் .நான்* கார்த்தியை பார்க்க செல்லும்போது ,ஒரு சில முன்னாள் அமைச்சர்கள் அவரை பார்க்க காத்திருந்த காட்சி என் நினைவில் பசுமையாக உள்ளது .தான் மறையும் தருவாயில் கூட எந்தவிதமான அரசு வீடோ, உதவியோ* பெறுவதில் முனைப்பு காட்டாத அப்பழுக்கற்ற பத்திரிக்கையாளர் என்பது* ஊடக துறையில் குறிப்பிடபட* வேண்டிய விஷயம் .


    கார்த்தி என்பவர் எதற்காக இந்த சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்கத்தை உருவாக்க நேர்ந்தது* என்பது பலரும் அறிந்து கொள்ள வேண்டிய* சுவையான விஷயம்* . தி.மு.க. ஆட்சியில் ,ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு எதிரான போக்கை கருணாநிதி கடைபிடித்தார் . தன் மகன் மு.க. முத்து சினிமாவில் வேரூன்றும் வகையில் எம்.ஜி.ஆர். மன்றங்களை* * முற்றிலும்**கலைப்பது , மு.க. முத்து மன்றங்களை தோற்றுவிக்க ஊக்குவிப்பது , அது குறித்து நிருபர்களுக்கு உரிய தகவல்கள் அளிப்பது* பிள்ளையோ பிள்ளை படத்திற்கு போதிய விளம்பரம் தருவது , திரை அரங்கு உரிமையாளர்களுக்கு*மு.க. முத்து படம் ஓட்டுவதற்கு மிரட்டல் விடுவது ,என்று பல செயல்களில்*அன்றைய முதல்வர் கருணாநிதி மும்முரமாக ஈடுபட்டார் .அதே சமயத்தில் எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி என்ற விவகாரத்தை கையில் எடுத்து ,டீக்கடை வைத்திருந்தவர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் ,அரசு மூலமும், மாநகராட்சி மூலமாகவும் நெருக்கடிகள், தொல்லைகள்** அளிக்கப்பட்டது .டீக்கடை பணியாளர்கள் இரவில் நேரம் கழித்து வீடு திரும்பினாலோ, வெளியில் சென்றாலோ,சந்தேக வழக்கு காவல்துறை பதிவு செய்யும் .* கடைக்கு வெளியே விளம்பர பலகை, தட்டிகள் வைத்திருந்தால் மாநகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்வார்கள் .இந்த துன்பங்கள், தொந்தரவுகள் மிக அதிகம் பெருகி வந்த காலத்தில்தான் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த திரு.பக்தவச்சலம் என்பவர்*டீக்கடை உரிமையாளர் சங்கம் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றி வந்தார் . அவருடன் இருந்த கார்த்தி ,எம்.ஜி.ஆரை சந்தித்து ஆலோசனைகள் கேட்க, எம்.ஜி.ஆர். அதன் அவசியத்தை வலியுறுத்தி கண்டிப்பாக தொடங்க வேண்டி* தன்னுடைய மேலான ஆதரவை தெரிவித்தார்*எம்.ஜி.ஆரின் வற்புறுத்தலின்பேரில் கார்த்தி சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்கத்தை தோற்றுவித்தார் . இந்த சங்கம் இன்றைக்கும் இவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறதென்றால் இதற்கு முதலில் வித்திட்டவர் திரு.பக்தவச்சலம் என்கிற தீவிர கம்யூனிஸ்ட் என்றால் அதை, வற்புறுத்தி, வலியுறுத்தி ஆரம்பிக்க தூண்டியவர் எம்.ஜி.ஆர்.தான் என்று சொன்னால் மிகையாகாது .**


    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ராஜராஜன் படத்தில் சோழ மன்னனாகவும், மகாதேவியில் சோழ மன்னன் வல்லபனாகவும் , மன்னாதி மன்னனில் சேர மன்னனாகவும், ராணி சம்யுக்தாவில் ராஜபுத்திர மன்னனாகவும் ,காஞ்சி தலைவனில்* பல்லவ மன்னனாகவும் , கலங்கரை விளக்கத்தில் நரசிம்மவர்ம பல்லவனாகவும் , மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனில் , பாண்டிய மன்னனாகவும் இப்படி எல்லா மன்னர்களாகவும், தன்னை உருவாக்கி மக்கள் மனதில் மன்னாதி மன்னனாக இன்றும் நிலைத்து நீடித்து நிற்கிறார்.அதனால்தான் எந்த கால கட்டத்திலும் எந்த ஆட்சியில் இருந்தும்* மக்களை மறவாத மன்னனாக தன்னைக் காட்டிக்கொண்டு படத்தில் நடித்ததால்தான் மக்கள் அவரை ஆட்சி பீடத்தில் தொடர்ந்து பத்தாண்டுகள் அமர வைத்தனர் .


    எம்.ஜி.ஆர். அவர்கள் பொது வாழ்விலும், அரசியல் வாழ்விலும் எந்த அளவிற்கு மற்ற தலைவர்களும் மதிக்கத்தக்க பண்பாளர் என்பதற்கு உதாரணம் .ஒருமுறை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்தார் .அவர் பிரதமராக இல்லாதபோதும் வருகை தந்துள்ளார் .அவர் பதவியில் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் ,அவருக்கு மரியாதை தரும் வகையில் அவர் அருகில் எம்.ஜி.ஆர். அமராமல் நின்று கொண்டிருப்பார் .* எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகும் கூட ஒருமுறை இந்த சந்திப்பின்போது இந்திரா* காந்தி மிஸ்டர் எம்.ஜி.ஆர். நீங்கள் அமரவில்லை என்றால் நானும் அமர மாட்டேன் என்று சொல்லி உட்கார வைத்தார் . தன்னைவிட உயர் பதவியில் உள்ளவர்களை என்றும் மதிக்கும் பண்பாளர் எம்.ஜி.ஆர். என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் .

    மேலும் தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்*

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ------------------------------------------------------------------------------------
    1.என்றும் பதினாறு, வயது பதினாறு - கன்னித்தாய்*

    2.எம்.ஜி.ஆர். =டி.கே.பகவதி உரையாடல் - நம் நாடு*

    3.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீநிவாசன் உரையாடல் -ரிக்ஷாக்காரன்*

    4.எம்.ஜி.ஆர்.-எஸ்.வி.ரெங்கராவ்* உரையாடல் -நம் நாடு*

    5.எம்.ஜி.ஆர்.-தேங்காய் ஸ்ரீநிவாசன் உரையாடல் -நினைத்ததை முடிப்பவன்*

    6.இது நாட்டை காக்கும் கை - இன்று போல் என்றும் வாழ்க*




    .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •