Page 81 of 109 FirstFirst ... 3171798081828391 ... LastLast
Results 801 to 810 of 1084

Thread: Makkal Thilagam MGR Part 26

 1. #801
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,322
  Post Thanks / Like
  "ஒளி விளக்கு"

  ஆனந்த விகடனுக்கு நன்றி...

  படம்

  வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்.

  புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள். அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…
  1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.
  2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.
  3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.
  4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.
  5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்ச்சித் துறை.
  6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி. கல்லூரி மாணவர், சென்னை.
  7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.
  திரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க!

  லீலா: ஆமாம்! எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.
  சீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.
  லீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா?

  துணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு!
  ரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்!

  சாந்தி: அது பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்!
  சீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்!

  குப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது! அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க!
  சீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.

  திரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும்! அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.

  சீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

  திரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.

  சீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா? ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது!
  திரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.
  ரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு. ‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க!

  சாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே என்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.

  ரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.

  சீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம்! எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரை இருக்கணுமே!
  குப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.

  சீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ?!
  கிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ்! அது போதாதா? எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா? கவர்ச்சியா இருக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்!
  திரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி! ‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்..........

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #802
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,322
  Post Thanks / Like
  1973 ன் வெற்றியின்
  சாதனை நாயகன் கலைப்பெரும் தனித்திலகம....
  ஒரே திலகம்.....
  மக்கள் திலகம்!
  30 க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களின் வசூலை ஒட்டுமொத்தமாக
  ஒடி முடிய முறியடித்து...
  இன்று வரை உச்சம் தொட்டுக்கொண்டு வரும் காவியம்...
  எம்.ஜி.யார். பிக்சர்ஸின்
  "உலகம் சுற்றும் வாலிபன்"

  பாரத விலாஸ்...
  ராஜராஜசோழன்...
  கெளரவம்...
  பொன்னுஞ்சல்...
  எங்கள் தகர ராஜா...
  ராஜாபார்ட்...

  படங்களை ஒட்டு மொத்தமாக முறியடித்து ....
  100 நாளில்
  1கோடியை தாண்டி....
  6 மாதகாலத்தில்
  2 கோடியே 15 லட்சத்தை வசூலை தாண்டி.....
  40 அரங்கில்
  75 நாளை கடந்து...
  23 அரங்கில்
  100 நாட்களை கடந்து...
  25 ஊரில் 100 காட்சிகள்
  தொடர்ந்து அரங்கு நிறைந்து....
  வெள்ளிவிழாவை
  சென்னை
  மதுரை
  திருச்சி
  சாதனை படைத்து...
  தென்னகத்தில்
  85 அரங்கில் 50 நாட்களை கடந்து சரித்திரம் ஆகும்!

  மேலே அத்தனை படங்களையும் எல்லாவற்றிலும் முறியடித்து சாதனையின் சிகரமாக
  இன்று வரை தொடரும் காவியமாக....
  இந்திய திரையின் ஒரே வசூல் சக்கரவர்த்தி
  பொன்மனச்செம்மலின்
  உலகம் சுற்றும் வாலிபன்....ஒன்றே!

  தகர ராஜா 12 திரையில் 50 நாள் ஒட்டப்பட்டு...
  9 திரையில் 100 ஒட்டப்பட்டது....
  சோழன் படம் படுதோல்வி...
  11 திரையில் 50 நாள் மட்டுமே...
  கெளரவம் 11 திரையில் 50 நாளும் 4 திரையில் 100 நாளும்....
  பாரத விலாஸ்....
  11திரையில் 50 நாளும்
  6 திரையில் 100 நாளும்....
  ராஜபார்ட்....
  8 திரையில் 50 நாளும்
  ......
  பொன்னுஞ்சல்
  மனிதரில் மாணிக்கம்
  இரண்டும்
  50 நாள் இன்றி படுதோல்வி......

  ஒரே ஒரு படம் கணேசனின் 73 ம் ஆண்டில் வெளியான அத்தனை படங்களையும் குழியில் போட்டு...
  சரித்திரம்....சகாப்தம் படைத்தார்
  மக்கள் திலகம்.

  தொடரும்...ur.........

 4. #803
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,322
  Post Thanks / Like
  சென்னையில்...
  மக்கள் திலகத்தின்
  " உலகம் சுற்றும் வாலிபன்"
  கடந்த ஆண்டுகளில்
  வெளியீடு பற்றிய விபரங்கள்.....

  1973 ம் ஆண்டு...
  ****************
  தேவிபாரடைஸ்
  182 நாட்கள்
  அகஸ்தியா
  176 நாட்கள்
  உமா
  112 நாட்கள்
  மொத்தம் : 470 நாட்கள்
  வசூல் 23 லட்சத்து
  40 ஆயிரத்தை கடந்தது.

  அடுத்து....
  ராம் 28 நாள்
  சீனிவாசா 21 நாள்
  காமதேனு 21 நாள்
  வீனஸ் 35 நாள்
  நேஷனல் 28
  தங்கம் 14
  முருகன் 28
  கமலா 14
  பழனியப்பா 21
  சித்ரா 14
  நேஷனல் 14
  நடராஜ் 14
  சன் 14
  ராஜகுமாரி 14
  மற்றும்...
  ஸ்டார், லஷ்மி, கபாலி
  லிபர்ட்டி, பிரபாத், பிளாசா, சரவணா, சரஸ்வதி, பத்மனாபா
  கிருஷ்ணவேணி
  மொத்தம்...
  50 வாரங்கள்...
  350 நாட்கள்....
  வசூல் 10 லட்சத்தை கடந்தது......
  இது முதல் வெளியீட்டின்...... சென்னை நகர
  வரலாறு ஆகும்.
  (1973 ,1974 ம் ஆண்டுகளின் ஒட்டம்)
  வசூல்... 35 லட்சத்தை தொட்டது...
  சென்னை நகர வரலாற்றில் மாபெரும் சாதனையில் 1978 வரை முன்னனி மட்டுமின்றி...

  அதன் பின்....
  2 வது வெளியீடு
  1974....ல்
  18 அரங்கில் மீண்டும் வெளியீடூ...
  3 வது வெளியீடு
  1976 ....ல்
  16 அரங்கில் வெளியீடு...
  4 வது வெளியீடூ...
  1979....ல்
  அலங்கார், அபிராமி, ராம்...... தொடர்ந்து
  20 தியேட்டரில் சாதனை.

  5 வது வெளியீடு..
  1982 ல்....
  வெலிங்டன், கமலா மற்றும் 15 அரங்கில் வெளியீடூ....

  6 வது வெளியீடூ...
  1985 ல்...
  பாரகன் 4 காட்சியில்
  தொடர்ந்து 20 சென்டருக்கு மேல் சாதனை...

  7 வது வெளியீடு..
  1987 ல்
  பிருந்தா 2 வாரம்
  பைலட் 2 வாரம்
  நடராஜ் 2 வாரம்
  சரவணா 2 வாரம்
  பிராட்வே 2 வாரம்
  மற்றும் 25 அரங்கில் 1988 மார்ச் பிளாசா கடைசி வாரம் வரை இடைவிடாது சாதனை
  20 லட்சம் வசூல்...

  18 மாத இடைவெளியில்
  8 வது வெளியீடு.....
  திவ்யா பிலிம்ஸ் வெளியீடு...
  ஆல்பட், பிருந்தா, சீனிவாசா வெளியீட்டுக்குப் பின்...
  20 அரங்கு வெளியிடப்பட்டது.
  ஆல்பட் 16 நாள்
  பாரத் 14 நாள்
  கமலா 14 நாள்
  நடராஜ் 14 நாள்
  என 25 வாரங்களை கடந்து...
  வசூல் : 25 லட்சத்தை தொட்டது...

  அடுத்து....
  9 வது வெளியீடு...
  1993 டிசம்பர்....
  கிரவுன்,பாரகன்,ராம்
  மற்றும் இடைவிடாது
  20 அரங்கில் வெளியீடு.....
  வசூல் 15 லட்சத்தை தொட்டது..

  1995 ல்
  10 வது வெளியீடு...
  அலங்கார் 13 நாள்
  முரளிகிருஷ்ணா 7 நாள்
  பிராட்வே.. 7 நாள்
  3 அரங்கில் ஒடி முடிய
  5 லட்சத்தை தொட்டது வசூல்....
  மற்றும் 18 திரையில் ஒடி மொத்தம் 30 லட்சம் வசூல்.....

  1997ல்
  11வது வெளியீடு....
  சங்கம் 10 நாள்
  கமலா
  பிருந்தா
  கணபதிராம்
  கிருஷ்ணா
  நாகேஷ்
  வசந்தி
  முரளிகிருஷ்ணா
  புவனேஸ்வரி
  ஸ்டார்
  மற்றும் 20 அரங்கில் வெளியீட்டூ 25 லட்சத்திற்கு மேல் வசூல்.....

  1999 லிருந்து 2007 வரை ஹைகோர்ட் , மற்றும் நியூ டெல்லி சுப்ரீம் கோர்ட் வரை கடுமையான உரிமை பிரச்சனையில்...
  சென்னை செங்கல்பட்டு
  வேலூர், கடலுர் பிரச்சனை காரணமாக
  9 ஆண்டுகள் படம் வெளிவரவில்லை...
  மற்ற மாவட்டங்களில் திரையிடப்பட்டது...

  2008 ல் மீண்டும்
  வெளியீடு...
  பைலட் 10 நாள்
  மோட்சம் 10 நாள்
  மகாராணி 10 நாள்
  பிருந்தா 10 நாள்...
  முதல் 4 தியேட்டரில்
  15 லட்சம் வசூல் ஆகும்......
  மற்றும் 20 திரையில் வெளியிடப்பட்டது.
  ஒ.எஸ் மணியன் வெளியீடு... 2008 முதல்
  2010 வரை வெளி வந்தது...

  2013 ல் மீண்டும்
  பைலட் திரையிடப்பட்டது...
  தொடர்ந்து பல அரங்கில் சாதனை...

  2014 முதல் 2020 மார்ச் வரை வெளியீடு இல்லை.... காரணம் புதிதாக 4k டிஜிட்டல் Atmos Format மெருக்கேற்றல், வடிவாக்கம் வேளைகளில் 2017, 2018, 2019, படத்தை வெளியிட முயற்சித்தும், அவசரப்படாமல் வெளியிடலாம் என பூரண உரிமையாளர்கள் ரிஷி மூவீஸ் திரு நாகராஜன் & Co., கருதியதும் ஆகும்...

  2021 ல் திண்டுக்கல் நாகராஜ் புதிய பரிமாணாத்தில்
  "உலகம் சுற்றும் வாலிபன்" காவியத்தை வெளியீடலாம் என்று நினைக்கின்றோம்.....

  குறிப்பு :
  மேலே சென்னை மட்டும்
  உ.சு.வாலிபன் சாதனைகளின் வரலாறு......
  தென்னகமெங்கும்
  ஒடிய அரங்கு
  ஒடிய நாட்கள்
  படைத்த சாதனை
  பெற்ற வசூல்....
  பிரமிக்கவைக்கும் !

  கணேசனின்
  100 வது படம்,
  125 வது படம்,
  150 வது படம், 175 வது படம்,
  200 வது படம்
  அத்தனை படங்களாலும் ஏறேடுத்து பார்க்க முடியாத... இமாலய வெற்றியில்..
  புரட்சித்தலைவரின்
  "உலகம் சுற்றும் வாலிபன்"...

  மீண்டும்
  புதிய பரிமாணத்தில்
  2021 ல் வரலாம்....
  கோடியை வசூலில்
  பெறலாம்....

  தொடரும்......... UR...

 5. #804
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  27,407
  Post Thanks / Like
  பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*03/09/20 அன்று அளித்த*தகவல்கள்*
  --------------------------------------------------------------------------------------------------------------------------
  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களின் ஒவ்வொரு காட்சியையும் ,பார்த்து ரசித்து* ,மகிழ்ந்து பூரிப்பு அடையும் பக்தர்கள் பெருகி கொண்டே வருகிறார்கள் .

  எம்.ஜி.ஆர்.தன்னுடைய படங்களுக்கு பெயர் வைப்பது, கதாபாத்திரங்களை* எப்படி உருவாக்குவது*,அதற்குண்டான பெயர்கள், நடிகர் ,நடிகைகள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் ,கவிஞர்கள், ,தொழில்நுட்ப கலைஞர்கள் ,போன்றவர்களை தேர்வு செய்வது என்று ஒவ்வொரு விஷயத்திலும் அதிக அக்கறை, கவனம் கொண்டு செயல்பட்டார்.தாய்க்கு பின் தாரம், ராஜ ராஜன், மன்னாதி மன்னன் , நாடோடி மன்னன் , நல்லவன் வாழ்வான், தாய் சொல்லை தட்டாதே, திருடாதே, தாயை காத்த தனயன் குடும்ப தலைவன் ,தர்மம் தலை காக்கும் ,காஞ்சி தலைவன் ,நீதிக்கு பின் பாசம் ,தொழிலாளி, படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன் ,எங்க வீட்டு பிள்ளை ,கலங்கரை விளக்கம், முகராசி ,தனிப்பிறவி ,காவல்காரன் ,தாய்க்கு தலை மகன், விவசாயி , குடியிருந்த கோயில், ஒளி விளக்கு , நம் நாடு, தலைவன் ,எங்கள் தங்கம் ,ரிக்ஷாக்காரன் , சங்கே முழங்கு , நான் ஏன் பிறந்தேன், அன்னமிட்டகை ,உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், சிரித்து வாழ வேண்டும் ,நினைத்ததை முடிப்பவன் ,நாளை நமதே, இதயக்கனி, பல்லாண்டு வாழ்க ,நீதிக்கு தலை வணங்கு, உழைக்கும் கரங்கள் , ஊருக்கு உழைப்பவன் ,இன்று* போல் என்றும் வாழ்க , மீனவ நண்பன் ,மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்று உன்னதமான, ஆக்கபூர்வமான தலைப்புகள் தேர்வு செய்து தன் ரசிகர்களையும்,பக்தர்களையும் கவர்ந்தார் .அது மட்டுமல்ல இவைதான் என் லட்சியம், கொள்கை ,வாழ்வின் இலக்கணம் ,அரசியல் பயணம் ஆகியவற்றுக்கான படிக்கட்டுகள் என்று சொல்லி வந்தார் ... இந்த தலைப்புகள் மற்ற நடிகர்களுக்கு பொருந்துமா என்பது சந்தேகம் .இந்த தலைப்புகள் மூலம் சினிமாவில் தான் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி என்ற நிலையை 1947 முதல் 1977 வரை ,சில வருடங்கள் நீங்கலாக வென்று காட்டினார் ஆகவே அவர் எண்ணுவதெல்லாம் ,அவர் முயற்சியெல்லாம் பெரும்பாலும் வெற்றியில் முடிந்தன ..அவர் நினைத்ததெல்லாம் சினிமாவில் , அரசியலில் நடந்ததா என்றால் ஆம் அதனால்தான் அவர் நினைத்ததை முடிப்பவன் அல்ல நினைத்ததை முடித்தவன் என்று ஆயிரம் பேர் அல்ல லட்சம் பேர் அல்ல கோடிக்கணக்கான தமிழ் உள்ளங்கள் இன்றும் சாட்சியாக* உள்ளன .


  மக்கள் நலம் ,பிறர் நலன், பிறர் மீது அன்பு, அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.*பிறர் மீது அன்பு செலுத்துங்கள் என்றார் ,அறம் செய்ய விரும்பு என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தார் . அறம் செய்ய விரும்ப வேண்டும் என்பது முக்கியமல்ல .அறம் செய்ய விரும்பினாலே* அவர்களுக்கு அருள் கிடைக்கும்* அந்த அறத்தை தன் வாழ்நாள் முழுக்க செய்து வந்தவர் இந்த எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். அறம்* எனும் கோட்பாடே, உலக இலக்கியங்களிலும் சரி, தத்துவங்களிலும் சரி ,ஒரு உயர்ந்த கோட்பாடு, அது மட்டுமல்ல அந்த அறம் என்கிற வார்த்தைக்கான நேர்த்தி ,தர்மம் என்று சொல்வார்களே, அந்த தர்மம்என்பது மற்ற* உலக நாட்டு மொழிகளில் அதற்கான சரியான அர்த்தம் என்பது கிடையவே கிடையாது .ஏனென்றால் இது இந்திய தன்மை உடைய வார்த்தை . இந்திய தன்மை உடைய அந்த வார்த்தை உடைய அந்த தர்மம் என்பதற்கு வாழ்க்கையில் பல்வேறு வித மான விளக்கங்கள்* உள்ளது* *அப்படியான அர்த்தம் புரிந்த, ஆழமான ,சுய தர்மம் என்பதை நீங்கள் கடைபிடிக்க வேண்டும் .இங்கு ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது ஏதோ ஒரு காரணத்திற் காகத்தான் அவன் படைக்க பட்டிருக்கிறான்*. அந்த படைப்பின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது பற்றி யாருக்கும் தெரியாது . அந்த படைப்பின் நோக்கம் நிறைவேறுவதற்காகத்தான் ஆண்டவன் படைப்பு இருக்கிறது .அந்த நிறைவேற்றுகின்ற ஒரு கருவியாகத்தான் நம்மை நாம் அடையாளப்படுத்திக்கொள்ள* வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார் .


  எம்.ஜி.ஆர். ஒருபோதும் அகங்காரம் பிடித்து தான் தலைவன் என்று அறிவித்துக் கொண்டதில்லை . இதையே தான் முதன் முதலாக சொந்தமாக தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் படத்தில் 1958லேயே சொல்லி இருப்பார் . இனிமேல் மன்னராட்சி என்பதே கிடையாது . யாரும் பரம்பரை* உரிமை கோர முடியாது*அப்படி எதுவும் இருக்காது . நான் ஒருபோதும் அதை விரும்பியதில்லை .என்பார் .தனது 19வது* வயதில் தான் பார்த்த நான் மன்னனானால் என்கிற ஆங்கில படம் தன்னை வெகுவாக கவர்ந்தது ,பாதித்தது .. அதை நாடோடி மன்னன் படமாக தயாரிக்க விரும்பி தான் சிறுக சிறுக சேர்த்த பணங்களை வைத்து, தனது லட்சிய கனவுகளை* நனவாக்க ,மக்களுக்கும் ,மற்றவர்களுக்கும்* என் ஆற்றல், திறமைகளை வெளிப்படுத்தி பல நல்ல சமூக கருத்துக்களை சொல்ல வேண்டும்*என்று எண்ணி படமெடுத்தேன்* .இன்றைக்கும் அந்த படம் ஒரு சாகாவரம் பெற்ற படமாக உள்ளது . ,தான் அரசியலுக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும் .எந்த மாதிரி அணுகுமுறைகளை கையாள வேண்டும் ,ஏன் ,எப்படி அரசியல் உருவாகிறது ஏன் ஒருவர் அரசியலுக்கு தள்ளப்படுகிறார் என்பதற்கு புரட்சிக்காரனாக வரும் வீராங்கன் வேடத்தில் வரும் எம்.ஜி.ஆர். ராணியாக உள்ள எம்.என்.ராஜத்திடம் பேசும் வசனம் ஒன்றே போதும் சான்று கூற ..


  அரசியலில் யாரை எதிர்க்க வேண்டும் , யார் எதிரி, என்று மக்களுக்கு சொல்லி, சொல்லி ,அவர் யாரை எதிர்த்தாரோ ,அவரை மக்கள் எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கும்வரையில் எதிர்த்தே வந்தார்கள் .எம்.ஜி.ஆர். தனக்கு பின்னால் யார் என்பதை அடையாளம் காட்டினாரோ ,அவரை மக்கள் ஆதரித்தார்கள்இப்படி* .ஒவ்வொரு திரைப்படத்தின் ,பாடல்கள், வசனங்கள், காட்சிகள் மூலம் ஒரு மிக பெரிய பட்டாளத்தையே எம்.ஜி.ஆர். உருவாக்கி இருந்தார் .* அதனால்தான் அவரால் ஒரு மன்னாதி மன்னனாக திகழ முடிந்தது .அவரது எண்ணமும், செயலும் ஒன்றாக இருந்தது .அதனால்தான் ஒன்றை நினைத்தார் .ஒன்றை செயல்படுத்தினார் .ஒன்றை நடத்தி காட்டினார்* ஆகவே நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் என்று பாடிய பாடல் அவருக்கு கச்சிதமாக பொருந்தியது .


  இன்றைக்கும் பல ஆயிரம் பேர்.அவர்களில் பலர் படித்தவர்கள், பட்டதாரிகள், ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள்,அரசு அதிகாரிகள் ,பல்வேறு அரசு,துறைகளில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள் இப்படி பலரை உருவாக்கினார்* இவையெல்லாம் வியப்பாக, விந்தையாக உள்ளது .அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். என்கிற ஒரு தத்துவம் ,ஒரு கோட்பாடு ,ஆகியவற்றை ஆராய்ந்து* கொண்டே போகலாம் .* அந்த ஆராய்ச்சி நமக்கெல்லாம் நம்பிக்கை ஊட்டுகிற ஒரு நிழல், வெளிச்சம் ஒளி விளக்கு,கலங்கரை விளக்கம் .அந்த வெற்றி பாதையில் தொடர்ந்து நாம் பயணித்து தகவல்களை அறிவோம் அடுத்த அத்தியாயத்தில் .

  நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
  --------------------------------------------------------------------------------
  1.சிரித்தாலும் போதுமே,செவ்வானம் தோன்றுமே -நீதிக்கு பின் பாசம்*

  2.நான் ஆணையிட்டால் ,அது நடந்துவிட்டால் -எங்க வீட்டு பிள்ளை*

  3.இதயவீணை படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.

  4.நான் ஏன் பிறந்தேன் பாடல் - நான் ஏன் பிறந்தேன்*

  5.எம்.ஜி.ஆர்.-எம்..என்.ராஜத்திடம் பேசும் வசனம் -நாடோடி மன்னன்*

  6.எம்.ஜி.ஆர்.-ரங்காராவ் உரையாடல் - நம் நாடு*

  7.நினைத்ததை நடத்தியே முடிப்பவன் - நம் நாடு*

 6. #805
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,322
  Post Thanks / Like
  பகைவனுக்கும் அருளும் மக்கள் திலகத்தின் தாய் உள்ளம் எல்லாரும் அறிந்ததுதான். அதற்கு இன்னொரு உதாரணம். இயக்குநர் திலகம் கே.எஸ். கோபால கிருஷ்ணன்... காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனை வைத்து படங்கள் எடுத்தவர். ஜெமினி கணேசன் நடித்த அவரது பணமா பாசமா படம் நன்றாக ஓடியது. அந்த மயக்கத்தில் மதுரையில் நடந்த பணமா பாசமா விழாவில் படத்தின் வசூல் பற்றி எல்லாம் குறிப்பிட்டு மக்கள் திலகம் பற்றியும் கே.எஸ். கோபால கிருஷ்ணன் தவறாக விமர்சித்தார். நமது ரசிகர்கள் பொங்கி எழுந்துவிட்டனர். அதனால், கே.எஸ்.கோபால கிருஷ்ணனால் வெளியே தலைகாட்ட முடியவில்லை. எங்கு சென்றாலும் எதிர்ப்பு.

  கடைசியில் ஒரு யோசனையுடன் மக்கள் திலகத்தை கோபாலகிருஷ்ணன் சந்தித்தார். உங்களை வைத்து நான் ஒரு படம் எடுக்கப் போவதாக பத்திரிகையில் சும்மா பெயருக்கு ஒரு விளம்பரம் கொடுக்கிறேன். அப்போதுதான் ரசிகர்கள் சமாதானம் அடைவார்கள். அப்படி விளம்பரம் கொடுக்க உங்கள் அனுமதி வேண்டும் என்று வேண்டினார். மக்கள் திலகமும், எதையும் மனதில் கொள்ளாமல் பெருந்தன்மையாக பரவாயில்லை. விளம்பரம் கொடுங்கள் என்று அனுமதித்தார். கேஎஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் மக்கள் திலகம் நடிப்பதாக தங்கத்திலே வைரம் என்ற பெயரில் அப்போது கொடுக்கப்பட்ட விளம்பரம்தான் இது. இந்த விளம்பரத்துக்குப் பின் கோபால கிருஷ்ணனும் நம்ம ஆளுதான், ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார் என்று நமது ரசிகர்கள் சமாதானம் அடைந்தனர். ரசிகர்களை சமாதானப்படுத்த மட்டுமே கே.எஸ்.கோபால கிருஷ்ணன் கொடுத்த விளம்பரம் இது. படப்பிடிப்பும் நடக்கவில்லை. படமும் வரவில்லை. பின்னர், சங்கே முழங்கு படத்தில் கேஎஸ்.கோபால கிருஷ்ணன் கதை, வசனத்தை பயன்படுத்திக் கொள்ள மக்கள் திலகம் அனுமதித்தார்.

  பகைவனுக்கும் அருளும் தாயுள்ளம் கொண்டவர் மக்கள் திலகம். அதை உணர்ந்த ஒரு தாய் மக்கள் திலகத்தை எப்படி அணைத்துக் கொண்டிருக்கிறார் பாருங்கள்..........

 7. #806
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,322
  Post Thanks / Like
  பணத்தோட்டம் அற்புதமான த்ரில்லர், சஸ்பென்ஸ் படம். எலக்ட்ரிக் சேர் எல்லாம் அப்போது புதிது. அதில் உட்கார்ந்து எஸ்.வி. சுப்பையா கடைசியில் தற்கொலை செய்து கொள்வார். மறுபடி மறுபடி காட்சியை எடுத்த டைரக்டர் சங்கரிடம் ‘‘என்னிடம் என்ன மாதிரி நடிப்பை எதிர்பார்க்கிறீர்கள்? ஒவ்வொருவருக்கு ஒரு நடிப்பு பாணி உண்டு. மற்றவர்களின் நடிப்பை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்’’ என்று மக்கள் திலகம் சொன்னது உண்மைதான். இதை சங்கரே சொல்லி இருக்கிறார். மக்கள் திலகத்துக்கென்று இயற்கையான நடிப்பு பாணி உள்ளது. அதை சங்கர் புரிந்து கொண்டார். அதன் பிறகு மக்கள் திலகத்தை வைத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

  மக்கள் திலகம் சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த டைரக்டரும் கூட. தனது சொந்த படங்களான நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் படங்களை அவரே இயக்கினார். என்றாலும் கே.சங்கரின் உழைப்பையும் திறமையையும் நேர்மையையும் தெய்வபக்தியையும் பார்த்து தனது சொந்தப் படமான அடிமைப் பெண் படத்தை இயக்கும் வாய்ப்பை சங்கருக்கு தந்தார். அவரை தனது சம்பந்தியாகவும் ஆக்கிக் கொண்டார்..........

 8. #807
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,322
  Post Thanks / Like
  நாம் அடிக்கடி சொல்வது போல மக்கள் திலகத்தின் வள்ளல் தன்மை, சினிமாவில் அவரது சண்டைக் காட்சிகள், இயக்கம், எடிட்டிங், வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்தது, மக்கள் செல்வாக்கு, அரசியல் வெற்றிகள் பேசப்பட்டதுபோல அவரின் நடிப்புத் திறன் பேசப்படவில்லை. நாமும் அதில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை.

  பணத்தோட்டத்தில் மக்கள் திலகம் சிறையில் இருந்து தப்பி சரோஜா தேவி வீட்டுக்கு மாடி வழியே ஏறி வீட்டுக்குள் வந்து அவரை சந்திப்பார். சத்தம் கேட்டு சரோஜா தேவியின் தந்தை எஸ்.வி. சுப்பையா அங்கு வந்து மக்கள் திலகத்தை விசாரிப்பார். திருமணமாகாத பெண்ணை இப்படி சந்திப்பது தவறு என்றும் உனக்கு ஒரு தங்கை இருந்து இதே மாதிரி நிலை ஏற்பட்டால் என்ன செய்வாய்? என்றும் ஒரு பெண்ணின் தந்தையாக நியாயமான கேள்வியை கேட்பார்

  மக்கள் திலகம் பதில் சொல்ல முடியாமல் தவறை நினைத்து வருந்தி கும்பிட்டு மன்னிப்பு கேட்பார். அப்போது, தன் நிலையை எண்ணி லேசாக விம்முவார். அற்புதமான நடிப்பு. தவறு செய்துவிட்ட மனசாட்சியுள்ள அந்த சூழ்நிலையில் ஒரு மனிதன் இப்படித்தான் நடந்து கொள்வான். மன்னிப்பு கேட்டுவிட்டு சட்டென திரும்பி வந்தவழியே போக முயற்சிப்பார். அப்போது, சுப்பையா, போகும்போதாவது இப்படி போ என்று வாசல் வழியை காட்டுவார். அவமானம் தாங்காமல் சுப்பையாவின் முகத்தை பார்க்க முடியாமல் தலைகுனிந்து இடது கையால் ஒரு கண்ணை மூடியபடி கூனிக்குறுகி மக்கள் திலகம் வெளியேறுவார். இன்னும் கண்ணிலேயே நிற்கும் காட்சி அது..........

 9. #808
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,322
  Post Thanks / Like
  #புரட்சிதலைவர்
  #பாரத_ரத்னா
  #டாக்டர்
  பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
  #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய #திங்கள்கிழமை_வணக்கம்..

  நம் புரட்சி தலைவர்க்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.

  எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல். அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.

  அப்போது ஒரு கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார்.
  ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். கூறிய தில்லை.
  எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று அந்த கவிஞரும் சொன்ன தில்லை.
  மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங்கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.

  ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மேலே குறிப் பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது. படக்குழுவினர் கவிஞரிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிக வும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.

  அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத

  ‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’

  அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.

  எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில்,

  ‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’

  என்ற இனிமை யான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகி யைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்

  ‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’

  என்று வரும்.

  பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’

  என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன். நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.

  கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,

  ‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.

  நட்பு ஒருபுறம் இருந்தாலும்,
  எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.

  ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.

  எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.

  ‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

  அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக் காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது. கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார். கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.

  எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும் கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.

  சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.

  ‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’

  என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.

  எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…

  ‘தேக்கு மரம் உடலைத் தந்தது

  சின்ன யானை நடையைத் தந்தது

  பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது

  பொன்னல்லவோ நிறத்தை தந்தது’

  இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.

  எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்....

  அன்புடன்
  படப்பை rtb.,

 10. #809
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,322
  Post Thanks / Like
  Mgrன்
  வரலாற்று சாதனை

  திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1973-ம் ஆண்டில் மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்தார்.
  M.g.r. சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் வருகிறார் என்கிற செய்தி அறிந்த மக்கள் வழி நெடுக ஒவ்வொரு இரயில் நிலையங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி விடுகிறார்கள் அந்த இரவு நேரத்தில் கூட மக்களின் உற்சாகமான வரவேற்பை ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு இரயில் நிலையங்களிலும் புரட்சி தலைவர் கண் விழித்து தொண்டர்களுக்கும் தாய்மார்களுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டு வந்தார் இதன் காரணமாக, காலை7 மணிக்கு மதுரை வரவேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் மாலை5மணிக்கு 10 மணி நேரம் தாமதமாக மதுரை வந்தடைந்தது
  திட்டமிட்டபடி பிரதமர் இந்திராகாந்தி அவர்களை
  சந்திக்க முடியாவிட்டாலும்
  1977- ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக - இந்திரா காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டது. மதுரையில் நடந்த பிரம்மாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் எம்.ஜி.ஆரும். இந்திரா காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்தார்கள்...
  மாபெரும் வெற்றி அடைந்தார் mgr

  எம்ஜிஆர் என்கிற தனிமனித உழைப்பால் உருவானது தான்
  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
  நன்றி
  எம்ஜிஆர்நேசன்.........

 11. #810
  Senior Member Diamond Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  5,322
  Post Thanks / Like
  தலைவருக்கும் இயக்குனர் கே. சங்கருக்கும் உள்ள நெருக்கம் அலாதியானது.

  சங்கர் ஒரு முறை வீரஜகதீஷ் படம் பார்த்தேன் அப்போதே புகைபிடிப்பது தவறு என்று சுட்டி காட்டி இருந்தது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது....

  சிலர் உயரே வந்தவுடன் பழையதை தொலைத்து விடுவார். ஆனால் எம்ஜியார் மட்டும் அப்படி இல்லை.

  என் கடைசி மகளுக்கு திருமணம்...பெரிய அளவில் ஏற்பாடு செய்து விட்டேன்.

  எனக்கு சிலரிடம் இருந்து வரவேண்டிய பணம் கிடைக்கும் என்று நம்பி..

  ஆனால் அப்படி நடக்கவில்லை....திருமண நாளும் வந்தது...பெரிய இயக்குனர் என்பதால் அனைத்து செலவுகளுக்கு அட்வான்ஸ் மட்டுமே பெற்று கொண்டனர்.

  கண் முன்னே நான் செட்டில் பண்ண வேண்டிய தொகை என்னை மிரட்டியது..

  அனைத்து முக்கிய முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள், திரை துறையினர் வந்து சேர நிகழ்வுகள் தொடங்க

  வாத்தியாரும் வந்து சேர திருமணம் முடிந்து இன்னிசை கச்சேரி முடிந்து விருந்து முடிந்து அனைவரும் புறப்பட்டு கொண்டு இருந்தனர்.

  நான் பொய் சிரிப்பை முகத்தில் காட்டி அனைவரையும் வரவேற்று வழி அனுப்ப.

  சாப்பிட்டு முடித்த எம்ஜியார் என்னை கண் ஜாடையில் அழைக்க கை கழுவும் இடம் தாண்டி என்னை அழைத்து ஜிப்பாவுக்குள் இருந்த ஒரு பேப்பர் பண்டிலை என்னிடம் யாரும் பார்க்காவண்ணம் கொடுத்து நான் பார்சலை வாங்கி

  திரும்பும் முன் என் கண்களை விட்டு மறைந்து விட்டார்... நான் பதட்டத்துடன் அந்த குறை வெளிச்சத்தில் பண்டிலை பிரித்து பார்க்க.

  இன்னும் இதை போல இன்னொரு திருமணம் முடிக்கும் அளவுக்கு அதில் பணம் இருந்தது.

  எத்துனை நடிகர்களை நான் இயக்கி இருந்தேன்...
  அத்துணை பேரிடம் இல்லாத இரக்க குணம் இவரிடம் மட்டும் எப்படி வந்தது என்று மொத்த கவலைகளும் என்னை விட்டு பறக்க மீண்டும் புதிதாய் பிறந்தேன் என்கிறார் இயக்குனர் கே. சங்கர்.

  ஏன் என்பதில் என்ன சந்தேகம்...அவர் மனித புனிதர் ஆவார்.

  வாழ்க எம்ஜியார் புகழ்.

  தொடரும்.. நன்றி. உங்களில் ஒருவன் நெல்லை மணி...

Page 81 of 109 FirstFirst ... 3171798081828391 ... LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •