Page 25 of 210 FirstFirst ... 1523242526273575125 ... LastLast
Results 241 to 250 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #241
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் நிருத்திய*சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். படங்கள்*ஒளிபரப்பான*விவரங்கள்*
    -----------------------------------------------------------------------------------------------------------------------------
    29/04/20-* ஜெயா மூவிஸ் -காலை 7 மணி* - தாய்க்கு பின் தாரம்*

    * * * * * * * * *சன் லைப்* *- காலை 11 மணி* * - அரச கட்டளை*

    * * * * * * * * புதுயுகம்* * -இரவு 7 மணி* *- நீதிக்கு பின் பாசம்*

    30/04/20 - சன் லைப்- காலை 11 மணி - திருடாதே*

    * * * * * * * *மெகா டிவி -மதியம் 12 மணி* - ஆனந்த ஜோதி*

    01/05/20* முரசு டிவி* - காலை 11மணி /இரவு 7 மணி* -நல்ல நேரம்*

    * * * * * * * * புதுயுகம்* *-இரவு 7 மணி -பெற்றால்தான் பிள்ளையா*

    03/05/20 -ஜெயா மூவிஸ் -காலை 7 மணி - குலேபகாவலி*

    * * * * * * * ராஜ் டிவி* *- காலை 10.30மணி -உலகம் சுற்றும் வாலிபன்*

    * * * * * * மெகா 24 டிவி -பிற்பகல் 2.30 மணி -திருடாதே*

    04/05/20* -சன் லைப்* - காலை 11 மணி - நாளை நமதே*

    05/05/20 -ராஜ் டிவி* - பிற்பகல் 1.30 மணி -ரகசிய போலீஸ் 115

    * * * * * * * *புதுயுகம்* - இரவு 7 மணி* - நீதிக்கு தலை வணங்கு*

    06/05/20 -சன் லைப் - காலை 11 மணி - வேட்டைக்காரன்** * * * * * * * **

  2. Thanks orodizli thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #242
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை 6-05-2020 புரட்சி நடிகர் செல்வாக்கு உயரும் கதாப்பாத்திரம் அபு "பாக்தாத் திருடன்" 60 ஆண்டுகள் நிறைவு செய்து, 61ம் வருடம் தொடக்கம்... இந்த காவியத்தில் ஒரு காட்சி... நடிகை mn. ராஜம் தலைவரை பார்த்து சொல்லும் வசனம்... " பொது மக்களின் பேராதரவு தான் வேறு யாருக்கும் இல்லாத அளவுக்கு உங்களுக்கு இருக்கிறதே"... இத்தகைய காட்சி திரையில் வரும்போது அரங்கமே அல்லோகலப்படும்...ஆம்... நிழலில் இருந்ததை நிஜமாக்கியவர் மக்கள் திலகம் மட்டுமே அல்லவா?!.........சுஹாராம்...

  5. #243
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட ஏராளமான நூல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன... அவற்றின் பதிப்பாசிரியர்கள், நூல்களின் தன்மை, விலை பட்டியல்... இதர விபரங்களை அறிந்த தோழர்கள் தெரிய படுத்தலாம்... சுஹாராம்......

  6. #244
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பொதிகை*டிவியில்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் புகழ் மாலை*
    --------------------------------------------------------------------------------------------------------------------
    பொதிகை டிவியில்(05/05/20) இன்று ஒளிபரப்பான மலரும் நினைவுகள் (பயாஸ் கோப்)நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மகாலட்சுமி பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் அவர்களை பேட்டி கண்டார் .*


    நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து ,இரு வேடங்களில் நடித்து ,இயக்கிய நாடோடி மன்னன் திரைப்படத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் . நடிகை எம்.என்.ராஜம் கூறியதாவது :


    நாடோடி மன்னன் திரைப்படம் பல சிறப்புகளை கொண்டது .* பெரும் பொருட்செலவில் எம்.ஜி.ஆர். அவர்கள் சொந்தமாக எம்.ஜி.ஆர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தை ஏற்படுத்தி தயாரித்தார் . படத்தில் மூன்று கதாநாயகிகள் , நான், பானுமதியம்மா, பி.சரோஜாதேவி (புதுமுகம் -அறிமுகம் ). எம்.ஜி.ஆர். நாடோடியாகவும், மன்னனாகவும் நடித்திருந்தார். படத்தில் மிகவும் அழகாக இருப்பார் .படத்திற்கு தயாரிப்பு செலவு அதிகம் ஆகி கொண்டே இருந்ததால் , பலபேர் விமர்சனம் செய்தார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த படம் வெற்றி பெற்றால் நான் மன்னன் , இல்லையென்றால் நான் நாடோடி என்று எம்.ஜி.ஆர். சொல்லுவார் .


    வில்லன் பி.எஸ். வீரப்பா,எம்.என்.நம்பியார்* பெரியவர் எம்.ஜி.சக்ரபாணி, சந்திரபாபு, ஜி.சகுந்தலா,அங்கமுத்து, முத்துலட்சுமி ,திருப்பதிசாமி, ராம்சிங் ,ஜெமினி சந்திரா மற்றும் பலர் நடித்தனர் . இடைவேளைக்கு பிறகு பகுதி கலரில் எம்.ஜி.ஆர். எடுத்தார் .*


    கதை வசனம் கவிஞர் கண்ணதாசன், படத்தில் எம்.ஜி.ஆர். மன்னன் ஆன பிறகு*நாட்டு மக்களுக்கு செய்யும் திட்டங்களை ,கொள்கைகளை அறிவிப்பார் .*1958ல் படம் வெளியானது . எம்.ஜி.ஆர். முதல்வராகியதும் அவரை பேட்டி எடுத்தார்கள் அப்போது அவர் என் திட்டங்கள் சிலவற்றை நாடோடி மன்னன் படத்திலே அறிவித்துவிட்டேன்* மீதியை பொறுத்திருந்து பாருங்கள் என்றார் .உண்மையிலேயே அவர் ஒரு தீர்க்கதரிசி .* இந்த படம் எடுக்கும்போது அவர் நினைத்திருக்க மாட்டார் தான் ஒருநாள் முதல்வராகி இந்த திட்டங்களை செயல்படுத்துவேன் என்று . படத்தில் அந்த காலத்திலேயே பஞ்ச் வசனங்கள் நிறைய இடம் பெற்றிருக்கும் .* எம்.ஜி.ஆர். சொல்லுவார். அமைச்சரே, நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன் . நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறீர்கள்.* அரண்மனையில் நுழைந்ததும் என் உலகம் மாறியிருக்கிறது என். உள்ளம் மாறவில்லை.* கொஞ்ச நாட்களே பதவியில் இருந்தாலும் மக்களின் குறை தீர்ப்பவனே மன்னன் .* என் இஷ்டத்திற்கு இணங்குவதாக இருந்தால் நான் மன்னனாக இருப்பேன் .. என்னை நம்பாமல் கெட்டவர் பலர். என்னை நம்பி கெட்டவர் இன்றுவரை இல்லை .* இன்னும் எவ்வளவோ வசனங்கள். அருமையாக இருக்கும். ரவீந்தர் உதவி வசனகர்த்தா .*


    ஒரு கட்டத்தில் , நான் அவரை மன்னனாக கருதி உறவாடுவேன். எனக்கு தெரியாது அவர் நாடோடி என்று . அவர் உன்னை மணந்தவன் நானில்லை. மாலையிட்டவன் நானில்லை. நான் உன் கணவனே இல்லை. என்று கூறியதும் நான் தற்கொலை செய்ய முயலும்போது , காப்பாற்றி தனது நிலையை விளக்குவார் .இறுதியில் உண்மையிலேயே என்னை நம்புகிறாயா சகோதரி என்பார் .நான் சொல்லுவேன். நான் மட்டுமில்லை அண்ணா. இந்த நாடே உங்களை நம்பித்தான் இருக்கிறது என்பேன் .* அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்தார் . இந்த காட்சிக்கும், வசனத்திற்கும் சுமார் 5 நிமிடங்கள்*கைத்தட்டல்களும், விசில் சத்தமும் ஓயாது ..* இப்படி பல காட்சிகள்* *கைத்தட்டல்களால் அரங்குகளே அதிர்ந்தன .* வெள்ளிவிழா ஓடிய படம் .**

    மதுரை தமுக்கம் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் பேரறிஞர் அண்ணா தலைமையில் வெற்றி விழாவில் 110 சவரன் தங்க *வாள்*எம்.ஜி.ஆருக்கு பரிசளிக்கப்பட்டது . எம்.ஜி.ஆர். சிறந்த இயக்குனராக தேர்வு*செய்யப்பட்டார் .**


    1977ல் எம்.ஜி.ஆர். முதலைவரான பின்பு, ஒரு நாள் , நானும் என். கணவருடன் சென்று அவருக்கு வாழ்த்துக்கள் கூறுவதற்கு ராமாவரம் தோட்டம் சென்றிருந்தோம் . அன்று அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம் எல்.ஏ.க்கள் , தொழில் அதிபர்கள், நடிகர் நடிகைகள் , வி.ஐ.பி.க்கள் , பல்வேறு கட்சி தலைவர்கள்*பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் ,கட்சி தொண்டர்கள் பலரும் திரண்டு இருந்தனர் . சிறிது நேரத்திற்கு பிறகு , கூட்டத்தின் நடுவே சென்று கையை உயர்த்தி, அண்ணே என்று குரல் கொடுத்தேன். பலபேர் அவரை* , ஐயா, சார் என்று தான் அழைத்திருந்தார்கள். என் குரல் கேட்டதும். சட்டென்று திரும்பி பார்த்து , மேடைக்கு வர சொன்னார்.* நான் சென்றதும் , நாடோடி மன்னன் படத்தில் நான் நடித்த காட்சியை குறிப்பிட்டு அந்த வசனத்தின்படியும், காட்சியின்படியும், இன்று நான் முதல்வராகிவிட்டேன். உன் வாய் முகூர்த்தம் பலித்துவிட்டது என்று என்னை பெருமை படுத்தி பேசினார் அனைவரும் பலத்த கைதட்டல்கள் மூலம் பாராட்டினார் கள்*. எனக்கு அந்த சில நிமிடங்கள் அந்த கூட்டத்தின் இடையே எல்லையில்லாத சந்தோசம். என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் . பிறகு அவருக்கு நான் நன்றி , மற்றும்*முதல்வரானதற்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து விடைபெற்றேன்**

  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  8. #245
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் நடிக* மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பான*விவரங்கள்*
    ---------------------------------------------------------------------------------------------------------------------------
    06/05/20 - சன்* லைப்* -காலை* 11 மணி* -வேட்டைக்காரன்*

    * * * * * * * * *ராஜ் டிவி* - பிற்பகல் 1.30மணி -குடியிருந்த கோயில்*

    * * * * * * * எம்.எம்.டிவி* -இரவு 10 மணி* - படகோட்டி*

    07/05/20- ஜெயா மூவிஸ்* - காலை 7 மணி -விக்கிரமாதித்தன்*

    * * * * * * * *ராஜ்* டிவி* -பிற்பகல் 1.30 மணி* -தேடி வந்த மாப்பிள்ளை*

    * * * * * * * *எம்.எம்.டிவி* - இரவு* 7 மணி -காவல் காரன்*

    * * * * * * * *வசந்த் டிவி* -இரவு 7.30 மணி -நல்ல நேரம்*

    * * * * * * * *பாலிமர் - இரவு 11 மணி* - தனிப்பிறவி*

    08/05/20 - வசந்த் டிவி -காலை 9.30 மணி -ராமன் தேடிய சீதை*

    * * * * * * * *சன் லைப் - காலை* 11 மணி -ஆனந்த ஜோதி*

    * * * * * * * *ராஜ் டிவி* -பிற்பகல் 1.30 மணி - நல்ல நேரம்*

    * * * * * * * *ஷாலினி டிவி - இரவு 8 மணி -மாட்டுக்கார வேலன்*

    * * * * * * * *பாலிமர் டிவி* -இரவு 11 மணி* - திருடாதே .**

  9. #246
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெயா மூவிஸ்*சானலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாரம்*(தினசரி இரவு 10* மணிக்கு*)
    -------------------------------------------------------------------------------------------------
    09/05/20 -* *சங்கே முழங்கு*

    10/05/20 - ராஜராஜன்*

    11/05/20- தாயின் மடியில்*

    12/05/20 - விக்கிரமாதித்தன்*

    13/05/20-வேட்டைக்காரன்*

    14/05/20 - கொடுத்து வைத்தவள்*

    15/05/20- தாய்க்கு பின் தாரம்*

  10. Thanks orodizli thanked for this post
  11. #247
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    உ.சு.வா பட வரலாறு
    47 ஆண்டுகளுக்குமுன்பு இதே மே 11-ந்தேதி...

    ஒரு படம் 200 கோடி 400 கோடின்றாங்க. அதுல சில மாஸ் ஹீரோங்க வேற சீனுக்கு சீனுக்கு பன்ச் டயலாக் பேசறாங்க. அந்த கால ஹீரோவுக்கு முகத்துக்கு மேக்அப் போடுவாங்க. இப்போவெல்லாம் நோ மேக்கப், முகத்தையே கிராபிக்ஸ்ல செமையா மாத்தி அறிவாளி ரசிகர்கள் காதுல பூ சுத்தல. பூமாலையே சுத்தறாங்க.

    ஒரு படம் ஓடறத்துக்காக திடீர் திடீர்னு அரசியல் பேச ஆரம்பச்சிடறாங்க. ஏதாவது டயலாக்கால கவர்மெண்ட்டு பாதிச்சு ரியாக்சன் காட்டினா, உடனே கால்ல பொத்துன்னு விழுந்துடறாங்க. ஒரு சிங்கிள் ஜெயில் ஷாப்பிங் டயலாக்க காப்பாத்தக்கூட தைரியமில்லா படத்தல இருந்தே தூக்கிட சொல்லிட்டு துண்டை காணோம் துணிய காணோம்னு ஓடிப்போயிட்டாருன்னு பேசிக்கிற அளவுக்கு நிலைமை..

    இதுல காமடி என்னன்னா இவங்களையெல்லாம், அரசியல், அவரைக்காய் பொறியல்னு எம்ஜிஆர்கூட கம்பேர் பண்ணி பக்கம் பக்கமா ரைட்டப் குடுக்கறதுதான்.. மீடியாவுங்களும் சேர்த்துதான்..

    ஒரேயொரு படம், உலகம் சுற்றும் வாலிபன்.. அதன் ரிலீஸ் வரலாறு தெரிஞ்சா இவங்கள்லாம் இப்படி எழுதுவாங்களான்னு தெரியலை..

    20 வருஷம் கட்சிக்காக உழைச்சி கட்சியால் தானும் வளர்ந்து பெரிய ஆளானவரு எம்ஜிஆர். எம்எல்சி, எம்எல்ஏ கட்சி பொருளாளர்ன்னு அரசியல் வாதியாகவும் முன்னேறியவரு..

    திமுக 1972ல் வெளியேற்றியது, எம்ஜிஆர் என்ற நடிகரை அல்ல. அதைவிட முக்கிய பலம் வாய்ந்த எம்ஜிஆர் என்ற பழுத்த அரசியல்வாதியை.. கட்சியில் மூன்றாவது இடத்தில் உள்ள பொருளாளரை..

    ஒரு கம்பெனியில் சாதாரண ஊழியராக சேர்ந்து பல ஆண்டுகள் பாடுபட்டு ‘ஜெனரல் மேனேஜரான ஒருத்தர், திடீரென டிஸ்மிஸ் செய்யப்பட்டு அலுவலகத்தை விட்டு நடுத்தெருவில் நின்றால் எப்படியோ, அப்படி.த்தான் எம்ஜிஆர் நின்றார், 1972 அக்டோபரில்.

    நேற்றுவரை ஒட்டிஉறவாடிய திமுகவின் மூத்த தலைவர்களும் அவர்களின் வசம் உள்ள தமிழக அரசு நிர்வாகமும் அடியோடு பகையாளிகளாக மாறிவிட்ட பயங்கரம்.

    உண்மையிலேயே மிரண்டுதான் போனார், ஆனானப்பட்ட எம்ஜிஆரே.

    திமுகவையும் ஆட்சியையும் எதிர்த்து போராடி சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அந்தக்கணத்தில் அவருக்கு இல்லை. சினிமாவும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாடு. அனுபவசாலியான அவருக்கு நன்றாகவே தெரியும். அதன்பின் நடந்ததை பல்வேறு நேரடி அனுபவஸ்தர்கள் சொல்லி பலமுறை கேட்டிருக்கிறோம். வியந்தும் இருக்கிறோம். அவற்றின் சாராம்சத்தை இங்கே சொல்கிறோம்

    திமுகவில் இருந்து நீக்கப்படடதால் மனக்கலக்கத்தில் இருந்த எம்ஜிஆருக்கு மெல்ல மெல்ல தைரியம் கொடுத்தது, எரிமலையாக வெடித்துப்பொங்கிய அவருடைய ரசிகர்கள்தான். படிப்படியாக தமிழகத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் சட்டம் ஒழுங்கே ஸ்தம்பிக்கும் நிலைமை.

    தனிக்கட்சி தொடங்க எம்ஜிஆர் தயங்கிநின்றபோது ராமாவரம் தோட்டத்திற்கு அலை அலையாக படையெடுத்துச்சென்றனர் அவரது ஆதரவாளர்கள், ரசிகர்கள். அவர்களுக்கு அன்பான மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்கள் ஏராளம். தனிக்கட்சி தொடங்காவிட்டால் திமுகவினர் தங்களை அந்தந்த ஊர்களில் படாதபாடு படுத்துவர்கள் என்றெல்லாம் எம்ஜிஆரிட சொல்லி வாய்விட்டு கதறினார்கள் ஆதரவாளர்களும் ரசிகர்களும்..

    தன்னை விட தன்னை நம்பியிருப்பவர்களை காப்பாற்றியே தீரவேண்டும் என்ற கட்டாயத்தை அப்போதுதான் உணர்ந்தார் எம்ஜிஆர. உடனே ஒருமுடிவுக்கு வந்து துணிச்சலுடன் களமிறங்கியதில் அடுத்த சில தினங்களில் உதயமானதுதான் அதிமுக.

    அதன்பிறகு எம்ஜிஆரின் தைரியத்தையும் உழைப்பையும் போராட்டக்குணத்தையும் பார்த்து உலகமே வியந்தது தனிக்கதை

    இங்கே ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சில தினங்களில் அவரின் இதயவீணை படம் ரிலீசானது. எந்த சர்ச்சையும் இல்லாமல் காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் என கலர்புல்லாய் பாடிக்கொண்டே, 100 நாட்களுக்குமேல் ஓடி வெற்றிகண்டது.

    ஆனால் அவர் சொந்தமாக தயாரித்து இயக்கி இரட்டை வேடங்களில் நடித்த பிரமாண்டமான படைப்பான
    உலகம் சுற்றும் வாலிபன் ஏனோ ஆட்சியாளர்கள் கண்ணில் உறுத்த ஆரம்பித்தது..எங்கே யார் வெறியை ஏற்றிக்கொண்டு திரியை பத்தவைத்தார்களோ தெரியவில்லை.

    உசுவா படம் வெளியாவது ஆளுங்கட்சிக்கு கௌரவம் மற்றும் மானப்பிரச்சினையாகியது.அந்த படம் வெளியானால் புடவை கட்டிக்கொள்கிறேன் என பகிரங்கமாய் சூளுரைத்தார் ஒரு திமுக தலைவர். அந்த அளவுக்கு படம் கடும் எதிர்ப்பான சூழலை சந்தித்தது..

    போஸ்டர்கள் அடித்து ஒட்ட முடியாத அளவுக்கு இன்னொரு கில்லாடித்தனத்தையும் ஆட்சியாளர்கள் செய்தார்கள். எம்ஜிஆர் அதற்கும் அசரவில்லை. சிங்கப்பூரில் இருந்து ஸ்டிக்கர் விளம்பரங்களை அடித்து இறக்குமதி செய்தி ஓட்டச்செய்தார். ஸ்டிக்கர் தமிழ்நாட்டில் முதன் முதலாய் சினிமா உலகம் வழியாக இப்படித்தான் புகுந்தது.

    முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட, உலகம் சுற்றும் வாலிபன் ரிலீசுக்கு தியேட்டர்கள் கொடுக்க உரிமையாளர்கள் தமிழகத்தில் பலரும் முன்வரவில்லை.

    ஆனால் எம்ஜிஆர் அத்தனை எதிர்ப்புகளையும் தன்னுடைய சொந்த முயற்சியால்தான் சமாளித்தார். தொடைநடுங்கிப்போய் ஆட்சியாளர்களிடம் சமரசம் செய்ய முயற்சி கூட எடுக்கவில்லை.
    படப்பெட்டிகளை பிடுங்கிக்கொண்டு ஓட காத்திருந்தவர்களை சமாளிக்க ஒவ்வொரு தியேட்டருக்கும் ஐந்தாறு ரூட்டுகளில் உ.சு.வா ''ரீல் பெட்டிகள்'' அனுப்பட்டது..அதில் எது ஒரிஜினல் என்பதை கண்டுபிடிக்கமுடியாமல் எதிரிகள் குழம்பிப்போனது தனிக்கதை..பலர் படப்பெட்டி என செங்கற்கள், கருங்கற்களை பெட்டிகளை கைப்பற்றி பல்பு வாங்கினார்கள்

    1973 மே மாதம் 11-ந்தேதி போஸ்டர்களே ஒட்டப்படாமல் உலகம்சுற்றும் வாலிபன் ரிலீசாகி தமிழகத்தை மட்டுமல்ல ஆட்சியாளர்களையும் அலறவைத்தது. தியேட்டர்களுக்கு என்ன சேதம் ஏற்பட்டாலும் தன் சொத்துக்களை விற்றாவது ஈடுசெய்கிறேன் என்று எம்ஜிஆர் எடுத்த அந்த வாழ்வா, சாவா முடிவுக்கு கிடைத்த பலன் அது.

    படத்தின் டைட்டில் சாங்கான, ‘’நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’’ ரசிகர்களை முறுக்கேற்றியது.. பாடலில் வரும்,,,

    நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,
    இருந்திடும் என்னும் கதை மாறும்,
    என்று வரிகள் ஒலித்தபோது. தியேட்டர்களில் எழுந்த ஆவேசம் ஆட்சியாளர்களை வீழ்த்தும் பலத்திற்கு மேலும் வலு சேர்த்தது..

    மூன்று வாரங்களுக்கு போஸ்டரே ஒட்டப்படாத நிலையிலும் தமிழ்நாட்டில் அதுவரை சினிமா உலகில் இருந்த வசூல் சாதனைகளை முறியடித்தது உ.சு.வா பல ஊர்களில் 100 நாட்களை சர்வசாதாரணமாக கடந்தது. மாநகரங்களில் வெள்ளி விழா. சென்னையில் முன்பதிவிலேயே புதிய சாதனைகளை படைத்தது.

    உலகம் சுற்றும் வாலிபனுக்கு காட்டிய அந்த நிஜமான வீரம்தான் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக எம்ஜிஆர் அனல்பறக்க அரசியல் நடத்த கைகொடுத்தது. எல்லா இடைத்தேர்தலிலும் அவர் வெற்றிவாகை சூட பாதை அமைந்து தந்தது. கிளைமாக்சாக, தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலிலும் அமர்த்தி முதலமைச்சராக்கவும் வைத்தது. அதுவும் மூன்று முறை.. முதலமைச்சராக காலமாகும் வரத்தையும் கொடுத்தது.

    தியேட்டரில் விழும் கைத்தட்டலையெல்லாம் தனக்கு விழப்போகும் ஓட்டுக்கள் என நினைத்தபடி, அரசியலுக்கே வராமல் முதலமைச்சர் கனவில் மிதக்கும் கோடம்பாக்கத்து கோமாளிகளுக்கு உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு ஏற்பட்ட எதிப்பபுபோல் இன்று ஏற்பட்டால்

    Ezhumalai Venkatesan

    முகநூலில் (கவிபாலா) இருந்து
    Last edited by ravichandrran; 11th May 2020 at 10:31 PM.

  12. #248
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் மதிவாணர்*எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பான விவரம்*
    -----------------------------------------------------------------------------------------------------------------------------
    09/05/20* *ராஜ் டிவி* - பிற்பகல் 1.30 மணி* -அலிபாபாவும் 40 திருடர்களும்*

    * * * * * * *வசந்த் டிவி* - இரவு 7.30 மணி* - நீதிக்கு தலை வணங்கு*

    * * * * * * *பாலிமர் டிவி* - இரவு 11 மணி* - வேட்டைக்காரன்*

    10/05/20 - மெகா டிவி - மதியம் 12 மணி - நல்ல நேரம்*

    * * * * * * *வேந்தர் டிவி - பிற்பகல் 1.30 மணி -வேட்டைக்காரன்*

    * * * * * * *பாலிமர் டிவி* -இரவு* 11 மணி* - விவசாயி*

    11/05/20 - சன் லைப்* -காலை* 11 மணி -இதயக்கனி*

    * * * * * * * *வானவில் டிவி - பிற்பகல் 2 மணி* - என் கடமை*

    * * * * * * * *மூன் டிவி* *- இரவு* 7.30 மணி* - ஆனந்த ஜோதி*

    12/05/20 - வசந்த் டிவி - காலை 9.30 மணி -ஆனந்த ஜோதி*

    * * * * * * * வேந்தர் டிவி* - காலை 10 மணி* - விவசாயி*

    * * * * * * * முரசு டிவி* - காலை* 11 மணி* -தாயின் மடியில்*

    * * * * * * புதுயுகம் டிவி - இரவு 7 மணி - தாய் சொல்லை தட்டாதே*

    * * * * * * *முரசு டிவி* -இரவு 7 மணி - தாயின் மடியில்*

  13. #249
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (13/05/20) மாலை ராஜ் டிவியில்*கவியரசு கண்ணதாசன் நினைவலைகள்* என்ற தொடர் நிகழ்ச்சியில் வெளியான*தகவல்கள்*
    --------------------------------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் கவிஞர் கண்ணதாசன் மதுரை வீரன், மகாதேவி, நாடோடி மன்னன்,ராஜா தேசிங்கு* போன்ற படங்களுக்கு மிக சிறப்பாக வசனம் எழுதியிருந்தார் .* *அதன் பின்னர் கவியரசு கண்ணதாசன் சினிமாவில் பாடல்கள் அதிகம் எழுதும் சூழ்நிலை உருவானது . குறிப்பாக எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு அவரது இமேஜை உயர்த்தும் பொருட்டு பல தரமான பாடல்கள் எழுதி அவருக்கு புகழ் சேர்த்தார் .**

    எம்.ஜி.ஆருக்கும் , கண்ணதாசனுக்கும் சில காலம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு*பிரிவினை ஏற்பட்டது . எம்.ஜி.ஆர். 1972ல் தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்டார்*இருப்பினும் கவியரசு கண்ணதாசன் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தன்*வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார் .* தி.மு.க. எடுத்த முடிவு தவறு என்றும் சுட்டிக் காட்டினார் .**

    1963ல் பெரிய இடத்து பெண் படத்திற்கு பாடல் பதிவின்போது , மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரும் ஒரு நாள்* *ரிக்கார்டிங் அரங்கிற்கு வரவில்லை. காரணம் அந்த காலத்தில் இவர்கள் பல படங்களுக்கு இசை அமைத்து கொண்டிருந்ததனால் மிகவும் பிசியாக இருந்த சமயம் .* முந்தைய நாள் இரவு வெகு நேரம் பாடல் பதிவில் இருந்துவிட்டு நள்ளிரவுக்கு பின் வீடு திரும்பியவர்கள் மறுநாள் காலை பாடல் பதிவிற்கு நேரத்திற்கு வர இயலவில்லை .* எனவே, வெகு நேரம் காத்திருந்த கவியரசு கண்ணதாசன் விஷயம் கேட்டறிந்து , அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா* என்று எம்.ஜி.ஆருக்கு எழுதும் சோக பாடலுக்கு வரிகள் எழுத ஆரம்பித்தார் .* பின்னர் தாமதமாக வந்த விஸ்வநாதன் ராரமூர்த்தி இரட்டையர்கள் பாடல் வரிகளை ரசித்தனர் . எம்.ஜி.ஆர். , இயக்குனர் ராமண்ணா ஆகியோரின் சம்மதத்தோடு அன்று பாடல் பதிவு முடிவுற்றது . பெரிய இடத்து பெண் படத்தின் பாடல்கள் அனைத்தும் கவியரசு கண்ணதாசன் எழுதி இருந்தார்*1963;ல் வெளிவந்த பெரிய இடத்து பெண் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதோடு அந்த ஆண்டின் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்ந்தது .

    1974ல் வெளியான உரிமைக்குரல் படத்திற்கு , ஒரு கனவு காட்சிக்காக பல கவிஞர்கள் எழுதிய பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி அளிக்கவில்லை.*இறுதியில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசனை அணுகி, சூழ்நிலைக்கு தக்கபடி* டூயட் பாடல் எழுதி தரும்படி சொன்னார் .அப்போது எம்.ஜி.ஆருக்கும் , கவிஞருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த சமயம் .* முதலில் மறுத்த கவிஞர் , பின்னர் பாடல் எழுதி தருகிறேன் . ஒப்புதல் வாங்கி கொள்வது உங்கள் விருப்பம். என்று சொல்லி அருமையாக எழுதி இருந்தார். அந்த பாடலை மெல்லிசை மன்னர் , இயக்குனர் ஸ்ரீதரிடம் காண்பித்து*அதை கம்போஸ் செய்து* எம்.ஜி.ஆரின் சம்மதத்தை பெற சற்று தயக்கத்துடன் இருவரும் சென்றனர் . பாடல் வரிகளை படித்து பார்த்த எம்.ஜி.ஆர். கவிஞர் கண்ணதாசன் ஒருவரால்தான் இந்த பாடல் எழுதி இருக்க முடியும் . உண்மையை சொல்லுங்கள் என்று* கேட்டார் .* அவரது இசை ஞானத்தையும் , திரைப்பட பாடல் நுணுக்கத்தையும், கவிஞர்களிடையே எத்தகைய அனுபவத்தை அவர் பெற்றிருந்தார் என்று வியந்தவர்கள் உண்மையை கூறி விட்டார்கள்.* கவிஞர் கண்ணாதாசனுடன் எம்.ஜி.ஆர். பேசி கொள்ளாத சமயம் என்றிருந்தாலும், கவிஞரின் திறமையை பாராட்டி ,பாடலை இடம் பெற செய்தார் எம்.ஜி.ஆர். அந்த பாடல்தா ன் விழியே கதை* எழுது. கண்ணீரில் எழுதாதே. மஞ்சள் வானம் . தென்றல் சாட்சி.,உனக்காகவே நான் வாழ்கிறேன் .* இந்த பாடல் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெல்லாம் அந்த காலத்தில் பிரபலமாகி , படம் வெள்ளிவிழாவை தாண்டி ஓடி, வசூலில் அந்த ஆண்டில் சாதனை புரிந்தது .


    எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகு , கவிஞர் கண்ணதாசனுடன் கருத்து வேறுபாடு*ஏற்பட்டு பிரிந்திருந்தாலும், அவரது புலமை, திறமைகளை பாராட்டி அவரை அரசவை கவிஞர் ஆக்கி அழகு பார்த்தார் .**


    நிகழ்ச்சியில் கவியரசு கண்ணதாசனின் பாடல்களாக நாடோடி படத்தில் அன்றொரு*நாள் இதே*நிலவில்*, உரிமைக்குரல் படத்தில்*விழியே கதை எழுது*பெரிய இடத்து பெண் படத்தில்*அவனுக்கென்ன தூங்கிவிட்டான்*பாடல்கள்*ஒளிபரப்பப்பட்டன .
    Last edited by puratchi nadigar mgr; 13th May 2020 at 08:58 PM.

  14. #250
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவி. தகவல்கள்*தொகுப்பாளர் திரு.துரை பாரதி*
    -----------------------------------------------------------------------------------------------------------------
    இன்று (10/05/20) வின் டிவியில் பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் என்ற நிகழ்ச்சியை திரு.துரை பாரதி அவர்கள் தொகுத்து வழங்கினார் .

    இன்று அன்னையர் தினம் . உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடுகிறார்கள் . நேயர்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் .உலக சினிமா சரித்திரத்தில் தன் பெற்ற தாய்க்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தவிர* வேறு எந்த நடிகராவது எம்.ஜி.ஆர். அளவிற்கு* தாயின் சிறப்புகளை வெளிப்படுத்தி நடித்திருப்பாரா என்பது மிக பெரிய கேள்விக்குறி .ஏனென்றால் எம்.ஜி.ஆர். தன் தாயை தான் தெய்வமாக வணங்கி வந்தார் .* வீட்டை விட்டு புறப்படும்போது வெளியே உள்ள தாயின் சிறிய சமாதியில் சில நிமிடங்கள் நின்று வணங்கிவிட்டு செல்வது வழக்கம் .* தாயின் பெருமைகளை , சிறப்புகளை உலகிற்கு உணர்த்தும் வகையில், தனது திரைப்படங்களில் தாய்க்கு பின் தாரம், தாய் மகளுக்கு கட்டிய தாலி, தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனயன் , தெய்வத்தாய் , தாயின் மடியில் , தாய்க்கு தலை மகன் ,குடியிருந்த கோயில், ஒரு தாய் மக்கள் என்கிற தலைப்புகளை தேர்ந்தெடுத்து நடித்து பெரும் புகழ் பெற்றார் .ஒவ்வொரு கால கட்டத்திலும் , சில முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு, தன் தாயின் படத்தின் முன்னால் நின்று தியானம் செய்து தான்* முடிவெடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார் .* பொதுவாக* இந்துக்கள் அனைவரும் ராமர் துணை, பெருமாள் துணை, முருகன் துணை என்று தான்*செயல்களை ஆரம்பிப்பார்கள் எம்.ஜி.ஆர். எப்போதும் தாயே துணை என்று எழுதித்தான் ஆரம்பிப்பார் . *


    சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஒரு வீட்டை எம்.ஜி.ஆர். வாங்கி தாய் வீடு என பெயரிட்டார் . 1962 வரை அந்த வீட்டில் தங்கி*இருந்தார் என்று சொல்லப்படுகிறது* இந்த வீட்டில்*தன் தாயாரை*கொண்டு வந்து ஒரு நாளாவது*அமர்த்தி அழகு பார்க்கும்* முன்பு அவரது தாயார் இறந்துவிட்டார் என்பது சோக செய்தி ..அதன்பின் ராமாவரம் தோட்டத்திற்கு குடிபுகுந்தார் .தாய் வீட்டில் அவரது அண்ணன் சக்கரபாணி அவர்களின் குடும்பம் வசித்து வந்தது .* எம்.ஜி.ஆரின் மனைவி திருமதி வி.என்.ஜானகி பெயரில் அவ்வை சண்முகம் சாலையில் வாங்கிய வீடுதான் அண்ணா தி.மு.க. வின் தலைமை நிலையமாக திகழ்கிறது . எம்.ஜி.ஆரின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சிக்கு ஜானகி அம்மையார் தானமாக அளித்துவிட்டார் .**


    1972ல் எம்.ஜி.ஆர். தி. மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவுடன் தமிழகமே கொந்தளிக்கிறது .* *தொண்டர்கள் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு படையெடுத்து எம்.ஜி.ஆரை கட்சியை துவக்குவதற்கு*நிர்பந்தப்படுத்துகிறார்கள். சிலர் எம்.ஜி.ஆர். பெயரில் கட்சியை துவக்குவதாக அறிவிக்கிறார்கள் . சிலர் தாமரை சின்னத்தில் கொடி ஏற்றுகிறார்கள். எம்.ஜி.ஆர். பொறுமை காத்து , அனைவரையும் கலந்து ஆலோசிக்கிறார் . பின்னர் தன் தாயின் படத்தின் முன்னால் வணங்கி , தன்னுடன் கலந்து ஆலோசித்த தலைவர்களின் யோசனைப்படியும், தொண்டர்கள் பேராதரவையும் மனதில் வைத்து ,கட்சியை தொடங்குவதற்கு அக்டோபர்** *17 , என்ற நாளை குறித்து அறிவித்தார் .


    எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கும் முன்பு , ஒரிசாவில் இருந்து பிஜு பட்நாயக்*சமரச பேச்சு வார்த்தைக்கு எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும் அழைத்து பேசினார் .* மாநில விருந்தினர் விடுதியில்தான் பேச்சு வார்த்தை நடந்தது .கட்சிகள் இணைவதற்கு இருவரும் இறுதியில் சம்மதம் தெரிவித்தனர் .அப்போதைய தலைவர்கள் திரு.ராசாராம், மாதவன்*போன்றவர்கள் உடனிருந்தனர் .கட்சி தலைவராக கருணாநிதியும், முதல்வராக எம்.ஜி.ஆரும் செயல்படுவதாக உடன்பாடு ஏற்பட்டது .* இருவர் தரப்பிலும் சில நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது .செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவு எடுக்க வேண்டும் என்று சில காரணங்கள் கூறபட்டது .பத்திரிகையாளர்கள் சந்திப்பும் ஏற்பாடானது . ஆனால் என்ன காரணமோ*இறுதி சுற்றில்*உடன்பாடு எட்டப்படவில்லை ஏனென்றால் இறுதி நாளன்று*அனைவரும் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த போது எம்.ஜி.ஆர். சந்திப்பிற்கு வரவில்லை .* பின்னர் அன்றைய டி.ஜி.பி.மோகன்தாஸ் மூலம் , எம்.ஜி.ஆர். இரு கட்சிகளும் இணைவதற்கு என் தாயின்*சம்மதம் கிடைக்கவில்லை. ஆகவே இணைவதற்கு வாய்ப்பில்லை என்று அறிவித்ததாக செய்திகள் வெளியாகின .* சில*நாட்கள்*கழித்து , தலைவர்களின் ஆலோசனைப்படியும், தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்கவும் தனி கட்சி தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டார் எம்.ஜி.ஆர்.* இதில் இருந்து தன் தாயை எந்தளவு** மதித்து, அவரை*தெய்வமாக* கருதி,அவருடைய முடிவுகளை செயல்படுத்தி வந்தார்*எம்.ஜி.ஆர்.*என்பதற்கு இது ஒரு**சான்று*. என்று டி.ஜி.பி. மோகன்தாஸ் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார் .


    எனக்கு ஒரு திருக்குறள்*நினைவுக்கு வருகிறது . அதன்படி, எம்.ஜி.ஆர். தன்*வாழ்நாளில்*குடிப்பதையோ, அல்லது குடிகாரர்களை சந்திப்பதையோ*அடியோடு வெறுத்தார் .எம்.ஜி.ஆர். நாடங்களில் நடித்து வந்த*போது மாணவ*பருவத்தை கடந்தபோது, அவர் குரலில்*சில மாற்றங்கள் தென்பட்டன .அப்போது நாடகங்களில் நடிக்கும்போது பாடவும் தெரிந்திருக்க வேண்டும் .ஆகவே தன் தாயாரிடம் குரல் உடைந்து விட்டால்*பாடவே*முடியாதா, நான் வாழவே முடியாதா* என்றெல்லாம் கேட்டுள்ளார் .அப்போது அவரது*மாமா ஒருவரின் ஆலோசனைப்படி, கள்* வாங்கி குடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பின்பு ஒரு நாள் அண்ணன் சக்கரபாணியின்*மனைவி கர்ப்பிணியாக வீட்டில் இருந்தபோது மது பாட்டில் ஒன்றை எம்.ஜி.ஆர். கண்டார் . அது பற்றி தன் தாயாரிடம் கேட்ட போது* பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்கு இதை*கொஞ்சம்*பயன்படுத்துவார்கள் என்று எவ்வளவோ சமாதானம்*சொல்லியும்*அந்த மதுவை*அங்கிருந்து விலக்கினால் தான் , நான் வீட்டுக்குள் வருவேன்*என்று பிடிவாதம் பிடித்தாராம் .*



    எம்.ஜி.ஆரின் தாயார் பற்றி சிவாஜி கணேசன் கூறியபோது , நானும்*, அண்ணன் எம்.ஜி.ஆரும் பலமுறை*அவர் வீட்டில்*அவரின் தாயார் பரிமாற உணவு உண்டிருக்கிறோம் . வால் டாக்ஸ் சாலை அருகில் அப்போது அண்ணன் எம்.ஜி.ஆரின் குடும்பம் தங்கியிருந்தது . சில சமயம்*நாடக*கம்பெனியில் இருந்து எம்.ஜி.ஆர். அண்ணன் முன்னதாகவே*வீடு திரும்பி இருந்தாலும், அவர் தன் தாயாரிடம் பசிக்குது, உணவு பரிமாறுங்கள் என்று கூறினாலும், கொஞ்சம் பொறு, தம்பி கணேசன் வரட்டும். என்று கூறி இருவருக்கும் சேர்ந்தாற்போல்* உணவு பரிமாறுவது வழக்கம் .* எம்.ஜி.ஆரும் தன்* தாயார் சொல்லைக் கேட்டு பொறுத்திருப்பார் .எம்.ஜி.ஆரும் தம்பி கணேசன் வீட்டிற்கு சென்று*திருமதி கமலா*அவர்கள் பரிமாற இருவரும் சேர்ந்து*பலமுறை* உணவு உண்டிருக்கிறார்கள்* இது பற்றிய புகைப்படங்களும் அதிக அளவில் வெளியாகி உள்ளன . அப்போது பல சம்பவங்கள் குறித்து இருவரும் வாதித்திருக்கிறார்கள் .அது பற்றியும்*புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .எம்.ஜி.ஆர். அவர்கள் தம்பி கணேசனின் தாயார் திருமதி ராஜாமணி அம்மாள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் .திருமதி ராஜாமணி அம்மையார் மறைந்த பிறகு , அவரின் சிலையை*திறந்து வைத்தது*எம்.ஜி.ஆர்.தான் .


    சந்தான பாரதி*என்பவரின் தந்தையார் ராஜாமணி*பிக்ச்சர்ஸ் என்ற பெயரில் பாசமலர் மற்றும் சில படங்களை தயாரித்திருந்தார் . பாசமலர்*வெற்றிகரமாக ஓடிய படம். அதற்கு பின் வெளியான ஒரு படம் எதிர்பார்த்த வெற்றி பெறாமல்*நஷ்டம் அடைந்ததால்*எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தார் . எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, அவரை உபசரித்து என்ன விஷயம் வெகு தூரம் வந்திருக்கிறீர்கள் என்று எம்.ஜி.ஆர். கேட்டபோது , நீங்கள் எங்கள் பேனருக்கு*ஒரு படம் நடித்து தரவேண்டும்*என்ற போது, தம்பி சிவாஜி கணேசன் மீதும், அவரின் தாயார் மீதும் எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு .எங்கள் இருவருடனான நட்பு பலகாலம்*நீடிக்க வேண்டும்,மேலும் ,எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே,,அதனால் என்ன நடித்து விடலாம். ஆனால் உங்கள் கம்பெனி பெயர் மாற்ற வேண்டி இருக்குமே என்றாராம். பதிலுக்கு*அவர் பேனர் பெயர் மாற்ற முடியாது என்றார் .எவ்வளவு மரியாதை, மதிப்பு இருந்தால் நீங்கள் தம்பி கணேசனின் தாயார் திருமதி ராஜாமணி அம்மாள் பெயரில் கம்பெனி ஆரம்பித்து படம் தயாரித்து இருப்பீர்கள் . ஒரு படம் லாபம் ஈட்டியது . ஒரு படம் நஷ்டம் என்றதும்தம்பி கணேசனை விட்டுவிட்டு* என்னிடம் வருகிறீர்கள் .**அவரது அனுமதி இல்லாமல் அவரது தாயார் பேனரில்*நான் படம் நடிப்பது இயலாத காரியம்*ஒரு* வேளை நான் நடிப்பதாக முடிவு எடுத்தாலும்,அவர் எவ்வளவு கஷ்டப்படுவார் என்று எனக்குதான் தெரியும் . அவர் உள்ளம் என்ன பாடுபடும்*என்னால் முடியாது*.அந்த தவறை நான் செய்ய மாட்டேன் . .* மீண்டும் சந்தானபாரதியின் தந்தையார் வற்புறுத்திய*போது நீங்கள் என்னை கட்டாயப்படுத்துவதாக இருந்தால், என் தம்பி சிவாஜி கணேசனிடம் ஒரு சிபாரிசு* அல்லது பரிந்துரை கடிதம் வாங்கி வாருங்கள். அதாவது தகுந்த காரணம் குறிப்பிட்டு, என்னால் நடிக்க இயலவில்லை . அதனால்*அண்ணன் நடித்து கொடுப்பதற்கு எனக்கு*ஆட்*சேபனை* இல்லை என்று எழுதி கொடுத்தால்தான் நடிக்க முடியும் என்று உறுதியாக சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர். அதன் பிறகு அவர்கள் எம்.ஜி.ஆரை* தொந்தரவு செய்யவில்லை . இதில் இருந்து எம்.ஜி.ஆர். தம்பி கணேசனிடமும், அவரின் தாயார் ராஜாமணி அம்மையார் மீதும் எவ்வளவு மரியாதை, மதிப்பு வைத்திருந்தார் என்பதை*நாம் அறிந்து கொள்ளலாம் .*


    நிகழ்ச்சியில் கீழ்கண்ட படத்தின் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன :
    1. தாயில்லாமல் நானில்லை - அடிமைப்பெண்*
    2.இந்த பச்சைக்கிளிக்கு ஒரு செவ்வந்தி பூவில் -நீதிக்கு தலை வணங்கு*
    3.வெற்றிமீது வெற்றி வந்து என்னை சேரும் -தேடி வந்த மாப்பிள்ளை*
    4.தாயின் மடியில் தலை வைத்திருந்தால் -தாயின் மடியில்*
    5.நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி*
    6.நான் யார் ? நான் யார் ?நீ யார் ?- குடியிருந்த கோயில்*
    7.அம்மா என்றால் அன்பு - அடிமைப்பெண்*

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •